கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வீரர்களே, வீராங்கனைகளே, திரள்வீர்! திரள்வீர்!!
தமிழர் தலைவரின் உணர்ச்சியூட்டும் அறிக்கை
தன் சொந்த நாட்டு குடிமக்களான ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்க தமிழர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:
இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள்
உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த
நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க்
குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது.
முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள
தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் - சொல்லொணாத்
துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை
சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை!
எம் தமிழ்ச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி வருகிறது!
குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.
வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப்
பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே; ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு
இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை!
போர் முடிந்த நிலையிலும் வாழ்வாதாரம் இல்லையே!
போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள்
குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக்
குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது.
தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு
வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம் நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு,
ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச்,
பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி
வருகின்றன.
இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர்
அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்
திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து
நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள்,
மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை
கொள் கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக
குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய
வேண்டும்.
மத்திய அரசின் வெண்டைக் காய்ப் பதில்
இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள
இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு
வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு
தருகின்ற நிலை!
இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்,
போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும்
அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில் பல்லாயிரக்
கணக்கில் உள்ளனர்.
அமெரிக்கத் தீர்மானம் - இந்தியாவின் நிலைப்பாடு
வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித
உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில்
இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும்
தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள
தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற
உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது.
இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை
உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி மனித உரிமைகளைப் பறிக்கும்
ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை
அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் - கொக்கரிக்கிறார்.
உள்நாட்டுப் பிரச்சினையா?
அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை
உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார்.
மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும்
போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து
உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார்.
எதுவரை உள்நாட்டு விவகாரம் எதுவும்?
எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா?
அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு
குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை
கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா?
கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும்
குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக்
கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா?
கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை
கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான் ஏது?
உள்நாட்டுப் பிரச்சினையென்றால் உதவிக்கு வெளிநாடுகளில் மனு போடுவானேன்?
உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய
அரசிடம் இலங்கை உதவி கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி
ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க - புனர் வாழ்வுக்கு
நிதி கேட்கலாமா? இந்திய வீடு கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா?
சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை.
எனவேதான் அவருக்கு இந்தியா வர எவ்வித உரிமையும், யோக்கிதையும் இல்லை எனக் காட்ட - 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னையில் டெசோ சார்பில் தளபதி மு.க.
ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ள மாபெரும் கறுப்புடை அணிந்த கடமை வீரர்கள்,
வீராங்கனைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மற்றும் அனைத்துத் தமிழர்களும் கட்சி,
ஜாதி, மதம் வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கில் 8.2.2013 காலையில் கலந்து
கொண்டு கொடுங் கோலர்களுக்கு அமைதி வழியில் பாடம் புகட்டிட வாரீர்!
வாரீர்!! என அழைக்கின்றோம்!
---------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை
"விடுதலை” 5.2.2013
---------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை
"விடுதலை” 5.2.2013
27 comments:
பார்ப்பனர்கள்
நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.
(விடுதலை, 12.11.1960)
டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவுகள்
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பிப்.18இல் ராமேசுவரத்திலும், 19இல் நாகையிலும் ஆர்ப்பாட்டம்!
இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருவதைக் கண்டித்து
கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவுகள்
சென்னை, பிப்.5- இனப்படு கொலை செய்த கொடுங் கோலன் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டிக்கும் வகை யில் வரும் 8ஆம் தேதி சென் னையில் டெசோ சார்பில் கறுப்புடை அணிந்து கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
மேலும், தமிழக மீனவர் கள் தொடர்ந்து சிங்களக் கடற் படையால் தாக்கப்படுவதைக் கண்டித்தும் அது தடுக்கப்பட இந்தியா உதவ வேண்டும் என்று வலியுறுத்தியும் பிப்.ரவரி 18 அன்று இராமேசுவரத்தில் 19ஆம் தேதியன்று நாகப்பட்டி னத்திலும் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர் மானிக்கப்பட்டது.
தமிழ் ஊர்ப் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றம்
தீர்மானம் 1:
இலங்கையில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்வதிலும், கட்ட மைப்பு ரீதியாக அங்கு தமிழரு டைய அடையாளங்களை அழிப்பதிலும் - தமிழர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைப்பதிலும் சிங்கள அரசு திட்டமிட்டு வேகமாக செயல் படுகிறது. தமிழர்கள் வாழும் 89 கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப் பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது தமிழர்கள் வழிபடும் 367 இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினை தலைவர் கலைஞர் அவர்களின் கவனத்திற்கு வந்தவுடன், தலைவர் கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கும் கடிதம் எழுதி இப்பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை உலகத் தமிழ் சமு தாயம் நன்றி கூறி பாராட்டியது.
தமிழர்களுடைய அடை யாளம் அழிக்கப்பட வேண்டும் என்றும்; சிங்கள இன அரசு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும்; திட்டமிட்டுச் செயல் படும் சிங்கள அரசை கண்டிப்ப தோடு; இவ்வாறான சர்வாதிகார நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட இந்திய அரசும், உலக நாடுகளும் தலையிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அமெரிக்காவின் புதிய தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும்
தீர்மானம் 2:
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கெதிராக கொண்டு வந்த தீர்மானத்தைத் தமிழகத்தின் வற்புறுத்தலால் இந்தியாவும் ஆதரித்து அத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானத் தின்படி ராஜபக்சே அரசு எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக் காமல், அத்தீர்மானத்திற்கு எதிராகத் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணைய கவுன்சிலில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் புதிய தீர்மா னத்தைத் தாக்கல் செய்ய உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசைக் கண் டிக்கும் அத்தகைய தீர்மா னம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது மட்டுமல்லா மல், எவ்வித ஐயத்திற்கும் இடம் தராத - உறுதியான நிலைப்பாட்டை எடுத்து; ஈழத் தமிழருக்கு விரை வில் வாழ்வுரிமை கிடைக் கும் வகையில், இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது.
