Search This Blog

14.2.13

காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவாவாதிகள் நவராத்திரியைத் தடை செய்வார்களா?


காதலர் தினமா? கூடவே கூடாது. அது ஒழுக்கக் கேடு என்று முண்டா தட்டிக் கிளம்பியிருக்கிறது ஒரு மதவெறிக் கும்பல்!

இந்த இந்துத்துவா கும்பல் நம்பும் கடவுள்கள் காதல் புரியவில்லையா?
கடவுள்களின் விபச்சாரத்தை ஏற்றுக் கொள்பவர்கள் உன்ன மான காதலைக் கண்டால் கணைகளை வீசுவது ஏன்?

இவர்களின் கடவுளான கிருஷ்ண பரமாத்மா 60 ஆயிரம் கோபிகை களுடன் கொஞ்சுவதை ஏற்றுக் கொள்ளும் கபோதிகள் மனிதனின் இயற்கை உணர்வான காதலைக் கடிந்து பேசுவது - ஏன்?

இவர்களின் தேவலோகக் கடவுளான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகையை கவுதம முனிவர் போல வேடங்கொண்டு, திருட்டுத்தனமாகப் புணரவில்லையா?

கவுமத முனிவரில் சாபத்தினால் இந்திரனின் உடல் முழுவதும் பெண் குறியாகவில்லையா? இதனை மாற்றி ஆயிரம் கண்ணுடையவன் என்று எழுதி வைத்துக் கொள்ள வில்லையா?

இந்து மதக் கடவுள்களின் ஒழுக்கக் கேட்டை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் ஏடு தாங்காது.

ஆண்டாள் என்ற பக்தை, கடவுளான பெருமாள்மீது காதல் கொண்டு அவனுடன் புணர வேண்டும் என்ற விரகதாபத்தைப் பாடலாக வரிக்கவில்லையா?

வெட்கம் கெட்ட கூட்டம் பக்திப் போர்வையில் மார்கழி மாதத்தில் பஜனையாக இத்தகைய பாடலைப் பாடுவதில்லையா?

விபச்சாரத்தைப் பக்தி சிரத்தையோடு ஏற்றுக் கொள்ளும் கும்பல்தான், காதலை வெறுக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

இந்து ஜனஜாக்ருதி சமதி - என்ற அமைப்பின் தலைவர் ஒருவர் அப்படியே ஆர்ப்பரித்திருக்கிறார் -போங்கோ!

காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம்; அதை இந்திய இளைஞர்கள் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். காதலர் தினத்தன்று ஆணுறை விற்பனை அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காதலர் தினத்தில் ஈடுபடுபவர்கள் கற்பழிப்புவரை செல்லும் ஆபத்துள்ளது என்று கூறியிருக்கிறார் அந்த அமைப்பின் தலைவரான மனோஜ் சோலங்கி.
ஓர் உண்மை தெரியுமா?

நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதக்காரர்கள் ஒன்பது நாள் விழா கூத்தடிக்கிறார்களே!

சக்திக்குப் பார்வதி, கல்விக்குச் சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி என்று கூறி ஒவ்வொரு கடவுளச் சிக்கும் மும்மூன்று நாட்கள் என்று உத்திப் பிரித்து விழாக் கொண்டாடுகிறார்களே - அந்த ஒன்பது நாள் இரவில் என்ன நடக்கிறது?
இதோ அந்த நவராத்திரி லீலா வினோதங்கள்பற்றி வெளிவந்துள்ள தடபுடல் செய்திகள் இணைய தளத்தில்.

நவராத்திரியும் - பாலியல் ஒழுக்கக் கேடும்

மும்பை, அக். 17- நவராத் திரி விழாவின்போது ஆயிரக் கணக்கான இளமை யான ஆண்களும் பெண்களும் நள்ளிரவு வரை ஆடல் பாடலில் ஈடுபடுவது வழக்கம். ஒன்பது இரவுகள் இவ்வாறு கொண் டாடப்படுகின்றன. நவராத்திரிக் கொண்டாட்டத்துடன், எய்ட்ஸ், எச்.அய்.வி., மற்ற பிற பாலியல் நோய்கள் பரவுவதைப் பற்றியும், விரும்பத்தகாத கருத் தரித்தல் பற்றியும் அச்சம் நிலவு கிறது.
ஜாஸ்லோக் மற்றும் லீலாத் வதி மருத்துவமனைகளில் ஆலோசகராக இருக்கும் பிள்ளைப்பேறு மருத்துவர், டாக்டர் திருமதி ரேஷ்மா பாய் இதைப் பற்றிக் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நவராத்திரிக்குப் பின்பு கருவைக் கலைக்கக் கோரி மருத்துவ மனைகளுக்கு வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, என்றார்.

வேண்டாத கருவைக் கலைக்க வருவோர் பெரும் பாலும் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந் தவர்கள் ஆவர். பொதுவாக இவர்கள் பழைய சம்பிரதாயங் களைப் பின்பற்றுவோர். ஆனால் நவராத்திரியின் பொழுது கட்டுப் பாடுகள் இல்லை. ஆதலால் இளசுகள் எல்லை மீறுகிறார்கள், என அவர் மேலும் கூறினார்.

நவராத்திரி மண்டல்களுக்கு (மன்றங்களுக்கு) அருகில் அரசு சாராத அமைப்புகள், எச்.அய்.வி., மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மய்யங்களைத் திறந்துள்ளன. கருக் கலைப்பில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அவை சொல்லுகின்றன. வீதி நாடகங்கள், கண்காட்சிகள் முதலிய வற்றின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுகிறது. அந்த அமைப் புகளில் சில கருத்தடை உறை களையும் விநியோகிக்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற மராத்திய நடிகர் ஆதேஷ் பந்தேகர் பெயரில் உள்ள நவ ராத்திரி மன்றம், மற்றும் போரி வலியில் உள்ள நாயுடு நவராத்திரி மன்றம் ஆகியவற்றிற்கு அருகில் விழிப்புணர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று, மும்பை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தைச் சேர்ந்த ஷீடல் மாத்ரி கூறினார்.

கடந்த 4-5 ஆண்டுகளாக, அவர்ட் சங்கம் எனும் அமைப்பு நவராத்திரி, மன்றம் கணேஷ் மன்றங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அந்தச் சங்கம் கருத்தடைச் சாதனங்களை இலவசமாக விநியோகிக்கிறது. அதிக மானவர்கள் அவற்றை இந்தக் கொண்டாட்டங்களின் போது பெற்றுச் செல்லுகிறார் கள் என,  சங்க ஒருங்கிணைப் பாளர் மங்கள மூர் கூறினார். (இணையதளச் செய்தி 20.10.2010)

இதற்கு என்ன பதில்? காதலை- காதல் தினத்தை எதிர்க்கும் சவடால் பேர் வழிகள் இந்த இந்து மதப் பண்டிகையான நவராத்திரியைத் தடை செய்வார்களா? எங்கே பார்ப்போம்!

              ------------- கருஞ்சட்டை - "விடுதலை” 14-2-2013

26 comments:

தமிழ் ஓவியா said...


அரசியலில் சாமியே சரணம்!


ராஜஸ்தான் மாநிலம், 2013 டிசம்பரில் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கிறது. அதன் அரசியல் எதிரிகள் கோவில்களுக்குப் படையெடுக்கிறார்கள். முதல்வர் அசோக் கெலாட் ஜனவரி 22ஆம் தேதி பன்ஸ் வாராவில் திரிபுரசுந்தரியை வழிபடப் போனார். முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அங்கு அடிக்கடிப் போவதால் அது புகழ் பெற்றிருக்கிறது. பிப்ரவரி 11இல் தொடங்கும் குப்த நவராத்திரியின்போது ராஜே அங்குபோய் ஒன்பது நாட்கள் தனியாகத் தங்கியி ருந்தாராம்.

எப்படி இருக்கிறது அரசியல்?

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


பிரதமர் கனவோ!

செய்தி: குஜராத் மாநிலத்தில் பிஜேபி நிறுத்தி வைத்த 24 முசுலிம் வேட்பாளர் களும் வெற்றி.

சிந்தனை: சட்ட சபைத் தேர்தலில் ஒரு முஸ்லீமைக் கூட நிறுத்தி வைக்காத மோடி - இப் பொழுது ஏன் இந்த மோடி வித்தை காட்டு கிறாராம்? எல்லாம் பிரதமர் கனவுதான்!

