Search This Blog

21.2.13

காவித் தீவிரவாதம் பொய்யா?

 
காவித் தீவிரவாதம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் கூறிவிட்டாராம். ஆகா, அமைதியின் சொரூபமான எங்களைப் பார்த்து நாக்கின் மேல் பல்லைப் போட்டுச் சொல்லலாமா? எங்களைவிட அகிம்சாமூர்த்திகள் உலகில் உண்டா என்று சூலத்தைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளது - சங்பரிவார்கள் கும்பலும் - அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யும்.

இன்றைய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மட்டுமல்ல; இதற்குமுன் உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் அவர்களும் இதே குற்றச்சாற்றை வைத்ததுண்டு.

நாடாளுமன்றம் நடக்கவிருக்கும் கால கட்டத்தில் அவை சுமுகமாக நடக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக உள்துறை அமைச்சர் ஷிண்டே நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; நான் கூறியதன் காரணமாக யார் மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று கூறித் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனை வைத்துக் கொண்டு, பார், பார், நாங்கள் உத்தமப் புத்திரர்கள் என்று காவிக் கூட்டம் மார்தட்டுமானால், அதனை விடப் பரிதாபம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் ஒவ்வொரு முறையும் ரகளையில் எதிர்க்கட்சியான பி.ஜே.பி. ஈடுபட்டு வருவதை வாக்காளப் பொது மக்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதான் உள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியது, பிரச்சினைகளை எடுத்துக் கூறத்தானே தவிர, நாடாளு மன்றத்தையே செயல்பட விடாமல் முடக்கு வதற்கல்ல.
ஷிண்டேயின் வருத்தம் தெரிவிப்பு மூலம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் எதிர்க்கட்சியான பி.ஜே.பி.க்கு அதில் நம்பிக்கை இல்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.

காவிப் பயங்கரவாதம் பற்றி உள்துறை அமைச்சர் கூறியதற்குப் போதுமான தக்க ஆதாரங்கள் உண்டு என்று உள்துறை மூத்த செயலாளர் ஆர்.கே.சிங் அய்.ஏ.எஸ். கூறியுள்ளாரே! அவர் என்ன அரசியல்வாதியா? சகல தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டி ருக்கும் இடத்தில் இருக்கக் கூடிய அதிகாரி யாயிற்றே!

எந்த அளவுக்குக் காவிப் பயங்கரவாதம் நிர்வாண கோலத்தில் தாண்டவம் ஆடுகிறது என்பதற்கு மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று போதாதா?

இராணுவத் துறையில்கூட ஊடுருவி இருக் கிறார்களே, இராணுவத்துறையில் மட்டும் கிடைக் கும் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து இவர்களுக்கு எப்படி கிடைத்தது?

இராணுவக் கல்லூரி வைத்து, சங் பரிவார்க் கும்பலுக்குப் பயிற்சி கொடுப்பதும் இவர்கள்தானே!

மாலேகான் குண்டு வெடிப்பில் உண்மைக்கு மாறாக வழக்கை திசை திருப்பிய நிலையில், அதன் உண்மையைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி ஹேமந்த்கார்கரே சுட்டுக் கொல்லப் பட்டது எப்படி? அதன் பின்னணியில் இருந்த வர்கள் யார்? என்ற கேள்வியை மத்திய அமைச்சராக இருந்த அப்துல் ரகுமான் அந்துலே நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லையா?

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் யார்? நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம் என்று மக்களவையில் அதிகாரப் பூர்வமான எதிர்க் கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாகச் சொல்லவில்லையா?
இந்த நிலையில் காவித் தீவிரவாதிகள் என்று சொன்னதும் ரோஷம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டதுபோலும்!

ஊருக்கு ஊர் திரிசூலங்களை மக்களுக்கு வழங்கி வன்முறையைத் தூண்டும் வி.எச்.பி. காவிக் கூட்டத்தைச் சேர்ந்தது அல்லவா? உண்மையைச் சொன்னால் எரிச்சலா?

உள்துறை அமைச்சர் ஷிண்டே குறிப்பிட்ட காரணத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் வெகு மக்களுக்குக் காவி தீவிரவாதம்பற்றி மிக நன்றாகவே தெரியும்.

               -------------------------"விடுதலை” தலையங்கம் 21-2-2013

23 comments:

தமிழ் ஓவியா said...


மோடியைப்பற்றி கட்ஜு விமர்சித்ததற்கு பதவி விலகச் சொல்லும் அருண்ஜெட்லிகள்


மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சொன்னபோது எங்கே போயிருந்தனர்?

ராஜ தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி சொன்னதற்கு என்ன பொருள்?

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு விமர்சனம் செய்ததற்காகப் பதவி விலக வேண் டும் என்று கூறும் அருண்ஜெட்லிகள், குஜராத் முதல்வர் மோடி ராஜதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த நிலையில் வாஜ்பேயி சொன்னாரே, அதற்குப் பொருள் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக் கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!

பரந்துபட்ட இந்தியத் துணைக் கண்டத்துக்கு இந்துத்துவா பொருந்துமா?

பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?

என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்
என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்

என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?

எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?

பிரஸ் கவுன்சில் தலைவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா?

பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!

அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!

இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?

பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?

அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிட வில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?

வாஜ்பேயி மோடியின் ராஜ தர்மம்பற்றி சுட்டிக் காட்டவில்லையா?

குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?

கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?

அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?

சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?

மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.2.2013

தமிழ் ஓவியா said...


இறுதிப் போரில் சிங்கள வீரர்கள் வெறியாட்டம்: சானல்-4 தொலைக்காட்சியிடம் புதிய வீடியோ ஆதாரம்


லண்டன், பிப்.21- பிரபாகரன் மகன் பால சந்திரனை சிங்கள ராணுவத்தினர் பிடித்து வைத்து கொன்ற வீடியோ ஆதாரத்தை இங்கிலாந்து டி.வி.யான சானல்-4 வெளியிட்டது. தற்போது இந்த நிறு வனம் புதிய ஆவண படம் ஒன்றை தயாரித் துள்ளது. நோ பயர் சோன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம் 90 நிமிடம் ஓடுகிறது. இலங்கை இறுதிகட்ட போரின்போது நோ பயர்சோன் என்று அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக் குதல் நடத்தின என்பது பற்றிய முழு விபரங் களும், அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணப் படத்தை கெல்லம் மெக் கரே என்பவர் தயாரித் துள்ளார். அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் இது வெளியிடப்பட உள்ளதாக கெல்லம் மெக்கரே தெரிவித்துள் ளார். இந்தப் படத்தின் பல்வேறு புதிய காட் சிகளும், போரின் பின்னணி குறித்த கூடுதல் விவரங்களும் இணைக் கப்பட்டிருப்ப தாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, இந்த ஆவணப் படம் இலங்கையில் போர் குற்றம் நடந்த தற்கான முழு ஆதார மாக இருக் கும். இதை பார்த்தால் அங்கு என்ன போர்க் குற்றங்கள் நடந் தன என்பது தெளிவாக தெரியும் என்றும் கூறினார். இந்த ஆவண படத்தின் முக்கிய காட்சி களை அடுத்த வாரம் டில்லியில் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் காண்பிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


இதுதான் இந்தியா!இந்தியாவில் பாலியல் வன்முறை வழக்குகளில் 42 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிக்கியுள்ளனர்.எச்சரிக்கை!

சென்னை நகரின் நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல; நோய் பரப்பும் தன்மை உடையது என்று தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிராக அய்.நா. தீர்மானம் : மத்திய அரசு ஆதரிக்கும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டி


திண்டுக்கல், பிப்.21- மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், திண்டுக்கல்லில் 19ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்களர்களை போலவே இலங்கை தமிழர்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடி அமர்த்த வேண்டும். தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதில், அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தில், அதற்கு எதிராக மத்திய அரசு வாக்களித்தது போல அய்.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்தாலும், தமிழர்களின் நலன் கருதி அதை எதிர்த்து வாக்களிக்க இந்தியா தயங்காது. மத்திய அரசை பொறுத்த வரையில், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் பாதிக்கப்படாமல் இருக்க இலங்கை அரசை தட்டிக்கேட்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. ராஜபக்சே இந்தியா வருவது என்பது தனிப்பட்ட விஷயம். எதிர்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் தான், அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் வரவேற்கவில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மீண்டும் மோடிக்கு மூக்கறுப்பு அமெரிக்கா விசா மறுப்பு


புதுடில்லி, பிப்.21- குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் நரேந்திர மோடி விடுவிக் கப்படாதவரை அவ ருக்கு விசா தருவதில்லை என்ற கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராபர்ட் ப்ளேக் தெரி வித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான் மையினர் கொல்லப் பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய தாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றச் சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அய்ரோப் பிய கூட்டமைப்பு, இங் கிலாந்து மற்றும் அமெ ரிக்கா ஆகிய நாடுகள் நரேந்திர மோடிக்கு தடை விதித்தன.

இந்த நாடுகளுக்கு செல்ல அவருக்கு விசா மறுக் கப்பட்டது. இந்நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் குஜராத் மாநில முதல்வராக 4ஆவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற் றுக் கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட லாம் என செய்திகள் வெளியாயின. இதை தொடர்ந்து நரேந்திர மோடிக்கு விதிக்கப் பட்ட தடையை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்ட மைப்பு நாடுகள் விலக் கிக் கொண்டன. அய்ரோப்பிய கூட்ட மைப்பை தொடர்ந்து அமெரிக்காவும் மோடி புறக்கணிப்பை விலக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நரேந் திரமோடிக்கு விசா மறுக்கும் விவகாரத்தில் அமெரிக்க நிலையில் மாற்றம் இல்லை என அந்நாட்டின் வெளி யுறவு இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி மீதான வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்தால் மட் டுமே அவருக்கு விசா அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப் படும் என்றார். இதனை புதுடில்லியில் உள்ள அமெரிக்க தூதர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன.

- விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...


தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை இலங்கை அரசு மேலும் அதிகப்படுத்தி வருகிறது


வரலாறு மீண்டும் திரும்பும் - ஈழப் படுகொலை ஆவணப்பட இயக்குநர் கருத்து

ராஜபக்சே கும்பல் இனியும் நீடித்தால் இலங்கையில் மீண்டும் ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று ஈழப்படுகொலை ஆவணப்பட இயக்குநர் காலும் மக்ரே கூறியுள்ளார் .

சேனல் - 4 தொலைக்காட்சி ராஜபக்சே அரசு அரங்கேற்றிய கொடூர நிகழ்வுகளை ஒளிபரப்பி யுள்ளது . காலும் மக்ரே தலைசிறந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார் . இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அவர் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . இதுதொடர்பாக ஏற்கெனவே பல பதிவுகளை அவர் வெளியிட்டுள் ளார். நோ பயர் சோன்: த கில்லிங் பீல்ட்ஸ் ஆஃப் சிறீலங்கா என்ற பெயரில் ஆவணப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஜெனிவா நகரில் அடுத்த மாதம் அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்ட காலும் மக்ரே முடிவு செய்துள்ளார். காலும் மக்ரே , கடந்த கால நினைவுகள், நிகழ்கால சம்ப வங்கள் மற்றும் எதிர் காலம் குறித்து அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதி யுள்ளார். அதில் அவர் குறிப்பிட் டுள்ளதாவது:- இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர், இலங்கை குற்ற நிகழ்வு கள் குறித்த கடினமான கேள்விக ளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர் . ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை அரசுக்கும் , ராணு வத்துக்கும் இடையே வித்தியாசம் ஏதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் குற்றம் இழைத்துள்ளார்கள் என்று இலங்கை அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது. விடுதலைப் புலிகளில் ஒரு பிரிவினர் மனித வெடிக் குண்டுகளாக இயங்கினார் கள் . சிறுவர்களை கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாற்றுகளை சுமத்துவதால் இலங்கை அரசு தனது குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.

ஒரு தரப்பின் குற்றத்தால், மற்றொரு தரப்பின் குற்றத்தை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது . சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றுகிறோம் என்கிற அரசு, விடுதலைப்புலிகள் குற்றம் செய் தார்கள் என்று கூறி அந்தக் குற்றச்சாற்றின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியாவுக்கும் கடும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு என்ன பதில்கள் என்பதால் மட்டும் ஏற்பட்ட சங் கடம் அல்ல இது. இந்த கேள்வி களை எழுப்புகிறவர்கள் யார் என்ப தாலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை இது . இவற்றிற்கு எல்லாம் மய்யப் புள்ளியாக இந்தியா இருக்கிறது.

இது ஏற்கெனவே சொல்லப்பட்ட உண்மை தான். ஆனால், இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக இதை சொல்ல வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது . நீதியின்றி அமைதியோ, இணக்கமோ சாத்தியம் இல்லை. அதைப்போல உண்மையின்றி நீதியும், சாத்தியம் இல்லை .இது கல்வியியல் சார்ந்த வாசகம் அல்ல . இது வரலாற் றின் குரலாகும் . இதை தட்டிக்கழித் திட முடியாது, இலங்கையில் கொடூரங்களை அரங்கேற்றிய வர்களே, இப்போது ஆட்சிப்பீடத் தில் அமர்ந்திருக்கிறார்கள். இலங் கையின் வடக்குப் பகுதியில் தமிழர் களை இப்போதும் கொடூரமாக ஒடுக்கி வருகிறார்கள். அரசை யார் விமர்சித்தாலும் அவர்கள் கடும் தண்டனைக்கு இலக்காக்கப்படு கிறார்கள். இலங்கையின் தலைமை நீதிபதி, இலங்கை அரசுக்கு உடன் பாடில்லாத சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை இலங்கை அரசு தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கி விட்டது. உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை,

தமிழர்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள் . இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையை இலங்கை அரசு மேலும் மேலும் அதிகப்படுத்தி வருகிறது. தொலை நோக்கில் பார்த்தால் வரலாறு மீண் டும் திரும்பும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இலங்கையில் மிகவும் உக்கிரமாக மீண்டும் ரத்தக் களரி ஏற்படும். வட்டார உறுதித் தன்மை குலையும் . இலங்கை குற்ற நிகழ்வுகள் குறித்து நம்பத்தகுந்த, பார பட்சமற்ற சுயேச்சையான சர்வதேச ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்று ஏற்கெனவே அய்.நா. வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது . இதற்கு ஏற்பாடு செய்வதுதான் தீர்வுக்கு வழிவகை செய்யும் என்பது இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடு களில் உள்ள மனித உரிமை ஆர்வலர் களின் எண்ணமாகும். வல்லுநர்கள் அடங்கிய சர்வதேசக் குழு, இருதரப்பினர் செய்ததாக சொல் லப்படும் எல்லா குற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும் .இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அது, இலங்கைக்கு மிகவும் இன்றியமை யாத ஆனால் இதுவரை நடை முறைப்படுத்தப்படாமல் தாமதிக்கப் பட்டுவரும், அரசியல் நீதி, அமைதி, இணக்கம் ஆகியவற்றை நிலைநாட் டுவதற்கான தொடக்கமாக அமையும். இவ்வாறு காலும் மக்ரே தமது கட்டுரரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் கண்காட்சி மாட்சி பற்றிய கல்கி வார ஏடு!


தஞ்சை மேம்பாலம் பகுதியில் இயங்கும் மேனிலைப் பள்ளியிலிருந்து பத்து மாணவர்கள், பன்னிரண்டு கி.மீ. தூரத்தில் இருக்கும் வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்துக்கு நடந்தே வந் துள்ளனர். அவர்களை ஆர்வமுடன் நடந்து வரத் தூண்டியது, அங்கு நடைபெற்ற விண்வெளித் தொழில் நுட்பத் திருவிழா, பல்கலைக் கழகத் தின் ஊரக வளர்ச்சி உயராய்வு மையம் மற்றும் வான்வெளிப் பொறியியல் துறை இணைந்து நடத்திய திருவிழா அது.

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைக்க, நான்கு நாள் கண்காட்சி மற்றும் காட்சி விளக்கங்கள், விஞ் ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப அமைப்புகள் பலவும், இங்கு வந்து தத்தமது செயல் திறன்களின் மாதிரி அமைப்புகளை வைத்து பிரம்மாண்டப் படுத்தியிருந்தனர்.

நான்கு நாட்களி லும் சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் வந்து சென்று பிரமித்துப் போனதாக வருகைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முதுகலை மாண வியின் ஸ்டாலுக்கு அருகே, ஆறாம் வகுப்பு மாணவியின் காட்சி விளக்க ஸ்டாலும் இடம் பிடித்திருந்தது எல்லோரையும் ஈர்த் தது. வளரும் இந்தி யாவும், விண்வெளி ஆய்வின் வருங்காலச் செயல் திட்டமும் என் கிற தலைப்பில் காட்சிப் படுத்துதல் மற் றும் செயல் விளக்கமளித் தல் சார்ந்து மாணவ, மாணவியர்க்கு போட்டி களும் அறிவிக்கப்பட்டி ருந்தன.

கந்தர்வகோட்டை அருகே முள்ளிகாப்பட்டி கிராமத்து மஞ்சுப்ரியா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வான்வெளிப் பொறியி யல் துறை மாணவி. காற்றில் உள்ள ஈரப்ப தத்தை, தண்ணீராக மாற்றும் தொழில் நுட்பம் அவரது காட்சிப்படுத்துதலாக வைக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் மேக்ஸ்வெல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவிகள் அமைத்திருந்த புயல் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பக் காட்சி அனைவரையும் பெரிதும் ஈர்த்தது.

திருச்சியிலிருந்து வந்திருந்த ஆறாம் வகுப்பு மாணவி சிறுமி கிருத்திகா, லைட் வெய்ட் ஏர்வெஹிகள் (விமானம்) மாதிரி செய்து கொண்டு விளக்கமளித்தாள். அந்த சிறுமியின் அரங்கிலே ஏகப்பட்ட கூட்டம். இறுதி நாளன்று அனைத்தையும் பார்த்து தேர்வு செய்த சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை, அந்தச் சிறுமிக்கே முதல் பரிசளித்துப் பாராட் டினார்.

இங்கு பங்கு பெற்ற, வந்து கண்டு உணர்ந்த அனைத்து மாணவ - மாணவியர் உள்ளங்களிலும் விண்வெளி விஞ்ஞானம் சார்ந்து புரிதல்கள் புகுத்தப் பட்டிருக்கும். கனவுகள் இங்கே விதைக்கப்படும் என்பதற்கு இந்த விண்வெளித் தொழில் நுட்பத் திருவிழா களமாக அமைந்துள்ளது! எனக் குறிப் பிட்டார் மயில்சாமி அண்ணா துரை.

- சிறீரங்கம் திருநாவுக்கரசு
(நன்றி: கல்கி 24.2.2013)

தமிழ் ஓவியா said...


வெளிச்சத்திற்கு வரும் இலங்கையின் போர்க் குற்றங்கள்! கலைஞர் அறிக்கை


சிங்கள இனவாத வெறியர், ராஜபக்ஷே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி என்பதற்கு ஆதாரம் தேடி உலக நாடுகளோ, அய்.நா.மன்றமோ வேறெங்கும் செல்ல வேண்டிய தில்லை. அதற்காக எந்த விசாரணையும் மேற்கொள்ளவும் தேவையில்லை. விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப் பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச் சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டு களால் கருகச் செய்த கோர நிகழ்ச்சி யைக் காணும்போது, கொடுமை, கொடுமை, இதை விடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது.

உலகத்திலே உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. மணல் சாக்கு மூட்டைகளின் மத்தியிலே பிணைக் கைதியாக அந்தச் சிறுவனை அடைப்பதற்கே கல் நெஞ்சம் வேண்டும். அந்தப் பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்? நேற்றையதினம் இந்து நாளிதழ் வெளி யிட்ட அந்தப் புகைப்படங்களைக் கண்டு கலங்கிக் கண்ணீர் விடாத கட்சித் தலைவர் களே தமிழகத்திலே இல்லை. அந்த இளைஞனை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவதற்கு எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்! அமைதியாக ஆயுதமின்றி சமாதானம் பேசச் சென்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களையெல்லாம் ஈவு இரக்க மின்றிக் கொன்று குவித்த இலங்கை ராணுவம், 12 வயதுப் பையனைக் கூட மணல் மூட்டைகளுக்கு மத்தியிலே தனிமைச் சிறை யிலே வைப்பதைப்போல வைத்திருக்க வேண்டு மென்றால், எத்தகைய கொடுமை அது? சிங்கள ராணுவத்தினர் அடுக்கடுக்காகச் செய்த அட்டூழியங்களையெல்லாம் லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி புகைப் படங்கள், வீடியோக் காட்சிகள் மூலமாக உலகத் திற்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறது. உலக நாடுகளுக்கு மத்தியிலே உத்தமராக வேடம் தரித்த ராஜபக்ஷேயின் உண்மைச் சொரூபம் தோ லுரிக்கப்பட்டு வருகிறது. பாலகன் பாலச் சந்திரனின் இந்த மூன்று புகைப்படங்களையும் காணும் உலக நாடுகள் எல்லாம் சிங்கள இனவாத அரசுக்கு எதிராக இயல்பாகவே தங்கள் குரலை எழுப்பியே தீரும். பாலச் சந்திரனின் மூத்த சகோதரனைப் போர்க் களத்திலே கொன்றழித்த மாபாவிகள், பாலச் சந்திரனை, நிராயுத பாணியாக நிற்க வைத்து, மூன்றடி தூரத்திலிருந்த வாறு, சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் போரின்போது சுட்டுக் கொல் லப்பட்ட தாக இலங்கை இராணுவத்தினர் இதுவரை பொய் சொல்லி ஏமாற்றி வந்தார்கள். இலங்கை மீது மீண்டும் ஒரு கண்டன தீர்மானம் சுவிஸ் நாட்டிலே உள்ள ஜெனிவா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா மீண்டும் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்தத் தீர்மானத்தை மேற் கத்திய நாடுகள் எல்லாம் ஆதரிக்கவுள்ள நிலையில், இந்தியா அதன் நிலைப்பாட்டினை இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்காமல் இருப்பதே நம்மையெல்லாம் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் இந்தியாவிலுள்ள தமிழர்களின் தொப்புள்கொடிச் சொந்தங்கள் என்பதால், இலங் கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன் னின்று எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழைவு தமிழ்நாட்டிலே உள்ள மக்களுக்கெல்லாம் இயற்கை யாகவே இருக்கின்ற நிலையில், இந்திய அரசு இதைப் பற்றி சற்று அலட்சியமாக இருப்பதுபோலக் காட்டிக் கொள்வதும், இந்தக் கொடூரங் களுக்கெல்லாம் காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வரும்போது வரவேற்புக் கொடுப்பதும் தமிழர்களால் கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியாதவைகளாக உள்ளன.

தமிழ் ஓவியா said...

பாலச்சந்திரனின் கொடூரக் கொலையை விளக்கு கின்ற போர் இல்லா மண்டலம் - இலங்கையின் கொலைக் களங்கள் என்ற தலைப்பிலே உள்ள ஆவணப்படத் தொகுப்பினை ஜெனீவாவில் நடக்கவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் வெளியிட விருப்பதாக நமக்குத் தகவல்கள் கிடைத் துள்ளன. இதற்கிடையில் இந்த ஆவணப் படக் காட்சிகளை இலங்கை அரசு முழுமையாக மறுத் துள்ளது. இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர் பாளர் திரு. பிரிகேடியர் ரூபன் வானிக சூர்யா என்பவர் ஆவணப் படத்தில் இடம் பெற்றிருக்கிற படக் காட்சிகள் பொய்யானவை, பாதியே உண்மை. யூகத்தின் பல்வேறு வடிவங்கள் இலங்கைப் படை களுக்கு எதிராக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது ஒன்றும் புதிதல்ல, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதை வெளியிட்டிருப்பதுதான் முக்கிய அம்சம் என்றெல்லாம் வழக்கமாகச் சொல்வதைப் போலச் சொல்லியிருக்கிறார்.

விரைவில் மேலும் பல தகவல்கள்

இந்தப் படத்தினை வெளியிட்டுள்ள இங்கி லாந்தைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் கல்லம் மெக்ரே என்பவர், நேற்று வெளிவந்த புகைப்படங்களைப் பற்றிக் கூறும்போது, பிரபாகரன் மகனுடைய இந்தப் புகைப் படங்கள் உண்மையானவைதான்; மேலும் பல ஆதா ரங்கள் எங்களிடம் உள்ளன. விரைவில் அவற்றையும் அம்பலப்படுத்துவோம் என்று தெரிவித்திருக் கிறார். மேலும் இதுபற்றி நுண் அறிவியல் துறை யில் உள்ள நிபுணர் இது நூற்றுக்கு நூறு உண்மையான படம் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

பாலகன் பாலச்சந்திரன் சேனல் 4 வெளி யிட்டிருப்பதைப்போல, கொடூரமாகக் கொல்லப் பட்டிருந்தாலும், போரின்போது ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தாலும் எப்படியும் அது கொலை தான். அப்படிக் கொலை செய்யப்படும் அளவிற்கு, அந்தப் பாலகன் செய்த குற்றம் என்ன? இதற்கு சிங்கள அரசு, உலகத்திற்குப் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும். எந்தவகையில் பார்த்தாலும் ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளி என்பது ஊர்ஜிதமா கிறது. அதற்காக எந்த விசாரணையும் நடத்தத் தேவையில் லாமலே ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக் கின்றன.

ஏற்கெனவேயே, அய்க்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைக்கப்பட்ட மூவர் குழு, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை கள் மீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றே தெரிவித்திருப்ப தையும் மனதிலே கொள்ள வேண்டும். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு இந்திய அரசு இனியும் துணை போக வேண்டுமா என்பது தமிழக மக்களி டையே கேள்விக்குறியாக எழுந் துள்ளது. கடந்த ஆண்டே, அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதி லும், இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலத்தில் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. டெல்லியிலே உள்ள மனித உரிமைக் கண் காணிப் பகம், அய்.நா. மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில்; இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து அய்.நா. சபை சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்த வேண்டு மென்றும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள அய்.நா. சபைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்றும், இந்த முயற்சிக்கு அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டு மென்றும் கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவின் கடமை

எனவே இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்கா போன்ற நாடுகள் முன் வரும்போது, இந்திய அரசு அந்தக் கருத்துக்கு வலுச்சேர்த்திட முன்வர வேண்டுமே தவிர, இலங்கை அரசைக் காப்பாற்றிட முயற்சி செய்யக் கூடாது. இது தான் இன்று தமிழ்நாட்டு மக்களின் விருப்பம்; வேண்டுகோள்.

(நன்றி: முரசொலி, 21.2.2013)

தமிழ் ஓவியா said...


ஈழப்படுகொலை அய்.நா.மனித உரிமைப் பேரவையில், சர்வதேச விசாரணைக்கு இந்தியா முன் மொழிய வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


அய்.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது (20.2.2013).

சென்னை, பிப்.21- அய்.நா. மனித உரிமை பேரவையில், ஈழப்படு கொலை குறித்து, சுயேச்சையான சர்வதேச விசாரணைக்கு இந்தியா முன் மொழிய வேண்டும் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவள வன் வலியுறுத்தி உள் ளார்.

இலங்கையில் நடை பெற்ற ஈழப்போருக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், போர் குற்றம் குறித்து சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள் பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தொல்.திருமா வளவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

மார்ச் 15 ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெற உள்ள அய்.நா.மனித உரிமை பேரவை கூட் டத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சினை விவாதிக்கப் பட உள்ளது. அப்போது அமெரிக்க வல்லரசு சிங்கள இனவெறி அர சின் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிய உள்ள தாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் சிங்கள இனவெறி கும் பலுக்கு எதிராக சர்வ தேச சுயேச்சையான விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை இந் திய அரசு முன் மொழிய வேண்டும் என்று விடு தலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகி றோம்.

மனித உரிமை பேர வையின் ஆணையாளர் சிங்கள இனவெறி அர சாங்கத்தின் மனித உரிமை மீறலை சுட்டிக் காட்டி அங்கே நடந்திருக்கிற படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் சுயேச்சையான விசாரணை தேவை என்பதை தனது அறிக்கை மூலம் சுட்டிக் காட்டி யிருக்கிறார்.

எனவே உலக தமிழர்களின் கோரிக்கையும், அய்.நா. மனித உரிமை ஆணை யாளரின் கோரிக்கையு மாக இருக்கிற சர்வதேச சுயேச்சையான விசார ணைக்கு இந்திய அரசு ஆதரவு குரலை எழுப்ப வேண்டும். அய்.நா. மனித உரிமை பேரவையில் இதற்கான தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிய வேண்டும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச் சந்திரன், சிங்கள ராணு வத்தினரால் சிறைப் படுத்தப்பட்டு, பிஸ் கெட் போன்ற பொருள் களை கொடுத்து, பின் னர் படுகொலை செய் யப்பட்டிருப்பது தற் போது வெளியாகி உள்ள நிழற்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது ஒன்றே சிங்கள இன வெறி அரசின் போர்க் குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு போது மான ஆதாரமாகும். எனவே போர்க் குற்றம் குறித்து சர்வதேச சுயேச் சையான விசாரணை வேண்டும்.

- இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு


சென்னை, பிப். 21- தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை நேற்று (20.2.2013) மாலை சென்னை பெரியார் திடலில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறி, இப்பிரச்சினையில் இயன்ற உதவியைச் செய்வதாக உறுதி அளித்தார். 25.2.2013 மாலை இது குறித்து நடக்க இருக்கும் சிறப்புக் கூட்டம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் உறவினர்கள் சா. மோசஸ், தோ. குழந்தை ராஜ், ஆ. ஜூலியஸ், ஞான பிரகாசம் அக்கா ஜோ. ரோனிக் அம்மா, சைமன் அக்கா ச. ஜெயமேரி, ஞான பிரகாசம் மனைவி ஞா. செல்வமேரி, அருள் செல்வி, பிலவேந்திரன் மகள் பி. பாஸ்காமேரி, உறவினர் கு. சுந்தரி

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதாவை சிக்கலில் மாட்ட வைக்கும் நமது எம்.ஜி.ஆர்.


டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்று ஒரு நாளேடு நடந்து வருகிறது. அது, அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடாகும்.

அதில் கட்டுரை தீட்டுவோர், பெட்டிச் செய்தி வெளியிடுவோர் எழுதிவரும் விவரங்கள் - அக் கட்சியின் பொதுச்செயலாளரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடி யவை. அவர்மீது எளிதாக எதிர் தரப்பினர் தாக்குதல் தொடுப்ப தற்கான வசதியைச் செய்து கொடுத்து வருகின்றனர். எத் தனையோ உண்டு - எடுத்துக் காட்டுக்கு இதோ ஒன்றே ஒன்று.

நமது எம்.ஜி.ஆரில். இம் மாதம் 18 ஆம் தேதி பக்கம் நான்கில் ஒத்தக் குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்!

அடேயப்பா அண்ணா தி.மு.க. ஏடு எப்படி எல்லாம் எகிறிக் குதிக்கிறது?

டெசோ நாடகக் கம்பெனியாம்... விமர்சிக்கிறது அந்த ஏடு.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? இவரைப் போல இந்தப் பிரச்சினையில் சந்தர்ப்ப சதிராடும் வேறு ஒருவரைக் காட்ட முடியுமா?

இந்தியாவைத் தலையிட வைப்பதுபற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனரே - நியாயம்தான் - இந்தியா தலையிடவேண்டும்தான்!

ஆனால், செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).

அம்மையார் ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு மூக்கை நுழைப்பதுதான் சரியாக இருக்க முடியும்.

பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது என்பது ஒரு வகை கோழைத்தனமாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை - விடுதலைப் புலிகள்பற்றி பிரச்சினை பற்றி எல்லாம் தமிழர் விரோதமாக செல்வி ஜெயலலிதா எடுத்துக் கூறியவை எல்லாம் வண்டி வண்டியாக இருக்கின்றன.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்பட்டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இடம் தெரியாமல் காலை வைக்க ஆசைப்படவேண்டாம்!

திராவிடர் கழகத்தின் மீதோ அதன் தலைவர் மீதோ அவதூறு பேச ஆரம்பித்தால், ஆயிரம் ஆயிரம் எதிர் அம்புகள் அம்பறாத் தூணியில் தயார்! தயார்!!

கூடுதல் தகவல் (Tail - Piece)

அத்தகைய பதிலடிகள் வரும்போது செல்வி ஜெயலலிதாவின் முரண் பாடுகளில் தமிழர் விரோத நடவடிக்கைகளும்தான் அம்பலப்படும் - அதன் விளைவு நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் இத்தகைய எழுத்தாளர்களுக்குத்தான் எதிர்விளைவை ஏற்படுத்தும். அம்மா சேதி தெரியும் அல்லவா!

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் நடத்திய பசுவதை அய்தேரயப்ராஹ்ணம் கூறுகிறது

அய்தரேய ப்ராஹ்ணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:

யஜ்னேவை தேவா - ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோக மாயம்ஸ்தே பியயுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ் சானுப் ரஞ்ஞாஸ் யந்தீதி (அய்தரேயப்ராஷ் மணம்த்ஷதீய பஞ்சிகா பிரதம காண்டம்)

இதன்பொருள்:- தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார். ஆதலால், மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர் யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும் . யூபம் - யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.

இதன்பின் யாகத்தால் உயிர்களைக் கொல்லக் கட்டளையிடுகிற மந்திரமாவது:-

தைவ்யா:- சாமி தார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ராதா ஸ்கர்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மத மாலா பந்த உதி சீனாம் அஸ்பபதோ நிதித்தாமஸுர்யம் சக்ஷீர்க்ம ப்தாத் வாந்தப் ராண மன் வஸ் ருஜ தாந்திரி க்ஷமஸும் திச ஸ்ரோத்திரம், ப்ருதிவிசரீம்

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது இந்தப் பசுவை எனக்கு கொடுங்கள்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும் படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான். அதன்பின் சுரா இடா ஸுனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.

இந்த பசுவைப் பங்கிடும் முறை ஞான சூரியன் முதல் பக்கத்தில் மேற்படி மந்திரமும், அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபதப் ராஹ்மணம் என்னும் வேத நூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு சுவர்க்கத்தை அடைகிறது என்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது:

பார்வை நியாமான; ஸம்ருத்யும் ப்ரா பஸ்யத் ஸதேவான் நான் வகா மயதைதும் தம் தேவா அப்ரூ வன் கம் னேஹிஸை வர்க்வத்வர் லோகம் கமயிஷ் யாம இதி

(அய்தரேயப் ராஹ் பஞ்சிகா காண்டம் 6)

பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தை காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களை காண்கிறது.

தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேதத் ப்ராணன் தாதிஸ் யேன மாஸ்ய வக்ஷ கருணுதாத் ப்ரசஸா பஹீ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ வகவேஷாரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்காயஸ்கா அனுஷ்ட யோச்யா வயதத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.

பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-

உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய பஞ்சி 2 க6)

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே.

தொகுப்பு: பெ.சுந்தரராசன்.

தமிழ் ஓவியா said...


குடியரசுத் தலைவரின் உரை


வழக்கம்போலவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான நாடாளுமன்றத்தின் தொடரைத் தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தியுள்ளார்.

அரசின் கொள்கையையும், திட்டங்களையும் முன்னோட்டமாக அறிவிக்கும் உரை இது.

