Search This Blog

16.2.13

கும்பமேளாவா - கொலைகார பீடமா?


நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கப் போகிறதோ இந்தக் கும்பமேளா?

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்தக் கும்பமேளா - பாவங்களைப் போக்குவதில்லை; - அது சுத்த ஏமாற்று _ ஆனாலும் மனித உயிர்களை மட்டும் குடிக்கத் தவறுவதில்லை.

கங்கை நதியில் முழுக்குப் போட 12 கோடி மக்கள் கூடினார்களாம்.
மத்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ ஒரு பொறுப்பு இருக்குமானால் மக்கள் நல அரசு (Welfare State) என்று சொல் லப்படுவது உண்மையானால் ஒரு குறிப் பிட்ட இடத்தில் ஒரு நீர் நிலையில் 12 கோடி பேர் குளித்தால் அதன் நிலை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண் டாமா?

கடுமையான நோய்க்கு ஆளாவார்கள், தொற்று நோய்களுக்கும் பலியாவார்கள் என்ற அறிவியல் மனப்பான்மை எங்கே போயிற்று?

மக்களிடம் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டும் (51Ah)என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தால் போதுமா?

குடிமக்களுக்குக் கிளிப் பிள்ளைப் பாடம் புகட்டும் அரசு  அதன் அளவில் தன் கடமையைச் செய்திருக்க வேண் டாமா?

கங்கையைப்பற்றி இதற்கு முன் வந்துள்ள தகவல்களைக் கணக்கில் கொள்ள வேண்டாமா மத்திய _ மாநில அரசுகள்?

காசி நகரச் சாக்கடைகள் அத்தனை யும் சங்கமம் ஆவது கங்கையில்தான். 20 மில்லியன் காலன் சாக்கடை நாள் ஒன்றுக்குக் கலக்கிறதாம்!

காசி நகரில் 2 லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

பட்டுத் தொழிலில் பயன்படுத்தப்படும் அத்தனை ரசாயனக் கழிவுகளும் ரச வாதம் செய்வதும் இதே கங்கையில்தான்!

அது மட்டுமா? நாள் ஒன்றுக்கு 400-_க்கும் மேற்பட்ட பிணங்கள் அரை யும் குறையுமாக எரிக்கப்பட்டு கங்கையில் வீசி எறியப்படுகின்றன (செத்துப் போன அந்த  ஆத்மாக்கள் மோட்சம் போக வேண்டாமா? கங்கையில் கரைத்தால் தானே மோட்சத்தின் கதவுகள் திறக்கும்?)

மனிதன் மட்டும்தான் சொர்க்க வாசலைத் திறந்து உள்ளே போக வேண் டுமா? கோமாதா குல மாதாவாயிற்றே! அதற்காகத்தான் உயிரோடு இருக்கும் கிழட்டுப் பசுக்களை கங்கையில் தள்ளு கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு அவ்வாறு தள்ளப்படும் பசுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்பதாயிரமாம்!

1927, 1963, 1970ஆம் ஆண்டுகளில் இந்தப் புண்ணிய கங்கையால் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொற்று நோய்ப் புயலாக வெடித்துக் கிளம்பி பல்லா யிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து ஏப்பம் விட்டது! (ஈவு இரக்க மற்றதுதான் பக்தியோ!)

இந்தியாவின் பிற பகுதிகளில் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 94 என்றால், இந்த புனித கங்கை ஓடும் காசிப் பகுதியில் மட்டும் 134 என்ற கணக்காகும். பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்து 27 ஆலை களிலிருந்து அமோனியா, சயனைடு, நைட்ரேட் முதலிய நச்சுப் பொருள்கள் ஏராளமாகக் கலக்கின்றன.
கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற் சாலைகள் உள்ளன. இவற்றில் அத்தனைக் கழிவுகளும் இந்தக் கங்கையில்தான் கலக்கின்றன.

புண்ணிய நதிகள் இத்துடன் தன் சாதனையை முடித்துக் கொள்வதில்லை.
ஹிரித்துவார், ரிஷிகேஷ் காசி (வாரணாசி) ஆகிய புண்ணிய நதிக் கரைகளில் உள்ள இந்தக் கோயில் நகரங் கள் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயினைக் குத்தகை எடுத்துக் கொண்டுள்ளன.

சுவிட்சர்லாந்து அரசின் உதவியுடன் ஆய்வுக் குழு ஒன்று இந்தக் கோயில் நகரங்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்ட போது கிடைத்த தகவல்கள் இவை.

கருமங்களைத் தொலைப்பதற்காக புண்ணிய நதிகளுக்கும், கோயில்களுக் கும் காலத்தையும், பொருளையும் செலவழித்துச் செல்லும் மனிதர்கள்தான் - பக்தர்கள்தான் இந்தக் கசுமாலக் கருமங்களைச் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்கள்.

தி பயனீர் (21.7.1997) ஏடு இந்த வண்ட வாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றியுள்ளது.

ஒரு கோயிலுக்கோ, குளத்துக்கோ, நதிக்கோ முக்கியத்துவத்தை உண்டாக்க வேண்டுமானால் சில அற்புதங்களைத் தலப் புராணங்களாகக் கட்டி விட வேண்டும்.

அந்த வகையில் கட்டி விடப்பட்டுள்ள மகத்துவங்கள் மண்ணையும், விண் ணையும் தொடும்.

தினமலரிலிருந்தே (4.11.2002) இதோ ஓர் எடுத்துக்காட்டு:

கலிங்க நாட்டில் வாகீசர் என்ற பிராமணர் இருந்தார். இவர் வேதம் படிக்கவில்லை. ஆச்சாரங்களை பின்பற்றுவதில்லை. உப்பு, எண்ணெய் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்தார். சாஸ்திரங்களில் கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களை இவர் தைரியமாகச் செய்வார். பாப காரியங்கள் செய்ய அஞ்சுவதே இல்லை. இப்படிப்பட்டவர் ஒரு நாள் காட்டிற்குச் சென்றபோது புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இவரது உடலின் மாமிசங்களை கழுகுகள் தின்றன. அதில் ஒரு கழுகு அவரின் கணுக்கால் கட்டு எலும்பை மூக்கினால் தூக்கிக் கொண்டு சென்றது. காசி நகரில் கங்கை நதியைக் கடந்து செல்லும்போது வேறு கழுகுகளுக்கும், இந்த கழுகிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது வாகீசரின் உடல் எலும்பு கங்கை நதியில் விழுந்துவிட்டது.
அதுவரை நரக லோகத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த வாகீசருக்கு, கங்கையில்  அவரின் உடல் எலும்பு விழுந்ததால் பரிகாரம் ஆகிவிட்டது. உடன் எமதர்ம மகாராஜா சித்ரகுப்தரைக் கூப்பிட்டு வாகீசரின் எலும்பு கங்கையில் விழுந்ததால், அவரின் பாபங்கள் விலகி விட்டன. அதனால், இவரை சொர்க்கலோகத்திற்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவாயாக என தெரிவித்தார். அதனால் காசியில் தெரிந்தோ தெரியாமலோ அஸ்தி போடப் பட்டால் பாபம் விலகுகிறது. அதே நேரத் தில் முறையான சாஸ்திர சம்பிரதா யங்களுடன் அஸ்தி கரைக்கப்பட்டால், அந்த அஸ்தியின் சொந்தக்காரருக்கு புண்ணியலோகம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் காசியில் அஸ்தியை கரைப்பது புண்ணியம் என்று கூறப்படுகிறது. (தினமலர் 4.11.2002)

மேற்கண்ட தகவல்கள் எதைத் தெரி விக்கின்றன? எந்தக் கொடிய பாவங் களைச் செய்தாலும்,  கங்கையில் மூழ்கி னால் அல்லது இறந்தபின் அவனது உடலின் எந்தப் பாகமாவது கங்கையில் விழுந்தால் புண்ணியம் கிடைக்குமாம். அப்படி என்றால் பாவங்கள் செய்ய யார் பயப்படுவார்கள்? பாவம் செய்யத் தூண்டுவதுதான் மதமா?

இதனால் ஒழுக்கம் வளருமா? அறிவு வளருமா? அழியுமா? சிந்திப்பீர்!

சங்கராச்சாரியார்களும் சோ ராமசாமி களும் குருமூர்த்திகளும் முரளிமனோகர் ஜோஷிகளும் அத்வானிகளும், மோடிகளும் இந்த மூடத்தனத்தைக் கண்களை மூடி மறைப்பார்கள். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் என்றால் அடேயப்பா எவ்வளவு வித்தாரம் பேசுவார்கள்!

ஆயிரம்ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கி இருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும், அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷிர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது  அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு இரவுகளும், பன்னிரெண்டு நாட்களும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்தபானம் சொட்டி பூலோகத் திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும், அதனால் மகா கும்பமேளா ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கதையை கடுகத்தனை மூளை உள்ள மாங்காய் மடையனாவது ஏற் பானா? பாற்கடல் என்ற ஒன்று இருக்கிறதா?)

பாற்கடல், தயிர்க் கடல், மோர்க் கடல், வெண்ணெய்க் கடல், நெய்க் கடல் - இவை எல்லாம் இருந்தால் மக்களுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட வழியில்லையே!

இப்படிப்பட்ட ஊத்தை நாற்றம் எடுக்கும் அநாகரிகக் காட்டுவிலங்காண்டிக் கற்பனைக் கசுமாலங்களை நம்பி 12 கோடி மக்கள் குளிக்கச் செல்கிறார்கள் என்றால் எவ்வளவுக் கேவலம்? (இதுதான் பாரத புண்ணிய பூமியாம்).
வெட்கக்கேட்டுக்குப் பிறந்த விவஸ்தையில்லாக் குப்பைக்குப் பெயர்தான் அர்த்தமுள்ள இந்து மதமோ!

சரி, முழுக்குப் போடத்தான் போகிறார்களே - உயிருக்காவது உத்தரவாதம் உண்டா?

இவ்வாண்டு கும்பமேளாவுக்குச் சென்றோர் 36 பேர் பலியாகியுள்ளனராம் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர்கள் காணவில்லையாம்!

இப்பொழுது மட்டுமா? 2003ஆம் ஆண்டு  நடைபெற்ற கும்பமேளா வில் 28 பெண்களும், 11 ஆண்களும் நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக மாண்டு போனார்கள்.

1954இல் கும்பமேளாவிலும் சாவின் எண்ணிக்கை நூறைத்தாண்டியது.
கோயில் திருவிழாக்கள் என்று சொல்லி, மக்கள் திரண்டு மரணம் அடைவது ஒரு தொடர் கதையாகவே உள்ளது.

எடுத்துக்காட்டுக்குச் சில:

14.4.1986 - அரித்துவாரில் பலி 46 பேர்.
9.11.1986 - அயோத்திராமன் கோயில் நெரிசலில் பலி 32 பேர்.
18.2.1992   - கும்பகோணம் மகாமகத்தில் 60 பேர் சாவு (முதல் அமைச்சர் ஜெயலலிதா குளிக்கச் சென்றபோது)
15.7.1996 - உஜ்ஜெய்னி மற்றும் அரித்துவார் நெரிசலில் சாவு 60.
27.8.2003 - நாசிக் கோதாவரி கும்பமேளா கூட்டத்தில் நசுங்கிச் செத்தோர் -41. படுகாயம் 150.
25.1.2005 - மராட்டிய மாநிலம் சதாராவில் குலபாய் கோயில் நெரிசலில் 340 பேர் பரிதாப மரணம்.
4.11.2006 - பூரி ஜெகந்நாதர் கோயில் விழா நெரிசலில் மரணம் 4 - படுகாயம் - 24
13.8.2007 - ஜார்க்கண்ட் வைத்தியநாத் கோயில் நெரிசலில் சாவு 11, காயம் - 30
14.10.2007 - வதோரா அருகே மாகாளி கோயில் நெரிசலில் மரணம் 6, காயம் 12.
3.1.2008 - விஜயவாடா அருகே கனகதுர்கா கோயில் விழாவில் நசுக்கப்பட்டுச் செத்தோர் - 6 -காயம் - 12.
27.3.2008  - மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் கோயில் விழாவில் செத்தோர் 9, காயம் - 10.
4.7.2008 -பூரி ரத யாத்திரை நெரிசலில் உயிரிழந்தோர் 6  காயம் - 10
3.8.2008 - இமாசலப்பிரதேசம் பிலாஸ்பூர் - மலைக்கோயில் விழா நெரிசலில் சாவு 150.

கடவுளை நம்பிச் சென்றோர் காவு கொடுக்கப்பட்டதுதான் மிச்சம்.
இதற்குப் பிறகும் இதுபோன்ற மூடத்தன விழாக்கள் நடப்பது எப்படி? தன்னை நம்பிவந்த பக்தர்களையே காப்பாற்ற வக்கில்லாத வெத்து வெட்டுக்கு பெயர்தான் பகவானா என்று ஒரே ஒரு நொடி, ஒரு கடுகு மூக்கு அளவுக்காவது சிந்தித்தால் அந்தத் தருமணமே மூடத்தனம் என்ற கும்மிருட்டிலிருந்து வெளிச்சப் பாதைக்கு அடி எடுத்து வைத்து - உயிர் பிழைப்பார்களே! எங்கள் உறவினர்கள்; 

ஏ, பகவானே உன்னை நம்பி வந்தார்கள் - அவர்களைக் காப்பாற்றத் தவறி விட்டாய் நீ - இதற்கு நீதான் பொறுப்பு இறைவனே என்று எந்தப் பக்தராவது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுப்பார்களா? எங்கே பார்ப்போம்!

அல்லது இந்து மதம் என்றால் சங்கராச்சாரியார் மீதும், கிறித்துவர் என்றால் போப்மீதும் முசுலிம் என்றால் டில்லி இமாம்மீதும் வழக்குத் தொடுத்தால் என்ன?

கூடுதல் தகவல்: (Tail Piece) உலகிலேயே அதிகம் அசுத்தமான நதி (Most Polluted River) கங்கை என்று உலக சுகாதார நிறுவனமே (Who)    தெரிவித்துள்ளது.

               ----------------------------மின்சாரம் அவர்கள் 16-2-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

47 comments:

தமிழ் ஓவியா said...


மனம் புண்படலாமா?


-பேராசிரியர் அ. அய்யாசாமி

எங்கள் மனம் புண்பட்டு விட்டது, எங்கள் மனத்தைப் புண் படுத்தி விட்டார் என்ற வாதங்களும் குற்றச்சாட்டுகளும் வர வர அதி கரித்து வருகின்றன என்பது ஒரு வியக்க வைக்கும் உண்மை. மனத்தைப் புண்படுத்துவது என்பது பார்க்கப் போனால் மனிதன் சிந்திக்கத் தொடங்கியவுடனே நிகழத் தொடங்கியிருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் ஒவ்வொருவரும் தனித் தனியாகவோ, குழுக்களாகவோ சிந்தித்த காலத்தில் ஒருவருடைய, அல்லது ஒரு குழுவினருடைய சிந் தனை அல்லது எண்ணம், வேறொ ருவரின் சிந்தனைக்கோ, உணர்வு களுக்கோ முரண்பட்டதாக இருந் தால் அது அவர்களைப் புண்படுத் தியிருக்கக் கூடும். வரலாற்றில் இதற்கு எத்தனையோ உதாரணங்கள் பார்க்கலாம்.

தமிழ் ஓவியா said...

நமக்குத் தெரிந்து முதலாவது சுதந்திரச் சிந்தனையாளன் சாக்ரட் டீஸ் அவன் புத்தகம் எதுவும் எழுத வில்லை. அவனை எப்போதும் இளை ஞர்கள் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களோடு நடந்துகொண்டே பேசிக் கொண்டிருப்பான் சாக்ரட் டீஸ். அவ்வாறு சாக்ரடீஸ் உதிர்த்த கருத்துக்கள் புதுமையானவையாகவும் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடியவை யாகவும் கேட்பவர் மனத்தை ஈர்ப் பனவாகவும் இருந்ததால் அவ்விளை ஞர்கள் அவனது சொற்களை அள்ளி அள்ளி விழுங்கினார்கள்.

