Search This Blog

21.10.13

தீபாவளிப் பண்டிகையை தமிழ் மக்கள் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது!

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக் களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? 
அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின்றீர்களா?  என்பதுதான் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும். 

நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி யின்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின் றீர்களே யல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலை யும், புராணப் புஸ்தக வியாபாரி களின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடு கின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடை யவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடங்கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின் றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத் துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையி லிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியா பாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண் டாமா? என்று கேட்கின்றோம்.

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளு கின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள். இதைவிட உங் களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனி தர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். 

 பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடி னீர்கள். எவ்வளவு யாத்திரை செய் தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய் தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்ற வர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர் களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக் கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர் நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப் பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொது வாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண் டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற் கென்று தேவைக்கும் மேலானதாக வும், சாதாரணமாக உபயோகப்படுத் துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற் றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவா கின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொருபுற மிருந்தாலும், மற்றும் இவைகளுக் கெல்லாம் வேறு ஏதாவது தத்து வார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம். 

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப் பனியப் புராணக் கதையை அஸ்தி வாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத் தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்கமுடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங் கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ் விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லா வற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங் களில் ஒன்றாகிய தீபாவளிப் பண் டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ் வளவு பாராட்டுதலும், செலவு செய் தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாச கர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்து வத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகிய வைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை யிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்த வர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றா வது, அவற்றிற்கும் நமக்கும் ஏதா வது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண் டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட் கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென் றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்ற வர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக் கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள் ளும் பெரும்பாலும் காண்கிறோமே யொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும் என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரி யான எந்த விஷயங்களிலும் கிரா மாந்தரங்களில் இருப்பவர்களை விட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின் றோம். 
 
உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங் களில் அதிகமாகவும். மற்ற நகரங் களைவிட சென்னையில் அதிக மாகவும் கொண்டாடுவதைப் பார்க் கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக. ஏன் கொண்டாடுகின் றோம் என்பதே தெரியாதவர் களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண் மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமா யண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதாகாலட் சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக் கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர் கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப் பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல் லாதார்களில் இந்தக் கூட்டத்தார் கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக் கும் திராவிடர்களுக்கும் சம்பந்த மில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென் பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங் களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என்கின்ற வர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச்சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய் வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திரா விடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின் றோம்.

------------------------------------------- தந்தை பெரியார்- குடிஅரசு - கட்டுரை - 16-10-1938

29 comments:

தமிழ் ஓவியா said...


ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை


சென்னை, அக்.20-தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்கின் றனர். இதனை மீறி ரயில் களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம்.
ரயில்களில் பட்டாசு களை கொண்டு செல்வ தால் ஏற்படும் பிரச் சினைகள் குறித்து ரயில்வே காவலர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்க ளிடம் துண்டுப் பிரசுரங் கள் வழங்கியும், ஒலிப் பெருக்கி மூலமும் விழிப் புணர்வு பிரச்சாரங்கள் செய்வார்கள்.

மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படு கிறது. இதே போன்று பார்சல் பிரிவிலும் சந்தேகத்திற்கு இடமான பார்சல்களை காவல் துறையினர் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றை அனுமதிப்பதில்லை.
இந்த பட்டாசு சோத னைகளில் காவல் மோப்ப நாய்களும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை மீறி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பட் டாசுகளைக் கொண்டு செல்லும்போது, அதனை காவலர் கண்டுபிடித்து விட்டால், இந்திய ரயில்வே சட்டத்தின் படி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயி ரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

எனவே ரயில்களில் பயணம் செய்யும் பயணி கள், பட்டாசுகளை தங் களுடன் எடுத்துச் செல் லாமல் முன்னெச்சரிக் கையாக நடந்து கொள் வது அவர்களுக்கும் நல் லது, ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக் கான பயணிகளுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்கு 95 அடி உயர வெண்கலச் சிலை திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம்


திருச்சி - சென்னை நெடுஞ்சாலை சிறுகனூரில்
தந்தை பெரியாருக்கு 95 அடி உயர வெண்கலச் சிலை
திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம்

திண்டிவனம், அக்.20- திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 95 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவுவது என்று திண்டிவனத்தில் இன்று (20.10.2013) காலை கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. சிறப்புத் தீர்மானம் வருமாறு:

தந்தை பெரியாருக்கு 95 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவுவோம்!

ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார் - மக்களின் அறியாமையைப் போக்கும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை உலகிலேயே ஓர் இயக்கமாக நடத்தியவர். உலகிலேயே பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்காக ஒரு நாளேடு 80 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றால், அதுதான் விடுதலையாகும். அதனை நிறுவியவரும் தந்தை பெரியாரே!

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக அநீதி எதிர்ப்பு, சமதர்ம சமத்துவச் சிந்தனை வளர்ச்சி என்று பல துறைகளிலும் களமாடி, மக்கள் மத்தியில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியாரே!

மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்று புரட்சிக் கவிஞரால் தொலைநோக்கோடு கணிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் இன்று உலகம் முழுவதும் பரவி வருகின்றன - வரவேற்கவும் படுகின்றன.

உலகின் பல மொழிகளிலும் தந்தை பெரியார் அவர் களின் கருத்துகள் மொழி பெயர்க்கப்பட்டு அவர்தம் புரட்சி கரச் சிந்தனைகள் மணம் வீசிக் கமழ்ந்து கொண்டிருக் கின்றன. தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டை யொட்டி மத்திய அரசு, சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது. 125 ஆம் ஆண்டினையொட்டி மத்திய அரசு சிறப்பு அஞ்சல் உறையையும் வெளியிட்டுக் கவுரவித்தது.

புத்துலகின் தொலைநோக்காளர் - தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் - சமூக சீர்திருத்த இயக் கத்தின் தந்தை - அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள் இவற்றின் வைரி என்று அய்.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இத்தகு உலகத் தலைவரின் உருவத்தை வரலாற்றில் என்றென்றும் நிலை நிறுத்தும் வகையில், மாபெரும் நினைவுச் சின்னமாக - இந்திய மக்கள் மட்டுமல்ல - உலக மக்களே வியந்து நோக்கும் வகையில் 95 அடி உயரத்தில் வெண்கலச் சிலை ஒன்றை திருச்சிராப்பள்ளி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் நிறுவுவது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை திராவிடர் கழகப் பொதுக்குழு, நிறைவேற்றுவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது.

பத்து கோடி ரூபாய்க்குமேல் தேவைப்படும் என்றாலும், முதல் கட்டமாக 1000 சவரன் தங்கத்துக்கான தொகையை (சவரன் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என்ற மதிப்பீட்டில்) வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியார் சிலை நிறுவப்படும் வளாகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒளி - ஒலிக் காட்சிகள், மெழுகுச்சிலையரங்கம், குழந்தைகளுக்கு அறிவியல், விளையாட்டுப் பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய எழில் பூங்கா, கோளரங்கம், பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் என்று பல்கலைப் பல்திறன் கொள்கலனாக தந்தை பெரியார் வளாகத்தை உருவாக்க நாம் நமது தலைமுறையில் மேற் கொள்ளும் இந்த மகத்தான பணிக்கு நன்றியுணர்வுள்ள தமிழ் மக்கள் மிகத் தாராள மனதுடன் மனமகிழ்ந்து வாரி வழங்குவார்கள் என்பதில் அய்யமில்லை. கழகத் தோழர் கள் இந்த நிதி திரட்டும் பணியில் இன்றுமுதலே ஈடுபட வேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது!

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் எண்ணத்தில் உதித்த இந்த மகத்தான கருத்துருவினை - திட்டத்தினை வர வேற்று இப்பொதுக் குழு மனம் நிறைந்த பாராட்டு தலையும், நெகிழ்ச்சி மிகுந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது. வரலாற்றில் என்றென்றும் நிலைக்கத்தக்க, நினைக் கத்தக்க பொன் எழுத்துக்களால் பொறிக்கத் தகுந்த வரலாற்றுச் சாதனையை - தந்தை பெரியாருக்கு தமிழர்கள் ஆற்றி தீர வேண்டிய நன்றிக் கடனை, வெற்றிகரமாக செய்து சாதித்துக் காட்டிட இப்பொது குழு உறுதி கொள்கிறது! உறுதிக் கொள்கிறது!!

(திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், இச்சிறப்புத் தீர்மானத்தை முன் மொழிய, மண்டபம் நிறைந்து வழிந்த கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று, நீண்ட நேரம் பலத்த கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.)
கழகப் பொதுக்குழு பிற்பகல் 2.15 மணியளவில் முடிவுற்றது.

பெரியார் உலகம்

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனூரில் தந்தை பெரியாருக்கு அமைய உள்ள 95 அடி உயர உருவச் சிலையுடன், அருங் காட்சியகம், ஒலி -ஒளிக் காட்சிகள் முதலிய அம்சங்கள் அடங்கிய அந்த வளாகத்திற்கு பெரியார் உலகம் என்று பெயர் சூட்டப்படும் என தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். இதை யடுத்து கழகத் தோழர்கள் வரிசையில் நின்று தங்களின் பங்களிப்பிற்கான நிதியை கழகத் தலைவரிடம் வழங்கினர்.

தமிழ் ஓவியா said...

திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழுவின் முடிவுகள்


ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு!

மதவாத - ஜாதீய சக்திகளை முறியடிப்போம்!

திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழுவின் முடிவுகள்

திண்டிவனம், அக். 20- நடக்கவிருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து திண்டிவனத்தில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் திண்டிவனம் எம்.ஆர்.எஸ்.வண்ணமயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் எண்: 1

இரங்கல் தீர்மானம்

இந்துத்துவாவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மகா ராட்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறி வுப் பணியாற்றிய டாக்டர் நரேந்திர தபோல்கர் (வயது 65, படுகொலை 20.8.2013),

சமூகநீதிப் போராளி பிகார் டி.பி.யாதவ் (வயது 78, மறைவு 12.8.2013), மாலை முரசு அதிபர் இராமச்சந்திர ஆதித்தன் (மறைவு 16.10.2013), பகுத்தறிவாளரும், சினிமா இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் (15.6.2013), இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் தோழர் பி.இராமமூர்த்தி அவர்களின் இணையர் அம்பாள் அம்மையார் (வயது 87, மறைவு 16.7.2013), தி.மு.க. சட்டமன்ற முன்னாள் உறுப் பினரும், சுயமரியாதை வீரரருமான மன்னை கு.பாலகிருஷ் ணன் (வயது 83, மறைவு 5.8.2013), தமிழக மூதறிஞர் குழு வின் முன்னாள் தலைவர் பொறியாளர் ஞான.அய்யாசாமி (மறைவு 3.8.2013) திராவிடர் கழகப் பொருளாளர் மறைந்த பழைய கோட்டை அர்ச்சுனன் அவர்களின் மகனும், கழக ஆர்வலருமான சிவகுமார் மன்றாடியார் (வயது 69, மறைவு 16.10.2013), முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் அவர்களின் மகளும், சமூக சேவகருமான சரோஜினி வரதப்பன் (வயது 92, மறைவு 17.10.2013) ஆகியோர் மறை விற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் வேளாங்கண்ணி வி.எஸ்.டி.அழகப்பன் (மறைவு 28.6.2013), தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் சித்ரா சுந்தரம் (வயது 75, மறைவு 14.9.2013), மன்னார்குடி நகர முன்னாள் செயலாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராசகோபால் (வயது 88, மறைவு 19.9.2013), பெரியார் பெருந்தொண்டர் பொள்ளாச்சி பொ.வ.இராதா, (வயது 87, மறைவு 16.10.2013), செயங்கொண்டம் பெரியார் பெருந்தொண்டர் சிவசங்கர நாராயணன் (30.5.2013), லால்குடி வட்டம் திருமங்கலம் சட்ட எரிப்பு வீரர் (ஓராண்டு சிறை) அய்யாவு (மறைவு 26.8.2013), கரூர் நகர திராவிடர் கழக முன்னாள் தலைவர் முருகேசன் (வயது 89, மறைவு 5.9.2013), முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கண்கொடுத்தவனிதம் டார்பிடோ உத்திராபதி (வயது 88, மறைவு 15.9.2013), லால்குடி வட்டம் சிறுகளத்தூர் கிளைக் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ராஜகோபால் (வயது 84, மறைவு 28.8.2013), தேவக் கோட்டை ஒன்றிய திருமணவயல் எம்.கே.கரிகாலன் (வயது 75, மறைவு 17.8.2013), சென்னை கண்ணதாசன் நகர் கழகத் தோழர் ராஜாஜி (வயது 70, மறைவு 21.9.2013), மன்னார்குடி மேலவாசல் பெரியார் பெருந்தொண்டர் சி.கிருஷ்ணசாமி (வயது 72, மறைவு 5.9.2013), குமரி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் செயலாளர் புலவர் அருணாசலம் (வயது 82, மறைவு 12.8.2013), கீழ்வேளூர் - வடக்காளத்தூர் பெரியார் பெருந் தொண்டர் க.சிவராமன் (மறைவு 22.7.2013), கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மேனாள் ஒன்றியக் கழகச் செயலாளர் கா.சண்முகம் (வயது 52, மறைவு 20.7.2013), வடலூர் கழக அமைப்பாளர் வை.கோபாலகிருஷ்ணன் (வயது 36, மறைவு 30.6.2013) ஆகியோர் மறைவிற்கு இப்பொதுக்குழு தனது துயரத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் விலை மதிக்க முடியாத இயக்கத் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

கரூர் நகர திராவிடர் கழக முன்னாள் தலைவர் முரு கேசனார் அவரது இணையர் மருதம்மாள் செயங்கொண்டம் பெரியார் பெருந்தொண்டர் சிவசங்கர நாராயணன் ஆகியோர் உடல், மறைவிற்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தீர்மானம் எண்: 2

தமிழர் தலைவர்மீது வன்முறை ஏவப்பட்டதற்குக் கண்டனம்!

விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாணவரணி மண்டல மாநாட்டில் பங்கேற்க வந்த திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை 30 பேர் கொண்ட ஜாதிவெறி - மதவெறிக் கும்பல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலுக்கு இச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

கருப்புக்கொடி காட்ட இருப்பதாக மேற்கண்ட கும்பல் பற்றி காவல்துறைக்குத் தெரிவித்திருந்தும், காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்ததோடு, அவர்கள் ஜாடை காட்டியே இந்த வன்முறை நடந்திருக்கிறது என்று நம்புவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகவே இச்செயற்குழு உறுதியாகக் கருதுகிறது. மாநாட்டுக்கும், பேரணிக்கும் காவல்துறை அனுமதி அளித்த நிலையில், மாநாட்டுக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலை வருக்குப் போதுமான பாதுகாப்பு அளிப்பது தனது கடமை என்பதைக் காவல்துறை மறந்ததா?- திட்டமிட்டு வன் முறைக்குத் துணைபோனதா? என்பது முக்கியமான தாகும். தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தாக்கப்பட்ட காட்சி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் படங்களுடன் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் தங்கள் கண்டனங்களையும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகும் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. முறையாக விருத்தாசலம் காவல் துறை ஆய்வாளரிடத்திலும் மாவட்ட காவல்துறைக் கண் காணிப்பாளரிடமும் (கடலூர்) புகார்கள் கொடுக்கப்பட்டும் அவற்றின்மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்த பிறகு, தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்திய பிறகு, காவல்துறை தலைமை இயக்குநரைச் சந்தித்து, தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் கொடுத்து வலியுறுத்திய பிறகு, மிகவும் காலந்தாழ்ந்து ஒரு வாரத்திற்குப் பின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் பா.ஜ.க., மற்றொருவர் இந்து முன்னணி என்பதிலிருந்து, விருத்தாசலத்தில் தமிழர் தலைவர்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணி வெளிச்சத் திற்கு வந்துவிட்டது. இதில் தொடர்புடைய மற்ற குற்ற வாளிகளையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையை இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

அ.இ.அதிமுக ஆட்சியில் இதற்கு முன் நான்குமுறை கழகத் தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றது; அவற்றின் மீது உரிய முறையில் வழக்குகள் நடைபெறவில்லை; எந்தக் குற்றவாளியும் தண்டிக்கப்படவும் இல்லை; அதே நிலை இந்த வழக்கிலும், இந்த அ.இ.அதிமுக ஆட்சியில் தொடரக்கூடாது என்பதையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கழகத் தலைவருக்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை அளிக்கத் தவறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கழகமே மேற்கொள்வது என்று தீர்மானிக் கப்படுகிறது.

