Search This Blog

9.2.13

கும்பமேளாவில் முழுக்குப் போட்டு பாவம் போக்கும் சங்கராச்சாரியார்


மக்கள் எல்லாம் மகேசனின் படைப்பு என்பர்! ஆமாம் ஆமாம் என்று சொல்லுவதற்கு ஆயிரம் ஆயிரம் புராணங்கள் -- சாத்திரப் பொத்தகங்கள்.
இன்னொரு பக்கத்தில் பாவங்கள் போக்க பொய்கைகள், புண்ணிய ஆறுகள்; பகவானால் பாவ மற்ற மக்களைப் படைக்க முடியவில்லை.

வீதிகளிலே பையன் காலியாகத்திரிந்தால் என்ன சொல்லுவார்கள்? தறுதலைப் பிள்ளை! அப்பனைப் போலத்தானே இருப் பான்; கம்மனாட்டி வளர்த்த பிள்ளை கழி சடையாகத் தானி ருக்கும் என்று ஊர் மக்கள் அர்ச்சிப் பார்கள்.

அதே மக்கள் ஆண்டவன் படைப்புதானே இந்த மக்கள்? அவனன்றி தான் ஓரணுவும் அசையாதே! அப்படி இருக்கும் பொழுது அந்த மக்கள் எப்படி பாவப் பிறவியாக வாழ்கிறார்கள்? பாவ காரியங்களில் ஈடுபடுகிறார்கள்?

யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டா? அப்படி யாரேனும் நியாயமான இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

அதிகப் பிரசங்கி. ஆண்ட வனையே கேள்வி கேட்கிறான். படிச்ச திமிர், கலி முற்றி விட்டது என்று கடுஞ் சொற்களால் அபிஷேகம் செய்கிறார்கள். பாவம் போக்கும் புண் ணிய நதிகளும், திருக்குளங் களும் நாட்டில் அதிகம் என்றால் அதன் பொருள் பாவம் செய்யும் ஆண்ட வன் பிள்ளைகள் அதிக மாகி விட்டார்கள் -_ அப்படித்தானே!

அதுவும் 12 வருடத்துக்கு ஒருமுறை கும்பகோணம் மகாமகமாக இருந்தாலும் சரி வடக்கே நடக்கும் கும்பமேளாவும் சரி பாவ மூட்டைகளைச் சுமக்கும் சுமை தாங்கி _ அப்படித் தானே?

கும்பகோணத்தில் மகா மகத்தன்று அத்தனை புண்ணிய நதிகளும் பிரசன்னமாம்.

காரணம் என்னவாம்? பாவம் செய்த மக்கள் தங்கள் பாவங்களை இந்தப் புண்ணிய நதிகளில்  குளித் துப் போக்கிக் கொண்ட தால், இந்தப் புண்ணிய நதிகள் எல்லாம் பாவங்களைச் சுமந்து கொண்டனவாம்.

அந்தப் பாவங்களைப் போக்கத் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் மகாமகத்தன்று மகா மகக் குளத்தில் முழுக்குப் போட்டுப் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனவாம்.

அந்த நாளில் பக்தர்களும் 12 வருடங்களாகச் சேகரித்து வைத்த பாவ மூட்டைகளை ஒட்டு மொத்த மாகக் கரைத்து புண்ணிய ஆத்மாக் களாக மாறி விடுகிறார்களாம்.

இப்பொழுது வடக்கே  அலகா பாத்தில் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து கொண்டு இருக் கிறது. இலட்சக்கணக்கான மக்கள் முழுக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கொரு கதை வேண் டாமா? அதிசயம் அற்புதங் களைச் சொல்லாவிட்டால் கடவுளாவது, கத்தரிக்கா யாவது!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தனவாம். அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும், அசுரர் களும் அமிர்த பானத்தினை சக்ஷிர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் சென்று விட்டன ராம். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரெண்டு நாட்களும், (12 ஆண்டுகளுக்குச் சமம்)
வானுலகில் போர் செய் தனர் அச்சமயம் வானுலகி லிருந்து அமிர்தபானம் கொட்டி பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந் ததாம்.
அந்த நான்கு இடங்கள் அரித்துவாரம், பிரயாகை (அல காபாத்) உஜ்ஜியினி, காசிகை.

1.2 ஆண்டு போருக்குப்பின் அது நடந்ததால் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பமேளா நடக்கிறதாம்.

மாசி மாதத்தில்  கும்பத்தில் குருவும் மேஷத்தில் சூரியனும் இருக்கும் சேர்க்கை நேரும் போது இந்தத் தீர்த்தங்களில் நீராடினால் தீராத பாவங்களே கிடையாதாம்.

உலகத்தில் எத்தனையோ கண்டங்கள் இருக்கின்றன, நாடுகள் இருக்கின்றன, தீவுகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இது நிகழவில்லை. அங்கெல்லாம் வாழும் மக்கள் பாவங்களே செய்யாதவர்களா? பாவம் செய்பவர்களை  இந்தப் பாரதப்  புண்ணிய பூமி மட்டுமே ஒட்டு மொத்த குத்தகை எடுத்து விட் டதா? என்றெல்லாம் கேட்கக் கூடாது; புத்திசாலித்தனமாகக் கேட் டால் அவனுக்குப் பெயர் அதிகப் பிரசங்கி.

எப்படியோ தொலையட்டும். இப்பொழுது கும்பமேளாவில் பிரயாகை என்னும் அலகாபாத்தில் கங்கையில் முழுக்குப் போட்டவர்களில் மிக மிக முக்கியமானவர் ஜெகத்குரு(?) காஞ்சி  சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதியார் ஆவார்.

நியாயந்தானே இவர் செய்யாத பாவங்களா? அவாளுக்குத்தான் ஆவியில் நம்பிக்கை உண்டே

காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியில் பட்டப் பகலில் சங்கரராமன் கொலை என்பது சாதாரணமா?

அதுவும் கொலையுண்ட ஆசாமி பிராமண குலத்தில் பிறந்தவர் ஆயிற்றே!
பிராமணனைக் கொன்றால் பிர்மஹத்தி தோஷமன்றோ!

ஜெகத் குருமீது அந்த கிரிமினல் பிரிவில் வழக்கு...

இன்னொருபுறம் எத்தனை எத்தனைப் பெண்கள்? அவர்கள் பாவம் எல்லாம் சும்மாவிடுமா? எழுத்தாளர் அனுராதா ரமணன் (பார்ப்பனப் பெண்தான் அவரும்) என் கையைப் பிடித்து இழுத்தார் இந்தப் படுபாவி பட்டப் பகலில் என்று கண்ணீர் விட்டுக் கதறவில்லையா?

படுகொலை செய்யப்பட்ட சங்கர ராமன் ஒரு நீண்ட பட்டியலையே உயிரோடு இருக்கும்போதே கடிதம் வாயிலாகத் தெரிவிக்கவில்லையா?
கும்பகோணம் விஜயா,குண்டூர் காமாக்ஷி, தெனாலி சுவாசினி, குருவாயூர் ஷேத்திரத்தில் வனஜா, புதுக்கோட்டை ஜெயலட்சுமி என்று ஒரு நீண்ட  பட்டியலே உண்டு. (ஆதாரம்: ஜெயேந்திரரின் ஆன்மீக மும் - அரசியலும் எம்.ஆர். ரகு நாதன்)

இன்னும் எத்தனை எத்தனையோ பாவ மூட்டைகள் லாரி லாரிகளாக உண்டு! சுமக்க முடியாதல்லவா! அதனை இறக்கி வைக்கத்தான் காஞ்சி காமகோடியார்  பிரயாகையில் கும்பமேளாவில் புண்ணிய முழுக்குப் போட்டிருக்கிறார்.
நியாயம்தானே! பாவம் செய்த வர்கள் அவாள் அய்தீகப்படி மகாமகத்திலும் கும்பமேளாவிலும் முழுக்குப் போடுவது நியாயந்தானே?

புற்றுநோய் எச்சரிக்கை!
இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்று நோயை உண்டாக்கும் மாசுகள் கலந்துள்ளன. கார்சினோ ஜெர்ஸ் (Carcinogers)  எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கங்கை நீரில் உள்ளன என்று தேசிய புற்று நோய் பதிவு மய்யம் ஆய்வில்  கூறியுள்ளது. (ஒன் இந்தியா 17.10.2012).
       ------------------ - மின்சாரம் அவர்கள் 9-2-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

33 comments:

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!


கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென் பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக் கின்றன. அதில் சில நமக்கு கட் டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

Browser

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

..Firefox .Chrome
Antivirus

அடிக்கடி பென்டிரைவ் அல் லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தரு ணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

.Avast
.Microsoft Security Essentials
File Compression Software
File Compression Software

என்பது நாம் அடிக்கடி பயன் படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட் டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென் பொருட்கள்.

7-Zip Zip2Fix
Image/Graphics editor, paint program, and picture organizer

தமிழ் ஓவியா said...

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இல வசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. .

Gimpshop
Paint.NET
IrfanView
Picasa
Inkscape
Multimedia

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத் தோடு Video Editor, Video Converter, போன்றவை தொழில் ரீதியாக உள்ள Multimedia Tools இதில் சிறந்த இலவச மென் பொருட்கள்.

VLC media player
KM Player
Audacity - Free Audio Editor
Avidemux - Free Video Editor
DVD Video Soft
Free Make Video Converter
Office Tools
MS Office க்கு

மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. இது கற்போம் தளத்தின் இரு நூறாவது பதிவாகும். பலே பிரபுவாக 82 பதிவுகளும், கற்போம் ஆக 118 பதிவுகளும் எழுதி உள்ளோம். தொடர்ந்து ஆதரித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

- பிரபு கிருஷ்ணா (கற்போம்)


MS Office க்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள்

நாம் அனைவரும் MS Office தான் அதிகமாக உபயோகிக்கிறோம். நாம் Project செய்யும் பொழுதோ அல்லது presentation செய்யும் பொழுதோ MS Officeä தான் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால் இறுதி கட்டத்தில் MS Office இல் ஏதாவது பிரச்சனை என்றாலோ அல்லது நாம் பயன்படுத்த வேண்டிய கணினியில் MS Office இல்லாவிட்டாலோ பிரச் சினை தான். அதை தவிர்க்க, தர விறக்கம் செய்யவும் குறைந்த அளவில் இலவசமாக கிடைக்கும் சில மாற்று மென் பொருட்கள் குறித்து பார்ப்போம்.

1.Open Office.Org .

MS Office க்கு அடுத்து அதிக அளவில் உபயோக படுத்தப்படும் மென்பொருள் இது. முற்றிலும் இலவசமானது. word processing, spreadsheets, presentations, graphics, databases அனைத்தையும் சப்போர்ட் செய்கிறது. இது ஒரு Open Source மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.

2.LibreOffie (Go OO)

உபயோகபடுத்துவதற்கு மிகவும் எளிதானது, முற்றிலும் இலவசமானது, MS Office கோப்புகளை இதில் எந்த Extension மாற்றமும் செய்யாமல் ஓபன் செய்யலாம். இதுவும் ஒரு Open Source மென்பொருள்.