காணாமல் போன தமிழர்கள்பற்றி அறிக்கை தேவை
தீர்மானம் 3:
கடந்த 2009இல் இலங்கையில் போர் முடிந்தவுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இளங்குமரன் என்ற பேபி சுப்பிரமணியன், பாலகுமார், யோகி, கவிஞர் புதுவை இரத்தினதுரை, இளம்பரிதி, எழிலன், பூவண்ணன் போன்ற முன்னணி தலைவர்களை இலங்கை அரசு கைது செய்து யாரும் அறியாத இடத்தில் சிறையில் அடைத்தது. இதுகுறித்து யோகியின் மனைவி யோகரத்தினம் யோகி, அப்போது கேள்வி எழுப்பி யிருந்தார். இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற கேள்வி தற்போது ஈழத்தில் எழுந்துள்ளது. இவர்களில் பலர் சாகடிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன. கேள்விக்குறியாக உள்ள இந்தச் செய்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ராஜபக்சே அரசுக்கு உள்ளது. இதுகுறித்த உண்மை நிலைமைகளை சிங்கள அரசு உலகுக்கு வெளியிட, இந்திய அரசும், உலக சமுதாயமும் அழுத்தம் தர வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4:
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் ஜனநாயக அடிப்படையில் அமைதியான முறையில் கார்த் திகை தீபம் ஏற்றி மாவீரர் திருநாளன்று கூடியதற் காக கடந்த நவம்பர் 27ஆம் தேதி 12 மாணவர்களை சிங்கள அரசு கைது செய்தது. பல்வேறு போராட்டத்தின் விளைவாக அவர்களில் 10 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப் பல்கலைக் கழக ஒன்றிய செயலாளர் ப.தர்சானந், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், ஆகிய இருவர் வெலிகந்த கட்டைக்காடு சிறை முகாமில் அடைக்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து யாழ் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும் இந்த மாண வர்களின் விடுதலைக்காக போராடி வருகின்றனர். மனித உரிமைகளை மதிக்காமல் இம்மாணவர்களை சிறைப் பிடித்து வைத்துள்ள சிங்கள அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக அந்த இரண்டு மாணவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டுமென இக்கூட்டம் வேண்டி கேட்டுக் கொள்கிறது. சர்வதேசக் குழு சார்பில் விசாரணைக் குழு தேவை
தீர்மானம் 5:
கடந்த 12-8-2012 அன்று சென்னையில் நடை பெற்ற டெசோ மாநாட்டில், ஐ.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வ தேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண்டறியப்பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத் திற்கு உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். எனவே இந்தத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் பிப்.18,19 நாட்களில் ஆர்ப்பாட்டம்
தீர்மானம் 6:
தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தொடர்ந்து துன்புறுத்தி கைது செய்து வருகிறது. இந்த தொடர் சம்பவங்கள் குறித்து 12.8.2012 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் ஒரு அழுத்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்நிகழ்வை தடுக்கக்கூடிய வகையில் இராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஒரு கடற்படை தளத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக மண்டபத்தில் இந்திய கடற்படை தளத்தை அமைத்திட வேண்டுமெனவும் மத்திய அரசை இக்கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இவ்வாறு துன்புறுத்தி வருவதைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் 18-2-2013 அன்றும், நாகப்பட்டினத்தில் 19-2-2013 அன்றும் டெசோ அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவதென இந்தக் கூட்டம் தீர் மானிக்கிறது. தேவை பொது வாக்கெடுப்பு
தீர்மானம் 7:
ஈழத் தமிழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வாழ்வுரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மீறப்படுவதற்கு முடிவு கட்டாத வரை இலங் கைத் தமிழர்களின் மறு வாழ்வு என்பது வெறும் கண்துடைப்பாகவும், தொலைதுரக் கனவாக வும் இருக்குமென்பதால்; ஈழத் தமிழர்கள் சுயமரி யாதையோடும், உரிமையோடும் வாழ வேண்டும் எனும் நோக்கில்; இலங்கைத் தமிழரிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு மென்றும்; அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப் படுத்த வேண்டுமென்றும் 12-8-2012 அன்று சென்னை யில் நடை பெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு; அது ஐ.நா. மன்றம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ஐ.நா. உறுப்பு நாடுகள், இந்திய அரசு என அனைவரது ஆழ்ந்த கவனத் திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், பொது வாக்கெடுப்பு சம்மந்தமான தீர்மானம் ஒன்றினை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப் படுகிறது.
ராஜபக்சே வருகை கறுப்புடை அணிந்து வரும் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
தீர்மானம் 8:
இலங்கை இனவாத அரசின் தலைமைப் பொறுப்பிலே உள்ள அதிபர் மகிந்த ராஜபக்ஷே, தமிழினப் படுகொலையில் ஈடுபட்டு, மனித உரிமைகளுக்கும் - மனித நேயத்திற்கும் எதிரான பல்வேறு வகைப் போர்க் குற்றங்களைப் புரிந்திருப்பதன் காரணமாக, சர்வ தேச அரங்கில், மானுடத்திற்கே எதிரான ஒரு கொடுங்கோலராகவும் - பெருங் குற்றவாளியாகவும் பார்க்கப்படுபவர். இந்தியத் திருநாடு நட்புறவுடன் நீட்டும் அன்புக் கரத்தையும், மரபு வழியிலான விருந்தோம்பல் உணர்வையும் இந்தியாவின் பலவீனம் என்றே கருதிடக் கூடியவர். அவர் சிங்களப் பேரின வாதத் தின் சின்னமாக உலவி வருபவர். அவர் இந்தியத் திருநாட்டுக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது.
ஈழத் தமிழர்களை முடிவுறாத துன்ப துயரங்களுக்காளாக்கி, தமிழ்த் தேசிய இனத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தெறியும் அராஜக முயற்சியைத் தொடர்ந்து செய்து வரும் ராஜபக்ஷே இந்தியா வருவதை இங்குள்ள தமிழர்கள் ஒருக்கா லும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே ராஜபக்ஷேயின் இந்திய வருகையைக் கண்டித்து வரும் 8-2-2013 அன்று காலை 10 மணி அளவில் சென்னையில் கறுப்புடை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது. டில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம்
தீர்மானம் 9:
இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகின்ற அவலங் களையும், துன்பங்களையும் விளக்குகின்ற வகையில், இந்தியத் தலைநகரான டெல்லியில் வரும் மார்ச் திங்களில் டெசோ இயக்கத்தின் சார்பில் அனைத் திந்திய அளவில் அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்துவதென இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
கலைஞர் தலைமையில் டெசோ
அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்
சென்னை, பிப்.5- ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (4.2.2013) மாலை 4.30 மணியளவில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஈழத் தமிழர்களை முடிவுறாத துன்ப துயரங்களுக்காளாக்கி, தமிழ்த் தேசிய இனத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தெறியும் அராஜக முயற்சியைத் தொடர்ந்து செய்து வரும் ராஜபக்ஷே இந்தியா வருவதை இங்குள்ள தமிழர்கள் ஒருக்கா லும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே ராஜபக்ஷேயின் இந்திய வருகையைக் கண்டித்து வரும் 8-2-2013 அன்று காலை 10 மணி அளவில் சென்னையில் கறுப்புடை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது. டில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம்
தீர்மானம் 9:
இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகின்ற அவலங் களையும், துன்பங்களையும் விளக்குகின்ற வகையில், இந்தியத் தலைநகரான டெல்லியில் வரும் மார்ச் திங்களில் டெசோ இயக்கத்தின் சார்பில் அனைத் திந்திய அளவில் அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்துவதென இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
கலைஞர் தலைமையில் டெசோ
அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்
சென்னை, பிப்.5- ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (4.2.2013) மாலை 4.30 மணியளவில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமரைத் தேடும் இடம்!
பாரதிய ஜனதா கட்சி, பிரதமருக்கான வேட்பாளரை எங்கே தேடுகிறது என்ற தகவலை அறிந்தால் நாம் இந்த 2013இல் தான் வாழ்கிறோமா என்ற வினா கண்டிப்பாக எழத்தான் செய்யும்.
அலகாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டு இருக்கிறது அல்லவா? அங்கு வரும் சாமி யார்களின் கருத்துக்களைக் கேட்டு, பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்று தேர்வு செய்யப்படும் என்று பிஜேபியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் தெரி வித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் புண்ணியமுழுக்குப் போடும் கும்பமேளா என்பதுதான் இந்த இந்துத்துவாவாதிகளின் அறிவில் பூத்த முக்கியமான நிகழ்வாகும். முக்கியமான முடிவுகளை எல்லாம் இங்குதான் எடுப்பார்கள். 1992 டிசம்பர் 6 அன்று அயோத் தியில் பாபர் மசூதியை இடித்தார்கள் அல்லவா! அந்த முடிவைக்கூட இந்தக் கும்பமேளாவின் போதுதான் சாமியார்களின் கருத்தைக் கேட்டுத் தான் எடுத்தார்கள்.
