Search This Blog

3.2.13

அன்று கலைஞர் எழுதியது.... இன்றும்!

சனவரி மாதத்தில் சென்னையில் சபாக்களில் சங்கீத வெள்ளம் கரை உடைத்துப் பொங்கிப் பிரவாகிக்கிறது.

தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ் தானில்லை என்றான் புரட்சிக் கவிஞன்.
நாட்டில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் இது நன்றாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில்தான் நாம் இருக் கிறோமா என்று நமது உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது.

தினமணி இசை விழா மலர் (2012_2013)  ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்வேறு கட்டுரைகளும் பல்வேறு இசைவாணர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சங்கீத  மும்மூர்த்திகள்  தியாகராஜ ஸ்வாமிகள். முத்துசாமி தீக்ஷதர், சியாமா சாஸ்திரிகளின் வண்ணப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் காலத்தால் இவர்களுக்கு  முந்திய தமிழிசை மும்மூர்த்திகளான சீர்காழி முத்துத்தாண்டவர், தில்லை விடங்கன் மாரிமுத்தாபிள்ளை, சீர்காழி மு. அருணாசலக் கவிராயர்பற்றி இந்த மலரில் மருந்துக்கும்கூட ஒரு செய்தி கிடையாது. அவர்களின் படங்களும் இல்லை - விவரங்களும் இல்லை.
இன்றைக்குத் திருவையாறில் தியாகப்பிர்ம உற்சவம் என்று கூறி அய்ந்து நாட்கள் தடபுடல் செய் கிறார்களே _- பஞ்ச ரத்தின கீர்த்தனை என்று நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்திசை பாடுகிறார்களே, - அந்தத் தியாகராயர் பிறந்தது 1767 ஆம் ஆண்டாகும்.

சீர்காழி முத்துத் தாண்டவர் பிறந்ததோ கி.பி.1560; தமிழ்ப் பண்ணிசைகளுக்கு முதன் முதலில் கீர்த்தனை  வடிவம் அளித்து, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற முறைகளை உண்டாக்கியவர்.

தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை கி.பி.1712ஆம் ஆண்டில் பிறந்தவர். நூற்றுக்கணக்கான கீர்த் தனைகளை அவர் பாடியிருந்தாலும் கையில் கிடைத்தவை 25 மட்டுமே!!

சீர்காழி மு. அருணாசலக் கவிராயர் கி.பி. 1745இல் பிறந்தவர். இவரும் இராமாயண நாடகக் கீர்த்தனை இசை நாடகத்தை எழுதியவர்தான்.
இந்த மூவரும் பக்திக் கீர்த்தனை களை பாடியிருந்தாலும்கூட இந்தப் பார்ப்பனர்களுக்கு, தினமணி, வட்டா ரத்துக்குக் கண்ணில் தெரிவதெல்லாம் தியாகராஜர், முத்துசாமி தீட்சதர் சியாமாசாஸ்திரிகள்தான். இந்தப் பார்ப்பன மூவருக்கும் முந்திய மும்மூர்த்திகள் உண்டென்றாலும் அதனைத் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.காரணம் வெளிப்படை  இவர்கள் தமிழர்கள் _ அவர்கள்  அவாளைச் சேர்ந்த அக்கிரகார வாசிகள் என்பதைத் தவிர வேறு காரணம் என்ன?

எத்தனையோ வண்ண வண்ணமாக பாடகர்களின் படங்கள் தினமணி மலரில் உண்டு. ஆனால் ஒரு ஜேசுதாசைக் காண முடியவில்லையே.

ஆனந்தவிகடன் இதழுக்கு (20.12.1992) ஜேசுதாஸ் ஒரு பேட்டி அளித்தார். டி.வி. கோபாலகிருஷ்ணன் பேட்டி கண்டவர்.

டி.வி.ஜி. நாம் எல்லோரும் ரொம்ப Detached Persons இல்லையா? நமக்குள்ளேயே முதல்ல ஒண்ணு சேர மாட்டோமே! அப்புறம் எங்கே வரிஞ்சு கட்டறது?
இப்போ நீங்க இருக்கீங்க..  உங்க கச்சேரிக்கு வர்ற கூட்டத்தை பார்த்த நாங்க வாய் பிளக்கிறோம்...

ஆனா நம்மள்ல சில பேருக்கு அதுவே வயித்தைக் கலக்கறதே! 

வயித்தெரிச்சல்ல பிரமாண்ட கூட்டத்துக்குக் காரணம் -_ அவருக்கு இருக்கிற சினிமா புகழ்னு வாய் கூசாம சொல்றவங்க கூட இருக்காங்களே!

ஜேசுதாஸ்: இல்லே டி.வி.ஜி.! அவங்களுக்கு இருக்கிற பாரம்பரியம் எனக்கு இல்லையே! அந்த ஆதங்கம்கூட இருக்கலாமில்லையா?

டி.வி.ஜி. தயவு பண்ணி அப்படி நமக்குப் பாரம்பரியம் இல்லேன்னு சொல்லிடாதீங்க...

ஜேசுதாஸ்: இல்லே... தியாகராஜர் என் தாத்தாவை மடியிலே உட்கார்த்தி வெச்சுண்டு பாட்டுப்பாடி சாதம் ஊட்டியிருக்கிறார்னு  சொல்றவங்களுக்கு மத்தியில, நான் பாரம்பரியம் இல்லாத அந்நியன்தானே! அதைத் தான் சொன்னேன். ஆனால் ஒண்ணு!  எல்லாத்தையும்  மீறி, எனக்குப் பாட வர்றதுன்னா, அதுக்குக் காரணம் குரு கடாட்சம்!

- என்று ஆனந்தவிகடனில் வெளி வந்த பேட்டி உணர்த்துவதென்ன?
ஜேசுதாஸ் பார்ப்பனர்  அல்லர் என்பதற்காகவே ஒதுக்கப்படுகிறார் -_ வெறுக்கப்படுகிறார் என்பதை ஜேசுதாஸ் வார்த்தைகளில் தொனிக் கிறதா? _ இல்லையா?

ஜேசுதாஸ் ஒன்றும் தந்தை பெரி யாரின் சீடரல்ல; - ஆனாலும் உள்ளத் தில் குமைந்து கிடந்த உணர்வைக் கொட்டித் தீர்த்து இருக்கிறாரா இல்லையா?
தினமணி இசை மலரில் பக்கத் துக்குப் பக்கம் ஆச்சாரியார் ராஜாஜி யின்  வண்ணப் படத்தோடு அவரின் கூற்றுகள்.

தமிழிசைக்கு ஆச்சாரியார் ஆதரவு காட்டினார் என்பதை நாம் ஒன்றும் மறுக்கவில்லை.
அதே நேரத்தில் தமிழிசைக்காக தந்தை பெரியார் வெறும் குரல் மட்டுமல்ல; செயல் வடிவில் ஆக்கப் பூர்வமாகப் பணியாற்றியுள்ளாரே!

1930ஆம் ஆண்டில் ஈரோட்டில்  தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டையொட்டி (1930ஆம் ஆண்டு மே 10,11) 12,13 ஆகிய இரு நாட்களிலும் தமிழ் மாகாண சங்கீத மாநாடு நடத்தப்பட்டதே!
அண்ணாமலைப் பல்கலைக் கழக சங்கீதக் கழகத் தலைவர் கே. பொன்னையா மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். சொ. முருகப்பா அவர்கள் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து வரவேற்புரை ஆற்றினார்.

அந்த உரையிலே அவர் சுட்டிக் காட்டிய உண்மை மிகவும் கவனத்துக்குரியது.  கச்சேரிகள் நடக்கும்போது தலைமை வாத்தியக்காரரைப் புறந்தள்ளி பக்கவாத்தியக்காரர்களுக்கு முதல் மாலைகள் போடப்பட்டன. அதற்குக் காரணம் முதன்மையாளர் பார்ப்பனரல்லாதாராகவும், பக்கவாத்தியக்காரர் பார்ப்பனராகவும் இருப்பதே என்று சொ. முருகப்பா அம்மாநாட்டின் வரவேற்புரையிலே 1930இல் சுட்டிக்காட்டினாரே _ அந்த மைய இழையோட்டம் இன்றைய தினமணி இசைமலர் வரை தொடர்கிறதா இல்லையா?

இன்றைக்கு திருவையாறில் தியாகராயர் உற்சவம் களை கட்டுகிறதே _- அதே தியாகராயர் உற்சவத்தில் 1946இல் என்ன நடந்தது?

இசை அரசு தண்டபாணி தேசிகர் சித்தி விநாயகனே! என்ற தமிழ்ப் பக்திப் பாட்டைத்தான் பாடினார்.

அவரைத் தொடர்ந்து பாட வேண்டியவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்.
தேசிகர்வாள் தேன் சொட்டச் சொட்ட அருந்தமிழ்ப் பாட்டைப் பாடினார் என்று மெச்சினாரா? இல்லை _ இல்லை.

தேசிகர்வாள் தியாகப் பிர்ம விழாவில் தமிழில் பாடியதால் சந்நிதானம் தீட்டாயிற்று என்று கூறி தொடர்ந்து பாட மறுத்தாரே!

மேடையைச் சுத்திகரித்தபிறகுதானே பாடினார்!

அதுபற்றி குடிஅரசு (9.2.1946) இதழில் கலைஞர் அவர்கள் தீட்டாயிடுத்து என்று எழுதினாரே!

வரலாற்றில் ஒரு சுவையான திருப்பம் என்ன தெரியுமா? அதே கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவிருந்தபோது தமிழிசைச் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார் (21.12.1989).

1946இல் திருவையாற்றில் நடந்த அந்தப் பழைய நிகழ்ச்சியை ஆற்றோட்டமாக கலைஞர் அவர்களுக்கே உரித்தான பாணியில் எடுத்துரைத்தார்.
அருகில் இருந்தவர்கள் யார் யார் தெரியுமா? செம்மங்குடி சீனிவாசய்யரும், எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாரும்தான். (அம்மையார் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தாலும், கல்கி  சதாசிவ அய்யரைக் கல்யாணம் கட்டிக் கொண்டதும் அசல் அக்ரகாரத்து மாமியாக மடிசார் கட்டி அவா _ இவா என்று பேச  ஆரம்பித்தவர் தானே!)

1946இல் மட்டுமா? இப்பொழுதும் எப்படி? இந்தக் கேள்விக்கு விடைதான் தினமணி இசைமலர்!

கூடுதல் தகவல் (Tail - Piece)
தமிழிசை முன்னோடிகள் என்று 32 பேர்களின்  பட்டியலை வெளியிட்ட தினமணி அதில்கூட  காலத்  தால் மூத்த தமிழிசை மும்மணிகளான  அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளைகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. நினைவிருக்கட்டும்!

ராணிக்கே பொறுக்கவில்லை!

