Search This Blog

23.2.13

அடுத்த பிரதமர் மோடியா? காவிக் கூட்டமும் பார்ப்பன ஊடகங்களும் உஷார்! உஷார்!!


நீதிபதி மார்க்கண்டேய கட்ஜும், வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குகாவும் என்ன சொல்லுகிறார்கள்?

இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி தான் என்று காவிக் கும்பல் காவடி எடுத்து ஆடுகிறது. பார்ப்பன ஊட கங்கள் எல்லாம் துந்துபி முழங்கு கின்றன.

இப்பொழுதே அவர் பிரதமர் ஆகி விட்டது போன்ற மாயை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த விளம்பரம் ஆக்கப்படும் மனிதர்பற்றி இந்தியாவின் பத்திரிகைக் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க் கண்டேய கட்ஜும், பிரபல வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குகாவும் என்ன கருதுகின்றனர்? இவர்களின் கணிப்பு என்ன? இந்து ஏட்டிலிருந்தே இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

திரு மார்க்கண்டேய கட்ஜு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. தற்பொழுது அவர் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (Press Council of India) தலைவராக உள்ளார். அவர், அண்மையில் இந்து பத்திரி கையில் (15.2.2013 பக்கம் 13) எழுதி யுள்ள ஒரு கட்டுரையின் சுருக்கம். இதோ: 

குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியை சிலர் வருங்கால இந்தியப் பிரதமராக விளம்பரப்படுத்தி வருகின்றனர். கும்பமேளாவில் கூடி நின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பாரதீய ஜனதா கட்சியினரும் மட்டும் அல்லாமல், சில படித்த இளைஞர் களும்கூட மோடி பற்றிய பிரச்சாரத் திற்குப் பலி ஆகியுள்ளனர்.

அண்மையில் நான் டில்லியி லிருந்து போபாலுக்கு விமானம் மூலம் பயணம் செய்தேன். என் பக்கத்தில் ஒரு குஜராத்தி வணிகர் அமர்ந் திருந்தார். நரேந்திர மோடியைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டேன். அவர் மோடியைபற்றி வானளாவப் புகழ்ந்தார். 2002ஆம் ஆண்டில் சுமார் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைப்பற்றி கேட்டேன். அவர் குஜராத்தில் எப்பொழுதும் முஸ்லிம்கள் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தனர். 2002-_க்குப் பிறகு அவர்கள் நடுங்கிப் போய் விட்டனர்.  இப்பொழுது அமைதி நிலவுகிறது என்று சொன்னார். நான் சொன்னேன், இப்பொழுது நிலவுவது வெறும் மயான அமைதி. நியாயமும் அத்துடன் இணைந்து இருந்தால் தான் அது நிலைத்து நிற்கும் என்று சொன்னேன். உடனே அவர் தனது இருக்கையை மாற்றிக் கொண்டு போய் விட்டார்!

உண்மை என்னவென்றால் இன்றைய குஜராத்தில் முஸ்லிம்கள் அச்சப்படுத்தப்பட்டு, 2002 நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதற்கே அஞ்சுகின்றனர். திரும்பவும் தாக்கப் பட்டு பழி வாங்கப்படுவோம் என்று பயம் கொண்டுள்ளனர். 200 மில்லி யன் முஸ்லிம் மக்கள்  தொகையினர் ஒட்டு மொத்தமாக அனைவரும் மோடிக்கு எதிராகவே உள்ளனர் -_ விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிர கோத்ரா நகரில் 59 இந்துக்கள் ரயிலில் எரிக்கப்பட்டதற் கான பதிலடிதான்; தன்னெழுச்சி நிகழ்ச்சியாகும் என்பதை என்னால் ஏற்க முடியாது. தவிர கோத்ரா நிகழ்விற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமை யாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக குஜராத்தில் உள்ள அத்தனை முஸ்லிம்களையும் தாக்கு வது எந்த விதத்தில் நியாயமானது? குஜராத்தின் மொத்த ஜனத் தொகை யில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகி தம்தான். அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும், வீடுகள் எரிக்கப்பட்டும் மற்றும் சொல் லொணாக் கொடுமைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

2002இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை  பொங்கி எழுந்த கிளர்ச்சி! ஜெர்மனியில் 1938இல் கிருஷ்டலினா (Kristallnacht) என்ற இடத்தில், யூதர்கள் கொல்லப்பட்டு, அவர்கள் வழிபாட்டு இடங்கள் எரிக்கப்பட்டு கடைகள் கொள்ளையடிக்கப்பட் டதைத்தான் நினைவு கூர வைக்கிறது. ஜெர்மானிய அரசுப் பிரதி ஒருவர் ஒரு யூத இளைஞனால் பாரிஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குக் காரணம் அந்த இளைஞன் ஜெர் மானிய நாஜிக் கட்சியினரால் கொடுமைப்படுத்தப்பட்டது தான். அதனால் தான் யூதர்கள் மீது வன்முறை ஏவப்பட்டதாக தங்களது கொடுஞ் செயலை நாஜிக்கள் நியாயப்படுத்தினர்.

மக்கள் தன்னிச்சையாகக் கிளர்ந்து எழுந்ததால் நடந்ததாக நாஜி அர சாங்கம் சொன்னாலும் கூட, உண்மை யில் திட்டமிடப்பட்டு, நாஜி அதிகாரி களால், மதம் பிடித்த மக்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட கொடூரம் தான் அது.
வரலாற்றுப்படி இந்தியா பல வந்தேறிகளைக் கொண்டு இருப்பதால் ஏராளமான வேறுபாடுகளைக் கொண் டுள்ளது. ஆகவே இந்தியா ஒன்று பட்டு இருக்க வேண்டுமானால், எல்லா இனத்தவருக்கும், மதத்தினருக்கும், மொழியினருக்கும் சமமான வாய்ப் புகளும், நீதியும் கொண்ட ஜாதி மத வேறுபாடற்ற ஆட்சி முறை வேண் டும். முன்னோடிகளான அக்பர் முதல் நேரு வரை அதைத்தான் புரிந்து கொண்டு அமைதியான ஆட்சி முறைக்கு வழி வகுத்தனர்.


மோடியின் விசுவாசிகள் இந்த நிகழ்வுகளுக்கும், மோடிக்கும் எந்தவித தொடர்புமில்லை; எந்த நீதிமன்றத்தாலும் அவர் தண்டிக்கப்படவுமில்லை என்று கூறுகின்றனர். அந்த கால கட்டத்தில் அவர்தான் முதல்வராக இருந்துள்ளார். ஆகவே அவர்காலத்தில் நடந்த கொடுமைகளுக்கு அவர் பொறுப்பல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்?

தான், குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக நரேந்திரமோடி குறிப்பிடுகிறார். எது வளர்ச்சி? மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தரம் உயருவதுதான் வளர்ச்சி! ஆனால் மோடி, பெரிய வணிக நிறுவனங்களுக்கு சலுகைகள் பல கொடுத்துள்ளார். அவர்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரமும், நிலங்களும் கொடுத்துள்ளதால் மட்டும் பொது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடவில்லை.

குஜராத்தில் உள்ள குழந்தைகளில் 48 சதவீதம் பேர் ஊட்டச் சத்து குறை பாடினால் அவதியுறுகின்றனர். இது தேசிய அளவைவிட அதிகம். குழந் தைகள் இறப்பு விகிதமும், கர்ப்பிணிப் பெண்களின் சாவு விகிதமும் அதிகம் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் 57 சதவிகிதம் ஏழ்மை நிலைக்குக் கீழே யுள்ளனர். சுற்றுச்சூழல் கேடுகள் வளர்ந்து வருகின்றன. கல்வித்தரம் குறைந்து வருகிறது.

உடல் நலம், கல்வி, வருமானம் ஆகிய துறைகளில் மற்ற இந்திய மாநிலங்களைவிட குஜராத் 8ஆவது இடத்தில்தான் உள்ளதாக அய்க்கிய நாட்டு சபையைச் சேர்ந்த நிறுவனம் (ஹிழிஞிறி) குறிப்பிட்டுள்ளது.
வணிகத் துறையினர் மோடியைப் பாராட்டலாம். ஆனால், இந்தியாவில் அவர்கள் மட்டும்தான் உள்ளனரா? என்று கட்ஜு எழுதியுள்ளார்.


வரலாற்று ஆசிரியர் இராமசந்திர குகா என்ன சொல்லுகிறார்? அதுவும் இந்து ஏட்டில் (18.2.2013) வெளி வந்ததுதான்.

சமீபத்தில் நரேந்திரமோடியைப் பேட்டி கண்ட ஒரு பத்திரிகையாளர் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

குஜராத் கடல் பகுதியை மட்டுமே கொண்டிருக்கிறது. மூலப் பொருள்கள் எதுவுமே இல்லை என்றாலும் குஜராத் அனைத்திலும் முதன்மை கண்டுள்ளது. அசாம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கிடைக்கும் இயற்கை வளங்கள் எங்களிடம் இருந்தால் இந்தியாவின் முகத்தையே மாற்றிக் காட்டியிருப்பேன் (தி. டெலிகிராஃப் சனவரி 18.2013).

இதுதான் மோடி கொடுத்த பேட்டி சாதனைகளைக் குவிக்கும் வீரனாகத் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார் மோடி. தான் பிரதமரானால் இந்தி யாவின் வளர்ச்சி 8 சதவிகிதத்தி லிருந்து 10 சதவிகிதத்திற்கு  எட்டிப் பிடித்து விடும். ஒரே இரவில் அதிகாரிகள் எல்லாம் கோப்புகளை முடித்து விடுவார்கள். நிருவாகத்தில் ஊழலே தலை காட்டாது. வறுமைக் கோடு பூஜ்ஜியத்தை நோக்கி விரையும்; தொடர் வண்டிகள் ஒழுங்காக நேரப்படி பயணிக்கும் என்றெல்லாம்.  மோடியின் இந்தக் கூற்றை யெல்லாம் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? பல தரப்பட்டவர்கள்; தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள், பெரும் முதலீட்டாளர்கள் மேற்கு நாடுகளின் தூதர்கள்; மறந்து விட வேண்டாம். இளஞ்சிவப்பு அல்லது வெள்ளைச் செய்தித்தாள்களின் தொடர் எழுத்தாளர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். இவற்றை எதிர்ப்பவர்கள் இரு வகையினர்; அவர்கள் மோடியின் சாதனைகளைப் புஸ்வாணம் ஆக்கி விடுகின்றனர்.

நேருவின் ஆதரவுக் கொள்கை யுடையவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் 2002இல் குஜராத்தில் நடைபெற்றதுபோல முசுலிம் எதிர்ப்பைத் தொடரக் கூடியவர் மோடி. தனிப்பட்ட முறையில் நிரூ பிக்கப்படாவிட்டாலும் குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகள், படு கொலைகள் இவைகளுக்கு இறுதியில் பொறுப்பேற்க வேண்டியவர் அம் மாநில முதல் அமைச்சர் மோடிதானே என்ற வினாவை முன் வைக் கின்றனர்.

இதற்கான பொறுப்பை இதுவரை மோடி ஏற்க முன் வராமையால் நாட்டை ஆள மோடி தகுதியானவர் அல்லர் என்று இவர்கள் கூறு கின்றனர்.
மோடியின் மதச் சார்பற்ற தன்மை என்ற நிலையானது அவருக்குப் பெருங் குறையுடையதாகும்.

குஜராத்தில் முன்னேற்றம்  முறையாக அமைந்துவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

குஜராத்தில் தெற்குப் பகுதி மாவட்டங்கள் (எடுத்துக்காட்டாக சவுராஜ்டிரா உள்பகுதிகள்) வறண்டுப் போய்க் கிடக்கின்றன. சுற்றுக் சூழல் அதிகம் மாசுபட்டுக் கிடக்கிறது. கல்வித் தரம் பெரும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண் ணிக்கை மிக அதிகம். தனி மனித னின் வருமானம் அதிகமாக உள்ள ஒரு மாநிலத்தின் நிலைமை இது!
ஒரு சமூக இயல் ஆர்வலராக முழுமையான முன்னேற்றத்தின் புள்ளி விவரங்களில் நம்பிக்கையற்ற நான், இந்தியாவில் குஜராத் முன்னேறியுள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

மூன்றாம் முறையாக நரேந்திர மோடி ஆட்சி ஏற்ற நிலையில், சவுராஷ்டிரா வழியாக நான் பயணம் செய்தேன். சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகவும், உயி ருக்கே பெரும் அளவில் போராட வேண்டிய பகுதியாகவும் தெளிவாகத் தெரிந்தது.

குடிநீர், சாலைகள், பயண வசதிகள், துப்பரவுப் பணிகள் மிகவும் மோசம் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்தன. இயற்கை வளங்கள் அரிதாகவே காணப்பட்டன. ஆடு மேய்ப்பவர்கள் புல் வெளியைத் தேடி பல மைல்கள் நடக்க வேண் டியிருந்தது.

சமூக, பொருளாதார முன்னேற் றத்தில் சுமாரான மாநிலங்களைவிட குஜராத் சிறந்ததுதான். ஆனால் நாட்டின் மிகச் சிறந்த மாநிலங்களுள் ஒன்றல்ல!
இந்தியா முழுவதும் நான் பயணம் செய்த மாநிலங்களில் கேரளா, இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு  ஆகிய மாநிலங்கள் தான் அதிக மானவர்களுக்கு மரியாதையான வாழ்வாதாரங்களை வழங்குகின்றன என எண்ணுகிறேன்.
தெற்கு குஜராத்தில் பட்டேல்கள், பொதுவளங்களைக் கபளீகரம் செய் துள்ளதைத் தடுத்து நிறுத்தவில்லை. பணக்கார விவசாய முதலாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

எனது கண்ணோட்டத்தில் மோடி இந்தியாவின் பிரதமராவதற்குத் தகுதியற்றவர் என்பது, அவர் உள் ளுணர்வும் அடாவடித்தனமான எதேச்சதிகாரத் தன்மையும் தான் காரணம்.

நான் இந்தியாவின் முகத்தை மாற்றியமைப்பேன் என்கிறார்; நாம் அல்ல; நான் நான்தான் எல்லாம்!

மோடியின் குஜராத்திலே உடன் உழைப்பார் யாருமில்லை. உடன் பணியாளர்களும் யாரும் இல்லை. அவருக்கு 56 அங்குல நெஞ்சுண்டு. அவரே இப்படி தற்புகழ்ச்சியில் ஈடுபடுவதுண்டு. எனவே குஜராத் மாநிலத்தில் ஆண் -_ பெண் இரு பாலரும் அவருடைய சர்வ அதி காரத்திற்கும் கட்டுப்பட்டே இருக்க வேண்டும்.
எதிலும் ஆதிக்கம் செலுத்தும் மனிதர் அவர் என்பது வெளிப் படையானது; சமூக அறிவியலாளர் களின் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பதினைந்து நிமிடங்கள் அவர் பேச்சைக் கேட் டாலே போதும். அவர் குறுக்கே யார் வந்தாலும் உதறித் தள்ளி விடும் மனிதர் மோடி என்பது புலனாகி விடும். அவர் குரல் வலிமையானது - கேட்பவர்களை அச்சமூட்டித் தன்னைப் பின்பற்றச் செய்யும் முயற்சியாகும்.

அரசியல் முரடர்கள் எல்லோரைப் போலவும் சுதந்திரமான பேச்சுகளை யும், கலைப் படைப்புகளையும் மோடி வெறுக்கிறார்.

சில புத்தகங்களையும், சில திரைப்படங்களையும் அவர் தடை செய்துள்ளார் - (புத்தகங்களைப் படிக் காமலும், திரைப்படங்களைப் பார்க் காமலுமே இவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).

சுதந்திர மனம் கொண்ட எழுத் தாளர்களையும்,, சிந்தனையாளர்களை யும், கலைஞர்களையும் அச்சுறுத்தி வருந்திருக்கிறார் என்று விரிவாக பிரபல வரலாற்றாளர் - சமூக இயலாளர் திரு. இராமச்சந்திர குகா இந்து ஏட்டில் எழுதியுள்ளார்.

மோடியைப் பற்றி இந்த இரண்டு சிந்தனையாளர்களும் சொன்னது போதாது என்றால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு (தமிழ் நாட்டவர்) அரிஜித் பசாயத் ஆகி யோரின் தீர்ப்பில் நரேந்திரமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டதையும் இணைத்துக் கொள்ளலாமே!

ஆமாம், இந்தியாவுக்கு இப்படிப்பட்ட ஒரு பிரதமர் நீரோ மன்னன் தேவையாம்! சொல் லுகிறது காவிக் கூட்டமும் பார்ப்பன ஊடகங்களும் உஷார்! உஷார்!!
            ---------------------மின்சாரம்-”விடுதலை” 23-2-2013

29 comments:

தமிழ் ஓவியா said...


கராத்தே!


உலகப் பெண்கள் பாது காப்பு விழிப்புணர்வுக்காக ஒன்பில்லியன் ரைசிங் என்ற நிகழ்ச்சி உலகம் முழுவதும் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் நடந்த அத்தகு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுத் திரும் பிய கல்லூரி மாணவி அம்ரி தாவிடம் இளைஞர்கள் சிலர் சேட்டை செய்தனர். கராத்தே தெரிந்த அந்த வீராங்கனை தன் கைத் திறனைக் காட்டி விரட்டி யடித்தார்.

ஒரு பெண் பல இளைஞர்களை உதைத்து விரட்டிய செயல் கேரள மாநிலம் முழுவதும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத் தியது.

இந்த வீராங்கனையின் வீரத்தை அனைவரும் பாராட்டினர். உதைபட்ட ஆசாமிகளுள் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்; முதலில் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார்;

அந்தப் புகாரை காவல் துறை ஏற்காத நிலையில், நீதிமன்றம் சென்றார். நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள் ளது.

கேரளாவில் இந்தச் செய்தி பெரும்புயலைக் கிளப்பிவிட்டது. நாடெங் கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டுவரும் ஒரு கால கட்டத்தில், வழக்குத் தொடுப்பதா? நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுவதா? காவல்துறை கட்டியம் கூறு வதா? என்ற வினாக்கள் கேரள மாநில அளவில் மட்டும் வெடித்துக் கிளம்பக் கூடாது - இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே எரி மலையாகத் தகித்து எழ வேண்டும்.

இதன்மூலம் பெண் ணுரிமைபற்றிய சிந்தனையும், தற்காப்புக் கலைப் பயிற்சி பெண்களுக்கு அளிக்கப்படுவது என்பது கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற எண்ண அலையும் இந்தியா முழுமையும் ஓங்கி எழவேண்டும்.

பெண்கள் தற்காப்புப் பயிற்சி பெறவேண்டும் - கல்வி நிலையங்கள் இதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கருத்து மேலோங்கி யுள்ள இந்த நேரத்தில், நீதிமன்றம் இப்படி நடந்து கொண்டு இருப்பது அசல் பிற்போக்குத்தனம் அல் லவா? தற்காப்பு என்பது சட்டப்படியும் கூட சரி யானதே!

2013 இல் அம்ரிதாவைப்பற்றிப் பேசுகிறோம். இன்றைக்கு 82 ஆண்டுகளுக்குமுன் ஒருவர் இது பற்றிப் பேசி இருக்கிறார் என்றால், நம்ப முடிகிறதா?

கும்மி, கோலாட்டங் களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண் டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவைகளையும் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளுக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கு உண்டா கும்படியாகச் செய்ய வேண்டும்.

- தந்தை பெரியார்
(குடிஅரசு, 26.4.1931)

(குறிப்பு: அன்றைக்குப் பெரியார் சொன்ன கைக் குத்தும், குஸ்தியும்தானே இன்றைய கராத்தே!).

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே போர்க் குற்றவாளியே!


கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகள்
பிரிட்டன் சேனல்-4 தயாரித்த ஆவணப் படம் டில்லியில் வெளியீடு

புதுடில்லி, பிப். 23- இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள ராணுவம் நடத்திய போர் வெறியாட்டம், நேற்று டெல்லியில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசு போர்க்குற்றங்கள் செய்ததற்கான மேலும் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலமாகி உள்ளன. ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தப் போரில் அப்பாவி பொது மக்கள் உள்பட பல்லாயிரக் கணக்கில் பலியானார்கள்.

தமிழ் ஓவியா said...


வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த வீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டதுதான் கொடூரம் ஆகும். இது பற்றிய ஆவணப்படங்களை, இங்கிலாந்தைச் சேர்ந்த 'சேனல்-4' தொலைக்காட்சி பலமுறை வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.

12 வயது பாலச்சந்திரன்

சில நாள்களுக்கு முன்னர் இந்த தொலைக் காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் மேலும் ஒரு கொடூரக் காட்சியையும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை, சிங்களப் படைகள் பிடித்து வைத்து, சாப்பிடுவதற்கு சில உணவுகளைக் கொடுத்து, பின்னர் அவனை நெஞ்சில் நேருக்கு நேர் சுட்டுக்கொன்ற காட்சிதான் அது.

உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் காட்சி, இலங்கை மீது போர்க் குற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு சாட்சியமாக அமைந்தது.

இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய போர் வெறியாட்டம் தொடர்பான ஆவணப்படம் (டாக்குமெண்டரி சினிமா) ஒன்றை சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ளது. நோ பயர் சோன் (தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமா நேற்று டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் என்ற அரங்கில் திரையிடப்பட்டது.

இயக்குநர் கெல்லம் மெக்கரே!

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர் களை பரிந்துரைக்கும் குழுவும் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரு ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட இயக்குநர் கெல்லம் மெக்கரேதான் இந்தப் படத்தையும் தயாரித்து, இயக்கி உள்ளார்.

தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூரத் தாக்குதல் களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்ததால், இந்த சினிமாவுக்கு நோ பையர் சோன் என்று மெக்கரே பெயரிட்டுள்ளார்.

படம் தொடங்கியதும், இயக்குநர் மெக்கரே தோன்றி, போர்க் காட்சிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார். பின்னர், காண்போர் கண்களை குளமாக்கி, கண்ணீர் வரவழைக்கும் போர்க்காட்சிகள் வெளியாகின்றன.
உச்சக்கட்ட கொடூரம்!

போர் நடத்தக்கூடாத பகுதி என்று அறிவிக்கப் பட்ட இடங்களிலும், பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும் சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசும் கொடூரக் காட்சிகள், ஊரெங்கும், அப்பாவி மக்கள் உயிர் இழந்து பிணங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி, மருத்துவ மனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடலின் பல பாகங்கள் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்பாவிப் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கும் காட்சி, சிங்கள ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மேலும், பெண் புலிகள் என்ற சந்தேகத்தில், ஏராளமான பெண்களை ஒரு லாரியில் ஏற்றி சிங்கள ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சிங்கள ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடுவதும், அவரிடம் ஏதோ வாக்குமூலம் வாங்கும் காட்சியும், பின்னர் அவர் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடப்பதும் காட்டப்படுகிறது. பெண் புலிகளின் தளபதியாக இருந்த இசைப்பிரியாவை சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியும் இடம் பெற்று உள்ளது.

போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிராதரவாக திறந்த வெளியில் அவதியுறுவது, கொத்துக்குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் அப்புறப்படுத்த முடியாமல் சிதறிக்கிடந்த காட்சிகளும், குண்டு மழை யால் பீதி அடைந்த மக்கள் கைக்குழந்தைகளுடன் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகிய காட்சிகளும் இந்த சினிமாவில் காட்டப்படுகின்றது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தியதும், அதனால், அப்பாவித் தமிழ் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதும் இந்த சினிமாவில் காட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண சினிமா, மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

போர்க்குற்றம்

இந்த சினிமாவில் இடம் பெற்று உள்ள மனதைப் பதை பதைக்கச் செய்யும் காட்சிகள், இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கு மேலும் ஒரு உறுதியான ஆவணமாகவும், இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலுவான சாட்சியங்களாக இருக்கும் என்று இயக்குநர் மெக்கரே தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் இந்த சினிமா திரையிடப்பட உள்ளது.

தமிழ் ஓவியா said...


சுஷ்மா அடித்த பந்து
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
சனி, 23 பிப்ரவரி 2013 15:32
E-mail Print

பி.ஜே.பி. பிரமுகரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவ ராஜ் தங்கள் கட்சி ஆளும் மத்திய பிரதேசத்தின் தன் பக்கத்துக்கே பந்து அடித் துப் (Same Side Goal)பிரச்சினையை உண்டு பண்ணிவிட்டார்.

மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி.யின் சிவராஜ் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. ரெய்சன் என்ற ஊரில் நடைபெற்ற விழாவில் பேசிய சுஷ்மா அம்மையார் இங்கு ஏழைகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை; சுகாதார வசதியும் இல்லை.

மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெருந்தொகை கொடுத் தேன். அப்படியும் முன் னேற்றம் ஏதுமில்லை. சுகா தார அமைச்சரைப் பக்கத் தில் வைத்துக் கொண்டே இப்படிப் பேசினார் - அவர் பாவம் நெளிந்தார்!

இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் லட்சணம்!

தமிழ் ஓவியா said...

பூந்தமல்லி நெடுஞ்சாலையா?

தந்தை பெரியார் மறைந்த நிலையில், உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று முதலமைச்சர் கலைஞர் ஆணை பிறப்பித்தார்.

அவ்வாறே பெயர்ப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், ஏடுகளும், தொலைக் காட்சிகளும் தந்தை பெரியார் பெயரைப் புறந்தள்ளி, பழைய பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றே வெளியிடுகின்றன.

பார்ப்பன ஊடகங்கள்தான் அவ்வாறு செய்கின்றன என்றால், தமிழர்கள் நடத்தும் ஊடகங்களும் அவ்வாறு செய்வது - ஏன்?

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!


சென்னை மாநகரில் பேருந்துகளில் பயணி களுக்கு சில நடத்துநர்கள் அடிக்கடி எச்சரிக்கை செய் கிறார்களாம். நகை பத் திரம், பொருள்கள் பத்திரம் என்று எச்சரிக்கின்றார் களாம்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருக் கிறது, பலே! பலே!!

(குறிப்பு: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பிக் பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்ட தாகச் சொன்னார்களே, மீண்டும் திரும்பி விட்டார் களோ!)

தமிழ் ஓவியா said...


தொகாடியாவுக்குத் தடை


விசுவ இந்துபரிசத்தின் தலைவர் பிரவீண் தொகாடியா ஜம்முவுக்குள் நுழைந்திட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறிச் சென்ற போது விமான நிலையத்திலேயே கைது செய்து மறு விமானத்தின்மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது ஒன்றும் இவர்களுக்குப் புதிதல்ல; பீகாருக்கு ஒருமுறை இவர்கள் சென்றபோது, அன்றைய முதலமைச்சர் லாலுபிரசாத் (யாதவ்) இதுபோலவே திருப்பியனுப்பியுள்ளார்.

இதுபோன்ற அவமானங்கள் இவர்களுக்குப் புதிதும் அல்ல; நாணயமும், ஒழுக்கமும் பெற்றவர் களாக இருந்தால், இந்து வெறியைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்படுவார்களா?

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பொதுமக் களுக்குத் திரிசூலங்களை வழங்குகின்றனர் என்றால், இவர்கள் எவ்வளவுப் பெரிய காட்டு விலங்காண்டிகளாக இருக்கவேண்டும்.

திரிசூலங்களை வழங்குவதோடு மட்டுமல்ல; அதற்கு வெறியூட்டும் விளக்கங்களைப் பொது மக்களுக்கு வழங்கவும் செய்கின்றனர். செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்பு தமிழக முதலமைச் சராக இருந்தபோது திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற (8, 9.2.2003) விசுவ இந்து பரிசத் மாநாட்டிலேயே திரிசூலத்தை வழங்கி இதே பிர வீண் தொகாடியா வெறி பிடித்துப் பேசியதுண்டே!

திரிசூலத்தில் ஒரு சூலம் இஸ்லாமியர்களைக் குத்திக் கிழிக்கும்; இன்னொரு சூலம் கிறித்தவர் களையும் பதம் பார்க்கும். மூன்றாவது முனை மதச் சார்பின்மை பேசுபவர்களின் குடலைச் சரிக்கும் என்று பேசினாரா, இல்லையா?

அந்த உரையின்மீது முதலமைச்சர் ஜெயலலிதா எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அந்த வன்முறை மாநாட்டைத் தொடர்ந்து திராவிடர் கழகம் அல்லவா மாநில மாணவர் கழக மாநாட்டை (2.3.2003) நடத்திக் கண்டனத்தைத் தெரிவித்தது.

சாமியார்களின் அமைப்பான இந்த வி.எச்.பி. யின் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை - கலவரத்தைத் தூண்டக் கூடிய நச்சு மரங்கள்.

2002 இல் குஜராத் கலவரத்தின்போது இந்து வெறித்தனத்தை முசுலிம்களுக்கு எதிராகத் தூண்டியதில் - இந்த வி.எச்.பி. கும்பலுக்கு முக்கியமான பங்குண்டு. இந்த அமைப்பு வெளி யிட்ட துண்டு அறிக்கைகளை அவுட்லுக் ஏடு (6.5.2002) அப்படியே வெளியிட்டு அதன் அப்பட்டமான பாசிசத்தை வெட்ட வெளிக்குக் கொண்டு வந்ததே!

அன்பார்ந்த நண்பர்களே! உங்கள் உயிருக்கு ஆபத்து; நீங்கள் எந்த நேரத்திலும் கொல்லப் படலாம். கிருஷ்ணன், அர்ச்சுனனைப் பார்த்து அறிவுறுத்தியுள்ளார். இந்துக்களுக்கு எதிரான வர்களை ஆயுதம் எடுத்து கொல்லத் தயங்காதே! என்று.

தீவிரவாதிகள் உங்களை எங்கு வேண்டு மானாலும், உங்கள் படுக்கை அறையிலோ, வரவேற்பறையிலோ கூடக் கொல்லுவார்கள். காவல்துறையோ, இராணுவமோ உங்களைக் காப் பாற்றாது. எங்கள் முன்னோர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் ஏ.கே.-47 துப்பாக்கிகளையும், ஆர்.டி.எக்ஸ், ராக்கெட் ஏவுகணையும் வைத் துள்ளனர்.

கோத்ரா என்பது ஒரு டிரெய்லர்தான். இனிமேல் தான் முழு திரைப்படம் வெளிவர இருக்கிறது. முஸ்லிம்கள் நிறைய கோத்ராக்களை நடத்திடத் திட்டமிட்டுள்ளனர். இஸ்லாமிய நாடு அல்லாதவற்றை இஸ்லாமிய நாடுகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விசுவ இந்து பரிசத்துக்கு வழங்கும் 50 சதவிகித வரிச் சலுகை யைப் பயன்படுத்தி, அதற்குத் தாராளமாக நன் கொடைகளை வழங்குங்கள் என்று இப்படி வெளிப்படையாக நச்சு நெருப்பை உமிழக் கூடியவர்கள்தான் இந்த வி.எச்.பி. அமைப்பும், அதன் தலைவர்களும்.

இப்படிப்பட்ட ஒரு பேர்வழியை முசுலிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நுழையவிட்டால் விளைவு என்னவாகும்? இரத்த ஆறு ஓடாதா? மனித மண்டைகள் வானத்தில் பறக்காதா?

அதனால்தான் தொகாடியாவை வெளியேற்றி யுள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசு - வரவேற்கத்தக்க செயல்பாடு!

தமிழ் ஓவியா said...


இலங்கை இறுதிக்கட்டப் போரில் நடந்த கொடூர கொலைகள்: உயிர் தப்பிய தமிழ் பெண் பரபரப்பு புகார்


லண்டன், பிப்.23-இலங்கையில் இறுதிக்கட்ட போரில் நடந்த கொடு மைகள் குறித்த புதிய ஆவணப்படங் களை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவி தமிழர்கள் ஆயி ரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் மனித உரிமைகள் அப்பட் டமாக மீறப்பட்டன. இதுதொடர் பான ஆதாரங்களை லண்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி ஏற்கெனவே வெளியிட்டது. இது உலக நாடுகளின் கவனத்தை இலங் கைக்கு எதிராக திருப்பியது. இதையடுத்து அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. தமிழக மக்கள் கொடுத்த நெருக்கடியால் மத்திய அரசும் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. போரில் சிங்கள ராணு வம் நடத்திய துப்பாக்கி சண்டையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாக ரன் குண்டு பாய்ந்து பலியானதாக இலங்கை அரசு முன்பு தெரிவித்து இருந்தது. ஆனால் பிரபாகரனை சிங்கள ராணுவம் முகாமில் பிடித்து வைத்து சுட்டுக்கொன்றதாக திடுக் கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் பிரபாகரன் மகன் 12 வயது குழந்தையான பாலச்சந்திர னையும் இலங்கை ராணுவம் முகா மில் வைத்து சுட்டுக்கொன்ற தக வலை சேனல்-4 தொலைக்காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. தற்போது சேனல்-4 புதிய ஆவ ணப்படம் ஒன்றை வெளியிட்டுள் ளது. நோ பயர் சோன்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவண படம் 90 நிமிடம் ஓடுகிறது. இலங்கை இறுதிகட்ட போரின்போது நோ பயர் சோன்' என்று அறிவிக்கப்பட் டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக்கு தல் நடத்தியது என்பது பற்றிய முழு விபரங்களும், அதற்கான வீடியோ, ஒளிப்படங்கள் ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. சேனல்-4 வெளி யிட்ட புதிய ஆவணப்படத்தில் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் காட்சிகள் நெஞ்சை உருக் குவதாக உள்ளது. ஆவண படத்தில் இலங்கை தமிழ்ப்பெண் வாணி விஜி கூறி இருப்பதாவது:- இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது நானும் ஏராளமான அப்பாவி தமிழர்களும் இடம்பெயர்ந்து உயிர் தப்பிக்க பாலத்தின் வழியாக கடந்து சென்றோம். அப்போது ஒரு மூதாட்டி இலங்கை அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டார். அந்த மூதாட்டியை பார்த்து சிரித்த அதிகாரி, பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரை குடி' என்று ஏளனமாக கூறினார். பாலத் தின் அடியில் நான் பார்த்தபோது போரில் கொல்லப்பட்ட தமிழர் களின் பிணங்கள் மிதந்தன. வேறு வழியின்றி பிணங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு அந்த தண்ணீரை எடுத்து குடித்தோம். - இவ்வாறு அவர் கூறினார். இறுதிக்கட்டப் போரில் அய்.நா. ஊழியர் பீட்டர் மெக்கே உயிர் தப்பி னார். அவர் சேனல்-4' பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அது ஒரு மாலை நேரம். 4 மணி இருக்கும். கடுமையான வெடிகுண் டுத் தாக்குதலில் இருந்து நானும், ஏராளமான மக்களும் உயிர் தப்பித் தோம். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து தெற்கு பகுதியில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாங்கள் மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகளுக்கிடையில் ஒளிந்து இருந் தோம். எங்கள் மீதும் எல்லா திசை களில் இருந்தும் தாக்குதல் நடத்தப் பட்டது. கண் விழித்து பார்த்தபோது என் மீது ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. அவரது உடலை வெடி குண்டு துகள்கள் கிழித்திருந்தன. அந்த பெண் உயிருக்கு போராடினார். காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

மறுநாள் காலையில் அந்த இடம் பேரழிவு தளமாக காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் பிணங்கள். அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக ராணு வம் அறிவித்தது. அங்கு தஞ்சம் புகுந்த மக்களை ராணுவம் ஏன் குண்டு வீசி கொல்ல வேண்டும்? பொதுமக்கள் சாவதை ராணுவம் பொருட்படுத்த வில்லை. திட்டமிட்டே அப்பாவி களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப் பட்டது. அந்த இடத்தில் 5 பேர் இறந்து கிடந்தனர். அவர்களுடன் ஒரு சிறுவனும் பிணமாக கிடந்தான். அந்த சிறுவன்தான் பிரபாகரன் மகன் பாலசந்திரன். அவன் பாதுகாவலர் களுடன் இறந்து கிடந்தான். அவன் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவன் 2 அடி நெருக்கத்தில் சுடப்பட்டு இருக்கிறான். இது கொலைதான். சிறிதளவும் அதில் சந்தேகம் இல்லை. இது ஒரு போர்க் குற்றம். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். - இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


விடுதலை' செய்தி எதிரொலி

தேவையான பணிகளுக்கு ஆறு மாதங்களில் நிதி ஒதுக்கப்படும் தெற்கு ரயில்வே இணை இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு


10.01.2013 அன்று விடுதலை' (சென்னைப் பதிப்பு - வெளியூர் 11.01.2013 இல் தெற்கு ரயில் வேயின் கவனத்திற்கு...' என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப் பட்டிருந்தது. திருச்செந்தூர் தொடர்வண்டி நிலை யத்தில் பயணிகளுக்காக நிறைவேற்ற வேண்டிய அவசர தேவைகளைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நாளிதழின் படிகளும் மனுக்களும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் மதுரை ரயில்வே கோட்ட மேலாள ருக்கும் அனுப்பப்பட்டன.

இந்தச் செய்தி நெல்லை - தூத் துக்குடி மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்த கட்டத்தில், 22.01.2013 அன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் தனி ரயிலில் பகல் 12.30 மணிக்கு திருச்செந்தூருக்கு வந்தார். விடுதலை'யில் செய்தி வெளிவந்த தருணத்தில் ரயில்வே கோட்ட மேலா ளரின் வருகை திருச்செந்தூர் மக்களை வியப்படைய வைத்தது.

இந்த வருகையின் நோக்கம் என்ன என்று ரயில்வே கோட்ட மேலாளரின் தனிச் செயலரிடம் விசாரித்தபொழுது சைட் இன்ஸ்பெக்ஷன்' என்றார் அவர். அப்படியானால் இருப்புப்பாதை ஆய்வா என்று ரயில்வே உயரதிகாரி ஒருவரிடம் வினவிய பொழுது, இல்லை' என்ற பதிலே வந்தது. எனவே, தொடர் வண்டி நிலைய ஆய்வு' என்று இதை நாம் கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் திருச்செந்தூர் ரயில் நிலையம் வந்த பொழுது, பயணிகளின் வசதிக் காக பின்வரும் கோரிக்கைகளை திராவிடர் கழகம் அவரிடம் வழங்கியது.

1. திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்திலேயே தொடர் வண்டி களுக்கு தண்ணீர் ஏற்றும் வசதியை ஏற்படுத்துதல்.

2. திருச்செந்தூரில் பகல் வேளை யில் நிறுத்தப்பட்டிருக்கின்ற செந்தூர் விரைவு வண்டியை நிறுத்த நான்காவது நடை மேடையை அமைத்தல்

3. திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்போர் அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை அமைத் தல்.

4. திருச்செந்தூரிலிருந்து நாகர் கோவில்வரை அல்லது திருவனந்தபுரம் வரை தொடர் வண்டி இயக்குதல்.

5. திருச்செந்தூர் - சென்னை இடையே கார்டு லைனில் பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவையைத் தொடங்குதல்.

6. திருச்செந்தூரிலிருந்து திருநெல் வேலி செல்லும் பாதையிலுள்ள தொடர் வண்டி நிலையங்களில் பாதுகாப்புக்கு காவல்துறையினரை நியமித்தல்.

7. திருச்செந்தூருக்கும் திருநெல் வேலிக்கும் இடையிலுள்ள காயல்பட் டினம், குரும்பூர் ஆகிய தொடர்வண்டி நிலையங்களில் நடைமேடையின் நீளத்தை அதிகரித்தல்.

8. பாளையங்கோட்டை தொடர் வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கக் கூடுதல் பணியாளர் ஒருவரை நியமித்தல்.

9. திருச்செந்தூரில் பயணச்சீட்டு வழங்கக் கூடுதல் பணியாளர்களை நியமித்தல்.

10. செந்தூர் விரைவு வண்டி உள்பட உள்ள விரைவு மற்றும் பயணியர் வண்டியில் பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறாமல் தடுத்தல்.

மேற்கண்ட மனுக்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் அனுப்பப்பட்டன. இதற்குப்பிறகு தெற்கு ரயில்வே தலைமை அலுவலகக் கட்டடத்தில் இயங்கும் இணை இயக்குநர் அலு வலகத்தைத் தொடர்பு கொண்டோம். அங்கே கிடைத்த பதில், மதுரை கோட்ட மேலாளர் இவற்றை எங்களுக்கு அனுப்புவார். நாங்கள் பொது மேலாள ருக்கு அனுப்புவோம். அவர் ரயில்வே வாரியத்திற்கு அனுப்புவார். அங்கிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப் படும். இத்தனை பணிகளும் முடிய ஆறு மாதங்கள் ஆகிவிடும். பொதுநலன் கருதி நீங்கள் மேற் கொள்கின்ற முயற்சிகளை நாங்கள் பாராட்டுகின்றோம். உங்கள் முயற்சி களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.''

இந்தப் பதிலை நாம் வரவேற்றோம். இதை அறிந்த சமூகச் சிந்தனையாளர் ஒருவர் சொன்னார்; இந்தியாவில் ஆறு மாதங்கள் ஆகும் என்கின்றனர். வெளி நாட்டில் என்றால், இப்படிப்பட்ட பணி களைச் சுட்டிக் காட்டியதற்கு உடனேயே நிதி ஒதுக்கீடு செய்திருப்பார்கள்.''

எப்படியிருந்தாலும் சரி, விடுதலை' செய்தியின் எதிரொலியாக இத்தனை பணிகளும் நடைபெறும் என்பது நமக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், இங்கே ஒரு செய்தி மட்டும் நம்மை நெருடுகின்றது. திருச்செந் தூரில் பயணச்சீட்டு வழங்க கூடுதல் நபர்கள் நியமிப்பதற்கு தேவையான நிதியும் ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்றால், அதற்குள் இப்பொழுது பணியாற்றுகின் றவர்களின் நிலைமை என்னவாகும்?

திருச்செந்தூர் தொடர் வண்டி நிலை யத்தில் முன் அனுமதி பயணச்சீட்டு வழங்க ஒருவர் இருக்கின்றார். முன் அனுமதியில்லாத பயணச்சீட்டு வழங்க இரண்டு பெண்கள் இருக்கின்றார்கள். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்ற திருச்செந்தூர் தொடர் வண்டி நிலையத்தில் ஒருவர் மட்டும் பயணச்சீட்டு வழங்க இருப்பது பயணி களையே எரிச்சல் கொள்ள வைக் கின்றது. பயணிகள் கூட்டம் மிக அதிக மாக இருக்கின்ற நாள்களில் இரண்டு பெண்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து பணியாற்றுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழல் திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்தில் நிலவுவ தால் பயணச்சீட்டு வழங்க இருக்கின்ற அனைவருக்குமே வார விடுமுறைகூட கிடைக்காத நிலைமை காணப்படு கின்றது. இத்தகைய ஒரு பணிக்குக்கூட பணியாளர்களை நியமிக்கவும் அவர் களுக்குரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வும் ரயில்வே கோட்ட மேலாளருக்கு உரிமை இல்லையென்றால், பொதுமக் களும் அல்லவா அல்லல்படுகின்றார் கள்.

இந்த நிலை தெற்கு ரயில்வேயில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது எனலாம். ரயில்வே வாரியமும் ரயில்வே அமைச்சரும் இதற்கு உடனே தீர்வு காணவேண்டும்.

- அமலா, திருச்செந்தூர்.

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம். (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


முட்டை சரியான உணவா?


ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் முட்டையில் உள்ளன. முக்கியமாக முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளன.

முட்டையில் தைராய்டு ஹார் மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் உள்ளது.

முட்டையில் கெட்ட கொலஸ்ட் ராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளிசரைடு அளவும் சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.

இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும் செறிவில்லாத கொழுப் புகளும் முட்டையில் உள்ளன.

எடைக் குறைவான குழந்தை களுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடு வதோடு உடல் எடை அதிகரிக்கும்.

இதய நோயினர், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, முதுமை வயதினர், இரத்தக் கொழுப்பு நோயினர் போன்றோர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெண்கருவை (தினமும் இரண்டு) மட்டும் சாப்பிடலாம்.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். முட் டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண் பார்வையைத் தெளிவாக்கும்.

முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து, எலும்பு வளர்ச் சிக்கு பங்காற்றுகிறது.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது. நீரிழிவு நோயினர் மருத்துவர்களின் ஆலோசனையின் படி வாரம் ஒரிரு முட்டை மட்டுமே சாப்பிடலாம்.

தமிழ் ஓவியா said...


திரு.வி.க. பற்றி பெரியார்


1. வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் தான் சென்னை மாகாணச் சங்கத்திலிருந்த போது வேண்டும் என்றார்.

2. பிறகு காஞ்சி அக்ராசனப் பிரசங்கத்தில் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் காங்கிரஸில் தான் முட்டிக்கொள்ள வேண்டுமென் கிறார்.

3. அக்ராசனப் பீடத்தில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை மகாநாட்டில் அனுமதிப்பது ஒழுங்குக்கு விரோத மானது என்கிறார்.

4. நவசக்தி பத்திரிகையில், சுயராஜ்யக் கட்சியை ஏற்றுக் கொள்ளாதவர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்பதற்குப் பொருளேயில்லை என்கிறார்.

5. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து தான் எங்கும் பேசவேயில்லை என்கிறார்.

6. பிறகு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் நன்மையு மிருக்கிறது; தீமையுமிருக்கிறது என்கிறார்.

7. தற்கால நிலைக்கு எனக் கேட்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருந்தால் நியாயமா? என்கிறார்.

8. பிறகு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகக் கேட்ட வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை எப்படி உண்மையென்று நினைத்துக் கொள்ளலாம்? என்கிறார்.

9. பின்பு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் தமிழ் நாடெங்கும் ஒரு வருஷத்திற்குப் பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்கிறார். (இது யாரைக் கெடுப்பதற்காகச் சொன்னேன் என்று நாளைக்குச் சொல்லுவாரோ தெரியவில்லை)

ஆகிய ஒன்பது சக்திகளும் நமது முதலியாருக்கு எப்படி படிப்படியாய் உண்டாகி வந்திருக்கின்ற னவென்பதை நவசக்தி அன்பர்கள் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை சக்திகள் தொக்கி இருக்கின்றனவோ சிறீமான் முதலியாருக்கும் கூடத் தெரியாது என்றே நினைக்கிறோம்.

தமிழ் ஓவியா said...


பிராமணர்கள் சூழ்ச்சி


ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் தன்னை அறியா மெய்யுரைகள்

ஸ்ரீமான் ளு. சத்தியமூர்த்தி அவர்களின் ராஜீய வாதத்தைப் பற்றி நாம் அநேக விஷயங்களில் மாறான அபிப்பிராயம் கொண்டிருந்தாலும், அவருக்கு ஆவேசம் வரும் காலங்களில் தன்னை அறியாமலே ராஜ தந்திரத்தைக் கையாளாமல் உண்மையைக் கொட்டிவிடுகிறார் என்கிற சந்தோஷம் நமக்கு அடிக்கடி ஏற்படுதுண்டு. சமீபகாலத்திற்குள் இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு உண்மையைத் தாராளமாய் வெளியிட்டிருக்கிறார்.

அவற்றில் ஒன்று மிகவும் முக்கியமானது. இது பிராமணரல்லாத பொது ஜனங்கள் நன்றாய் அறிய வேண்டிய விஷயம். அதாவது, காங்கிரஸ் தினம் என்று டிசம்பர் 26-ஆம் தேதி சென்னை சவுந்தர்ய மஹாலில் ஸ்ரீமான் யூ.ராம ராவ் அக்ராசனத்தின் கீழ் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பிராமணரல்லாதார் மகா நாட்டைப்பற்றி பேசுகையில் ஒரு பெரிய ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார்.

அது வருமாறு:-

ஸ்ரீமான் யாதவர் இங்கு வந்து வகுப்புத் துவேஷத்தை மூட்டப் பார்த் தார். சட்ட மெம்பர் (ஸர். ஊ.ஞ. ராமசாமி அய்யர்) தாம் பிராமணரென்று பயந்து சட்டப்பிரகாரம் கவனிக்காது விட்டு விட்டார். இவருக்குத் தைரியமில்லாவிடில் தம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஒரு பிராமணரல்லாதாரைக் கொண்டு ஏன் தக்கது செய்திருக்கக் கூடாது.

(இது 27.12.25 சுதேசமித்திரன் அனுபந்தம் 7-வது பக்கம் 4-வது கலம் 24ஆவது முதல் 32ஆவது வரி வரையில்) என்று பேசியிருக்கிறார். இவ்வுரைகளின் மூலம் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் பிராமணர்கள் தங்கள் அதிகாரப் பதவியை எப்படி உபயோ கப்படுத்திக் கொள்கிறார்கள் என் பதையும், தாங்களாகச் செய்யப் பயப்படுகிற சந்தர்ப்பங்களில் என்ன விதமான வழியைக் கையாளுகிறார் கள் என்கிற விஷயத்தையும், பகி ரங்கமாய் எடுத்துக் காட்டிவிட்டார்.

இது கல்பாத்தி விஷயத்தில் தங்கள் அதிகாரம் எப்படி உபயோகப்படுத்தப் பட்டது என்பதும், தாங்கள் கொஞ் சம் பயப்பட வேண்டிய சந்தர்ப்ப மாகிய காஞ்சீபுரம் மகாநாட்டில் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வகுப்புவாரித் தீர்மான விஷயத்தில் ஒரு பிராமணரல்லாதாரைக் கொண்டு அத்தீர்மானம் ஒழுங் குக்கு விரோதமானது என்று தள்ளும்படி செய்ததும், எப்படி தக்கது செய்யப்பட்டது என்பதும் வாசகர்கள் உணர்வதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று நினைக்கிறோம்.

இந்த இரண்டு விஷயத்திலும் இருவகையில் தாங்கள் வெற்றி அடைந்ததை மனதில் வைத்துக்கொண்டே வெற்றி முரசு அடிக்கும் ஆனந்தத்தில் உண்மையைக் கக்கிவிட்டார். இதைப்பற்றி பிராமணரல்லாதார் சார்பாக நாம் நன்றி செலுத்துகிறோம். ஆனாலும், சட்டமெம்பரை யும், காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவரையும் வெளியாக்கி சந்தியில் இழுத்து விட்டுவிட்டதினால் அவர்களின் மனக்கசப்புக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஆளாகாமல் இருக்க முடியாதே என்பதற்கு நாம் மிகவும் வருந்துகிறோம்.

தவிர மதுவிலக்கு விஷயத்தில் பிராமணரல்லாத மந்திரிகள் என்ன சாதித்து விட்டார்கள் என்று அடிக்கடி பிராமணப் பத்திரிகைகளான இந்து, சுதேசமித் திரன், சுயராஜ்யா முதலியவை பாமர ஜனங்களுக்குப் பிராமணரல்லாதார் கட்சியின் பேரில் வெறுப்புண்டாகும்படி தங்கள் பத்திரிகையின் மூலம் விஷமப் பிரசாரம் செய்வது யாவரும் அறிந்த விஷயம்.

போதாக் குறைக்குக் காஞ்சிபுரம் மகாநாட்டிற்குப் பிறகு என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியாரும் மதுவிலக்கு என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டு ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியாரும் புறப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீமான் ஆச்சாரி யாருக்குப் பதில் சொல்லும் வகையில் மதுவிலக்கைப்பற்றி ஸ்ரீமான் ளு. சத்தியமூர்த்தி பேசுகையில் நாம் சுயராஜ்யம் பெற்றாலொழிய குடியை ஒழிக்க சட்டம் ஏற்படுத்த முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் இப்பத்திரிகைகள் பிராமணரல்லாத மந்திரிகள் பேரில் குறைகூறும் கூற்றுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை வாசகர்களே அறிந்து கொள்ளலாம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 10.01.1926

தமிழ் ஓவியா said...


தமிழ்மாகாண கோ-வம்சத்தினரின் (கோவில் பண்டாரங்கள்) இரண்டாவது மகாநாடு


நாளது தை மாதம் 11, 12 (1926 ஜனவரி 24, 25) தேதி ஞாயிறு, திங்கள் கிழமைகளில் கொடுமுடி மகுடேஸ்வர சுவாமி கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள சத்திரத்தில் காரமடை ஸ்ரீமான் சூ. கருப்பண்ணன் பண்டாரம் அவர்கள் தலைமையின் கீழ் தமிழ் மாகாண கோ - வம்சத்தினரின் 2-வது மகாநாடு நடை பெறும். அதே சந்தர்ப்பங்களில் ஸ்ரீமதி லட்சுமி அம்மாள் அக்ராசனத்தின் கீழ் ஸ்திரீகள் மகாநாடும், ஸ்ரீ கணபதி அக்ராசனத்தின் கீழ் மாணவர்கள் மகாநாடும் நடைபெறும்.

பலவிடங்களிலிருந்தும் அநேக பிரபலஸ்தர்கள் விஜயம் செய்வதாய் வாக்களித்திருக்கிறார்கள். ஆதலால் எல்லா குலாபிமானிகளும், இதர சமூக கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டப்படுகிறார்கள். நமது தாலுகாவில் உள்ள சைவப் பண்டாரங்களின் முக்கிய கூட்டமிது வாகையால், இத்தாலுகா வேளாள சமூகத்தார் அனைவரும் விஜயம் செய்து அவர்கள் முன்னேற்றத் துக்கான காரியங்களை அறிவுறுத்தி அச்சமூகம் முன்னேற்றமடைய உதவி செய்ய வேண்டியது முக்கியமான கடமை.

ஏனெனில், அவர்கள்தான் பெரும்பாலும் நமது கிராம தேவதைகள் முதலிய கோவில்களில் பூஜை செய்பவர்களாகவும், தவசிப் பிள்ளைகளாகவும், புஷ்பம் தொடுப்பவர்களாகவுமிருப்பதால் அவசியம் அவர்கள் முன்னேற்றத்தையும் ஒழுக்க வழக்கங்களையும் சீர்திருத்தம் செய்ய வேண்டியது குடிமக்கள் கடமையாகும்.

- குடிஅரசு - பத்திராதிபர் குறிப்பு - 10.01.1926

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான தீர்மானம் தமிழக எம்.பி.க்கள் மன்மோகனிடம் வலியுறுத்தல்


புதுடெல்லி, பிப். 23- அய்.நா. சபையில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதில் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இலங்கையில் நடந்த போரின்போது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகர னின் மகன் பாலச்சந்திரனை ராணுவத்தி னர் பிணைக்கைதியாக பிடித்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்காக, இலங்கை அரசுக்கு தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று சந்தித்து பேசினர். கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.

போர் குற்றங் களுக்காக இலங்கை அரசுக்கு எதிராக அய்.நா.சபையில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் போருக்கு பின் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை அந்நாடு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற் காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் ஜாதி ஒழிப்புச் சிந்தனைகள்


- பா.கதிரவன், காஞ்சிபுரம்

மனிதன் கூட்டமாக வாழ்ந்த காலங்களிலும் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையிலிருந்த காலங்களிலும் தமிழகத்திலும் பிறஇந்தியப் பகுதிகளிலும் ஜாதிகள் இருந்ததாகச் சான்றுகள் இல்லை.

வந்தவர்களையெல்லாம் வாஞ்சை யுடன் வாழவைக்கும் மனப் பான்மை கொண்டவர்களாக, யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற பரந்தமனப்பான்மை கொண்டவர் களாக, வாழ்ந்து வந்தனர், பண்டைத் தமிழர் உயர்ந்த நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சொந்தக்காரர்கள்,.

வந்தேறிகளான ஆரியர்களின் வஞ்சனையான வார்த்தைகளை நம்பி, அவர்களின் வண்ணமிகு வஞ்சிகளின் வனப்பில் வீழ்ந்து (மன்னர்கள்) அவர்கள் தந்த நச்சான வர்ணாசிரமக் கோட்பாடுகளைச் சொந்த மக்களிடையே புகுத்தி, சமூக ஏற்றத்தாழ்வை உண்டாக்கிவிட்டனர்.

ஒருதாய் மக்களாக வாழ்ந்தவர் களிடையே ஒற்றுமைகுலைவை உண்டாக்கினர். ஜாதிகளையும் தீண்டாமைக்கொடுமைகளையும் புகுத்தினர்.

வந்தவர்களின் வஞ்சக ஏற்பாடு களை வெள்ளந்திகளாக இருந்த நம் நாட்டுமக்கள் ஏற்றுக்கொண்டதன் பாதிப்புகள்தான் ஜாதி ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமை கள் முதலியவையாகும்.

மதம் பரப்பவந்த கிறித்தவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள், இஸ்லாமி யர்களின் வலிமைக்கும் பின்னர் சகோதரத்துவத்திற்கும் இஸ்லாமி யத்தை ஏற்றுக்கொண்டமக்கள், அவர்களுடன் இன்றுவரை சமூக ஏற்றத்தாழ்வில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். கிறித்தவர்களால், இஸ்லாமியர்களால் இந்தியநாட்டில் சமூக ஏற்றத்தாழ்வு விதைக்கப்பட வில்லை. ஆனால், இந்து மதத்தால் தான் சமூக ஏற்றத்தாழ்வு விதைக் கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஏற்றத்தாழ்வுகள்:

அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடு களில் கருப்பர் - வெள்ளையர் என்ற நிறப்பாகுபாடுகள் இருந்தன. இவை வெளிப்படையாகத் தெரிவன. ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா முதலிய சமூகப் புரட்சியாளர்களால், மாற்றங்கள் உண்டாகி, இன்றைக்கு கருப்பரினத்தில் பிறந்த பாரக்ஒபாமா' அமெரிக்க அதிபராகும் நிலைக்கு மனித சமத்துவம் வளர்ந்துள்ளது.

ஏழை - பணக்காரன் என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு பல நாடுகளில் உள்ளது. அவை நிரந்தர மானவை அல்ல. மாறக்கூடியது; மாற்றக்கூடியது. உழைத்தால் உயர்த்திக்கொள்ள முடியும்.

ஜாதி ஏற்றத்தாழ்வு என்பது இங்கு பிறப்பின் அடிப்படையில் உண்டாக் கப்பட்டுள்ளது. எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த ஜாதிதான், இருக்கும் வரைக்கும் நிலைக்கும்.இறந்தாலும் சுடுகாட்டிலும் ஜாதி அவலங்கள் தொடரும்.இந்தியக் குடிமகன் ஒருவன், இந்தியாவின் முதல் குடி மகன் என்ற ஜனாதிபதி பதவியைக் கூட வகிக்கமுடியும். ஆனால், கோவில் அர்ச்சகராக அனைவருக்கும் உரிமை இல்லை.காரணம் ஜாதிதான். இதுதான் இன்றைக்கும் இந்தியாவில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வு என்னும் இழிநிலையாகும்.

ஜாதிகள் எப்படித் தோன்றின?

இந்தியாவில் ஜாதி மிகத் தொன்மையான நிறுவனம்; அதை அறிவதற்கு நம்பத்தகுந்த சான் றுகளோ, எழுதப்பட்ட பதிவே டுகளோ இல்லை. வரலாற்றை எழுதி வைப்பது மடமை என்ற எண்ணம் கொண்ட இந்துக்கள் தொடர்புடைய வகையில், ஜாதி தொடர்பான ஆய்வு மிகவும் கடினமானது.

தமிழர்கள் வாழ்வில் ஜாதிகள் ஆதியிலிருந்து இருப்பவை அல்ல, செய்த தொழிலை வைத்து அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர் என்று இருந்ததாகவும், மக்கள் விரும்பினால் எத்தொழிலையும் மேற்கொள்ள வாய்ப்பிருந்ததாகவும் இலக்கியங்கள்வழி அறியமுடிகிறது. ஆனால் ஆரியர்கள் வருகைக்குப் பிறகே ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

கடவுளின் பெயரால் வர்ணம்:

இந்து மதத்தின் கோட்பாடே வர்ணாசிரமதர்மம்தான். பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நால்வர்ணப்பாகுபாடு ' ஆரியர்களால் சொல்லப்பட்டது.

பகவான் கண்ணன், 'சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்' என்று பகவத் கீதையில் கூறியுள்ளதாகக் காட்டப் படுகிறது. '' நான்கு வர்ணத்தை நானே

உருவாக்கினேன் ; நானே நினைத் தாலும் அதனை மாற்ற முடியாது'' என்று பகவான் கண்ணனே கூறியுள் ளதாகக் காட்டி, வர்ணாசிரமத்தை

கடவுளின் பெயரால் நிலைக்கச் செய்யும் சூழ்ச்சியைச் செய்துள்ளனர்.

மனுதர்ம சாஸ்திரம்:

மனு என்பவரால் தொகுத்தளிக் கப்பட்டதாகக் கூறப்படும் மனுதர்ம சாஸ்திரம், ஜாதி முறைகள் பற்றிய பல செய்திகளைக் காட்டுகிறது.

அவரவர் வர்ணத்திற்கான தொழில்களையே செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது. மாறிச் செய்பவர்களுக்கு தண்டனைகள் கூறப்பட்டுள்ளன. அவையும் ஒவ் வொரு வர்ணத்தினருக்கும் ஒவ்வொரு மாதிரியான பாகுபாட்டுடன் தண்டனைகள் கூறப்பட்டுள்ளன.

'வர்ணதர்மம் காக்கப்படவேண்டும் என்கிறது மனுதர்மம். ஒரு சமூ கத்தைக் கோபுரத்தின் உச்சியில் ஏற்ற, இன்னொரு சமூக மக்களை, விலங் குகளைவிட கேவலமான நிலைக்கு, தன் எழுத்தாணியாலேயே தாழ்த்தி யுள்ளார் மனு.

நால்வர்ணப் பாகுபாடு: பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன்; தோளிலி ருந்து பிறந்தவன் ஷத்திரியன்; தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன்; காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்று நால்வர்ணப் பிறப்பு பற்றி மனுதர்மம் கூறுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்பதே தமிழர் நெறி.

- தொடரும்

தமிழ் ஓவியா said...


காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் கலைஞர் அறிக்கை


சென்னை, பிப். 23- காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண தி.மு.க. ஆட்சியில் எடுக்கப் பட்ட முயற்சிகள் என்ன என் பது குறித்து கலைஞர் கூறியுள் ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:

முதல்அமைச்சர் ஜெயல லிதா நேற்றைய தினம் அளித்த பேட்டியையொட்டி நான் சில விளக்கங்களை அளிக்க வேண் டியவனாக இருக்கிறேன். முத லில் அவர் 1991ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப் பேற்றதாகவும், அதற்கடுத்த நாளான 25.6.1991 அன்று நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது என் றும் கூறியிருக்கிறார்.

இதிலி ருந்தே, நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு ஜெயலலிதா ஆட் சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பிருந்த தி.மு.க. ஆட்சியின ரின் இடைவிடா முயற்சியி னால்தான் வெளிவந்தது என் பதை ஜெயலலிதாவே ஏற்றுக் கொள்கிறார் என்றுதானே பொருள்.

5.2.2007 அன்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாள் 6.2.2007 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கை யில், கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால்தான் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமி ழகத்திற்குப் பாதகமாக வந் துள்ளது; இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மைனாரிட்டி தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றே சொன்னார்.

முதல்அமைச்சர் ஜெயலலிதா, 20ஆம் தேதி அளித்த பேட்டி யில் எனது உத்தரவின்படி திரும் பத் திரும்ப உச்சநீதிமன்றத்தை அணுகி, பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்து, அதனுடைய விளைவாகத்தான் காவிரி ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. இதற்கு முழுக் காரணம் எனது முயற்சிகளும், எனது அரசின் முயற்சிகளும்தான் என்று கூறி யிருக்கிறார்.

காவிரி ஒப்பந்தம் 7.8.1998 அன்று தான் தி.மு.க. ஆட்சியி லேதான் பிரதமர் வாஜ்பாய் முன்னிலையிலே டெல்லியில் ஒன்பது மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்று, மத்திய அமைச்சர்களும், நான்கு மாநில முதல்வர்களும் கலந்து பேசி அதன் பின்னர்தான் காவிரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதன் முதலாக கர்நாடக அரசு நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை ஏற்றுக் கொள்வ தாக அறிவித்தது.

அந்தக் கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள்தான் காவிரி நதிநீர் ஆணை யம், காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவற்றை அமைப்பது என்பதாகும். அதன்படி 11.8.1998 அன்று காவிரி நதிநீர் ஆணை யமும், கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன.

பாதியிலேயே வெளிநடப்பு

காவிரி ஆணையம் அமைக் கப்பட்ட பிறகு, 2.4.2002 அன்று சட்டப் பேரவையில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஜெய லலிதா கூறும்போது, செயல் படாத ஆணையம் காவிரி ஆணையம். அந்த ஆணை யத்தை நாங்கள் ஏற்காமல், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

மத்திய அரசு சொன்னதை ஏற்றுக் கொண்டு காவிரி பிரச்சினையில் துரோ கம் விளைவித்தது தி.மு.க. அரசுதான் என்று வசை பாடி னார். காவிரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம், செயல்படாத ஆணையம் என் றெல்லாம் குறிப்பிட்ட ஜெய லலிதா, அதே 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று டெல்லியிலே நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்திலே அவரே கலந்து கொண்டார்.

தமிழ் ஓவியா said...

ஆனால் கூட்டம் நிறைவடை யும் வரை கலந்து கொள்ளா மல், பாதியிலேயே வெளிநடப் புச் செய்வதாகக் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டார். மீண்டும் 29.11.2002 அன்று பிரதமர் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் கூட்டப் பட்டிருந்தது. கடைசி நிமிடம் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறிய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, பிறகு தன் பயணத் தையே ரத்து செய்து விட்டார்.

காவிரி ஆணையக் கூட் டத்தை கடந்த ஒன்பதாண்டு காலமாக கூட்டவே மத்திய அரசு விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். கடந்த ஒன்ப தாண்டுகளில் கூட்டப்பட வில்லை என்றாலும், 7.10.1998 முதல் 6.9.2001 வரையில் கண் காணிப்புக்குழு ஒன்பது முறை கள் கூட்டப்பட்டிருக்கின்றன.

21.6.2002 அன்று அ.தி.மு.க. அரசின் சார்பில் விடுத்த அறிக் கையில், காவிரி நதிநீர் ஆணை யம் 28.10.1998, 14.7.2000 மற்றும் 10.10.2001 ஆகிய நாட்களில் மூன்று முறை மட்டுமே கூடி யது. காவிரி கண்காணிப்புக்குழு 12 முறை கூடியது என்று சொல் லப்பட்டுள்ளது.

சாகும் வரை உண்ணாவிரதம்

அ.தி.மு.க. ஆட்சியில் 21.6.2002 அன்று கூடிய அமைச் சரவைக் கூட்டத்தில் காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டங் களில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்து அறிவித்து விட்டார்கள். நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைச் செயல்படுத்த மத்திய அரசு எந்த விதமான ஏற்பாட்டையும் செய்யவில்லை என்றும், அதற் காக 1993ஆம் ஆண்டு சாகும் வரை, தான் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அப்போது மத்திய அமைச்சர் சுக்லா அவர் கள் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக் கால ஆணையைச் செயல்படுத்த மத்திய அரசு தேவையான குழுக் களை அமைக்கும் என்று உத்தர வாதம் அளித்த பிறகுதான் உண்ணவிரதத்தைக் கை விட்ட தாகவும் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது 9.6.1992 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சுக்லா அவர்கள் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடை முறைப்படுத் துவது பற்றி தமிழக முதல் அமைச்சருக்கு ஒப்புதல் வேண்டி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்து 6 மாதங்கள் கழித்துத் தான், அதாவது 14.12.1992 அன்று ஜெயலலிதா வரைவுப் பதிலிலே கையெழுத்திடுகிறார். அந்தக் கடிதம் தட்டச்சு செய் யப்பட்டு முதலமைச்சர் கையெ ழுத்திட்ட தேதி என்ன தெரியுமா? 30.3.1993.

18.7.1993 அன்று குழுவினை ஏன் அமைக்கவில்லை என்று கேட்டு உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப் போவதாக ஜெய லலிதா அறிவித்தார். கர்நாடக முதல்வருக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க பிரதமர் கட்டளையிட்டால் தான் உண் ணாவிரதத்தை நிறுத்துவேன் என்றார்.ஆனால் இவரைச் சமாதானப்படுத்த வந்த மத்திய அமைச்சர் சுக்லா, அதிகாரி களைக் கொண்டு இரண்டு குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து, அதுவே வெற்றி, வெற்றி என்று கூறி உண்ணாவிரதத்தை முடித் துக் கொண்டார்.இவ்வாறு அறிக்கையில் கலைஞர் கூறி யுள்ளார்.

தமிழ் ஓவியா said...


தினமணி வைத்தியநாதன் எழுதியது ஏன்? விடுதலைக் கட்டுரையின் விளைவே!


கடந்த ஞாயிறன்று தினமணியில் அதன் ஆசிரியர் வைத்தியநாதய்யர் மூவர் - முத்துத்தாண்டவர், மாரி முத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் பற்றி எழுதிய இரகசியம் என்ன தெரியுமா?

தினமணி வெளியிட்ட இசைவிழா மலரில் தமிழர்களான சீர்காழி மூவர் பற்றி ஒருவரிகூட இல்லையே - என்று விடுதலை (ஞாயிறுமலர் 2.2.2013) சுட்டிக்காட்டிக் கண்டித்ததன் எதிரொலிதான் தினமணிக் கட்டுரை.

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!


Google இல் நமக்கு தேவையானதை எளிதாகத் தேடுவது எப்படி? (2)

கூகிள் என்பது இணையம் பயன்படுத்தும் பாதி பேரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தளம். இணையத்திலுள்ள இருவரில் ஒருவர் கண்டிப்பாக கூகிள் பயன்படுத்துபவர் என்று ஒரு கணக்கு சொல்கிறது. அத்தகைய தளத்தில் தேடுவதும் ஒரு கலையே. சில சமயங்களில் நாம் முக்கியமான விஷயம் ஒன்றை தேடுவோம் ஆனால் நமக்கு நிறைய தேவை இல்லாத தகவல்தான் கிடைக்கும். சரி எப்படி சரியாக தேடுவது? இதற்கான பதிலை கடந்த ஞாயிறு மலரில் கூகிள் தளத்தில் நமக்கு தேவையானதை எளிதாக தேடுவது எப்படி என்று சொல்லி இருந்தேன். அதன் தொடர்ச்சி தான் இந்தக் கட்டுரை அதில் 9 வகையான குறிப்புகள் கொடுத்து இருந்தேன், இனி அதன் தொடர்ச்சி.

10. ஒரே மாதிரியான பதிவை வெவ்வேறு தளங்களில் தேடுவது எப்படி?

இதற்கு குறிப்பிட்ட தலைப்பிற்கு முன்னே Related என்று கொடுக்கவும். இதனால் நாம் தொடர்புடைய பதிவுகளை எளிதில் பெற முடியும். எ.கா: Search Related: கூகுள் பிளஸ்ஸில் ஒரு ஜீணீரீமீ உருவாக்குவது எப்படி?

11. File Format களில் தேடுவது எப்படி?

இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும். நீங்கள் தேடும் பொருளின் பின்அந்த Format extension கொடுக்க வேண்டும். அதாவது pdf file என் றால், pdf. என்று கொடுக்கலாம்.

உதாரணம்: Eg: Solar Power.pdf

12. ஒரு இடத்தில் நேரம், வெப் பத்தை அறிவது எப்படி?

Time, Temperature போன்ற வார்த் தைகளை குறிப்பிட்ட நகரத்தின் பெயருக்கு பின்னால் அல்லது முன் னால் சேர்க்கவும்.

உதாரணம்: Time Chennai , Chennai Weather.

13. கல்வி குறித்துத் தேடுவது எப்படி?

கல்வி குறித்து நாம் அதிகம் தேட வாய்ப்புகள் உள்ளது. அப்போது தேடும் பொருளுக்குப் பின் .edu சேர்க்கவும்.

14. கூகிள் கணக்கு பண்ணுமா?

நீங்கள் நினைப்பது போல கூகிள் பெண்ணையோ அல்லது ஆணையோ கணக்கு பண்ணாது, நிஜமாகவே கணக்கு பண்ணும் கூகிள். அதாவது எளிய கணக்குகள் கூகிள் மூலம் போடலாம்.

(24*9)(39+68)(45--21)

15. குறிப்பிட்ட நகரத்தில், குறிப்பிட்ட தொழிலை தேடுவது எப்படி?

இது மிக முக்கியமானது. எடுத்துக்காட்டாக எனக்கு திருச்சி நகரில் சிறந்த கணினி Service Centre தேட வேண்டும் என்றால் அதை எவ்வாறு தேட வேண்டும் என்றால்,

Eg:Computer Service in Trichy Or Computer Service In 620002 அதாவது, Type: “[business name or type], [city or zip/postal code]”

- பிரபு கிருஷ்ணா (கற்போம்)

தமிழ் ஓவியா said...


படித்து என்ன பயன் பகுத்தறிவு இல்லையே!

அலகாபாத் கும்பமேளாவில் சபாநாயகர் மீராகுமார் புனித நீராடினார்

அலகாபாத், பிப்.19- உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா நடைபெற்று வருகிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். அலகாபாத்திற்கு சென்ற நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார், புனித நதிகளான கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமத்தில் புனித நீராடினார்.

கும்பமேளாவில் நீராடியது குறித்து கருத்து தெரிவித்த சபாநாயகர், உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நமது நாட்டின் ஜனநாயகம் மேலும் மேலும் தழைத்தோங்க வேண்டி பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். கங்கை நதியை சுத்தப்படுத்துவது அனைவரது கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

(தினத்தந்தி 19.2.2013) பக்கம் 13)

படித்தவர்தான் மக்களவைத் தலைவர்; அதுவும் அய்.எஃப்.எஸ். படிப்பறிவு இருந்தும் பகுத்தறிவு இல்லையே! கும்பமேளாவில் கங்கையில் முழுக்கும் போட்டு விட்டு கங்கை நதியைச் சுத்தப்படுத்த வேண்டியது அனைவரின் கடமை என்றும் கூறி இருக்கிறாரே, இதிலிருந்து என்ன தெரிகிறது? கங்கை நீர் ஒன்றும் புனிதமல்ல, தூய்மையானதும் அல்ல. அசுத்தப்பட்டுக் கிடக்கிறது என்று மறைமுகமாகச் சொல்லுகிறார் - ஒப்புக் கொள்கிறார் என்று தானே பொருள்.

கூடுதல் தகவல் (Tail Piece): மதச் சார்பற்ற அரசின் மக்களவைத் தலைவர் ஒரு இந்து மத மூடத்தனத்தில் மூழ்கி வெளிப்படையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளலாமா? அதுவும் பாபுஜி ஜெகஜீவன்ராம் அவர்களின் மகளா இப்படி நடந்து கொள்வது?

தமிழ் ஓவியா said...


எண்பதாண்டு இளைஞர்


கடலூரில் பிறந்து
பாசறையில் வளர்ந்து
உலகெங்கும் வாழும்
என்பது வயது இளைஞர்
வழக்கறிஞர்...
எழுபது ஆண்டு கடின உழைப்பு
நியாயமான, ஆர்ப்பாட்டம்
போராட்டம், அடிக்கடி கூட்டம்
எத்தனை முறை, சிறைவாசம் மிசா..
எந்நாளும் இடைவிடாதப்பணி
சமூக விடுதலைக்காய்
ஐம்பது வருட ஆசிரியராய்
ஆதாரத்துடன் உண்மையான உரைவீச்சு....
அயோத்தி ராமதாசர்களுக்கு
பைத்தியம் தெளிய
வைத்தியம் சொன்னவர்
ஈ.வெ. ராமசாமியெனும்
பெரியார்...
அய்யாவின் குரலாம்
வீர மணியோசை
என்றென்றும் திக்கெட்டும்
ஒலிக்கட்டும்! வீரமணி ஓசை1
ஆசிரியர் வீரமணி ஓசை!

- கவிஞர் நா. சுப்புலட்சுமி
மகளிர் அணி அமைப்பாளர் தி.க.
திருப்பத்தூர்

தமிழ் ஓவியா said...


கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்


- மா.பால்ராசேந்திரம்

''கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை என்று தொடங்கி, கடவுள் எல்லாம் வல்லவர், அனைத் தையும் அறிபவர், கருணை வடிவம், அன்பும் கொண்டவர், அவரின்றி அணுவும் அசையாது என்ற தன்மை களைக் கடவுள் மீது'' ஏற்றி மக்களை நம்பச் செய்து விட்டு, அதற்கு

மாறாகக் கடவுளுக்கு உருவம் படைத்து, கோவில் கட்டி, பூசை, உற்சவம், பண்டிகையெனப் பரப்புவ தென்றால் அவன் அயோக்கின் தானே, அதுவுமின்றி அனைத்துயிர்களிடமும் அன்புகொண்ட கடவுள்,போர் செய் தார், பலகோடி மக்களைக் கொன்றார்; வெட்டி வீழ்த்தினார்; விபச்சாரமும்

செய்தாரென்று தங்கள் சுயநலத் துக்காக, பெருமைக்காக, தங்கள் பிழைப் புக்காக நம்பும் மக்களை முட்டாளாக் குகிறவன் அயோக்கியன்தானே!'' என்றார் பகுத்தறிவுத் தந்தை பெரியார். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்'' என்ற தலைப்பில் 19.9.2012 அன்று நெல்லைப் பதிப்புத் தினமலரில் வந்த கட்டுரைக்குச் சில விளக்கங்களைப் பக்தர்கள் முன் தருகிறேன். 'பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் கையில் சிவலிங்கம் உள்ளது. தியான நிலையில் இவர் வீற்றிருக்கிறார்'' சிவலிங்கம் என்றால் சிவனின் ஆண்குறிதானே! தகப்பனின் 'அதனை' மகன் கையிலேந்தி இருக் கிறானாம். இதனால் மக்களுக்கு என்ன கூற வருகிறார்? பக்தர்கள் எல்லாரும் இவ்வாறுதான் இருக்க வேண்டும். அதுதான் ஒழுக்கமான வாழ்வுநெறி என்கிறாரா? தியானநிலை என்றால்,

கண்மூடி இருப்பதுதானே! லிங்கத் தின் பாரம் தாங்காமல் கண்மூடி, துய ரத்தை வெளிக்காட்டாது தவிக் கிறாரோ என்னவோ?
''திருச்சி உச்சிப்பிள்ளையார், ராமாயண காலத்தில் விபீஷணனுக்காக மலைமேல் இந்த விநாயகர் அமர்ந்த் தாகப் புராணங்கள் கூறுகின்றன.''

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தானே கணபதி என்ற பிள்ளையார் தமிழ் நாட்டிற்குள் நுழைந்தார். ஒண்டவந்த பிள்ளையார் நம்மூர்ப் பிள்ளையாராகத் தன்னை

நிலை நிறுத்திக்கொண்டது. இஃது எப்படி 21,60,000 ஆண்டுகளுக்குமுன் நடந்ததாகக் கூறப்படும் இராமாயணக் கதைக்குள் வந்தது? 7 ஆம் நூற்றாண்டில் எங்கிருந்து வந்தான் விபீஷணன்? புளுகுவதற்கும் ஒரு வரம்பில்லையா போக்கற்றவர்களே! திருஞானசம்பந்தனே, ''பொடி நுகருஞ் சிறுத்தொண்டருக்கு அருள் பாலிக்கும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே'' எனப் பாடியுள்ளார். 'சிவன், கணபதியின் தலையை வெட்டினார்.'' சிவன் பார்வதியின் கணவன். விநாயகர் சிவனின் மகன், பார்வதிக்கும் மகனாவான்.தந்தை ஆத்திரப்பட்டுச் சொந்தப்பிள்ளையின் தலையை வெட்டி வீழ்த்துவதா! இதனால் பக்தர்கள் தெரிந்து கொள்வது என்ன? மொட்டையாக இருக்கும் விநாயகராம் இது. அப்படியென்றால் அன்று தொடங்கி இன்றுவரை, தலை வளரவே இல்லையா? அப்படியாயின் எல்லாச் சிலைகளைப் போல்தான் இதுவுமொரு கற்சிலை

அப்படித்தானே? பார்ப்பனர் மந்திரத்தால் சிலைகள் உயிர், உணர்வு பெறு கிறது என்பதெல்லாம் வெறும் பொய், புரட்டுதானே? மந்திரம், வேலை செய்தால் இந்நேரம் தலை முளைத்த விநாயகராக ஆகியிருப்பாரே!

''நாகப்பட்டினம் வைத்தீஸ்வரன் கோவில் பிரம்மஹத்தி விநாயகர். உலகத்திலேயே கொடிய பாவங்கள் பசுவை பிராமணர்களை, சாதுக்களைக் கொலை செய்வது. பெண்களை ஏமாற்றுதல், வலுக்கட்டாயமாகக் கெடுப்பது ஆகும்'' பிராமணர்களைக் கொல்லக்கூடாது. அதுபாவச்செயல் மற்றைய வருணத் தாரைக்கொல்லலாம். அது பாவ மாகாது, பிராமணன், ஏனைய வருணத்தார் எவரையும், எதற்கேனும் கொல்லலாம். தட்டிக் கேட்கக் கூடாது. வந்தேறிகள், நாடாண்ட குலத் தோர்க்குப் போட்ட சட்டம். சாதுக்கள் யார்? துறவறம் என்பது மற்றைய வருணத்தார்க்குக் கிடையாது. அப்படியாயின் சாதுக்களும் பார்ப்பனரே. பிராமணக் கொலையே பிரம்மஹத்தி தோஷமாகும். இவர்களால் வரும் பாவத்தைப் போக்க ஒரு பிள்ளை யாராம். அது எல்லார்க்கும் சாமியாம். பக்கர்களே! என்ன அநியாயம் இது.

''உடுமலைப்பேட்டை, ஊரைக்காக்கும் அரணாக மலை இருப்பதால் அதனை கரகிரி என்பர். இங்கு பிரசன்ன விநாயகர் கோவில்?

ஊரைக்காப்பது மலையென்று ஆனபின்னால் விநாயகர் ஆங்கே உட் காரவேண்டிய அவசியம் என்னவோ! அதற்கென்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?

''கோவை குனியமுத்தூரில் யோகாவி நாயகர், யோகநிஷ்டையில் அமர்ந்த கோலம். தன்னை நாடி வருவோருக்கு அஷ்டயோகங்களையும் அருள் பாலிப்பவர்''

தமிழ் ஓவியா said...

தன்னைத் தேடி, நாடி வரவில்லை யாயின் நாடும் மக்களும் நாசமாய்ப் போகவென அருள் பாலிப்பார் போலும் '' சேலம் ராஜ கணபதி, தீராத நோய் தீரும்; தீராத நோயாய் இன்று உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பது புற்று நோயே. இந்நோயால் உலகம் இழந்து வரும் உயிர்கள் இலட்சக்கணக்காகும். சேலம் சென்று ராஜ கணபதியை வணங்கினால் மருந்து மாத்திரை, மருத்துவம் எதுவுமின்றி குணம் கிடைக்கும்; நோய் நீங்கி நலம் பெற லாமென்றால் நல்லதாய்ப் போய் விட்டதே.

மண்டையை முறுக்கிப் பிழிந்து மருந்துகள் காணத் துடியாய்த் துடித்திடும் ஆய்வாளர்கள், மருத்துவ அறிஞர்களுக்கு இத்தகவல் கோலார் தங்கவயலே தானமாய்க் கிடைத்தது போலல்லவா! துள்ளிக் குதிப்பரே வெற்றிக் குளியலில்.

தஞ்சாவூரில் வல்லப விநாயகர் அரக்கி வல்லபையை விநாயகர் அடக்கி மடியில் இருத்திக் கொண் டார்.'' வல்லபையை விநாயகர் எந்தக் கோலத்தில் மடியில் இருத்திக் கொண்டுள்ளார் என்பதை விளக்கி எழுதிடக் கை கூசுகிறதோ! எங்கே தன் தும்பிக்கையை நுழைத்திருக்கிறார் என்பதையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட ஏன் தயக்கம்? ஆபாசத்தின் உச்ச கட்டம் தானே அந்நிலை. பார்ப்பனரின் புராணங் களே அந்நிலையில் உழன்று திகழ்ந் தது தானே

'சேலம் ஆத்தூரில் தலையாட்டிப் பிள்ளையார் குறுநில மன்னன் கெட்டி முதலி கோயில் கட்டி, வேலையெல்லாம் முடிந்த பின், '' பணிகள் சிறப்பாக முடித்திருக் கிறேனா?'' எனப் பிள்ளையாரைக் கேட்டான். நன்றாகக் கட்டியிருக் கிறானென்பதற்காகத் தலையை ஆட்டினார். இன்றும் தலை இடதுபுறம் சாய்ந்தே இருக்கும்.''

அன்று தலையாட்டிச் சரியென்று சொன்னதால் ஒரு பக்கமாகத் தலை இழுத்தது, இன்றும் இழுத்தே நிற்கிறதாமே! அதன் பின் எவனும் வரங்கேட்டு, அதற்காகத் தன் தலையை ஆட்டவே இல்லையோ? அதற்குப் பதிலாகத்தான் அர்ச்சகன் ஆட்டு கிறானோ! சிலை வடித்தவன் எந்த நிலையில் வடிக்கிறானோ, அந்நிலை யிலிருந்து மாற்ற எவனாலும், எந்த மொழியாலும் முடியாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதா? மந்திர மொழி மண்ணாங்கட்டியே. ' .... .,. ... ... பார்ப்பனருக்குப் படிகட்டும் தமிழின் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மானத்தை வடிகட்டி, அவன் வடசொல் மண்ணாங்கட்டிக்குப் பேர் ' மந்திரம்' என்றே'' என்றார் புரட்சிக் கவிஞர் இல்லாத கடவுளைப்பல்வேறு உருவங்களிலும், பல்வேறு பெயர் களிலும் புகுத்துவோர் அயோக்கியர் களே என்பது தந்தை பெரியார் மொழியாம்.

தமிழ் ஓவியா said...


பழங்கள் பிறந்த கதை

ஆரம்ப காலத்தில் அதாவது சுமார் 60 கோடி வருடங்களுக்கு முன்பு, விதைகளின் மேல் சதை பற்றில்லாமல் கரடு முரடான கரோட்டின் எனப்படும் ஒரு வகை பட்டைமட்டுமே இருந்தது. அது டைனோசர்களின் காலம் அங்கு பழங்களை சாப்பிட அதிக உயிரினமில்லை, அப்போது உயிரினங்களில் இரண்டு வகை மட்டுமே ஒன்று தாவரஉண்ணி மற்றொன்று மாமிச உண்ணி, தாவர உண்ணிகளிடம் இருந்து தாவரங்கள் தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த அளவு உய்ரவேண்டுமே அந்த அளவு உயர நேர்ந்தது, அன்றைய காலகட்டங்களில் சாதாரண செடிகள் கூட சென்னை எல்.அய்.சி. கட்டிடத்தை மிஞ்சும் உயரம் வளரவேண்டி இருந்தது, விண்கற்களின் தாக்குதலால் பூமி நிலை குலைந்தது, நடமாடும் உயிரினங்கள் தாவரங்கள் 90 அழிந்தது, பூமி தனது பாதையில் மாற்றம் காண நேர்ந்தது விளைவு துருவங்கள் உருவாகின, துருவங்கள் உருவான பிறகு கால நிலை மாற்றம், புதியவகை தாவர உயிரினம் தோன்றியது சுமார் 30 கோடி வருடங்கள் ஓடிவிட்டது, தாவரங்கள் தங்களை செடிகளாக, புதர்களாக, கொடிகளாக மரங்காளாக மாற்றிக்கொண்டு வாழும் சுழலில் சிறிய சிறிய இடம்பெயர் உயிரினங்கள் (பாலூட்டி, பூச்சி, பறவை, ஊர்வன) தோன்றின.இந்த புதிய உயிரினங்களை தங்கள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் தாவரங்களுக்கு ஏற்பட்டது., அந்த உயிரினங்கள் வண்ணங்களை பகுப்பாராயும் தன்மை கொண்டவை இதை அறிந்து கொண்ட தாவரங்கள் ஒரு புதிய யுக்தியை கையாண்டது, வண்ண வண்ண பூக்கள், சதைப்பற்றுள்ள காய்களை உற்பத்தி செய்தது, தான் தயாரா கிவிட்டேன் என்ற சமிக்ஞைக்காக தன்னுடைய மேற்புற நிறத்தை மாற்றியது.

இதுவரை பச்சை பச்சையான நிறத்தை பார்த்து வந்த உயிரினங்கள் புதியதாக பலப்பல வண்ணங்களில் வித்தியாசமாக தெரிய அவற்றை உண்ணுவதற்கு நடமாடும் உயிரினங்கள் அதிக ஆர்வம் காட்டியது, முன்பு கடினமான கரோட்டின், விதை உறையாக மாறியது, அதன் மேல் இனிப்பு புளிப்பு இதர சுவைகளில் ஒரு பொருளை தாவரம் உற்பத்தி செய்தது காரணம் அதை உண்டு விட்டு விதைகளை எறிந்து விடவேண்டும் இயற்கையின் இந்த அற்புத தொழில் நுட்பம் இந்த பூமி எங்கும் தாவரம் பரவ காரணமாகியது. இது பழங்கள் பிறந்த கதை,

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. 'விடுதலை", 26.2.1968

தமிழ் ஓவியா said...


மதுரையில் மன்றல்! கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்


மதுரை, நெல்லை, சிவகங்கை, மண்டலக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டத் தலைவர் செயலாளர்கள், நகரத் தலைவர் கள், செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு,

நம் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்கி கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் சென்னையிலும், டிசம்பர் 30 திருச்சியிலும் மன்றல் 2012 என்ற மாபெரும் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவினை சிறப்பாக நடத்தினோம்.

இந்தப் பெருவிழாவில் பங்கெடுத்த தன் மூலம் பலர் தங்களது இணையரைத் தேர்ந்தெடுத்து நமது தலைமை நிலையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திரு மண நிலையத்தில் திருமணம் செய்து தமது வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக் கொண்டனர். மேலும் பலர் வரும் மாதங் களில் திருமணம் செய்வதற்காக தனது இணைகளைத் தேர்ந் தெடுத்துள்ளனர்.

தந்தை பெரியாரின் இலட்சியமான ஜாதி ஒழிப்புக் கொள் கையினை நாம் இந்த மன்றல் நிகழ்ச்சியின் மூலம் செவ்வனே நிறைவேற்றி வருகிறோம். இனி இந்த ஆண்டின் துவக்க நிகழ்ச்சியாக மன்றல் 2013 மதுரையில் வரும் மார்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜாதி உணர்வு மிகுந்திருப்பதாகச் சொல்லப்படும் மதுரையில் நமது ஆற்றல் மிக கழகத் தோழர்களின் துணையோடு ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவினை நடத்தும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

களங்கள் பல கண்ட திராவிடர் கழகத் தோழர்கள் ஜாதீயத்தை கலங்க வைக்க ஆற்ற வேண்டிய செயல்பாடுகள்.

1. நகர்ப்பகுதியிலும், நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நல்ல வண்ணம் சுவரெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்வது.

2. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் எல்லாம் பிளெக்ஸ் போர்டு வைப்பது.

3. தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வைக்கு படும்படியான இடங்களில் ஒட்டுவது.

4. மக்கள் ஆங்காங்கு கூடுகின்ற பகுதிகளிலெல்லாம் மன்றல் 2013 பற்றிய துண்டறிக்கைகளை வழங்குவது.

இந்த நான்கு பணிகளையும் நாம் ஒழுங்கான முறையில் செய்து முடித்தால் மன்றல் 2013இன் தொடக்கமே வெற்றிப் படிக்கட்டுகளை எண்ணத் துவங்கிவிடும். நம் நாட்டை ஜாதியற்ற பூமியாக மாற்றிக் காட்டும் மாபெரும் வாய்ப்பாக நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்த மன்றல் 2013 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா. இது சத்தமின்றி நடக்கும் புரட்சி. இப்புரட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே நம் பணி!

குறிப்பு: நிகழ்ச்சி ஏற்பாடு மட்டுமே இம்மூன்று மண்டலங்களைச் சேர்ந்தது. ஏனைய கழக மாவட்டத் தோழர்களும் விளம்பரங்கள் மூலம் மன்றலை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் எந்தப் பகுதியில் இருப்போரும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.

திருமகள், மாநில அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதைத் திருமணம் நிலையம்,
சென்னை - 600 007