ஆனால், அதே கருத்துக்கள் அந்த நாட்டின் பிரபுக்களை அஞ்ச வைத் தன. அவை பரவினால் தங்களின் ஆதிக்கத்துக்கும் மேலாண்மைக்கும் ஆபத்து என்று கருதினார்கள். சாக்ரட்டீசை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரணை என்ற சடங்கை நடத்தி அவனுக்கு நஞ்சூட்டிக் கொன்றார்கள். ஆனால் வரலாறு சாக்ரட்டீஸின் கருத்துக் களைத்தான் போற்றிப் பாதுகாத்து வருகிறதே தவிர, அவனுடைய எதிராளிகளின் கருத்து என்ன என்பது குறித்து எவரும் கவலைப் படுவதில்லை. மேற்கத்தியத் தத்துவ வரலாறு சாக்ரட்டீசிடமிருந்துதான் தொடங்குகிறது என்னும் அளவுக்குத் தத்துவம் சிந்தனைகளுக்கு வித்திட் டவன் சாக்ரட்டீஸ்.

தமிழ் ஓவியா said...


அடுத்து அதேமாதிரி மக்களின் மனங்களைப் புண்படுத்துகிறார் என்று மக்களின் எதிர்ப்புக்குப் பாத் திரமானவர் ஏசுநாதர். அவர் கட வுளை மறுக்கவில்லை, மதத்தையும் மறுக்கவில்லை. கடவுள் பெயரால் செய்யப்படும் தீமைகளைக் கடிந்தார். அனைவருக்கும் அன்பு காட்டுவதே உண்மையான வழிபாடு என்று எடுத்தியம்பினார். மதத்தில் படிந் திருந்த அழுக்கைத் துடைத்தெறியச் சொன்னார். சாக்ரட்டீஸ் போல ஒரிடத்திலேயே நின்று விடாமல் நாடு முழுவதும் நடந்து சென்று தம் கருத்துக்களைப் பரப்புரை செய்தார். யூதர்களுக்கு அது பொறுக்கவில்லை. அவரைக் கண்மண் தெரியாமல் எதிர்த்தார்கள். சிலுவையில் அறையச் சொன்னார்கள். ஏசுநாதரை விசா ரணை செய்த ரோமானிய சாம் ராஜ்யம் பிரதிநிதி பிலாத்து ஏசுநாதர் குற்றம் செய்யவில்லை என்று மனத்திற்குள் உணர்ந்தான் இருந் தாலும் அங்குக் கூடியிருந்த இரத்த வெறிக் கும்பலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவருக்கு மரண தண்டனை விதித்தான். அவரை எப்படியேனும் காப்பாற்ற இயலுமா என்று எண்ணமிட்ட அவனுக்குக் கை கொடுத்தது யூதர்களின் திருநாள். அன்று சிலுவையில் அறையப்படுவ தற்காகக் காத்திருக்கும் கைதிகளில் ஒருவருக்கு மன்னிப்பு வழங்க அவனுக்கு உரிமை இருந்தது. யாரை விடுவிக்கலாம் என்று கூடியிருந்த மக்களைக் கேட்டான். ஆனால் அவர்கள் ஏசுநாதரின் பெயரைக் கூறவில்லை. அவரோடு சிறையில் இருந்த பாரப்பாஸ் என்ற கொள் ளைக்காரனின் பெயரைக் கூறி னார்கள். ஏசுநாதர் அந்த அளவு அவர்களின் மனத்தைப் புண்படுத் தியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

சூரியன் பூமியைச் சுற்றவில்லை, பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. அத்துடன் கோள்களும் பூமியைச் சுற்றுகின்றன என்ற உண்மைகளைக் கண்டறிந்தார். கோப்பர் நிக்கஸ் என்ற அறிஞர் அதை வெளியுலகுக்கு அறிவிக்க அவருக்குத் துணிவில்லை. மக்களின் நம்பிக்கைக்கு மாறான உண்மைகளைக் கூறி அவர்களின் மனத்தைப் புண்படுத்த அவர் தயாரில்லை. அதனால் எத்தகைய விளைவுகள் நேரும் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எனவே அவருடைய கருத்துக்களை எழுதி வைத்து விட்டு மரணம் வரை ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. அவர் இறந்த பின்புதான் அவருடைய குறிப்புகளைப் படித்துப் பார்த்தார்கள். அவர் சொன்னவற்றை மீண்டும் சோதித்துப் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டார் கலிலியோ என்னும் அறிவியலாளர். அத்தோடு அதுவரை மக்கள் உண்மையென்று நம்பியிருந்த பல அறிவியல் கருத்துக்கள் தவறானவை என்று முறைப்படி பரிசோதித்து அறிந்தபின்னர். அவர் கண்ட றிந்தவற்றை வெளியிட்டார். அது மக்களை வெகுண்டெழ வைத்தது. காலம் காலமாக நாங்கள் நம்பிக் கொண்டிருந்தவற்றை மறுப்பதா? என்றார்கள். மக்களின் எதிர்ப்பைக் கண்டு கலிலியோ அஞ்சினார். தான் சொன்னவை அனைத்தும் தவறு என்று பைபிளின் மேல் அடித்துச் சத்தியம் செய்து உயிரைக் காப் பாற்றிக் கொண்டார். அவருடைய காலத்தில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தியவர் ஜியார்டானோ புரூனோ என்ற மற்றும் ஒரு அறி வியலாளர் அவரைச் சிறையில் அடைத்தார்கள். தான் சொன்னவை அனைத்தும் தவறு என்று வாக்குமூலம் கொடுக்கு மாறு அவரை வற்புறுத் தினார்கள். ஆனால் உண்மையை மறுத்துப் பேச அவருக்கு மனம் ஒப்பவில்லை. மரண தண்டனையை மகிழ்ச் சியுடன் ஏற்றுக் கொண் டார்.

தமிழ் ஓவியா said...

சமயத்துறையையே எடுத்துக்கொண்டாலும் ஏசுநாதருக்குச் சில நூற்றாண்டுகள் கழித்து வந்த மகமது நபியும் அதே இன்னல்களுக்கு ஆளானார் சமயத்தின் பெயராலும் சம்பிரதாயத்தின் பெயராலும் நடைபெற்று வந்த தவறுகளைச் சுட்டிக் காட்டியதைத் தவிர அவர் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. அது மற்றவர்களை உறுத்தியது. மகமது நபியை எதிர்த்துப் போருக்கு ஆயத்தமானார்கள். அவரை ஆதரித்தவர்களைக் கொலை செய் தார்கள். அவரையும் சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாக்கினார்கள். மக்காவிலிருந்து அவர் மதினா சென்று வாழ்ந்தது அவரது எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தான். ஆனால் மகமது நபியின் கருத் துக்கள் நிலைத்து நிற்கின்றன. உல கத்தில் பல நாடுகளிலும் அவரைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவரை இறைத் தூதர் என்று தொழுகிறார்கள்.
புதுமையான சிந்தனையாளர், புரட்சிகரமான கருத்துக்களை விதைத்து உலகத்துச் சிந்தனையாள ருக்கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த வால்டேர் எத்தனை இன் னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்? எப்படியெல்லாம் வசைபாடப்பட் டார்? வாழ்ந்தபோது மட்டுமல்ல. அவர் மறைந்தபோதுகூட அவரைப் புதைப்பதற்கு இடம் கிடைக்காமல் அவரது சவத்தை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார்கள். அவரது கருத்துக்கள் சாகா வரம் பெற்று இன்றுவரை அவருடைய நூல்கள் உலகெங்கணும் படிக்கப்படுகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன. அதாவது அவரது கருத்துக்கள் பல சிந்தனையாளர்களை உருவாக்கு கின்றன. ஆனால் அவரை எதிர்த் தார்களே, அவர்களின் கருத்துக்கள் இருக்கட்டும், பெயர்களாவது இன்று யாருக்காவது தெரியுமா?

தமிழ் ஓவியா said...

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தஅறிவியலாளர் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பூகம்பமாக மாறி ஐரோப்பாவையே இரு கூறாக்கியது. பழைமைவாதிகள் ஒருபுறம், பரிணா மக் கொள்கை ஆதரவாளர்கள் மறுபுறம். கிறிஸ்தவ சமயத்தையே குலைத்துவிட்டது என்று பாதிரியார்கள் தோள்தட்டிக் கிளம்பினார்கள். இன்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டி ருக்கும் பகுத்தறிவுவாதக் கொள்கை டார்வின் கண்டுபிடிப்பின் காரண மாக உருவானதுதான். இன்று டார் வின் எதிர்ப்பாளர்கள் மூலையில் முடங்கிப் போய் விட்டார்கள் என்பது வரலாறு.

இந்தியாவை எடுத்துக் கொண் டால் அங்கும் இதே கதைதான் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரமம் அதை ஆதரிக்கும் இரக்கமற்ற மனுதர்மம், மந்தை மந்தையாக ஆடு, மாடு எருமைகளை நெருப்பிலிட்டுப் பொசுக்கும் வேள் விகள் என்ற சாத்திர சம்பிரதாய நடைமுறைகளைக் கண்டிக்க வந்த வர்கள் கவுதம புத்தரும் வர்த்தமான மகாவீரரும் அவர்கள் எத்தனை துன்பங்களுக்கு ஆளானார்கள்? அவர்களை ஆதரித்தவர்கள் எத் தனை பேர் துன்புறுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள்? ஆனால் தங்கள் கொள்கைகள் சரியானவை, மனித குலத்தை மேம்படுத்தக் கூடியவை என்று உறுதிப்பட நம்பிய அவர்கள் எதிர்ப்புக்கு கலங்காமல் ஊர் ஊராகச் சென்று மக்களைத் திருத்தி நல்வழிப்படுத்தினார்கள். அவர்களை விரட்டியடித்த சநாதன தர்மம் கொஞ்சமாவது தன்னிலையில் மாற்றம் பெற்றது. அவர்களின் உயிர் இரக்கக் கொள்கை இன்றைக்கு நம் நாட்டில் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய திருவருட் பிரகாச வள்ள லார் சாதியும் மதமும் சமயமும் பொய் என உரத்து முழங்கினார். சாத்திர புராண இதிகாசங்களைக் குப்பை என ஒதுக்கினார். கடவுளர் உருவங்கள் மனிதன் படைத்தவை என்றார். இறைவனைச் சோதி வடிவத்தில் வழிபடுக என்றார். அன்றைக்குச் சைவ சமயத்திற்குப் பொறுப்பாக இருந்த உயர் சாதிக் காரர்கள் அவருக்கு எதிர்ப்பாகக் குரல் கொடுத்தார்கள். இறைவனைப் பாட அவருக்கு உரிமை இல்லை என்றார்கள். அவர் பாடியது அருட்பா அல்ல மருட்பா என்று வசை பாடினார்கள். இன்று? வள்ள லார் சைவ சமய அருளாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். சைவப் பெருமக்கள் திருவருட்பாவைக் கொண்டாடுகிறார்கள்.

அதற்குப் பின் வந்த காந்தியார் சமயத்தை எதிர்க்கவில்லை. சாதி முறையை எதிர்க்கவில்லை. ராம ராம என்று உச்சரித்த வண்ணம் இருந்தார். சமயத்திற்கு எதிராக அவர் செய்ததெல்லாம் தீண்டாமை கூடாது என்றதுதான். அதற்கே அவருக்கு எவ்வளவு எதிர்ப்பு? எத்தனை வசைபாடல்? ஆனால் அவரது கொள்கைகள் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டனவே. தீண்டாமை ஒழிப்பு சட்டமாக்கப் பட்டு விட்டது. தலித்களுக்கு இடஒதுக்கீடு, தனித் தொகுதிகள் எல்லாம் அவரது சொல்படி நடப்பவைதானே?

தந்தை பெரியார் சாதி, சமயம், சம்பிரதாயம், கடவுள் என்று எல்லாவற்றையும் மூர்க்கமாக எதிர்த்தபோது அனைவரும் முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஓய்வு ஒழிவில்லாமல் ஊர் ஊராகச் சென்று அவர் கருத்துரை வழங்கிய போது கல்லால் அடித்தார்கள், சொல்லால் வசை பாடினார்கள். செருப்பை வீசினார்கள். அதேசமயம் பல்லாயிரக்கணக்கில் கூடி அவரது உரைகளைச் செவிமடுத்தார்கள். இன்றைக்கு அவருக்கு மனத்தளவில் நன்றி சொல்லாதவர் ஒருவரும் இல்லை என்னும் அளவு அவர் புகழ் உயர்ந்துள்ளது. அவருடைய கருத் துக்கள் பலவும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

எனவே, வரலாறு நமக்குக் காட் டும் பாடம் புண்படுத்தும் கருத்துக் களே சமுதாயத்தைப் பண்படுத்து கின்றன என்பதே. வரலாற்று அறிவு பெருகி, மக்களாட்சித் தத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனிதநேயம், வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் எந்தக் கருத்தானாலும் அதனைப் பொறுமை யாகப் பரிசீலித்துக் கருத்தைக் கருத் தால் மட்டுமே எதிர் கொள்ளும் பக் குவத்தை வளர்த்துக் கொள்வோமாக.

தமிழ் ஓவியா said...


அய்ரோப்பாவில் பெரியார்


அங்கு ரஷ்யாவில் 2000-_3000 ஜனங்கள் சந்தோஷமாக சௌக் கியமாக போதிய சுகாதாரத்தோடு ஒரே கட்டிடத்தில் நிரம்பி வாழ்வதைப் பார்த்தேன்.

இங்கு நம்முடைய ஒரு வீட்டை என்ன அனவாசியமாக 3,4 அடுக்கு மெத்தைகளுடன் கட் டுகிறோம்.

அதில் பகுதி பாகம் நாம் உப யோகப்படுத்துவது கூட இல்லை.

அப்படி உபயோகப்படுத்தும் பாகத்தில் சுத்தம் சுகாதாரம் இருப்பதில்லை.

நம்முடைய வீட்டை நிரப்பு வது ஒடிந்து போன மத்து கெட் டுப் போன நாற்காலி முறம், கூடை, கிழிந்துபோன பாயும், அவிந்து போன குப்பைகளும்தான்.

இந்த முட்டாள்தனத்திற் காகவா நாம் பெரும் வீடு வைத்துக் கொண்டு வாழுகிறோம்? என்று யோசித்துப் பாருங்கள்.

அங்கு எப்படி வீட்டு வசதி முறை இருக்கின்றதென கேட்க லாம்.

சர்வாதிகாரியான ஸ்டாலி னுக்கும் சாதாரண தொழிலாளிக்கும் சுமார் 10, 16 அடிக்கும் உள்ள ஓர் அளவு இடந்தான்.

அங்கு ஒரே மாதிரி சாதிக்காய் கட்டிலும், மேஜையும் சிறப்பாக இருக்கும்.

அங்கு ஒரு சிறு 4- ஜ் 4 உள்ள கக்கூசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உபயோகப்படுகிறது.

தோட்டியே கிடையாது.

அது கக்கூஸா என்று நாம் சந்தேகப்பட்டே போய் விடுவோம்.

அவ்வளவு சுத்தம்.

அதில் எவ்வித வாடையும் இருக்காது. அழகு ஒழுங்கான முறை எல்லாம் சேர்ந்திருக்கிறது.

இங்கு ஒரு வீட்டுக்கு 5 பேருக்கு ஒரு கக்கூசாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு இடம்?

அப்படியிருந்தும் என்ன சகிக்க முடியாத சுகாதாரக் குறைவு?

இங்கு 300 பேர்களுக்கு ஒரு தோட்டி வீதம் இருப்பானென்று நம்புகிறேன்.

இந்த 30,000 பேர்கள் உள்ள ஈரோட்டில் எத்தனை தோட்டிகள்?