தமிழ் ஓவியா said...


காதலர் நாள்

இன்று உலகெங்கும் காதலர் நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

காதல் என்பது மனித இயற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.

காதல் மட்டும் அல்ல; எதுவாக இருந்தாலும் கட்டுக்கு அப்பாற் போனால் ஆபத்துதான். ஏதோ விதி விலக்காக காதல் தோல்வி அடைவதாலோ தவறுதலான புரிதலாலோ எதிர் விளைவுகள் ஏற்படுவதை முன்னிறுத்தி, காதலே கூடாது -அது ஒழுக்கக் கேடானது என்று கூக்குரல் போடுவது அசல் பிற்போக்குத்தனமாகும். காதல் இல்லாமல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பட்ட திருமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் புயல்கள் வீசவில்லையா!

விவாகரத்துத் திருமணம் இத்தகையவர்களிடம் தான் அதிகம் என்ற புள்ளி விவரம் - எதைக் காட்டுகிறது?

சமுதாயத்தின் பல்வேறு கேடுகளுக்குச் சரியான வளர்ப்பும், முறையான கல்வித் திட்டமும் இல்லாததே காரணம் ஆகும்.

காதல் நாளை எதிர்த்து சில சக்திகள் புறப்பட்டுள்ளன; ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற சங்பரிவார்கள் கும்பல் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

இந்(து)த மதவாத சக்திகள் காதலை வெறுப் பதற்கு அடிப்படைக் காரணம், காதல் திரும ணத்தில் ஜாதிக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. மதத்திற்கு மரணக் குழி வெட்டப்படுகிறது என்பதுதான்.

ஜாதி என்பது பற்றி ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகம் என்று கூறப்படும் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் எனும் நூலில் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்?

நீண்ட காலமாக சிலர் ஜாதியை எதிர்த்து வருகின்றனர். ஜாதி அமைப்பு முறை இருந்த பழங்காலத்தில் நாம் மிக உயர்ந்த நிலையில் இருந்தோம். ஜாதி என்கிற அமைப்பு நமது முன்னேற்றத்திற்கோ, வளர்ச்சிக்கோ முட்டுக் கட்டையாக இருந்ததில்லை. அவற்றிற்கு ஆதாரமும் கிடையாது. ஜாதி அமைப்பு முறை சமுதாயத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றவே பயன்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையிலேயே இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து வெறிக் கும்பல் ஜாதியை ஒழிக்கும் காதலை, காதல் திருமணங் களை எதிர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ஜாதியைக் காப்பாற்றக் கூடியவர்களும் காதலை வெறுப்பார்கள் - எதிர்ப்பார்கள் என்பதை இன்றைக்கு நேரிடையாகக் காண முடிகிறது.

அந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த நவீன அரசியல்வாதிகளும் இந்த ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது அம்பலமாகி விட்டது.

ஒரு கேள்விக்கு இந்துத்துவா வாதிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கிய கடவுளான கிருஷ்ணன் என்பவன் காதல் லீலை மன்னன் தானே?

வீட்டுக்கு வீடு கோபியர்களுடன் கொஞ்சும் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு வழிபடும் இவர்கள், காதலை வெறுப்பது ஏன்?

காதலைப்பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை தவறான வகையில் வியாக்கி யானம் செய்ய சிலர் புறப்பட்டுள்ளனர்.

எல்லாமே காதல் தான் - அதற்கு மேல் உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறுவதைத்தான் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அது ஒரு வகையான உணர்வு - அதற்கு அளவுக்குமேல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று கூறும் தந்தை பெரியார் இதில் மற்றவர்கள் பிரவே சிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசிய மான ஆதிக்கம் செலுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் என்பது குறிப்பிட்ட வயது அளவு ஓர் ஆணின் - பெண்ணின் தனிப்பட்ட முடிவாகும். அது கூடாது என்பதோ, தடுப்பதோ அதிகப் பிரசங்கித் தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தைத்தான் திராவிடர் கழகம் வலியுறுத் துகிறது.

கல்விக் கூடங்களில் ஆண் - பெண் மாணவர்கள் சேர்ந்து கற்கும் தன்மையைத் தந்தை பெரியார் வரவேற்கிறார் (விடுதலை 22.5.1967) என்பதையும் குழப்பவாதிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். 14-2-2013

தமிழ் ஓவியா said...


தேவையில்லாதவர்கள்


ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ? (விடுதலை, 21.3.1954)

தமிழ் ஓவியா said...


எத்தனை காலம்தான் ஏமாறுவதோ?


மூடநம்பிக்கைகள் - குருட்டு நம்பிக்கைகள் - எவ்வளவு பெரிய பதவியிலிருப்பவர்களையும் விட்டு வைப்பதில்லை! தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்; படிப்பு வேறு, அறிவு வேறு என்று - அதுதான் எவ்வளவு நூற்றுக்கு நூறு உண்மை - என்பதற்கு நமது நாட்டிலும், மற்ற நாடுகளிலும் கூட (சற்று குறைந்த அளவில்) ஏராளமான எடுத்துக் காட்டுகள் உண்டு!

இந்த வாரம் Outlook ஆங்கில வார ஏட்டில் ஒரு செய்தி படித்தேன்.

மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் நீண்ட கால மாக முதல்வராக இருந்து வருகிறார். பதவியில் இருப்பவர்களின் நம்பிக் கையை மூலதனமாக்கி அவர்களை காக்கா பிடிப்பது, முகஸ்துதி செய்து போற்றி போற்றி பாடி, உச்சி குளிர வைத்து, அய்ஸ் கட்டிகளை நீர் வீழ்ச்சிபோல கொட்டி சிலர் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள் ளுவது மற்ற எந்தத் துறைகளையும் விட அரசியலில் மிகவும் அதிகம்; ஆசை யாரை விட்டது?

அந்த முதல்வர் சவுகான் அரசில் வேலை பார்க்கும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியான பெண்மணி, ஒரு முதல் அமைச்சர் சவுகானைச் சந்தித்து எனது குருஜி அவர்கள் மந்திரித்துக் கொடுத்த ஆயுர் வேத காயகல்பம் இது; உங்கள் உடல் ஆரோக்கியம் பெறவும், ஆயுளை விருத்தி செய்யவும் பெரிதும் உதவும் குருஜி லேசானவர் அல்ல; சக்தி வாய்ந்த மேதை - கடவுள் அவதாரம். அவர் எனக்குக் கொடுத்ததை உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன்; இதை உட்கொண்ட பிறகு உங்களுக்கே அதன் பலன் தெரியும் என்று அளவு அளவாக அளந்து, முதல் அமைச்சரிடம் இதைக் கொடுத்து உட்கொள்ளச் செய்தார்.

அடுத்த சில மணி நேரத்தில், முதல் அமைச்சருக்கு வாய் திறந்து பேசவே முடியவில்லையாம்; பேசவே மெத்த சிரமப்பட்டுப் பேசினாலும் ஏதோ முணுமுணுப்பதுபோல் ஆகிவிட்டது. இவர் எல்லா சந்திப்புகளையும் ரத்து செய்து பிறகு இங்கிலீஷ் டாக்டர்களை அழைத்து மருந்துகளை உட்கொண்டு பிறகு சில நாள்கள் கழித்து சரியானா ராம். அதிகாரியைத் தேடுகின்றாராம்; அவர் எங்கோ, மாயமாகி குருஜியிடம் போய் விட்டார் போலும்!

எவ்வளவு மூடத்தனத்தின் முடை நாற்றம் பார்த்தீர்களா?

இளைஞர்களுக்குத் தெரியாத ஒரு பழைய செய்தி - காந்தியாரை கோட்சே சுட்டுக் கொலை செய்தபோது உலகமே கலங்கியது அல்லவா? தமிழ்நாட்டில் உள்ள வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்பச் செட்டியார் (பார் -அட்லா படித்த மேதை) ஒரு சாமியாரான நான் காந்தியை உயிர்ப் பிழைக்கச் செய்வேன் என்று புருடாவிட அதை அப்படியே நம்பி, முதல் அமைச்சர் ஓமாந்தூர் ஓ.பி. ராமசாமிரெட்டியார் அவரை சென்னை மாநில அரசு விமானமான அனுமான் விமானத்தில் தனியாக ஏற்றி டெல்லிக்குச் சென்றனர்! சாமியார் என்ன ஆனரோ என்ற நிலை!

