எங்கே அழைத்துச் செல்கிறது பிஜேபி?
பாசிச பா.ஜ.க. ஆட்சி நாட்டை எங்கே இழுத்துச் செல்லுகிறது?
இராமராஜ்ஜியத்தை நோக்கியா? மனுதர்மக் கொடி பறக்கும் கொடுங் காட்டுக்கா?
வருணாசிரமத்தின் கொட்டடிக்கா? மூடநம்பிக்கை முடை நாற்றம் மூக்கைத் துளைக்கும் முகட்டுக்கா?
இவற்றைத் தவிர சமதர்மத்தை மருந்துக்கும் காண முடியவில்லை; சமத்துவத்தைக் கிஞ்சிற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
விஞ்ஞான மனப்பான்மை என்பதை நினைத்தே பார்க்க முடியாது, முற்போக்குப் பாதை என்பது முட்டாள்தனமானது என்பது மோடி அரசாட்சியின் தாரக மந்திரம் போலும்!
இவை எல்லாம் கட்டுக்கதைகள் அல்ல - கற்பனைக் காவியங்களும் அல்ல; இதோ ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
1. மந்திரத்தால் மாங்காய்?
பாஜக ஆளும் மாநிலமான சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் துணைராணுவத்தை நம்பாமல் மந்திரவாதியை நம்பி ஆட்சி நடத்துகிறது. சத்தீஸ்கர் மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மாநிலத்தில் புரட்சி செய்துவரும் மாவோ யிஸ்டுகளை ஒடுக்க அவர்களை மந்திரத் தின் மூலம் கட்டிப்போட்டுவிடலாம் என்று கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில அமைச்சர் அஜய் சந்தர்கர் ராய்பூரில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத்தலம் ஒன்றில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு பிரபல மேடை நிகழ்ச்சி மந்திரவாதி ஆனந்த்மோகனைச் சந்தித்தார். இவரது சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் அஜய் சந்தர்கர் கூறியதாவது: மாவோவாதி களை ஒழிப்பது என்பது பாதுகாப்பு படையினருக்கு பெரும் சிரமமான காரிய மாக உள்ளது.
மாவோவாதிகளை தேடிச் செல்லும் பாதுகாப்புப் படையினர் மோத லில் சிக்கி அநியாயமாக உயிரிழக்கின்றனர். இது குறித்து மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் மாவோவாதிகளை கட்டுப்படுத்த முடிய வில்லை.
ஆகையால், பிரபல மந்திரவாதி ஆனந்த் மோகனிடன் அவரது மந்திரத் திறமையைப் பயன்படுத்தி மாவோவாதி களின் கைகளைக் கட்டிப்போட வேண்டிக் கொண்டேன். நான் அவரிடம் பேசும் போது நீங்கள் இந்த மாநிலத்தின் மருமகன் போன்றவர்; உங்களின் திறமையால் இந்த மாநிலத்தில் உள்ள மாவோவாதிகளின் கைகளைக் கட்டிப்போட்டு,
அவர்களை செயல்படவிடாமல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் என்றார். மேலும் அவர் கூறும் போது, கடந்த வாரம் ராய்ப்பூரில் அந்த மந்திரவாதியின் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன்; அந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு சிறுவனை 4 துண்டு களாக வெட்டி பிறகு அதை ஒட்டவைத் தார்.
அதன் பிறகு நான் மந்திரத்தின் மூலம் மாவோவாதிகளைக் கட்டுப்படுத்தலாம் என்ற முடிவிற்கு வந்தேன். எனது இந்த யோசனையை ஆனந்த் மோகனிடம் கூறியுள்ளேன் என்று கூறினார். அமைச் சரின் இந்தப் பேட்டி குறித்து மேடை தந்திரக் கலைஞர் ஆனந்த் மோகனிடம் கேட்ட போது அவர் பதில் எதுவும் கூறாமல் இரவே தனது குழுவினருடன் மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூருக்குச் சென்று விட்டார்.
மேடை நிகழ்ச்சியில் பணம் வாங்கிக்கொண்டு தந்திரவித்தைகளைக் காட்டும் ஒருவரை மாவோவாதிகளை அடக்க அமைச்சரே அணுகி யுள்ள விவகாரம் இந்திய அரசியலில் முதலாவது நிகழ்ச்சி அல்ல.
