Search This Blog

25.2.13

நெஞ்சு பொறுக்குதில்லையே! பாலகன் பாலச்சந்திரன் படுகொலை!!டெசோ கூட்டத்தில் முடிவுகள்


நெஞ்சு பொறுக்குதில்லையே! பாலகன் பாலச்சந்திரன் படுகொலை!!
மார்ச் 5ஆம் தேதி இலங்கைத் தூதரக முன் டெசோ சார்பில் முற்றுகைப் போராட்டம்!
  • டில்லியில் நாடாளுமன்றம்முன் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
  • மார்ச் 7இல் டெசோ சார்பில்  டில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு  செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கம்
டெசோ கூட்டத்தில் முடிவுகள்
சென்னை, பிப்.25- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலகன் - பாலச்சந்திரனை இனப்படுகொலையாளன் ராஜபக்சேயின் சிங்கள வெறி இராணுவத்தினர் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த காட்சிப் படங்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க் குற்ற வாளி என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல. மனித உரிமை மனிதநேயம்  பேசும் அனைவரின் உள்ளத்திலும்  கனன்று எழுந்து நிற்கக் கூடியதாகும்.

இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முடிவுகளை செய்தியாளர்கள் கூட்டத் தில் டெசோ உறுப்பினரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்கள் விளக்கிக் கூறினார்.

1) மார்ச்சு ஏழாம் தேதி புதுடில்லியில் டெசோ சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கு ஏற்கும் மாநாடு நடைபெறுகிறது.

சேனல் 4, வாசிங்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய சர்வதேச மன்னிப்பு சபை (ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல்) மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (ஹியூமன் ரைட் வாட்ச்) ஆகிய அமைப்புகளும் மாநாட்டில் பங் கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங் கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது.

2) விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலகன் பாலச்சந்திரன் சிறிதும் ஈவு இரக்கமின்றி  சிங்கள இனவெறி யாளன், இனப்படுகொலையாளன் - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற கொடூரக் காட்சியை  பிரிட் டனின் சேனல் 4 ஒளிபரப்பி, உலககெங்கும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி விட்டது.
போர்க் குற்றவாளியாக ராஜபக்சே உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு இது ஒன்றே போதுமானதாகும்.

இலங்கைத் தூதரகமுன் முற்றுகைப் போராட்டம்!

இந்திய அரசு இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். ராஜபக்சே மீதுநடவடிக்கை எடுக்கப் பட இந்திய அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 5ஆம் தேதி (மார்ச்சு) காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினை முற்றுகை யிடும் போராட்டம் டெசோ சார்பில் நடைபெற உள்ளது. .

அதே நாளில் (மார்ச்சு 5) டில்லியில் நாடாளு மன்றத்தின்முன் திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

(டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தொண்டை வலி காரணமாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டார்.)

முன்னதாக டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்பு லட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண் டனர். தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்,  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திமுக அமைப்புச் செயலாளர் மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், வழக்குரைஞர் இராதா கிருஷ்ணன், அசன் முகம்மது ஜின்னா ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்பு
திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 28ஆம் தேதி இலங்கைத் தூதரகத்தின் முன் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச்சு 5ஆம் தேதி டெசோ சார்பில் இத்தகையப் போராட்டம் நடைபெறும்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
                    ----------------------"விடுதலை” 25-2-2013

24 comments:

தமிழ் ஓவியா said...


பிரார்த்தனை


அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்படுவதற் காக ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதிவரை நாடு முழுவதும் இந்துக்கள் விஜய மகாமந்திரம் சொல்லவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் எஸ். கோபாலரத்தினம் திருச்சி ராப்பள்ளியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள் ளார் (22.2.2013).

நல்லது - இதுதான் ராமன்மீது பக்தி கொண் டவர்களுக்கு அழகு. ராமன் மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆயிற்றே! ராமன் என்று சொல்லிக் கடலில் கல்லைப் போட்டதும் அப் படியே இலங்கைக்குச் செல்ல பாலம் உருவாயிற்று என்றெல்லாம் அற்புதங்கள் இருக்கும்போது - அதில் மகா நம்பிக்கை இருக்கும் போது, அந்த ராமனுக்கே கோவில் கட்டும் பிரச் சினைக்காக ராம நாமம் சொல்லிப் பிரார்த்தித்தால் காரியம் அனுகூலமாகக் கைக்கூடாமலா போகும்?

இப்படி செய்யாமல் பாபர் மசூதியை இடிப்பது - அங்கே ராமன் கோவிலைக் கட்ட செங்கற்களைச் சுமந்து கொண்டுபோவது, ரத யாத்திரை நடத்துவது எல்லாம் ராமன்மீது கொண்ட மரியாதை, ராமன் அவதாரத்தின் மகிமை இவற்றைக் கேலி செய்வது, நையாண்டி செய்வதல் லாமல் வேறு என்னவாம்?

அதுவும் விசுவ இந்து பரிஷத்துக்காரர்களுக்கு இப்பொழுது கொஞ்சம் நல்ல புத்தி புதிய ஞானோதயம் ஏற்பாட்டு இருக்கிறது என்று அதன் அகில இந்திய இணைச் செயலாளரின் திருச்சி பேட்டிமூலம் நம்பலாம் போல் தோன்றுகிறது.

இதுவரை விசுவ இந்து பரிஷத்துக்காரர்கள் திரிசூலங்களைத் தூக்கிக் கொண்டு அலைந்தனர். பொதுமக்களுக்குத் திரி சூலங்களையும் வழங்கினர்.

ஒரு சூலம் கிறித்துவர் களையும், இரண்டாவது சூலம் முசுலிம்களையும், மூன்றாவது சூலம் மதச் சார்பின்மை பேசுபவர் களையும் பதம் பார்க்கும் - குத்திக் குடலை சரிக்கும் என்று விளக்கங்கள் சொல்லிக்கொண்டு திரிந் தனர்.

இப்பொழுது அவற் றைக் கைவிட்டு, சாட்சாத் ராமபிரானை நம்பி, அவன்மீது நம்பிக்கை வைத்து, ராம பஜனை செய்தால், திடீர் என்று ஒரு நாள் பாபர் மசூதி இடிக் கப்பட்ட அதே இடத்தில் ராமன் கோவில் தோன்றப் போவதைப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த ஒரு விடயத்தில் மட்டுமல்ல, எல்லா விடயத்திலுமே ராம பஜனை செய்து, காரிய சித்தி பெற ஆசைப்படுவதுதான் பக் திக்கும், கடவுள் நம்பிக் கைக்கும் அழகே அழகு.

அனாவசியமாக அடிதடி, நீதிமன்ற வழக்கு, தேர்தல், ஆட்சி என்று அலட்டிக்கத் தேவை யில்லை அல்லவா! இவற்றை எல்லாம் அவர்கள் நம்பும், பிரார்த் திக்கும் ராமன் பார்த்துக் கொள்ளமாட் டானா என்ன? - மயிலாடன் 252-2013

தமிழ் ஓவியா said...

