Search This Blog

27.2.13

நீ என்ன ஜாதிடா!? பார்ப்பனத் திமிர் -குறுக்கு வழியில் தீர்ப்பு வாங்க வந்த துறவி!

இவர் - இவர்கள் புரிந்துகொள்ளுங்கள்! 

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த, முதிர்ந்த வழக்குரைஞர்களில் ஒருவர் நண்பர் ஆர். காந்தி அவர்கள். தமிழ் இனவுணர்வாளர் - தேசியவாதி - என்றாலும் கட்சியைவிட தனக்குச் சரியெனப்படுவதைத் துணிவுடன் எங்கும் கூறத் தயங்காதவர்.

ஒப்பற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சமூகநீதிக் கொடியை அவர் சென்ற பஞ்சாபில் பறக்கவிட்டதால், ஆதிக்க ஜாதிகளின் மீடியா சதிகளால் பின்னப்பட்டாலும், சற்றும் கலங்காது நெஞ்சை உயர்த்திய ஜஸ்டீஸ் வி. இராமசாமியின் இளையராக - அவரது அலுவலகத்தின் வார்ப்படங்களில் ஒருவர்.

அவர் எழுதி, இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆம், கனம் நீதிபதி அவர்களே! என்ற தலைப்பில் உள்ள அவரது தன் வரலாற்று நூலை எனக்கு நமது கழகச் சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன்மூலமாக நேற்றுமுன்தினம் (25.2.2013) அனுப்பி வைத்தார்.

இரவு கூட்டம் முடித்துச் சென்று, படுக்கைக்குப் போகும் போது அந்நூலை எடுத்துப் படித்தேன் - சுவைத்தேன்!

மிக யதார்த்தமாக எதையும் மறைக்காமல் அந்த காந்தி அண்ணல் போலவே உண்மைகளை அப்பட்டமாகப் போட்டு உடைத்துள்ளார்.

இவரது வாழ்க்கை வரலாறு என்றாலும், நம் சமூகம் எப்படிப்பட்டது என்பதை சில நிகழ்வுகள்மூலம் எல்லோருக்கும் புரிய வைக்கிறார்.

ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களுக்கு நெருக்கமான குடும்பம் இவரது குடும்பம். காங்கிரஸ் பாரம்பரியம். இவரது தாயார் மிகவும் நோய்வாய்ப் பட்ட நிலையில் இருந்தபோது, இவர் குழந்தைப் பருவத்தில் - தியாகியான அவரது தந்தை தியாகி இராமசாமி (கவுண்டர்) சிறையில் தண்டிக்கப் பட்டிருந்தபோது, அவரைப் பரோலில் வெளிவந்து மரணப் படுக்கையில் இருந்த இவரது தாயாரைச் சந்திக்க வைக்க தந்தை பெரியார் அவர்கள்தான் பெரும் உதவி செய்தார் என்று நன்றி யுடன் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்!

பெரியாரின் மனிதநேயம் பற்றிய பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்தால், ஒரு நூலே எழுத முடியும்.

முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தினங்களான டி.கே.எஸ் சகோதரர்களில் டி.கே. சண்முகத்தின் மனைவி அவர்கள் க்ஷயரோகம் காரணமாக மரணத்தின் விளிம்பில் இருந்தபோது, மற்றவர்கள் ஈரோட்டில் வீடு தர மறுத்தபோது, பெரியார் ஒரு புது வீட்டுச் சாவியை தன்னிடம் தந்து, எங்களுக்குப் புகலிடம் தந்தார் என்று அவர் தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்!

இந்த நூலில், கடவுள் நம்பிக்கை யாளரான வழக்குரைஞர் காந்தி அவர்கள்  குறிப்பிடும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இதோ:

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந் திருப்பது இறைவன் மட்டுமல்ல, சில சிக்கல்களும்தான். தமிழகத்தில் அப்படி எங்கும் நிறைந்திருக்கும் ஒரு சிக்கல் தான் ஜாதிச் சிக்கல். கருவறையிலேயே ஜாதி தீர்மானிக்கப்படுகிறது. கல்லறை வரை அது தொடர்கிறது. இடையில் பள்ளிக்கூடத்தில், பணியிடத்தில் என்று வாழ்வாதார நிலையங்களிலெல்லாம் ஜாதி சப்பணமிட்டு அமர்ந்துகொள் கிறது.

நான் சென்னைப் பார் அசோசி யேஷனில் அங்கத்தினராக இருந்தேன். 1976 என நினைக்கிறேன். ஒரு நாள் மதியம் என் வீட்டிலிருந்து நெய்ச்சோறு (பிரியாணி) கொடுத்தனுப்பி இருந் தார்கள். அதன் மணம் பார் அசோசி யேஷன் முழுவதும் பரவியது. என்ன காந்தி வீட்டில் விசேஷமா? என்று கேட்கும் அளவுக்கு அனைவரின் மூக்கிலும் நுழைந்து மூளை வரை சென்றது அந்த மணம்.

அடுத்த நாள் முன்னாள் அட்வகேட் ஜெனரல் திரு.வி.கே. திருவேங்கடாச் சாரி, டேய் காந்தி! இங்கே வாடா! என்றென்னை அழைத்தார். பொதுவாக எல்லாரையும் அவர் டேய் என்றுதான் கூப்பிடுவார். நானும் மரியாதை நிமித் தமாகச் சென்று, சொல்லுங்க என்றேன். நீ என்னமோ கறி தின்கிறியாமே, அதுவும் பார் அசோசியேஷனில் கறி சாப்பிடுகிறாயாமே! என வினவினார். எனக்குச் சுருக்கென்றது. ஆனாலும், ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தது. காரணம், பிராமணர்களின் மூக்கைக்கூட என் வீட்டுப் பிரியாணியின் மணம் விட்டு வைக்கவில்லையே என்று. உடனே, நான் கறி மட்டுமா? மீன், கோழி, கருவாடு எல்லாம்கூட சாப்படுகிறேன். இதனால் யாருக்கு என்ன இழப்பு? என்று துணிச்சலாகக் கேட்டுவிட்டேன்.

சில வயதான பிராமணர்கள் வயிறு எரிந்து பேசினார்கள். அதனால்தான் உன்னிடம் சொன்னேன் என்றார். நல்லவர்கள், வயிறு எரிந்து பேசினால் தான் நாடே நலிந்து போகும் என மனத்தில் நினைத்துக்கொண்டே என்னோடு அமர்ந்து சில பிராமணர்களும் கறி உண்ணுகிறார்களே! அதை என்ன சொல்லுவது? என்று மறுமொழியாகக் கேட்டேன்.

என் வினாவுக்குச் சற்றும் தொடர்பே இல்லாமல் அடுத்த வினா எழுப்பினார் அவர். நீ என்ன ஜாதிடா? என்றார். ஒருபுறம் கோபம். மறுபுறம் அதிர்ச்சி. என்றாலும், அவற்றை வெளிக்காட்டா மல், நான் பறையன்தானுங்க என்றேன். இப்போது அவர் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டார். அதை வெளிப்படுத்தியும் விட்டார். பறையன் தெரியாதுங்களா? எஸ்.சி.,யில ஒண்ணு என்றேன். அவ்வளவுதான், நீ கறியாவது சாப்பிடு! வேறு எதையாவது சாப்பிடு! என்று கோபமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டார்.

வி.கே.டி. (V.K.T.) என்ற மூன்றெழுத்து உயர்நீதிமன்றத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற பெயர். மிகச் சிறந்த அறிவாளி. சட்ட நூல்களை அலசிக் குடித்தவர். காமராசர், பக்தவத்சலம், போன்ற முதலமைச்சர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட மாபெரும் மனிதர் நான் புலாலுணவு சாப்பிட்டேன் என்பதற்காக நீ என்ன ஜாதிடா எனக் கேட்டதுதான் இன்னும் வருத்திக் கொண்டிருக்கிறது. அன்று சாப்பிட்ட கறி செரித்துவிட்டது. ஆனால், அவர் கேட்ட வினா இன்னமும் செரிக்க வில்லை.

நீதித்துறையிலும் ஜாதி ஆணவத்தை எக்ஸ்-ரே படம்மூலம் அல்லவா காட்டுகிறார்?

இரண்டாவது சம்பவம்:

காவிகளுக்குள்ளே ஒளிந்துள்ள கர்வமும், கபடமும் எப்படி என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது!

அருட்செல்வர் என்ற பட்டத்துக்கு உரியவர்தாம் அருட்செல்வர் திரு. மகாலிங்கம் அவர்கள். ஆன்மிகத்திலே மிகுந்த ஈடுபாடு உடையவர். வள்ளலார் நெறி போற்றுபவர். ஆண்டுதோறும் வள்ளலார், காந்தி விழாவினை அக்டோபர் மாதம் சிறப்பாக நடத்தி வருபவர். தமிழ்மொழியின்மீது அள விலாத பற்றுடையவர். தமிழ் நூல்கள் வெளியிடுவதற்கும் தமிழறிஞர்களுக்கு உதவிகள் பல செய்து வருபவர். தொழிலதிபர் என்றாலும், எளிமையாக இருப்பவர். இப்படி இவர் சிறப்புகளின் அணிவகுப்புப் பெரியது. என்னுடைய இனிய நண்பர்.

ஒரு நாள் இவரின் உதவியாளர் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். திருப்பராய்த் துறை ஆசிர மத்திலிருந்து சாமி வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்றார். இன்று வீட்டில்தான் இருக் கிறேன் வரச் சொல்லுங்கள் என்றேன். அன்றைய தினம் நீதிமன்றம் விடுமுறை என்பதாலும், வெளியே போகவேண்டிய பணி இல்லாததனாலும் வீட்டில்தான் இருந்தேன். நண்பகல் 12 மணியளவில் பெரிய காரிலே வந்திறங்கினார். துறவி என்பதற்கு அடையாளமான காவியுடை அணிந்து வந்திருந்தார்.
அவரை வாசலிலே இருந்து வர வேற்று என் அலுவலகத்தில் அமரச் செய்தேன். மரபு கருதி காபி சாப்பிடுகிறீர்களா அல்லது மோர் வேண்டுமா என்று கேட்டேன். மோரைவிட காபி தானே காஸ்ட்லி அதையே கொண்டு வாருங்கள் என்றார். பருகுவதிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கிறாரே என்ற எண்ணம் அப்போது என்னுள் ஓடியது. அதனை வெளிக்காட்டாமல் காபி கொண்டு வரச் சொன்னேன். வழக்கமான நல விசாரிப்புகள். பிறகு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்? நான் ஏதாவது செய்யவேண்டுமா? என வினவினேன்.

இந்த வினாவுக்காகவே காத்திருந்திருப்பார் போலும். கேட்டவுடன் அப்படி யொரு பிரகாசம் அவர் முகத்தில். வேறொன்றும் பெரிய செய்தி அல்ல. எங்கள் மடத்துப் பெரிய வழக்கொன்று கரூர் சார்பு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருக்கும் நீதிபதி உங்கள் இளவரென்று கேள்விப்பட்டேன். நீங்கள் கோடு போட்டால் அவர் தாண்டவே மாட்டாராம் எனச் சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்குச் சிரிப்புக்குப் பதிலாய் எரிச்சல்தான் வந்தது. என்றாலும், அதை உடனே வெளிக்காட் டாமல், ஆமாம்! அவர் என் இளவர்தாம். நான் கோடு போட்டால் அவர் தாண் டவே மாட்டார் என்பதும் உண்மைதான் என்றேன்.

முன்பிருந்த ஒளியைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி அவர் முகத்தில் இப்போது தெரிந்தது. மகிழ்ச்சியில் அவர் மனம் திளைத்திருந்ததை முதலில் முகம் சொல்லியது. அடுத்து அவரின் வார்த்தை சொல்லியது. மிகுந்த மகிழ்ச்சியில், அப்போது நம் வழக்கு ஜெயித்துவிட்டதுபோல்தான் என்றார். உடனே அவரை மறுத்து நான் கோடு போட்டால் என் இளவர் தாண்ட மாட்டார் என்பதை அறிந்திருக்கிறீர் கள். ஆனால், நான் கோடே போட மாட்டேன் என்பதை நீங்கள் அறிந் திருக்கவில்லையே என்றேன். இதைக் கேட்டவுடன் அவர் முகம் சுண்டைக்காய் போலச் சுருங்கிவிட்டது.

எனக்கு ஏற்பட்ட கோபத்தில் கடுமையான அறிவுரைகளை அவருக்கே சொல்லத் தொடங்கிவிட்டேன். நீங்கள் எல்லாம் துறவி என்ற பெயரில் காவியை அணிந்துகொள்வதற்கே அச்சப்பட வேண்டும். சுவாமி சித்பவானந்தர் அவர்களிடத்தில் உண்மையிலேயே நீங்களெல்லாம் தீட்சை பெற்றிருந்தால் இப்படிப்பட்ட தவறான எண்ணங்களோடு நடந்திருக்கமாட்டீர்கள் என்றேன்.

நான் சித்பவானந்தர் அவர்களின் காலில் விழுந்து அவரிடம் பலமுறை வாழ்த்துப் பெற்றதாலும், அவரின் கைகளைப் பிடித்துச் சில நாள் நடக்க வாய்ப்புப் பெற்றதனாலும் இன்றுவரை நான் தொழிலில் நேர்மையாகவும், தூய்மையாகவும் நடந்து வருகிறேன். நீங்கள் குறுக்கு வழியில் சென்று தீர்ப்புப் பெறும் செய்தி மட்டும் சுவாமி சித்பவானந்தர் அவர்களுக்குத் தெரிந்தால் கல்லறையிலிருந்து எழுந்து வந்து உங்களை அடிப்பார் என்றேன்.

துறவியர் பெருமக்கள் என்றால், சமூகத்துக்கே எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். துறவியின் சிறப்பை உணர்த்துவதற்காகவே தனியோர் அதிகாரம் படைத்திருக்கிறார் பார்புகழ் வள்ளுவப் பெருந்தகை. திருப்பராய்த் துறை மடத்துத் துறவியான இவர் இப்படிக் குறுக்கு வழியைத் தேர்ந் தெடுப்பார் என்று நான் எண்ண வில்லை. எடுத்துக்காட்டுப் பெருமக்களே ஏடாகூட மக்களாய் வாழ்ந்தால் பொதுமக்களின் கதி என்னாவது? இந்த ஆதங்கமே என்னை அவரிடம் கோபமாய்ப் பேச வைத்தது.

வந்திருந்த சாமியாரோ, மகாலிங்கம் சொல்லித்தான் வந்தேன் என்றார். உடனே நான், இந்த மகாலிங்கம் மட்டுமல்ல கைலாயத்திலிருக்கும் அந்த மகாலிங்கமே வந்தாலும், இதுதான் பதில் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டேன்.

துறவிகளுக்குக் கோபமே வரக் கூடாது என்பார்கள். ஆனால்,  இவருக்குச் சட்டென்று கோபம் வந்து விட்டது.வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்றுதான் திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். துறவியர் தன் மைக்கு மாறாக இவருக்குக் கோபம் வந்து, கொடுத்த காபியைக்கூட குடிக்காமல் சென்றுவிட்டார்.

குறுக்கு வழியில் சென்று தீர்ப்பு வாங்கத் துறவிகளே முன்வந்தால் நியாயம், தருமம் முதலியவற்றை யார் தாம் கடைப்பிடிப்பது? இந்தச் சாமியாரின் இத்தகைய நடவடிக்கையைப் பார்த்தால், இவருக்கு இதுவரை சாதகமாய் வந்த தீர்ப்புகளையெல்லாம் சந்தேகப்பட வேண்டியதாய் இருக்கிறது.

சில நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது இந்தச் சாமியார் குறித்த பேச்சும் எழுந்தது. மகாலிங்கம் அவர்கள், என்னிடம் அந்தச் சாமியார் உங்களைப் பார்க்கவேண்டும் என்று தான் சொன்னார். ஆனால், காரணத்தைச் சொல்லவில்லை. காரணம் தெரிந் திருந்தால், நானே அனுப்பியிருக்க மாட்டேன் என்று சொல்லிப் புன்ன கைத்தார்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள் களஞ்சியமாக உள்ளன! நல்ல நூல், படித்து நாமும் பயன்பெறவேண்டிய நூல்.

தோல்வியைப் படிக்கட்டாக்கி, அதன்மேல் ஏறி நிற்கும் நண்பர் அவர்.
ஏணியாய் பலரை ஏற்றி விடுபவர் இவர்! எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் இன உணர்வாளர்!

28 comments:

தமிழ் ஓவியா said...


இளைஞர்காள், எழுக!


இராசபாளையத்தில் வரும் மே 4 ஆம் தேதி மாநில இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இடையில் 65 நாள்கள் உள்ளன என்றாலும், அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

கடந்த ஞாயிறன்று இராசபாளையத்தில் கலந் துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு வரவேற்புக் குழுவும் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிக்கான தொடக்கமும் கொடுக்கப்பட்டு விட்டது.

அரசியல் ஈர்ப்பும், நுகர்வோர் கலாச்சாரம் என்ற கவர்ச்சியும் இளைஞர்களையும், மாணவர்களையும் கவ்விப் பிடித்துக் குரல்வளையை நெரித்துக் கொண் டிருக்கும் மோசமானதோர் காலகட்டத்தில், அவர் களை இலட்சியம் உடையவர்களாக வார்ப்பதிலும், பகுத்தறிவுச் சுடர்களாக வடிப்பதிலும், இனநலன் மிக்கவர்களாக திசை காட்டுவதிலும் மற்ற எவருக் கும் இல்லாத அக்கறை திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உண்டு.

பகுத்தறிவுடன் கூடிய இலட்சிய உணர்வுத் திசைப் பக்கம் இளைஞர்கள் திருப்பப்படுவார்களேயானால், வேண்டாத இடத்தில் அவர்களின் கவனம் திருப்பப்படுவதற்கு வாய்ப்பு இருக்காது.

குறிக்கோளற்ற கல்வி முறை நம் நாட்டில் இருப்பதும் மாணவர்கள் சீர்கெட்டுச் சிதைந்து போவதற்கு முக்கிய காரணமாகும்.

சென்னை - பெரியார் திடலில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இன்றைய இளைஞர்களின் போக்கை, நுகர்வுக் கலாச்சாரத்தில் அவர்கள் விழுந்து கிடக்கும் போதையினை கவலையுடன் சுட்டிக் காட்டியதோடு, அவர்களைக் கரையேற்றும் பொறுப்பும், திசை காட்டும் கலங்கரை விளக்காகவும் பணியாற்றவேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதைத் தெரிவித்தார்.

கல்விக் கண் பிடுங்கப்பட்டுக் கிடந்த பஞ்சம, சூத்திர, சமூக அமைப்பில், புரட்சி நடத்தி கல்வி வாய்ப்பு, உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றுத் தந்த தந்தை பெரியார் திராவிடர் இயக்கம், அதன் தலைவர்கள், கல்வி வள்ளல் காமராசர் - இவர்களைப்பற்றி கிஞ்சிற்றும் நினைத்துப் பாராமல் இன்றைக்கு அமெரிக்காவிலும், லண்டனிலும், நியூசிலாந்திலும் பணியாற்றி கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பது தங்களின் திறமையினால் என்று நினைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான நன்றி கெட்டதனம்.

ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டாமா? அவர்களுக்கெல்லாம் சமூகநீதி வரலாற்றைச் சொல்லித் தரவேண்டியது நமது கடமை.
இராசபாளையம் மாநாடானது இந்த வகையில் ஒரு திருப்பமாக இருக்கப் போகிறது. இளைஞர் களின், மாணவர்களின் பெருவெள்ளமாகப் பொங் கும் ஒரு காட்சியை உருவாக்கிடத் திட்டமிடப் பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்களின் கட்டுப்பாடான அணிவகுப்பு மாநாட்டின் சிறப்பு அம்சமாக இருக்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று (51-ஏ(எச்)) கூறப்பட்டுள்ளதே - அந்தக் கடமைக்குப் புது வெளிச்சம் காட்டும் வகையில் அந்த மாநாடும், பேரணியும் இருக்கும்.

திராவிடர் கழகம் - இளைஞரணி, மாணவரணி தோழர்கள் ஒருங்கிணைந்து நடத்தினாலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழக இளையோரின் ஒருங்கிணைந்த எழுச்சியை ஆங்கே நாம் உருவாக்குவோம்.

மாணவர்களின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடப் படவேண்டும். இன்றைய போக்கிலேயே அவர்களை வளரவிட்டால் இவ்வளவு காலம் நாம் பாடுபட்ட உழைப்பின் பயன், பலன் இல்லாமல் போகக் கூடும்.

தமிழ்நாட்டில் மதவாதப் பிற்போக்குச் சக்திகள் தலையெடுக்காமல் தடுக்கப்பட வேண்டியதும் முக்கியமானதாகும். தந்தை பெரியார் மேற்கொண்ட உழவாரப் பணியின் காரணமாக வளரும் பயிரின் களைகள் மண்டிட அனுமதிக்கலாமா?

இளைஞர்களே, மாணவர்களே, இராசபாளையம் மாநாட்டை எதிர்பாருங்கள். உங்கள் உதவிக் கரங்களையும் நீட்டுங்கள்! நீட்டுங்கள்!!

பெரியவர்களின் வழிகாட்டுதலும் நிச்சயம் உண்டு - வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி


பிரபாகரனின் இளம்தளிர் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை
இனப் படுகொலையாளன் ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கைத் தூதரகமுன் டெசோ சார்பில் முற்றுகைப் போராட்டம்!

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்
மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி

மதுரை, பிப். 27- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளம்தளிர் பாலச்சந் திரனை படுகொலை செய்ததைக் கண்டித்தும், இனப் படுகொலையாளன் ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்ச் 5 ஆம் தேதி இலங்கைத் தூதரகம்முன் டெசோ சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றும், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல் படுத்தவேண்டும் என்றும் மதுரையில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.

இது தொடர்பாக மதுரை ஆர்த்தி ஓட்டலில் இன்று (27.2.2013) காலை செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தெரிவித்ததாவது:

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளம்தளிர் பாலச்சந்திரனை இனப் படுகொலையாளன் ராஜபக்சேவின் சிங்கள வெறி இராணுவத்தினர் ஈவு இரக்கமின்றிப் படு கொலை செய்த காட்சிப் படங்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவம் நடத்திய போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடரும் கொடுமைகள் தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றப்படும் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரியும், உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி யும், அய்.நா. மன்றத்தின் தீர்மானத்தை ஆதரித்து டெசோ அமைப்பின் சார்பாக மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் டெசோ அமைப்பின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

அதே நாளில் (மார்ச் 5) டில்லியில் நாடாளு மன்றத்தின்முன் தி.மு.க. நாடாளுமன்ற உறுப் பினர்கள் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., கலந்துகொள்ளும் ஆர்ப்பாட் டம் நடைபெறவுள்ளது.

மார்ச் 7 ஆம் தேதி புதுடில்லியில் டெசோ சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் சேனல்-4 நிறுவனத் தைச் சார்ந்தவர்களும், வாசிங்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங் கக்கூடிய பன்னாட்டு மன்னிப்பு சபை (ஆம்னஸ்டி இண்டர்நேஷ னல்) மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (ஹியூமன் ரைட் வாட்ச்) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உலக அளவிலான மனிதநேயவாதி கள் பங்கேற்கும் விதத்தில் இம் மாநாடு நடைபெற இருக்கிறது.

இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படவேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்க டெசோ அமைப்பு சார்பில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும்!

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய, வேலையில்லாத் திண்டாட்டத் தைப் போக்கக் கூடிய சேது சமுத் திரத் திட்டம் விரைவில் நிறை வேற்றப்படவேண்டும்.