விசுவ ஹிந்து பரிஷத் என்னும் இந்து சாமியார்களின் அமைப்புக் கூட்டம் வரும் 7ஆம்தேதி உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் நடைபெற உள்ளது. அப்பொழுது இந்த முக்கிய முடிவு எடுக்கப்படுமாம்.
பாபர் மசூதியை இடிப்பதற்குப் பச்சைக் கொடி காட்டியவர்கள் - பல்லாயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவித்த ஆட்சிக்குச் சொந்தக்காரரான நரவேட்டை நரேந்திர மோடியைத்தானே தேர்வு செய்வார்கள்.
குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை இந்திய அளவில் நிறைவேற்றிட பொருத்தமான ஆசாமி கிடைக்க வேண்டாமா? அந்தக் கண்ணோட்டத்தில் மோடியைத் தவிர வேறுயார் தான் கிடைக்க முடியும்?
பல இனங்கள், பல மொழிகள், பல கலாச் சாரங்கள், பல வகை தட்ப வெப்ப நிலைகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஏற்ற ஆட்சி என்பது மதச் சார்பற்ற தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அது உறுதி செய்யவும் பட்டுள்ளது.
இந்த அரசமைப்புச் சட்டத்தின் மீதுதான் சத்தியம் செய்து பதவியும் ஏற்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இதற்கு எதிரான சிந்தனையும் தத்துவமும் கொண்ட மூர்க்கத்தனம் கொண்ட மதவெறிக் கும்பல் ஆட்சி பீடத்தில் ஏற அனுமதிப்பதைவிட தற்கொலை ஒப்பந்தம் ஒன்று இருக்க முடியுமா?
இதற்கு முன்வந்ததே கடைந்தெடுத்த தலைக் குனிவு! இன்னொரு முறை இந்தியா உலக நாடுகளின் முன் தலைகுனிய வேண்டுமா?
குஜராத் வன்முறையைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பேயி என்ன சொன்னார் - நினைவு இருக்கிறதா?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரா - இல்லையா?
இப்பொழுது அந்த மோடியையே பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது இந்தியாவின் முகத்தையே தொங்கச் செய்வதாகும்; ஒவ்வொரு குடிமகனையும் அவமானப்படுத்துவதும் ஆகும்.
பி.ஜே.பி., தன்னை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ்.காரர்களுக்கும் நாடாளுமன்றத்திற்குள் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அளிக்கப்படத்தான் செய்கின்றன.
இராமனை இழிவுபடுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும்; நாக்கை அறுக்க வேண்டும் என்று வெறித்தன நஞ்சைக் கக்கிய ராம்விலாஸ் வேதாந்தி வி.எச்.பி. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்றால் சங்பரிவார் அமைப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமே.
பி.ஜே.பி. சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் குழுவில் கண்டிப்பாக ஆர்.எஸ். எசைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதை விதியாகவே வைத்துக் கொண்டுள்ளனர்.
கும்பமேளாவில் பிரதமரைத் தேடும் அளவுக்கு நெறி கெட்டுப் போன அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டாமா? வாக்காளர்கள் சிந்திப்பார்களாக! 5-2-2013
மண்ணடித்துக் கிடக்கும் 63 கோடி ரூபாய் நூலகத் திட்டம்!
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்பது அதன் பெயர். மக்களுக்கு அதைப்பற்றி எடுத்துச் சொல்லப்படவுமில்லை. அதைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தப்படவில்லை என்கிறார், திருவள்ளூரில் வசிக்கும் டி. தனுஷ் கோடி என்பவர்
அறிஞர் அண்ணா முன்னாள் முதல்வர் தீவிர படிப்பாளி. அவரைக் கவுரவிக்கும் பொருட்டு, அவர் பெயரால் துவக்கப்பட்டதுதான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். அதன்படி, மக்களின் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக, நூலகங்களின் வளர்ச்சிக்காக 63 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்ட இந்தத் திட்டம், செயல்பட ஆரம்பிக்கவேயில்லை!
திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டம் மிக மோசமாகவே அமல் செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு, கிராமப்புற வளர்ச்சித்துறை, நூலகங்களில் 65 விழுக்காடு மட்டுமே பயனில் உள்ளதாகவும், அதிலும் புதிய புத்தக வரவுகள் இல்லையென்றும் மீதமுள்ள 35 விழுக்காடு (அதாவது சுமார் 5000 நூலகங்கள்) கட்டடங்கள் கட்டப் படாமலும், செயல்படாமலும் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
நமக்குக் கிடைத்த தகவல்படி, ஒவ்வொரு நூல் நிலையத்திற்கும், நூலகத்திற்குத் தேவையான பயன்பாட்டுச் பொருள்களுக்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அண்ணாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தைப்பற்றி யாருக்கும், எதுவும் விளக்கப்படவேயில்லை. இதில் மிக மோசமானது என்னவென்றால், மரச்சாமான்களை உள்ளூர் மக்கள் எடுத்துச் சென்று விட்டனர். நூலகத் திற்கான இடத்தில், பஞ்சாயத்து அலுவலகத்தின் சரக்குகள் வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேத்தூர் டி. தனுஷ்கோடி என்பவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட் டுள்ள பல கட்டடங்கள் மூடப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலையாம்பேடு வி. ராஜன், இந்த நூலகக் கட்டடம் 2010இல் கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே பூட்டிக் கிடப்பதாகச் சொன்னார்.
கிராம வளர்ச்சித்துறையின் மூத்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, இந்தத் திட்டத்தில் அரசு அக்கறையுடன் இருப்பதாகவும், அதுபற்றி ஆய்வில் இருப்பதாகவும், விரைவில் நிலைமை சீர்படும் என்றும் சொன்னார்.
ஆனால் நூலக ஊழியர்களோ, அவர்களது குறைபாடுகளைப்பற்றிச் சொன்னார்கள். அவர்களது சம்பளம் சரியாக கொடுக்கப்படுவது இல்லை. கவுரவ நூலகர் இருந்தும், மாதம் ரூ.750தான் ஊதியமாகக் கொடுக் கப்படுகிறது. ஆனால் மாதம் ரூ.150 மட்டும்தான் கொடுக்கப்படுவதாக சொன்னார்.
சமூகப் போராளிகளோ, இந்தத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததைச் சுட்டிக் காட்டுகிறார்கள் பல கோடி ரூபாய்களைப் புத்தகங் களுக்காகக் கொட்டிக் கொடுத்திருந் தும், அந்தப் புத்தகங்கள் எங்கே இருக்கின்றன என்பதை அறிய முடிய வில்லை என்கிறார், தேவநாயன் அரசு என்கிற சமூகப் போராளி!
நகர நூலகங்களுக்கான நல்ல நாட்கள் வருமா?
அரசினரின் அக்கறை இன்மை யாலும், புறக்கணிப்பாலும், நூலக இயக் கத்தின் முதல் நிலையிலிருந்த தமிழகம் பின் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு கடைசியில் தனது கண்களைத் திறந்திருப்பதாகத் தெரிய வருகிறது.