எத்தனை வீடு, தெருக் கூட்டு கிறவர்கள்?

எத்தனை வேலைக்காரர்கள்?

இப்படியிருந்தும் இங்கு அசுத்தம் அசுத்தந்தானே என்றும் அதி அக் கிரமமாக இருக் கிறது!

அங்கு கக்கூசுக் குப் பக்கத்திலேயே படுக்கை அறை இருக்கும்.

அங்குள்ள முறை கஷ்டத்திற்கே இடமில்லை வழியுமில்லை.

ஒவ்வொரு கூட்டுப் பண்ணை யிருக்கும் இடத்திலும், ஒவ்வொரு தொழிற்சாலை ஒரு நல்ல (Park) பார்க், சினிமா, விளையாட்டு இடம் டிராமா சுகாதார வசதி சாலை எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள 5000 பேருக்கும் 1000 கூட் டுறவு பேருக்கும் முறைப்படி ஒழுங்கு படுத்தப்பட்டு சம்பளம் ஒரே அளவுதான் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேல்கொண்ட மீதியை அக் கூட்டப் பொது ஜனங்களுடைய நன்மைக்கு உபயோகப்படுத்து கிறார்கள்.

- க. பழநிசாமி,
தெ. புதுப்பட்டி (கி.அ.) 624-705
கன்னிவாடி (து.அ) திண்டுக்கல் கோட்டகை

பெரியார் நூலில் 172ஆம் பக்கத்தில் இருப்பது...

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!

Googleஇல் நமக்கு தேவையானதை எளிதாகத் தேடுவது எப்படி?

Google நாம் அதிகமாக பயன் படுத்தும் தேடுதல் இயந்திரம். இதில் நாம் தேடும்போது நமக்கு தேவை இல்லாத பல விசயங்களும் வர வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்த்து நமக்கு தேவை யானதை மட்டும் தேடுவது எப்படி என பார்ப்போம் வாருங்கள். நான் கொடுக்கும் சில யோசனைகளைப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் சொல்லுங்கள்.

1.Use Of '+' sign:

இந்த +sign அய் பயன்படுத்து வதால் நாம் ஒரு சொற்றொடரை தரும்போது அதில் எந்த வார்த் தைக்கு முன் + அய் தருகிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் தேடுதலில் கிடைக்கும்.

உதாரணம்: Reviews of +DELL and ACER இதில் உங்களுக்கு வரும் ரிசல்ட்-_ல் Reviews அல்லது ACER உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக DELL இடம்பெறும்.

2. Use Of '-' sign:

இது மேலே உள்ள ‘+’ sign க்கு எதிரான வேலையை செய்யும். அதாவது ‘-’ sign உள்ள வார்த்தை உங்கள் தேடலில் இடம்பெறாது.

3. Use Of '~' sign:

இந்த '~' sign அய் ஒரு வார்த் தைக்கு முன் சேர்த்தால் அதன் இணை பொருட் சொல்லையும் (synonyms) தரும்.

4. Search a particular site:

ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவலைத் தேட விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம்

Search: site:www.xyz.com abc

எ.கா. site: viduthalai.in

5. Define a word:

ஒரு சொல்லின் பொருள் (Definition) அறிய இந்த முறையை பயன்படுத்தவும்.
search: define:abc
எ.கா: :Search:
define: Computer

6. Search for exact phrase:

குறிப்பிட்ட ஒரு சொற்றொ டரைத் தேட இது உதவும். Search: "contact us"

7. Using the wild card '*':

இது ஒரு சொல்லின் முழுமை யான வார்த்தை தெரியவில்லை என்றால் பயன்படுத்தவும். Search: friend*
இப்போது உங்களுக்கு ,friend, friends, friendship, போன்ற வார்த்தைகளைத் தேடித் தரும்.

8. Using the '?' sign:

ஒரு வார்த்தைக்கு முழு spelling தெரியாத போது பயன்படுத்தலாம்.

Search: :fri??d
இப்போது உங்களுக்கு மேலே உள்ள spelling உடன் தொடர்பு உடைய வார்த்தைகளைக் காட்+/டும்.

9. Use of boolean operators :
AND,OR,NOT

இவைதான் boolean operators. . இவற்றை இரண்டு வார்த்தைகளுக்கு இடை யில் சேர்ப்பதால் அந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு link இல் தரும்

உதாரணம் ::Search: swim OR float : இங்கு, AND, OR, NOT போன்றவற்றை Capital letter ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.

-பிரபு கிருஷ்ணா (கற்போம்)

தமிழ் ஓவியா said...


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலை யாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே.மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழு மல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத் தானே செய்து கொள்கிறான்.''-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.

உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று புவி வெப்பமடைதல். புவி வெப்பமடைதல் பிரச்சினை இன்று பூதாகரமாகி வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, நோய்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம். சுற்றுச்சூழல் சீர்கேடும், புவி வெப்பமடைதலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள சிக்கல்கள். சுற்றுச்சூழலை பாது காக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை.ஒர் அறையைவிட்டு வெளியேறும்போது, அந்த அறையில் உள்ள விளக்குகள், ஃபேன் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் அணைப்பதில் இருந்து இந்த நடவடிக்கைகளை நாம் தொடங்கலாம்.

அதிர்ச்சியைக் குறைக்க...

மின்சாதனங்கள் கீழ்க்கண்ட வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை செலவிடுகின்றன:

ஏ.சி. பெட்டி ஒரு மணி நேரம் இயங்க, ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்க, பிரிட்ஜ் 7 மணி நேரம் இயங்க, டிவி பெட்டி 10 மணி நேரம் இயங்க, ஃபேன் 15 மணி நேரம் ஓட, விளக்கு 29 மணி நேரம் எரிந்தால்.

ஹீட்டர், வாஷிங் மிஷின், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை அதிக மின்சாரத்தை செலவு செய்கின்றன. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்மைப் படுத்தும் கருவிகள், ஹீட்டர்களை குறைந்த அளவீடுகளில் வைத்து பயன்படுத்துங்கள். ஒரு டிகிரி செல்சியஸ் குறைத்தால்கூட பெரு மளவு மின்சாரம் சேமிக்கப்படும்.

டிவி, டிவிடி பிளேயர் போன்ற எந்த நவீன மின்சாதனத்தையும் 'ஸ்டாண்ட்பை' நிலையில் வைக்க வேண்டாம். இதனால் மின்சாரம் தேவையின்றி விரயமாகும். பயன் படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்து வைக் கலாம். தேவைப்படாத மின் சாதனங்களை எப்பொழுதும் அணைத்துவிட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

குண்டு பல்புகளில் 90 சதவிகித மின்சக்தி வெப்பமாக மாறி வீணா கிறது. அதேநேரம், சாதாரண குண்டு பல்பு எரிய செலவிடும் மின்சக்தியில் 20 சதவிகிதம் மட்டுமே சி.எப்.எல். விளக்கு எரியத் தேவைப்படுகிறது. எனவே, குண்டு பல்புகளை மாற்றி விட்டு, சி.எப்.எல். விளக்குகளை பொருத்தினால் மின்செலவு குறையும், மின்கட்டணமும் குறையும். சி.எப்.எல். விளக்கு ஒன்று அதன் வாழ்நாளில் 7,000 மணி நேரம் எரியக்கூடியது.

மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்யும் மின்சாதனங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். மின்சாதனங்களை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் மின்செலவை குறைக்கலாம்.

இன்னும் தூரம் செல்வோம்

யாரும் செய்யலாம்: சிக்னலில் நிற்கும் போது வாகன எஞ்சினை அணைத்து வைக்கலாம்.

கார்கள் மற்றும் இருசக்கர வாகனங் கள் 80 சதவிகித சாலைகளை அடைத் துக் கொள்கின்றன. ஆனால் அந்த வாகனங்களில் பயணம் செய்வோரது எண்ணிக்கை 22 சதவிகிதம் மட்டுமே. அதேநேரம் 75 சதவிகித சாலைப்பயணிகள் பஸ்களில்தான் செல்கின்றனர். எனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும், அதனால் வெளியிடப்படும் புகை யால் உருவாகும் நோய்களில் இருந்து தப்பவும் பஸ்களை பயன்படுத் துவோம்.

சென்னையில் வாழ்பவர்கள் மின்ரயில் போன்ற பொதுப் போக் குவரத்து வசதிகளை பயன்படுத்து லாம். நீண்டதூர பயணங்களுக்கும் ரயில்களே சிறந்தவை. விமானங்களில் செல்வதைவிட ரயிலில் செல்வது 10 மடங்கு குறைவான எரிசக்தியையே செலவழிக்கிறது.

அருகிலுள்ள காய்கறி கடை, மளிகைக் கடை, பால் வாங்க சைக் கிளிலோ அல்லது நடந்தோ செல்ல லாம். சைக்கிள் ஓட்டுவது, நடைப் பயிற்சி உடலை சிறப்பாகப் பரா மரிக்கும். நோய்கள் பெருகிவிட்ட நகர வாழ்வில் இந்த இரண்டும் ஆரோக்கியத்துக்கு அவசியம்.
தண்ணீர் அமிழ்தம்

யாரும் செய்யலாம்: தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப் படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.

தமிழ் ஓவியா said...

தண்ணீரை நாம் எப்படி வீணாக் குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீர்ப் பாட் டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

காய்கறி கழுவும்போது, பல் துலக்கும்போது, ஷேவிங் செய்யும் போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண் டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன் படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும். ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன் படுத்துங்கள். அதில் மிகக் குறை வாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும்போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.

வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப் புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உய ரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச் சுங்கள்.
பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென் றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.

இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சசவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.

தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன் படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்.

தமிழ் ஓவியா said...

வயிற்றுக்கு கொஞ்சம்

யாரும் செய்யலாம்: வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிட லாம்.

பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் உள்ளூர் காய்கறி, பழங்களையே வாங்குங்கள். இது சத்தானது, உடலுக்கு உகந்தது, செலவு குறைந்தது. இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட, பூச்சிக்கொல்லிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களை வாங்குங்கள். வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழங்கள் பயணம் செய்யும்போது அதிக மாசு வாயுக்களை வெளியிடுகின்றன.

சங்கிலித் தொடர் கடைகள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் விற்கப்படும் அயல்நாட்டுப் பழங்கள், காய்கறிகள் நெடுந்தொலைவு பயணம் செய்து நம்மை அடைகின்றன. நீண்டகாலம் சேமித்து வைக்க வசதியாக அவற்றின் மீது பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அவற்றின் விலையும் அதிகம்.

தமிழ் ஓவியா said...


யாரும் செய்யலாம்: தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப் படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.

பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்தாதீர்கள். காகித பயன்பாட்டை குறையுங்கள். கடைகளுக்குச் செல்லும்போது துணி அல்லது சாக்குப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டலுக்கு உணவு வாங்கச் செல்லும்போது பாத்திரம் எடுத்துச் செல்லுங்கள்.
கம்ப்யூட்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கும்போது, இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள். குறிப் புகள் எழுத ஒரு பக்கம் அச்சிடப் பட்ட தாள்களை பயன்படுத்துங்கள். பரிசுப் பொருள்களை சுற்றிவரும் காகிதங்கள், கடித உறைகளை மறுபடி பயன்படுத்துங்கள்.

வெளியே செல்லும்போது, சுற்றுலா செல்லும்போது பையில் உங்களுக்கென ஒரு டம்ளரை எடுத்துச் செல்லுங்கள். மக்காத பிளாஸ்டிக் கோப்பைகள், காகித கோப்பைகள் விரயமாவதை இதன் மூலம் தடுக்கலாம்.

வீட்டில் மறுசுழற்சி செய்யத்தக்க, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை பிரியுங்கள். பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோக பொருட்களை மீண்டும் பயன்படுத்த லாம். காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கி, வீட்டுத் தாவரங்களுக்கு இடலாம். சென்னையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி மற்றும் தெரு குடியிருப்போர் சங்கங்கள் இதை மேற்கொண்டு வருகின்றன.

மூன்று 'ஆர்'.

எந்தப் பொருளையும் குறைவாக பயன்படுத்த வேண்டும், மறுபடி பயன்படுத்த வேண்டும், மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். இவை 'மூன்று ஆர்' என்று அழைக்கப் படுகின்றன. தேவைப்படும் பொருட் களை மட்டும் வாங்கினால், மறுபடி பயன்படுத்தவோ, மறுசுழற்சி செய்யவோ தேவை இருக்காது. பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட 'பேக்' செய்யப்பட்ட அனைத்து பொருட் களையும் விற்பனைக்குக் கிடைக்கும் அளவில் பெரிதாக வாங்குவதன் மூலம், குப்பைகளை குறைக்கலாம். செலவும் குறையும்.

உயிர் இயந்திரங்கள்

மாசுபாடுகளை மறுசுழற்சி செய்யும் மரங்களை வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் 1000 கிலோ கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறது. கார்பன் டைஆக்சைடுதான் புவி வெப்ப மடையக் காரணம். குறைந்த தண்ணீரே தேவைப்படும் உள்ளூர் மரங்களை வளர்க்கவும். மரங்கள் நிழலையும், தென்றல் காற்றையும் தரும். மரம் வளர்க்க முடியாதவர்கள், தொட்டிகளில் செடி வளர்க்கலாம். இது மனதிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

கருத்துகளை விதைத்தல்

சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும், அதில் தனிமனிதர்களின் பங்கு பற்றியும், விளைவுகளையும் மற்றவர் களிடம் கூறுங்கள். எந்த வகையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும் என்பதை விளக்குங்கள். பசுமை வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.

ஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போல, மனிதன் தன்னு டைய செயல்பாடுகளை நியாயப் படுத்திக் கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறான் என்றொரு சூழலியல் அறிஞர் கூறினார். இனிமேலும் நாம் அப் படிப்பட்ட ஒரு புழுவாக இருக்க லாமா? புழுவாக இருக்கிறோமா, வண்ணத்துப்பூச்சியாக மாறி பசுமையை பரப்புகிறோமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை உலகெங்கும்


மூடநம்பிக்கை உலகெங்கும் நமது முகமூடி இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தில் மிகவும் குரூரமான தோற்றத்தில் உடல் முழுக்க சிவப்பு சாயத்தைப் பூசி கைகளில் வெட்டப்பட்ட பொம்மையின் தலையைப் பிடித்துக் கொண்டு பக்தர் ஒருவர் செலுத்திய நேர்த்திக் கடனைப் பற்றிப் பேசியிருந்தார். முகமூடியின் பதிவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த பின்னர், பொது மக்களிடமிருந்து பல்வேறு கருத்துகள் குவிந்துள்ளன. அவற்றில் சில உங்களின் பார்வைக்கு.

சரவணன் அழகப்பன்: மிகவும் வெட்கமாக இருக்கிறது! காளி யம்மனையே அவமானப்படுத்தும் வகையில் உள்ளது இவர்களைப் பொறுத்தமட்டியில் தைப்பூசம் என்பது ஆடை அலங்கார விழாவைப் போல ஆகிவிட்டது.

மாணிக்கம் நடேசன்: படித்த முட்டாளின், பகுத்தறிவற்ற தளம்!

நவீன் இந்திரன்: தைப்பூசத்தையே அரசு தடை பண்ணாம இருந்தா சரி!

கோகிலா கன்னியப்பன்: உனது செயலின் வழியே தான் உனது சமயம் மற்றவர்களால் காணப்படுகிறது.

ஷாலினி: இது சாமி இல்ல.. ஆசாமி!

ருத்ராஸ்ரீ: அடுத்த மதத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப் பார்கள்? நாமென்ன பிசாசு வழிபாடா நடத்துகிறோம்?

விஜயா: இப்படியெல்லாம் நேர்த் திக் கடன் செலுத்தச் சொல்லி யார் அழுதது?