தமிழக மக்களின் நலனுக்கான சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க் கும் செல்வி ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோருக்குக் கண் டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது இருக்கக்கூடிய 6 ஆம் வழித் தடத்தை தேர்ந்தெடுத்தது பி.ஜே.பி. அரசுதான். அவர்களே இன்று மாற்றச் சொல்கிறார்கள்! இலங்கை அரசுக்கு மறைமுகமான ஆதரவு இந்தத் திட்டத்தை எதிர்ப் பவர்களுக்கு இருக்கிறது என்று தமிழர் தலைவர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


இலங்கை ராணுவம் பாலியல் கொடுமைகள் செய்தது உண்மையே


மனித உரிமை கண்காணிப்புக் குழு ரகசிய அறிக்கை வெளியீடு

ஜெனிவா, பிப். 27- இலங்கையில் கடந்த 26 ஆண்டு களாக விடுதலைப் புலிகளுடன் ராணுவம் நடத்தி வந்த போரால் அங்கு பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தின் பிடியில் இருந்த அப்பாவி தமிழர்கள் சிக்க வைக்கப்பட்டனர். அவர்களை கொடுமை படுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக ராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மனித உரிமை கண்காணிப்பு குழு ரகசிய ஆய்வு மேற்கொண்டது. 12 மாதங்களாக இலங்கை மற்றும் உலக முழுவதும் உள்ள பாதிக்கப் பட்டோரிடம் இந்த ரகசிய விசாரணை மேற் கொள்ளப்பட்ட 140 பக்க ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த ரகசிய ஆய்வு அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

கடந்த 2006-2012 ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலி களுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப் பட்ட பெண்கள் மற்றும் இளம் பெண்களை இலங்கை ராணுவத்தினர் கொடுமைபடுத்தியது குறித்து ஆய்வு செய்தோம். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் மீதமுள்ள விடுதலைப் புலிகள் பற்றிய விவரங்களை அறிய சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினரும், காவல்துறையினரும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.

இது சட்டப்படி குற்றமாகும். தமிழ் பெண்கள் 75 பேரிடம் இலங்கை ராணுவம் பாலியல் துஷ் பிரோயகம் செய்தது குறித்த மருத்துவ அறிக்கை சான்றுகளுடன் பட்டியிலிட்டு இருக்கிறோம். பெரும்பான்மையான பாலியல் வன்கொடுமைகள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டிருக் கின்றன. மேலும் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்ட 31 ஆண்கள், 41 பெண்கள், 18 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள் பற்றிய விவரங் களையும் பட்டியலிட்டு இருக்கிறோம்.

2009 ஆம் ஆண்டு சரண் அடைந்த ஒரு விடுதலைப் புலியின் ஆண் உறுப்பில் இரும்பு தகடு களும், இரும்பு பால்ரஸ் குண்டுகளும் சொருகப் பட்டுள்ளன. பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்து வந்து, வெளி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றியுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் விசாரணைக் காக அழைத்து செல்லப்பட்ட ஒரு பெண் அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.

17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு, அடித்து தலைகீழாக தொங்கவிடப் பட்டுள்ளார். மேற்கூறிய மனித உரிமை மீறலுக்கான மருத்துவ அறிக்கை சான்றுகள் உள்ளன. மேலும் அங்கு தற்பொழுது தடுத்து நிறுத்தப்பட்டுள்ள வர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரிய விசயமே. வெளிவந்துள்ள கொடுமைகள் பற்றிய விவரம் கொஞ்சமே.

இன்னும் நிறைய உண்மைகள் வெளிக்கொண ரப்பட வேண்டியுள்ளது. இதில் இலங்கை ராணுவம், காவல்துறையினர் மற்றும் இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ் துணை அமைப்பு களுக்கும் மனித உரிமையை மீறியதற்கான பொறுப்பு உள்ளது. - இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள அய்.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


இலங்கை போர்க்குற்றம்: மாநிலங்களவையில் விவாதம்


புதுடில்லி, பிப். 27- இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் மாநி லங்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி சிவா

திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகை யில், இலங்கையில் திட்டமிட்ட இனப்படு கொலை நடக்கிறது என் பதை சுட்டிக்காட்டி னார்.

இலங்கை போர்க் குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியா ஒரு கண்டனம் கூட இலங்கைக்கு எதிராக தெரிவிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தி யாவே கொண்டு வந்தி ருக்க வேண்டும். அதை செய்ய இந்தியா தவறி விட்ட நிலையில் அமெ ரிக்க தீர்மானத்தையா வது இந்தியா ஆதரிக்க வேண்டும்.

இலங்கையில் இன்ற ளவும் தமிழ் பெண்கள் மானம் சூறையாடப்படு கிறது. ஒவ்வொரு தமி ழனும் ஒரு சிங்கள ராணுவ வீரனின் கண் காணிப்பில் இருக்கும் அவல நிலையே இருக் கிறது. இலங்கையில் ஊடகம், செஞ்சிலு வைச் சங்கம் என யாருக் கும் சுதந்திரம் இல்லை. தமிழர்களை கொல்லும் இலங்கைக்கு இந்தியா எப்படி உதவி செய்தது என கேள்வி எழுப்பி னார்.

டி. ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா இலங்கையில் திட்ட மிட்ட இன அழிப்பு நடைபெற்று வருவதாக கூறினார். ராஜபக்சே அரசின் குற்றங்களை தட்டிக் கேட்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப் படுகின்றன. ஜெனீவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத் திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என் றார்.

மைத்ரேயன்

அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசுகை யில், இலங்கைத் தமிழர் உரிமையை பாதுகாக்க அய்.மு கூட்டணி அரசு தவறி விட்டதாகக் குற் றஞ்சாட்டினார்.

சல்மான் குர்ஷித்

முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகையில், தமிழருக்கு அரசியல் சாசன உரிமை கிடைக்க இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியு றுத்தி வருகிறது என்றார்.

ஜெனிவாவில் நடை பெறும் அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட் டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வரவுள்ளது.

மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிர பாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயி ருடன் பிடிக்கப்பட்டு பின்னர் ராணுவத்தின ரால் சுட்டுக் கொல்லப் பட்டது தொடர் பான புகைப்படங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடியை உருவாக் கியுள்ளது

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாநிலங் களவையில் கவன ஈர்ப் புத் தீர்மானம் கொண்டு வரக் கோரி எதிர்க்கட்சி கள் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி. ராஜா அதிமுக சார்பில் மைத் ரேயன் உள்ளிட்ட எம்.பி.,க்கள் மாநிலங் களவையில் கடிதம் அளித்துள்ளனர்.

மேலும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, சிவசேனா கட்சி யின் சஞ்சாய் ராட் ஆகி யோரும் இதே கோரிக் கையை வலியுறுத்தி கடி தம் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து, இது தொடர்பாக இன்று மதி யம் மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் நடை பெறுகிறது.

ஜெனிவாவில், கடந்த முறை இலங்கைக்கு எதி ராக இந்தியா வாக் களித்தது போல், இம் முறையும் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருக்க, அந்நாட்டுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தமிழ் ஓவியா said...


மார்ச் -5 டெசோ சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்


முழுமையான வெற்றியாக ஆக்கித் தரவேண்டும் கலைஞர் அறிக்கைசென்னை, பிப்.27- மார்ச் 5 ஆம் தேதியன்று டெசோ இயக்கத்தின் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுகின்ற அறப்போராட்டமும், அதே நாளில் டில்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப் பாட்டமும் நடத்துவதென்று டெசோ கூட்டத் தில் முடிவெடுத்தபடி நடைபெறும். முற்றுகையிடும் போராட்டத்தை முழுமையான வெற்றியாக ஆக்கித் தரவேண்டும் என்று டெசோ தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

உடன்பிறப்பே,

சிங்கள அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனின் இளைய செல்வன், 12 வயதே நிறைந்த பாலகன் பாலச்சந்திரனை எவ்வளவு கொடுமையாகச் சுட்டுக் கொன்றி ருக்கிறார்கள் என்பதைப் பற்றி 20-2-2013 அன்றே விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் மட்டு மல்ல; இதயம் படைத்த அனைவரும் அந்த இளம் தளிர் பொசுக்கப் பட்டதற்காக கலங்கிக் கண்ணீர் சிந்தி, சிங்கள அரசுக்குத் தங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித் திருக்கிறார்கள்.

சேனல் -4 எடுத்த படம்

பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்தக் கொடுமையான காட்சி லண்டனைச் சேர்ந்த சேனல் - 4 எடுத்த நோ பயர் சோன் (தாக்குதல்கள் நடத்தக் கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப் பட்ட ஆவணப் படத்தின் வாயிலாக டெல்லியிலே உள்ள கான்ஸ்டிடி யூஷன் கிளப் என்ற அரங்கில் செய்தியாளர்களுக்குக் காட்டப்பட் டுள்ளது. இலங் கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட டைரக்டர் கெல்லம் மெக்ரேதான் இந்தப் படத்தையும் தயாரித்து, இயக்கியிருக்கிறார். தாக்குதல்கள் நடத்தக் கூடாதென வரையறுக்கப்பட்ட பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூரத் தாக்குதல்களை நடத்தி, ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை இரக்கமின்றிக் கொன்று குவித்ததை நினை விலே கொண்டுதான் இந்த ஆவணப் படத்திற்கு நோ பயர் சோன் என்று பெய ரிடப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் அரசு எந்த அள விற்கு மன்னிக்க முடியாத போர்க் குற்றங்களைப் புரிந்திருக் கிறது என்பதற்கு, மேலும் பல சாட்சியங்கள் அந்த ஆவணப் படத்தின் மூலமாக வெளியிடப் பட்டுள்ளது.

தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி; மருத்துவமனை களில் ஈழத் தமிழர்கள் உடலின் பல பாகங்களை இழந்த நிலையில் சிகிச்சை பெறுகின்ற காட்சி; அப்பாவிப் பெண்கள் ஆடைகள் நீக்கப்பட்டு, நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி; பெண் புலிகள் என்ற சந்தேகத்தில் ஏராளமான பெண்களை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்கின்ற காட்சி; சிங்கள ராணுவத் தால் சிறை பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடக்கின்ற காட்சி; பெண் புலிகளின் தளபதியாக இருந்த இசைப்பிரியா என்ற இளம் வயதுப் பெண்ணை சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சி; ஆண்களை நிர்வாண மாக்கி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்னால் கட்டி முதுகிலே சுட்டுக் கொல்லுகின்ற காட்சி; குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்த காட்சி; இவையனைத்தும் இந்த ஆவணப் படத்திலே இடம் பெற்றிருப்பதாக ஏடுகளும், தொலைக் காட்சி நிறுவனங்களும் விவரித்துள்ளன. இவற்றைப் படிக் கவே நம்முடைய உள்ளங்கள் பதறிப் பரிதவிக் கின்ற நேரத்தில், இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டால் என்னதான் ஆவோமோ? ஏன்தான் தமிழர்கள் இப்படி யெல்லாம் கொடுமைப் படுத்தப்படுவதற்கு இலங்கைத் தீவிற்குச் சென்றார்களோ என்று எண்ணித்தான் துடிக்க வேண்டியிருக்கின்றது!

தமிழ் ஓவியா said...

இதயம் படைத்த யாருமே ஏற்றுக் கொள்ள முடி யாத போர்க் குற்றங்களை சிங்கள அரசு செய்துள்ளது என்பதற்கு, அடுக்கடுக்கான சான்றுகள் ஆவணப் படத்தில் மறைக்க முடியாத உண்மைகளாக வெளி வந்துவிட்டன.

குழந்தைகள் என்றுகூடப் பார்க்காது, விளை யாட்டுப் பொருளை நீட்டுவதைப் போலத் துப்பாக்கியை நீட்டிச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் சண்டாளர்கள்! அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

தமிழ் ஓவியா said...