3.IBM Lotus Symphony

அதிக Tool களை கொண்டது இந்த மென்பொருள், பயன்படுத்து வதற்கு எளிதானது, நிறைய Tool களை கொண்டதால் பயன்பாடும் அதிகம். முற்றிலும் இலவசமானது. மொத்தம் மூன்று பயன்பாடுகளை உள்ளடக்கியது. Lotus Symphony Documents, Lotus Symphony Spreadsheets and Lotus Symphony Presentations. குறிப்பிடத்தக்க மற்ற சில இலவச மென்பொருட்கள்:

4. Calligra suite
5. Koffice
6. GNOME Office

தவறாமல் இதில் எதோ ஒன்றை ஙிணீநீளீஜீ ஆக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைன் ஆபீஸ் டூல்ஸ்:

தரவிறக்கம் செய்யவெல்லாம் எனக்கு நேரம் இல்லை, என்ன செய்வது என்று கேட்பவர்கள் இந்த ஆன்லைன் டூல்களை பயன்படுத்தலாம்.

1. Google Docs : Word processor, Spreadsheet, மற்றும் Presentation போன்றவற்றை இதன் மூலம் ஆன்லைனில் செய்து கொள்ளலாம். அத்தோடு Business Cards, Resumes, Calendars and Tables போன்றவற்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட -Template- கள் உள்ளன.

இதை பயன்படுத்த ஜிமெயில் அக்கௌன்ட் மட்டும் போதும்.

2. Zoho: இது Word Document, Spreadsheet, மற்றும் Presentation போன்றவற்றை தனிப்பட்ட தேவைக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் உருவாக்க அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் இந்த தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

_ K .P. சூர்யபிரகாஷ்

தமிழ் ஓவியா said...


தழைக்குமா தமிழ்?


- கவிவேந்தர் கா.வேழவேந்தன்

டாடி என்றே அழைக்காதீர்; இனிமை தோய
தண்டமிழில் அப்பா வென் றழைத்தி டுங்கள்!
மீடியா எனமொழிய வேண்டா; நல்ல
மென்தமிழில் ஊடகங்கள் எனக் கூறுங்கள்!
மூடில்லை எனப்பேசல் வேண்டா; மூளை
முனைப்பில்லை எனத் தமிழில் பேசி டுங்கள்!
பாடி என்றே சொல்லாதீர்; அழகாய் நந்தம்
பழந்தமிழில் உடலமென்றே கூறி டுங்கள்!

சூப்பர் என்றே ஏன்கூறல் வேண்டும்? சொந்தச்
சுவைத்தமிழில் மிகநன்றே என்றால் என்ன?
பேப்பர் என்றே ஏன்மொழிதல் வேண்டும்? பேசும்
பேச்சினிலே தாள் என்றால் தவறா? நாமும்
சாஃபட் என்றே ஏன்பேசல் வேண்டும்? நந்தம்
தாய்த்தமிழில் மென்மை என்றால், புரிந்திடாதா?
சேஃப்டி இல்லை எனப்புலம்பும் நீங்கள், தூய
தேன்தமிழில் காப்பில்லை என்றால் என்ன?

மம்மி என்றே பெற்றவளைப் பிணமாக் காமல்
மதுத்தமிழால் அம்மா வென் றழைத்தால் தப்பா?
டம்மி என்று கூறுவதை மாற்றி, நந்தம்
தண்டமிழில் போலி எனச் சொலக்கூடாதா?
செம்மொழியாய் நம்மொழியை அறிவித் தென்ன?
சேய்த்தமிழர் தாய்த்தமிழை மிதித்து விட்டுத்
தம்மொழியாய்த் தேம்ஸ்மொழியைத் தலையில் வைத்தால்
சாகாமல் தீந்தமிழும் வாழ்வ தெங்கே?

தமிழ் ஓவியா said...

ரஜ்னீஷ் சாமியாரின் அந்தரங்க வாழ்க்கை


கால-மான பின் அவ-ரது மதிப்பு உண-ரப்-பட்-டா-லும், வாழும் காலத்-தில் ஒரு சர்ச்-சைக்கு-ரிய சாமி-யா-ரா-கவே கரு-தப்-பட்-ட-வர், ஓஷோ ரஜ்-னீஷ். அதி-ர-டி-கள் நிறைந்த ரஜ்-னீ-ஷின் வாழ்-வில் அவ-ரது நிழ-லாக இருந்-த-வர் மா ஆனந்-த-ஷீலா.

ரஜ்-னீ-ஷின் முதல் உத-வி-யா-ள-ராக, காத-லி-யாக, ஆசி-ர-மத்-தின் தலைமை நிர்-வா-கி-யாக இருந்த ஆனந்-த-ஷீலா, ரஜ்-னீ-ஷின் அந்-த-ரங்கங்கள் அனைத்-தும் அறிந்-த-வர்.

ரஜ்-னீ-ஷுக்கு இணை-யாக அதி-ரடித் திருப்-பங்கள் நிறைந்-தது இவ-ரது வாழ்க்கை.
ஒரு நொடி-யில் சட்-டென்று தீர்-மா-னித்து ரஜ்-னீ-ஷி-டம் சர-ண-டைந்த ஆனந்-த-ஷீலா, அவ-ரது ஆசி-ர-மத்-தின் உச்ச நப-ராக உயர்ந்-தார்.

ரஜ்-னீஷ் மறை-வுக்குப் பிறகு பல கோடி ரூபாய் பணத்-துடன் ஆசி-ரமத்-தில் இருந்து ஓடிப்-போய்-விட்-ட-தாகக் குற்-றஞ்-சாட்-டப்-பட்ட இவர், 39 மாதங்க-ளைச் சிறை-யி-லும் கழித்-தார்.

தற்-போது சுவிட்-சர்-லாந்-தில் ஒரு முதி-யோர் இல்-லத்தை அமை-தியாக நடத்-திவரும் ஆனந்-தஷீலா, ரஜ்-னீஷ் பற்-றிய உள்-வட்ட ரக-சியங்களை தனது புதிய புத்-தகத்-தில் வெளிப்-ப-டுத்-தி-யி-ருக்கி-றார்.

அவரைக் கொல்-லா-தீர்கள் என்ற அந்த நூலில் இருந்து சில துளி-கள்...

மும்-பை-யில் எனது நெருங்-கிய உற-வி-னர் வீட்-டுக்கு எதி-ரே-தான் ரஜ்-னீஷ் அப்-போது வசித்-தார். அத-னால் அப்-பா-யின்ட்-மென்ட் ஏதும் பெறா-மல் நாங்-கள் அவரை நேரே சந்-திக்கச் சென்-றோம். அதா-வது, நானும் என் அப்-பா-வும். அது என் வாழ்க்-கை-யில் மிக முக்கி-ய-மான தரு-ணம். அது-தான் எங்-கள் முதல் சந்-திப்பு.

பக-வா-னின் (ரஜ்-னீஷ்) செய-லா-ளர் மா லட்சுமி, பக-வா-னின் அனு-மதி பெற்று எங்-களை உள்ளே அனு-ம-தித்-தார்.

தமிழ் ஓவியா said...

ஒரு அறை-யில் வச-தி-யான நீண்ட கைப்-பிடி நாற்-கா-லி-யில் கால்-களை குறுக்காகப் போட்-ட-படி ரஜ்-னீஷ் அமர்ந்-தி-ருந்-தார். அவ-ரைத் தவிர அறை-யில் வேறு யாரும் இல்லை. நான் அறைக்குள் நுழைந்-த-தும் என்-னைப் பார்த்-துப் பிர-கா-ச-மா-கப் புன்-ன-கைத்-தார், வாஞ்-சை-யோடு கைகளை விரித்-தார். அவ-ரது கரங்க-ளுக்குள் நான் அப்-ப-டியே போய் விழுந்-தேன். அவ-ரது நெஞ்-சோடு என்னை இறுக அணைத்துக் கொண்-டார். பர-வ-சத்-தில், எல்-லாம் அப்-ப-டியே உறைந்-து-விட்-டது போலி-ருந்-தது எனக்கு. இனி இவர்-தான், இவரை விட்டு விலகி என்-னால் வாழ முடி-யாது என்று நான் அந்தக் கணத்-தில் முடிவு செய்-தேன்.

ஷீலா... நீ நாளை மதி-யம் 2.30-க்கு என்னை வந்து பார் என்-றார் பக-வான். அன்று இர-வு-தான் என் வாழ்க்-கை-யில் மிக நீண்ட இரவு. மறு-நாள், நான் மிக மிகப் பொறு-மை-யி-ழந்து காத்-தி-ருந்த அந்த நேரம் வந்-தது. பக-வா-னி-டம் ஓடிச் சென்-றேன். அவர் முந்-தைய தினத்தை விட மிக அழ-காக இருந்-தார்.

நான் அவ-ரி-டம், என்-னால் சாப்-பிட முடி-ய-வில்லை, தூங்க முடி-ய-வில்லை, பைத்-தி-யம் பிடித்-தது போலி-ருக்கி-றது என்-றேன்.

அவர் சிரித்-த-படி, ஷீலா... இது ரொம்ப சிம்-பி-ளான விஷ-யம். நீ என்னை மிக-வும் நேசிக்கி-றாய். நானும் உன்னை ரொம்-ப-வும் நேசிக்கி-றேன் என்-றார்.

றீ ஆசிரமத்தில் ஆரம்-பத்-தில் இட-நெ-ருக்க-டி-யா-லும், கட்-டுப்-பா-டற்ற பழக்க- வ-ழக்கங்க-ளா-லும் அசுத்-த-மும் வியா-தி-களும் பர-வின. பாலு-ணர்வைக் கட்-டுப்ப-டுத்-து-வ-தற்கு எதி-ராக எப்-போ-தும் பக-வான் பேசி வந்-தார். எனவே ஆசி-ர-ம-வா-சி-கள் தங்-களின் பாலி-யல் இச்-சை-களை சர்வ சுதந்-தி-ர-மாக வெளிப்-ப-டுத்-தி-னர்.

அதன் விளை-வாக, ஆசி-ர-மத்-தில் பால்-வினை நோய்-கள் ஒரு பெரும் பிரச்-சி-னை-யா-கின. பாலி-யல் நோய்த் தொற்-று-க-ளைத் தடுப்-பது கடி-ன-மான விஷ-ய-மா-னது.

சில ஆசி-ர-ம-வா-சி-கள், ஒரு மாதத்-தில் மட்-டும் 90 வெவ்-வேறு வித-மான செக்ஸ் தொடர்-பு-களில் ஈடு-பட்-ட-னர். எப்-போ-தும் ஆசி-ர-மம் பர-ப-ரப்-பாக இருக்கும் வேளை-யில் அவர்க-ளுக்கு செக்ஸுக்கு எப்-படி நேர-மும், சக்தி-யும் கிடைக்கி-றது என்று எனக்கு வியப்-பாக இருந்-தது. அது குறித்து ஒரு-வ-ரி-டம் நான் கேட்-க-வும் செய்-தேன்.

அதற்கு அவர் சிரித்-தபடி, தான் ஒவ்-வொரு நாளும் மூன்று முறை செக்ஸ் உறவு வைத்-துக்-கொள்-வ-தாகக் கூறி-னார். காலைச் சிற்-றுண்-டிக்கு முன்பு ஒன்று, மதிய உண-வுக்குப் பின் ஒன்று, இரவு உண-வுக்குப் பின் ஒன்று, என்-றார்.

நான் அவ-ரி-டம், ஆக, ஒவ்-வொரு உண-வின்-போ-தும் நீங்-கள் ஓர் இனிப்பு சாப்-பி-டு-கி-றீர்கள்? என்று நகைச்-சு-வை-யாக சொன்-னேன்.

