Search This Blog

7.2.13

கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையா?வீரசவர்க்கார் உண்மையில் வீரனா? தூக்கிலிருந்து தப்பியது எப்படி?

கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையா? வீரசவர்க்கார் உண்மையில் வீரனா? (3) - விளக்குகிறார் தமிழர் தலைவர்
 

கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையா?

காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சாதிக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை என்பது கிடையாது. அதற்கான உறுப்பினர் அட்டை என்பதுபோன்ற முறைகள் கிடையாது. வன்முறை யாளர்கள் தப்பித்துக் கொள்வதற்காக இத்தகைய தந்திரமான ஏற்பாடாகும்.

அதேநேரத்தில், கோட்சே ஆர்.எஸ்.எஸ்.தான் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டே! வெகு தூரம் செல்லவேண்டாம் - அவரின் குடும்பத்தவர் களைவிட வேறு சாட்சியம் தேவையா?

காந்தியார் கொலைக் குற்றத்தில் தூக்குத் தண்டனை பெற்ற கோட்சேயின் தம்பி கோபால் கோட் சேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவன் விடுதலை பெற்ற போது இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் இதழ் கோபால் கோட்சேயிடம் பேட்டி கண்டு விரிவாக வெளியிட்டுள்ளதே - இந்த வார ஃப்ரண்ட் லைனிலும் விரிவாகத் தகவல்கள் வந்துள்ளன.

அந்தப் பேட்டியில் கோபால் கோட்சே என்ன சொல்லியிருக்கிறான் என்பதுதான் முக்கியமாகும்.

நான்கு சகோதரர்கள் நாதுராம் கோட்சே, தாத்ரேயா, கோவிந்த் மற்றும் நான் (கோபால் கோட்சே).

எங்கள் நால்வரையும் தொட்டிலில் போட்டு வளர்த்தது ஆர்.எஸ்.எஸ். நாங்கள் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல; ஆர்.எஸ். எஸில் என்று தெளிவாக, உறுதியாகக் கூறினானே- மறுக்க முடியுமா?

சொல்லுவது விடுதலை அல்ல; அவர்களின் ஃப்ரண்ட் லைன் இதழ்தான்.
எங்களை ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று சொல்லுபவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என்றும் கோபால் கோட்சே கூறினான்.