40 பக்க அறிக்கை

மனிதாபிமானமற்ற கொடுமைகள் இலங்கை யில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு மேலும் ஒரு சான்றாக - சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு இலங்கையிலே நேரடியாக விசாரணை செய்து தயாரிக்கப்பட்ட 140 பக்க அறிக்கை - அமைந் திருக்கிறது. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்ட 75 தமிழர்களிடம் நேரடியாக விசாரணை செய்த விவரங்கள் அந்த அறிக்கையிலே காணப் படுகின்றன. மனித உரிமைகள் அமைப்பின் ஆசியாவின் இயக்குநர் ஆடம்ஸ் என்பவர் அந்த அறிக்கையைப் பற்றிச் சொல்லும்போது இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுப் பாதுகாப்பில் இருந்த தமிழ்ப் பெண்கள் மீதும், ஆண்கள்மீதும் நடத்திய பாலியல் வன்முறைகள் கணக்கில் அடங்காதவை; இவை போரின் போது நடைபெற்ற கொடுமைகள் மட்டு மல்லாமல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும் என்றே தெரிவித்திருக்கிறார்.

தமிழச்சிகளின் கற்பு ஈழத்திலே காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளது. கற்பு பறிக்கப்பட்டு தமிழ்க்குல மாதர்கள் நடுத் தெருவில் நிர்வாணப்பிணமாக வீசி எறியப் பட்டார்கள். தமிழீழத்தில் உலகில் எங்கு மில்லாத அளவிற்கு ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவரை பறிகொடுத்து விட்டுக் கைம்பெண்களாகத் திரிகிறார்கள். சிங்களச் சிப்பாய்கள் அவர்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதாகக் கூறிக் கேலி செய்கிறார்களாம்! தமிழனின் மாமிசம் விற்பனை என்ற விளம் பரங்கள் கடைகளில் எழுதி வைக்கப்பட வில்லையா? மணந்த வனை மரத்தில் பிணைத்து விட்டு, அவன் மனைவியை அவன் கண்ணுக்கு நேராகவே மானபங்கப்படுத்த வில்லையா? ஈழத்திலே நடந்த நிகழ்ச்சி ஒன்றை நினைவு படுத்துகிறேன். பாஸ்கரன் ஒரு தமிழன் - அவனை ஒரு மரத்திலே கட்டி வைத்து விட்டு, நடுவீதியிலே அவனுடைய மனைவியை நிர்வாண மாக்கிக் கற்பழிக்கிறார்கள். அதோடு விடவில்லை, மாபாவிகள்! நிர்வாணமாக்கப்பட்ட அந்தப் பெண் ணை தலைகீழாக இரண்டு பாக்கு மரங்களில் ஒரு காலை ஒரு பாக்கு மரத்திலும் - இன்னொரு காலை இன்னொரு பாக்கு மரத்திலும் கட்டி - பாக்குமரத்தின் நுனிகளை ஒன்றாகவும் கட்டி - பிறகு திடீரென அந்த பாக்கு மரங்களின் நுனிகளை வெட்டிவிடுகிறார்கள். பாக்கு மரம் படார் என்று தனித்தனியாகப் பிரியும் போது, அந்தப் பெண்ணின் உடல் இரண்டாகப் பிளவுபட்டு கிழிந்து கீழே விழுகிறது. அவ்வளவும் அவள் கணவர் பாஸ்கரன் கண்ணுக்கு முன்னாலே! நடைபெற்றதா இல்லையா இலங்கையில்! மறந்தா போய்விட்டது?

இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை அறிந்த அமெரிக்கா கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உண்மை நிலைமைகளை அறிய மூன்று பேர் கொண்ட குழு ஒன்றினை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்தக் குழுவினர் அத்துமீறல் நடந்தது உண்மை தான் என்று அறிக்கை ஒன்றினை அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தாக்கல் செய்தனர். அதன் மீது விவாதம் நடந்தபோது இலங்கை அத்தனை குற்றச் சாற்றுகளையும் மறுத்ததோடு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியது.
அமெரிக்க தீர்மானம்

தமிழ் ஓவியா said...


அந்தச் செய்திகளாவது உண்மையா என்று அறிய அமெரிக்கா மேலும் ஒரு குழுவினை இலங்கைக்கு அனுப்பியது. அந்தக் குழுவும் நிவாரணப் பணிகளில் மன நிறைவு இல்லை என்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலே தான் அமெரிக்கா மேலும் ஒரு தீர்மானத்தைத் தயாரித்துள்ளது. அந்தத் தீர்மானத் தின் மீதான விவாதம்தான் மார்ச் திங்கள் இறுதியில் ஜெனீவா நகரில் நடைபெற்று, அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இலங்கையிலே இந்தக் கொடுமைகள் இன்று நேற்றா? தந்தை செல்வா அவர்களின் காலத்தி லிருந்தே ஈழத்துத் தமிழ் மக்கள் பிஞ்சுகளாக - அரும்புகளாக - பூக்களாக - காய் களாக - கனிகளாக உதிர்ந்து அழிந்து கொண்டு தானே இருக்கிறார்கள்? தமிழன் என்றாலே அவனைத் தாக்கிக் கொன்று குவிக்கிற அளவுக்கு, சிங்கள வெறி அப்போதே தலைதூக்கிய காரணத்தால் தானே சிறைக் குள்ளிருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்ற அய்ம்பதுக்கு மேற்பட்டோரை சித்ரவதை செய்து அழித் தொழித்த நிகழ்ச்சியே இனப் படுகொலையின் பிள்ளையார் சுழியாக அமைந்தது. 1978-1979ஆம் ஆண்டுகளில் சென்னை - கடற்கரையில் தங்க துரையு டனும், குட்டிமணியுடனும் மற்றும் சில விடுதலை வீரர்களுடனும் நானும் என்னுடன் சில நண்பர்களும் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர்களின் பாதங்களை டார்ச் விளக்கின் வெளிச் சத்தில் என்னிடம் காட்டுகிறார்கள். பாதம் முழுவதும் கொப் புளங்கள்; ஏன் இப்படி? என்று கேட்கிறோம். தலை மறைவாக ஓடிவந்து தமிழகத்தைச் சேர்வ தற்காக பதுங்கிப் பதுங்கி வரும்போது, செருப்பு சப்தம் தங்களை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால், வெறுங்காலுடன் வந்ததால் ஏற் பட்ட கொப்புளங்கள் என்கிறார்கள். அந்தக் குட்டி மணியும், தங்கதுரையும், ஜெகனும் மற்றும் 34 தமிழ் ஈழ விடுதலைக் காளைகளும் சிறைச் சாலைக்குள் ளேயே கொல்லப்பட்டார்கள். அந்தக் குட்டிமணிக்கும், தங்கதுரைக்கும், உங்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப் படுகிறது என்று தீர்ப்பளிக்கப்பட்ட நேரத்தில், தங்கதுரை சொன்னார், நாங்கள் இறந்து போய் விட்டால் எதிர் காலத்தில் உருவாக இருக்கின்ற தமிழ் ஈழத்தை உங்களுடைய சட்டதிட்டம் கட்டுப்படுத்த முடியாது என்று! அதே நீதி மன்றத்தில்தான் குட்டிமணி சொன் னார், நான் மரணத்திற்காகப் பயப்படுகின்ற கோழையில் லை! என்னை தூக்கு மாட்டிக் கொன்று விட்ட பிறகு என்னுடைய கண்களை எடுத்து ஈழத்திலே இருக்கின்ற பார்வையற்ற ஓர் இளைஞனின் கண்ணுக்குப் பொருத் துங்கள்! வருங்காலத்தில் மலர இருக்கின்ற சுதந்திரத் தமிழ் ஈழத்தை நான் காண முடியாவிட்டாலும் - அந்த இளைஞ னுக்குப் பொருத்தப்பட்ட என் கண்ணால் பார்த்து மகிழ்வேன் என்று சொன்னார். அப்படிப்பட்ட இளைஞர் களையெல்லாம் சிறைச்ச லைக் கொட்டடிக்குள்ளே கொலை செய்து, அவர் களின் கண்களைப் பிடுங்கி, இந்தக் கண்களால் தானே ஈழத் தமிழகத்தைக் காண விரும்பினாய், எனக் கேட்டு அந்தக் கண்ணையே பிடுங்கி கீழே போட்டு மிதித்த கொடுமை இலங் கையிலே நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

மார்ச் -5ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் இந்த வேதனைகளையெல்லாம் நமது இந்திய நாட்டு மக்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நினைவுபடுத்தி, இலங்கை இனவாத அதிபர் ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று உணரச் செய்வதற்காகத் தான் வரும் மார்ச் 5ஆம் தேதியன்று சென்னையில் இலங்கைத் தூதரகத்தை டெசோ இயக்கத்தின் சார்பில் முற்றுகை யிடுகின்ற அறப்போராட்டமும், அதே நாளில் இந்தியத் தலை நகரான டில்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவ தென்று 25-2-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் கொடுமை களுக்கு எதிராக தி.மு. கழகத்தின் சார்பிலும், டெசோ இயக்கத்தின் சார்பிலும் இதுவரை எத்தனையோ வகை போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். ஒரேநாள் அறிவிப்பில் அய்ந்து இலட்சத்திற்கும் மேற் பட்ட மக்களைத் திரட்டிப் பேரணி நடத்தியிருக் கிறோம். உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, கறுப்புடை அணிந்து ஆர்ப்பாட்டங்கள் என்றெல்லாம் நடத்தி யிருக்கிறோம். ஏன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையே நானும், பேராசிரியரும் ராஜினாமா செய்திருக்கிறோம். அய்.நா. மன்றத் திற்கு ஒரு கோடி பேருக்கு மேல் கையெழுத் திட்ட மனுவினைக் கொண்டு போய்க் கொடுத் திருக்கிறோம். இலங்கைப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியையே இழந் திருக்கிறோம். ஒவ்வொரு போராட்டத்தையும் வெற்றி கரமான போராட்டமாக ஆக்கிய உடன்பிறப்பு கள்தான், வரும் 5ஆம் தேதி நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தையும் முழுமையான வெற்றியாக ஆக்கித் தரவேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கம் போலவே இந்தப் போராட்டத்தில் கழக உறுப்பினர்கள் மாத்திரமின்றி, டெசோ அமைப்பிலே இடம் பெற்றுள்ள இயக்கங்களின் உடன் பிறப்புகளும் அணி அணியாக வந்து கலந்து கொள்ள வேண்டு கிறேன். மார்ச் -5 இலங்கைத் தூதுவரகத்திற்கு எதிரே முற்றுகைப் போர் - மறவாமல் கலந்து கொள்வீர்; நமது உள்ளத்து வேதனையை மீண்டும் உலகத்தார்க்கு வெளிப்படுத்தும் நாள் மார்ச் - 5 ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக நம் கண்ணீரைக் கவசமாக்கும் நாள் மார்ச் - 5.

அன்புள்ள,
மு.க. (முரசொலி, 27.2.2013)

தமிழ் ஓவியா said...

தாராளமய பொருளாதாரச் சூழலில் தனியார் துறையிலும் ஒடுக்கப்பட்டோர் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு சட்டரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும்!
மும்பையில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் உரிமைக் குரல்!
மராட்டிய மாநில சமூக நீதிப் போராளிகள் பங்கேற்பு!

மும்பையில் நடைபெற்ற சமூக நீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமை உரையாற்றினார்.

மும்பை, பிப். 27- மராட்டிய மாநிலம் மும்பை நகரில் 24.2.2013 அன்று சமூக நீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது. மும்பை பகுத்தறிவாளர் கழகம், மும்பை திராவிடர் கழகம் மற்றும் மராட்டிய பிற் படுத்தப்பட்டோர் நலச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சமூக நீதி: இடஒதுக்கீடு எதிர்நோக்கும் சவால்களும், ஆற்றிட வேண்டிய பணிகளும் (Social Justice: Reservation - challenges and tasks) எனும் தலைப் பில் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

மும்பை நகரின் மய்ய மாதுங்கா பகுதியில், நப்போ மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள மட்டுசிரீ வெல்பாய் சபா கிரகா அரங்கில் கருத் தரங்க நிகழ்ச்சிகள் காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றன.

