Search This Blog

12.5.15

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரே கூடாது-ஏன்?

நாளை ஆர்ப்பாட்டம் ஏன்?


பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மத்திய அரசைப் பொறுத்தவரையில் எப்போது கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அளிக்கப்பட்டது என்பது மிக முக்கியமான வினாவாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்றைக்குச் செயல்பாட்டுக்கு வந்ததோ (1950 சனவரி 26) அன்றி லிருந்தே இதுவும் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண் டும். ஆனால், நடந்தது என்ன? 40 ஆண்டுகளுக்குப் பிறகு தான் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்த போதுதான் 1990 ஆகஸ்டு 7ஆம் தேதி அறிவிக்கப்பட் டது. சமூக நீதி வரலாற்றில் அந்நாள் பொன் வரிகளால் தீட்டப்பட வேண்டிய நாள் என்பதில் எந்தவித அய்யப் பாடும் இல்லை.

அதனை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றனர் உயர் ஜாதி பார்ப்பனர்கள். அதன் காரணமாக மேலும் ஈராண்டுகள் தாமதப்பட்டது. இவ்வளவுக் காலந்தாழ்த்தி பிற்படுத்தப் பட்டவருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் பொழுது இதற்குள் எப்படி திணிக்கப்படுகிறது பொருளாதார அளவுகோல்? (கிரீமிலேயர்)


பந்தியிலேயே உட்கார வைப்பதற்கு முன்பே, இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்; எனவே, இதனைத் தரம் பிரிக்க வேண்டும் என்று சொல்லுவது சரியா? என்ற வினாவை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறாம்.


இந்தப் பொருளாதார அளவுகோலைத் திணிக்க வேண்டும் என்ற முயற்சிகள் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட காலத் திலேயே உயர் ஜாதிப் பார்ப்பனர்களால் மேற்கொள்ளப் பட்டதுண்டு. ஜவகர்லால் நேரு அவர்கள் இதுபற்றி நாடாளுமன்றத் திலேயே பின்வருமாறு கூறியுள்ளார்.

“My difficulty is this that when we chose those particular words there for the advancement of any socially and educationally backward classes”, we chose them because they occur in Article 340 and we wanted to bring them bodily from there. Otherwise I would have had not the slightest objection to add “economically” But if I added ‘economically’ I would at the same time not make it a kind of cumulative thing but would say that a person who is lacking in any of these things should be helped. ‘Socially’ is a much wider word including many things.
...(Parliamentary Debates 1951 - Third session Part II Volume XII columns 9814, 9820, 9822).
இதன் தமிழாக்கம் வருமாறு:

எனக்கிருக்கிற சிரமம் எல்லாம் இதுதான்; சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் முன்னேற்றத்திற்காக என்கிற சொற்களை ஏன் போட வேண்டும் என்கிறோம் என்றால், அவை அரச மைப்புச் சட்டப்பிரிவு 340-இல் இடம் பெற்றிருக்கின்றன என்பதால், நாம் அவற்றை இதிலே இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிறோம். இல்லாவிட்டால், பொருளாதார ரீதியாக எனப் போடுவதில் எனக் கொன்றும் ஆட்சே பணை இல்லை. ஆனால், பொருளாதார ரீதியாக என்ப தனைச் சேர்த்தால், சொற்களை அடுக்கிக் கொண்டே போகிறோம் என்பதோடு, இவற் றில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்பதும் முக்கியமாகும்.

1. சமூக ரீதியாக என்பது பரந்துபட்ட பல பொருள் தரக்கூடிய ஒரு சொல்லாகும் (நாடாளுமன்ற விவாதம் 1951 - மூன்றாம் அமர்வு பாகம் - 11, தொகுதி 12 - பத்திகள் 9814,9820, 9822). இவ்வாறு பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் பேசினார்.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்தான் இட ஒதுக்கீடு - பொருளாதார அளவுகோல் என்ற பேச் சுக்கே இடமில்லை என்பதற்கான வரலாறு இவ்வாறு இருக்க, உச்சநீதிமன்றம் தன் மனம் போன போக்கில் கிரீமிலேயர் என்ற சொல்லாக்கத்தை உண்டாக்கித் திணித்தது எந்த வகையில் நியாயமானது?

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. சமூக நீதிக்கான வாய்ப்பினைக் காலங் காலமாக மறுக் கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு என்பதை இதே உச்சநீதி மன்றம் கூட சொன்னதுண்டே!

நீதிபதி நாற்காலிகளில் உட்காருவோரைப் பொறுத்து தீர்ப்புகளும் ஆணைகளும் மாறும் என்றால் இது என்ன திருக்கூத்து?

அரசு வகுக்கும் கொள்கை முடிவுகளில் நீதி மன்றங்கள் தலையிடுவது சரியாகுமா? உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு ஓ. சின்னப்ப ரெட்டி அவர்கள் கருநாடக அர சுக்கும் வசந்தகுமார் என்பவருக்கு மிடையே நடைபெற்ற வழக்கு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்ட தன்மையை அடை யாளம் காணும் தகுதியை பெற்றவையல்ல என்றும், அதற்கான வழிகாட்டும் நெறிகளை வகுப்பதற்கும் உகந்ததல்ல என்றும் நாங்கள் விரும்புகிறோம். பரந்த பொதுவான வகையில் அதற்கான வாய்ப்பையோ சட்டப் பூர்வமான அளவீட்டுக் கருவிகளையோ சமூக நீதியான பிற்படுத்தப்பட்ட தன்மையை அளந்திட நாங்கள் பெற்றி ருக்கவில்லை. நாங்கள் உண்மையிலேயே மக்களிடமிருந்து விலகி யிருக்கிறோம். குறிப்பாகச் சொன்னால், படிநிலைத் தன்மையிலும் கீழ்நிலைத் தன்மையிலும் அடுக் கடுக்காக அமைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து விலகியிருக்கின்றோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி கூறியதைக் கவனிக்க வேண்டும். நீதிபதியாகி விட்டால் வானக் கூரையின் கீழ் உள்ள அனைத்தும் தங்களுக்கு அத்துப்படி என்று நினைக்கும் மனப்பான்மை முதலில் மாறிட வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிளவு ஏற்படுத்திய கிரிமீலேயரைப் புகுத்தியதால் ஏற்பட்ட பலன் என்ன? 27 சதவீத இடங்களைப் பூர்த்தி செய்ய பிற்படுத்தப் பட்டவர் களிடமிருந்து உரியவர்கள் கிடைப்பதில்லை. வெறும் 7 சதவீத இடங்கள் தான் இதுவரை அவர் களுக்குக் கிடைத்திருக்கின்றன. மீதி 20 சதவீத இடங்கள் எங்கே போகின்றன தெரியுமா? உயர் ஜாதியினர்களின் வயிற்றில் அறுத்து வைத்துக் கட்டப்படுகின்றன. கிரீமிலேயரால் ஏற்பட்ட சமூக அநீதி இது. இடஒதுக் கீட்டைக் கொடுப்பது போல் கொடுத்துத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சிதானே!

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரே கூடாது என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு.  அந்த நிலை எட்டப் படும் வரை இப்பொழுதுள்ள ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய் என்பதை தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பத்தரை லட்சம் ரூபாயாக ஆண்டு வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்துவதே சென்னையில் நாளை (13.5.2015) திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப் பாட்டத்தின் நோக்கம்.

கட்சிகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களே ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!!
 ----------------------”விடுதலை”  தலையங்கம் 12-05-2015Read more: http://www.viduthalai.in/page-2/101238.html#ixzz3ZvMjvJjk

0 comments: