Search This Blog

1.2.13

அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை இதுதான்!


நாகா சாதுக்களாம்! 

பக்தி - புத்தியை மட்டுமா கெடுக்கிறது; ஒழுக்கத்தைக் கெடுக்கிறது - நல் நாகரிகத்தைக் கெடுக்கிறது என்பதற்கு வெகு தூரம் சென்று ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டாம்.

இப்பொழுது உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் நடந்து கொண்டு இருக்கும் கும்பமேளா ஒன்று போதாதா? 12 கோடி பக்தர்கள் நீராடுகிறார்களாம். 

ஏற்கெனவே கங்கை நதி பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் அபாயகரமானவை.
உயிர்க்கொல்லி நோய்க் கிருமிகளின் உல்லாசப் பூந்தோட்டமாக கங்கை என்னும் சாக்கடை தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில் தான் கலக்கிறது. அது கிட்டத்தட்ட 20 மில்லியன் காலன் என்று கூறப்படுகிறது;  நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரை குறையாக எரிக்கப்பட்டு கங்கையில் தூக்கி எறியப்படுகின்றன - அந்த மனிதக் சடலங்கள் சொர்க்கத்திற்குப் போவதற் காக அந்த ஏற்பாடாம்!

பயன்படாத 9000 கிழட்டுப் பசுக்கள் உயிரோடு ஆண்டு ஒன்றுக்கு கங்கையில் தள்ளப்படுகின் றனவாம்! (கோமாதா, குலமாதா என்று பேசும் இந்துக்கள்தான் இந்த வேலையையும் செய்கிறார்  கள்) காசியில் 2 லட்சம் தொழிலாளர்கள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த இரசாயனக் கழிவுகள் எல்லாம் சங்கமம் ஆவதும் இந்தக் கங்கைப் புண்ணிய நதியில்தான்.
கும்பமேளா அன்னியில் நாள்தோறும் இந்தக் கங்கையில் புண்ணியம் தேடுவதற்காகக் குளிப் போரின் சராசரி எண்ணிக்கை 70 ஆயிரமாம்.
அடிக்கடி கொடும் நோய்கள் மூண்டு மக்கள் செத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும், சுற்றுப்புறத்திலும் தொற்று நோய்ப் பற்றி ஆயிரக்கணக்கில் மாண்டு போனார்களே!

காலையில் புனித கங்கையில் முழுக்கு, இரவில் மது மாமிச விருந்து என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (19.6.2003) பட்டியல் போட்டதுண்டே!

உத்தரப்பிரதேச கோயில் நகரங்களில் எய்ட்ஸ் அச்சுறுத்தல் அதிகம் என்று தி பயனீர் (21.7.1997) விரிவாக எழுதியதுண்டே!

உண்மையிலே மக்கள் நல அரசு என்பது உண்மையென்றால் என்ன செய்திருக்க வேண் டும்? இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் அல்லவா?
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே புண்ணிய முழுக்கு போடுகிறார்கள் என்றால், இந்த நாடு உருப்படுமா?

இப்பொழுதுகூட இந்தக் கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் புண்ணிய முழுக்குப் போடப் போகிறார்களாம்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான் மையைப் பரப்பும் இலட்சணம் இதுதான் போலும்!

இந்தக் கும்பமேளாவில் இன்னொரு அசிங்கம் பல்லாயிரக்கணக்கில் நிர்வாண சாமியார்கள் குளிப்பதாகும்.

எங்கு பார்த்தாலும் முழு நிர்வாணத்தோடு இந்தச் சாமியார்கள் திரிந்து கொண்டு இருப் பார்கள். இதை வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்தால் காரித் துப்ப மாட்டானா?

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் சொன்னால் ஆத்திரப்படும் ஆத்திகர்கள் இதுபற்றி எல்லாம் சிந்திக்க வேண்டாமா?