தமிழர் தலைவர் தலைமை வகித்தார்

சமூகநீதிக் கருத்தரங்கத்திற்கு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மராட்டிய மாநிலத்தின் முன்னணி சமூகநீதிப் போராளியும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளருமான சட்டப் பேராசிரியர், முனைவர் சுரேஷ் மானே, மராட்டிய மாநில பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் பி.ஜி.தோப்ளே, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினர்.

மராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் அமைப் பினைச் சார்ந்த புதிய மாதவி கருத்தரங்கத்திற்கு வருகை தந்தோரை வரவேற்றார். மும்பை பகுத் தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர் அ.ரவிச்சந் திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

தமிழர் தலைவரின் தலைமை உரை

கருத்தரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 85 விழுக்காட்டினர், ஒடுக்கப்பட்டுள்ளனர் பெரும் பான்மையினராக அவர்கள் உள்ளனர். சிறுபான்மை மக்கள்தான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பெரும்பான்மை மக்கள், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள சிறுபான்மையினரிடம் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டிய வித்தியாசமான சமூகச் சூழல் இந்நாட்டில் இன்னும் நிலவிவருகிறது. நெற்றியில் ஆணி அடித்தாற்போல (Hit the nail on the head) சரியான நேரத்தில் இந்த சமூக நீதிக் கருத்தரங்கம், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகநீதிப் போராளி சட்டப் பேராசிரியர் முனைவர் சுரேஷ் மானே உரையாற்றும்போது...

இந்த மக்களாட்சி நாட்டில் அரசமைப்புச் சட்டம்தான் கோலோச்சுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை களை முழுமையாக நடைமுறைப்படுத்தவே போராட வேண்டிய சூழல் நிலவுகிறது. அரசமைப் புச் சட்டத்தையே நையாண்டி செய்வதுபோல நடை முறை உள்ளது. மக்களாட்சிக் கோட்பாட்டையே கேலி செய்வது போல ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆதிக்கவாதிகளின் செயல்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் சேரன்மாதேவி குருகுலத்தில் 1924ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த பார்ப் பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை இரு பிரிவுகளாக வைத்து உணவு பரிமாறும் பழக்கம் இருந்ததை இந்த கருத்தரங்கில் குறிப் பிட்டுப் பேசினர்.

காந்தி மற்றும் இராஜாஜி போன்ற தேசியத் தலைவர்கள் இந்த வேறுபாட்டைக் குறித்து சமரசப் போக்கினை கடைப்பிடித்த வேளையில், அன்றைய தமிழ்நாடு காங்கிரசு தலைவராய் இருந்த தந்தை பெரியார், குருகுலத்திற்கு காங்கிரசு இயக்கத் திலிருந்து தொடர்ந்து அளிக்கப்படும் நிதிப் பங் களிப்பினை நிறுத்தி வைத்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்தார்.

தேசியம் என்பது இந்த நாட்டில் ஆதிக்கவாதி களான பார்ப்பனர்கள், சுதந்திர நாட்டில் கோலோச் சிடவே என்பதை தந்தை பெரியார் எடுத்துரைத்தார் . இந்த நாடு அரசியல் விடுதலை பெற்றால் அது மக்களாட்சி நடைபெறுகின்ற நாடாக இருக்காது. பார்ப்பனர் நலனுக்காக, பார்ப்பனர் களால் நடத்தப்படும், பார்ப்பனர்களுடைய ஆட்சியாகத் தான் இருக்க முடியும் என்பதை தொலைநோக்குடன் சொன்னவர் தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரது கூற்று பிரபல ஆங்கில நாளேடான தி இந்து இதழின் நூற்றாண்டு மலரில் பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆங்கில மொழி பயன்பாட்டிற்கு புதியதொரு சொல்லாக்கத்தை தந்தை பெரியார் உருவாக்கிக் கொடுத்தார். அதுதான் Brahminocracy என்று சொல்லப்படும் பார்ப்பன நாயகம். சுதந்திர போராட்டத்தால் கிடைத்தது முழுமையான ஜனநாயகம் அல்ல; உண்மையில் பார்ப்பன நாயகமே! இன்றும் அது கோலோச்சும் நிலைமை கள் நீடிக்கின்றன.

மக்களிடையே சமத்துவம் ஏற்பட இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். திறந்த போட்டி என்பதே இருக்கக் கூடாது எனவும் கருத் தரங்கில் குறிப்பிட்டனர். இந்தியா ஆளப்படுகிறது (Rule India) என்பதை விட இந்த நாட்டு மக்கள் ஆளுகிறார்கள் (Our Rule in India) என்ற நிலைமைகள் உருவாக வேண்டும்.

இந்திய அரசமைப்பின் மூன்று பெரும் தூண்களுள் ஒன்றான நீதித்துறை - வீரியச் செயல்பாடு (Activism) எனும் பெயரால் ஒடுக்கப்பட்டோருக்கு இருக்கின்ற உரிமைகளின் முழுமையான செயல்பாட்டுக்கு தடை போடும் நிலையில் உள்ளன.

நான்காவது துறை எனப்படும் ஊடகமோ, மேல் ஜாதி மக்களுக்கான கருத்துக் களுக்கு ஆதாரம் சேர்க்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றன. நிர்வாகத் துறையில் உள்ள மேல்ஜாதி மக்களின் நிர்வாகத் திறமை ஊர் அறிந்த செய்தியாக உள்ளது. இரண்டு மது பாட்டிலுக்கு இந்நாட்டு இராணுவ ரகசியங்களை எதிரிக்கு தருகின்ற திறமைதான் அதிகாரத்தில் உள்ள உயர் ஜாதி மக்களின் திறமையாகும்.

தமிழ் ஓவியா said...

ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரித்தாளும் முறையினை ஆதிக்கவாதிகள் அந்நாள் முதற்கொண்டு செய்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட நமக்குள் மேலும் பிரிவினையினை ஏற்படுத்தி, நாம் அனை வரும் ஒன்றுபட்டு, ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை வலுவிழக்கச் செய்யும் பணியினை திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.

ஒடுக்கப்பட்டோரை பிரித்துவைத்த தன்மையினை அண்ணல் அம்பேத்கர் சரியாகப் புலப்படுத்தி யுள்ளார். பொருளாதாரக் கோட்பாட்டின் படி உழைப்பை பிரித்து (division of labour), வகைப்படுத்தி உற்பத்தியை பெருக்குவர். ஆனால் மனு(அ)தர்மமோ உழைப்பாளர்களைப் பிரித்து (division of labourers) பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது என குறிப்பிடுவார். எனவே மனு(அ)நீதியை எதிர்கொள்ள எது நம்மை பிரிக்கிறதோ அதனை மறந்து, எது நம்மை இணைக்கிறதோ அதனைப் பேணி நமக்குள் ஒற்றுமை உணர்வை வளர்த்து போராட முன்வரவேண்டும்.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளித்திட சட்டம் வகை செய்துள்ளது. இன்று பெருகி வரும் தாராளமய பொருளாதாரச் சூழலால் அரசுப் பணி வாய்ப்பு குறைந்து வரும் வேளையில், தனியார் துறையிலும் ஒடுக்கப்பட்டோருக்கு வேலைவாய்ப் பினை ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

சட்டத்திருத்தங்கள் தானாக வந்து விடா அதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் - குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் ஒன்று பட்டு போராட முன்வரவேண்டும். அதற்கான பணிகள் துவக்கப்படும். அனைத்திந்திய அளவில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட இருக் கின்றன.

- இவ்வாறு தமிழர் தலைவர் கருத்தரங்கில் உரையாற்றினார்.

பேராசிரியர் முனைவர் சுரேஷ் மானே

சட்டப் பேராசிரியரும், மராட்டிய மாநில பகுஜன் சமாஜ் கட்சி செயலாள ருமான முனைவர் சுரேஷ் மானே தனது உரையில் குறிப்பிட்டதாவது:-

சமூக நீதித் தளத்தில் எங்களுக் கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக் கூடியவர் தலைவர் டாக்டர் கி.வீர மணி ஆவார்கள். சமூக நீதித் தலைவர் டாக்டர் வீரமணி அவர்களுடன் அமர்ந்து சமூகநீதிக் கருத்தரங்கில் உரையாற்றுவது எங்களைப் பொறுத்த அளவில் வரலாற்றுச் சிறப் பாகக் கருதுகிறோம்.

தமிழ் ஓவியா said...

புத்தரும், சாருவாகரும் சமூக நீதித் தத்துவத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். அரசமைப்புச் சட்டம் குடிமக்கள் கடமை என வலியுறுத்தும் - எதையும் கேள்வி கேட்டு தெளிவடைவது, அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பது ஆகியவை புத்த நெறியின் அடிப்படைக் கோட்பாடுகளாகும்.

இந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்து வோரின் அதிகாரம் புராண, இதிகா சங்களின் வழி மூலம் பெறப்பட்டது. நாட்டை ஆளும் அடிப்படைத் தகுதி உண்மையில் மாறுபட்ட தன்மை யுடையது. மொத்த மக்கள் தொகை யில் 70 விழுக்காட்டினருக்கு இன்னும் சமூக நீதி சென்றடையவில்லை - முப்பது விழுக்காட்டு மக்களின் ஆதர வினைப் பெற்றவர்கள் இந்த நாட் டினை ஆளும் நிலைமைகள், உண்மை யான மக்களாட்சித் தன்மையை எதிரொலிப்பதாய் இல்லை.

மேலும் இடஒதுக்கீடு அடக்கப் பட்ட, பிரிக்கப்பட்ட மக்களின் மேம் பாட்டுக்காக ஏற்பட்ட வழிமுறை. இடஒதுக்கீடு நடைமுறையில் ஒடுக் கப்பட்ட மக்களை மேலும் பிரித்து விடாத வகையில் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டின் மூலம் பிறப்பின் அடிப்படையில் நிலவும் ஜாதி முறை, உழைப்பு வழி முறையிலான வகுப்பு முறையாக மாற வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்கிவிட்டு இந்தியா வல்லரசாக மாற நினைப்பது வெறும் கனவில்தான் முடியும். இந்த நிலைமைகளை ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் உணர்ந்து செயல்பட வேண்டும். செயல்பட மறுத்தால் ஆட்சியை மாற்றும் நிலைமைகள் உருவாகும். இவ்வாறு பேராசிரியர் சுரேஷ் மானே உரையாற்றினார்.

பி.ஜி. தோப்ளே

மராட்டிய மாநில பிற்படுத்தப்பட் டோர் சங்கத் தலைவர் பி.ஜி.தோப்ளே தனது உரையில் குறிப்பிட்டதாவது:-

அரசமைப்புச் சட்டத்தின் விதி 340 - பிற்படுத்தப்பட்ட மக்களது இட ஒதுக்கீட்டிற்கான திறவுகோலாக இருந் தது. அரசமைப்புச் சட்ட விதியில் 15(5)இன் படி தனியார் உயர் கல்வி நிலையங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. வேலை வாய்ப்பிலும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படும் வகையில் சட்டவிதி 16(5) உருவாக்கப் பட வேண்டும்.

மராட்டிய மாநிலத் தைப் பொறுத்தவரையில் தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினருக்கு கல்விக்கட்ட ணம் முழுமையினையும் மாநில அரசு மானியமாக அளிக்கிறது. ஆனால் பிற் படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்த அளவில் கட்டணத்தில் 50 விழுக்காடு அரசு மானியமாகக் கிடைக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் முழு மையாக கட்டண உரிமைச் சலுகை கிடைக்கின்ற நிலைமைகள் உருவாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...

வீ.குமரேசன்

தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:-

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு நடைமுறை மக்களை வேறு படுத்திப்பார்க்கிறது என ஆதிக்கவாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற தோழர்களும் இந்த வகைப்பிரச்சாரத்திற்கு துணை போகின்றனர். இடஒதுக்கீடு முறை மூலம் வேறுபடுத்திப் பார்ப்பது ஆரம்பக் கட்டம் அல்ல (Not orginative discrimination). ஏற்கெனவே உள்ள வேறுபாட்டை களைய வந்திட்ட நடைமுறை (compensatory discrimination) ஆகும்.