தாமதங்களுக்குக் காரணமாக குறை சொல்லப்பட்டு வந்து பொது நூலகங் களின் இயக்ககம், புதுப்புத்தகங்கள் வாங்குவதற்கான செயல்பாடுகளில் இறங்கி இருப்பதாகத் தெரிய வருகிறது. சிவப்பு நாடாத்தனம் தான் மாவட்ட நூலகங்களில் புதிய நூல்கள் பற்றாக் குறைக்குக் காரணம் என்றும் குறை சொல்லப்படுகிறது. தவிர, மிகக் குறைந்த புத்தகங்கள் சேகரிப்பானது. புதிய அறிவியல் செயல்திறன் குறைபாடுகள் காரணமாகவும், மாவட்ட நூல் நிலையங்கள் பழைமை வாய்ந்ததாகி விட்டது.
டி. ராஜேஷ் என்ற 7ஆவது வகுப்பு மாணவன், நான் என் நண்பனின் கேலிச் சித்திரப் புத்தகத்தை ஜெராக்ஸ் செய்ய வந்தபோது, அந்த வசதி இல்லை என்று கூறி விட்டார்கள். மேலும் குழந் தைகள் நூல்கள் வேண்டுமென்று கேட்டதற்கு அவர்கள் உதவி செய்ய வில்லை என்று கூறியுள்ளான்.
கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்கும் முதியவர்கள்கூட, நூலகம் வருவதை நிறுத்திவிட்டனர். 1990-களில் மாவட்ட நூலகம் சிறந்த தரமுள்ளதாக இருந்தன. ஆர்வமிக்க வாசகர் கூட்டம் நிரம்பி வழியும். நாங்கள் கூடி, பல பொருள்களைப் பற்றி பிரச்சி னைகளைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம். வேகம் நிறைந்த அந்த நாட்கள் மறைந்துவிட்டன என்றார் 80 வயது நிறைந்த எஸ். பழனி என்பவர். இளைஞர்களோ, பிற நாட்டு ஆசிரியர்கள் புத்தகங்கள் இல்லை எனக் குறைபட்டுக் கொள்கின்றனர். தற்கால ஆசிரியர்கள், பன்னாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள், பல துறைகளின் ஒரு புதிய கண்ணோட் டத்தைக் கொணரும். மேலும் சாகித் திய அகாடமி பரிசு பெற்ற நூல்களும் அவசியம் என்று சொன்னார் மதுமிதா என்ற கல்லூரி மாணவி.
இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி யிடம் தொடர்பு கொண்டபோது, எல்லாப் பணிகளையும் நாங்கள் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்தையும் 10 நாட்களில் முடித்து விடுவோம் என்றார்.
- தனுஷ்கோடி, திருவள்ளூர்
ஆறு ஆண்டுகள் தாமதம் ஏன்?
காவிரி நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும்
உச்சநீதிமன்றம் 15 நாள் கெடு!
புதுடில்லி, பிப். 5-காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசித ழில் வெளியிட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 15 நாள் கெடு விதித்துள் ளது. வரும் 20ம் தேதிக்குள் அரசித ழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு தமிழ கத்துக்கு உடனடியாக 2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 29ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜெ.செல்லமேஸ்வர் ஆகியோர் முன் னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதனும், கர்நாடகா சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமனும் ஆஜராகி வாதிட் டனர். அப்போது, நீதிபதிகள், தமிழ கத்துக்கு 6 டிஎம்சி தண்ணீராவது கொடுங்கள் என்று கர்நாடக அரசு வக்கீலிடம் கூறினார்கள். ஆனால், தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்று கர்நாடக அரசு சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, நதி நீர் ஆணை யத்திடம் முறையிடுங்கள் என்று தமிழக அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கூறினர். ஆனால், நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பினரிடமும் சுமுகமான தீர்வு ஏற்படாததால், தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக அரசை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசா ரணையை பிப்ரவரி 4ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜெ.செல்லமேஸ்வர், மதன்லோக்கூர் ஆகியோர் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன், தமிழகத்தில் சம்பா பயிர் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. குறைந்த பட்சம் 9 டிஎம்சி தண்ணீரையாவது திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் வாதிடும்போது, தமிழகத்தில் சம்பா சாகுபடியில் 40 சதவீதம் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. 20 சதவீத பயிர் களுக்கு மட்டுமே தண்ணீர் தேவை யாக உள்ளது.
ஆனால், தமிழக அரசு 9 டிஎம்சி தண்ணீர் தேவை என்று கூறுகிறது. அணைகளில் உள்ள தண்ணீர் கர்நாடக மாநிலத்தின் தண்ணீர் தேவைக்கே போதுமானதாக உள்ளது. தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்றார்.
டெல்டா மாவட்டங்களான தஞ் சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்து காவிரியிலிருந்து எப்போது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய 3 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்குழுவை மத்திய நீர் வளத்துறை அமைத்து நீதிமன்றத்தில் அறிக்கை தர வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை 7ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5ஆம் தேதி அளித்த தீர்ப்பை 6 ஆண்டுகளாகியும் இதுவரை அர சிதழில் வெளியிடவில்லை. அரசித ழில் வெளியிடுவதை விட்டுவிட்டு மத்திய அரசே காலதாமதம் செய்து வருகிறது. எனவே, பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும். நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டு விட் டால் அரசிதழில் வெளியிடுவதைத் தவிர வேறு எந்த மாற்றுவழியும் மத்திய அரசுக்கு இல்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் ஆஜராகி, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண் டாம் என்று கோரினார். ஆனால், அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. மேலும், தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து விவசாயத் துக்கு 2 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, கர்நாடக அரசு சார்பில் அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிடுவது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றனர்.
பொறுக்குமா இனமலருக்கு?
தி.க., ஆர்ப்பாட்டம்
தி.க., தலைவர் வீரமணி: சேலம் ரயில்வே கோட்டத்தை, கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அதை தடுத்து நிறுத்த, தமிழக எம்.பி.,க்கள், கட்சி பேதம் பாராமல், பார்லிமென்டில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 9ம் தேதி சேலத்தில், தி.க., ஆர்ப்பாட்டம் நடத்தும்.
டவுட் தனபாலு: உங்க கோரிக்கை நல்ல கோரிக்கை தான்... ஆனா, மத்திய அரசை விழுந்து விழுந்து ஆதரிச்சிட்டு இருக்கிற உங்க, "அரசியல் ஆசான்' கருணாநிதியை, இந்த பிரச்னையில மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க சொல்றதை விட்டுட்டு, ஆர்ப்பாட் டம் எல்லாம் அவசியமான்னு தான், எனக்கு, "டவுட்!'
- தினமலர், 5.2.2013 பக். 8
கோரிக்கை நல்ல கோரிக்கை தானாம் - அதற்காக போராடக் கூடாதாம். திராவிடர் கழகத்திற்கு ஆசான் தந்தை பெரியார்தான்; தன்னை ஆசான் என்று கலைஞர் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார். தினமலருக்கே உரித் தான சில்மி(வி)ஷம் இது.
சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் உரிமைகளுக்காகத் தொடர்ந்து தன் வழியில் போராடிக் கொண்டுதானிருக்கிறது.
இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, கொலை குற்ற வாளியாக பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்குப் பிரச்சினை.
மகளிர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை, பிராமணாள் பெயர் அழிப்பு! - இப்படி எத்தனையோ போராட்டங்களை தன் வழியில் திராவிடர் கழகம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது!
சேலம் ரயில்வே கோட்டப் பிரச்சினைக்காகவும் ஏற்கெனவே பலமுறை போராடித் தடுத்து நிறுத்தியிருக்கிறது திராவிடர் கழகம்.