கடந்த நவம்பர் மாதம் தொழில் முனைவோர்களி டையே பேசிய மோடி யோகக் கலையின் மூலம் வியாபார நுட்பம் மற்றும் தொழிலாளர் களை எப்படி தங்கள் வசப்படுத்தி வேலை வாங்கிட முடியும் என்றும் யோகக்கலை யால் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை அறிந்துகொண்டு அதன்படி தொழிலதி பர்கள் செயல்பட்டால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று கூறியுள்ளார்.
இப்படி பிரதமர் முதல் மாநில அமைச்சர்கள் வரை பகுத்தறிவை மூட்டைகட்டி வைத்துவிட்டு மந்திரம் தந்திரம் யோகம் என அலைகின்ற கூட்டம் இப்போது இந்தியாவை ஆள்கிறது.
மந்திரத்தால் மாங்காய் விழுமா என்று கேட்பதுண்டு. பி.ஜே.பி. ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மந்திரத்தால் மாங்காய் விழும் என்கிறார்கள்; ஆமாம் கேழ்வரகில் நெய் வடியப் போகிறது - அண்டாக்களைத் தயாராக வைத்திருங்கள் அள்ளிக் கொண்டு வரலாம்!
2. சாமியார்கள் சாம்ராஜ்ஜியம்
கருப்புப் பணப்புகழ் சாமியார் ராம்தேவ் அரியானா மாநில யோக பிரச்சாரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது முயற்சி மற்றும் மோடி உழைப்பால் தான் உலக யோகா தினம் உருவாகியுள்ளதாம். இதை அரியானா அரசு தங்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த பெருமையை குறிக்கும் வகையில் சாமியார் ராம்தேவை கவுரவப்படுத்தும் வகையில் அரியானா அரசு அவரை கேபினெட் அமைச்சருக்குரிய தகுதியை தர முன்வந்தது. இதற்காக சிறப்பு அரசாணை ஒன்றையும் அரியானா பாஜக அரசு வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பாபா ராம்தேவ் இந்தியாவின் யோகக் கலையை உலகமெங்கும் பிரபலமடையச் செய்தவர், அவரால் இன்று எல்லா நாட்டு மக்களும் யோகக்கலையை அறிந்துள்ளனர்.
அதைக் கற்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். பாபா ராம்தேவின் முயற்சியால் மோடி அவர்களின் யோகப்பிரச்சாரம் எளிதானது. ஆகவே தான் உலக யோகா தினத்தை கொண்டாட உலக நாடுகள் முன்வந் துள்ளன. இவ்வளவு பெருமைக்குரிய செயல் பாபா ராம்தேவ் மூலமாகவும் பிரதமர் மோடி அவர்களின் உழைப்பாலும் வந்தது.
அதே நேரத்தில் அரியானா மாநிலத் தின் யோகா கலையில் பிரச்சாரத்தூதுவராக இவரை நியமித்துள்ளோம். மேலும் பாபா ராம்தேவை பெருமைப்படுத்தும் வகையில் அவருக்குக் கேபினெட் அமைச்சர் களுக்குரிய தகுதியை வழங்க உள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.
இதன்படி அவருக்கு அரியானா அரசு சார்பில் குடியிருக்க பங்களா, வெளி நாட்டுப் பயணச்செலவுகளை அரியானா அரசே ஏற்றுக்கொள்ளும், ஏற்கனவே அவருக்கு அதிஉயர் பாதுகாப்பு வளையத்தை மோடி அரசு கொடுத்துள்ளது. தற்போது அரியானா அரசும் அந்தப் பாதுகாப்பைக் கொடுக்கும்.
அவருக்கும் அவருடனிருப்பவர்களின் அனைத்துச் செலவுகளையும் அரியானா அரசு ஏற்றுக்கொள்ளும். வெளிமாநிலங் களுக்குச் செல்லும்போது அரியானா மாநில அரசின் சார்பில் ஒதுக்கப்படும் நட்சத்திர விடுதியில் தங்க இடமும், உள்நாட்டு இலவச விமானப் பயணம் போன்றவையும் அவருக்கு ஒதுக்கப்படும்.