வேறுபடுத்திப் பார்க்கும் தன்மை யிலே உள்ள இருவிதமான நிலைப் பாட்டை இடஒதுக்கீட்டு முறையில் பலன் பெறுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பயணத்தில் போகவேண்டிய தூரம், எட்டவேண்டிய உயரம் அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்பில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு சட்டரீதியான இட ஒதுக்கீடு முழுமையாக இல்லா விடினும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதவி உயர்விலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான விதிமுறைகளுக்கு வித் திடப்பட்டுள்ளது. சமூக நீதிக் கொள் கையின் தலைமையிடமாக விளங்கும் தமிழ்நாடு மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அதற்கான பணிகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்.

தமிழ் ஓவியா said...

புதிய மாதவி

மராட்டிய மாநில தமிழ் எழுத் தாளர் சங்கத்தின் பொறுப்பாளர் புதிய மாதவி தனது வரவேற்புரையில் குறிப்பிட்டதாவது:-

2500 ஆண்டுகளுக்கு முன்பாக புத்த நெறி தழைத்திருந்த காலத்தில் சமூ கத்தில் சமத்துவம் நிலவியது. பின்னா ளில் சில பண்பாட்டுப் படையெடுப் பால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டன. பிறப்பில் பேதமில்லை என மராட்டிய மாநிலத்தின் ஜோதிபா பூலே கூறினார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் என திருவள்ளுவர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் பிறப்பால் பேதம் கற்பிக்கப்பட்டு, ஏற்றத் தாழ்வுடன் மக்களைப் பிரித்தாளும் நிலை இந்த நூற்றாண்டிலும் நிலவுகிறது. மக் களாட்சி முறையில், அறுதிப் பெரும் பான்மை மக்களின் ஆதரவினைப் பெறாமலே ஆட்சிக் கட்டில் ஏறும் முறை நடைமுறையில் உள்ளது. ஒடுக் கப்பட்ட மக்கள் இந்த உண்மை நிலை யினை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை எட்டிட போராட வேண்டும்.

கருத்தரங்க நிகழ்ச்சியினை மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன் தொகுத்தளித்து நிறைவாக நன்றி கூறினார்.

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட அமைப்பினைச் சார்ந்தவர்கள் கருத்தரங்கத்திற்கு வருகை தந்திருந்தனர். மும்பை திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெரும்பாலோர் வந்திருந்தனர்.

இடஒதுக்கீடு பற்றிய புதிய செய்திகளை, புதிய பரிமாணங்களை கருத்தரங்கத்திற்கு வருகை தந்தோர் அறிந்து கொண்டதாகத் தெரிவித்தது. கருத் தரங்கத்தின் முதல் நோக்கத்தினை நிறைவு செய்வதாக இருந்தது.

தமிழ் ஓவியா said...


மதுரையில் மன்றல்! கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்


மதுரை, நெல்லை, சிவகங்கை, மண்டலக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டத் தலைவர் செயலாளர்கள், நகரத் தலைவர் கள், செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு,

நம் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்கி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் சென்னையிலும், டிசம்பர் 30 திருச்சியிலும் மன்றல் 2012 என்ற மாபெரும் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவினை சிறப்பாக நடத்தினோம்.

இந்தப் பெருவிழாவில் பங்கெடுத்த தன் மூலம் பலர் தங்களது இணையரைத் தேர்ந்தெடுத்து நமது தலைமை நிலையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திரு மண நிலையத்தில் திருமணம் செய்து தமது வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக் கொண்டனர். மேலும் பலர் வரும் மாதங் களில் திருமணம் செய்வதற்காக தனது இணைகளைத் தேர்ந் தெடுத்துள்ளனர்.

தந்தை பெரியாரின் இலட்சியமான ஜாதி ஒழிப்புக் கொள் கையினை நாம் இந்த மன்றல் நிகழ்ச்சியின் மூலம் செவ்வனே நிறைவேற்றி வருகிறோம். இனி இந்த ஆண்டின் துவக்க நிகழ்ச்சியாக மன்றல் 2013 மதுரையில் வரும் மார்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜாதி உணர்வு மிகுந்திருப்பதாகச் சொல்லப்படும் மதுரையில் நமது ஆற்றல் மிக கழகத் தோழர்களின் துணையோடு ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவினை நடத்தும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

களங்கள் பல கண்ட திராவிடர் கழகத் தோழர்கள் ஜாதீயத்தை கலங்க வைக்க ஆற்ற வேண்டிய செயல்பாடுகள்.

1. நகர்ப்பகுதியிலும், நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நல்ல வண்ணம் சுவரெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்வது.

2. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் எல்லாம் பிளெக்ஸ் போர்டு வைப்பது.

3. தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வைக்கு படும்படியான இடங்களில் ஒட்டுவது.

4. மக்கள் ஆங்காங்கு கூடுகின்ற பகுதிகளிலெல்லாம் மன்றல் 2013 பற்றிய துண்டறிக்கைகளை வழங்குவது.

இந்த நான்கு பணிகளையும் நாம் ஒழுங்கான முறையில் செய்து முடித்தால் மன்றல் 2013இன் தொடக்கமே வெற்றிப் படிக்கட்டுகளை எண்ணத் துவங்கிவிடும். நம் நாட்டை ஜாதியற்ற பூமியாக மாற்றிக் காட்டும் மாபெரும் வாய்ப்பாக நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்த மன்றல் 2013 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா. இது சத்தமின்றி நடக்கும் புரட்சி. இப்புரட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே நம் பணி!

குறிப்பு: நிகழ்ச்சி ஏற்பாடு மட்டுமே இம்மூன்று மண்டலங்களைச் சேர்ந்தது. ஏனைய கழக மாவட்டத் தோழர்களும் விளம்பரங்கள் மூலம் மன்றலை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் எந்தப் பகுதியில் இருப்போரும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.

திருமகள், மாநில அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதைத் திருமணம் நிலையம்,
சென்னை - 600 007

தமிழ் ஓவியா said...

இலங்கையா? தமிழகமா? முடிவு செய்யுங்க... மத்திய அரசை மிரட்டிய திமுக

டெல்லி: போர்க் குற்ற நாடான இலங்கை வேண்டுமா? அல்லது தமிழர்கள் வேண்டுமா? என்பதை ஆளும் மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக எம்.பி. சிவா பேசியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறும் முடிவுக்கு முன்னோட்டமோ என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது, ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விவாதத்தில் சிவா பேசுகையில்,இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி மீண்டும் ரத்தம் கசியும் இதயத்துடன் இங்கே நான் பேசுகிறேன். தமது சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்கிற ஒரு மனிதாபிமானமற்ற நாட்டுடன் இந்தியா உறவு வைத்திருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக 13-வது அரசியல் சாசன திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை. அண்மையில் தமிழர்களுக்கு சுயாட்சி இல்லை என்று அறிவித்திருக்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே. தமிழருக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக தலைமை நீதிபதியை தூக்கி எறிந்தவர் ராஜபக்சே. அந்த நாட்டை இன்னமும் நட்பு நாடு என்கிறீர்களே... இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது என்கிறீர்கள்.. அந்த நிதி தமிழருக்காகத்தான் செலவிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகில் எங்கெங்கோ மனித உரிமைகள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்தியாவின் குரல் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மட்டும் இந்தியாவின் குரல் அப்படி ஏன் கேட்கவில்லை? இலங்கையை தொடர்ந்து இந்தியா ஆதரிக்கிறது...இலங்கை வேண்டுமா? அல்லது இந்தியாவின் தென்பகுதியில் வாழும் மக்கள் வேண்டுமா? யாருடன் நட்புறவு வேண்டும் என்று மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும். இலங்கை வெளிநாடு என்கிறீர்களே..அப்புறம் எப்படி அமைதிப் படையை அங்கு அனுப்பினீர்கள்? அப்புறம் எப்படி எங்களது தமிழ் மக்களை அழிக்க உதவினீர்கள்? இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியே இல்லை. பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரனின் நெஞ்சில் 5 குண்டுகள் பாய்ந்திருக்கிறது. அதுவும் சுடப்படுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக உணவு கொடுத்துவிட்டுக் கொன்றிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அல்லது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை இனியும் இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றார் அவர். திருச்சி சிவா தாம் பேசும் போது, பாலச்சந்திரன் புகைப்படங்களையும் ராஜ்யசபாவில் எடுத்துக் காண்பித்தார்.

---------------http://tamil.oneindia.in/news/2013/02/27/india-you-want-friendly-relations-with-sri-lanka-170544.html

தமிழ் ஓவியா said...

சேனல் 4 ஆதாரங்கள் வெறும் உதாரணம் தான், மொத்தமும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது

லண்டன்: இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் சேனல் 4 வெளியிட்டது வெறு உதாரணம் தான். மொத்தமும் வெளிவந்தால் இலங்கை தாங்காது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த கண்ணன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சேனல் 4 நோ ஃபயர் ஜோன் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு வீடியோக்கள் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். இது குறித்து அவர் கூறுகையில், குறைந்த பரப்பளவு கொண்ட முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு. பாதி பேர் அந்த ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கடல் நீரைக் குடித்து குடித்தே இறந்தார்கள். தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்தனர். அப்போது ராணுவத்தினர், நாங்கள் உங்களை சுட மாட்டோம். ஆனால் நீங்கள் அனைவரும் நிர்வாணமாக வந்து சரணடைய வேண்டும் என்றனர். வேறு வழி இன்றி தந்தை முன்பு மகளும், மகனின் முன்பு தாயும், அண்ணன் முன்பு தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாம் மற்றும் வெலிகந்தையில் உள்ள மறைமுக முகாம் ஆகியவற்றில் தினமும் இரவு நேரத்தில் பெண்கள் கதறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இலங்கையில் இதுவரை 1.47 லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். போர் நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து பாய்ந்து தாக்கும் . ஒயிட் பாஸ்பரஸ் கொத்தணி குண்டுகளை விட கொடூரம் ஆனது. ஒரே ஷாட்டில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் ஆக்சிஜனை உறிஞ்சிய பிறகு தான் வெடிக்கும். அதனால் அந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டபோது குண்டு பாதிப்பு போக பலர் மூச்சு திணறி இறந்தனர். சேனல் 4 வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் வெறும் உதாரணங்கள் தான். மொத்தமும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது என்றார்.

-------------http://tamil.oneindia.in/news/2013/02/27/world-channel-4-videos-are-just-trailer-video-supplier-kannan-170540.html

தமிழ் ஓவியா said...

ஈழ பிரச்சனைக்கு விடுதலைப் புலிகள் காரணமே அல்ல: ராஜ்யசபாவில் மைத்ரேயன் பேச்சு

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமே அல்ல...இலங்கை அரசின் திட்டமிட்ட கலாச்சார, இனப் படுகொலைதான் அடிப்படையான காரணம் என்று ராஜ்யசபாவில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் கூறினார். ராஜ்யசபாவில் மைத்ரேயன் பேசுகையில், கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கையில் இதுவரை எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையானது கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணா என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறது. சில புள்ளி விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன், சம உரிமையுடன், சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் அடிப்படையை அதன் மூலம் என்ன என்பதை இந்த அரசு புரிந்து கொள்ளவில்லை. இலங்கை பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் அல்ல..அநத நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலாச்சார இனப்படுகொலைதான் காரணமாகும். அனைத்து அமைதிவழிப் போராட்டங்களை இலங்கை அரசுகள் ஒடுக்கியதாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது. அதுவே அரசியல் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை இறுதிப் போரின் போது மட்டும் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னமும் பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. காணாமல் போதலும் இனப்படுகொலையும் அங்கு நீடிக்கிறது. தமிழக சட்டசபையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானமே, இலங்கையின் போர்க் குற்றங்களை ஐநாவுக்கு கொண்டு சென்று போர்க் குற்றவாளிகளாக பிரகடனம் செய்ய வேண்டும் என்பதும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தர்போது அபிவிருத்தி பெயரில் அமைதியாக கலாச்சார இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு. தமிழரின் வாழ்விடங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையை மாற்றுவதற்காக சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்று வெளியாகி இருக்கக் கூடிய மனித உரிமைகள் கண்கானிப்பகத்தின் அறிக்கை, தமிழ்ப் பெண்களின் பாலியல் வன்கொடுமைகளை சொல்லியிருக்கிறது. ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான காட்சிகளை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் சோன், பாலச்சந்திரன் படுகொலை ஆகியவை போர்க்குற்ற ஆதாரங்களாகும். இலங்கை ஒருநாட்பு அல்ல.. அது ஒரு எதிரிநாடு. நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம், அமைச்சரால் வழிநடத்தப்படவில்லை. கொள்கை வகுப்பாளர்களால் நடத்தப்படுகிறது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.,

----------------http://tamil.oneindia.in/news/2013/02/27/india-sri-lankan-tamils-proplem-not-from-ltte-170530.html

தமிழ் ஓவியா said...