இப்பொழுதென்ன தினமலரின் புதுக்கரடி?
தமிழ்நாட்டு உரிமைக்காக எந்தப் போராட்டம் நடத்தினாலும் தினமலர் - இனமலர் கூட்டத் திற்குப் பொறுக்காதே! நல்ல கோரிக்கை என்று எழுதும் தினமலர் இதற்காக ஏதாவது நாலு வார்த்தை எழுதியதுண்டா? தமிழன் வீட்டில் சாவு விழுந்தால் விசாரிக்கக் கூடப் போகாத பார்ப்பனக் குடும்பம் கருமாதிக்கு மட்டும் கரெக்டா போய் விடும் - தன் சுரண்டல் புரோகிதத் தொழிலுக்காக.
தமிழ்நாட்டின் உரிமை என்றால் குமட்டிக் கொண்டு வருகிறது - இந்தக் கும்பலுக்கு!5-2-2013
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆதரவளிப்போம் பிரித்தானிய அமைச்சர்
அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டால் அதற்கு நாம் ஆதரவளிப் போம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடை பெறவுள்ள அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங் கைக்கு எதிராக அமெ ரிக்கா உள்ளிட்ட நாடு கள் தீர்மானம் நிறை வேற்றத் திட்டமிட்டு உள்ளன. இந்தத் தீர்மா னத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட் டில் யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி ஏற்பட்டு உள்ளது. எனினும், பல் வேறு விடயங்களில் இன்னமும் அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டி யுள்ளது.
அத்துடன் பிரதம நீதியரசர் ஷிரானி பண் டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை உள் ளிட்ட சில பிரச்சினை கள் குறித்து அதிருப்தி அடைகின்றேன்.
இருப்பினும் இலங் கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கையை முழு மையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தொடர்போராட்டங்களை டெசோ சார்பில் நடத்துவோம்! டெசோ தலைவர் கலைஞரின் பேட்டி
சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப. வீரபாண்டியன், மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், கலைஞர், கி. வீரமணி ஆகியோர் உள்ளனர்
சென்னை, பிப். 5- ஈழத் தமிழர் பிரச்சினையில் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், தொடர் போராட்டங் களை நடத்துவோம் என்றார் - டெசோ தலைவர் கலைஞர்.
நேற்று (4.2.2013) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
கலைஞர்: இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் தட்டச்சு செய்து உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. அதிலே ஏதாவது அய்யப்பாடுகள் இருந்தால் கேட்கலாம்.
செய்தியாளர்: ராஜபக்ஷேயின் இந்திய வருகை யைப் பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக் கிறீர்கள். ஆனால் அவர் தொடர்ந்து வந்துகொண்டு தானே இருக்கிறார்?
கலைஞர்: தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக் கிறோம். இதற்கு மேல் என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்.
தொடர் போராட்டங்கள்!
செய்தியாளர் :- முதல் டெசோ காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதைப் போல போராட்டம் நடத்தப்பட்டது. அது போன்று தற்போது போராட்டம் நடத்தப்படுமா?
கலைஞர்: இந்த நிலைமை நீடித்தால் அந்தப் போராட்டங்கள் நிச்சயமாகத் திரும்பவும் நடக்கும்.
செய்தியாளர்: ராஜபக்ஷே வரும் நேரத்தில் போராட்டம் இருக்குமா?
கலைஞர்: தீர்மானம் 8 இல் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறோம்.
செய்தியாளர்: டில்லியில் டெசோ உறுப்பினர்கள் பல நாட்டுத் தூதர்களைச் சந்தித்துப் பேசிய அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்கள் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிப்பது தொடரும் என்று சொல்லியிருக்கிறாரே?
கலைஞர்: பாதுகாப்பு அமைச்சர் சொன்னதை நாங்கள் ஏற்கவில்லை. இலங்கை ராணுவத்திற்கு இங்கே பயிற்சி அளிப்பது கூடாது, அதை நாங்கள் மறுக் கிறோம், எதிர்க்கிறோம் என்பதற்குக் காரணமே, அவர் களால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப் பதும், தொடர்ந்து இவ்வளவிற்குப் பிறகும் அந்த இனப் படுகொலை தொடர்வதும் நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாத நிகழ்வுகளாகும். நாங்கள் நிறை வேற்றியுள்ள இந்தத் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப் படாமல், தொடர்ந்து தயக்கமே காட்டப்படுமானால், டெசோ சார்பாக தொடர் போராட்டங்கள் நிச்சயமாக நடத்தப்படும்.
செய்தியாளர்: 8 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப் பாட்டத்திற்கு யார் தலைமை தாங்குவார்கள்?
கலைஞர்: கழகத்தின் சார்பில் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் அனைவருமே தலைமை தாங்குவார்கள்.
டில்லியில் கருத்தரங்கம்
செய்தியாளர்: டில்லியில் மாபெரும் போராட்டம் டெசோ சார்பில் நடத்தப்படுமா?
கலைஞர்: டில்லியில் இப்போது மாபெரும் போராட்டம் அல்ல, கருத்தரங்கம் நடத்தவிருக்கிறோம்.
செய்தியாளர்: ஜெனீவா மனித உரிமை மன்றத்தில் இலங்கையைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவிருக்கின்ற இந்த நேரத்தில் இந்தியாவிற்கு ராஜபக்ஷே வருகிறார். இதை இந்திய அரசும் அனு மதித்து இருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளும் அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகாதா?
கலைஞர்: அது உங்கள் யூகம். அந்தச் சூழ்நிலை உருவாகக் கூடாது, உருவானால் அதை நாங்கள் மறுத்துக் கூறுவோம்.
கறுப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம்
செய்தியாளர்: ராஜபக்ஷே ஒவ் வொரு முறை இந்தியா வரும்போதும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். ஆனால் இந்திய அரசு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறதே?
கலைஞர்:- அதற்காகத் தான் நாங்கள் இப்போது கறுப்புடை (கம்பள) அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
செய்தியாளர்: டெசோ உறுப் பினர்கள் பல நாடுகளின் தூதர் களைச் சந்தித்தபோது அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? குறிப்பாக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் தூதர்களைச் சந்தித்துப் பேசினார் களா?
கலைஞர்: நீங்கள் குறிப்பாக கேட்பதுபோல பாகிஸ் தானையோ, சைனாவையோ, அவர்களின் தூதர் களையோ டெசோ உறுப்பினர்கள் சந்திக்கவில்லை. ஆனால் நேரம் போதாத காரணத்தால் அவர்கள் அங்கே தங்கியிருந்த நாள்களில் ஆறு நாடுகளின் தூதர்களை மட்டும் சந்திக்க முடிந்திருக்கிறது.