கும்பமேளாவையொட்டி ஏராளமான இளைஞர்கள் நாகா சாதுக்கள் மூத்த நிர்வாண சாமியார்கள் முன்னிலையில் தீட்சை பெற்று நிர்வாண சாமியார்கள் (நாகா சாமியார்களாக) ஆவார்களாம்.  உடல் முழுவதும் திருநீறுப் பூசிக் கொள்வார்களாம். தீட்சை பெற்றபின் வீட்டுக்குச் செல்லக் கூடாதாம். காடு, மேடுகளில் அலைந்து திரிவார்களாம்.

இளைஞர்களை இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்குப் பலி கொடுப்பதுபற்றி யாராவது சிந்திக் கிறார்களா? கருத்துத்தான் சொல்கிறார்களா?

உஷ்... பக்தி விஷயம் தலையிடக் கூடாது என்ற முட்டாள்தனத்தில் இளைஞர்களின் எதிர்காலம் அநியாயமாக பலிகடா ஆக்கப்படுகிறதே!
அர்த்தமுள்ள இந்து மதம் என்கிறார்களே, அதன் யோக்கியதை இதுதான்! வெட்கம்! மகா வெட்கம்!!
              ------------------------”விடுதலை” தலையங்கம்   1-2-2013

16 comments:

தமிழ் ஓவியா said...


தீராது

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


முட்டிச் சாய்க்கும் மூடத்தன சிதறல்கள்


வினோத விழாவாம்!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் சிறுமியை நிலாப் பெண்ணாகப் பாவித்து வினோத விழாவாம்.

விழா அன்று அக்கிராமத்துச் சிறுமிகள் நிலவுக்குப் படையல் போடுகின்றனராம். அதன்மீது விளக்கேற்றி, படையலைப் பகிர்ந்து உண்ணுகின்றனர்.

கடந்த 21ஆம் தேதி பிரிய தர்ஷினி என்னும் 11 வயது சிறுமியை ஊர் மக்கள் தெரிவு செய்து, இலை நீக்கிய ஆவாரம் பூமாலையை அணி வித்து, ஆவாரம் பூக்கூடையைச் சுமந்து ஊர்வலமாக ஊருக்குள் அழைத்துச் சென்றனராம். முறைப் பையன்கள் பச்சை மட்டையால் குடிசை அமைத்தனராம். பிறகு சிறுமியைக் கோயில் முன் அமர வைத்துக் கும்மியடித்தார்களாம். அதிகாலையில் நிலா மறையத் தொடங்கியது. பூக்கூடையைக் கிணற்றில் கவிழ்த்து, பூக்கள் நீரில் மிதந்ததும், மண் கலயத்தில் விளக்கு ஏற்றி விட்டுத் திரும்பினராம்.

ஊரும், உறவும் வளமுடன் வாழ ஆண்டுதோறும் இந்த விழா நடக்கிறதாம்.

ஏதாவது பொருள் புரிகிறதா? இப்படி செய்தால் ஊரும், உறவும் வளம் பெறுமா? இப்படி ஆண்டுதோறும் அந்த ஊரில் செய்கிறார்களே - அப்படி என்ன அந்த ஊரில் வேறு எங்கும் இல்லாத வளம் கொழிக்கிறதாம்?

அந்த ஊருக்கு மட்டும் மழை பொழிகிறதோ! வயல்கள் எல்லாம் முப்போகம் விளைகிறதோ!

நிலாவை இன்னும் கும்பிடத் தானே கற்றுக் கொண்டுள்ளனர். நிலாவுக்குள் சென்று வந்த வாலண் டினா எங்கே? நிலாவைக் கும்பிடும் இந்த பிரியதர்ஷினிகள் எங்கே?
சின்ன வயதில் மண் பிசைந்து கூட்டாஞ்சோறு ஆக்கி சாமிக்குப் படைக்கும் அந்தச் சின்னப்புத்தி, பெரியவர்கள் ஆன பிறகும் பழக்க தோஷம் மக்களை விடுவதில்லையே - என் செய்ய!