இந்த நிலையில் சாமியார் ராம்தேவ் அரியானா மாநிலம் சோனிப்பேட் என்ற ஊரில் பத்திரிகையாளர்களிடையே பேசும் போது அரியானா மாநிலம் யோகக் கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு பெருமையளிக்கிறது. அதே நேரத்தில் அரசு எனக்குச் சிறப்பு மரியாதை அளிப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நானே ஒரு ஃபக்கிர் (தெருத் தெருவாக சுற்றி, பிச்சை எடுப்பவர்) நமது மக்களுக்கான பிரதமர் மோடி இருக்கிறார்.
அவர் யோகக்கலைக்குக் கொடுக்கும் மரியாதை எனக்குக் கொடுப் பதாக நினைத்துக்கொள்கிறேன், எனக்கு கேபினெட் தகுதியை வழங்க முன்வந்த அரியானா மாநில அரசுக்கு நன்றி என்று கூறினார். ஆனால் மோடி அரசு ஏற்கனவே இவருக்கு தலைநகர் டில்லியில் தனி பங்களா, அரசு தரப்பில் பாதுகாப்பு, இவரது மருந்துகம்பெனி தயாரிப்புக்குச் சிறப்புச் சலுகை, என மத்திய கேபினெட் அமைச் சருக்குள்ள அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துள்ளது, என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
இந்த சாமியார்மீது ஏகப்பட்ட புகார்கள் உண்டு. வருமான வரி மோசடி உள்ளிட்ட வழக்குகள் உண்டு. முத்திரைத்தாள் மோசடியில் முக்கியமான புள்ளி இவர் அந்நியச் செலாவாணி சட்டத்தை மீறிய வழக்கும் உண்டு. இவர்தான் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருந்தவர்!. உண்ணாநிலை போராட்டத்தைத் தடை விதித்து காவல்துறை கைது செய்ய வந்தபோது (டில்லியில்) பெண் உடை அணிந்து ஓடித் தப்பிய வீராதி வீரர் இவர்.
இவர் ஒரு மருந்து வியாபாரியும்கூட! அந்த மருந்தை வாங்கி சாப்பிட்டால் ஆண் குழந்தை மட்டுமே பிறக்குமாம்; வாயால் சிரிக்க முடியுமா? இது போன்ற பேர் வழிகள் தான் பிஜேபி ஆட்சிக்கு அறிவிக்கப்படாத ஞான குரு!
3. எல்லாம் காவிமயம்
காசி இந்துப் பல்கலைக்கழக 97-ஆம் ஆண்டு விழாவில் அனைவரும் காவி ஆடை உடுத்தி வரவேண்டும் என்று கட்டாய அறிவிப்பு ஒன்றை பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவ மாணவி களுக்கும் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் பழமையான பல்கலைக் கழகத்தில் ஒன்று எனப் பெயர் எடுத்த காசி இந்துப் பல்கலைக்கழகம் தற்போது காவிப் பல்கலைக்கழகமாக மாறிவிட்டது. 2014 ஆம் ஆண்டு மோடி இந்த பல்கலைக் கழகத்தில் பேசும் போது காசி பல்கலைக் கழகம் தன்னுடைய பழைய பாரம்பரியத்திற்கு மாறவேண்டும்.