பரத நாட்டியத்தில் சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சதரின் சங்கீத கீர்த்தனைகள் - நாமாவளிகளுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை, தமிழ் இசையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர். மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் படைப்புகளுக்கும் தரலாம்! - ராணி 3.2.2013 பக்கம் 36

விடுதலை சொல்லவில்லை ராணி வார இதழ்தான் மனப் புழுக்கத்தோடு இப்படி எழுதுகிறது _ புரிந்துகொள்வீர்!

----------------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 2-2-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

34 comments:

தமிழ் ஓவியா said...


பெண்களுக்காக


இக்கட்டான நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும், புதிய கைபேசியை பயன்படுத்தும் முறையை நாசிக் நகரைச் சேர்ந்த, மூன்று இளைஞர்கள் கண்டுபிடித் துள்ளனர். டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தில் இறந்ததை அடுத்து, பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இக்கட்டான நேரத்தில், பெண்களின் உறவினர் களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப் பும், புதிய சாப்ட்வேரை, நாசிக் நகரைச் சேர்ந்த, சாப்ட்வேர் இன் ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"மீ அகைன்ஸ்ட் ரேப்' என்ற இந்த அப்ளிகேஷனை, ஆண்ட் ராய்ட் தொழில்நுட்பத்தில் செயல் படும், மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். ஆபத்தான நேரத்தில், மொபைலின், குறிப்பிட்ட ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம், அந்த பெண்ணின் உறவினர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தி பறக்கும்.அந்த செய்தியில், பெண் ஆபத்தில் இருப்பதாகவும், பெண் இருக்கும் இடம், நேரம், செல்லும் வழி போன்ற தகவல்களும் தெரிவிக்கப்படும்."இந்த அப்ளிகேஷனை, இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்' என தெரிவித்துள்ள, அப்ளி கேஷனை வடிவமைத்துள்ள குன் வந்த், 23, அனுப் உன்னிகிருஷ்ணன், 24, ஜெயேஷ், 23, ஆகியோரை, நாசிக் காவல் ஆணையர் குல்வந்த் குமார் பாராட்டியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


குறும்பா

கடவுள்
உடலும்
கல்லு!

மனிதன்
மனமும்
கல்லு...!

இருவருக்குமே..
இளகிய நெஞ்சம்
கொஞ்சமுமில்லையே!


- கோ. கலியபெருமாள்,மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts

Keyboard Short-cuts என்பவை எப்போதும் நம் வேலையை எளி தாக்க உதவுபவை, நாம் நமது mouse ஐ பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்காமல், மிக விரைவில் ஒரு வேலையை முடித்து விடும். இவற்றில் சில எப்போதும் பயன் படும். அந்த வகையில் கணினியை பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து Basic Keyboard Shortcut-களை இங்கே தருகிறேன். இதில் ஒரு விஷயம், ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Keyboard Shorcut
உள்ளன. அவற்றைப் பற்றி காண்போம்.

Ctrl + C or Ctrl + Insert

ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை நாம் Copy செய்ய பயன்படுகிறது.

Ctrl + V or Shift + Insert

Select அல்லது Highlight செய்த டெக்ஸ்ட்டை நமக்கு வேண்டிய இடத்தில் paste செய்ய உதவுகிறது.

Ctrl + Z and Ctrl + Y

இதில் CTRL+ Z undo என்ற இந்த வசதி, நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கு முந்திய நிலைக்கு செல்ல உதவுகிறது. அதாவது ஒரு கோப்பில் தவறுதலாக ஒரு வார்த் தையை நீங்கள் எடுத்து விட்டால், அதை மீண்டும் கொண்டு வர உட னடியாக இதை நீங்கள் செய்யலாம். அடுத்த CTRL+Y ஆனது Redo வசதியை தருகிறது. இது நீங்கள் தவறு தலாக Undo செய்தவற்றை Redo செய்து விடும்.

Ctrl + F

குறிப்பிட்ட கோப்பு, போல்டர், இணைய உலவியில் உங்களுக்கு தேவையான வார்த்தை போன்று தேட உதவுகிறது.

Alt + Tab or Alt + Esc

நீங்கள் இயங்கி கொண்டுள்ள ப்ரோக்ராம்களுக்கு வேகமாக செல்ல உதவுகிறது.

இதில் Alt+Tab மூலம் குறிப்பிட்ட ஒன்றுக்கு செல்லலாம். Alt + Esc மூலம் ஒவ்வொன்றுக்கும் வரிசையாக செல்ல முடியும். இதில் சில இன்னும் சுவாரசிய மான டிப்ஸ் உள்ளன.

CTRL+ Tab குறிப்பிட்ட Program- -இல் உள்ள வெவ்வேறு --Tab களுக் குள் மாறிக் கொள்ளலாம். உதா ரணம் Firefox, Chrome.

Alt+ Tab Forward, . + ஆக ப்ரோக்ராம்களை காட்டினால், Alt+Shift+Tab இதை பின்னால் இருந்து காட்டும். நிறைய வேலை களை செய்து கொண்டு இருப்பவர் களுக்கு இது பொருந்தும். Windows 7, Vista ðòù˜èœ Alt+Tab வேலையை Windows Key+Tab மூலம் செய்யலாம். இது முழு ஸ்க்ரீனில் திரைகளை காட்டும். இது அழகாக இருக்கும்.

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow

Ctrl + Back space ஆனது ஒரு முழு வார்த்தையை நீக்க பயன் படுகிறது. Ctrl + Left or Right arrow ஆனது ஒரு கோப்பில் ஒவ்வொரு எழுத்தாக நகராமல், வார்த்தையாக நகர்த்த பயன்படும். இதனுடன் சேர்த்து Shift Key அழுத்தினால் குறிப்பிட்ட வார்த்தையை தெரிவு செய்யலாம்.

Ctrl + S

குறிப்பிட்ட ஒரு கோப்பை சேமிக்க பயன்படுகிறது.

Ctrl + Home or Ctrl + End

ஒரு கோப்பில் உங்கள்- Mouse Cursor - ஐ கோப்பின் cursor இருக்கும் வரியின் ஆரம்பம் மற்றும் முடிவுக்கு செல்ல உதவு கிறது. Ctrl + P பிரிண்ட் செய்யும் வசதிக்கு இது.

Page Up, Space bar, and
Page Down

Page Up மற்றும் Page Down நீங்கள் இருக்கும் பக்கத்தில் மேலே அல்லது கீழே செல்ல பயன்படு கிறது. Space Bar இணையத்தில் உலவும் போது ஒரு பக்கத்தில் இருக்கும் போது கீழே செல்ல உதவுகிறது, Shift+Space Bar மேலே செல்ல உதவுகிறது.

- பிரபு கிருஷ்ணா (கற்போம்)

தமிழ் ஓவியா said...


பெரியாரின் அறிவுக் கூர்மை!


பெரியார்தான் திருக்குறளின் புகழ்ப ரப்பப்
பெரியதொரு மாநாட்டை முதலில் கூட்டி,
இருக்கின்ற இலக்கியத்துள் நான்ம திக்கும்
ஈடில்லா நூல்குறளே! என்று சொன்னார்!
ஒருநண்பர் அவரிடத்தில் கேட்டார்: நீங்கள்
ஒப்பாத இறைவாழ்த்தை ஏற்கின் றீரா?
திருக்குறளார் பலசரக்குக் கடைவைத் துள்ளார்;
தேவைகளை வாங்குகிறேன்! பெரியார் சொன்னார்.

பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப் போய்ப் பார்த்துத் திரும்பியபின் குழந்தைக் கெல்லாம்
புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?
எப்படித்தான் ஏற்பதென்றார் சிலரோ! அய்யா,
சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்
திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

கூட்டத்தை முடித்தபின்னர், கழகத் தோழர்
கொண்டுவந்த புலால் உணவைப் பெரியார் உண்ணக்
கேட்டார்ஓர் வீரசைவர், ஆட்டைக் கொல்லல்
கேடான பாவமன்றோ? என்றே! உங்கள்
வீட்டுணவும் என்ன? என்றார் பெரியார்; அன்னார்,
விளைத்திட்ட முளைக்கீரை மசியல் என்றார்;
ஆட்டின்உயிர் ஒன்றைத்தான் கொன்றோம்; நீங்கள்
அழித்தஉயிர் ஆயிரங்கள்! என்றார் அய்யா!

- கவிவேந்தர் கா.வேழவேந்தன்

தமிழ் ஓவியா said...

கேரட்

கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு காய்கறிகளில் ஒன்றான சிவப்பு குடைமிளகாயில் லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.

மீன்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனை சாப்பிடும் போது, சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தும்.

தமிழ் ஓவியா said...


64 நாட்கள் தொடர்ந்து உறங்கும் இளம்பெண்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்காவில் உடல் கோளாறு காரணமாக 17 வயது இளம்பெண் தொடர்ந்து 64 நாட்கள் தூங்குகிறார். இதனால் பல விழாக்களை பார்க்கவே முடிவதில்லை என்று பரிதாபமாக கூறியுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலீன் (17). இவரது தாய் விக்கி டெலீன். தனது மகளுக்கு வந்துள்ள விபரீதமான உடல் கோளாறு பற்றி விக்கி கூறியதாவது: என் மகள் நிக்கோல் சிறுமியாக இருந்த போதே ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வரை தூங்குவாள். பசித்தால் எழுவாள். சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்குவாள். தூக்கத்தில் நடக்கும் வியாதியும் அவளுக்கு இருந்தது. அப்போது நடக்கும் எதுவும் அவளுக்கு தெரியாது. எத்தனையோ டாக்டர்களிடம் காட்டிவிட்டோம்.

குணமாக்க முடியவில்லை. கடைசியில் அலிகெனி பொது மருத்துவமனை டாக்டர்கள்தான், நிக்கோலின் பிரச்னையை சரியாக கண்டுபிடித்தனர். கெலீன்-லெவீன் சிண்ட்ரோம் அல்லது ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்ற தூக்க கோளாறால் நிக்கோல் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இவ்வாறு விக்கி கண்ணீருடன் கூறினார். தூக்க கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வரைகூட தொடர்ந்து தூங்குவார்கள். அவர்களிடம் எந்த அறிகுறியும் தெரியாது. சில நேரங்களில் ஓராண்டு வரைகூட தூங்குவார்கள். பசித்தால் அல்லது கழிவறைக்கு செல்லும் உந்துதல் ஏற்பட்டால் விழிப்பார்கள். அப்போது அவர்கள் சோர்வாக இருப்பார்கள்.