பேரறிவாளன் உள்ளிட்டோர்மீதான தூக்குத் தண்டனை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறுகிறார்:


அவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளித்தது தவறு

திருவனந்தபுரம், பிப்.25- ராஜீவ்காந்தி கொலை குற்ற வாளிகள் முருகன், சாந்தன், பேர றிவாளன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது. அப்படி தூக் கில் போட்டால் அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறினார். கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னையை அடுத்த சிறீபெரும்புதூ ரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட் டத்தில், பெண் தற்கொலைப் படை தீவிரவாதி தாணு நடத் திய வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய் யப்பட்டார். இந்த வழக் கில் கைது செய்யப் பட்ட 26 பேருக்கு சென்னை தடா நீதிமன் றம் 1998-ஆம் ஆண்டு மரண தண்டனைவிதித்தது.

தமிழ் ஓவியா said...


இதை எதிர்த்து அவர் கள் செய்த மேல் முறை யீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தலைமை யிலான அமர்வு, நளினி, அவரது கணவர் முரு கன், மற்றும் சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண் டனையை உறுதி செய்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தது.

இவர்களில் நளினி யின் மரண தண் டனையை, குறைக்கும் படி தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் சோனியா காந்தி பகிரங்கமாக விடுத்த கோரிக்கை ஆகிய வற்றின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளு நர் உத்தரவிட்டார். கடந்த 20 வருடங் களுக்கும் மேலாக சிறை யில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவா ளன் ஆகியோரை கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம் பர் 9-ஆம் தேதி தூக்கில் போட முடிவு செய்யப் பட்டது. ஆனால், குடி யரசுத் தலைவர் பிரதீபா பட்டீல், தங்களின் கருணை மனுவை மிக நீண்ட காலமாக நிலு வையில் வைத்திருந்து, 2011-ஆம் ஆண்டு ரத்து செய்தது செல் லாது என்று 3 பேரும் சென்னை உயர்நீதிமன் றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதன் பேரில் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர்களின் தூக்கு தண்டனையை 6 வார காலத்துக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தர விட்டது. பின்னர், அவர் களின் மேல் முறையீடு மனு மீது உச்சநீதிமன் றத்தில் முடிவு எடுக்கட் டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமின்றத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர்களின் மேல் முறையீடு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அவர்கள் 3 பேருக்கும் 1998-ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றத்தின் அமர்வு தலைமை நீதிபதி கே.டி.தாமஸ், இப் போது அவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண் டனை அளிப்பது அரசி யல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரு வனந்தபுரத்தில் அவர் அளித்த பரபரப்பு பேட்டி வருமாறு:- உச்சநீதிமன்றத்தில் என் தலைமையிலான அமர்வு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டவர்களின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்தபோது, குற்றம் சாற்றப்பட்டவர் களின் இயல்பு மற்றும் குணாதி சயங் களை நாங்கள் பரிசீலிக்க வில்லை. அவற்றை கருத்திலும் எடுத்துக்கொள்ள வில்லை. ஆகவே, அவர் களின் மரண தண்டனை அரசியல் சட்டத் தின் பிரிவு 22-க்கு விரோத மானது. மிகவும் கால தாமத மாக அவர்களை தூக்கில் போடுவது அரசியல் சட் டத்துக்கு எதிரானதும் ஆகும்.

2010-ஆம் ஆண்டு எஸ்.பி.சின்கா தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வு பெஞ்ச், கொலை வழக்கை விசாரித்த போது, குற்ற வாளிகளின் இயல்பை யும், குணாதிசயத்தை யும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுட் டிக் காட்டியது. அதா வது, மரண தண்டனை விதிக்கப்படும் குற்ற வாளியின் இயல்பு மற் றும் குணாதிசயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தண் டனை அளிக்கக்கூடாது என்பது அவர்களின் முக்கியமான சுட்டிக் காட்டுதல் ஆகும். இது இந்த வழக்குக்கும் பொருந்தும். மேலும், மரண தண்டனை அளிக்கப்பட்ட முந் தைய தீர்ப்புகளில் இருந்த சில தவறு களையும் நீதிபதி சின்கா தலைமையிலான அமர்வு சுட்டிக் காட்டியது குறிப்பிடத் தக்கது. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 20 ஆண்டு களுக்கும் மேலாக சிறை யில் தண்டனை அனுப வித்து வருகிறார்கள்.

ஆயுள் தண்ட னையைப் பொறுத்த வரை, ஒவ்வொரு கைதி யும் தனது தண்ட னையை மறுபரிசீலனை செய்யும்படி கோர உரிமை உள்ளது. அவரது தண்டனை குறைத்து அறி விக்கப்பட்டாலும், அறிவிக்கப்படா விட்டாலும் அவர்களுக்கு இவ்வாறு கோர உரிமை உள்ளது.

ஆயுள் தண்டனை கைதி களுக்கே தங்களது தண்ட னையை மறுபரி சீலனை செய்யும்படி கோர உரிமை இருக் கும்போது, மரண தண்டனை கைதிகளுக்கும் அந்த உரிமை இருக் கிறது. மரண தண்டனை விதிக்கப் பட்டதால் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் இவர்கள் மூவரும், தங்களின் தண்டனையை மறுபரி சீலனை செய்ய வாய்ப்பு அளிக்கப் படாமல், ஆயுள் தண்டனை காலத் தையும் தாண்டி தண்டனை அனு பவித்து விட்டார்கள். அவர்களுக்கு இது 3-வது தண்டனையாக உள்ளது. இது போன்ற தண்டனை கேள்விப் படாத ஒன்றாகவும், அரசியல் சட் டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் விலகலும் - பின்னணியும்!


கடந்த ஆறு ஆண்டுகளில் 44 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தாமாக முன்வந்து விருப்ப ஓய்வு கொடுத்துள்ளனர்.

விருப்ப ஓய்வு கொடுத்தவர்கள் இவர்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முக்கியமான கேந்திரப் பதவிகளிலும் அட்டகாசமாக அமர்ந்து இலட்சக்கணக்கில் ஊதியம் ஈட்டுவதுகூட ஒருபுறம் இருக்கட்டும்; பெரும்பாலும் இந்தப் பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாளர் களை, அலுவலர்களை நியமிக்கும் அதிகார நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு முதுகில் பூணூல் இருக்கிறதா என்று தடவிப் பார்த்து தேர்வு செய்கின்றனர். அரசு துறைகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்றால், தனியார்த் துறைகள் இருக்கவே இருக்கின்றன. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுது புரிகிறதா?

எக்கனாமிக் சண்டே பொலிடிக்கல் வீக்லி (11.8.2012) இதழில் வெளிவந்துள்ள ஒரு புள்ளி விவரம் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தனியார்த் துறைகளில் உள்ள நிலவரம்பற்றி அந்த ஏடு கீழ்க்கண்ட - புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

இயக்குநர்கள் என்று எடுத்துக்கொண்டால், உயர்ஜாதியினரின் எண்ணிக்கை 8327; (92.6 சதவிகிதம்), இதில் பார்ப்பனர்கள் 4037 (44.6 சதவிகிதம்), வைசியர் 4167 (46 சதவிகிதம்), சத்திரியர் 46 (0.5 சதவிகிதம்), பிற முன்னேறிய வகுப்பினர் 137 (15 சதவிகிதம்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 346 (3.8 சதவிகிதம்), பட்டியல் குலத்தினர் மற்றும் பழங்குடியினர் 319 (3.5 சதவிகிதம்).

இயக்குநர்கள் என்றால் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பீடத்தில் அமர்ந்து இருப்பவர்கள், பணி யாளர்களை, அலுவலர்களை தேர்வு செய்பவர்கள் - நியமனம் செய்பவர்கள் ஆவார்கள்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை எந்த இடத்தில் இருந்தாலும் இனவுணர்வோடு நடந்து கொள்ளக் கூடியவர்கள் என்பது அறியப்பட்ட ஒன்றே!