நம் இளைஞர்களின் நிலைநாம், நம் இளைஞர்களைத் தயா ரிக்க வேண்டும்; வாக்கு வங்கி அரசிய லுக்குத்தான் நம் இளைஞர்கள் இருக்கி றார்களா?

தந்தை பெரியார், காமராசர், திராவிடர் இயக்கம் இவர்களின் உழைப் பால் இன்று சிகாகோவிலும், லண்டனி லும் கணினிப் பொறியாளர்களாக கைநிறைய சம்பளம் பெறுபவர்களாக இருக்கின்றனரென்றால் அதற்கு எந்தத் தடியும் தாடியும் காரணம்?

இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து கிரிக்கெட் பார்க்க டிக்கெட் வாங்குகிற இளைஞர்கள் பல்வேறுப் போதை களுக்கு ஆட்பட்டுள்ளனர் நுகர்வுக் கலாச்சாரம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கிறார்கள். ஒரு வீதியில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தால், அந்தத் தீ உன் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? என்று தெரியாமல் இருக்கின்றனர்.

இந்த இளைஞர்களை சரியான பாதைக்குக் கொண்டு வரவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அதனைச் செய்வோம்.

- சென்னை பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (25.2.2013)

தமிழ் ஓவியா said...


தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்க! பேரா. சுப.வீரபாண்டியன் முழக்கம்!


சென்னை, மார்ச் 1- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட வர்கள் மீதான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சட் டத்தில் இடம் உண்டு என்றார் திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன். 25.2.2013 அன்று சென்னை பெரி யார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட் டதாவது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தமதுரையில் குறிப் பிட்டதாவது:-

நாகப்பட்டினத்தில், தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்து ஏட்டில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப் பட்டதை பார்த்த போது திடுக்கிட்டோம்.

அதே நேரத்தில் நமது ஆசிரியர் அவர்கள் சென் னையில் இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாமா என்று கருத்து கூற பத்தே நிமிடத்தில் இந்த கூட் டம் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நாட்டிலே தண் டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் வரவேற் கப்படுகிறார்கள் - வர வேற்கப் பட வேண்டிய வர்கள் தண்டிக்கப்படு கிறார்கள்.

பாலச்சந்திரன் படு கொலை செய்யப்பட்டுக் கிடந்த காட்சியைவிட அடுத்துத் தனக்கு என்ன நடக்கப் போகிறது என் பதை அறியாமல் தின் பண்டத்தைத் தின்று கொண்டிருக்கும். காட்சி தான் நம்மைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. ஒரு படம் உலகையே உலுக்கி எடுத்து விட்டது.

இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் டெசோ சார்பில் மார்ச் 7ஆம் தேதி மாநாடு - கருத் தரங்கம் நடைபெற உள் ளது. அது உலகம் முழு வதும் நம் உணர்வைக் கொண்டு சேர்க்கும்.

இரண்டு செய்திகள் கொலைக்காரன் ராஜ பக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் கூட்டாளிகள் என்பதற்காக நான்கு பேர் களுக்குத் தூக்கா.

இழுத்து மூடு நீதிமன்றத்தை!

தூக்குத் தண்ட னையே கூடாது என்று சொல்லுபவர்கள் நாம். கசாப் தூக்கிலிடப்பட் டது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டது ஏனென் றால் வெளியில் தெரிந் தால் சில மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றம் சென்று விடுவார்களாம்.

எப்படிப்பட்ட தந் திரம். அப்படியென்றால் மனித உரிமைகள் பற்றி இந்த அரசினர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! நீதிமன் றங்கள் இந்த நாட்டில் ஏன்? இழுத்து மூட வேண்டியதுதானே!

குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்தார் - அவரைத் தொடர்ந்து அப்துல் கலாம் இருந்தார் - அப் பொழுதெல்லாம் அவர் கள் கருணை மனுக் களை நிராகரிக்கவில்லை; தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்ல வில்லை.

பிரணாப் குடியரசுத் தலைவராக ஆனபின்...

பிரணாப் முகர்ஜி குடி யரசுத் தலைவரானபின் தூக்குத் தண்டனைகள் அவசர அவசரமாக நிறை வேற்றப்படு வது - ஏன்? தெரிந்து கொள்ளலாமா?

வீரப்பன் கூட்டாளி கள் என்பதற்காக தூக்குத் தண்டனையா? இங்கே அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நம் எதிரில் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்துள் ளார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லு வதெல்லாம் கலங்காதீர் கள்! கலங்காதீர்கள்!! உங் களுக்காகக் குரல் கொடுக் கக் கூடியவர்கள் நியாயம் கேட்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட் டவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட னர். இப்பொழுது அவர் களைத் தூக்கில் போட வேண்டும் என்று கூறுகி றார்கள். ஒரு குற்றத்திற் காக? இரண்டு தண்டனை களா? சட்டத்தில் அதற்கு இடமுண்டா?

இதுபோன்ற வழக்கு களை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியே கூறி இருக்கிறார். அதைத் தான் நாங்களும் வலி யுறுத்துகிறோம். இந்தக் கூட்டத்தின் வாயிலா கவும் வலியுறுத்துகிறோம்.

சு.சாமி ஓட்டம்

சு.சாமி ஒரு தொலைக் காட்சிப் பேட்டிக்கு வந்தார். அப்பொழுது அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உங் களை எப்பொழுது கைது செய்யப் போகிறார்கள் என்று கேட்டேன் ஏன்? என்னை எதற்குக் கைது செய்யவேண்டும் என்று கேட்டார். ஜெயின் கமிஷ னில் உங்கள் பெயரும், சந் திரசாமி பெயரும் குறிப் பிடப்பட்டுள்ளதே என்று சொன்னேன். உடனே நடையைக் கட்டிவிட் டார் என்று குறிப்பிட் டார்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...


தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!


60 ஆம் ஆண்டில் அடிவைக்கும் இளைஞர்களின் இதயத்துடிப்பாம்

தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!

இன்று மார்ச் 1 இல் 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அருமைத் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரிளமைத் திறத்தோடு சிறப்பான உழைப்பின் உருவமாகி, பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் கலைஞரின் தகுதிமிக்க அரசியல் வாரிசாகி, வாகைசூடிடும் கொள்கை வைரமாகும்! அடக்கம், அன்பு, கொண்ட கொள்கையில் உறுதி, லட்சோபலட்ச இளைஞர் பட்டாளத்தின் ஈடுஇணையற்ற தளநாயகன், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைப்பில் கலைஞர் போல் உயர்ந்து நிற்கிறார்!

மேயராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி, எதிர்கட்சி தலைவராகவும் ஆகி அவர் வகிக்கும் அரசியல் பொறுப்பு எதுவானாலும் தன் அடிகளை அளந்து வைத்து எதிரிகளையும் வீழ்த்தி வியக்கச் செய்யும் வித்தகர் அவர்!

ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடர் இயக்கங்களின் அரசியல் சரித்திரத்தில் அடுத்தகட்ட அத்தியாயமாய் பரிணமித்து ஜொலிக்கிறார்!

உலகத்தமிழர்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவராய் உலா வருகிறார்!

சிறைச்சாலைத் தியாகங்களாலும், சீலத்துடன் கூடிய பொதுவாழ்வின் தொண்டறத்தாலும் மிளிறும் இத்தொண்டர்களின் தோழன், இயக்கத்தின் அரண், கட்டுப்பாடு காத்து, தன் தலைவர் கிழித்த கோட்டை தாண்டாத கொள்கைக் கோமானாகி, நாளும் வளர்கிறார், கழகத்தையும் வளர்க்கிறார் - கண்ணியத்துடன் கடமையாற்றும் கழகக் கட்டுப்பாட்டின் இலக்கணமாம் அவர்!

வளர, வளர அவரிடம் ஆர்வம் குன்றாது இருப்பதைப் போலவே, அடக்கம் அவரை உயர்த்திடும் அற்புதக் கவசமாகி அவரது வளர்ச்சிக்கு அதுவே வெளிச்சமாகவும் உதவுகிறது!

60ஆம் ஆண்டு அகவையில் கூட இளைஞர் போன்று ஓடி ஆடும் ஓயாத தேனீயாகி, இவர் எப்படி சலிப்பின்றி இலட்சியப் பயணம் செல்கிறார் என்று சிலர் வியக்கக் கூடும்.

அந்த இரகசியம் ஊர் அறிந்தது; உலகறிந்தது. 95 வயதிலும் போராட்டக் களம் காணவே ஆயத்தமான தலைவர் தந்தை பெரியார்தம் ஈரோட்டுக் குருகுல இணையற்ற மாணவராம் 90 வயது இளைஞர் நம் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் ஆணை ஏற்று, செயல்படும் இவர் 60 வயது இளைஞர் என்பதுதான்! இவர் எல்லாம் பெற்று, எதிர்காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் வரலாற்று வைரவரிகள் எழுதிட, வளர்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

1.3.2013 சென்னை

தமிழ் ஓவியா said...


சித்திரை முதல் நாள் அறிவிப்புக்கு வேதனை


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என
புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்குக் கோரிக்கை!
மலேசிய மாநாட்டில் தீர்மானம்!

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் தலைநகர் கோலாலம்பூர், தான்சிறீசோமா அரங்கில், கடந்த ஞாயிறன்று தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் உலகப் பரந்துரை மாநாடு, அதன் தலைவர் அ. இராமன் தலைமையில் நடைபெற்றது. காப்பாளர் இரா. தமிழ ரசி தமிழ் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது.

துணைச் செயலாளர் கரு. பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றினார். சமுதாயக் காவலர் சே.பி. சாமுவேல் இராசு மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். நீண்ட வரிசையில் நின்று மாநாட்டு மலரைப் பலர் பெற்றுக் கொண்டனர்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன், தமிழிய ஆய்வுக் களம், தலைவர் இர. திருச் செல்வம், மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர், திருமுறைச் செல்வர் ந. தர்மலிங்கம், தமிழ்நாடு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் பாவலர் கதிர். முத்தையன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழாலயம் சிறப்பாசிரியருமான பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மு. நிர்மலாதேவி தருமலிங்கம் தொகுத்து வழங்கிய, தொன்மை, நாகரிகம் தொடர் பான ஆவணப்படங்கள் மற்றும் குமரிக் கண்டம் ஆணவப் படங்கள் உள்ளடக்கிய வெண்திரைக்காட்சிகள் பார்வையாளர் களை வெகுவாகக் கவர்ந்தன.

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த வாழ்த்துச் செய்திகள் படிக்கப் பெற்றன.

தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் மா. கருப்பண்ணன், மாநாட்டின் தீர்மானங்களைப் படித்தார். அவை பலரால் முன்மொழியப்பட்டு வழிமொழியப் பட்டன.

துணைத் தலைவர் ந. பொன்னுசாமி நன்றி கூறினார்.