யாருடனும் பேச மாட்டார்கள் என்று இந்நோய் பற்றி சர்வதேச கெலீன்-லெவீன் சிண்ட்ரோம் அறக்கட்டளை விளக்கம் அளிக்கிறது. தனது பாதிப்பு பற்றி நிக்கோல் கூறுகையில், தூக்க கோளாறு காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பிறந்த நாள் விழா, குடும்ப சுற்றுலா போன்ற எந்த நிகழ்ச்சியிலும் என்னால் கலந்து கொள்ள முடிவதில்லை. கடைசியாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து 64 நாட்கள் தூங்கினேன். அடுத்து தொடர் தூக்கம் எப்போது வரும் என்று தெரியவில்லை என்று கலக்கத்துடன் கூறுகிறார். தூக்க கோளாறு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தன் மகள் நிக்கோல் பற்றி டிவிக்களில் விக்கி பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

கருப்புச் சட்டை அணியாத வெள்ளைச் சட்டைக்காரர்!


சிறீரங்கம் ஆ.பெரியசாமி அறிவும், துணிவும் தனக்கென வாழாத தன்னல மறுப்புக் கொண்டவர்களே, பொது சிந் தனையும், நாத்திக கருத்தையும் பிறருக்கு பயன்படும் படி எடுத்துக் கூற முடியும் என கூறினார் அய்யா தந்தை பெரியார் அவர்கள். அப்படி அறிவு, துணிவோடு தனது 12ஆவது வயதில் எடுத்த முடிவால் இன்றைக்கு தன்னல மறுப்பாளராகவும், நாத்திகராகவும் இந்த பெரியார் பெருந் தொண்டர் சிறீரங்கம் வாத்தியார் ஆ.பெரியசாமி வலம் வருகிறார். கருப்பு சட்டைதான் ஒரு பெரியார் பெருந்தொண்டருக்கு அடையாளம்.

ஆனால் இவரோ கருப்பு சட்டை அணி யாத வெள்ளைச் சட்டைப் பெரியார் பெருந்தொண்டராவார். ஆம் அவர் எப்போதும் வெள்ளைச் சட்டையுடன் இருப்பார். இவருக்கு சொந்த ஊர் அரியலூர். அவருக்கு 12 வயதிருக்கும் போது கோவில் பூசாரியாகவும், பகுதி நேரத்தில் ஜனோபகார அச்சகத்திலும் வேலை செய்து வந்தார். அச்சகத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களால் திராவிட இயக்கக் கொள்கைக்கு மாறியிருக்கிறார்.

கோவில் பூசாரியாக இருந்தவர்! பெரியார் தொண்டராக மாறியதை பற்றி தெரிந்து கொள்ள நாம் நேரில் சென் றோம். அப்போது நம்மிடத்தில் அவர் கூறியது:

எனது 12 வயதில் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அச்சகத்திற்கு வந்த து.வி.நாராயணன் என்பவர் என்னைப் பற்றி தெரிந்து கொண்டு இந்த வயதில் கோவிலில் போய் சாமி ஆடுகிறாயே! கடவுளர் கதைகளை பற்றி தெரியுமா? அவை யெல்லாம் பித்தலாட்டம் என்று சொல்லி திராவிடர் கழகத்தில் சேர அறிவு சிந்தனையை ஏற்படுத்தினார். அவர் கூறிய பல புரட்சிகர கருத்துகள்தான் நான் தொடர்ந்து திராவிடர் இயக்க கொள்கைகளில் ஈடுபட காரணம்.

தமிழ் ஓவியா said...

அப்போது என்னுடன் அச்சகத்தில் பணியாற்றிய கு.ப.அழகுமுத்து, நாராயணன் போன்றவர்கள் இணைந்து துறையூரில் 1947ல் ஸ்டார் அச்சகம் ஒன்றை தொடங்கினோம். எரிமலை பதிப்பகம் என்ற பெயரில் திராவிடர் இயக்க கருத்துகள் நிறைந்த புத்தகங்கள் வெளியிட்டோம். அதில் ஏ.வி.பி. ஆசைதம்பி எழுதிய காந்தியார் சாந்தியடைய உள்ளிட்ட பல நூல்களை அரசாங்கம் தடைசெய்தது. இதுபோன்ற எண்ணற்ற நூல்கள் அனல் பறக்கும் அற்புத சிந்தனைகளைக் கொண்டு துறையூரில் எரிமலை பதிப்பகம் மற்றும் சாந்தி பதிப்பகத்தார்களாகி நாங்கள் வெளியிட்டுள்ளோம். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது.

1950ல் துறையூரில் தி.மு.க. மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டினோம். அதற்காக அன்பில் தர்மலிங்கம் என்னை அழைத்து சிறப்பு செய்து பாராட்டினார். மேலும் 29 உறுப்பினர்களை சேர்த்து முத்தமிழ் நாடக மன்றம் அமைத்து பல சீர்திருத்த நாடகங்களை நடத்தினோம். அத்தோடு விட்டுவிடாமல் பல்வேறு ஜாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்தோம். அத்திருமணங்களுக்கு துறையூர் வழக்கறிஞர் அரங்கசாமி ரெட்டியார் தலைமை தாங்கினார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோ ருடைய பேச்சு, கருத்துகளை மக்கள் மத்தியில் நாடக வடிவில் கொடுத்து வந்தோம். பரம்பரையாக கோவில் பூசாரி யாகவும், ஆன்மீகத்திலும் நிறைந்திருந்த என் குடும்பத்தாரை மீறி பல எதிர்ப் புகளை கடந்து 1952ல் சிறீரங்கம் மேலூரைச் சேர்ந்த ராசாத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு அழகிரி என்ற மகன் உள்ளார். அந்த காலக் கட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்று தூக்கு மேடை நாடகத்தை பெயர் மாற்றி நடத்தினோம். இதுபோன்ற நாடகங்கள் நடத்தியதால் வாத்தியார் பெரியசாமி என்று அடை மொழியிட்டு என்னை அழைத்தார்கள். அச்சக தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக அதை விட்டுவிட்டு 1973 ஆண்டுகளில் சிறீரங்கம் வந்து குடியேறி னேன். அன்று முதல் இன்று வரை சிறீரங்கத்திலே குடும்பத்துடன் இருந்து வருகிறோம் என்றார்.

திருச்சியில் நடைபெறும் அனைத்து கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் தனது 89 ஆவது வயதிலும் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சிறீரங்கத் திலுள்ள பெரியார் படிப்பகத்திற்கு தினமும் சென்று வரும் இவர். பெரியார் படிப்பகத்தை மேலும் மேன்மைப்படுத்து வதற்காக பொருளுதவியும் செய்து வருவதோடும், அண்மையில் அந்த படிப்பகத்தை பார்வையிட வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து உரையாடினார். அப்பொழுது தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி எனக்கு பிறகு தொடர்ந்து சிறீரங்கத்தில் இயக்கப் பிரச்சாரம் நடக்க வேண்டுமென்றும் அதற்கு பயன்படும் வகையில் ரூ.2 லட்சம் வைப்பு நிதியாக தருகிறேன் என்றும் கூறினார்.

தன்னலத்திற்காக, தன் பொறுப்புக்காக காரியம் செய்யும் எவருடைய காரியமும் எப்படியிருந்தாலும் அது சாதாரண ஜீவசுபாவமே ஒழிய போற்றக் கூடியது ஆகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கைக் கொண்ட மனிதர்களாவது தன்னை பற்றி கவலை யில்லாமல் பிறருக்கென்று தன்னை ஒப்படைத்து தொண்டாற்றுகிறவர்கள் மதிக்கப்பட்டே தீர்வார்கள் என்றார் தந்தை பெரியார். அப்படிப்பட்டவராக வாத்தியார் ஆ.பெரியசாமி வாழ்ந்து வருகிறார்.

இவர் தினமும் மாலை நேரங்களில் சிறீரங்கத்திலுள்ள கழகத் தோழர்களை சந்திப்பதும், படிப்பகத்திற்கு சென்று புத்தகங்கள் வாசிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ள இவர் கழகத் தோழர் பொருளாதார ரீதியாக முன்னேறினால் தான் அவர்கள் இயக்கப்பணியாற்றுவ தற்கும், கொள்கை பிரச்சாரம் செய்வ தற்கும் வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக தொழில்ரீதியான ஆலோசனையும் வழங்குகிறார். இவரது பணி தொடரட்டும்.

சந்திப்பு:- மா.செந்தமிழினியன்

தமிழ் ஓவியா said...


வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கும் நவீன விபீஷனர்கள்


- த.க.பாலகிருட்டிணன்

பார்ப்பனர்களுக்குத் துதி பாடும் விபீஷணர்கள் எப்போதுமே இருந்து வருபவர்கள்தான் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இப்போது புறப்பட்டு இருக்கும் நவீன விபீடணர்கள் அனைவருக்கும் ஒரு படி மேலே போய் பார்ப்பனர்களுக்கு வால் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஜாதி அமைப்பு முறையை புகுத்தியவர்கள் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள்தான் என்பது அனைவரும் நன்கு அறிந்த, அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இதற்கு ஆதாரமாக மனுதர்ம சாஸ்திரம் உள்ளது. நான்கு வர்ணத்தவர்களாக மக்கள் முறையே பிரம்மாவின் நெற்றி, மார்பு, தொடை மற்றும் பாதத்தில் இருந்து எவ்வாறு பிறந்தார்கள் என்று மனுதர்ம சாஸ்திரம் விரிவாகக் கூறுகிறது. இது அன்றி, வர்ணமற்ற அவர்ணஸ்தவர்கள் என தாழ்த்தப்பட்ட பிரிவினரான பஞ்சமர், சண்டாளர்கள் பாகுபடுத்திக் காட்டப் பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது ஜாதிய அமைப்பு முறை ஆரியர்களால் புகுத்தப்பட்டதல்ல; பண்டைய இந்தியாவின் பழங்குடி மக்களிடையே நிலவி வந்ததுதான் என்று இந்த நவீன விபீடணர்கள் கூறுவதற்கு ஆதாரமாகத் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே 10,000 - 30,000 ஆண்டு களுக்கு முன்பு நம் நாட்டு பூர்வகுடி மக்களிடையே ஏற்றத் தாழ்வு கொண்ட ஜாதிய அமைப்பு நடைமுறை இருந்தது என்று இவர்கள் கூறுகின்றனர். இதற்காக அவர்கள் காட்டும் இரண்டு ஆதாரங்கள்.

1. தந்தையிடமிருந்து மரபணு மூலம் ஆண் பாரம்பரிய வழியில் ஜாதிய அமைப்பு முறை அவரது ஆண் சந்ததியினரிடையே தொடர்ந்து நிலை பெற்று வருவதாக அவர்கள் கூறுவது.

2. தந்தையிடமிருந்து மகன்களுக்கு மட்டுமே சீ குரோமோசோம்கள் செலுத்தப்படுகின்றன என்ற அறிவியல் உண்மை.

குழந்தைகளின் பாலியல் தன்மையை முடிவு செய்வது ஆண்களின் சீ குரோமோசோம்கள் என்பதும், ஆண்களின் மரபணு மூலம் அவர்களின் உடற்கூறுகள், பண்புகள், குண நலன்கள், ஆற்றல்கள், திறமைகள் ஆகியவை அவர்களின் ஆண் சந்ததியினருக்கு செல்கிறது என்பதும் அறிவியல் உண்மைகள். ஆனால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு தென்னிந்திய பூர்வகுடி மக்களிடையே ஆரியர் வருவதற்கு முன்பு ஜாதிய அமைப்பு நடைமுறை நிலவி வந்தது என்று எப்படி கூறமுடியும் என்பது புரியவில்லை.

சீ குரோமோசோம்களும், மரபணுக்களும் ஆண்களின் மூலம் ஆண் வாரிசுகளுக்கு செல்கின்றன என்பது உலகில் உள்ள அனைத்து மாந்தருக்கும் பொதுவானது. தென்னிந்திய பழங்குடிமக்களுக்கு மட்டுமே உண்டானது அல்ல. ஜாதிய நடைமுறை உருவாகி, தொடர்வதில் இந்த சீ குரோமோசோம் களுக்கும், மரபணுக்களுக்கும் ஏதேனும் பங்கு இருக்குமானால், அது உலகில் உள்ள அனைத்து மாந்தர்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டியவை அல்லவா? ஆனால் இந்தியாவில் அதுவும் ஆரியர்களின் வருகைக்குப் பின் மட்டுமே நிலவி வரும் ஜாதிய அமைப்பு நடைமுறை மற்ற நாடுகளில் ஏன் இல்லை என்பதை இந்த ஆய்வாளர்கள் விளக்க முன்வருவார்களா?

பழங்குடி மக்களின் சீ குரோமோசோம்களையும், அவர் களது சமூக பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அவர்களிடையே ஜாதிய அமைப்பு நடைமுறை நிலவியது என்று எவ்வாறு கூறமுடியும்?

இந்தியாவில் ஜாதிய அமைப்பு நடைமுறையையப் புகுத்தியது ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்து குடியேறிய ஆரியர்கள்தான் என்ற மெய்ப்பிக்கப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையை மறுத்துக் கூறுவதற்கு இந்த ஆய்வாளர்கள் கூறும் காரணங்கள் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதியில்லையா? என்பது போன்ற சங்கதிதான்.

இவர்கள் மேற்கொண்டது மனித இனப் பெருக்கத்தில் குரோமோசோம்களின் செயல்பாட்டைப் பற்றிய அறிவியல் ஆய்வும் அல்ல; மக்களிடையே நிலவும் சமூக மரபியல் ( சமூக பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றிய ஆய்வு இயல்) ஆய்வும் அல்ல. இவர்கள் மேற்கொண்டது, ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஜாதிய அமைப்பு நடைமுறை இருந்தது என்பதை மெய்ப்பிப்பதற்கான வீண் முயற்சியே ஆகும்.

இவர் எனது உறவினர், இவர் அன்னியர் என்று கீழ் நிலை மக்கள் மட்டுமே கருதுவர்; பெருந்தன்மை கொண்ட மக்கள் உலக மக்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகப் பார்ப்பவர்கள் ஆவர் என்று தோழர் பாலசுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை உட்கார்ந்து பாடியதால் தியாகபிரம்ம விழாக் கூடமே தீட்டாகிவிட்டது என்று கூறி, அந்த இடத்தைக் கழுவி, தீட்டைக் கழித்த பிறகே அங்கு உட்கார்ந்து பாடுவோம் என்று சொன்னவர்கள் யார்? பார்ப்பன சங்கீத வித்வான்கள் அல்லவா?

தமிழில் பாடி வழிபட்டதாலேயே கோயில் தீட்டாகிவிட்டது என்று காஞ்சி பெரியவர் கூறவில்லையா?

வ.வே.சு. அய்யர் நடத்திய குருகுலத்தில் மற்ற ஜாதி மாணவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தமாட்டோம் என்று பார்ப்பன மாணவர்கள் கூறவில்லையா?

கும்பாபிஷேக செலவு முழுவதையும் கொடுத்த சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் கும்பாபிஷேக மேடைக்கு வருவதைத் தடுத்த பார்ப்பனப் பூசாரிகள் செயலை எதில் சேர்ப்பது?

தமிழ் ஓவியா said...


செவ்வாய்த் தோஷம் பேசுவோர் பார்வைக்கு...


செவ்வாய்க் கிரகத்தில், நதி இருந்ததற்கான தடயங்களை, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில், மனிதர்கள் வசிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு உள்ளன. இதில் அமெரிக்கா, செவ்வாய் கிரகத்திற்கு, "கியூரியாசிட்டி' என்ற, விண்கலத்தை அனுப்பி, ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இதேபோல், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சார்பில், கடந்தாண்டு, "மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில், அதிநவீன கேமராக்கள் மூலம் படமெடுத்தது.அந்த படங்களை, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்கள் சோதித்து வருகின்றனர். இதில் செவ்வாய்க் கிரகத்தில், புராதன நதி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த நதி, 1,500 கி.மீ., நீளம் கொண்டதாக காணப்படுகிறது.

இந்த நதி, சில இடங்களில் 1,000 அடி ஆழமும், சில இடங்களில், ஆறு கி.மீ., அகலத் துடனும் காணப்படுகிறது.பல 100 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் கடும் பனி இருந்து, காலப்போக்கில் அவை உருகி, நதியாக உருவெடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் சங்கநாதம்! காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்!


காந்தியார் அவர்களின் நினைவு நாளையொட்டி (30.1.1948) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மதவெறிக் கண்டனப் பொதுக்கூட்டம் - சிறப்புக் கூட்டம் நேற்று (1.2.2013) வெள்ளி இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

கலி. பூங்குன்றன் தொடக்கவுரை

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்கவுரை ஆற்றினார்.

அவர் தமதுரையில் காந்தியார் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான இந்துத்துவா என்னும் மதவெறி இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் நடமாடிக் கொண்டுதானிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பிராமண சங்கம், பாரதீய ஜனதா என்று பல்வேறு பெயர்களில் இருந்து கொண்டுதானி ருக்கின்றது.

பாபர் மசூதியை இடித்தது அந்தச் சக்திதான். குஜ ராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களான முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அதே இந்துத்துவா மதவெறிதான்.

அந்த மதவெறி சக்தி அரசியலிலும் குடிகொண் டுள்ளது; நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர் தலிலும் அந்த மதவாத சக்திகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அதை எதிர்கொள்ளும் ஒரு தத்துவத்திற்குப் பெயர் தான் தந்தை பெரியார். இந்தியா முழுமையும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும், தத்துவங்களும் தான் எதிரொலிக்கப் போகின்றன. நமது கழகத்தின் அருமையை உணரத்தான் போகிறார்கள் - இந்தியா முழுமையிலிருந்தும் நமது தலைவருக்கு அழைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

வாரி வழங்கினார் தமிழர் தலைவர்

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 90 மணித் துளிகள் வகுப்பறையில் பாடம் நடத்துவது போல புதுப்புதுத் தகவல்களை முனை மழுங்காமல் அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டே போனார்.

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முசுலிம்தான் காந்தியாரைச் சுட்டுக் கொன்றான் என்ற தகவலைப் பார்ப்பனர்கள் பரப்புரை செய்தனர். அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் வாணியம்பாடி, திரு வண்ணாமலை, ஈரோடு போன்ற ஊர்களில் முசுலிம் கள் தாக்கப்பட்டனர்.
ஆனால், உண்மையில் காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு இந்து என்று அகில இந்திய வானொலி மாலை 6 மணிக்கு அறிவித்தது (பார்ப்பனர் என்றுகூடச் சொல்லவில்லை).

மகாராட்டிரத்தில் புனே பகுதியில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் கொளுத்தப்பட்டன. பார்ப் பனர்களின் கல்விக் கூடங் கள் எரிக்கப்பட்டன. அவற்றை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் உள்ளே நுழையவிடவில்லை.

தமிழ் ஓவியா said...

தடுத்தாட்கொண்டார் தந்தை பெரியார்

தமிழ்நாட்டிலும் அந்த நிலை ஏற்பட்டு இருக்கும். அன்றைய முதலமைச்சர் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் வானொலிமூலம் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

31.1.1948 அன்று மாலை 4 மணிக்கு வானொலியில் தந்தை பெரியார் அரியதோர் உரையை நிகழ்த்தினார்.

இந்த இழித்தரமான காரியத்திற்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை. இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது - நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப் பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பெயராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும், கருத்து வேற்றுமைக்காக கலவரங் களும், கேடுகளும், நாசங்களும், மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்குச் சிறிதும் வாய்ப் பில்லாமல், அறிவுடைமையோடும் வாழுபவர் களாக மக்கள் நடந்துகொள்வார்களேயானால், அதுவே பரிதாபகரமானதும், வெறுக்கத்தக்கது மான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும்.

திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப்பட்ட நிலையிலும், அமைதியுடனும், சகிப்புத் தன்மை யுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்பது எனது விண்ணப்பம் என்று வானொலிமூலம் தந்தை பெரியார் கேட்டுக் கொண்டதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கலவரப் புயலுக்கு இடமில்லாமல் அமைதி தவழும் ஒரு நிலை ஏற்பட்டது என்பதை கழகத் தலைவர் விளக்கினார்.

(தந்தை பெரியார் நினைத்திருந்தால், கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் தமிழ்நாட்டில் எத்தனை அக் கிரகாரங்கள் எரிந்திருக்கும்? எத்தனைப் பார்ப்பனர்கள் படுகொலை செய்யப்பட்டு இருப்பார்கள் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பார்களாக! வாழ்க தந்தை பெரியார்!)

அய்யா அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும்...

காந்தியார் மறைவையொட்டி தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு ஆழமானது என்பதையும் விளக்கிப் பேசினார்.

தமிழ் ஓவியா said...

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது! இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்கவேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ - உயிர் வாழ்ந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இது மிகமிக வெறுக்கத்தக்கக் காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாக வாவது நாட்டில் இனி அரசியல், மத இயல் கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும். (குடிஅரசு அறிக்கை, 31.1.1948)

தந்தை பெரியார் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொல்லுமே ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும்.

புதிய நூல்கள் அறிமுகம்

இந்த உரையில் சில புதிய நூல்களைத் தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்று - சர்வோதய சங்கத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சு. வைத்யா (வயது 80) என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில நூல்.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இந்துத்துவா சக்திகள் சொன்ன காரணங்கள் இரண்டு.

(1) பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று நாடு பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தது,
(2) இந்திய அரசு பாகிஸ்தானுக்கு முறைப்படி ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என்று காந்தியார் கூறியது.

பத்துத் தடவை படுகொலை முயற்சிகள்

இந்த இரண்டும்தான் காந்தியார் படுகொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டா லும், அதற்குமுன் பத்துத் தடவை காந்தியாரைக் கொலை செய்வதற்கு அவர் கள் திட்டமிட்டார்கள். (அப்படி இருக்கும்போது இந்த இரு காரணங் கள்தான் காந்தியாரைக் கொலை செய்ததற்குக் கார ணமாக இருக்க முடியாது என்று அழுத்தமாகக் கூறி னார் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்) ஆறு முறை காந்தியாரைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆவணங் கள்மூலம் நிரூபிக்க முடியும்.

