Search This Blog

30.10.13

தீபாவளி கொண்டாடும் தமிழா! உன் சிந்தனைக்குச் சில வினாக்கள்!!-3அவதாரம் எங்கே?

தேவர்களை, சுரர்களைத் துன்புறுத் தினான் என்பதற்காக இரண்யாட்ச தனை - நரகாசுரனைக் கொல்ல, அவ தாரம் எடுத்து பன்றி வேடம் புனைந்த மகாவிஷ்ணு, சேலத்திலே இராமனைச் செருப்பால் அடித்து அவமானப்படுத்திய (இவ்வாறு பக்தி வேஷம் போட்ட போலி அரசியல்வாதிகளால் வலியச் சொல்லப் பட்டபடுகிற இக்கருத்தை நாம் வாதத் திற்காக ஏற்றுக் கொள்கிறோம்) தந்தை பெரியாரை-அன்னை மணியம்மை யாரை, விடுதலை ஆசிரியரும் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்களை இன்ன பிற கருஞ்சட்டைத் தொண்டர் களை, தோழர்களை, திராவிட இயக்கத் தவர்களை, சம்ஹரித்து, போரிட்டு அழித்துக் கொல்ல ஏன் இன்று இது காறும் எந்த அவதாரமும் எடுக்க வில்லை? எடுப்பதாகத்தான் ஏதேனும் உத்தேசம் உண்டா?

நாயன்மார்கள் 63 பேர் என்பதோ டும், ஆழ்வார்கள் 12 பேர் என்பதோடும், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதோ டும் முடிந்துவிட்டதா? இனி நாயன்மார் களும், ஆழ்வார்களும், அவதாரங்களும் கிடையாதா?
பக்த கே()டிகளே! நீங்கள் அனை வரும் சேர்ந்து ஆண்டவனிடம் அவத ரிக்க வேண்டிபெரியாரியக்கத்தவர்களை சம்ஹரிக்க வேண்டி வேண்டக் கூடாதோ!
64-ஆம் நாயன்மாரும், 13-ஆம் ஆழ்வாரும், 11-ஆம் அவதாரமும் பாவப் பட்டவைகளா?

கட்டை வண்டி காலத்திலேயும், அகல் விளக்கு காலத்திலேயும் மக் களைக் காக்க-துஷ்டர்களைச் சம் ஹரிக்க அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு மகானுபாவர் தற்போதைய இந்தக் கார் (பேருந்து, மின் விளக்குக் காலத்தி லேயும்) காலத்திலே அவதாரம் எடுக்க ஏன் தயங்குகிறார்?

நரகாசுரனைச் சம்ஹரிக்க அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அண்மையில் நடந்த இந்தியா-சீனா-பாகிஸ்தான் படை எடுப்பின்போது எதிரியைக் கொல்ல நம்மைப் பாதுகாக்க ஏன் அவதரிக்கவில்லை?

ஏன், இன்றைய இலங்கைப் போரை யாவது தடுத்து நிறுத்தி இலங்கைத் தமிழர்களையாவது காத்து அருள் பாலிக்க மகாவிஷ்ணு அவதாரம் செய் திருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

பெரியார் இயக்கத்தின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை, இனி மகாவிஷ்ணுவின் அவதாரம் எக்காலத் திலும் கிடையாது என்பதுதானே உண்மை! 

இது பெரியாரின் பகுத்தறிவுக் காலம், எனவே, இனிப் பொய்ப் பிரச் சாரக் கட்டுக் கதைகள் செல்லுபடி ஆகாது என்ற தெளிவான முடிவுக்கு ஆரியம் வந்துவிட்டது என்பதுதானே உண்மை. திராவிட மக்களை-திராவிட மன்னர்களை ஆரியர்கள், தம் சூழ்ச்சி யின் திறனால் அடிமை கொண்டு இழிவுபடுத்திய நாளே தீபாவளிக் கதையின் (ஆரியர்களின் புராணக் கதைக் கருத்துப்படி) கருப்பொருளாக இருக்க, இவ்விழாவைத் திராவிடத் தமிழ் மக்கள் கோலாகலக் களிப்பு, கும்மாள மகிழ்வோடு கொண்டாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அசுரர் யார்?

தங்களுக்கு உடன்பாடான யாகம் செய்தல் என்னும் வேள்விக் கொள்கைக் கும், பலி இடுதல் என்னும் உயிர்க் கொலை கொள்கைக்கும் மாறுபட்ட அன்பு, அருள், கருணை, இரக்கம், ஈவு, ஒழுக்கம், சமரசம், சன்மார்க்கம், ஜீவ காருண்யம் முதலிய நன்னெறிக் கொள் கைகளைக் கைக்கொண்டு ஒழுகிய தமிழ்த் தலைவர்களை-தமிழ் மன்னர் களை ஆரியர்கள், அரக்கர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் இழிவுபடுத்தி உரைத்தனர் என்பதை உலக வரலாறு எழுதிய நேரு பெருமகனார், அறிவுக் கடல் மறைமலை அடிகளார், தமிழ் அறிஞர், ந.சி கந்தையா (பிள்ளை), தனித் தமிழ்ப் பற்றுக் கொண்ட ஆரியத் தமிழ் அறிஞர் வி.கோ சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பரிதிமாற் கலைஞர், பசுமலை கணக்காயர் நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றோர் தெள்ளத் தெளிவாய் எடுத்துரைத்து விளக்கிய பின்னருமா, கல்தோன்றி மண் தோன் றாக் காலத்தே வாளொடு முன் தோன் றிய மூத்தகுடி முத்தமிழா! நீ ஆரியர்க்கு லாலிபாடி அவர்தம் கீழ்மை கயமை சுயவாளித்தன காலித்தனக் கொள்கை களுக்கு ஆட்பட்டு, நடை பாவாடை விரித்து அமைத்து, எடுபிடி ஆளாய், முன்னோடும் பிள்ளையாய்-எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்து முனைப் போடு முன்னின்று தீபாவளி கொண் டாடி மகிழ்கிறாய். யதார்த்த உண்மைக் கும், வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்து வராத-முரண் பட்டு இருக்கிற-பொய்ச் செய்திகளை எல்லாம் மதத்தின் பேரா லும், கடவுளின் பேராலும் சொல்லி நம்மை இழிவுபடுத்துகிற உலக அரங்கில் தாழ்வு படுத்துகிற இந்தத் தீபாவளியும், தீபாவளி பற்றிய கதைகளும் தமிழா! உனக்குத் தேவையா?

நீ பேயா!

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்துள் அலகையாய் வைக்கப்படும் என்ற குறளின் மூலம், வள்ளுவர் உலகத்து மக்கள் அனைவரும் உண்டு என்று ஒருமித்து, ஒப்புக் கொள்கிற ஒரு கருத்தை இல்லை என்று காரண காரிய விளக்கம் இன்றி மறுத்துப் பேசுபவன் பேயாய்க் கருதப் படுவான் என்று விளக்கினாரே, அந்த வகையில் அளவீடு செய்து பார்த்தால் உலகத்து மக்கள் அனைவரும் ஒருமித்த மனத்தவராய், காரணகாரிய அறிவு விளக்க அனுபவ ஆராய்ச்சி அடிப் படையில் உலகம் உருண்டை என்ற கருத்தை ஏற்றிருக்கும் வேளையில், தமிழா! நீ மட்டும் தீபாவளி கொண் டாடுகிறதன் காரணமாக உலகம் தட்டை என்று சொல்லி, உலகம் உருண்டை என்கிற உண்மைக் கருத்தைக் காரண காரியமின்றி மறுக்கிறாய் என்றால், நீயும் ஒரு பேய்தானே! பேய் என்னும் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் வாதத்திற்காகக் கேட்கிறோம்!

பெரியார் கொள்கையே நமக்கு வேண்டும்!
அதுவே நம்புகழ் வாழ்வைத் தூண்டும்!
மதக் கருத்தால் மடமையே அண்டும்!
மதவாதப் பொய்யை மாய்ப்போமே யாண்டும்!

------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்--"விடுதலை” 29-10-2013

63 comments:

தமிழ் ஓவியா said...


வளர முடியும்நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


நரி - பரி

இமயமலைச் சரிவு களில் வாழும் மக்களின் முக்கிய தொழில் சுற்றுலா வரும் மக்களுக்கு வழி காட்டுவதுதான். அவர் களின் சொத்து என்பது குதிரைகள்தாம். யாத் திரை வரும் பக்தர்களைக் குதிரையில் ஏற்றிக் கொண்டு செல்லுவார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை கிடைக்கும்.

அண்மையில் பெய்த கடும் வெள்ளத்தால் 3000-க்கும் மேற்பட்ட குதிரைகள் அடித்துச் செல்லப்பட்டன. அந்தச் சுற்றுலா வழிகாட்டிகளின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? பக்தர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறார்களாம்.

தன்னை நாடி வரும் பக்தர்களை குதிரைகள் மூலம் ஏற்றிக் கொண்டு வருவோரைக் காப்பாற் றாமல் அந்தக் கடவுள்கள் பிச்சை எடுக்க வைத்துள் ளனவே இதைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

பக்தர்களைச் சுமந்து வரும் 3000 குதிரைகளை வெள்ளம் இழுத்துச் சென் றதே - அந்தக் குதிரை களை அந்த இறைவன் காப்பாற்றினானா!?

குதிரைகளையும் காப் பாற்றவில்லை - குதிரை களின் சொந்தக்காரர் களான சுற்றுலா வழி காட்டிகளையும் காப்பாற் றிடவில்லை அந்தக் கடவுள்.

கொஞ்ச நேரம் நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டாமா? உத்தரகாண்டில் கொடும் வெள்ளத்தால் இலட்சத் திற்கும் மேற்பட்ட பக்தர் கள் (பெண்கள் குழந் தைகள் உட்பட) கொடூர மான வகையில் கொன்று குவிக்கப்பட்டார்களே!

இதற்கு மேலும் கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் நம்மைக் காப்பார் என்று கருத முடியுமா? இதற்கு மேலும் கருணையே வடி வானவர் கடவுள் கடைக் கண் ணைக் காட்டி, கருணை மழை பொழிந்து, உதவிக் கரம் நீட்டி நம் உயிரைக் காப்பார் என்று கருதிட இடம் இருக்கிறதா?

கோபப்படாமல் கொஞ்ச நேரம் சிந்திக்கக் கூடாதா?

மன்னன் குதிரை வாங்கக் கொடுத்து அனுப்பிய பொருளைக் கொண்டு கோயில் கட்டி னான் அமைச்சனாக இருந்த மாணிக்கவாச கன். மன்னன் கோபம் கொண்டு பொங்கி எழுந்தபோது நரிகளை எல்லாம் பரிகளாக்கி (குதிரையாக்கி) தன் அடியானாகிய மாணிக்க வாசகனை தற்காலிக மாகக் காப்பாற்றினான் கடவுள் என்பதெல்லாம் கதைதானா? (அந்தக் குதிரைகள் மறுபடியும் நரிகள் ஆகி ஓடி விட்டன என்பது வேறு).

இது போன்ற கதைகள் எல்லாம் இறந்த காலக் கட்டுக் கதை களாக இருக்கின்றனவே தவிர, நிகழ் காலத்தில் நடப்பது இல்லையே - ஏன்? ஏன்?

காரணம் மனிதனுக் குப் பகுத்தறிவு வளர்ந்து விட்டது - இனிமேல் ஏமாற்ற முடியாது என்பது தானே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மகாவிஷ்ணுவின் வருகை!

செய்தி: திரும்பிய பக்க மெல்லாம் பன்றிகள் - அசுத்தமாகிய சபரிமலை.

- தி இந்து28.10.2013

சிந்தனை: பன்றியா? மகா விஷ்ணுவின் அவ தாரமாயிற்றே! அய்யப் பனோ மகாவிஷ்ணுவின் குழந்தை ஆயிற்றே - அந்த உறவில் வந்தி ருக்கலாம் அல்லவா!

தமிழ் ஓவியா said...


மோடியால் நல்லாட்சி கொடுக்க முடியாது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை படப்பிடிப்பு

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என நம்ப முடியவில்லை என்று அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது. ஏனெனில், ஏராளமான இந்தியர்களி டையே அச்சத்தையும் விரோதத்தை யும் மோடி ஏற்படுத்தி உள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழு வினர் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகளையும், அதிருப்தியா ளர்களையும் சமாளித்து பணியாற் றும் திறன் மோடியிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியால் நல்லாட்சி கொடுக்க முடியாது
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை படப்பிடிப்புபாஜகவுடனான 17 ஆண்டு கால உறவை அய்க்கிய ஜனதா தளம் முறித் துக் கொண்டதன் மூலம் ஏற்கெனவே மோடி தனிமைப்படுத்தப்பட்டு விட் டார். மோடி பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமற்றவர் என்பதாலேயே அக்கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மதத்தினர் உள்ளனர். இந்நிலையில் பெரும்பா லான மக்களிடையே அச்ச உணர் வையும், விரோத மனப்பான்மையை யும் ஏற்படுத்தியுள்ள மோடியால் அந்த நாட்டை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று அக்குழு வினர் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பொரு ளாதார நிலை குறித்தும் அந்த பத் திரிகை கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது குஜராத்தின் பொருளா தாரம் ஒட்டுமொத்தமாக பாராட்டும் வகையில் இல்லை. குஜராத்தில் வறு மைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விகிதம் பிற மாநிலங்களைவிட குறை வாகவே இருப்பினும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம் களைவிட அந்த மாநில முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின் றனர். மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக 13.8 கோடி முஸ்லிம்களுக் கும் மற்றும் பிற சிறுபான்மையினருக் கும் பிரச்சினையே என்று அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


உலகளாவிய மனிதநேயத்தை மய்யப்படுத்துவது - தந்தை பெரியாரின் சிந்தனைகளே!


தந்தை பெரியார் சிந்தனைகள் - பெரியாரங்கா ராச்சனா முதன் முதலாக ஒடியா மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது!

உலகளாவிய மனிதநேயத்தை மய்யப்படுத்துவது - தந்தை பெரியாரின் சிந்தனைகளே!

புவனேஸ்வரம் உத்கல் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் நூல் வெளியிட்டு உரை!

பெரியாரங்கா ராச்சனா (தந்தை பெரியாரின் சிந்தனைகள்) ஒடியா மொழியாக்க புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிடுகிறார். உடன் பேராசிரியர் தானேஸ்வர் சாகு (புத்தக மொழி பெயர்ப்பாளர்), பேராசிரியர் முனைவர் பிரசாந்த் ரத், தேவேந்திர சுதார், வீ. குமரேசன் (பகுத்தறிவாளர் கழகம்), கோ. கருணாநிதி (பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ஆகியோர் உள்ளனர். (புவனேஸ்வரம் - 27.10.2013).

ஒடியா மொழியில் முதன் முதலாக தந்தை பெரியாரின் சிந்தனைகள் புத்தக மாக வெளியிடப்பட்டது. ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் புத்தகத்தினை வெளியிட்ட - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி தனது உரையில் மனிதநேயத்தினை மய்யப் படுத்தும் தந்தை பெரியாரின் சிந் தனைகள் மானிட முன்னேற்றம் சார்ந் தவை. அவை உலகளாவிய சிந்தனைகள் எனக் குறிப்பிட்டார்.

ஒடிசா மாநிலத்தின் பெருமை வாய்ந்த உத்கல் பல்கலைக் கழக வளாகத்தில் அக்டோபர் 27 ஞாயிறு காலை 11.30 மணிக்கு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியாரின் சிந்தனைகள் (The Collected Works of Periyar E.V.R.) - ஒடிசா மொழியில் மாற்றம் செய்யப்பட்டு பெரியாரங்கா ராச்சனா என்ற தலைப்பில் வெளியிடப் பட்டது. ஒடிசா மொழியாக்கப் பணியினை தத்துவப் பேராசிரியரும், ஒடிசா பகுத்தறி வாளர் சங்கத்தின் தலைவருமான தானேஸ் வர் சாகு கொள்கை ஈடுபாட்டுடன் மேற் கொண்டார். புத்தகத்தினை ஒடிசா மாநில பாடநூல் நிறுவனம் பதிப்பித்து வெளியிட்டது.

புத்தகத்தினை வெளியிட்டு தமிழர் தலைவர் பேருரை

பெரியாரங்கா ராச்சனா புத்தகத்தினை வெளியிட்டு, தந்தை பெரியாரின் ஆழமான, தொலைநோக்கு சிந்தனைகளை விளக்கி, தமிழர் தலைவர் தமது ஆங்கில உரையில் குறிப்பிட்டதாவது:

சமுதாய சீர்திருத்தத்திற்கும் சுயமரி யாதை இயக்கத்திற்கும் பெரியார் ஆற்றிய பங்கு எனும் தலைப்பில் தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றினார். தமதுரையில் வரலாற் றில் என்றும் நினைவில் போற்றத்தக்க வகையில் சிறப்பான பணியினை செய்து, தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஒரியா மொழியில் மொழி பெயர்த்து நூலாக உருவாக்கி உள்ள பேராசிரியர் தானேஷ்வர் சாகுவுக்கு எனது மகிழ்ச்சி யையும், பாராட்டையும் உலகம் முழுதும் உள்ள பெரியார் சிந்தனையாளர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய விழா ஒன்று நடைபெற்று நான் புவனேஷ்வர் நகருக்கு வரும் வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. சிறப் பான வாய்ப்பை உருவாக்கித் தந்த பேராசிரியருக்கும் அவ ருக்கு ஒத்துழைப்பு நல்கிய பெரு மக்களுக்கும், நூலினை அச் சிட்டு உதவிய ஒரிசா புத்தக கழகத்திற்கும், ஒரிசா அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் தானேஷ்வர் சாகு அவர்களின் சமூக அக்கறையும் பொறுப்பும் இத்தகு நூல் வெளிவர காரண மாக அமைந்துள்ளது.

சமூக சீர்திருத்தத்தைப்பற்றி நாம் பேசுகிறோம். பெரியாரைப் பொறுத்த வரை அவர் சமூகப் புரட்சியாளர். நம்நாடு சுதந்திரம் அடைந்தது என்றால் பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் பெரியார், ஆட்சி மாற்றம் மட்டுமே சுதந்திரம் ஆகாது; அதிகார மாற்றம் ஏற்படவேண்டும் எனக்கூறினார்.

அவர் செய்த பணி எளிதான பணியில்லை. மற்றவர்கள் எளிதில் ஏற்றுக் கொள்ளாத பணியை அவர் செய்தார். மக்களின் மனத்தோடு அவர் போராட்டம் நடத்தினார். மண்டல் குழு பரிந் துரையிலே, மண்டல் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மொழிகள் வேறுபடலாம்!

மொழிகள் வேறுபடலாம்; பகுத்தறிவு நம்மை ஒன்றுபடுத்து கிறது, மதங்கள் நம்மை வேறு படுத்தலாம்; ஆனால் பகுத்தறிவு நம்மை ஒன்றுபடுத்துகிறது கட வுள்கள் நம்மைப் பிளவுபடுத்த லாம். ஆனால் மனிதநேயம் நம்மை ஒன்றுபடுத்துகிறது. அத னால் தான் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னேற் றம் அடைந்துள்ளது. நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் தான் பணியாற்ற நீதியரசர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் அதிகாரிகள் உறுதி ஏற்கிறார்கள். ஆனால் அதன் அடிப் படையில் நடக்கிறார்களா? என கேட்க விரும்புகிறேன். பெரியாரின் நூலை வெளி யிட நான் ஒரிசா மாநிலத்திற்கு வந்துள்ளேன். நான் ஏன் அவரது நூலை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வெளியிடவேண்டும்? நான் அரசமைப்பு சட்டத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன். அரசமைப்பு சட்டத்தில் நான்காவது பகுதியில் அடிப்படைக் கடமைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பலர் அடிப்படை உரிமைகள் பற்றி மட்டும் குறிப்பிடுவார்கள் ஆனால் 51(அ) பிரிவில் விஞ்ஞான மனப்பான்மையை மேம்படுத்துவது, மனித நேயம் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை ஆகியவற்றை கடைப்பிடிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை குடிமகன்கள் இவற்றை கடைப்பிடிக்கிறார்கள்? நாம் யாருக்கும் எதிரி அல்ல. தனிப்பட்ட யாருக்கும் நாம் எதிரி அல்ல. அறியாமை எனும் இருட்டிலிருந்து மக்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என பெரியார் கருதினார். தந்தை என அனைவராலும் போற்றப் பட்ட பெரியார் மக்களின் அறியாமை இருளை நீக்கிட பாடுபட்டவர். பெரியார் ஒரு சுய சிந்தனை யாளர். அவர் எந்த நூலகத்திற்கும் சென்றதில்லை. பள்ளிக்கூடத்தின் படிக்கட்டுகளை அவர் கடக்க வில்லை. ஒரு விதத்தில் அது நன்மையாகவே இருந்தது.

தமிழ் ஓவியா said...

சிறு வயதிலேயே

பெரியார் செல்வக்குடும்பத்தில் பிறந்தவர் அவரது குடும்பம் வைதீகக் குடும்பம். உயர்சாதியினர் அவரது வீட்டிற்கு வருகை தருவார்கள், யாகங்கள், சடங்குகள் நடக்கும். பெரியார் சிறுவனாக இதனைக்கண்டு, கேள்விகள் தொடுப்பார். இதனை பெரியார் திரைப்படத்தில் விவரமாக கூறி உள்ளோம். பெரியார் சிறிய வயதில் பள்ளிக்கு சென்ற நேரத்தில், இடைவேளையில் தண்ணீர் தாகம் தீர்த்திட பள்ளிக்கு எதிரில் உள்ள வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டார். ஒரு தம்ளரில் தண்ணீர் தரப்பட்டது. வாயில் வைத்து குடிக்க எண்ணிய போது, அவ்வாறு செய்யக்கூடாது; தண்ணீரைத் தூக்கி குடிக்க வேண்டும் என அவ்வீட்டார் கூறினார்கள். குடித்து முடித்த தம்ளரை தண்ணீர் தெளித்து உள்ளே எடுத்துச் சென்றனர். சிறுவனாக இருந்த பெரியாருக்கு இதற்கான காரணம் புரியவில்லை. மறுநாள் இன்னொரு வீட்டில் தண்ணீர் குடிக்க சென்றார். அவர்கள் பெரியாருக்கு தண்ணீர் தர மறுத்தனர். காரணம் நீங்கள் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் வீட்டில் தண்ணீர் குடிக்கக்கூடாது. நாங்கள் தாழ்ந்த வகுப்பினர் எனக்கூறினர். பெரியார் பிடிவாதமாக தண்ணீர் அருந்தினார். தம்ளரை வாயில் வைத்து தண்ணீர் குடித்தார். எந்த தடையும் இல்லை. இந்த செயல் பெரியாரை பாதித்தது. காரணம் சாதி என தெரிந்து கொண்டார்.

வைக்கம் போராட்டம்

மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி உள்ளனர். பிறகு எப்படி வேறுபாடு வருகிறது. என தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டார். இத்தகைய எண்ணம் உருவானதால் தான் கேரள மாநிலத்திலே வைக்கத்திலே சாதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். 1924இல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தின்போது பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். வைக்கம் என்ற ஊர் அன்றைய திருவாங்கூர் சமஸ்த னத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர் கோவில் அருகே உள்ள நீதிமன்றத்திற்கு செல்வதை தடுத்தனர். அந்த ஊர் உயர்சாதியினர். அதனை எதிர்த்து தான் அங்கே போராட்டம் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெற்ற முதல் மனித உரிமைப்போராட்டம் அதுதான். அந்த ஊர் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நிலையில், பெரி யாரை அவர்கள் அழைத்தனர். பெரியார் அந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். திருவாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டார். இன்னொரு மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு பெரியார் சென்று தலைமை ஏற்றுக் கொண் டார் என்றால் அதற்குக் காரணம் மனிதநேயம். பகுத்தறிவுக்கு அடிப்படையான விஷயம் அதுதான். மகாத்மா காந்தி அவர்கள் பெரியாருக்கு கடிதம் எழுதினார். நீங்கள் ஏன் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள்? நீங்கள் வேறு மாநிலத்திலிருந்து இங்குவந்து ஏன் போராட வேண்டும்? போராட் டத்தை கைவிடுங்கள் என எழுதினார். பெரியார் காந்திக்கு பதில் அனுப்பினார். நாயும், பன்றியும் அந்த தெருக்களில் செல்லலாம். ஆனால் மனிதர்கள் நடக்கக் கூடாது என்பது ஏற்க முடியாது என எழுதினார். வைக்கம் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டனர். பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மையாரும் கலந்து கொண்டனர். பெண்கள் பொது வாழ்வில் ஈடுபட்டு போராட்டம் செய்தது வைக்கத்தில் தான். பெரியார் குடும்பத்தில் இருந்துதான் பெரியார் அவர்கள் இரண்டாவது முறையாக கைது செய்யப் பட்டு, 6 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அவரை அழித்திட உயர்சாதியினர் யாகம் நடத்தினார்கள். சத்ரு சம்கார யாகம் என்ற யாகம் நடத்தினார்கள். யாகம் நடந்த சில நாட்களிலே பெரியாருக்கு செய்தி வருகிறது. திருவாங்கூர் ராஜா இறந்து விட்டார் என்று. யாகம் பெரியாருக்குப் பதிலாக ராஜாவை கொன்று விட்டது என மக்கள் பேச ஆரம்பித்தார்கள், திருவாங்கூர் ராணியார் பெரியாரை விடுதலை செய்தார். யாகம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார். மூடநம்பிக்கையை முறியடித் தார். வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.

ஒடிசா மாநில மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஷ்ணவி பரிடோ அவர்களை தமிழர் தலைவர் பாராட்டுகிறார்.

ஜாதி ஒழிப்பே பெரியாரின் முக்கிய கொள்கை

தமிழ் ஓவியா said...

தனது வாழ்நாள் முழுவதும் சாதியை ஒழித்திட தீவிர போராட்டம் நடத்தினார். மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். என பாடுபட்டார். இதற்கு எதிரான மனித பேதம் இருந்திட வேண்டும் என மனுதர்மம் சொல்கிறது. அதனை எதிர்த்தார். பிறவியின் காரண மாக மனிதர்களிடையே வேறுபாடு இருப்பதை எதிர்த்தார். ஒழுக்கம், நாணயம் மிக முக்கியம் எனக்கூறினார். ஜாதி முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என கூறினார். மருத்துவரிடம் சிகிச்சைக் காக செல்லும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அவரது ரத்தம் எந்தப்பிரிவை சேர்ந்தது என மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். அந்த வகையில் இவருக்கு உதாரணத்திற்கு ஏ1 + பிரிவு தேவைப் படுகிறது. இருவர் ரத்தம் தரமுன் வருகிறார்கள். ஒருவரது ரத்தம் இவரது பிரிவைச் சேர்ந்ததாக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அவரது ரத்தத்தை செலுத்தாமல் இருந்தார்கள் காரணம். இரத்தம் கொடுத்தவர் வேறொரு சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் நீங்கள் உயர்சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகை யால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களோ என தயங்கு கிறோம் என்று சொன்னவுடன் அந்த நோயாளி என்ன சொல்வார்? எனக்கு ரத்தம் தேவையில்லை என்று சொல்வாரா? நான் பெரியார் பாதைக்கு எப்போதோ வந்து விட்டேன். எனக்கு இரத்தம் கொடுங்கள் என்று சொல்வார். ஆககே ஜாதி என்பது ஒரு கற்பனை. இன்றைக்கு சாதி மறுப்பு திருமணம், இவையெல்லாம் மிகச்சாதாரணமாக நடைபெறுகிறது. பெரியார் இதற்காக பெரும்பணி ஆற்றியுள்ளார். பெரியாரை பொறுத்தவரை, எதை பிரச்சாரம் செய்தாரோ அதனை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர்.

பெரியார் வறுமை பெரியாரின் முக்கியக் கொள்கை

பெண்ணுரிமை பெரியாரின் அடித்தளமான கொள்கை. எவ்வாறு ஜாதியின் பெயரால் வேறுபாடு இருக்கக்கூடாதோ, அதே போன்று பெண்கள் முன்னேற்றமும் மிக அவசியம் என கருதினார். விதவை மறுமணம், அதற்கு பெரியார் ஆதரவாக இருந்தார். நாட்டிலே குறிப்பாக வடநாட்டிலே சதி கோவில்கள் உள்ளன. சதி என்ற பெயரால் கணவன் இறந்தவுடன் மனைவியை கட்டாயமாக நெருப் பிலே தள்ளி கொல்லும் அநியாயம் நடைபெற்றது. இப்போதும் சில இடங்களிலே நடைபெற்று வருகிறது. இத்தகைய காட்டுமிராண்டி செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என பெரியார் கூறினார். தன்னுடைய குடும்பத்திலே 8 வயது சிறுவனுக்கு 5 வயது பெண் குழந்தையை திருமணம் என்று செய்து வைத்தார்கள். 8 வயது சிறுவன் சில மாதங்களில் இறக்கிறான். 5 வயது பெண் குழந்தை பெரியாரிடம் அழுகிறது. அந்த குழந்தையை ஆறுதல் படுத்தினார். பெரியார் உனக்கு உரிய வாழ்வை ஏற்படுத்திட நான் முனைவேன் என்றார். 1908-லேயே இந்த முறையை அவர் உருவாக்கினார். பலர் அதனை எதிர்த்தார்கள். பெரியார் அதைப் பற்றி கவலைப்படவில்லை தன்னால் நடைமுறைப்படுத்த முடியாத எதையும் பெரியார் பிரச்சாரம் செய்ததில்லை.

ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினர் ரானேந்திர பிரதாப் சுனவன் அவர்களை தமிழர் தலைவர் பாராட்டுகிறார்.

இரட்டை வேடம் போடுவதல்ல பகுத்தறிவு

இரட்டை வேடம் போட்டதில்லை. பெரியார் சீடராக இருந்த தமிழக முதல்வராக இருந்த அண்ணா அவர்கள் சொன்னது போல் பகுத்தறிவு என்பது இரட்டை வேடம் போடாமல், சொல்லும் செயலும் ஒரே முறையில் இருப்பதே என்றார். பெரியாரைப் பார்த்து கேட்டார்கள் ஏன் கடவுளை, ஜாதியை எதிர்க்கிறீர்கள் என்று. ஜாதி கடவுளால் உண்டாக்கப்பட்டது என்றார்கள். பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பான், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவர் சூத்திரன் என்றார்கள். பெரியாரிடம் நகைச்சுவை உணர்வு அதிகம். பெரியாரிடம் கேட்டார்கள் பஞ்சமர்கள் பற்றி குறிப்பிட வில்லையே, அவர்கள் எப்படி பிறந்தார்கள்? பெரியார் சொன்னார் அவர்கள் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையாக பிறந்தவர்கள். பெரியார் மீது செருப்புகளை வீசினார்கள் என்று முன்பு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். செருப்பு தோரணங்களை ஊர்வலத்தின் போகும் வழியில் கட்டி வைத்தார்கள். அதனை அவிழ்த்திட பெரியாரின் தொண்டர்கள் முனைந்தபோது பெரியார் அதனைத்தடுத்து, இந்த வரவேற்பு தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். நான் பிறந்த கடலூரில் அவர் மீது மலத்தை வீசினார்கள். ஆனால் பெரியார் தனது பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. நமது நாட்டிலே கல்வி கற்றவர்களை திருத்துவது கடினம்.

தமிழ் ஓவியா said...

கல்லாதவர்களை திருத்துவது எளிது என்பார் பெரியார். காரணம் கல்லாதவர் தனது அறியாமையை வெளிப்படையாக ஒத்துக் கொள்வார். ஆனால் கற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு தெரியும் என்பது போல நடந்து கொள் வார்கள். பெரியார் கூட்டங்கள் துவங்கும்போது சொல்வார். நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள் உங்கள் பகுத்தறிவுக்கு ஆட்படுத்தி சரியா, தவறா என சீர்தூக்கி பார்த்து நல்லது என்றால் .ஏற்றுக் கொள்ளுங்கள் என்பார்.

பெரியாரங்கா ராச்சனா புத்தகத்தினை வெளியிட்டு தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்.

மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அரசுகள்

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகி விட்டன. அரசாங்கம் மூடநம்பிக்கையை வளர்க்கிறது. தங்கம் அடியில் இருப்பதாக சாமியார் ஒருவர் கனவு கண்டார் என்று சொல்லி தோண்டு கிறது ஏன் திருப்பதியிலும், திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலிலும் தங்கம் நிறைய உள்ளதே அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே. நமது மூளையை மூடநம்பிக்கைகளால் விலங்கிட்டு உள்ளார்கள். பெரியாரைப் பார்த்து புதிதாக இயக்கத்தில் சேர்ந்த ஒருவர் கேட்டார். அய்யா நாம் கடவுள் இல்லை என்று சொல்லுகிறோமே, திடீரென கடவுள் நம்முன் வந்துவிட்டால் நாம் என்ன செய்வது? நாமாக இருந்தால் எப்படி இல்லாத ஒருவர் வருவார் என்று வேட்டவரை நையாண்டி செய்வோம் ஆனால் பெரியார் பளிச்சென்று சொன்னார். அவ்வாறு கடவுள் வந்தால் இருக்கிறார் என்று சொல்வேன். ஆனால் அப்படி யாரும் இதுவரை வரவில்லையே என்றார். எதையும் யதார்த்தமாக பெரியார் கூறுவார். டைம்ஸ் ஆக்ப் இந்தியா பத்திரிகையில் இரண்டு மூன்று நாட் களுக்கு முன் ஓரு செய்தி வந்தது. கடவுள் சிறைப் படுத்தப்பட்டுள்ளார் என நாம் பகுத்தறிவாளர்கள் கூறவில்லை போப் கூறியுள்ளார். ஆகவே மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.
மிகப் பெரிய கொடை பகுத்தறிவு

தமிழ் ஓவியா said...

