Search This Blog

15.2.13

குரைக்கும் குமுதம் ரிப்போர்ட்டரே, நிறுத்து, உன் ஊத்தை வாயை!


இந்த வார 'குமுதம்  ரிப்போர்ட்டர்' (21.2.2013) எனும் அக்கப் போர் இதழில்,

"கொந்தளிக்கும் குடும்ப உறவுகள்" என்று தலைப்பிட்டு கலைஞர் அருகில் குஷ்பு இருப்பதாக அட்டைப் படம் போட்டு "இன்னொரு மணியம்மை?"  என்றும் தலைப்பிட்டுள்ளது.


உள் பக்கத்தில் 3 பக்கங்களில் க(கா)ட்டுரை தீட்டப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு தி.மு.க. - அதன் தோழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் அன்னை மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தும் "குக்கல்கள்" மரியாதையாக மன்னிப்புக் கோர வேண்டும்.

வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தந்தை பெரியார் ஒருவரே இந்த இனத்தினைக் காக்கும் மீட்பர் - அவருக்குத் தொண்டு செய்து கிடப்பதே என் பணி என்று தம் வாழ்வை முற்றிலும் ஒப்படைத்த அன்னையைக் கேவலப்படுத்தும் கயமையை  "வேறு தொழில்!"  செய்ய வேண்டியவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு வந்துவிட்ட காரணத்தால் கண் மூடித்தனமாக - கொச்சைப்படுத்தினால் அதனைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிஞ்சிற்றும் இல்லை.


பெரியார் திரைப்படத்தில் குஷ்பு அவர்கள் மணியம்மையாராக நடித்ததால், அவர் மணியம்மை ஆகிவிட மாட்டார் - நினைவில் இருக்கட்டும்!

அன்னை மணியம்மையாரை சட்டப்படிக்கான ஒரு நிலையாக திருமணம் என்ற பெயரில் இயக்கத்திற்கு ஓர் ஏற்பாட்டினைச் செய்தார் தந்தை பெரியார் என்பது நாடறிந்த உண்மை! அவரின் தந்தையாரும் திராவிடர் கழகத்தவர் - பெரியார் பெருந்தொண்டர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

தொடக்கத்தில் அம்மா பற்றி எதிர் விமர்சனம் செய்த அறிஞர் அண்ணாவே, பிற்காலத்தில் அந்தக் கருத்தினை மாற்றிக் கொண்டார்.

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்ன வரலாறெல்லாம் இந்தக் "கத்துக்குட்டி"களுக்குத் தெரியுமா?

"என் காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும்.  ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை)  தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது என்றார் தந்தை பெரியார்.

(விடுதலை தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.1967).

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்? - என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இத்தகைய தொண்டின் தூயத் தாயை சம்பந்தமில்லாமல்  முடிச்சுப் போட்டு, மானமிகு கலைஞர் அவர்களின் குடும்பம் மற்றும் கழகத்தில் குழப்பம் ஏற் படுவதற்கு உவமானமாகக் கூறுவதைக் கழகத்தவர்கள் மட்டமல்ல; தன்மானத் தமிழர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.

நடிகைகளின் அந்தரங்க வாழ்வையெல்லாம் அலசி நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்ற ரீதியில் பத்திரிகை நடத்தவோர் யாரைப்பற்றி எழுதுகிறோம்? அவர்களின் உயர் பண்பு - பற்றி என்னஎன்பதைப் பற்றியெல்லாம் கவனம் - கவலை கொள்ளாமல் நாய் விற்றக் காசு குரைக்காது என்ற தன்மையில் கீழ்த்தரத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம். இதைவிட டபுள் எம்.ஏ. வேலை பார்க்கலாமே! ஊழலில் சிக்கி, தன்னைக் காப்பாற்றும்படி  முதல் அமைச்சர் கலைஞர் காலில் விழுந்து கண்ணீர் விட்டுக் கதறித் தப்பிய கதை எல்லாம் தெரியாதா?

தி.க. தலைவர் வீரமணி கருணாநிதியை வாழும் பெரியார்! என்று சொன்னதாக இந்தக் கழிசடை ஏடு எழுதுகிறதே!  இதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? எங்கே சொன்னார்? எப்பொழுது சொன்னார்? விரலை மடக்க முடியுமா?

பெரியார் ஒருவர்தான். ஆம்,  பெரியார் ஒரே ஒருவர்தான்! தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களும் அப்படி சொன்னதும் இல்லை. மானமிகு கலைஞர் அவர்களும் அதனை நம்புபவரும் அல்லர்.