எவ்வளவு படித்தவர் வள்ளல் அழகப்பர்; அவருக்கே இப்படி ஒரு மூடத் தனம், அதை ஆமோதித்தார் மிகப் பெரிய நிருவாகியான ஓமாந்தூரார்!
எவ்வளவு கேலிக் கூத்து பார்த்தீர் களா? 1948-இல் இது - முந்தையது 2013இல் இன்னமும் ஏமாறுகிறவர் களும், ஏமாற்றுகிறவர்களும் குறைய வில்லையே!

ஓய்வு பெற்ற தேர்தல் கமிஷன் டி.என். சேஷன் அய்.ஏ.எஸ். டில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை கை நீட்டச் செய்து, ஆரூடம் கைரேகையை வைத்து பார்த்து ஜோஸ்யம் கூறியே அவரை தன் வயப்படுத்தியவர்!

அவரது முடிவை முன் கூட்டியே சொல்லியிருந்தால் அவரை நாடும் அரசும் காப்பாற்றியிருக்குமே!

அவரது சோக முடிவை கைரேகை ஜோதிடம் (Pamistry) பார்த்தவர் ஏன் சொல்லவில்லை?

முகமன் வலைக்கு இது ஒரு வழி!

டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி யாக இருந்த (பஞ்சாபியர்) ஏ.என். குரோவர் என்பவரை ஒரு வெறியன் சுட்டவுடன் டெல்லி மருத்துவ மனைக்கு அழைத்து வந்து சேர்த்து உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்தனர். மயக்கம் தெளிந் தவுடன் அவர் அறை எண் 13 என் பதைப் பார்த்து அலறி உடனே அறையை மாற்றியாக வேண்டு மென்று அவர் அடம் பிடித்தார்; வேறு அறைகளே இல்லை - மயக்கம் தெளியு முன்பே 12A
என்று அதே அறைக்கு எண்ணை மாற்றி வேறு அறையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்; பிறகுதான் நீதிபதி நிம்மதி அடைந்தார்.

எத்தனை காலம்தான் (ஏமாற்று பவர்) ஏமாறுவர் இந்த நாட்டிலே? அந்தோ!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

ராஜ்நாத் சிங்கும் ராமர் கோவிலும்

சனவரி மாதம் துவங்கி நடந்து கொண்டு இருக்கும் கும்பமேளா என்னும் கும்மாளகுளியல் திரு விழாவில்??,பாரதிய சனதா அவ்வப் போது பல புதிய அரசியல் முன் னெடுப்பை நடத்திக்கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால் "அடுத்து ஆட்சி அமைக்க கும்ப மேளாவில் அம்மணமாக குளித்துக் கொண்டு இருக்கும் சாமியார்களின் ஆதரவைக் கேட்பது,

தேர்தலில் பாரதிய சனதாவின் தாமரை சின்னத்திற்கு சாமியர்களிடம் ஓட்டு கேட்பது, மற்றும் இந்திய பொருளாதாரத்தின் எதிர்கால முன்னேற்ற திட்டங்கள் குறித்து சாமியார்களின் ஆலோசனை கேட் பது போன்றவை". தற்போது கும்பமேளா முடியும் தருவாயில் உள்ளது, இந்த சாமியார்களின் ஆலோசனைகளை பாரதிய சனதா கட்சியின் தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடலாம் அதன் முதல் அறிக்கையை பாரதிய சனதாவின் (உடனடி மணமகன் போல்) உடனடி தலைவராக மாறிய ராஜநாத் சிங் "பாரதிய சனதா ஆட்சிக்கு வந்தால் இராமர் கோவில் கட்டுவோம்" என்று ஒரு அறிக்கை விட்டார்.

உடைந்து போன பழைய ரிக் கார்ட் என்ற ரிக்கார்டையே உடைத் தவராக இருக்கிறார். ஆட்சியில் இருந்த வருடங்களில் கட்ட முடி யாத இராமர் கோவிலை மீண்டும் ஆட்சிக்கு வந்து கட்டப்போவதாக கூறியுள்ளார். இவர்கள் வழிபடும் இராமனையே ஏமாற்றுகிறார்கள், என்றால் இவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்களை என்ன பாடு படுத்துவார்கள்? கடந்த 20 வரு டங்களில் நாட்டில் எந்த அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று துளியும் அறியாமல் இன்று ஓட்டுப் போடும் உரிமம் பெற்றவர்களில் 87 இளைஞர்கள், என்ற அன்றாட மக்களின் வாழ்க்கை சூழலை கூட கணிக்கமுடியாத கட்சியின் தலைவர், இவரை தலைவராக கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் நிலை என்ன ஆகும். இன்றைய அரசியல் ஓட்டங்களை பொரும்பாலான மக்கள் துல் லியமாக கவனித்துக்கொண்டு இருக் கிறார்கள்.

இப்படி ராமர் கோவில் லட்சுமணன் கோவில் என்று பழைய பல்லவி பாடிக்கொண்டு இருந்தால் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வாய்ப்பில்லாமல் போய்விடும். தேசத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல புதிய திட்டங்களை தீட்டி மக்கள் முன் எடுத்துச்செல்லும் அரசியல் கட்சி களே போட்டியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் மீண்டும் ராமர் கோவில் விவகாரங் களை கையில் எடுத்திருக்கும் பாரதிய சனதாவின் இந்த நிலைப்பாட்டில் இருந்தே இதன் ஆட்சி நடக்கும் மாநிலங்களின் நிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள லாம்.

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...


கும்பமேளாவின் யோக்கியதை இதுதான்! பட்டத்தைப் பணம் கொடுத்து வாங்கினார் நித்யானந்தா


அலகாபாத், பிப்.14- அலகாபாத்தில் நடை பெற்றுவரும் கும்ப மேளாவில் நித்தியானந் தாவுக்கு மகா மண்ட லேசுவரர் பட்டம் வழங் கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை பணம் கொடுத்து வாங்கியதாக சாதுக்களின் உயர் அமைப்பான அகாரா பரிஷத் குற்றம் சாட்டி யுள்ளது.

கும்பமேளா விழா உத்தரப்பிரதேச மாநி லம் அலகாபாத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கி யது.

பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் தியான பீடம் நடத்தி வரும் நித்தியானந்தாவும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார். திரி வேணி சங்கமம் அருகே நடந்து வரும் கும்ப மேளா விழாவில் மகா நிர்வாணி அகாரா என்ற அமைப்பு நித்தியானந் தாவுக்கு மகாமண் டலேசுவரர் என்ற பட் டத்தை வழங்கியுள்ளது. இந்த பட்டம் வழங்கிய தற்கு சாதுக்கள் மற்றும் மடாதிபதிகளின் உயர் அமைப்பான அகாரா பரிஷத் கண்டனம் தெரி வித்திருக்கிறது. மேலும் இந்த விருது வழங்கி இருப்பதில் பணப் பரி மாற்றம்-ஊழல் நடந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறது. இது பற்றி அகாரா பரிஷத் தின் தலைவர் மகந்த் ஞானதாஸ் கூறியதா வது:-

நித்தியானந்தாவுக்கு மகா மண்டலேசுவரர் விருது வழங்கி இருப்ப தில் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக் கிறது. திரிவேணி சங்க மத்தில் நடந்த விழாவில் மகா நிர்வாணி அகாரா, நித்தியானந்தாவை மகா மண்டலேசுவராக பட் டம் சூட்டி இருக்கிறது. இந்த விழாவை ஏராள மான சாதுக்கள், மடா திபதிகள் புறக்கணித் துள்ளனர். நித்தியானந் தாவுக்கு மகா மண்டலே சுவரர் பட்டம் கொடுப் பது கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக் கப்பட்டு இருந்தது.

மகா மண்டலேசுவரர் பட் டம் பெறுவது என்பது மிக நீண்ட ஆன்மிக நடவடிக்கை. ஆனால் சிலர் அதனை பணத் தால் அடைய முயற்சிக் கிறார்கள். இதுபோன்ற நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கடந்த 2010 ஆம் ஆண்டு ஹரித்துவாரில் நடை பெற்ற கும்பமேளாவில் நித்தியானந்தாவின் கூடாரம் சாதுக்களால் சேதப்படுத்தப்பட்டது.