நமது நாட்டிலே மக்களை தொடக்கூடாத வர்கள், பார்க்கக் கூடாதவர்கள் என பிரித்து வைத்தார்கள். நாயையும், பூனையையும் மடியிலே வைத்துக் கொண்டு, மனிதனை கைகுலுக்குவது கூடாது என கூறினார்கள். பெரும்பான்மையான இம்மக்களை இந்த நாட்டில் உழைக்கும் மக்களை அவ்வாறு சொன்னார்கள். பெரியர் இதனைக் கண்டித்து பிரச்சாரம் செய்தார். பெரியாரின் பிரச்சார அணுகுமுறை, பிரச்சினையின் ஆழத்திற்கு சென்று அதனை அழிப்பது. அரசமைப்பு சட்டத் தின் முகப்புரையிலே சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி என குறிப்பிட்டு, சமத்துவம் சுகாதாரத்துவம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்கே மத, கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் கோவிலை இடிக்கிறார்கள், பகுத்தறிவாளர்கள் மக்களை ஒன்றுபடுத்த முனைகிறார்கள் சமூகம் ஒன்றுதான். மனிதநேயம் மக்களை ஒன்று படுத்து கிறது, மனிதப்பிறவிக்கு உள்ள மிகப்பெரிய கொடை பகுத்தறிவு . அதனால் தான் பகுத்தறிவின் அடிப் படையில் பல மாற்றங்கள் சமூகத்திலே நடைபெற்று வருகிறது. இந்த நாட்டிலே தான் புத்தர் பிறந்தார். புத்தர் என்றால் யார்? பகுத்தறிவாளர் என்பவர்தான் புத்தர். யாரெல்லாம் புத்தியை பயன்படுத்துகிறார் களோ அவர்கள் புத்தர்கள், பகுத்தறிவுக்கு எல்லை கிடையாது.

பெரியார் நிறுவிய டிரஸ்ட்

பெரியார் தமது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்த செல்வத்தை, நன்கொடையினை தனது உறவினர்களுக்கு தரவில்லை மாறாக டிரஸ்ட் உருவாக்கி நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் அமைத்துள்ளார். இன்றைக்கு அவரது நிதி, கல்வி சாலைகளாக உருவாகி வளர்ந்துள்ளன. 1978-இல் பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளது. பெரியாரின் சுயமரியாதை திருமணங்கள் ஆண், பெண் உயர்வு தாழ்வு என்கிற முறையை அகற்றி இருவரும் சமம் என்கிற எண்ணத்தை உருவாக்கி உள்ளது. கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் இருத்தல் வேண்டும் என கூறியவர் பெரியார். தேவதாசி என்ற முறை கோயிலிலே கடவுளுக்கு பெண்னை தானமாக தருகின்ற முறை. அதனை பெரியார் எதிர்த்தார். காந்தியார் கூட கோயில்கள் விபச்சார மய்யங்களாக உள்ளன என்றார். சுயமரியாதை இயக்கம் இந்த இழிவுகளையெல்லாம் எதிர்த்து போராடியது வெற்றி கண்டது. 1924-இல் வைக்கம் போராட்டம் நடத்தி மனித உரிமை பெற்றுத்தந்தார். 1925-இல் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். குடியரசு என்ற வார இதழை துவக்கினார். 1928-இல் ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை துவங்கினார். பின்னர் விடுதலை என்ற நாளிதழை துவக்கினார். தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த அண்ணா அவர்கள் விடுதலையின் ஆசிரியராக இருந்தவர். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக விடுதலையின் ஆசிரிய ராக நான் பணியாற்றி வருகிறேன். பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கி சிறப்பித்தது.

தமிழ் ஓவியா said...

9 வயது முதல் 81 வயது வரை

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என பாராட்டியது. எனது வகுப்பு ஆசிரியர் மூலமாக நான் பெரியாரின் கருத்துக்களை 9 வயதில் அறிந்து கொண்டேன். இப்போது எனக்கு 81 வயது பெரியார் இயக்கம் எந்த பதவிக்கும் ஆசைப்படாத, போட்டியிடாத சமுதாய இயக்கம். அரசியல் கட்சி என்றால் வாக்குக்காக கொள்கைகளை நீர்த்து விடுபவர்கள். அதனால் பெரியார் சமுதாய இயக்கமாக இதனை அறிவித்தார். மக்களின் மனதில் போராடுவது கடினமான செயல் அதளை பெரியார் செய்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை 2000 மில்லினியம் என்ற தொகுப்பு நூலில் பெரியாரைப்பற்றி சிறப்பாக ஒரு குறிப்பினை தந்துள்ளார்கள். பெரியார் சாதாரண மருத்துவர் அல்ல அவர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் போல, ஓவியர், புகைப்பட நிபுணர் மனிதனின் புறத் தோற்றத்தை எடுப்பார்கள் ஆனால் எக்ஸ்ரே நிபுணர் மனிதன் உள்ளே உள்ள பாகங்களை அப்படியே எடுத்துத் தருவார். பெரியார் அதைத்தான் செய்தார். மனிதர்களிடத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதற்கு தீர்வும் கண்டார்.

தமிழ் ஓவியா said...

95 அடி உயரத்தில் பெரியார் சிலை

இத்தகைய சிறப்பு மிக்க புரட்சியாளர் பெரியாரின் சிந்தனைகள் மேலும் நிலைத்து நிற்கும் வகையில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் 95 அடி உயர சிலையை நிறுவிட பெரியார் இயக்கம் முடிவு செய்துள்ளது. அத்தகைய பெரியார் உலகம் சிறப்பாக உருவாகிட ஒத்துழைப்பு தாருங்கள் என்று கூறி சிறப்பான இந்த வாய்ப்பை உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

முனைவர் பிரதாப்ரத்

விழாவிற்கு முனைவர் பிரதாப்ரத் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், பகுத்தறி வாளர் கழகம், சமூகத்தில் நிலவும் மூடநம்பிக் கைகளை ஒழித்திடவும் விஞ்ஞான மனப்பான் மையை வளர்த்திடவும் தனது பணியை செய்து வருகிறது. அந்த வகையில் பேராசிரியர் தானேஷ்வர் சாகு ஒரிசா மொழியில் மொழி பெயர்த்துள்ள பெரியாரின் சிந்தனைகள் எனும் நூல், தங்களது பணியை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறினார். பேராசிரியர் கங்காதர் சாகு தனது வரவேற்புரையில், விழாவிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய தமிழர் தலைவரின் 70 ஆண்டு கால பொது வாழ்க்கைப் பணியினையும், கல்வித் தகுதியையும் குறிப்பிட்டு, இன்றைக்கு உலக அளவில் நம்பிக்கை நட்சத்தி ரமாக விளங்கும் தமிழர் தலைவர் விழாவிற்கு வருகை தந்துள்ளது. பெருமைக்குரியது எனக் கூறினார். ஒரிசா பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் பைக்யானிகா சர்சா (ளுஉநைவேகைஉ னுளைஉடிரசளந) இதழின் ஆசிரியர் தேவேந்திர சாகு, பகுத்தறிவாளர் கழகத்தின் தமிழ் மாநில செயலாளர் வீ. குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் வெளியிட்டார்

பெரியார் சிந்தனைகள் தொகுப்பை ஒரிசா மொழியில் மொழி பெயர்த்து நூலினைக் கொணர்ந்த பேராசிரியர் தானேஷ்வர் சாகு, தமது உரையில், 1980 முதல் மாடர்ன் ரேஷனலிஸ்ட் மாத இதழை தொடர்ந்து படித்து வருவதாகவும், பெரி யார் சிந்தனைகளை ஒரிசா மக்களுக்கு கொண்டு செல்ல இந்த நூல் மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும், இந்த நூலை வெளியிட தமிழர் தலைவரை அழைத்தவுடன் உடன் ஒப்புக் கொண்டதற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, பெரியார் சிந்தனைகளின் தொகுப்பு நூலை தமிழர் தலைவர் வெளியிட, விழாவின் தலைவர் முனைவர் பிரசாத் ரத் பெற்றுக் கொண்டார். அதேபோல, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் பைக்யானிகா சர்க்கா இதழின் 25ஆவது இதழை யும் தமிழர் தலைவர் வெளியிட்டார் தமிழர் தலைவர் மற்றும் விருந்தினர்களுக்கு ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் சார்பில் பூச்செண்டு அளிக்கப்பட்டது.

புத்தகப் பணியில் உறுதுணை புரிந்த பெரு மக்களுக்குப் பாராட்டு

தந்தை பெரியார் சிந்தனைகள் நூலினை ஒரிய மொழியில் கொண்டு வந்த பேராசிரியர் தானேஷ்வர் சாகு, விழா தலைவர் முனைவர் பிரசாந்த ரத், அறிவியல் மாத இதழின் ஆசிரியர் தேவேந்திர சுதார் வரவேற்பு உரை ஆற்றிய கங்காதர் சாகு, மற்றும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த ஒரிசா சட்டமன்ற உறுப்பினர் ரானேந்திர பிரதாப் சுவைன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் வைஷ்ணவி பரிடோ ஆகியோருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக பேராசிரியர் டாக்டர் பிரசன்னகுமார் சாகு நன்றி கூறினார்.

புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் பெரு மக்கள், கல்வியாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் என பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்ட தந்தை பெரியார், தமிழர் தலைவரின் ஆங்கில புத்தகங்களை மிகப் பலர் விரும்பி பணம் கொடுத்து வாங்கி பெற்றுச் சென்றது நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...


அசீமானந்தாவின் வாக்குமூலத்தை மறக்க முடியுமா?

பாட்னா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நம் நாட்டுத் தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தப்பட ஒரு விடயம் கிடைத்து விட்டது. சக்கைப் போடு போடுகிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி, பி.ஜே.பி.யினர் ஏதோ பரிசுத்த யோவான் போல அகிம்சாமூர்த்தி வேடம் போட்டு ஆடப் பார்க்கிறார்கள்.

பாட்னா வன்முறையை யாரும் நியாயப்படுத்த வில்லை; நியாயப்படுத்தவும் முடியாது - கூடாது.

இந்திய முஜாகிதின் அமைப்பின் தீவிரவாதத்தை எந்த முஸ்லீம் அமைப்பும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் பி.ஜே.பி.யோ சங்பரிவார்களோ அந்த வகையை சார்ந்ததில்லை; அவர்களே திட்டமிட்டு வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்பவர்கள். சங்பரிவார் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு வக்காலத்து வாங்கக் கூடியது பி.ஜே.பி.,
ஒரிசா மாநிலத்தில் தொழு நோயாளிகள் மத்தியில் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த கிரகாம்ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர்தம் இருபாலகர் களையும் படுகொலை செய்த பஜ்ரங்தள் கும்பலுக்கு - தாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்புணர்ச்சியைக்கூட தூக்கி எறிந்து விட்டு பஜ்ரங்தள்காரர்கள் நல்லவர்கள்; அவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கவே மாட்டார்கள் என்று சொல்லவில்லையா?

பஜ்ரங்தள்ளைச் சேர்ந்த தாராசிங் குற்றவாளி தான் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டதே - அத்வானி கூறியது அப்பட்டமான பொய்; குற்றவாளியைக் காப்பாற்றும் முயற்சி என்பது புரியவில்லையா?
பாபர் மசூதி இடிப்பு என்பது, பா.ஜ.க. என்பது நேரிடையாகவே வன்முறையில் ஈடுபாடு கொண்ட நிகழ்வு அல்லவா?
குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது நரேந்திரமோடி என்ற நீரோ மன்னனின் நேரடி நடவடிக்கையல்லவா?

பாபர் மசூதி என்பது ஒரு கட்டடம்தான் அதை இடித்தது குற்றமாகாது என்று சொன்னவர் அவர்களின் ஜெகத் குருவான காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தானே?
பச்சைத் தமிழர் காமராசரை, ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரில், பசுவதைத் தடை என்ற பெயரில், படுகொலை செய்யத் துடித்தவர்கள் வரிசையில் ஜன சங்கத்தவர்கள் இருந்தனரே - பூரி சங்கராச்சாரி யார் இருந்தாரே - காவி வேட்டி சாமியார்கள் நிர்வாண சாமியார்கள் வெளிப்படையாக ஈட்டிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்களே!

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் - நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்தி பச்சையாகப் பீலிபட் பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார்? (17.3.2009)

இது எனது கை! (தன் கையை உயர்த்தியபடி) காங்கிரஸ் கட்சியின் சின்னமான கையல்ல. இது தாமரையின் சக்தி! இது தலைகளைத் துண்டிக்கும்; ஜெய் சிறீராம்! யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்களைப் பலகீனமாக நினைத்தால், கீதையில் சொன்னபடி அவர்களின் தலையை வெட்டுவேன் என்று பேச வில்லையா?

காவி பயங்கரவாதம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறவில்லையா? அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சராக வந்துள்ள சுசீல்குமார் ஷிண்டே, நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது என்று சொன்னபொழுது, இதே பி.ஜே.பி. சரி பரிவார்க் கூட்டம் குய்யோ முறையோ என்று கூச்சல் போட்ட நேரத்தில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் அப்படி தொடர் வன்முறையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட பட்டியல் கைவசம் உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக சொன்ன பிறகு தானே, அடங்கினார்கள். பாட்னா கூட்டத்தில் குண்டுவெடிப்புத் தொடர்பாக மோடி ஏன் பேசவில்லை - ஏன் மவுனம் சாதித்தார்? அதைப் பெரிதுபடுத்தினால் தமது பழைய கந்தாயமும் அம்பலமாகும் என்ற ராஜ தந்திரமாக இருக்கக் கூடும்.

வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போதே வெடித்தது உயிர் இழந்த ஆர்.எஸ். எஸ்.காரர்கள் உண்டே! பட்டியல் தேவையா?

மாலேகான் உள்ளிட்ட பல தொடர் குண்டு வெடிப்பு களில் (மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி ஆஜ்மீர் தர்கா உள்ளிட்டவை) சங்பரிவார்க் கூட்டத்தின் ஈடுபாட்டை அந்த முகாமைச் சேர்ந்த முக்கிய புள்ளியான சுவாமி அசீமானந்தா நீதிமன்றத் திலேயே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளாரே! எனவே பாட்னா வெடி குண்டு என்ற மூடு திரையைக் கொண்டு, தங்களின் வன்முறை முகத்தை மறைத்து விடலாம் என்று, மனப்பால் குடிக்க வேண்டாம்! பி.ஜே.பி. வகையறாக்கள்!

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையின் முடைநாற்றம்


கருநாடக மாநிலம், சிக்க பள்ளாபுரம், கவுரி பித்தனூர் தாலுக்காவின் வடக்கு தென் பெண்ணையாற்றின் கரையில் மகாபாரதக் காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் விதுரன் மோசமடைய பூவரசட் மரம் நட்டதாகவும், அம்மரம் அண்மையில் அடித்த மழைக் காற்றில் அடியோடு சாய்ந்து விட்டதாகவும் அதனை அப்புறப்படுத்தினால் எமனின் சீற்றத்திற்கு ஆளாகி உயிர்ப் பலி ஏற்படுமென அஞ்சி மரத்தினை வட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் அலட்சியம் செய்வதால் 42 தினங்கள் கடந்து விட்ட நிலையில் மரம் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றையக் கால கட்டத்தில் எமன் நட்ட மரம் ஏன் காற்றில் விழுந்து விட்டது? வருண பகவானும் (மழை) வாயு பகவானும் (காற்று) கூடிக் கொண்டு செயல்படும்போது எமதர்மனின் சக்தி என்னானது? இவை எல்லாம் மக்களை மூடநம்பிக்கையில் சிக்க வைக்க போலி சாமியார் மந்திர மவுடிகவாதிகளின் பிரச்சாரமாகும்.

மூடநம்பிக்கையால் முடைநாற்றம் வீசிய மதக் குப்பைகளைக் கிளறி சமுதாயத்தை நந்தவனமாக்கிய பணியைச் செய்த அறிவாசான் தந்தை பெரியார் வழியில் இன்றளவும் செயல்படும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறுவார் நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! என்று கூறுவார். அதுபோல் எமனின் உயிர் பலிக்கு அஞ்சாமல் மூடநம்பிக்கையை தோலுரிக்கும் விதமாக எனது தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களுடன் மேற்படி மரத்தினை வெட்டி அப்புறப்படுத்த ஆயத்தமாய் உள்ளோம். இதற்கு மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து எனக்கு உறுதிமொழி கடிதம் வாயிலாகக் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க தயாராக உள்ளேன்.

