Search This Blog

18.10.13

பேய் பெண்களைத்தான் பிடித்து ஆட்ட வேண்டுமா?

சாட்டை அடிக்கு சாட்டை அடி கொடுப்பது எப்போது?


மகாராட்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. நரேந்திர தபோல்கர் என்ற சீர்திருத்தவாதியை - பகுத்தறிவுவாதியைப் பலி கொடுத்து, இந்தச் சட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. நியாயப்படி, இந்தச் சட்டத்தை மத்திய அரசே நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51A(h) கூறப் பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்; சீர்திருத்த உணர்வைத் தூண்ட வேண் டும், மனித நேயம் பேணப்பட வேண்டும். இதுபற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என அந்தப் பிரிவு கூறுகிறதே  - அதனைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு -மாநில அரசுகளைவிட, மத்திய அரசுக்கு உண் டல்லவா!

மகாராட்டிர மாநில அரசு அப்படியொரு சட்டத்தை இயற்றியதற்குப் பிறகாவது, மத்திய அரசுக்குப் பொறி தட்டியிருக்க வேண்டாமா?
தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில், இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் எண்ணம் ஏன் இதுவரை தமிழக அரசுக்கு வரவில்லை? என்பது, முக்கியமான கேள்வியாகும்.

நேற்று ஒரு தகவல், ஏடுகளில் படத்துடன் வெளி வந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில் உள்ள ஒரு கோயில் அச்சப்பன் கோயில். ஆண்டுதோறும் - இந்தக் கோயிலில் விஜயதசமியன்று சாட்டையால் அடித்துப் பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது.

கடவுள் - மதம் - பக்தி  - இவற்றின் மூட நம்பிக்கை வரிசையில் இழைக்கப்படும் இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டாமா?

சாட்டையால் அடிக்கும் பூசாரி ஆண் - அடிபடுபவர்களோ அத்தனைப் பேரும் பெண்கள். அது என்ன பேய் பெண்களைத்தான் பிடித்து ஆட்ட வேண்டுமா? பெண்களிலும் படிக்காத கிராமத்துப் பெண்களைத்தான் பேய் பிடிக்குமா?
அய்.ஏ.எஸ். படித்த கலெக்டர் அம்மாவுக்கு இதுவரை பேய் வரவில்லையே ஏன்?

நாமக்கல்லில் நடைபெற்ற இந்தக் கொடுமை குறித்து மனநல மருத்துவர் சங்கர் கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

பேய் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. பொதுவாக பேய், கடவுள் என்பது - ஒருவித மனநோய். யாரையும் பாதிக்காமல் இருக்கும் வரை தான் நம்பிக்கை. ஆனால் சாமியாடுவது, தீ மிதிப்பது போன்றவையெல்லாம் மன நோயின் அடையாளம். பணம் இருந்தாலும் வாழ்க்கையில்போதுமான எதுவும் கிடைக்காதது போன்ற பூர்த்தி அடையாத விஷயத்தால் சாமியாடுதல் போன்றவை நிகழ்த்தப் படுகின்றன. இது ஒரு பிரெய்ன் மெக்கானிசம், சாட்டையால் அடித்துத் துன்புறுத்தும் விழாவிற்குக் காவல்துறையினர் அனுமதி மறுக்க சட்டத்தில் இடம் உள்ளது. பொதுவாக பொது நல வழக்குத் தொடருதல் போன்றவற்றின் மூலம் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதே போல சம்பந்தப்பட்டவர்களையும் ஆலோசனை மூலம் நல்வழிக்குக் கொண்டு வர இயலும் (தி இந்து - 17.10.2013 பக்கம் 7) என்று கூறி இருக்கிறாரே! 

விஞ்ஞான ரீதியான உண்மை இவ்வாறு இருக்க, இதற்கு எதிர் மாறாக பக்தி என்ற பெயரால் எப்படி அனுமதிக்கப்படுகிறது? தடுப்பதற்குக் காவல் துறைக்கு அதிகாரம் இருந்தும் ஏன் கண்டு கொள்வதில்லை?

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தச் சட்ட விரோதத்தை அனுமதிக்கும் காவல்துறை, அந்தக் கடமையைத் திராவிடர் கழகத்தார் செயல் விளக்கங்கள் மூலம் (Demonstrations) செய்தால், அதனைத் தடுப்பார்கள்; அதற்கு அனுமதியில்லை என்பார்கள்.

தங்கள் எல்லைக்குள் குற்றங்கள் பெருகுவதைத் தடுக்கக் காவல் நிலையத்திலேயே ஆடு வெட்டிப் பூஜை போடும் காவல் துறையினரிடம், இத்தகைய அறிவியல் ரீதியான செயல்பாடுகளை, எப்படி எதிர் பார்க்க முடியும்? நமது வழக்கறிஞர்கள் அந்தந்தப் பகுதிகளில் பொது நல வழக்குத் தொடுக்கலாமே!

மதுரை அருகே குழந்தைகளைக் குழியில் போட்டுப் புதைக்கும், குழி மாற்றுத் திருவிழா நடை பெற்றபோது அதனை எதிர்த்து விடுதலைதான் எழுதியது. அதற்கு வழி பிறந்தது. மகாராட்டிர மாநில அரசு போல தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம் - செய்யுமா அரசு? எங்கே பார்ப்போம்!
                   -------------------------"விடுதலை” தலையங்கம் 18-10-2013

42 comments:

தமிழ் ஓவியா said...


வெற்றி பெறுவது நிச்சயம்!


அந்தக் காலத்தில் நமக்கும், பார்ப்பனர்களுக்கும் நடந்த தேவாசுரப் போராட்டத்தில் பார்ப்பனர் வெற்றி பெற்றதுபோல், இன்று நடக்கும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தில் கட்டாயம் பார்ப்பான் தோல்வி அடைவதும், நாம் வெற்றி பெறுவதும் நிச்சயமாகும். பகை வர் பொய்ப் பிரச்சாரங்களை ஏற்காதீர்!
(விடுதலை, 29.3.1961)

தமிழ் ஓவியா said...


நீதியரசர் சந்துரு அவர்களே! மாட்டுக் கொட்டகையில் படித்தவர்கள் மட்டமா?


ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் பெற்றதை மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது. கல்வித்தகுதி பெற்ற அனைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது.

உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுகொட்டகைகளில் நடத்தப் படும் பயிற்சிப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ விழையும் சட்டத்தின் நோக்கம் சம வாய்ப்பு அளிப்பதற்கே. சலுகை களுக்கு அல்ல. எனவேதான் மதிப் பெண்ணை குறைக்க அவர்கள் போட்ட ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாயின என்று இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை தீட்டியிருக்கிறீர்கள்!.

ஆசிரியர் தொழிலுக்கென்றே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மற்றும் கல்விஇயல் கல்லூரிகளில் பயின்று அதற்கான தேர்வில் வெற்றி பெற்று அவர்கள் வாங்கும் பட்ட யத்தை "அதை" மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது என்று எப்படி உங்களால் சொல்ல முடிந்தது?.

கல்வித்தகுதி பெற்ற அனை வருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது என்று சொல்கிறீர்கள். வழக்குரைஞர் பட்டம் பெற்றவர்களெல்லாம் வழக்குரைக் கும் திறன் பெற்றவர்கள் என நம்ப முடியாது என்று கருதி அன்றைக்கு அரசு அப்படி ஒரு தேர்வை நடத்தி யிருக்குமானால் உங்களைப்போன்ற திறமையான பல நீதியரசர்களை நாடு இழந்திருக்குமே!

உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுக்கொட்டகைகளில் நடத்தப் படும் பயிற்சிப்பள்ளிகளில், தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு என்றால் அப்படிப்பட்ட குறைபாடுகளோடு பயிற்சிப்பள்ளிகள் இயங்குவது யார் குற்றம்?

அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு ஆசிரியர்கள் பலிகடா ஆகவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?

மாற்றுத்திறனாளிகளுக்கும், பட்டியல் இனத்தவர்களுக்கும் தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவது "சலுகை" என்று எழுதுகிறீர்கள். இடஒதுக்கீட்டு அடிப்படையில் பல்வேறு துறைகளிலும் பணி நிய மனம் செய்யப்படும்போது உயர்ஜாதி யினர் வாங்கிய மதிப்பெண்ணுக்கும் பட்டியல் இனத்தவர் பெற்ற மதிப் பெண்ணுக்கும் வேறுபாடு இருக்கத் தான் செய்யும். இதனால் "தகுதித் திறமை போச்சே" என்று ஆண் டாண்டு காலமாய் அனுபவித்த கூட்டம் அலறியபோது, "எந்தத் தாழ்த்தப்பட்டவன் ஊசிபோட்டு மருந்து வேலைசெய்யாமல் போனது? எந்த பிற்படுத்தப்பட்ட இன்ஜினீயர் பாலம் கட்டி உடைந்து போனது" என்று நறுக்குத்தெறித்தாற்போல் கேட்டவர்தான் கல்வி வள்ளல் காம ராசர்!.

நீங்கள் சொல்லும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றுவிட்டால் மட்டும் போதிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வந்துவிடும் என்று எந்த அடிப் படையில் நம்புகிறீர்கள்? இரண்டாண்டு காலம் ஆசிரியர் தொழிலுக்கென பல்வேறு பயிற்சிகளைக்கொடுத்து அதற்கென அரசால் நடத்தப்படும் தேர்வையும் தாண்டி இந்தத் தகுதித்தேர்வால் என்ன சாதித்துவிட முடியும்?

படிப்பறிவு மட்டுமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு பணி யாற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்பதை காலம் நமக்கு சொல்லிகொண்டிருக்கிறது. .இவற் றையெல்லாம் இந்த தகுதித்தேர்வு கணித்து விடுமா? நடைபெற்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணமல்ல. கேள்வித்தாள்களே முக்கிய காரணம்.