ஆனால் அதுபோன்ற சம்பவம் இங்கு நடை பெறவில்லை. காரணம் மகா மண்டலேசுவரர் பட்டம் பணப் பரி மாற்றத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. சாதுக்கள், மடாதி பதிகள் அடங்கிய உயர் நிலைக்குழு கூட்டம் கூட்டப்படும். இந்த கூட் டத்தில் மகா மண்டலே சுவரர் பட்டத்தை முறை கேடாகப் பெற்றிருப் பது உறுதியானால் நித் தியானந்தா நீக்கப்படு வார்.
- இவ்வாறு மகந்த் ஞானதாஸ் கூறினார்.

EveningCoffeeWithVinesh said...

U r right..ur article is a must need one.I agree with u..Moreover ur blog is a junction of eyeopener..Happy about ur words

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி


பகுத்தறிவு வளர்ந்தால்...

மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


சி.நடேசனார்


பார்ப்பனர் அல்லாதாரே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழர்களே, தொழிலாளர் கழகத் தோழர்களே!

இன்று ஒரே ஒரு மணித்துளியாவது எழுந்து நின்று இந்த மனிதனை நினைவு கூருங்கள். உங்கள் குடும்பத்தாரிடமும் உற்றார் உறவினரிடமும் இந்த மனிதன்பற்றி ஒரே ஒரு தகவலையாவது சொல்லி வையுங்கள்.

திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர் என்ற பெருமைக்குரிய டாக்டர் சி. நடேசனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1937).

62 ஆண்டுகள் வாழ்ந்த இந்த மாமனிதர் பார்ப்பனர் அல்லாதாராகிய திராவிடர் என்ற இனம் இருக்கும் வரைக்கும் இதயப் பேழையில் நன்றி உணர்வோடு சீராட் டப்பட வேண்டியவர் ஆவார்.

ஆரிய ஆதிக்க முதலைப் பிடியில் மூர்க்கத்தனமாகக் சிக்குண்டு கிடந்த திராவிடரை மீட்டுக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறை இவர்தான்.

1912இல் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் தான் திராவிடர் சங்கமாக, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக (South Indian Liberal Federation) நீதிக் கட்சியாகப் பரிணமித்தது.

டாக்டராக இருந்து அவர் ஈட்டிய பொருள் எல்லாம் பொது நலம் என்ற கழனிக்கே பயன்படுத்தப் பட்டது.

அவரால் ஆக்க ரீதியாக உருவாக்கப்பட்ட திராவிடர் இல்லம் (Hostel) பார்ப்பனர் அல்லாதார் கல்விக்குப் பால் வார்த்த தாய் வீடாகும். ஏழை -எளிய மக்களுக்குத் தங்கும் வசதி, இலவச உணவு அளித்து நம் மக்களை உச்சிமோந்த பெருமகன் ஆவார்.

இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி அவர் களும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் அவர் களும் ஆவார்.

சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீர்மா னத்தை இப்பொழுது நினைத் தாலும் மயிர்க் கூச்செரியக் கூடியதாகும்.

பார்ப்பனர் அல்லாதா ருக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்கும் வரை, இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதா ருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர் மானத்தைக் கொண்டு வந்தார் (5.8.1921).

கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கைக்குக் கல்லூரிக் குழு அமைக்க வழி செய்தவரும் இந்தப் பெருமகன்தான்.

ஒரு நடேசன் நலிந்தால் நாம் நலிவு கொண்டு விடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக! - என்று தலையங்கம் தீட்டியது குடிஅரசு (21.12.1937)

வணக்கம் செய்வீர், திராவிடர்களே - இந்த வாழ்வித்த வள்ளலுக்கு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி


இனி வரும் புதிய அரசியல் திட்டத்தை வழங்க, நமது சுயமரியாதையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால் Sweep The Polls என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக் கொள்ள என்ன தடை?

இவர்கள் முன் யார் நிற்கிறார்கள்? இவர்கள் முன் யார் இருப்பினும், எந்த மகாசபையாக இருப்பினும் சுயமரியாதைத் தொண்டர் கள்முன் பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்று சொல்லலாம்.

- இவைகளின் சிறப்பை யோசிக்குங்காலை, உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு There is a Great Future என்று சொல்லலாம். இனி வருங்காலத்தில் உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்குச் சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகின்றது. ஆனால் எதிர்கால செல்வாக்கு உங்கள் தளரா வன்மையும், ஆற்றலையும் விட முயற்சியை யும் பொறுத்தது - சுயமரியாதையோருக்கு மதங்கள் ஒழிந்து விட்டதென இன்று கூறலாம்.

இந்த இயக்கம், முதலில் லூத்தர் மிஷன் மதத்தைப் போல், மதங்களைச் சீர்திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து, இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலி ருந்து எடுத்து விடும் போல் தோன்றுகிறது. உங்கள் இயக்கத்தால் தமிழ்நாட்டில் பல்லாயிரவர் வாயில் கட வுளென்ற பெயரைப் பய பக்தியோடு உச்சரிப்பது போய், பரிகாசம் செய்யும் நிலைமையில் வந்துவிட்டது

கடவுளென்ற ஒருவர் இருப்பாராயின், அவர் என்முன் வருவாராயின், அவர் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு சுயமரியாதை யுணர்வுடன் எழுதுகிறார்! இல்லாத மனப்பான்மை, நமது தமிழ்நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு, நமது தோழர் ஈ.வெ.ராமசாமி செய்த அருந்தொண்டும் உழைப்புமே ஆகும் (குடி அரசு 13.11.1932) என்று குடிஅரசு இதழில் எழுதிய சிந்தனைச் சிற்பி மயிலை சிங்காரவேலரின் பிறந்த நாள் இந்நாள் (1860).

மீனவர் சமூகத்தில் பிறந்த அவர் அந்தக் கால கட்டத்திலேயே வழக்குரைஞர் ஆனவர். சுதந்திரப் போராட்டத்துக் காக வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தவர்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து அவர் எழுதிய கட்டு ரைகள் அந்தக் கால கட்டத்தில் மகத்தானவை. குடிஅரசு இதழை அதற்காகப் பயன்படுத் திக் கொள்ள வாய்ப்பும் அளித் தார் பெரியார். இன்னும் சொல்லப் போனால், தனக்கு மாறுபட்ட தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அப்படியே பதிவு செய்ய சிங்காரவேலருக்கு வாய்ப்பளித்த பெருந்தன்மையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

வெறும் வர்க்கப் பேதத்தை மட்டும் பேசவில்லை. அதைவிட முதன்மையான வருணபேதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத் தவர். சென்னையில் முதல் நாத்திக மாநாட்டை நடத்தி முதல் நாத்திகன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்டு அவர். போர்க் குண மிகுந்த செயல் முன்னோடி பொதுவு டைமைக் கேகுக. இவன் பின்னாடி என்றார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இத்தகைய சிந்தனைச் சிற்பியின் பிறந்த நாள் இந்நாள் (1860). அந்த மாவீரருக்கு ஒரு புரட்சி வணக்கம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கச்சத் தீவை மீட்க வேண்டும் - தமிழக மீனவரைக் காக்க வேண்டும்!


கச்சத் தீவை மீட்க வேண்டும் - தமிழக மீனவரைக் காக்க வேண்டும்!
டெசோ அமைப்பின் சார்பில் ராமேசுவரத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
போராட நம்மையே நாம் அர்ப்பணித்துக் கொள்ளும் வகையில் தயாராவோம்!
தலைவர்கள் சங்கநாதம்!

சென்னை, பிப்.18- தமிழக மீனவர்கள் உரி மைக்காக பாதுகாப்புக் காக நம்மையே நாம் அர்ப்பணித்துக் கொள் ளத் தயாராவோம் என்றார் தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்கப் படுவதைக் கண்டித்து டெசோ அமைப்பின் சார்பில் இன்று (18.2.2013) காலை 11 மணியளவில் ராமேசுவரத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழர் தலைவர், கி.வீரமணி தொல் திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்பு லட்சுமி ஜெகதீசன் மற் றும் பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தொடர்ந்து துன்புறுத்தி கைது செய்து வருகிறது. இந்த தொடர் சம்ப வங்கள் குறித்து 12.8.2012 அன்று சென்னையில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலை மையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் ஒரு அழுத்தமான தீர் மானம் நிறைவேற்றப் பட்டு இந்நிகழ்வை தடுக்கக் கூடிய வகையில் இராமேசுவரம் அருகே மண்டபத்தில் ஒரு கடற்படை தளத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக் கப்பட்டது.