இப்பொழுதுகூட நாதுராம் கோட்சேயின் அஸ்தியை ஒரு சொம்பில் வைத்து, ஒவ்வொரு ஆண்டும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில் அந்த அஸ்திக்கு வழிபாடு நடத்திக் கொண்டு இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தானே!
பிரிந்து சென்ற பாகிஸ்தான், மியான்மா உள்ளிட்ட பகுதிகளை இந்தியாவோடு இணைத்து புனித சிந்து நதியில் கோட்சே அஸ்தி யைக் கரைக்கத் திட்டமாம்!
அமர்ந்திருப்பவர்களில் இடதுபுறமிருந்து நானே ஆப்தே, சவர்க்கார், நாதுராம் கோட்சே
காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை விதிக் கப்பட்ட கோபால் கோட்சே, விஷ்ணு ஆர். கார்கரே தண் டனை முடிந்து வெளியில் வந்தபோது பூனாவில் ஒரு வரவேற்பு கொடுக்கப்பட் டது (12.11.1954 மாலை 5.30 மணி) 125-லிருந்து 200 பேர் வரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் லோகமான்ய திலகர் என்று போற்றப் படுபவரின் பேரன் ஜி.வி. கட்கேர். அந்த நிகழ்ச்சியில் விஷ்ணு கார்கரே என்ன பேசினான்?
G.V. Ketkar, grandson of  Lokmanya Tilak, former editor of Kesari and Tarun Bharat, and Hindu Mahasabha ideologue, presided over the function. While speaking after the puja, after Gopal Godse and Karkare had narrated their prison experiences, Ketkar revealed that he was aware of the plan to kill Gandhi much in advance and that he had been told about this by Nathuram Godse himself. He said Godse had indicated his intention at a public meeting held at Shivaji Mandir when he referred to Gandhi’s oft repeated wish to live to the age of 125 years - Nathuram is reported to have said in Marathi - ‘Pan tumhala jagu denaar kon? Who will allow you to live till then?’
காந்தியார் படுகொலை செய்யப்படுவார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். நாதுராம் கோட்சே அதனை ஒரு கூட்டத்தில் வெளிப்படுத்தினார். நான் 125 ஆண்டுகாலம் வாழ்வேன் என்று காந்தியார் சொல்லி இருக்கிறார்! நான் விட்டு வைத்தால் அல்லவா காந்தி 125 ஆண்டு வாழ்வார்?  என்று நாதுராம் கோட்சே கூறியதை அந்த வரவேற்புக் கூட்டத்தில் விஷ்ணு கார்கரே போட்டு உடைத்துவிட்டானே!
இவற்றையெல்லாம் காந்தியின் கொள்ளுப் பேரன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் என்று எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
முதல்வரிசை: நாதுராம் கோட்சே, நானே ஆப்தே, விஷ்ணுபன்ட் கார்கரே,
இரண்டாவது வரிசை: திகம்பர் பாட்ஜே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே மூன்றாவது வரிசை: சங்கர் கிஷ்தியா, கோபால் கோட்சே பின்னால் சவர்க்கார் அமர்ந்துள்ளார்
ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லவேண்டாம் என்று கோல்வாக்கர் வலியுறுத்தியதால், கோட்சே அப்படி நடந்துகொண்டான் என்று கோபால் கோட்சே கூறியுள்ளானே.
இவ்வளவு திட்டமிட்டு காந்தியாரைப் படுகொலை செய்திருக்கின்றனர், நம் நாட்டு அரசும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் என்ன செய்து கொண்டு இருந்தன?
காவல்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருந்தனர் என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதே - அதுதான் காரணம். நீதித்துறையும், நிர்வாகத் துறையும் பார்ப்பனர் வசமே இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைக்கு மகாராட்டிர மாநில உள்துறை அமைச்சர் பார்ப்பனர். அதிகாரிகள் பார்ப்பனர்கள். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உயிரோடு தப்பிக்க முடிந்தது. இல்லாவிட்டால், கோல்வாக்கர் உள்படக் கூடியிருந்த வீட்டை ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொளுத்தி இருப்பார்கள்.
சவர்க்கார் தூக்கிலிருந்து தப்பியது எப்படி?
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாள் மதன்லால் பாவா என்பவன், காந்தியைக் கொல்ல முயற்சித்து தோல்வியைக் கண்டவுடனே, இந்தக் குற்றப் பின்னணியின் மூளையாகச் சந்தேகிக்கப் பட்டது வி.டி. சவர்க்கார்மீதுதான். புலனாய்வு அதி காரிகள் சந்தேகத்தை உறுதி செய்தனர். அவரது தொடர்பு, நீதிமன்றத்தில் சாட்சிகளால் நிரூபிக்கப்பட்டது. ஆயினும் சவர்க்கார், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுத் தப்பி விட்டார்!
துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேலிடம், சவர்க்காரின் குற்றப் பங்களிப்பைப்பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, உண்மையை உணர்ந்து கொண்டார்.
1965 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ஒரு விசாரணைக் கமிஷன், உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.கபூர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் முடிவு 1969 இல் வெளியிடப்பட்டது. அதன்படி, சவர்க்காரும், அவரது கூட்டத்தாரும் கொலை செய்வதற்கான சதிச் செயலைத் தவிர மற்ற கருத்துகளை அழிக்கும் விதமாகத்தான், விசாரணை தொடர்பாக ஆய்ந்த பிறகு, உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1976 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட லாரிகாலின்ஸ், டொமினிக் லாப்பியர் என்பவர்கள் எழுதிய நள்ளிரவில் விடுதலை (Freedom at Midnight) என்ற நூலில், ஏராளமான ஆதாரங்கள் காணக் கிடக்கின்றன. அந்த ஆசிரியர்களுக்கு காவல்துறை உளவுப் பிரிவின் ஆவணங்களும், உயிருடன் உள்ள முக்கிய பங்களிப் பாளர்களின் நினைவுத் தொகுப்புகளும் துணை புரிந்து உள்ளன. மதன்லால், தனது கைதுக்குப் பிறகு, கொலை முயற்சிக்கு முன்புதான் சவர்க்காரைச் சந்தித்துள்ளது பற்றி காவல்துறையிடம் குறிப்பிட்டுள்ளான்.
மேலும் கோட்சே பற்றிய விவரங்களை இந்துராஷ்ட்ரா என்ற மராத்திய நாளிதழ் பூனாவிலிருந்து வெளிவரும் (அதன் ஆசிரியர் என்.வி. கோட்சே; உரிமையாளர் என்.டி. ஆப்தே;) சவர்க்காரின் குழுமத்தைச் சேர்ந்த செய்தி இதழ் என்றும் கூறியுள்ளார்.அவனது கொலை முயுற்சி தோல்வி யுற்றபோது, மதன்லாலின் சகாக்கள் விட்டுச் சென்ற துணிகளில் பொதுவான சலவையகத்தின் பொதுவான அடையாளம் என்.வி.ஜி. என்று குறிக்கப்பட்டிருந்தது.
அவர்கள், விசாரணை ஆரம்பத்தில் நன்கு சுறுசுறுப்பாக இயங்கியது. ஆனால், தற்பொழுது நீர்த்துப்போன திறமை யற்ற முறையில் கையாளப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினைத் தீயாகப்பற்றி எரியக்கூடியதாக அமைந்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
காவலர்கள் இதைவிட அதிகமாக விரும்பி இருக்க மாட்டார்கள் என்று காலின்சும், லாப்பியரும் குறிப்பிடு கிறார்கள். புதுடில்லி காவல்துறையின் திறமையின்மையும், மும்பை காவல்துறையின் திறமையும் முரண்பட்டுள்ளன. மும்பாய் புலனாய்வு காவல்துறையின் சிறப்புப் பிரிவின் பொறுப்பிலிருந்த காவல்துறை துணை கமிஷனரான ஜம்சீட் நாகன்வாலா(32) என்பவர் மும்பை உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜிதேசாயினால் பொறுப்பளிக்கப்பட்டார்.
காந்தியைக் கொலை செய்ய முயற்சித்து தோற்ற பிறகு, மதன்லால் ஒப்புதல், சவர்க்கார் இந்தக் கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பதை ஏற்றுக் கொண்டு, சவர்க்காரை கைது செய்யவேண்டி மொரார் ஜியின் அனுமதியை நாகன் வாலா  வேண்டினார். மொரார்ஜி தேசாய் கோபத்துடன் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். ஆனாலும், சவர்க் காரின் வீட்டை தனது கண்காணிப் பிலேயே வைத் திருந்தார். காந்தி கொலையுண்ட பிறகு, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22 ஆம் நாளன்று காவல் துறைக்கு எழுத்து மூலமான ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில்தான் எந்த ஒரு பொது அரசியல் செயல்பாட்டிலும், அரசு விரும்பும் வரை பங்கேற்கமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார் சவர்க்கார்.