தமிழ் ஓவியா said...

ஏழமலையானுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பாம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலைத் தகர்க்கத் தீவிரவாதி கள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய அரசின் உளவுத் துறைக்குத் தகவலாம். இதனைத் தொடர்ந்து மூன்று அடுக்குப் பாதுகாப்பு - வாகன சோதனை - 2000 கண் காணிப்புக் கேமராக்களாம். தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தன் என்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்த ஏழுமலை யான் கோயிலுக்குச் செல்லுகிறார் களே - அந்த ஏழுமலையானுக்குத் தீவிரவாதிகளால் ஆபத்து என்றால் இதன் பொருள் என்ன?

ஏழுமலையானைவிட இந்த தீவிர வாதிகள் பலசாலிகள் என்றுதானே அர்த்தம்?

அடுத்தவர்களின் வினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறுகிறார் களே, முதலில் அவன் தன் வினை யைத் தீர்த்துக் கொள்ள வேண்டாமா?

மூன்றடுக்குப் பாதுகாப்பு என் றால், பகவானை மனிதர்கள்தானே பாதுகாக்க வேண்டியுள்ளது? தீவிரவாதிகளைக் கண்டு பிடிக்க கேமிராக்கள் தானே பொருத்தப்பட வேண்டியுள்ளன, இதைவிட ஏழு மலையானை அவமானப்படுத்த முடியுமா? அசிங்கப்படுத்த முடியுமா? கையாலாகாதவன் இந்த ஏழுமலையான் என்பதைக் கேமிரா வைத்தா விளம்பரம் செய்ய வேண் டும். இப்பொழுது சொல்லுங்கள், கடவுள் இல்லை என்பவர்களைவிட கடவுள் உண்டு என்று சொல்லி இப்படி அவமானப்படுத்துபவர்கள் இந்நாத்திகர்கள் இல்லையா?

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னது சரியானதுதான் என் பதை இப்பொழுதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?

தமிழ் ஓவியா said...

மந்திர சொம்பாம்!

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் அதிபரிடம் செல்வம் கொழிக்கும் மந்திர சொம்பு தருவ தாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப் பட்டனர் என்பது ஒரு செய்தி.

பழங்காலத்தில் இடி விழுந்த சொம்புக்கு மந்திர சக்தி உண்டு. அதை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும்; திறக்க முடியாத பூட்டுகூட இந்தச் சொம்பை அருகில் கொண்டு சென்றால் திறக்குமாம்!

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு? என்ற பழமொழி நாட்டில் உலவுவதுண்டு.

பெரும் பணக்காரரான ஒருவ ருக்கு ஏனிந்த பேராசை? ஆன்மீக நம்பிக்கை அறிவைக் கொடுப் ப தில்லை; தன்னம்பிக்கையைக் கொடுப்பதில்லை = பேராசைக்கு வாய்க்கால் வெட்டி வழி செய்து கொடுக்கிறது; அதனை இலாவக மாகப் பயன்படுத்திக் கொண்டு எளிதாகப் பணம் பறிக்கும் மோசடிக் காரர்கள் நாட்டில் கிளம்பத்தானே செய்வார்கள்.

ஓரளவுக்குமேல் பணம் இருந்து என்ன பயன்? ரூபாய் நோட்டுகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு பஞ் சணையில் புரளுவார்களா? நோட்டைக் கரைத்துக் குடிப்பார்களா? பணம் மனிதனின் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, பணத் திற்கு மனிதன் கருவியாக இருக்கக் கூடாதே! இதைச் சொல்லுவதற்குக் கூட ஒரு பகுத்தறிவு இயக்கம்தான் தேவைப்படுகிறது!

தமிழ் ஓவியா said...


இங்கும் - அங்கும் வெளியீட்டிலிருந்து.... அய்யத் தெளிவு...!

கேள்வி: பெரியார் வழியினர் இந்து மதத்தையும் இந்துக் கடவுள்களையும் எதிர்க்கும் அளவுக்கு மற்ற கிறித்துவ, இசுலாமிய சமயங்களை எதிர்ப்பதில்லையே, ஏன்?

