Search This Blog

29.10.13

தீபாவளி கொண்டாடும் தமிழா! உன் சிந்தனைக்குச் சில வினாக்கள்!! 1,2

தீபாவளி கொண்டாடும் தமிழா! உன் சிந்தனைக்குச் சில வினாக்கள்!! 


இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு மட்டுமா? அல்லது பல்வேறு கண்டங் களும், அவற்றில் அடங்கிய நாடுகளும் இணைந்த ஒருமித்த மொத்த உலகமா?
பூமி என்பது அனைத்துலகும் ஒருமித்தது என்றால், ரஷ்யாவில், ஜப்பானில், இங்கிலாந்தில், அமெரிக் காவில் இன்னபிற நாடுகளில் ஏன் இக்கருத்தும், கொள்கையும், இதற்கு ஆதாரமான தீபாவளியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? நம்பப்பட வில்லை? கொண்டாடப்படவில்லை?
ரஷ்யா, சீனா, சப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் நீங்கலாக, அனைத் துப் பிற நாடுகளும் நீங்கலாக தமிழ் நாட்டை-திராவிட நாட்டை- இந்தி யாவை மட்டும் பாயாகச் சுருட்டி னானோ?
உலகின் அனைத்துக் கண்டங்களையும் தன்னுள் அடக்கிய உலகப் பூமியை ஒட்டு மொத்தமாக இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால், இக்கதைக்கு ஆதாரமான விழா மட்டும் இந்தியாவுக்கும், இந்து மதத்திற்கும் மட்டும் சொந்தம் ஆவானேன்?
எங்கும் ஞாயிறு
இன்றும் கும்பகோணத்தில் இருக் கிற எனக்கு ஞாயிற்றுக்கிழமை என் றால், அமெரிக்காவில் இருக்கின்ற மருத்துவர் சோம இளங்கோவன் அவர் களுக்கும், இலண்டனில் இருக்கின்ற தமிழ்மணி அரங்க முருகையன் அவர் களுக்கும், குவைத்தில் இருக்கின்ற ச. செல்லப் பெருமாள் அவர்களுக்கும், மலேசியாவில் இருக்கின்ற நாராண திருவிடச் செல்வன் அவர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைதானே!
நாம் ஞாயிறு என்று தமிழில் சொல்வதை அவர்கள் Sunday என்று ஆங்கிலத்தில் சொல் கிறார்கள் வேறுபாடு இதுதானே ஒழிய பொருள் ஒன்றுதானே! இதில் ஒன்றும் எந்த மாற்றமும், வேறுபாடும் இல்லையே!
அனைத்து நாடுகளிலும் நேரம் மட்டுமே வேறுபடும்  என்பது பூகோள ரீதியான, அறிவியல் பூர்வமான தவிர்க்க முடியாத உண்மை என்பது யாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி ஆனால், தீபா வளிப் பண்டிகையும், அது தொடர்பான கருத்துகளும் உலகம் தழுவிய அளவில் அனுசரிக்கப்படவில்லையே! இதிலி ருந்து தீபாவளி பற்றிய கதை பொய்-புரட்டு-பித்தலாட்டம்-கற்பனை என்பது புலப்படவில்லையா?
கேவலம் ஞாயிற்றுக் கிழமைக்கு இருக்கிற ஒற்றுமையும், ஓர்மையும், மதிப் பும், மரியாதையும், சீர்மையும், சிறப்பும் பகவான் விஷ்ணுவுக்கு இல்லாமல் போய் விட்டதே!
ஏசு கிறிஸ்துவை முன்னிலைப் படுத்தியும், முதன்மைப் படுத்தியும், மய்யப்படுத்தியும், ஆதாரப்படுத்தியும் 2005-ஆம் ஆண்டு இன்று உலக முழுவதும் உலா வருவது போல, நமது காக்கும் கடவுள், உலக இரட்சகர், படிய ளக்கும் பரந்தாமன், மகா விஷ்ணுவை முன்னிலைப்படுத் தியும் ஆதாரப்படுத் தியும் ஏற்பட்ட தீபாவளி மட்டும் உலக உலா வராமைக்கு என்ன காரணம்? கதையும், கதைக்கு ஆதாரமான கருப்பொருளும் உண்மை அல்ல என்பது தானே யதார்த்தம்?
சரித்திரமா - அதிசயமா?
தீபாவளி என்பதும், அது பற்றிய காரணக் குறிப்புகளும் உலக வரலாற் றில் இடம் பெறுகின்ற-பெற்ற-பெற வேண்டிய சரித்திர வரலாற்றுச் சான்று செய்திகளா அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு தனி மதத்திற்கும், கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட புராணக் கற்பனை அதிசய அற்புதச் செய்தியா?
மகாவிஷ்ணுவின் தோன்றலாகிய (தமிழில்) கண்ணனோ அல்லது (வடமொழியில்) கிருஷ்ணனோ சரித்திர வரலாற்று நாயகர்களா? அல்லது அவர்கள் மாயாஜால வித்தைக்காரர் களான வெறும் வேடிக்கை அற்புத அவதாரப் புருஷர்களா?
வரலாற்று சரித்திர நாயகர்கள் என்றால் அது உண்மைச் செய்தி அவதாரப் புருஷர்கள் என்றால் அது கற்பனை கலந்த பொய்ச் செய்தி என்பதுதானே யதார்த்தம்? அக்பரும், பாபரும், அசோகனும், நெப்போலியனும், அலெக்சாண்டரும், ஏசுநாதரும், நபிகள் நாயகமும் சரித்திரப் புகழ் பெற்ற வர லாற்று நாயகர்கள் என்றிருக்க, கண் ணணும், கிருஷ்ணனும் கற்பனையில் வரையறுக்கப்பட்ட கட்டுக்கதை நாயகர் கள்தாமே?
பூமி வேறு - கடல் வேறா?
பூமியைப் பாயாகச் சுருட்டிய தீபாவளிப் பற்றிய அறிவிப்புகள் உலக வர லாற்றில் பதிந்த உண்மைச் செய்திகள் எனில், ஏன் இவ்விழாவும், இவ்விழா பற்றிய கருத்துகளும் அனைத்து நாட்டி னராலும், அனைத்து மொழியினராலும், அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? கொண்டாடப் படவில்லை?
இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டிய பூமியுடன் கடலுக்குள் புகுந்தான் என்று சொல்லுகிற ப(க்)த தமிழா! அந்தக் கடல் பூமியில் அல்லாது வேறு எங்கு இருந் தது? வேறு எங்கே இருக்க முடியும்?
கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, காடு, மேடு, பள்ளம், குன்று, மலை, சமவெளி ஆகிய அனைத்தும் ஒரு சேர அமைந்த முழுப் பகுதியே உலகம்-பூமிஎன்று கொள்ளப்பட்டிருக்க-சொல் லப்பட்டிருக்க பாயாகச் சுருட்டிய பூமி யோடு கடலில் புகுந்து ஒளிந்தான் இரண் யாட்சதன் என்றால், எந்தக் கடலில் எப்படிப் புகுந்தான்? எப்படிப் புக முடியும்?
பூமியை மீறிய கடல் ஒன்று ஆகாய அந்தரங்கத்தில் தொங்குகிறதோ! கடலையும் தன்னுள் உள்ளடக்கியது தானே பூமிஎன்பது?
கிறித்தவத்திலும் மடமை
அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித் துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப் பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற் றில் பதித்து நிறுவினார் என்பதும் தானே உண்மை!
உலகம் உருண்டை என்னும் அறிவுப் பூர்வமான-ஆக்க ரீதியான கலிலி யோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங் கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அறிவியல் ஆய்வ றிஞன் கலிலியோவை அடித்தே கொன் றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?
உலகமதம் என்ற நிலையைப் பெற்ற கிறித்தவ மதத்தின் யோக்கியதையே சந்தி சிரிக்க-ஊர் மதமான இந்து மதத் தின் யோக்கியதை எவ்வாறு இருக்கும்?
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இந்து மதம் ஆனாலும் அல்லது உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்து ஆதிக்கம் செலுத்தும் கிறித்தவ மதம் ஆனாலும், இசுலாமிய மதம் ஆனாலும் மதம் என்று வந்தால் அவை அனைத்தும் மடமையைப் பரப்பும் மூடச் சாதனங்களோ என்பது புலனாகிறது அல்லவா?

                         -------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்--"விடுதலை” 26-10-2013

**************************************************************************************எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? எல்லாமும் ஒன்றுதானே! பாம்புக்கு நச்சுத் தன்மை உண்டு என்கிறபோது, அதில் குட்டிப் பாம்பென்ன? குஞ்சுப் பாம்பென்ன? எல்லாமும் ஒன்றுதானே!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது என்றும், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்றும் தமிழ்ப் பெரும்புலவர் பேராசிரியர் சைவப் பெரியார் கா சுப்பிரமணி (பிள்ளை)யன், தாமெழுதிய தமிழர் சமயம் என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைப் பக்தத் தமிழா நீ அறிவாயா?