1934 இல் பூனா நகராட்சியில் காந்தியாருக்கு வர வேற்பு கொடுத்தபோது முதல் முயற்சி.

இதே கோட்சே 1944 இல்!

1944 ஆம் ஆண்டிலேயே இரண்டு முயற்சிகள். இதே நாதுராம் கோட்சே கத்தியுடன் காந்தியாரைக் கொலை செய்ய முயன்று தோற்றான்.
1944 ஜூன் 4 ஆம் தேதியன்று ரயில்மூலம் காந்தியார் பூனாவுக்குச் சென்றபோது ரயிலைக் கவிழ்க்க தண்ட வாளத்தில் மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்திருந்தனர். ஓட்டுநரின் விழிப்பால் அந்த விபத்துத் தவிர்க்கப்பட்டது.

1948 ஜனவரி 20 இல் கூட டில்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்து மதவெறி பிடித்த மதன்லால் பாவா என்பவன் காந்தியார்மீது வெடி குண்டு வீசினான். மயிரிழையில் காந்தியார் உயிர் தப்பினார்.

வணக்கம் கூறி வயிற்றை நோக்கிக் குண்டு!

அடுத்த பத்து நாள்களில்தான் ஜனவரி 30 அன்று பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்த காந்தியாரைப் பார்த்து வணக்கம் கூறி, இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா? என்று கேட்டான். காந்தியார் புன்னகைத்து ஆமாம்! என்று கூறியவுடன் துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டான்.

பார்ப்பன கோட்சே!

முடிந்தது காந்தியாரின் வாழ்வு!

காங்கிரசானாலும், காந்தியார் ஆனாலும், கடவுளா னாலும் பார்ப்பனர்களுக்குத் தங்களுக்குப் பயன்பட்ட வரைதான் Use and Throw தான்.

வெள்ளைக்காரன் காப்பாற்றினான்- கொள்ளைக்காரன் தீர்த்துக் கட்டினான்

அந்நியன் வெள்ளைக்காரன் - அவர்களை எதிர்த் துப் போராட்டம் நடத்தினார் காந்தியார். ஆனால், அந்த வெள்ளைக்காரன் காந்தியாரைப் பாதுகாத்துக் கொடுத்தான். சுதந்திர இந்தியாவில் பார்ப்பானோ, காந்தியாரின் உயிரைக் குடித்துவிட்டானே என்று கழகத் தலைவர் சொன்னபோது, பார்வையாளர்கள் மத்தியில் சுடுகாட்டு அமைதி!

காந்தியாரின் கொள்ளுப் பேரன்

கொட்டும் தகவல்கள்!

மற்றொரு முக்கிய நூலை தமிழர் தலைவர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

அந்த நூலின் பெயர்:

‘Let’s Kill Gandhi!
A Chronicle of His Last Days, The Conspiracy, Murder, Investigation and Trial’

எழுதியவர் டுஷார் ஏ. காந்தி - இவர் யார் தெரியுமா? காந்தியாரின் மகன் மணிலால் காந்தியின் மகன் என்பதுதான் சிறப்புச் செய்தி.
அந்த நூல் 2007 இல் சுரயீய ஊடி வால் வெளி யிடப்பட்டது.

விலை ரூ.1000/-

இதுவரை தெரிந்திராத அதிரடியான தகவல்கள் அலை அலையாக இந்நூலில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டார் கழகத் தலைவர்.

(நாளை பார்ப்போம்)


- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...


எதிலும் கையெழுத்துப் போடுமுன்....!


ஒவ்வொரு நாளும் ஒரு அறி வுரையைத் தரும் ஆங்கில நாட்காட்டி ஒன்றை எனக்குத் தந்தார்கள்; அது எனது அலுவலகத்தில் மேசையின் மீது என் கண்களில் பட்டு மனதில் பதியும் வாசகங்களாக அமைகிறது!

அதில் ஒரு அறிவுரை. (அதன் தமிழாக்கம் இது) நீங்கள் எதில் கையெழுத்துப் போடுவதாக இருந் தாலும், அதைப் படித்துப் புரிந்து பிறகே கையொப்பம் இடுங்கள்; அப்போதுதான் அதன்மூலம் ஏற்படக் கூடிய விளைவுகளிலிருந்து உங் களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்

அருமையான அறிவுரை அல்லவா இது? என்னதான் நமது நம்பிக்கைக்குரியவராக இருந்த போதிலும்கூட கையொப்பம் இடும் போது, எதில் கையெழுத்துப் போடுகி றோமோ, அதன் செய்தி அடக்கம்(Content) என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

நிர்வாகச் சுமையில் உள்ள நம்மில் பலருக்கு நமது நம்பிக்கைக்குரிய உதவியாளர்கள். அல்லது நல்ல நண்பர்கள் நீட்டிக் கையெழுத்துக் கேட்டால் கூட, குறைந்தபட்சம் வேகமான ஒரு பார்வை, பார்த்து, இறுதியாக எதற்காக இது என்பதைப் புரிந்து கொண்டு கையெழுத்து இடுவதே சாலச் சிறந்த பழக்கமாக நம்மில் பலருக்கும் இருக்க வேண்டும்.

ஏதாவது, வழக்கு விவகாரம், அல்லது நமக்கு மேலே உள்ளவர்கள் நம்மிடம் விளக்கம் கேட்கும்போது, எனக்கு ஒன் றுமே தெரியாதுங்க. வந்து கேட்டாங்க நான் யோசியாமல் அவரே கேட்கும் போது, எப்படி போடாமல் இருக்க முடியும் என்ற மன நிர்ப்பந்தம் காரணமாகப் போட்டு விட்டேன்; அதில் உள்ள விஷயம் என்பது கூட எனக்கு ஒன்றுமே தெரி யாது என்றால், நமது அலட்சியம் அல்லது பொறுப்பின்மையை, அல்லது அறியாமை, அல்லது ஆளுமைத் திற னற்ற தன்மை- இவைதான் அப்பதிலின் மூலம் வெளிப்படும்.

அதோடு இன்னொரு முக்கியச் செய்தி கடன் வாங்கிடும் பத்திரங்களில்- என்னதான் நமக்கு உயிருக்கு உயிரான நண்பராக இருந்தாலும்கூட, - ஜாமீன் கையெழுத்துப் (Surety) போடும் பழக்கமே கூடாது; கூடவே கூடாது.

அந்த நண்பருக்கு, உறவினருக்கு நீங்கள் எந்த அளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம்; கடனாகவோ, கொடையாகவோகூட பணம் தந்து விடலாம்; ஜாமீன் கையெழுத்துப் போடு வது மட்டும் கூடாது என்பது வாழ்க் கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

அதன் பாரதூர விளைவுகள் அதிகம் என்பது, நல்ல நிலையில் உள்ளவர்கள் பலர் இதனால் வாழ்விழந்து வதிந்து, வறுமைப் படுகுழியில் தள்ளப்பட்டோ, கவுரவம் மரியாதை எல்லாம் இழந்த வர்கள் பலருண்டு. பல குடும்பங்கள் இதனால் சிதைவடைந்துள்ளன.

நாணயத்திற்கு நாம் கொடுக்கும் கடும் விலை மிக மிக அதிகமாகிவிடும்!

பல நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி நாணயமாய்த் திருப்பிக் கட்ட முடியாத பலரது கடன்களை, தாட் சண்யத்திற்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட பலர் சுமந்து, சுக்கல்நூறாக அவர்கள் வாழ்க்கையை உடைத்துக் கொண்டவர்கள் ஏராளம்!

தான் போட்ட கையெழுத்தையே, தான் போடவில்லை என்பது எவ்வளவு கேடோ அவ்வளவு கேடு பிறர் கையெழுத்துப் போல, (Forgery) போர்ஜரி போலி கையெழுத்துப் போட்டு மாட்டி, மானம், மரியாதை கெட்டு வாழுகிறவர்கள் சில நேரங்களில் சட்டப்பிடியிலிருந்து கூட தப்பித்துக் கொள்ளலாம்;

ஆனால் அவர்களின் மனசாட்சி என்ற சாட்டையடியிலிருந்து தப்ப முடியாது. இடையில் இல்லாவிட்டால் அந்த அடி இறுதி நாள்களில்கூட விடாது வலியைத்தருமே! எனவே எச்சரிக்கை! கவனம் தேவை!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


ஆளுநர் உரை


ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரை என்பது சம்பிரதாயமான ஒன்றே.

உரை ஆளுநரால் படிக்கப்படுகிறதே தவிர, உள்ளபடியே அரசு தயாரிக்கும் உரையைத்தான் அட்சரம் பிறழாமல் படிக்கிறார் என்பதுதான் உண்மை.

ஆளுநர் உரை - அடுத்து நிதி அமைச்சர் அளிக்கும் நிதி நிலை அறிக்கையின் முன்னோட் டம்தான்.

2013-2014ஆம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடியிலிருந்து 37 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்கத் தக்கதாகும்.

அதே நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புக்காகச் சொல்லப்பட்டுள்ள காரணங் கள் அலட்சியப்படுத்தக் கூடியவையல்ல.

கடந்தாண்டு தருமபுரியில் நடைபெற்றுள்ள - தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக் கைகள் குறித்து இவ்வரசின் அணுகுமுறை பற்றியோ, நிவாரண உதவி பற்றியோ - திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை.

நீர் இல்லாமையால் விவசாயத் தொழில் அறவே பாதிக்கப்பட்டு 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது சாதாரணமானதல்ல; அதுபற்றி கண்டு கொள்ளப்படவில்லை. விவசாயி களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் எந்த விதமான குறிப்பும் கிடையாது. அதன் காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு மிக தேவைப்படும் சேது சமுத்திரத் திட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசின் கருத்து ஏற்கெனவே தெரிந்த ஒன்றே. அதன் காரணமாகவே ஆளுநர் உரையில் அது இடம் பெறவில்லை. ஆனாலும் எதிர்க்கட்சி என்ற முறையில் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமை இருக்கிற காரணத்தால் தங்கள் வெளி நடப்புக்கு அதனை ஒரு காரணமாக கூறியுள்ளனர்.

எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர்களின் சேர்க்கை மே மாதத்திற்கு முன்பு நடைபெறக் கூடாது என்ற உத்தரவு பெரிதும் வரவேற்கத் தக்கதே!

வருந்தத் தக்கது - பண்பாட்டு மறுமலர்ச்சியின் கண்ணோட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் குறைகூறி இருக்கும் போக்கை என்னென்று சொல்லுவது! புராண ஆபாசக் கதை கொண்டதுதான் தமிழ் வருடங்களா? மகா மகா வெட்கக்கேடு!