பதில்: கடவுளரையும், மதங்களையும் ஏற்பதில்லை என்பது பெரியார் தொண்டர்கள் பின்பற்றும் பொது விதி, கொள்கை. இதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லு கிறார்கள். நடைமுறை என வரும்பொழுது எந்த மதத்தை மிகுதியாக எதிர்க்க வேண்டும், எந்தக் கடவுள்களை மிகுதியாக விமர்சிக்க வேண்டும் என்பதைச் சூழ்நிலைக்கும் வாழ் நிலைக்கும் தக முடிவு செய்ய வேண்டி யிருக்கிறது.

இந்தியாவில் மிகப் பெரும்பான்மை யோரின் மதம் இந்து மதம். இதில் நாத்திகர்களும் அடங்குகிறார்கள். ஏன் என்றால், அப்படித்தான் இந்துச் சட்டம் சொல்கிறது. கிறிஸ்துவர்கள் இசுலாமியர் அல்லாதவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆகிறார்கள். ஆக, தாங்கள் விரும்பாவிடினும் தங்களை இந்துக்கள் எனும் வட்டத்துக்குள் அடக்கும் பொழுது, அந்த மதத்தைப் பற்றி அதிக நாட்டம் செலுத்துவது பெரியார் வழியினர் கடமையாகிறது.

அவர்கள் விரும்பினும் விரும்பாவிட்டாலும், அவர்களுடைய வாழ்முறையும், சமூக நிலையும் இந்துமதக் கோட்பாடுகளால் கட்டுபடுத்தப்படுவதால், அந்த மதத்தால் விளையும் கேடுகளைச் சுட்டிக்காட்டி களைய வேண்டியது முதற்கடமையாகிறது. இசுலாம், கிறித்துவம், சீக்கியம் முதலிய மதங்களுக்குத் தனிக் கோட்பாடுகள் இருப்பினும் அவர்கள் சிறுபான்மையர். ஆகையால் அவர் களுடைய சமூகப் பழக்கங்களும், அமைப்புகளும், பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தாரின் நடத்தையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. ஆகையால், இந்துமதக்கேடுகள் களையப்படின், பிற மதத்தார் முறைகளும் சீர்ப்படும்.

இசுலாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் இறைக்கோட்பாட்டில் மூடநம்பிக்கை காணப் படுகிறது. ஆனால், வருணதரும அடிப் படையில் சாதி ஏற்பாட்டை நியாயப்படுத்தும் தெய்வீக நூல்கள் எனப்படும். வேதம், இதிகாசம் முதலியன இந்து மதத்தில் மட்டுமே உண்டு. இசுலாம், கிறிஸ்துவம் ஆகிய மதக் கொள் கைகள் பகுத்தறிவுக்கு முரண்படு கின்றன; ஆனால் தன்மானத்தை மதிக்கின்றன.

யாரையும் இழிசாதியாக தீண்டாத வராக அவர்களின் புனித நூல்கள் சொல்லுவ தில்லை; பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை, ஏற்றத்தாழ்வு கற்பிப்பது இல்லை. ஆனால், இந்து மதத்தின் புனித நூல்கள் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கின்றன; உயர்வு தாழ்வு கற்பிக்கின்றன. மானிட நெறிபோற்றிய பெரியாரும் அவர் தொண்டர்களும் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

- ஆசான் (சனவரி 83 இதழ்)

தமிழ் ஓவியா said...


கடவுள் துறைகள்


திருச்சி உறையூரில் வெக்காளி யம்மன் கோயில் இருக்கிறது. அக்கோயிலில் காணப்படும் அறிவிப்புப் பலகையில் கீழ்க்காணும் விவரம் எழுதப்பட்டுள்ளது. எந்தெந்த கோயி லை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிட்டும் என்ற பட்டியல் அது.

1. மதுரை மீனாட்சி - கலை,

2. திருவானைக்கா அகிலாண்டேஸ்வேரி - செல்வம்,

3. கன்னியாகுமரி அம்மன் - அமைதி,

4. சமயபுரம்மாரி (த்தாய்) - மழை,

5. தில்லை எல்லைக்காளி - ஆற்றல்,

6. காசி விசாலாட்சி - ஞானம்,

7, தஞ்சை முத்துமாரி - வீரம்,

8. பட்டீசுவரம் துர்க்கை - அழகு,

9. காஞ்சி காமாட்சி - காமம் அழிப்பாள்,

10. உறையூர் வெக்காளி - எல்லாம் தருவாள். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அருள்பாலிக்கும் சக்தியாம்.

இத்தனைக் கடவுள்களைக் கும்பிட்டும் இந்த மக்கள் அடைந்த பலன் என்ன?

உறையூர் வெக்காளி கடவுளுக்கு மட்டும் எல்லாம் வழங்கும் சக்தியாம்.

எல்லாவித நோய்களையும், தீர்க்கும் ஒரே மருந்து என்கிற மூர் மார்க்கெட் மோடி மஸ்தான் வியாபார தந்திரம் தானே சமயபுரத்தம்மனை வேண்டிக் கொண்டுதானே இருக்கிறார்கள் எங்கே மழை?

தகவல்: திண்டுக்கல் வீரராசன்

தமிழ் ஓவியா said...


புரட்சிக் கவிஞரின் சிந்தனைகள்!


கண்ணபிரானைப் பற்றிய சொற்பொழிவு (உபந்நியாசம்) நடக்கிறது. கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து ஒருவர் கேள்வி கேட்கிறார்.

ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா?

உபந்நியாசர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள் அய்யா! உபந்நியாசகரே! இந்த கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டுவிடச் சொன்னால் போதும். அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்க காசில்லை.

சிறுவன் வாயில் முழுமையும் தெரியுமா? எவ்வளவு அறியாமை! மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்யும் துணுக்குகளில் ஒன்று இது.

Unknown said...

எப்படிங்க "கமெண்ட்" போடறது..! எல்லா ஓட்டுகளையும் நீங்களே பெட்டியிலே போட்டுட்டிங்கன்னா...எப்படி ? செல்லாது..செல்லாது!

இனியன் said...

இந்த கமெண்ட்போடத்தெரிந்த (அப்)பாவிக்கு மத்த கமெண்ட் போடத் தெரியலயா? ரமேஷ் வெங்கடபதி.......நல்லாத் தெரியுது பதில் தெரியாது னெப்புரிகிறது.....

தமிழ் ஓவியா said...


அண்ணாவும் - காமராசரும்!

தி.மு.க. பெரிய வெற்றியடையும் செய்தி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டுள்ளது. பெருந் தலைவர் காமராசர் தோற்று விட்டார் என்று தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின் றனர். அறிஞர் அண்ணா அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாராம். காமராசர் வெற்றி பெற்று புது டில்லி சென்றால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வார்.நம்மால் அவ்வளவு செய்ய முடியுமா என்றாராம். உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகச் சென்னையில் நடக்கின்றது. முதல்வர் அறிஞர் அண்ணா காமராசரை அழைத்துச் சிறப்பிக்கின்றார். சிலர் கிண்டல் செய்கின்றார்கள். காமராசர் என்ன தமிழறிஞரா என்று அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுச் சென்னை அரசு மருத்துவமனையிலே இருக்கின்றார். பார்க்க வந்த காம ராசர் மருத்துவர்களிடம் கேட்கின்றார். சரியான பதிலை அளிக்காமல் திணறுகின்றனர். உடனே காமராசர் அமெரிக்கா கொண்டு சென்று மருத்துவம் பார்க்க உடனே ஆவன செய்யுங்கள் ஆம்! என்று ஆணையிடுகின்றார் !