தீபாவளி என்பது வடநாட்டுக் குஜ ராத்தி மார்வாரிகளுக்குப் புத்தாண்டு புதுக்கணக்கு விழாவாகும் என்றும், தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக் கும் தமிழ் இலக்கியங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் பேராசிரியர் சைவத் தமிழ் அறிஞர் அ.கி பரந்தாமனார், தாமெழுதிய மதுரை நாயக்கர் வரலாறு என்னும் நூலில் எழுதி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ அறிவாயா? அதற்கு நீ அளிக்கும் விளக்கம்தான் யாது?

தீபாவளி சமண சமயப் பண் டிகை என்றும், பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்காலை தினமே தீபாவளிக்கு ஆதாரம் என்றும், தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும், நரகாசுரன் கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், தீபாவளி என்பதன் பொருள் (தீபம் விளக்கு ஆவளி வரிசை) விளக்கு வரிசை என்றும் முதுபெரும் வரலாற்று ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, தாமெழுதிய சமணமும், தமிழும் என்ற நூலில் வெளிப்படுத்தி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ படித்து அறிந்தது உண்டா?

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஒவ்வொரு மதத்தோடும் தமிழை இணைத்தும், இயைந்தும் ஆய்வு செய்து பல புத்தகங்கள் வெளியிட்ட வரலாற்றுப் புகழ் மிக்க சரித்திரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத் தக்கது கிறித்தவமும் தமிழும், பவுத்தமும் தமிழும், இசுலாமும் தமிழும், சமணமும் தமிழும் என்பன இவர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்.
ஆரியப் பார்ப்பனர் கட்டுவித்தப் பொய்க் கற்பனைக் கதையே தீபாவளி என்றும், தீபாவளிக்கும், கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் சைவத் தமிழ்க்கடல் மறைமலை அடி களார், தாம் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில் பகர்ந்திருப்பதைப் பக்தத் தமிழா நீ படித்ததுண்டா? பார்த்ததுண்டா?

தந்தை பெரியாரின் தன்மானப் பகுத்தறிவியக்கத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத நூற்பெரும் நற்றமிழ் அறிஞர்கள் தீபாவளியை மறுத்துள்ள னரே  ஒருவருக்கொருவர் மாறுபட்ட, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துகளை யும், கதைகளையும் சொல்லுகின்றனரே! ஏ தமிழா! குதர்க்கத்திற்கும், குழப்பத்திற் கும் வழிகோலுகின்ற தீபாவளிப் பண்டிகை உனக்கு ஒரு கேடா?

மலம் தின்னும் பன்றி

பூமியும், பன்றியும் புணர்ந்து கலவி செய்ய முடியுமா? பூமிக்கும், பன்றிக்கும் புணர்ச்சியின் விளை வால் குழந்தை பிறக்குமா? அப்படிப் பிறந்த குழந்தை பூமியின் சாயல் உடையதா? அன்றி, பன்றியின் சாயல் உடையதா?
உலகத்தில் இருப்பது ஒரு பூமி தானே! அப்படி இருக்க இந்த வரலாற் றுக் கதை மற்ற நாட்டவர்களால் ஏற்றுக் கொண்டு அனுசரிக்கப்படவில்லையே! எப்படி எனில் தமிழ்ப் பூமிஎன்று தனியாக ஒன்று இருந்ததா? பூமிஒன்றுதான் நாடுகளே பலப்பலஅப்படி இருக்க இரண்யாட்சதன் சுருட்டியது ஒருமித்த உலக பூமியையா? அல்லது உலக பூமியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டையா?

அது எப்படி உலக பூமியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டை மட்டும் தனியாகப் பிரித்து சுருட்ட முடியும்?

மகாவிஷ்ணு பன்றி அவதாரம்  எடுத் தார் என்றால், ஆஞ்சநேய அனுமார் குரங்குக் குட்டிச் சாமிக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழ்ந்து கும்மாளம் அடிக்கும் பக்தர் கூட்டம், பன்றிக்கும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழத்தானே வேண்டும்.

பக்தர் குழாமே! உங்கள் மன்னிப்பை வேண்டி இவ்வினாவைத் தொடுகின்றேன் மகாவிஷ்ணு எடுத்த அவதார மாகிய பன்றி மலம் தின்னுகிறது என்றால் மகாவிஷ்ணுவை வணங்கும் பக்தர்களும், தீபாவளி கொண்டாடி மகிழும் தமிழர்களும் மலம் தின்னுவதில் தவறில்லை அல்லவா? தின்னுவார்களா? தின்னத் தயாரா?

சைவப் பெரியார் சிங்காரவேலு முதலியார் தொகுத்து எழுதி வெளியிட்ட அபிதான சிந்தாமணியில் பக்கம் 93 இல் நராகாசுரன் வராக (பன்றி) உருக் கொண்ட மகாவிஷ்ணுவிற்கும், பூதேவிக்கும் பிறந்த அசுரன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறாரே!

ராட்சசனா?

கடவுள் பெறுவது ராட்சசனா? மகாவிஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் பிறந்த குழந்தை எப்படி அரக்கனாக-அசுரனாக-ராட்சசனாக இருக்கமுடியும்? மகாவிஷ்ணுவோ மக்களைக் காக்கும்படி அளக்கும் பரந் தாமக் கடவுள், பூமாதேவியாகிய நில மகளோ துச்சனர்களையும் பொறுத்துக் கொண்டு தாங்குகிற பொறுமைக் குணமும், தாய்மைக் குணமும் கொண்ட பேரறப் பெருந்தெய்வம் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை எங்ஙனம் கொடூரம் மிக்கதாக இருக்கமுடியும்?

எதற்கெடுத்தாலும் திருக்குறளை ஆதாரப்படுத்த முந்துகிறவாழ்வியல் நூல் என்று வள்ளுவத்தைக் காட்டி மகிழ்கிற மூத்த குடியாம் தமிழினமே! தீபாவளி பற்றிய கருத்துக்கு வள்ளுவத் திருக்குறளாம் உலகப் பொதுத் தமிழ் மறையில் ஆதாரம் ஏதும் உள்ளதோ?

------------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் --“விடுதலை” 28-10-2013

37 comments:

தமிழ் ஓவியா said...


வன்முறை இருபுறம் கூர்மைகொண்ட கத்தி!


பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இப்பொழுதே, பிரதமராக வந்து விட்டதாகத் துள்ளிக் குதிக்கிறார். மேடையில் அவர் பேச்சில் வெற்று ஆரவாரமும், சண்டியர்த்தனமும் கைகோர்த்துக் குதிக்கின்றன.

ஆத்திரமும், அனாவசியமான வெறுப்பும், பண்பற்ற சொற்களும் அவர் திருவாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன.

இட்லரின் இறுமாப்பு, கோட்சேயின் குரூரம் ஆகியவற்றின் கலவைகளாகக் காட்சியளிக் கின்றன. இப்பொழுதே இப்படி ஆவேச அக்னிப் புயலாக, வெறுப்புச் சுனாமியாகக் கொந்தளிக் கிறாரே - இவர் பிரதமராக ஆகிவிட்டால், நம் கெதி என்ன என்று சிறுபான்மை மக்கள் மத்தியில், பேரச்சம் உலுக்குகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருகின்றன. உள்நாட்டிலிருந்து வெளிநாடு வரை மோடியைப் பற்றி மோசமான பிம்பம் உருக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மக்கள் மத்தியில், ஒரு பொதுவான மதிப்பு, வெளிநாடுகளிடம் இங்கிதமான எதிர்பார்ப்பு என்கிற இந்த இரண்டு தளங்களிலும் மோடி மோசமான ஒரு பிம்பம் என்ற கருத்து நிலவுகிறது. இவற்றையெல்லாம் கடந்து மக்கள் மத்தியில் மாயப் பிம்பத்தை ஒரு செயற்கையான முறையில் உருவாக்கி வருகின்றனர். பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். இணைய தளங்களில் உருட்டல், புரட்டல் வேலைகளில் திட்டமிட்டு இறங்கியுள்ளனர். 18 வயது நிரம்பிய இளைஞர் களிடம் இனந் தெரியாத வரவேற்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர். மதச் சார்பற்ற சக்திகள் இதில் கவனமாக இருந்து முறியடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்படியொரு சூழ்நிலையில் பி.ஜே.பி. மற்றும் மோடிமீது அனுதாபம் உண்டாக்கும் வகையில் எந்த நிகழ்வும் நடைபெறுவது விரும்பத்தக்கதல்ல.

பிகாரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள மோடி சென்றபோது சில இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, உடன் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்தியன் முஜாகிதின் அமைப்பு இதற்குப் பொறுப்பு ஏற்றிருப்பதாக ஒரு தகவல்; யார் இதனைச் செய்திருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படவும் வேண்டும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர்களின் ஆத்திரச் செயல்கள் அறிவுக்குச் சத்ருதான். இதன்மூலம் இந்துத்துவா வெறியர்களுக்கு உதவி செய்த வர்கள் என்றே பொருள்.

அதே நேரத்தில் மோடியோ பி.ஜே.பி.யோ சங்பரிவார்க் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ வன்முறையைச் சிறுபான்மை இனத்தவர்மீது சுமத்துவதற்கு எந்த வகையிலும் தகுதி உடையவர்கள் அல்லர்.

1992 டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதியை ஒரு பெருங்கூட்டம் பிஜேபி சங்பரிவார்ப் பெருந் தலைவர்களின் வழிகாட்டுதலோடு, எப்பொழுது இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ - அன் றைக்கே இந்தியாவில் மதவெறிக்கும், வன் முறைக்கும் தீவிரமாக நச்சு விதையை விதைத்து விட்டனர் என்று பொருள்.

வன்முறை என்பது இரு பக்கமும் கூர் கொண்ட கத்தி என்பதை மறந்து விடக் கூடாது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள், இதுவரை தண்டிக்கப்படாததும்கூட, மக்கள் மத்தியில் வன் முறை மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக் கிறது.

எது எப்படியாக இருப்பினும், இந்துத்துவா கும்பலின்மீது பொது மக்களிடத்தில் அனுதாபம் ஏற்படும் வகையில், யார் நடந்து கொண்டாலும் அவர்கள் தங்களை அறியாமலேயே, தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.

சிறுபான்மை மக்களின் தலைவர்கள் வெளிப்படையாக இதுபற்றி கருத்துக்களை பதிவு செய்வதும்கூட அவசியமே!

தமிழ் ஓவியா said...


கடவுளின் சக்தி இவ்வளவுதான்!


கோயிலுக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து மரணம்

தண்டையார் பேட்டை, அக்.28- கொருக்குப் பேட்டை அண்ணாநகர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி சாய்லட்சுமி (42). நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சாய்லட்சுமி சென்றார். கோயிலில் தரிசனம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். வெளியே வந்ததும், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள், பக்தர்கள் திரண்டனர். சாய்லட்சுமியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவர் மயக்க நிலையில் இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப் பினர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத் துவர்கள் சாய்லட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோயி லுக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


திராவிடர் இனம் காக்கும் கழகத் தலைவரை பேணிக்காத்து பெரியாருக்குச் சிலை வடிப்போம்!


திருப்பூர் கலந்தாய்வில் பொதுச்செயலாளர் பிறைநுதல்செல்வி உரை

திருப்பூர், அக். 28- திராவிடர் இனம் அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட தமிழர் தலைவரைப் பாதுகாத்து, பெரியாருக்கு 95 அடி உயர சிலையை நிறுவுவோம் என்று தி.க. பொதுச்செயலாளர் மருத் துவர் பிறைநுதல் செல்வி உரையாற்றினார்.

24.10.2013 வியாழன் மாலை 6 மணியளவில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம், பெரியார் புத்தக நிலையத்தில் திருப்பூர் மாவட்ட தி.க. கலந்துரையாடல் கூட்டம் துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து உரை நிகழ்த் திய தி.க. பொதுச்செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி குறிப்பிட்டதாவது;

மனுநீதியைக் கட்டாயப்பாடமாகக் கொண்ட குஜராத்தின் முதல்வர் மோடியை முன்னிறுத்தி இந்து ராஷ்ட்டிரம், இந்து நாடு என்பன போன்ற காட்டுமிராண்டித் தனமான அடிப்படை வாதங் களைச் செயலாக்க பா.ஜ.க.முயன்று வருகிறது. இதற்கு தக்கதொரு பதிலடியைக் கொடுக்கும் மாநாடு தான் வருகிற நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திராவிடர் எழுச்சி மாநாடு. இதில் கழகத் தோழர்கள் பெருவாரியாக குடும்பத் தோடு பங்கேற்க வேண்டும். நம்மின மக்களையும் பெருமளவு கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத, ஜாதீய கட்சிகளுக்கு ஒரே எதிர் இலக்கு திராவிடர் கழகமும், திராவிடர் கழகத் தலைவரும் தான். ஏனென்றால் நமக்கு எதிரான திட்டம் மத வாத, ஜாதீய கட்சிகளின் திட்டமாகும்.

எனவே எதிரிகளால் குறிவைக்கப்பட்ட நம் முடைய குடும்பத் தலைவரான தமிழர் தலைவரைப் பேணிக் காப்பதும், அந்தத் தலைவரின் ஆசைப்படி திருச்சி சிறுகனூரில் 95 அடியில் அறிவுப் பேராசான் தந்தை பெரியாருக்கு வானளாவிய சிலையை அமைப்பதும் நம் தலையாய கடமையாகும்.

காலா காலத்திற்கும் பேசப்படும் இந்த சிலை அமைப்பு நிகழ்வுக்கு அனைத்து தரப்பு மக்களி டமும் தாராளமாக உதவிகள் கேட்டுப் பெறலாம். இந்த மண், பெரியாரால் பயன்பெற்ற மண்தானே!

விரைவில் தலைமைக் கழகத்திலிருந்து நன் கொடை புத்தகங்களும், துண்டறிக்கைகளும் வர விருக்கின்றன. இப்பணியை செவ்வனே முடித்தால் நாம் நம் இனத்தையும், நம் தலைவரையும் பாது காத்தவர்களாவோம் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

சென்னை, அக்.28- தந்தை பெரியார் அவர் களுக்கு 95 அடி உயரத்தில் சிலை அமைக் கும் திட்டத்திற்குக் கழகத் தோழர்கள் தத்தம் மாவட்டக் கழகங்களின் சார்பில் தங்கத்திற்குப் பதிலாக நிதி அளிப்பதில் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிப்பு களைச் செய்தனர்.

தாம்பரம்

அய்யாவின் 95 அடி உயர வெண்கலச் சிலை நம் கண்முன்னே நிற்கிறது. கேட்ட பொழுது உடலெல்லாம் சிலிர்க்கிறது என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். தாம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் இவ்வாறு பேசினார். இதன் விவரம் வருமாறு.

திண்டிவனம் பொதுக்குழு கூட்ட தீர் மானங்களை விளக்கி நடைபெற்றுவரும் கலந்துரையாடல் கூட்டம் தாம்பரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமை வகித்தார்.

மாநில மாண வரணி துணைச்செயலாளர் மு.சென்னியப் பன், அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டு தலைமை உரை யாற்றிய கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசியதாவது:-

சென்னையில் ஒரு பெரிய விடுதியில் அண்மையில் ஒரு கலந்துரையாடல் நடை பெற்றது. மதச் சார்பின்மை கொள்கை யுடைய மக்களின் பிரதிநிதிகளை ஒருங் கிணைத்த அக்கூட்டத்தில் இந்துத்துவா பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சியையும் அழைக்கவில்லை. திராவிடர் கழகம் மட்டுமே பங்கேற்றது. அதில் தமிழர் தலைவர் சார்பில் நான் கலந்து கொண்டு பேசினேன். அப்போது அங்கு பேசிய வடபுலத்து அறிஞர் பெருமக்கள் குறிப்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அவர்கள் பேசியபோது இந்துத்துவாவை எதிர்க்க வலுவான ஆயுதம் பெரியாரின் கருத்துகள் தான். இந்தளவிற்கு அறிவு பூர்வமாக, சிந் தாந்த ரீதியாக இந்துமதத்தை, மதவாதத்தை பெரியார் தோலுரித்துக் காட்டினார். எனவே பெரியார் கருத்துகள் இந்தியா முழுவதும தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்டனர்.

இது இக்காலகட்டத்தில் மிகமுக்கியப் பிரச்சினையாகும். பிள்ளை யார் சிலையையும், இராமன் படத்தையும் பெரியார் எதிர்த்து இயக்கம் நடத்திய தற்குக் காரணம் அப்போது புரியாதவர்கள். இப்போது புரிந்து கொண்டார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக் கோடு அடையாளம் காட்டியவர் பெரி யார். இன்றுதான் இந்துத்துவாவின் ஆபத்தை உண்ர்ந்து இருக்கின்றனர்.