மற்ற நாடுகளின் தூதர்களைப் பார்க்க இப்போது சென்ற டெசோ உறுப்பினர்கள் மாத்திரமல்ல; நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவினரும், ஒரு சில நாடுகளின் தூதர்களைச் சந்திப்பதன் மூலம் எல்லா நாடுகளின் தூதர்களையும் சந்திப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
7 தூதுக் குழுக்கள் சந்திப்பு
இன்னும் 41 நாடுகளின் தூதர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களைச் சந்திப்பதற்கு ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1. டி.ஆர். பாலு, தொல். திருமாவளவன், அப்துல் ரகுமான் - ஒரு குழு
2. கவிஞர் கனிமொழி, தங்கவேல், கே.பி. ராம லிங்கம் - 2 ஆவது குழு
3. டி.கே.எஸ். இளங்கோவன், வேணுகோபால், சுகவனம் - 3 ஆவது குழு
4. திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி - 4 ஆவது குழு
5. தயாநிதி மாறன், ஏ.கே.எஸ். விஜயன், ஜெயதுரை - 5 ஆவது குழு
6. ஏ. ராஜா, ரிதீஷ், ஹெலன் - 6 ஆவது குழு
7. செல்வகணபதி, ஆதிசங்கர், தாமரைச்செல்வன் - 7 ஆவது குழு
தமிழர் தலைவர் கி. வீரமணி: நாங்கள் சந்தித்த ஆறு நாடுகளை மூன்று வகையாகப் பிரித்து சந்தித் திருக்கிறோம். தீர்மானத்திற்கு ஆதரவாக அப்போது வாக்களித்தவர்கள், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித் தவர்கள், நடுநிலை வகித்தவர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களிடம் நாங்கள் சொன்ன போது மிகவும் சக்தி வாய்ந்த முறையில் எடுத்துச் சொன்னோம்.
அவர்களின் ஆதரவு தெளிவாக இருக்கக் கூடிய வகையில் விளக்கினோம். கடைசியாக நாங்கள் சந்தித்த ரஷ்யா, எதிர்த்து வாக்களித்த நாடு. அந்த நாட்டிலே கூட, நீங்கள் ஏற்கெனவே ஈழத் தமிழர்களை ஆதரிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது மீண்டும் உங்கள் நாட்டிற்கு நீங்கள் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். மனித நேய பிரச்சினைகளை எல்லாம் தளபதி ஸ்டாலின் அவர்கள் தெளிவாக விளக்கினார்கள், அதைப் போல நாடாளுமன்ற உறுப்பினர் பாலு தெளிவாகச் சொன்னார், நாங்களும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது தெளிவாகச் சொன்னோம்.
தமிழ் ஈழம்பற்றி...
செய்தியாளர்: ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் பற்றியும், துன்பங்களைப் பற்றியும் தான் தீர்மானம் சொல்கிறதே தவிர, தமிழ் ஈழம் பற்றி கோரிக்கை எதுவும் இல்லையே?
கலைஞர்: அதற்காகத் தான் பொது வாக்கெடுப்பு பற்றிய தீர்மானத்தை மீண்டும் இன்றைக்கு நிறை வேற்றியிருக்கிறோம். (அந்தத் தீர்மானத்தை தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் படித்துக் காட் டினார்.) இந்தத் தீர்மானங்களை யெல்லாம் கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் மத்திய அரசை வலியுறுத்தி இதற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வோம்.
செய்தியாளர்: மீனவர்களுக்காக நடைபெறும் போராட்டம் எப்போது?
கலைஞர்: இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் துன்புறுத்துவதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் 18.2.2013 அன்றும், நாகையில் 19.2.2013 அன்றும் டெசோ அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது உங்களுக்கு தரப்பட்ட தீர்மானத்திலேயே உள்ளது.
திருமதி சோனியா காந்தியின் கடிதம்
செய்தியாளர்: இதுவரை மத்திய அரசின் சார்பில் டெசோ முயற்சிகளுக்கு ஏதாவது பதில் வந்ததா?
கலைஞர்: இலங்கையில் 89 கிராமங்களின் பெயர்களை எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றி யிருப்பது பற்றி பிரதமருக்கும், சோனியா காந்தி அவர் களுக்கும் விளக்கமாக கடிதம் எழுதியிருந்தேன். உங் களுக்கும் அதைத் தெரிவித்திருந்தேன். அந்தக் கடிதத் திற்கு திருமதி சோனியா காந்தி அவர்கள் இன்றைய தினம் பதில் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், இலங்கையின் நிகழ்வுகள் குறித்து எனக்கு ஏற் பட்டுள்ள கவலையில் சோனியா காந்தி அம்மையாரும் பங்கேற்பதாகவும், இந்தப் பிரச்சினையை வெளியுறவுத் துறை அமைச்சரிடம் எடுத்துரைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
செய்தியாளர்: ராஜபக்ஷே இலங்கையிலே உள்ள இந்துக் கோவில்களை அழித்து, இந்தியாவிற்கு வந்து திருப்பதியிலே உள்ள இந்துக் கோவிலுக்குச் செல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கலைஞர்: உங்கள் கருத்துத்தான் இதிலே என் கருத்தும்.
செய்தியாளர்: ராஜபக்ஷே வருகையைப் பற்றி பிரதமரிடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா?
கலைஞர்: நாங்கள் இன்று நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானமே அதுதான். நான் ஒருவன் மாத்திரமல்ல, டெசோ உறுப்பினர்கள் அனைவரும் கட்சித் தலைவர் களும் வற்புறுத்துவதாகத்தான் அர்த்தம்.
செய்தியாளர்: இந்தப் பிரச்சினை குறித்து அகில இந்தியாவில் உள்ள கட்சித் தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாக்க முயற்சி மேற்கொள்வீர்களா?
கி. வீரமணி: கடைசி 9 ஆவது தீர்மானத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் முயற்சி யெடுத்து, அவர் களின் ஆலோசனைப்படி கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்ட தீர்மானம். (தீர்மானத்தைப் படிக்கிறார்) இந்தத் தீர்மானமே உங்கள் கேள்விக்கு விடையாக அமைகிறது.
செய்தியாளர்: பா.ஜ.க.விற்கு அழைப்பு இருக்குமா?
கலைஞர்: இந்தப் பிரச்சினையில் அக்கறை உள்ள எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்படும். மதுரையில் நடைபெற்ற டெசோ மாநாட்டிற்கு பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் அவர்களே வந்து கலந்து கொண்டார்.
ஈழத் தமிழர்களின் இன்னல்: கலைஞர் கடிதத்திற்கு சோனியா பதில்
புதுடில்லி, பிப். 5- அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரும், தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவருமான திருமதி சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
தாங்கள் 2013 ஜனவரி 19 ஆம் தேதியன்று சில இணைப்புகளுடன் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்கள் குறித்த உங்களின் கவலைகளை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.
இதுகுறித்து வெளியுறவு தொடர்புத் துறை அமைச்சருக்கு எடுத்துச் சொல்கிறேன்.
- இவ்வாறு திருமதி சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் கோவிலா? தமிழ்நாடு அரசு தலையிடுமா?
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் கலைஞர் அவர்களின் சிந்தனையால் - முயற்சியால் உருவாக்கப்பட்டது பெரியார் நினைவு சமத்துவ புரங்கள். பல்வேறு சமுதாயத்தினரும், ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு குடியமர்த்தப்பட்டனர். எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்பது அடிப்படை விதி - கோட்பாடு. கிருட்டினகிரி மாவட்டம், கே.திப்பனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திடீர் கோவில்கள், வழிபாட்டுச் சின்னங்கள் முளைத்துள்ளன.
தமிழ்நாடு அரசு இவற்றை உடனடியாக அகற்றுவதோடு, அங்கே இந்தச் சிலைகளை வைத்த விஷமிகள்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
தகவல்: கோ. திராவிடமணி, கிருட்டினகிரி மாவட்ட விடுதலை செய்தியாளர்
பூமியை நெருங்கும் பெரிய விண்கல் 15 ஆம் தேதி கடக்கிறது
வாஷிங்டன், பிப். 6- அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின் றனர்.