இந்நிலையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் காக டெசோ அமைப் பின் கலந்துரையாடல் கூட்டம் 4.2.2013 அன்று மாலை 4.30 மணியள வில் கலைஞர் தலை மையில் அண்ணா அறி வாலயத்தில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில், இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர் கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், உடனடி யாக மண்டபத்தில் இந்தியக் கடற்படை தளத்தை அமைத்திட வேண்டுமெனவும் மத்திய அரசை இக்கூட் டம் மீண்டும் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்றும்,

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை யினர் தொடர்ந்து இவ் வாறு துன்புறுத்தி வருவதைக் கண்டித்து, ராமேசுவரத்தில் 18.2.2013 அன்றும், நாகப்பட்டி னத்தில் 19.2.2013 அன் றும் டெசோ அமைப் பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அதன்படி, இன்று (18.2.2013) இராமேசு வரத்தில் காலை 11 மணியளவில் டெசோ அமைப்பின் சார்பில் தமிழக மீனவர்களின் நலனைக் காப்பாற்ற தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலை மையிலும், டெசோ அமைப்பின் உறுப்பினர் கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., திரா விட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீர பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னி லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், மீனவர் களும் பல்லாயிரக்கணக் கில் திரளாகக் கலந்து கொண்டு, இலங்கை கடற்படையினரைக் கண்டித்தும், உடனடி யாக மண்டபத்தில் இந்தியக் கடற்படை தளத்தை அமைத்திட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும் ஒலி முழக்கங்கள் எழுப் பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்

இந்திய அரசே, இந்திய அரசே வேண்டும் வேண்டும் கச்சத் தீவை மீட்க வேண்டும்!

மீனவர் வாழ்வை பாதுகாக்க
கச்சத் தீவை மீட்டுக்கொடு

தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து

மத்திய அரசே! மத்திய அரசே!
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
சிங்கள அரசின் இராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்து!

கொல்லாதே கொல்லாதே
மீனவர்கள் உயிரை கொல்லாதே

சிங்கள அரசே இனவெறி அரசே
தடுக்காதே தடுக்காதே
மீனவர்களை தடுக்காதே
மீன்பிடி தொழிலை நசுக்காதே

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
ஆணவக்காரன் ராஜபக்சேவை
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

நிறைவேற்று நிறைவேற்று
டெசோ இயக்க தீர்மானத்தை நிறைவேற்று

மீனவர் நலனை காத்திட
டெசோவின் பரிந்துரைகளை
நிறைவேற்று! நிறைவேற்று!
மத்திய அரசே நிறைவேற்று

போன்ற ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

இந்தியா பெரிய ராணுவ அமைப்பை கொண்ட நாடு. இலங்கையோ மிகச் சிறிய ராணுவம் கொண் டது. ஆனால் இலங்கை இந்தியாவின் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லுகிறது. உலகில் அதிக நிதி ஒதுக்கும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக ராணுவம் பலம் வாய்ந்த நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் உள்ளது. இத்தகைய சிறப்பை வைத்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டி ருப்பதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கு சந்தேகம் அதிகமாகின்றது.

தமிழ் ஓவியா said...


என்னவென்றால் இந்திய ராணுவத்தினால் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியவில்லையா அல்லது காப்பாற்ற மனமில்லையா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இனியும் தாமதிக்காமல் இந்தியா உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழகம் கொதித்தெழும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கின்றேன் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் உரையாற்றினார்.

தொல். திருமாவளவன்

சிங்களக் கடற்படை அவர்களின் எல்லைக்குள் மட்டுமல்ல; நம் எல்லைக் குள்ளும் வந்து தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லுகின்றது. தாக்கு கின்றனர் சிறைப் பிடிக் கின்றனர். மீன்களைக் கொள்ளை அடிக்கின் றனர்.

இந்தியாவில் உள்ள ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்கு அளிக்க வேண்டுமானால் இந்தியாவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அத்தகைய ஒப்புதல் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்குப் பெறப்படவில்லை.

சட்டத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழர்களின் பகுதி - தமிழர்களின் எதிரியாக இருக்கக் கூடிய நாட்டுக்குத் தாரை வார்க்கப் பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மூலம் ஈழத்தில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு வெடி மருந்துகள் போய் சேர்கின்றன என்பது போன்ற உண்மைக்கு மாறான பொய்த் தகவல்களை பரப்புகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இதில் அரசியல் பிரச்சினையும் இருக்கிறது; 1967 முதல் தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்குவர முடியவில்லை. அந்த வெறுப்பை தமிழக மீனவர்கள் பிரச்சினையில் காட்டுகிறார் களோ என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்யப்படுகிறது.

இனி இவர்களை நம்பிப் பயன் இல்லை என்ப தால் மக்கள் மத்தியில் செல்லத் திட்டமிட் டுள்ளோம். டெசோ மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டுள்ளது. நமது வாழ் வாதார உரிமைகள் பெறப் படும் வரை நமது போராட் டம் தொடரும் நமது பயணம் முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

நீங்கள் எல்லாம் வெயி லில் நின்று கொண்டுள் ளீர்கள். அதிக நேரம் பேசத் தேவையில்லை. ஒரு நாட்டின் கடல் எல் லையிலிருந்து 22 கி.மீட் டர் வரை உள்நாட்டுக்கு உரிமையுடையது. 42 கி.மீ. சுங்கவரி எல்லை; 320 கி.மீ. பொருளாதார எல்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தமிழ்நாட்டில் தேவிபட்டினத்திலிருந்து 34 கடல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கலாம். ஆனால் தனுஷ்கோடியிலிருந்து வெறும் 6 மைல் தூரத்திலேயே இலங்கை எல்லை வந்துவிடுகிறது.

கடல் எல்லை என்கிறபோது கோடு போட்டுக் காட்ட முடியாது. காற்றடித்த திசையில் படகுகள் போகும் என்பது எல்லோருக்குமே தெரியும்.

தனுஷ் கோடியிலிருந்து நாகப்பட்டினம் வரை 175 ஊர்களில் தமிழக மீனவர்கள் வாழ்கின்றனர். 4 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரம் இப்பொழுதுகேள் விக் குறியாகிவிட்டது.

உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்னும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதுவெறும் மீனவர்கள் பிரச்சினை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையும் உள்ளே அடங்கியிருக்கிறது. மீன்வளம் என்பது 21 விழுக்காடாகும். அந்த வகையிலும் இந்திய அரசு கண்ணோட்டம் செலுத்த வேண்டாமா! இதில் கட்சியில்லை, மதமில்லை; இனம்கூட இல்லை. மனித உரிமைப் பிரச்சினை, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தளபதி மு.க. ஸ்டாலின்

ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் உரிமைக ளுக்காக டெசோவின் சார்பில் பல்வேறு முயற்சி களில், பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக் கிறோம்.

சென்னையில் 12.8.2012இல் டெசோ மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து தொடர் பணி களில் ஈடுபட்டு வருகின் றோம்.

தமிழ் ஓவியா said...

மாநாட்டுத் தீர்மானங் களை அய்.நா.விலும் மனித உரிமை ஆணையத்திட மும் ஒப்படைத்து நேரில் நிலைமைகளை விளக்கிச் சொன்னோம்.

டில்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து நம் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். எஞ்சியுள்ள தூதர்களையும் விரைவில் சந்திக்க இருக்கிறோம்.

இந்த மாதம் நான்காம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்கள் கூடி அடுத்த கட்டப் பணிகள் பற்றி பல முடிவுகளை எடுத்தோம்.