ஒட்-டு-மொத்த மோச-மான சுகா-தார நிலை கார-ண-மா-க-வும், அலர்ஜி, ஆஸ்-துமா,

முது-கு-வலி போன்-ற-வற்-றா-லும் பக-வா-னும் அப்-போது பாதிக்கப்-பட்-டார். அவ-ரது ஆரோக்கி-யத்தைக் காக்க நாங்-கள் மிக-வும் கஷ்-டப்-பட்-டோம். பக-வா-னுக்கு வாச-னைத் திர-வி-யங்கள், பெர்-பி-யூம்கள் அலர்ஜி என்-ப-தால், பக்தர்களை மோப்-பம் பிடிப்-ப-தற்கு ஆட்-கள் நிய-மிக்கப்-பட்-ட-னர். அவர்கள் மோப்-பம் பிடித்து, வாச-னைத் திர-வியங்க-ளைப் பூசிய பக்தர்களை பக-வானை நெருங்கா-மல் தடுத்-து-வி-டு-வார்கள்.

பக-வான் வியா-பார நுணுக்கங்க-ளும் அறிந்-த-வர். அவர் தான் வழங்-கும் விஷ-யங்கள், அவற்-றுக்கான மதிப்பு, அவற்றை சந்-தைப்-ப-டுத்-து-தல் எல்-லா-வற்-றை-யும் அறிந்-தி-ருந்-தார். ஆசி-ரம செல-வு-கள் அனைத்-தை-யும் சமா-ளிப்-ப-தற்கான வரு-வாய் தாரா-ள-மாக வர வேண்-டும் என்று அவர் நினைத்-தார். ஆரம்-ப-கட்-ட-மாக, அவ-ரது சொற்-பொ-ழி-வு-களுக்கு நுழை-வுக்கட்-ட-ணம் விதிக்கப்-பட்-டது. ஆசி-ர-மத்-தில் இருந்த தெர-பிஸ்ட்கள் அதைப் பின்-பற்-றி-னர். பல்-வேறு தெரபி- களு-டன், பபே முறை-யில் உணவு வழங்கப்-படும். அதற்குக் கட்-டணம். ஆசி-ரமத்-துக்கு வரு-வோர் தாங்-கள் விரும்-பும் தெர-பியை பணம் கட்-டிப் பெற-லாம். ஆசி-ரமத்-தின் வேறு பல சேவை-களுக்கும் கட்-ட-ணம் விதிக்கப்-பட, பணம் தண்-ணீ-ரைப் போல கொட்ட ஆரம்-பித்-தது.

தமிழ் ஓவியா said...


பாலு-றவு வேட்-கை-தான் மனி-த-னின் கஷ்-டங்க-ளுக்கு எல்-லாம் கார-ணம், அவன் அதை முழு-மை-யாக அனு-ப-வித்து அதி-லி-ருந்து மீண்-டு-வர வேண்-டும் என்-பது பக-வா-னின் கருத்து.

எனவே, ஆசி-ர-மத்-தில் வழங்கப்-பட்ட அனைத்து தெர-பி-களி-லும் பாலி-யல் பிர-தான அம்-ச-மாக இருந்-தது. அடக்கி வைக்கப்-படும் பாலு-ணர்வு பாலி-யல் வக்கி-ரத்-தில் இருந்து விடு-தலை பெற வேண்-டும் என்-பதே நோக்க-மாக இருந்-தது. எனவே எந்தக் கட்-டுப்-பா-டு-மின்றி செக்ஸ் ஏற்-கப்-பட்-டது.

செக்ஸைப் பொறுத்-தவரை ஆசி-ரமத்-தில் தடுக்கப்-பட்-டது எது-வும் இல்லை, இது-தான் ஒழுக்கம் என்று எது-வும் வரை-ய-றுக்கப்-ப-ட-வில்லை. நாங்-கள் அனை-வ-ரும் பொறாமை, தன்-னு-ரிமை உணர்வு இல்-லா-மல் இருக்க வேண்-டும் என்று பக-வான் விரும்-பி-னார். நாங்-கள் எங்-களின் செக்ஸ் விருப்-பங்களை அடுத்-தவரின் ஒப்-புதலோடு வெளிப்-படுத்-தலாம் என்று அவர் கூறி-னார். இந்த விஷ-யத்-தில் நீதி-நெறி உணர்வு, குற்ற உணர்-வைத் தாண்-டிச் செல்ல வேண்-டும் என்று பகவான் சொன்னார். இதன் மூலம் ஞானம் பெறப்-போ-கி-றோம் என்ற அதீத உற்-சா-கத்-தில் பல-ரும் குழு-வாக செக்ஸ் செயல்-பா-டு-களில் ஈடு-ப-டத் தொடங்-கி-னர். ஆனால் யாரும், எப்-போ-தும் எவ-ரை-யும் எதற்கா-க-வும் நிர்ப்-பந்-திக்க-வில்லை.

தமிழ் ஓவியா said...


நாங்-கள் புனே-யில் இருந்-த-போது, பக-வா-னுக்கு மிக அந்-த-ரங்க-மாக விவேகா என்ற பெண் இருந்-தாள். அவள் தன்னை பக-வா-னின் மனைவி என்று கூறிக்-கொண்-டாள். பக-வா-னுக்கு நெருக்க-மாக இருந்த மற்ற பெண்-கள் மீது பொறாமை கொண்ட விவேகா, பக-வா-னி-டம் அது-கு-றித்-துச் சண்-டை-யிட்-டும் வந்-தாள்.

இந்-நி-லை-யில், பக-வா-னு-ட-னான உற-வில் அவள் கர்ப்-ப-மா-னாள். அத்-த-க-வலை வெளி-யிட்டு பக-வா-னின் பெயரை நாற-டிப்-பேன் என்று அவள் மிரட்-டினாள். நல்-லவே-ளை-யாக, பக-வா-னின் பக்தர்க-ளி,ல் ஒரு-வ-ரான மகப்-பேறு மருத்-து-வர் ஒரு-வ-ரின் உத-வி-யால் விவே-கா-வின் கரு கலைக்கப்-பட்-டது.

அதன்-பி-ற-கும் விவேகா உட-னான பக-வா-னின் பிரச்-சினை முற்றி, இவ-ளுக்கு உடனே இங்-கிலாந்-துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்-பிடு. இனி இவ ஒரு நொடி கூட இங்கே இருக்கக் கூடாது என்று என்-னி-டம் சப்-த-மிட்-டார் பக-வான். நானும் சரி என்-றேன். பின்-னர், அப்பெண்ணைக் கடை-சி-யாக ஒரு-முறை மன்-னித்து, தன்-னு-டன் இருக்க அனு-ம-திப்-ப-தாகக் கூறி-னார் பக-வான்.

அப்-போ-து-தான், பக-வா-னுக்கும் சாதா-ரண மனி-தர்க-ளுக்குரிய உணர்-வு-கள் உண்டு, ஞானம் பெற்ற அவ-ரா-லும் பெண் பிடி-யில் இருந்து மீள முடி-ய-வில்லை என்-பதை நான் உணர்ந்-தேன். றீ ஒரு-கட்-டத்-தில், எல்-லாம் சீராக நடை-பெ-றத் தொடங்-கின. குறிப்-பிட்ட கால இடை-வெ-ளி-களில் நூல்-கள் வெளி-யி-டப்-பட்-டன, விழாக்கள் நடத்-தப்-பட்-டன, ஐரோப்-பிய நாடு-களில் பக-வா-னின் மையங்கள் அரு-மை-யாக இயங்கிக் கொண்-டி-ருந்-தன. பக்தர்க-ளிடம் இருந்து காணிக்-கை-களைப் பெறு-வதற்-குப் -புதிய புதிய வழி-களும் கண்-டு-பி-டிக்கப்-பட்டுக் கொண்-டி-ருந்-தன. பக-வான் சொன்-ன-படி எல்-லாம் ஒழுங்காக, சீராக நடை- பெற்-றுக்-கொண்-டி-ருந்-தன.

பக-வான் இவற்-றால் உற்-சா-கமோ, மகிழ்ச்-சியோ அடை-ய- வில்லை. மாறாக அவ-ருக்கு போர-டித்-தது. அந்த அலுப்-பில் திடீ-ரென்று அவர் ஒரு-நாள் என்-னி-டம், ஒரே மாதத்-தில் 33 ரோல்ஸ் -_ ராய்ஸ் ஆடம்-பர கார்-களை வாங்-கும்-படி கூறி-னார். அப்-போது ஏற்-கெ-னவே ஆசி-ரமத்-தில் 90 புத்-தம்- பு-திய ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் இருந்-தன. மேலும் புதிய 33 ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்க வேண்-டும் என்-றால் பல-கோடி ரூபாய் தேவை. என்ன செய்-வது என்று புரி-யா-மல், அவ-ரி-டம் மெது-வாக விஷ-யத்-தைச் சொன்-னேன். மறு-நாள் அவர் என்-னிடம் ஒரு பட்-டியலைக் கொடுத்-தார். அதில், ஐம்-பது, அறு-பது பெயர்கள் இருந்-தன. எல்-லோ-ருமே பெரும் பணக்கா-ரர்கள். அவர்களை அழைக்கச் சொன்ன பக-வான், 21 பேர் ஞானம் பெற்-ற-தாக அறி-வித்-தார். அவர்கள் ஆசி-ர-மத்-தின் உள்-வட்-டத்-தில் இணைந்-த-னர். அவர்க-ளால் ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்-கு-வ-தற்கான பணப் பிரச்-சி-னை-யும் தீர்ந்-தது.

தமிழ் ஓவியா said...


தொடர்வண்டி பயணம் செய்வோரின் அன்பான கவனத்திற்கு!


------------வி.சி. வில்வம்

எனக்கு அண்மைக்காலமாக அய்ந்து, ஆறு முறைக்கு மேல் இந்த அனுபவம் ஏற்பட்டுவிட்டது.

திருச்சியிலிருந்து காலை 06.30 மணிக்குப் பல்லவன் இரயில் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும்.

நான் அந்த நேரங்களில் உறவினர்கள், நண்பர்களை வழி அனுப்பச் செல்வேன். ஏறத்தாழ 45 நிமிடங்கள் முன்னரே வண்டி நடைமேடைக்கு வந்துவிடும். எனினும் கடைசி நொடியில் சிலர்

"பறந்து" வருவார்கள். சிலருடன் குழந்தைகளும், சிறுவர்களும் வருவார்கள். வாய்ப்பைப் பொறுத்து,

அவர்கள் வண்டியில் ஏறுவார்கள் அல்லது நடைமேடையிலே நிற்க வேண்டிவரும். இதுபோன்ற நேரங்களில் எப்போதோ நான் படித்த அந்தப் பொன்மொழி நினைவுக்கு வரும், "ஓடுவதில் பயனில்லை;

நேரத்தில் புறப்படுங்கள் !

இது ஒருபுறம் இருக்க, இன் னொன்றையும் முக்கியமாய் சொல்ல வேண்டும்.

இவர்கள் எப்படி என்றால் நேரத்திற்கு வந்து விடுவார்கள், ஆனாலும் இரயிலை விட்டுவிட்டு நடைமேடையிலே நிற்பார்கள். இது எப்படி என்றால், நான் பார்த்த நிகழ்வை அப்படியே பதிவு செய் கிறேன். கணவன் - மனைவி இருவரும் சென்னைக்குப் பயணப்படுகிறார்கள். இரயில் புறப்பட 10 நிமிடம் இருக் கும் போது, அந்தக் கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக இறங்குகிறார். குடிநீர்க் குழாய், அவர் இருக்கும் பெட்டியில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கிறது. எனினும் அவர் சென்று தண்ணீர் பிடித்து திரும்பும் வேளையில் இரயில் புறப்பட்டது. அவரின் மனைவி இரயில் வாசற்படியில் நின்று கதறுகிறார். கணவரோ தன்னுடைய பெட்டியை நோக்கி வேகமாக ஓடி வருகிறார். இறுதியில் அவரால் வண் டியில் ஏறமுடியவில்லை. மனைவி மட்டும் பயணம் செய்ய, இவரோ பரிதாபமாய் நின்று கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. தொடர்வண்டி என்ற பெயர் எதற்கு?