இருந்தாலும் சவர்க்கார் கைது செய்யப்பட்டார். திகம்பர் பாட்கே என்ற அப்ரூவர், அவருக்கு எதிரான முக்கிய சாட்சியானார். சவர்க்கார் வீட்டிற்கு அவர் போனதை மற்ற இரண்டு சாட்சிகள் உறுதிப்படுத்தினார்கள். நீதியரசர் ஆத்ம சரண் பாட்கேயை ஒரு உண்மையான சாட்சியாகக் கண்டார்.
பல இடங்களில் அவருடைய சாட்சியம் மற்ற தனிப்பட்ட சாட்சியங்களுடன் ஒத்துப் போயிற்று.
ஆனால், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில், கோட்சேயும், அவனது கூட்டாளியான நாராயண் ஆப்தேயும் சவர்க்கார் வீட்டிற்குப் போனது மற்ற சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. அப்பொழுது பாட்கே வெளியே இருக்கும்படி சொல்லப்பட்டார். இரண் டாவது சந்தர்ப்பத்தில் கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் சவர்க்காரின் உற்சாகமூட்டும் விதமாக வெற்றியுடன் திரும்பி வா! என்ற வார்த்தைகளைக் கேட்டார்.
அவர் வாக்குமூலத்தை ஒத்துப் போகும் மற்ற இரு சாட்சிகள் அந்த மூன்று பேரும் வீட்டிற்கு முன் இறங்கிப் போனார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், அந்த வீட்டில் வேறு இரண்டு குடித்தனக் காரர்களும் உள்ளனர். ஒரு அப்ரூவரின் வாக்குமூலம் மற்றொரு தனிப்பட்ட சாட்சியின் வாக்குமூலத்துடன் சட்டப்படி ஒத்துப் போகவேண்டும். ஆகவே, இந்த காரணத்தின் அடிப்படையில் சவர்க்கார் விடுதலை செய்யப்பட்டார்.
ஆயினும், சவர்க்கார் இறந்து ஓராண்டு கழிந்த பிறகு அவருடைய பாதுகாவலர் ஆப்தே ராமச்சந்திரகாசரும், அவரது செயலாளர் கஜானன் விஷ்ணு டாம்லேயும், கபூரின் விசாரணைக் கமிஷனின் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பினர். அதன்படி, இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங் களின்படி, ஆப்தேயும், கோட்சேயும் பம்பாயில் சவர்க்காரை அடிக்கடி சந்தித்துள்ளனர்.
தவிரவும், மாநாடுகளிலும் மற்றும் ஒவ்வொரு கூட்டத்திலும், அவர்கள் சவர்க்காருடன் சேர்ந்து காணப்படுகிறார்கள். இந்த சாட்சியத்தின்படி கார்கரேயும், சவர்க்காருக்குத் தெரிந்தவராகவும், சவர்க்கார் வீட்டிற்கு அடிக்கடி போகக்கூடியவராகவும் இருக்கிறார். பாட்கேயும், சவர்க்கார் வீட்டிற்குப் போய் வருபவர். டாக்டர் பார்ச்சுரேயும் அங்கு போயிருக்கிறார்.
இதிலிருந்து, மகாத்மா காந்தி கொலையில் பின்னாளில் தொடர்புடையவர், அடிக்கடி சவர்க்காரின் வீட்டில் கூடி அவருடன் நீண்ட உரையாடல் களை நடத்தியுள்ளனர். டில்லி செல்வதற்கு முன்பு ஆப்தேயும், கோட்சேயும் சவர்க்கார் வீட்டிற்குப் போயியுள்ளனர். குண்டுவீச்சுக்கு முன்னாலும், அவர்கள் கொலை செய் வதற்கு முன்னாலும், அவர்கள் இருவரும் சவர்க்காரைச் சந்தித்து நீண்ட உரை நிகழ்த்தியுள்ளனர். அதில் குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில் கோட்சேயும் ஆப்தேயும் 1946, 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில், பல இடங்களில் அவர்கள் சவர்க்காருடன்  பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந் தால், சவர்க்காருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும். 1948 இல் ஜனவரி 14,  17 ஆகிய தேதிகளில் கோட்சே மற்றும் ஆப்தேயின் சவர்க்கார் வீட்டிற்குப் போனதுபற்றி தெளிவாகி யிருக்கும். அவர்கள் 23, 24 ஆகிய தேதிகளில் குண்டு வீச்சுக்குப் பிறகு வந்திருந்ததாக சவர்க்காரின் மெய்க் காவலர் கமிஷன் முன்பு சொன்னார். சவர்க்காரின் செயலாளர் டாம்லே, ஜனவரி மாத மத்தியில் கோட்சேயும், ஆப்தேயும் சவர்க்காரைச் சந்தித்ததாகவும், அவர்கள் அவருடன் தோட்டத்தில் உட்கார்ந்து இருந்ததாகவும் சொன்னார்.
நாகன்வாலா முதல் குற்றக் குறிப்பின்படி, இந்தச் சதிச் செயலுக்குப் பின்னே இருந்தவர் சவர்க்கார்; அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். கொலை நடந்த மறுநாள், 1948, ஜனவரி 31 ஆம் நாளிட்ட நாகன்வாலாவின் கடிதம், டில்லி போவதற்கு முன்பு, கோட்சே, ஆப்தே, சவர்க்கார் மூவரும் ஒன்றுகூடி பேசியுள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
காசரும், டேம்லியும் கொடுத்துள்ள தகவலின்படி, மேலும் அவ்விருவரும் சவர்க்காரின் வீட்டிற்கு எந்த நேரத்திலும் தடை இல்லாமல் சென்று வருபவர்கள். பாட்கே இல்லாமல் ஜனவரி 14, 17 ஆகிய தேதிகளில் மீண்டும் ஒருமுறை கூடிப் பேசி உள்ளார்கள். அவர்கள் ஏன் நீதிமன்றத்தில் சாட்சிகளாக கொணரப்படவில்லை என்பது ஒரு புதிர்.
வல்லபாய் படேல் பழிவாங்கப்பட்டார். 1948, பிப்ரவரி 27 ஆம் நாள் அவர் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் காந்தியார் கொலைபற்றிய விவரங்களைப்பற்றி ஆராயும் தொடர்புகளில் இருக்கிறேன். முடிவு இதுதான். அது, சவர்க்காரின் தலைமையின்கீழ் உள்ள இந்து மகாசபையின் வெறிபிடித்த ஒரு கிளையாகும்; சதி செய்து அவர்கள் நிறைவேற்றியும் விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
காந்தியார் கொலைபற்றி விசாரணை நடத்திட நீதிபதி கபூர் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் சவர்க்கார் இறந்துவிட்டார். கபூர் ஆணையத்தின் முன் சவர்க்காருக்கு எதிராகவே சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், என்ன செய்ய? சவர்க்கார்தான் மரணம் அடைந்துவிட்டாரே!
கோல்வாக்கருக்கே இவன்தான் குருநாதர். இந்துத்துவா கோட்பாட்டை உருவாக்கிக் கொடுத்தது இந்த ஆசாமிதான்.
நீதிமன்றத்தில் நாதுராம் கோட்சே கொடுத்த 192 பக்க அறிக்கைகூட சவர்க்கார் எழுதிக் கொடுத்ததுதான். அந்த அறிக்கை பிற்காலத்தில் கோபால் கோட்சேவால் May It Please Your Honour என்ற பெயரால் வெளியிடப்பட்டது.
வீரசவர்க்கார் என்று பெயர்தானே தவிர, செயலில் கடைந்தெடுத்த கோழை.
பிரிட்டீஷ் அரசிடம் எட்டு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த வீராதி வீரர் இவர் (கூட்டத்தில் பலத்த சிரிப்பு).
நான் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறேன். என்னை விடுதலை செய்து அருள்க என்று மண்டியிட்டு மன்னிப்புக் கோரியிருந்தாலும், வெளியில் வந்து தன் பார்ப்பன வன்ம வேலையில் ஈடுபட்ட அறிவு நாணயங்கெட்ட ஆசாமிதான் சவர்க்கார்.
காந்தியார் படுகொலை வழக்கில் டெக்னிக்காக  அவர் தப்பியிருந்தாலும், காந்தியாரின் கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் இந்த சவர்க்கார்தான் என்பது உலகறிந்த உண்மையாகும்.
இதில் வெட்கக்கேடு என்னவென்றால், நாடாளுமன்றத் தில் காந்தியார் படத்தோடு, அவரை சுட்டுக்கொன்ற இந்த சவர்க்கார் படமும் வைக்கப்பட்டதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் சவர்க்காரின் பிறந்த நாள், நினைவு நாள்களில் பூமாரி பொழிந்து மரியாதை நிமித்தமாகத் தலைகுனிந்து நிற்கிறார்களே - இதைவிடத் தலைகுனிவு உண்டா?
- என்ற கேள்வியோடு சிறப்புக் கூட்டத்தில் உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
90 நிமிடங்களில் அலை அலையாக கருத்துகளும், தகவல்களும் வந்து விழுந்துகொண்டே இருந்தன.
சிறப்புக் கூட்டத்திற்குப் புதுப்புது முகங்கள் ஏராளம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
--------------- - மின்சாரம் அவர்கள்  -4-2-2013 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

14 comments:

தமிழ் ஓவியா said...


பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் கோவிலா? தமிழ்நாடு அரசு தலையிடுமா?


தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் கலைஞர் அவர்களின் சிந்தனையால் - முயற்சியால் உருவாக்கப்பட்டது பெரியார் நினைவு சமத்துவ புரங்கள். பல்வேறு சமுதாயத்தினரும், ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு குடியமர்த்தப்பட்டனர். எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்பது அடிப்படை விதி - கோட்பாடு. கிருட்டினகிரி மாவட்டம், கே.திப்பனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திடீர் கோவில்கள், வழிபாட்டுச் சின்னங்கள் முளைத்துள்ளன.

தமிழ்நாடு அரசு இவற்றை உடனடியாக அகற்றுவதோடு, அங்கே இந்தச் சிலைகளை வைத்த விஷமிகள்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தகவல்: கோ. திராவிடமணி, கிருட்டினகிரி மாவட்ட விடுதலை செய்தியாளர்

தமிழ் ஓவியா said...


தலைவர் பேச்சுக்கு மரியாதை இல்லை பி.ஜே.பி.யில் படுகுழப்பம்!


புதுடில்லி, பிப். 6- பிரதமர் வேட்பாளர் குறித்து எவ்வித யூகத்திலும் கட்சியினர் ஈடுபட வேண்டாம் என, பாரதீய ஜனதா தலைவர், ராஜ்நாத் சிங் கேட்டு கொண்ட பிறகும், அவர் உத்தரவை, கட்சியின் தலை வர்கள் யாரும் மதிப்பது போல தெரிய வில்லை. மோடியை தான் பிரதமர் வேட் பாளராக அறிவிக்க வேண்டும் என, அக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், சி.பி.தாக்குர், சத்ருகன் சின்கா போன்றோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பா.ஜ., தலைவராக சமீபத்தில் பொறுப் பேற்ற ராஜ்நாத்சிங், நேற்று முன்தினம் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும், அன்பு கட்டளை இட்டார். கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும்; அது வரை பொறுத்திருங்கள். யாரும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கேட்டு கொண்டார். பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்றும், சுஷ்மா சுவராஜ்தான் என்றும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுவதால், உட் கட்சி மோதல் ஏற்படுவதை தவிர்ப்பதற் காக, ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியிருந்தார். எனினும், அதை யாரும் மதிப்பதாக தெரிய வில்லை. ராஜ்நாத் உத்தரவிட்ட சில மணி நேரங் களிலேயே, பீகாரில் பத்திரிகையாளர்களை சந்தித்த, அம்மாநில, பா.ஜ.க., மூத்த தலைவர்களில் ஒருவரான, சி.பி.தாக்குர், மோடியை பிரதமர் வேட்பாளராக இப் போதே அறிவித்தால்தான், கட்சி இன்னும் வளர்ச்சி அடையும் என்றார்.

பாலிவுட் நடிகரும், கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்கா கூறும் போது, மோடிதான் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என, யஷ்வந்த் சின்கா தெரி வித்துள்ளார். அவர் அனுபவம் வாய்ந்த தலைவர், அவர் கூறுவதில் அர்த்தம் இருக்கும்; நன்கு யோசித்துதான் சின்கா கூறியிருப்பார் என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

இதற்கிடையே, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் குழப்பம் குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணையமைச்சருமான, மனீஷ் திவாரி, பா.ஜ.க.,வில் நீண்டகாலமாக நிலவும், பிரதமர் பதவியை யார் அடைவது என்ற குழப்பத்திற்கு, ராஜ்நாத் சிங்கின் கைப்பக் குவ மருத்து எடுபடாது என, டுவிட்டர் இணையதளத்தில் எழுதி யுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அதிபர் ராஜபக்சே திமிர் பேச்சு!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
புதன், 06 பிப்ரவரி 2013 15:07
0 Comments
E-mail Print


கொழும்பு, பிப். 6- இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினவிழா திரி கோணமலையில் திங் களன்று நடந்தது. விழா வில் கலந்து கொண்ட அதிபர் மகிந்த ராஜ பக்சே அந்நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் இயக்கம் அகற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நாடு பல்வேறு சவால் களை சந்தித்து வருகிறது. தாய் நாட்டையும், நாட் டின் சுதந்திரத்தையும் பாதுகாக்க போராடி வருகிறோம். தற்போது மிகவும் கடுமையான சூழ் நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுதந்தி ரத்தை காக்க வேண்டிய சவால்களும் அதிகரித் துள்ளன. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் ஆன இறுதிகட்ட போர் முடிந்து விட்டது.

அதில், இருந்து இங்கு அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுள் ளது. அதே நேரத்தில் மைனாரிட்டி ஆக வாழும் தமிழர்களுக்கு வடக்கு பகுதியில் எந்த விதமான அரசியல் தன் னாட்சி உரிமை வழங் கப்படமாட்டாது. அங்கு அவர்கள் ஒற்றுமையாக வாழும் பட்சத்தில் மத, இன வேறுபாடுகள் ஏற்படாது. - இவ்வாறு அவர் பேசினார்.

தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியில் தன் னாட்சி உரிமை வழங்க மாட்டோம் என அதி பர் ராஜபக்சே பேசி யுள்ள இந்த நேரத்தில் இம்மாத இறுதியில் அய்.நா.சபையின் மனித உரிமை கவுன்சில் கூட் டம் ஜெனீவாவில் தொடங்க உள்ளது. அதில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் தீர் மானத்தை அமெரிக்கா மீண்டும் கொண்டுவர தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மா னம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதற்கு ஆதரவாக இந்தியா உள் ளிட்ட நாடுகள் வாக் களித்தது குறிப்பிடத்தக் கது.

தமிழ் ஓவியா said...


விவசாயிகள் தற்கொலையை மூடி மறைக்க வேண்டாம் தமிழ்நாடு அரசு


தமிழ்நாட்டுக்குரிய நீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெசட்டில் வெளியிட 16 ஆண்டுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டதற்குக் காரணம் - அரசியல் நோக்கமே!

தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலையை மூடி மறைப்பது - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது என்று தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசுக்குத் தலையில் குட்டு வைத்ததுபோல் உச்சநீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் 1997 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு இன்னமும் சட்டப்படி அதன் மத்திய அரசிதழ் - கெசட்டில் - வெளியிடாமல் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி வருவதைக் கண்டித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வெளியிட்டாகவேண்டும் என்று திட்டவட்டமாகவும் தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

16 ஆண்டுகள் தேவையா?

1997 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. அந்தத் தீர்ப்பை சட்டப்படி வெளியிட்டு இருக்கவேண்டாமா? தன் கடமையைச் செய்து அத்தீர்ப்புக்குரிய சட்ட வலிமையைத் தருவதற்கு மத்திய அரசுக்கு 16 ஆண்டுகளா தேவை? மத்திய அரசு தன் கடமையை உச்சநீதிமன்றம் கூறிய பின்னாலா செய்வது?

இதற்கிடையில் முன்பே ஒருமுறை இரண்டு மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றத்தில் ஜனவரி இறுதிக்குள் வெளியிட்டு விடுவோம் என்று மத்திய அரசு சார்பில் அதன் வழக்குரைஞர் கூறி ஒப்புக்கொண்டாரே! தமிழ்நாட்டிலிருந்தும், புதுவையிலிருந்தும் சென்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களில் சிலர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் கெசட்டில் வெளியிடப்படும் என்றெல்லாம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தது - வெறும் வெற்றுப் பேச்சு என்றாக்கி, அவர்களின் நம்பகத்தன்மையையும் கேலிக் கூத்தாக்கலாமா?

நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபடவேண்டுமா?

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சில வாரங்களுக்கு முன்பு பார்த்து இதுபற்றி வற்புறுத்தினர். அப்பேச்சும் விழலுக்கு இரைத்த நீர்தானா?

பொறுமை காப்பதை பலவீனம் என்று எடுத்துக்கொள்வதா?

மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள்போல் தி.மு.க.வும், சதா ரகளை - கலகக் குரல் தராமல் - கூட்டணி தர்மத்திற்காக - பொறுமை காப்பதை அவர்களது பலவீனம் என்று மத்தியில் உள்ள ஆளுங்கூட்டணி அரசின் தலைமை குறிப்பாக பிரதமர் எடுத்துக்கொள்வதா?

விவசாயிகள் தற்கொலைகளை மூடி மறைப்பதா?

தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலைகள் அதை மூடி மறைக்கும் தமிழக அரசின் அமைச்சர்கள் என்ற வேதனையும், வெட்கங்கெட்ட போக்கும், விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அல்லவா அமைந்துள்ளது!

கருநாடகத் தேர்தல்தான் காரணமா?

இன்னும் சில மாதங்களில் கருநாடகத்தில் மாநிலத் தேர்தல் வர இருப்பதால், கருநாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வருவதற்காக கெசட்டில் பதிவு செய்யாமல் காலந்தாழ்த்தி வருவது - மத்திய அரசின் அரசியல் எதிர்பார்ப்பை ஒட்டிய போக்கு என்று வெளிப்படையான விமர்சனங்கள் வந்துவிட்டனவே!

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிட்ட புத்திசாலிகள் ஆகப் போகின்றதா காங்கிரஸ்?

மத்திய அரசின் கடமை!

மேலும் காலந்தாழ்த்தாது உடனடியாக கெசட்டில் வெளியிட்டு, தமிழ்நாட்டிற்குரிய பங்கைப் பெற்று தர நாணயமாய் முயற்சிப்பது மத்திய அரசின் கடமை!

கருநாடக மாநில அரசு ஆடிக்கொண்டுள்ள நிலையில்கூட அம்மாநில முதலமைச்சர் 10, 15 தடவையாக - அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிக் கருத்துக் கேட்டுள்ளார். நடுவர்மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிடக்கூடாது என்பதற்காக இன்றுகூட அனைத்துக்கட்சி ஆதரவைத் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இங்கோ, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று பலர் கேட்டும், கூட்டாதது மட்டுமல்ல; கலைஞர் தி.மு.க.வைக் குறைகூறியே அமைச்சர்கள் உள்பட சட்டசபையைப் பயன்படுத்துவது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரிய ஒன்று. ஒற்றுமையைக் காட்டினால் அது மத்திய அரசு, கருநாடகம் இருவருக்கும் அச்சத்தை உருவாக்குமே!

விவசாயிகள் சொந்த காரணங்களால் இறந்தார்கள் என்று கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் அநியாய செயல்களைச் செய்து, நொந்த விவசாயிகளை மேலும் நோகச் செய்து வேடிக்கைப் பார்க்காதீர்கள்!

தமிழ்நாட்டில் எதிலும் அரசியல், எப்போதும் அரசியல்தானா? வெட்கம்! மகாவெட்கம்!!


- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்


6.2.2013
சென்னை

தமிழ் ஓவியா said...


சேலம் ரயில்வே கோட்டம் ஆர்ப்பாட்டம்-ஏன்?

சேலத்தில் ரயில்வே கோட்ட அலு வலகத்தின்முன் வரும் 11.2.2013 அன்று காலை 11 மணிக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சேலம் கோட்டம் ரயில்வே கோட்டத்தை பாலக்காடுக்குக் கொண்டுபோகத் திட்ட மிட்டுள்ள முயற்சியைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

2007 நவம்பர் முதல் தேதியன்று அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு லாலு பிரசாத் தலைமையில், சேலம் ரயில்வே கோட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அன்றைய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆவார்கள்.

பாலக்காடு கோட்டத்தில் உள்ள 708 கி.மீ. பாதையும் - திருச்சி கோட்டத்தில் உள்ள 135 கி.மீ. பாதையும் சேர்த்து சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.

அன்றைய கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தன் மிக வெளிப்படையாக இதனை எதிர்த்தார்.

பாலக்காடு ரயில்வே கோட்டம் விவகாரத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கேரளா எதிர்பார்க்கிறது. மக்கள் போராட்டம் நடத்தினால் கேரள அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று பாலக்காட்டில் கூட்டுறவு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கு கொண்டு அவ்வாறு கருத்து தெரிவித்தார்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் எதிர் பார்ப்பும்கூட.

தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்த அரசு இதில் ஆர்வம் காட்டியதாலும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக லாலுபிரசாத் அவர்கள் இருந்ததாலும், சேலம் ரயில்வே கோட்டம் அமைந்தது.

ஆனாலும், இடையிடையே சேலம் ரயில்வே கோட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

2012 ஜூன் மாதத்தில் இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது (26.6.2012). அதன் காரணமாக சேலத்திலிருந்து பாலக்காட்டுக்குக் கொண்டு செல்ல இருந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

இப்பொழுது மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடும் காரணத்தால், மறுபடியும் திராவிடர் கழகம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு எனும் பொருளில் திராவிடர் கழகம் எப்பொழுதுமே முன்னணிப் படையாக இருந்து எதிர்த்துப் போராடும் என்பது அனைவரும் அறிந்ததே.

ரயில்வே துறையைப் பொறுத்தவரையில் பொதுவாக தென்னகம் பாதிக்கப்பட்டாலும், கேரளா மட்டும் அதில் விதிவிலக்கு. மத்தியில் சக்தி வாய்ந்த பதவிகளில் நிருவாகப் பொறுப்பு களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருப்பதே இதற்குக் காரண மாகும்.

எடுத்துக்காட்டாக மங்களூரு விரைவு ரயில் வண்டி முதலில் ஈரோடுவரை சென்றது. ஈரோடு எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. பிறகு கோவைக்கு விரிவுபடுத்தப்பட்டது. இப்பொழுது கேரள மாநிலம் மங்களூருவரை செல்கிறது. தமிழ்நாட்டின் எல்லைக்குள் முக்கிய நகரங் களில் மட்டும் நிற்கும் இந்த ரயில், கேரளாவைப் பொறுத்தவரை அனைத்து ரயில் நிலையங் களிலும் நிற்கும்.

எடுத்துக்காட்டுக்கு ஒரு சின்ன உதாரணம் இது.

தட்டினால்தான் கதவு திறக்கும். எனவே, 11 ஆம் தேதி சேலம் ஆர்ப்பாட்டத்தில் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் பங்கு கொள்வார்களாக!