கழகத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மானமிகு கலை ஞர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும் இச்செயற்குழு தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. நலம் விசாரித்த பெருமக் களுக்கும் நன்றியினை வெளிப்படுத்திக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 3

ஈழத் தமிழர் பிரச்சினை: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது!

(அ) ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்தவித முன் னேற்றமும் இல்லாத நிலைதான் நாளும் தொடர்கிறது.
மனித உரிமை ஆணையத்தின் தலைமை இயக்குநர் இலங்கைத் தீவுக்கு நேரில் சென்று உண்மை நிலைகளை நேரில் கண்டறிந்து வெளியிட்ட அறிக்கை, - ராஜபக்சே அரசு எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஈழத் தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப் போவ தில்லை என்பதைத் திட்டவட்டமாகவே உணர்த்துகிறது.
ஏற்கெனவே ஈழப் போரில் தன் கடமையை அய்.நா. செய்யவில்லை என்று அய்.நா.வின் செயலாளர் பான் கீ மூன் அவர்களே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்தத் தவறுக்குப் பரிகாரம் தேடும் வகையில், மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிக்கையின் அடிப்படையிலும், ஏற்கெனவே 2011 ஏப்ரலில் தரூஸ்மன் தலைமையில் அய்.நா. நியமித்த மூவர் குழு தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அய்.நா. மன்றத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

(ஆ) இலங்கை வடக்கு மாகாணத்தில் இராணுவ கெடுபிடிகளுக்குமிடையே தேர்தல் நடத்தப்பட்டும் தமிழ்த் தேசியக் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் மாநில அரசுக்கு காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட எவ்வித முக்கிய உரிமைகளையும் வழங்கப் போவதில்லை; - 13 ஆவது சட்டத் திருத்தத்தையும் அமல்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக ராஜபக்சே அறிவித்து இருப்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கண்டிப்பதோடு, இதனை அடிப்படையாகக் கொண்டு காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அரசை நீக்கி வைக்கவேண்டும். நிறவெறி குற்றச்சாட்டின் பேரில் தென் ஆப்பிரிக்கா காமன்வெல்த் அமைப்பிலிருந்து இதற்கு முன் நீக்கப்ப ட்டுள்ளது (1961 முதல் 1994 வரை நீக்கியது) 1995இல் நைஜீரியா நான்கு ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்ட துண்டு. 1999 இல் பாகிஸ்தான் இடை நீக்கம் செய்யப் பட்டது. 1987 முதல் 1997 வரை பிஜி தீவும் நீக்கி வைக்கப் பட்டது. 2002இல் ஜிம்பாப்வேயும் காமன் வெல்த்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்த நாடுகளில் நடைபெற்ற போர்க் குற்றங்களைவிட இன ஒழிப்பு உள்ளிட்ட (GENOCIDE) பல மடங்கு கொடுமைகள் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டியதே காமன்வெல்த் அமைப்பின் நேர்மையை நிலைநிறுத்தும். அல்லது குறைந்தபட்சம் உடனடியாக இலங்கையில் காமன்வெல்த் நடைபெறுவதை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு காமல்வெல்த் அமைப்பினைக் கேட்டுக் கொள்கிறது. இந்த இரண்டு நடவடிக்கை களையும் உடனடியாக மேற்கொள்ள இயலாவிட்டால் இலங்கையில் நடக்க உள்ள காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா கண்டிப்பாகவே கலந்துகொள்ளக்கூடாது என்று இச்செயற்குழு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

(இ) ஈழத்தமிழர்களைக் கொன்று ஒழித்து இலங்கையில் தமிழினம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று ஆக்குவதற்கான மூர்க்கத்தனமான செயல்பாட்டில் இறங்கி இருக்கும் ராஜபக்சே அரசுக்கு போர்க் கப்பல்களை வழங்குவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். இந்தத் திட்டத்தை அறவே கைவிடுமாறு இந்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 4

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்களின் உரிமைகளுக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீட்பதே!

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும்,

சிறை வைக்கப் படுவதும் அன்றாட செயல்பாடாகவே ஆகிவிட்டன.
தமிழ்நாட்டு மக்கள் பல வகைகளிலும் தம் அதிருப்தியை வெளிப்படுத்தியும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருமனதாகவே உரத்த முறையில் குரல் கொடுத்துவரும் நிலையிலும், இந்தியப் பிரதமர் அடிக்கடி வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் கிளிப்பிள்ளை போல பாடம் படித்து வந்தும் - எல்லாவற்றையும் துச்சமாக மதிக்கும் போக்கை இலங்கை இனவெறி அரசு கடைப்பிடித்து வருகிறது.

இந்த வகையில் ஒரு சுண்டைக்காய்த் தீவு - வல்லரசாக ஆகப் போவதாகத் துடித்துக் கொண்டிருக் கும் இந்தியாவை அலட்சியப்படுத்துவது -இந்தியத் துணைக் கண்டத்தின் சுயமரியாதைக்குப் பேரிழுக்காகும்.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவை சட்ட விரோதமாக இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததுதான் தமிழக மீனவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு முக்கிய காரணமாகும் என்பதால் கச்சத் தீவினை மீட்பது என்ற முடிவு செய்து, அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5
திருச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு!

திருச்சியில் வரும் நவம்பர் 9 ஆம் தேதியன்று திராவிடர் எழுச்சி மாநாட்டினை சிறப்புடன் நடத்துவது என்று தீர் மானிக்கப்படுகிறது. இந்துத்துவாவை ஆட்சி அதிகாரத் தில் அமர்த்திட திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சி களைத் தடுத்து நிறுத்தவும், மக்கள் மத்தியில் மதச்சார் பின்மையின் முக்கியத்துவத்தை, - அவசியத்தைப் புரியவைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், திராவிடர் இயக்கம் கட்டிக் காத்து வந்த உணர்வுகளை நிலை நிறுத்தவும் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாடு முக்கியத் துவம் வாய்ந்தது என்பதையும் இப்பொதுக்குழு தெரி வித்துக் கொள்கிறது.

இம்மாநாட்டை மிக வெற்றிகரமாக நடத்திட சிறப்பான விளம்பரம் உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிக்குமாறு கழகத் தோழர்களையும், தமிழினப் பெருமக்களையும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களையும் மற்றும் சிறுபான்மை மக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 6 (அ)

மதச் சார்பின்மைக்கு விரோதமான மதவாத சக்திகளை முறியடிப்போம்!

மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத்துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (AGENDA) கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப்பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப் பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங் களும், இந்துத்துவா சக்திகளும், பெருமுதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக் கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டி னைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கையாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளாவார்கள் என்பதையும் இப்பொதுக்குழு தொலைநோக்கோடு வெளிப்படுத்துகிறது.

தீர்மானம் எண்: 6 (ஆ)
ஜாதீய கூட்டணிகளையும் புறக்கணித்திடுக!

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களாலும், அவர்தம் சீடர்களாலும், அவர் உருவாக்கிய திராவிடர் கழகத்தாலும் முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், போராட்டங்கள் நடத்தப்பட்டு, தமிழர்கள் என்ற இன ஒற்றுமைக்கு ஜாதீய கோட்பாடுகள், நம்பிக்கைகள் எதிரானவை என்ற ஒரு நிலையை உண்டாக்கி, தமிழின உணர்வும், சமூகநீதி உணர்வும் ஓங்கி வரும் ஒரு நிலையில், ஜாதிகளை ஒருங்கிணைத்துத் தேர்தல் கூட்டணியை உருவாக்கும் பிற்போக்குச் சக்தி களை தேர்தல்மூலம் தண்டித்து ஒதுக்கவேண்டும் என்று தமிழினப் பெருமக்களை இப்பொதுக்குழு வலிறுத்துகிறது.

ஜாதீய, மதவாத கூட்டணிகளுக்கு வரும் தேர்தலில் தக்கதோர் பாடத்தைக் கற்பிக்கவேண்டுமாய்த் தமிழினப் பெருமக்களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7
ஏற்காடு இடைத்தேர்தல்: தி.மு.க.வுக்கு ஆதரவு

தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தி வந்த சேது சமுத்திரத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் அந்தத் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பதை தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாக இப்பொதுக்குழு கருதுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் இரு தேர்தல் அறிக்கைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத - சந்தர்ப்பவாதமும், அரசியல் உள்நோக்கமும் கொண்டது என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூகநீதிக்கு எதிரான போக்கு, மதச் சார்பின்மைக்கு விரோதமான செயல்முறைகள், கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக, ஆளும் கட்சிக்கு அவ சியம் ஒரு கடிவாளம் தேவைப்படுவது அவசியம் என்ப தாலும், நடைபெறவிருக்கும் ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளருக்கே வாக் களித்து வெற்றி பெறச் செய்ய தேவையான ஒத்துழைப் பைக் கொடுப்பது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்: 8
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைத்திடுக!

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றம் டில்லியில் இருப்பதால், இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் அங்கு வழக்கினை நடத்த பல வகைகளிலும் இடர்ப்பாடுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக, தென்மாநில மக்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதால், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் ஆவன செய்யுமாறு இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 9
திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் திருச்சிராப்பள்ளியைத் தமது பொதுப் பணிக்கான தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றி வந்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், அந்த வரலாற்று நாயகரின் பெயரை திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சூட்டுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 10
திராவிடர் கழகப் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் காவல்துறை

திராவிடர் கழகம் முக்கியமாக ஒரு பிரச்சார இயக்கமாகும். நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கைகளை எடுத்துக்கூறி, அவர்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வினை, விழிப்புணர்வினை ஏற்படுத்த - தந்தை பெரியார் வழியில் கொள்கைப் பரப்புதலைத் தலையாயப் பணியாகக் கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் செயல்முறைகள் (டெமான்ஸ்ட்ரேசன்), பேரணிகள், மாநாடுகள், வெளியீடுகள் இவற்றின்மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று 51-ஏ(எச்) பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, மக்களிடத் தில் விஞ்ஞான மனப்பான்மை, சீர்திருத்த எண்ணம், மனிதநேய உணர்வுகளைப் பரப்புவது என்கிற அடிப்படைப் பணிகளை இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே செய்ய க்கூடிய இயக்கம் திராவிடர் கழகம் என்ற சமூகப்புரட்சி இயக்கமாகும். இதற்கு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் கொடுக்க அரசமைப்புச் சட்டப்படியே கடமையாற்ற வேண்டிய காவல்துறை, கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை திராவிடர் கழகம் நடத்திட அனுமதி வழங்குவதில் பெரிதும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தமிழ் ஓவியா said...

மதவெறி அமைப்புகள் கொடுக்கும் புகார் கடிதங்களை ஏற்றுக்கொண்டு, இந்திய அரசின் கொள்கையான மதச்சார்பின்மையைப் பிரச்சாரம் செய்யும் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கு, நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு என்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக வீண்பொருள் செலவும், ஆழமான மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் புகார் கொடுத்தும், காவல்துறை தொடர்ந்து இதே போக்கில் நடந்துகொண்டு வருவது வருந்தத்தக்கது.

காவல்துறையின் இந்தப் போக்குத் தொடரு மேயானால், உரிமை மீட்கும் போராட்டம் - மற்றொரு முனையில் நீதிமன்றத்தை அணுகுவது என்ற முறையைப் பின்பற்றுவது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்: 11
நாத்திகர்களும் - கோவில் திருமண மண்டபங்கள் அனுமதி மறுப்பும்!

நாத்திகர்களுக்குக் கோவில் திருமண மண்டபங் களை வாடகைக்கு அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் உத்தரவு பச்சையான சட்ட விரோத நடவடிக்கை யாகும்.

நாத்திகர்களும் இந்நாட்டு குடிமக்களே - அவர்களைக் குற்றவாளிகள்போல பிரித்துக் காட்டும் இத்தகைய உத்தரவு கண்டிக்கத்தக்கதாகும், வெறுக்கத் தக்கதுமாகும். மதச் சார்பற்ற கொள்கையை உள்ளடக்க மாகக் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம். இந்த நிலையில், மதச்சார்பற்ற கொள்கையை உடையவர் களுக்கு அரசுக்குச் சொந்தமான திருமண மண்டபங் களை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்பது எந்த வகையில் சரியாக இருக்க முடியும்?

தமிழ் ஓவியா said...

மேலும், இந்து மதத்தில் நாத்திகத்துக்கும் இடம் உண்டு என்று சொல்லும்பொழுது, நாத்திகர்களுக்கு அரசுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்திட அனுமதி மறுப்பது - முரண்பாடா னது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கித் தந்தை பெரியார் அவர் களுக்கு நன்றிக் காணிக்கையாக்கினார்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு அரசின் அண்மைக்கால உத்தரவுப்படி நாத்திகர்கள் சுயமரியாதைத் திருமணம் நடத்தினால், அனுமதி மறுக்கப்படுமா என்ற வினாவும் எழுகிறது. எந்த வகையிலும் பொருத்தமில்லாத, தன் முரண்பாடுகளைக் கொண்ட - சட்ட விரோத ஆணையை உடடியாக விலக் கிக் கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது. இல்லையெனில், நீதி மன்றம் வாயிலாக உரிய முடிவு காணப்படும் என்பதைத் தமி ழக அரசுக்கு இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 12

நாடு தழுவிய அளவில் - கீதையின் மறுபக்கம் நூல் அறிமுகம் - பிரச்சாரம்!

இந்து மதத்தின் வருணாசிரமம் - அதனைக் கட்டிக் காக்கும் கடவுள்கள், புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்களை எதிர்க்கத் தந்தை பெரியார் காலந் தொட்டு சுயமரியாதை இயக்கம்; திராவிடர் கழகம் அமைதி யான முறையில், பொது ஒழுங்குக்கு எந்தவிதமான குந்தகம் இல்லாத வகையில் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் திராவிடர் கழகம் அதன் தலைவர் திடீரென்று இத்தகைய பிரச்சாரம் செய்வதுபோல, சில சுயநல சக்திகள் பிரச்சினை செய்வதும், அதற்கு ஊடகங்களும், காவல்துறையும் பிற்போக்குத்தனமாகத் துணை போவதும் கண்டிக்கத்தக்கதாகும்.

திராவிடர் கழகம் எப்பொழுதும் போல இந்தப் பிரச்சாரத்தைத் திட்டமிட்ட வகையில் தீவிரமாக மேற்கொள்வது என்றும், அதன் முதல் கட்டமாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் பெரும் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட கீதையின் மறுபக்கம் எனும் நூலை நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்யும் ஆக்க ரீதியான பணியில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது!