சசிதரன் நடராஜா: இந்த மாதிரி யான நேர்த்திக்கடனை சுடுகாட்டில் செய்யுங்கள். ஆலயம் புனிதமான இடம். அதைக் கேவலப்படுத்தாதீர்கள்.

சுகுணா சந்திரசேகர்: இந்தநிலை எப்போதுதான் மாறுமோ?

காளிதாஸ் ரவி: பூமியில் வாழும் மனிதனல்ல இவன்... இவன் ஒரு சாத்தான்!

விக்கி அம்மு: கடவுள் இதை யெல்லாம் கேட்கவில்லை!

ஹரிதாஸ் கோபால்: இந்து சமயம் இது போன்ற செயல்களைக் கண்டிக்க வேண்டும்.

துரைசாமி: பக்தி வந்தால், புத்தி போகும் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நரேந்திரன்: தமிழனின் கொஞ்ச நஞ்ச பண்பாட்டையும் கொலை செய்யக் கிளம்பியிருக்கும் பேய்கள்!

இந்த கருத்துக்களோடு மொத்தம் 60-க்கும் மேற்பட்ட கருத்துகள் பொது மக்களால் தெரிவிக்கப்பட் டுள்ளன. அதேவேளையில் இந்தச் சம்பவம் பினாங்கு தண்ணீர்மலையில் தைப்பூசத்தன்று மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக நேரில் பார்த்த கிருபானந்தன் குறிப்பிட்டார்.

ரொம்ப சந்தோஷமாக எல்லா மலேசிய மக்களும் தைப் பூசத்தைக் கொண்டாடி முடிச்சுட்டாங்க. இன்னும் பக்தர்கள் கூட்டம் முருகனின் திருத்தலங்களில் நேர்த்திக் கடனை செலுத்திக் கொண்டுதான் இருக்காங்க. நேர்த்திக் கடன் என்பது முருகனிடம் தாங்கள் வேண்டிக் கொண்ட நோக்கத்திற்காக செய்யும் காணிக்கையாகும். இது இன்னமும் பலருக்குவிளங்காமலேயே இருக்கிறது என்பதில்தான் வருத்தம்.

தமிழ் ஓவியா said...

இந்த வருடம் எல்லா முருகன் திருத்தலங்களிலும் சுருட்டு புகைத்து வரும் சாமிகளை நிறுத்தி, சுருட்டை வாசலிலேயே வீசுமாறு அன்புக் கட்டளை இட்டனர். அதன் நன்மையை உணர்ந்து வீசியவர்கள், உண்மையிலேயே சாமிகள் தான். சில சாமிகள் அருள் உச்சத்துல ஆங்காரமா நடந்துக்கிட்டாங்க. இதில் உச்சம் என்னவென்றால் அமைதியே வடிவமான அழகு முருகனுக்கு, ரத்தக்காட்டேரி ஒன்று நேர்த்திக் கடன் செலுத்தியதுதான்.

ஃபேஸ்புக்கில் பினாங்கு தண்ணீர்மலையில் எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் நேற்று முழுக்க அதிக வரவேற்பையும் பகீர் உணர்வையும் தந்தது. அந்தப் படத்தில் உடல் முழக்க சிவப்புச் சாயத்தைப் பூசி, கருப்பு துணி உடுத்தி, மொட் டையடித்து, தாடியுடன், மிகக் கோரமான அலங்கோலத்தில் ஆடவர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தி யுள்ளார். ஆரஞ்சு, எலுமிச்சை, ஆப்பிள், டுரியான் எல்லாம் முடிந்து, இவர் உடலில் பொம்மையின் சிறிய கைகளை முள்ளில் கோத்துள்ளார். அதோடு, அதைவிட சற்றுப் பெரிய கைகளில் ரத்தம் சொட்டுவதைப் போல் சிவப்பு சாயத்தைப் பூசி, இடுப்பில் வார்ப்பட்டையைப் போல் அணிந்துள்ளார். அவரது கைகளில் அறுக்கப்பட்ட பொம்மையின் தலையைப பிடித்துக் கொண்டு பவனி வருகிறார்.

புராண காளியம்மன், குழந்தை உருவம் கொண்டு வந்த அரக்கனை, அழித்து, மக்களைக் காத்ததாக கூறுகின்றனர். ஆனால், இந்த ஆடவரின் கோலம் காளியைப் பிரதிபலிப்பதாகத் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த காட்டேரியையே பிரதிபலிக்கிறது.

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது என்று நடிகர் விவேக் படத்தில் கூறுவார். இன்னும் எத்தனை ஆயிரம் சமயக் கதைகளைச் சொல்லி இவர்களைத் திருத்துவதென்று தெரியவில்லை. நிலைமாறும் உலகில், பல விஷ யங்களில் நம் அடையாளத்தைத் தொலைத்து விட்டோம். எஞ்சி யிருப்பது தொன்மைப் புகழ் வாய்ந்த நம் மொழியும் சமயமும் தான் அதைக் காக்க காளியாக மாறா விட்டாலும் பரவாயில்லை. அழிப்ப தற்கு இந்த மாதிரி ரத்தக்காட் டேரியாக மாற வேண்டாமே?
தைப்பூசத்தில் நடந்த அவலங் களைப் பொறுக்காது. ஃபேஸ்புக்கில் உரசல்கள் நாகா எழுதிய கவிதை:

தேர் இழுக்கும் நேரத்தில்
பீர் இழுத்த தமிழண் டா,
தேங்காய் உடைக்கும் இடங்களில்
போத்தலை உடைத்த தமிழண் டா...
முருகனுக்கு மயிலாட்டம் - இப்போ
யாருக்கிந்த குத்தாட்டம்?
பாலைத் தூக்கிய தலையில் - இப்போ
பீரைத் தூக்கி ஆடுறாண்டா...
அறிவு இருந்தால் சொல்லாமல் புரியும்.
அதுவும் இல்லன்னா யார் சொல்லி திருந்தும்?

- மக்களுடன் முகமூடி

தமிழ் ஓவியா said...


எரிவாயு பயன்பாடு - ஒரு பரிந்துரை


- வச்சலா சோமசுந்தரம்

உலக மறை -_ திருக்குறள்
மலர் _ ரோசாமலர்
காகம் _ கருப்பு
தந்தை பெரியார் _ தொண்டறம், சுயமரியாதை

இப்படி ஒன்றை நினைத்து அதனுடன் ஒன்றிய ஒன்றை நினைத்துப் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் சமையல் என்றவுடன் அதற்கு மிகவும் துணை நிற்பதான எரிவாயு (LPG)வை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

பிறந்த குழந்தையின் வயது ஏறுமுகமாக இருப்பது நியதி. அதைப் பின்பற்றும் வகையில் எரிவாயு உருளையின் விலையும் இருந்து வருகிறது. இது போதாதென்று, ஆண்டுக்கு ஆறு உருளையே என்று அறிவிப்பு. ஆறுஎன்பதை ஒன்பதாக உயர்த்தலாம் என்ற இன்னிசை அறிவிப்பு. இல்லை, இல்லை மாதம் ஒரு உருளை அனுமதிக்கலாம் என்ற தேன் சொட்டும் செய்தி. ஆனால் முடிவேதும் இல்லாமல் சிந்தனை ஆடும் ஊஞ்சல் பலகையில் அமர்ந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும், எரி வாயுவை சமையல் அறையில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்கிறோம் அல்லவா? குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது என்ற பழமொழி ஒன்று உண்டு. எரிவாயு உருளை வழங்குவதில் உள்ள சந்தை விற்பனை தழைக்கவும் செய்கிறது. In this Confusion ever gas Supplies, a Black Market in Cylinders is Flourishing’’ என்ற ஆங்கில ஏட்டுச் செய்தி கூறுகிறது.

இத்தகைய ஏக்கமும் பாதிப்பும் கொண்ட சூழ்நிலையில், எரிவாயுவைச் சிக்கனமாக கையாளும் முறையையும், செலவைக் குறைக்கும் வழியையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். அதைப் பற்றிய சில குறிப்புகளைக் கூறுவதே இந்த கட்டுரையின் நோக்கம். இந்த குறிப்புகள் 30 விழுக்காடு எரிவாயு சேமிக்க உதவியாக இருக்கும் அதாவது ஒரு உருளையில் ரூ.130 முதல் 140 வரை சேமிக்க வாய்ப்பு ஏற்படும்.

1) எரிவாயு சமையல் அடுப்பில் (Stove) ஒன்றுக்கு மேற்பட்ட வேறு பட்ட விட்டம் கொண்ட பர்னர்கள் ((Burner) இருக்கும். முடிந்த அளவு சிறிய விட்டம் உள்ள பர்னரை பயன் படுத்தவும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு பொருளை பெரிய பர்னர் மூலம் சமைப்பதைவிட 6 முதல் 10 வரை விழுக்காடு எரிவாயு மிச்சமாகும்.

2) பர்னரின் மேல் வைக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதி, பர்னரின் அளவைவிட பெரியதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தீ பக்கத்தில் சென்று வீண் ஆகும்.

தமிழ் ஓவியா said...

3) உயரமான பாத்திரத்தைவிட கூழையான பாத்திரத்தை பயன்படுத் தவும்.

4) கொதி நிலை அடைந்தவுடன் தணலை குறைக்கவும்.

5) சமையல் செய்வதில், அடுப்பில் உணவு இருக்கும் வேளையில் உப்பு சேர்ப்பது எப்பொழுதும் உண்டு. அப்படி உப்பு சேர்ப்பதை துவக்கத்தில் செய்யாமல், தாமதித்து சேர்க்கவும். அதனால் சமைக்கத் தேவையான வெப்ப அளவு குறைகிறது. எரிவாயு சேமிக் கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

6) சமைக்கும் பாத்திரத்தில் வைக் கப்பட உள்ள, பருப்பு, தானியங்களை, 20 நிமிடங்கள் முன்னதாகத் தண்ணீரில் ஊற வைத்த பிறகு பாத்திரத்தில் வைக்க வேண்டும். அப்படி செய்வதால் 10 முதல் 20 விழுக்காடு குறைந்த எரிவாயு மூலம் சமைக்கப்படுகின்றன.
7) சமைக்கும் பாத்திரங்கள் சுத்த மாகவும், பர்னர் அடைப்பு இல்லாமலும் இருக்க வேண்டும்.

இவை நீங்கலாக வேறு சில வழிகளின் மூலமாகவும் எரிவாயுவை சேமிக்கலாம். அவை:

1) சமைத்த உணவை உட்கொள்வ தற்குப் பதிலாக, ஒவ்வொரு நேரத்தில் பழங்களை உணவாக எடுத்துக் கொள் ளலாம். பல வைட்டமின்கள் சேர்ந்து உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது.

2) முழுமையாக சமைக்கும் உணவு வகைகளை சில நாள்களில் நிறுத்தி விட்டு, குறைந்த நேரத்தில் சமைக்கும் உணவு வகைகளை உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.

3) நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டிய பருப்பு, புளி அடங்கிய சாம்பார் போன்றவற்றை நீக்கி, ஆவி மூலம் வெந்த காய்கறி கொண்ட உணவு வகைகளை செய்யும் முறையை மேற்கொள்ளலாம்.

4) இவை அனைத்துக்கும் மேலாக 100 விழுக்காடு எரிவாயு சேமிக்கும் முறையையும் கடைபிடிக்கலாம். அதாவது வாரத்தில் ஒரு நாள் சமைத்த உணவை சாப்பிடாமல் இருப்பது. உண்ணா நோன்பு என்று சொல்லலாம். இதன்மூலம் எரிவாயு சிக்கனமும் ஏற்படுகிறது. நமது ஒரு சில உடல் உறுப்புகளுக்கும் ஓய்வு கிட்டுகிறது.

சிக்கனத்தின் சிறப்பை உணர்ந்த ஒருவர் தன்னை கஞ்சன் என்று அழைப்பதற்குப் பதிலாக கருமி என்று அழையுங்கள் என்றாராம் ஒரு எழுத்தில் சிக்கனத்தைக் கண்டார்.

பெரியார் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், சிக்கனத்தின் வழிமுறையை அறிஞர் அண்ணா அவர்களுக்கு, தந்தை பெரியார் எப்படி விளக்கினார் என்பது, சிக்கனத்துக்கும் கஞ்சதனத்துக்கும் உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக விளக்கியவர் பெரியாரல்லவா?

தமிழ் ஓவியா said...


உழைக்கும் செம்மல்!வயதெண்ப தாகிநிற்கும் வாலிப முறுக்கு!
வாழ்வியல்சிந் தனைவழங்கும் வல்லமை யாளர்
சுயமரியாதைச் சுடராய்ச் சுழன்று நாளும்
சுறுசுறுப்பாய்ப் பணியாற்றும் கொள்கை வேந்தன்
புயல்வேகச் சிந்தனையின் புரட்சி வேங்கை
பொய்யர்களின் சூழ்ச்சிகளைப் பொசுக்கும் நெருப்பு
உயர்வான எழுத்தாற்றல் அமைந்த சான்றோன்
உறுதுணையாய்க் கலைஞருடன் உழைக்கும் செம்மல்

தந்தைபெரி யாரளித்த தமிழர் தலைவர்
தன்மானக் கதிரவனாய்த் தரணி யெங்கும்
விந்தைமிகு பகுத்தறிவு வெளிச்சந் தன்னை
விவேகமுடன் வழங்கி வரும் வித்தகர் அன்றோ
செந்தமிழர் நலங்காக்கும் போராட் டத்தில்
சிங்கமென வீறு கொண்டு சிலிர்த்தெ ழுந்து
முந்தி நின்று குரல் கொடுக்கும் மூத்த தொண்டன்
மூடத்தனக் குப்பைகளை முழுதும் அழிப்போன்.

விடுதலையாம் நாளிதழை வீர முரசாய்
வெற்றியுடன் நடத்திவரும் ஆற்ற லாளர்
கொடுஞ்சாதித் திமிரொடித்துத் தர்ம புரியில்
கூட்டியொரு மாநாட்டைக் குலுங்க வைத்தான்
ஒடுக்கப்பட் டோர் உரிமை பெறுதல் வேண்டி
ஓயாது உழைத்து வரும் ஒப்பில் லாதான்
அடுக்கடுக்காய் சோதனைகள் வந்தபோதும்
அயராது மக்கள்பணி ஆற்றும் மேலோன்.

நுழைவதற்கு எத்தனிக்கும் இந்தித் தீயை
நொந்தோடச் செய்திடுவார் தமிழைக் காப்பார்
உழைக்காமல் தமிழர்களை உறிஞ்சி வாழும்
ஊளையிடும் நரியின்குண பார்ப்பனக்கும்பல்
பிழைப்தற்குச் செய்திருக்கும் பித்தலாட்டத்தை
பெரியாரின் வழிநின்று பிளந்தெ றிந்தார்
அழைக்கின்றார் நமையெல்லாம் அவரின் பின்னே
அணிவகுப் போம் தமிழினமே வாரீர் ஒன்றாய்.

நெருக்கடியில் இந்தியாவே தவித்தபோது
நெஞ்சுயர்த்தி நடைபோட்ட நேர்மைச் சீயம்
கருப்புடையில் மக்கள்சூழ் கடலில் நீந்தி
காண்போர்கள் கேட்போர்கள் உணரும் வண்ணம்
கருத்தள்ளிக் கொட்டிவரும் பேரறி வாளன்
கலைஞருக்கு இளவலெனும் பெருமை கொண்டோன்
ஒருநாளும் ஓய்வறியா துழைக்கும் மேதை
உலகம் போற் றும் வீர மணியார் வாழ்க.

