Search This Blog

22.10.13

அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக்கூறும் இலட்சணம் இதுதானா?


  • சாமியார் ஒருவர் கிளப்பிய புருடாவை நம்பி தங்கம் கிடைக்கும் என்று  பூமியைத் தோண்டும் வேலையில் ஈடுபடுவதா?
  • மத்திய அரசு இதற்குத் துணை போகலாமா?
அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக்கூறும்
இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது?
மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் தமிழர் தலைவரின் அறிக்கை
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg
ஏதோ ஒரு சாமியார் பூமிக்குள் தங்கம் இருக்கிறது என்று அவிழ்த்துவிட்ட புருடாவை  நம்பி தொல்பொருள் துறை பூமியைத் தோண்டுவதும் உச்சநீதிமன்றம் இதற்குத் துணை போவதும் சரியானது தானா? அரசமைப்புச் சட்டம் கூறும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூறும் இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டி சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கிய நல்ல தம்பி திரைப்படத்தில் பல்வேறு அரிய தொலைநோக்குச் சிந்தனைகளை கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும், அவரது வாழ்விணையர் டி.ஏ. மதுரமும் சேர்ந்து கூறிடும் அறிவுரைக் காட்சிகள் ஏராளம் உண்டு.

பகுத்தறிவுப் புலவர் உடுமலை நாராயண கவி அவர்களது கருத்தமைந்த பாடல்களும் மேற்கூறிய முற்போக்குப் புரட்சிகர கருத்துக்களுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தன.
அதில் ஒரு பாடல் எட்டு, ஏழு, ஆறு, என்று தொடங்கும்; அதன் வரிகள் சிறப்பான கருத்துக்களைக் கூறும்.

பல்லவி: எட்டு... ஏழு... ஆறு... ஓர்
எட்டு... ஏழு... ஆறு... எல்லாம் தங்கம்...
ஈயாத பேரு ஏமாற்றும் தங்கம்...
சரணம்: தேசிங்குராஜன் செத்தான் - அவனது
தேசம் அழிஞ்ச பின்னாலே...
மாசில்லாத தங்கக் குவியல்
மறைஞ்சிருக்குது மண்ணாலே...
எட்டடி நீளம்.... ஏழடி அகலம்...
கட்டி கட்டியாய் தங்கப் பாளம்
வெட்டிப் பார்த்தால் புதையல் இருக்கும்
வேறெவரிடமும் சொல்லாதே!
என்று டி.ஏ. மதுரம் அம்மையார் பாடுவார்!
ஏராளமான தங்கம் தரையில் உள்ளது என்று ஒருவர் புரளி கிளப்பி, அதனை உண்மை என நம்பி, பலரும் மண்வெட்டிகளைத் தூக்கிக் கொண்டு, நிலத்தை வெட்டி, உழுது பார்த்திட கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுவர்.
அதுதான் பாட்டின் முதல் வரியாகும்; சோம்பேறிகளாக இருந்த மக்களை உசுப்பி விட்டு, தரிசாக இருந்த நிலங்களை உழுது பண்படுத்திடும் நிலையை உருவாக்குவர் என்பது அப்பாட்டின் மய்யக் கருத்தாகும்!

சாமியார் கிளப்பிய புருடா

உலகத்தின் எந்த மூலையிலும் தங்கப் புதையல் வேட்டை நடத்துவது எப்போதாவது நடப்பதுதான் என்ற போதிலும், அண்மையில் எவரோ ஒரு சாமியார் கனவில் ஒருவர் வந்தார்; புதையல் இருப்பதாகச் சொன்னார் என்று கிளப்பிய புருடாவை முன் வைத்து, உ.பி. அரசாங்கம், தொல் பொருள் துறையும் இப்படி இறங்கியிருப்பது, அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்வது மகா மகா வெட்கக் கேடான மூடநம்பிக்கை அல்லவா?
இந்தப் புரட்டுப் பிரச்சாரத்தை உ.பி. அரசோ, மத்திய அரசோ (தொல் பொருள் துறையினரும்) இதில் இறங்க லாமா?

உச்சநீதிமன்ற தீர்ப்பு உகந்தது தானா?

இதுபற்றி உச்சநீதிமன்ற வழக்கொன்றில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருப்பது அதைவிட வேதனையான, ஏற்க முடியாத நிலையாகும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு - அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிட வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை என்கிறபோது, அந்தப் பொறுப்பு, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, கடமைகளை நினைவூட்ட வேண்டியது உச்சநீதிமன்றத்தின் முக்கிய கடமை அல்லவா?

அரசின் கொள்கை முடிவுகளிலும் முக்கிய வழக்கு களிலும்கூட கருத்துக் கூறி வேறு வகையான தீர்ப்புக் களை கூறும் உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு, அரசமைப்புச் சட் டத்தின் 51A(h) பிரிவுக்கு உடன் பாடானதாக நமக்கு தெரியவில்லை.

தலைக்குப்புற வீழ்ந்த நரேந்திர மோடி!

அரசியல்வாதிகள் குறிப்பாக பிரதமர் வேட்பாளராக பெரும் அளவில் ஊடகங்களாலும், பா.ஜ.க., வாலும் பெரிதாக விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் மோடி, இந்த தங்கப் புதையல் வேட்டையை சில நாள்களுக்குமுன்பு கண்டித்துப் பேசி விட்டு, இப்போது தலைக்குப்புற அந்தர் பல்டி அடித்து, அந்த சாமியாரைப் புகழ்ந்து தள்ளியிருப்பது, மோடி எப்படிப்பட்ட பேசு நா இரண் டுடைய அரசியல்வாதி என்பதை நாடு புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது!

மின்னணுவியல் - அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து, செவ்வாய்க் கோளுக்கு, விண்கலத்தை, இந்தியா அனுப்பும் அளவுக்கு உள்ள நிலையில், இப்படி ஒரு தங்க வேட்டை என்று சாமியார்களை - மோசடி மன்னர்களை உயர்த்திக் காட்டுவது, அப்பாவி மக்கள் ஏமாறுவது எல்லோரையும் திருவாளர் 420 (ஏமாற்று மோசடி வேலை)  செய்ய வைப்பது விரும்பத்தக்கதா?
இந்த தங்க வேட்டைக் கனவின் கதையும், அதை ஒட்டிய நடப்பும் நம் நாட்டு அரசியலில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆட்சி புரிகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது; இது அண்மைக்கால விசித்திரங்களில் தலையானதாக உள்ளது!

ஒரு மத்திய அமைச்சரின் முடை நாற்றம் எடுக்கும் மூடத்தனம்!

மத்திய உணவு பதப்படுத்தும் துறையின் இணையமைச் சரான சரண்தாஸ் மகந்த என்பவரிடம் ஒரு சாது (சாமியார்) கூறினாராம்: இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி - ரூபாய் நாணய மதிப்பின் வீழ்ச்சி - நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த இடத்தில் தங்கப் புதையலைத் தோண்டினால், அரசு நிதி நெருக்கடிப் பிரச்சினை தீரக் கூடும்; என்று. உடனே இந்த அமைச்சர், பிரதமர், நிதியமைச்சர், உள்துறையமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர், தொல் பொருள் துறை அமைச்சர், அய்.மு. கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி,  புவி ஆய்வுத்துறை GSI (Geologicial Servey of India) எல்லாவற்றிற்கும் எழுதிய பிறகே இது முக்கியத்துவம் பெற்று, பூமி தோண்டும் பணி துவங்கி யுள்ளது. என்றால், இதைவிட (அரசே) இப்படிப்பட்ட கேலிக் கூத்தில் ஈடுபடும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வேறு உண்டா?

இதைவிட, இஸ்ரேல் போன்ற நாட்டினர் பாலை வனத்தை விவசாயப் பூமியாக்கி உள்ளனரே, அந்தத் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்தாலாவது பயன் அளிக்காதா?

நாடு எங்கே போகிறது?

உழைப்பைத் தொலைத்துவிட்டு, ஊர் மக்களை பேராசைப் பிடித்தவர்களாக்கி விடும் நிலையை மத்திய, மாநில அரசுகளே உருவாக்கிடலாமா? இதற்கு உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளும்கூட துணை போகலாமா? நாடு எங்கே போகிறது?

மதச்சார்பற்ற அரசு என்பதும், அறிவியல் மனப்பான்மையை பெருக்குதலும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

வெட்கம்! வேதனை- தேசிய அவமானம்!

-----------------------------------------கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம் சென்னை --”விடுதலை”   22.10.2013

22 comments:

தமிழ் ஓவியா said...


அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - பார்க்கலாம்

கேள்வி: பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டால் திராவிடர் கழகம் ஆதரிக்குமா?

பதில்: அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - அதன்பின் பார்க்கலாம்.

- திண்டிவனத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி (20.10.2013)

தமிழ் ஓவியா said...

கடவுளை எதிர்த்து

செய்தி: திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு கன்று சாவு. இந்து முன் னணி உண்ணாவிரதம்!

சிந்தனை: நியாய மாக அருணாசலேஸ்வரரை எதிர்த்து அல்லவா போராட வேண்டும்? உம் மிடம் காணிக்கையாக அளிக்கப்பட்ட கன்றைக் காப்பாற்றாத நீயும் ஒரு கடவுளா என்று அல்லவா கேட்க வேண்டும்?

தமிழ் ஓவியா said...


புருடா விட்ட சாமியார்


பொய் அம்பலமானதால் மொட்டை அடித்து கொண்ட பரிதாபம்!

லக்னோ, அக். 22- உ.பி.சாமியார் முதல் கனவுப்படி குறிப்பிட்ட கோவிலில் தங்கம் இல்லை என்பதால் அவர் மன முடைந்து மொட்டை அடித்து விட்டு ஆசிரமம் திரும்பினார். 2-ஆவது முறை கனவு கண்டதாக கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதை கனவில் கண்டதாக சாமியார் அறிவித்துள்ளார்.

உ.பி.மாநிலம் உண் னாவ் நகரில் தோண்டியா கேடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத் தில் உள்ள ராஜாராவ் ராம் பக்ஸ்சிங் என்ற மன்னரின் கோட்டை யில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக சோபன் சர்க்கார் என்ற சாமியார் கூறினார். தங் கம் புதைக்கப்பட்டிருப் பதை, தான் கனவில் கண்டதாக சாமியார் அறிவித்தார். இதனால் இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் அங்கு தங்க வேட்டைக்குச் சென் றனர். அவர்கள் அந்த கிராமத்தில் மண்ணைத் தோண்டும் பணியைத் தொடங்கினர். இந்த சம் பவம் இந்தியா முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தொல் பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் அந்த கோவி லில் எதிர்ப்பார்த்தப்படி தங்கம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனால் மனம் நொந்த சாமியார் மொட்டை அடித்து விட்டு தன் ஆசிரமத் திற்கு திரும்பிவிட்டார். மேலும் தங்க வேட்டைப் பற்றி பத்திரி கைகளுக்கு சொல்வதற்காக அமைத்த குழுவையும் கலைத்துவிட்டார்.
தற்போது அவர் கான் பூரில் தங்கி யுள்ளார்.

இன்னொரு கனவாம்!

இந்நிலையில் சாமி யார் சோபன் சர்க்கார் தான் 2-ஆவது முறை கனவு கண்டதாகக் கூறியுள் ளார். உ.பி. மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட் டத்தில் ஆதம்பூர் என்ற கிராமம் உள்ளது. சாமி யார் சோபன் சர்க் காரின் 2-ஆவது கனவு பற்றிய அவரது செய்தித் தொடர்பாளர் சுவாமி ஓம் அறிவிப்பினை வெளி யிட்டார். ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட்டி ருப்பதாக சாமியார் கனவில் கண்டுள்ளார் என சுவாமி ஓம் அறி வித்தார்.

ஆதம்பூர் கிராமம் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது. சாமி யாரின் செய்தித் தொடர் பாளர் சுவாமி ஓம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளார். சாமியார் கூறி யுள்ள இடத்தில் பூமியைத் தோண்டும் பணியைத் தொடங்கும் படி சுவாமி ஓம் கோரிக்கை விடுத் துள்ளார்.

மாவட்ட மாஜிஸ் திரேட் அபய் குமார் இதுபற்றி விளக்கம் அளித்தார். சாமியார் கனவில் கண்டு கூறி யதைப் போல் ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண் டும். இதற்காக இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் குழுவினையோ அல்லது மற்ற புவியியல் நிபுணர்களையோ அனுப் பும்படி மத்திய அரசுக்கு தான் கோரிக்கை விடுத் துள்ளதாக அபய்குமார் கூறினார்.

சாமியார் கூறியுள்ள இடத்தில் சமூக விரோ திகள் ஏதாவது தீமை புரியாமல் இருப்பதற் காக பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக அபய்குமார் தெரிவித்தார்.

சமூக விரோதிகள்

சாமியாரின் 2-ஆவது கனவு பற்றி தகவல் ஆதம்பூர் கிராமத்தில் வெளி யானவுடன் சில சமூக விரோதிகள் சட்ட விரோத செயலில் ஈடு பட்டனர். ஆதம்பூர் கிராமத்தில் கங்கை நதியின் முக்கிய படித் துறையில் பழங்கால சிவன் கோயில் உள்ளது. தங்கம் புதைக்கப்ட்டுள் ளதாக சாமியார் கூறிய தால் இந்த சமூக விரோ திகள் சிவன் கோயிலின் உறுதியான நடை மேடையை நேற்று முன்தினம் இரவு தோண்ட ஆரம்பித்து விட்டனராம்.

தமிழ் ஓவியா said...


ஜாதீய கூட்டணியை முறியடிப்போம்!

திண்டிவனத்தில் 20.10.2013 ஞாயிறு அன்று, நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றுள், மதவாதக் கூட்டணியையும், ஜாதீய கூட்டணியையும் முறியடிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜாதீய கூட்டணியை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பது குறித்து, திண்டிவனத்தில் அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் விரிவாக எடுத்து வைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர்த்து ஜாதீய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. பார்ப்பனர் சங்கமும் இடம் பெற்றிருந்தது குறிப் பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிப்பு - பார்ப் பனர்கள் இணைப்பு என்பதன் மூலம் இந்தக் கூட்டணியின் ஆணி வேர் நாசகரமானது - பிற்போக்குத்தனமானது; முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் அரும்பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை சமூக நீதித் தத்துவத்துக்கு எதிரான பிற்போக்கு அமைப்பு இது என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்களை உள்ளடக்கிய எந்த ஓர் அமைப்பும் தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டே தீரும் என்பது கடந்த கால வரலாறு உணர்த்தும் உண்மையான பாடமாகும்.

பல தேர்தல்களில் ஜாதிக் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது உண்டு, அவற் றிற்குத் தமிழ் நாட்டு மக்கள் அளித்த தண்டனையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. மறந்தனர் என்றால், அவர்கள் மற்றுமொரு முறை மரண அடி வாங்கத் தயாராகி விட்டனர் என்று பொருள்.

தந்தை பெரியார் பெயரை அடிக்கடி உச்சரித்தும், தொண்டர்களைச் சில நேரங்களில் கறுப்புடை அணியச் செய்தும் நாங்கள்தான் பெரியார் வழி வந்தவர்கள் என்று மார் தட்டும் ஒரு கட்சியின் தலைவர் எங்கள் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லை என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இன்று ஜாதிகளைத் தேடி அலைகிறார்கள்; பார்ப்பனர்களின் அமைப்பு தங்களிடம் இணைந்து கொண்டது குறித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர் என்றால் இத்தகையவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எளிதாக அடையாளம் காண்பார்கள் என்பதை, இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

ஜாதியின் பெயரில் அமைப்பை உண்டாக்கி, அது சரிப்பட்டு வராது என்று அனுபவத்தில் உணர்ந்து அரசியலில் எடுபடும் என்று ஜாதியை அடையாளம் காட்டாத பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள் மறுபடியும் ஜாதி அடையாளங்களைத் தேடி அலைவது அவர்களின் வீழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாகும்.

கொள்கைகளும், சித்தாந்தங்களும், இலட்சியங் களும் கைவிடப்பட்ட கையறு நிலையில், ஜாதியை ஆலிங்கனம் செய்வதானது அவர்களின் வெறு மையையே வெளிப்படுத்தும்.

இதற்குமேல் தமிழ் உணர்வு, இனவுணர்வு ஈழத் தமிழர் பிரச்சினை, பெரியார் கொள்கை பற்றிப் பேச முயன்றால் அதனை மிகப் பெரிய கேலியாகத்தான் தமிழினப் பெரு மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த முடிவு அனேகமாக அரசியலில் ஒரு முடிவு ரையைத் தங்களுக்குத் தாங்களே எழுதி முடித்துக் கொண்டார்கள் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பனர்களைத் தங்கள் கூட்டில் இணைத்துக் கொண்டு சமூக நீதியைக் குறித்து வாய் திறக்க இயலாத நிலையைத் தங்களுக்குத் தாங்களே, உருவாக்கிக் கொண்டு விட்டனரே!

திண்டிவனம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டினை, மிக உறுதியாக தெளிவாக திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

சமூகத்தில் மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இழிவுப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்றப் பாதையில் அழைத்து வருவது, நமது முதற் கடமை என்று பிரகடனப்படுத்தி விட்டார்.

எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தள்ளி வைக்க முனைகிறார்களோ அந்தத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து முதன்மையான இடத்துக்குக் கொண்டு வரவேண்டியதுதான். உண்மையான சமூக நீதி யாகும். அதனைத் திராவிடர் கழகம் செய்யும்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களை யும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் - காவல் துறையின் கடமை


மானமிகு ஆசிரியர் விடுதலை அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாட்டில் யாரும் செய்ய முன்வராத, பயப்படுகிற சமுதாயப் பெரும் பணியை துணிவுடன் செய்து, மனித சமத்துவம் இழிவு நீக்கம், கல்வி பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தமிழ் இன உணர்வு, சுயமரியாதை வாழ்வு ஆகியனவற்றை அளித்த வள்ளல் பெரியார் தமிழர்களுக்கு உத்தியோக உரிமை அரசு உரிமைகளும் பெறச் செய்தார்.

தனது 95 ஆண்டு கால வாழ்க்கை யில் தொடர்ந்து சுமார் 60 ஆண்டு காலம் பொது சேவையில் உடல் பொருள் தனது அறிவு ஆற்றல் யாவற்றையும் அளித்து பெரியார் தமிழர்களை நல்வாழ்வு பெறச்செய்ததார். அதே பெரும் பணியை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காட்டிய வழியில் நேர்மையாகவும் அமைதியாகவும் வன் முறைக்கு இடங்கொடாது சமுதாயத் தொண்டு சுமார் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றார். தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கும் பல சாதனைகளை செய் துள்ளார் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரை பார்ப்பனர் தூண்டுதலால் நம் தமிழ் மக்கள் சரியான புரிதல் அறிவில் லாமல் வன்முறை கொலைவெறித் தாக்குதலில் 28.92013 விருத்தாசலத் தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சரியான பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும் பாராமுகமாய் கண்டு கொள்ளவில்லை. பெரியார் யார்? திராவிட இயக்கக் கொள்கை எப்படிப்பட்டது. ஒரு உதாரணம் (மனித நேயம்) 10.8.1948-இல் இரண்டாம் இந்தி கிளர்ச்சியின் போது கும்பகோணத்தில் தி.க.தொண் டர்களுக்கு அறிவுரை கட்டுப்பாடு அமைதி தேவை, வன்முறைக்கு இடங் கொடுக்க கூடாது. காவலர்கள் உங்களை அடிக்க நேர்ந்தால் அவர் களுக்கு வசதியாக உடலைக் காட்ட வேண்டும் என்று கூறுகிறார். அதுவே தலைவர் கி.வீரமணி அவர்களின் கொள்கையாகும் திராவிடர் இன உணர்வு லட்சியமாகும்.

அதனாலேயே 1965 காங்கிரசு இயக்கம் பக்தவத்சலம் அவர்களின் ஆட்சியின் போது திமுக கிளர்ச்சி மிகவும் கடுமையாக மணப்பாறையிலி ருந்து அதனால் மிகவும் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் சுமார் 30 பேர் களுக்கு மேல் திராவிடர் கழக தோழர்கள் உதவியுடன் இடத்தெரு என் வீட்டிற்கு இரவில் காட்டுப் பாதையில் அழைத்து வரப்பட்டு அவ் விதமாகவே காட்டுப் பாதை வழியே இனஉணர்வுடன் அவர்களை பாது காப்பாக காவல் நிலையத்தில் சேர்த் தது, எங்கள் நினைவில் பசுமையாக உள்ளது. மேலும் மறுநாள் பெரும் அளவு காவல் துறையினர் பலப்படுத்தப்பட்டு கலவரம் முடிவுக்கு வந்தது மேலும் பெரியார் காமராசர் காங்கிரசை ஆதரித்த நேரம் தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறை கடமையாகும்.

- அ.இனியன் பத்மநாபன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமற் போகும் நிகழ்வுகள் பற்றி ஆவணப்படுத்துதல்

பெண் கவிஞர் லீனா மணிமேகலை என்ற தனிப்பட்ட திரைப்படத் தயாரிப் பாளர், கடந்த முப்பது ஆண்டுகளாக வலுக்கட்டாயமாகக் காணாமல் போகச் செய்தவர்களைப் பற்றி இலங் கையில் ஆவணப்படம் தயாரிக்கப் போவதாகச் சொன்னார். அப்போது அவருடைய நலம் விரும்பிகள் அவருக்கு உற்சாகம் அளிக்கவில்லை. மாறாக நீங்கள் கைது செய்யப்படு வீர்கள்; வன்புணர்வுக்கு ஆளாவீர் கள், அல்லது நீங்களே காணாமல் போய் விடுவீர்கள். ஆகவே அப்படிச் செய்ய வேண்டாம் என்று புத்திமதி புகன்றனர்.

இது மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது. இப்பொழுது அந்த ஆவணப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் முழுவீச்சுடன் நடைபெறு கின்றன. வெள்ளை வாகனக் கதைகள் என்ற அந்த ஆவணப்படம் ஒரு நல்ல வளர்ச்சியைக் கண்டுள் ளது. அந்தக் கதாசிரியையாக லீனா அதை நேரிடையாகப் பார்வையிடு கிறார். லீனா தன்னிடம் சவாலைச் சந்திக்கும் ஒரு இளம் கூட்டத்தினரை கைவசம் வைத்துள்ளார். ராணுவத் தினரின் தொடர்ந்த பார்வையிலி ருந்து தவிர்த்து, பல பகுதிகளை இரகசியமாகப் படம் பிடித்து உலக மக்கள் பார்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யவும், இடம் பெயர்ந்தோருக்கு நீதி வழங்கிடுதல் பற்றியும் ஏகமான பேச்சுகள் வருகின்றன. அதனால் தான் இலங்கை இன்னும் ராணுவம் புகுத்தப்பட்ட ஆட்சியில் தான் உள்ளது என்றும், சாதாரணக் குரல்கள் கூட நசுக்கப்படுகின்றன என் பதை உலகிற்குக் காட்ட விரும்புகிறேன். அங்கு வாழ்வோரிடையே அச்ச உணர்வை ஊட்டுவதற்காகவே ராணுவம் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

1980 முதல் இலங்கை விளக்கம் சொல்ல முடியாத, காணாமற் போக்கு தலைப்பற்றிய நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது ஜனதா விமுக்தி பெறமுனா கட்சியின் எழுச்சியின் போதும் பிறகு 1990-இல் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தது தான் அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது. இதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், எல்லா கட்சிகளையும் சேர்ந்து தூண்டி விடுவோர் ஆகிய அனைவரும் அடங் குவர். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வெள்ளை வேனில் (வாகனம்) எடுத்துச் செல்லப்படுவர். பிறகு அவர்களைப் பற்றிய எந்த செய்தியும் கிட்டாது.

வெள்ளை வாகனக்கதைகள் யாரையும் குறை சொல்லும் ஒரு பக்கக்கதையாக இருக்காது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பேரணி யில், உறவினரை அவ்விதம் வெள்ளை வாகனத்திற்குப் பலி கொடுத்த ஒருவர் உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினார் நாங்கள் விடுதலைப்புலிகளுக்கோ, இலங்கை ராணுவத்திற்கோ எதிரி அல்ல போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. எமது காணாமற்போன உறவி னர்களுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிந்த கொள்ள நாங்கள் உரிமை கொண்டவர்களாவோம்.

லீனா, ஜூலையில் நடந்த 41-ஆவது இலக்கிய சந்திப்பிற்குத்தான் இலங்கை சென்றிருந்தபோது வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்குதல் பற்றிக் கேள்விப் பட்டபோது அதுவே அவருக்கு இந்த ஆவணம் தயாரிப்பதற்கான உந்துசக்தி யாக விளங்கிற்று, அவர் பயணம் தொடர் வதற்காக அங்கேயே தங்கிக்கொண்டார். தாங்கள் நேசித்த உயிர்களைத் தேடும் கொடுமை பற்றியும், 2009-இல் போரின் கடைசி நிலையில் ஆயிரக்கணக்கானோர் மாயமாய் மறைந்ததையும் கேட்டு நெகிழ்ந்துபோன லீனா தான் இந்த ஆவணப்படத்தை தயாரிக்க தூண்டிற்று என்று சொன்னார்.

அண்மையில் அய்.நா.மனித உரிமை களின் உயர் ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகஸ்டு மாதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின் போது, நாட்டின் பல பகுதிகளிலுமிருந்த ஏழு பெண்களின் பொது இழைதான் இந்தக் கதை யினைக் கோக்க உதவுகிறது. பல வேறுபட்ட பண்பாட்டுப் புலங்களைக் கொண்ட அவர்களின் வேறுபட்ட காணாமற் போன அன்புக்குரியவர் களின் கதைகள். ஒரு அரசியல் கேலிச் சித்திரக்காரர், ஒரு முன்னாள் விடுதலைப்புலிப் போராளி, போரின் கடைசி நிலையில் ராணுவத்திடம் சரண் அடைந்த ஒரு இளைஞன், ஒரு மீனவன் மற்றும் ஒரு இடம் பெயர்ந்த முஸ்லிம் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கொண்டது.

இந்தப்படத்தின் முக்கிய நோக் கம், பெண்களின் வாய்மூடித்தனத்தை உடைத்து, காணாமற் போனவர் களைக் கண்டு பிடிக்கவும், நீதிக் காகப் போராட வைப்பதும் தான்.

லீனா, தனது ஆவணப் படத் தயாரிப்பை இந்த மாத இறுதியில் முடிக்க நம்பிக்கை கொண்டுள்ளார். சாவு நிகழ்வுகளுக்கு முடிவு வந்திருக் கலாம்; ஆனால் காணாமற் போக் குதலுக்கு இன்னும் முடிவு வரவில்லை என்று சொல்லும் லீனா, ஒரு கலை ஞராக தான் தன்னால் முடிந்த அள விற்கான உயிர்களைக் காக்க உதவுவேன் என்று கூறுகிறார்.

இந்த ஆவணப்படம் தொடர்பாக விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள: www.whitevanstories.com

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியம் என்ன? முன்னாள் இயக்குநர் என்.கே.ரகுபதி தரும் அரிய தகவல்கள்


மதுரை, அக். 22- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் தென்மாவட்டங்களில் மழைப் பொழிவு அதிகரித்து பொருளாதார வளம் பெருகு மென்றும் நாட்டின் பாதுகாப்புக்கு இத்திட்டம் மிகவும் முக்கியமான தென்றும் சேது சமுத் திரத் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் என்.கே.ரகுபதி கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்பட்டால் பருவக் காற்று திசை மாறும் வாய்ப்பு குறைந்து ராமநாத புரம் உள்ளிட்ட தென்மாவட்டங் களில் மழைப் பொழிவும் அதிகரிக்கும் என இத்திட்டத்தின் முன்னாள் தலை வர் என்.கே.ரகுபதி கூறினார்.

மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில், மதவெறி அரசியல் எதிர்ப்பு மாநாடு சனிக்கிழமையன்று நடை பெற்றது. இம்மாநாட்டில் சேது சமுத் திரத்திட்ட முன்னாள் தலைவர் கருத் துரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

எனது 3ஆவது குழந்தை

எனது மனைவி, குழந்தைகளுக்கு அடுத்து மூன்றாவது குழந்தையாக நேசித்தது சேது சமுத்திரத் திட்டத் தைத்தான். தற்போது அந்த மூன் றாவது குழந்தை அனாதையாக நின்று கொண்டிருக்கிறது.