மும்பை விமான நிலையத்திலே நள்ளிரவு நேரத்திலே மாநில ஆளுநர் வந்திருக்கின்றார். அண்ணா அவர்கள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பெருந்தலைவர் காமராசரின் ஆணை! உங்களை இங்கு பார்த்து அனுப்பிவைக்கச் சொன்னார் என்றாராம் .

அது தமிழகம்! இன்று நீங்களே சொல்லுங்கள்!

- சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கமல்ஹாசன் மீது பார்ப்பனர் சங்கம் திடீர் பாய்ச்சல்!


சென்னை, பிப். 3- இஸ்லாமியர்கள் பிரச்சினையை முடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து பார்ப்பனர்களிட மிருந்து புது எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பார்ப்பனர் சங்கம் ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் அந்த சங்கம் புகார் மனுவைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக புகார் மனுவைக் கொடுத்த அதன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்பு கொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது. இது எங்களின் உணர்வை புண்படுத்து கிறது. கமல் முற்போக்குவாதி, அறிவுஜீவி என்று சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பார்ப்பனராக அங்கீ கரித்தது கிடையாது. பூணூல் என்பது சொறிந்துகொள் வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பார்ப்பனராக இருக்க முடியும். விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டு வதைவிட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்திருந்தால் விஸ் வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும் என்றார். இன்னொரு பார்ப்பனர் சங்கம் தடை கூடாது என்கிறது இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தியிருப்பதால் அப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பார்ப்பன சங்கத்தினர் புகார் தெரிவித்திருகின்றனர். அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பார்ப்பனன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப் பதால் தடை செய்யக்கூடாது. ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார். அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்கள் இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்து போகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணர வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா?இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது,
நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா? என்று கேட்டான் நண்பன். இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது! என்றான் அந்த பக்தன் !

- சந்திரன் வீராசாமி, திருச்சி

தமிழ் ஓவியா said...

இறையருள் இல்லை!


தாமஸ் ஆல்வா எடிசனின் யூகம் எப்போதும் சரியாகவே இருக்கும். அவருடன் பணிபுரிந்த ஒரு நண்பர் தாமஸின் யூகம் பற்றி கூறினார். யூகிப்பதில் எடிசனுக்கு நிகர் எடிசன்தான்! நாங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த பலமுறை முயற்சி செய்து தோற்றிருப்போம். அதை எடிசனிடம் கொடுத்தால் நாங்கள் தொடர்ந்த அதே வழியில்தான் அவரும் செல்வார். இதைத்தானே நாமும் செய்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, அதில் ஒரு மாற்றத்தைச் செய்வார். அந்தச் சோதனை வெற்றிபெற்றுவிடும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று எப்படித் தோன்றியது என்று கேட்டால் எனக்குத் தெரியாது; ஏதோ தோன்றியது செய்தேன்! என்பார்.அப்படித் தோன்றுவது இறையருளா என்று கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவார்.

நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 124

தொகுப்பு: பாவலர் ப. கல்யாணசுந்தரம்

தமிழ் ஓவியா said...

காந்தியாருக்கே இந்த நிலை என்றால்

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன் இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது! என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளினார்கள்.

ஒரு முகம்மதியரையோ,சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள்.தான் ஒரு முகம்மதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் கூறுவார்.தனக்கென்று ஒரு சாதி இருந்த போதிலும்கூட, அவர் தன் சாதியை சொல்வதில்லை. நீங்களும் அவர் பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள்.தான் ஒரு முகம்மதியர் என்று அவர் கூறியதும் நீங்கள் அவரை நீ சன்னியா, ஷேக்கா,சையதா,சாதிக்கா,பிஞ்சாரியா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.

தானொரு சீக்கியர் என்றதும், நீங்கள் அவரை ஜாட்டா,ரோதாவா,மாழ்பியா,ராம்தாசியா என்றெல்லாம் கேட்கப்போவதில்லை.