இதன் நூற்றாண்டு கால வரலாற்றில் ஆங்கிலேயர்களின் கலச்சாரத் தாக்கம் உள்ளது, என்று மோடி கூறினார். பழைய பாரம்பரியம் என்றால் காவி உடைதான் என பல்கலைக்கழக நிர்வாகம் நினைத்துவிட்டதோ என்னவோ, ஏப்ரல் 26-ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் 97ஆம் ஆண்டு விழாவின் போது முதல் முறையாக பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ/மாணவிகள்,
பேராசிரியர்கள், பல்கலைக் கழக அதிகாரிகள், பணியாளர்கள் அனை வரும் காவி உடையில் வரவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது. மாணவர்கள் முழுமையாக காவியாடை அணியாவிட்டாலும் அவர்களின் கழுத்தில் காவி நிற பட்டையை அணிந்து வரவேண் டும் என்றும், மாணவிகள் காவியில் துப் பட்டா கட்டாயம் அணியவேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் பேராசிரி யர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் கட் டாயம் காவி வண்ண ஆடையை அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் கொடுத்த போது பல்கலைக்கழகத் தின் கொடியின் நிறம் காவியில் உள்ளது. இது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட வண்ணமாகும்;
ஆகவேதான் நாங்கள் காவி நிற ஆடையை அணிய வற்புறுத்துகிறோம். இதில் மதச்சாயம் எதுவுமில்லை என்று கூறியது. பலகலைக்கழகத்தின் கையேட்டில் இந்த நாட்டில் உள்ள இந்து, முஸ்லீம், கிறிஸ்த வர்கள், பார்சிகள், சீக்கியர்கள் பவுத்தர்கள் அனைவரும் இந்தியர்களே, இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கமே இன, மத, மொழி பேதமின்றி கல்வியளித்து நாட்டிற்கு சிறந்த மாணவர்களை கொடுப்பதுதான், மாணவர்கள் பேதம் பார்க்காமல் அனைவ ருடன் சமமாக பழகி ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கவேண்டும், என்று உள்ளது.
ஆனால் திடீரென கலாச்சாரம் என்ற பெயரில் காவி ஆடையை கட்டாயப்படுத்தியது.
“India is not a country of the Hindus only. It is a country of the Muslims, the Christians and the Parsees too. The country can gain strength and develop itself only when the people of the different communities in India live in mutual goodwill and harmony. It is my earnest hope and prayer that this centre of life and light which is coming into existence, will produce students who will not only be intellectually equal to the best of their fellow students in other parts of the world, but will also live a noble life, love their country and be loyal to the Supreme ruler.”
இந்தப் பல்கலைக்கழகத்தில் முஸ்லீம், ஆங்கிலோ இந்திய, கிறிஸ்தவ, பவுத்த மதத்தைச் சார்ந்த பலர் பேராசிரியர்களாக வும், பணியாளர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறிடவில்லையா? அதனுடைய தாக்க மாகவும் இது இருக்கக் கூடும் அல்லவா!
4. பா.ஜ.க. இல்லையா? சம்பளமும் இல்லை
பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் தலைமைவகிக்கும் கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள், மாணவிகள் ஆசிரி யர்கள் அனைவரும் பாஜக உறுப்பினராக வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உறுப்பினராக மறுத்த ஆசிரியை ஒருவரின் சம்பளத்தை இரண்டு மாதம் தராமல் நிறுத்தி வைத்த விவகாரம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைநகர் டில்லியில் ராயன் சர்வதேச பள்ளி வசந்த் குன்ச் என்ற இடத்தில் இயங்கிவருகிறது, பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் நிர்வாகியாக இருக்கும் இப்பள்ளியை அகஸ்டின் பிண்டோ என்பவர் பினாமியாக இருந்து நடத்தி வருகிறார். இந்தப்பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர் களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் கூறப் பட்டதாவது: இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், மற்றும் கற்பிக்கும் இருபால் ஆசிரியர்கள், மற்றும் அலுவலக ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் அனை வரும் பாஜகவில் உறுப்பினராகச் சேர வேண்டும் என்றும் மேலும் ஒவ்வொரு வரும் குறைந்தபட்சம் நான்கு பேரை தங்களின் மூலம் பாஜகவில் இணைய வைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை அனைவரின் கைகளில் தராமல் வகுப்பறைகளில் வாசித் துக் காட்டப்பட்டது. மேலும் ஆசிரியர்களி டம் கையொப்பமும் வாங்கப்பட்டது. இந்த நிலையில் பல ஆசிரியர்கள் பள்ளி நிர் வாகத்தின் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்தப்பள்ளியில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் இரண்டு ஆசிரியர்களின் கடந்த மாத சம்பளத் தொகையை நிறுத்தி வைத்துள்ளனர்.