இந்த நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது மிகவும் அவசியமான சமூகநீதிக் கோரிக்கையாகும்.

தனியார்த் துறைகளாக இருந்தாலும் சரி, பன்னாட்டு நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அவை பல வகைகளிலும் அரசின் உதவிகளைப் பெற்றவைதான். நிலம், நீர், மின்சாரம், கடன் தொகை என்று பல்வேறு உதவிகளை, சலுகை களை அளித்துவரும் நிலையில், அரசு கடைப் பிடித்துவரும் இட ஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என்பது இயற்கையாகவே அமைந்து விட்ட ஒன்றாகும்.

மண்டல் குழு அறிக்கையில்கூட தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு அளிப்பதுபற்றிப் பேசப்பட்டு இருக்கிறது.

விதிமுறைகளைத் திருத்தி, மத்திய - மாநில அரசுப் பதவிகள், பொதுத் துறை நிறுவனப் பகுதிகள், அரசு உதவி பெறும் தனியார்த் துறைப் பதவிகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அனைத்திலும் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று மண்டல் குழு அறிக்கை திட்டவட்டமாகவே கூறுகிறது.

இந்தியாவில் இட ஒதுக்கீடு அளிக்க மறுக்கும் இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில் தொடங்கும்போது, அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்வருவது - ஏன்?

ஏனிந்த இரட்டை அளவுகோல் - அணுகு முறை? இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் போதிய அளவு விழிப் புணர்ச்சி பெறவில்லை என்று கணிப்பா?

அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறைகளும், பன்னாட்டமைப்பு களும் நாளும் பெருகிவரும் நிலையில், இட ஒதுக்கீடு என்பது சொல்லாமலேயே இவற்றிலும் அவசியம் என்பது உணரப்படும் உண்மையாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு உரிய இடம் நிருவாகத் துறையில் மறுக்கப்படுமேயானால், அதன் விளைவு - பெரும் புரட்சியில்தான் கொண்டுபோய்விடும் என்று எச்சரிக்கின்றோம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளை மறந்து, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதை முன்னெடுத்து வெற்றி பெறவேண்டியது அவர்களின் அடிப்படைக் கடமையாகும்.

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாதுபார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.
(விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


டக்ளஸ் தேவானந்தாவின் ஆணவப் பேச்சு! தி.மு.க., தலைவர் கலைஞர் கண்டனம்


இலங்கை இனவாத அரசின் அதிபராக உள்ள ராஜபக்ஷே அவர் களின் அமைச்சரவையில், தற்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் திரு.டக்ளஸ் தேவானந்தா; 1986ஆம் ஆண்டு ஒன்பது நபர் களுடன் இணைந்து, சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஒருவரைக் கொன்று விட்டதாகவும் குற்றஞ் சாற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் செய்ததற்கான குற்றப்பத் திரிகை வழங்கப்பட்டு வழக்கு விசா ரணை சென்னை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பல்வேறு முனைகளில் இயற்கை யாகவே பீறிட்டுக் கிளம்பிய எதிர்ப் புக்கிடையே, சில நாட்களுக்கு முன் சிங்கள அதிபர் ராஜபக்ஷே அழையா விருந்தாளியாக இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையிலே உள்ள; கொலைக் குற்ற வழக்குப் பின்ன ணியைக் கொண்ட டக்ளஸ் தேவா னந்தா நேற்றையதினம் கச்சத் தீவில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய பேச்சு ஏடுகளிலே வெளிவந்துள்ளது.

அவர், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் வந்து, தடை செய்யப்பட்ட ரோலர் மடி வலைகளை வைத்து மீன் பிடித்துச் செல்வதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை மீனவர்களின் வலைகளை யும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் இலங்கை கடற்பகுதியிலே உள்ள மீன்வளம் முற்றிலுமாக அழிந்து விடும். தமிழக மீனவர்கள் ரோலர் மடி வலைகளை வைத்து, இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிப்பதைக் கண்டித்து, இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழ கத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று ஆத்திரத்தோடும், ஆணவத்தோடும் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

உலகின் எந்த நாடுகளிலும் கடல் களின் நடுவே நடைபெறாத அள விற்கு இலங்கைக் கடல் படையின ரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டுக் காலமாகத் தாக்கப் பட்டு வருவதும், தமிழக மீனவர் களின் படகுகள் அழிக்கப்பட்டு வலைகள் அறுக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பறித்துக் கொண்டு செல்வதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்று சிறையிலே அடைப்பதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசை இதற்காகத் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் சார்பில் முறையிடுவதும், இலங்கைக் கடற்படையின் அட்டூ ழியங்களைக் கண்டிப்பதும் முடிவில் லாமல் வாடிக்கையாக நடந்து வரும் நிகழ்வுகளாகும்.

இந்தச் செய்தி உலக நாடுகளுக்கும், உலக அமைப்புகள் பலவற்றுக்கும் தெரிந்த ஒன்றேயாகும்.

இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழகத்திற்கே வருகை தந்து இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்திலே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் ராஜபக்ஷே அரசின் இனவெறிக் கொடுங்கோன்மைச் செயல்கள் படிப்படியாக வெளிச்சத் திற்கு வருவதை திசை திருப்புவதற்காக இலங்கை அரசே திட்டமிட்டு மேற் கொண்டிருக்கும் யுக்தியாகத் தெரி கிறது. மேலும் டக்ளஸ் தேவானந்தா வின் பேச்சு இந்திய அரசை வலிய வம்புக்கு இழுத்துச் சவால் விடும் பாணியில் அமைந்திருப்பதை இந்திய அரசு இந்நேரம் உணர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்.
கொலைக் குற்றப் பின்னணி உள்ள இலங்கை அமைச்சர் ஒருவர், மீனவர் களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசியிருப்பது சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததும், கடும் கண்ட னத்திற்கு உரியதும் ஆகும். இலங்கை அமைச்சரின் இந்த ஆணவப் பேச் சைக் கருத்திலே கொண்டு, உடனடி யாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழ் ஓவியா said...


அன்று மணல்மேடு என்று சொன்னவர்கள் இன்று ராமர் பாலம் என்று சொல்லுவதா? கலைஞரின் அறிவார்ந்த வினா


சென்னை, பிப்.25- அன்று வெறும் மணல் திட்டு என்று சொன்னவர் இன்று ராமர் பாலம் என்று முரண்படுவது ஏன் என்று அறிவார்ந்த வினாவை எழுப்பினர் தி.மு.க தலைவர் கலைஞர்.

முரசொலியில் இன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

உடன்பிறப்பே, இந்திய உச்ச நீதி மன்றம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்றுப் பாதை பற்றிப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசை அறிவுறுத்தியது. அதன்படி 20.7.2008 அன்று டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில் வல்லுநர் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத் தது. வல்லுநர் குழு 12-2-2012 அன்று தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 11 மாதங்கள் கழித்து இப்போது மத்திய அரசு பச்சௌரி குழு வழங்கியுள்ள அறிக்கையின் மீது தனது கருத்துக் களைத் தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் 23-2-2013 அன்று பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. அந்தப் பதிலில், ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத் திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற் றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமை யிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சௌரி குழுவின் அறிக் கையை உச்ச நீதிமன்றத் திடம் மத்திய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன் தாக்கல் செய்தார்.