தீர்மானம் எண்: 13
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினைகளில் தமிழ்நாடு பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாக்கப்பட்டுள் ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்துக் கட்சிகளின் ஆதரவினை ஒன்று திரட்டும் முயற்சியினைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாததும், இத்தகைய இழப்புகளுக்குக் காரணம் என்பதை தமிழ்நாடு அரசுக்கு இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. அனைத் துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று திரா விடர் கழகமும் மற்றும் பல தரப்பினரும் வற்புறுத்தியும் முதலமைச்சர் செவி சாய்க்காதது ஜனநாயகக் கோட் பாட்டுக்கு விரோதமானது என்று இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் அ.இ. அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு தமிழ்நாட்டுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்பதை எடுத்துக்கூறி, முதலமைச்சர் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று இப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

நீரி நிறுவனம் வகுத்துக் கொடுத்த நீர் வழிப் பாதையிலேயே திட்டத்தை நிறைவேற்றிட விரைந்து செயல்படுமாறு மத்திய அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் எண்: 14

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - அடுத்தகட்ட நடவடிக்கைகள்!

சென்னையில் 9.7.2013 அன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் முதற்கட்டமாக கடந்த ஆகஸ்டு முதல் தேதியன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

மாவட்டத் தலைநகரங்களில் இதுகுறித்து கருத்தரங் குகள், ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு நடத்துதல் ஆகிய பணிகளில் அடுத்து ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 15
கழகத்தின் அடுத்தகட்டப் பணிகள்

(அ) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான செயல்பாடுகள்

(ஆ) திராவிடர் மகளிர் பாசறை - திராவிடர் கழக மகளிரணி சார்பில் திராவிடர் மகளிர் பயிற்சிப் பட்டறை (Work Shop) ஏலகிரி, நீலகிரி, குற்றாலம், சிவகங்கை அல்லது காரைக்குடி.

(இ) சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் 125 ஆம் ஆண்டு விழா

(ஈ) பெரியார் நூலக வாசகர் வட்ட 2000 ஆவது நிகழ்ச்சிகள் - நிறைவு விழா

(உ) விடுதலை வாசகர் வட்டம் தொடங்கப்படுதல்

(ஊ) பகுத்தறிவாளர் பயிலக வட்டம் (Rationalists Study Circle)

(எ) வேலூர் திருப்பத்தூரில் திராவிடர் கழக மாநில மாநாடு இரண்டு நாள்கள்

(ஏ) சேலத்தில் திராவிடர் மாணவர் கழக மாநாடு

(அய்) கடலூரில் வட்டார மாநாடு

(ஒ) மன்றல் ஜாதி - மத மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சிகள்

(ஓ) தமிழ்நாடெங்கும் மூட நம்பிக்கை ஒழிப்புத் தொடர் பிரச்சாரம் இரு அணிகளாக!

(அவ்) இருபால் இளைஞர்களுக்கும் பயிற்சி முகாம்கள், பெரியார் சமூகக் காப்பணிக்கான பயிற்சிகள்

இப்பணிகளைத் திட்டமிட்ட வகையில் செயல்படுத் துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

பெரியார் உலகம் மதியுரைஞர் குழு

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் அமைய உள்ள தந்தை பெரியார் 95 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை நிறுவுவதற்கான, மதியுரைஞர் குழு வரியியல் அறிஞர் எஸ்.ராஜரத்தினம் அவர்களின் தலைமை யில் அமைக்கப்பட்டுள்ளதாக இன்று (20.10.2013) திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:

ஏ. நமச்சிவாயம் (அய்.ஓ.பி.)

பேராசிரியர் நல்.இராமச்சந்திரன்

ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன்

ஆடிட்டர் எஸ்.சண்முகம்

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர்கள் டாக்டர் சோம.இளங்கோவன், மற்றும் டாக்டர் இலக்குவன் தமிழ்

மலேசிய திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ்.மணியம்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற தலைவர் வி.கலைச்செல்வன்

பெரியார் ஆப்பிரிக்க பவுண்டேசனின் தலைவர் கே.சி.எழிலரசன்

அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!

பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண் டும். அய்யருக்கு தட் சணை கொடுக்க வேண் டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பைய னுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை; கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு பெரியார் உலகம்


திராவிடர் கழக வரலாற்றிலும், தமிழின வரலாற்றிலும் அக்டோபர் 20 (2013) மறக்க முடியாத மகத்தான பொன்னாள்.

இந்நாளில்தான் திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 16 - முக்கியத்துவம் வாய்ந்தவை - இன்றைய கால கட்டத்தில் நாடு எதிர்நோக்கக் கூடிய சவால்கள்பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளன - தீர்வுகளை நோக்கி நம் மக்களை மேலாக உந்தித் தள்ளக் கூடியவையாகும்.

மிக முக்கியமாக பொன்னிழைகளால் அடிக்கோடிட் டுத் தெரிவிக்க வேண்டியது சிறப்புத் தீர்மானமாகும்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 95 அடி உயரமுள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவுவது என்பதுதான் அந்தச் சிறப்புத் தீர்மானமாகும்.

அந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, மாநிலக் கழகப் பொறுப்பாளர்களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், மண்டலக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், மாவட்டக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், பொதுக் குழு உறுப்பினர்களும், தோழர்களும் அடைந்த உணர்வும், உற்சாகமும், கரை புரண்டு ஓட அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்ற அந்தக் காட்சிதான் என்னே! என்னே!! என்றென்றும் பசுமையாக நம் நெஞ்சக் கண்ணாடியில் நிழலாகக் கூடிய அரிய காட்சியாகும். நமது கழகத் தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்தக் கருத்துரு - திட்டம் அவர்தம் சிந்தனையில் தந்தை பெரியார் பற்றியே சதா அசைபோட்டுக் கொண்டிருக்கும் விளைவின் விளைச்சல் ஆகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளில் (டிசம்பர் 2) முதற் கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான தொகையை வழங்குவது என்று சிறப்புத் தீர்மானம் கூறுகிறது.

வரலாற்றில் என்றும் நிலைக்கத் தக்க - நினைக்கத்தக்க பொன்னெழுத்துக்களால் பொறிக் கத்தக்க வரலாற்றுச் சாதனையை - தந்தை பெரியாருக்குத் தமிழர்கள் ஆற்றித் தீர வேண்டிய நன்றிக் கடனை வெற்றிகரமாகச் செய்து சாதித்துக் காட்டிட இப்பொதுக்குழு உறுதி கொள்கிறது! உறுதி கொள்கிறது!! என்ற சிறப்புத் தீர்மான வாசகம் என்றென்றும் பேசப்படக் கூடியது.

அந்த உறுதியை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தருணத்திலேயே கழகத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்படுத்தியது சாதாரணமானதல்ல.

61 கழக மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு 15 சவரனுக்கான தொகையைத் திரட்டினால்கூட ஆயிரம் சவரன் என்பது எளிதான இலக்கே!

தமிழர் சமுதாயமே தந்தை பெரியார் அவர்களின் தனிப் பெருந் தொண்டின் கருணை மழையால் செழித்துக் குலுங்குகிறது என்றாலும் நேரடியாகப் பயன் பெற்ற வர்கள் ஓராயிரம் பேர்களாவது இருக்க மாட்டார்களா?

நம் தோழர்கள் பட்டியலிட்டு அவர்களை அடையாளங் காண வேண்டியதுதான் முக்கியம். கழகத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ நன்றி உணர்வு மிக்க பெரு மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். பட்டியல் தயார் செய்து விட்டால் முயற்சி திருவினை ஆக்கும் என்பதில் அய்யமில்லை.

அத்தகையவர்களின் பட்டியலை தயார் செய்ய முன்கூட்டியே சூட்டோடு சூடாக அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். மாநில தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், இந்தக் கலந்துரையாடல் கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒரு தோழர்கூட விடுபடாமல் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் 40 நாட்கள் இடைவெளி இருக்கிறதே என்று எண்ண வேண்டாம் - ஒரே வாரத்தில் இந்த இலக்கை எட்டும் வகையில் வீதியில் இறங்கினாலே போதும் - நாங்களே எதிர்பார்க்கவில்லை - எளிதாக இந்தப் பணி நிறைவேறி விட்டதே என்று வியப்புக்குறியாக மாறும் அளவுக்கு - பெரியாருக்குப் பேருருவச் சிலை என்ற தகவலை நம் தமிழர்கள் கேட்ட அளவிலேயே அவர்கள் மத்தியில் ஆர்வப் பெருக்கு கரை புரண்டு ஓடுவதை நாம் அறிய முடியும்!

கழகத் தோழர்களே! நம் வாழ்வில் எத்தனை எத்தனையோ களங்களைக் கண்டுள்ளோம், பிரச்சாரக் களங்கள் உண்டு, போராட்டக் களங்களுக்கு பஞ்சமே யில்லை.

இந்தக் களமோ வரலாற்றுக் களம் - வருங்கால சந்ததியினருக்கு ஓர் உலகத் தலைவரை - உயர் எண்ணங்கள் மலரும் சோலையை - புத்துலகம் பூக்க புரட்சிக் கருத்துக்களை வாரி வாரி வழங்கிச் சென்றுள்ள வரலாற்று நாயகராம் உலகத் தலைவர் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் வெண்கலத்தால் சிலை செதுக்கி வைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் இந்தக் களம் - இன்பக் களம் - நம் வாழ்வில் நாம் ஆற்ற வேண்டிய கடமைக்களம் - நன்றிக்களம் - இந்த வரலாற்றுச் சாதனையில் நமது பங்கும் உண்டு என்று எண்ணிப் பார்க்கும் பொழுது இறும்பூதெய்தும் இணையற்ற களம் இது என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

தமிழ் ஓவியா said...


சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு


திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் 20.10.2013 ஞாயிறு காலை 11 மணிக்கு திண்டிவனம் எம்.ஆர்.எஸ். வண்ணமயில் திருமண மண்டபத்தில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் கடவுள் மறுப்புக் கூறினார். திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கா.மு.தாஸ் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.

முதலாவதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த திண்டுக்கல் பொதுக் குழுவுக்குப் பிறகு இதுவரை நடைபெற்ற கழகச் செயல்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் தந்தை பெரியார் கருத்துக்கள் பரவி வரும் தன்மையை விளக்கினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார் (தீர்மானங்கள் நேற்று விடுதலையில் வெளி வந்து விட்டன).

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 95 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பெரியார் அருங்காட்சியகம், நூலகம் - குழந்தைகள் பூங்கா, உள்ளிட்ட பெரியார் உலகம் உருவாக்குவது தொடர்பான சிறப்புத் தீர்மானத்தினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முன்மொழிந்தார். பெரியார் உலகம் என்று கழகத் தலைவர் பெயர் சூட்டியுள்ளார்.

தமது குடும்பத்தின் சார்பில் ஒரு சவரனுக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கழகத் தலைவரிடம் துணைத் தலைவர் அளித்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பி அத்தீர் மானத்தினை ஆதரித்து வரவேற்றனர்.

குறும்படம்

பெரியார் உலகம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டக் குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. எல்லோரும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் உரையாற்றிய பிறகு நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை சந்தாக்களையும், 95 அடிஉயர முழு உருவப் பெரியார் வெண் கலச் சிலை அமைப்புக்கு நிதியையும் உற்சாகமாக வழங்கிய வண்ணமே இருந்தனர்.

மாவட்டக் கழகச் செயலாளர் நவா. ஏழுமலை நன்றி கூறிட, திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு பெருஞ் சிறப்புடன் நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பான மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்ம மாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - பார்க்கலாம்

கேள்வி: பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டால் திராவிடர் கழகம் ஆதரிக்குமா?

பதில்: அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - அதன்பின் பார்க்கலாம்.

- திண்டிவனத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி (20.10.2013)

தமிழ் ஓவியா said...

கடவுளை எதிர்த்து

செய்தி: திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு கன்று சாவு. இந்து முன் னணி உண்ணாவிரதம்!

சிந்தனை: நியாய மாக அருணாசலேஸ்வரரை எதிர்த்து அல்லவா போராட வேண்டும்? உம் மிடம் காணிக்கையாக அளிக்கப்பட்ட கன்றைக் காப்பாற்றாத நீயும் ஒரு கடவுளா என்று அல்லவா கேட்க வேண்டும்?

தமிழ் ஓவியா said...


புருடா விட்ட சாமியார்


பொய் அம்பலமானதால் மொட்டை அடித்து கொண்ட பரிதாபம்!

லக்னோ, அக். 22- உ.பி.சாமியார் முதல் கனவுப்படி குறிப்பிட்ட கோவிலில் தங்கம் இல்லை என்பதால் அவர் மன முடைந்து மொட்டை அடித்து விட்டு ஆசிரமம் திரும்பினார். 2-ஆவது முறை கனவு கண்டதாக கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதை கனவில் கண்டதாக சாமியார் அறிவித்துள்ளார்.

உ.பி.மாநிலம் உண் னாவ் நகரில் தோண்டியா கேடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத் தில் உள்ள ராஜாராவ் ராம் பக்ஸ்சிங் என்ற மன்னரின் கோட்டை யில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக சோபன் சர்க்கார் என்ற சாமியார் கூறினார். தங் கம் புதைக்கப்பட்டிருப் பதை, தான் கனவில் கண்டதாக சாமியார் அறிவித்தார். இதனால் இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் அங்கு தங்க வேட்டைக்குச் சென் றனர். அவர்கள் அந்த கிராமத்தில் மண்ணைத் தோண்டும் பணியைத் தொடங்கினர். இந்த சம் பவம் இந்தியா முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தொல் பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் அந்த கோவி லில் எதிர்ப்பார்த்தப்படி தங்கம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனால் மனம் நொந்த சாமியார் மொட்டை அடித்து விட்டு தன் ஆசிரமத் திற்கு திரும்பிவிட்டார். மேலும் தங்க வேட்டைப் பற்றி பத்திரி கைகளுக்கு சொல்வதற்காக அமைத்த குழுவையும் கலைத்துவிட்டார்.
தற்போது அவர் கான் பூரில் தங்கி யுள்ளார்.

இன்னொரு கனவாம்!

இந்நிலையில் சாமி யார் சோபன் சர்க்கார் தான் 2-ஆவது முறை கனவு கண்டதாகக் கூறியுள் ளார். உ.பி. மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட் டத்தில் ஆதம்பூர் என்ற கிராமம் உள்ளது. சாமி யார் சோபன் சர்க் காரின் 2-ஆவது கனவு பற்றிய அவரது செய்தித் தொடர்பாளர் சுவாமி ஓம் அறிவிப்பினை வெளி யிட்டார். ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட்டி ருப்பதாக சாமியார் கனவில் கண்டுள்ளார் என சுவாமி ஓம் அறி வித்தார்.

ஆதம்பூர் கிராமம் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது. சாமி யாரின் செய்தித் தொடர் பாளர் சுவாமி ஓம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளார். சாமியார் கூறி யுள்ள இடத்தில் பூமியைத் தோண்டும் பணியைத் தொடங்கும் படி சுவாமி ஓம் கோரிக்கை விடுத் துள்ளார்.

மாவட்ட மாஜிஸ் திரேட் அபய் குமார் இதுபற்றி விளக்கம் அளித்தார். சாமியார் கனவில் கண்டு கூறி யதைப் போல் ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண் டும். இதற்காக இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் குழுவினையோ அல்லது மற்ற புவியியல் நிபுணர்களையோ அனுப் பும்படி மத்திய அரசுக்கு தான் கோரிக்கை விடுத் துள்ளதாக அபய்குமார் கூறினார்.