கூட்டத்தின் தொடக்கத்திலேயே தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் - பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் குறித்து, கவன ஈர்ப்புப்போல முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் பிரச்சினை உலகம் சார்ந்த ஒன்றாகக் கிளர்ந்துள்ளது என்றாலும், இந்தியாவுக்கு அதிகத் தொடர்பும், அக்கறையும் உள்ள பிரச்சினையாகும்.

குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கையில் தமிழர்கள்படும் துயரம் குறித்து ஓடுகிற ஓட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றே கருதவேண்டி யுள்ளது.

ஜெனீவாவில் நடக்க இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தின்மீது இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவர் குறிப்பிடாதது வருந்தத்தக்கதாகும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக் கப்படும் இன்னல்கள், மறுக்கப்படும் உரிமைகள் குறித்து இந்திய அரசின் செயல்பாடுகள் உணர்வு பூர்வமாக இல்லாமல் இயந்திரத் தன்மையில்தான் இருந்துவந்திருக்கின்றன.

அதுவும் 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட விதம்பற்றி உலகமே அதிர்ச்சி அடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரின் உரை மரத்துப் போன தன்மையில் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.

இந்த நிலையில், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னதாக முழக்கம் செய்திருப்பது சரியானதே என்பது உறுதியாகி விட்டது.

குடியரசுத்தலைவரின் உரையில் பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, விண்வெளி ஆய்வுகள் பற்றி எல்லாம் கூறப்பட்டு இருந்தாலும், மகளிர் இட ஒதுக்கீடுபற்றி ஒரு வார்த்தை இல்லையே - ஏன்?

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்கள்பற்றிய உரிமைப் பிரச்சினையை மத்திய அரசு அறவே கைவிட்டுவிட்டது என்று கருத இடமிருக்கிறது.

வர்மா ஆணையத்தின் பரிந்துரைகள்பற்றி கருத்துத் தெரிவிக்கும் அதேவேளையில், அத னோடு தொடர்புடைய, மகளிர் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் உரத்த முறையில் குரல் கொடுக்க அதிக வாய்ப்பு ஏற்படும் மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை அறவே கைவிட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

சமூகநீதி தொடர்பான எந்த அறிவிப்புகளும் கிடையாது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திய அன்று மாலையில் குண்டுவெடிப்புச் செய்திகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

இந்தியாவில் இதற்குமுன் நடந்திருக்கிற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளி களுக்குத் தண்டனை கிடைப்பதில் அளவிறந்த காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதும் இதுபோன்ற குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஆகும்.

1992 இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இந்தியாவில் வன்முறைகள் தொடர்கதை களாகி விட்டன. மாலேகான் குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை.

மாறாக, குற்றவாளிகளை அடையாளம் கண்டு குற்றப் பத்திரிகை தயாரித்த காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். இதுதான் இந்தியாவின் இன்றைய பிரத்தியட்ச நிலை!

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் துணைப் பிரதமராகவே வர முடியும் என்றால், 2000 சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்றால், இந்த நாட்டில் குண்டு வெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி எங்கே இருந்து கிடைக்கப் போகிறது? 22-2-2013

தமிழ் ஓவியா said...


குடியரசுத் தலைவரின் உரை


வழக்கம்போலவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான நாடாளுமன்றத்தின் தொடரைத் தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தியுள்ளார்.

அரசின் கொள்கையையும், திட்டங்களையும் முன்னோட்டமாக அறிவிக்கும் உரை இது.

கூட்டத்தின் தொடக்கத்திலேயே தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் - பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் குறித்து, கவன ஈர்ப்புப்போல முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் பிரச்சினை உலகம் சார்ந்த ஒன்றாகக் கிளர்ந்துள்ளது என்றாலும், இந்தியாவுக்கு அதிகத் தொடர்பும், அக்கறையும் உள்ள பிரச்சினையாகும்.

குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கையில் தமிழர்கள்படும் துயரம் குறித்து ஓடுகிற ஓட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றே கருதவேண்டி யுள்ளது.

ஜெனீவாவில் நடக்க இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தின்மீது இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவர் குறிப்பிடாதது வருந்தத்தக்கதாகும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக் கப்படும் இன்னல்கள், மறுக்கப்படும் உரிமைகள் குறித்து இந்திய அரசின் செயல்பாடுகள் உணர்வு பூர்வமாக இல்லாமல் இயந்திரத் தன்மையில்தான் இருந்துவந்திருக்கின்றன.

அதுவும் 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட விதம்பற்றி உலகமே அதிர்ச்சி அடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரின் உரை மரத்துப் போன தன்மையில் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.

இந்த நிலையில், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னதாக முழக்கம் செய்திருப்பது சரியானதே என்பது உறுதியாகி விட்டது.

குடியரசுத்தலைவரின் உரையில் பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, விண்வெளி ஆய்வுகள் பற்றி எல்லாம் கூறப்பட்டு இருந்தாலும், மகளிர் இட ஒதுக்கீடுபற்றி ஒரு வார்த்தை இல்லையே - ஏன்?

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்கள்பற்றிய உரிமைப் பிரச்சினையை மத்திய அரசு அறவே கைவிட்டுவிட்டது என்று கருத இடமிருக்கிறது.

வர்மா ஆணையத்தின் பரிந்துரைகள்பற்றி கருத்துத் தெரிவிக்கும் அதேவேளையில், அத னோடு தொடர்புடைய, மகளிர் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் உரத்த முறையில் குரல் கொடுக்க அதிக வாய்ப்பு ஏற்படும் மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை அறவே கைவிட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

சமூகநீதி தொடர்பான எந்த அறிவிப்புகளும் கிடையாது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திய அன்று மாலையில் குண்டுவெடிப்புச் செய்திகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

இந்தியாவில் இதற்குமுன் நடந்திருக்கிற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளி களுக்குத் தண்டனை கிடைப்பதில் அளவிறந்த காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதும் இதுபோன்ற குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஆகும்.

1992 இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இந்தியாவில் வன்முறைகள் தொடர்கதை களாகி விட்டன. மாலேகான் குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை.