நடுவத் தலைவர் போகையா முனியாண்டி நெறியாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

1. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் இயற்றி அறிவித்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

2. அச்சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனத் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக இன்றைய தமிழக அரசு சட்டம் இயற்றியதற்கு மிகுந்த வேதனையை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

3. அச்சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, மீண்டும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் புதிய சட்டம் இயற்றி அறிவிக்க இன்றைய தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தை முதல் நாளைப் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டாக, மலேசியத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அந்நாளை, பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, மலேசிய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தொன்மை வாய்ந்த மூத்த தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிச் சிறப்பித்த இந்திய நடுவணர சுக்கும் அதற்குத் துணைபுரிந்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் சென்னையில் இயங்கிவரும் செம் மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி உதவி அளிப்பதுடன், தற்போது முடங்கிக் கிடக்கும் அதன் நிருவாகத்தைச் சீர்படுத்தி மேலும் சிறப்புடன் செயற்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. தமிழர் வாழ்வியல் திருமறையாக வும் உலகப் பொதுமறையாகவும் திகழும் திருக்குறளை, தேசிய நூலாக அறிவித் துப் பெருமைப்படுத்துமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மற்றும் பல தீர்மானங்கள் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


பாவம் ராஜாக்கள்!


கேள்வி: தகாத வழி களில் பணத்தைச் சம் பாதித்து ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுபவர்கள் உண்மை யான கடவுள் பக்தி உள்ள வர்களா?

இளையராஜா (இசை இயக்குநர்) பதில்: அந்தப் பணம் அவர்களிடமிருந் தால் மேலும் தகாத வழி களில் அவர்கள் உபயோ கித்து விடலாம் என்று கடவுள் தனது டோல் கேட்டின் மூலம் வசூலிக் கிறது போலும் என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? (குமுதம் 27.2.2013 பக்கம் 85).

திருப்பதி உண்டியலில் அப்படிப் போடப்படும் பணம் 5000 கோடி ரூபாய் ஒன்றுக்கும் பயன்படாமல் வங்கிகளில் தூங்குவதால் யாருக்கு என்ன பயனாம்?

பகுதி பணத்தை உண்டியலில் போட்டவன், தகாத வழியில் மறுபடியும் சம்பாதிக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்தர வாதம்? அவ்வாறு செய் வதற்குத்தானே ஒரு பகு தியைக் கோயில் உண்டிய லில் போடுகிறான்! பணம் உண்டியலில் போடாத வர்கள் எல்லாம் தக்க வழியில் சம்பாதிக்காத வர்களா?

ஏன் இவ்வளவு தூரம் மூக்கைத் தொட சுற்றி வளைப்பானேன்? தக்க வழியில் சம்பா தித்து தக்க வழியில் செல வழிக்கும் நல்ல புத்தியை அந்த ஏழுமலையான் கொடுக்கக் கூடாதா?

ஏன் நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை? அப்படி யென்றால் ஏழுமலையான் நல்லவன் கிடையாதா?

ஏழுமலையான் என்பது உண்மையாக இருந்து அந் தக் கடவுளுக்குச் சக்தி யிருந்தால் நல்ல புத்திதான் கொடுத்திருப்பான். அதெல் லாம் சுத்த கப்சா, யாரோ சிற்பி செதுக்கிய சிலையை வைத்து இல்லாதது பொல் லாததுகளைக் கற்பித்து, புத்தியைப் பறி கொடுத்த மக்களின் பக்தியைப் பயன் படுத்தி சுரண்டல் தொழிலை நடத்துகிறார்கள் என்பது தானே உண்மை!

ஏழுமலையானுக்கு சக்தியிருப்பது உண்மை யானால் உண்டியல் பணத்தை எண்ணும்போது நாலு பக்கமும் கேமிராவைப் பொருத்தி வைப்பது ஏன்? உண்டியலின் பக்கத்தில் ஏ.கே.47 துப்பாக்கி ஏந்தி காவலாளி நாலு பக்கமும் கண்களைச் சுழற்றிச் சுழற் றிப் பார்த்துக் கொண்டு நிற்பானேன்?

அரசர் கிருஷ்ணதேவ ராயன் அன்பளிப்பாக திருப்பதி கோயிலுக்குக் கொடுத்த நகைகளைக் காணவில்லை என்ற புகார் எழுவானேன்? நகைகள் கணக்குப் பார்த்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடு வானேன்?

பாவம் இளையராஜாக் கள்? சிறீரங்கம் கோயில் திருப்பணிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து என்ன பயன்? வெளியில்தானே நிற்க வைத்தனர்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வருமா?


கொண்டு வந்தால் இந்தியாவின் கடமை உணர்வையும்
உலகத் தமிழர்களின் உணர்வையும் அது எதிரொலிக்கும்

சென்னை, மார்ச் 3- ஜெனி வாவில் மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவே இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தால் அது இந்திய நாட்டின் கடமை உணர்வையும் உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொ லிப்பதாக அமையும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சென் னையில் இன்று காலை (3.3.2013) அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மணி விழா மலரினை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். அதுபோது செய்தியாளர்களை கலை ஞர் சந்தித்த விவரம் வருமாறு:-

செய்தியாளர் :- டெசோ சார்பில் நீங்கள் 5ஆம் தேதியன்று இலங்கை துதுவரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். இன்னொரு குழுவினர் 4ஆம் தேதி யன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக் கிறார்களே?

தலைவர் கலைஞர் :- நாங்கள் 3ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்காததற்குக் காரணம், அவர்கள் 4ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்திருப்பதால்தான்!

செய்தியாளர் :- மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை யில் தி.மு.கழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே?

கலைஞர் :- அதை நாங்கள் பல முறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக் கிறோம். தொடர்ந்து வலியுறுத்து வோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனை வரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். செய்தியாளர் :- 7ஆம் தேதி டில்லி யில் நடைபெறும் டெசோ கருத்தரங் கில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதா?

கலைஞர்:- அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

செய்தியாளர் :- தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே பேசும்போது இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவாக வும், டில்லியில் பேசும்போது எதி ராகவும் பேசுகிறார்களே?

கலைஞர்:- யார் அப்படி பேசு கிறார்கள்?

செய்தியாளர் :- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் அவர்களே அப்படி பேசியிருக்கிறாரே?

டி.ஆர். பாலு :- இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக டெல்லியில் அவர் பேசவில்லை.

செய்தியாளர் :- அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதற் குப் பதிலாக, இந்தியாவே தீர்மா னத்தை முன் மொழியுமா?

கலைஞர் :- இந்தியாவே தீர்மா னத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டும். இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வு களையும் எதிரொலிப்பதாக அமை யும். இந்தத் தீர்மானத்தின் மீது இந் தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அக் கறையோடு கவனிக் கிறார்கள்; நாங்களும் தான்!

செய்தியாளர் :- மதுவிலக்குப் பிரச்சினைக்காக காந்தியவாதி சசி பெருமாள் 33 நாட்களாக உண்ணா விரதம் இருக்கிறார். தற்போதைய சூழலில் மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

கலைஞர் :- சாத்தியம் இல்லை என்பதற்கு பல சான்றுகளை ஏற்க னவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக நல்ல காரியங் களை விட்டு விட முடியாது. அள வுக்கு மீறி மது புழக்கத்தையும், அதைப் பயன் படுத்துவதையும் அனு மதிக்க வேண்டுமா என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

செய்தியாளர் :- நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

கலைஞர்:- எப்படி இருக்கவேண் டும் என்று கேளுங்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

செய்தியாளர் :- ஒவ்வொரு முறை யும் ஆறு மாதத்திற்குள் மின் வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று ஆட்சியிலே இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், மின் வெட்டு நீங்கிய பாடில்லையே?

கலைஞர் :- அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. செய்தியாளர் :- இலங்கையில் ராஜபக்ஷேயை சுப்பிரமணிய சுவாமி சந்தித்ததைப் பற்றி?

கலைஞர் :- நீங்கள் அவரையே கேட்டிருக்கலாமே!

இவ்வாறு பேட்டியில் கலைஞர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


டெசோ கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி


இலங்கைக்கு சர்வதேசக் குழுவை அனுப்ப வேண்டும்
அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது

ஜெனிவா, மார்ச் 3- இலங்கையில் உள்ள நிலைமைகளைக் கண் காணித்து சர்வதேச குழுவினரை அனுப்ப வேண்டும் என்கிற புது தீர்மானம் ஒன்றை ஜெனிவா மனித உரி மைக் குழுவில் அமெ ரிக்கா ஒன்றைக் கொண்டு வர உள்ளது. டெசோ மாநாட்டில் இத்தகையதோர் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது என்பது குறிப் பிடத்தக்கதாகும். இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங் களை கண்டித்து அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நாளை 2ஆவது தீர்மானத்தை கொண்டு வருகிறது. இதை இந்தியா உள்பட பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுகிறது. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதிகட்ட போர் நடந் தது. அப்போது, பல ஆயிரக்கணக்கான அப் பாவி தமிழர்கள் கொல் லப்பட்டனர். மேலும், குழந்தை கள், பெண்கள் என்றும் பாராமல், எல்லோரை யும் ராணுவத்தினர் மிகக் கொடூரமாக நடத்திய தும் தெரிய வந்தது. இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற டி.வி, இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தின ரின் அத்துமீறல்களை வெளிகாட்டும் பல காட் சிகளை வெளியிட்டது. இதனால், உலக அளவில் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் எழுந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் 19ஆவது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர் மானம் கொண்டு வந் தது. தமிழர்கள் மறு வாழ்வு தொடர்பாக இலங்கையை நிர்ப்பந் தம் செய்யும் அந்த தீர் மானம், 47 உறுப்பினர் கள் கொண்ட கவுன்சி லில் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தது. இதனால், இலங்கையில் முள் வேலி முகாம்களில் அடைக்கப் பட்டி ருந்த தமிழர்களை மீண்டும் அவர்களின் பகுதிகளில் குடியேற்றி, மறுவாழ்வு பணிகளை மேற் கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சட்டப் படி விசாரிக்க அறிவுறுத் தப்பட்டது. ஆனால், இதுவரை இலங்கை அரசு அவற்றை முறைப் படி மேற்கொள்ளவில்லை. இந் நிலையில், இங்கிலாந் தின் சேனல் -4, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சில காட்சி களை வெளி யிட்டது. அதில், பிரபாகரனின் 12வயது இளைய மகன் பாலச் சந்திரன் எப்படி ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டான் என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இது உலக மக்களி டையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் இலங்கைக்கு எதிராக போராட் டங்கள் நடத்தின.

இதற்கிடையே, ஜெனிவாவில் அய்.நா. பாது காப்பு கவுன்சிலின் 22ஆவது கூட்டம், கடந்த வாரம் துவங்கியது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எஸ்தர் பிரிம்மர் பேசுகையில், இலங் கையை பொறுத்தவரை இந்த கவுன்சிலின் பணி இன்னும் முடியவில்லை. அங்கு எல்எல்ஆர்சி பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அங்குள்ள நிலைமைகளை கண்காணிக்க சர்வதேசக் குழுவினரை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக, இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா இங்கு கொண்டு வர உள்ளது என்றார். இதன்படி, இலங்கைக்கு எதிரான 2ஆவது தீர்மானத்தை அமெரிக்கா, அய்.நா. கவுன்சிலில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், போர்க் குற்றங்களை சர்வதேச சட்டப் படி விசாரிக்கவும், தமிழர் மறுவாழ்வு பணி களை சர்வதேச குழுவினர் கண்காணிப்பில் மேற்கொள்ளவும் வலியுறுத்தப் படும் என தெரிகிறது. இந்த தீர்மானத்தை பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், எளிதாக வெற்றி பெறும். இதனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுவ தாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர் களைச் சரிப் படுத்தும் வேலையில் இலங்கை அரசு ஈடு பட்டு வருகிறது.

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டின் 2ஆவது தீர்மானத்தில் காணப் படும் வாசகமாவது.

அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப் பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது.