புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 5.2.2013
இரவு 9 மணிக்கு ஈழத் தமிழர் பிரச்சினை - ராஜபக்சே வருகையையொட்டி விவாத
அரங்கு ஒன்று இடம் பெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.
வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செய லாளர் தோழர் தா.
பாண்டியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
வேலூர் திரு. ஞானசேகரன் முதலியோர் இதில் பங்கு கொண்டனர்.
இதில் விவாத அரங்கைத் தொடங்கி வைத்த
திராவிடர் கழகத் தலைவர், கடந்த காலத்தில் நடை பெற்றவைப்பற்றிக் கிளறிப் பேச
ஆரம்பித்தால் பிரச்சினைகள் வேறு திசைக்குச் சென்றுவிடும், மேலும் எதிரியான
ராஜபக்சேவுக்கு அது பலத்தைக் கொடுப்ப தாகிவிடும் - எனவே, நடக்கவேண்டிய -
நாம் அழுத்தம் கொடுக்கவேண்டிய பிரச்சினைகளை நோக்கிக் கருத்தைச்
செலுத்துவோம் என்று மிகுந்த பொறுப் புணர்ச்சியுடனும், பிரச்சினையின்மீது
கவலையுணர் வுடனும் கருத்தினை முன்வைத்தார்.
கழகத் தலைவரின் இந்தக் கடைசி வரியை,
கருத்தினை ஏற்றுக்கொள்வதாகப் பேச ஆரம்பித்த தோழர் தா.பாண்டியன் கடைசிவரை
தடம் மாறிச் சென்றதை சுவைக்க முடியவில்லை.
இந்த விவாதத்தை தி.மு.க.வையும், அதன் தலை
வரையும் நோக்கிக் கல்லெறிவதற்கே பயன்படுத்தியதன் மூலம் நிகழ்கால,
எதிர்காலப் பிரச்சினைகளின்மீதான அக்கறையின்மையை தனக்குத்தானே
வெளிப்படுத்திக் கொண்டு விட்டது வருந்தத்தக்கது!
பொதுவாக சில பிரச்சினைகளை அரசியல்படுத்
தாதீர்கள் என்று சொல்லுவதுண்டு. அத்தகைய பொது நோக்குச் சிலரின் காதுகளில்
ஏறுவதில்லை என்கிற பட்டியலில் தோழர் தா.பா. இடம்பெற்றுவிட்டாரே!
ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு - தொடர்ச்சியும் உண்டு.
ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு - தொடர்ச்சியும் உண்டு.
1939 ஆம் ஆண்டு முதற்கொண்டே நீதிக்கட்சி காலந்தொட்டு இந்தப் பிரச்சினையில் நெருக்கமும் உண்டு.
இலங்கையில்
உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை
விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிக்கிறது. ஈ.வெ.ராம
சாமி, சாமியப்ப முத லியார், ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ.
சவுந்தரபாண்டியன் ஆகியோர் இலங் கைக்குச் சென்று அவர்களது நிலைமையை
ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டு மாய் இக்கமிட்டி
கேட்டுக்கொள்கிறது. (விடுதலை, 11.3.1939, பக்கம் 3).
1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் இத்தகைய பதிவுகள் ஏதேனும் இருந்தால் தாராளமாக எடுத்துக்காட்டலாம்.
அவ்வளவுக் காலத்திற்கு முன்புகூடப் போகவேண் டாம்; ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியக் கம்யூ னிஸ்டுக் கட்சியின் நிலைப்பாடு என்ன?
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ
விடுதலைப் புலிகள், தமிழகத்தைவிடக் கூடுதல் அதிகாரம் படைத்த ஒரு மாநிலமாக
தமிழர் மிகுந்து வாழும் பகுதிகள் இலங்கைக்குச் சுயாட்சி அதிகாரம் படைத்ததாக
வடிவெடுக்க வழிகோலும் இலங்கையின் சந்திரிகா குமாரதுங்கா அரசின் யோசனைகளை
ஏறெடுத்துப் பார்க்க மறுக்கின்றனர். அந்த ஆலோசனையை அமலாக்கினால், ஈழத்
தமிழர் கை ஓங்கிவிடுமென்று சிங்களப் பேரினவாதிகளும், பவுத்த மத
சந்நியாசிகளும், சீடர்களும், இதர பிற்போக்காளர்களும் குரலிடுகின் றனர்.
இவர்களின் ஆதரவு பெற்ற அரசியல் எதிர்க் கட்சியினருக்கு இருதரப்பினரும்
ஆயுதமேந்திய போரில் முனைந்திருப்பதால், எப்படி தேசமே நாசமாகிறதென் பதை
சந்திரிகா எடுத்துரைத்து சமாதானப் பாதைக்கு, அவர்களது அரைகுறை
சம்மதத்தையும் வென்றெடுத் துள்ளார். இந்த அனுகூலமான சூழ் நிலையை, தக்க
விதத்தில் பயன்படுத்தி இலங்கையில் இன நல் லிணக்கத்தை உண்டாக்குவதில் அமைதி
மீளச் செய் வதில் புலிகளிடம் மனமாற்றமில்லாதது வேதனை யளிக்கிறது. இலங்கைத்
தமிழர்களின் துக்கம் தொடர்கதையாவதற்கு இலங்கையில் இன்றைய அரசு மட்டும்
காரணமல்ல. பிரபாகரன் வகையறாவும்தான் என்பதை, தமிழ் ரத்தக்
கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் போலித் தீவிரங்கள் ஏற்றுக்
கொள் ளாமல் ஏமாறுகின்றனர் அல்லது ஏமாற்றுகின் றனர். (ஜனசக்தி, 20.6.1997).
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடுதான் இவ்வாறு எழுதியது.
சந்திரிகா அம்மையாருக்கு ஒரு பூச்செண்டு -
விடுதலைப்புலிகளுக்கு ஒரு சாட்டையடி - ஈழத் தமிழர்களுக்காகக் குரல்
கொடுப்போருக்கோ வசைமாரி.
சமாதான வெண்புறாவைப் பறக்கவிட்டு வழிமேல் விழி வைத்து சந்திரிகா காத்திருந்தாராம்.
அதனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார் களாம் விடுதலைப்புலிகள்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த,
போராடிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் - அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தோழர்
தா.பா.வின் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பார்வையில் தமிழ் ரத்தக்
கொதிப்பால் பாதிக்கப்பட்ட போலித் தீவிரவாதிகளாம்.
எப்படி? திருவாளர் சோ ராமசாமியின் வாடை வீசுகிறதா - இல்லையா?
அவ்வளவுத் தூரம் கூடப் போகவேண்டாம். கடந்த
மக்களவைத் தேர்தலின்போது தோழர் தா. பாண்டியன் மதுரையில் அளித்த பேட்டி
ஒன்று புதினம் இணையப் பதிப்பில் (5.2.2009) என்ன சொன்னார்?
இலங்கைப் பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன்வைக்கமாட்டோம் என்று சொன்னவர்தான் தோழர் தா.பா.
இலங்கைப் பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன்வைக்கமாட்டோம் என்று சொன்னவர்தான் தோழர் தா.பா.
ஒரு எரியும் பிரச்சினை; ஈழத் தமிழர்களை
மட்டுமல்ல - அவர்களின் தொப்புள்கொடி உறவுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களின்
உணர்வுப் பிரச்சினை; இவர்கள் தமிழ்நாட்டில்தான் போட்டியிடப் போகிறார்கள்.
ஆனால், இலங்கைப் பிரச்சினையை தேர்தலில் முன்வைக்க மாட்டார்களாம்.
தேர்தலில் முன்வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினையாக முடிவு செய்துவிட்டார்களா?
காரணம் என்ன தெரியுமா? ஈழத் தமிழர்கள்
பிரச்சினையில் செல்வி ஜெயலலிதா எண்ணம் என்ன என்பது உலகறிந்த ஒன்று. அந்த
நிலையில், ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைக்க முடியுமா?
இரண்டு சீட்டுகளுக்காக மிக முக்கியத்துவம்
வாய்ந்த பிரச்சினையைக்கூடப் பின் தள்ளுபவர்கள்தான் இப் பொழுது முஷ்டியைத்
தூக்குகிறார்கள். தனி ஈழம்தான் ஒரே வழி என்ற நிலையை நாம் எடுப்பதுகூட
முக்கியமல்ல, ஈழத் தமிழர்களின் முடிந்த முடிவு அது. ஆனால், இந்தியக்
கம்யூனிஸ்டுக் கட்சியின் நிலைப்பாடு என்ன?
இலங்கைப்
பிரச்சினையைப் பொறுத்தவரை அங்கு தனி நாடு அமைக்கப்படுவதை நாங்கள்
ஏற்கவில்லை. அங்குள்ள தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கவேண்டும்
என்றுதான் கோருகி றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி உரிமையுடன்
அமைக்கப்படவேண்டும்! (ஜனசக்தி, 9.5.2009, பக்கம் 5).
சிங்கள இனவெறி ஆட்சியின் நுகத்தடியின் கீழ் ஏதோ ஒரு வகையில் கட்டிப் போடுவதல்லாமல் இதற்கு வேறு பொருள் என்ன?
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக ஒருமுறை
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி பட்டினிப் போராட்டத்தை நடத்தியது. அதில்
அ.இ.அ.தி.மு.க. சார் பில் கலந்துகொள்ளப்படும் என்று அறிவிப்பு கொடுக்கப்
பட்டும், கடைசிவரை அ.இ. அ.தி.மு.க. சார்பில் யாருமே பங்கேற்காத பரிதாப
நிலை.
பரிதாபமான நிலையில் நமது அருமைத் தோழர்
தா.பா. அவர்கள் போயஸ் தோட்டத்திற்கு நேரில் சென்று விவாதிப்பேன் என்று
அப்போதைக்குச் சொன்னதைத் தவிர, அது பற்றி எந்தத் தகவலும் இல்லை... மூச்....
முடியுமா அங்கே?
இன்றைக்கு இலங்கைப் பிரச்சினையில் இந்தியா
தலையிட்டிருக்கவேண்டும். அதை செய்யத் தவறி விட்டது தி.மு.க. என்றெல்லாம்
குற்றப்பத்திரிகை படிக்கும் இவர்கள், இந்தப் பிரச்சினையில் இவர்களின்
கூட்டணித் தலைவரான செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர் மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலி
களுக்கு ஆதரவாக கருணாநிதி செயல் படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள்
மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப்
போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை
முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை
உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட் டால், பின்னர் நம் நாட்டு உள்
விவகாரத் தில் அண்டை நாடுகள் தலையிடுவதற் கான வாய்ப்பு ஏற்பட்டு, அது
இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்ப தாக அமையும். அடுத்த நாட்டின்
உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008)
- இப்படி சொன்ன கட்சியுடன் கூட்டணி வைத்த வர்கள் தானே இந்த இடதுசாரிகள்.
இந்தியா ஏன் தலையிடவில்லை - அதற்கு ஏன்
தி.மு.க. தலைவர் அழுத்தம் கொடுக்கவில்லை என்று அரட்டை அடிப்பவர் - அன்று
ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு ஒரே ஒரு வரி மறுப்பு சொன்னதுண்டா?
சொல்லாதது மட்டுமல்ல, அம்மம்மா ஆளைவிடு,
இலங்கைப் பிரச்சினையையே தேர்தலில் நாங்கள் தொடப் போவதில்லை என்று
முழுக்குப் போட்டவர்கள் இன்று முண்டா தட்டுவதுதான் கொழுத்த தமாஷ்!
இதில் இன்னொன்று இடித்துச் சொல்லவேண்டியது
- இலங்கை சிங்கள இனவாத அரசுக்குப் பெருஞ் சக்தியாகத் தோன்றாத் துணையாக
இருக்கக் கூடிய நாடு சீனாதான் - பக்கபலமாக இருப்பது ருசியாவும்கூட!
கியூபாவும் விதிவிலக்கல்ல!
மனித உரிமைகளின் பக்கம் நின்று,
மனிதநேயத்தின் மறுபதிப்பாக மலர்ந்து, இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத்
தமிழர்கள் பக்கம் நிற்கவேண்டிய இந்தக் கம்யூனிஸ்டு நாடுகள் இனவெறியன் -
பேரினவாத ஆட்சியாளன் ராஜபக்சேவுக்குத் தோள் கொடுத்து நிற்கிறார்களே -
வெட்கப்படவேண்டாமா?
இந்தத் திசையில் ஒரே ஒரு வார்த்தையை உதிர்த் திருப்பார்களா இந்த இடதுசாரிகள்?
இந்தத் திசையில் ஒரே ஒரு வார்த்தையை உதிர்த் திருப்பார்களா இந்த இடதுசாரிகள்?
ஊருக்கு இளைத்தவர் கருணாநிதிதானா?
நமக்கு இப்பொழுது ஒரே இலக்கு எதிரியான
ராஜபக் சேதான் - திசை திருப்பவேண்டாம் - அது ராஜபக் சேவுக்கு வேறொரு
வகையில் துணை போனதாகிவிடும் என்று திருப்பித் திருப்பி மிகுந்த
பொறுப்புணர்ச்சியுடன் திராவிடர் கழகத் தலைவர் புதிய தலைமுறை விவாதத்தில்
வேண்டுகோள் விடுத்தும், நடந்துபோனவற்றை யெல்லாம் தனது போக்கில் திசை
திருப்பும் ஒரு பணி யில் தோழர் தா.பா. அவர்கள் ஈடுபட்டதால், மக்களுக்கு
விளங்க வைப்பதற்காக நாமும் அவர்களின் பழசு களைக் கொஞ்சம் புரட்டிப் போட
நேரிட்டது - அவ் வளவுதான்!
விடுதலைப் புலிகள் பிரச்சினையில்
தி.மு.க.வுக்கும், திராவிடர் கழகத்துக்கும்கூட மாறுபாடான மதிப்பீடுகள்
உண்டு. அதற்காக அதையே பிடித்துக்கொண்டு நமக்குள் கலகம் விளைவித்துக்
கொண்டால், அதனால் பலன் என்ன? பிரச்சினையின்மீது கவலை உள்ளவர்கள்
இப்படித்தான் சிந்திப்பார்கள் - செயல்படுவார்கள்.
கூடுதல் தகவல்கள் (Tail Pieces)
தேசிய கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக்
கட்சி இந்தப் பிரச்சினையில் என்ன திட்டம் வைத்துள்ளது? நாடாளுமன்றத்தில்
கட்சியின் சார்பில் இந்தியாவைப் பணிய வைக்க எடுத்த நடவடிக்கை என்ன? சீனா,
ருசியா போன்ற நாடுகள் ராஜபக்சேவுக்குத் துணை போவதைத் தடுக்க இந்தியக்
கம்யூனிஸ்டுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆம் என்றால் அதில் வெற்றி
பெறவில்லையா? அதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் வெளியிட்டதுண்டா?
இலங்கையில் உள்ள ஜெ.வி.பி. என்ற கம்யூனிஸ்டுக் கட்சி ராஜபக்சேவைத் தாண்டிய இனவெறி அமைப்பு அல்லவா?
அந்தக் கட்சியின் பொறுப்பாளர்களை
கம்யூனிஸ்டு கள் இந்தியாவில் (சி.பி.எம்.) தங்கள் மாநாட்டுக்கு அழைத்துப்
பாராட்டுகிறார்களே - அது சரியா?
ராஜபக்சே இந்திய வருகை குற்றமே! அதே கண் ணோட்டம் சிங்கள வெறி பிடித்த ஜெ.வி.பி.க்குப் பொருந்தாதா?
இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியின் இனவெறியை எதிர்த்து எப்பொழுதாவது கருத்து வெளியிட்டதுண்டா?
திருத்துறைப் பூண்டியையடுத்த ஆதிச்சபுரம்
கிராமத்தில் பிரகாஷ் என்ற பச்சிளம் பாலகன் பட்டினியால் மடிந்த கோரக்
கொடுமை நடந்த அந்நிகழ்வை சட்டப் பேரவை உறுப்பினர் பழனிச்சாமி (சி.பி.அய்.)
எடுத்து வைத்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு மாண்புமிகு
உறுப்பினர் திரும்பத் திரும்பச் சொல்லி எனது அரசுக்குக் களங்கம் கற்பிக்க
முயலுகிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன்,
பிரகாஷ் செத்தது உண்மை என்று சொன்னால், மற்ற மூன்று குழந்தைகள் எப்படி
உயிரோடு இருக்கின்றன? என்று கேள்விக்கணை தொடுத்ததை தமிழக மக்கள் ஒருபோதும்
மறக்கவும் மாட்டார்கள் - மன்னிக்கவும் மாட்டார்கள்.
குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இனி பட்டினிச் சாவு நடக்காமல் பார்த்துக்
கொள்கிறேன் என்று முதலமைச்சர் குறிப் பிட்டு இருப்பாரேயானால், அவரது
பெருந்தன்மையைப் பாராட்டலாம் - போற்றலாம்.
மாறாக, மற்ற மூன்று குழந்தைகள் ஏன்
இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபி மானற்ற பேயாட்சியினை
இனியும் அனுமதிக்க முடியுமா? என்று ஜனசக்தி (19.3.2006) எழுதியதே!
அந்த ஒரு குழந்தை பட்டினியால் செத்ததற்கே
அவ்வளவு ஆத்திரம் பொங்க எழுதிய ஜனசக்தி இப்பொழுது விவசாயிகள் பத்து
பேர்களுக்குமேல் தற்கொலைகள் செய்து கொண்டார்களே - எவ்வளவுக் கடுமையாக
விமர்சித்திருக்கவேண்டும்?
இவ்வளவுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் -
அமைச்சர வையில் பங்கு பெறும் கட்சியல்ல சி.பி.அய். கடந்த சட்டப் பேரவையில்
கூட்டணிக் கட்சி அவ்வளவுதான். நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் எந்தக்
கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா. இந்த நிலையில்கூட
முதலமைச்சரை - அவர் சார்ந்த கட்சியை விமர்சிக்கத் துணிவு இல்லை.
இவர்கள்தான் மத்திய அமைச்சரவையில் இடம்
பெற்ற தி.மு.க.வைப் பார்த்து ஏன் அது செய்யவில்லை. இது செய்யவில்லை?
அழுத்தம் கொடுக்கவில்லை, பதவி விலகவில்லை - என்று குற்றம்
சுமத்துகிறார்கள்?
அரசியல் கட்சி என்று வரும்போது பத்தோடு பதினொன்றாகத்தான் இவர்களும் இருக்கிறார்களே தவிர தனித்தன்மை பேசுவதற்கு என்ன இருக்கிறது?
ஓ,
ஈழத் தமிழர்களுக்காக விலாப்புடைத்துப் பேச ஆரம்பித்துள்ளார்களே - இந்தியக்
கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இப்பொழுது ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுவிட்டதோ!
----------------------------------------- மின்சாரம் அவர்கள் - 7-2-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
21 comments:
விவேகானந்தர் பெயரால்...
விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் - இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள்.
ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.
பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா? இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?
மதச் சார்பற்றவர்கள், இஸ்லாம், கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன?
ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?
ஆன்மீகப் பண்பாடும், துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்
- என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.
பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம்.
பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய், விளக் கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்;
இதுதான் இந்த இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!
இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?
இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா?
கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?
இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்! 8-2-2013
மனிதத் தன்மை
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
- (விடுதலை, 13.8.1961)
மதம் மாறி திருமணம் செய்த பெண் கணவரின் ஜாதி அந்தஸ்தை பெற முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.8- மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண், தனது கணவரின் ஜாதி அந்தஸ்தை தனக்கு வழங்கக் கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.பாத்திமா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்து மதம் செங்குந்தர் ஜாதியைச் சேர்ந்தவர் நான். அப்போது எனது பெயர் பிரேமாவதி என்று இருந்தது. பின்னர் நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி, முகமது ஆசாத் என்பவரை கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். எனது பெயரையும் பாத்திமா என மாற்றிவிட்டேன்.
எனது கணவர் முஸ்லிமில் லெப்பை என்ற ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த நிலையில் சாதிச் சான்றிதழ் கேட்டு காஞ்சீபுரம் துணை தாசில்தாரிடம் விண்ணப் பித்தேன். எனது கணவனின் ஜாதிப் பிரிவின்படி, பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழை எனக்கு வழங்க வேண் டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அதைத் தொடர்ந்து அந்த சான்றிதழ் எனக்குக் கிடைத் தது.
பின்னர் ஊரக வளர்ச்சித் துறை யில் உதவியாளர் பதவிக்காக தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் நான் கலந்து கொண்டேன். என்னை அந்த சான் றிதழின்படி பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவில்டி.என்.பி.எஸ்.சி. சேர்க்கவில்லை. இதர பிரிவில் என்னை சேர்த்துள்ளனர்.
இதனால் எனக்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது. எனவே என்னை பிற் படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவில் சேர்ப்பதோடு, பணி வாய்ப்பை வழங்க வேண்டும் என்று டி.என்.பி. எஸ்.சி.க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகே.சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத் தரவு வருமாறு:-
பிறந்த இந்து மதத்தில் இருந்து மதம் மாறி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த காரணத்தைக் காட்டி, கணவனின் சாதி அந்தஸ்தை தனக்கும் வழங்க வேண்டும் என்று மனைவி கோர முடியாது. வேறு மதத்தினரை திருமணம் செய்த காரணத்துக்காக, ஒருவர் தனது ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது.
அப்படி மாற்றிக் கொண்டு வேலை வாய்ப்புகளை பெற முடி யாது. இதை ஏற்கனவே உச்சநீதிமன் றத்தில் உறுதி செய்துள்ளது. எனவே பிற்படுத்தப்பட்டோர் (லெப்பை) என்ற அந்தஸ்தை அளித்து மனுதார ருக்கு வழங்கப்பட்ட சாதிச் சான் றிதழ் செல்லாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
தமிழினப் படுகொலையாளன் சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
டெசோ அமைப்பு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது
தமிழர் தலைவர் கி.வீரமணி, மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர். பாலு, கனிமொழி பங்கேற்றனர்
பல்லாயிரக்கணக்கானோர் கறுப்புடை அணிந்து பங்கேற்றனர்
சென்னை, பிப்.8- தமிழினப் படுகொலையாளன் சர்வதேச போர்க் குற்றவாளி சிங்கள வெறியன் ராஜ பக்சே இந்தியாவுக்கு வருகை தரு வதைக் கண்டிக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டெசோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (8.2.2013) காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் கி.வீரமணி, மு.க. ஸ்டாலின், தொல் திருமா வளவன், பேராசிரியர் சுப. வீரபாண் டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர். பாலு, கவிஞர் கனிமொழி மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கறுப்புடை அணிந்து பங்கேற்றனர்.
இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத் தாடுகிறது.
இலங்கையில் தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்வதிலும், கட்டமைப்பு ரீதியாக அங்கு தமிழருடைய அடையாளங் களை அழிப்பதிலும் தமிழர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைப்ப திலும் சிங்கள அரசு திட்டமிட்டு வேகமாக செயல்படுகிறது.
தமிழர்கள் வாழும் 89 கிராமங் களின் பெயர்கள் சிங்களப் பெயர் களாக மாற்றப்பட்டுள்ளன. இந் நிலையில் இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டிக்கும் வகையில் 8ஆம் தேதி சென்னையில் டெசோ சார்பில் கறுப்புடை அணிந்து கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவரும் டெசோ அமைப்பின் தலைவருமான கலைஞர் அவர்களின் தலைமையில் 4.2.2013 அன்று சென்னை அண்ணா அறிவா லயத்தில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று (8.2.2013) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், விடு தலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கறுப் புடை அணிந்து திரண்டிருந்தனர்.
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டெசோ தலைவர் கலைஞர் தலைமையேற் றவுடன் ஆர்ப்பாட்டத்தின் தொடக் கமாக ராஜபக்சேவை கண்டித்து முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியம் தலைமையில் ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இலங்கையில் தமிழர் படு கொலைக்குக் காரணமான ராஜ பக்சே இந்தியாவிற்கு வருவதை கண்டிக்கிறோம். மத்திய அரசே தமிழின விரோதி ராஜபக்சே இந்திய மண்ணிற்கு வருவதை அனுமதிக் காதே, இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் கொலை வெறியன் ராஜபக்சே இந் தியா வர அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசே, மத்திய அரசே அனுமதிக்காதே அனுமதிக்காதே சர்வதேச போர்க் குற்றவாளி சிங்கள வெறியன் ராஜபக்சேவை இந்தியா மண்ணில் கால் வைக்க அனுமதிக் காதே என்ற கண்டன ஒலி முழக் கங்களை எழுப்பினர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களை தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் வரவேற்றார். கண் டன ஆர்ப்பாட்ட உரையை டெசோ அமைப்பு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீர பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகி யோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையை நிகழ்த்தினர். கண்டன ஆர்ப்பாட்ட தலைமையுரையை டெசோ தலைவர் கலைஞர் நிகழ்த்தினார்.
இதையடுத்து இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின் னர் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. டெசோ அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, க. பொன்முடி, தங்கம் தென் னரசு, பெரிய கருப்பன், முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், செல்வ கணபதி, சுகவனம், மற்றும் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிகுமார், சேகர்பாபு, மற்றும் கவிஞர் வா.மு. சேதுராமன், முத்துவாவாசி, விஜயா தாயன்பன், வழக்கறிஞர் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஆர்.டி. சேகர், சேப் பாக்கம் சுரேஷ், கடலூர் புகழேந்தி, சற்குணப்பாண்டியன், பூச்சி முருகன், கல்யாணசுந்தரம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திராவிடர் கழக சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் இரா. இரத்தினசாமி, செயலாளர் வெ. ஞான சேகரன், தலைமை செயற்குழு உறுப் பினர் திருமகள் மற்றும் வடசென்னை தென் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் - தோழியர்கள் திரளாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை பெறுவதற்கான மார்ச் 7-இல் டில்லியில் டெசோ மாநாடு
சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே இந்திய வருகையைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கறுப்புடை ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்ற டெசோ தலைவர் கலைஞர் அறிவிப்பு
சென்னை, பிப்.8, டெசோ அமைப்பு சார்பில் சென்னையில் சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று பேசிய டெசோ தலைவர் கலைஞர் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பெறுவதற் காக மார்ச் 7ஆம் தேதி டில்லியில்.. ஆம் னெஸ்டி இண்டர்நேஷனல், சேனல்-4 மனித உரிமைகள் கண்காணிப்பு ஆகிய அமைப்புகள் பங்கேற்கும் டெசோ மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகை யைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை (8.2.2013) டெசோ அமைப்பு சார்பில் கறுப்புடை அணிந்து நடை பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை:
பிரம்மாண்டமான கறுப்புச் சட்டைப் பேரணியை இந்த ஆர்ப்பாட்ட பேரணியை - அனைத்துலகமும் எதிர்க்கின்ற அளவிற்கு தமிழினத்தை பூண்டோடு அழிப்பேன் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேச போர்க்குற்றவாளி எனப்படுகின்ற ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நேற்றே நான் திருச்சியிலே நடைபெற்ற லட்சக் கணக்கான மக்கள் கூடிய மாபெரும் கூட்டத்தில் இன்று உங்கள் முன்னால் என்ன கருத்துகளை எடுத்துச் சொல்கிறேனோ, அவைகளையெல்லாம் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.
அதில் முக்கியமான ஒன்று, நம்முடைய தமிழர்களின் கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு, மொழி அனைத்தையும் அழித்திட கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபக் சேவினுடைய அரசு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நேற்று நான் அந்தக் கூட்டத்திலே விளக்கி, அதற்குச் சில எடுத்துக் காட்டுகளையும் எடுத்து வைத்தேன்.
குறிப்பாக, இங்கே ஸ்டாலின் பேசியதைப்போல, மற்றவர்கள் பேசியதைப்போல, நம்முடைய தமிழர்களுடைய இனம்தான் அழிக்கப்படுகிறது. ரத்தம்தான் மழையாக பொழிய வைக்கப்படுகிறது என்பது மாத்திரமல்லாமல், நான் கண்போல் காத்த அருமைத் தமிழ் அந்த மொழியும் அடையாளம் தெரியாமல் அங்கே ஆக்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக ராஜபக்சே கொடுங்கோலனால் அழிக்கப்பட்டு மாற்றுப் பெயர் பூண்டிருக்கின்ற காட்சியை நாம் காணு கின்றோம்.
கோவில்களும் கூடாது, தமிழர்களின் குடியிருப் பும் கூடாது. அங்கிருந்த தமிழ்க்கோவில்கள், தமிழர்களுடைய குடியிருப்புகள், அதுவும் போருக் குப் பிறகு, இது அமைதியான காலம், நாங்கள் அமைதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று ராஜபக்சே முழங்கிக் கொண்டிருக்கிறாரே, இதுதான் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய அமைதி. நம்முடைய நெஞ்சின் ஆழத்திலே பதிந்திருக்கின்ற தமிழ்ச் சொல்லை, தமிழ்ப் பெயரை அழித்துவிட்டு, சிங்கள மொழியில் பெயரிடுவது எதற்காக என்றால், ஊர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல; இப்படித்தான் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் அந்தக் காலத்திலே நம்முடைய இனத்தின், மொழியின் ஆக்கத்தைப் புதைப்பதற்காக மாற்றப்பட்டன.
ஸ்ரீரங்கம் - ஏற்கெனவே திருவரங்கமாக இருந் தது. அதை ஸ்ரீரங்கம் என்று மாற்றி ஸ்ரீ புகுந்து விட்டது.
திருவில்லிபுத்தூர் என்பது தமிழ்ப் பெயர். அதை ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஆக்கிவிட்டார்கள்.
திருப்பெரும்புதூர் என்பது உங்களுக்குத் தெரியும்; அதை ஸ்ரீபெரும்புதூர் என்று ஆக்கி னார்கள்.
இப்படி, இங்குள்ள இனப் பகைவர்கள் நம் முடைய தமிழ் பெயர்களுக்கெல்லாம் எதிரிகளாக இருந்து, ஸ்ரீயைப் புகுத்தி, வடமொழிச் சொல்லைப் புகுத்தி, மாற்றினார்களோ, அதைத்தான் ராஜபக்சே இலங்கையிலே, சிங்களப் பெயர்களை இன்றைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார், தமிழ்ப் பெயர்களை அழித்துவிட்டு. அப்படிப்பட்ட தமிழர்களுடைய கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு அனைத் தையும் அழித்துவிட்டோம் என்று இங்குள்ள வர்கள் சிலர் எப்படி கனவு காணுகிறார்களோ, அந்தக் கனவை அவர்களுடைய பிரதிபோல ராஜபக்சே கண்டுகொண்டிருக்கின்றார்.
அதற்குப் பாடம் கற்பிக்கத்தான் இன்றைக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இங்கே நாம் போராடுவதைப் போல, இந்தியா விலே வேறு சில பகுதிகளிலும் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களையெல் லாம் நான் வாழ்த்துகிறேன். அவர்களுக்கெல்லாம் என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
அதேநேரத்திலே, அவர்கள் இதை வாழ்த்துகின்ற பெருங்குணத்தை, பெருந்தன்மையைப் பெற வேண் டும் என்று பிரார்த்திக்கின்றேன். யாரை பிரார்த் திப்பது - அவர்களைத்தான் பிரார்த்திப்பேன்; அதற் காக நான் வேறு யாரையும் பிரார்த்திக்க முடியாது. எல்லோரும் ஒன்றாக இணைந்து போராடினால் வெற்றி பெற்றுவிடலாம்.
இதே கொள்கையை, இலங்கையிலே, தமிழ் ஈழத்திலே பின்பற்றி இருந்திருந்தால், இன்றைக்கு நாம் ராஜபக்சேவை எதிர்த்து ஒரு கூட்டம் போடவேண்டிய அவசியமே இருந்திருக்காது. தமிழ் ஈழம் என்றைக்கோ கிடைத்திருக்கும்.
அந்த ஒற்றுமையை, அந்த இனம் உள்ளவரை பெறுகின்ற காலம்தான், நாம் வெற்றிகளை உருவாக்கக் கூடிய காலமாகும்.
எனவே நாம் இப்போது நடத்துகின்ற இந்த ஆரம்பக் கட்டப் போராட்டங்கள் மட்டுமல்ல; ஏற்கெனவே டெசோ என்பது பல ஆண்டு காலத்திற்கு முன்பே அகில இந்தியத் தலைவர் களையெல்லாம் அழைத்து மாபெரும் மாநாடு நடத்திய இயக்கம். அந்த இயக்கத்தின் சார்பில் - இங்கே எனக்கு முன்னால் பேசிய நம்முடைய ஆசிரியர் அவர்களும் மற்றும் நம்முடைய டெசோ இயக்கத்தின் கண்மணிகளும் தெரிவித்தபடி, மார்ச் 7ஆம் தேதி டில்லித் தலைநகரத்தில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், சேனல் - 4, மனித உரிமைகள் கண்காணிப்பு ஆகிய அமைப்புகள் கலந்து கொள் ளும் வகையில் நமது டெசோ மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அதையொட்டி அங்கே நடைபெறுகின்ற கருத்தரங்கம் - டெல்லியிலே உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப் அரங்கில் நடை பெற இருக்கிறது. அந்த கருத்தரங்கில் - நடைபெற உள்ள கலந்துரையாடலில் நாம் என்ன முடிவுகள் எடுக்கப் போகிறோம் என்பது இன்றைய நமது போராட்டத்தின் எழுச்சியை ஒட்டியதாக - நமது உணர்வுகளின் படப்பிடிப்புகளாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்ற வகையில் நீங்களும் உங்க ளுடைய உள்ளங்களை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு; இந்த டெசோ இயக்கம் உருவாக்கி யிருக்கின்ற இந்த ஆர்வத்தை மேலும் மேலும் பெருக்குவதற்கு ஆக்கம் அளியுங்கள்! ஊக்கம் வழங்குங்கள்! என்று கேட்டு விடை பெறுகிறேன்.
- இவ்வாறு டெசோ தலைவர் கலைஞர் உரையாற்றினார்.
இந்தியா வரும் ராஜபக்சேவைக் கண்டித்து, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற கறுப்புடை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதி (8.2.2013)
இலங்கைத் தமிழர்களுக்கு தேறுதல் தருகின்ற கூட்டம்!
தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் மட்டுமல்ல;
இலங்கைத் தமிழர்களுக்கு தேறுதல் தருகின்ற கூட்டம்!
அங்குள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க தொடர்ந்து போராடுவோம்!
திருச்சி பொதுக் கூட்டத்தில் கலைஞர் உரை
திருச்சி, பிப்.8- திருச்சியில் நேற்று (7.2.2013) நடைபெற்ற மாபெரும் தேர்தல் நிதியளிப்பு விழாப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், ஈழத் தமிழர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அவர்களுடைய வாழ்வுக்கு நாம்தான் பாதுகாப்பு அரண். அங்குள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க நாம் தொடர்ந்து போராடுவோம், அகிம்சை வழியில் போராடுவோம் என்று குறிப்பிட்டார்.
திருச்சியில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து:-
நான் திருச்சிக்கு பல தடவை வந்திருக்கிறேன். இது முதல் முறையல்ல என்னுடைய அரசியல் பொது வாழ்வின் ஆரம்பமே திருச்சியிலேதான் அத்தகைய பெருமையை எனக்கு சேர்த்த திருச்சி நகரத்தில் கண்கொள்ளாக் காட்சியாக எந்தக் காலத்திலும் இல்லாத வகையிலே இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தைக் காணும்போது புதிய நம்பிக்கையோடு உங்கள் முன்னால் நான் அமர்ந்திருக்கிறேன். கழகத்தி னுடைய வலிவைப் பற்றி கழகத்தினுடைய எழுச் சியைப் பற்றி எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள், மாவட்டக் கழகத்தி னுடைய செயல்வீரர்கள் இங்கே எடுத்துக் கூறி பூரிப்படைந்தார்கள்.
பெரியார் பேசிய பேச்சின் ஒரு பகுதியை...
அந்த பூரிப்புக்கிடையே நான் சொல்வ தெல்லாம், பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஊர் திருச்சி. அதனால்தான் அவர் சென்னையிலே வாழ்ந் தாலும் அடிக்கடி திருச்சியை தன்னுடைய தங்குமிட மாக கொண்டிருந்தார். அப்படிப்பட்ட திருச்சி மாநகரத்தில் பெரியார் அவர்கள் அன்றைக்கு பேசிய ஒரு பேச்சின் பகுதியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சி ஆனாலும் எதற்கும் கலங்காமல் இன்றைக்கு தடந்தோள் தட்டி நிற்பது உண்மைதான்; இருந்தாலும் பெரியார் சொன்னதை நாம் மறக்க முடியவில்லை.
எவ்வளவு எழுச்சி இருந்தாலும் அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் அதை பாராட்டுகிறேன். எத்துணை ஆற்றலை நீங்கள் காட்டினாலும் அதை போற்றுகிறேன். ஆனால் கடமை, கண்ணியம், கட்டுப் பாடு என்று அண்ணாவினுடைய மூன்று பொன் மொழி களை நீங்கள் உச்சரிக்கும்பொழுது கடமை உங்களிடத்திலே இருக்கிறது. கண்ணியம் எல்லோரை யும் விட அதிகமாக உங்களிடத்திலே தவழுகிறது. ஆனால் கட்டுப்பாடு சில நேரங்களிலே குறைகிறது. அதையும் நீங்கள் போற்றி, பாராட்டி வாழ்வீர்களே யானால், இந்த இயக்கத்தை அசைக்க எந்த கொம்பனா லும் முடியாது என்று பெரியார் அவர்கள் சொன்னார் கள். அந்த பெரியாருடைய வாசகத்தை அந்த பொன் மொழியை, பொன்னேபோல் போற்றி, அதை செயலில் காட்டுகின்ற இடம் தமிழகத்திலே ஒன்று உண்டென் றால் நான் நம்புகின்ற இந்த திருச்சி மாவட்டம்தான்.
இலங்கை தமிழர்களைப் பற்றிய கவலை
இங்கேயுள்ள தமிழர்களைப் பற்றி நாம் கவலைப் படுகின்ற நேரத்தில், இலங்கைத் தமிழர்களைப் பற்றிய நம்முடைய கவலையை உலகத்திற்கு உணர்த்தியிருக் கிறோம். உலகத்திலே உள்ள நாடுகளுக்கெல்லாம் தெரியப்படுத்தி யிருக்கிறோம், தெரியப்படுத்தி வருகி றோம், மேலும் தெளிவுபடுத்துவோம். நம்முடைய தம்பிகள் ஸ்டாலின் மூலமும், டி.ஆர். பாலு மூலமும், டெசோ இயக்கத்தின் உறுப்பினர்கள் மூலமும் டெல்லியிலே சென்று அங்கே யுள்ள அயல்நாட்டுத் தூதுவர்களையெல்லாம் சந்தித்து, அதற்கு முன்பே அய்க்கிய நாடுகள் சபையிலே உள்ள செயலாளர் களைச் சந்தித்து இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு போர் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள துன்பங்களை யெல்லாம் எடுத்துரைத்து, அவர்களுடைய நல் வாழ் வுக்கு வழி காண வேண்டும், அவர்களுடைய வாழ் வாதாரங்களை வளப்படுத்த வேண்டும், வலுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்துக் கொண் டிருக்கிறோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக 56 ஆண்டுகளுக்கு மேல் போராடுகிறோம்!
அப்படிப்பட்ட கோரிக்கை வைப்பதற்கு நாம் முயலுகிற நேரத்தில், நடவடிக்கை எடுக்கிற நேரத்தில் தமிழ் நாட்டிலேயே சில பேர் அதற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஏனென்றால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கு விரோதிகள் என்று காட்டி, தாங்கள் நடத்திய பிழைப்பை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக நம்மை இலங்கைத் தமிழர்களுக்கு விரோதிகள் என்பதைப் போலக் காட்டுகிறார்கள்.
56 ஆண்டு காலத்திற்கு மேல் இலங்கையிலே வாழ்கின்ற தமிழர்களுக்கு, அதிலும் அங்கேயுள்ள ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும், பேச்சுரிமை வேண்டும், ஜனநாயக உரிமை வேண்டும், ஈழத் தமிழகத்திலே அவர்கள் இருக்க நிரந்தரமான இடம் வேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும், அதைக் குலைக்கின்ற வகையிலே நடைபெறுகின்ற சிங்கள அரசுக்கு நாம் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் தேர்தலிலே வெற்றி பெறுவதற்காக - தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் மீது நாம் ஏதோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை, அங்கே போர் நடைபெற்ற போது, அதை நாம் கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ அவர்கள் எல்லாம் அதைக் கவனித்து நடவடிக்கை எடுத்து, கடற்கரையிலிருந்து கையிலே துப்பாக்கி ஏந்தி இலங்கையிலே நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் போல நம்மையெல்லாம் அந்தப் போரிலே கலந்து கொள்ளாதவர்கள் என்று சொல்கிறார்கள். உண்மை தான், நாம் போரில் கலந்து கொள்ளவில்லை. ஏனென் றால் இந்தியா ஒரு நாடு - இலங்கை ஒரு நாடு. இந்த இரு நாடுகளுக்கும் இடையே பல நேரங்களில் ஒப்பந்தங்கள் ஏற்பட முயற்சிகள் முடுக்கி விடப்பட்டு அது நடைபெறாமலே போய் விட்டது. தமிழ்நாட் டைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களுக் காக எடுக்கப்பட்ட முயற்சிகள் ஒவ்வொன்றும் இடையிலே பட்டுப் போய் விட்டன. அதற்குக் காரணம் நாம் அல்ல; ஈழத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என்று யார் பேசினார்களோ, அவர்கள் தான் ஈழத் தமிழர்களை இரு கூறாக்கி, தமிழ்நாட்டிலும் அதற்கு அரசியல் வண்ணம் பூசி நம்மிடத்திலே இருந்த அவர்களைப் பிரிக்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு கேடு விளைவித்தவர்கள் - அவர்களுக்காக ஆதரவு தருவது போல இன்றைக்குப் பேசிக் கொண்டிருக் கிறார்கள். ஈழத்திலே இப்போது நம் தமிழ்மொழியை கொல்கிறார்கள்
அதிலும் தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து செய்து வருகின்ற காரியங்களை மக்கள் மனதிலே பதிய வைக்க வேண்டும்.
மக்கள் மனம் மாறக் கூடியது. அப்படிப்பட்ட மனம் படைத்த மக்களிடத் திலே வரலாற்றுச் சான்றுகளைச் சொல்லி, ஈழத் தமிழர் களுக்காக உண்மையிலேயே போராடி யவர்கள் யார்? ஈழத் தமிழர்களுக்காக வெறும் பேச்சளவிலே குரல் எழுப்புகிறவர்கள் யார்? ஆவேச மாகப் பேசினால், அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிப் பவர்கள் என்று பொருள் அல்ல. என்னைப் போல அடக்கமாகவோ, அமைதியாகவோ பேசினால், நாம் கோழைத்தனம் உள்ளவர்கள், ஈழத்திற்காக நாம் குரல் கொடுக்க வில்லை என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்வதற்கில்லை.
எனவே ஈழத்திலே நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு, லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட பிறகு அவர்களுடைய சதையும் எலும்பும் யாழ்ப் பாண வீதிகளில் - அங்கே சிதறிக் கிடக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்ட பிறகு, அந்தக் கொடுமைக்குப் பிறகும், அவர்கள் விடுதலை என்பதை எண்ணிப் பார்க்கக் கூடாது என்பதற்காக - சுதந்திரம் என்பதை அவர்கள் சொல்லிப் பார்க்கக் கூடாது என்பதற்காக அவர்கள் ஜனநாய கத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதற்காக இப் பொழுது சிங்களத்திலே நடைபெறுகின்ற கொடுமை என்னவென்றால், பத்து பேரைக் கொன்றால் கூட அது பெரிதல்ல, அங்கே அவர்கள் நம் தமிழ் மொழியையே கொன்று கொண் டிருக்கிறார்கள். அவர்களுடைய மொழி உணர்வை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், நான் பத்திரிகையிலே கூட எழுதியிருக்கிறேன். இலங் கையில் தமிழ் இன உணர்வை சாகடிக்க வேண்டும் என்பதில் இது வரையிலே சாகடிக்கப்பட்ட தமிழர் களின் பிணங்கள் எல்லாம் போதாதென்று, இலங் கையிலே தமிழிலே பெயரிடப்பட்டிருந்த கிராமங் களின் பெயர்களை எல்லாம் சிங்கள மொழிக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பிரதமரிடம் முறையிட்டால், மத்திய அரசிடம் முறையிட்டால், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முறையிட்டால் அவர்கள் கவனிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் கவனித்தார்களா என்றால் இல்லை. இலங்கை யிலே தமிழிலே பெயரிடப்பட்ட நகரங்கள், தமிழிலே இருந்து சிங்கள மொழிக்கு மாற்றப்பட்ட கொடுமை யைப் பார்க்கும்போது கல்லக்குடி போராட்டம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயரை டால்மியாபுரம் என்று மாற்றினார்கள். அதை எதிர்ப்பதில் எனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்ததோ, எவ்வளவு உணர்வு இருந்ததோ, அதே உணர்வு இப்போது நான் படிக்கின்ற இந்த ஊர்களின் பெயர்களை மாற்றுகின்ற நேரத்திலே அங்கேயுள்ள ஈழத் தமிழர்களுக்கு உருவாகாதா? நெடுங்கால்வேட்டை என்றிருந்த தமிழ்ப் பெயரை கடந்த வாரம் ரித்தி தெண்ணா என்று மாற்றியிருக்கிறார்கள்.
ஆலங்குளம் என்ற அழகான தமிழ்ப் பெயரை மாற்றி கெம்புருவெணா என்று மாற்றியிருக்கிறார்கள். முத்தூர் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, அந்தக் கிராமத்துக்கு மூடுதரா என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள். தோப்பூர் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, துபாபுறா என்று ஆக்கியிருக்கிறார்கள். பெரிய விளாங்குளம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, மகத்திவுள்வேனா என்று சிங்கள பெயரை சூட்டி யிருக்கிறார்கள். கொக்குவில் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, கோகாவிலா என்று ஆக்கி யிருக்கிறார்கள். மல்லகம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, வல்லகாமா என்று ஆக்கியிருக்கிறார்கள். கந்தர்ஓடை என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, கத்துருகோடா என்று ஆக்கியிருக்கிறார்கள். பருத்தித் துறை என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, நாள்தோறும் நாம் உச்சரித்த அந்தப் பெயரை மாற்றி பெத்துரு தோடுவா என்று ஆக்கி யிருக்கிறார்கள். கட்டைக் காடு என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, கதேக்கடுவா என்று ஆக்கியிருக்கிறார்கள்.
ஆனையிரவு, அடிக்கடி நீங்கள் பத்திரிகைகளிலே பார்க்கும் பெயர், அந்தத் தமிழ்ப் பெயரை மாற்றி, அலிமாண்டு கடுவா என்று ஆக்கியிருக்கிறார்கள். கிளிநொச்சி பத்திரிகைகளிலே நாம் பார்க்கும் தமிழ்ப் பெயரை மாற்றி, கிரணிக்கா என்று ஆக்கியிருக் கிறார்கள். வெண்ணீர்குளம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, வண்ணாவீவா என்று ஆக்கியிருக்கிறார்கள். கள்ளிஓடை என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, கல்லி யாடா என்று ஆக்கி யிருக்கிறார்கள். முல்லைத்தீவு, எவ்வளவு அழகான பெயர் அந்தத் தமிழ்ப் பெயரை மாற்றி, முலடுவா என்று மாற்றியிருக்கிறார்கள். மாங்குளம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, மயூரவிவா என்று ஆக்கியிருக்கிறார்கள். வவுனியா என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, வன்னிமாவா என்று ஆக்கியிருக் கிறார்கள். கோவில் குடியிருப்பு என்ற தமிழ்ப் பெயர், கோவிக்குளிசா என்று ஆக்கப்பட்டிருக்கிறது. புளியங்குளம் என்ற தமிழ்ப் பெயர், கொட்டியேவேவா என்று ஆக்கப்பட்டிருக் கிறது.
தமிழன் சிங்களவனாக ஆக்கப்பட முதலிலே மொழியிலே கை வைத்திருக்கிறார்கள். இப்படி மொழி யிலே கை வைத்து, கிட்டத்தட்ட 89 ஊர்களை பெயர் மாற்றியிருக்கின்ற இந்தக் கொடிய நிகழ்ச்சியை, மொழி வெறியைக் குறித்து சுட்டிக்காட்டி, நம் முடைய இந்தியப் பிரதமர் அவர்களுக்கும், அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். கவனிக்கிறோம் என்று பதிலும் எழுதியிருக்கிறார்கள். பதிலே வராமல் இருந்த காலம் போய் கவனிக்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது. கவனிக்கிறார்களா அல்லது நாம்தான் கவனிக்க வேண்டுமா என்ற அந்தக் கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
இதைச் சொல்வதற்குக் காரணம், இலங்கையிலே, தமிழீழத்திலே நாம் வேண்டுவது, அங்கே சிங்கள அதிபர் சொன்னதைப் போல, வெறும் விடுதலை அல்ல, நாம் கேட்பது சுயாட்சி. அந்தச் சுயாட்சி, அங்கேயுள்ள தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வை, வாழ்வாதாரத்தைக் கெட்டிப்படுத்த நாம் வைக்கின்ற கோஷம். அதற்குக் கூட அங்கே இடம் இல்லை. இவைகளையெல்லாம் எடுத்துச் சொல்லித் தான் நம்முடைய கழகத்தின் சார்பில் டெல்லிக்குச் சென்று டெசோ சார்பில் அங்கேயுள்ள வெளிநாட்டுத் தூது வர்களைச் சந்தித்து இந்தச் செய்திகளையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், இதைப் பார்த்து வியப்புற்றவர்கள் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியிருக் கிறார்கள். விரைவில் இது பற்றி ஒரு பெரிய கருத் தரங்கம் டெல்லியிலே கூட இருக்கிறது. அந்தக் கருத் தரங்கில் இந்தியாவிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அங்கே ஈழத் தமிழர் களுக்காக தமிழர்களுடைய குரல் ஒலிக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒலிக்கும், டெசோ சார்பாக ஒலிக்கும். டெசோவில் இருக்கின்ற கட்சிகளின் சார்பாக ஒலிக்கும் என்று நான் கூறுகிறேன். எனவே இலங்கைத் தமிழர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப் பட்டவர்கள். அவர்களுடைய வாழ்வுக்கு நாம் தான் பாதுகாப்பு அரண். அந்தத் தமிழ் ஈழத்தை அந்தத் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடிய பெரும் பொறுப்பினை நாம் ஏற்றிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் தட்டிக் கழிக்க மாட்டோம். கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களை எல்லாம் நான் விவரிக்க விரும்பவில்லை. அது உங்களுக்கே தெரிந்த காரணங்கள். நம்மிடத்திலே கட்டுப்பாடு இல்லாத காரணங்கள், ஒற்றுமை இல்லாத காரணத்தால் அவர்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் மூலமாக தங்களுடைய பைகளை நிரப்பிக் கொண்ட சில பகைவர்களின் சூழ்ச்சியினால் சூது வலையிலே சிக்கிய காரணத்தால் அங்கே நாம் ஒரு போரில் உரிமைகளை இழந்தோம், நம்முடைய உடைமைகளை இழந்தோம், நம்முடைய சுதந்திரத்தை இழந்தோம். சுதந்திரத்தை ஒரு முறை இழந்து விட்டால், நிரந்தரமாக இழந்ததாக அர்த்தம் அல்ல. மீண்டும் அதைப் பெறுவதற்காகப் போராடு வோம். அமைதியாகப் போராடுவோம், அகிம்சா வழியிலே போராடுவோம், போராடிக் கொண்டே இருப்போம். அதில் நம்மை நாமே தியாகம் செய்ய வேண்டி வந்தால், அந்தத் தியாகத்தைச் செய்வோம் என்பதைத் தெரிவித்து, வெறும் தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் மாத்திரம் அல்ல, இந்தக் கூட்டத்திலே இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு தேறுதல் தருகின்ற கூட்டமும் இது. எனவே ஈழத் திலே வாழ்கின்ற தமிழர்களுக்கு தேறுதல் அளிக்கின்ற கூட்டம், இந்தக் கூட்டம் என்பதை எடுத்துச் சொல்லி, திருச்சியிலே நீங்கள் தந்துள்ள இந்த எழுச்சி, நீங்கள் வழங்கியுள்ள இந்த மகிழ்ச்சி, நீங்கள் உருவாக்கியுள்ள இந்த உணர்ச்சி என்றென்றும் 90 வயது நிரம்பிய என்னை நீண்ட காலம் வாழ வைப்பதற்கு நிச்சயமாகத் தூண்டுதலாக இருக்கும் என்று கூறி விடை பெறுகிறேன். - இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
கடவுள் சக்தி எங்கே?
கிறித்துவ கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!
குடியாத்தம், பிப். 8- குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே கோவில் உண்டியலை உடைத்துப் பணம் கொள்ளையடித்துச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் கிறித்துவ கோவில் உள்ளது. அதன் நிருவாகிகள் நேற்று காலை கோவிலுக்கு வந்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி யடைந்தனர். உண்டியலில் இருந்த பணமும், அங்கிருந்த கணினியையும் கொள்ளையர்கள் கொள்ளையடித் துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கோவில் நிருவாகி கள் குடியாத்தம் நகர காவல் நிலையத் தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும், வேலூரில் இருந்து கைரேகை நிபுணர் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளைப் பதிவு செய்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, கொள்ளை யடித்துச் சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
திருடு நடைபெற்ற கிறித்துவ கோவி லில் உள்ள உண்டியலை திறந்து மூன்று மாதத்திற்குமேல் ஆகிறது. எனவே, உண்டியலில் இருந்து பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளைய டிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப் படுகிறது.
சுமார் 15 நாள்களுக்கு முன்பு செதுக்கரை வைத்தீஸ்வரன் நகர் அருகில் உள்ள ஒரு கிறித்துவ கோவி லில் பீரோவில் இருந்து அய்ந்து சவரன் நகையை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
தன் உண்டியலையே காத்துக் கொள்ள முடியாத கடவுளின் சக்தியை என்னவென்று சொல்வது?
கோவில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கண்ணமங்கலம், பிப். 8- கண்ண மங்கலத்தில் கோவில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவர்களை காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் லட்சுமி நாரா யண பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நாள்தோறும் பூஜை நடைபெறுவது வழக்கமாம். பிப்ரவரி 2 ஆம் தேதி காலை வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு, பகல் 12 மணிக் குக் கோவிலை பூட்டிவிட்டுச் சென் றார்களாம்.
உள்கதவை மட்டும் பூட்டிவிட்டு, வெளி கேட்டை பூட்டாமல் சென் றுள்ளனர். பின்னர் 2.45 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் மூலஸ்தான கதவின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததாம். உள்ளே வைத்திருந்த வெள்ளி ஜடாரி மற்றும் வெள்ளியால் ஆன பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்கள் ஆகிய வற்றை காணவில்லையாம்.
இதுகுறித்து உடனடியாக கண்ண மங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப். 8- இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் சங்கச் செயலாளர் அறிவழகன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா, துணைத் தலைவர் நளினி, வழக் குரைஞர்கள் பழனிமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் வழக்குரைஞர்கள் என்எஸ்சி போஸ் சாலையில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடவுள் கற்பிக்கப்பட்டதே
இந்த உலகில் நீதியையும் ஒழுக்கத்தையும் நிலை நாட்ட வேண்டுமென்றால் கடவுள் இருந்தேயாக வேண்டும் என்ற தத்துவத்தையும் ரசல் கேலியோடு மறுத்துள்ளார்.
தனக்கு தெரிந்தவரையில் இந்த உலகில் நீதி என்பதே எங்கும் கிடையாது என்றார். ஏனெனில் நல்லவர்கள் அல்லலுறுகின்றார்கள். கொடியவர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள். ஒழுக்கம், நீதி என்பவைகளுக்காக ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்பதிற்குப் பதிலாக; ஒழுக்கக்கேடும், அநீதியும் இருப்பதாலேயே கடவுள் என்ற ஒருவர் இருக்க முடியாது என்பதாகின்றது.
மக்கள் கடவுளை நம்புவதற்குரிய காரணம் அவர்கள் இளமையிலிருந்தே கடவுளை நம்பும் படி கற்பிக்கப்பட்டுள்ளனர் என விளக்கியுள்ளார்.
இதுதான் இந்தியா!
ஆத்தூர் அருகே 8 வயது சிறுவன் கை கால் துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந் தான். கடந்த 18ஆம் தேதி வெங்கடேசன் என்ற அந்தச் சிறுவன் வீட்டுமுன் விளை யாடிக் கொண்டிருந்தான். அவன் திடீ ரெனக் காணாமல் போய் விட்டான். அடுத்தநாள் புதன் கிழமை இச் சிறுவன் ஒரு கரும்பு தோட்டத்தில் கொலை செய்யப் பட்டுக் கிடந்தான். கை கால்கள் துண்டிக் கப்பட்டும், ஆண்குறி அறுக்கப்பட்டும் இருந்ததாம். மண்டை ஓடு உடைக்கப்பட்டு இருந்ததாம். காவல்துறையினர் இது நர பலியா என விசாரித்து வருகிறார்களாம்.
இதற்கு சில தினங்களுக்கு முன் கிச்சி பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு சிறு வனும் மர்மமான முறையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
- தினமலர், டிச.24, 1982
யஜுர் வேதத்தில் எப்படிப்பட்டவர்களை நரபலி கொடுக்க வேண்டுமென தனி அத் தியாயம் உள்ளது. இந்த நரபலி சடங்கு களுக்கு புருஷ-மேதா என்று பெயரிடப் பட்டுள்ளது. சுமார் 179 நரபலி வகைகளை யஜுர் வேதம் விவரிக்கிறது.
அஸ்மேதா யாகத்தை முடிக்க இறுதி யில் புருஷமேதா (நரபலி) சடங்கு செய்ய வேண்டும். ஒரு மனித பலியைக் கொடுத் தால் தேவி 100 ஆண்டுகள் மகிழ்ச்சி அடைவாள். மூன்று மனித பலியைக் கொடுத்தால் தேவி 1000 ஆண்டு மகிழ்ச்சி அடைவாள். தலையும், சதையும் தான் தேவிக்கு பிரியம். அதை வெட்டி தேவிக்கு காணிக்கை ஆக்க வேண்டும்.
- காளிகா புராணம்
மாண்புக்கும் முன்னேற்றத்திற்கும் இடமில்லாத இந்த தேக்கமான செயலற்ற வாழ்க்கை, நேர்மாறான விளைவுகளை உண்டாக்கி குறியோ, நெறியோ இல்லாத அழிவுச் சக்திகளை தாண்டவமாடச் செய்து நரபலியையே இந்துஸ்தானத்தின் மதச் சடங்காக ஆக்கியது என்பதையும் மறந்து விடக்கூடாது.
- (இந்தியாவைப் பற்றி காரல்மார்க்ஸ், பக்கம் 28)
வேலாயுதும், சூலாயுதம், கத்தி, கட்டாரி, கொடுவாள் கொலை, பலி, சம்காரம் என்ற ஆரியவேத புராண காட்டுமிராண்டி தத்துவங்களை புனிதமான மதம் என்று பரப்புவதற்கு இங்கே ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டு, மற்றொரு புறம் அதனை உண்மை என நம்பி பலன் காண ஈடுபடும் அப்பாவி மக்களை மட்டும் தண்டிப்பதால் இத்தொடர் கதை முடியுமா?
- டாக்டர் ஆர்.அசோகன், அறந்தாங்கி - 614 616
நாத்திகத்தின் மனிதாபிமானம்!
அன்பு நிறைந்த திரு.தேவசகாயம் அவர்களுக்கு, நாராயணன் எழுதிக் கொண்டது. நலம், நலம் காண விரும்புகிறேன். கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று சென்னை யிலிருந்து பயணமாகி வந்த எங்கள் கார் சமயபுரம் அருகே பழுதாகி நின்ற பொழுது தங்கள் உதவியை என்றென்றும் மறக்க முடியாது. தங்களுக்கு பல வேலைகள் இருந்தும்,பயணம் செய்ய வேண்டிய நிலையிலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தங்கள் பயணம் தாமதமானாலும், தங்கள் காரோட்டியை கொண்டு எனது காரை பழுது பார்த்து ஓட்ட முயற்சித்தது எப்பொழுதும் நினைவில் வைத் திருக்கக்கூடியது. கார் பழுது நீக்க முடியாத நிலை என்றும் தெரிந்ததும், தங்கள் அசவுகரியத்தைக் கூட கருதாமல் என்னையும் என் குடும்பத்தாரையும் திருச்சி வரை கொண்டு வந்து சேர்ப்பித்தமைக்கு எந்தவிதத்தில் நன்றி செலுத்துவது என்றே தெரிய வில்லை. மனிதாபிமானத்துடன் உதவி செய்பவர்கள் தங்களைப் போன்ற சிலரே. சமயமறிந்து தாங்கள் செய்த உதவிக்கு, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கு மனமுவந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் சென்னை வரும் சமயத்தில் தங்களை சந்திக்க மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.
தங்கள் அன்புள்ள
Secretary of the Board
Chetinadu Cement Corporation Ltd.
குறிப்பு: திரு. நாராயணன் அவர்கள் அய்யர் என்று தெரிந்திருந்தும் மதுரை தேவசகாயம் அவர்கள் நடுக்காட்டில் தத்தளித்து அல்லல்பட்ட அக்குடும்பத் தினர்க்கு உற்ற நேரத்தில் உதவி புரிந்துள்ளார். கடவுள் மறுப்பாளர்களான தந்தை பெரியாரின் தொண்டர்கள் எத்தகைய மனிதாபிமானிகள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாவது உணர்ந்து கொண்டால் சரி.
புரட்சிக்கவிஞரின் சிந்தனைகள் பொருளே குறிக்கோள்
பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும் மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கேயன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை, பெரியதொரு சடங்குண்டே! மந்திரமுண்டே! அந்தஎலாம் செய்யத்தான் வேண்டும் ஆனால் பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்தமட்டும் கொடுக்கணுமோ குடுக்க வேணும் என்றுரைத்தான் எல்லாரும் சிரிப்பில் ஆழ்ந்தார்
- எனக் கவிஞர் மந்தரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பனனின் செயலை எள்ளி நகையாடுவது நகைப்பை விளைக்கிறது.
தமிழ்த் திரைப்படம்
தமிழ் திரைப்படத்தின் தகுதியைத் திறனாய்வு செய்யும் போக்கில் எள்ளி நகையாடுகிறார். அத்திம்பேர், அம்மாமி எனப் பேசும் ஆரியத் தமிழும், கடவுளர்கள். அட்டை மூடி, காகிதப் பூஞ்சோலை, கண்ணாடி, முத்துவடம் முதலான காட்சிகளும் தமிழ் படத்தில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கின்றன. புதமை சிறிதும் இல்லை, பரமசிவன் அருள்புரிய வந்து வந்து போவார், கற்புடையப் பெண்களுக்குத் துன்பம் வரும் பின் தீரும்
இதுதான் இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலை என உரைப்பதன் வாயிலாக நகைச்சுவையை புகட்டுகிறார் கவிஞர்.
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)
அண்ணாவை அவமானப்படுத்தாதீர்கள்!
வாராழி கலசக் கொங்கை வஞ்சி போல் மருங்குலாள் தன் தாராழிக் கலை சார் அல்குல் தடங்கடற்கு உவமை....
. "தக்கவனே என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றன! அவளுடைய அல்குலோ (பெண்ணின் பிறப்புறுப்பு) தடங்கடற்கு உவமை!
அவளைத் தேடிக் கண்டு பிடித்து வருவாயாக!" என்று இராமபிரான் அனுமனிடம் சொல்லுவதாக கம்பர் பாடல் இயற்றியுள்ளார்.
செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன் என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கை களுக்கு உவமை தேடிப்பார்க்கிறேன. அவைகட்கு இணையாக உலகில் ஒரு பொருளும் இல்லை.அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என இராமன் கேட்பதாக கம்பர் எழுதி யிருக்கிறார்! உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட தன் மனைவியின் கொங் கையையும் மறை விடத்தையும் வேறொ ருவனிடம் வர்ணிக்க மாட்டான்!.என்று "திராவிநாடு" இதழில் கம்பராமாய ணத்தைப்பற்றி எழுதியவர் அறிஞர் அண்ணா. பின்னர் அது "கம்பரசம்" எனும் தலைப்பில் நூலாக வெளி வந்த போது "கம்பன் தமிழரின் கலையையும், நிலையையும், குலைக்கும் ஆரியத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என்பதற்காக எத்தகைய ரசத்தை கவி தையிலே கூட்டியிருக்கிறார் என்பதைக் கண்டு, சரியா?அது முறையா? என்பது பற்றி ஓர் தீர்ப்பளியுங்கள்!"என்று முன்னுரை எழுதினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைத்தாங்கிய கட்சி யின் ஆட்சியில் கம்பர் விருது வழங்கப் போவதாக அறிவித்துள்ளது மானக் கேடு!
- கி.தளபதிராஜ்
Post a Comment