பெரியார் இயக்கத்திற்குச் செய்த ஏற்பாடு மிகச் சரியானதுதான் - பெரியார் தொலை நோக்கோடு  செய்த ஏற்பாடு நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்திற்கு, இயக்கத்திற்கு அறக்கட்டளைக்குத் தலைமையேற்று சிறப்பாகச் செயல்பட்டு நிரூபித்துக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.


தந்தை பெரியார் நலனைக் காப்பதிலும், அவர்களின் மறைவிற்குப்பின் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும் கருத்துச் செலுத்தி உழைத்த அன்னையார், தன் உடல் நலம் பேணாது, 59 வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாகத் தலைவரை, தொண்டின் இலக்கணத்தை - வகை தொகை அறியாமல், வக்கிரப் புத்தி யோடு பொருத்தமற்ற இடத்தில் இணைத்து எழுதியது கண்டிக்கத்தக்கது.

அறிவு நாணயம் இருந்தால், பண்பாடுபற்றி அக்கறை இருந்தால் குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கழகத் தோழர்களே அமைதி காப்பீர்களாக!

                              மின்சாரம்  அவர்கள் 15-2-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

12 comments:

தமிழ் ஓவியா said...


சபாஷ்! சரியான நடவடிக்கை!


வில்லிவாக்கத்தில் நடைபாதைக் கோயில் இடிக்கப்பட்டது

வில்லிவாக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகர் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கினர்

அம்பத்தூர், பிப்.15- வில்லிவாக்கம் சிவன் கோவில் மேற்குமாட வீதியில் வடக்கு மாடவீதி சந்திப்பு வளைவில் சாலையோரம் தாண்டவ விநாயகர் கோவில் அமைந்து இருந்தது. இந்த கோவில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த தசரதன் தொடர்ந்த வழக்கில் கோவிலை அகற்றுமாறு கடந்த 2011-ஆம் ஆண்டு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கோவிலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முடிவைக் கைவிட்டதாக கூறப்படு கிறது.

இந்த நிலையில், அண்ணாநகர் மண்டல அதிகாரி சிவஞானம் தலை மையில் செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வரங்கம் ஆகியோர் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்றினர். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க வில்லி வாக்கம் காவல்துறை ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

பொது இடத்திலோ அரசுக்குச் சொந்தமான இடத்திலோ கோயில் களைக் கட்டக் கூடாது; அப்படி கட்டியிருந்தால் அவற்றை அப்புறப் படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் எம்.கே. சர்மா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டி லேயே ஆணையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


நாய்களுக்கு திருமணம்

கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் நடத்தி வைத்தால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று இவர்களின் இந்து மத சம்பிரதாயம் அல்லவா?

அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கல்யாணம் செய்து வைக்கும் கபோதிகள்,

நாய்களுக்குத் திருமணம் செய்து வைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாட்டியாகக் கொண்டவன் இவர்களின் பிரம்மாதானே - வெட்கக்கேடு!

தமிழ் ஓவியா said...


குறைந்தே போகும்!

மக்களின் அறிவைக் கிளறிவிட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும்படிச் செய்து-விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தேபோகும். (விடுதலை, _ 16.10.1960)

தமிழ் ஓவியா said...


இராமேசுவரம், நாகையில் ஆர்ப்பாட்டம் ஏன்?


பிப்ரவரி 18 அன்று இராமேசுவரத்திலும் பிப்ரவரி 19 அன்று நாகப்பட்டினத்திலும் தமிழக மீனவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும், அவர்களுக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அவசியம் தேவை என்பதை வலியுறுத்தியும் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான அவசியம் ஏன் என்பதுபற்றி விளக்கம் தேவைப்படாது, காரணம் அன்றாடம் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுதல் என்பது ஒரு தொடர் கதையாகவே ஆகியிருப்பதை நாடு அறிந்து கொண்டு தானிருக்கிறது.

தமிழக மீனவர்களுக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு - இந்தப் பிரச்சினையில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்பதை ஒப்புக் கொண்டே தீர வேண்டும். நமக்குச் சொந்தமான தீவை இன்னொரு குட்டித் தீவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, சோறு போட்டு உதை வாங்கிய கதையாக அல்லவா இந்தியா ஆகிவிட்டது!

உலகில் வல்லரசு பட்டியலில் இடம் பெறப் போவதாகத் தோள் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியா என்ற துணைக் கண்டம் ஒரு சின்னஞ் சிறு குட்டித் தீவிடம் அன்றாடம் அவமானப்படு கிறது என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றே.

மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் எடுத்து வைத்த கருத்து இந்த இடத்தில் கருத்தூன்றத் தக்கதாகும்.