அதன்படி இம்மாதம் 8ஆம் தேதி கருப்புடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்தினோம் பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் கருஞ்சட்டை அணிந்து உரிமை முழக்கமிட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமையேற் பதாக இருந்தது. கடைசி நேரத்தில் நானே தலைமை ஏற்கிறேன் என்று தலைவர் கலைஞர் அவர்களே முன் வந்தார். அவர் தலைமையில் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4ஆம் தேதி நடைபெற்ற டெசோ கூட்டத்தில் இன்னொரு தீர்மானம். நமது தமிழக மீனவர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் என்பதற்காக இன்று இங்கு இராமேசுவரத்திலும், நாளை நாகப்பட்டினத்திலும் டெசோவில் சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து ஒரு பக்கம் இப்படி நேரடியாகக் களத்தில் இறங்கி உரிமைக் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இன்னொரு பக்கத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமர் அவர்களுக்குத் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர் களை பிரதமரைச் சந்தித்து எடுத்துக் கூறுமாறு கூறி வந்துள்ளார்.

நாடாளுமன்றத்திலும் பிரச்சினை களை எழுப்பி வருகிறோம்.

பிரதமரும் இலங்கை அரசோடு தொடர்பு கொள்கிறார்கள். நிலைமைகளை எடுத்துச் சொல்கிறார்கள். தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகளைப்பற்றிப் பேசுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நமக்குச் சமாதானங்களைச் சொல்லு கிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

கச்சத் தீவை மீட்போம்!

இதற்கு நிரத்தரப் பரிகாரம் கச்சத் தீவு மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான். டெசோ மாநாட்டில் அந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி அல்லது மண்டபத்தில் இந்தியா வின் கடற்படைத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்பது டெசோ மாநாட்டுத் தீர்மானமாகும் அதையும் வலியுறுத்துகிறோம்.

நமது அடுத்த கட்டம் என்பது நம்மையே நாம் அர்ப்பணித்துக் கொள்ளும் வகையில் தயாராக வேண்டும். டெசோ வழிகாட்டும்; தலைவர் கலைஞர் வழிகாட்டுவார் ஆயத்தமாவோம் என்று தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் பொது மக்கள் திரண் டிருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப. தங்கவேலன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ் ஓவியா said...

டாக்டர் சி. நடேசனாரின் 77 ஆம் ஆண்டு நினைவுநாள் சுயமரியாதை உணர்வை, சமூகநீதியைத் தந்தது திராவிடர் இயக்கம்!
திராவிடர் இயக்கச் சிந்தனைகளைப் பரப்புவோம்! பரப்புவோம்!!
சென்னை நடேசனார் பூங்காவில் தோழர்கள் கருத்துரை

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தைத் தோற்றுவித்த டாக்டர் சி. நடேசனாரின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் நடேசனார் சிலைக்கு மாலை அணிவித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தோழர்களிடையே உரையாற்றினார் (சென்னை, 18.2.2013)

சென்னை, பிப்.18- திராவிடர் இயக்கம் தான் சுயமரியாதை உணர்வை ஊட்டியது. சமூகநீதியைப் பெற்றுத் தந்தது. அந்த இயக்கத்தின் சிந்தனைகளை, சாதனைகளை மக்கள் மத்தியில் பரப்பிட நடேசனார் நினைவு நாளில் உறுதிகொள்வோம் என்றனர்- திராவிடர் இயக்கத் தோழர்கள்.

திராவிடர் இயக்கத்தைத் தோற்றுவித்த டாக்டர் சி.நடேசனார் அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் இந்நாள் (1937).

அதனையொட்டி சென்னை - தியாகராயர் நகரில் உள்ள டாக்டர் சி. நடேசனார் பூங்காவில் பெரியார் நூலக வாசகர் வட்டம், தொ.மு.ச. ஆகிய அமைப்புகளின் சார்பில் இன்று காலை 9 மணியளவில் அவரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், நடேசனார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருட்டிணன், திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முதலியோர் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், `உழைப்பாளி ஏட்டின் துணை ஆசிரியர் அருணகிரி வரவேற்புரை யாற்றினார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருட்டிணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தொடக்கவுரை நிகழ்த்தினார்.

தமிழ் ஓவியா said...

அய்ந்தாறு ஆண்டுகாலமாக சிறிய அளவில் நடத்தப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி, இன்றைய தினம் விரிவடைந்துள்ளது.

இரட்டை ஆட்சி முறையில் சென்னை மாநிலத்தில் அமைந்த முதல் சட்டமன்றத்தில் தமிழ் இலக்கியத்தின் பெருமைகள்பற்றிப் பேசி ஆங்கிலேயர்களுக்குப் புரிய வைத்தவர் நடேசனார்.

இந்து அறநிலையத் துறை சட்ட முன்வடிவை - அதன் நோக்கத்தை விரிவாகக் கூறி சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியவரும் அவரே. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

இத்தகைய திராவிட இயக்கச் செம்மல்களை நினைவு கூர்வதுமூலம், இந்தத் தலைவர்களையும் தலைவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம் - அவற்றின் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல முடியும் - எடுத்துச் செல்லவும் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொ.மு.ச. சண்முகம்

மிகப்பெரிய இயக்கத்திலிருந்து வந்திருக்கிறோம். பலர் நமக்கு மறுப்புகளைக் கூறிக்கொண்டு இருக்கிறார் கள். பிறர்மீது நாமும் மறுப்பு களைக் கூறிக் கொண்டு இருக்கிறோம். இந்த இயக் கத்தின் சாதனைகளை வெளிநாட்டுக்காரர்கள் புகழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இந்த இயக்கத்தின் சாதனைகளை நாம் பாதுகாத்து ஆவணமாகக் கொடுக்க வேண்டும்.

திராவிடர் இயக்கம்பற்றி பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த நூல்களைப்பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். அப்படி நிகழ்ச்சி நடத்தும்போது நூலாசிரியர்களையும் அழைத்துப் பாராட்டவேண்டும் என்று தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் குறிப்பிட்டார்.

டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.,

திராவிடர் இயக்கத்தை நடேசனார் அவர்கள் நூறு ஆண்டுகளுக்குமுன் தொடங்கியபோது கடும் எதிர்ப்புகள் இருந்தன. இன்றைக்கும்கூட சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டும் உள்ளனர். அவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ளவேண்டும்.
திராவிடர் இயக்கம் என்றாலே அதன் பொருள் சுயமரியாதை உணர்வு என்பதாகும். அந்த உணர்வு நமது ரத்தத்தோடு கலந்ததாகும். எங்குப் பேசினாலும் அந்த உணர்வை வெளிப்படுத்தாமல் இருக்க என்னால் முடியாது.

ஸ்ரீஜென்மா பாவகர்மா என்பது சமஸ்கிருதம். பெண்களாகப் பிறப்பதே பாவம் என்பது அவர்களின் கலாச்சாரம்.

பெண்ணிற்பெருந்தக்க யாவுள என்பது திருவள்ளுவர் கண்ட நமது திராவிடக் கலாச்சாரம்.

அதுபோலவே, சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று சொன்னவன் கிருஷ்ணன்.

தமிழ் ஓவியா said...


நான்கு வருணத்தையும் நானே படைத்தேன் என்று கிருஷ்ணன் சொன்னான் என்று கீதையில் எழுதி வைத்துள்ளனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திருவள்ளுவர் தந்த தத்துவம் - திராவிடர் கலாச்சாரம்.

ஆரியக் கலாச்சாரம் வேறு - திராவிடர் கலாச்சாரம் வேறு - இவற்றை நமக்குத் தெளிவுபடுத்தியவர்கள் நமது தலைவர்கள். அதில் நமது டாக்டர் நடேசனார் முக்கியமான முன்னோடி தலைவர் ஆவார். அவர் வழி நடக்க உறுதிகொள்வோம் என்றார் தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள்.

கலி. பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழ் ஓவியா said...

இந்தப் பகுதியே திராவிடர் இயக்கம் வேரூன்றிய பகுதியாகும். இந்த நகருக்குப் பெயர் தியாகராயர் நகர். இந்தப் பூங்காவுக்குப் பெயர் டாக்டர் சி. நடேசனார் பூங்கா. பக்கத்தில் இருக்கும் பகுதி பனகல் பூங்கா - கடைவீதிக்குப் பெயர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் பஜார். ஒரு வீதிக் குப் பெயர் அ. தணிகாசலம் (செட்டியார்) வீதி. சாலைக்குப் பெயர் உஸ்மான் சாலை.