சாமியார் கூறியுள்ள இடத்தில் சமூக விரோ திகள் ஏதாவது தீமை புரியாமல் இருப்பதற் காக பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக அபய்குமார் தெரிவித்தார்.

சமூக விரோதிகள்

சாமியாரின் 2-ஆவது கனவு பற்றி தகவல் ஆதம்பூர் கிராமத்தில் வெளி யானவுடன் சில சமூக விரோதிகள் சட்ட விரோத செயலில் ஈடு பட்டனர். ஆதம்பூர் கிராமத்தில் கங்கை நதியின் முக்கிய படித் துறையில் பழங்கால சிவன் கோயில் உள்ளது. தங்கம் புதைக்கப்ட்டுள் ளதாக சாமியார் கூறிய தால் இந்த சமூக விரோ திகள் சிவன் கோயிலின் உறுதியான நடை மேடையை நேற்று முன்தினம் இரவு தோண்ட ஆரம்பித்து விட்டனராம்.

தமிழ் ஓவியா said...


ஜாதீய கூட்டணியை முறியடிப்போம்!

திண்டிவனத்தில் 20.10.2013 ஞாயிறு அன்று, நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றுள், மதவாதக் கூட்டணியையும், ஜாதீய கூட்டணியையும் முறியடிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜாதீய கூட்டணியை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பது குறித்து, திண்டிவனத்தில் அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் விரிவாக எடுத்து வைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர்த்து ஜாதீய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. பார்ப்பனர் சங்கமும் இடம் பெற்றிருந்தது குறிப் பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிப்பு - பார்ப் பனர்கள் இணைப்பு என்பதன் மூலம் இந்தக் கூட்டணியின் ஆணி வேர் நாசகரமானது - பிற்போக்குத்தனமானது; முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் அரும்பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை சமூக நீதித் தத்துவத்துக்கு எதிரான பிற்போக்கு அமைப்பு இது என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்களை உள்ளடக்கிய எந்த ஓர் அமைப்பும் தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டே தீரும் என்பது கடந்த கால வரலாறு உணர்த்தும் உண்மையான பாடமாகும்.

பல தேர்தல்களில் ஜாதிக் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது உண்டு, அவற் றிற்குத் தமிழ் நாட்டு மக்கள் அளித்த தண்டனையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. மறந்தனர் என்றால், அவர்கள் மற்றுமொரு முறை மரண அடி வாங்கத் தயாராகி விட்டனர் என்று பொருள்.

தந்தை பெரியார் பெயரை அடிக்கடி உச்சரித்தும், தொண்டர்களைச் சில நேரங்களில் கறுப்புடை அணியச் செய்தும் நாங்கள்தான் பெரியார் வழி வந்தவர்கள் என்று மார் தட்டும் ஒரு கட்சியின் தலைவர் எங்கள் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லை என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இன்று ஜாதிகளைத் தேடி அலைகிறார்கள்; பார்ப்பனர்களின் அமைப்பு தங்களிடம் இணைந்து கொண்டது குறித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர் என்றால் இத்தகையவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எளிதாக அடையாளம் காண்பார்கள் என்பதை, இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

ஜாதியின் பெயரில் அமைப்பை உண்டாக்கி, அது சரிப்பட்டு வராது என்று அனுபவத்தில் உணர்ந்து அரசியலில் எடுபடும் என்று ஜாதியை அடையாளம் காட்டாத பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள் மறுபடியும் ஜாதி அடையாளங்களைத் தேடி அலைவது அவர்களின் வீழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாகும்.

கொள்கைகளும், சித்தாந்தங்களும், இலட்சியங் களும் கைவிடப்பட்ட கையறு நிலையில், ஜாதியை ஆலிங்கனம் செய்வதானது அவர்களின் வெறு மையையே வெளிப்படுத்தும்.

இதற்குமேல் தமிழ் உணர்வு, இனவுணர்வு ஈழத் தமிழர் பிரச்சினை, பெரியார் கொள்கை பற்றிப் பேச முயன்றால் அதனை மிகப் பெரிய கேலியாகத்தான் தமிழினப் பெரு மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த முடிவு அனேகமாக அரசியலில் ஒரு முடிவு ரையைத் தங்களுக்குத் தாங்களே எழுதி முடித்துக் கொண்டார்கள் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பனர்களைத் தங்கள் கூட்டில் இணைத்துக் கொண்டு சமூக நீதியைக் குறித்து வாய் திறக்க இயலாத நிலையைத் தங்களுக்குத் தாங்களே, உருவாக்கிக் கொண்டு விட்டனரே!

திண்டிவனம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டினை, மிக உறுதியாக தெளிவாக திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

சமூகத்தில் மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இழிவுப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்றப் பாதையில் அழைத்து வருவது, நமது முதற் கடமை என்று பிரகடனப்படுத்தி விட்டார்.

எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தள்ளி வைக்க முனைகிறார்களோ அந்தத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து முதன்மையான இடத்துக்குக் கொண்டு வரவேண்டியதுதான். உண்மையான சமூக நீதி யாகும். அதனைத் திராவிடர் கழகம் செய்யும்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களை யும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் - காவல் துறையின் கடமை


மானமிகு ஆசிரியர் விடுதலை அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாட்டில் யாரும் செய்ய முன்வராத, பயப்படுகிற சமுதாயப் பெரும் பணியை துணிவுடன் செய்து, மனித சமத்துவம் இழிவு நீக்கம், கல்வி பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தமிழ் இன உணர்வு, சுயமரியாதை வாழ்வு ஆகியனவற்றை அளித்த வள்ளல் பெரியார் தமிழர்களுக்கு உத்தியோக உரிமை அரசு உரிமைகளும் பெறச் செய்தார்.

தனது 95 ஆண்டு கால வாழ்க்கை யில் தொடர்ந்து சுமார் 60 ஆண்டு காலம் பொது சேவையில் உடல் பொருள் தனது அறிவு ஆற்றல் யாவற்றையும் அளித்து பெரியார் தமிழர்களை நல்வாழ்வு பெறச்செய்ததார். அதே பெரும் பணியை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காட்டிய வழியில் நேர்மையாகவும் அமைதியாகவும் வன் முறைக்கு இடங்கொடாது சமுதாயத் தொண்டு சுமார் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றார். தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கும் பல சாதனைகளை செய் துள்ளார் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரை பார்ப்பனர் தூண்டுதலால் நம் தமிழ் மக்கள் சரியான புரிதல் அறிவில் லாமல் வன்முறை கொலைவெறித் தாக்குதலில் 28.92013 விருத்தாசலத் தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சரியான பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும் பாராமுகமாய் கண்டு கொள்ளவில்லை. பெரியார் யார்? திராவிட இயக்கக் கொள்கை எப்படிப்பட்டது. ஒரு உதாரணம் (மனித நேயம்) 10.8.1948-இல் இரண்டாம் இந்தி கிளர்ச்சியின் போது கும்பகோணத்தில் தி.க.தொண் டர்களுக்கு அறிவுரை கட்டுப்பாடு அமைதி தேவை, வன்முறைக்கு இடங் கொடுக்க கூடாது. காவலர்கள் உங்களை அடிக்க நேர்ந்தால் அவர் களுக்கு வசதியாக உடலைக் காட்ட வேண்டும் என்று கூறுகிறார். அதுவே தலைவர் கி.வீரமணி அவர்களின் கொள்கையாகும் திராவிடர் இன உணர்வு லட்சியமாகும்.