தொடர்ந்த வண்டி, நீளமான வண்டி என்று பொருள். ஆக நடைமேடையில் நீங்கள் எந்த இடத்தில் நின்றாலும், உங்கள் அருகில் இருக்கும் பெட்டியிலேயே நீங்கள் ஏறிவிடலாம். அங்கிருந்து கடைசிவரை நீங்கள் நடந்தே போகலாம். இது ஒரு எளிய நடைமுறை. எனினும் இதுகுறித்து தெரியாத காரணத்தால் தண்ணீர் பிடிக்கவும், உணவு வாங்கவும், புத்தகம் வாங்கவும் சென்றவர்கள் கடைசி வரை இரயிலில் ஏற முடியாத நிலையைப் பலமுறை பார்க்க நேரிடுகிறது. திட்டமிட்டு பயணம் செய்ய நினைத்து, இதுபோன்ற நிலையால் ஏற்படுகின்ற வழியை, மனஉளைச்சலை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதற்குத் தீர்வாக நேரத்திற்கு வருவதும், கடைசி நேரங்களில் தொடர்வண்டியில் இருந்து இறங்குவதைத் தவிர்த்தும், ஒருவேளை இறங்கினால், அருகில் உள்ள பெட்டியில் ஏறிக் கொள்வதையும் நடைமுறையாகக் கொள்வோம். அப்போதுதான் இரயில் நிலையங்களில் கடைசியாகச் சொல்வார்களே, "உங்கள் பயணம் இனிதாகட்டும்" என்ற வாசகத்தை நம்மால் ரசிக்க முடியும்.

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் நாளில் ஒரு ரூபாய்க்குத் தேநீர்!

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தங்கவேலனார் தேநீர் கடை என்ற பெயரில் கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில் திருவள்ளுவர் நாளான தை 2ஆம் நாள் (15-.1.-2013) ஒரு நாள் மட்டும் ஒரு டீ ஒரு ரூபாய்க்கு விற்கப் பட்டது. பேராவூரணியில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ள அத்தனை பேரும் அங்கு வந்து தேநீர் அருந்திச் சென்றனர். ஒரு நாளுக்கு மட்டும் அது என்ன அதிசயம் என்று கடையின் உரிமையாளர் தங்கவேலனாரிடம் கேட்டபோது 'இன்றைய இளைஞர்களிடமும் மாணவ சமுதாயத்திலும் பாடத்திற்காக திருக்குறளைப் படித்ததோடு சரி; மற்றபடி மறந்து விடுகிறார்கள். நான் கடைக்கு முன் நாள்தோறும் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் எழுதி வைத்து விடுவேன். கடை திறப்பதற்கு முன் முதல் வேலையாக அதைச் செய்து விடுவேன். அதனால் திருக்குறள் கடை என்றால் பேராவூரணி மட்டுமல்லாது சுற்று வட்டப்பகுதியில் அனைவருக்கும் தெரியும். கடந்த 15-ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். இதுவரை திருக்குறள் நான்கு சுற்று வந்து இப்போது ஐந்தாவது சுற்று வந்து கொண்டிருக்கிறது.

திருவள்ளுவருக்கு மரியாதை கொடுத்துதான் அரசுகள் கூட மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விட்டு விடுகிறாரகள். ஆனாலும் அன்று கூட திருட்டுத் தனமாக விற்பனை செய்வதும், நம் குடிமக்கள் எங்கிருந்தாலும் தேடிப்போய்க் குடித்து விடுவதும் தொடரந்து கொண்டுதான் இருக்கிறது. அன்று ஒருநாளாவது குடிக்கு விடுமுறை விட்டு விட்டு தேநீரைக் குடித்து மகிழச் செய்வோம் என்கிற நப்பாசையில் திருவள்ளுவர் நாளில் மட்டும் ஒரு ரூபாய்க்கு தேநீர் கொடுக்கிறேன். இன்று ஒருநாள் மட்டும் நூறு லிட்டர் பாலுக்கும்மேல் ஆகியிருக்கிறது. அன்று ஆகும் செலவு திருவள்ளுவருக்காகச் செய்யும் செலவாக நினைத்துக் கொள்வேன் என்றார். இவர் தேநீர்க்கடை பார்த்த நேரம் போக ஓய்வு நேரத்தில் மாணவ மாணவியருக்கு திருக்குறள் வகுப்பும் போதனைகளும் செய்து வருகிறார். கடைக்கு வருவோரிடம் திருக்குறள் பற்றி எடுத்துரைத்து வருகிறார்.

தகவல்: ம.மு.கண்ணன்

தமிழ் ஓவியா said...


கும்பமேளா சிந்தனை காந்தியாரும் கும்பமேளாவும்!

- திகும்பன்-

இப்பொழுது கும்பமேளா நடந்து கொண்டுள்ளது அதனையொட்டியே இந்தக் கட்டுரை.

மனச்சாட்சிக்கு மதிப்பளித்து வாழக்கூடிய எந்த மனிதனும், கூடு மானவரை மனிதாபிமானியாகவே வாழ்வான் - வாழ முடியும் என்பது பொதுவிதி. ஆனால் துர்ப்பாக்கி யமான இந்தியத் துணைக் கண் டத்தில் மனிதாபிமானியாக ஒருவன் வாழ்ந்துவர வேண்டுமென்றால் - அவன் மனச்சாட்சியோடு வாழ்ந்தால் மட்டுமே போதாது. அவன் நிச்சய மாக பார்ப்பன துவேஷியாகவும் வாழ்ந்தே தீர வேண்டும்.

அதுவும் இந்திய குடிமகனாக இருப்ப வன் ஓர் இந்துவாகவும் இருந்து விட் டால் அவன் பார்ப்பன துவேஷி யாக இருந்து விட்டால் மட்டும் போதாது கடவுள் வெறுப்பாள னாகவும் இருந்தே தீர வேண்டும்.

அப்போதுதான் அவன் பாரபட்ச மற்ற - தீர்க்கமான மனிதாபி மானியாக வாழ்ந்து காட்ட முடியும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு சாதியினர் மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவ மானப்படுத்தப்பட்டு வந்துள்ளது மட்டுமல்ல உயர் ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங் களுக்குக்கூட, இந்த உலகிலே அவ தாரம் எடுத்து, அவர்களுக்கு தேர் ஒட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்துள்ளது மட்டுமல்ல - நூற்றுக்கணககான தலைமுறைகளாக அவர்களின் பெண்மணிகளின் மானம் பறிக் கப்பட்டு வந்திருக்கிறது. நிலை மைகள் இவ்வாறிருக்க, மனச் சாட்சியின் உறுத்தலுக்கு மதிப் பளித்து மனிதாபிமானத்துடன் வாழ எண்ணும் ஓர் நல்ல இந்து பார்ப்பன துவேஷியில்லாமலும் கடவுள் வெறுப்பில்லாமலும் எப்படி வாழ இயலும்?

நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்ததாகக் கூறப்படும் தர்மகீர்த்தி என்பவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:-

தமிழ் ஓவியா said...

அறிவைவிட ஏட்டுச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, உலகத்தை தோற்றுவித்தவர் கடவுள் என்று ஒப்புக் கொள்வது, தீர்த்த மாடுவதை மதச் சடங்காக ஆக்குவது, பிறப்பிலே ஜாதிவேற்றுமை காண்பது, பாவத்தைப் போக்குவதற்காக சரீரத்தை வாட்டுவது இவை அய்ந்தும் மனிதர்கள் ஜடப்பொருளாக ஆகிவிட்டார்கள் என்பதற்கு லட்சணங்கள்.

தேசப்பிதா என போற்றப்படும் மரியாதைக்குரிய காந்தியார் அவர் களுக்கு மனச்சாட்சியின் உறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன.

கூடுமானவரை மனிதாபிமானத்து டனேயே வாழ வேண்டும் என்ற உந்துதலும் இருந்து கொண்டுதான் வந்துள்ளது. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் - இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் - தானும் ஒரு இந்துவாகவே இருந்து கொண்டு - மனச்சாட்சி மனிதாபி மானம் என்ற அளவோடு செயல் படுவது என்பது பாதிக் கிணறு தாண்டுவது போலத்தான்.

மனச்சாட்சி மனிதாபிமான உந்துதல். இல்லாமல் பேராசிரியர் தர்மகீர்த்தி கூறுவது போல் ஜடப் பொருளாக வாழ்வதென்ற ல் மரியாதைக்குரிய காந்தியார் கொல் லப்பட்டிருக்கவே மாட்டார். அது வும் ஒரு பார்ப்பனனால் அவருக்கு அந்த முடிவு ஏற்பட்டிருக்காது. அதுவும் ஒரு பார்ப்பன மதவெறி அமைப்பினால் அக்கொடுமை நிகழ்ந்திருக்கவே இருக்காது.

தமிழ் ஓவியா said...

காந்தியாருக்கு மனச்சாட்சியின் உறுத்தல்கள் இருந்து வந்தன என்ப தற்கும் அவ்வப்போது மனிதாபிமான உந்துதல்களுக்கு ஆளாகியுள்ளார் என்பதற்கும் அவருடைய சுய சரிதையிலே காணப்படும் இரு நிகழ்ச்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை, காந்தியார் அவர்களையே பேச வைப்போம்.

நான் ஹரித்துவாரத்துக்கு யாத் திரை நோக்கத்துடன் போகவில்லை புண்ணியத்தை நாடி யாத்திரை தலங்களுக்குப் போய்க் கொண் டிருக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. கல்கத்தாவி லிருந்து ஹரித்துவாரத்திற்கு ரெயில் பிரயாணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. இத்தகைய பிரயாணத் தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட வைதீக ஹிந்துக்கள் முஸ்லீம் களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர் ஹிந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே ஹிந்துக்கள் நோயுற்று விடும் போது டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட் டிறைச்சி சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிறிஸ்தவக் கம்பவுண்டரா முஸ்லீம் கம்பவுண் டரா என்பதை விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டி யதாகும்

துன்பம் வரும்போது வைதீக ஹிந்து எவ்வளவு நளினமாக, தான் போற்றிப் பாதுகாத்து வருவதாக நடித்துவரும் வைதீகத்தை ஒதுக்கி விடுகிறான் என்பதை காந்தியார் கிண்டல் செய்வதைப் பாருங்கள்.

கும்பமேளா என்னும் தலைப் பிலேயே மரியாதைக்குரிய காந்தியார் மேலும் எழுதுவதைக் கவனிப்போம்.

யாத்ரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும்; துப்புக் கெட்டதனமே அதிகமாக இருப்பதைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள் . உலக வாழ்க்கையின் இன்பங்களை யெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்.

இங்கே அய்ந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள், சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரம்மையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான அய்ந்துகால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதேயன்றி வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த அய்ந்தாவது காலே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன். இவ்வித இரட்டைக் கொடுமையின் பலனைக் கொண்டு ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த அய்ந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத ஹிந்துவே இல்லை இந்த அற்புத(?)ப் பசுவிற்குத் தாராளமாகத் தருமஞ் செய்யாத ஹிந்துவும் இல்லை.

கும்பமேளாத் திருவிழாவில் சாதுக்கள் நடத்தும் கோணங்கித் தனத்தைக் கண்டு குமுறிய உள்ளத் தோடுதான் காந்தியார் இவ்வா றெல்லாம் எழுதுகிறார்.

தமிழ் ஓவியா said...


முதலாவது சட்டத் திருத்தம்: பிரதமர் நேருவின் உரை


வகுப்புரிமை சொத்துரிமை ஆகியவற்றின் தொடர்பாக, 1950ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தின் 15, 19, 29(2), 31- விதிகளில் திருத்தங்கள் செய்யப் பெற்றன. பண்டித ஜவகர்லால் நேருவின் உரையின் வகுப்புரிமை பற்றிய கருத்துக்களின் தேவையான பகுதிகளை மட்டும் காண்போம்:

ஜவகர்லால் நேருவின் பேச்சுகள் 1949--_53 என்ற வெளியீட்டின், இரண் டாம் பதிப்பின் (1957) பக்கங்கள் 486 முதல் 533 முடிய அரசியல் சட்டத் திருத்தத்தைப் பற்றிய உரை அடங்கியிருக்கிறது.

மே 16, 1951இல் நேரு ஆற்றிய உரையிலிருந்து

15ஆம் விதியில் சில சொற்களைச் சேர்க்க விரும்புகிறோம். விளக்கமாக இருக்கும் பொருட்டு சிறிது சேர்க்க வேண்டியிருக்கிறது. ஒரு குறிக்கோளை நோக்கிய இயக்கத்தை அரசுக் கொள்கையின் நெறிப்பாட்டுக் கோட்பாடுகள் (Directive Principles of State Policy) குறிக்கின்றன. அடிப்படை உரிமைகள், நிலைப்பட்ட (இயங்காது) ஒன்றைக் குறிக்கின்றன. ஏற்கெனவே உள்ள உரிமைகளைக் காக்க வேண்டு மென்பது அவற்றின் குறிக்கோள். ஒரு குறிக்கோளை நோக்கிய இயக் கத்திற்குச் சில மாற்றங்கள் தேவைப் படுகின்றன; இயக்கத்தின் சாரமே அதுதான். இயங்கும் போக்கில், இருக் கின்ற சில உறவுகள் மாறுகின்றன; அல்லது பாதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினையில் வகுப்புவாதக் கூறு (Communal element) மறைமுகமாக நுழைக்கப்படுவதாகச் சில உறுப் பினர்கள் கருதலாம்... வகுப்புவாதத் தோடு எவ்வகையிலும் உறவு கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. அரசியல் சட்டத்தில் பின்தங்கிய வகுப்பின ரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்; அவர்கள் முன்னேற வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. பின் தங்கியவர்களை ஒரு சமூக மாகக் (Community) கருதினால், நாம் வகுப்பு வாதத்தை நுழைப்பவர்கள் ஆகிறோம். ஆனால் பின் தங்கிய வகுப்புகளை (Backward Classes) எந்த மதம் அல்லது கூட்டம் என்று பாராமல், அவர்களை நேரடியாக எடுத்துக் கொண்டால், கல்வி, சமுதாயம், பொருளாதாரத் துறைகளில் முன்னேறும் வண்ணம் அவர்களுக்கு உதவுவது நமது கடமையாகிறது. இயல்பாகவே அந்த முன்னேற்றம் மற்றவர்களுக்குத் தடையா இருக் காது...

தமிழ் ஓவியா said...


தனிமனித உரிமையைக் காப்பது என்ற வகையில், தனி மனிதரின் அல்லது கூட்டத்தினரின் இடையில் உள்ள ஏற்றத் தாழ்வையும் காப்பதாக ஆகுமெனில், நெறிப்பாட்டுக் கோட்பாடுகளுக்கு (Directive Principles) முரணாகச் செல்பவர் களாகி விடுவோம். தனி மனித உரிமைக் காப்பு என்ற வேண்டு கோள், இருக்கின்ற ஏற்றத் தாழ்வு களைத் தொடர்வது எனப் பொருள் பட்டால் அது இடர்ப்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் இயங்காதவராக வும், முற்போக்கு அற்றவர்களாகவும், மாற்ற முடியாதவர்களாகவும் நாம் ஆகிவிடுவோம். நம்மில் மிகப் பலர் விரும்பும் சமனியச் சமுதாயத்தை நம்மால் அடைய முடியாது...

தமிழ் ஓவியா said...

மே 18, 1951இல் நேரு ஆற்றிய உரையிலிருந்து....

சமத்துவத்தை படிப்படியாகக் கொண்டு வருவதற்குக்கூட அரசாங் கத்தால் சட்டமியற்ற இயலாதென் றால், அரசியல் சட்டத்தின் ஆணை யைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் தவறுகிறது எனப் பொருள். அதனால், நாடாளுமன்றத்தில் நான் இப்பொழுது கொண்டு வந்துள்ள திருத்தங்கள் அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடியவை. அரசியல் சட்டத்தை நான் கடுகளவுகூட மாற்றவில்லை. அதற்கு நான் வலுவூட்டத்தான் செய்கிறேன்...

சென்னை மாநிலத்தில் எழுந்துள்ள சிறிய அளவிலான பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்தத் திருத்தம் வகுப்புவாதமான திருத்தமாக இருக்க வேண்டுமெனக் கொண்டு வரப் படவில்லை. வகுப்புவாத அணுகு முறையை, மெலிந்த, பின் தங்கிய மக் களுக்கு உதவும் அணுகுமுறையிலி ருந்து நாம் கட்டாயம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

மே 19, 1951இல் நேரு ஆற்றிய உரையிலிருந்து

15,29(2) விதிகளுக்கான திருத் தத்தின் தேவை சென்னையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் காரணமாக இந் தக் குறிப்பிட்ட வடிவில் எழுந் துள்ளது என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். ஆகையால் அதை மூடி மறைக்க முயலத் தேவையில்லை. சென்னை அரசு, ஓர் அரசாணையைப் பிறப்பித்தது; அதன் நுணுக்கங்களை (Details) நான் அறியேன்; சென்னை அரசின் ஆணைப்படி சில வகுப் பினருக்கும் சமூகங்களுக்கும் (Classes and Communities) சில ஒதுக் கீடுகள் (Reservations) செய்யப்பட் டன. அரசியல் சட்டத்தின் உட்பொருளுக்கும் விதிகளுக்கும் (Spirit and letter) முரண் எனக் கூறி அந்த ஆணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்தது. ....ஆகையால் ஏதேனும் ஒரு வகையான தனிவிதி (ஏற்பாடு) கட்டாயம் செய்யப்பட வேண்டும். பின் தங்கிய சமூகங்களுக்கு (Communities) நாம் ஏதேனும் செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படி நாம் செய்ய முற்படும் பொழுது, சமத்துவத்தைப் பற்றியும், வேற்றுமை பாராட்டாமை பற்றியும் அமைந்த சில அரசியல் சட்ட விதிகள் நமக்கு இடர்ப்பாடாக இருக்கின்றன. ஒரு வகைக் குழப்பத்தில் (சிக்கலில் tangle) இருக்கிறோம். நாம் சமத்துவத்தைப் பெற இயலாத, ஏனென்றால், அரசியல் சட்டத்தில் கூறப்பட் டுள்ள சில சமத்துவக் கோட் பாடுகள் இடர் தருகின்றன.

சமனியச் சமுதாயத்தை அடையும் நமது குறிக்கோளுக்காக, நமது சமுதாய வாழ்வில் எழுந்துள்ள எண்ணற்ற (infinite) பிரிவுகளுக்கு (பிளவுகளுக்கு) முடிவு கட்ட விரும்புகிறோம். நான் சாதி முறையைக் குறிப்பிடுகிறேன். நம்மைப் பிரிக்கின்ற வளைந்து கொடுக்காத (சமூகச்) சட்டங்களை நாம் படிப்படியாகத் தகர்த்து அழித்து வருகிறோம். இருப்பினும் செயற்பாடு மெதுவானதாக இருக்கிறது. நிகழ்காலத்தை நாம் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. இருக்கின்ற மெய்ம்மைகளைத் தள்ளிவிட இயலாது. நாம் காணு கின்ற மெய்ம்மைகளுக்கும் நமது குறிக்கோளுக்கும் இடையில் ஒரு வழியைக் காண வேண்டும். இருக் கின்ற மெய்மைகளை (நடப்புகளை) மட்டுமே நாம் பற்றி நின்றால், நாம் தேக்கமானவர்களாகவும், மாறாதவர்களாகவும் ஆகிவிடுவோம். நமது குறிக்கோள்களையும், அரசுக் கொள்கையின் நெறிப்பாட்டுக் கோட்பாடுகளையும் கைவிட்ட வர்கள் ஆவோம்; அதை நாம் செய்ய முடியாது, கட்டாயம் செய்யக் கூடாது. அதற்கு மாறாக, கோட் பாடுகளைப் பற்றி மட்டும் பேசி, இருக்கின்ற மெய்ம்மைகளைப் புறக்கணித்தால், நம்முடைய பேச்சு அளவை முறையானதாக (தர்க்க ரீதியானதாக), ஒருவகையில் பொரு ளுடையதாக இருக்கலாம்; ஆனால் நாம் சொல்லுவதற்கும் நடைமுறை உலகிற்கும் தொடர்பு இருக்கிறது. நடைமுறை நிலையோடு போரா டுவதாக இருப்பினும் நாம் நடப்பில் உள்ளவற்றைக் கணக்கில் கொண்டு தான் செயல்பட வேண்டும்.

வாழ்க்கை ஒரு வளைவு - அஃது ஒரு நேர்கோடு அல்ல; மாறி வரும் இக்காலத்தில், ஒரு நாட்டின் வாழ்வு மேலும் வளைவாக இருக்கிறது. அளவையும் (தர்க்கமும்) நேர்கோடு களும் வளைவிலிருந்து செல்லும் தொடுகொடுகள், வாழ்வின் வளை விலிருந்தும், நாட்டின் வளைவி லிருந்தும் தொடுகோடு மிகவும் விலகியிருந்தால் மோதல்களும் புரட்சிகளும் உண்டாகும்... செயலும் அரசியல் சட்டமும் நெகிழ்ச்சியோடு இருப்பின், நாட்டு வளர்ச்சியின் உயிர்ப்புள்ள வளைவிற்கு நெருக்க மாக அவை இருக்கும்...

நாட்டின் வளர்ச்சியைக் கட்டிப் போட இயலாது; சொற்களாலும் சொற்றொடர்களாலும் அப்படிச் செய்ய இயலும் எனக் கருதினால் அது முற்றிலும் தவறு....

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் பாலியல் குற்றங்கள்


நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு 24,206 பாலியல் வன்முறை சம்பவங்கள் புகார்களாக பதிவு செய்யப்படுகின்றன. புகாராக பதிவு செய்யப்படாதவை இதை விட மூன்று மடங்கு இருக்கலாம். ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். இது போன்ற சம்பவங்களில் 94.2 சதவீதம் அந்தப் பெண்ணுக்கு வேண்டியவர்களாலேயே இக்குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் 1.2 சதவீதம் பெற்றோராலும் நெருங்கிய உறவினர்களாலும் நடப்பவை. 34.7 சதவீதம் அக்கம் பக்கத்தினரால் நடப்பவை. 6.9சதவீதம் உறவினர்கள், நண்பர்களால் நடப்பவை. பணியிடங்களில் மேலதிகாரிகளாலும், பள்ளிகளில் ஆசிரியர்களாலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். காவல் நிலையம், மருத்துவமனை, மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம், ஆகியவற்றின் நிர்வாகத்தில் உள்ளோர், தங்களிடம் அடைக்காலம் தேடி வரும் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி எல்லை மீறுகின்றனர். தெருக்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் நடைபெறும் பாலியல் குற்றங்களை விட அறைக்குள் நடைபெறுபவையே அதிகம். பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகளில் 26.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெறுகின்றனர் என்று அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களைத் தருகிறது. என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்றவியல் பதிவுத் துறை.