இப்படி நீக்கமற திராவிடர் இயக்க மாகிய நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

திராவிடர் இயக்கத்தினைத் தோற்று வித்தது, திராவிடர் இல்லம் என்ற விடு தியையும் நூறு ஆண்டுகளுக்குமுன் டாக்டர் நடேசனார் உருவாக்கினார் என்றால், அது சாதாரணமானதல்ல.

பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் விடுதிகள் கிடையாது. இருந்த விடுதி களில் பார்ப்பனர் அல்லாதார் செல்ல முடியாது. அமர்ந்து சாப்பிடவும் முடியாது. வேண்டுமானால், எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடலாம்.

அப்படி ஒரு காலகட்டத்தில், நடேசனார் திராவிடர் இல்லம் என்ற விடுதியை ஏற்படுத்தி ஏழை - எளிய பார்ப் பனர் அல்லாத மாணவர்களுக்குத் தங்கும் வசதியும், இலவச உணவும் அளித்தார் என்பதை பார்ப்பனர் அல்லாதார் நன்றியுடன் நினைவு கூரவேண்டாமா?

சென்னையில் ஜார்ஜ் டவுனிலும், அன்றைய மவுண்ட் ரோடிலும் பார்ப்பனர்கள் நடத்திய உணவு விடுதிகளில் மாட்டப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளில் என்ன எழுதப்பட்டு இருந்தது தெரியுமா?

பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த நிலை எல்லாம் மாற்றப்பட்டதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கம் அல்லவா!

கடைசியாக ஒன்று - பார்ப்பானை பிராமணன் என்று அழைக்காதீர் என்று கட்டளையிட்டார் தந்தை பெரியார். அவனைப் பிராமணன் என்று சொன்னால், உன்னை நீ சூத்திரன் என்று ஒப்புக்கொண்டதாகும் - சூத்திரர்கள் என்றால், பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று பொருள் என்பதையும் நினைவூட்டிப் பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி. சத்தியநாராயணன், கவிக் கொண்டல், மா. செங்குட்டுவன், முன்னாள் மேயர் சா. கணேசன், மாம்பலம் சந்திரசேகர், பா. பழனி, புலவர் கூத்தரசன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மதியழகன், பெரியார் மாணாக்கன் காரைக்குடி புரூனோ மற்றும் தொ.மு.ச. தோழர்கள், திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் மனோகரன் நன்றி கூறிட, காலை 10 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரிக்கும் பொறுப்பை தொ.மு.ச. ஏற்றுக்கொண்டது.

தமிழ் ஓவியா said...


இப்படியும் சிலர் - எப்படியும் ஏற்றுத்தானே வாழுகிறோம்?

நாம் பழகும் நண்பர்களில் சிலரின் சுபாவமும் பிறரிடம் பழகும் பாங்கும் பற்பல நேரங்களில் மிகவும் விரும்பத் தகாதவைகளாகவும், ஏன், வெறுக்கத் தக்கதாகக்கூட இருக்கும்!

எனன்தான் நம்மோடு சேர்ந்து படித்த இளமைக் கால நண்பராக இருந்தாலும் பொதுவிடங்களில் அதற்கான உரிமையை எடுத்துக் கொள்வது அருவருக்கத்தக்கது. சிற்சில நேரங்களில் அது விபரீத விளைவுகளையும் உண்டாக்கி விடும் சூழலும் ஏற்படுவதுண்டு.

நமது இயக்கத்திலேயே முன்பு திராவிட மாணவர் கழகத்தினை உருவாக்கியவர் அவர். கடும் உழைப்பாளி, பி.ஏ. பட்டதாரி, வெள்ளை உள்ளம் கொண்ட வெகுளி.

ஈரோட்டுக் குருகுல வாசத்தில் அவரும் இருந்தவர்; அவர் மாணவர்களிடம் மிகவும் நெருங்கி வாஞ்சையோடு பழகியவர் என்றால் எல்லோரையும் வாடா, போடா என்று உரிமையுடன் உறவு கொண் டாடுவார்.

நாவலர், கலைஞர், பேராசிரியர், கவிஞர் கருணானந்தம், ஈ.வெ.கி. சம்பத், என்னைப் போன்ற சிலர் ஆகியோரை ஒருமையால் அழைப்பார்; அவன் எப்படி இருக்கான்? என்பார். கள்ளம் கபடமில்லாத கழகக் கடமை வீரர்தான். ஆனால்... மேலே குறிப்பிட்ட வர்கள் பெரும் பொறுப்பிலே இருக்கிற நிலையில் இவர் சந்திக்க வந்தபோது, இயக்கத் தொண்டர்கள் பலர் குழுமி யுள்ள இடத்தில் இவரும் வந்து, என்ன... அவன் இன்னும் வர்ல்லையா என்று ஒருமையில் சொன்னவுடன், அழுக்குச் சட்டை, சீவாத தலை இவற்றுடன் உள்ள உருவத்தில் - அங்கிருந்த சில புதுசுகள் கோபப்பட்டு அவரை அடிக்கவே பாய்ந்து விட்ட நிலையில், பழைய தோழர் ஓரிருவர் வந்து பயணியர் விடுதியின் முன் உள்ள கும்பலிலிருந்து இவரைப் பாதுகாக்கும் போது, சம்பந்தப்பட்டவர் வந்து காரில் இறங்கும்போது இவரை வாஞ்சையுடன் அழைத்தவுடன்தான், தாக்க முயன்ற தோழர்கள்வரை இவரைப் பற்றிய விவரங்களைப் புரிந்து கொண்டனர்!

என்றாலும் இங்கிதம் ஒன்று உண்டே! உள்ளம் தூய்மையானது. உடை அழுக்கானது. அவர் பேச்சின் நடை மெருகேற்றப்படாதது. பண்பின் இலக் கணத்தைப் புறந்தள்ளி, புல்லரிக்கும் நட்பின் வெளிப்பாடு - இருந்தாலும் பொதுவிடங்களில் நடந்து கொள்ள வேண்டிய நயத்தக்க நாகரிகம் - பண்பாடு என்று உண்டல்லவா!

நல்லவர்களில் இப்படியும் சில நேரங்களில் சில மனிதர்கள்!

இன்னொரு ரகம். வெளுத்த சட்டை, மடிப்புக் கலையாத உடை, வஞ்சகத்தை மறைத்து தொழுதகை உள்ளவர்களாலும் தோகை விரித்தாடுபவர்களாகத் தங் களைக் காட்டிக் கொள்ளும் - உள்ளத்தில் நஞ்சு, உதட்டில் சிரிப்பு!

அவர்களை ஆங்கிலத்தில் Sadist என்பர். பிறரைத் துன்புறுத்தி தாம் இன்பங்காணும் ஒரு வகையினர்.

பலர் எதிரில் தம் நண்பர்களை மட்டந் தட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி காணும் விசித்திர விரியன்கள்!

ஏம்பா, முன்பெல்லாம் இப்படி இப்படிச் செய்து, எல்லோரையும் ஒருவகையாக ஏமாற்றுவாயே, அது இன்னமும் இருக் கிறதா? உன்னிடத்தில் என்பார் - ஏதோ உரிமையுடன் உறவு கொண்டாடுவதைப் போன்று. பிறரிடம் உள்ள குறைகளை தமது கண்களும் ஏதோ எக்ஸ்ரே கண்கள் போலவே அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்கும் மூளை இவருக்கு ஏக போகம் போலும் பேசி, அடுத்தவர்களை கொட்டிப் பார்த்து இன்பம் தேடும் குளவிகள் இவர்கள்!

உலக வாழ்வில் இப்படிப்பட்ட மனிதம் இல்லாத மனித உரு கொண்ட ஜந்துக்களிடம் கூட நாம் பழகிடத்தான் வேண்டியுள்ளது!
அதற்காக ராபின்சன் குருசோ வின் தீவு வாழ்க்கை வாழ முடியுமா என்ன?

என்றாலும் இவர்களின் துன்புறுத் தலிலிருந்து தப்பிக்க ஒரே வழி, முதல் தாக்குதல் அவர்மீதுதான் (வார்த்தை களால் சுடுதல்) என்பதைக் கையாளு பவர்களிடம் இவர்கள் ஒதுங்கிப் போய் ஓடியே விடுவார்கள்.