இந்த நிலையில் ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரிந்தது. சுமார் 50 மீட்டர் அக லம் கொண்ட அந்த பெரிய விண்கல்லுக்கு 2012 டி14 என பெயரிட் டுள்ளனர். அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த தூரம் பூமிக்கும் பெரிய விண் கல்லுக்கும் இடையே மிக குறைவானது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் நிச்சயம் பூமியைத் தாக்காது. வருகிற 15 ஆம் தேதி அது பூமியை கடந்து செல்கிறது. இந்தத் தக வலை நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த 1908 ஆம் ஆண்டு பூமியை தாக்கியது. அப்போது அது ரஷி யாவின், சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந் தது. இதனால் பல நூறு சதுர கி.மீட்டர் தூரத் துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.
அதிபர் ராஜபக்சே திமிர் பேச்சு!
கொழும்பு, பிப். 6- இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினவிழா திரி கோணமலையில் திங் களன்று நடந்தது. விழா வில் கலந்து கொண்ட அதிபர் மகிந்த ராஜ பக்சே அந்நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
விடுதலைப்புலிகள் இயக்கம் அகற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நாடு பல்வேறு சவால் களை சந்தித்து வருகிறது. தாய் நாட்டையும், நாட் டின் சுதந்திரத்தையும் பாதுகாக்க போராடி வருகிறோம். தற்போது மிகவும் கடுமையான சூழ் நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுதந்தி ரத்தை காக்க வேண்டிய சவால்களும் அதிகரித் துள்ளன. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் ஆன இறுதிகட்ட போர் முடிந்து விட்டது.
அதில், இருந்து இங்கு அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுள் ளது. அதே நேரத்தில் மைனாரிட்டி ஆக வாழும் தமிழர்களுக்கு வடக்கு பகுதியில் எந்த விதமான அரசியல் தன் னாட்சி உரிமை வழங் கப்படமாட்டாது. அங்கு அவர்கள் ஒற்றுமையாக வாழும் பட்சத்தில் மத, இன வேறுபாடுகள் ஏற்படாது. - இவ்வாறு அவர் பேசினார்.
தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியில் தன் னாட்சி உரிமை வழங்க மாட்டோம் என அதி பர் ராஜபக்சே பேசி யுள்ள இந்த நேரத்தில் இம்மாத இறுதியில் அய்.நா.சபையின் மனித உரிமை கவுன்சில் கூட் டம் ஜெனீவாவில் தொடங்க உள்ளது. அதில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் தீர் மானத்தை அமெரிக்கா மீண்டும் கொண்டுவர தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மா னம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதற்கு ஆதரவாக இந்தியா உள் ளிட்ட நாடுகள் வாக் களித்தது குறிப்பிடத்தக் கது.
விவசாயிகள் தற்கொலையை மூடி மறைக்க வேண்டாம் தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டுக்குரிய நீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை!
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை
காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெசட்டில் வெளியிட 16 ஆண்டுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டதற்குக் காரணம் - அரசியல் நோக்கமே!
தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலையை மூடி மறைப்பது - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது என்று தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய அரசுக்குத் தலையில் குட்டு வைத்ததுபோல் உச்சநீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் 1997 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு இன்னமும் சட்டப்படி அதன் மத்திய அரசிதழ் - கெசட்டில் - வெளியிடாமல் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி வருவதைக் கண்டித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வெளியிட்டாகவேண்டும் என்று திட்டவட்டமாகவும் தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.
16 ஆண்டுகள் தேவையா?
1997 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. அந்தத் தீர்ப்பை சட்டப்படி வெளியிட்டு இருக்கவேண்டாமா? தன் கடமையைச் செய்து அத்தீர்ப்புக்குரிய சட்ட வலிமையைத் தருவதற்கு மத்திய அரசுக்கு 16 ஆண்டுகளா தேவை? மத்திய அரசு தன் கடமையை உச்சநீதிமன்றம் கூறிய பின்னாலா செய்வது?
இதற்கிடையில் முன்பே ஒருமுறை இரண்டு மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றத்தில் ஜனவரி இறுதிக்குள் வெளியிட்டு விடுவோம் என்று மத்திய அரசு சார்பில் அதன் வழக்குரைஞர் கூறி ஒப்புக்கொண்டாரே! தமிழ்நாட்டிலிருந்தும், புதுவையிலிருந்தும் சென்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களில் சிலர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் கெசட்டில் வெளியிடப்படும் என்றெல்லாம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தது - வெறும் வெற்றுப் பேச்சு என்றாக்கி, அவர்களின் நம்பகத்தன்மையையும் கேலிக் கூத்தாக்கலாமா?
நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபடவேண்டுமா?
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சில வாரங்களுக்கு முன்பு பார்த்து இதுபற்றி வற்புறுத்தினர். அப்பேச்சும் விழலுக்கு இரைத்த நீர்தானா?
பொறுமை காப்பதை பலவீனம் என்று எடுத்துக்கொள்வதா?
மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள்போல் தி.மு.க.வும், சதா ரகளை - கலகக் குரல் தராமல் - கூட்டணி தர்மத்திற்காக - பொறுமை காப்பதை அவர்களது பலவீனம் என்று மத்தியில் உள்ள ஆளுங்கூட்டணி அரசின் தலைமை குறிப்பாக பிரதமர் எடுத்துக்கொள்வதா?
விவசாயிகள் தற்கொலைகளை மூடி மறைப்பதா?
தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலைகள் அதை மூடி மறைக்கும் தமிழக அரசின் அமைச்சர்கள் என்ற வேதனையும், வெட்கங்கெட்ட போக்கும், விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அல்லவா அமைந்துள்ளது!
கருநாடகத் தேர்தல்தான் காரணமா?
இன்னும் சில மாதங்களில் கருநாடகத்தில் மாநிலத் தேர்தல் வர இருப்பதால், கருநாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வருவதற்காக கெசட்டில் பதிவு செய்யாமல் காலந்தாழ்த்தி வருவது - மத்திய அரசின் அரசியல் எதிர்பார்ப்பை ஒட்டிய போக்கு என்று வெளிப்படையான விமர்சனங்கள் வந்துவிட்டனவே!
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிட்ட புத்திசாலிகள் ஆகப் போகின்றதா காங்கிரஸ்?
மத்திய அரசின் கடமை!
மேலும் காலந்தாழ்த்தாது உடனடியாக கெசட்டில் வெளியிட்டு, தமிழ்நாட்டிற்குரிய பங்கைப் பெற்று தர நாணயமாய் முயற்சிப்பது மத்திய அரசின் கடமை!
கருநாடக மாநில அரசு ஆடிக்கொண்டுள்ள நிலையில்கூட அம்மாநில முதலமைச்சர் 10, 15 தடவையாக - அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிக் கருத்துக் கேட்டுள்ளார். நடுவர்மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிடக்கூடாது என்பதற்காக இன்றுகூட அனைத்துக்கட்சி ஆதரவைத் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இங்கோ, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று பலர் கேட்டும், கூட்டாதது மட்டுமல்ல; கலைஞர் தி.மு.க.வைக் குறைகூறியே அமைச்சர்கள் உள்பட சட்டசபையைப் பயன்படுத்துவது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரிய ஒன்று. ஒற்றுமையைக் காட்டினால் அது மத்திய அரசு, கருநாடகம் இருவருக்கும் அச்சத்தை உருவாக்குமே!