ஆனாலும், நான் ஓர் இந்து என்று என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை.அவருடைய சாதி என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள்.ஏன்? ஓர் இந்துவைப் பொறுத்தமட்டில்,அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய மனிதன் என்பதை உங்களால் உறுதியாக தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

- அண்ணல் அம்பேத்கர்-”உண்மை” பிப்ரவரி 01-15 - 2013

தமிழ் ஓவியா said...

சுவாமி அக்னிவேஷ்


தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான பிரச்னைகள் ஏராளம். ஆனால், பல புகார்களுக்கு போலீஸார் எஃப்.ஐ.ஆரே பதிவது இல்லை. எல்லாவற்றுக்கும் எதிராகப் போராட இதுதான் சரியான நேரம்.

பெண்கள், பாதிக்கப்பட்டோர், தலித் தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய அளவில் போராட வேண்டும். தர்மபுரியில் இருந்து தர்மசாலா வரை நடைபயணம் போக வேண்டும்.

கலப்புத் திருமணம் செய்வதே இதற்கு முக்கியத் தீர்வு. அதுதான் தலித் ஒடுக்குமுறைகளை முற்றிலும் தடுக்கும் ஒரே ஆயுதம். மதம் மாறி, சமூகம் மாறி, ஏன் நாடு மாறியும் திருமணம் செய்ய வேண்டும்.

இது மட்டும் நடந்தால், 20 வருடங்களுக்குப் பிறகு பேதம் என்ற விஷயமே இருக்காது.

மோடி பிரதமரா? (சிரிக்கிறார்) அப்படி ஒரு விஷயம் நடந்தால், அது தேசிய விபத்து. அவர் செய்த கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் அவர் சிறைக்குத்தான் போக வேண்டும். பிரதமர் ஆகக்கூடாது. குஜராத் மக்கள் வேறு, இந்திய மக்கள் வேறு!

- சுவாமி அக்னிவேஷ்,

ஜூனியர் விகடன், 27--.01.2013

தமிழ் ஓவியா said...

டங்ஸ்டன் இழை கடவுள்

ஃபியூஸ் போன பல்பை எரிய வைக்க முடியாத கடவுளை

திட்டிக்கொண்டிருந்த போது

அல்லா தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றினாரென்று மகிழ்ந்தான் நண்பனொருவன்

என்னிடம் கோபித்துக்கொண்டு போன சூரியன்

திரும்ப வரும்வரை இந்த ஃபியூஸ் போன பல்பை

உயிர்தெழுவதற்கு உதவுமாறு தொழுதேன் அல்லாவிடம்

இந்த இரவில் யார் வெளிச்சம் கொடுத்தாலும் அவன் உன்னதமானவனென்றேன்

அந்த பல்ப் எரியவில்லை தொழுகைக்கு பின்னும்

இருள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை

இருளை கண்ணாடி போல உடைக்க முடியாது

வெளிச்சத்தை தரும் அமுத சுரபி யாரிடமிருக்கிறது

அறியாமை போல பரவியிருக்கும்

கரிய இருளின் சருகுகளை கூட்டித்தள்ள வேண்டும்

இருள் மாமிசமாகிறது பசித்தவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்

அது எல்லோரையும் வசீகரிக்கும் வார்த்தையாகிறது

நான் வெளிச்சத்தின் உணவுக்காக காத்திருக்கின்றேன்

சிலுவை சுமந்த மனிதனின் பிதாவின் மேல் என் கோரிக்கை விழுகிறது

நீண்ட நேரமாகியும் அந்த பல்பு எரியவில்லை

நான் சூரியனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்

அந்த தெருவழியே வந்த தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார்

கொண்டு வா அந்த உயிரற்ற பல்பை டங்ஸ்டண் இழைகள் பொருத்தப்பட்டது இனி எரியுமென்றார்

டங்ஸ்டன் இழை இராத்திரி நேரங்களின் கடவுளானது இப்படித்தான்

- கோசின்ரா