தமிழ் ஓவியா said...


பெண்கள் சுமைகளை தாங்கிக் கொள்கிறார்கள் ஆண்கள் சுகங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்


சுடரொளி - சத்ரபதி மணவிழாவில் தமிழர் தலைவர் உரை

தருமபுரி, பிப். 6- தரும புரியை அடுத்த கடத்தூ ரில் உள்ள லட்சுமி கோவர்த் தனாபாய் திருமண மண் டபத்தில் 3.2.2013 அன்று காலை 9.30 மணிக்கு த.சுடரொளி - ஆதி.சத்ரபதி ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கி.வீர மணி தலைமையேற்று நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வர வேற்று கழக பொதுக் குழு உறுப்பினரும், விடுதலை நாளிதழின் தருமபுரி மாவட்ட செய்தியாளரு மான அ.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். நிகழ்ச்சி களை மாவட்ட ப.க. தலைவர் ஊமை.செயராமன் தொகுத்து வழங்கினார். மணமக்களை வாழ்த்தி தருமபுரி மாவட்ட செயலாளர் வீ.சிவாஜி, கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் தா.திருப்பதி, தருமபுரி மாவட்ட தலைவர் இரா.வேட்ராயன், சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராசன், பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர். வேங்கன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன், மாநில மகளிர் பாசறை பொருளாளர் எ.அகிலா, மாநில ப.க. துணை தலை வர் தகடூர் தமிழ்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நந்தன், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் ஆகியோரது வாழ்த்துரைக்கு பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச் செல்வன், முருகம்மாள் ஆகியோரது மகள் த.சுடரொளி - சி.ஆதிசிவம், ஆ.கமலேசி ஆகியோரது மகன் ஆதி. சத்ரபதி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை நடத்தி வைத்தார்.

மணமக்கள் வீட்டாரின் சார்பில் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. கடத்தூர் நகரெங்கும், பெரியார், கழகத் தலைவரின் படத்துடன் கூடிய வரவேற்பு பதாகைகள் கழக கொடிகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிறைவாக ஆதிமூலம் நன்றி கூறினார். தமிழ்ச் செல்வன் விடுதலை நாளிதழுக்கு சந்தா தொகை யினை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு த.அறிவொளி, த.யாழ்திலீபன், அ.தமிழரசன், த.தமிழ்ச் செல்வி, த.தமிழழகன், ஆதி.சக்கர வர்த்தி, செந்தமிழ்ச்செல்வி, செ. ஆர்த்தி, மா.செந்தில்நாதன், பழ.வெங்கடாசலம், க.கதிர், கோ.திராவிடமணி, அண்ணா சரவணன், தமிழ் பிரபாகரன், திருப்பத்தூர் இளங்கோ, டாக்டர் ஜெகன், பழ.பிரபு, அழகுமணி, வெற்றிசெல்வி பூங்குன்றன், ஆத்தூர் விடுதலை சந்திரன், கரு.பாலன், கிருட்டிணன், ஆறுமுகம், மு.இந்திராகாந்தி, சுப்ரமணி, வனவேந்தன், சண்முகம், தீர்த்தகிரி, சேலம் சிவகுமார், இரா.சின்னராசு, ஆசிரியர் கிருட்டிண மூர்த்தி, ஆசிரியர் வீரமணி, அருள், சிலம்பரசன், எம்.கே.எஸ்.இளங்கோ, எ.சிற்றரசு, பொன்னுசாமி, அரங்க ரவி, ஓமலூர் சவுந்தர், கதிர் செந்தில், மு.துக்காராம் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இரா.கார்த்திக் - மணிமேகலை ஆகியோரது மகனுக்கு கபிலன் என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.

தமிழ் ஓவியா said...

தருமபுரியில் தந்தை பெரியார் சிலை அமைக்க தொழிலதிபரும் தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவருமான இரா.சின்னராசு அவர்கள் சிலைக்காக ரூ.75,000, நாகம் மையார் இல்லத்திற்கு ரூ.25,000 வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தமது வாழ்த்துரையில் தமிழ் செல்வனின் தந்தையார் வேப்பிலை பட்டியை சேர்ந்த வி.டி.அண்ணா மலை திமுக இயக்கத்தில் இருந்தார். இயக்கத்திற்காக இறுதி வரை அயராது பாடுபட்டார். திருச்சியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற போது அங்கேயே மறைந்தார். அவரது மகன் தமிழ்செல்வன் தாய்க்கழகமான திரா விடர் கழகத்தில் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருவது பாராட்டத்தக்கது என்று மேலும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் தமது வாழ்த்துரையில் குறிப் பிட்டதாவது:-

அருமை நண்பர் தமிழ்செல்வன் குடும்ப மண விழா என்ற உரிமை யோடும், பெருமையோடும், நாங்கள் எல்லோருமே இங்கே கூடியிருக்கி றோம். ஒரு மாநாடு போல் அமைந் திருக்கின்ற இந்த நிகழ்விலே கலந்து கொள்வதிலே மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒரே ஒரு மணவிழா விற்காகத்தான் நான் சென்னையிலே இருந்து இங்கு வந்து மணவிழா முடிந்ததும் சென்னைக்கு மாலை யிலே ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.

இந்த மணவிழா நடப்பதன் காரண மாக பல மாவட்ட தோழர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு உருவாகி இருக்கிறது. வி.டி.அண்ணாமலை அவர்களது குடும்பம் இந்த இயக்கத் திற்கு செய்து இருக்கக்கூடிய தொண் டறத்தின் காரணமாக இந்த இளஞ் சிட்டுகள் மகிழ்ச்சியோடு வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.

வேப்பிலைபட்டி எளிய கிரா மம்தான். அந்த எளிய கிராமத்திலே பெரியார் எப்படியெல்லாம் மிகப் பெரிய சமுதாய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார். அண்ணல் அம்பேத்கர் கொள்கை வயப் பட்டவர்கள் எப்படியெல்லாம் நிமிர்ந்திருக் கிறார்கள் என்ற பெருமை எல்லோரையும் சிந்திக்க வைக்க வேண்டிய ஒன்றாகும். தமிழ்செல்வன் இளைஞரணியில் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அறிவேன். தமிழ்செல்வன் எடை அப்போது கூடவில்லை. இப்போது எடை கூடி இருக்கிறார். எல்லாவற் றிலும் கூடி இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


விடுதலை செய்தியாளராக விடுதலை குடும்பத் தில் ஒருவராக இருக்கிறார். இதுக்கெல்லாம் அடிப்படை முருகம்மாள் அவர்கள் இவர் அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்தான் குடும்பத்தை உருவாக்கி இருப்பார்.