மேதினியில் வாழ்தமிழர்க் கின்னல் என்றால்
மீட்புக் குரல் கொடுப்பதிலே முதன்மை யாளன்
சாதிமதம் இதிகாசம் புராணப் புரட்டு
சகதிநிகர் மூடத்தனப் பழக்க வழக்கம்
சோதிடம் பொய்ப் பஞ்சாங்கம் சாத்திர மெல்லாம்
சுக்குநூறாய் உடைத்தெறியும் துணிவுச் சிகரம்
நாதியிவர் தமிழருக்கு மறுப்பார் உண்டோ
நலமோங்க வீரமணி வாழ்க!வாழ்க.

- முரசொலி முகிலன்,
அத்திப்புலியூர்

தமிழ் ஓவியா said...


நாய்களுக்கு மைக்ரோசிப்


பிரிட்டனில் தற்போது நாய்கள் கடித்து, பலர் உயிரிழக்கின்றனர். இதனால் அந்நாட்டில் உள்ள அனைத்து நாய்களுக்கும் வரும் 2016க்குள் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் கடித்து, பலர் உயிரிழக்கின்றனர். மேலும், தெரு நாய்களும் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் அங்கு செல்ல பிராணிகளான நாய்கள் திருட்டு போவதையும் தடுக்க, அவற்றின் கழுத்து பட்டையில், மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என, அந்நாட்டின் சுற்றுச் சூழல் துறை அமைச்சர், ஓவன் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இதனால் மைக்ரோசிப்பல் நாயின் உரிமையாளர் பற்றிய முழு விவரங்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம், தொலைந்து போகும் நாயின் உரிமையாளர் யார், என்ற விவரம் எளிதில் தெரிந்து விடும். மேலும், நாய்க்கடியால், பாதிக்கப்படுபவர்கள் அதன் உரிமையாளர்மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நடைமுறை உதவும். குறிப்பிட்ட தேதிக்குள், தங்கள் நாய்களுக்கு, மைக்ரோசிப் பொருத்தாதவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் ஓவியா said...


சென்னைமெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! என்ற பாடல் எதிரொலிக்கிறது. ஊரு கெட்டுப் போனதற்கு மூரு மாருக்கட்டு அடை யாளம் என்ற பாடல்கூட நினைவிற்கு வருகிறது.

மக்கள் தொகை 5,008, 763

ஆண்கள் 2,544,380

பெண்கள் 3,464,383

ஒரு சதுர கிலோ மீட் டரில் வாழ்வோர் 26,903.

இப்படிப்பட்ட சென் னையில் இன்றைய நில வரம் என்ன? கலவர மாகத் தானிருக்கிறது.

அன்றாடம் கொலை குத்து வெட்டு என்பது ஒருபுறம், இன்னொருபுறம் சென்னையைப் பற்றி வெளி வந்துள்ள தகவல் கள்.

இந்தியாவில் 5 முக்கிய பெரிய நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வாழத் தகுதியுள்ள நகரங்கள் என்ற அடிப்படையிலான ஆய்வு அது!

பரவாயில்லை - நாம் கடைசி இடத்தில் இல்லை - நான்காம் இடத்தில் தான் இருக்கிறோம். நமக் கும் கீழே கொல்கத்தா பெரு நகரம் இருக்கிறது என்பதை வேண்டுமா னால் ஆறுதல் பரிசாகப் பெற்றுக் கொள்ளலாம்.

உலக அளவில் 221 மாநகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் நமது சென்னைக் குக் கிடைத்துள்ள இடம் 150.
இந்தக் கணக்கீடுகள் எவற்றின் அடிப்படையில்?

குடிநீர், மின்சாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி, அரசியல், மருத் துவ வசதிகள், கலாச்சார சூழல் இவை கணக்கில் கொள்ளப்பட்டன.

1991இல் நாள் ஒன் றுக்கு 600 டன் குப் பைகள் சிங்காரச் சென் னையில் குவிந்தன என்றால், இன்றைய கால கட்டத்தில் கற்பனைக்கே எட்டாத வகையில் 4 ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடும் அதிகரித்து விட்டது.

சென்னை நகரில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறு வனம் தெரிவித்துள்ளது - என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

55 ஆயிரம் ஆட் டோக்கள் ஓடுகின்றன. ஆனால் நியாயமான வகையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.

சுற்றுச்சூழலோ கேட் கவே வேண்டாம் - நடைபாதைக் கோயில்கள் வேறு; - சமூக விரோத நடவடிக்கைகளின் வசூல் பூங்கா இவை! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கல்கியும் கைவிடுகிறது...


கேள்வி: பிரதமர் வேட்பாளராக சுஷ்மா சுவராஜை அறிவிக்க சிவசேனா ஆதரவு என்ற செய்திபற்றி?

பதில்: சிவசேனா ஆதரவு சுஷ்மாவுக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்திய மக்களின் ஆதரவு நரேந்திர மோடிக்குத் தான் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. பா.ஜ.க. ராமர் கோயில் விவகாரத்தை மறுபடி மய்யப்படுத் தினாலே வோட்டு குவி யும் என்று நினைக் கிறது. ஹய்யோ, பாவம்!
(கல்கி 17.2.2013 பக்கம் 14)

கல்கி அவதாரமே கைவிட்டபின் மரத்துக் குப்பின் ஒளிந்து வாலியைக் கொன்ற ராம அவதாரம் எந்த மூலை

தமிழ் ஓவியா said...

காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

சிறீநகர், பிப். 16- காஷ்மீரில் நேற்று முன் தினம் இரவு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.

5 நாள் இடைவெளிக் குப் பின் காஷ்மீரின் பல பகுதிகளில் நேற்று முன் தினம் ஊரடங்கு தளர்த் தப்பட்டது.

இந்நிலை யில் அப்சல் குரு நினைவாக வரை நேற்று பேரணி செல்ல, ஹூரி யாத் மாநாட்டு அமைப் பின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி நேற்று முன்தினம் அழைப்பு விடுத்ததையடுத்து காஷ் மீரில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தமிழ் ஓவியா said...


மேடைகள் பலவாயினும் ஒத்த குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!


கொலைகாரன் ராஜபக்சே தண்டனை பெற்றாக வேண்டும்

மேடைகள் பலவாயினும் ஒத்த குரல் கொடுத்து

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!

தமிழர் தலைவர் அறிக்கை ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கொலைகாரன் ராஜபக்சேவுக்குத் தண்டனை கிடைத்தாக வேண்டும். இங்குள்ள தமிழர்களாகிய நமக்கு மேடைகள் பலவானாலும் ஒத்த குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான, அந்நாட்டு குடிமக்களான ஈழத்துச் சனங்களாகியவர்களுக்கு சாதாரண அடிப்படை மனித உரிமைகளைக்கூடப் பறித்து, அவர்களையெல்லாம், யுத்தக் குற்றவாளிகளைவிட மிக மிகக் கொடுமையான வகையில் நடத்தி வருகின்றது - அங்குள்ள சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு.

இதற்குமுன், உலகத்தின் பற்பல நாடுகளின் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவி தனது அரசு, பயங்கரவாதிகளை எதிர்க்கும் அரசே தவிர, அப்பாவி பொது சனத்தை குறி வைப்பதல்ல; அடுத்த ஒரு நல்ல அரசியல் தீர்வை நாங்கள் ஏற்படுத்துவோம் என்றுகூறி, அதை அப்படியே காற்றில் பறக்க விட்டதோடு, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம்; தமிழ்ப் பெயர்கள் (பல நூற்றாண்டுகளாக) இருக்கும் ஊர்களையெல்லாம் சிங்களமயமாக்கி, பண்பாட்டுப் படையெடுப்பை மிகவும் தீவிரமாக நடத்தி, தமிழ் இனத்தின் அடையாளத் தினையே ஒட்டு மொத்தமாக அழித்திடும் நீண்ட கால இன அழிப்பு, இன ஒடுக்கல் கொள்கைகளையே அன்றாட நடைமுறையாக்கி வருகிறது!

பயங்கரவாதமா? சுதந்திரப் போரா?

முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்டதிலிருந்து, அமெரிக்காவோ வேறு பல நாடுகளோ எது பயங்கரவாதம், எது சுதந்திரப் போர் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையை இழந்துவிட்டனர்.

இந்திய அரசுக்கு ஏதோ ஒரு தனி அஜெண்டா; இலங்கை இராணுவத்திற்கு முக்கிய ஆயுத விநியோகம் முக்கிய கருவிகளைப் பயன்படுத்தப் பயிற்சி தந்து தீவிரவாதத்தினை தடுத்து நிறுத்துகிறோம் என்ற பிரச்சாரத்திற்குப் பலியானார்கள்!

அராஜக வழியில் படுகொலை!

இதன் விளைவு...? உலக நாடுகள் இன்று லேசாகக் கண் விழித்துப் பார்க்கும் நிலையில், அய்.நா. கூட மிரட்டப் பட்டு (இலங்கை அரசால்) அதன் கடமையிலிருந்து பின்வாங்கி, தமிழர்கள் பல்லாயிரம் பேர்களை பலியாக் கவும், 90 ஆயிரம் தமிழச்சிகள் விதவைகள் ஆன நிலைமை, பல்லாயிரவர் காணாமற் போனவர்களாகவும், சட்ட முறைகளுக்கு மாறான அராஜக வழியில் கொல் லப்பட்டனர்.

இவை எல்லாம் இப்போதுதான் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக வெளிச்சத்திற்கு வருகின்றன!

ஜெனிவா, மனித உரிமை ஆணையம் அதன் பார்வையை விசாலப் பார்வையாக ஆக்கி வருவது, ஓரளவு நொந்த தமிழர்கள் உள்ளத்திற்குச் சற்று ஆறுதலைத் தருகிறது!

டெசோவின் பணியும் பயணமும்

டெசோ துவங்கி எவரது விமர்சனமும் காமாலைக் கண் பார்வையால் கனன்று விழும் வெட்டிப் பேச்சுகள் பற்றிக் கவலைப்படாமல், நம் கடன் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதே என்பதாக பணியாற்றி வருகிறோம்; சர்வதேசத்தவரின் பார்வைக்கு அநீதி, அக்கிரமங்களைக் கொண்டு செல்லும் பணியும், இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் பணியும் நமதுதொடர் பணிகளாக இருந்து வருகிறது!

நமது பொது எதிரி இராஜபக்சே, கோத்தபய இராஜ பக்சேக்களின் சிங்களப் பேரினவாத அரசே தவிர, இங் குள்ள விமர்சகர்களான அரசியல் ஏவுகணைகளான பரிதாபத் திற்குரியவர்கள் மீது அல்ல என்பதே, எமது அணுகுமுறை!

எல்லோரும் அங்கே தனித்தனிதான்
ஏகமனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?

என்ற புளகாங்கிதத்துடன் நவீன ஹிட்லர் இராஜ பக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறான்!

தமிழர் உணர்வை மீட்டெடுப்போம்!

அடுத்த மாதம் (மார்ச்) ஜெனிவாவில் நடைபெறவிருக் கும் மனித உரிமை ஆணையத்தில் போர்க் குற்றவாளி யான இராஜபக்சேகளுக்குத் தக்க தண்டனை கிடைத் தாக வேண்டும்.

இங்கே, மேடைகள் பலவாயினும் குரல் ஒன்றே என்று தமிழர்கள் கட்சி, ஜாதி, மதம் இவைகளைத் தாண்டி ஓர் குரலில். ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு முழு மூச்சும் குடிசெய் வார்க்கில்லை பருவம் என்ற குறள்வழி பணியாற்றி எஞ்சிய எம் தமிழர் சனங்களைக் காப்பாற்றிடும் பணியும், தமிழர் மீதான பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடித் திடும் வகையில் ஒத்த குரல் கொடுப்போம்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
16.2.2013

தமிழ் ஓவியா said...


பொள்ளாச்சியில் ஜாதி - தீண்டாமை எதிர்ப்பு மாநாடு..


நோயால், விபத்தால் - சாகக் கூடாது! கொள்கையால் செத்தோம்... என்பதே பெருமை...

ஆயுதமில்லா - அறிவுப்புரட்சியை செய்தது சுயமரியாதை இயக்கம்...

தமிழர் தலைவர் சங்கநாதம்!...

நீலமலை மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக விடுதலை சந்தா 102க்கான தொகையினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்விஆகியோர் வழங்கினர். உடன் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்கறிஞர் பாண்டியன், பொறியாளர் தி. பரமசிவம், சி. மாரிமுத்து ஆகியோர் உள்ளனர். (பொள்ளாச்சி - 15.2.2013)

கோவை, பிப்.16- கோவை - பொள்ளாச்சியில், ஜாதி தீண்டாமை எதிர்ப்பு மாநாடு 15.2.2013 மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் திடலில், பொள்ளாச்சி மாவட்ட தி.க. தலைவர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில், மாவட்ட தி.க. செயலாளர், மாரிமுத்து வரவேற்புரையாற்ற, மண்டல தி.க. தலைவர் வசந்தம் இராமச்சந்திரன், மண்டல செயலாளர், ஆ. பாண்டியன், பெரியார் பெருந்தொண்டர் இராதா, மண்டல இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், மணடல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மேட்டுப் பாளையம் மாவட்டத் தலைவர் வேலுசாமிஆகியோர் முன்னிலையி லும் மிகுந்த எழுச்சியுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் அவர்கள் சங்கநாத உரை நிகழ்த் தினார். அவர் தமதுரையில்,

பெரியாருக்குப்பின் இந்த இயக்கம். ஆலமரம் போல் வேரூன்றி அதன் தொடர்ச்சி, விழுதுகளாய் இன்றைக்கு பரவிக் கிடப்பதை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு கொள்கை இயக்கம்..! அடுத்த தலைமுறைக்கான இயக்கம், பழைய கொள்கை வீரர்கள், மறைந் தும் மறையாமல் இருக்கின்ற தியாகச் செம்மல்களை நினைத்துப் பார்க் கிறேன்; 1960ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை கொளுத்தும் போராட் டத்தில் கைதானவர் இந்தப் பகுதியை சேர்ந்த ஆனைமலை நரசிம்மன்; அவரும், நானும் கழகப் பொதுச் செயலாளர்களாக, தந்தை பெரியா ரால் நியமிக்கப்பட்டவர்கள், தந்தை பெரியார் அவர்களின் வடநாட்டு சுற்றுப் பயணத்தின்போது ஆனை மலை நரசிம்மன் அவர்களும், நானும் உடன் சென்றோம்.

எத்தனை எதிர்ப்புகள்! ஏளனங் கள்! லட்சாதிபதியாக இருந்த நிலை மறந்து சாதாரண மனிதராக கை கட்டிக் கொண்டு எங்களோடு இருந்த நரசிம்மன், ஆனைமலை, அனீபா, திருமூர்த்தி இப்போதும் எங்களோடு வந்து கொண்டிருக்கிற 88 வயதைக் கடந்த பெரியார் பெருந்தொண்டர் பொள்ளாச்சி இராதா, அரசுப் பணியில் இருந்தபோதே பெரியார் கொள்கைக்கு உரம் சேர்த்த பொறி யாளர் பரமசிவம் - இவர்களைப் போன்றவர்கள் இந்தக் கொள்கையை தாங்கி நின்றார்கள்; அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கு ஏராளமான இளைஞர் இன்றைக்கு இந்த இயக்கத்தில்... ஆலமரம் போன்ற இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது! எவராலும் அழிக்கமுடியாது.

21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம்; நாயை விண்வெளிக்கு அனுப்பினார்கள்; குரங்கை அனுப்பினார்கள்; ஆனால் இங்கோ, அனுமார் கடலைத் தாண்டிச் சென்றான் என்று கதையளந்து, கற்பனைக் கதைகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சிந்திக்க வேண்டாமா? ஜாதி பற்றிப் பேசுகிறார்கள்! அறிவியலுக்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள்... ஜாதியைப் பாதுகாப்ப வர்களுக்கு ஒரு கேள்வி? இவர் இன்ன ஜாதி என்று அடையாளங் காண முடியுமா? இவர் செட்டியார், முதலியார், கவுண்டர், வன்னியர் என்று அடையாளம் காட்ட முடியுமா? ஜாதி அடையாளம் உண்டா? ஆளைப் பார்த்து ஜாதியை சொல்ல முடியுமா? ஜாதி என்பது கற்பனை மூளைக்கு போட்ட விலங்கு. அது புகுத்தப்பட்டது. அதனால் நாம் பிரிக்கப்பட்டோம். ஆதாரமில்லாத அறிவியலால் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றுதான் ஜாதி என்னும் விலங்கு; அதை ரோட்டுசக்மட்டியால் அடித்தால் தான் உடையும்.