- மு. சானகிராமன் தலைவர், திராவிடர் கழகம், பெங்களூர்

தமிழ் ஓவியா said...


முதன் முறையாக சூரியனை நோக்கி வரும் அய்சான் வால் நட்சத்திரம் : நவ.23ஆம் தேதி தெரியும்


நாகர்கோவில், அக்.29-சூரியனுக்கு அருகே, வருகிற 23ஆம் தேதி தோன்றுகிற அய்சான் வால் நட்சத்திரத்தை பள்ளி, கல்லூரி களில் பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

சூரிய மண்டல கோள்களை தாண்டியுள்ள குய்ப்பர் வளையம் மற்றும் சூரிய மண்டலத்தின் கடைக்கோடி எல்லையில் உள்ள ஊர்ட் மேகங்கள் ஆகிய இரு இடங்களில் வால் நட்சத்திரங்கள் உருவாகின்றன. கடந்த 200 ஆண்டு களாக நாம் பார்த்த வால்நட்சத்தி ரங்கள் அனைத்தும் மீண்டும் மீண் டும் சூரியனையே சுற்றி வருபவை. ஆனால், தற்போது, அய்சான் என்ற வால் நட்சத்திரம் முதன்முறையாக நவம்பர் 23ஆம் தேதி சூரியனை நோக்கி வருகிறது.

இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் கணேசன் கூறு கையில், வானில் வால் நட்சத்திரம் தெரிகிறது என்றதும் தவறான செய்திகளும், மூட நம்பிக்கைகளும் பரவ வாய்ப்புள்ளன. எனவே உண்மைச் செய்தியையும், அறிவியல் கருத்துக்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந் நிகழ்வை பள்ளி, கல்லூரி மாணவர் களிடம் கொண்டு செல்ல ஆசிரியர் களுக்கான சிறப்பு பயிற்சியை நடத்தி வருகிறோம் என்றார்.

புதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானி சாதனை

வாஷிங்டன், அக். 29-விண்வெளி மண்டலத்தில் மிகவும் அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டத்தை வான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிங்கல் ஸ்டீல், அவருடைய ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் ஆகியோர் இணைந்து புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில், மிக அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டம். இது பூமியில் இருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிக் பேங் என்ற அண்டவெளியில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திர கூட்டம் உருவாகியுள்ளது. இது குறித்து விதால் தில்வி கூறுகையில், உலகிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார்.

தமிழ் ஓவியா said...


மதத் திருட்டு


திருச்சி மாவட்டம், சிறீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் ஆயி ரங்கால் மண்டபத்தில் தொல்லியல் துறை அகழ் வாய்வு செய்ய இந்திய அரசு அனுமதியளித்துள் ளது என்பது ஒரு செய்தி.

வரவேற்க வேண்டி யதுதான். அதனோடு ஆய்வு செய்ய வேண்டிய கூடுதல் தகவல்களும் உண்டு.

சைவ சித்தாந்த கழகம் வெளியிட்டுள்ள தஞ்சைவாணன் கோவை எனும் நூலில் பக்கம் 7இல் (வரிகள் 26-30) கீழ்க்கண்ட தகவல் உள் ளது.

நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந் தது. அதனை ஆலி நாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கி னார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்! என்று தஞ்சை வாணன் கோவை கூறுகிறது.

சிறந்த ஆய்வியல் அறிஞரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர் களால் எழுதப்பட்ட பௌத்தமும் தமிழும் எனும் நூலில் (பக்கம் 37) கீழ்க்கண்டவாறு எழுதி யுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலி ருந்த பொன்னால் அமைந்த புத்தச் சிலையைக் கவர்ந்து சென்று, அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப் பணி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு கூடுதல் தகவலும் உண்டு.

இப்படி திருடி வந்த பொன்னைக் கொண்டு சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் மதில் சுவர் எழுப்பப்பட்டது அல்லவா!

அக்கோயிலின் மதிற் சுவரையும், கட்டடங்களை யும் எழுப்பிய தொழிலா ளர்களுக்குக் கூலி ஏதும் கொடுக்காமல், தொழி லாளர்களை ஓடத்தில் ஏற்றிச் சென்று காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டனர்.

ஆற்று வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குக் கொள் ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத் துறை (பார்வானம் = சுடுகாடு, பார்வணம் = சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்ட வனிடம் இறைஞ்ச, அவ் வாறு அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்ட வர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட் டது. (திருமங்கை ஆழ் வார் வைபவம் எனும் நூல்). எவ்வளவுப் பெரிய சூழ்ச்சியும் - பித்தலாட்ட மும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுபகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனத்துக்கு அளவேயில்லையா?


கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் மனிதனை எவ்வளவு தூரம், முட்டாள்தனத்துக்குத் துரத்திக் கொண்டு இருக்கிறது என்பதற்கு ஒரு செய்தி.

கிருட்டினகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அருகில் தொக்கம்பட்டி கிராமத்தில், பசு மாடு ஒன்றுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக, வதந்தி ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளனர்.

இது தருமபுரி கிருட்டினகிரி மாவட்டங்களில், கிராமப்பகுதிகளில் ஒரு மூடநம்பிக்கைக்கு வித்திட்டுள்ளது.

பசு மாட்டுக்கு இப்படி ஒரு ஆண் குழந்தை பிறந்ததால், ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து என்று, மூடநம்பிக்கை வியாபாரிகள் பரப்பியுள் ளனர். கைப்பேசி மூலம் ஆங்காங்கே விசிறி விட்டுள்ளனர்.

இது உண்மையா? இப்படியெல்லாம் நடக்குமா? என்று சிந்திப்பதற்குப் பகுத்தறிவு தேவைப்படுமே! பக்தி வந்தால் புத்தி பறந்து ஓடிவிடாதா?

அடுத்து என்ன? பரிகாரங்களைத் தேட வேண்டியதுதான். வீட்டுக்கு வீடு விளக்கு ஏற்றுவது, தேங்காய் உடைப்பது... இத்தியாதி.. இத்தியாதி சடங்குகள் சாங்கோ பாங்கமாக நடக்க ஆரம்பித்து விட்டன.

நாளை பொழுது விடிந்தால் இந்தச் செய்தி வெறும் வதந்தி என்பது அம்பலமாகி விடும் - அவ்வளவு தான்.

இது போன்ற புரளிகளைக் கிளப்பி விடுபவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் இதுபோன்ற முட்டாள் தனங்கள் இறக்கை முளைத்துப் பறந்து கொண்டுதானிருக்கும். முட்டாள்தனம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நம்பித் தொலைப்பவர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குள் எருமை மாடு நுழைந்து விட்டது என்பார்கள்; திருப்பதியில் அம்மன் தாலி அறுந்து விழுந்து விட்டது என்பார்கள்; பிள்ளையார் பால் குடித்தார் என்று கரடி விடுவார்கள்; அம்மன் சாமி கண் விழித்துப் பார்த்தாள் என்பார்கள். இன்னொரு அம்மனின் கண்களில் ரத்தம் கசிந்தது என்பார்கள்; நம்புவதற்கு ஆள் கிடைத்தால் புளுகுபவர்களுக்கா பஞ்சம்?

பிஞ்சு வயதிலேயே, மூடநம்பிக்கைச் சரக்கு களைத் திணித்து வளர்க்கப்பட்டவர்கள், எதைத் தான் நம்ப மாட்டார்கள்?

சென்னையில் ஒருமுறை தலையில்லா முண்டம் டீ குடித்தது; என்று கிளப்பி விட்டார்கள். அதுபற்றி அப்பொழுது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சிறீபால் அவர்கள் அழகாகச் சொன்னார்.

ஏதாவது ஒரு முண்டம் அப்படி சொல்லி யிருக்கும்! என்றார் - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்ட வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம், கூறி என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, என்ற பழமொழி இதற்குப் பொருந்தும் போலும்.

முதலில் ஏடுகளும், தொலைக்காட்சிகளும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளின் தோலை உரித்துக் காட்ட வேண்டாமா? மூடநம்பிக்கை களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம், இந்த ஊடகங் களாவது மூடநம்பிக்கையைப் பரப்பாமல் இருந்தால் போதுமே!

காலையில் சுப்ரபாதத்தில் ஆரம்பித்து நாள் பூராவும் மூடத்தனங்களின் மொத்த உருவ மாகத்தானே நடமாடுகின்றன.

எந்த நிறத்தில் சட்டை போடுவது, எந்த நிறத்தில் மோதிரம் அணிவது, இந்த நாள் எப்படிப்பட்ட நாள் - வியாபாரத்தை ஆரம்பிக்கலாமா - கூடாதா என்கிற அக்கப் போர்களின் களமாகத் தானே, இவை இருக்கின்றன.

விஞ்ஞானத்திற்கு முரணானவற்றை ஒளி பரப்பக் கூடாது என்று சட்டம் செய்யப்பட வேண் டாமா? குறைந்தபட்சம் மகாராட்டிர மாநிலத்தில் மூடநம்பிக் கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை மத்திய அரசே கொண்டு வரட்டும்! இதைக்கூட செய்யாவிட்டால் அது எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?

தமிழ் ஓவியா said...


மன்மோகன் அவர்களும் - மோடியும்!


இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் காட்சியளித்தனர் - நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் என்பது, ஆரோக்கியமான ஒன்றே!

அதேநேரத்தில், தன்னைப் பிரதமராகவே நினைத்து மிதந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆரோக்கியமான ஒரு பண்பாட்டைக் கடைப்பிடித்தாரா என்றால், இல்லை என்பது தான் அதற்குரிய பதிலாகும்.

சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம் திறப்பு விழா நிகழ்ச்சி அது; அந்த விழாவில் வல்லபாய் படேலைப்பற்றிப் புகழ்வது சரிதான் - யாருக்குச் சிலை திறக்கப்படுகிறதோ அவரைப் பற்றித்தானே பெருமையாகப் பேசவேண்டும் - அதுதானே மரபும்!

மோடி எப்படிப் பேசினார்? வல்லபாய் படேல் மட்டும் பிரதமராகப் பொறுப்பு ஏற்றிருந்தால் ஆட்சி எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும் என்று பேசுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?

ஜவகர்லால் நேரு பிரதமராகப் பொறுப்பு ஏற்றதால் நாடு வளர்ச்சி அடையவில்லை என்று மறைமுகமாகச் சொல்லுவதாகத்தானே பொருள்?

பிரதமராக இருக்கக் கூடிய மன்மோகன்சிங் அந்த மேடையில் வீற்றிருக்கும்போது, அப்படிப் பேசுவது சரியானதுதானா? நாகரிகம்தானா?

படேலைப் பொறுத்தவரை இந்துத்துவா சாயல் கொண்டவர் என்ற கருத்துண்டு. காந்தி யாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபைக்காரன் என்று முதலில் சொன்னார்; பின் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டார்.

அதேநேரத்தில் 1949 டிசம்பர் 22 ஆம் தேதியன்று, இரவோடு இரவாக பாபர் மசூதி வளாகத்துக்குள், ராமன் பொம்மையைக் கொண்டு வைத்தது காவிவெறிக் கும்பல்.

அதனை அப்புறப்படுத்தவேண்டும் என்று பிரதமர் நேரு கூறினாலும், துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேலும், உத்தரப்பிரதேச முதலமைச்சராகவிருந்த கோவிந்த வல்லப பந்தும் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. பிரதமர் நேரு கருதியபடி - திருட்டுத்தனமாக உள்ளே திணிக்கப்பட்ட ராமன் பொம்மையை அன்று அப்புறப்படுத்தியிருந்தால், பிற்காலத்தில் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே!

படேல் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மதிப்பும், அனுதாபமும் இருப்பதற்குக் காரணம் அன்று அவர் நடந்துகொண்ட விதம்தான். அதே உணர்வோடுதான், நேருவை மறைமுக மாகத் தாக்கும் தன்மையிலும், படேலைப் பெருமைப்படுத்தும் வகையிலும், பேசியதன் உட்பொருளும், இரகசியமுமாகும்.

ஒரு பொது மேடையில் இப்படி ஜாடை பேசுவதெல்லாம் கீழ்க்குணம் என்பதை, நரேந்திர மோடியிடம் எதிர்பார்க்க முடியுமா?

இன்னும் கேவலம் என்னவென்றால், பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, பி.ஜே.பி.காரர் களும், சங் பரிவார்க் கும்பலும் கூச்சல் போட்டுள்ளனர்.

அவர்களைப் பொறுத்தவரை மோடிமுதல் பஜ்ரங்தள் வரை அனைவரும் ஒரே தகுதி உடையவர்கள்தான்.

அதேநேரத்தில், எதைப்பற்றியும் கவலைப் படாமல், பிரதமர் மன்மோகன்சிங் பதற்றப் படாமல், பண்பாட்டோடு தன் சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

பிரதமராக வர ஆசைப்படுவது என்பது ஒன்று. அதற்குத் தகுதியாகத் தம்மை ஆக்கிக் கொள்வது என்பது மற்றொன்று என்பதை வாக்காளர்கள் முதலில் தெரிந்துகொள் வார்களாக!

தமிழ் ஓவியா said...


இயற்கைத் தடைகள்


நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத் தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமை யாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள். - (குடிஅரசு, 9.1.1927)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்!!


பார்ப்பன நடிகருக்குக் கண்டனம்

ஆண்களை சிரிக்க வைக்கப் பெண்களை இழிவுபடுத்தி திரைப் படங்களில் வசனக் காட்சிகளைப் புகுத் துவதை வாடிக்கையாகக் கொண்டிருக் கும் பார்ப்பன நடிகர் சந்தானம் நிறுத் திக்கொள்ளவேண்டும் என்று பெண் கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள் ளது. (சோவின் துக்ளக்கையும் அப் படியே கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?)

தமிழ் ஓவியா said...

விலகல்

முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் மருமகள் அருணா சுக்லா பி.ஜே.பி. யிலிருந்து வெளியேறியுள்ளார். (பி.ஜே.பி.யே மக்களை விட்டு வெளியேறவேண்டிய கட்சிதானே!).

மண்டியிடவேண்டுமா?

பஞ்சமி நிலத்தை மீட்டு ஆதிதிரா விடர்களிடம் ஒப்படைக்கக் கோரி கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த இளைஞர்கள் மண்டியிட்டு நடந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத் துள்ளார்கள்.

(மனு தர்மம் ஒழிந்து போய் விடவில்லை; வேறு வடிவத்தில் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மண்டியிட்டு மனுகொடுக்கும் நிலைதான் இன்றைக்கும், வெட்கக்கேடு!)

மலேசியாவின் திருப்பதி

மலேசியாவில் கிலாங் நகரில் மலேசிய திருப்பதி எனப்படும் சுந்தர் ராஜுலு பெருமாள் கோவில் ரூ.20 கோடி செலவில் கும்பாபிஷேகம்.

(சரவண பவன் ஓட்டல் உலகின் பல நாடுகளிலும் வைத்துள்ளது போல திருப்பதி ஏழுமலையானின் கடைகளும் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வைக்கப்பட் டுள்ளன.

சென்னைத் தீவுத் திடலிலும் ஏழுமலையான் திருக்கல்யாணம் என்ற சேதி வந்தபோது திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் மனம் பொறாமல் எழுதினார். போகிற போக்கைப் பார்த்தால் இவ்வளவு பணம் கொடுத்தால் ஏழுமலை யானே வீட்டுக்கு வீடு வருவார் போலிருக்கிறது என்று எழுதி னாரே, அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது).

மூன்றாவது அணியா?

டில்லியில் 30.10.2013 இன்று இடதுசாரிகள் கூட்டவிருந்த அணி மூன்றாவது அணி இல்லை - மாறாக அது மதவாத எதிர்ப்பு அணியே!

- சி.பி.எம். பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி

(மூன்றாவது அணி இல்லை என்றே வைத்துக்கொள்வோம்; மதவாத எதிர்ப்பு அணியில் ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மதவாத எதிர்ப்பு அணியில் இடம்பெறுவது - மார்க் சிய அகராதியில் எந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளதோ!)

தண்டனை?

ஸோபன் சர்க்கார் என்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார். தன் கனவில் கண்டதாக ஒரு தகவலைக் கூறியதன் அடிப்படையில் தொல் பொருள் துறை உன்னாவ் பகுதியில் பழங்கால கோட்டை ஒன்றைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டனர் 12 நாள்கள் தோண்டியும் தங்கம் கிடைக்க வில்லை.

அப்படி தங்கம் கிடைக்கா விட்டால் ஆயுள் தண்டனையைக் கூட ஏற்கத் தயார் என்று சவால்விட்டாரே - இப்பொழுது அரசு என்ன செய்யப் போகிறது? தண்டனை வழங்கப்படுமா? 12 நாள் ஆன செலவுக்கு யார் பொறுப்பு?
இந்தியாவில் தொலைப்பேசி

இந்தியாவில் 63 சதவிகித வீடுகளில் தொலைப்பேசி அல்லது கைப்பேசிகள் உள்ளன. நகர்ப்புறங்களிலும் 82 சதவிகித வீடுகளிலும், கிராமப்புறங்களில் 54 சதவிகித வீடுகளிலும் இவை இருக்கின்றன.

இதுதான் குஜராத்

18321 அங்கன்வாடிகளுக்கும், 52 லட்சம் வீடுகளுக்கும் கழிவறை கிடையாது. 64 லட்சம் வீடுகளுக்குச் சாக்கடை வசதியில்லை - இதுதான் நரேந்திர மோடி ஆளும் இன்றைய குஜராத்தின் நிலைமை!

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுபகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கும் முடிவை காங்கிரஸ் திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்


புதுச்சேரி, அக்.31-விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று (31.10.2013) புதுவை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய தினம் கூடிய காங்கிரஸ் உயர் மட்ட குழு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தி.மு.க. தலைவருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறான முடிவை காங்கிரஸ் உயர்மட்ட குழு எடுத்துள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும். 1967ஆம் ஆண்டு ஏற்பட்ட பின்னடைவை விட கூடுதல் பாதிப்பை ஏற் படுத்தும். தமிழக காங்கிரஸ் தலைவர்களும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என நேரடியாகவே வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப் படவில்லை.

3ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை கண்டித்தும், இந்த முடிவை திரும்ப பெறக்கோரியும் வருகிற 3ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். புதிய தலைவராக ராஜ பக்சேவை தேர்வு செய்ய கூடாது என காமன்வெல்த் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளுக்கு விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் மின் அஞ்சல் (ஈமெயில்) அனுப்பப்படும்.
பரமக்குடியில் 7 தலித்துகள் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் தரப்பில் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் தமிழக சட்டசபையில் அரசு நியமித்த ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறைக்கு ஆதரவாகவும், தலித்துகள் படு கொலையை நியாயப்படுத்தியும் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அறிக்கையை புறக்கணிக்க வேண்டும். சி.பி.அய். விசா ரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஜாதியின் பெயரால் தலித் சமூகத்துக்கு எதிராக ஒரு அரசியல் அமைப்பு உருவாகி வருகிறது. இது சமூக விரோத கூட்டணி. இந்த கூட்டணி ஜாதி வெறியை தூண்டி வன்முறையை தமிழகத்தில் உருவாக்கி சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கவும் செய்கிறது. எனவே தமிழக அரசு இதனை கண்காணித்து அதன் செயல் பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் புதுவை பண்டசோழநல்லூர் ஜாதிய மோதல் உருவாக்கப்பட்டது. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

ஜாதி வெறியர்களின் நடவடிக்கைகள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிகம்பங்கள், பேனர்கள் சுவரொட்டிகள் திட்டமிட்டு ஜாதி வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உழைக்கும் மக்களின் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் அப்பாவி மக்கள்தான் பலியாகிறார்கள். எனவே தமிழக அரசும், மத்திய அரசும் சமூக விரோத சாதிய கூட்டணியை கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம். ஏற்காடு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரமும் செய்ய உள்ளோம். மத்தியில் மதவாதிகள் ஒருங்கிணைந்த ஒரு கூட் டணியும், தமிழகத்தில் ஜாதிய வாதிகள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டணியும் உருவாகி வருகிறது.

சமீபத்தில் டில்லியில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இது வரவேற்க கூடியது. இருப்பினும் அகில இந்திய அளவிலும், தமிழகத் திலும் 3ஆவது அணி எடுபட்டது இல்லை. அதோடு வாக்கு சிதறல்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே தலைவர்கள் எச்சரிக்கை உணர்வோடு முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் - இந்தியா பங்கேற்பு: காங்கிரஸ் விளைவுகளை சந்திக்கும்


கலைஞர் பேட்டி

சென்னை, அக்.31- இலங் கையில் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற் றால் அதன் விளைவை காங் கிரஸ் சந்திக்கும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர் :- நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப் பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- தமிழ் நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.

கேள்வி :- பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தி யாவிலிருந்து சென்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டால்?

கலைஞர் :- இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல் லக் கூடாது என்று தான் பொருள்.

கேள்வி :- சட்டப் பேரவை யில் இந்தப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் மக்களின் உணர்வு களுக்கேற்ப நீங்களும் அதனை ஆதரித்தீர்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அதனை ஆதரித்தார்கள். அந்த உணர்வு களுக்கு மாறாக மத்தியில் காங் கிரஸ் கட்சி இப்படி யொரு முடி வெடுக்கிறதே?

கலைஞர் :- வினை விதைத் தவர்கள், வினை அறுப்பார்கள்!

கேள்வி :- டெசோ அவசர மாகக் கூட்டப்படுமா?

கலைஞர் :- டெசோ கூட்டம் நடைபெற்றுத் தான் முதன் முதலில் இதற்கான தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அதை மீறித் தான் இப்போது காங்கிரஸ் கட்சி அல்லது பிரதமர் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி :- டெல்லியிலிருந்து வருகின்ற தகவல், காங்கிரஸ் கட்சியின் முடிவினை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ராஜினாமா செய்யப் போவதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- அதைப்பற்றி எனக்குத் தெரியாது. செய்தி வந்த பிறகு தான் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியும்.

தமிழ் ஓவியா said...


தீபாவளி -அறிவுடையோர் சிந்திப்பீர் !

லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை.

இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.

இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! - மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவியை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!

- தொகுப்பு: க. பரணீதரன்

தமிழ் ஓவியா said...


தீபாவளியைப் பற்றிய சரடுகள்!


தீபாவளி என்றால் அதற்குக் காரணா காரியத்தைப் பொருத்த மாகச் சொல்லட்டும். ஆள் ஆளுக் குத் தத்தம் விருப்பம் போல் அவிழ்த் துக் கொட்டுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

உண்மை என்று இருந்தால் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அது எப்படி இப்படியெல்லாம் மாறுபடும்?

தீபாவளி சிறப்பிதழ் என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடு கிறார்களே -_ அவற்றில் தான் எத்தனை எத்தனை மாறுபாடுகள்.

இதோ ஓர் இதழ்:

மகாலட்சுமியும் தீபாவளியும்

பாற்கடலில் அவதரித்த மகா லட்சுமி தன் மனம் கவர்ந்த மகா விஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள். திரு மார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம் பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள். எம் பெருமானைமணந்த நாள் தீபாவளி திருநாளாம்.

அயோத்தியில் தீபாவளி

பதினான்கு ஆண்டு கால வன வாசத்துக்கு பிறகு தம் நகரத்துக்கு திரும்பிய ராமபிரானை அயோத்தி நகர மக்கள் வரவேற்றபோது வீதி களில் வரிசையாக விளக்குகள் ஏற்றப் பட்டன. அந்த நாள் தான் தீபவாளி திருநாள் என்பது அயோத்தியில் கடைப்பிடிக்கும் சம்பிரதாயமாம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளை தான் வடநாட்டினர் தீபாவளி என்னும் பெயரோடு கொண்டாடி வருகின்றனர்.

மூவடியால் உலகை அளந்து பாதாளம் சென்ற மாவலி ஆண்டிற்கு ஒரு முறை பூவுலகம் வர மகா விஷ் ணுவிடம் வரம் பெற்றான். அப்படி அவன் வரும் நாள் தீபாவளி என்பது கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின் மறை பொருள்.
(தினத்தந்தி தீபாவளி சிறப்பிதழ் ஆன்மிகம் 29.10.2013).

தமிழ் ஓவியா said...


வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!


தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக்கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை; தீப ஆவளி=தீபாவளி. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங் களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம்: 433-434)

தமிழ் ஓவியா said...


தீபாவளிமனித நேயங்களை நசுக்கி எரித்து தன் சுயநலத்தை பகட்டை காட்டுவதற்கு தெரிந்தே தானே போய் ஏமாற, தன்னுடைய உடலுழைப்பை வினாடிகளில் கரியாக்க கொண் டாடப்படும் உலகின் ஒரே ஒரு மடத் தனமான கேளிக்கை கூத்து என்றால் அது மிகையாகாது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு 700 விலைபட்டியல் ஒட்டி 50 தள்ளுபடி என்று விற்ற அதே பொருள் திபாவளி நெருங்கிய உடன் 2000 லேபிள் ஒட்டி 300 ரூ தள்ளுபடி என்று ஏமாற்றி விற்பனை செய்வார்கள், நம்ம ஆள் அதை அடித்து பிடித்து வாங்க ஓடுகிறான், கூடவே பையனுக்கு ஒரு 10 ரூ மதிப் புள்ள சைனா தொப்பி இலவசமாம், இன்றைய விலைவாசியில் பணம் சேர்ப்பது என்பது சாமானியர்களுக்கு குதிரைக்கொம்பு பணக்காரர்களுக்கு வேண்டுமென்றால் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் உழைத்து பணம் சேர்த்திருந்தார்கள் என்றால் அதன் மதிப்பு தெரிந்து விரயமாக்கமாட்டார்கள் அவர்கள் ஏழைகளின் உழைப்பைச்சுரண்டி சேர்த்த பணம் தானே அது.

இருவருமே உழைப்பின் ஊதி யத்தை பட்டாசு என்ற பெயரில் சில வினாடிகளில் கரியாக்குகிறார்கள், உங்க காசு நீங்க என்னமும் செய்யலாம் என்று கூறிவிடமுடியாது. பட்டா சினால். காற்று மாசு ஓசை மாசு, மற்றும் ஒளிமாசு என இயற்கையை வன் கொடுமை செய்கிறார்கள், எத்தனை காகங்கள் குருவிகள் அணில்கள் சென்னை சாலையில் செத்துவிழு கின்றன தெரியுமா, காரணம் காற்றில் அதிகம் கலந்துவிடு கந்தகம் உயிரினங் களின் மென்மையான சுவாச உறுப்பு களை வெந்து போக செய்துவிடும். பெருநகரங்களில் எந்த பாவமும் அறியாமல் செயற்கைச்சூழலை எதிர்த்து போராடும் ஒரு சில உயிரினங்களையும் கொலை செய்யும் போது செயலை ஏன் செய்கிறீர்கள், உலகின் வெறெந்த விழா விலும் ஏழைகளின் முகங்களில் இய லாமையின் ஏக்கத்தை காணமுடியாது அது பொங்கலானாலும் சரி, ரம்ஜானாக இருந்தாலும், கிருஸ்துமஸாக இருந்தா லும் சரி இந்த விழாக்களில் பரம்,அ ஏழைகள் முதல் அனைவரின் மனதி லும் ஒருவித சந்தோசம் இழையோடும் இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தீபாவளியோ நாள் நெருங்க நெருங்க ஏழைகளில் மனதில் வேதனை குடிகொண்டுவிடும், சென்ற வருடம் தீபாவளிக்கு வாங்கிய வட்டி யும் முதலும் சமீபத்தில் தான் அடைத் திருப்பான் மீண்டும் அந்த கொடூரக் கும்பலிடம் கையேந்தும் கொடுமையும் தீபாவளியில் தான். அடுத்தவர் முன்பு பகட்டாக கொண்டாட சிலர் நினைக் கும் இந்த மடத்தனமான கேளிக்கை வேதனையான தொடர்விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது, சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் இயற்கைச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மடத்தனமான கோளிக்கையை புறக்கணிப்போம்.

- சரவணா. இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...


53 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் கிராமம்


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் 53 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்து வருகின்றனர். மயில்ராயன்கோட்டை என்று அழைக்கப்படும் எஸ்.மாம்பட்டி ஊராட்சி வானம் பார்த்த பூமியாகும். இங்கு சுமார் 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி, எம்.வலையப்பட்டி, கிளுகிளுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, கச்சப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர், கலிங்குபட்டி ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன. இக்கிராம மக்களின் வாழ்வாதாரமே விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். விவசாயம் தொடங்கும் காலத்தில் தீபாவளி வருவதால் அனைவரின் பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வு நிலவிவருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாம்பட்டி கிராமத்தின் அப்போதைய அம்பலக்காரர் சேவுகன்அம்பலம், முன்னாள் அம்பலக்காரர்களோடு விவாதித்தார். எல்லோரும் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் 1959இல் ஊர்க் கூட்டம் கூட்டி, ஊராட்சிக்குள்பட்ட 12 கிராமங்களிலும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர். இதுகுறித்து சேவுகன் அம்பலம் மகன் சபாபதி அம்பலம் கூறுகையில், எனக்கு திருமணமான ஆண்டுதான் தீபாவளி திருநாள் கைவிடப்பட்ட ஆண்டு. இந்தியாவே கொண்டாடும் ஒரு பண்டிகையை ஒரு கிராமம் நிறுத்துவதா என்ற கேள்விகளை தூக்கியெறிந்து, மற்ற கிராமங்கள் கொண்டாடும் போது நாம் கொண்டாடவில்லை என்றால் ஊருக்கு இழுக்காகுமோ என்ற போலி சித்தாந்தங்களை உடைத்தெறிந்து, சூழ்நிலைக்கும் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப வாழ்ந்து கொள்வதுதான் சரி என்று தீர்மானித்தோம். அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகிறோம். மேலும் சேவுகன்அம்பலம் உலகநாதன் கூறுகையில், விவசாயங்கள் மறைந்து வெளிநாட்டு வருமானத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அன்று கிராமங்கள் கட்டுப்பட்டு நின்றது போல எங்கள் தலைமுறையிலும் கட்டுப்பாடு காக்கப்படுகிறது. இனிவரும் தலைமுறையும் இதனை கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார். மேலும், இக்கிராமங்களில் வெள்ளாடு வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது ஏன் என்று வினவும் போது மரம், செடி, கொடிகள் காக்கப்படவே தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


பார்க்கவில்லையா உள்ளங்கையை?


நம் உள்ளங்கையில் விரல் நுனியில் லட்சுமியும், மத்தி யில் சரஸ்வதியும், கடைசியில் துர்க்கா தேவியும் உள்ளனர். காலையில் எழுந்ததும் உள்ளங்கையைக் கண்களால் பார்ப்பது நல்லது

- காஞ்சி சங்கராச்சாரியார் தினமணி 21.9.2010 பக்கம் 2

காஞ்சி வரதராஜ பெரு மாள் கோயில் சங்கர்ராமன் கொலை வழக்கில் இதே காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டாரே அன்று காலை எழுந்தவுடன் தன் உள்ளங்கையைப் பார்க்கத் தவறி விட்டாரோ!

தமிழ் ஓவியா said...


கடவுளிடம் வேண்டுதல் என்பது சரியானதுதானா?


கடவுள்தான் எல்லாம் அறிந்தவர் என்றும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்றும் ஆன்மீக சிரோன்மணிகள் அளக்கிறார்களே _ அப்படி இருக்கும் போது ஆண்டவனி டம் கோரிக்கைகளை வைப்பது ஏன்? வரங்களை வேண்டு வது - _ ஏன்?

அவன்தான் எல்லாம் அறிந்தவனா யிற்றே? கல்லினுள் தேரைக்கும் படியளப் பவனாயிற்றே _ அப்படி இருக்கும் பொழுது ஆண்டவ னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பது அதி கப் பிரசங்கித்தனமா அல்லது ஆண்டவன் ஒரு அறியாமை ஆசாமி _ நாம் எடுத்துச் சொன்னால்தான் விளங்கிக் கொள்வான் என்று கருதும் மனப்பான்மையா? இதுகுறித்து கறுப்புச் சட்டைக்காரன் கூறினால் கொஞ்சம் கசக்கும்தான்

கல்கி சொன்னால் இனிக்கும் அல்லவா?

இதோ கல்கியில்
கடவுளை வியாபாரியாக்காதே!

கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா...?

- - _ வி. மனோகரி, குமாரபாளையம்

பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரி யாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல. கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தரக் கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.

ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி. அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.

(எழுத்தாளர் ராஜேஷ்குமார் _ கல்கி 6.11.2011)

சரணடைந்து பாருங்கள்! என்று சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்!

பிரார்த்தனை என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம் என்று கருப்புச் சட்டை சொல்லவில்லை கல்கி சொல்லுகிறதே இதற்கு என்ன பதில்?

தமிழ் ஓவியா said...


நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க


தீபாவளி என்றால் மனுசர்களுக்கு மட்டுமல்ல; கடவுள் களுக்கும்கூட தலைத் தீபாவளியாம்.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையைக் கட்டிக் கொடுத்தா ராம். பிறகு முருகனுக்குத் தலைத் தீபாவளி சீர்வரிசை செய் தாராம்.

சிவன் கோயிலில் இந்தத் திருக்கூத்து என்றால் வைணவர்கள் சும்மா இருப்பார்களா?

ஆண்டாளை ரெங்கனுக்குக் கட்டிக் கொடுத்த பெரியாழ்வார் தீபாவளிக்கு முதல் நாள் மருமகனாகிய ரெங்கனுக்கு நல்லெண்ணெய் சீயக்காய்களை அனுப்பி வைப்பாராம்.

தீபாவளி விடியற்காலையில் ரெங்கநாதன் ஆண்டாளுக்குப் புத்தாடை அணிவிப்பார்களாம்.

பிள்ளை விளையாட்டே என்று இராமலிங்க அடிகள் சும்மாவா சொன்னார்?

தமிழ் ஓவியா said...


திரு நீறு - திரு நீறுதிரு நீறு எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா? அதற்கென்றும் சில சடங்காச்சாரங்கள் உண்டாம். வியாதியில்லாத கன்றுடன் (எப்படி தேடி பிடிப்பார்களோ?) கூடிய பசு சாணம் போடும் வரை காத்திருக்க வேண்டும். சாணம் போடும் சமயத்தில் கையில் வைத்திருக்கும் தாமரை இலை யில் அந்தச் சாணத்தைப் பிடித்து, உருண்டையாக்கி சில மந்திரங்கள் சொல்லி அக்னியில் எரிக்க வேண்டும்; -இப்படிதான் திருநீறு தயாரிக்க வேண்டுமாம். அய்தீகம் சொல்கிறது. இப்பொழுதெல்லாம் இப்படிதான் திருநீறு தயாரிக்கப்படுகிறதா? கடைகளில் விற்பனைப் பொருளாகி விட்டதே! மற்ற மற்ற விஷயங்களுக்குகெல்லாம் வக்கணைப் பேசுபவர்கள் இதுபற்றி ஏன் சிந்திக்கவில்லை?

தமிழ் ஓவியா said...


மகாலட்சுமியின் குடியிருப்பு பசுவின் பின்புறமாம்பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப் பது 32 வகை அறங்களுள் ஒன்றாகும். யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயுறை என்றார் திருமூலர். (மாலை மலர்)

வெளியிட்டுள்ள தீபவாளி மலர் பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாளாம். வாடகை இல்லாத வீடு அங்குதான் கிடைக்குமோ!

தமிழ் ஓவியா said...


பெரியார் திரட்டு!

தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.

திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்

எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?

என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?

சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?

தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!

ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!

சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?

கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!

என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?

இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!

பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?

வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?

சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!

பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?

நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்

மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு

மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


பட்டாசு வெடிப்பதால்....


ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாட்டின் அளவு எல்லையை மீறிச் செல்வதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டில் சென்னையில் பட்டாசு ஒலி மாசுபாடு கண்காணிக்கப்பட்ட அயனாவரம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அதே ஆண்டில் காற்றில் கலந்திருந்த சஸ்பெண்டட் பார்ட்டிகுலேட் மேட்டர் (காற்றில் கலந்திருக்கும் துகள்) கியூபிக் மீட்டருக்கு 498 மைக்ரோகிராம் அளவு இருந்திருக்கிறது.

125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சத்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல். இவை அனைத்துமே அந்தக் கட்டுப்பாட்டை மீறுகின்றன.

இந்த அளவு சத்தத்தைக் கேட்டால் காது செவிடாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் அவர்களிடம் சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதில் பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழ் ஓவியா said...

விநாயகர்


தென் ஆப்பிரிக்காவில் ஒரு தமாஷ்! இந்திய கிரிக் கெட் விளையாட்டுக் கம் பெனி. தென் ஆப்பிரிக்கா வுக்குக் கிரிக்கெட் விளை யாடப் போகிறது. தென் னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கில ஏட்டில் கார்ட்டூன் ஒன்று வெளி வந்துள்ளது. பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஜோனாதன் ஷபிரோ என் பவர் அதை வரைந்துள் ளார்.

விநாயகர் ஒரு கையில் கிரிக்கெட் மட்டை; இன் னொரு கையில் நிறைய பணம்; அந்த விநாயகர் சிலை முன் தெ. ஆப்பிரிக் காவின் கிரிக்கெட் குழு பொறுப்பாளர் ஹாரூன் வேஸ்ட் என்பவரைப் பலி கொடுப்பது போன்ற கார்ட்டூன் அது!

இதைப் பார்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்துக்கள் கொதித் துப் போய் விட்டார்களாம்.

இதில் கொதித்தெழ என்ன இருக்கிறது? இந்த விநாயகன் பிறப்பே ஆபா சம்! பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் விநாயகன் என்று சொல்லும் பொழுது வராத கோபம் இப்பொழுது மட்டும் வருவது ஏன்?

சூரபத்பனுக்கும் சுப்பிர மணியனுக்கும் சண்டை நடந்தபோது தன் சகோ தரனுக்காக வல்லபை என்ற அசுரப் பெண்ணின் குறியி லிருந்து படை வீரர்கள் வந்து கொண்டே இருந் தனர், என்றறிந்து தன் துதிக்கையை வல்லபை யின் குறியில் வைத்து அடைத்தான் என்று எழுதி வைத்து இருப்பதைக் கண்டு வராத கோபம் இப் பொழுது மட்டும் வரு வானேன்? (பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்துள்ள இந்த விநாய கருக்கு வல்லபைக் கணபதி என்று பெயர் மத்தூர் கோயி லில் இன்றும் காணலாம்.)

கார்கில் பிள்ளையார் என்று கூறி பிள்ளையாரின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தபோது, கிரிக்கெட் பிள்ளையார் என்று சொல்லி விநாயகன் கையில் கிரிக் கெட் மட்டையைக் கொடுத்து ஊர்வலம் வந்தபோது வராத கோபம். இப்பொழுது மட்டும் எங்கிருந்து குதித்த தாம்?

கோபப்படுவதைவிட வெட்கப்படுவதற்கு இன் னும் எத்தனை எத்த னையோ இந்த விநாய கனைப் பொறுத்து உண்டு.

அம்மாவைப் போல் தனக்கு ஒரு பெண் வேண் டும் கல்யாணம் செய்து கொள்ள என்று கேட்டவன் என்று எழுதி வைத்துள் ளனரே எவ்வளவு கோவலம் - ஆபாசம்!
தாயா, தாராமா?

தமிழ் ஓவியா said...

விநாயகர் சமுத்திர ஸ்நானம் செய்யப் போனா ராம். அப்பொழுது கட லையே உறிஞ்சி விட்டாராம். பின் அதை சிறு நீராகக் கழித்தாராம். அதிலிருந்து தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறதாம்! (கடவுள் சமாச்சாரம் என்றாலே நல்ல தமாஷ் தான்!)

கடைசியாக ஒன்று ;விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறோம் என்ற பெய ரில் அந்த பொம்மைகளை உதைத்து அடித்துத் துவைக்கிறார்களே பக்தர்கள் - அப்பொழுது ஏன் கோபம் குமுறிக் கொண்டு வரவில்லையாம்?

- மயிலாடன்விநாயகர்

தென் ஆப்பிரிக்காவில் ஒரு தமாஷ்! இந்திய கிரிக் கெட் விளையாட்டுக் கம் பெனி. தென் ஆப்பிரிக்கா வுக்குக் கிரிக்கெட் விளை யாடப் போகிறது. தென் னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கில ஏட்டில் கார்ட்டூன் ஒன்று வெளி வந்துள்ளது. பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஜோனாதன் ஷபிரோ என் பவர் அதை வரைந்துள் ளார்.

விநாயகர் ஒரு கையில் கிரிக்கெட் மட்டை; இன் னொரு கையில் நிறைய பணம்; அந்த விநாயகர் சிலை முன் தெ. ஆப்பிரிக் காவின் கிரிக்கெட் குழு பொறுப்பாளர் ஹாரூன் வேஸ்ட் என்பவரைப் பலி கொடுப்பது போன்ற கார்ட்டூன் அது!

இதைப் பார்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்துக்கள் கொதித் துப் போய் விட்டார்களாம்.

இதில் கொதித்தெழ என்ன இருக்கிறது? இந்த விநாயகன் பிறப்பே ஆபா சம்! பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் விநாயகன் என்று சொல்லும் பொழுது வராத கோபம் இப்பொழுது மட்டும் வருவது ஏன்?

சூரபத்பனுக்கும் சுப்பிர மணியனுக்கும் சண்டை நடந்தபோது தன் சகோ தரனுக்காக வல்லபை என்ற அசுரப் பெண்ணின் குறியி லிருந்து படை வீரர்கள் வந்து கொண்டே இருந் தனர், என்றறிந்து தன் துதிக்கையை வல்லபை யின் குறியில் வைத்து அடைத்தான் என்று எழுதி வைத்து இருப்பதைக் கண்டு வராத கோபம் இப் பொழுது மட்டும் வரு வானேன்?

(பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்துள்ள இந்த விநாய கருக்கு வல்லபைக் கணபதி என்று பெயர் மத்தூர் கோயி லில் இன்றும் காணலாம்.)

கார்கில் பிள்ளையார் என்று கூறி பிள்ளையாரின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தபோது, கிரிக்கெட் பிள்ளையார் என்று சொல்லி விநாயகன் கையில் கிரிக் கெட் மட்டையைக் கொடுத்து ஊர்வலம் வந்தபோது வராத கோபம். இப்பொழுது மட்டும் எங்கிருந்து குதித்த தாம்?

கோபப்படுவதைவிட வெட்கப்படுவதற்கு இன் னும் எத்தனை எத்த னையோ இந்த விநாய கனைப் பொறுத்து உண்டு.

அம்மாவைப் போல் தனக்கு ஒரு பெண் வேண் டும் கல்யாணம் செய்து கொள்ள என்று கேட்டவன் என்று எழுதி வைத்துள் ளனரே எவ்வளவு கோவலம் - ஆபாசம்!
தாயா, தாராமா?

விநாயகர் சமுத்திர ஸ்நானம் செய்யப் போனா ராம். அப்பொழுது கட லையே உறிஞ்சி விட்டாராம். பின் அதை சிறு நீராகக் கழித்தாராம். அதிலிருந்து தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறதாம்! (கடவுள் சமாச்சாரம் என்றாலே நல்ல தமாஷ் தான்!)

கடைசியாக ஒன்று ;விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறோம் என்ற பெய ரில் அந்த பொம்மைகளை உதைத்து அடித்துத் துவைக்கிறார்களே பக்தர்கள் - அப்பொழுது ஏன் கோபம் குமுறிக் கொண்டு வரவில்லையாம்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்குவதா?


அன்று நவோதயா கல்வியை எதிர்த்ததுபோல

இன்றும் தமிழ்நாடு சும்மா இராமல் பொங்கி எழும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

மத்திய அரசும் - தனியாரும் இணைந்து மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளை தொடங்குவது - மாநில அரசுகளின் உரிமையில் தலையிடு வதாகும். முன்பு பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட நவோதயா கல்வித் திட்டத்தை எதிர்த்தது போல இந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு எதிர்க்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிர மித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் - அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் ஏற்படும் விபரீதம்

கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை - நெருக்கடி கால நிலையில் - ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் (State to Concurrent List) கொண்டு போய் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.

இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழைய படி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக் காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை - மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வரு கின்றன. ஏற்கெனவே உச்சநீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!

இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!

மாநிலங்கள் வெறும் நகராட்சிகளா?

மாநிலங்களின் உரிமைகள் - அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத் தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கைமணி!

மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?

கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் - வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private - Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?

அன்றே நவோதயாவை எதிர்த்தோமே!

கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right - Right to Education) என்று அரச மைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்திய கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!

இதனை தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.

முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது - இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.11.2013

தமிழ் ஓவியா said...


தொல்லைவரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


இந்தியாவின் தோல்வி

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என்று டெசோ தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம் - இப்பொழுது பிரதமரின் நம்பகத் தன்மையைக் கேள்விக் குறியாக்கி விட்டது.

பிரதமர் கருத்து மதிக்கப்படவில்லையா? அவர் பின்னணியில் அந்த உணர்வை வீழ்த்தும் சக்தி எது என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன -என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்தப் பிரச்சினையில் திராவிடர் இயக்கக் கட்சிகள் கூறும் கருத்து மறுபுறம் இருக்கட்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு ஜி.கே. வாசன் தெரிவித்த கருத்துகளும், அகில இந்திய காங்கிரசின் உயர் மட்டக் குழுவால், நிராகரிக்கப்பட்டு விட்டன.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், மதிக்கத் தயாராக இல்லை, அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை.

இதன் விளைவு என்ன? திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் டெசோ தலைவரும் தி.மு.க. தலைவரு மான மானமிகு கலைஞர் அவர்களும் வெளியிட்ட கருத்தின்படி இதற்குரிய கடுமையான விலையைக் காங்கிரஸ் கொடுத்தே தீர வேண்டும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கை கழுவி விட்டது என்பது கடைசியாகவும் உறுதி செய்யப் பட்டு விட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இது ஒரு புறம் இருந்தாலும், இந்திய ஆட்சி பற்றிய பொது மதிப்பீடு என்னவாக இருக்க முடியும்?

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை (Genocide) என்று பகிரங்கமாக சொன்னவர் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (16.8.1983).

அவரைத் தொடர்ந்து பிரதமராக வந்த ராஜீவ்காந்தியும், இனப் படுகொலை என்ற கருத்தை திராவிடர் கழகத் தலைவரிடம் சொன்ன துண்டு (டில்லி - 2.6.1990).

ஒரு நாட்டில் இன படுகொலை நடந்தால், அதில் தலையிடவும், கண்டிக்கவும் எந்த ஒரு நாட்டுக்கும் உரிமையுண்டு என்ற அய்.நா.வின் எழுதப்பட்ட எழுத்துக்கு உகந்த வகையிலும், நடந்திடவில்லை இந்திய அரசு.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப தால் இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தேவை யானவற்றை வாதாடிப் பெற முடியும் என்பது ஒப்புக்குச் சப்பாணி நியாயக் கற்பிப்பு!

இதுவரை, இந்த வகையில் இந்தியா நடந்து கொண்டதற்குக் கிடைத்த பலன் என்ன?

1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதா? - அதில் கண்டுள்ள எந்த சரத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது?

வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு நடந்ததா? தமிழுக்குரிய அரசு மொழித் தகுதி தரப்பட்டதா? இவை செய்யப்படாத நிலையில், இலங்கை அரசைத் தட்டிக் கேட்கும் தைரியம் இந்தியாவுக்கு இருந்ததா?

ராஜ தந்திர நிலையில், இந்தியா வெற்றி பெற்றுள்ளதா? இந்தியா - சீனா யுத்தத்தின் போதும் சரி, இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போதும் சரி, இலங்கை இந்தியாவுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லையா?

இப்பொழுதுகூட இந்தியாவின் எதிர் வரிசை யில் இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானோடு தானே தோளில் கை போட்டுத் திரிகிறார் ராஜபக்சே.

இந்தியாவின் எதிரி நாடுகள் உள்பட இந்தியா வையும் கையில் போட்டுக் கொண்டு சாமர்த்திய மாகக் காயை நகர்த்துகிறதே சுண்டைக்காய் நாடான இலங்கை; இந்த வகையில் வெற்றி பெற்றது இந்தியாவின் ராஜ தந்திரமா? இலங்கை அரசின் ராஜ தந்திரமா?

எல்லா வகையிலும் இந்தப் பிரச்சினையில் இந்தியா முழுத் தோல்வியை அடைந்து விட்டது என்பதுதான் அறிவு நாணயத்தோடு ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

தமிழ் ஓவியா said...


ஏழு மொழிகள்

1. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

2. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்
- தந்தை பெரியார்

3. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

6. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

7. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
- தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...

தெரியவில்லை மகனே!

மகன்: பூமியிலே கண்டம் அய்ந்து, மதங்கள் கோடி என்று பாரதி பாடியிருக்கிறான் இல்லையா? அப்பா.

அப்பா: ஆமாம் மகனே!

மகன்: இருக்கிற மதங்களிலேயே மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் இந்து மதம் தான் என்று இந்து மதத் தலைவர்கள் பறைசாற்றுகிறார் கள் இல்லையா அப்பா...!

அப்பா: ஆமாம் மகனே.

மகன்: அப்படி யென்றால் அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதற்காக ஏதோ பிரளயம் ஏற்பட்டு விட்டதைப் போல இந்து மதவாதிகள் ஆகாயத்திற்கும் பூமிக்கும் தாவிக் குதிக்கிறார்களே! அது ஏன் அப்பா?

அப்பா: தெரியவில்லை மகனே. உண்மையான தெய்வம் எதிரே இருக்கும் கல்லிலே இல்லை; அது உங்கள் தோள் வலிமையிலேஇருக்கிறது!

தமிழ் ஓவியா said...

ரோம் நகரம் எரிந்த போது பிடில் வாசித்த நீரோவைப் போலவே, இந்த உலகமும் கொடுமை நிறைந்ததாகவே இருக்கிறது! நிலவையும் நிழலையும் பிணைத்து வைக்கிறது, கற்களை வழிபடுவதற்காக மலர்களை உண்டாக்குகிறது. உண்மையிலேயே கற்களல்லவா கற்களை வழிபட வேண்டும்!

- வி.ச. காண்டேகர், தகவல்: புலவர். வெற்றியழகன்

தமிழ் ஓவியா said...

குற்றால நாதருக்கு தீராத தலைவலியாம்குற்றாலத்தில் உள்ள குற்றால நாத சாமிக்கு தினமும் காலையில் குளிப் பாட்டும்பொழுது கொஞ்சம் மூலிகைத் தைலம் வைத்து தான் குளிப்பாட்டுவார்கள். காரணம் அவருக்குத் தலைவலியாம்!

தகவல்: இரா.பேச்சிமுத்து, குற்றாலம் (நெல்லை)

தமிழ் ஓவியா said...


சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங் களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள் விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங் களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர்.

நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன்.

இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன

என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.

நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி,

பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?

மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!

நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

தமிழ் ஓவியா said...


உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற
காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்
எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு
ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால்
அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே
ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங் காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம
அறிவுக்குப் பொருத்தம்
ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!

ஆண்: கோழி யில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொறிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே
பேசுவது தப்பித முங்க

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும்
முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுர மும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப் பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற் றுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும்-நீதிபதி விதித்த அபராதமும்! தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து


சென்னை, நவ.1- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர் பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த அபராதம் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:

கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி நடைபெற்றதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி நாகமுத்து அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறாரே?

கலைஞர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலை வராக ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிதான் பணியில் இருந்து வருகிறார். அவருக்கு உயர்நீதிமன்றம் அப ராதம் விதித்திருப்பது என்பது அரசுக்கே அவ மானத்தைத் தரக்கூடிய ஒரு தீர்ப்பாகும்.

நீதியரசர் தனது தீர்ப்பில், இந்த வழக்கு ஓராண் டாக நிலுவையில் உள்ளது. பலமுறை விசார ணைக்கு வந்தும், தேர்வு வாரியத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. இத னால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளார்.

தேர்வு வாரியத் தலைவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது, தனிப்பட்ட ஒரு அதிகாரிக்குக் கண்டனம் அல்ல, அ.தி.மு.க. அரசுக்கே விதிக்கப் பட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்.

இந்த வழக்கிலே மாத்திரமல்ல; இரண்டு நாட் களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயச்சந் திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பிலேகூட தங்கள் வேதனை யைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.

அதை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக்கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரி வாளைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறை பாடுகளைக் களைய காவல்துறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைக் காவல்துறையினர் சரி யாகப் பயன்படுத்தவில்லை.

இந்த வழக்கில் காவல்துறையினரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப் பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரிய வில்லை. கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள் நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய் துள்ளனர். காவல்துறையினரின் விசாரணை முழு வதும் வீணாகி விட்டது. உயர்நீதிமன்றம் வைத் திருந்த நம்பிக்கையை காவல்துறையினர் தகர்த்து விட்டனர்.

தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க காவல்துறையினர் தவறிவிட்டனர். காவல்துறையினர் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணரவேண்டும். விசாரணையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது.

இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம் என்று காவல்துறைபற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தால் உடனே காவல்துறைக்குப் பொறுப் பேற்றுள்ள மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை கொடுத் திருப்பார்கள். ஆனால் இப்போது?

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


பிரபாகரன் மகள் என சந்தேகித்து இசைப்பிரியாவை கைது செய்யும் காட்சிகள்... புதிய வீடியோ வெளியீடு!


லண்டன், நவ.1 இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் பட்டு பின்னர் பாலியல் வன்முறைக்கு ஆளாக் கப்பட்டு கொலை செய் யப்பட்ட தமிழீழத் தேசிய தொலைக்காட் சியின் செய்தி வாசிப்பா ளரான இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி வெளி யிட்டுள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தி னரால் இசைப்பிரியா படுகொலை செய்யப் பட்டு கிடக்கும் காட்சி கள் ஏற்கெனவே வெளி யாகியிருந்தன. ஆனால் இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட் டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் இலங்கை ராணுவத்தின ரால் இசைப்பிரியா உயி ரோடு கைது செய்யப் பட்ட வீடியோ ஆதா ரத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக் காட்சி நேற்று வெளி யிட்டுள்ளது. கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக் குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தி னர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இலங்கை ராணுவத் தினர் 6 பேர் இசைப் பிரியாவை பிடித்து வரு வதும் அப்போது அவர் கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறு வதும் அதற்கு அவர் அய்யோ அது நானில்லை என்று அழுவதும் அந்த காட்சியில் பதிவாகி யுள்ளது.

இதன் மூலம் இசைப் பிரியா இலங்கை ராணு வத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு படு கொலை செய்யப்பட் டுள்ளது உறுதியாகியுள் ளது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலை யிலும், துணி அகற்றப் பட்ட நிலையிலும் இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கெனவே வெளியாகி யிருந்தன என்பது குறிப் பிடத்தக்கது.

இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது அந்நாட்டுக்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

விதவையர்க்கும் மரியாதை!


- கர்நாடகத்தில் ஓர் மாற்றம்!

கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழையவே அனுமதியில்லாத நம் நாட்டில் விதவைப் பெண்களான இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி என இருவர் அர்ச்சகராகியுள்ளனர். மங்களூர் குத்ரோலியில் இருக்கும் கோகர்னாதேஸ்வரர் கோவிலில் இரண்டு விதவைப் பெண்கள் தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர். கோவிலுக்குள் வந்ததும் பாரம்பரிய முறைப்படி மேளதாள வரவேற்பு அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான பெருமை மேனாள் மத்திய நிதி அமைச்சரும், தற்போது கோவிலின் ஆலோசனைக் குழுத் தலைவருமான ஜனார்த்தன பூஜாரியைச் சாரும்.

கோவிலுக்குப் பக்கத்து ஊரான பன்னூர் கிராமத்திலிருந்து வரும் இந்திராசாந்தி திருமணமான சிறிது காலத்திலேயே கணவனை இழந்து சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளானவர். இவரை அழைத்த கோவில் நிர்வாகம், கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னபோது பயந்தவர், பின்பு, சமூகத்தில் விதவைப் பெண்கள் மீதான மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும், தான் செய்யும் பூஜையை ஏற்றுக்கொண்ட பக்தர்கள், தன்னிடம் தீர்த்தம், பூ, பிரசாதம் வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூரித்துள்ளார்.

இது குறித்து ஜனார்த்தன பூஜாரி,

எந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக்கொண்டு இந்தக் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாம். விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கோவில் நிர்வாகத்தின் சார்பாக விதவைகளுக்கு மறுமணமும் இலவசமாக செய்து வைக்கிறோம். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில்தான் பிறந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மாறிவரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களை பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில், அவர்கள் கணவனை இழந்துவிட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூடநம்பிக்கையின் அடையாளம். இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்றும் கூறியுள்ளார் பூஜாரி.

விதவைப் பெண்கள் அர்ச்சகர் நியமனத்தை கர்நாடகாவிலுள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

வறுமையில் முதலிடம் மோடியின் குஜராத்


நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் பேர் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கிக் கொண்டு உள்ளனர். மோடியைப் போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்!

- ஹர்ஷ் மந்திர், அய்.ஏ.எஸ்

தமிழ் ஓவியா said...

ராகுல் காந்திககு சில கேள்விகள்


எனது பாட்டியைக் கொன்ற பேயந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் மீதான கோபம் தணிய எனக்கு சுமார் 15 ஆண்டுகள் ஆனது. பஞ்சாப் மக்கள் அப்போது கோபமாக இருந்தார்கள். இப்போது தணிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்தார். திரும்பிப் போவதற்கு முன் என்னைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் கொன்றிருப்பேன். அப்போது கோபமோ கோபம். இப்போது கோபம் தணிந்துவிட்டதாகக் கூறி என்னைத் தழுவிக் கொண்டார். கோபம் தணிய பல ஆண்டுகள் ஆகிறது. அதைத் தூண்டி விட ஒரு நிமிடம் போதும். கோபத்தை மறக்கவும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் பல நாட்கள் ஆகின்றன. இப்படிப் பேசியிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

இவரது உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கொலை என்பது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. கொலைகளை யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சில கேள்விகளும் நம்மிடம் உள்ளன. இவரது தந்தை ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் ஈழத் தமிழர்களில் சிலர் என்பதால் அவர்கள் மீதான கோபம் இன்னும் ராகுலிடம் தணியவில்லையே, ஏன்? 22 ஆண்டுகள் கடந்தும் கூட அந்தக் கோபம் நீடிப்பது ஏன்? ஒரு சிலர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே அழிக்க சிங்களர் அரசுக்குத் துணைபோவது சரியா? 2009 ஆம் ஆண்டில் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்கு ராகுலின் கட்சி ஆளும் இந்திய அரசு துணைபோனதா? இல்லையா? இதற்குப் பெயர் பழிவாங்கும் நடவடிக்கை அல்லவா? 2009க்குப் பின் நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது சரியா? அவரது தலைமையை ஏற்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லுவது என்ற முடிவில் இன்னும் மாற்றமில்லையே ஏன்?

அமைதிப் படை என்கிற பெயரில் ஈழத்தில் தமிழர்களை உங்கள் அப்பா ராஜீவின் இந்திய ராணுவம் கொன்றது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் கோபம் கொண்டார்கள் என்பதை அறிவீர்களா? இவ்வளவு நடந்த பின்னும் தமிழ்நாடு உங்கள் மீது கோபம் கொள்ளாமல் இன்னும் கோரிக்கை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறதே, இதனை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? உங்கள் தந்தையைக் கொன்றதற்கு உங்கள் குடும்பத்தை விட அதிகம் அழுதவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ராகுல்? 1991 வரை ஈழத்தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவி வந்த தமிழ்நாடு, உங்கள் தந்தையைக் கொன்றதையடுத்து, அவர்கள்மீது ஒருவித கண்டிப்புடனே நடந்ததே, நீங்கள் அறிவீர்களா?

பஞ்சாபியர்களின் கோபம் தணிக்க மன்மோகன் சிங்கை 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் உட்கார வைத்தீர்கள். இன்னும் தங்களிடம் நேசம் காட்டும் தமிழர்கள்மீது உங்களது பாசத்தை எப்போது காட்டுவீர்கள் ராகுல்?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

நூல்

நூல்: தமிழர் தலைவரின் அரசியல் பயணம் |

ஆசிரியர்: கி. வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,

84/1,(50) ஈ.வெ.கி.சம்பத் சாலை, சென்னை-_7. (: 044_26618161

பக்கங்கள்: 64 | விலை: ரூ.35/_

பத்து வயது அடையும் முன்பே பெரியார் கொள்கையைப் பரப்பத் தொடங்கி, 80 வயதிலும் அதே தொண்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அரசியல், சமூக நீதிப் பயணத்தை திரும்பிப் பார்க்கும் நூல்! துக்ளக் இதழில் இந்த ஆண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய தொடர் கட்டுரைகளுடன், 1982ஆம் ஆண்டு சோ அவர்களால் துருவித் துருவிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் அளித்த விளக்கமான நேர்காணலும், 1985ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் பற்றி வெளிவந்த கட்டுரைச் செய்திக்கு தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்த மறுப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மாற்றுக் கருத்துடைய இதழ் ஒன்றில் இடம் பெற்ற பதிவுகளின் தொகுப்பு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொடுக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆவணப்படம்

அஃறிணைகள்
இயக்கம் : இளங்கோவன்
செல்பேசி 9789725197

திருநங்கைகளுக்கும் மனம் உண்டு, அறிவாற்றல், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ள படம். ஆண் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளால் மாறி திருநங்கையாகும் விதம் மனநல மருத்துவரின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.

அரவணைக்க வேண்டிய பெற்றோர் காட்டும் வெறுப்பு, சமூகம் பார்க்கும் பார்வை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வரும் வழிமுறைகள், விளக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களே கதாபாத்திரங்களாக தோன்றி இயல்பு நிலையை வெளிப்படுத்தி காண்போர் நெஞ்சையும் கருத்தையும் நிறைத்து திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரத்தை - மதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உணர்வுகளால் மாற்றம் பெற்று வரும் ஆண்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கியுள்ள படம்.

தமிழ் ஓவியா said...


சட்டத்தை மதிக்கும் நீதிபதி

இது மதச்சார்பற்ற நீதிமன்றம். இங்கு இந்துமதப் பண்டிகையான ஆயுதபூஜைக்கான செலவை யார் ஏற்பது? நீதிமன்றச் செலவுகளுக்கு அரசு கொடுக்கும் பணத்தில் பூஜை நடத்துவது சட்ட விரோதம். ஊழியர்கள் தங்கள் சொந்தச் செலவில் கொண்டாடினால் அதனால் ஏற்படும் செலவினங்களை அவர்கள் எப்படி ஈடுகட்டுவார்கள். அது தவறு செய்ய அவர்களைத் தூண்டிவிடும் செயலாக மாறிவிடும். எனவே, இந்த பூஜைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நான் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது. இப்படிச் சொல்லி இருப்பவர் ஒரு நீதிபதி. தமிழ்நாட்டில் உள்ளவர் அல்ல; கர்நாடக மாநிலத்தில் இருப்பவர். அவர் பெயர் முடிகவுடா. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வருபவர் இவர்தான். இந்தியாவின் அரசியல் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால், இங்கே அரசு இயந்திரங்கள் எல்லாம் இந்து மதச் சாயம் பூசிக்கொள்கின்றன. கொஞ்சமும் கூச்சமில்லாமல் தமது சொந்த மத நம்பிக்கையை எல்லோருக்கும் பொதுவான அரசின் மீது திணிக்கிறார்கள்.

அரசு ஆணைகள் எல்லாம் அவமதிக்கப்படுகின்றன. அரசை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்; அதிகாரிகள் அலுவலகங்களில் பூஜை போடுகிறார்கள். நீதிபதிகளே தங்களின் அலுவலகத்தில் மதக் கடவுள் படங்களை வைத்துக் கொள்கிறார்கள். மத விழாக்களுக்குச் செல்கிறார்கள்; மதவாதிகளுக்கு அடி பணிகிறார்கள். இத்தகைய நேர்மையில்லாத சூழலில் நீதியரசர் முடிகவுடாவின் நேர்மைக்கு ஒரு வணக்கம் சொல்வோம்; முடிகவுடா அவர்களுக்கு மதச்சார்பற்ற மனிதநேயர் என்ற மகுடம் சூட்டுவோம்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


வியாழனைவிட எட்டு மடங்கு பெரிய கோளினைக் கண்டுபிடித்து அதற்கு எம்.ஓ.எ.2011_பி.எல் என்று பெயரிட்டுள்ளனர்.

நியூசிலாந்து நாட்டின் பெண் எழுத்தாளர் எலியனார் காட்டன் (வயது 28) எழுதிய தி லூமினரீஸ் என்ற நாவலுக்கு புக்கர் விருது (2013) வழங்கப்பட உள்ளது.

இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்படுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லைஃபை என்ற புதிய தொழில் நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் ஹவாயில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கு பி.எஸ்.ஓ.ஜெ 318.5_22 என்று பெயரிட்டுள்ளனர்.

செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை அய்.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் நுழைந்த எம்வி சீமேன் கார்டு ஓகியோ என்ற ரோந்துக் கப்பலினை அக்டோபர் 12 அன்று இந்தியக் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

துடைப்பத்தை எடுத்த பெண்ணும் துடைப்பத்தால் அடிபட்ட பெண்ணும்!

உலக அதிசயங்களுள் ஒன்றாக ஆக்ராவை அலங்கரிக்கும் தாஜ்மகால் கருதப்படுகிறது.

அமெரிக்கப் பெண்மணியின் பெயர் எரின் நயிட் (30) தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்று பறந்தோடி வந்தார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தவருக்கு ஒரு அதிர்ச்சி!எங்குப் பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் அசுத்தம் _ மூக்கைத் துளைத்தன.

வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வரத் தயங்குவதற்கு முக்கிய இடம் வகிப்பது இந்த அசுத்தங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் போக்கும் இந்தக் கொசுக்களும்தான்.

என்ன இருந்தாலும் இந்தப் பூமிக்குப் புண்ணிய பூமி என்ற பெயர் மட்டும் இன்று வரை தள்ளாடாமல் நிற்கிறது.

அமெரிக்கப் பெண் சாதாரணமானவரும் அல்லர். உளவியல் மருத்துவரும்கூட!
அழகிய ஆக்ரா அழுக்குப் போர்வை போர்த்திக் கொண்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. இதைவிடக் கூடாது; இந்த நகரைச் சுத்தப்படுத்தியே தீருவேன் என்று கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ஆக்ராவின் வீதியில் இறங்கிவிட்டார். தாஜ்மகாலையும் பெருக்க ஆரம்பித்துவிட்டார்.

தாஜ்மகாலாக இருந்ததால் தப்பித்தோம். இதுவே இந்துக் கோயிலாக இருந்திருந்தால், என்னதான் எலிப்புழுக்காக நாற்றமும், நாய் விட்டைப் போடும் கக்கூசாக இருந்தாலும் சரி, ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்யும் வேலையில் இறங்க முடியுமா? முதலில் கோவில் வளாகத்துக்குள்தான் காலடி எடுத்து வைக்கவும் முடியுமா?

வேற்று மதக்காரர்கள் உள்ளே நுழையக் கூடாது என்ற எச்சரிக்கை _ கோவிலின் நுழைவு வாயிலிலேயே கால்களை இயங்காது ஆக்கிவிடுமே.

இதற்கு விளக்கம் வேண்டுமானால் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு நாம் பயணிக்க வேண்டும்.

பமீலா கே ஃபிளிக் (28) என்ற பெண்மணி ஒருவர். அவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்தான்.

வாரணாசியில் வந்து தங்கிய போது அணில் யாதவ் என்ற பொறியாளருடன் காதல் கொண்டு திருமணமும் செய்து கொண்டார். அதற்காக இந்து மதத்திற்கும் மாறினார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வர் லிங்கராஜ் கோவிலுக்கு அந்த இணையர்கள் வந்தனர்.

அவ்வளவுதான். ஒரே களேபரம்தான். உள்ளே நுழையாதே! என்ற குரல்.

மதம் மாறிவிட்டோம் என்று ஆதாரங்களைக் காட்டியும் பயனில்லை. வார்த்தைகள் முற்றி இணையர்கள் அடி உதை பட்டதுதான் மிச்சம்.

இதனைச் சற்றும் எதிர்பாராத மதம் மாறிய அந்தப் பெண்மணி _ காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். புகார் மனு பெற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது.

இந்தச் செய்தி பரபரப்பாக ஏடுகளில் வெளிவரவே, அவசர அவசரமாக காவல்துறை புகாரைப் பெற்றுக் கொண்டார்கள். பெயர் அளவுக்கு நடந்த சடங்காச்சாரம் அவ்வளவுதான்.

கோவில் நிர்வாகி ராம்காந்த் மிஸ்ரா. அவரிடமும் அந்தப் பிரச்சினை முட்டியது. அவர் மிஸ்ராவாயிற்றே!

நெற்றியில் திலகமிட்டுக் கொண்டாலும் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா? என்று தனது கோணல் திருவாயால் மொழிந்தார்.

பூரி சங்கராச்சாரியார் நிஷ்ச்சாலனந்தா சரஸ்வதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று அவரிடம் அனுப்பி வைத்தனர்.

அங்கும்தான் சென்று பார்ப்போமே! சென்றனர். பெரியவாள் தன் பெரிய வாயைத் திறந்தார்.

வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், வழிபாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மாறுபடுகின்றன. இந்து சனாதன தர்மத்தின்படி கோவில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது ஜாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன.

வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது. யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாறலாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும், வரன்முறைகளும் உள்ளன. இந்துக் கடவுள்கள் மீது உண்மையான பக்தியும், நம்பிக்கையும் ஒருவன் கொண்டிருப்பானேயானால், தன் மீது விதிக்கப்படும் இந்த ஜாதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும் என்று இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார் பெரியவாள்.

வெறுத்தே போனார் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி. இதற்காகவா இந்து மதத்துக்கு மாறினேன் என்று புலம்பினார்.

நம் நாட்டு மொழியில் சொல்ல வேண்டுமானால் என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். (ஆதாரம்: ஜூனியர் விகடன் 23.11.2005)

ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ஆக்ரா வருகிறார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்கிறார். தாஜ்மகாலையும் ஆக்ராவையும் சுத்தப்படுத்த துடைப்பத்தைக் கையில் எடுக்கிறார்.

இன்னொரு அமெரிக்கப் பெண்மணி இந்தியா வருகிறார். இந்துவாகவும் மதம் மாறுகிறார். இந்து மதக் கணவருடன் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தால் துடைப்ப அடி விழுகிறது.

இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!

தமிழ் ஓவியா said...

கவிதை : குறி அறுத்தேன்


மாதவம் ஏதும் செய்யவில்லை நான் குறி அறுத்து
குருதியில் நனைந்து
மரணம் கடந்து
மங்கையானேன்
கருவறை உனக்கில்லை
நீ பெண்ணில்லை என்றீர்கள்
நல்லது

ஆண்மையை அறுத்தெறிந்ததால் சந்ததிக்குச் சமாதி கட்டிய
பட்டுப்போன ஒற்றை மரம் நீ


விழுதுகள் இல்லை உனக்கு
வேர்கள் உள்ளவரை மட்டுமே
பூமி உனைத் தாங்கும் என்றீர்கள்
நல்லது

நீங்கள் கழிக்கும் எச்சங்களை ஜாதி வெறியும் மதவெறியும் கொண்டு
நீங்கள் விருட்சமாக்க
விதைபோட்ட
உங்கள் மிச்சங்களை
சிசுவாக சுமக்கிற
கருவறை எனக்கு வேண்டாம்
உங்கள் ஏற்றத்தாழ்வு
எச்சங்களைச் சுமந்ததால்
பாவம், அவள் கருவறை
கழிவறை ஆனது

நல்லவேளை
பிறப்பால் நான் பெண்ணில்லை
என்னைப் பெண்ணாக
நீங்கள் ஏற்க மறுத்ததே
எனக்குக் கிடைத்த விடுதலைபெண்மைக்கு நீங்கள் வகுத்துள்ள அடிமை இலக்கணங்களை
நான் வாசிப்பதில்லை
என்னை இயற்கையின் பிழை என்று தாராளமாய் சொல்லிக்கொள்ளுங்கள்
நான் யார் என்பதை
நானே அறிவேன்

மதம் மறந்து ஜாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி வாழும் வாழ்க்கையை
வாழமுடியுமா உங்களால்?

கருவில் சுமக்காமலேயே
தாயாக முடியுமா
உங்களால்?

மார்முட்டிப் பசியாறாமலேயே
மகளாக முடியுமா உங்களால்?

என்னால் முடியும்

உங்களின் ஆணாதிக்கக் குறியை
அறுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் யார் என்பதை அப்போது நீங்கள் அறிவீர்கள்
பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று.

-

- கல்கி சுப்ரமணியம்
தனது முகநூலில் எழுதியது

தமிழ் ஓவியா said...

கருத்து


எதிர்காலத்தில் நான் அரசியல்வாதியாக வேண்டும் என விரும்புகிறேன். பாகிஸ்தானில் மாற்றம் வரவேண்டும். கட்டாயக் கல்வி கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். பாகிஸ்தான் மக்களிடம் அமைதி, சுதந்திரம் அனைத்து உரிமைகள் பெறும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக மலரும். ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். எங்கள் நாட்டு சமுதாயத்திடம் இருக்கும் மோசமான சிந்தனை, அதை யாராவது வந்து செய்யட்டும். அதுவரை நாம் காத்திருக்கலாம்.

- மலாலா யூசுஃப்
(தலிபான்களுக்கு எதிராகப் போராடி சுடப்பட பாகிஸ்தான் சிறுமி)

மருத்துவமனையின் தரம் என்பது நோயாளியின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது. மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழக்கிறார் என்றால் அதற்கு நோயை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. மருத்துவமனையில் நிலவும் நோய் பரவும் சூழலும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோருக்கு இது தெரியாது.

- டாக்டர் கிர்தர் ஜே கியானி,
தலைமை இயக்குநர், இந்திய மருத்துவமனை உரிமையாளர் சங்கம்.

பெற்றோர்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்ற பெயரில் பணம், வேலையை மட்டுமே முதன்மையாக நினைக்கின்றனர். எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும். எப்படியாவது நல்ல வேலை பெற வேண்டும் என சொல்கிறார்களே தவிர எப்படி உழைக்க வேண்டும், உருவாக வேண்டும் என சொல்லித் தருவதில்லை.

- டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், மனநல ஆலோசகர்

இந்தியாவில் சராசரி எடையைக் காட்டிலும் குறைந்த அளவிலான எடை கொண்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நகரிலும் அதிகளவில் உள்ளனர். 40 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற நிலையில் உள்ளனர். சமூகத்தில் சமத்துவம் இல்லாதது குறைந்த அளவிலான ஊட்டச் சத்து, கல்வி, பெண்களுக்கான சமூக நிலை ஆகியவையே, தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்குக் காரணமாக உள்ளன.

- பார்பெல் டைக்மேன், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு அமைப்பு

தமிழ் ஓவியா said...

எனது பாதை தொடங்கிய இடம் - நடிகர் கமல்ஹாசன்


நீங்க ஒருத்தரோட முரண்பட்டீங்கன்னா அவன் சொல்றது தப்புன்னு நிரூபியுங்க. ஒருத்தரோட கருத்து தப்புன்னு நிரூபிக்க உயிரை எடுக்காதீங்க. பகுத்தறிவுவாதியான நரேந்திர தபேல்கர் மாதிரியான ஆட்கள் கொல்லப்படுவது, இந்தியாவுக்கே பெருத்த அவமானம். இத்தனை குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் நடுவிலே வட இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமிழ்நாட்டுக்கு இல்லைங்கிறதுல நான் மிகவும் பெருமைப்படுறேன்.***


நான் சுயமரியாதை இயக்கத்தோட உருவாக்கம். நான் பிறந்தது எங்கே? சுப்ரபாதம் என் காதில் ஒலிக்கிற சூழல்ல நான் பிறந்தேன். 10 வயசு வரைக்கும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பிரார்த்தனை பண்ணுவேன். என்னோட அப்பா, சித்தப்பா, அண்ணன் இவங்க மேல பெரியாரோட தாக்கம்தான் இதுக்குக் காரணம். அவங்க அவரைத் திட்டுவாங்க... விமர்சிப்பாங்க... அவரோட அறிவை எண்ணி உள்ளுக்குள் சிரிச்சிக்குவாங்க. ஆக, அவரோட எதிர் முகாமிலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தாங்க. நான் அந்த எதிர் முகாம்ல இருந்து வந்தவன்.

***

தபேல்கர் கொலை, நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்கலாம். ஆனால் அது நான் பேசவேண்டியதை பேசுவதிலிருந்து மாற்ற முடியாது. அதற்கு தமிழ்நாட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கே நிறைய விஷயங்கள் தவறாவும் இருக்கு. கூவம், அடையாறு உட்பட நிறைய விஷயங்கள் சரி செய்யப்படல. அற்புதங்கள்ல எனக்கு நம்பிக்கையில்லை. ஆனா எனக்கு மேஜிக் மேல நம்பிக்கையிருக்கு. ஏதோ ஒன்றை பார்க்கத் தவறும்போது அந்த மேஜிக் நடக்கும். சினிமா அப்படிப்பட்டதுதான். அந்த மேஜிக்கை சினிமா உருவாக்குது. யார் வேணும்னாலும் மேஜிக்கை நிகழ்த்தலாம். கற்றல் என்கிற மிக மெதுவான செயல்முறையால் மாறுதல் நிகழணும்.

***

ராமாயணம் புராணம். அதுல எல்லாம் கலந்து கிடக்கு. நான் சின்னப்பையனா கன்னியாகுமரி போயிருந்தப்ப, ஒரு ஜோடி மிகப்பெரிய காலடித் தடத்தைக் காட்டுனாங்க. அப்ப நான் பக்தி மார்க்கத்துல இருந்தேன். அவங்க இது ராமனோட காலடித் தடம்னு சொன்னாங்க. அது ரொம்ப பெரிசா இருந்ததால, ராமன் என்ன ராட்சஷனான்னு கேட்டேன். பகுத்தறிவுக்கான என்னோட பாதை அங்க தொடங்கிச்சு.

- நன்றி: ஃப்ரண்ட் லைன், அக்டோபர் 18, 2013

தமிழ் ஓவியா said...

இதுதான் பார்ப்பனீயம்!


திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். இதோ இது அண்மையில் நடந்தது. அக்டோபர் 18 அன்று பா.ஜ.க.வைச் சேர்ந்த நரவேட்டை மோடி சென்னை வந்திருந்தார். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் வடநாட்டு சோ-வான அருண்சோரியின் நூலை வெளியிட்டார். அதனைப் பெற்றுக்கொண்ட துக்ளக் சோ அய்யர்வாள் பிரதமர் மன்மோஹன் சிங்கைக் கேலி செய்து பேசினாராம். பேசியதோடு மன்மோஹன்சிங் எப்படி சோனியா, ராகுலுக்கு அடங்கி இருக்கிறார் என்பதை நடித்துக்காட்டினாராம். அதனை மோடி ரசித்தாராம்.

சரி, அவர் நடித்துக்காட்டட்டும். இதில் நமக்கொன்றும் கவலை இல்லை; ஆனால், சோனியா, ராகுலுக்குப் பணிவதை விடக் கேவலமாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் குனிவதையே மந்திரிமார்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனரே, இதனை இதுவரை எத்தனை முறை இந்த நடுநிலை(?) நாற்றமெடுக்கும் சோ கேலி செய்திருப்பார்? இந்த முறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப் பேற்கும் போதே அமைச்சர்கள் அந்தக் குனி குனிந்தனரே, எதிரே இந்த சோ உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாரே, அங்கு மட்டும் எப்படி இவரது நடுநிலை வேலை செய்யவில்லை.

மன்மோஹன் சிங்கைக் கேலி செய்யும் சோ அய்யர், தன்மானத்தை அடகுவைக்கும் அந்த மேடைக்கு முன்னே அமர்ந்திருக்கலாமா? தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே... ஒரு பார்ப்பன அம்மையாரின் காலில் ஒரு தமிழன் விழுவதை ரசிப்பது சோ பார்ப்பனரின் குணம். அது அந்த இனத்துக்கே உரிய தனிக்குணம்.

அடுத்து கருமாதிப் பத்திரிகைக்கு வருவோம். தினமல(ம்)ர் என்றொரு நாளிதழ் இருக்கிறது.இதற்கு தமிழ், தமிழினம், திராவிடம், ஈழத்தமிழர் என்றால் பேதியாகிவிடும். அவ்வளவு அலர்ஜி. தமிழின வளர்ச்சிக்குப் போராடுபவர்களை அவ்வளவு கேலி செய்யும். தி.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க,. என கொள்கை முழங்கும் கட்சிகளையெல்லாம் சிறுமைப்படுத்தும்.

ஆனால், இதனிடம் சில நாட்களுக்கு முன் ஒரு மாற்றம். கடந்த வாரம் ஜாதிக் கட்சிகளையெல்லாம் திரட்டி பா.ம.க. ராமதாஸ் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்தார்.இதுவரை சமூகநீதி, தமிழ், தமிழினம், ஈழத்தமிழர், பெரியார் என்றெல்லாம் பேசிவந்த ராமதாஸ், ஒரு தேர்தலில் காணாமல் போகவே ஜாதி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவ்வளவுதான் தினமல(ம்)ர் பா.ம.க.வின் செய்தியை படத்துடன் 6 பத்தியில் போடுகிறது.(தினமலர் சென்னை பதிப்பு, பக்.12, 23.10.2013).

சமூக நீதி பேசியவர் ஜாதிக் கட்சியானபின் அதனை ஊக்குவிக்கிறது. அதுவும் இன்னொரு ஜாதிக்கட்சிக்காரரைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கே இவ்வளவு பெரிய விளம்பரம். தமிழினத்தை மேலும் மேலும் பிரிக்கும் செயலைச் செய்யும் துரோகிகளுக்கு விளம்பரம் வழங்கும் வேலையை தினமல(ம்)ர் செய்யத் தொடங்கியுள்ளது.திராவிட இயக்கத்தால் ஒழிக்கப்பட்ட ஜாதிவெறியை மீண்டும் உயிர்ப்பிக்கும் செயலுக்கு ஊக்கம் கொடுக்கிறது.

தமிழர்களே...ஆரியத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

புதுப்பா


காசா? கடவுளா?

காசியில் இருக்கும் கடவுளுக்கும்
காசினியில் வாழும் மனிதனுக்கும்
காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!
காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!

கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்
கண்டுகழிக்க மானுடக் கூட்டம்
காசிடம் கடவுள் தோற்கிறது
காசைத்தான் அதுகள் ஏற்கிறது (பிச்சையெடுத்தல்)

காசுபணம் பறிப்பதற் காகவே
கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்
விண்ணையும் மண்ணையும் காட்டியே
விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்

காசுபொருள் இருக்கும் கோவிலில்
கடல்போல் மனிதக் கூட்டம்
காசில்லா கோவில் என்றாலே
காணலையே மக்கள் நடமாட்டம்

- மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்