சேது சமுத்திரத்திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்ற கோரிக்கை 1962ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போதே அரசியல் கட்சி களால் முன்வைக்கப் பட்டது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வதில் மீனவர்களின் வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகிய மூன்று சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டன. இதில் பிரதான அம்சமாக சுற்றுச்சூழல் சாத்தியக்கூறுகள் குறித்து முதலில் ஆய்வு நடத்தப் பட்டது. குறிப்பாக மன்னார் வளைகுடா கடலில் உள்ள 21 தீவுகளிலும் பவளப்பாறைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி, இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
தொண்டியில் இருந்து நாகப்பட்டி னம் வரையிலும், மீன்பிடித் தொழில் தான் பிரதானமாக உள்ளது. இப்பகுதி யில் பொருளாதார நிலையை உயர்த் தும் வேறு தொழில்கள் ஏதும் இல்லை. இந்தத் திட்டத்தையொட்டி சிறு மீன்பிடித் துறைமுகம் அமைப்பது, மதுரை-இராமேசுவரம் நான்கு வழிச் சாலை ஆகிய துணைத் திட்டங்களும் உருவாக்கப்பட்டன. சிறு துறைமுகம் அமைப்பது போன்ற துணைத் திட்டங்கள் தேவையா? என சிலர் கேள்வி எழுப்பினர்.

திட்டத்தின் நோக்கம்

தமிழகத்தின் கடலோர மாவட் டங்களில் தொழில்வளம் பெருக வேண்டும். மீனவர்களின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் அடிப் படை நோக்கம். சுற்றுச்சூழல், தொழில் நுட்பம், பொருளாதாரம் என எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்தாலும், மத சாத்தியக்கூறும் முக் கியமானதாக இருக்கிறது என்பதை இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கியபோது அறிந்து கொள்ள முடிந்தது. மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இத்திட்டம் குறித்து கேள்வியெழுப்பிய போது, சங்கராச் சாரியார் மற்றும் அவர்களது அமைப்பைத் தொடர்பு கொண்டு திட்டத்தின் செயல்பாடு குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக்கிற பணிகள் குறித்தும் தெரிவித்தோம்.
இதைப்பற்றி அறிந்துகொள்ள 12 பேர் கொண்ட குழு வந்தது. கிட்டத் தட்ட 5 மணி நேரம் செலவழித்து அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங் களை தீர்த்து வைத்தோம். இறுதியில் அவர்கள், விஞ்ஞான ரீதியாக, தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக இந்தத் திட்டத்தில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. அரி முனை முதல் தலை மன்னார் வரை 42 கி.மீ. நீளத்திற்கு மணல் திட்டுகள்தான் உள்ளன.

மணல்திட்டு உருவானது எப்படி

பருவக்காற்று திசைமாறி வீசுவ தால்தான் கடலில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளன. இந்தத் திட்டுகள் மனிதர்களால் உருவாக்கப் பட்டதற் கான எந்த சான்றும் இல்லை. திட்டத் துக்கு எதிர்ப்புக் கிளம்பியபோது, 120 இடங்களில் ஆழ்துளையிட்டு மணல் எடுத்து ஆராய்ந்தோம். மண் மாதிரி களை இராமேஸ்வரம் அலுவலகத்தில் வைத்திருந்தோம். திட்டத்திற்கு எதிர்ப் புத் தெரிவிப்பவர்களிடம் வழங்கிய தோடு, இதை யார் வேண்டுமானாலும் பெற்று ஆய்வு நடத்துங்கள் என்று கூறினோம்.

தமிழ் ஓவியா said...

ஆனால் மணல் திட்டுகள் மனி தனால் உருவாக்கப் பட்டது என்பதை யாரும் நிரூபிக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பிற்கு சேதுசமுத்திரத் திட்டம் மிகவும் முக்கியம். குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட கடல் பகுதியை இதன் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும். இந்திய கடல் எல் லைப் பகுதிக்குள்ளே அமைந்துள்ள இத்திட்டம் நிறைவேறினால் தூத்துக் குடி-சென்னை இடையிலான 424 கடல் மைல் (ஒரு கடல் மைல்=1.8 கி.மீ.), தூத்துக்குடி-விசாகப்பட்டினம் இடையிலான 366 கடல் மைல் தூரமும் குறையும். தூத்துக்குடி-சென்னை இடையிலான பயண நேரம் 32 மணி நேரம் மிச்சமாகும்.
இலாபங்கள்

எரிபொருள் செலவு, கப்பலுக்கான வாடகைக் கட்டணம் வெகுவாகக் குறையும். திட்டம் நிறைவேறினால் தூத்துக்குடியை ஒட்டியுள்ள பகுதியில் இந்திய கப்பற்படையின் சார்பாக சப்மெரைன் அமைக்க வாய்ப்புள்ளது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேறினால் ஆதம் பாலம் வழியாக 10மீ ஆழத்தில் 2.15 மீட்டர் நீளமும், 33 மீட்டர் அகலமும் கொண்ட கப்பல்கள் சென்று வர முடியும். இன் றைக்கும் சிறிய கப்பல்கள் ஆதம் பாலம் வழியாக சென்று கொண்டி ருக்கின்றன.
நாசா என்ன கூறியது?

ராமர் பாலத்தின் செயற்கைக் கோள் படத்தை வெளியிட்ட நாசா விண்வெளி ஆய்வு மய்யமும், அது மனிதனால் உருவாக்கப்பட்டதாகக் கூறவில்லை. கடல் நடுவே அமைந்த மணல்திட்டுகள் இயற்கையானவை. இதில், விஞ்ஞான ரீதியான உண்மை களை மட்டுமே ஏற்கமுடியும் என்று கூறிவிட்டது. மேலும், இந்தக் கால் வாய் அமைக்கப் பட்டால், பருவக் காற்று திசைமாறும் வாய்ப்பு குறைந்து மழைப் பொழிவும் அதிகரிக்கும். திட்டம் துவங்கப்பட்டபோது அன் றாடம் நடைபெற்று வரும் பணிகள் அதன் முன்னேற்றம் குறித்து இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பின்னர் திட் டம் குறித்த தகவல்கள் ஏதும் இணைய தளத்தில் இல்லை. 100 பக்கங்கள் மட்டுமே இணையத்தில் உள்ளது.

சேதுசமுத்திரத் திட்டம் குறித்தும், அதனால் நாட்டிற்கு ஏற்படும் நன் மைகள் குறித்தும், அதன் உண்மைத் தன்மை குறித்தும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கம் ஒரு முகநூலை உரு வாக்கவேண்டும். அதற்குத் தேவை யான தகவல்களை தரத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். சேதுசமுத்திரத் திட்ட உருவாக்கம், கப்பல் செல்லும் பாதை, இயற்கையிலேயே உருவான மணல் திட்டுகள் குறித்த பல்வேறு விவரங்களை அவர் கணினி மூலம் விவரித்தார்.