1921ஆம் ஆண்டிலேயே தமிழ் அறிஞர்கள் தெரிவித்த கருத்து - அதன்பின் திருச்சியில் நாவலர் சோம சுந்தரபாரதியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் போன்றவர்கள் பங்கேற்று முடிவு செய்த ஒன்று;

உலகளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்காகவே கூட்டப்பட்ட மாநாட்டின் முடிவு - இவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்திருப்பது அசல் பார்ப்பனத்தனம் அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

இன்னொரு அறிவிப்பை எண்ணிப் பார்த்தால் இந்த ஆட்சி அண்ணா பெயரையும் திராவிட என்ற இனச்சுட்டுப் பெயரையும் எப்படிக் கொச்சைப்படுத்துகிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.

புதிதாக இந்த ஆண்டிலிருந்து கம்ப ராமாய ணத்தில் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்குக் கம்பர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட அண்ணா அவர்களை அவமதிக்க முடியாது.

கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதியார் ஆகியோரோடு வாதிட்டு வென்றவர் அண்ணா.

அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டுள்ள கட்சி - அதற்கு நேர் எதிராகச் செயல்படுவது அண்ணா பெயரை மோசடியாகப் பயன்படுத்திக் கொள்வதல்லாமல் வேறு என்ன வாம்?

அ.இ.அ.தி.மு.க.வில் அண்ணாமீதும், திராவிட இயக்க உணர்வின்மீதும் மதிப்பு வைத் துள்ள ஒரே ஒருவர் இருந்தால் அவர் மட்டுமாவது சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


பெரியார் திரை குறும்பட விழா உலகக் குறும்பட விழாவாக மாறவேண்டும்!


தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் அஜயன் பாலா வேட்கை!

எழுத்தாளர் அஜயன் பாலாவிற்கு, மாநில குறும்பட அமைப்பாளர் கி.தளபதிராஜ் இயக்க நூல்கள் அளித்தார்.

சென்னை, பிப். 2- பெரியார் திரை குறும்படப் போட்டி இன்னும் சிறப்பாக வளர்ந்து உலகக் குறும்பட விழாவாக மாறவேண்டும் என்று பெரியார் திரை குறும்பட போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் அஜயன்பாலா கேட்டுக் கொண்டார்.

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் சார்பில் ஆண்டுதோறும், "பெரியார் திரை" என்ற பெயரில் "பகுத் தறிவு", "பெண்ணுரிமை", "மூடநம்பிக்கை ஒழிப்பு", "ஜாதி ஒழிப்பு", "மனிதநேயம்" ஆகிய அய்ந்து தலைப்பு களுக்குள் தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு போட்டி நடத்தி அதில் தேர்வு பெறுகின்ற மூன்று குறும்படங் களுக்கு தலா ரூ.10,000, ரூ.5000, ரூ.3000 பரிசும், மற்றொரு குறும்படத்துக்கு சிறப்புப் பரிசாக ரூ.1000 -ம் கடந்த மூன்றாண்டுகளாக தரப்பட்டு வருகிறது. இது நான்காவது ஆண்டாக நடைபெறுகின்ற போட்டியாகும். போட்டிக்கு வந்திருந்த குறும்படங்களில் 25 குறும் படங்கள் மட்டும் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன.

முத்தான மூன்று நாட்கள்

தந்தைபெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் திருவிழா ஜனவரி 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 25, 26 ஆகிய இரண்டு நாட்களும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மற்றும் பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி என்று கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக நடந்து முடிந்திருந்தது. மூன்றாவது நாளாக குறும்படப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, சென்னை பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில் 27-01-2013 அன்று பெரியார் திரை நான்காம் ஆண்டு குறும்படப் போட்டி காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தொடக்க விழா

மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்பித்தார். அவர் தனது தலைமை உரையில், குறும்படங்களின் தேவையும், அதன் தாக்கமும் வளர்ந்து வருவதாகவும், அந்தப் பணியை விரைவுபடுத்துவதில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று குறிப்பிட்டார். அவருக்கு பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் வீ.குமரேசன் இயக்க நூல்களை அளித்துச் சிறப்பித்தார். முன்னதாக உடுமலை வடிவேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெரியார் சாக்ரடீஸ் இணைப்புரை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...

ஒளிவண்ணன் அவர்களைத் தொடர்ந்து எழுத்தாளர் அஜயன் பாலா உரையாற்றினார். அவர் தனது உரையில், " பெரியார்தான் என்னை நாடறியச் செய்தவர்." - என்று தொடங்கினார். தொடர்ந்து அவர், தான் ஆனந்தவிக டனில், "நாயகன்" என்ற தலைப்பில் வரலாற்று நாயகர் களைப்பற்றி எழுதியதாகவும், அதில் சார்லி சாப்பிளின், டாகடர்.அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் வரிசையில் அய்ந்தாவதாக தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய போதுதான் நான் நாடறிந்த வனானேன்." என்றார். மேலும் அவர், கடைசி நிமிடம் வரையிலும் பொதுவாழ்வில் தொண்டுசெய்த ஒரே மனிதர் தந்தைபெரியார்தான் என்று ஓங்கிச் சொன்னார். தொடர்ந்து அவர் குறும் படங்களைப்பற்றி குறிப்பிட்ட போது, "வெகுஜன ஊடக மான திரைப்படத்திற்கு மாற்று - குறும்படம்தான்" என்றார்.

தமிழ்த்தரம் - உலகத்தரம்

திரையிடலில் ஏராளமான படைப்பாளிகள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் முன்பு தொடர்ந்து பேசிய எழுத்தாளர் அஜயன்பாலா, "குறும்படம் என்பது மிகக் குறுகிய நேரத்தில் சிறந்த கருத்துகளை சொல்லக் கூடியது. ஆகவே, அதை காட்சி மூலமாக உணர்த்த வேண்டும்" என்று குறிப் பிட்டுவிட்டு, எடுத்துக்காட் டாக "யார் பார்வையற்றவர்" குறும்படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு விவரித்தார்.

இப்படிப்பட்ட குறும்படங்களை எடுக்கவேண்டும். அதற்கு படைப்பாளர்களுக்கும் - குறும்படங்களுக்குமான இடைவெளியை குறைக்கவேண்டும். அதற்கு பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை முயன்றால் இந்த "பெரியார் திரை குறும்படத் திருவிழா உலகக் குறும்பட விழாவாக மாறும். மாறவேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அவருக்கு மாநில குறும்பட அமைப்பாளர்களில் ஒருவரான கி. தளபதிராஜ் இயக்க நூல்களை அளித்து சிறப்பு செய்தார்.

சமூக விழிப்புணர்வுக்கான திரையிடல்

தமிழ் ஓவியா said...

ஊடகவியலாளர் மாதவி சிறப்புரை ஆற்றுகிறார்.

அவரைத் தொடர்ந்து, தி.மு.க அமைப்புச் செயலாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகளும், ஊடகவியலாளருமான மாதவி சிறப்புரை வழங்கினார். அவர் குறும்படங்களைப் பற்றி குறிப்பிடும்போது, இப்பொழுது வந்து கொண்டிருக்கும் குறும்படங்கள் மெல்ல மெல்ல திரைப்படத்தைப் போலவே காதல், ஹீரோயிசம் என்கிற பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று கூறி விட்டு, சில தொலைக்காட்சி நிகழ்ச்சி களை நினைவு கூர்ந்தார். ஆனால், பெரியார் திரையில் சமூக விழிப்புணர் வுக்கான குறும்படங்கள் மட்டுமே திரை யிடப்படுகின்றன. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தொடரவேண்டும்"- என்று படைப்ப ளிகளை வாழ்த்தினார். அவருக்கு எழுத்தாளர் பிரதிபா லெனின் இயக்க நூல்களை வழங்கிச் சிறப்பித்தார்.
சிறப்புரையைத் தொடர்ந்து, நளினி ஒளிவண்ணன், எழுத்தாளர் பிரதிபா லெலின், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் மாநில கலைத் துறைச் செயலாளர் தெற்குநத்தம் சித்தார்த்தன், இசையின்பன் ஆகிய நால்வரும் நடுவர் களாக இருந்து குறும்படங்களை மதிப்பீடு செய்வார்கள் என்று அறிமுகப்படுத்தியும், குறும்படங்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன என்றும் ஊடகத்துறையின் மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அறிவித்தார். அதைத்தொடர்ந்து போட்டிக்கான திரையிடல் தொடங்கியது.

திரையிடலில் ஜாதிமறுப்புத் திருமணம்

திரையிடலின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் மூலம் வாழ்க்கையில் இணைய இருந்த, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேலு-காசியம்மாள் ஆகியோரின் மகன் ஏழுமலைக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகோன் - ஆண்டாள் ஆகியோரின் மகள் நீலவேணிக்கும் திருமணம் நடைபெற்றது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணமாகும். குறும்படப் படைப்பாளர்களும், பார்வையாளர்களும், திருமண வீட்டார் அனைவருக்கும் இது புது அனுபவமாக இருந்தது. சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் திருமகள் முன்னிலையில், ஊகடகத்துறையின் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் இத்திருமணம் நடைபெற்றது.

ஆணுக்கும் தாலி கட்டவேண்டும்

பிரின்சு தனது உரையில், திருமணத்தில் சொல்லும் மந்திரங்களையும் - அதற்கான பொருளையும் சொன்னபோது வியப்புடனும், அதிர்ச்சியுடனும் கேட்ட பார்வையாளர்கள், மணமகள் தாலி கட்டிக்கொள்வதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லியபோது பேசிய பிரின்சு, "சுயமரியாதைத் திருமண சட்ட வரைவில் தந்தைபெரியார் 'அண்ட்' - என்ற இணைப்புச் சொல்லை 'ஆர்' - என்று மாற்றச் சொன்ன வரலாற்றையும் கூறி, "எங்களைப் பொறுத்தவரையில், ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டவேண்டுமென்றால், பெண்ணும் ஆணுக்குத் தாலி கட்டட்டும்" என்று சொன்னபோது, அரங்கமே சிரிப்பாலும், கரவொலியாலும் அதிர்ந்தாலும் இந்த சிந்தனை வந்திருந்தவர்களை சிந்திக்கச் செய்துவிட்டது என்பதை அவரவர்களின் முகமே காட்டிக்கொடுத்தது. தொடர்ந்து, அனைவருக்கும் மணமக்களின் சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திரையிடல் தொடர்ந்தது. போட்டியில் பங்கேற்றிருந்த படைப்பாளர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு இயக்க நூல்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

திரையிடல் நிகழ்வினை குறும்படத் துறை அமைப்பாளர் கி.தளபதிராஜ் தொகுத்து வழங்கினார்.
திரையிடல் மாலை 7.30 மணி வரையிலும் நீடித்தது. அதைத் தொடர்ந்து நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில பகுத்தறி வாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரே சன் தலைமை வகித்தார். அவர், தான் கண்டு களித்த குறும்படங்கள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அனைவரையும் வாழ்த்தி இன்னமும் சிறப்பாக படைப்புகளை சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். போட்டியில் பங்கேற்ற படைப்பாளர்களுக்கு சான்றிதழ் களை வழங்கியும் சிறப்பித்தார்.

மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் பங்கேற்ற படைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ் ஓவியா said...

நடுவர்கள் சார்பில்

நடுவர்கள் சார்பில், தெற்கு நத்தம் சித்தார்த்தன் அவர்கள் திரையிடப்பட்ட குறும்படங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டமாக - கருத்தோட்டமாக சில செய்திகளை பகிர்ந்து கொண்டார். பிரச்சினையை சொல்வதோடு நின்றுவிடாமல் சமூகத்திற்கு தீர்வையும் சுட்டிக்காட் டினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற வேண்டு கோளையும் வைத்து தனது உரையை நிறைவு செய்தார். தாம்பரம் மாவட்ட கழகத் தோழர் ஓவியச்செல்வனின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில், திருமகள், நம்பியூர் சென்னியப்பன், பண்பொளி, இறைவி, தங்கமணி, தென்சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். காலையில் இருந்து நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் அரங்கம் நிறைந்தே இருந்தது. இது இப்படிப்பட்ட குறும்படங்களின் தேவையை பறைகொட்டியது என்றே குறிப்பிடவேண்டும்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் மாநில வீதி நாடகத் துறை அமைப்பாளர் பெரியார் நேசன், தி.என்ன ரெசு பிராட்லா, தி.புருனோ என்னாரெசு, பழனிகுமார், மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத் திருந்தனர். முன்னதாக நிறைவு விழாவில் நடுவர்களுக்கு மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை அளித்து சிறப்புச் செய்தார்.

மதுரையில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் கிளை !

மதுரை மாவட்டத்திலிருந்து அதிக படைப்புகளை அனுப்பியும் திரையிடல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பித்த ஜெ.பாலா, ரவிசங்கர், அறிவுமழை போன்ற தோழர்களிடம் திரையிடல் அரங்கிலேயே பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில், மதுரையில் பெரியார் சுமரியாதை ஊடகத்துறையின் கிளை அமைப்பினை துவங்குவது பற்றியும், தகுந்த திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு, மதுரைத் தோழர்களுக்கு திரைமொழி குறித்து வழிகாட்டுவது பற்றியும் பேசி முடிவு செய்யப்பட்டது.

தெற்கு நத்தம் சித்தார்த்தன் குறும்படங்கள் பற்றிய தொகுப்புரை வழங்குகிறார்.

அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்

அடுத்த ஆண்டு பெரியார் திரைக்கு இன்னும் சிறப்பான படைப்புகளை அனுப்ப வேண்டு என்ற வேண்டுகோளோடு அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பப்பட்டது. இப்படியாக, தந்தைபெரியார் முத்தமிழ் மன்றமும், பெரியார் நூலக வாசகர் வட்டம் - பெரியார் சுயமரியாதை ஊகத்துறை இணைந்து நடத்திய திராவிடர் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் திருவிழாவின் மூன்று நாள் நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவு பெற்றன.

தமிழ் ஓவியா said...


வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பகற்கொள்ளைக்காரருக்கு இராத்திரிக் கொள்ளைக்காரர்களே சாட்சி.


இம்மாதம் இருபதாந்தேதி தமிழ் சுயராஜ்யா பத்திரிகையில் வகுப்புவாரிப்பிரதி நிதித் துவத்தை ஆட்சேபித்து எழுதுவதில் ஜனங் களை முகம்மதியர் என்றும், இந்தியக் கிறிஸ்தவரென்றும், அய்ரோப்பியரென்றும், ஆங் கிலோ இந்தியரென்றும், ஒவ்வொரு வகுப்புக் காரர்களால் அவ்வவ் வகுப்பிலுள்ளவர் களைத் தேர்ந்தெடுப்பதால் தங்கள் வகுப்புக் காரியங் களைப் பார்க்கிறார்களேயல்லாமல் பொதுக் காரியம் பார்ப்பதில்லை என்றும் இதனால் வகுப்புத்துவேஷமும் வகுப்புப் பிரி வினையும் ஏற்படுகின்றன என்றும் எழுதியிருக் கிறது.

இதற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒரு சாஸ்திரியாரின் உப தேசத்தைக் காட்டுகிறது. சுயராஜ்யா பத்திரிகையோ தேசீய பிராமணர் என்று சொல்லப்படும் பகற்கொள்ளைக்காரருடைய பத்திரிகை. திரு சாஸ்திரியார் அவர் களோ மிதவாதப் பிராமணர் என்று சொல்லப்படும் இராத்திரிக் கொள்ளைக் கட்சியைச்சேர்ந்த பிராமணர், இப்பகற் கொள்ளைக் கட்சிக்கு ராத்திரிக் கொள்ளைக் கட்சியார் சாட்சியைத்தான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

போதாக்குறைக்கு ஒரு பெரிய புரட்டு என்னவென்றால் ஒரு பிராமணரல்லாத மந்திரி யான ஸ்ரீமான் பாத்ரோவும் இதை அங்கீகரித் திருக்கிறாராம். இந்த ஒரு விஷயம் பிராமணப் பத்திரிகைகளின் சூழ்ச்சி என்று குடிஅரசும் அதன் சகபத்திரிகைகளும் எழுதி வரும் ஒவ்வோரெழுத்துக்களையும் கல்லின்மேல் எழுதச் செய்கிறது.

மந்திரி பாத்ரோ அவர்கள் சம நியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப்பிரதி நிதித்துவம் இன்றியமையாதது என்றும், இக்கொள்கை புதிதானதல்ல என்றும் எல்லா சமூகத்தார்களும் சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம்வரை வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் இருந்தேதீர வேண்டும் என்றும், ஆனால் இது நிரந்தரமாய் இருப்பது நன்மை அல்ல கெடுதி என்றும் பேசி யிருக்கிறார்.

அப்படி இருக்க சுயராஜ்யாவின் கூற்றைஎந்த வார்த்தையால் மந்திரி அங்கீகரிக்கிறார் என்பதை பொது மக்கள் கவனிக்க வேண்டும்? சுயராஜ்யா பத்திரிகையின் மற்ற கூற்றுகளுக்கு மறுமுறை பதிலெழுதுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 23.08.1925

தமிழ் ஓவியா said...


பிச்சை வேண்டாம் நாயை பிடித்துக்கட்டுங்கள்


இது வரையில் நமது சர்க்காருக்கு மிகவும் நல்ல பிள்ளையென்று நடந்து வந்த நமது பெரியார் ஸ்ரீ மான் பி. கேசவப்பிள்ளை அவர்களுக்கு நமது சர்க்காரார் கொடுத்திருக்கும் சன்மானம் என்னவெனின், பிச்சை வேண்டாம் நாயைப்பிடித்துக்கட்டுங்கள், என்கின்ற நிலையில் வந்து விட்டது.

சட்ட சபையில், நமது பெரியார்பேர் கெடும் வண்ணம் சர்க்காரால் பிரசுரமாயிருந்த அறிக்கையில் நன்மை இல்லாவிட்டாலும் அதிலுள்ள கெட்டகாரியத்தை எடுக்கவாவது ஒரு பெரிய கமிட்டிநியமிக்க வேண்டியது மிகவும் அவசிய மாகப் போய் விட்டது. சர்க்காருக்கு நல்ல பிள்ளைகளாக நடக்க விரும்புகிற வர்களுக் கெல்லாம் என்றைக்காவது ஒருநாள் இக்கதி ஏற்படுமென்பதை நாம் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - 23.08.1925

தமிழ் ஓவியா said...


தென் ஆப்பிரிக்கா தினம்


தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும், சென்ற 11ஆம் தேதி இந்தியாவெங்கும் பொது தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண்டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம்.

ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதாரென்றும் தங்களுடைய வேதங்களையே படிக்கக்கூடாதாரென்றும் தங்களுடைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார் இக் கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா?

இதையறிந்த தென்னாப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடு வார்களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால் வீணாக ஓர் நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

- குடிஅரசு, தலையங்கம், 18.10.19

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி


மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால்
கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும்.
மனிதனிடத்தில் பொறாமை.

வஞ்சகம், துவேஷம்,
கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத
சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


வைக்கம்


வைக்கம் சத்தியாக்கிரஹத்தைப் பற்றி காந்தியடிகள் பின்வருமாறு தமது பத்திரிகையில் எழுதுகிறார்.

திருவாங்கூர் அரசாங்கத்தார் குரூர் நம்பூதிரிபாட் அவர்களை விடுதலை செய்ததைக் குறித்தும், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மீதிருந்த தடை உத்தரவு எடுக்கப்பட்டதைக் குறித்தும் வாசகர்கள் சந்தோஷமுறுவார்களென நினைக்கின் றேன். எனக்கும் போலீஸ் கமிஷனுருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் திருவாங்கூர் அரசாங்கத் தார் நிறைவேற்றி வருகின்றனர்.

வெகு நாளாகச் செய்யத் தாமதித்து வந்த சீர்திருத்தத்தை இப்பொழுது நிறைவேற்றுவதைக் குறித்து அவர்களை வாழ்த்துகிறேன். தீண்டாதார் கோவில்களைச் சுற்றி யுள்ள பொது ரஸ்தாக்களில் போகக் கூடாதென்ற தடையும் சீக்கிரத் தில் நீங்கி விடுமென நினைக்கிறேன். சத்தியாக்கிரஹிகளும் ஒப்பந்தத்தை முற்றிலும் நிறைவேற்றி வைக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி நான் அதிகம் கூற வேண்டுவதில்லை.

- குடிஅரசு செய்தி 02.05.1925

தமிழ் ஓவியா said...


அண்ணாவும் - காமராசரும்!

தி.மு.க. பெரிய வெற்றியடையும் செய்தி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டுள்ளது. பெருந் தலைவர் காமராசர் தோற்று விட்டார் என்று தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின் றனர். அறிஞர் அண்ணா அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாராம். காமராசர் வெற்றி பெற்று புது டில்லி சென்றால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வார்.நம்மால் அவ்வளவு செய்ய முடியுமா என்றாராம். உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகச் சென்னையில் நடக்கின்றது. முதல்வர் அறிஞர் அண்ணா காமராசரை அழைத்துச் சிறப்பிக்கின்றார். சிலர் கிண்டல் செய்கின்றார்கள். காமராசர் என்ன தமிழறிஞரா என்று அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுச் சென்னை அரசு மருத்துவமனையிலே இருக்கின்றார். பார்க்க வந்த காம ராசர் மருத்துவர்களிடம் கேட்கின்றார். சரியான பதிலை அளிக்காமல் திணறுகின்றனர். உடனே காமராசர் அமெரிக்கா கொண்டு சென்று மருத்துவம் பார்க்க உடனே ஆவன செய்யுங்கள் ஆம்! என்று ஆணையிடுகின்றார் !