இல்லாததை ஒழிக்கத்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு என்ன ஜாதி என்று தெரிய வேண்டிய தேவையில்லை. எங்களை அடையாளப்படுத்துவது கறுப்புச்சட்டை ஒன்றுதான். இன்றைக்கு எல்லாக்கட்சியும் கறுப்புச் சட்டை போடுகிறார்கள். 65 ஆண்டுகள் ஓடி விட்டதே, சுதந்திரம் பெற்று!, பஞ்சமன் இருக்கலாமா? சூத்திரன் என்ற சொல் இருக்கலாமா?

தமிழ் ஓவியா said...

மற்ற நாடுகளில் சூத்திரன் உண்டா? இதைத்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மற்ற நாடுகளில் பேதம் இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் படிக்கட்டு பேதம் இருக்கிறது என்று தெளிவாக சொன்னார்கள். சரஸ்வதியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட நமது பாட்டி, அவருடைய பேத்தி இன்றைக்கு வக்கீல், டாக்டர், இது சுயமரி யாதை இயக்கத்தின் சாதனை. ஜாதி சாவதில்லை, மனிதன் சாகிறான். சுடுகாட்டில் கூட ஜாதியை கொண்டு வந்து விட்டானே. ஜாதி என்ற விஷம் மனிதனைக் கொன்று விடும். இவ்வளவும் சொன் னதற்கு பின்னால், ஒருசிலர் கேட்கிறார்கள், இட ஒதுக்கீட்டில் மட்டும் ஜாதியை கேட்கிறீர்களே என்று காலம் காலமாக மனுதர்மத்தால் மறுக்கப்பட்ட கல்வி யை, நான்கு வர்ணத்தையும் நானே உண்டாக்கினேன் என்று கற்பித்தவர்களிடம் இருந்து பறித்து வேலைவாய்ப்பு பெற இடஒதுக்கீட்டின் பேரால்தான் சமத்துவத்தை, சமூகநீதியை நிலை நாட்ட முடியும்.

தந்தை பெரியார் அவர்கள் தமது 95ஆவது ஆண்டில் ஜாதி ஒழிப்பு தொடர் போராட்டத்தை அறிவித்தார். வேதங்களின் வேர்களை அழித்தாலே ஜாதி ஒழிந்து விடும். எல்லா இடத்திலும் ஜாதியை ஒழித்துவிட்டோம். கோவில் கருவறையில் இருந்த அந்த ஜாதிப் பாம்பை கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டம் மூலம் அதையும் அடித்து நொறுக்கினார். இப்போது உச்ச நீதிமன்றத்திற்கு இப்பிரச்சினை போயிருக்கிறது. நல்ல தீர்ப்பு விரைவில் வரும். ஆச்சாரியார் கொண்டு வந்த கல்வித்திட்டம் இன்றைக்கு வேறுபெயரால் உள்ளே நுழையப் பார்க்கிறது. இதைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். ஈழத்தமிழரிடையே புகுந்து கொண்டுள்ள ஜாதியை ஒழிக்கவும் நாம் போராட வேண்டியிருக்கிறது. பெரியார் அங்கேயும் தேவைப் படுகிறார்.

இன்றைக்கு முள்வேலி முகாமுக்குள் தமிழர்கள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். அங்கே மனித உரிமைகள் இல்லை. மனித உரிமைக்குழு இலங் கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இலங்கையை பற்றி உலகம் இன்றைக்கு புரிந்து கொண்டது. டெசோ அமைப்பின் நோக்கமே இதுதான். நமக்குப் பொது எதிரி ராஜபக்சேதான், கலைஞரல்ல! நமக்குள் யார் பெரியவர் என்பதல்ல பிரச்சினை. அனைத்து குரல்களும் ஒன்று சேர்ந்து பொதுஎதிரியை வீழ்த்தப் பயன்பட வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைப்பதற்காக போராடும் டெசோ அமைப்பைப்பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எவருடைய பாராட்டும் எங்களுக்கு தேவை யில்லை. ஜாதி - தீண்டாமை ஒழிந்தால்தான் ஈழத் தமிழர் வாழ்விலும் விடியல் ஏற்படும். எங்கே மனித உரிமைகள் நசுக்கப்பட்டாலும் அங்கே ஓடிச்சென்று அணைக்கும் தீயணைப்பு நிலையம் தான் திராவிடர் கழகம். இது சிறந்த கல்விச்சாலை! நோயால் , விபத்தால் செத்தோம் என்பதை விட கொள்கையால் செத்தோம் என்பதுதான் எங்களுக்குப் பெருமை. மனிதநேயம், சமத்துவம், சமவாய்ப்பு அனைவருக்கும் கிடைப் பதற்கு, பெரியாரை துணை கொண்டு மூச்சுக்காற்றாய் செயல்படுவோம்! என்று தமிழர் தலைவர் அவர்கள் உணர்ச்சிஉரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரை.சந்திரசேகரன், மருத்துவர் பிறை நுதற்செல்வி, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன், கழகச் சொற்பொழிவாளர் கோபி.கருப் பண்ணன், கோவை மாவட்டத் தலைவர் பிரகஸ்பதி, செயலாளர் இரகுநாத், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சக்திவேல், மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செய லாளர் வெள்ளியங்கிரி, நீலமலை மாவட்டத் தலைவர் கருணாகரன், செயலாளர் ராஜேந்திரன், ப.க. தலைவர் குமாரராசா, புலியகுளம் வீரமணி, பொள்ளாச்சி பராதி, செந்தில்நாதன், பழ.அன்பரசு, கணியூர் மயில்சாமி, பொள்ளாச்சி செழியன், குறிச்சி சிற்றரசு, தமிழ்முரசு, கு.வெ.கி.செந்தில், ப.க.செயலாளர் கண்ணன், மே.ப.ரங்கசாமி, கணியூர் மாயவன் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்களும், மகளிரணி, இளைஞரணி பொறுப்பாளர்களும், ஏராளமான கழத்தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நகர தி.க. தலைவர் வீரமலை நன்றி கூற கூட்டம் இரவு 9 மணிக்கு முடிவு பெற்றது.

நீலமலை மாவட்டத்தின் திராவிடர் கழகம் சார்பில் 102 விடுதலை சந்தா தொகையை மா. த. கருணாகரன், மா.செ. ராசேந்திரன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

தொகுப்பு: கோவை மாவட்ட
செய்தியாளர் அன்பரசு.

தமிழ் ஓவியா said...


கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்


கலைஞர் அவர்கள் தலைமையில் 25.2.2013 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

அப்பொழுது டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- டெசோ

தமிழ் ஓவியா said...


கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்!


இந்தியக் கடற்கரையின் பரப்பளவு சுமார் 6000 கி.மீட்டர் தூரமாம். மூன்றரைக் கோடி மீனவர்கள் கடல் வளத்தை நம்பி வாழ்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தனுஷ்கோடி தொடங்கி நாகப்பட்டினம் வரை 400 கி.மீ. தூரம் வரை உள்ள நீண்ட கடற்கரைப் பகுதியில் 175-க்கும் கூடுத லான ஊர்களில் நான்கு லட்சம் மீனவர்கள் கடல் வளத்தை நம்பி வாழ்கிறார்கள்.

இவர்களுக்கான பாரம்பரிய உரிமை இப் பொழுது பரிதாபகரமான வகையில் பறிக்கப்பட்டு விட்டது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையோ எந்த மண்ணாங்கட்டியோ தமிழின மீனவர்களின் தலையில் கையை வைத்து விட்டது.

சிங்களக் கடற்படை இந்தியக் கடல் எல் லைக்குள் அத்துமீறி நுழைவதுண்டு. தனுஷ் கோடித் தீவின் அலைக்குடா ஊருக்குள் புகுந்து அங்கு வாழ்ந்த தமிழின மீனவர்களின் குடிசை களை ஒரு முறை தீயிட்டுக் கொளுத்தியதும்கூட உண்டு; அதற்கான எதிர்வினை இந்திய தரப்பில் இல்லை.

இந்திய அரசின் இத்தகைய அணுகுமுறை இலங்கையின் கையை மேலோங்கச் செய்து விட்டது.

இலங்கையோடு இந்தியா போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டுக்கோ தமிழ்நாட்டு அரசுக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லாமலேயே தன்னிச்சையாக நடந்து விட்டது.

1974 ஜூன் 26 ஒப்பந்தத்தில் தமிழக மீனவர் களுக்கு மீன் பிடி உரிமை இருந்தது. இரண்டாவது ஒப்பந்தம் (23.3.1976) நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி காதும் காதும் வைத்தாற்போல, கையுறை போட்டு முடித்துக் கொள்ளப்பட்டது அரசு செயலாளர்கள் மட்டத்தில். இது ஒரு ஜனநாயக அமைப்புக்கோ, அரச மைப்புச் சட்டத்தின் கோட்பாட்டுக்கோ உகந்த தல்ல.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது குறித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தும்கூட, இந்திய அரசு அவற்றையெல்லாம் பொருட் படுத்தியதே கிடையாது.

இந்தியாவுடன் போடப்பட்ட எத்தனையோ ஒப்பந்தங்களை இலங்கைமீறி இருக்கிறது.

நேரு- கொத்தவாவலை ஒப்பந்தம் (1954) சிறீமாவே - சாஸ்திரி ஒப்பந்தம் (1962), மீனவர் உரிமை ஒப்பந்தம் (1976), ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1987) போன்றவைகளை முழுமையான அளவில் இலங்கை சிங்கள அரசு நிறைவேற் றிடவில்லை என்கிறபோது, இலங்கையுடன் 1976இல் இந்திய அரசு செய்து கொண்ட ஒப் பந்தத்தை ரத்து செய்வதில் என்ன குற்றம் வந்து குடிபுகப் போகிறது?

இவ்வளவுக்கும் கச்சத்தீவு நமக்குச் சொந்த மானது; அப்படி இருக்கும்பொழுது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள நமக்கு அதிகமான உரிமையும், வாய்ப்பும் இருக்கவே செய்கின்றன.

இராமேசுவரத்தில் 26.7.1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மாநாடும் - கச்சத்தீவு மீட்பு மாநாடும் நடத்தப் பட்டன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில் சமதா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதைத்தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழர் களுக்குச் சொந்தமான கச்சத் தீவு மீண்டும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அம்மாநாட்டில்.

மாநாட்டின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கச்சத்தீவு தமிழர்களுக்கே சொந்தம் அதற்கான வழக்குத் தொடுக்கப்படும் என்று மாநாட்டில் அறிவித்தார்.

அறிவித்ததோடு மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்யப் பட்டது. (29.7.1997) ஜஸ்டிஸ் திரு. ஜெயசிம்மபாபு அவர்களால் விசாரணைக்கும் ஏற்றுக் கொள் ளப்பட்டது. அது இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, தமிழ்நாடு அரசின் ஒப்புதலையோ பெறாமல் இரு அரசு அதிகாரிகள் செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடியாகும்?

எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் விழிப்புணர்ச்சி என்பதே மிகவும் முதன்மையானது. அந்த வகையில் டெசோ சார்பில் வரும் 18,19 நாட்களில் முறையே இராமேசுவரத்திலும் நாகை யிலும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் அர்த்தமுள்ள தாகும். கட்சிகளை மறந்து ஒத்த குரல் கொடுக்க வாரீர் என்று அழைக்கிறோம் - அழைக்கிறோம்!

தமிழ் ஓவியா said...


இனவெறிக் கூட்டத்தின் ஏடுகளைப் புறந்தள்ளுக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை!


சென்னை, பிப்.16- இனவெறிக் கூட்டத்தின் இதழ்களை வாங்குவ தில்லை அவற்றைக் கையாலும் தொடுவதில்லை என்ற சூளுரையை கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கருத்துச் சுதந்திரம் - பத்திரிகைச் சுதந்திரம் என்பவை ஜனநாயக நாட் டில் எந்த அளவுக்கு முக்கியமான வையோ; அதே அளவுக்கு முக்கிய மானவை சமூகப் பொறுப்பு - பத்திரிகாதர்மம் ஆகியவை என்பதை ஜனநாயக உரிமைகளிலும் - கடமை களிலும் நம்பிக்கையுள்ள எல் லோரும் ஏற்றுக் கொள்வர்.

சமூகப் பொறுப்பு என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படா மல், அதைக் காற்றில் பறக்க விடும் பத்திரிகைச் சுதந்திரம்; பத்திரிகை களுக்கான நெறிகளை அதாவது பத்திரிகா தர்மத்தைக் கிஞ்சிற்றும் பேணாத பத்திரிகைச் சுதந்திரம்; படிப்போர் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலக்கவும், ஜனநாயக சமூகத்தின் ஆணி வேரை அரிவாள் கொண்டு அறுக்கவும் பயன்படுமே அல்லாமல்; ஜனநாய கத்தைச் செழுமைப்படுத்தவோ, சமூகத்தை ஆரோக்கியப் படுத்தி ஆக்கப் பூர்வமான பாதையில் அழைத்துச் செல்லவோ, அணுவள வேனும் பயன்படாது.

எப்படியாவது வருவாயை பெருக்கிக் கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம்

பத்திரிகை உலகின் வியாபாரப் போட்டியில் வருமானமே முதன்மை யானது என்ற குறுகிய நோக்கம் ஆட்கொள்ளும்போது, சமூகப் பொறுப்பும் - பத்திரிகா தர்மமும் இற்று விழுந்து காய்ந்து போகத் தான் செய்யும். இப்படித் தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நியதியை விதித்துக் கொள்ளாமல்; எப்படியாவது வருவாயைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விடுமானால், பொறுப் புணர்வும் - தர்ம சிந்தனையும் கடைசி இடத்துக்குப் போய் விடும்.

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் சில குறிப்பிட்ட ஏடுகளும், இதழ்களும் தாங்கள் வெளியிடும் செய்திகளும் - செய்திக் கட்டுரைகளும் எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தும் என் பதைப் பற்றி எள்ளளவும் கருதிப் பார்க்காமல்; அப்படிக் கருதிப் பார்த்தால் தாங்கள் செய்து வரும் வியாபாரம் அடிபட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தின் காரண மாக, எதையும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று; கனி இருப்பக் காய் கவர்ந்து முகம் சுளிக்கும் காரியத்தைச் செய்து வருகின்றனர். இப்படிச் செய்வதால், விற்பனையாகும் பிரதி களின் எண்ணிக்கை கூடலாம். ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை யும்; அவர்கள் வெளியிடும் செய்திகள் ஏற்படுத்துவது ஒரு வகை மயக்கமே - அந்த மயக்கம் மறு நொடியில் தெளிந்து விடும் என்பதையும்; கடைசியில் அவர் களுக்கே அது பாதகமாகி விடும் என்பதையும்; தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்பதையும் அவர்கள் உணராமல் இருப்பது தான், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

சில பத்திரிகையாளர்களின் சதித் திட்டம்

தமிழ் ஓவியா said...

குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டுமானால்; 2011 பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்து, மூன்றாவது இடத்துக்கு வந்ததற்குப் பிறகு; நல்ல சமயமடா நழுவ விடாதே - என்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஜென்ம விரோதிகள் எனத் தம்மைத் தாமே நினைத்துக் கொண்டிருக்கும் ஒருசில பத்திரி கையாளர்கள் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, திராவிட முன்னேற்றக் கழ கத்தை ஒழித்துக் கட்ட இதுவே சிலாக்கியமான தருணம் என்று முடிவெடுத்து காரியத்தில் இறங்கி இருப்பது கண்கூடு. இதற்கு மேலி டத்து ஆசீர்வாதமும் அரவணைப் பும் அறிவுரைகளும் உண்டு என்பதை அனைவரும் அறிவர். தீட்டப்பட்ட சதித் திட்டத்தின் தொடர்ச்சியாகத் தான் - கழக முன்னணி யினரைக் காயப்படுத்தி, கலகமூட்டிக் குழப்பம் ஏற்படுத்திடும் கற்பனையான செய்திகள், என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றி யும் இட்டுக் கட்டிய பொய்யுரைகள் அபாண்டமான முறையிலும், அதிர்ச்சியூட்டத் தக்க வகையிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. நமது கவனத்தைத் திசை திருப்புவதற் காகவே வெளியிடப்படும் அந்தச் செய்திகளை அவ்வப்போது மறுத்து விளக்கமளிப்பதும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் கால விரயத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பெரிதாக எண்ணி அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக அலட்சியப்படுத்தப்பட் டன. அலட்சியம் செய்ததையே ஆதாயமாகக் கருதி, ஆட்டைக் கடித்து . . . . .மாட்டைக் கடித்து ....... என்பார்களே அதைப் போல, அருவருக்கத்தக்க கட்டுக்கதைகளை, எவ்வித நாகரிகமுமின்றி வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். என்னைப் பற்றிக் கூட நான் எப்போதும் கவலைப்படுவதில்லை, ஆனால் ஒரு பெண்மணியைப் பற்றி, அதுவும் கணவனுடனும், குழந்தைகளுடனும் குடும்பம் நடத்தி வாழ்ந்து கொண்டு, கட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருப்பவரைப் பற்றி நாராச நடையில் கொச்சைப்படுத்தி எழுதுவது முறை தானா? தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள் கிறார்களா? அந்தப் பத்திரிகையாளர் கள் தங்களுக்கும் குடும்பம் - பிள்ளை குட்டிகள் இருப்பதை மறந்து, சேற்றை அள்ளி வீசுகிறோமே, அதனால் கைகள் கறை ஆவதோடு, மற்றவர் மனம் எப்படியெல்லாம் வேதனைப்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பணம் தான் எல்லாம்; பண்பாடு - பத்திரிகா தர்மம் போன்ற நெறிமுறைகள் பழங்குப்பை தான்!

சேற்றை வீசுவோர்மீது நடவடிக்கை

நான் கடந்த எழுபது ஆண்டுகளுக் கும் மேலாகப் பத்திரிகையாள னாகவே வளர்ந்து வந்திருக்கிறேன். எனது கைகளைக் கொண்டே என்னை அடிப்பதா என்ற தயக்கத் தில் இதுவரை அமைதியோடு பொறுமை காத்து வந்தேன். பத்திரி கையாளர்கள் சிலர், என்னைப் பொறுமையின் விளிம்பிற்கே தள்ளிக் கொண்டிருப்பது எனக்குப் புரி கிறது. எனவே சேற்றை வாரி வீசுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கலாமா அல்லது கட்சி ரீதியாக அந்தப் பத் திரிகை அலுவலகத்தின் முன்னா லேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்றிருக்கிறேன்.

கழகத் தோழர்கள், உள்நோக்கம் கொண்ட இத்தகைய செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல் - சதித் திட்டத்தை நிறைவேற்ற இறுக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கும் இனவெறிக் கூட்டத்தின் செய்தி களையும், ஏடுகளையும் புறந்தள்ளி விட்டு - என்றும் போல் கட்சிப் பணி - மக்கள் பணி ஆற்றி, வெற்றி காண வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாகக் கழகத் தோழர்கள் எத்தகைய ஏடுகள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றன என் பதைப் புரிந்து கொண்டு, அத்தகைய இதழ்களை வாங்குவதில்லை, அவற் றைக் கையாலும் தொடுவதில்லை என்று அந்தந்த கிளைக் கழகத்தின் சார்பில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதுபற்றிய செய் தியை முரசொலிக்கு அனுப்பிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள் கிறேன்.

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லைபிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, _ 22.6.1973)

தமிழ் ஓவியா said...

பொள்ளாச்சி திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்


டெல்டா அல்லாத வறண்ட மற்றும் நிலத்தடி நீர் இல்லாத மாவட்டங்களுக்கும் நிவாரணம் அளித்திடுக!

இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி தேவை; வேறு எந்த காரணத்துக்காகவும் முன்னிறுத்தப்படக்கூடாது

பொள்ளாச்சி திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்

பொள்ளாச்சி மாநாட்டில் தீர்மானங்களை சு.வேலுச்சாமி முன்மொழிந்தார்.

பொள்ளாச்சி, பிப். 16- மருந்தில் விஷம் கலப்பது போல, இடஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவு கோல் பயன்படுத்தப்படவேண்டும்; வேறு எந்தக் காரணத்துக்காகவும் முன்னிறுத்தப்படக் கூடாது என்றும், டெல்டா மாவட்டங்கள் அல்லாத - வறட்சி மற்றும் நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்பது உள்பட 14 முக்கிய தீர்மானங்கள் பொள்ளாச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (15.2.2013) நடத்தப்பட்ட ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :

ஜாதி, மத வெறிகளைத் தூண்டுவதோடு வன் முறைக்குத் தூபம் போடும் வகையில் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது காலந் தாழ்த்தாது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 :

அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தும் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. குறிப்பாக தலித்- தலித் அல்லாதார் என்று ஒரு புதிய முறையில் பிளவுபடுத்திட மேற்கொள்ளப்படும் சிந்தனை - அணுகு முறை - செயல்பாடுகள் அபாயகரமான திசைநோக்கி சமூகத்தை இழுத்துச் செல்லும் என்பதை எடுத்துக்காட்டி, சமூக எழுச்சி வரலாறு அத்தகையோரை மன்னிக்காது - மறக்காது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இம் மாநாடு சுட்டிக்காட்ட விழைகிறது.

தீர்மானம் 3 :

ஜாதி என்பதும் - அதன் விளைவான தீண்டாமை என் பதும் பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், மனிதத் தன் மைக்கும் விரோதமானதால் அந்தப் பிறவி பேதங்களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4 :

தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5 : சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மிகவும் முக்கியமான இவ்விரு சக்திகளும் இணைந்து போராடி பல உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இருகரங்களாக, தோள்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நம்மில் ஒற்றுமை நீங்கின் ஆதிக்க சக்திகள் தலைஎடுக்க ஏதுவாகும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.

இச்சமூகங்களை வழிநடத்தும் தலைவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிளவு மனப்பான்மையை, பகைமை உணர்ச்சியை மறந்தும் கூட ஏற்படுத்தாது, சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6 :

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று இம்மாநாடு அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7 :

சட்டத்திருத்தம் தேவை

இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8 : இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY) ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9 : (அ) ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஆ) ஜாதி - தீண்டாமை என்பவை குற்றமானவை. மனிதநேயத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரா னவை என்ற உணர்வை தொடக்க நிலையிலேயே மாணவர்களுக்குப் போதிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்

(இ) ஜாதி என்ற அளவுகோல் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும், மருந்தில் நோய்க்கொல்லியாக விஷம் சேர்க்கும் அளவு பயன்படுத்தப்படவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக்கூடாது என்றும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. இதுவும் கால வரை யற்றதல்ல; ஒரு சமனியம் பெறும் வகையில் மட்டுமே!

தமிழ் ஓவியா said...

(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப்பாகப் போடக்கூடாது.

(உ) ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக்கூடாது.
ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப்பது தடை செய்யப்பட வேண்டும்.

(ஊ) தெருக்கள், ஊர்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் வகையில் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(எ) கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் பிள்ளைகளுக்குத் தனி இடஒதுக்கீடு தேவை

(ஏ) ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர் களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும். இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்ததத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(அய்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டும்போது, தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் பலரும் கலந்து வாழும் வகையில் கட்டித் தருவதே சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு நிரந்தர வழிவகுக்கும் என்பதை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொள்ள இம்மாநாடு வற்புறுத்துகிறது.


தீர்மானம் 10 :

மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒத்த கருத்துள்ளவர்களை, அமைப்புகளை இணைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 11 :

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது என்ற ஆக்க ரீதியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 12 :

சிலை திருட்டுப் போன்றவற்றிற்குக் காவல் துறையில் தனி உளவுத்துறை இருப்பது போல ஜாதி, மத மோதல்களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

(அ) இன்னும் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை, சுடுகாடு மற்றும் சுடு காட்டுக்குச் செல்லும் பாதைப் பிரச்சினைகள், கோயில் திருவிழாக்களில் ஜாதியச் சிக்கல்கள் அவற்றின் காரணமாக கலவரங்கள் - இவற்றிற்கு இடம் இல்லாத அளவுக்கு இராணுவத் தீர்வு போல செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளுக்குத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 13 :

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல வறண்ட, நிலத்தடி நீர் குறைந்து போன மற்ற மாவட்ட விவசாயிகளுக்கும், குறிப்பாக பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் அரசு மானியம் வழங்க முன்வரவேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 14 :

ஊட்டி பிலிம் தொழிற்சாலை

ஊட்டி பிலிம் தொழிற்சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் அது இன்னும் வழங்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி மய்ய அரசு தக்க நடவடிக்கை மேற்காண்டு விரைவாக ஊட்டி பிலிம் தொழிற்சாலைக்கு போதிய நிதி கிடைக்கச் செய்து ஊட்டி பிலிம் தொழிற் சாலை நன்கு செயல்பட ஆவன செய்ய மத்திய நிதி அமைச்சரையும் மத்திய அமைச்சரவையையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!


இறுதியாக தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப்படவே இல்லை.

இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத் தையும் உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.

எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது. மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியேகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான்.

தமிழ் ஓவியா said...

அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட் டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.

அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்? நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.

1925லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும்.

சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.

சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

(10.7.1965 அன்று முதுகுளத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை -விடுதலை 7.8.1965).

தமிழ் ஓவியா said...


சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி - 2


சென்ற வாரம் இத்தலையங்கத்தின் கீழ் சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிக்கை, பிராமணரல்லாதாருக்கும், முக்கியமாய் பிரா மணரல்லாத தேசத் தொண்டர்களுக்கும், விரோதமாய் வேண்டு மென்றே செய்து வரும் சூழ்ச்சிகளைப் பற்றி எழுதி, மற்றும் மறுமுறையென்று எழுதியிருந்தோம்.

அவற்றில் முக்கியமாக ஸ்ரீமான். ஈ.வெ. இராமசாமி நாயக்கரைப் பற்றி தன்னாலும் தான் ஆட்சி கொண்டவர்களாலும் பொது ஜனங்களுக்கு எவ்வளவு கெட்ட அபிப்ராயத்தைக் கற்பிக்க வேண்டுமோ, அவ்வளவையும் செய்து பார்ப்பதென்றே முடிவு கட்டிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீமான், நாயக்கர் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், என்ன பேசினாலும் அவற்றைத் திரித்துப் பொது ஜனங்களுக்குத் தப்பபிப்பிராயப்படும்படி கற்பனை செய்து பத்திரிக்கைகளிலெழுதுவதும் அவற்றிற் கேற்றாற்போலவே சில ஈனஜாதி நிருபர்களை அங்கங்கே வைத்துக் கொள்ளுவதும், அவர்கள் பேரால் ஸ்ரீமான் நாயக்கர் சுயராஜ்யம் வேண்டாமென்கிறார், ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டார், அதிகாரவர்க்கத்தோடு கலந்து விட்டார், காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாயிருக்கிறார் என்று இவ்வாறாக அப்பத்திரிக்கை எழுதி வருகிறது.

தமிழ் ஓவியா said...

உதாரணமாக, பொள்ளாச்சி, மதரா, அனுப்பர்பாளையம், தஞ்சை, மாயவரம் இந்த இடங்களில் ஸ்ரீமான், நாயக்கர் பேசிய பேச்சைப் பற்றி சுதேசமித்திரன் பத்திரிக்கை தாறுமாறாகவும் பிரசுரம் செய்து அதையனுசரித்துப் பல குட்டித் தலையங்கம் எழுதிவந்திருக்கிறது. சில பிராமணரல்லாதாரிடம் கையெழுத்துப் பெற்று, அவர்கள் பேரால் பிரசுரம் செய்து கொண்டும் வருகிறது.

இப்பிராமணப் பத்திரிகைகள், பிராமணரல்லா தாருக்கு விரோதமாய் இங்ஙனம் செய்யும் அயோக்கிய பிரசாரத்தையும், பிராமணர்கள் சிலர் செய்யும் முறையற்ற சூழ்ச்சிப் பிரசாரங்களையும் நாம் கண்டித்து எழுதும் போது கடினபதங்களைப் பிரயோகிப்பதாய் சிலர் கூறுகின்றனர். மனிதர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பதம் உபயோகப்படுத்த வேண்டுமேயென்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

மான வெட்கமுள்ள ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டிய பதம் வேறு, அஃதில்லாதவர்களுக்கு உபயோகப்படுத்த வேண்டிய பதம் வேறு, ஒவ்வொரு பதத்தையும் நாம் மனிதர்களுக்குத் தக்கபடி தான் அளந்து உபயோகிக்கிறோம். நாம் உபயோகப்படுத்துகிற பதங்கள் கடினபதங் களென்று சொல்லப்படுவது கூட, சிலருடைய குணத்தைக் கொஞ்சமும் மாற்ற முடியாததாய் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இன்னும் இதிலும், கடினமாகப் பதங்களைத் தேடும்படியாகி விட்டதேயென்று நமக்குவருத்தமாகத் தானிருக்கிறது. இந்த நிலையில் பிராமணரல்லாத நம்மவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுப்பதால், விஷமஞ் செய்கிறவர்களுக்கு மிகுந்த சவுகரிய மேற்பட்டுப் போய் விடுகிறது. அவரவர்களைப் பற்றி வரும்போது தான் அவரவர்கள் கவனிக்கின்றார்கள். உதாரணமாக, சுயராஜ்யா பத்திரிக் கை ஸ்ரீமான், நாயக்கரின் சென்னைப் பிரசங்கத்தைப் பற்றி, நாயக்கரின் குட்டிக்கரணமென்றும், பிள்ளையார் வேஷமென்றும், கீர்த்திக்காக தியாகம் செய்தவரென்றும், எழுதின காலத்தில், பிராமணரல்லாத மற்ற பத்திரிக்கைக் காரர்கள் பார்த்துச் சிரித்துக் கொண்டி ருந்தார்கள். இதன் பலனாய் மற்றவர் களையும்தனித்தனியாய் மேற்படி பத்திரிக்கை தாக்க ஆரம்பித்தது.

இப்படியே ஒவ்வொரு சமயத்தில் ஒருவரைப் பற்றி எழுதும்போது மற்றவர் பார்த்துச் சிரிப்பதால் பொதுவாக பிராமணரல்லாதாருடைய நிலைமையே தாழ்வடையக் காரணமாய்ப் போய்விட்டதென்பதை ஒவ்வொரு வரும் ஊன்றிக் கவனிக்கவேண்டும். இவ்விஷயத்தை யோசித்துப் பார்த்தால் பிராமணரல்லாத தேசத்தொண்டர்களுடையவும் தேசீயத்தலைவர்களுடைய வும் ஒற்றுமையின்மையும் சுயநலமுமே பிராமணரல்லாதாரை இக்கெதிக்குக் கொண்டு வந்து விட்டது.

இனியாவது இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், பிராமணரல்லாதார் தகுந்த ஜாக்கிரத்தையுடன் நடந்து, பிராமணரல்லாத சமூகமும் தீண்டாதாரென்று கூறப்படுவோர்களின் நிலைமையையும், முன்னேற்றமடையச் செய்வித்து சுயமதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுவார் களென உறுதியாய் நம்புகிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 01.11.1925

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி


பகுத்தறிவு வளர்ந்தால்...

மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


சென்னை பல்கலைக்கழகத்தில் கழகத்துணைத் தலைவர்

சென்னை, பிப்.16- நாமெல்லாம் இன்று பல்வேறு பதவிகளில் இருப்பதற்கு காரணம், தந்தை பெரியார் தனக்கு கிடைத்த சென்னை ராஜதானியின் பிரதமர் பதவியை மறுத்ததால்தான் என்று திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

சென்னைப் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை சார்பாக ஆய்வு மாணவர்களுக்காக பல்கலைக்கழக வளாகத்தில் 06.02.2013 அன்ற பிற்பகலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை வரலாற்றுத்துறை சார்பாக பேராசிரியர் கருணானந்தம் ஒருங்கிணைத்தார்.

பேதமற்ற இடம்தான் மேலான இடம்

ஆய்வு மாணவர்களுக்கு சிறப்பு பேச்சாளரை பேரா.கருணானந்தம் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் தனது அறிமுக உரையில், சிறப்பு பேச் சாளரின் இயக்கம் சார்ந்த செயல்பாடுகளை விவரித்தார். தொடர்ந்து அவர், மாற்றம், புரட்சி பற்றி குறிப்பிட்ட போது, கம்யூனிசம், காந்தியிசம், பெரியாரிசம் ஆகியன பற்றி சுருக்கமாக கூறிவிட்டு, பெரியாரிசம் மட்டும் இன்னமும் எப்படி உயிர்ப்புடன் உள்ளது என்பதை கோடிட்டு காட்டினார். மேலும் அவர், பெரியாரிசத்தின் இலக்கு பேதமற்ற இடம்தான் என்பதையும் மாணவர்களுக்கு சுட்டிக் காட்டினார்.

மானமும் அறிவும் மனிதர்க்கழகு

பேரா. கருணானந்தத்தைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் பேசினார். அவர் தனது ஆய்வுரையில், படிப்பறிவு இல்லாத மக்களிடையே பெரியார் தனது கருத்துகளை எப்படி விதைத்தார் என்பதை மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்று பெரியார் சொன்னதையும், இதை நான்கு வார்த்தைகளில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் உள்ளடக்கத்தையே காட்டிவிட்ட மேன்மையையும், திருக்குறளை விட சுருக்கமாக பேசி மக்களுக்கு விளங்கச் செய்ததையும் கூறினார்.

மக்களுக்கு அறிவு வந்து விட்டது

மேலும் அவர், தஞ்சை திலகர் திடலில் பெரியாரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் கூட்டத் தில் 80 பரிசுப் பொருட்களை மக்கள் அளித்த போது, பேசியதை வியப்புடன் நினைவு கூர்ந்தார். பெரியாருக்கு அதே இடத்தில் தொடக்கத்தில் அவரது கூட்டத்தில் பாம்பு, காளைமாடு, அழுகிய முட்டை போன்றவற்றை பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதையும், அதே இடத்தில் இன்று 80 பொருட்கள் பரிசாகத் தருவதையும் பார்த்து பெரியாருக்கு ஏற்பட்ட அய்யத்தையும் அந்த அய்யத்தையும் மக்களைப் பார்த்து, நான் ஏதாவது எனது கொள்கையில் பல்டி அடித்து விட்டேனோ, இல்லை உங்களுக்கு (மக்களுக்கு) அறிவு வந்து விட்டதோ? என்று கேட்டதையும் குறிப்பிட்டு, திராவிடர் இயக்கத்தில் பெரியாரின் ஈடு இணையற்ற அறிவுப் பிரச்சாரத்தின் மூலம் மக்கள் அறிவு பெற்ற வரலாற்றை நினைவூட்டினார்.

மகத்தான மனித உரிமைப் போர்

தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர், பெரியார் காங்கிரசில் இருந்த பொழுதே, சேரன் மாதேவியில் உள்ள குருகுலத்தில் வ.வெ.சு. அய்யரின் கபட நாடகத்தையும், அதை பெரியார் எதிர் கொண்ட நேர்மையையும் தொட்டுக் காட்டினார். மேலும், கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடந்த இந்திய துணைக் கண்டத்தில் நடந்த மகத்தான மனித உரிமைப் போர் பற்றியும், அதில் பெரியார் பெற்ற வெற்றியையும், திரு.வி.க. தனது நவசக்தி பத்திரிகையில் பெரியாரை வைக்கம் வீரர் என்று எழுதியதையும் கோடிட்டு காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெரியார் காங்கிரசில் இருந்துகொண்டே, வகுப்புரிமை தீர்மானத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வந்ததையும், காங்கிரசின் எதிர்வினையையும் சுட்டிக் காட்டி திராவிடர் இயக்கத்தில் பெரியாருக்கு இருந்த அளப்பரியா பாங்கை மாணவர்களின் அறிவில் தைக்கும்படி பேசினார்.

இன்னும் திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டார். அதன் தொடர்ச்சியாகத் தான் பெரியாரின் பணி என்ப தையும், 1929இல் செங்கல்பட்டு மாநாட்டில் விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை என்று பெரியாரின் தொண்டை விவரித்தார்.

இறுதியாக, இந்த நாட்டில் இருந்த, இருக்கின்ற பெரிய பெரிய தலைவர்கள் கூட பெரியாரின் அறிவுப் பண்ணையில் விளைந்தவர் என்று சுட்டிக் காட்டி உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து மாணவர்கள் கேள்விகள் கேட்டு, அதற்கு பொருத்தமான விடைகளையும் பெற்று மகிழ்ந்தார்கள். நிகழ்ச்சியில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


சி.நடேசனார்


பார்ப்பனர் அல்லாதாரே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழர்களே, தொழிலாளர் கழகத் தோழர்களே!

இன்று ஒரே ஒரு மணித்துளியாவது எழுந்து நின்று இந்த மனிதனை நினைவு கூருங்கள். உங்கள் குடும்பத்தாரிடமும் உற்றார் உறவினரிடமும் இந்த மனிதன்பற்றி ஒரே ஒரு தகவலையாவது சொல்லி வையுங்கள்.

திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர் என்ற பெருமைக்குரிய டாக்டர் சி. நடேசனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1937).

62 ஆண்டுகள் வாழ்ந்த இந்த மாமனிதர் பார்ப்பனர் அல்லாதாராகிய திராவிடர் என்ற இனம் இருக்கும் வரைக்கும் இதயப் பேழையில் நன்றி உணர்வோடு சீராட் டப்பட வேண்டியவர் ஆவார்.

ஆரிய ஆதிக்க முதலைப் பிடியில் மூர்க்கத்தனமாகக் சிக்குண்டு கிடந்த திராவிடரை மீட்டுக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறை இவர்தான்.

1912இல் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் தான் திராவிடர் சங்கமாக, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக (South Indian Liberal Federation) நீதிக் கட்சியாகப் பரிணமித்தது.

டாக்டராக இருந்து அவர் ஈட்டிய பொருள் எல்லாம் பொது நலம் என்ற கழனிக்கே பயன்படுத்தப் பட்டது.

அவரால் ஆக்க ரீதியாக உருவாக்கப்பட்ட திராவிடர் இல்லம் (Hostel) பார்ப்பனர் அல்லாதார் கல்விக்குப் பால் வார்த்த தாய் வீடாகும். ஏழை -எளிய மக்களுக்குத் தங்கும் வசதி, இலவச உணவு அளித்து நம் மக்களை உச்சிமோந்த பெருமகன் ஆவார்.

இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி அவர் களும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் அவர் களும் ஆவார்.

சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீர்மா னத்தை இப்பொழுது நினைத் தாலும் மயிர்க் கூச்செரியக் கூடியதாகும்.

பார்ப்பனர் அல்லாதா ருக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்கும் வரை, இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதா ருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர் மானத்தைக் கொண்டு வந்தார் (5.8.1921).

கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கைக்குக் கல்லூரிக் குழு அமைக்க வழி செய்தவரும் இந்தப் பெருமகன்தான்.

ஒரு நடேசன் நலிந்தால் நாம் நலிவு கொண்டு விடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக! - என்று தலையங்கம் தீட்டியது குடிஅரசு (21.12.1937)

வணக்கம் செய்வீர், திராவிடர்களே - இந்த வாழ்வித்த வள்ளலுக்கு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி


இனி வரும் புதிய அரசியல் திட்டத்தை வழங்க, நமது சுயமரியாதையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால் Sweep The Polls என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக் கொள்ள என்ன தடை?

இவர்கள் முன் யார் நிற்கிறார்கள்? இவர்கள் முன் யார் இருப்பினும், எந்த மகாசபையாக இருப்பினும் சுயமரியாதைத் தொண்டர் கள்முன் பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்று சொல்லலாம்.

- இவைகளின் சிறப்பை யோசிக்குங்காலை, உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு There is a Great Future என்று சொல்லலாம். இனி வருங்காலத்தில் உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்குச் சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகின்றது. ஆனால் எதிர்கால செல்வாக்கு உங்கள் தளரா வன்மையும், ஆற்றலையும் விட முயற்சியை யும் பொறுத்தது - சுயமரியாதையோருக்கு மதங்கள் ஒழிந்து விட்டதென இன்று கூறலாம்.

இந்த இயக்கம், முதலில் லூத்தர் மிஷன் மதத்தைப் போல், மதங்களைச் சீர்திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து, இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலி ருந்து எடுத்து விடும் போல் தோன்றுகிறது. உங்கள் இயக்கத்தால் தமிழ்நாட்டில் பல்லாயிரவர் வாயில் கட வுளென்ற பெயரைப் பய பக்தியோடு உச்சரிப்பது போய், பரிகாசம் செய்யும் நிலைமையில் வந்துவிட்டது

கடவுளென்ற ஒருவர் இருப்பாராயின், அவர் என்முன் வருவாராயின், அவர் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு சுயமரியாதை யுணர்வுடன் எழுதுகிறார்! இல்லாத மனப்பான்மை, நமது தமிழ்நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு, நமது தோழர் ஈ.வெ.ராமசாமி செய்த அருந்தொண்டும் உழைப்புமே ஆகும் (குடி அரசு 13.11.1932) என்று குடிஅரசு இதழில் எழுதிய சிந்தனைச் சிற்பி மயிலை சிங்காரவேலரின் பிறந்த நாள் இந்நாள் (1860).

மீனவர் சமூகத்தில் பிறந்த அவர் அந்தக் கால கட்டத்திலேயே வழக்குரைஞர் ஆனவர். சுதந்திரப் போராட்டத்துக் காக வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தவர்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து அவர் எழுதிய கட்டு ரைகள் அந்தக் கால கட்டத்தில் மகத்தானவை. குடிஅரசு இதழை அதற்காகப் பயன்படுத் திக் கொள்ள வாய்ப்பும் அளித் தார் பெரியார். இன்னும் சொல்லப் போனால், தனக்கு மாறுபட்ட தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அப்படியே பதிவு செய்ய சிங்காரவேலருக்கு வாய்ப்பளித்த பெருந்தன்மையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

வெறும் வர்க்கப் பேதத்தை மட்டும் பேசவில்லை. அதைவிட முதன்மையான வருணபேதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத் தவர். சென்னையில் முதல் நாத்திக மாநாட்டை நடத்தி முதல் நாத்திகன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்டு அவர். போர்க் குண மிகுந்த செயல் முன்னோடி பொதுவு டைமைக் கேகுக. இவன் பின்னாடி என்றார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இத்தகைய சிந்தனைச் சிற்பியின் பிறந்த நாள் இந்நாள் (1860). அந்த மாவீரருக்கு ஒரு புரட்சி வணக்கம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.

(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...

வார ஏட்டுக்கு ஒரு சூடு! இது விபச்சாரத்தைவிட இழிவானது குமுதம் ரிப்போர்ட்டர் இதழைக் கண்டித்து சுப.வீ.


சென்னை, பிப். 19- கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.

ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?

மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.

இருவரின் உடல் களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து, வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப் பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதைவிட இழிவானது. (பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்தெறிந்தார்).

(16.2.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது).

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!


பிரபாகரன் மகன் படுகொலைப் படங்கள் பொய்யா?

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்!

பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு


மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனைப் படுகொலை செய்ததோடு அல்லாமல் அந்த உண்மைச் செய்தியை - வெளியில் வந்த படங்களை பொய்யென்று கூறி உலக மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் இலங்கை அரசின் தூதரக அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே - மாவீரன் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாக மார்பில் அய்ந்து குண்டுகளைப் பாய்ச்சிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட படங்களை உலகெங்கும் பரப்பி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டார்.

இன்று உலகளவில் பேசப்படும் முதல் நிலைச் செய்தி இதுதான். இதன் மூலம் இலங்கை சிங்கள இனவாத அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மனிதாபிமானமற்ற கொடிய இட்லர் முகம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் ஒரு கால கட்டத்தில்...

அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசால் இலங்கைக்கு எதிராகப் புதியதோர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள ஒரு கால கட்டத்தில் இப்படி ஒரு செய்தி உலகெங்கும் தொலைக்காட்சி மூலம் அதிரடியாக வெளி வந்திருப்பது - இலங்கை அரசின் மீதான உலகப் பார்வை மேலும் கொழுந்து விட்டு எரியக் கூடிய நிலைதான். போர்க் குற்றவாளிதான் ராஜபக்சே என்பதற்குக் கூடுதல் சாட்சியமாகும்.

மிகப் பெரிய நெருக்கடியில் இலங்கை அரசு

கடுமையான - அதேநேரத்தில் உண்மையான இந்தக் குற்றச்சாற்றிலிருந்து எப்படியாவது விடுவிக்கப்பட வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடிப் பள்ளத்தாக்கில் இலங்கை அரசும், ராஜபக்சேவும் தள்ளப்பட்டு விட்டனர்.

பொய்தானே - இந்தக் கொடியவர்களின் கையில் உள்ள கேடு கெட்ட பொல்லாத ஆயுதம்?

ஹிட்லரும், முசோலினியும், இடி அமீன்களும் என்றாவது உண்மைகளைப் பேசி இருக்கிறார்களா? இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் (பிரிகேடியர் ரூபன் வானிகசூர்யா) என்ற ஒருவர் பெயரால் பிரிட்டன் சேனல் 4 ஒளிபரப்புப் படங்கள் பொய்யானவை என்று மறுப்பு வெளி வந்துள்ளது.

கெல்லம்மெக்ரே திட்டவட்ட அறிவிப்பு

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரன் படம் உண்மையானதுதான்; சித்திரிக்கப் பட்டவையல்ல; வெளியிடப்பட்ட படங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார் - பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

அது மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக சிங்கள இராணுவ வெறியர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை, சரண் அடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்ற காட்சிகள் எல்லாம் விரைவில் ஒளிபரப் பப்பட உள்ளன என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித் திருப்பதன் மூலம் ராஜபக்சேயின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

28இல் முற்றுகைப் போராட்டம்!

இந்த நிலையில் உலக மக்களின் கண்களில் மிளகாய்த் தூள் தூவி உண்மைத் தகவலை முற்றிலும் தகர்த்திட வழக்கமான பொய்ப் பிரச்சாரம் என்னும் பட்டத்தை உலகெங்கும் பறக்க விட முயற்சிக்கிறார்.

ராஜபக்சேயின் இந்தக் கேவலத்தைக் கண்டிக்கும் வகையிலும், கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறிக்கும் இலங்கைப் பாசிச அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், இந்திய அரசே இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு! எனும் முழக்கத்தை முன்னெடுப்போம்.

வரும் 28.2.2013 வியாழன் காலை 11 மணிக்கு சென் னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.

தமிழின உணர்வாளர்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்றுபடுவோம் வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்