- நன்றி: முரசொலி, 22.10.2013

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கலைஞர் வேண்டுகோள்


சென்னை, அக்.22- இலங்கையில் நடைபெற வுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-

இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும், 2009 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய தைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று டெசோ இயக்கத்தின் மூலமாக பேரழுத்தம் கொடுத்திடும் வகையில் கடுமையாகவே தெரிவித்திருக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

நம்மைப்போலவே தமிழகத்திலே வேறு சில முக்கியமான கட்சிகளும், மாணவர் இயக்கங் களும், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 15.10.2013 அன்றும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 16.10.2013 அன்றும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கைகளில், இலங்கை யில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும், அந்த மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பிலும் 18.10.2013 அன்று முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு இதே வேண்டுகோளை கடிதத்தின் மூலம் தெரி வித்திருக்கிறார். ஏன் அதற்கு முன்பே 25.3.2013 அன்றும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

கனடா இந்த மாநாட்டை புறக்கணித்து ஏற்கெனவே தகவல் தெரிவித்திருப்பதும், இங்கிலாந்து நாட்டிலே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையிலே இந்த மாநாடு நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவித்தி ருப்பதும் குறிப்பிடத்தக்க திருப்பங்களாகும்.

தோழர் தியாகு இதே வேண்டுகோளையும் இணைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமர் எழுதிய கடிதத்தில், காமன்வெல்த் மாநாட்டில் நான் பங்கேற்பது குறித்து, உங்கள் கட்சி (தி.மு.க.) மற்றும் தமிழர்களின் உணர்வு களை மதித்தே இந்த விஷயத்தில் முடிவு எடுப் போம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலையிட்டு, தியாகு உண்ணாவிரதத்தை கைவிடவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சட்டசபையில் தீர்மானம்

அதன் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை இந்த பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகத் தின் உணர்வும் ஒருமுகப்பட்டிருக்கிறது என் பதை தெரிவிக்கும் வகையிலும் - தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளும் மற்ற பிரச்சினை களில் வெவ்வேறு கருத்திலே இருந்தாலும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உலக சமூகத்திற்கு நிரூபிக்கும் வகையிலும் தமிழக சட்டமன்றத்தின் வாயிலாக ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது சிறப்புடையதாக இருக்கும்.

எனவே சட்டமன்றத்தில் அத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


அந்தோ, பிரபல வரலாற்றுப் பேராசிரியர் என்.சுப்பிரமணியன் மறைந்தாரே!

மதுரைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவராகவும், வடகிழக்கு இந்திய ஷில்லாங் (மேகாலயா) பல்கலைக் கழகத்திலும் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்ற தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியரான பெருமகன் மூத்த பேராசிரியர் டாக்டர் என்.சுப்பிரமணியன் அவர்கள் தமது 99 வயதில் இன்று (22.10.2013) காலை உடுமலைப் பேட்டையில் தனது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம். இத்துயரச் செய்தி கேட்டு மிகவும் தாக்குண்டோம்.

இனிய நண்பராகவும், மாமனிதராகவும், சிறந்த துணிச்சல் மிகுந்த தனித்த சிந்தனையாளராகவும் இருந்த அவர்கள், அக்கிரகாரத்தின் அதிசய மனிதர் - வ.ரா.போலவே! என்பது பேருண்மையாகும்.

வியக்கத்தக்க அவரது மதிப்புறு நட்பும், பழகும் பான்மையும், உரையாடும்போது ஆழ்கடல் முத்துக்களைப் போல் வந்துகொட்டும் முதிர்ந்த கருத்துகளும், ஒப்பிட முடியாத வகையில் உயர்ந்தவை!

என்னிடத்திலும், எனது வாழ்விணையர் இடத்திலும் அவர் காட்டிய பாசமும், மதிப்பும், மரியாதையும் எங்களால் என்றென்றும் மறக்கவே முடியாது.

அவரது தனித்த முற்போக்குச் சிந்தனைக்காக வைதீக உலகத்தவர்கள், அவர்களோடு ஒட்டி ஒழுக இயலாதவர்களாக இருந்தனர். ஆனால், அவர் அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல், 99 வயதிலும் எழுதிக்கொண்டே இருந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் அவரை நாங்கள் உடுமலை இல்லத்தில் சந்தித்துப் பேசும்போது பெறு கின்ற மன எழுச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மறக்க முடியாத அனுபவங்கள்.

அவர்தம் 100 ஆம் ஆண்டைக் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். நேற்றுகூட அவரது மகன் சுந்தரேசன் அவர்களிடம் நலம் விசாரித்தோம். அவரும் சந்திக்கவேண்டும் என்று பதில் கூறியுள்ளார். என்னே, இயற்கையின் கோணல்புத்தி!

இன்று காலை 10 மணியளவில் அவர் மறைந்தார் என்ற அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி இப்போது கிடைத்தது. தாங்கொணாத வேதனையுடன் அவருக்கு வீர வணக்கம் கூறி, அவர்தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை, 22.10.2013

குறிப்பு: 23.10.2013 காலை 8 மணியளவில் உடுமலையில் கழகத் தலைவரும், அவரது வாழ்விணையரும் இறுதி மரியாதை செலுத்துவர்.

தமிழ் ஓவியா said...


தங்கப் புதையல்: அன்று மோடி சொன்னது

தங்கக் கனவு சாமியார் கூறியபடி புதை யலை தோண்டிக் கொண்டிருப்பதைவிட, வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவதே சரியான நடவடிக்கையாக இருக் கும்.

சாமியார் கனவு கண்டு கூறினார் என்று சொல்லி நிலத்தைத் தோண்டுவது பைத்தியக் காரத்தனமானது என்றெல்லாம் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று மோடியின் அந்தர்பல்டி!

கடந்த பல ஆண்டுகளாக சாமியார் ஷோபன் சர்க்கார் மீது லட்சக்கணக்கான மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத் துள்ளனர். அவரது சன்னியாசத்தை நானும் வணங்குகிறேன்.

உங்களது தவத்தாலும், தியானத்தாலும், தியாகத்தாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு நீங்கள் பல்லாண்டு களாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை அவமரியாதை செய்யவேண்டும் என்று நான் எண்ணவில்லை. எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. யாருடைய உணர்வையும் புண்படுத்த நான் விரும்பவில்லை என்று ஷோபன் சர்க்காருக்கு நரேந்திர மோடி பதில் எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளை முறியடிப்போம்!


திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் மற்றொரு முக்கியமான ஒன்று - மதச் சார்பின்மைக்கு விரோதமான மதவாத சக்திகளை முறியடிப்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத்துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (ஹழுநுசூனுஹ) கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப்பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப் பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங் களும், இந்துத்துவா சக்திகளும், பெருமுதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக் கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டி னைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கையாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளாவார்கள் என்பதையும் இப்பொதுக்குழு தொலைநோக்கோடு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றிச் சொல்லும்பொழுது எல்லோரும் ஒன்றைச் சொல்லுவது உண்டு. பன்முகத்தன்மை கொண்டது என்பதுதான் அது. பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் எல்லோரையும் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். அரசமைப்புச் சட்டப்படி மதச்சார்பின்மைக் கொள்கையைக் கொண்டது மாகும்.

பி.ஜே.பி. என்பது இவற்றை ஏற்றுக்கொள்கிறதா? திருச்சியில் பேசிய பிரதமருக்கான பி.ஜே.பி. வேட்பாளர் நரேந்திர மோடி என்ன கூறினார்?

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைக் குறைகூறிப் பேசினாரே - மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் கொள்கை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே!

மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்றால் இதன் பொருள் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி பேசும் இன மக்களும் தங்கள் அடையாளங்களை இழந்துவிட்டு, இந்துத்துவா கடலில் கரைந்துவிட வேண்டும். ஒரே நாடு- பாரத நாடு, ஒரே மதம்- ஹிந்து மதம், ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் (அஜெண்டா)தானே மறைமுகமாக மோடி கூறிச் சென்றுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வது உண்மையானால், எங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவோம் என்று சொல்லுவார்களா?

ஹிந்துராஷ்டிரம் அமைப்பதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லுபவர்கள் எப்படி மதச்சார்பின்மைக் கொள்கைக்கு உரியவர்கள்?

சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்தக் கொள்கைகள் எங்களுக்கு உடன்பாடானவையல்ல என்று திட்டவட்டமாக எழுத்துபூர்வமாக, அதிகாரபூர்வமாக அறிவித்த நிலை யில்தான் தேர்தலில் நிற்கவே சட்டப்படி உரிமைப் படைத்தவர்கள் ஆவார்கள்.
உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் நயவஞ்சக அமைப்பு ஒன்று இந்தியாவை ஆளவேண்டும் என்று துடிக்கிறது - இது ஆரோக்கியமானதுதானா?

உச்சநீதிமன்றத்திலே உத்தரவாதம் கொடுத்த பிறகு, அதற்கு மாறாக அயோத்தியில் ராமன் கோவிலை இடித்தார்களே! அதற்குப் பி.ஜே.பி.யின் பெருந்தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களே துணை போனார்கள், வழிகாட்டினார்கள் என்றால், எத்தகைய ஆபத்தான நிலை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாற்றுப் பட்டியலில் முதல் வரிசையில் உள்ள இவர்கள், அதற்குப் பிறகு இந்தி யாவின் துணைப் பிரதமராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல!

இன்றைக்கு பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள மோடி யார்? அவர் முதல மைச்சராக இருந்த நிலையில்தானே - மாநிலத்தில்தானே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்?

குறைந்தபட்சம் அதற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கக் கூடத் தயாராக இல்லையே! தான் காரில் செல்லும்பொழுது ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் ஏற்படும் சோகம் போன்றதுதான், குஜராத்தில் கொலை செய்யப்பட்டதும் என்று ஆயிரம் ஆயிரம் இடிஅமீன்கள்போல பேசக்கூடிய ஒரு மத வெறியர்தான் இந்தியாவுக்கான பிரதமரா? இப்படிப்பட்ட ஒருவரை அறிவிப்பதற்கு அந்தக் கட்சிக்குத்தான் எப்படிப்பட்ட புத்தி இருக்கவேண்டும்?

குஜராத் ஒளிர்கிறது என்று பொய் வெளிச்சத்தைக் காட்டிக் கண்களைக் கூசச் செய்து வாக்குகளைத் திருடி விடுவார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு


சென்னை, அக்.23- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுவதாக அரசு செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தில் நேற்று முன் தினம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தலை மையில் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அரசு செயலாளர் மூ.ராசாராம், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட இருக்கும் திருக்குறள் காட்சி கூடம் பற்றியும், சீனம் மற்றும் அரபு உலக மொழிகளில் திருக் குறள் மொழி பெயர்க்கப்படுவது பற்றியும் எடுத்துக்கூறினார்.

மொரிசியஸ் நாட்டு அமைச்சர்

மொரிசியஸ் நாட்டின் முன் னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், மொரி சீயஸ் நாட்டின் அமைச்சராக இருந்த 1983 முதல் 1995 வரை யிலான காலத்தில் மொரீசியஸ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்றும், தமிழர்களுக் கென்றும் தாம் ஆற்றிய பல்வேறு பணிகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.

நிறைவாக, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் நன்றி கூறினார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் வீச்சு நாட்டுக்குத் தேவை தாராபுரம் கண்டனப் பொதுக்கூட்டத்தில் அதிரடி அன்பழகன் முழக்கம்

தாராபுரம், அக். 24- அறிவு ஆசான் தந்தை பெரியார் 135-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமும், தமிழர் தலைவர் அவர்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதலைக் கண் டிக்கும் கண்டனப் பொதுக் கூட்டமுமாக திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகர திக சார்பில் 4.10.2013 வெள் ளிக்கிழமை இரவு 7 மணி யளவில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தொடங்கி நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு கழக பொதுக்குழு உறுப்பினர் தாரா புரம் ப.வடிவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிய திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தமது ரையில் குறிப்பிட்டதாவது:-
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை முழக் கங்கள் நாட்டிற்குத் தேவை யான அருமருந்தாகும். அத்த கைய கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி பெரியார் பணி முடிப்பதையே ஒரு குறிக் கோளாகக் கொண்டு செயல் படுபவர் தான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாதத்தின் 30 நாட்களிலும் மக்கள் மத்தியில் உரையாற்றும் தலைவர் கி.வீரமணி அவர்கள் 10 வயதில் தொடங்கி 80 வயதிலும் ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தலைவன் என்று வீறு நடைபோடுகின்ற புரட்சி யாளர் தான் கி.வீரமணி அவர்கள்

69 சதவிகித இடஒதுக்கீட் டிற்கு ஆபத்து வந்த போது 31 சி என்ற தனிச்சட்டத்தை இயற்றி அதை அரசியலமைப்புச் சட்ட அட்டவணை 9-இல் இடம் பெறச் செய்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை எந்த சக்தியாலும் சீர் குலைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யவர் தான் கி.வீரமணி அவர்கள்

அத்தகைய தலைவர் மீது விருத்தாசலத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு தமிழக முதல்வர் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை?

வார்த்தை பேசினால் வழக்கு என்றால்! உயிருக்கு உலை வைத்து திக தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றதுக்கு ஏன் நடவடிக்கை இல்லை?

அப்படியென்றால் இது சமூக விரோதிகளை ஊக்கு விக்கும் ஏற்பாடா?

ஒரு மூத்த தலைவருக்கே இப்படி பாதுகாப்பற்ற நிலைமை என்றால் நாட்டில் குப்பனுக் கும், சுப்பனுக்கும் என்ன பாது காப்பு?

இது தான் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியின் இலட்சணமா, நடப்பது நாட் டாட்சியா? காட்டாட்சியா? வீரமணி தனி மனிதரல்ல! தமிழர்களின் முகவரி! தமிழர் களின் தலைவர், பெரியாரின் இடத்தில் இருப்பவர், தமிழி னத்தின் மூச்சுக்காற்று இவரை அசைக்க நினைத்தால் நடக் காது. வீரமணியைப் பாதுகாக்க கருப்புச் சட்டைக்காரனுக்குத் தெரியும்.
பெட்ரோலும், தீப்பந்தமும் அப்படியே இருக்கிறது. பெரி யார் கட்டளையும் அப்படியே இருக்கிறது.

ஒருவேளை திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்கு ஊறு நேர்ந்தால்... ஒரு பார்ப் பானும் இல்லாத நாடு உரு வாக்கப்படும்.. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


சட்டமன்ற தீர்மானம்: வழிமொழிந்து பேசினார் மு.க.ஸ்டாலின்


சென்னை, அக். 24- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை டெசோ அமைப்பு வலியுறுத்திய தீர்மானம் போட்டுள்ள நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் இக் கருத்தை வலியுறுத்தி முன்மொழிந்து கொண்டு வந்துள்ள இத்தீர்மா னத்தை, வழிமொழிந்து வரவேற்க கடமைபட்டுள்ளதாக சட்டமன்றத்தில் இன்று திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று (24.10.2013) காலை கேள்வி நேரம் முடிந்தவுடன், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்து பேசிய திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இத்தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப் பட்டுள்ளேன்.