ஆனால் எல்லோருக்கும் அத்த கயை விசித்திர முறைகளை வீரியத் துடனும், விவஸ்தையுடனும் செய்து முந்திக் கொண்டு முறியடிக்க முடி யாதல்லவா? எனவேதான் அடக்க முடியாதவர்களிடம் அடங்கிப் போய்த் தீர வேண்டியவர்களாகி விடு கிறோம்.

அதில் நான் எப்போதும் தோற்ற கட்சிக்காரன்தான்; காரணம் அய்யா போதித்த மனிதாபிமானம், சுயமரி யாதையையும் தாண்டிய நிலையில் - நீங்கள் எவ்வகையோ என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் ஓவியா said...


நாடு எங்கே போகிறது?


சுதந்திரத்திற்கு முன் நம் நாட்டின் மக்கள் தொகை நாற்பது கோடி. இப்பொழுது நூற்றிருபது கோடி.

இவ்வளவு பெரிய மக்கள் தொகை யைக் கொண்ட நாட்டை ஏழாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வியா பாரம் செய்ய அந்த ஆங்கிலேயர்கள் எப்படி நம்மை அடிமையாக்கினார்கள்? நூற்றி அய்ம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.

நாற்பது கோடி மக்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

நாற்பது கோடி மக்களும் நாற்பதாயிரம் ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். இவர்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்று நினைத்தார்கள். அடக்கினார்கள். ஆட்சி செய்தார்கள்.

இந்தியா அடிமை நாடானது. அடங்கிக் கிடந்தது. இதைப்பற்றி யாரும் வெட்கப்பட வில்லை. வேதனைப்படவில்லை. இவர் களுக்கு ஜாதியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும்தான் கவலை.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யுங்கள். எங்கள் ஜாதியிலும், மதத்திலும் தலையிடாதீர்கள். இது விக்டோரியா மகாராணியிடம் செய்து கொண்ட ஒப்பந்தம்.

இதுதான் சரித்திர உண்மை. அந்த நிலைக்கு இந்தியாவை பின்னோக்கி இழுக்கிறார்கள் இப்பொழுது.

மக்களை, மாநிலங்களை, ஜாதிகளைப் பிரிக்கிறார்கள், சட்டத்தையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் யாரும் சட்டை செய்வது இல்லை.

இதுதான் மக்களாட்சியின் மகிமை. ஜனநாயக உரிமை.

இது என்னுடைய, மாநிலம், இங்கு வேறு யாரும் வேலை செய்யக் கூடாது செய்யவும் விட மாட்டோம்.

உங்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது. நீதிமன்றமும், மத்திய அரசாங் கமும் எங்களைக் கட்டுப்படுத்தாது. நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

இவன் தாழ்த்தப்பட்டவன். எங்கள் ஜாதிப் பெண்ணைக் காதலித்துத் திரு மணம் செய்து கொண்டான். விட மாட்டோம். சேரிகளைத் தீயிட்டுக் கொளுத்துவோம். இது ஊர்க் கட்டுப்பாடு.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஏன்? மந்திரிகள்கூட ஒன்றும் பேச முடியாது. இது கட்சிக் கட்டுப்பாடு.

வேற்றுமையில் ஒற்றுமை. கொலை செய்வான். கொள்ளை அடிப்பான். மிகவும் நல்லவன் விபச்சாரம் செய்வாள் பத்தினி. தொழுநோய் உள்ளவன் அழகன். திருடுவான், ஆனால் நம்பிக்கையானவன் இப்படி முரண்பாடாகவே இருப்பதுதான் இந்தியா. இந்தியர்களின் நாகரிகம்.

இது நல்ல நாகரிகமா? இல்லை. அநா கரிகம். மனித தன்மைக்கு அப்பாற்பட்டது.

சுதந்திரம் பெற்று அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை என்றால் மீண்டும் இந்தியா அடிமை நாடாகி விடும். மீண்டும் ஒரு காந்தி, நேரு, டாக்டர் அம்பேத்கர், பெரியார், காமராஜ் போன்ற தலைவர்கள் வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியுமா?

- கோ. மாரிமுத்து
காமராஜ் நகர், சென்னை -71

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.

(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...


தீர்த்தத்தால் தீர்ந்தது ஓருயிர்!


நத்தம், பிப். 18- கோயில் திருவிழாவில் தீர்த்தம் எடுக்கச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றிய தச்சுத் தொழிலாளி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. காப்பு கட்டிய பக்தர்கள் தினமும் காலை யில் கோயில் அருகே உள்ள அம்மன் குளத்துக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த குளத்தின் நடுவே கிணறு உள்ளது. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால், அந்த கிணற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.

நத்தம் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள பேட்டை தெருவை சேர்ந்த பாலு மகன் மதன் (9). தீர்த்தம் எடுக்க நேற்று காலை அம்மன் குளத்தின் கிணற்றுக்கு மதன் வந்தான். கூட்டம் அதிகமாக இருந்ததால் குளத்தின் கரையில் உள்ள மற்றொரு பெரிய கிணற்றின் அருகே நின்று கொண்டிருந் தான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தான். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மதன் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்த கணேசன் மகன் துரை (25), மதனை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். கடும் முயற்சிக்கு பின்னர் மதனை தண்ணீருக்குள் இருந்து மீட்ட அவர், கிணற்றில் இருந்த இரும்புக் குழாய் அருகே விட்டார். இதில் மதன் குழாயை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

இந்தப் போராட்டத்தில் துரைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் மயங்கிய அவர், தண்ணீரில் மூழ்கி, உயிரிழந்தார். நத்தம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சோலை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து கயிறு கட்டி இறங்கி மதனை பத்திரமாக மீட்டனர். பின்னர் துரையின் உடலும் மீட்கப்பட்டது. இது குறித்து நத்தம் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்ச மி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தமிழ் ஓவியா said...


ஓய்வு பெறும் நாளில் வழியனுப்பு விழா வேண்டாம் நீதிபதி கே. சந்துரு தலைமை நீதிபதிக்குக் கடிதம்


சென்னை, பிப். 18- சென்னை உயர்நீதிமன் றத்தில் மூத்த வழக்கறி ஞராக பணியாற்றி 2006 இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். 2009 நவம்பர் மாதம் நிரந்தர நீதிபதியாக பதவியேற் றவர் நீதிபதி சந்துரு. சென்னையில் உயர்நீதி மன்ற நீதிபதிகளில் மிகவும் புரட்சிகர நட வடிக்கைகளை எடுக்க கூடியவராக விளங்கிய வர் நீதிபதி சந்துரு.

வழக்கறிஞர்கள், நீதி பதிகளை மை லாட் என்று அழைப்பது நடை முறை. ஆனால், தனது நீதிமன்றத்தில் ஆஜரா கும் வழக்கறிஞர்களை சார் என்று அழைத் தாலே போதும் என்று கூறியவர் நீதிபதி சந்துரு. பாதுகாப்பு வேண்டாம் என்று கூறினார். தனது காரில் உயர்நீதிமன்ற நீதிபதி என்ற போர்டை எடுக்க உத்தரவிட்டார்.

இந்தியாவில் உள்ள நீதிபதிகளில் சொத்துக் கணக்கை இணையதளத் தில் வெளிப்படையாக வெளியிட்ட முதல் நீதிபதி என்ற பெருமை பெற்ற இவர் மொத்தம் 96,000 வழக்குகளை முடித்து வைத்திருக் கிறார். வரும் மார்ச் 8 ஆம் தேதி ஓய்வு பெறும் இவர் தனக்கு வழி யனுப்பு விழா எதையும் நடத்த வேண்டாம் என்று தலைமை நீதிபதி ராஜேஸ்குமார் அகர் வாலுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.

அதில், அட்வ கேட் ஜெனரல், வழக்கறி ஞர்கள் தேநீர் விருந்தும், புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படு வதெல்லாம் தேவையற் றது என்று கூறியுள்ளார். கடந்த 1929 இல் சென்னை உயர்நீதிமன் றத்தில் நீதிபதியாக பணி யாற்றிய நீதிபதி எம்.ஜி. எச்.ஜாக்ஸன் தனது ஓய்வு நாளில் கூறும் போது நான் எனது கட மையை செய்துள்ளேன்.

இதில் வழியனுப்பு விழா என்ற கேள்வி எங்கு வருகிறது? என்று கூறி யதை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். வரும் காலத் தில் இதுபோன்ற வழியனுப்பு விழாக்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.