2012ஆம் ஆண்டில் தலைநகர் தில்லியில் ஜனவரி முதல் நவம்பர் வரை பதிவான 635 பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 5 ஆண்டுகளை விட மிக அதிகம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 635 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், 403 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 348 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


மொட்டை


கமலகாசன் அவர் களின் விசுவரூபம் பெய ருக்கேற்பவே விசுவரூபம் எடுத்து, நாட்டையே ஒரு கலக்குக் கலக்கி, ஒரு வழியாக திரைப்படம் அரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்தப் பிரச்சினை குறித்து தெளிவாக முதல் அறிக்கையை வெளியிட்ட தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான். இரு தரப்பினரும் பெருந் தன் மையாகப் பிரச்சினையில் அணுகுமுறையைச் செலுத்தியதால், காலதா மதம் ஆனாலும் சக்கரம் சரியான வகையில் மய்யப் புள்ளியில் வந்து நின்றது. அந்த வகையில் ஒரு நிம்மதியே! படம் சிறப்பாக இருக்கிறது என்றெல் லாம் இரசிகர்கள் சொல் லுவது, கூத்தாடுவது என்பது எல்லாம் நடக்கக் கூடியதுதான்.

ரகிகத் தன்மை என் பது ஒரு குறிப்பிட்ட வட் டத்துக்குள் என்ப தெல் லாம் ஒரு வகை யான வெறிப் போக்கு தான்.

நடிகர் கமலகாசன் அவர்களைப் பொறுத்த வரை அடிப்படையில் ஒரு பகுத்தறிவுவாதி என்ப தால், மற்ற மற்ற ரசிகர் மன்றங்களைப் போல நடந் திட அனுமதிப்பதில்லை.

அவர் பிறந்த நாளில் கூட மக்கள் நற்பணி (குருதிக் கொடை போன்ற)களில் ஈடுபடச் செய்வது நல்லதோர் முன் மாதிரியாகும்.

இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் நடிப்புத் துறையைச் சேர்ந்தவர் களுக்கு அளவுக்கு அதிக மான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தாங்கள் விரும்பும் நடிகர் அரசியலுக்கு வர வேண் டும்; ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று துடிப்பது, ஆசைப்படுவது எல்லாம் தமிழ்நாட்டில் தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் திறமை வாய்ந்தவராக இருக்கலாம். உடனே அந்தத் திறமையை அர சியலோடு - அதிகாரப் பீடத்தோடு முடிச்சுப் போட் டுப் பார்ப்பது சரிதானா?

இப்படி ஒரு சூழ்நிலை நாட்டில் இருப்பதைப் புரிந்து கொண்டு இரட் டைப் பொருள் தொனிக் கக் கூடிய அரசியல் சார்ந்த சொற்களை உதிர்ப் பது எல்லாம் ஆரோக்கி யமானதல்ல.

இந்த வரிசையில் நிச்சயமாக கமலகாசன் சேர மாட்டார்.

இப்பொழுது இன்னொரு விடயம். விசுவ ரூபம் வெளியில் வந்த தற்காகவும், சிறப்பாக அமைந்ததற்காகவும் ரசிகர்கள் மொட்டை போட்டுக் கொண்டனர் என்பது விரும்பத்தக்கது தானா? பகுத்தறிவுவாதி யான கமலகாசனே இதனை ஏற்றுக் கொள்ள மாட்டாரே!

ஆர்வம் இருக்கலாம்; ஆர்வக் கோளாறும், மூடத்தனமும் இருக்கக் கூடாதல்லவா?

- மயிலாடன் 9-2-2013

தமிழ் ஓவியா said...


காலங்கடந்த ஞானோதயமா? அல்லது காலத்தின் கட்டாயமா?


குஜராத் கலவரம் துரதிருஷ்டமானதாம்!
மோடியின் ஒப்புதல் வாக்குமூலம்!

புதுடில்லி, பிப்.9- குஜராத்தில் 2002இல் நடைபெற்ற கலவரம் துரதிருஷ்டமானது என்று குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள் ளது. இரகசியமாக வைக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து வெளி யில் சொல்லியுள்ளார் ஜெர்மன் தூதர் மைக்கல் ஸ்டைனர்.

2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங் கள் துரதிருஷ்ட மானவை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்ததாக ஜெர்மன் தூதர் மைக்கல் ஸ்டைனர் கூறியிருக் கிறார்.

புதுடில்லியில் கடந்த மாதம் 7-ஆம் தேதி ஜெர்மன் தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பல நாடுகளின் தூதர்கள் கலந்துகொண் டனர். அந்த விருந்தில் கலந்துகொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டி ருந்தார். இதன் மூலம் அய்ரோப்பிய நாடுகளுக்கு மோடி மீது இது வரை இருந்துவந்த நிலைப் பாடு தளர்ந்துள்ளது என்று அரசியல் நோக் கர்கள் கருதுகின்றனரோ என்னவோ!

ஜெர்மன் தூதர் அளித்த விருந்து பற்றி வெளியில் எவருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மோடி யுடன் அப்படியொரு விருந்து-சந்திப்பு நடைபெற்ற தகவலை ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தூதர் ஜோ கிரவின்யோ வியாழக் கிழமை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, புது தில்லியில் வெள்ளிக் கிழமை சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் ஜெர்மன் தூதர் ஸ்டை னர். அப்போது கடந்த மாதம் தமது தூதரகத் தில் நடைபெற்ற விருந்து- சந்திப்பு குறித்து விவரங்களை வெளியிட் டார். அவர் கூறியதாவது:

குஜராத் பேரவைத் தேர்தலில் ஜெர்மனி தலை யிட விரும்பியதில்லை. தேர்தல் நடந்து முடிந்த பின்பு அந்த மாநில விவகாரங்களை மறுபரி சீலனை செய்வதாக இருந்தோம். அதைத் தான் இப்போது செய் கிறோம். முதல்வர் மோடி யிடம் நேரடியாகப் பேசு வதும் அதில் அடங்கும்.

சந்திப்பின்போது கூடியிருந்த தூதர்களி டம் குஜராத் கலவரங் கள் மிகவும் துரதிருஷ் டவசமானது என்றும், இதுபோன்ற சம்ப வங்கள் நடப்பது தவிர்க் கப்பட வேண்டுமென் றும் நீதித் துறை அளிக்கும் தீர்ப்பு களுக்குத் தாம் கட்டுப் படுவதாகவும் நரேந்திர மோடி தெரிவித்தார். (நீதித்துறைதான் மோடியை நீரோ மன் னன் என்று கூறி விட்டதே!)

இந்தியா ஒரு ஜன நாயக நாடு. ஜனநாயக அமைப்புகளை நாங்கள் மதிக்கிறோம். இந்த நாட்டின் நீதித் துறை மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்த மரியாதை-நம்பிக்கையினால் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் இருக் கிறோம்.

இந்திய நீதித்துறை மெதுவாகச் செயல் படக்கூடியதாக இருக் கலாம். ஆனால் அது எப்போதும் சரியான முடிவுகளைத் தருகிறது.

முன்பு நடைபெற்ற மிக மிகத் துயரமான சம்பவத்தின் ஒரு பகுதி சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது என்று ஜெர்மன் தூதர் கூறினார். நரோடா பாட்டியா வழக்கில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் குற்ற வாளிகள் என்று தீர்ப் பளிக்கப்பட்டதையே அவர் அவ்வாறு குறிப் பிட்டார்.

மேற்கொண்டு அந்த விருந்து-சந்திப்பில் நடைபெற்ற எதையும் அவர் வெளியிட மறுத்து விட்டார்.

குறிப்பு: ஒரு மாதம் ஓடியதற்குப் பிறகு மோடியின் வாக்கு மூலம் ஏன் இரகசிய மாக வைக்கப்பட்டது. இப்பொழுது ஏன் வெளிப் படுத்தப்படுகிறது? என்பது முக்கியம்.

பிரதமருக்கான வேட் பாளராக பி.ஜே.பி.யால் அறிவிக்கப்பட இது பயன்படும் என்று நினைத்து வெளியிடப் பட்டு இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


மதுரையில் இந்தி எழுத்துக்கள் அகற்றம்! விடுதலைக்குக் கிடைத்த வெற்றி!

மதுரையில் வீதிகளின் பெயர்கள், சாலைகளின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இவற்றோடு இந்தியிலும் எழுதப்பட்டு இருந்தன. இதனைக் கண்டித்து விடுதலை எழுதியது (25.1.2013) தமிழ்நாட்டில் இரு மொழிதான் என்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபொழுது சட்டம் இயற்றியுள்ள நிலையில், அண்ணா தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமா என்ற வினாவை எழுப்பி இருந்தது விடுதலை. அதன் விளைவாக இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமராகவே ஆகி விட்டாரா?

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று முதல் அமைச்சர் பதவியை மீண்டும் பிடித்தவுடன், அவர்தான் பி.ஜே.பி. பிரதம ருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்துவதில் சங்பரிவார் வட்டாரமும் ஊடகங்களைத் தம் கையில் வைத்துக் கொண்டுள்ள பார்ப்பனர்களும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

குஜராத்தில் மோடி ஆட்சியின்போது 2002இல் நடைபெற்ற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வெறியாட்டம், கொலை வெறித் தாண்டவம் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் வட்டாரத்தில் பெரும் ஆதரவையும், உற்சாகத்தையும் பெறுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல, வன்முறை என்பது அவர்களைப் பொறுத்தவரை கரும்புச் சாறு போன்றதாகும்.

விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவரும் பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளியுமான அசோக் சிங்கால், மோடியை நேருவுக்கு ஒப்பிட்டுக் கூறி யிருக்கிறார். உண்மை என்னவென்றால் இந்தக் கூட்டத்துக்கு உண்மையிலேயே நேருவையும் பிடிக்காது.

காந்தியாரை ஆர்.எஸ்.எஸ். வெறியன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றபோது; ஒரு முட்டாள் - பைத்தியக்காரன் - மதவெறியன் காந்தியார் உயிரைக் குடித்து விட்டான். சில வருடங்களாக நாட்டில் ஒரு நஞ்சு பரவி வருகிறது; அதனை முறியடிப்போம் என்று கர்ச்சனை செய்தவர் நேரு.

மதச் சார்பற்ற தன்மையில் உறுதியாக இருந்த ஜவகர்லால் நேரு எங்கே? இந்துத்துவா வெறியர் நரேந்திர மோடி எங்கே?

மக்கள் மத்தியில் மோடியின் உண்மையான இந்துத்துவா முகத்தை மறைப்பதற்கு மதச் சார்பின்மைவாதியாகிய நேருவோடு ஒப்பிட்டுக் காட்ட முனைந்துள்ளனர். இந்த வகையில் தேர்தல் வரும் வரை பல சித்து வேலைகளைச் செய்யக் கூடிய கும்பல்தான் இது.

கடந்த புதனன்று டில்லியில் கல்லூரி ஒன்றில் உரையாற்றச் சென்ற மோடியை எதிர்த்து மாணவர் கள், இளைஞர்கள் அணி திரண்டு ஆர்ப்பரித்தனர். இதுதான் இன்றைய உண்மையான நிலை! மோடி என்னும் மோடி மஸ்தானுக்கு குஜராத் படுகொலை களுக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காமலும், வருத்தம் தெரிவிக்காமலும், மூர்க்கத்தனமாக நடந்து வரும் ஒருவரை இந்தியாவின் பிரதமராக ஆக்கு வதற்கு, இந்திய நாட்டு மக்கள் ஒன்றும் மூளை கெட்டுப் போய் விடவில்லை.