மாறாக, குற்றவாளிகளை அடையாளம் கண்டு குற்றப் பத்திரிகை தயாரித்த காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். இதுதான் இந்தியாவின் இன்றைய பிரத்தியட்ச நிலை!

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் துணைப் பிரதமராகவே வர முடியும் என்றால், 2000 சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்றால், இந்த நாட்டில் குண்டு வெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி எங்கே இருந்து கிடைக்கப் போகிறது? 22-2-2013

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன. - விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த 1948 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி(ரெட்டியார்)ஒரு குழு அமைத்தார்.அந்தத் திட்டத்தைப் பின்னால் முதலமைச்சரான ராஜகோபாலாச்சாரியார் கை கழுவினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது.

முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் - சொல்லொணாத் துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை!

எம் தமிழச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி வருகிறது!

குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.

வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப் பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே; ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை!

போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள் குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது.

தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம் நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு, ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.

இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை கொள்கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய வேண்டும்.

இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு தருகின்ற நிலை!

இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல், போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும் அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.

வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில் இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது.

இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி மனித உரிமைகளைப் பறிக்கும் ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் - கொக்கரிக்கிறார்.

அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார். மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும் போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார்.

எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா?

அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா?

கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும் குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக் கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா? கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான் ஏது?

உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய அரசிடம் இலங்கை உதவி கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க - புனர் வாழ்வுக்கு நிதி கேட்கலாமா? இந்திய வீடு கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா?

சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை.

-கி.வீரமணி,ஆசிரியர்.

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே போர்க் குற்றவாளியே!


கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகள்
பிரிட்டன் சேனல்-4 தயாரித்த ஆவணப் படம் டில்லியில் வெளியீடு

புதுடில்லி, பிப். 23- இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள ராணுவம் நடத்திய போர் வெறியாட்டம், நேற்று டெல்லியில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசு போர்க்குற்றங்கள் செய்ததற்கான மேலும் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலமாகி உள்ளன. ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தப் போரில் அப்பாவி பொது மக்கள் உள்பட பல்லாயிரக் கணக்கில் பலியானார்கள்.

வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த வீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டதுதான் கொடூரம் ஆகும். இது பற்றிய ஆவணப்படங்களை, இங்கிலாந்தைச் சேர்ந்த 'சேனல்-4' தொலைக்காட்சி பலமுறை வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.

12 வயது பாலச்சந்திரன்

சில நாள்களுக்கு முன்னர் இந்த தொலைக் காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் மேலும் ஒரு கொடூரக் காட்சியையும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை, சிங்களப் படைகள் பிடித்து வைத்து, சாப்பிடுவதற்கு சில உணவுகளைக் கொடுத்து, பின்னர் அவனை நெஞ்சில் நேருக்கு நேர் சுட்டுக்கொன்ற காட்சிதான் அது.

உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் காட்சி, இலங்கை மீது போர்க் குற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு சாட்சியமாக அமைந்தது.

இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய போர் வெறியாட்டம் தொடர்பான ஆவணப்படம் (டாக்குமெண்டரி சினிமா) ஒன்றை சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ளது. நோ பயர் சோன் (தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமா நேற்று டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் என்ற அரங்கில் திரையிடப்பட்டது.

இயக்குநர் கெல்லம் மெக்கரே!

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர் களை பரிந்துரைக்கும் குழுவும் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரு ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட இயக்குநர் கெல்லம் மெக்கரேதான் இந்தப் படத்தையும் தயாரித்து, இயக்கி உள்ளார்.

தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூரத் தாக்குதல் களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்ததால், இந்த சினிமாவுக்கு நோ பையர் சோன் என்று மெக்கரே பெயரிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

படம் தொடங்கியதும், இயக்குநர் மெக்கரே தோன்றி, போர்க் காட்சிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார். பின்னர், காண்போர் கண்களை குளமாக்கி, கண்ணீர் வரவழைக்கும் போர்க்காட்சிகள் வெளியாகின்றன.
உச்சக்கட்ட கொடூரம்!

போர் நடத்தக்கூடாத பகுதி என்று அறிவிக்கப் பட்ட இடங்களிலும், பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும் சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசும் கொடூரக் காட்சிகள், ஊரெங்கும், அப்பாவி மக்கள் உயிர் இழந்து பிணங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி, மருத்துவ மனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடலின் பல பாகங்கள் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்பாவிப் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கும் காட்சி, சிங்கள ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மேலும், பெண் புலிகள் என்ற சந்தேகத்தில், ஏராளமான பெண்களை ஒரு லாரியில் ஏற்றி சிங்கள ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சிங்கள ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடுவதும், அவரிடம் ஏதோ வாக்குமூலம் வாங்கும் காட்சியும், பின்னர் அவர் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடப்பதும் காட்டப்படுகிறது. பெண் புலிகளின் தளபதியாக இருந்த இசைப்பிரியாவை சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியும் இடம் பெற்று உள்ளது.

போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிராதரவாக திறந்த வெளியில் அவதியுறுவது, கொத்துக்குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் அப்புறப்படுத்த முடியாமல் சிதறிக்கிடந்த காட்சிகளும், குண்டு மழை யால் பீதி அடைந்த மக்கள் கைக்குழந்தைகளுடன் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகிய காட்சிகளும் இந்த சினிமாவில் காட்டப்படுகின்றது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தியதும், அதனால், அப்பாவித் தமிழ் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதும் இந்த சினிமாவில் காட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண சினிமா, மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

போர்க்குற்றம்

இந்த சினிமாவில் இடம் பெற்று உள்ள மனதைப் பதை பதைக்கச் செய்யும் காட்சிகள், இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கு மேலும் ஒரு உறுதியான ஆவணமாகவும், இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலுவான சாட்சியங்களாக இருக்கும் என்று இயக்குநர் மெக்கரே தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் இந்த சினிமா திரையிடப்பட உள்ளது.

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாதுபார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.
(விடுதலை, 11.7.1954)