மும்பை விமான நிலையத்திலே நள்ளிரவு நேரத்திலே மாநில ஆளுநர் வந்திருக்கின்றார். அண்ணா அவர்கள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பெருந்தலைவர் காமராசரின் ஆணை! உங்களை இங்கு பார்த்து அனுப்பிவைக்கச் சொன்னார் என்றாராம் .

அது தமிழகம்! இன்று நீங்களே சொல்லுங்கள்!

- சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கமல்ஹாசன் மீது பார்ப்பனர் சங்கம் திடீர் பாய்ச்சல்!


சென்னை, பிப். 3- இஸ்லாமியர்கள் பிரச்சினையை முடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து பார்ப்பனர்களிட மிருந்து புது எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பார்ப்பனர் சங்கம் ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் அந்த சங்கம் புகார் மனுவைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக புகார் மனுவைக் கொடுத்த அதன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்பு கொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது. இது எங்களின் உணர்வை புண்படுத்து கிறது. கமல் முற்போக்குவாதி, அறிவுஜீவி என்று சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பார்ப்பனராக அங்கீ கரித்தது கிடையாது. பூணூல் என்பது சொறிந்துகொள் வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பார்ப்பனராக இருக்க முடியும். விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டு வதைவிட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்திருந்தால் விஸ் வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும் என்றார். இன்னொரு பார்ப்பனர் சங்கம் தடை கூடாது என்கிறது இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தியிருப்பதால் அப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பார்ப்பன சங்கத்தினர் புகார் தெரிவித்திருகின்றனர். அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பார்ப்பனன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப் பதால் தடை செய்யக்கூடாது. ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார். அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்கள் இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்து போகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணர வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா?



இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது,
நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா? என்று கேட்டான் நண்பன். இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது! என்றான் அந்த பக்தன் !

- சந்திரன் வீராசாமி, திருச்சி

தமிழ் ஓவியா said...

இறையருள் இல்லை!


தாமஸ் ஆல்வா எடிசனின் யூகம் எப்போதும் சரியாகவே இருக்கும். அவருடன் பணிபுரிந்த ஒரு நண்பர் தாமஸின் யூகம் பற்றி கூறினார். யூகிப்பதில் எடிசனுக்கு நிகர் எடிசன்தான்! நாங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த பலமுறை முயற்சி செய்து தோற்றிருப்போம். அதை எடிசனிடம் கொடுத்தால் நாங்கள் தொடர்ந்த அதே வழியில்தான் அவரும் செல்வார். இதைத்தானே நாமும் செய்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, அதில் ஒரு மாற்றத்தைச் செய்வார். அந்தச் சோதனை வெற்றிபெற்றுவிடும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று எப்படித் தோன்றியது என்று கேட்டால் எனக்குத் தெரியாது; ஏதோ தோன்றியது செய்தேன்! என்பார்.அப்படித் தோன்றுவது இறையருளா என்று கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவார்.

நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 124

தொகுப்பு: பாவலர் ப. கல்யாணசுந்தரம்

தமிழ் ஓவியா said...

காந்தியாருக்கே இந்த நிலை என்றால்

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன் இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது! என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளினார்கள்.

ஒரு முகம்மதியரையோ,சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள்.தான் ஒரு முகம்மதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் கூறுவார்.தனக்கென்று ஒரு சாதி இருந்த போதிலும்கூட, அவர் தன் சாதியை சொல்வதில்லை. நீங்களும் அவர் பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள்.தான் ஒரு முகம்மதியர் என்று அவர் கூறியதும் நீங்கள் அவரை நீ சன்னியா, ஷேக்கா,சையதா,சாதிக்கா,பிஞ்சாரியா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.

தானொரு சீக்கியர் என்றதும், நீங்கள் அவரை ஜாட்டா,ரோதாவா,மாழ்பியா,ராம்தாசியா என்றெல்லாம் கேட்கப்போவதில்லை.

ஆனாலும், நான் ஓர் இந்து என்று என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை.அவருடைய சாதி என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள்.ஏன்? ஓர் இந்துவைப் பொறுத்தமட்டில்,அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய மனிதன் என்பதை உங்களால் உறுதியாக தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

- அண்ணல் அம்பேத்கர்-”உண்மை” பிப்ரவரி 01-15 - 2013

தமிழ் ஓவியா said...

சுவாமி அக்னிவேஷ்


தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான பிரச்னைகள் ஏராளம். ஆனால், பல புகார்களுக்கு போலீஸார் எஃப்.ஐ.ஆரே பதிவது இல்லை. எல்லாவற்றுக்கும் எதிராகப் போராட இதுதான் சரியான நேரம்.

பெண்கள், பாதிக்கப்பட்டோர், தலித் தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய அளவில் போராட வேண்டும். தர்மபுரியில் இருந்து தர்மசாலா வரை நடைபயணம் போக வேண்டும்.

கலப்புத் திருமணம் செய்வதே இதற்கு முக்கியத் தீர்வு. அதுதான் தலித் ஒடுக்குமுறைகளை முற்றிலும் தடுக்கும் ஒரே ஆயுதம். மதம் மாறி, சமூகம் மாறி, ஏன் நாடு மாறியும் திருமணம் செய்ய வேண்டும்.

இது மட்டும் நடந்தால், 20 வருடங்களுக்குப் பிறகு பேதம் என்ற விஷயமே இருக்காது.

மோடி பிரதமரா? (சிரிக்கிறார்) அப்படி ஒரு விஷயம் நடந்தால், அது தேசிய விபத்து. அவர் செய்த கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் அவர் சிறைக்குத்தான் போக வேண்டும். பிரதமர் ஆகக்கூடாது. குஜராத் மக்கள் வேறு, இந்திய மக்கள் வேறு!

- சுவாமி அக்னிவேஷ்,

ஜூனியர் விகடன், 27--.01.2013

தமிழ் ஓவியா said...





டங்ஸ்டன் இழை கடவுள்

ஃபியூஸ் போன பல்பை எரிய வைக்க முடியாத கடவுளை

திட்டிக்கொண்டிருந்த போது

அல்லா தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றினாரென்று மகிழ்ந்தான் நண்பனொருவன்

என்னிடம் கோபித்துக்கொண்டு போன சூரியன்

திரும்ப வரும்வரை இந்த ஃபியூஸ் போன பல்பை

உயிர்தெழுவதற்கு உதவுமாறு தொழுதேன் அல்லாவிடம்

இந்த இரவில் யார் வெளிச்சம் கொடுத்தாலும் அவன் உன்னதமானவனென்றேன்

அந்த பல்ப் எரியவில்லை தொழுகைக்கு பின்னும்

இருள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை

இருளை கண்ணாடி போல உடைக்க முடியாது

வெளிச்சத்தை தரும் அமுத சுரபி யாரிடமிருக்கிறது

அறியாமை போல பரவியிருக்கும்

கரிய இருளின் சருகுகளை கூட்டித்தள்ள வேண்டும்

இருள் மாமிசமாகிறது பசித்தவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்

அது எல்லோரையும் வசீகரிக்கும் வார்த்தையாகிறது

நான் வெளிச்சத்தின் உணவுக்காக காத்திருக்கின்றேன்

சிலுவை சுமந்த மனிதனின் பிதாவின் மேல் என் கோரிக்கை விழுகிறது

நீண்ட நேரமாகியும் அந்த பல்பு எரியவில்லை

நான் சூரியனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்

அந்த தெருவழியே வந்த தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார்

கொண்டு வா அந்த உயிரற்ற பல்பை டங்ஸ்டண் இழைகள் பொருத்தப்பட்டது இனி எரியுமென்றார்

டங்ஸ்டன் இழை இராத்திரி நேரங்களின் கடவுளானது இப்படித்தான்

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...


பொறுக்குமா இனமலருக்கு?

தி.க., ஆர்ப்பாட்டம்

தி.க., தலைவர் வீரமணி: சேலம் ரயில்வே கோட்டத்தை, கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அதை தடுத்து நிறுத்த, தமிழக எம்.பி.,க்கள், கட்சி பேதம் பாராமல், பார்லிமென்டில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 9ம் தேதி சேலத்தில், தி.க., ஆர்ப்பாட்டம் நடத்தும்.

டவுட் தனபாலு: உங்க கோரிக்கை நல்ல கோரிக்கை தான்... ஆனா, மத்திய அரசை விழுந்து விழுந்து ஆதரிச்சிட்டு இருக்கிற உங்க, "அரசியல் ஆசான்' கருணாநிதியை, இந்த பிரச்னையில மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க சொல்றதை விட்டுட்டு, ஆர்ப்பாட் டம் எல்லாம் அவசியமான்னு தான், எனக்கு, "டவுட்!'
- தினமலர், 5.2.2013 பக். 8

கோரிக்கை நல்ல கோரிக்கை தானாம் - அதற்காக போராடக் கூடாதாம். திராவிடர் கழகத்திற்கு ஆசான் தந்தை பெரியார்தான்; தன்னை ஆசான் என்று கலைஞர் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார். தினமலருக்கே உரித் தான சில்மி(வி)ஷம் இது.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் உரிமைகளுக்காகத் தொடர்ந்து தன் வழியில் போராடிக் கொண்டுதானிருக்கிறது.

இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, கொலை குற்ற வாளியாக பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்குப் பிரச்சினை.

மகளிர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை, பிராமணாள் பெயர் அழிப்பு! - இப்படி எத்தனையோ போராட்டங்களை தன் வழியில் திராவிடர் கழகம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது!

சேலம் ரயில்வே கோட்டப் பிரச்சினைக்காகவும் ஏற்கெனவே பலமுறை போராடித் தடுத்து நிறுத்தியிருக்கிறது திராவிடர் கழகம்.

இப்பொழுதென்ன தினமலரின் புதுக்கரடி?

தமிழ்நாட்டு உரிமைக்காக எந்தப் போராட்டம் நடத்தினாலும் தினமலர் - இனமலர் கூட்டத் திற்குப் பொறுக்காதே! நல்ல கோரிக்கை என்று எழுதும் தினமலர் இதற்காக ஏதாவது நாலு வார்த்தை எழுதியதுண்டா? தமிழன் வீட்டில் சாவு விழுந்தால் விசாரிக்கக் கூடப் போகாத பார்ப்பனக் குடும்பம் கருமாதிக்கு மட்டும் கரெக்டா போய் விடும் - தன் சுரண்டல் புரோகிதத் தொழிலுக்காக.

தமிழ்நாட்டின் உரிமை என்றால் குமட்டிக் கொண்டு வருகிறது - இந்தக் கும்பலுக்கு!5-2-2013