குஜராத்துக்குள்ளிருக்கும் மோடி வேறு - குஜராத்தைத் தாண்டிய வெளி மாநிலக் கண்களில் உறுத்தும் மோடி வேறு; இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

பிஜேபியைப் பொறுத்தவரையில் அதன் புதிய தலைவர் ராஜ்நாத்சிங் மிக வெளிப்படையாகவே சொல்லி விட்டார். பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரை கட்சியின் தலைமைக் குழு முடிவு செய்யும்; அதுவரை எவர் பெயரையும் குறிப்பிட்டுப் பேச வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

ஏதோ கட்டுப்பாட்டுக்குப் பெயர் போன கட்சி என்று பம்மாத்துப் பாடுகிறார்கள்; கட்சியின் தலைவர் வெளிப்படையாக எச்சரித்த பின்பும்கூட தடி எடுத்தவன் தண்டல்காரன் எனும் பாணியில் ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டு திரிகிறார்கள்.

பி.ஜே.பி.யின் கூட்டணிக் கட்சியான அய்க்கிய ஜனதாதளம், சிவசேனை ஆகியவை மோடியை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படி கோட்டைக்குள் ளேயே குழப்பம் ஒரு பக்கத்தில்; அதற்குள்ளாக பிஜேபியே ஆட்சியைப் பிடித்து மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தது போன்ற போதையில் உளறிக் கொண்டு இருக்கின்றனர்.

காங்கிரஸ் இத்தகு சூழல்களைப் புரிந்து கொண்டும், இடதுசாரிகள் யதார்த்தமான கண்ணோட்டத்துடனும், நடந்து கொள்ள வேண்டி யது இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கிய மானதாகும்.

பல்வேறு பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் முதல் எதிரி மதவெறி அமைப்புதான் என்பதிலே தெளிவும், உறுதியும் தேவை!

அதீத நம்பிக்கையும், தலைக்கனமும் போதும், பிஜேபி தன்னைத்தானே தோற்கடித்துக் கொள் வதற்கு!

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...


அண்ணாவை அவமானப்படுத்தாதீர்கள்!


வாராழி கலசக் கொங்கை வஞ்சி போல் மருங்குலாள் தன் தாராழிக் கலை சார் அல்குல் தடங்கடற்கு உவமை....

. "தக்கவனே என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றன! அவளுடைய அல்குலோ (பெண்ணின் பிறப்புறுப்பு) தடங்கடற்கு உவமை!

அவளைத் தேடிக் கண்டு பிடித்து வருவாயாக!" என்று இராமபிரான் அனுமனிடம் சொல்லுவதாக கம்பர் பாடல் இயற்றியுள்ளார்.

செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன் என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கை களுக்கு உவமை தேடிப்பார்க்கிறேன. அவைகட்கு இணையாக உலகில் ஒரு பொருளும் இல்லை.அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என இராமன் கேட்பதாக கம்பர் எழுதி யிருக்கிறார்! உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட தன் மனைவியின் கொங் கையையும் மறை விடத்தையும் வேறொ ருவனிடம் வர்ணிக்க மாட்டான்!.என்று "திராவிநாடு" இதழில் கம்பராமாய ணத்தைப்பற்றி எழுதியவர் அறிஞர் அண்ணா. பின்னர் அது "கம்பரசம்" எனும் தலைப்பில் நூலாக வெளி வந்த போது "கம்பன் தமிழரின் கலையையும், நிலையையும், குலைக்கும் ஆரியத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என்பதற்காக எத்தகைய ரசத்தை கவி தையிலே கூட்டியிருக்கிறார் என்பதைக் கண்டு, சரியா?அது முறையா? என்பது பற்றி ஓர் தீர்ப்பளியுங்கள்!"என்று முன்னுரை எழுதினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைத்தாங்கிய கட்சி யின் ஆட்சியில் கம்பர் விருது வழங்கப் போவதாக அறிவித்துள்ளது மானக் கேடு!

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...


தொலைக்காட்சி பேட்டி


சன் செய்தி தொலைக்காட்சியின் விவாத மேடையில் தமிழர் தலைவர் அவர்களின் கேள்விக்குப் பதில் தெரியாமல் திணறிய மனுதர்மக் கூட்டம் உண்மைக்கு மாறாக பேசுகிறது. வாக்குவாதம் செய்ய தலைவர் வேண்டாம் பெரியார் பிஞ்சுகளே போதும் இந்த மனுதர்மக் கூட்டத்திற்கு.

ராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும் நாக்கை அறுக்க வேண்டும்; அப்படி செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும் என்று பார்ப்பனத் திமிரோடு பேசியவர் வேதாந்தி என்ற சாமியார். இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. எவரோ பேசியதற்காக எங்களை ஏன் தாக்குகிறீர்கள் என்று எச். ராஜா, இல. கணேசன், இராம. கோபாலன் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் கூச்சல் இட்டதை மறந்து இப்பொழுது நாதுராம் கோட்சே யார் என்று தெரியாது என்கிறது இந்தக் கூட்டம்.

ராம்விலாஸ் வேதாந்தி 1984ஆம் ஆண்டு முதல் விஸ்வ இந்து பரிசத்தின் தலைமைக் குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் உறுப்பினர் 1990ஆம் ஆண்டு முதல் ராம ஜென்ம பூமி டிரஸ்ட்டில் உறுப்பினர் 1996-98இல் உத்திரபிரதேசம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட பா.ஜ.க..வின் நாடாளு மன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இத்தனைக் கும் மேலாக முஸ்லீம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா கூட்டத்தின் நட்சத்திர பேச்சாளர் உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணி பேச்சாளர் இதற்கும் மேலாக பாபர் மசூதி இடிப் பையும் மதக் கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பேரில் இவரும் இந்த வேதாந்தியைத்தான் யாரோ, எவரோ எங்களுக்குத் தெரியவே தெரியாது என்று சொன்னவர்கள்தான் இந்த பார்ப்பனக் கூட்டம் சமீபத்தில் நடந்ததை மறந்தவர்கள். மறுப்பவர்கள் காந்தி கொலையை எப்படி ஏற்றுக் கொள்வார் கள்? இதற்கும் விடை கீதையின் மறு பக்கம் என்னும் புத்தகத்தில் தமிழர் தலை வர் எழுதியதைப் படிக்கச் சொல்லுங்க (145-146).

படிக்கக் கூடாது என்ற ஜாதியைச் சார்ந்த நாங்கள் படிக்கிறோம்; ஆதாரம் தருகிறோம். நாங்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்ன கூட்டம் படிக்க மறுப்பது ஏன்?
பெரியாரே நம் ஒளி!

- பொழிசை க. கண்ணன்

தமிழ் ஓவியா said...


ஜோசியம் படுத்தும்பாடு


ஜோசியர் கூறியதால் தங்க புதையல் ஆசை

ஆவடி, பிப்.9-குன்றத்தூர் ஈ.வெ.ரா தெருவை சேர்ந்தவர் சிறீராமுலு (50), ரியல் எஸ்டேட் புரோக்கர். போரூரை சேர்ந்த ஜோசியர் லிங்கம் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தார்.

அப்போது, புதிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மனை பூஜை செய்தால், தங்க புதையல் கிடைக்கும். அதனை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஜோசியர் கூறியுள்ளார். இதை நம்பிய சிறீராமுலு ஆவடி அடுத்த திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில் ஒரு குடிசை வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிவந்து, அங்கேயே தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் அந்த வீட்டில் 4 அடி அகலம், 4 அடி ஆழத்திற்கு குழிதோண்டி யுள்ளார்.

அதில் அம்மன் படத்தை வைத்து கற்பூரம் ஏற்றி, தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை பாக்கு போன்றவற்றை வைத்து பூஜை செய்துவிட்டு குழியை மூடிவிட்டு குன்றத்தூர் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் அந்த குடிசை வீட்டுக்கு வந்தார். அடிக்கடி சிறீராமுலு வந்து செல்வதால், அவர் மீது அக்கம் பக்கத் தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு குழி தோண்டி பூஜை செய்தது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து திருநின்றவூர் காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் குடிசையை பார்வையிட்டனர். மேலும், குழிதோண்டிய இடத்தில் புதையல் இருக்குமோ, இதற்காக நரபலி கொடுக்கப்பட்டு இருக்குமோ என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

பின்னர் பூவிருந்தவல்லி வட்டாட்சியர் நாகேஸ் வரராவ், திருநின்றவூர் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கொட்டாமேடு விஏஓ பிரபு ஆகியோர் வந்தனர். காவல்துறையினரும், அதிகாரிகளும் மூடப்பட்ட குழியை தோண்டினர். அதில் புதையலோ, நரபலி செய்யப் பட்டதற்கான தடயமோ இல்லை. இதனால், அந்த வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் காவல் துறையினர் சிறீராமுலுவிடம் தீவிரமாக விசாரிக் கின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஆசிரியையிடம் பிக்பாக்கெட் ஜோதிடர் மனைவி கைது

ஆலந்தூர், பிப்.9-சின்னமலையில் இருந்து மாநகர பேருந்தில் பயணம் செய்த ஆசிரியையிடம் பணம் பறிக்க முயன்ற ஜோசியர் மனைவி கைது செய்யப்பட்டார்.

சென்னை பரங்கிமலை பட்ரோடு ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் (41). சைதாப் பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் மாலை, சின்னமலையில் இருந்து பரங்கிமலைக்கு பேருந்தில் சென்று கொண் டிருந்தார். கிண்டி அருகே வந்தபோது அருகில் நின்றிருந்த ஒரு பெண், ஆசிரியையின் கைப்பை ஜிப்பை திறந்து பணத்தை எடுக்க முயன்றார். இதை பார்த்ததும் ஆசிரியை சத்தம் போட்டார். இதனால் அந்த பெண், பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். அவரை சக பயணிகள் விரட்டி சென்று பிடித்தனர்.

காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பரங்கி மலை காவல்நிலைய ஆய்வாளர் வர்கீஸ் சம்பவ இடத்துக்கு வந்து, பெண்ணை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தார்.

அதில் அரக் கோணத்தை சேர்ந்த கிளிஜோசியர் முருகனின் மனைவி ஜானகி (41) என தெரியவந்தது. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜானகியை கைது செய்தனர்.

தமிழ் ஓவியா said...


கோயில் நகை கோவிந்தா!


வேலூர், பிப்.9-வேலூர் அருகே பட்டப்பகலில் கோயில் பூட்டை உடைத்து 4 கிலோ வெள்ளிப் பொருட்களை காரில் வந்த பெண் மற்றும் ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் காளியம்மன் கோயிலுக்கு, நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு காரில் 2 ஆண், ஒரு பெண் வந்தனர். கோயிலுக்கு வெளியே இருந்த மூதாட்டியிடம், தாங்கள் கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்திருப்பதாக கூறினர். கடைக்கு சென்று டிபன், பூஜை பொருட்கள் வாங்கி வருமாறு கூறி, 50 ரூபாய் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்தனர்.

உடனே அந்த மூதாட்டி, பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து, கோயிலுக்கு வந்து பார்த்தபோது, காரில் வந்தவர்களை காணவில்லை. மேலும், கோயில் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது.

காரில் வந்த சில ஆசாமிகள், கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த சுமார் 4 கிலோ வெள்ளி மகுடம், கவசம் ஆகியவற்றைக் கொள் ளை அடித்து சென்றது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, விரிஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. உடனடியாக டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி மற்றும் விரிஞ்சிபுரம் காவலர்கள் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காரில் வந்த நபர்களைத் தேடி வரு கின்றனராம்.

தமிழ் ஓவியா said...


வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக் கொண்டாட்டம்


ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்

முடிவுரையில், தனக்கும் தமது மனைவிக்கும் செய்த உபச்சாரத் திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லை தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிற தென்பது விளங்குமென்றும்.

சத்தியாகிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாகிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப் படத்தக்கதாய் இருக்கிறது.

சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுப வித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத் காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப் போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத் தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல.

மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதுதான். அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை.

மகாத்மா காந்தியும், மகாராணி யாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள். மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள், போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாரா யிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக் காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பேனென்றும் சொன்னார்.

வைக்கம் சத்தியாகிரகத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங் கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிருத்துவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற் காவது செல்லலாமேயொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை.

ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர் களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.

(வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் 29.11.25 ஆம் தேதி ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு)

- குடிஅரசு - சொற்பொழிவு - 06.12.1925

தமிழ் ஓவியா said...


சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி - 1

சுதேசமித்திரன் பத்திரிகை அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை என்கிற தலைப்பின்கீழ்

ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அகில இந்திய காங்கிர கமிட்டி பாட்னா முடிவுக்கு விரோதமாய் தஞ்சையில் சுயராஜ்யக் கட்சியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்ல வென்றும் சுயராஜ்யக் கட்சியாரும் இதரர்களும் கோருகிற சுயராஜ்யம் இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்று சொன் னாராம் என்றும், காங்கிரஸ்காரர் இப்படிச் சொல்வது அழகல்லவென்றும் சென்னை கீழ்ப்பாக்கம் தேர்தல்

ஸ்ரீமான் நாயக்கர் மனதை வாட்டி வருகிறதென்றும் இப்படிப்பட்டவர் ஜஸ்டிஸ் கட்சியிலோ வேறு கட்சி யிலோ சேர்ந்து கொள்ளலாம் என்றும் எழுதி, நாயக்கர் சுயராஜ்யமே வேண்டாமென்று பேசியதாக பொது ஜனங்கள் நினைக்கும்படி எழுதியிருக்கிறது. இவ்வெழுத்துக்களில் எவ்வளவு அயோக்கியத் தனமும் அற்பத்தனமும் நிறைந்திருக்கிறது என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்வார்கள்.

இதற்குமுன் பல தடவைகளில் நாம் குறிப்பிட்டிருப்பதை, இந்த பிராமண பத்திரிகை கவனிக்காமல் மானம் ஈனமின்றி மறுபடி அதே காரியத்தைச் செய்கிறது.தஞ்சையில், நமக்கு வேண்டிய சுயராஜ்யம் என்ன என்பதைப் பற்றியும், வேண்டாத சுயராஜ்யம் என்ன என்பதைப் பற்றியும் கதர் தீண்டாமையைப் பற்றி பேசும் பொழுது 2,3 மணி நேரம் விபரமாய் பேசியிருக்கிறார்.

அந்தப் பேச்சுக்களைக் கிரமமாய் எடுத்துப் போடாமல் அவர் பேசிய பேச்சிலுள்ள எழுத்துக்களைப் பிரித்து தனக்கு வேண்டியபடி வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டு தங்கள் ஜாதி புத்தியை காட்டியிருக்கிறது.

சுயராஜ்யம் வேண்டாமென்று இந்தியாவில் ஒரு கட்சியும் சொல்ல வில்லை. சுயராஜ்யம் என்பது என்ன என்பதுதான் இப்போது தகராறி லிருக்கிறது. பிராமணர்கள் படிப்பதும் சர்க்காரில் உத்தியோகம் உண்டாக்கு வதும், தம்பிக்கும், மகனுக்கும், தங்கள் கூட்டத்தாருக்கும் உத்தியோகம் சம்பாதித்து கொடுப்பதும்தான் சுயராஜ்யம் என்று சிலரும் சில கட்சிக்காரரும் நினைக்கிறார்கள்.

ஏழைகள் வயிறாரச் சாப்பிடுவதும், நாட்டில் கைத் தொழில்கள் ஓங்கித் தொழிலாளர் பிழைப்பதும், நாட்டில் தரித்திரம் ஒழிவதும், மனிதர் எல்லோரும் சமம் என்ற உணர்ச்சியில் சுயமரியாதையுடன் வாழ்வதும்தான் சுயராஜ்யம் என்று மகாத்மா உள்பட சிலர் நினைக்கிறார்கள். அதைத்தான் நாம் தேடுகிறோம். இரண்டாவதாக, சுயராஜ்யம், சுயராஜ்யக் கட்சியாரால் வருமானால் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று மகாத்மா சொல்வது உண்மைதான்.

ஆனால் சுயராஜ்யக் கட்சியார் திட்டத்தில் இவ்வித சுயராஜ்யம் வருமென்கிற நம்பிக்கை எனக்கில்லை. அதனால்தான் நான் அதில் சேரவில்லை என்கிறார். இந்த இரண்டாவது பாகத்தை விட்டுவிட்டு முதல் பாகத்தை மாத்திரம் தங்கள் பத்திரிகைகளில் எழுதி ஏமாற்றப் பார்த்தால் யார் ஒப்புவார்கள். இதைப்பற்றி விவரமாக அடுத்த வாரம் எழுதுவோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 25.10.1925

தமிழ் ஓவியா said...


வைக்கம்


வைக்கம் நிலைமையைப் பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றி செல்லலாமென்று மகாராணியார் சட்டம் பிறப்பித்த தாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால் அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சள வில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று வீதிகளில் தீண்டாதார் செல்வதற்கு மட்டுமே கட்டளை பிறப்பிக்க சமதான அரசாங்கத்தார் செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன.

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மற்ற சமஸ்தானங்களுக்கும் வழிகாட்டியாயிருக்கும் பெருமை திருவாங் கூர் சமஸ்தானத்துக்கு கிடைக்காமலே போய் விடுமோவென அய்யுறு கிறோம். சத்தியாக்கிரஹிகளின் கடமை என்னவோ தெளிவாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத்தையும் அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவர வேண்டும்.
- குடிஅரசு - செய்தி - 21.06.1925

தமிழ் ஓவியா said...


சேலம் : அன்று சொன்ன அதிகாரி எங்கே?


சேலம் ரயில்வே கோட்டம் என்பது தமிழர்களின் உரிமைப் பிரச்சினை.

அடிக்கடி ஓடி விளையாடு பாப்பா கதையாக ரயில்வே துறை தமிழர்களைச் சீண்டிப் பார்க்கிறது.

திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தைத் தொடங்கி வைத்தார் (1.11.2007).

அதன் பிறகும் பாலக்காட்டுக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது கடந்தஆண்டும் (26.6.2012) திராவிடர் கழகத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திராவிடர் கழகத்தால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட மூன்று நாள்கள் கழித்து சேலம் வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் அசோக்குமார் மித்தல், செய்தியாளர்களிடம் சேலம் ரயில்வே கோட்டத்தை பாலக்காட்டுக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பிரச்சினை முடிந்தது என்று தமிழர்கள் நிம்மதியாக இருக்கும் இந்தக் கால கட்டத்தில், மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது என்று உளறுவார்களே அந்த நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் உரிமை உணர்ச்சி எத்தனை டிகிரி என்பதைக் காட்ட வரும் 11ஆம் தேதி சேலத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துவீர்! நடத்துவீர்!! உணர்ச்சியுள்ள தமிழர்களே பங்கேற்பீர்! - தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


யார் முகமூடி?


மானமிகு கலைஞர் அவர்களுக்கோ, தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கோ யாரையும் முகமூடியாகப் பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.

இவர்களின் பொதுவாழ்க்கை நீண்ட பயணம் உடையது. எத்தனையோ பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்து, முகங்கொடுத்து எதிரிகளின் முகமூடிகளைக் கிழித்தவர்கள்!

தினமலர் என்ற பார்ப்பன ஏடு, சங் பரிவார்க் கும்பலின் முகமூடி என்பது தெரியாதா? ஆட்சியாளரின் முகமூடி என்பதும் புரியாத ஒன்றா?

காஞ்சி சங்கராச்சாரிகளின் கைத்தடி என்ற கதைகள்தான் தெரியாதா?

இடது கையாலும், வலது கையாலும் அக்கப்போர்களை - ஆரியப் புத்தியுடன் இது உங்கள் இடம் என்ற முகமூடி அணிந்து அள்ளிவிடும் சமாச்சாரங்கள்தான் புரியாத சமாச்சாரமா?

காலைக்கதிர், தினமலர்களில் இது உங்கள் இடம் பகுதியில் ஒரே கடிதத்தை, அட்சரம் பிறழாமல் அரைப்புள்ளி மாறாமல்) ஆள் பெயர் மாற்றி முகமூடி அணிந்து வெளியிடும் வெட்கங்கெட்டதனம் இந்தக் கூட்டத்தின் ஜென்மத்தோடு பிறந்த சங்கதிகள் என்பதையும் அறியமாட்டோமா?

எத்தனையோ முகமூடிகளை கிழித்துக் காட்டியது இந்த இயக்கமும், இந்த இயக்கத் தலைவர்களும்; தினமலர் கூட்டமே ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்காதே!

தமிழ் ஓவியா said...


இந்தப் பூனை கண்மூடிவிட்டது - ஆமாம், நம்புங்கள்! பூலோகம் இருண்டுவிட்டது!


- தினமலர், 9.2.2012, பக்கம் 12

கருணாநிதி கலந்துகொண்டார்; தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கலந்துகொண்டார்; கனிமொழி கலந்து கொண்டார் என்றெல்லாம் செய்தி வெளியிடும் தினமலர் நாளிதழில், கி. வீரமணி கலந்துகொண்டார் என்று எந்த இடத்திலாவது இடம்பெற்று இருக்கிறதா என்று பார்த்தீர்களா? படத்தை வெட்டி ஒட்ட முடியவில்லை - படம் அமைந்துள்ள முறை அப்படி!

இந்தத் தினமலர் பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டது, ஆமாம் பூலோகம் இருண்டும் போய்விட்டது என்று நாமும் நம்ப வேண்டும் - அப்படித்தானே?

தமிழ் ஓவியா said...

தெலங்கானா நாத்திக அமைப்பு அறிவிப்பு:இவை அச்சு அசலான மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா!

பூதங்கள், பேய்கள். மனித மறுபிறப்பு, சுவர்க்க, நரகக் கற்பனைகள்,
மந்திரங்கள், மகிமைகள், செய்வினை ஆகியவற்றில் துளியேனும் உண்மை இல்லை.
வாஸ்து, ஜோதிடம், கைரேகை கே.பி.ஜே. லக்கி மோதிரங்கள், அதிர்ஷ்டக் கற்கள் இராசி பலன்கள் குபேர- லட்சுமி எந்திரங்கள், குடும்ப தோசங்கள் அனைத்துமே நவீன மோசடிகள், தில்லுமுல்லுகள்!
பரலோகம், கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே ஒட்டுமொத்த மோசடிகள்!
பாபா, சுவாமிஜீக்கள் மகிமை பெயரில் செய்யப்படும் அனைத்தும் ஜிம்மிக்குகளே! மந்திரமல்ல, தந்திரமே!!

மக்கள்=பிரஜா நாத்திக சமாஜம், மாநிலக் குழு செல்: 9959652769, 9849757222

மந்திர - தந்திர மோசடிகளை விளக்கி தெலங்கானா மக்கள் நாத்திக அமைப்பு வெளியிட்டுள்ள பிளெக்ஸ்= நெகிழிப் பதாகை.

- தமிழில்: கோரா, திருவூர் -602025, 8.2.2013