பிடிப்புத்தொகை எதுவும் இல்லாத பட்சத்தில் திடீரென இவர்களது சம்பளம் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனை அடுத்து டில்லி துணை முதல்வர் சிசோரியா பள்ளி நிர்வாகத்திடமிருந்து அறிக்கை ஒன்றை கேட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் ஆணையிட்டார். இது தொடர்பாக பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரின் பெற்றோர் கூறியதாவது: முதலாம் வகுப்பு படிக்கும் எனது மகள் கையில் பாஜகவின் விண்ணப்பப் படிவம் ஒன்றைக் கொண்டுவந்தாள், இது பற்றி கேட்டபோது வகுப்பில் உள்ள அனை வருக்கும் இந்த படிவம் கொடுக்கப்பட்ட தாகவும், அனைவரும் ஒரு வாரத்திற்குள் பெற்றோர்களிடம் இதை நிரப்பி கையொப் பமிட்டு வரவேண்டும் என்றும் கூறித் தந்தார்கள் என்றார்.
எனது மொபைலிலும் பள்ளி நிர்வாகம் இந்த விவரத்தை அனுப்பியது. குழந்தையின் கல்வி தொடர் பான விவகாரமாகையால் நாங்கள் விண் ணப்பத்தை நிரப்பிக் கொடுத்து விட்டோம், என்று கூறினார்கள்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது, இதை அரசியலாக்க வேண்டாம், நாங்கள் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தில் அனை வரும் சேரவேண்டும் என்று தான் கூறி னோமே தவிர கட்சியின் உறுப்பினராக சேர வற்புறுத்தவில்லை. அதே நேரத்தில் விருப்பமுள்ள எங்கள் பள்ளி பணியா ளர்கள் மாணவ மாணவிகள் பாஜக கட்சியில் சேர்ந்து சமூகப் பணியாற்றலாம் என்று கூறினார்.
இந்தப் பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவராக கிரேஸ் பிண்டோ பாஜக இணையதளப்பிரிவின் தேசிய உறுப்பின ராவார். இவர் தன்னைப் பார்க்க வருப வர்கள் வலுக்கட்டாயமாக பாஜகவில் இணைய வற்புறுத்துகிறார். பள்ளியின் தகவல் பறிமாற்றத்திற்காகப் பயன்படுத்தும் கடிதத்தில் xxxxxxxxxx என்ற எண் பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த எண் பாஜகவின் உறுப்பினராக சேர்வதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் எண் ஆகும். இவ்விவகாரம் வெளியில் வந்த பிறகு மனிதவளத்துறை இணையமைச்சரும் பள்ளியின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.எஸ். கரோடியா கூறிய தாவது: ஒரு கட்சியில் சேரச்சொல்வது சொல்லாமல் இருப்பது தனிப்பட்ட விவ காரம்,
பள்ளி நிர்வாகம் கட்சி உறுப்பினர் படிவம் கொடுக்கிறது என்றால் அதை பூர்த்தி செய்து கொடுப்பதும், கொடுக்காத தும் அவரவர் விருப்பம், இதில் தவறேதும் இல்லை என்றார். பாஜகவில் சேர விண்ணப்ப படிவம் கொடுத்து ஒரு மாதமாகியும் இதுவரை பூர்த்தி செய்து தராத இரண்டு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் தர வேண்டிய சம்பளம் இதுவரை தரவில்லை.
இது குறித்து ஆசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட்ட போது கட்சி உறுப்பினர் அட்டையுடன் வந்தால் தான் சம்பளம் தரவேண்டும் என்று கூறிவிட்டதாக அந்த ஆசிரியர்கள் கூறினார்கள். இவ்விவகாரம் தொடர்பாக டில்லி காங்கிரசும் கண்டன அறிக்கை விட்டுள்ளது.
(Navbharat Times (18.3.15) New Delhi Edition )
இப்பொழுது சொல்லுங்கள் - பா.ஜ.க. நாட்டை எங்கே இழுத்துச் செல்லுகிறது?
அறிவியல் உலகத்திற்கா? அறியாமை என்னும் ஆபாசக் காட்டுக்கா? சமதர்ம - சமத்துவ உலகிற்கா? சாமியார்களின் ஆசி ரமத்திற்கா? சொல்லுங்கள் பார்க்கலாம்!
-------------------------மின்சாரம் அவர்கள் 16-05-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரைRead more: http://www.viduthalai.in/page-1/101457.html#ixzz3aV1tNvdK
0 comments:
Post a Comment