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் அந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலி யுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியிருக்கிறார்.

டெசோ அமைப்பின் சார்பில் 16.7.2013 அன்று நடைபெற்ற இப்பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை தீர்மான மும் நிறைவேற்றி பிரதமருக்கு தெரிவித்துள்ளோம்.

திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக தமிழ கத்தில் இப்பிரச்சினை தொடர்பாக ஆர்ப்பாட்டங் களும், போராட்டங்களும் நடைபெற்று இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
காமன்வெல்த் மாநாட்டை கனடா அரசு புறக் கணித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் இது தொடர்பாக கையெழுத்து இயக்கமும் தொடங் கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானம் கொண்டு வந்திருப்பதும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெற்றால் அடுத்த மாநாட்டிற்கு ராஜபக்சேதான் தலைவராக இருப்பார். எனவே இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வரவேற்று அமர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் இத்தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்த தீர்மானத்தினை ஒருமனதாக ஆதரித்து கீழ்க்கண்ட கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவஹருல்லா (மக்கள் மனிதநேய கட்சி), கோபிநாத் (காங்கிரஸ்), ஆறுமுகம் (சிபிஅய்), சவுந்தரராஜன் (சிபிஎம்), பண்ருட்டி ராமச் சந்திரன் (தேமுதிக) ஆகிய உறுப்பினர்கள் பேசினர்.

இதையடுத்து பேரவைத் தலைவர் பா.தனபால் அவர்களும் இத்தீர்மானத்தின்மீது தனது கருத்தை பதிவை செய்தார். பின்னர் முதலமைச்சர் எழுந்து தான் கொண்டுவந்த இத்தீர்மானத்தை சட்டமன்ற உறுப் பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

பேரவைத் தலைவர் இத்தீர்மானத்தை நிறைவேற் றும் வகையில் குரல் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஏற்காடு தேர்தல்

திண்டிவனம் - திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஏழாவது தீர்மானம் நடக்க இருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றியதாகும்.

தீர்மானம் வருமாறு:

தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தி வந்த சேது சமுத்திரத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் அந்தத் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பதை, தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாக இப்பொதுக்குழு கருதுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் இருதேர்தல் அறிக்கைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத - சந்தர்ப்பவாதமும், அரசியல் உள்நோக்கமும் கொண் டது என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரி வித்துக் கொள்கிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில், சமூகநீதிக்கு எதிரான போக்கு, மதச் சார்பின்மைக்கு விரோதமான செயல்முறைகள், கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக, ஆளும் கட் சிக்கு ஒரு கடிவாளம் தேவைப்படுவது அவசியம் என்ப தாலும், நடைபெறவிருக்கும் ஏற்காடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளருக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யத் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானத்தில் ஏற்காடு தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பதற்கான காரணம் தெளிவாக, காரண காரியத் தோடு விளக்கப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். அதில் பெரிய குற்றத்தைக் கண்டுபிடித்ததுபோல துள்ளிக் குதிக்கிறது.

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்று இருக்கிறதாம் - அதனைப் பிடித்துக்கொண்டு சிலம்பம் ஆடிப் பார்க்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்றால், தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குக் கடிவாளம் போட எதிர்க்கட்சியை ஆதரித்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தீர்மானத்தின் முன்பகுதி வாசகங்களை மறைத்துவிட்டு ஒட்டு வெட்டு வேலை செய்து வினா எழுப்புவது அறிவு நாணயம் ஆகுமா?

சேது சமுத்திரத் திட்டம் என்பது திராவிடர் இயக்கத்தின் நீண்ட காலத் திட்டம் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வரவேற்ற திட்டத்தை, ராமனைக் காட்டி எதிர்ப்பது, சமூகநீதிக்கு எதிரான போக்கு, கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக ஆளும் கட்சிக்கு, அவசியம் ஒரு கடிவாளம் தேவைப்படுகிறது என்பதை மறைப்பானேன்?

மேலே கூறப்பட்டுள்ள காரணங்களை மறுத்து எழுத சரக்கு இருந்தால் தாராளமாக சிலம்பம் ஆடலாமே!

அவற்றை மறுக்க முடியாது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் ஏன் வீண் வம்பு என்று அதற்குள் சிக்கிக் கொள்ளாமல், அரைகுறை கிணறு தாண்டும் வேலையில் இறங்கி இருப்பது பரிதாபமே!

அ.இ.அ.தி.மு.க.வை இந்த இடைத்தேர்தலில் தோற் கடிக்க இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றையெல்லாம் ஏன் மறந்துவிட்டீர்கள் - அவை பற்றியும் விளாசுங்கள் என்று நமக்கு எடுத்துக் கொடுத் திருக்கிறது என்றே எடுத்துக்கொள்வோம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிடர் இயக்கக் கொள்கைக்கும், கலாச்சாரத் தன்மைக்கும் ஏற்ப தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சியின்போது அறிவிக்கப் பட்ட தமிழர் பண்பாட்டுத் தொடர்பான சட்டத்தை மாற்றி, நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த அறுபது பிள்ளை கள்தான், சித்திரையில் தொடங்கும் தமிழ் வருடங்கள் என்று அறிவித்தது ஒன்று போதாதா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை உச்சரிக்கும் தகுதியை இதன்மூலம் அ.இ. அ.தி.மு.க. ஆட்சி இழந்துவிடவில்லையா?

இவர்கள் கூறும் அந்த அறுபது வருடங்களில் ஒரே ஒரு பெயராவது தமிழில் உண்டா? மொழிக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு, சமஸ்கிரு தத்துக்கு அல்லவா ஆலவட்டம் சுழற்றியிருக்கின்றனர்!

எந்தப் பெயரை - எந்தக் குழந்தைக்குச் சூட்டினாலும், மருந்துக்கும்கூட தமிழ் அதில் ஒட்டிக்கொண்டு இருக்கக் கூடாது என்ற தன்மையில் சமஸ்கிருதப் பெயர்களாகத் தேடிப்பிடித்து, பொறுக்கி எடுத்துச் சூட்டுபவர்தானே செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்?

அந்த நிலையில் உள்ளவர் - தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர் பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் அதனை எப்படி அணுகுவார் என்று எதிர்ப்பார்க்க முடியும்?
அண்ணா அவர்களின் நூற்றாண்டையொட்டி உரு வாக்கப்பட்டுள்ள நூலகத்தையே குப்பைத் தொட்டியாக ஆக்கி வைத்திருக்கும் அந்த ஒரு காரணம் போதாதா - இந்த ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்பதற்கு?

துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை போடப்பட வேண்டிய விரைவு பாலத்தையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.இ.அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டுத் தடுத்துள்ளதே - இது ஒன்று போதாதா நாட்டின் வளர்ச்சிக்குக் கேடான அரசு அ.தி.மு.க. அரசு, என்பதற்கு?

நமது எம்.ஜி.ஆர். சீண்டினால் வண்டி வண்டியாக எடுத்துக்கொட்ட ஏராளமான சரக்குகள் நம் கைவசம் உண்டு என்பதை மட்டும் அடக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.