அவர்கள் படித்த அவர்கள் வகுப்பெடுக்கக்கூடிய பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு கேள்விகள் இருந்ததாக பெரும்பா லோர் குற்றம்சாட்டியுள்ளனர். முது நிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக் கான கேள்வித்தாளின் தரம் சந்தி சிரித்து நீதிமன்றம்வரை சென்றது தாங்கள் அறியாததா?

உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சமூகநீதிக்கு எதிராக நீங்கள் அளித்த தீர்ப்பே இன்று வரை தாழ்த்தப் பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்க தடையாக இருக்கிறது என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார் பெரியார்.எங்கள் அய்யா இன்று இல்லை என்ற நினைப்பா?

- கி. தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். தடை நீக்கம்: இந்திய அரசு வெளியிட்ட அறிக்கை என்ன?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை விலக் கிக் கொண்டு இந்திய அரசு 11.7.1949 வெளியிட்ட அறிக்கையில் இருந்து சில பகுதிகள்.

மாகாண அரசுகளுடன் கலந்தா லோசித்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்வது பற்றி மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த ஆண்டு சர்தார் பட்டேலுடன் இந்த அமைப்பின் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் மேற் கொண்ட பேச்சு வார்த்தைகளின் போது இந்தப் பிரச்சினையைப் பற்றிய உண்மைகள் தெளிவாகப் புலனாயின. சுருக்கமாகக் கூறுவதானால், இந்த பேச்சு வார்த்தைகளில் இந்த அமைப் பின் விதிமுறைகள் எழுத்து மூலமாக எழுதி வெளியிடப்பட வேண்டும்; அதன்படி அமைப்பு செயல்பட வேண் டும்; தனது செயல்பாடுகளை கலாச் சாரக் களத்துடன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்; வன்முறையையும், ரகசிய செயல்பாடுகளையும் கைவிட வேண்டும்; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும்; ஒரு ஜனநாயக அமைப்பாக செயல்பட வேண்டும் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

கோல்வால்கரின் கடிதம்

இதைத் தவிர இந்த அமைப்புப் பற்றிய அரசின் கண்ணோட்டத்திற்கு பழி வாங்கும் உணர்வு எதுவும் காரண மாக அமைந்திருக்க வில்லை. மேற் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறை வேற்ற அவரை ஒப்புக் கொள்ளச் செய்வதற்காக சிறையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவரைச் சந்திக்க வேண்டும் என்று எந்த குறிப்பிட்ட அரசு அதிகாரி அல்லாத கன வான் விரும்பி வந்தாலும், அதற்கு வசதிகளை அரசு செய்து தந்துள்ளது.

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரைவு விதி முறைகளை இணைத்து கோல்வால்கர் அரசுக்கே கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மாநில அரசுகளின் கலந்தாலோசனையுடன் இந்த வரைவு அமைப்பு விதி முறைகளின் ஷரத்துகள் பரிசீலனை செய்யப்பட்டன. இந்த மாதிரி வரைவு விதிமுறைகளைப் பற்றிய தங் களது கருத்தினை இந்திய அரசு ஆர். எஸ்.எஸ். தலைவருக்கு தெரியப்படுத் தியது. இந்திய அரசு தெரிவித்த பொது வான யோசனைகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தோன்றுவதாகவும், சம்பந்தப்பட்ட விதி முறைகள் அரசு கூறியுள்ள உணர்வுடன் பின்பற்றப்படும் என்று அவர் அளித்துள்ள விளக்கங்கள் சுட்டிக் காட்டுவதாகவும் அரசு அக்கடிதத்தில் தெரிவித்திருந்தது

விதிகள் திருத்தம்!

இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விசுவாசமாக செயல்படுவதாகவும், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், இவைபற்றி அமைப்பின் மாதிரி வரைவு விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள் ளதாகவும், ரகசிய செயல்பாடுகள். வன் முறை செயல்பாடுகளில் ஈடுபடுவோர் அல்லது நம்பிக்கை கொண்டுள்ளோ ருக்கு இந்த சங்கத்தில் இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதிமொழி அளித்துள்ளார். இந்த அமைப்பு விதி முறைகளின்படி ஜனநாயக முறையில் அமைப்பு செயல்படும் என்றும் ஆர். எஸ்.எஸ். தலைவர் விளக்கம் அளித்துள் ளார். குறிப்பாக அமைப்பின் தலைவரான சார்சங்சலக் நியமிக்கப்படுவது காரியக் கார மண்டலின் ஒப்புதலோடு செய்யப்படும் என்பதால் அந்த நியமனம் ஜனநாயக முறைப்படிதான் செய்யப் படுவதாகக் கருதலாம் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதிமுறை களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், அதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்துள்ள விளக்கங்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்த பிறகு ஒரு ஜன நாயக, கலாச்சார அமைப் பாக, இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விசுவாசமாக நடந்து கொண்டு, தேசிய கொடிக்கு உரிய மரி யாதையை அளித்துக் கொண்டு, ரகசிய செயல் பாடுகளையும் வன்முறைச் செயல்பாடுகளையும் கைவிட்டு விட்டு, செயல்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு மாகாண அரசுகளின் கலந்தாலோசனையுடன் இந்திய அரசு வந்துள்ளது. இத்தகைய கொள்கைகள் இடம் பெற்றுள்ள ஓர் அமைப்பு விதி முறைகளின்படி உண்மையான உணர் வுடன் செயல்படுவதில் எந்த ஒரு நியாயமான ஆட்சேபணையும் இருக்க முடியாது என்றும் அரசு கருதுகிறது. அதன்படி அந்த அமைப்பின்மீது விதிக் கப்பட்டிருந்த தடையை திரும்பப் பெற்றுக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

ஆதாரம்: டி.ஆர். கோயல், 1979

(நன்றி தி இந்து 16.10.2013 தமிழில்: த.க. பாலகிருட்டிnan

தமிழ் ஓவியா said...


மை தடவலாமா?

கேள்வி: வெற்றிலை யில் மை தடவி குறி சொல்லும் ஜோசியத்தை இன்னும் நிறையப் பேர் நம்புகிறார்களே?

பதில்: நமது விரல் நகத்தில் தடவும் மையி னால் எவ்வளவோ கால மாய் மோசம் போகும் நாம்; வெற்றிலை மையினால் ஒன்றும் ஆகி விட மாட் டோம்.

இவ்வாறு பதில் எழுதி இருப்பது குங்குமம் வார இதழ் (21.10.2013 பக்கம் 100)

உடன் பிறந்தே கொல் லும் நோய் என்பார்களே அது இதுதானோ!

மகாபாரதத்தை சன் தொலைக்காட்சி ஒளி பரப்பவில்லையா?

திராவிட இயக்கப் போர்வையிலே - அந்த இயக்கத்தின் கொள்கை களைப் பரப்பத் தவறினா லும்கூட மன்னித்து விட லாம்; பச்சையாக தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஏன் முரசொலி மாறன் முதலி யோர், உயிரினும் மேலாக மதித்த கொள்கைகளை, கருத்துக்களை கொச் சைப்படுத்துவது என்றால் எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?

தேர்தலில் வாக்கு பதிவுக்காக நகத்தில் மை வைப்பதும், வெற்றிலை யில் மை தடவி குறி சொல்லுவதும் ஒன்று தானா?

தேர்தலில் போட்டியி டும் ஒரு கட்சியின் பின்னணியில் வெளி வரும் ஒரு இதழ் அந்தக் கட்சியையே நையாண்டி செய்கிறதே!

தேர்தலில் நகத்தில் மை தடவி திமுகவுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற்றதெல்லாம் மோசம் போனதுதானா?

ஒரு முட்டாள்தனத் துக்காக வக்காலத்துப் போட்டு, ஒரு குடிமகனுக் குரிய வாக்குரிமைக்கான அடையாளத்தைக் கொச் சைப்படுத்த வேண்டுமா?

வெற்றிலையில் மை தடவி குறி சொல்லுவது முட்டாள்தனம் - பகுத் தறிவுக்கு விரோதமானது - அறிவியலுக்கு எதி ரானது என்று எழுதுவதற் குக் குறைந்தபட்ச சிந் தனையில்லாதவர்கள் எல்லாம் எழுதுகோல் பிடித்தால் இந்த விபரீதம் தான்! அறிவியல் மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என் கிறது இந்திய அரச மைப்புச் சட்டம் - ஆனால் அறிவியல் சாதனமான பத்திரிகையே அறிவிய லுக்கு விரோதமாக இப் படியெல்லாம் எழுத லாமா?

வெற்றிலையில் மை தடவி, உண்மையைக் கண்டுபிடிக்க முடியும் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை அறிய முடியுமா னால், காவல் நிலை யத்தை எல்லாம் இழுத்து மூடி விடலாமே! ஏன் வீண் செலவு?

அறிவியல் பூத்து நிலாவுலகில் குடியேற முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் வெற்றி லையில் மை தடவிக் கொண்டிருக்கும் பேர் வழிகளும் இருக்கிறார் களே - என் சொல்ல - வெட்கக் கேடு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


என்ன அரசாங்கமோ - என்ன நிருவாகமோ?

வரும் டிசம்பர் முதல் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பிரிவு (குரூப்-2) தேர்வும், அதே நாளில் அய்.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வும் நடக்கவுள்ளன.

இரண்டும் எழுதும் மாணவர்கள் இரண்டாம் கெட்ட நிலையில் திண்டாடுகிறார்கள். என்ன அரசாங்கமோ - என்ன நிருவாகமோ!

தமிழ் ஓவியா said...


இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை!


லண்டன், அக்.18- கொழும்பில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாடு விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரிட் டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித் துள்ளனர்.

காமன்வெல்த் நாடு களின் தலைவர்களின் மாநாட்டை அடுத்த மாதம் இலங்கையில் நடத்துவதற்கான முடிவை எடுத்ததில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் பயந்து, பணி வாகச் செயற்பட்டிருக் கிறார்கள் என்று பிரிட் டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர் சித்திருக்கிறார்கள்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் பிரிட்டிஷ் அமைச்சர்கள் மிகவும் திடமான கொள்கை நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்று பிரிட் டனின் வெளிவிவகாரக் குழு கூறியுள்ளது.

2013 ஆம் ஆண்டு மாநாட்டை யார் நடத் துவது என்பது தொடர் பில் காமன்வெல்த் சமூ கத்தில் கருத்துப் பிளவு ஏற்பட்டுள்ளதாக எமது பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இலங்கையின் கொடூ ரமான உள்நாட்டுப் போர் 2009இல் முடி வுக்கு வந்தது முதல், அங்கு செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மற் றும் எதிரணிக் குழுக்கள் இலங்கை அரசாங்கத் தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுவதாக விமர்சிக்கப்படுகின்றது.

ஆகவே, இலங்கை யில் நவம்பர் 15ஆம் தேதி காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலகம் கடுமையாக அதனை ஆராய்ந்திருக்க வேண் டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் நம்புகிறார்கள்.

கோர்டன் பிரவுண் பிரதமராக இருந்த வேளையில் பணியாற் றிய அமைச்சர்கள் இந்த முடிவை எடுப்பது தொடர் பில் மிகவும் பயத்துட னும், பணிவுடனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இந்த விடயத்தில் ஒரு திட மான கொள்கை நிலைப் பாட்டை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையின் நடத்தை யில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான உறுதிமொழியை வலியு றுத்த வேண்டும் என் கிறார் பிரிட்டிஷ் நாடா ளுமன்ற கீழவையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஒட்டாவே .

தான் இந்த மாநாட்டை புறக்கணிக் கப் போவதாக கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கடந்த மாதம் அறிவித்திருக்கிறார். அத்துடன் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டை அடுத்து இரு ஆண்டுகளுக்கு அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங் கைக்கு வழங்குவதை அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் நிரா கரிக்க வேண்டும் என்று மனித உரிமைக் குழு வான ஹியூமன் ரைட்ஸ் வாட்ஜ் கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் கனடா பிரதமருக்கு வரவேற்பு - நன்றி!


சிறீலங்காவில் மனித உரிமைகள், தமிழர்களுடனான இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக காரணம் காட்டி காமன்வெல்த் நாடுகள் மாநாட்டினை கனடிய பிரதமர் புறக்கணித்தமைக்கும் கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்கா மனிதவுரிமை விடயத்தில் இறுக்கமான போக்கினை சர்வதேச அரங்கில் கடைப்பிடித்து, கனடியத் தமிழர்களது அபிலாசைகளை ஏற்றுப் பயணிக்கும் கனடிய அரசுக்கு குறிப்பாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , வெளி விவகாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், கனடிய ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும், கனடியத் தமிழர் அமைப்புக்களையும் இணைத்து கனடியத் தமிழர் சமூகம் நடத்தும் மாபெரும் ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இடம் : கனடியப் பாராளுமன்ற முன்றில் ஒட்டாவா, காலம்: திங்கட்கிழமை, அக்டோபர் 28 ஆம் நாள், நேரம் : காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை.

பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.தொடர்பு கொண்டு பெயர்களைப் முன்பதிவு செய்யவும். ஒற்றுமைப்பட்ட இனமாக ஓரணியில் அணி திரள்வோம்.

தகவல்: கனடிய தமிழர் சமூகம், மேலதிக தொடர்புகளுக்கும், விவரங்களுக்கும்: 416-930-5937 647-203-6261 416-903-6058

தமிழ் ஓவியா said...


எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக் கூடியது சேது சமுத்திர திட்டம்

சென்னை, அக்.18- எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக் கூடியது சேது சமுத்திர திட்டம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்டபோது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று நினைத்தவர் ஜெயலலிதா என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார்ப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் தாக்கி தொண்டர்களைத் தூண்டிவிட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்.

தினத்தந்தியின் புகழ் பெற்ற உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் மறைந்தபோது; ஒரே பகுதியில், மூன்றாவது வீட்டிலே இருந்த ஜெயலலிதாவுக்கு சிவந்தி வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தோன்ற வில்லை. ஓர் அமைச்சரைக்கூட அதற்காக அனுப்ப வில்லை. ஆனால் இன்றைக்கு ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தவுடன் 4 அமைச்சர்கள், ஜெயலலிதாவால் துக்கம் கேட்க அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

திடீர் ஞானோதயங்கள்!

தேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று இதுபோன்ற ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை போர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட தேர்தல் வரும்போது தான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்? எம்.ஜி.ஆர். பற்றிய நினைவே கூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால்தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்.

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத் திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நுறாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண் டாடுங்கள் என்று எந்த அண்ணா அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்சநீதி மன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்

சேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம்.

வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம். நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் ஈழத்துணவும் காழகத் தாக்கமும் என வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழையெல்லாம், மறு மலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம்; அந்தத் திட்டத் தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக எழுச்சி நாள் கொண்டாடுங்கள் என்று தி.மு.க. தோழர்களையெல்லாம் பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி விட்டார்.

அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழா வினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற் றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக நகரங்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும். அதையெல் லாம் கெடுத்தது யார்?

திட்டம் வந்து விடக் கூடாதாம்

இப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார்?. அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் அண்ணாவைப் பற்றிப் பேச அணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறிவாளர்கள் நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள் என்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள் என்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர்கள் யார் என்று புரிகிறதா?.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதி காரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப் பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


இலங்கையில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் தமிழ், முஸ்லிம் பெண்கள்

இலங்கை போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான் மையினப் பெண்கள் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள துடன், மோசமான பாதுகாப்பின் மையையும் எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள் அமைப் பான எம் ஆர் ஜி இண்டர் நேஷனல் எனப்படும், சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

போர் காரணமாக ஆயிரக் கணக்கான பெண்கள் தமது கண வனை இழந்துள்ளதுடன், அவர் களுக்கு எதிராக பாலியல் வன் செயல்கள் முதல் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுவது வரை பெண்களுக்கு எதிரான பல்வேறு முறைகேடுகள் அதிகரித்துள்ள தாகவும் அந்த அமைப்பு கூறி யுள்ளது.

வடக்கில் காணப்படுகின்ற மிக வும் அதிகமான இராணுவ பிரசன் னமும் இதற்கு ஒரு காரணம் என்று தாம் கண்டறிந்துள்ளதாகக் கூறு கிறார் எம் ஆர் ஜி இண்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநரான மார்க் லட்டிமர்.

இராணுவ பிரசன்னமும் முக்கிய காரணம்

''பெருமளவிலான இலங்கை இராணுவத்தின் இருப்பு காரணமாக அந்த பிராந்தியம் பெருமளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறிப்பாக தமிழ் பெண்களும், சில இடங்களில் முஸ்லிம் பெண் களும் மிகவும் மோசமான பாதுகாப்பின்மையை எதிர்கொள் கிறார்கள்'' என்று மார்க் லட்டிமர் பிபிசியிடம் கூறினார்.

பல வகையான ஆதாரங்களின் மூலமும் வழிமுறைகள் மூலமும் தாம் தமது ஆய்வைச் செய்ததாக அவர் கூறுகிறார்.

மன்னார், திரிகோணமலை போன்ற இடங்களில் வாழும் சிறுபான்மையின பெண்களை தாங்கள் நேரடியாகச் செவ்வி கண் டதாகவும், வேறுதகவல்களையும் தாங்கள் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

56 சம்பவங்கள்

குறிப்பாக 2012 இல் யாழ்ப் பாணம் மருத்துவமனையில் ஒரே ஒரு மாதத்தில் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு அல்லது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளான 56 சம்பவங்கள் பதிவாகி யுள்ளன என்றும், அனுமானத்தில் அல்லாமல் ஆதாரங்கள் பற்றும் பதிவுகளின் அடிப்படையில் அங்கு பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதை தாங்கள் கண்டறிந்திருப்பதாகவும் மார்க் லட்டிமர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன

சிறுபான்மைப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சி யாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த சம்பவங்களின் எண்ணிக் கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையிலேயே ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை படிப் படியாக அதிகரித்து வந்திருப்பதை தாங்கள் புள்ளி விவரங்கள் வாயி லாக கண்டிருப்பதாகவும் அப்படி அதிகரிப்பது வழமைக்கு மாறான தாகும் என்றும் எம் ஆர் ஜி இண்டர் நேஷனல் கூறுகிறது.

இவை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களில் ஒரு குறித்த போக் கைப் பார்க்கக்கூடியதாக இருந்ததாக மார்க் லட்டிமர் கூறியுள்ளார்.

சில சம்பவங்களில் இலங்கைக்கு உள்ளே வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வருபவர்களாலும் சிறுபான்மைப் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். சில வேளைகளில் உள்வீட்டு வன்முறைகளாலும் பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


ராமர் கோவில்: விசுவ இந்து பரிசத்தினர்கள் கைது

லக்னோ, அக். 18-அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்போவதாக விசுவ இந்து பரிசத் அறிவித்துள்ளது. இதற்காக உத்தரபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி நோக்கி யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே இது போன்ற யாத்திரையை விசுவ இந்து பரிசத் நடத்தியது. அப்போது காவல்துறை நடவடிக்கை எடுத்து யாத்திரையை தடுத்து நிறுத்தியது. விசுவ இந்து பரிசத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று அயோத்தியில் மீண்டும் ராமர் கோவில் கட்ட யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளது. இதையடுத்து அயோத்தி நகரம் அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நகரம் மற்றும் பைசாபாத் மாவட்டத்தைச் சுற்றிலும், காவல்துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர். ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் மட்டும் 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக உத்தர பிரதேச சட்டம்ஒழுங்கு அய்.ஜி.ஆர்.கே. விஸ்வகர்மா தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி நோக்கி யாத் திரையாக வந்த விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், பாரதீய ஜனதா தொண்டர்கள் 340 பேர் கைது செய்யப்பட்டனர். பைசாபாத்தில் முன் எச்சரிக் கையாக 42 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

கைதானவர்களில் அயோத்தி பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. லல்லு சிங், விசுவ இந்து பரிசத் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவார்கள்.

தமிழ் ஓவியா said...


உலகில் மூன்று கோடி பேர் அடிமை வாழ்க்கையாம்!


உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, உலக அளவில் சுமார் மூன்று கோடி பேர் இன்னும் கொத்தடிமை நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது.

உலக அடிமைகள் பட்டியல் 2013 என்ற இந்த அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

ஆனால் மவுரேடேனியாவில் மட்டும் இந்தப் பிரச்சினை மிகவும் அதிகமாக நிலவுவதாகக் கூறும் இந்த அறிக்கை, அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையில் நான்கு சதவீதத்தினர் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்று கூறுகிறது.

அடிமை முறையை ஒழிக்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நாடு மாறுபடுவதாக அது கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் , அடிமை முறைக்கு எதிரான ஆஸ்திரேலிய அமைப்பான, வாக் ப்ரீ பவுண்டேஷன், இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. '

தமிழ் ஓவியா said...

யாருக்கு அவமானம்?

ஆறுபடை
வீடு கொண்ட
திருமுருகா...
உன் பக்தன்
ஒரு வீடுகூட இன்றி
பிளாட்பாரமாய் இருப்பது
யாருக்கு அவமானம்?

- சீனு.அசோகன், புதுவை.

தமிழ் ஓவியா said...


சோதிடர் ஓடினார்!


சந்தை கூடும் இடத்திலே
சாலை ஓரம் தன்னிலே
குந்தி இருந்த சோதிடர்
குறிகள் பார்த்துக் கூறுவார்

அதிர்ஷ்டப் பரிசு கிடைக்குமா?
ஆண் குழந்தை பிறக்குமா?
மதிப்பு உலகில் உயருமா?
மனதில் கவலை நீங்குமா?

இந்த வகையில் கேள்விகள்
ஏதுஏதோ அவரிடம்
வந்து மக்கள் கேட்பது
வழக்க மாகி விட்டது!

கும்பல் ஒன்று சுற்றிலும்
கூடி அன்று நிற்கையில்
அம்பு போலப் பாய்ந்துமே
அங்கோர் பையன் வந்தனன்!

இரைக்க இரைக்க வந்தவன்
என்னே! நமது சோதிடர்
இருக்கும் வீடு தீயிலே
எரியு தென்றே கதறினன்

பையன் சொல்லைக் கேட்டதும்
பதறி எழுந்த சோதிடர்
அய்யோ, அப்பா! என்றுமே
அலறி ஓட்டம் பிடித்தார்!

முன்னால் அவரும் வேகமாய்
மூச்சுப் பிடித்து ஓடவே
பின்னால் அவரைத் தொடர்ந்தது
பெரிய கூட்டம் ஒன்றுமே!

நாடி தளர்ந்து விட்டது!
நாக்குத் தொங்கிப் போனது!
ஓடி வந்தார் அப்படி!
உடல் குலுங்கச் சோதிடர்!

மனைவி மக்கள் தீயிலே
மடிந்து, வீட்டில் உள்ளவை
அனைத்தும் பொசுங்கிக் சாம்பலாய்
ஆன தென்றே எண்ணினார்!

எண்ணம் போல வீட்டிலே
எதுவும் நடக்க வில்லையே!
என்றும் உள்ள நிலையிலே
இருந்த வீட்டைக் கண்டனர்!

புரளி செய்த பையனைப்
பிடித்துக் கொண்டு சோதிடர்
மிரட்டிக் கேட்க லானார்!
மீசை இரண்டும் துடித்தன!

நாட்டுக் கெல்லாம் சோதிடம்
நானு ரைப்பேன் என்கிறீர்!
வீட்டில் தீ! தீ! என்றதும்
விழுந்த டித்து வருகிறீர்!

எந்த விஷயம் நடப்பினும்
எனக்குத் தெரியும் என்கிறீர்!
சொந்த விஷயம் அறிந்திடச்
சோதிடத்தால் முடிந்ததோ?

பையன் இதனைச் சொன்னதும்
பக்கம் இருந்த அனைவரும்
கையைத் தட்ட லாயினர்!
கலகலென்று சிரித்தனர்!

- குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா

நூல்: ஈசாப் பாடல்கள் இரண்டாம் தொகுதி பக்கம் 61-63

தகவல்: பல்லவன், திருக்கழுக் குன்றம்

தமிழ் ஓவியா said...

மேயோ கூற்று!

இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேயோ என்ற அமெரிக்க மாது, மதர் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்:

புருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்ற பின் கல்வி கற்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாரும் யாருமில்லை. ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளு கிறாள்.

புருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண்ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி? அவைகளுக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று!

தமிழ் ஓவியா said...


இதுவும் செய்யமுடியுமா?

நோயென வந்த போது திருநீறு
கொடுத்து பிணி தீர்க்கும் மூடர்கள்
மானிடனை வாட வைக்கும்
பசிப்பிணியைத் தீர்க்க முடியுமா?
காற்றென்றும் பேயென்றும் வந்த போது வேப்பிலை கொண்டு
ஒட்டும் கேடுகெட்ட சாமியார்கள்
மானிடனை ஆட்டும் ஜாதிப்பேயை ஓட்ட முடியுமா?

- ப.வெங்கடேசன், மருதாளம்

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!

பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண் டும். அய்யருக்கு தட் சணை கொடுக்க வேண் டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பைய னுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை; கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...

பரமசிவன்: தேவி, நீ சில நாட்களாக கவலையாக இருக்கின்றாயே, காரணம் என்ன?

தேவி: சுவாமி! இரண்டு திருமணம் செய்தும் நம் இளைய குமாரனுக்கு குழந்தை இல்லை என்ற கவலைதான்.

பரமசிவன்: கவலைப்படாதே! நல்ல டாக்டராகப் பார்த்து நம் மகனை அழைத்துச் சென்றால் உன் கவலை தீர்ந்து விடும்!

- எம்.எஸ்.கோபு, சி.மெய்யூர்

தமிழ் ஓவியா said...


பெரியாரின் மன வருத்தம்

பெரியாரும் கி.ஆ.பெ. விசுவநாதமும் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ரயிலில் மதுரை சென்று கொண்டிருந்தனர். மணியாச்சி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. நடைமேடையில் இருந்த கடையில் இட்லி வாங்கி வரும்படி விசுவநாதத்திடம் பெரியார் கூறினார். விசுவநாதம் இட்லி வாங்கி வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கினர். நடை மேடையில் இருந்த இருவர் அவர்களைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கவனித்த பெரியார் விசுவநாதத்தின் தோளைத் தட்டி அவர்கள் இருவரும் நம்மைப் பற்றி ஏதோ கூறுகிறார்கள் என்று கூறினார். அவர்கள் ஏதோ பேசிவிட்டுப் போகட்டும் விடுங்கள் என்று விசுவநாதம் பெரியாரிடம் கூறினார்.

அதற்கு பெரியார் இவன்தான் நம்மை எதிர்க்கிறவன் என்று அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் நாம் எந்த சமுதாயத்துக்காக பாடுபடுகிறோமோ அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை ஏறெடுத்துப் பார்க்கக்கூட தயாராக இல்லையே என்று மனவருத்தத்துடன் கூறினார். பெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று சுட்டதாகக் கூறி அந்த சூட்டை இன்னும் தன்னால் மறக்க முடியவில்லை என்றும் எழுதியுள்ளார் கி.ஆ.பெ. விசுவநாதம்.

நன்றி: தீக்கதிர் 8.10.2013)
தகவல்: ச. இரணியன், சென்னை-_62

தமிழ் ஓவியா said...


தூய தொண்டறத்திற்கு... என்றும் துணை நிற்போம்!...

இட்லர் தன் வாழ்நாளில் 60 லட்சம் யூதர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான் என்பது வரலாறு! ஆனால், அவன் இறுதி முடிவு?... யாவரும் அறிந்ததே!!

கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் போது... யார் ஆண்டால் நமக்கென்ன? என்று அலட்சியப் படுத்தினால் விளைவு என்ன ஆகும் என்பதற்கு வரலாற்றில் இருந்து இதோ! ஒரு சான்று...

ஹிட்லருக்கு எதிரானவன், மார்ட்டின் நீல்மில்லர் என்பவன் நாயால் பிடிக்கப்பட்டு 1937-லிருந்து 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு... இறுதியில் படுகொலை செய்யப்பட்டான்!...

அவன் படுகொலை செய்யப்படுவதற்கு முன் எழுதிய கவிதை உலக மக்கள் அனைவருக்குமே ஒரு பாடம்! அவன் அதில் எழுதுகிறான்.
முதலில் நாஜிகள் யூதர்களைப் பிடித்தனர். நான்பேசவில்லை. ஏனெனில் நான் யூதனில்லை!,

பின்னர் அவர்கள், கம்யூனிஸ்டுகளைப் பிடித்தனர். நான் பேசவில்லை! ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல!.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடித்தனர். அப்போதும் நான் பேசவில்லை!. ஏனெனில் நான் ஒரு தொழிற்சங்கவாதியுமல்ல!

இறுதியில் அவர்கள் என்னைப் பிடித்தனர்! அப்போது எனக்காகப் பேச யாரு மில்லை!.

இதுதான், கொலை செய்யப்படுவதற்கு முன் அவன் எழுதிய பொருள் பொதிந்த கவிதை!
யாராண்டால் நமக்கென்ன? நாம் வாழ்ந்தால் போதும் என எண்ணினால் தன்னலத்தோடு வாழ்க்கை நடத்தினால்...

நாடு அழிவதோடு அவர்களும் அதோடு சேர்ந்து அழியநேரிடும் என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறான்!.

இது ஜாதி, மத வேறுபாடுகளால்... அரசியல் கட்சிகளால் சிதறுண்டு கிடக்கும் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான பாடம்!...

வரு முன் காக்கும் வல்லமை இருந்தால் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்! இதற்கு

ஈரோட்டு பகுத்தறிவுப் பாசறையே... சரியான வழியினைக்காட்டும்!... இந்த இனமான உணர்வு மேலோங்கினால்... பிறகு...

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களை குறிவைத்துத் தாக்குகிற ஈனச்செயல் தலைதூக்குமா?

விழிப்போடு இருப்போம்! அய்யா, அண்ணா வழியில் அயராதுழைப்போம்!! அய்யா ஆசிரியர் அவர்களின் தூயதொண்டறத்துக்கு என்றும் துணைநிற்போம்! மதவெறி மாய்ப்போம்!! -

- நெய்வேலி க.தியாகராசன் (கொரநாட்டுக்கருப்பூர்)

தமிழ் ஓவியா said...


நான் அறிவாளி! நான் முட்டாள்!!

ஒரு மனிதர் சக மனிதர் ஒருவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்தச் சக மனிதர் பெற்றோர்கள், நண்பர்கள், உயரதிகாரிகள் என யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும். அந்த கோரிக் கைக்கான பதில் அல்லது பலன் ஓரிரு நாளில் அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் கிடைக்கவில்லை. ஓரிரு நாளென்பது ஒரு மாதம் ஆகி, நாலைந்து மாதத்தையும் அது கடந்து விட்டது. அப்போதும் பதில் இல்லை; பலன் இல்லை!

கோரிக்கை வைத்தவர் என்ன செய்வார்? கோபம் கொள்வார். கோபம் என்றால் கடும் கோபம். ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். அதைக்கூட என் பெற்றோர்கள், நண்பர்கள் உயரதி காரிகள் செய்யவில்லை. நான் எதற்கு உயிர் வாழ வேண்டும்? இவர்கள் எல்லாம் மனிதர்களா? எனக் குதிப்பார். அவர் கோரிக்கையில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அவர் குதிப்பதிலும் நியாயம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்! நிற்க! அந்த உணர்ச்சியுள்ள மனி தரின் இன்னொரு நாள் அனுபவத்தைப் பார்க்கலாம். காலை எழுந்தவுடன் குளித்தல், பின்னர் காவி உடை தரித்தல், திருநீற்றை உடம்பில் அப்புதல், இரு கைகளையும் ஒன்றாய் இணைத்தல், தன் சாமியிடம் கோரிக்கை வைத்தல். ஒன் றிரண்டு அல்ல; ஒரு நூறு கோரிக்கை. நேற்று இன்றல்ல; நீ பிறந்தது முதலாக! இந்தக் கோரிக்கையில் ஏதாவது ஒன்றே ஒன்று, வேண்டாம் அந்த ஒன்றில் அரை, அதுவும் வேண்டாம் அந்த அரையில் கால், அய்யோ! அதுவும் வேண் டாம். அந்த கால் அளவில் கடுகளவா வது உனக்கு நிறைவேறி இருக்கிறதா?

நிறைவேறவே இல்லை. நீ கோரிக்கை வைத்து எத்தனை ஆண்டுகள் ஆகின் றன? ஒருவருக்கு 20, மற்றவர்களுக்கு 30,50,70 ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். ஆனாலும் உங்களுக்குக் கோபம் வரவில்லையே? உங்களை இந்தப் பூமிக்கே அறிமுகம் செய்து வைத்த பெற்றோர்கள்மீது கோபம் வருகிறது. நான்கு நாளில் உதவவில்லை என்ப தற்காக நண்பர்கள்மீது கோபம் வருகிறது. ஆனால் பிறந்தது முதலே உங்களுக்கு உதவாதவர்மீது ஏன் இன்னும் கோபம் வரவில்லை. ஒரு வழிப் பாதையாக நீங்கள் கோரிக்கை வைப்பது மட்டும் நின்ற பாடில்லை.

சக மனிதர்கள் செய்யாத போது கோபம் வருகிறது. அதாவது அந்த நேரத்தில் அறிவு வேலை செய்கிறது, சிந்தனை வேலை செய்கிறது, உடம்பில் உணர்ச்சி இருக்கிறது. அதே நேரத்தில் கோரிக்கைகள் தொடர்ந்து 100 விழுக்காடும் தோற்றுப் போகிற கடவுளிடத்தில் கோபம் வருவதில்லை.

ஒரு மனிதன் ஒரு நேரத்தில் அறி வாளியாகவும், மற்றொரு நேரத்தில் முட்டாளாகவும் எப்படி இருக்க முடியும்? ஒரு மனிதனை அறிவாளி என்போம் அல்லது முட்டாள் என்போம். அப்படியின்றி இவர் ஒரு அறிவாளி அந்த நேரத்தில் முட்டாள் என்று எப்படி சொல்ல முடியும்?

சொல்ல முடியும்! இந்தியாவில் அப்படி சொல்ல முடியும். இந்து மதம் இருக்கிற வரை அப்படி சொல்ல முடியும். அதைப் பாதுகாக்கிற பார்ப்பன ஊடுருவிகளும், அதனூடே வந்த ஊடகங்களும் இருக்கிறவரை சொல்ல முடியும். சரி! எப்போது நாம் சொல்ல முடியும்! மேலே சொன்னதை ஒழித்து விட்டால் வெல்ல முடியும்!

வெல்வதா? வீழ்வதா? என்பதை முடிவு செய்வோம், வாருங்கள்!

_- வி.சி. வில்வம்

தமிழ் ஓவியா said...பாம்பு பால் குடிக்காது

உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்ன வென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தன பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டன. அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத் தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது.

ஆகவே, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

திருட்டு

அவன்: கற்சிலையை (கடவுளை) பொற்(சிலை) பாதம்னு வருணித்து விளக்கியது தப்பாய் போச்சு...

இவன்: ஏன் என்னாச்சு...?

அவன்: அதன் காலை மட்டும் வெட்டி எடுத்துட்டு போயிட்டாங்க திருடன்க..
ஆ !? !? !?

- கோ. கலியபெருமாள்,

தமிழ் ஓவியா said...


நீங்கள் தனியாக இருந்தால்....


வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து

மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந் திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர் வினால் இதயம் சீராக துடிக்கும்".. பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லலாம்.. இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.. தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!

- தகவல்: பெரியாரடியான்

தமிழ் ஓவியா said...


மோடி அம்பலமாகிறார்


இதோ ஒரு கோயபல்சு மோடிமீது தாக்கு!

புதுடில்லி, அக். 19- சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன் னால் அது உண்மையாகி விடும் என்ற ஹிட்லரின் தலைமை கொள்கை பரப்பாளர் ஜோசப் கோய பல்ஸ்சின் கொள்கையை அப்படியே கடைபிடிக் கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடில்லியில் நடை பெற்ற இளைஞர் காங் கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அக மது கூறியதாவது:-

நாட்டிலேயே முன் னேறிய மாநிலம் குஜராத் தான் என நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முன்னேறுவதில் நமக்கொன்றும் பிரச் சினை இல்லை.

அது காந்தி, வல்ல பாய் பட்டேல் போன்ற வர்களின் பூமி. அதனால் முன்னேறதான் செய்யும்.

ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக் கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை ஒப்பிடுகையில் குஜராத் மாநிலம் 12-ஆவது இடத் தில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளதே?

முன்னேற்றம் என்ற பெயரில் பா.ஜ.க. தொடர்ந்து பொய்யையே பரப்பி வருகிறது. பா.ஜ.க. வின் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதே சம் ஆகிய மாநிலங்கள் தேசிய அளவில் 25 மற் றும் 26 இடத்தில் உள்ள தாக அதே ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட் டுகிறது.

இதுதான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முன்னேறியுள்ள கதை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

ஆசாராம் பாபுவைக் காப்பாற்றும் மோடி

குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங் களை பாலியல் பலாத் காரம் செய்து விட்ட தாக அக்கா-தங்கை இருவர் புகார் அளித் தனர். அதன் அடிப் படையில் காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாராம் பாபுவை தங் களிடம் விசாரணைக் காக ஒப்படைக்க வேண் டும் என குஜராத் மாநில காவலர் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் காவலர் துணை ஆணையர் மனோஜ் நினாமா தலைமையி லான போலீசார் ஆசா ராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப் புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் காவல்துறையினர் காவ லில் வைத்து விசாரிக்க காந்திநகர் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி அனு மதி அளித்தது.

ஆசாராம் பாபுவுக்கு நேற்று ஆண்மை பரி சோதனை செய்யப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பரிசோ தனை முடிவில் 72 வய தாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந் துள்ளது.

இந்நிலையில், குஜ ராத்தில் ஆசாராம் பாபு மீதான பாலியல் வன் முறை புகார் தொடர்பான வழக்கில் மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலை வர் அர்ஜுன் மோத் வாடியா, இது தொடர் பாக உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆசாராம் பாபு மீது நில அபகரிப்பு, ஊழல், பாலியல் குற்றச்சாட்டு கள் ஆகியவை கூறப் பட்ட போதெல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரை காப்பாற்றிக் கொண்டே வந்துள்ளது.

அவரை பற்றிய செய் திகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆரம்பத்திலேயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவ ருக்கு மேலும் மேலும் தவறுகள் செய்யும் துணிச்சல் வந்திருக்காது.

இவ்வாறு கூறிய அர்ஜுன் மோத்வாடியா நரேந்திர மோடியை புகழ்ந்து ஆசாராம் பாபு பேசிய டேப்பை ஒலிக்க செய்தார். திபேஷ் வகேலா மற்றும் அபிஷேக் வகேலா ஆகியோரின் மர்ம மர ணத்தின் போதும், சூரத் தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போதும் இந்த அரசு ஆசாராம் பாபு மீது எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை.

நரேந்திர மோடிக்கும் ஆசாராம் பாபுவுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விசாரிக்க உயர்நீதி மன்றத்தின் கண்காணிப் பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

சாமியார் ஆசாராமின் மகன் எங்கே? எங்கே?

பாலியல் குற்றச்சாட் டில் சிக்கி தலைமறை வாக உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயை பிடிக்க, குஜராத் காவல் துறையினர் பிகாரில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் போலீஸர் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர் பாக சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப் பட்டு ராஜஸ்தான் மாநி லம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரத் சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாரா யண் சாயை காவலர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நாரா யண் சாயின் மெய்க்காவ லரான அரியாரி கிரா மத்தைச் சேர்ந்த கெசல் குமார் என்கிற ஹனு மான், காவலர் வருவ தைத் தெரிந்து தப்பி யோடி விட்டார்.

இந்நிலையில் நாரா யண் சாய் தப்பிச் செல்ல உதவி செய்ததாக அவ ரது உதவியாளரும், டில்லியில் உள்ள ஆசிர மத்தின் பொறுப்பாளரு மான தர்மேஷ் என்ப வரை தில்லி காவல்துறை யினருடன் இணைந்து குஜராத் காவலர் கைது செய்தனர்.

குஜராத்தை விட்டு வெளியேறிய நாராயண் சாய், டில்லி வந்ததாக வும், அடிக்கடி அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக வும், தகவல் தொடர்புக் காக அவர் 17 சிம் கார்டு களை பயன்படுத்தியுள்ள தாகவும் காவல்துறையி னர் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக் கான அறிக்கையைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பி.ஜே.பி. இதுபற்றி பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளது.

பொது சிவில் சட்டம், ராமர் கோயில் ஜம்மு-காஷ்மீருக்கான தனி அந்தஸ்து இந்தக் கொள்கைகளில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளது.

மக்களிடம் கருத்தையும் கேட்டு விட்டு அதற்கு நிபந்தனைகளையும் வைப்பது எந்த ஊர் நியாயமோ!

பிஜேபி கூறியுள்ள இந்த மூன்று நிபந் தனைகளும் ஆர்.எஸ்.எஸின் அடிப்படை அஜண்டா! அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் குயுக்தியும் இதில் இருக்கிறது.

பிஜேபியின் லகான் ஆர்.எஸ்.எஸிடம் இருப்பதாகக் கூறுவது தவறு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, இன் னொரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸின் அடிப் படைக் கோட்பாடுகளில் சமரசம் இல்லை என்று சொல்லுவதன்மூலம் பிஜேபி தன் முகத்தில் பூசிக் கொண்டிருந்த வண்ணப் பொடியைக் கழுவி விட்டது. உண்மையான ஆர்.எஸ்.எஸ். முகம் பளிச்செனத் தெரிய வில்லையா?

தமிழ் ஓவியா said...

அனுகூல சத்ருவா?

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் சங்கல்ப திவாரிப் போராட்டத்துக்கு அழைப்புக் கொடுத்தது.

உத்தரப்பிரதேசம் இதற்கு அனுமதி மறுத்த நிலையில் நேற்று தடையை மீறி ஊர்வலம் சென்றபோது 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பி.ஜே.பி. எம்.பி. யோகி ஆதித்ய நாத்தும் அடங்குவார். இதன்மூலம் ராமன் கோயில் கட்டுவதையும் தேர்தல் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துவிட்டது என்று கருதலாமா?

சரத் பவுர்ணமியை ஒட்டி 10 ஆயிரத்துக் கும் மேற்பட்டவர்கள் புனித நீராடிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தில் வி.எச்.பி. பேரணியைத் தொடங்குவதன் உள்நோக்கம் - கலவரத்தை உண்டாக்கு வதே!

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடம் - இப்பொழுதுள்ள நிலையிலேயே நீடிக்கப்பட வேண்டும். இதன் அருகே யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில் - அந்த இடத்தை நோக்கிப் பேரணி என்பதெல்லாம் சங்பரிவார்க் கும்பலின் அடாவடித்தனத்தைத் தான் பச்சையாக வெளிப்படுத்தும்.

எந்த விதி முறைகளையும், தீர்ப்புகளையும் மதிக்காத இந்தக் கூட்டத்தின் கையில்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டுமாம் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நாக்கில் தேன் தடவும் மோடி

மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் கனவுகளை நனவாக் குவோம் என்று நேற்று சென்னையில் பேசி இருக்கிறார்.

இதற்கு முன் நடைபெற்ற ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் பிஜேபியை முற்றாக நிராகரித்து ஒதுக்கித் தள்ளி விட்டனர்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் டெபாசிட் காலி.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்த நிலை யில் தமிழ்நாடு மட்டும் அமைதித் தென்றல் காற்று வாங்கிக் கொண்டு இருந்தது.

இதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு! இதில் தமிழ்நாட்டு மக்களின் எந்தக் கனவை நனவாக்கப் போகிறாராம் மோடி?

முதலில் குஜராத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கட்டும் நரேந்திர மோடி.

குஜராத்துதான் இந்தியாவில் முதல் மாநிலம் என்ற மோசடிப் பிரச்சாரம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. இப்பொழுதெல்லாம் அந்தவகையில் பேசு வதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த நிலையில் வீண் சவடால்கள் எதற்கு?

தமிழ் ஓவியா said...


யார் கேட்பார்?


இந்து மதக் கடவுளான இலட் சுமிக்குப் பொதுவாக யானை வாகனம் இருக்கும். வங்காள தேசத்தில் சிட்டஹாஸ் எனும் ஊரில் உள்ள கோயிலில் இலட்சு மியின் வாகனம் ஆந்தையாம்.

இதுபற்றி எல்லாம் யார் என்ன கேட்க முடியும்? அவனவனுக்குத் தோன்றியதைக் கிறுக்கி வைக்க இந்து மதத்தில் தாராள அனுமதி உண்டே! யார் கேட்கப் போகி றார்கள். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என் றால்? அவாள் ஆதிக்கம் போகிறதே என்பதால் அந்த இடத்தில் மட்டும் நீதிமன்றம் சென்று விடுவார்கள்.

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு கோயபல்சு மோடிமீது தாக்கு!

புதுடில்லி, அக். 19- சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன் னால் அது உண்மையாகி விடும் என்ற ஹிட்லரின் தலைமை கொள்கை பரப்பாளர் ஜோசப் கோய பல்ஸ்சின் கொள்கையை அப்படியே கடைபிடிக் கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடில்லியில் நடை பெற்ற இளைஞர் காங் கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அக மது கூறியதாவது:-

நாட்டிலேயே முன் னேறிய மாநிலம் குஜராத் தான் என நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முன்னேறுவதில் நமக்கொன்றும் பிரச் சினை இல்லை.

அது காந்தி, வல்ல பாய் பட்டேல் போன்ற வர்களின் பூமி. அதனால் முன்னேறதான் செய்யும்.

ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக் கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை ஒப்பிடுகையில் குஜராத் மாநிலம் 12-ஆவது இடத் தில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளதே?

முன்னேற்றம் என்ற பெயரில் பா.ஜ.க. தொடர்ந்து பொய்யையே பரப்பி வருகிறது. பா.ஜ.க. வின் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதே சம் ஆகிய மாநிலங்கள் தேசிய அளவில் 25 மற் றும் 26 இடத்தில் உள்ள தாக அதே ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட் டுகிறது.

இதுதான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முன்னேறியுள்ள கதை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

ஆசாராம் பாபுவைக் காப்பாற்றும் மோடி

குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங் களை பாலியல் பலாத் காரம் செய்து விட்ட தாக அக்கா-தங்கை இருவர் புகார் அளித் தனர். அதன் அடிப் படையில் காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாராம் பாபுவை தங் களிடம் விசாரணைக் காக ஒப்படைக்க வேண் டும் என குஜராத் மாநில காவலர் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் காவலர் துணை ஆணையர் மனோஜ் நினாமா தலைமையி லான போலீசார் ஆசா ராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப் புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் காவல்துறையினர் காவ லில் வைத்து விசாரிக்க காந்திநகர் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி அனு மதி அளித்தது.

ஆசாராம் பாபுவுக்கு நேற்று ஆண்மை பரி சோதனை செய்யப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பரிசோ தனை முடிவில் 72 வய தாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந் துள்ளது.

இந்நிலையில், குஜ ராத்தில் ஆசாராம் பாபு மீதான பாலியல் வன் முறை புகார் தொடர்பான வழக்கில் மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலை வர் அர்ஜுன் மோத் வாடியா, இது தொடர் பாக உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆசாராம் பாபு மீது நில அபகரிப்பு, ஊழல், பாலியல் குற்றச்சாட்டு கள் ஆகியவை கூறப் பட்ட போதெல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரை காப்பாற்றிக் கொண்டே வந்துள்ளது.

அவரை பற்றிய செய் திகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆரம்பத்திலேயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவ ருக்கு மேலும் மேலும் தவறுகள் செய்யும் துணிச்சல் வந்திருக்காது.

இவ்வாறு கூறிய அர்ஜுன் மோத்வாடியா நரேந்திர மோடியை புகழ்ந்து ஆசாராம் பாபு பேசிய டேப்பை ஒலிக்க செய்தார். திபேஷ் வகேலா மற்றும் அபிஷேக் வகேலா ஆகியோரின் மர்ம மர ணத்தின் போதும், சூரத் தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போதும் இந்த அரசு ஆசாராம் பாபு மீது எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை.

நரேந்திர மோடிக்கும் ஆசாராம் பாபுவுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விசாரிக்க உயர்நீதி மன்றத்தின் கண்காணிப் பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

சாமியார் ஆசாராமின் மகன் எங்கே? எங்கே?

பாலியல் குற்றச்சாட் டில் சிக்கி தலைமறை வாக உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயை பிடிக்க, குஜராத் காவல் துறையினர் பிகாரில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் போலீஸர் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர் பாக சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப் பட்டு ராஜஸ்தான் மாநி லம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரத் சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாரா யண் சாயை காவலர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நாரா யண் சாயின் மெய்க்காவ லரான அரியாரி கிரா மத்தைச் சேர்ந்த கெசல் குமார் என்கிற ஹனு மான், காவலர் வருவ தைத் தெரிந்து தப்பி யோடி விட்டார்.

இந்நிலையில் நாரா யண் சாய் தப்பிச் செல்ல உதவி செய்ததாக அவ ரது உதவியாளரும், டில்லியில் உள்ள ஆசிர மத்தின் பொறுப்பாளரு மான தர்மேஷ் என்ப வரை தில்லி காவல்துறை யினருடன் இணைந்து குஜராத் காவலர் கைது செய்தனர்.

குஜராத்தை விட்டு வெளியேறிய நாராயண் சாய், டில்லி வந்ததாக வும், அடிக்கடி அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக வும், தகவல் தொடர்புக் காக அவர் 17 சிம் கார்டு களை பயன்படுத்தியுள்ள தாகவும் காவல்துறையி னர் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் நாட்டையே கடனில் மூழ்கடித்து விடுவார்


புதுடில்லி, அக்.19-மோடி பிரதம ரானால், குஜராத்தை போலவே நாட் டையே கடனில் மூழ்கடித்து விடுவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் இணையதளத்தில், தான் பிரதமரா னால், குஜராத்தை போலவே இந்தி யாவையும் வளர்ச்சியடைய செய்வேன் என்று நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முதல்வராக மோடி பதவி யேற்ற பிறகு, நாட்டில் எங்கும் இல் லாத வகையில் அங்குள்ள மக்களின் தனிநபர் கடன் சுமை அதிகமாகி உள்ளது. இது உறுதியான தகவல். மோடியின் பிரதமர் குறிக்கோள் நிறை வேறினால், குஜராத்தை போலவே ஒட்டு மொத்த இந்தியாவையும் கடனில் மூழ்கடித்து விடுவார் என்று திக்விஜய் சிங் எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மதப் போதகரின் பாலியல் விளையாட்டு


சேலம், அக். 19-சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவர்களது மகள் சேலம் அஸ்தம்பட்டி சக்தி நகரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அங்கு தங்கியுள்ள மதபோதகர் ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப் படுகிறது. பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்ப வம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித் தார். அவர்கள் நேற்று இரவு அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரில் எனது மகள் பள்ளி சென்ற போது அங்கு தங்கியுள்ள மதபோதகர் ஜெயசீலன் பாலியல் தொல்லை ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் இது குறித்து பள்ளிக்கு சென்று நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

தமிழ் ஓவியா said...


அநீதிகள்அய்க்கோர்ட்டில் சாதியின் பேரால், இனத்தின் பேரால் விருப்பு வெறுப்புப் பேரால் தீர்ப்புகள் அநீதிகள் இழைக்கப் படுகின்றன.
(விடுதலை, 26.10.1960)

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.க்கு, வி.எச்.பி. அனுகூலசத்ருவா?


உத்தரப்பிரதேசத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தினர், அயோத்தி நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டனர். அதற்கு உ.பி. மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதுகுறித்து திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் (11.9.2013) என்ன சொல்லுகிறார்?

கேள்வி: விசுவ ஹிந்து பரிஷத்தின் அயோத்தி யாத்திரையால் பா.ஜ.க.வுக்குப் பலமா, இல்லை பலகீனமா?

பதில்: விசுவ ஹிந்து பரிஷத் பா.ஜ.க.விற்கு அனுகூலசத்ரு. நல்லது செய்கிற மாதிரி நினைத்துக் கொண்டு, தர்ம சங்கடத்தை உண்டாக்குவதில் விசுவ ஹிந்து பரிஷத்தை மிஞ்ச முடியாது. அவர்களால் பா.ஜ.க.விற்கு புதிதாக ஹிந்து வாக்கு சேராது. மைனாரிட்டி வாக்கு குறையும் என்று பதில் எழுதுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? வி.எச்.பி.யை, பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்று கூறுகிறார் திரு சோ. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் வி.எச்.பி. யாத்திரைக்கு உ.பி. அரசு அனுமதி மறுத்ததையும் அதனை மீறி யாத்திரை செய்ய முயன்ற வி.எச்.பி. தொண்டர்களை உ.பி. அரசு கைது செய்ததையும் கண்டித்துள்ளது பி.ஜே.பி. என்பதை மறந்து விடக் கூடாது. கைது செய்யப்பட்டவர்களுள் பிஜேபி எம்.பி.யும் ஒருவர்!

உ.பி., பி.ஜே.பி. அந்த யாத்திரையை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை; ஆனால் சோ எழுதுகிறார் வி.எச்.பி., பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்.

திருவாளர் சோவைப் பொறுத்த வரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரிக்கக் கூடியவர், இராமன் கோயில் அங்கு இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்தான்.
பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் ஆணையத்தின் அறிக்கையை திரு சோ ராமசாமி எப்படி எல்லாம் கண் மூடித்தனமாக எதிர்த்து விமர்சனம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்புக்குற்றவாளிப் பட்டியலில் வாஜ்பேயியையும், லிபர் ஹான் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது. அடேயப்பா எவ்வளவு குதி குதித்தார்கள் இந்தப் பிஜேபியினரும், சங்பரிவார்களும்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் வாஜ்பேயி மட்டும் விதிவிலக்கா? அவர் மட்டும் அசல் பசு மாட்டு நெய்யில் பொரிக்கப்பட்டவரா?

நானாவதி ஆணையம், மோடிக்குச் சாதகமாக இருந்ததால் ஆணையமே கூறி விட்டது என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவிக் குதித்து எழுதுகிறார் துக்ளக் ஆசிரியர்.

லிபர் ஹான் ஆணையம், அவாளைக் குற்றப்படுத்தினால் ஆணையத்தின்மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவார்கள்.

ராம ஜென்ம பூமி விடயத்தில் பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன என்பது உலகம் அறிந்த உண்மை! அதே நேரத்தில் அரசியல் லாப - நட்டம் கருதி அதனைச் சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது அதைவிடப் பெரிய உண்மை.

பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி, அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற இதே விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் என்ன பேசினார்?

எங்களுக்குப் பெரும்பான்மை கிட்டினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமன் கோயிலைக் கட்டுவோம். நான் பிரதமர் என்பதைவிட சங்பரிவாரைச் சேர்ந்தவன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன் என்று பேசவில்லையா?

ஆனால் சோ ராமசாமி சொல்லுகிறார் வி.எச்.பி., என்பது பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்; இவர்களின் இரட்டை வேடத்துக்கு அளவே கிடையாது.

தமிழ் ஓவியா said...


எங்கும் பார்ப்பன ஆதிக்கமே!


கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாகச் சில தாலுகாக் களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற் குட்பட்ட எல்லாத் தாலுகா போர்டிலும் பிராமண ரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர்.

நம் நாட்டிலோ எல்லா உத்தியோகங் களையும், பார்ப்பனர்களே வெகுகால மாகக் கொள்ளையடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது. பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டை யாலேயே நம் நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை.

பார்ப்பனர், பார்ப்ப னரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின், பார்ப்பனருக்கு இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக் கூடாது; பார்ப்பனரல்லாதார் களுக்கே கொ டுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்குச் சர்க்காரிலுங்கூட ஆதரவு காட்டி வந்திருப்ப தாகத் தெரிகிறது.

அப்படியிருக்க, நமது ஜில்லா லோகல் போர்டு ஸ்தாபனங்களில் பார்ப்பன ரல்லாதார்களே தலைவர்களாயிருந்தும், இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தாபனங் களையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அநியாயமாகும். பார்ப்பனரல்லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு இலாயக் கில்லையென்று போர்டார் நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

நமது ஜில்லாவில் அநேகப் பார்ப்பனரல்லாத டாக்டர்கள் பாஸ்செய்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும்போது, ஒரு ஸ்தானங்கூடப் பார்ப்பனரல் தாருக்குக் கொடுக்காமல் நான் கையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததற்குப் பார்ப்பனரல்லாதார் மிகவும் வருந்த வேண்டி யிருக்கிறது. போர்டு தலைவர்கள் இம்மாதிரி அநியாயம் செய்ய என்ன அவசிய மேற்பட்டதோ தெரியவில்லை, என்னவோ சில சிபாரிசுகள் என்ற சிறிய காரணம் தவிர, வேறு காரணம் சொல்ல முடியாதென்றே நினைக்கிறோம்.

உத்தியோக வேட்டையில் கைதேர்ந்த பார்ப்பனர்களுக்கு ஆளுக்குத் தகுந்த சிபாரிசு பிடிக்கத் தெரியாமற்போகாது. கேவலம் சிபாரிசுகளுக்குத் தாலுகாபோர்டு தலைவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங் களைப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகக் கொடுத்திருப்பார்களென்பதை எண்ணும் போது வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

ஆனால், தற்சமயம் தலைமை வகித்துவரும் போர்டு தலைவர்கள் பார்ப்பனரல்லாதாரின் சேமத்தில் அக்கறை யில்லாதவர்களல்லர். ஆனால் பார்ப்பன டாக்டர்கள் மேற்படி ஸ்தானத்தை அடையச் செய்த சூழ்ச்சிகளுக்கு நாட்டின் அபிப்பி ராயத்தையும், பார்ப்பனரல்லாதார் சேமத்தில் போர்டு தலைவர்களுக்குள்ள அக்கறையையும் பலி கொடுத்துவிட்டதானது, பார்ப்பனரல் லாதாரின் துர்பாக்கியமென்றே சொல்ல வேண்டும்.

எப்படியோ அந்தந்த தாலுகா போர்டு தலைவர்களைச் சரிப்படுத்தித் தங்கள் தங்களுக்கு ஆதரவு காட்டும்படிச் செய்து நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்ப னர்கள் அடித்துக் கொண்டு போனதை நினைக்கும்போது, நம்மவர்களுக்குக் கண்ணி ருந்தும் பார்க்க முடியவில்லை, காதிருந்தும் கேட்கமுடியவில்லை, வாயிருந்தும் பேச முடியவில்லை, மனமிருந்தும் அறியமுடிய வில்லை என்று சொல்வதைத் தவிர நாமொன் றும் சொல்லக் கூடவில்லை. இனி மேலாவது, போர்டு தலைவர்கள் இது விஷயத்தைக் கவனித்துச் செய்வார்களென்று எதிர் பார்க்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 23.01.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் பிரச்சாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்

இம்மாதம் 15ஆம் தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது, மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரச்சாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டிப் பிரச்சாரம் ஆரம்பிக்கவேண்டுமென்று எழுதியி ருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமான் பி.டி.இராஜன் அவர்கள் சென்னையிலேயே இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகிகள் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும், அதற்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்பதாலும், குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலுகா கான்பரன்சுகள் கூடப்போவதாகப் பல இடங்களில் பார்ப்பனரல்லாதாரர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளாமலிருக்க முடியவில்லை.

சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும், அனுகூலம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேம்.

மகாநாடுகளுக்குத் தலைமை வகிக்கவும் நாம், முன் எழுதியபடி, அரசியலில் எவ்விதக் கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும், சிறப்பாகச் சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நாயக்கருக்குச் சாவகாசம் கிடைத்தாலும், மகாநாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம். அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான கனவான்களும் எந்த மகாநாட்டுக் காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தைப் பிரமாதப்படுத்திக் கொண்டு வர மறுக்காமல், சவுகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 16.01.1927

தமிழ் ஓவியா said...


இனிச் செய்ய வேண்டிய வேலை


மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதும், சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கிறார் களென்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயையில் விழுந்து, தங்கள் சமூகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கி விட்டது.

ஆனால், இந்த விளக்கம் மாத்திரம் போதுமா? இதனாலேயே நாம் சுயமரியாதை அடைந்து விட்டோமா? என்பதை யோசிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினாலும், விஷமப் பிரச்சாரத்தினாலும் சுவாதீன புத்தியுள்ள பல பார்ப்பனரல்லாதார் தோல்வியுற்று விட்ட காரணத்தாலும், சுயராஜ்ஜியக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் புரட்டுகளைக் கண்டு சகியாததாலும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உள்ள காங்கிரஸ் சபையினிடம் உள்ள அதிருப்தியினாலும் திடீரென்று மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வரவும், உற்சாகம் காட்டவும் முடிந்ததே அல்லாமல் முழுதும் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள உற்சாகமென்றாவது நிரந்தரமாயிருக்கக் கூடிய உற்சாகமென்றாவது, சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறோம்.

நமது மக்கள் பார்ப்பன சூழ்ச்சியில் விழாதிருக்க வேண்டுமானாலும், நமது மக்களின் முன்னேற்றத்திற்கு அனுகூலமான மகாநாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானாலும், தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து வேலையை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தவிர, மகாநாட்டிற்கு ஒவ்வொரு ஜில்லா, தாலுகாவிலிருந்தும் தக்க பொறுப்பு வாய்ந்த பிரதிநிகிள் வந்து போயிருக்கிறார்களானதால் அவர்கள் தங்கள் தங்கள் ஜில்லாவிலும் தாலுகாவிலும் ஜில்லா, தாலுகா மகாநாடுகள் கூட்ட வேண்டும். அதை ஆதாரமாக வைத்தே ஜில்லா முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்தச் சவுகரிய மாயிருக்கும்.

அந்தந்த இடங்களில் இப்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தார், இந்த மகாநாட்டு வேலையை எடுத்துக்கொண்டு ஆங்காங்குள்ள பெரியோர்களைப் பிடித்து மகாநாட்டை கூட்டுவிக்க ஏற்பாடு செய்யவேண்டும். திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, தென்னாற்காடு, வட ஆற்காடு, சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களில் இப்போது அவசரமாய் ஜில்லா மகாநாடுகள் கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்போதே அந்தந்த ஜில்லாக்களில் இருக்கும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கக் கிளை ஸ்தாபனத் தலைவர்கள் இதை உடனே கவனிக்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். தேர்தல்களில் நிற்பதும், தேர்தல்களுக்குச் செலவு செய்வதும் தேர்தல்களின் போது ஊரூராய்ச் சென்று ஓட்டர்களை ஏமாற்றுவதுமே தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தார் வேலையானால் இந்தச் சங்கத்தைவிட காங்கிரஸே மேலானது என்று சொல்லுவோம்.

உண்மையிலேயே, பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதானால் குறைந்தது இந்த மாதத்திலேயே இரண்டு மூன்று ஜில்லா மகாநாடுகளாவதுகூட்ட வேண்டுமென்று விரும்புகிறோம். சேலம், கோயமுத்தூர், திருச்சி ஆகிய மூன்று ஜில்லாக்காரர்களும் இந்த மாதத்தில் கூட்ட ஆட்சேபணை இருக்காது என்றே நினைக்கிறோம்.

மற்றபடி அந்தந்த தாலுகாக்காரர்களுக்கும் கூட்ட வசதி இல்லாமற்போகவில்லை. ஆதலால், இந்த மூன்று மாதத்திற்குள் இந்த வேலை முடிந்து, கதர், பார்ப்பன ஆதிக்கப் புரோகிதத்தை ஒழித்தல், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு இவைகளில் தக்க முன்னேற்றம் ஏற்படும்படி செய்ய வேண்டும்.

இதில் பார்ப்பனரல்லாத எவ்வித ராஜிய அபிப்பிராய பேதமுடையவர் களாயிருந்தாலும், இந்த மேற்கண்ட கொள்கைகளை ஒப்புக் கொள்ளக்கூடிய யாரையும் அக்கிராசனராக அழைப்பதில் ஒன்றும் குற்றமில்லை என்றே நினைக்கிறோம். வீண் செலவும், ஆடம்பரமும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதையும் ஞாபக மூட்டுகிறோம். மகாநாட்டுப் பிரதிநிதிகள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையே மதுரை மகாநாட்டில் நிறைவேறிய கதர் திட்டத்திற்கு மிகுதியும் துணைபோவதாகும்.

அன்றியும், கிராமங்களில் தொழிலுமற்றுச் சுயமரியாதையுமற்று இரண்டு நாளைக்கு ஒருவேளைக் கஞ்சிக்கும் வகையற்றுப் பட்டினி கிடந்து தவிக்கும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் பசியைத் தீர்த்து பட்டினிக்காக அவர்கள் இழக்க நேரிடும் கற்பையும், மனசாட்சியையும் காப்பாற்ற இது ஒரு ஒப்பற்ற சாதனமாகவும் இருக்கும்.

ஆதலால் கதரைப் பிரதிநிகளுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். தவிர, வரப் போகும் பொங்கல் பண்டிகைக்கு எல்லாரும் கதரே உபயோகிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு, தலையங்கம் - 09.01.1927

தமிழ் ஓவியா said...


ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை


சென்னை, அக்.20-தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்கின் றனர். இதனை மீறி ரயில் களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம்.
ரயில்களில் பட்டாசு களை கொண்டு செல்வ தால் ஏற்படும் பிரச் சினைகள் குறித்து ரயில்வே காவலர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்க ளிடம் துண்டுப் பிரசுரங் கள் வழங்கியும், ஒலிப் பெருக்கி மூலமும் விழிப் புணர்வு பிரச்சாரங்கள் செய்வார்கள்.

மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படு கிறது. இதே போன்று பார்சல் பிரிவிலும் சந்தேகத்திற்கு இடமான பார்சல்களை காவல் துறையினர் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றை அனுமதிப்பதில்லை.
இந்த பட்டாசு சோத னைகளில் காவல் மோப்ப நாய்களும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை மீறி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பட் டாசுகளைக் கொண்டு செல்லும்போது, அதனை காவலர் கண்டுபிடித்து விட்டால், இந்திய ரயில்வே சட்டத்தின் படி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயி ரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

எனவே ரயில்களில் பயணம் செய்யும் பயணி கள், பட்டாசுகளை தங் களுடன் எடுத்துச் செல் லாமல் முன்னெச்சரிக் கையாக நடந்து கொள் வது அவர்களுக்கும் நல் லது, ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக் கான பயணிகளுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!

பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண் டும். அய்யருக்கு தட் சணை கொடுக்க வேண் டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பைய னுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை; கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42