1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் கச்சத் தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம் நடந்தது. அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரன்சிங் இந்த ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை கடற்படை உரிமைகள் பாதுகாக்கப் பட்டுள்ளதாகவும், கச்சத் தீவில் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். 1976இல் இரு நாட்டுச் செயலாளர்களிடையே ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின்படி மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதங்கள் நாடாளுமன்ற ஒப்புதலையோ, தமிழ்நாடு அரசின் ஒப்புதலையோ பெறவில்லை. அரசியல் சட்டத்தைத் திருத்துவதன் மூலமும், நாடாளு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதின் மூலமே இந்தியாவின் எப்பகுதியையும் பிற நாட்டுக்குக் கொடுக்க முடியும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும். உலகிலேயே இறால் மீன் அதிகம் கிடைக்கும் பகுதி கச்சத்தீவே! என்று கர்ச்சனை செய்தாரே! இதன்மீது நியாயமாக இந்திய அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டாமா?

எத்தனையோ முறை இந்திய அரசு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், வருத்தத்தை (Concern) த் தெரிவித்தும், ஏற்பட்ட பலன் ஏதுமில்லை. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

உலகில் வேறு பல நாடுகளிலும் மீன்பிடித் தொழிலில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய் கின்றன. அந்த நாடுகளில் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களா?

இந்தச் சின்ன விவரம் கூடத் தெரிந்து வைத்திருக்கவில்லையா - இந்திய அரசு? தெரிந்து வைத்திருந்தும், தமிழர்கள் பிரச்சினை தானே என்ற மாற்றாந் தாய் மனப்பான்மை, இளக்காரக் கண்ணோட்டம் காரணமாகத்தான் இவ்வாறு நடந்து கொள்கிறது இந்திய அரசு என்று தமிழ் நாட்டு மக்கள் நினைத்தால் அது குற்றமாகாது.

உலகநாடுகள்கூட இந்தியாவைப்பற்றி என்ன நினைக்கும் - எப்படி எடை போடும்?

ஒரு சுண்டைக்காய்த் தீவிடம் இந்தியத் துணைக் கண்டம் இப்படிப் பலகீனப்பட்டுப் போகிறதே என்று நினைக்க மாட்டார்களா?

தமிழ்நாட்டு மக்கள், மீனவர்கள் பிரச்சினை தானே என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. மீனவர்கள் யார்? அவர்களும் தமிழர்கள்தானே? அவர்கள் பாதிக்கப்பட்டாலும் நாம் பாதிக்கப் படுவதாகத் தானே பொருள்?

இராமேசுவரம், நாகை ஆகிய இடங்களில் டெசோ சார்பில் நடத்தப்பட இருக்கும் ஆர்ப் பாட்டத்தில் இலட்சக்கணக்கில் தமிழர்களே, திரள்வீர்! திரள்வீர்!!

கத்தும் கடல் அலைகள் தோற்கும் வண்ணம் தமிழர்களின் உரத்த குரல் - ஓங்கி ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

தமிழ் ஓவியா said...


நடைபாதைக் கோயில்கள்

கோவை இரத்தினபுரியில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கியப் பகுதியாகி இரத்தினபுரி லட்சுமி அம்மாள் தெருவில் திடீர் என பொது மக்கள் பெயரை பயன்படுத்தி, விநாயகர் சிலையை நிறுவி, விநாயகர் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் சிலர் முயற்சித்தார்கள். ஆனால் இரத்தினபுரி காவல்துறையினரின் சரியான முடிவால் சிலை அகற்றப்பட்டு அப்புறப்படுத்திய நேர்மையான, துணிச் சலான நடவடிக்கையை பாராட்டுகிறோம். இதே போன்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், பொது மக்களுக்கு இடை யூறாக கோயில் கட்டாமல் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு நிகழாமல் இருக்க உதவும். அவ்வாறு அப் புறப்படுத்திய அதே இடத்தில் விநாயகர் சிலையை நிறுவக் கோரி சில அமைப்புகள் மனுக் கொடுத்துள்ளார்கள் என்பதை பத்திரிகை வாயிலாக தெரிந்து கொண்டு இந்த மடலை தங்களுக்கு எழுதுகிறோம்.

பக்தி என்பது தனி ஒருவருடைய சொத்து
ஒழுக்கம் என்பது பொது (சமுதாய) சொத்து

பக்தி இல்லாவிட்டால் யாருக்கும் நட்டம் இல்லை, ஒழுக்கம் இல்லா விட்டால் எல்லாமே பாழ்! என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறியது எக்காலத்திற்கும் பொருந்தும் என்பது உண்மையாயிற்று.

கோவை மாநகரிலே பல வருடங் களுக்கு முன்பாக சிறுகோவிலாக காந்திபுரம், உக்கடம் மற்றும் சில தெருமுனைகளில் கட்டிய சிறுகோவில் கள் இன்று பொது மக்களுக்கு தெரு விலே நடமாட முடியாத அளவுக்கு சாலையை அடைத்துக் கொண்டு மிகப் பெரிய கோயில்கள் ஆக்கி போக்குவரத் துக்கு இடையூறாக இருப்பதை பெரும் பான்மையான மக்கள் வெறுக்கிறார்கள். இதை தாங்களும் அறிந்ததே!

எனவே பொது மக்கள் நலம் கருதி, தயவு செய்து எந்த ஒரு மத கோவிலையும் தெருமுனையிலோ, ஓரத்திலோ நிறுவ தாங்கள் அனுமதிக்க கூடாது என்று கோவை திராவிடர் கழகத்தார் ஆகிய நாங்கள் தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பொதுநலன் கருதி தாங்கள் எடுக்கும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் திராவிடர் கழகத்தவர்கள் ஆகிய நாங்கள் தங்களுக்கு என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- மு. பிரகஸ்பதி (மாவட்டத் தலைவர், கோவை மாவட்டம்)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி


பகுத்தறிவு வளர்ந்தால்...

மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


சி.நடேசனார்


பார்ப்பனர் அல்லாதாரே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழர்களே, தொழிலாளர் கழகத் தோழர்களே!

இன்று ஒரே ஒரு மணித்துளியாவது எழுந்து நின்று இந்த மனிதனை நினைவு கூருங்கள். உங்கள் குடும்பத்தாரிடமும் உற்றார் உறவினரிடமும் இந்த மனிதன்பற்றி ஒரே ஒரு தகவலையாவது சொல்லி வையுங்கள்.

திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர் என்ற பெருமைக்குரிய டாக்டர் சி. நடேசனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1937).

62 ஆண்டுகள் வாழ்ந்த இந்த மாமனிதர் பார்ப்பனர் அல்லாதாராகிய திராவிடர் என்ற இனம் இருக்கும் வரைக்கும் இதயப் பேழையில் நன்றி உணர்வோடு சீராட் டப்பட வேண்டியவர் ஆவார்.

ஆரிய ஆதிக்க முதலைப் பிடியில் மூர்க்கத்தனமாகக் சிக்குண்டு கிடந்த திராவிடரை மீட்டுக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறை இவர்தான்.

1912இல் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் தான் திராவிடர் சங்கமாக, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக (South Indian Liberal Federation) நீதிக் கட்சியாகப் பரிணமித்தது.

டாக்டராக இருந்து அவர் ஈட்டிய பொருள் எல்லாம் பொது நலம் என்ற கழனிக்கே பயன்படுத்தப் பட்டது.

அவரால் ஆக்க ரீதியாக உருவாக்கப்பட்ட திராவிடர் இல்லம் (Hostel) பார்ப்பனர் அல்லாதார் கல்விக்குப் பால் வார்த்த தாய் வீடாகும். ஏழை -எளிய மக்களுக்குத் தங்கும் வசதி, இலவச உணவு அளித்து நம் மக்களை உச்சிமோந்த பெருமகன் ஆவார்.

இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி அவர் களும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் அவர் களும் ஆவார்.

சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீர்மா னத்தை இப்பொழுது நினைத் தாலும் மயிர்க் கூச்செரியக் கூடியதாகும்.

பார்ப்பனர் அல்லாதா ருக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்கும் வரை, இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதா ருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர் மானத்தைக் கொண்டு வந்தார் (5.8.1921).

கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கைக்குக் கல்லூரிக் குழு அமைக்க வழி செய்தவரும் இந்தப் பெருமகன்தான்.

ஒரு நடேசன் நலிந்தால் நாம் நலிவு கொண்டு விடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக! - என்று தலையங்கம் தீட்டியது குடிஅரசு (21.12.1937)

வணக்கம் செய்வீர், திராவிடர்களே - இந்த வாழ்வித்த வள்ளலுக்கு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி


இனி வரும் புதிய அரசியல் திட்டத்தை வழங்க, நமது சுயமரியாதையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால் Sweep The Polls என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக் கொள்ள என்ன தடை?

இவர்கள் முன் யார் நிற்கிறார்கள்? இவர்கள் முன் யார் இருப்பினும், எந்த மகாசபையாக இருப்பினும் சுயமரியாதைத் தொண்டர் கள்முன் பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்று சொல்லலாம்.