தமிழ் ஓவியா said...

அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச்சௌரி கமிட்டி யின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராய வில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்தப் பதிலைப் பற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திரு. ரவி சங்கர் பிரசாத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எந்தவொரு சூழ்நிலையிலும் ராமர் பாலத்தை அழிக்கும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புக்களும், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெயலலிதா தலை மையிலான தமிழக அரசும், பா.ஜ.க.வைப் பின்பற்றி இதே கருத்தைத் தான் உச்ச நீதிமன்றத்திலே வலியுறுத்தி இருக்கின்றது.
8.5.2002 அன்றே நான் அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர் களுக்கு எழுதிய கடிதத்தி லேயே சேது சமுத்திரத் திட் டம் பற்றிய விவரங்கள் எல்லாம் அடங்கியிருக் கின்றன. 23.7.1967 அன்று சேது சமுத்திரத்தின் ஒரு பிரி வாக உள்ள தூத்துக்குடித் துறைமுகத் திட்டம், சேலம் இரும் பாலைத் திட்டம் ஆகிய வற்றை நிறைவேற்றக் கோரி அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறி வித்தார்.

தமிழ் ஓவியா said...


தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 6 எண் பாதை முடிவு

இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால் வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பினைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக் கள் அமைக்கப்பட்டும் நீண்ட நாட் களாக கிடப்பிலே போடப்பட்டது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு அமைந்ததும், சேது சமுத்திரத் திட்டம் பற்றிய சாத்தியக் கூற்றினை ஆராய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேது சமுத்திரக் கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம் மற்றும் அதற்கான விவரங்கள் பா.ஜ.க. பிரதமரான திரு. வாஜ்பாய் அவர்கள் தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு ஆறாவது எண் பாதை (ஆடம்ஸ் பாலம் அதாவது பாஜக தற்போது ஏற்க முடியாது என்று கூறுகின்ற ராமர் பாலம்) முடிவு செய்யப் பட்டது. இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் எந்தப் பாதையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதை மறந்து இன்றைக்கு அது ராமர் பாலம் உள்ள இடம் என்றும், அங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் பா.ஜ.க. வினர் தற்போது கூறு வது எத்தகைய முரண்பாடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. மட்டுமல்ல; இங்கே தமிழகத்தில் ஆளு கின்ற அ.தி.மு.க. வின் சார்பில் 2001 தேர்தல் அறிக் கையில்; இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொ டர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழி யாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங் கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டி யுள்ளது. இதற் குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத் திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று ஆடம்ஸ் பாலம் அமைந்துள்ள பகுதியில், ராமர் பாலம் என்று இப்போது சொல்கிறார்களே, அதே இடத்தில் அங்கே இருக்கும் மணல் மேடுகள், பாறைகள் ஆகியவற்றை அகற்றி விட்டு கால்வாய் அமைப்பதுதான் தலையாய நோக்கம் என்று சொன்னவர்கள், இன்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று சொன்னால் அது எத்தகைய முரண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு. கழகத்தின் முயற்சி யினால் இந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்ற உள் நோக்கம் தானே காரணம்?

தமிழ் ஓவியா said...

தேர்தல் அறிக்கையில் சொன்னது மாத்திரமல் லாமல், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா 26.6.2005 அன்று விடுத்த நீண்ட அறிக்கை ஒன்றில் என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத் திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற் கொள் ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி; தேசிய சுற்றுச் சூழல் பொறி யியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனத் தின் அறிக்கையும், 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சேது சமுத் திரக் கால் வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்து வதற்கு நான் முக்கியக் காரண மாக இருந்திருக்கிறேன்'' என்று அன்றைக்கு இத்திட்டத்திற்கே தான்தான் காரணம் என்பதைப் போலச் சொல்லிக் கொண்ட வரும் இதே ஜெயலலிதா தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சேது திட்டம் நிறைவேற்றப் படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெரு மளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக் கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய் திட்டத் தின்கீழ் மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படு வதால் கடல் சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர் களின் பொருளா தாரம், வாழ்க்கைத் தரம் உயரும்; மன்னார் வளை குடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்;

தமிழ் ஓவியா said...

இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறை முகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப் படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத் திரத் திட்டத் தின் மூலம் ஆண்டுக்கு 8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும்;

ராமேஸ்வரம், மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் மேம்படுத்தப் படுவதன் வாயிலாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிட்டும்; சேது சமுத்திரக் கால்வாயை பயன்படுத்து வதன் மூலம் இந்தியா வின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதி களுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் சுமார் 424 மைல் அளவுக்கு குறையும். இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது. கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளை கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத் திற்கென ஒருங்கிணைப்புத் துறை முகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறை முகமாக பெருமளவில் வளர்ச்சி அடை யும்; கடற் படை மற்றும் கடலோரப் படை கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு அதி விரைவில் செல்ல இயலும். இதன் மூலம் இந்தியப் படைத் திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமனாதபுரம், நாகப் பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் இத்தகைய ஏராளமான பயன் களைக் கருத்திலே கொண்டுதான், அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உரு வானபோது அதன் குறைந்தபட்சச் செயல் திட்டத்தில் தி.மு. கழகத்தின் முயற்சியால் சேது சமுத்திரத் திட்டம் இடம் பெற்றது மாத்திரமல்லாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு, அதன் தொடக்க விழாவிற்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர் களும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித் தலை வர்களும் மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவிலே கலந்து கொண்டோம். சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,

தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கட லுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப் பட ஏதுவாகும். இந்தக் கால் வாய்த் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு தடை கிடையாது - என்று கூறி தீர்ப்பளித்தது. அவ்வாறு; தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுவின் நல்ல முயற்சி யின் காரண மாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச் சென்றிருக்கின்றனர். உச்ச நீதி மன்றம் விரைவில் இதுகுறித்து நல்ல முடிவெடுத்து தீர்ப் பளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழி வகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்து கிறேன்.

அன்புள்ள,
மு.க.

தமிழ் ஓவியா said...


மும்பை பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தமிழ்ச் சான்றோர் பாராட்டு விழா!


ஜாதி, மதம், கட்சி எல்லைக்கப்பால் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதில் வழிகாட்டும் மும்பைவாழ் தமிழர்கள் பாராட்டுக்குரியவர்கள்!

பெரியாரின் மனிதநேய தத்துவத்தை உலகமயமாக்குவோம்!

தமிழர் தலைவர் பாராட்டி நிறைவுரை

மும்பை - சயான் மேற்குப் பகுதியில் வடக்கு இந்தியர் சங்கம் அருகில் உள்ள பாரதிய மியூசிக் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்றி சான்றோர்களைப் பாராட்டி நிறைவுரையாற்றினார். (மும்பை, 24.2.2013)

மும்பை, பிப். 25- மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 134ஆவது பிறந்த நாள் விழாவும், மூத்த தமிழ்ச் சான்றோர் களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

மும்பை - சயான் மேற்குப் பகுதியில் வடக்கு இந்தியர் சங்கம் அருகில் உள்ள பாரதிய மியூசிக் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று சான்றோர்களைப் பாராட்டி நிறைவுரை யாற்றினார்.