நம்முடைய நாட்டில் உள்ள சூழல் ஆண்களை மட்டும்தான் பாராட்டுவார்கள். அவர்கள் வெற்றிக்குப் பின்னால் உள்ள பெண்களைப் பாராட்ட மாட்டார்கள். ஆனால் நம் இயக்கம் அப்படிபட்டதல்ல. நான் இன்றைக்கு இந்த அளவிற்கு சமுதாய பணி செய்பவனாக இருக்கிறேன் சில நாளுக்கு முன் டில்லியிலே இருந்தேன், இன்று இங்கு இருக்கிறேன், நாளைக்கு சென்னை இன்னும் இரண்டு நாளிலே திருச்சி சென்று, அடுத்து துபாய் நாட்டிற்கு சென்று அங்கே பெரியார் கொள்கை பிரச்சாரத்தை தளபதி ஸ்டாலின் அவர்களோடு சென்று அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள இருக்கிறோம் என்று சொன்னால் இப்படி நாட்டின் எல்லை கடந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றோம் என்றால் அது தந்தை பெரியார் அவர்கள் எனக்கு செய்த ஏற்பாட்டின் விளைவு. என்னுடைய வாழ்விணையர்.

என் வாழ்விணையர் எனக்கு எந்தவிதமான சிக்கலும் வைத்திருப்பதில்லை. எல்லா வீடுகளுக்கும் எப்படி செல்கிறேனோ அப்படிதான் என் வீட்டிற்கும் செல்கிறேன். இங்கே எப்படி தங்கிக் கொண்டிருக்கி றேனோ அப்படிதான் அங்கேயும் தங்கி கொண்டு இருக்கிறேன். எனக்கு எந்தவிதமான செய்திகளும் தெரிவதில்லை. தெரிவதற்கு அவர்கள் வாய்ப் பும் வைப்பதில்லை. அந்தளவிற்கு அவர்கள் சுமைகளை தாங்கி கொள்ளுகிறார்கள், சுகங்களை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். இதுதான் ஆண் பெண் உறவு. இந்த நாட்டை பொறுத்தவரை யிலே பெண்கள் இந்த நாட்டின் சமுதாயத்தின் கண்கள் அப்படிபட்ட அருமையான கொள்கைக் குடும்பத்தில் ஒன்று அண்ணாமலை அவர்கள் வழிவந்து இன்றைக்கு தமிழ்செல்வன் அடுத்த கட்டம். இது மூன்றாவது தலைமுறை திருமணம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கொள்கை ரீதியாக இந்த குடும்பம் கொள்கையை பின்பற்றிய தால் இவ்வளவு பெரிய மாநாடு போல அவருக்கு ஆதரவு.

அவர் முதலாளியோ, பெரிய தொழி லதிபரோ, பணக்காரரோ அல்ல. எளிய குடும்பத்தை சார்ந் தவர். ஆனால் அவருக்கு இருக்கிற மனித வளம், பேராதரவு இதுவெல்லாம் எதனால். இந்த கொள்கை வெற்றியின் காரண மாக. அதைத் தொடர்ந்து பின் பற்றி அதற்காக கஷ்ட, நஷ்டங்களை ஏற்றதன் விளைவாகத்தான் இவ் வளவு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இது எங்கள் குடும்பம் என்ற உணர்வோடு உரிய நேரத்திலே இங்கே வந்து நடத்திவைத்து விட்டு போக வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இளை ஞரணி தோழராக அறிமுகம் ஆனதிலிருந்து இன்று வரை எந்த பணியை அவரிடத்தில் ஒப்படைத் தாலும் அதை பொறுப்போடு செய்து கடமை ஆற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழகூடிய அற் புதமான ஒருவர் இன்றைக்கு அவ ருக்கு கூடுதல் பொறுப்பு விடுதலை குடும்பத்திலே செய்தியாளராக தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார். நான் அடையாளம் கண்டதைவிட, அடுத்த தலைமுறை யும் அவரை அடையாளம் காணும் அளவிற்கு அவர் அந்த வாய்ப்பைப் பெற்றவராக இருக்கிறார். இது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.

இங்கே ஊமை.செயராமன் ஒன்றை சொன்னார். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிற இயக்கம். பெரியார், வழியில் அண்ணல் அம்பேத்கர் சிந்தனையில் கல்வி வள்ளல் காமராசர் செய்த புரட்சியின் பலன் என்று வரிசையாக திராவிட இயக்கம் உள்பட அனைத் தையும் இணைத்து சொன்னார்கள்.

நான் தமிழ்செல்வன் ஊருக்கே போயிருக்கிறேன். அவர் இயக்கத்திலே கிளைக் கழகத் தொண்டனாக இருந்து, கிளைச் செயலாளர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், ஒன்றிய இளைஞரணி செயலாளர், மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட கூடுதல் செயலாளர், நகராட்சி அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர், இரண்டு முறை மாவட்ட தலைவர், தற்போது பொதுக்குழு உறுப்பினர் என படிப்படியாக வந்து இவ்வளவு கால கட்டத்திலும் எங்கள் இசைவோடு அன்போடு ஆதரவோடு இந்த இயக்கத்திலே அவரும், அவரது குடும்பமும் பணியாற்றியது. அவரது செல்லங்களுக்கு எங்களது தலைமை யில் திருமணம் நடக்கிறது என்று சொன்னால் இந்த நிமிடம் வரையிலே தமிழ் செல்வன் அவர்கள் எந்த சாதி என்று எனக்கு தெரியாது. தெரிய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அதுதான் இந்த இயக்கத்தின் பெருமையே என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?
கறுஞ்சட்டைத் தோழர்களே கழகக் கொடியுடன் திரள்வீர்! திரள்வீர்!!

அருமைக் கழகத் தோழர்களே!

தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் வகையில், டெசோவின் முடிவுப்படி வரும் 8.2.2013 வெள்ளி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கறுப்புடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் பங்கேற்கிறார். சென்னை மண்டலக் கழக வீரர்களே, வீராங்கனைகளே, கழகக் கொடியுடன் ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!!
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாதாம்! ராஜபக்சேவுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, பிப். 6- ஈழத் தமிழர் களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தரமுடியாது என்று தன்னா ணவ முறையில் வெறியெடுத் துப் பேசிய ராஜபக்சேவைக் கண்டித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் வெளி யிட்ட அறிக்கை வருமாறு:-

இலங்கைத் தீவின் 65ஆவது விடுதலை நாள் விழா, திரி கோண மலையில் நடைபெற்ற போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தரமுடி யாது; நாட்டை இனரீதியாகப் பாகுபடுத்துவது என்பது நடை முறைக்குச் சாத்தியமில்லாதது என்று அறிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தனது உரையில், இனவேறுபாடுகளைப் பற்றி யும், மதவேறுபாடுகளைப் பற்றி யும், சிங்களர்கள் - தமிழர்கள் - முஸ்லீம்கள் ஆகியோரின் உன் னத கலாச்சாரத்தைப் பற்றியும்; இந்தப் பூனையும் பால் குடிக் குமா என்று கேட்குமளவுக்குப் பேசியிருக்கிறார்.

சர்வதேச குற்றவாளி!

இலட்சக்கணக்கான தமிழர் களைப் படுகொலை செய்து; இலட்சக் கணக்கான தமிழர் களைத் தமது பூர்வீக பூமியான ஈழத்திலிருந்து பல்வேறு நாடு களுக்கும் அகதிகளாகவும் அனாதைகளாகவும் புலம் பெயரச் செய்ததோடு, அவர் களுடைய வாழ்வாதாரத் தையும் கேள்விக்குறியாக்கி விட்டு; இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையும், நிலங்களையும், தொழில் நிறுவனங்களையும் சிங்களர்கள் கைப்பற்றி வள மாக இருந்த தமிழர்களின் வாழ் வாதாரத்தை வற்றச் செய்து விட்டு;

அவர்களது அடிப் படை ஜனநாயக உரிமைக ளையும் வாழ்வுரிமைகளையும் பறித்துவிட்டு; சுதந்திரமான நீதிப்பரிபாலன முறைகளிலும், ஊடகங்களின் நடவடிக்கை களிலும் தலையிட்டு நிர்வா கத்தையே தலைகீழாக மாற்றி; ஒரே மொழி - ஒரே மதம் என்று இலங்கை நாட்டைச் சர்வாதி காரப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் ராஜபட் சேவை, மனித உரிமைகள் - மனித நேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க்குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளியென உலக நாடுகள் பார்க்கின்றன.

உறுதிமொழி மீறல்!

சிங்களப் பேரினவாதத்தின் சின்னமான ராஜபட்சே, தமிழர் களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் நீண்ட காலமாக அளித்து வந்த உறுதி மொழியை இப்போது செய் திருக்கும் அறிவிப்பின் மூலமாக மீறியிருக்கிறார் என்பது; உல கெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், சர்வதேச அமைப் புகளும் கடும் கண்டனம் தெரி விக்க வேண்டிய ஒன்றாகும்.

சிங்களர்கள் சார்பில் ஈழத் தமிழினத்திற்கு கொடுக்கப் பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்பது சரித்திரச் சான்றாகி விட்டது. 1925 ஜூன் 25ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் இலங்கை தேசியக் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கைத் தமி ழர் மகாஜன சபையுடன் செய்து கொண்ட உடன்பாடு முதன் முதலாக காற்றில் பறக்க விடப் பட்டது.

1956இல் பண்டார நாயகா பிரதமரானபோது, சிங் களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்றி, 1944இல் சிங்களமும் தமிழும் ஆட்சிமொழிகள் என ஜெய வர்த்தனா தமிழ்ப் பிரதிநிதி களின் கருத்தை ஏற்று நிறை வேற்றிய சட்டத்தை முறித்தார். 1965இல் டட்லி சேனநாயகா பிரதமரானதும், மாவட்ட சபை களை அமைத்து அதிகாரத் தைப் பரவலாக்க, தந்தை செல்வா அவர்களுடன் ஒப்பந் தம் ஏற்படுத்தினார்.

ஆனால் 1969லேயே டட்லி சேனநாயகா அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டதாக ஒருதலைப்பட் சமாக அறிவித்தார். 1987இல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி யுடன், இலங்கை நாடு ஒப் பந்தம் ஒன்றைச் செய்தது. ஆனால் அந்த ஒப்பந்தமும் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இது வரை நிறைவேற்றப்படவில்லை.

இப்படிச் சிங்கள அரசு செய்து கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்ற வில்லை என்பது மட்டுமல்லா மல், அவற்றை எல்லாம் மீறியே இலங்கையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அரசு விழித்துக் கொள்ளுமா?

இவ்வளவுக்கும் பிறகு, நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக் கொண்டு, ராஜபட் சேவின் சுய உருவத்தையும் குணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உலக அமைப் புகளின் உதவியோடு காப்பாற் றிட முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன்.

தமிழ் ஓவியா said...


பொழைப்பா?


இனப்படுகொலையாளன் ராஜபக்சே இந்தியா வரு வதை எதிர்ப்பது - கறுப்புச் சட்டை - கொடி போராட் டம் நல்ல பொழைப்பாம். கார்ட்டூன் போடுகிறது கருமாதிப் பத்திரிகை.
பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று ஒட்டாரம் பிடிக்கும் தமிழ்த் தேசிய வியாதிகளுக்கு இது சமர்ப்பணம்!

எங்கே பிணம் விழும் - கருமாதி, கருமாந்திரம் என்று சொல்லி பணம் பண்ணலாம் என்று பொழைப்பு நடத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலின் கருமாதிப் பத்திரிகை இப்படித்தான் பொழைப்பைப் பற்றி எழுதும்! 6-2-2013

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் பெயரால்...


விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் - இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள்.

ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.

அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.

பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா? இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?

மதச் சார்பற்றவர்கள், இஸ்லாம், கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன?

ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?

ஆன்மீகப் பண்பாடும், துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்

- என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.

பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம்.

பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய், விளக் கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்;

இதுதான் இந்த இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!

இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?

இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா?
கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?

இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்! 8-2-2013

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...


அண்ணாவை அவமானப்படுத்தாதீர்கள்!


வாராழி கலசக் கொங்கை வஞ்சி போல் மருங்குலாள் தன் தாராழிக் கலை சார் அல்குல் தடங்கடற்கு உவமை....

. "தக்கவனே என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றன! அவளுடைய அல்குலோ (பெண்ணின் பிறப்புறுப்பு) தடங்கடற்கு உவமை!

அவளைத் தேடிக் கண்டு பிடித்து வருவாயாக!" என்று இராமபிரான் அனுமனிடம் சொல்லுவதாக கம்பர் பாடல் இயற்றியுள்ளார்.

செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன் என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கை களுக்கு உவமை தேடிப்பார்க்கிறேன. அவைகட்கு இணையாக உலகில் ஒரு பொருளும் இல்லை.அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என இராமன் கேட்பதாக கம்பர் எழுதி யிருக்கிறார்! உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட தன் மனைவியின் கொங் கையையும் மறை விடத்தையும் வேறொ ருவனிடம் வர்ணிக்க மாட்டான்!.என்று "திராவிநாடு" இதழில் கம்பராமாய ணத்தைப்பற்றி எழுதியவர் அறிஞர் அண்ணா. பின்னர் அது "கம்பரசம்" எனும் தலைப்பில் நூலாக வெளி வந்த போது "கம்பன் தமிழரின் கலையையும், நிலையையும், குலைக்கும் ஆரியத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என்பதற்காக எத்தகைய ரசத்தை கவி தையிலே கூட்டியிருக்கிறார் என்பதைக் கண்டு, சரியா?அது முறையா? என்பது பற்றி ஓர் தீர்ப்பளியுங்கள்!"என்று முன்னுரை எழுதினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைத்தாங்கிய கட்சி யின் ஆட்சியில் கம்பர் விருது வழங்கப் போவதாக அறிவித்துள்ளது மானக் கேடு!

- கி.தளபதிராஜ்