- இவைகளின் சிறப்பை யோசிக்குங்காலை, உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு There is a Great Future என்று சொல்லலாம். இனி வருங்காலத்தில் உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்குச் சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகின்றது. ஆனால் எதிர்கால செல்வாக்கு உங்கள் தளரா வன்மையும், ஆற்றலையும் விட முயற்சியை யும் பொறுத்தது - சுயமரியாதையோருக்கு மதங்கள் ஒழிந்து விட்டதென இன்று கூறலாம்.

இந்த இயக்கம், முதலில் லூத்தர் மிஷன் மதத்தைப் போல், மதங்களைச் சீர்திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து, இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலி ருந்து எடுத்து விடும் போல் தோன்றுகிறது. உங்கள் இயக்கத்தால் தமிழ்நாட்டில் பல்லாயிரவர் வாயில் கட வுளென்ற பெயரைப் பய பக்தியோடு உச்சரிப்பது போய், பரிகாசம் செய்யும் நிலைமையில் வந்துவிட்டது

கடவுளென்ற ஒருவர் இருப்பாராயின், அவர் என்முன் வருவாராயின், அவர் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு சுயமரியாதை யுணர்வுடன் எழுதுகிறார்! இல்லாத மனப்பான்மை, நமது தமிழ்நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு, நமது தோழர் ஈ.வெ.ராமசாமி செய்த அருந்தொண்டும் உழைப்புமே ஆகும் (குடி அரசு 13.11.1932) என்று குடிஅரசு இதழில் எழுதிய சிந்தனைச் சிற்பி மயிலை சிங்காரவேலரின் பிறந்த நாள் இந்நாள் (1860).

மீனவர் சமூகத்தில் பிறந்த அவர் அந்தக் கால கட்டத்திலேயே வழக்குரைஞர் ஆனவர். சுதந்திரப் போராட்டத்துக் காக வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தவர்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து அவர் எழுதிய கட்டு ரைகள் அந்தக் கால கட்டத்தில் மகத்தானவை. குடிஅரசு இதழை அதற்காகப் பயன்படுத் திக் கொள்ள வாய்ப்பும் அளித் தார் பெரியார். இன்னும் சொல்லப் போனால், தனக்கு மாறுபட்ட தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அப்படியே பதிவு செய்ய சிங்காரவேலருக்கு வாய்ப்பளித்த பெருந்தன்மையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

வெறும் வர்க்கப் பேதத்தை மட்டும் பேசவில்லை. அதைவிட முதன்மையான வருணபேதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத் தவர். சென்னையில் முதல் நாத்திக மாநாட்டை நடத்தி முதல் நாத்திகன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்டு அவர். போர்க் குண மிகுந்த செயல் முன்னோடி பொதுவு டைமைக் கேகுக. இவன் பின்னாடி என்றார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இத்தகைய சிந்தனைச் சிற்பியின் பிறந்த நாள் இந்நாள் (1860). அந்த மாவீரருக்கு ஒரு புரட்சி வணக்கம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.

(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...

வார ஏட்டுக்கு ஒரு சூடு! இது விபச்சாரத்தைவிட இழிவானது குமுதம் ரிப்போர்ட்டர் இதழைக் கண்டித்து சுப.வீ.


சென்னை, பிப். 19- கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.

ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?

மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.

இருவரின் உடல் களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து, வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப் பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதைவிட இழிவானது. (பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்தெறிந்தார்).

(16.2.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது).

கோவிந்தராஜூ said...

S.A.P. வளர்த்த குமுதத்தை, அவரது மனைவி மற்றும் மகன் ஜவகர் பழனியப்பன் ஆகியோரிடம் இருந்து பார்ப்பன சூழ்ச்சியுடன் கைப்பற்றிய இவரை S.A.P. ஆவி நிச்சயம் மன்னிக்காது. பார்ப்பன இயக்கம் பரப்பும் பாவம் புண்ணியம் உண்மையாய் இருந்தால் வரதராஜன் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

கோவிந்தராஜூ said...

S.A.P. வளர்த்த குமுதத்தை, அவரது மனைவி மற்றும் மகன் ஜவகர் பழனியப்பன் ஆகியோரிடம் இருந்து பார்ப்பன சூழ்ச்சியுடன் கைப்பற்றிய இவரை S.A.P. ஆவி நிச்சயம் மன்னிக்காது. பார்ப்பன இயக்கம் பரப்பும் பாவம் புண்ணியம் உண்மையாய் இருந்தால் வரதராஜன் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.