அதனாலேயே 1965 காங்கிரசு இயக்கம் பக்தவத்சலம் அவர்களின் ஆட்சியின் போது திமுக கிளர்ச்சி மிகவும் கடுமையாக மணப்பாறையிலி ருந்து அதனால் மிகவும் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் சுமார் 30 பேர் களுக்கு மேல் திராவிடர் கழக தோழர்கள் உதவியுடன் இடத்தெரு என் வீட்டிற்கு இரவில் காட்டுப் பாதையில் அழைத்து வரப்பட்டு அவ் விதமாகவே காட்டுப் பாதை வழியே இனஉணர்வுடன் அவர்களை பாது காப்பாக காவல் நிலையத்தில் சேர்த் தது, எங்கள் நினைவில் பசுமையாக உள்ளது. மேலும் மறுநாள் பெரும் அளவு காவல் துறையினர் பலப்படுத்தப்பட்டு கலவரம் முடிவுக்கு வந்தது மேலும் பெரியார் காமராசர் காங்கிரசை ஆதரித்த நேரம் தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறை கடமையாகும்.

- அ.இனியன் பத்மநாபன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கலைஞர் வேண்டுகோள்


சென்னை, அக்.22- இலங்கையில் நடைபெற வுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-

இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும், 2009 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய தைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று டெசோ இயக்கத்தின் மூலமாக பேரழுத்தம் கொடுத்திடும் வகையில் கடுமையாகவே தெரிவித்திருக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

நம்மைப்போலவே தமிழகத்திலே வேறு சில முக்கியமான கட்சிகளும், மாணவர் இயக்கங் களும், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 15.10.2013 அன்றும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 16.10.2013 அன்றும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கைகளில், இலங்கை யில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும், அந்த மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பிலும் 18.10.2013 அன்று முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு இதே வேண்டுகோளை கடிதத்தின் மூலம் தெரி வித்திருக்கிறார். ஏன் அதற்கு முன்பே 25.3.2013 அன்றும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

கனடா இந்த மாநாட்டை புறக்கணித்து ஏற்கெனவே தகவல் தெரிவித்திருப்பதும், இங்கிலாந்து நாட்டிலே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையிலே இந்த மாநாடு நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவித்தி ருப்பதும் குறிப்பிடத்தக்க திருப்பங்களாகும்.

தோழர் தியாகு இதே வேண்டுகோளையும் இணைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமர் எழுதிய கடிதத்தில், காமன்வெல்த் மாநாட்டில் நான் பங்கேற்பது குறித்து, உங்கள் கட்சி (தி.மு.க.) மற்றும் தமிழர்களின் உணர்வு களை மதித்தே இந்த விஷயத்தில் முடிவு எடுப் போம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலையிட்டு, தியாகு உண்ணாவிரதத்தை கைவிடவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சட்டசபையில் தீர்மானம்

அதன் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை இந்த பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகத் தின் உணர்வும் ஒருமுகப்பட்டிருக்கிறது என் பதை தெரிவிக்கும் வகையிலும் - தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளும் மற்ற பிரச்சினை களில் வெவ்வேறு கருத்திலே இருந்தாலும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உலக சமூகத்திற்கு நிரூபிக்கும் வகையிலும் தமிழக சட்டமன்றத்தின் வாயிலாக ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது சிறப்புடையதாக இருக்கும்.

எனவே சட்டமன்றத்தில் அத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளை முறியடிப்போம்!


திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் மற்றொரு முக்கியமான ஒன்று - மதச் சார்பின்மைக்கு விரோதமான மதவாத சக்திகளை முறியடிப்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத்துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (ஹழுநுசூனுஹ) கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப்பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப் பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங் களும், இந்துத்துவா சக்திகளும், பெருமுதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக் கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டி னைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கையாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளாவார்கள் என்பதையும் இப்பொதுக்குழு தொலைநோக்கோடு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றிச் சொல்லும்பொழுது எல்லோரும் ஒன்றைச் சொல்லுவது உண்டு. பன்முகத்தன்மை கொண்டது என்பதுதான் அது. பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் எல்லோரையும் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். அரசமைப்புச் சட்டப்படி மதச்சார்பின்மைக் கொள்கையைக் கொண்டது மாகும்.

பி.ஜே.பி. என்பது இவற்றை ஏற்றுக்கொள்கிறதா? திருச்சியில் பேசிய பிரதமருக்கான பி.ஜே.பி. வேட்பாளர் நரேந்திர மோடி என்ன கூறினார்?

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைக் குறைகூறிப் பேசினாரே - மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் கொள்கை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே!

மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்றால் இதன் பொருள் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி பேசும் இன மக்களும் தங்கள் அடையாளங்களை இழந்துவிட்டு, இந்துத்துவா கடலில் கரைந்துவிட வேண்டும். ஒரே நாடு- பாரத நாடு, ஒரே மதம்- ஹிந்து மதம், ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் (அஜெண்டா)தானே மறைமுகமாக மோடி கூறிச் சென்றுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வது உண்மையானால், எங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவோம் என்று சொல்லுவார்களா?

ஹிந்துராஷ்டிரம் அமைப்பதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லுபவர்கள் எப்படி மதச்சார்பின்மைக் கொள்கைக்கு உரியவர்கள்?

சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்தக் கொள்கைகள் எங்களுக்கு உடன்பாடானவையல்ல என்று திட்டவட்டமாக எழுத்துபூர்வமாக, அதிகாரபூர்வமாக அறிவித்த நிலை யில்தான் தேர்தலில் நிற்கவே சட்டப்படி உரிமைப் படைத்தவர்கள் ஆவார்கள்.
உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் நயவஞ்சக அமைப்பு ஒன்று இந்தியாவை ஆளவேண்டும் என்று துடிக்கிறது - இது ஆரோக்கியமானதுதானா?

உச்சநீதிமன்றத்திலே உத்தரவாதம் கொடுத்த பிறகு, அதற்கு மாறாக அயோத்தியில் ராமன் கோவிலை இடித்தார்களே! அதற்குப் பி.ஜே.பி.யின் பெருந்தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களே துணை போனார்கள், வழிகாட்டினார்கள் என்றால், எத்தகைய ஆபத்தான நிலை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாற்றுப் பட்டியலில் முதல் வரிசையில் உள்ள இவர்கள், அதற்குப் பிறகு இந்தி யாவின் துணைப் பிரதமராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல!

இன்றைக்கு பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள மோடி யார்? அவர் முதல மைச்சராக இருந்த நிலையில்தானே - மாநிலத்தில்தானே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்?

குறைந்தபட்சம் அதற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கக் கூடத் தயாராக இல்லையே! தான் காரில் செல்லும்பொழுது ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் ஏற்படும் சோகம் போன்றதுதான், குஜராத்தில் கொலை செய்யப்பட்டதும் என்று ஆயிரம் ஆயிரம் இடிஅமீன்கள்போல பேசக்கூடிய ஒரு மத வெறியர்தான் இந்தியாவுக்கான பிரதமரா? இப்படிப்பட்ட ஒருவரை அறிவிப்பதற்கு அந்தக் கட்சிக்குத்தான் எப்படிப்பட்ட புத்தி இருக்கவேண்டும்?

குஜராத் ஒளிர்கிறது என்று பொய் வெளிச்சத்தைக் காட்டிக் கண்களைக் கூசச் செய்து வாக்குகளைத் திருடி விடுவார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு


சென்னை, அக்.23- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுவதாக அரசு செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தில் நேற்று முன் தினம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தலை மையில் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அரசு செயலாளர் மூ.ராசாராம், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட இருக்கும் திருக்குறள் காட்சி கூடம் பற்றியும், சீனம் மற்றும் அரபு உலக மொழிகளில் திருக் குறள் மொழி பெயர்க்கப்படுவது பற்றியும் எடுத்துக்கூறினார்.

மொரிசியஸ் நாட்டு அமைச்சர்

மொரிசியஸ் நாட்டின் முன் னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், மொரி சீயஸ் நாட்டின் அமைச்சராக இருந்த 1983 முதல் 1995 வரை யிலான காலத்தில் மொரீசியஸ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்றும், தமிழர்களுக் கென்றும் தாம் ஆற்றிய பல்வேறு பணிகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.

நிறைவாக, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் நன்றி கூறினார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.