விவசாயிகள் சொந்த காரணங்களால் இறந்தார்கள் என்று கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் அநியாய செயல்களைச் செய்து, நொந்த விவசாயிகளை மேலும் நோகச் செய்து வேடிக்கைப் பார்க்காதீர்கள்!
தமிழ்நாட்டில் எதிலும் அரசியல், எப்போதும் அரசியல்தானா? வெட்கம்! மகாவெட்கம்!!
- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
6.2.2013
சென்னை
சேலம் ரயில்வே கோட்டம் ஆர்ப்பாட்டம்-ஏன்?
சேலத்தில் ரயில்வே கோட்ட அலு வலகத்தின்முன் வரும் 11.2.2013 அன்று காலை 11 மணிக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சேலம் கோட்டம் ரயில்வே கோட்டத்தை பாலக்காடுக்குக் கொண்டுபோகத் திட்ட மிட்டுள்ள முயற்சியைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
2007 நவம்பர் முதல் தேதியன்று அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு லாலு பிரசாத் தலைமையில், சேலம் ரயில்வே கோட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அன்றைய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆவார்கள்.
பாலக்காடு கோட்டத்தில் உள்ள 708 கி.மீ. பாதையும் - திருச்சி கோட்டத்தில் உள்ள 135 கி.மீ. பாதையும் சேர்த்து சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.
அன்றைய கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தன் மிக வெளிப்படையாக இதனை எதிர்த்தார்.
பாலக்காடு ரயில்வே கோட்டம் விவகாரத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கேரளா எதிர்பார்க்கிறது. மக்கள் போராட்டம் நடத்தினால் கேரள அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று பாலக்காட்டில் கூட்டுறவு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கு கொண்டு அவ்வாறு கருத்து தெரிவித்தார்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் எதிர் பார்ப்பும்கூட.
தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்த அரசு இதில் ஆர்வம் காட்டியதாலும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக லாலுபிரசாத் அவர்கள் இருந்ததாலும், சேலம் ரயில்வே கோட்டம் அமைந்தது.
ஆனாலும், இடையிடையே சேலம் ரயில்வே கோட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.
2012 ஜூன் மாதத்தில் இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது (26.6.2012). அதன் காரணமாக சேலத்திலிருந்து பாலக்காட்டுக்குக் கொண்டு செல்ல இருந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
இப்பொழுது மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடும் காரணத்தால், மறுபடியும் திராவிடர் கழகம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு எனும் பொருளில் திராவிடர் கழகம் எப்பொழுதுமே முன்னணிப் படையாக இருந்து எதிர்த்துப் போராடும் என்பது அனைவரும் அறிந்ததே.
ரயில்வே துறையைப் பொறுத்தவரையில் பொதுவாக தென்னகம் பாதிக்கப்பட்டாலும், கேரளா மட்டும் அதில் விதிவிலக்கு. மத்தியில் சக்தி வாய்ந்த பதவிகளில் நிருவாகப் பொறுப்பு களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருப்பதே இதற்குக் காரண மாகும்.
எடுத்துக்காட்டாக மங்களூரு விரைவு ரயில் வண்டி முதலில் ஈரோடுவரை சென்றது. ஈரோடு எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. பிறகு கோவைக்கு விரிவுபடுத்தப்பட்டது. இப்பொழுது கேரள மாநிலம் மங்களூருவரை செல்கிறது. தமிழ்நாட்டின் எல்லைக்குள் முக்கிய நகரங் களில் மட்டும் நிற்கும் இந்த ரயில், கேரளாவைப் பொறுத்தவரை அனைத்து ரயில் நிலையங் களிலும் நிற்கும்.
எடுத்துக்காட்டுக்கு ஒரு சின்ன உதாரணம் இது.
தட்டினால்தான் கதவு திறக்கும். எனவே, 11 ஆம் தேதி சேலம் ஆர்ப்பாட்டத்தில் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் பங்கு கொள்வார்களாக!
இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?
இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?
கறுஞ்சட்டைத் தோழர்களே கழகக் கொடியுடன் திரள்வீர்! திரள்வீர்!!
அருமைக் கழகத் தோழர்களே!
தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் வகையில், டெசோவின் முடிவுப்படி வரும் 8.2.2013 வெள்ளி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கறுப்புடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் பங்கேற்கிறார். சென்னை மண்டலக் கழக வீரர்களே, வீராங்கனைகளே, கழகக் கொடியுடன் ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!!
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
பொழைப்பா?
இனப்படுகொலையாளன் ராஜபக்சே இந்தியா வரு வதை எதிர்ப்பது - கறுப்புச் சட்டை - கொடி போராட் டம் நல்ல பொழைப்பாம். கார்ட்டூன் போடுகிறது கருமாதிப் பத்திரிகை.
பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று ஒட்டாரம் பிடிக்கும் தமிழ்த் தேசிய வியாதிகளுக்கு இது சமர்ப்பணம்!
எங்கே பிணம் விழும் - கருமாதி, கருமாந்திரம் என்று சொல்லி பணம் பண்ணலாம் என்று பொழைப்பு நடத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலின் கருமாதிப் பத்திரிகை இப்படித்தான் பொழைப்பைப் பற்றி எழுதும்! 6-2-2013
விவேகானந்தர் பெயரால்...
விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் - இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள்.
ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.
பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா? இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?
மதச் சார்பற்றவர்கள், இஸ்லாம், கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன?
ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?
ஆன்மீகப் பண்பாடும், துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்
- என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.
பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம்.
பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய், விளக் கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்;
இதுதான் இந்த இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!
இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?
இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா?
கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?
இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்! 8-2-2013
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)
அண்ணாவை அவமானப்படுத்தாதீர்கள்!
வாராழி கலசக் கொங்கை வஞ்சி போல் மருங்குலாள் தன் தாராழிக் கலை சார் அல்குல் தடங்கடற்கு உவமை....
. "தக்கவனே என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றன! அவளுடைய அல்குலோ (பெண்ணின் பிறப்புறுப்பு) தடங்கடற்கு உவமை!
அவளைத் தேடிக் கண்டு பிடித்து வருவாயாக!" என்று இராமபிரான் அனுமனிடம் சொல்லுவதாக கம்பர் பாடல் இயற்றியுள்ளார்.
செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன் என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கை களுக்கு உவமை தேடிப்பார்க்கிறேன. அவைகட்கு இணையாக உலகில் ஒரு பொருளும் இல்லை.அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என இராமன் கேட்பதாக கம்பர் எழுதி யிருக்கிறார்! உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட தன் மனைவியின் கொங் கையையும் மறை விடத்தையும் வேறொ ருவனிடம் வர்ணிக்க மாட்டான்!.என்று "திராவிநாடு" இதழில் கம்பராமாய ணத்தைப்பற்றி எழுதியவர் அறிஞர் அண்ணா. பின்னர் அது "கம்பரசம்" எனும் தலைப்பில் நூலாக வெளி வந்த போது "கம்பன் தமிழரின் கலையையும், நிலையையும், குலைக்கும் ஆரியத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என்பதற்காக எத்தகைய ரசத்தை கவி தையிலே கூட்டியிருக்கிறார் என்பதைக் கண்டு, சரியா?அது முறையா? என்பது பற்றி ஓர் தீர்ப்பளியுங்கள்!"என்று முன்னுரை எழுதினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைத்தாங்கிய கட்சி யின் ஆட்சியில் கம்பர் விருது வழங்கப் போவதாக அறிவித்துள்ளது மானக் கேடு!
- கி.தளபதிராஜ்
Post a Comment