மும்பை நகரத்தில் வாழ்கின்ற தமிழர்களின் குடும்ப விழாவாக நடைபெற்ற இந்த பாராட்டு விழாவிற்கு மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் எம்.சசிகுமார் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முதல் நிகழ்வாக தந்தை பெரியாரின் படத் திறப்பு நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.சண்முகம் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்தார். தொடக்க வுரையினை மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் ஆற்றினார்.

பாராட்டு

நிகழ்ச்சியில் மூத்த தமிழ்ச் சான்றோர்கள் மதிப்பிற்குரிய த.மு.பொற்கோ, எஸ்.எஸ்.அன்பழகன், வி.தேவதாசன், சீர்வரிசை சண்முகராசன், த.மு.ஆரிய சங்காரன், இல.செல்வராஜ், எஸ்.ரவீந்திரன், பாவலர் பாலையா, நெல்லை வளவன், புலவர் இரா.பே. பெருமாள், கவிஞர் டி.ஏ.வான்மதி ஆகியோர் பாராட்டப்பட்டனர். தமிழர் தலைவர் கி.வீரமணி சான்றோர்களைப் பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டு விருதினை வழங்கினர். பாராட்டப்பட இருந்த சான்றோர்களில் பொ.அப்பாதுரை, கொ.வள்ளுவன் ஆகியோர் வர இயலாத சூழலில் அவர்களது குடும்பத்தார் பாராட்டு விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

வடநாட்டில் பெரியார் புத்தக வெளியீடு

பாராட்டு விழாவில் வடநாட்டில் பெரியார் புத்தகத்தின் இரண்டு தொகுதிகளையும் தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த தமிழ் பெருமக்கள் மற்றும் பங்கேற்ற தோழர்கள் பெருந்திரளாக புத்தகத் தொகுதியினை தமிழர் தலைவரிடம் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டனர். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் வரிசையாக இருந்து புத்தகத் தொகுதியினை கொடுத்து பெற்றுக் கொண்டது நிகழ்ச்சியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

வாழ்த்துரை

பாராட்டுப் பெற்ற சான்றோர்களை வாழ்த்தி, மும்பை, தமிழ் இலெமுரியா மாத இதழின் முதன்மை ஆசிரியர், இலக்கிய ஆர்வலர் சு.குமண ராசன், திராவிடர் முன்னேற்றக் கழக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமல்ராஜ் மைக்கேல், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் ஆகியோர் உரையாற் றினர்.

பாராட்டு ஏற்புரை

பாராட்டப்பட்ட சான்றோர் பெருமக்கள் ஒவ்வொருவரும் மிகச் சுருக்கமாக தமது ஏற்புரை யினை, இயக்கத்தின் கடந்த கால நினைவுகளில் மூழ்கி, நன்றி தெரிவித்துப் பேசினர். ஒட்டுமொத்த மாக தங்களுக்குக் கிடைத்த பாராட்டு தங்களது வாழ்நாளை நீடிக்கும், இயக்கத்திற்கு தங்களது பங்களிப்பினை நீட்டிக்கும் எனக் கூறினர்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அ.ரவிச்சந்திரன்

பாராட்டு விழா ஏற்பாடு முழுமையினையும் தோழர்களின் உறுதுணையுடன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியினை தொகுத்து அளிக்கும் பணியையும் ஏற்று மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப் பாளர் அ.ரவிச்சந்திரன் சிறப்பாக நடத்தினார்.

தமிழர் தலைவரின் நிறைவுரை - பாராட்டுரை

வரலாற்றுச் சிறப்புமிக்க, இயக்க வரலாற்றிலே பதிவு செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சி இது. தமிழ் நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வா தாரம் தேடி மும்பை வந்த தமிழ்க் குடும்பங்கள் மற்றும் அவர்களது வழித் தோன்றல்கள் இணைந்து நடத்துகின்ற மகிழ்ச்சிகரமான குடும்ப விழா.

தமிழ் ஓவியா said...


உழைத்துப் பிழைப்பது சுயமரியாதை உள்ள ஒவ்வொருவரது குறிக்கோள் ஆகும். அதற்கும் மேலாக சமுதாயத்தை நிமிர்த்த வேண்டும் என இலட்சிய நோக்குடன் பயணப்பட்ட மூத்த தமிழ்ச் சான்றோர்களைப் பாராட்டும் விழா. திராவிடர் இயக்க வேர்களை விழுதுகள் பாராட்டக்கூடிய உணர்ச்சிபூர்வ விழா.

நினைவலைகள் நெஞ்சத்தில் மோதுகின்ற இந்த வேளையில், மும்பை நகரத்தில் தமிழர்களை யெல்லாம் ஒருங்கிணைத்து, குடும்ப உணர்வினைப் போற்றி, உறவுகளை வளர்த்திட்ட உடலால் மறைந்துவிட்ட முன்னோடிகளான சுடரொளிகள் தொல்காப்பியன், தியாகராசன், மங்கள மூர்த்தி, மூலகரைப்பட்டி திராவிடன், சோமசுந்தரம், ஜான் முத்தையா மற்றும் பல்வேறு முன்னோடிகளை நினைத்துப் பார்த்து அவர்களுக்கு வீரவணக்கத் தினை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கு தமிழர்கள் இணக்கமாக வாழ்ந்து வருவது திராவிடர் இயக்கத்திற்கே வழிகாட்டுதலாக உள்ளது. இங்குள்ளவர்களுக்குள் ஜாதி இல்லை; மதம் இல்லை; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒருங் கிணைந்து வாழ்ந்து வருகின்றனர். தாய்த் தமிழகத் திலே திராவிடர் இயக்கத்திலே சில அணுகுமுறை வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றினாலும், இங்குள்ள இயக்கத்தவரை எந்த வகையிலும் அவைகள் பாதிக்காத வகையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது, ஒருங்கிணைந்து காரியம் ஆற்றுவது என்ற முறையில் பிற தமிழர்களுக்கு வழிகாட்டிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

மனிதருக்கு முதலில் மனிதம் தேவை. மனிதத்தை மறுக்கின்ற நமது இன எதிரிகள், ஏகமனதாக இவர்கள் (தமிழர்கள்) இணைந்து நம்மை எதிர்ப்பது எப்போது? என்ற மனநிலையில் ஆதிக்க உணர் வுடன் உள்ளனர். எங்களாலும் இணைந்து, இணக்க மாக இருந்திட முடியும், எங்களை நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும் என்ற உணர் வுடன் இங்குள்ள தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வருவது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது.

மும்பை உங்களுக்கும் புதிதல்ல; எனக்கும் புதிதல்ல. இருப்பினும், உங்களை பாராட்டுவதால் எங்களுக்கு புத்துயிர் பிறக்கிறது. தொண்டறத்தால் உயர்ந்த உங்களைப் போற்றும்பொழுது புத்தாக்கம் பெறுகிறோம்.

தந்தை பெரியார்

தந்தை பெரியார் கூறுவார்: நான் கட்சிக்கார னல்ல; நான் ஒரு கொள்கைக்காரன். போராட்டத் தில் களச்சாவை எதிர்நோக்கும் தைரியம் வேண்டும். நோக்கத்தில் நேர்மை வேண்டும். அங்கீகாரத்தை எதிர்பாராமல் பொது வாழ்க்கை பணி மேற் கொள்வதால் ஒருவருடைய தகுதி உயர்கிறது. பொது வாழ்க்கையில் தன்மானத்தைவிட இனமானம்தான் முக்கியம்.

அத்தகைய பொது வாழ்விற்கு சொந்தமான மூத்த சான்றோர் பெருமக்கள் இன்று பாராட்டப்படு கிறார்கள். அவர்கள் அனைவரும் நீண்டநாள் வாழ்ந்து, வழிநடத்திட வேண்டும். நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

வடநாட்டில் பெரியார்

இந்த நிகழ்ச்சியில் வடநாட்டில் பெரியார் எனும் புத்தகம் இரண்டு தொகுதிகளாக வெளி யிடப்பட்டுள்ளது. பலரும் அந்தத் தொகுதிகளை வாங்கியுள்ளீர்கள். வடநாட்டில் பெரியார் எனும் புத்தகத் தொகுதியில், பெரியாரின் வட நாட்டுப் பயணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பை நகருக்கு தாராவி பகுதிக்கு அந்நாளில் பெரியார் வந்து பேசிய நிகழ்வுகள் பல பதிவு செய்யப்ப ட்டுள்ளன. தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும் மூன்று முறை சந்தித்துள்ளார்கள். மும்பை நகரில் அவர்கள் இருவரும் இணைந்து கூட்டத்தில் பேசியுள்ளனர். அண்ணல் அம்பேத் கரின் ஆங்கிலப் பேச்சினை அறிஞர் அண்ணா மொழிபெயர்த்துப் பேசினார். பொதுவுடைமைப் போராளி எம்.என்.ராய் அவர்களுடனான பெரி யாரது சந்திப்பு இருவரும் சேர்ந்து உரையாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகள் எல்லாம் அந்தப் புத்தகத்தில் உள்ளன.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் வடபுலத்தில் ஹரித்துவாருக்குச் சென்று பிரச்சாரம் செய்கிறார். கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அந்த நிகழ்வுகளை எல்லாம் புத்தரின் புன்னகை என்று தலைப்பிட்டு திராவிட நாடு இதழில் அறிஞர் அண்ணா தனது அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியுள்ளார். வடநாட்டுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார் ஹரித்துவாருக்கு வந்து சேரும்படி தமிழ்நாட்டில் இருந்த அண்ணாவுக்கு தந்தி அனுப்புகிறார். அண்ணாவும் வந்து சேருகிறார். ஹரித்துவாரில் குளிர் அளவுக்கு அதிகமாக உள்ளது. குளிருக்கு ஏற்ற உடையினை அண்ணா கொண்டு வரவில்லை. ஹரித்துவாரில் அவர்கள் இருவரும் தங்கியிருந்த நாட்களில் காலை வேளையில் நடைப்பழக்கம் செல்லும்பொழுது வெண்தாடி யுடன் நெடிய உருவத்துடன் பெரியார் முன்னே செல்ல, பின்னால் அண்ணா வெளிச்சூழல் குளிர் தாங்காமல் கைகளை இருக்கமாகக் உடம்போடு சேர்த்து கட்டிக் கொண்டு பின் தொடர்ந்து செல்வாராம்.

இருவரும் முன், பின் நடந்து போவதைப் பார்த்த பொதுமக்கள் புகழ்பெற்ற பெரிய மகான் - சாமியார் நடந்து போகிறார். பின்னால் அவரது சிஷ்யர் - சின்னச் சாமியார் தொடர்ந்து போகிறார் என்று நினைத்து பெரியாரது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வேண்டிய, சுவையான நிகழ்ச்சிகள் எல்லாம் பதிவாகி உள்ளன. அண்ணாவே இந்த நிகழ்ச்சிகளை சுவைபட, தமிழக முதல்வராக வந்து பின்பும் ஒரு நிகழ்ச்சியில் தந்தை பெரியாரை வைத்துக் கொண்டு அந்த பழைய நாட்களை எல்லாம் நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

பெரியாரது சிந்தனைகள் ஆயிரங்காலத்துப் பயிர் போன்றது. இது உலகளாவிய தத்துவம். இந்த நிலையினை எதிரொலிக்கும் விதமாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என பாடியுள்ளார். பெரியாரது தொலைநோக்கு அறிவியல் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஏறக்குறைய 70-80 ஆண்டுகளுக்கு முன்பே ஆண் - பெண் சேர்க்கை இல்லாமல் குழந்தை பிறக்கும் (Test tube baby), செல்பேசி பயன்பாடு, கணினி காணொளி கூட்டம் (Video conferencing) ஆகிய நடைமுறைகள் வரும் என கணித்துச் சொன்னவர் தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...

மானிடப் பற்று

தந்தை பெரியாரின் கொள்கை வெறும் இன அளவில் சுருங்கி விடக் கூடியது அல்ல; உலகளாவிய மனித நேயத்தைப் பரப்பிட வல்ல மானிடம் போற்றிட வந்த தத்துவம் ஆகும்.

பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் தனது ஆய்வறிந்த உண்மையினை மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் எனும் தலைப்பில் பெரியாரின் கொள்கைத் தன்மைபற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

பொதுவாக, சுயமரியாதை என்கிற ஒரு இஞ்சினைப் பயன்படுத்தி, சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டுவந்து அதோடு இணைத்துத் தோல்பட்டையை மாட்டி விட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திர மாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கவலை யாருக்கும் வேண்டியதில்லை. மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையும் விடச் சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும், மதிக்கத் தக்கதுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம். ஒரு இயந்திரத்தைச் சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம் போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுகிறது, மற்றபடி, பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த - உலக மக்களையே ஒரு குடும்பச் சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மைச் சக்தியும், பெருமையும் வெளியாகும்.

ஈழத் தமிழரின் இன்னலில் உலகளாவிய மனிதநேயக் கண்ணோட்டம்

பெரியாரின் மனித நேயப் பணியில் இனத்தின் அடிப்படையில் எழுச்சி, இனத்தைப் பற்றிக் குறிப்பிடுவது ஒரு அடையாளம் கருதியே; முகவரிக்கு மட்டுமே. உலகளாவிய மனிதநேயத்தை வலியுறுத்தியதே அவரது பகுத்தறிவுக் கொள்கை.

இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகள் கொத்துக் கொத்தாய் படுகொலை செய்யப்பட்டு தமிழ் இனிமே அழிக்கப்பட்டு வருகிறது. அரசே பயங்கரவாதத்தைக் கையாண்டு வருகிறது.

இலங்கை அரசின் மனித விரோதப்போக்கினை உலகுக்கு தெரியப்படுத்தி, ராஜபக்சேவின் உண்மை யாக முகத்திரையைத் தோலுரித்துக் காட்டி, ஈழத் தமிழருக்கு நீதி கிடைத்திட, விடியல் வந்திட, டெசோ (TESO) அமைப்பினை மீண்டும் பலப் படுத்தி உலக நாடுகளின் வனத்தைக் கொண்டு வருவ தில் முக்கியமான பணி இப்பொழுது முன்னெடுக் கப்பட்டு வருகிறது. சொந்தநாட்டு மக்களையே வதைப்படுத்தும் அரசினை உலக நாடுகளின் பார்வையில் கூண்டில் ஏற்றி நியாயம் கிடைத்திடு வதில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மனித நேயமே மானிடம் எதிர்கொள்ளும் இன்னலுக்குத் தீர்வு. அந்த மனித நேயத்தைப் பரப்பி மானிடத்தை பேணுவதே பெரியாரியலின் மய்யக் கோட்பாடு. பெரியாரது சிந்தனை வழியில் தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல; பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகளவில் வாழும் தமிழர்கள் அனைவரும் பணி முடித்திட உறுதி எடுப்போம்; வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு தமிழர் தலைவர், தமிழ்ச் சான்றோர்களைப் பாராட்டி உரையாற்றினார்.

நன்றியுரையினை மும்பை திராவிடர் கழக தலைமைச் செயலாளர் ஜெ.வில்சன் கூறி நிகழ்ச்சி யினை நிறைவு செய்தார்.

பாராட்டு விழாவிற்கு மும்பைவாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக குடும்பம் குடும்பமாக வருகை தந்திருந்தனர். பெரும்பாலோர் இரண்டு தலை முறைக்கும் மேலாக மும்பையில் வாழ்ந்து வருப வர்கள். நடைபெற்ற பாராட்டு விழா மும்பைவாழ் தமிழ் மக்களுக்கு ஒரு திருவிழாவாக இருந்தது. நிகழ்ச்சி முடிவதற்கு இரவு 10 மணி ஆன வேளை யிலும் அனைவரும் அரங்கத்தில் இருந்தது தமிழ் மக்களின் ஈடுபாட்டைக் காட்டுவதாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான அய்.நா.தீர்மானம் வாக்களிக்க பிரதமர் நடவடிக்கை


புதுச்சேரி, பிப். 25- இலங்கைக்கு எதிராக அய்.நா. அவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்று மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

இது குறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ஏற்கெனவே அய்.நா.சபையில் நல்லெண்ணக் குழு இலங்கையில் பார்வையிட்டு ஒரு அறிக் கையையும் தாக்கல் செய்துள்ளது. அப்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

அய்.நா.சபையில் இலங்கை தொடர்பான விவாதம் மீண்டும் ஏப்ரல் மாதம் வர உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிராக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் உள்பட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி யுள்ளார் என்றார் அவர்.

திவியரஞ்சினியன் said...

வீரமணியர் கருணாநிதி இருந்த உண்ணாவிரதத்துக்கு குளிர்பானம் கொடுத்து "இலங்கையில் அனைத்தும் ஓய்ந்துவிட்டது" என்ற கருத்துக்களை திராவிட கழகம் நினைவுபடுத்தாது! ஆனால் தமிழர் மறக்கமாட்டார்கள்!

திவியரஞ்சினியன் said...

வீரமணியர் கருணாநிதி இருந்த உண்ணாவிரதத்துக்கு குளிர்பானம் கொடுத்து "இலங்கையில் அனைத்தும் ஓய்ந்துவிட்டது" என்ற கருத்துக்களை திராவிட கழகம் நினைவுபடுத்தாது! ஆனால் தமிழர் மறக்கமாட்டார்கள்!

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. 'விடுதலை", 26.2.1968

தமிழ் ஓவியா said...


மதுரையில் மன்றல்! கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்


மதுரை, நெல்லை, சிவகங்கை, மண்டலக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டத் தலைவர் செயலாளர்கள், நகரத் தலைவர் கள், செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு,

நம் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்கி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் சென்னையிலும், டிசம்பர் 30 திருச்சியிலும் மன்றல் 2012 என்ற மாபெரும் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவினை சிறப்பாக நடத்தினோம்.

இந்தப் பெருவிழாவில் பங்கெடுத்த தன் மூலம் பலர் தங்களது இணையரைத் தேர்ந்தெடுத்து நமது தலைமை நிலையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திரு மண நிலையத்தில் திருமணம் செய்து தமது வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக் கொண்டனர். மேலும் பலர் வரும் மாதங் களில் திருமணம் செய்வதற்காக தனது இணைகளைத் தேர்ந் தெடுத்துள்ளனர்.

தந்தை பெரியாரின் இலட்சியமான ஜாதி ஒழிப்புக் கொள் கையினை நாம் இந்த மன்றல் நிகழ்ச்சியின் மூலம் செவ்வனே நிறைவேற்றி வருகிறோம். இனி இந்த ஆண்டின் துவக்க நிகழ்ச்சியாக மன்றல் 2013 மதுரையில் வரும் மார்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜாதி உணர்வு மிகுந்திருப்பதாகச் சொல்லப்படும் மதுரையில் நமது ஆற்றல் மிக கழகத் தோழர்களின் துணையோடு ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவினை நடத்தும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

களங்கள் பல கண்ட திராவிடர் கழகத் தோழர்கள் ஜாதீயத்தை கலங்க வைக்க ஆற்ற வேண்டிய செயல்பாடுகள்.

1. நகர்ப்பகுதியிலும், நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நல்ல வண்ணம் சுவரெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்வது.

2. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் எல்லாம் பிளெக்ஸ் போர்டு வைப்பது.

3. தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வைக்கு படும்படியான இடங்களில் ஒட்டுவது.

4. மக்கள் ஆங்காங்கு கூடுகின்ற பகுதிகளிலெல்லாம் மன்றல் 2013 பற்றிய துண்டறிக்கைகளை வழங்குவது.

இந்த நான்கு பணிகளையும் நாம் ஒழுங்கான முறையில் செய்து முடித்தால் மன்றல் 2013இன் தொடக்கமே வெற்றிப் படிக்கட்டுகளை எண்ணத் துவங்கிவிடும். நம் நாட்டை ஜாதியற்ற பூமியாக மாற்றிக் காட்டும் மாபெரும் வாய்ப்பாக நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்த மன்றல் 2013 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா. இது சத்தமின்றி நடக்கும் புரட்சி. இப்புரட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே நம் பணி!

குறிப்பு: நிகழ்ச்சி ஏற்பாடு மட்டுமே இம்மூன்று மண்டலங்களைச் சேர்ந்தது. ஏனைய கழக மாவட்டத் தோழர்களும் விளம்பரங்கள் மூலம் மன்றலை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் எந்தப் பகுதியில் இருப்போரும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.

திருமகள், மாநில அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதைத் திருமணம் நிலையம்,
சென்னை - 600 007

தமிழ் ஓவியா said...


நம் இளைஞர்களின் நிலைநாம், நம் இளைஞர்களைத் தயா ரிக்க வேண்டும்; வாக்கு வங்கி அரசிய லுக்குத்தான் நம் இளைஞர்கள் இருக்கி றார்களா?

தந்தை பெரியார், காமராசர், திராவிடர் இயக்கம் இவர்களின் உழைப் பால் இன்று சிகாகோவிலும், லண்டனி லும் கணினிப் பொறியாளர்களாக கைநிறைய சம்பளம் பெறுபவர்களாக இருக்கின்றனரென்றால் அதற்கு எந்தத் தடியும் தாடியும் காரணம்?

இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து கிரிக்கெட் பார்க்க டிக்கெட் வாங்குகிற இளைஞர்கள் பல்வேறுப் போதை களுக்கு ஆட்பட்டுள்ளனர் நுகர்வுக் கலாச்சாரம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கிறார்கள். ஒரு வீதியில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தால், அந்தத் தீ உன் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? என்று தெரியாமல் இருக்கின்றனர்.

இந்த இளைஞர்களை சரியான பாதைக்குக் கொண்டு வரவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அதனைச் செய்வோம்.

- சென்னை பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (25.2.2013)

தமிழ் ஓவியா said...


தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்க! பேரா. சுப.வீரபாண்டியன் முழக்கம்!


சென்னை, மார்ச் 1- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட வர்கள் மீதான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சட் டத்தில் இடம் உண்டு என்றார் திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன். 25.2.2013 அன்று சென்னை பெரி யார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட் டதாவது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தமதுரையில் குறிப் பிட்டதாவது:-

நாகப்பட்டினத்தில், தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்து ஏட்டில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப் பட்டதை பார்த்த போது திடுக்கிட்டோம்.

அதே நேரத்தில் நமது ஆசிரியர் அவர்கள் சென் னையில் இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாமா என்று கருத்து கூற பத்தே நிமிடத்தில் இந்த கூட் டம் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நாட்டிலே தண் டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் வரவேற் கப்படுகிறார்கள் - வர வேற்கப் பட வேண்டிய வர்கள் தண்டிக்கப்படு கிறார்கள்.

பாலச்சந்திரன் படு கொலை செய்யப்பட்டுக் கிடந்த காட்சியைவிட அடுத்துத் தனக்கு என்ன நடக்கப் போகிறது என் பதை அறியாமல் தின் பண்டத்தைத் தின்று கொண்டிருக்கும். காட்சி தான் நம்மைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. ஒரு படம் உலகையே உலுக்கி எடுத்து விட்டது.

இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் டெசோ சார்பில் மார்ச் 7ஆம் தேதி மாநாடு - கருத் தரங்கம் நடைபெற உள் ளது. அது உலகம் முழு வதும் நம் உணர்வைக் கொண்டு சேர்க்கும்.

இரண்டு செய்திகள் கொலைக்காரன் ராஜ பக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் கூட்டாளிகள் என்பதற்காக நான்கு பேர் களுக்குத் தூக்கா.

இழுத்து மூடு நீதிமன்றத்தை!

தூக்குத் தண்ட னையே கூடாது என்று சொல்லுபவர்கள் நாம். கசாப் தூக்கிலிடப்பட் டது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டது ஏனென் றால் வெளியில் தெரிந் தால் சில மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றம் சென்று விடுவார்களாம்.

எப்படிப்பட்ட தந் திரம். அப்படியென்றால் மனித உரிமைகள் பற்றி இந்த அரசினர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! நீதிமன் றங்கள் இந்த நாட்டில் ஏன்? இழுத்து மூட வேண்டியதுதானே!

குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்தார் - அவரைத் தொடர்ந்து அப்துல் கலாம் இருந்தார் - அப் பொழுதெல்லாம் அவர் கள் கருணை மனுக் களை நிராகரிக்கவில்லை; தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்ல வில்லை.

பிரணாப் குடியரசுத் தலைவராக ஆனபின்...

பிரணாப் முகர்ஜி குடி யரசுத் தலைவரானபின் தூக்குத் தண்டனைகள் அவசர அவசரமாக நிறை வேற்றப்படு வது - ஏன்? தெரிந்து கொள்ளலாமா?

வீரப்பன் கூட்டாளி கள் என்பதற்காக தூக்குத் தண்டனையா? இங்கே அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நம் எதிரில் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்துள் ளார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லு வதெல்லாம் கலங்காதீர் கள்! கலங்காதீர்கள்!! உங் களுக்காகக் குரல் கொடுக் கக் கூடியவர்கள் நியாயம் கேட்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட் டவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட னர். இப்பொழுது அவர் களைத் தூக்கில் போட வேண்டும் என்று கூறுகி றார்கள். ஒரு குற்றத்திற் காக? இரண்டு தண்டனை களா? சட்டத்தில் அதற்கு இடமுண்டா?

இதுபோன்ற வழக்கு களை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியே கூறி இருக்கிறார். அதைத் தான் நாங்களும் வலி யுறுத்துகிறோம். இந்தக் கூட்டத்தின் வாயிலா கவும் வலியுறுத்துகிறோம்.

சு.சாமி ஓட்டம்

சு.சாமி ஒரு தொலைக் காட்சிப் பேட்டிக்கு வந்தார். அப்பொழுது அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உங் களை எப்பொழுது கைது செய்யப் போகிறார்கள் என்று கேட்டேன் ஏன்? என்னை எதற்குக் கைது செய்யவேண்டும் என்று கேட்டார். ஜெயின் கமிஷ னில் உங்கள் பெயரும், சந் திரசாமி பெயரும் குறிப் பிடப்பட்டுள்ளதே என்று சொன்னேன். உடனே நடையைக் கட்டிவிட் டார் என்று குறிப்பிட் டார்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...


தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!


60 ஆம் ஆண்டில் அடிவைக்கும் இளைஞர்களின் இதயத்துடிப்பாம்

தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!

இன்று மார்ச் 1 இல் 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அருமைத் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரிளமைத் திறத்தோடு சிறப்பான உழைப்பின் உருவமாகி, பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் கலைஞரின் தகுதிமிக்க அரசியல் வாரிசாகி, வாகைசூடிடும் கொள்கை வைரமாகும்! அடக்கம், அன்பு, கொண்ட கொள்கையில் உறுதி, லட்சோபலட்ச இளைஞர் பட்டாளத்தின் ஈடுஇணையற்ற தளநாயகன், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைப்பில் கலைஞர் போல் உயர்ந்து நிற்கிறார்!

மேயராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி, எதிர்கட்சி தலைவராகவும் ஆகி அவர் வகிக்கும் அரசியல் பொறுப்பு எதுவானாலும் தன் அடிகளை அளந்து வைத்து எதிரிகளையும் வீழ்த்தி வியக்கச் செய்யும் வித்தகர் அவர்!

ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடர் இயக்கங்களின் அரசியல் சரித்திரத்தில் அடுத்தகட்ட அத்தியாயமாய் பரிணமித்து ஜொலிக்கிறார்!

உலகத்தமிழர்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவராய் உலா வருகிறார்!

சிறைச்சாலைத் தியாகங்களாலும், சீலத்துடன் கூடிய பொதுவாழ்வின் தொண்டறத்தாலும் மிளிறும் இத்தொண்டர்களின் தோழன், இயக்கத்தின் அரண், கட்டுப்பாடு காத்து, தன் தலைவர் கிழித்த கோட்டை தாண்டாத கொள்கைக் கோமானாகி, நாளும் வளர்கிறார், கழகத்தையும் வளர்க்கிறார் - கண்ணியத்துடன் கடமையாற்றும் கழகக் கட்டுப்பாட்டின் இலக்கணமாம் அவர்!

வளர, வளர அவரிடம் ஆர்வம் குன்றாது இருப்பதைப் போலவே, அடக்கம் அவரை உயர்த்திடும் அற்புதக் கவசமாகி அவரது வளர்ச்சிக்கு அதுவே வெளிச்சமாகவும் உதவுகிறது!

60ஆம் ஆண்டு அகவையில் கூட இளைஞர் போன்று ஓடி ஆடும் ஓயாத தேனீயாகி, இவர் எப்படி சலிப்பின்றி இலட்சியப் பயணம் செல்கிறார் என்று சிலர் வியக்கக் கூடும்.

அந்த இரகசியம் ஊர் அறிந்தது; உலகறிந்தது. 95 வயதிலும் போராட்டக் களம் காணவே ஆயத்தமான தலைவர் தந்தை பெரியார்தம் ஈரோட்டுக் குருகுல இணையற்ற மாணவராம் 90 வயது இளைஞர் நம் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் ஆணை ஏற்று, செயல்படும் இவர் 60 வயது இளைஞர் என்பதுதான்! இவர் எல்லாம் பெற்று, எதிர்காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் வரலாற்று வைரவரிகள் எழுதிட, வளர்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

1.3.2013 சென்னை