நமக்கு வாழ்வளித்த தந்தை பெரியா ருக்கு நாம் செலுத்தப்போகும் நன்றி என்ன? நீண்ட காலமாக தமிழர் தலைவர் எண் ணத்தில் மலர்ந்த திட்டமான தந்தை பெரியாருக்கு மிக உயரமான சிலை 95 அடி உயரத்தில் வைக்க வேண்டும் என்பதை இன்று செயலாக்கம் செய்து மகிழ இருக் கிறோம்.

திண்டிவனத்தில் அறிவித்தபோதே தோழர்கள் காட்டிய உற்சாகம் நம்மை பெருமையடைய வைத்தது, நினைக்கும் நேரத்திலேயே நம் மனக்கண் முன்னால் அய்யாசிலை நிற்கிறது. உடலெல்லாம் சிலிர்க்கிறது. அத்துடன் அருங்காட்சியகம், புத்தக விற்பனை நிலையம், சிறுவர் பூங்கா என பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைய உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

பல லட்சக்கணக்கான மக்கள் பார்க்கப் போகிறார்கள். இப்படிப் பட்ட பெரிய சாதனை நம் தமிழர் தலைவ ரால் மட்டுமே நிகழ்த்த முடியும். தந்தை பெரியார் தன் இயக்கத்திற்கு ஏற்படுத்திய பாதுகாப்பை - ஒரு ஏற்பாட்டை இப்போது உலகத்தால் உணர முடிகிறது அல்லவா?

தந்தை பெரியாருக்கு அன்னை மணியம் மையாரும், தமிழர் தலைவரும் கிடைத்த தினால் நடைபெற்ற சாதனை இது. இவ்வாறு பேசினார்.

தமிழ் ஓவியா said...


மனித நேயம் மட்டுமே உண்மை: பெரியார் அவர்களின் சிந்தனைகளைப் போற்றி பெருமிதம்!

திருச்சி, அக்.28- பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவுநாள் விழா பிச்சாண்டார் கோயிலில் 24.10.2013 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப் பாளர் அ. கலியமூர்த்தி கலந்து கொண்டு வளரும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் விதமாக சிறப்புரையாற்றினார்.

அவர்தம் உரையில்:-

ஜாதிமத பேதமில்லை, பாகுபாடு ஏதுமில்லை, கடவுள் இல்லை, காவியத்தில் உண்மையில்லை, மனித நேயம் மட்டுமே உண்மை என்று உலகுக்கு பறைசாற்றிய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

இந்தியா கிராமங்களில் வாழ்கின்றது என்று கூறினார் அண்ணல் காந்தியடிகள். அத்தகைய கிராமங்கள் வாழ வேண்டும், அங்குள்ள இளைய சமுதாயத்தினர் முன்னேற வேண்டும் என்ற சமுதாய நோக்கத்தோடு இப்பிச்சாண்டார் கோயிலில் பல முகாம்கள், கருத்தரங்குகள், மரக்கன்றுகள் அளிப்பது போன்ற தொண்டறச் செயல்களைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கும் பெரியார் மருந் தியல் கல்லூரிக்கு தனது வாழ்த்துக்களையும், பா ராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இன்றைய இளைஞர்களின் மத்தியில் உதவி செய்யும் குணம் என்பது வெகுவாகக் குறைந்து வருகிறது. துன்பங்களையும், துயரங்களையும் நீக்க பிரார்த் தனை செய்யும் உதட்டை விட தொண்டு செய்யும் கரம் சிறப்புடையது. எனவே மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கை பள்ளி பருவத்திலிருந்தே மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சுயநலம் கருதாமல் பொது நலத்தோடு மனித நேயத்தை வளர்ப்பது குறித்து ஒரு சிறு கதையின் மூலம் மிக அழகாக மாணவர்களுக்கு விளக்கினார்.

ஜப்பானில் இராணுவத் தாக்குதல் நடைபெற்ற போது அங்குள்ள தெருக்களில் யாரும் நடமாட முடியாத அளவில் இராணுவத்தினர் மனிதர்களைக் கொன்று குவித்தனர். அப்பொழுது ஒரு தாய் இரண்டு குழந்தைகளையும் சுமந்து கொண்டு மூச்சிறைக்க ஓடினார். இரு குழந்தைகளும் இடுப்பில் இருப்பதால் ஓடமுடியாத தாய் இரு குழந்தைகளையும் சற்று உற்று நோக்கிப் பார்த்து ஏதாவது ஒரு குழந்தை யையாவது காப்பாற்றுவோம் எனக் கருதி அதில் ஒரு குழந்தையை விட்டு விட்டு மற்றொரு குழந்தை யுடன் ஓடி மறைந்து கொண்டார்.

அந்த தாயின் கண் முன்னே விட்டுச் சென்ற அக்குழந்தையை இராணு வத்தினர் கொடூரமாகக் கொன்றனர். இந்நிகழ்ச்சி யை பார்த்த ஒருவர், ஒரு தாய்க்கு இரு குழந்தை களுமே சமம். எப்படி ஒரு குழந்தையை மட் டும் விட்டு வந்தீர்கள் என்று அந்தத் தாயிடம் வினவினார். அதற்கு அந்த தாய் நான் என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந் தைக்கும் உணவு அளித் துக் கொண்டு இருந்த பொழுது திடீரென இரா ணுவ தாக்குதல் நிகழ்ந் தது. அச்சமயம் இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்தேன்.

இரு குழந்தை களையும் சுமந்து ஓடினால் விரைவாக ஓடமுடியாது, ஒரு குழந்தை யாவது உயிர் பிழைக்கட்டுமே என்று நினைத்து, ஒரு குழந்தையை இறக்கி விட்டு விட்டேன். அச்சமயம் இறக்கி விட்ட குழந்தைதான் என் குழந்தை. நான் காப்பாற்றியது பக்கத்து வீட்டு குழந்தை.

தமிழ் ஓவியா said...

ஏனெனில் என் குழந்தையின் உயிரைக் கொடுப்பதற்கு எனக்கு உரிமை உண்டு, பக்கத்து வீட்டு குழந்தையின் உயிரைக் கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லை என்று அத்தாய் மனித நேயத்துடனும், பொது நலத்துடனும் கூறினார் என்பதனை மாணவர் களுக்கு விளக்கினார்.

எதிர்கால சமுதாயத்தை படைக்கவிருக்கும் மாணவர்கள் நெறி சார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். ஏனெனில் செல்போன், தொலைக்காட்சி மற்றும் இணையதளம் போன் றவை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு உறு துணையாக இருந்தாலும் இன்றைய இளைய சமுதாயத்தினரின் அழிவுப்பாதைக்கும் வழிவகுத்துக் கொண்டுதான் இருக்கிறது என்றும் இணைய தளத்தில் பாலினக் கவர்ச்சியைத் தூண்டும் விதமான காட்சிகளையும், ஆபாச படங்களையும் பார்ப்ப வர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்திற்கும் அதிக மானவர்கள் என்றும், இம்மாதிரியான செயல்பாடு களில் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள் ளாமல், நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். நல்ல புத்தகங்களை சிறந்த நண்பர்களாக உருவாக்கிக் கொள்ளுங்கள். புத்தகங்களை நண்பர்களாக கொண்டதால்தான் காரல் மார்க்ஸ் போன்ற தலைவர்கள் உருவாக முடிந்தது என்றும் உரையாற்றினார்.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளை மாற்றக்கூடியது கல்வி ஒன்றுதான் என்றும், கிராமப்புறங்களிலிருக்கக்கூடிய மாண வர்கள் இத்தகைய கல்வியால் பல சாதனைகளை படைக்க முடியும் என்றும் உரையாற்றினார்.

மேலும் பணம் படைத்தவர்களின் வீடுகளில் குழந்தைகள் வளர்ந்து பிறக்கின்றன என்றும் ஏழைகளின் வீடுகளில் குழந்தைகள் பிறந்து வளர்கின்றன என்றும் கூறி, வளர்ந்து பிறப்பது வாரிசு உரிமை, பிறந்து வளர்வது பிறப்பின் பெருமை என்றும் எடுத்துரைத்தார். பணக்கார பிள்ளைகளின் கால்களைத் தாங்க தோள்கள் இருக்கின்றன, ஏழைப்பிள்ளைகளின் தோள்களை தாங்க சுமைகள்தான் இருக்கின்றன.

இந்நிலையை மாற்ற கல்வியால் மட்டுமே முடியும். எனவே இளைய சமுதாயம் கல்வி கற்பதோடு, ஒழுக்கம், மனித நேயம், உதவும் மனப்பாங்கு, விட்டுக் கொடுத்தல், பிறரை மதித்து நடத்தல் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையர்களை மதித்து, அவர்களைப் பெருமைபடுத்தும் அளவிற்கு உயர வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகள் மருத்து வராக, பொறியாளராக உருவாக வேண்டும் என்று கனவு காண்பதற்கு பதிலாக பிள்ளைகள் என்னவாக உயர கனவுகாண்கிறார்களோ அவர்களின் கனவு மெய்ப்பட உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக அறியாமை இருளைப் போக்கி அறிவுக்கண் திறந்த ஆசிரியர் களை மதித்து நடக்க வேண்டும். குழந்தைகள் வீட்டிலே பிறந்தாலும், அவர்கள் வளர்வது பள்ளி யில்தான். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் மற்றும் அலெக்சாண்டர் போன்றவர்கள் சரித்திரம் படைக்க முடிந்தது அவர்களுக்கு கிடைத்த ஆசிரியர்களால்தான்.

எனவே ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் உரையாற்றினார். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இச்சமுதாயத் தில் பொறுப்புடன் செயல்பட்டால் நாளைய சமுதாயம் வளமானதாகவும், நலமானதாகவும், பலமானதாகவும் அமையும் என்பதில் அய்யமில்லை என்று கூறி வெற்றியடைவதே மகிழ்ச்சி என்று கருதாது, மகிழ்ச்சியாய் இருப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று கருதி, பிறப்பது சாதாரணமாக இருக்கலாம், இறப்பது சரித்திரமாக இருக்க வேண்டும்.

அத்தகைய சரித்திரத்தை படைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தொண்டறத்தை வாழ்வில் ஏற்று செயல்பட்டால் வளமான சமுதாயத்தை படைக்கலாம் என்று தித்திக்கும் தேன்தமிழில், எளிமையும், வலிமையும் மிகுந்த கருத்துக்களால் எழுச்சியுரையாற்றினார்.

இந்நிறைவுநாள் விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். தாளாளர் ஞான செபஸ்தியான் முன்னிலை வகித்தார்.

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப. சுப்ரமணியன் தலைமை வகித்து உரையாற்றினார். நிறைவாக நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ச. இராஜேஷ் நன்றியுரையாற்ற விழா இனிதே நடந்தேறியது.

தமிழ் ஓவியா said...

நரகாசுரன்

========

நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதுகிறேன். நரகாசுரன் என்பதாக என்பதாக ஒருவன் இருந்தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ என்பதும் பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும்; தங்கள், வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும்; அவர்கள் நலத்திற்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும், கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு உணர்த்துவதற்கு ஆக பொதுவாகவே, ஆரிய சாஸ்திர புராண இதிகாசங்களின் ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள் என்பதாகக் கருதியே, எழுதச் சம்மதித்தேன்.

திராவிட மக்கள் அருள்கூர்ந்து, நரகாசுரன் வதைப் புராணத்தை, சற்று, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். கதையின் சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன், அயோக்கியனாக இருந்தான்; கடவுளால் கொல்லப்பட்டான்; பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், இதற்காக சித்திரித்த கதையின் தன்மை எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20-ஆம் நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி இக்கருத்துக்கு ஆளாகலாமா? என்பதைச் சிந்திக்கத்தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற புத்தகம், அருப்புக்கோட்டை தோழர் வி.ஷி. இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மூலக்கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை இழிவுபடுத்துவதற்கு என்று, எழுதப் புகுந்த கற்பனையில், ஆரியர்களது நிலை, தன்மை, ஆகியவை எவ்வளவு இழிவாகக் கூடியதாயிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காரியத்தில் புகுந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சமாதானம் என்னவாக இருக்குமென்றால், இக்கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு காட்டுமிராண்டிகளாகவும், அவ்வளவு மானாவமானக் கவலையற்ற மிருக வாழ்வு வாழ்ந்தவர்களாகவும், இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும், இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது, எவ்வளவு விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இது போன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டுமிராண்டித் தனமானதும், மானாவமான லட்சியமற்றதும், மிருகப்பிராயத்திலிருப்பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர்கள் கருதி இருப்பதாகவாவது இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், இனியாவது பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது திராவிடர் கடமையாகும். ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன் :

1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டது.

2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.

3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.

4. இக் கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஒரு அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்களுக்கும், தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு செய்தது.

5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.

6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.

7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளி கொண்டாட்டம்.

என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப் புத்தகம் எழுதியவருடைய ஆவல்.

ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக்கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்று பட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.

இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் M.S. இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

* தந்தை பெரியார்

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

people need some point to celebrate and enjoy. It's not for religion or god that they get new dress and sweets.''Life is to enjoy ''concept is the basic reason. And people have more money and they need to spend it.

தமிழ் ஓவியா said...


வளர முடியும்நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


நரி - பரி

இமயமலைச் சரிவு களில் வாழும் மக்களின் முக்கிய தொழில் சுற்றுலா வரும் மக்களுக்கு வழி காட்டுவதுதான். அவர் களின் சொத்து என்பது குதிரைகள்தாம். யாத் திரை வரும் பக்தர்களைக் குதிரையில் ஏற்றிக் கொண்டு செல்லுவார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை கிடைக்கும்.

அண்மையில் பெய்த கடும் வெள்ளத்தால் 3000-க்கும் மேற்பட்ட குதிரைகள் அடித்துச் செல்லப்பட்டன. அந்தச் சுற்றுலா வழிகாட்டிகளின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? பக்தர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறார்களாம்.

தன்னை நாடி வரும் பக்தர்களை குதிரைகள் மூலம் ஏற்றிக் கொண்டு வருவோரைக் காப்பாற் றாமல் அந்தக் கடவுள்கள் பிச்சை எடுக்க வைத்துள் ளனவே இதைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

பக்தர்களைச் சுமந்து வரும் 3000 குதிரைகளை வெள்ளம் இழுத்துச் சென் றதே - அந்தக் குதிரை களை அந்த இறைவன் காப்பாற்றினானா!?

குதிரைகளையும் காப் பாற்றவில்லை - குதிரை களின் சொந்தக்காரர் களான சுற்றுலா வழி காட்டிகளையும் காப்பாற் றிடவில்லை அந்தக் கடவுள்.

கொஞ்ச நேரம் நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டாமா? உத்தரகாண்டில் கொடும் வெள்ளத்தால் இலட்சத் திற்கும் மேற்பட்ட பக்தர் கள் (பெண்கள் குழந் தைகள் உட்பட) கொடூர மான வகையில் கொன்று குவிக்கப்பட்டார்களே!

இதற்கு மேலும் கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் நம்மைக் காப்பார் என்று கருத முடியுமா? இதற்கு மேலும் கருணையே வடி வானவர் கடவுள் கடைக் கண் ணைக் காட்டி, கருணை மழை பொழிந்து, உதவிக் கரம் நீட்டி நம் உயிரைக் காப்பார் என்று கருதிட இடம் இருக்கிறதா?

கோபப்படாமல் கொஞ்ச நேரம் சிந்திக்கக் கூடாதா?

மன்னன் குதிரை வாங்கக் கொடுத்து அனுப்பிய பொருளைக் கொண்டு கோயில் கட்டி னான் அமைச்சனாக இருந்த மாணிக்கவாச கன். மன்னன் கோபம் கொண்டு பொங்கி எழுந்தபோது நரிகளை எல்லாம் பரிகளாக்கி (குதிரையாக்கி) தன் அடியானாகிய மாணிக்க வாசகனை தற்காலிக மாகக் காப்பாற்றினான் கடவுள் என்பதெல்லாம் கதைதானா? (அந்தக் குதிரைகள் மறுபடியும் நரிகள் ஆகி ஓடி விட்டன என்பது வேறு).

இது போன்ற கதைகள் எல்லாம் இறந்த காலக் கட்டுக் கதை களாக இருக்கின்றனவே தவிர, நிகழ் காலத்தில் நடப்பது இல்லையே - ஏன்? ஏன்?

காரணம் மனிதனுக் குப் பகுத்தறிவு வளர்ந்து விட்டது - இனிமேல் ஏமாற்ற முடியாது என்பது தானே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மகாவிஷ்ணுவின் வருகை!

செய்தி: திரும்பிய பக்க மெல்லாம் பன்றிகள் - அசுத்தமாகிய சபரிமலை.

- தி இந்து28.10.2013

சிந்தனை: பன்றியா? மகா விஷ்ணுவின் அவ தாரமாயிற்றே! அய்யப் பனோ மகாவிஷ்ணுவின் குழந்தை ஆயிற்றே - அந்த உறவில் வந்தி ருக்கலாம் அல்லவா!

தமிழ் ஓவியா said...


மோடியால் நல்லாட்சி கொடுக்க முடியாது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை படப்பிடிப்பு

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என நம்ப முடியவில்லை என்று அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது. ஏனெனில், ஏராளமான இந்தியர்களி டையே அச்சத்தையும் விரோதத்தை யும் மோடி ஏற்படுத்தி உள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழு வினர் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகளையும், அதிருப்தியா ளர்களையும் சமாளித்து பணியாற் றும் திறன் மோடியிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியால் நல்லாட்சி கொடுக்க முடியாது
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை படப்பிடிப்புபாஜகவுடனான 17 ஆண்டு கால உறவை அய்க்கிய ஜனதா தளம் முறித் துக் கொண்டதன் மூலம் ஏற்கெனவே மோடி தனிமைப்படுத்தப்பட்டு விட் டார். மோடி பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமற்றவர் என்பதாலேயே அக்கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மதத்தினர் உள்ளனர். இந்நிலையில் பெரும்பா லான மக்களிடையே அச்ச உணர் வையும், விரோத மனப்பான்மையை யும் ஏற்படுத்தியுள்ள மோடியால் அந்த நாட்டை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று அக்குழு வினர் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பொரு ளாதார நிலை குறித்தும் அந்த பத் திரிகை கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது குஜராத்தின் பொருளா தாரம் ஒட்டுமொத்தமாக பாராட்டும் வகையில் இல்லை. குஜராத்தில் வறு மைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விகிதம் பிற மாநிலங்களைவிட குறை வாகவே இருப்பினும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம் களைவிட அந்த மாநில முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின் றனர். மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக 13.8 கோடி முஸ்லிம்களுக் கும் மற்றும் பிற சிறுபான்மையினருக் கும் பிரச்சினையே என்று அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அசீமானந்தாவின் வாக்குமூலத்தை மறக்க முடியுமா?

பாட்னா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நம் நாட்டுத் தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தப்பட ஒரு விடயம் கிடைத்து விட்டது. சக்கைப் போடு போடுகிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி, பி.ஜே.பி.யினர் ஏதோ பரிசுத்த யோவான் போல அகிம்சாமூர்த்தி வேடம் போட்டு ஆடப் பார்க்கிறார்கள்.

பாட்னா வன்முறையை யாரும் நியாயப்படுத்த வில்லை; நியாயப்படுத்தவும் முடியாது - கூடாது.

இந்திய முஜாகிதின் அமைப்பின் தீவிரவாதத்தை எந்த முஸ்லீம் அமைப்பும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் பி.ஜே.பி.யோ சங்பரிவார்களோ அந்த வகையை சார்ந்ததில்லை; அவர்களே திட்டமிட்டு வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்பவர்கள். சங்பரிவார் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு வக்காலத்து வாங்கக் கூடியது பி.ஜே.பி.,
ஒரிசா மாநிலத்தில் தொழு நோயாளிகள் மத்தியில் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த கிரகாம்ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர்தம் இருபாலகர் களையும் படுகொலை செய்த பஜ்ரங்தள் கும்பலுக்கு - தாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்புணர்ச்சியைக்கூட தூக்கி எறிந்து விட்டு பஜ்ரங்தள்காரர்கள் நல்லவர்கள்; அவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கவே மாட்டார்கள் என்று சொல்லவில்லையா?

பஜ்ரங்தள்ளைச் சேர்ந்த தாராசிங் குற்றவாளி தான் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டதே - அத்வானி கூறியது அப்பட்டமான பொய்; குற்றவாளியைக் காப்பாற்றும் முயற்சி என்பது புரியவில்லையா?
பாபர் மசூதி இடிப்பு என்பது, பா.ஜ.க. என்பது நேரிடையாகவே வன்முறையில் ஈடுபாடு கொண்ட நிகழ்வு அல்லவா?
குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது நரேந்திரமோடி என்ற நீரோ மன்னனின் நேரடி நடவடிக்கையல்லவா?

பாபர் மசூதி என்பது ஒரு கட்டடம்தான் அதை இடித்தது குற்றமாகாது என்று சொன்னவர் அவர்களின் ஜெகத் குருவான காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தானே?
பச்சைத் தமிழர் காமராசரை, ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரில், பசுவதைத் தடை என்ற பெயரில், படுகொலை செய்யத் துடித்தவர்கள் வரிசையில் ஜன சங்கத்தவர்கள் இருந்தனரே - பூரி சங்கராச்சாரி யார் இருந்தாரே - காவி வேட்டி சாமியார்கள் நிர்வாண சாமியார்கள் வெளிப்படையாக ஈட்டிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்களே!

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் - நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்தி பச்சையாகப் பீலிபட் பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார்? (17.3.2009)

இது எனது கை! (தன் கையை உயர்த்தியபடி) காங்கிரஸ் கட்சியின் சின்னமான கையல்ல. இது தாமரையின் சக்தி! இது தலைகளைத் துண்டிக்கும்; ஜெய் சிறீராம்! யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்களைப் பலகீனமாக நினைத்தால், கீதையில் சொன்னபடி அவர்களின் தலையை வெட்டுவேன் என்று பேச வில்லையா?

காவி பயங்கரவாதம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறவில்லையா? அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சராக வந்துள்ள சுசீல்குமார் ஷிண்டே, நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது என்று சொன்னபொழுது, இதே பி.ஜே.பி. சரி பரிவார்க் கூட்டம் குய்யோ முறையோ என்று கூச்சல் போட்ட நேரத்தில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் அப்படி தொடர் வன்முறையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட பட்டியல் கைவசம் உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக சொன்ன பிறகு தானே, அடங்கினார்கள். பாட்னா கூட்டத்தில் குண்டுவெடிப்புத் தொடர்பாக மோடி ஏன் பேசவில்லை - ஏன் மவுனம் சாதித்தார்? அதைப் பெரிதுபடுத்தினால் தமது பழைய கந்தாயமும் அம்பலமாகும் என்ற ராஜ தந்திரமாக இருக்கக் கூடும்.

வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போதே வெடித்தது உயிர் இழந்த ஆர்.எஸ். எஸ்.காரர்கள் உண்டே! பட்டியல் தேவையா?

மாலேகான் உள்ளிட்ட பல தொடர் குண்டு வெடிப்பு களில் (மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி ஆஜ்மீர் தர்கா உள்ளிட்டவை) சங்பரிவார்க் கூட்டத்தின் ஈடுபாட்டை அந்த முகாமைச் சேர்ந்த முக்கிய புள்ளியான சுவாமி அசீமானந்தா நீதிமன்றத் திலேயே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளாரே! எனவே பாட்னா வெடி குண்டு என்ற மூடு திரையைக் கொண்டு, தங்களின் வன்முறை முகத்தை மறைத்து விடலாம் என்று, மனப்பால் குடிக்க வேண்டாம்! பி.ஜே.பி. வகையறாக்கள்!

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையின் முடைநாற்றம்


கருநாடக மாநிலம், சிக்க பள்ளாபுரம், கவுரி பித்தனூர் தாலுக்காவின் வடக்கு தென் பெண்ணையாற்றின் கரையில் மகாபாரதக் காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் விதுரன் மோசமடைய பூவரசட் மரம் நட்டதாகவும், அம்மரம் அண்மையில் அடித்த மழைக் காற்றில் அடியோடு சாய்ந்து விட்டதாகவும் அதனை அப்புறப்படுத்தினால் எமனின் சீற்றத்திற்கு ஆளாகி உயிர்ப் பலி ஏற்படுமென அஞ்சி மரத்தினை வட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் அலட்சியம் செய்வதால் 42 தினங்கள் கடந்து விட்ட நிலையில் மரம் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றையக் கால கட்டத்தில் எமன் நட்ட மரம் ஏன் காற்றில் விழுந்து விட்டது? வருண பகவானும் (மழை) வாயு பகவானும் (காற்று) கூடிக் கொண்டு செயல்படும்போது எமதர்மனின் சக்தி என்னானது? இவை எல்லாம் மக்களை மூடநம்பிக்கையில் சிக்க வைக்க போலி சாமியார் மந்திர மவுடிகவாதிகளின் பிரச்சாரமாகும்.

மூடநம்பிக்கையால் முடைநாற்றம் வீசிய மதக் குப்பைகளைக் கிளறி சமுதாயத்தை நந்தவனமாக்கிய பணியைச் செய்த அறிவாசான் தந்தை பெரியார் வழியில் இன்றளவும் செயல்படும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறுவார் நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! என்று கூறுவார். அதுபோல் எமனின் உயிர் பலிக்கு அஞ்சாமல் மூடநம்பிக்கையை தோலுரிக்கும் விதமாக எனது தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களுடன் மேற்படி மரத்தினை வெட்டி அப்புறப்படுத்த ஆயத்தமாய் உள்ளோம். இதற்கு மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து எனக்கு உறுதிமொழி கடிதம் வாயிலாகக் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க தயாராக உள்ளேன்.

- மு. சானகிராமன் தலைவர், திராவிடர் கழகம், பெங்களூர்

தமிழ் ஓவியா said...


முதன் முறையாக சூரியனை நோக்கி வரும் அய்சான் வால் நட்சத்திரம் : நவ.23ஆம் தேதி தெரியும்


நாகர்கோவில், அக்.29-சூரியனுக்கு அருகே, வருகிற 23ஆம் தேதி தோன்றுகிற அய்சான் வால் நட்சத்திரத்தை பள்ளி, கல்லூரி களில் பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

சூரிய மண்டல கோள்களை தாண்டியுள்ள குய்ப்பர் வளையம் மற்றும் சூரிய மண்டலத்தின் கடைக்கோடி எல்லையில் உள்ள ஊர்ட் மேகங்கள் ஆகிய இரு இடங்களில் வால் நட்சத்திரங்கள் உருவாகின்றன. கடந்த 200 ஆண்டு களாக நாம் பார்த்த வால்நட்சத்தி ரங்கள் அனைத்தும் மீண்டும் மீண் டும் சூரியனையே சுற்றி வருபவை. ஆனால், தற்போது, அய்சான் என்ற வால் நட்சத்திரம் முதன்முறையாக நவம்பர் 23ஆம் தேதி சூரியனை நோக்கி வருகிறது.

இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் கணேசன் கூறு கையில், வானில் வால் நட்சத்திரம் தெரிகிறது என்றதும் தவறான செய்திகளும், மூட நம்பிக்கைகளும் பரவ வாய்ப்புள்ளன. எனவே உண்மைச் செய்தியையும், அறிவியல் கருத்துக்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந் நிகழ்வை பள்ளி, கல்லூரி மாணவர் களிடம் கொண்டு செல்ல ஆசிரியர் களுக்கான சிறப்பு பயிற்சியை நடத்தி வருகிறோம் என்றார்.

புதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானி சாதனை

வாஷிங்டன், அக். 29-விண்வெளி மண்டலத்தில் மிகவும் அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டத்தை வான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிங்கல் ஸ்டீல், அவருடைய ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் ஆகியோர் இணைந்து புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில், மிக அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டம். இது பூமியில் இருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிக் பேங் என்ற அண்டவெளியில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திர கூட்டம் உருவாகியுள்ளது. இது குறித்து விதால் தில்வி கூறுகையில், உலகிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார்.

தமிழ் ஓவியா said...


மதத் திருட்டு


திருச்சி மாவட்டம், சிறீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் ஆயி ரங்கால் மண்டபத்தில் தொல்லியல் துறை அகழ் வாய்வு செய்ய இந்திய அரசு அனுமதியளித்துள் ளது என்பது ஒரு செய்தி.

வரவேற்க வேண்டி யதுதான். அதனோடு ஆய்வு செய்ய வேண்டிய கூடுதல் தகவல்களும் உண்டு.

சைவ சித்தாந்த கழகம் வெளியிட்டுள்ள தஞ்சைவாணன் கோவை எனும் நூலில் பக்கம் 7இல் (வரிகள் 26-30) கீழ்க்கண்ட தகவல் உள் ளது.

நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந் தது. அதனை ஆலி நாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கி னார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்! என்று தஞ்சை வாணன் கோவை கூறுகிறது.

சிறந்த ஆய்வியல் அறிஞரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர் களால் எழுதப்பட்ட பௌத்தமும் தமிழும் எனும் நூலில் (பக்கம் 37) கீழ்க்கண்டவாறு எழுதி யுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலி ருந்த பொன்னால் அமைந்த புத்தச் சிலையைக் கவர்ந்து சென்று, அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப் பணி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு கூடுதல் தகவலும் உண்டு.

இப்படி திருடி வந்த பொன்னைக் கொண்டு சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் மதில் சுவர் எழுப்பப்பட்டது அல்லவா!

அக்கோயிலின் மதிற் சுவரையும், கட்டடங்களை யும் எழுப்பிய தொழிலா ளர்களுக்குக் கூலி ஏதும் கொடுக்காமல், தொழி லாளர்களை ஓடத்தில் ஏற்றிச் சென்று காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டனர்.

ஆற்று வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குக் கொள் ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத் துறை (பார்வானம் = சுடுகாடு, பார்வணம் = சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்ட வனிடம் இறைஞ்ச, அவ் வாறு அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்ட வர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட் டது. (திருமங்கை ஆழ் வார் வைபவம் எனும் நூல்). எவ்வளவுப் பெரிய சூழ்ச்சியும் - பித்தலாட்ட மும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுபகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனத்துக்கு அளவேயில்லையா?


கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் மனிதனை எவ்வளவு தூரம், முட்டாள்தனத்துக்குத் துரத்திக் கொண்டு இருக்கிறது என்பதற்கு ஒரு செய்தி.

கிருட்டினகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அருகில் தொக்கம்பட்டி கிராமத்தில், பசு மாடு ஒன்றுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக, வதந்தி ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளனர்.

இது தருமபுரி கிருட்டினகிரி மாவட்டங்களில், கிராமப்பகுதிகளில் ஒரு மூடநம்பிக்கைக்கு வித்திட்டுள்ளது.

பசு மாட்டுக்கு இப்படி ஒரு ஆண் குழந்தை பிறந்ததால், ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து என்று, மூடநம்பிக்கை வியாபாரிகள் பரப்பியுள் ளனர். கைப்பேசி மூலம் ஆங்காங்கே விசிறி விட்டுள்ளனர்.

இது உண்மையா? இப்படியெல்லாம் நடக்குமா? என்று சிந்திப்பதற்குப் பகுத்தறிவு தேவைப்படுமே! பக்தி வந்தால் புத்தி பறந்து ஓடிவிடாதா?

அடுத்து என்ன? பரிகாரங்களைத் தேட வேண்டியதுதான். வீட்டுக்கு வீடு விளக்கு ஏற்றுவது, தேங்காய் உடைப்பது... இத்தியாதி.. இத்தியாதி சடங்குகள் சாங்கோ பாங்கமாக நடக்க ஆரம்பித்து விட்டன.

நாளை பொழுது விடிந்தால் இந்தச் செய்தி வெறும் வதந்தி என்பது அம்பலமாகி விடும் - அவ்வளவு தான்.

இது போன்ற புரளிகளைக் கிளப்பி விடுபவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் இதுபோன்ற முட்டாள் தனங்கள் இறக்கை முளைத்துப் பறந்து கொண்டுதானிருக்கும். முட்டாள்தனம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நம்பித் தொலைப்பவர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குள் எருமை மாடு நுழைந்து விட்டது என்பார்கள்; திருப்பதியில் அம்மன் தாலி அறுந்து விழுந்து விட்டது என்பார்கள்; பிள்ளையார் பால் குடித்தார் என்று கரடி விடுவார்கள்; அம்மன் சாமி கண் விழித்துப் பார்த்தாள் என்பார்கள். இன்னொரு அம்மனின் கண்களில் ரத்தம் கசிந்தது என்பார்கள்; நம்புவதற்கு ஆள் கிடைத்தால் புளுகுபவர்களுக்கா பஞ்சம்?

பிஞ்சு வயதிலேயே, மூடநம்பிக்கைச் சரக்கு களைத் திணித்து வளர்க்கப்பட்டவர்கள், எதைத் தான் நம்ப மாட்டார்கள்?

சென்னையில் ஒருமுறை தலையில்லா முண்டம் டீ குடித்தது; என்று கிளப்பி விட்டார்கள். அதுபற்றி அப்பொழுது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சிறீபால் அவர்கள் அழகாகச் சொன்னார்.

ஏதாவது ஒரு முண்டம் அப்படி சொல்லி யிருக்கும்! என்றார் - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்ட வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம், கூறி என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, என்ற பழமொழி இதற்குப் பொருந்தும் போலும்.

முதலில் ஏடுகளும், தொலைக்காட்சிகளும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளின் தோலை உரித்துக் காட்ட வேண்டாமா? மூடநம்பிக்கை களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம், இந்த ஊடகங் களாவது மூடநம்பிக்கையைப் பரப்பாமல் இருந்தால் போதுமே!

காலையில் சுப்ரபாதத்தில் ஆரம்பித்து நாள் பூராவும் மூடத்தனங்களின் மொத்த உருவ மாகத்தானே நடமாடுகின்றன.

எந்த நிறத்தில் சட்டை போடுவது, எந்த நிறத்தில் மோதிரம் அணிவது, இந்த நாள் எப்படிப்பட்ட நாள் - வியாபாரத்தை ஆரம்பிக்கலாமா - கூடாதா என்கிற அக்கப் போர்களின் களமாகத் தானே, இவை இருக்கின்றன.

விஞ்ஞானத்திற்கு முரணானவற்றை ஒளி பரப்பக் கூடாது என்று சட்டம் செய்யப்பட வேண் டாமா? குறைந்தபட்சம் மகாராட்டிர மாநிலத்தில் மூடநம்பிக் கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை மத்திய அரசே கொண்டு வரட்டும்! இதைக்கூட செய்யாவிட்டால் அது எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?

தமிழ் ஓவியா said...


மன்மோகன் அவர்களும் - மோடியும்!


இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் காட்சியளித்தனர் - நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் என்பது, ஆரோக்கியமான ஒன்றே!

அதேநேரத்தில், தன்னைப் பிரதமராகவே நினைத்து மிதந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆரோக்கியமான ஒரு பண்பாட்டைக் கடைப்பிடித்தாரா என்றால், இல்லை என்பது தான் அதற்குரிய பதிலாகும்.

சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம் திறப்பு விழா நிகழ்ச்சி அது; அந்த விழாவில் வல்லபாய் படேலைப்பற்றிப் புகழ்வது சரிதான் - யாருக்குச் சிலை திறக்கப்படுகிறதோ அவரைப் பற்றித்தானே பெருமையாகப் பேசவேண்டும் - அதுதானே மரபும்!

மோடி எப்படிப் பேசினார்? வல்லபாய் படேல் மட்டும் பிரதமராகப் பொறுப்பு ஏற்றிருந்தால் ஆட்சி எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும் என்று பேசுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?

ஜவகர்லால் நேரு பிரதமராகப் பொறுப்பு ஏற்றதால் நாடு வளர்ச்சி அடையவில்லை என்று மறைமுகமாகச் சொல்லுவதாகத்தானே பொருள்?

பிரதமராக இருக்கக் கூடிய மன்மோகன்சிங் அந்த மேடையில் வீற்றிருக்கும்போது, அப்படிப் பேசுவது சரியானதுதானா? நாகரிகம்தானா?

படேலைப் பொறுத்தவரை இந்துத்துவா சாயல் கொண்டவர் என்ற கருத்துண்டு. காந்தி யாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபைக்காரன் என்று முதலில் சொன்னார்; பின் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டார்.

அதேநேரத்தில் 1949 டிசம்பர் 22 ஆம் தேதியன்று, இரவோடு இரவாக பாபர் மசூதி வளாகத்துக்குள், ராமன் பொம்மையைக் கொண்டு வைத்தது காவிவெறிக் கும்பல்.

அதனை அப்புறப்படுத்தவேண்டும் என்று பிரதமர் நேரு கூறினாலும், துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேலும், உத்தரப்பிரதேச முதலமைச்சராகவிருந்த கோவிந்த வல்லப பந்தும் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. பிரதமர் நேரு கருதியபடி - திருட்டுத்தனமாக உள்ளே திணிக்கப்பட்ட ராமன் பொம்மையை அன்று அப்புறப்படுத்தியிருந்தால், பிற்காலத்தில் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே!

படேல் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மதிப்பும், அனுதாபமும் இருப்பதற்குக் காரணம் அன்று அவர் நடந்துகொண்ட விதம்தான். அதே உணர்வோடுதான், நேருவை மறைமுக மாகத் தாக்கும் தன்மையிலும், படேலைப் பெருமைப்படுத்தும் வகையிலும், பேசியதன் உட்பொருளும், இரகசியமுமாகும்.

ஒரு பொது மேடையில் இப்படி ஜாடை பேசுவதெல்லாம் கீழ்க்குணம் என்பதை, நரேந்திர மோடியிடம் எதிர்பார்க்க முடியுமா?

இன்னும் கேவலம் என்னவென்றால், பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, பி.ஜே.பி.காரர் களும், சங் பரிவார்க் கும்பலும் கூச்சல் போட்டுள்ளனர்.

அவர்களைப் பொறுத்தவரை மோடிமுதல் பஜ்ரங்தள் வரை அனைவரும் ஒரே தகுதி உடையவர்கள்தான்.

அதேநேரத்தில், எதைப்பற்றியும் கவலைப் படாமல், பிரதமர் மன்மோகன்சிங் பதற்றப் படாமல், பண்பாட்டோடு தன் சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

பிரதமராக வர ஆசைப்படுவது என்பது ஒன்று. அதற்குத் தகுதியாகத் தம்மை ஆக்கிக் கொள்வது என்பது மற்றொன்று என்பதை வாக்காளர்கள் முதலில் தெரிந்துகொள் வார்களாக!

தமிழ் ஓவியா said...


இயற்கைத் தடைகள்


நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத் தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமை யாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள். - (குடிஅரசு, 9.1.1927)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்!!


பார்ப்பன நடிகருக்குக் கண்டனம்

ஆண்களை சிரிக்க வைக்கப் பெண்களை இழிவுபடுத்தி திரைப் படங்களில் வசனக் காட்சிகளைப் புகுத் துவதை வாடிக்கையாகக் கொண்டிருக் கும் பார்ப்பன நடிகர் சந்தானம் நிறுத் திக்கொள்ளவேண்டும் என்று பெண் கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள் ளது. (சோவின் துக்ளக்கையும் அப் படியே கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?)

தமிழ் ஓவியா said...

விலகல்

முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் மருமகள் அருணா சுக்லா பி.ஜே.பி. யிலிருந்து வெளியேறியுள்ளார். (பி.ஜே.பி.யே மக்களை விட்டு வெளியேறவேண்டிய கட்சிதானே!).

மண்டியிடவேண்டுமா?

பஞ்சமி நிலத்தை மீட்டு ஆதிதிரா விடர்களிடம் ஒப்படைக்கக் கோரி கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த இளைஞர்கள் மண்டியிட்டு நடந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத் துள்ளார்கள்.

(மனு தர்மம் ஒழிந்து போய் விடவில்லை; வேறு வடிவத்தில் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மண்டியிட்டு மனுகொடுக்கும் நிலைதான் இன்றைக்கும், வெட்கக்கேடு!)

மலேசியாவின் திருப்பதி

மலேசியாவில் கிலாங் நகரில் மலேசிய திருப்பதி எனப்படும் சுந்தர் ராஜுலு பெருமாள் கோவில் ரூ.20 கோடி செலவில் கும்பாபிஷேகம்.

(சரவண பவன் ஓட்டல் உலகின் பல நாடுகளிலும் வைத்துள்ளது போல திருப்பதி ஏழுமலையானின் கடைகளும் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வைக்கப்பட் டுள்ளன.

சென்னைத் தீவுத் திடலிலும் ஏழுமலையான் திருக்கல்யாணம் என்ற சேதி வந்தபோது திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் மனம் பொறாமல் எழுதினார். போகிற போக்கைப் பார்த்தால் இவ்வளவு பணம் கொடுத்தால் ஏழுமலை யானே வீட்டுக்கு வீடு வருவார் போலிருக்கிறது என்று எழுதி னாரே, அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது).

மூன்றாவது அணியா?

டில்லியில் 30.10.2013 இன்று இடதுசாரிகள் கூட்டவிருந்த அணி மூன்றாவது அணி இல்லை - மாறாக அது மதவாத எதிர்ப்பு அணியே!

- சி.பி.எம். பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி

(மூன்றாவது அணி இல்லை என்றே வைத்துக்கொள்வோம்; மதவாத எதிர்ப்பு அணியில் ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மதவாத எதிர்ப்பு அணியில் இடம்பெறுவது - மார்க் சிய அகராதியில் எந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளதோ!)

தண்டனை?

ஸோபன் சர்க்கார் என்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார். தன் கனவில் கண்டதாக ஒரு தகவலைக் கூறியதன் அடிப்படையில் தொல் பொருள் துறை உன்னாவ் பகுதியில் பழங்கால கோட்டை ஒன்றைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டனர் 12 நாள்கள் தோண்டியும் தங்கம் கிடைக்க வில்லை.

அப்படி தங்கம் கிடைக்கா விட்டால் ஆயுள் தண்டனையைக் கூட ஏற்கத் தயார் என்று சவால்விட்டாரே - இப்பொழுது அரசு என்ன செய்யப் போகிறது? தண்டனை வழங்கப்படுமா? 12 நாள் ஆன செலவுக்கு யார் பொறுப்பு?
இந்தியாவில் தொலைப்பேசி

இந்தியாவில் 63 சதவிகித வீடுகளில் தொலைப்பேசி அல்லது கைப்பேசிகள் உள்ளன. நகர்ப்புறங்களிலும் 82 சதவிகித வீடுகளிலும், கிராமப்புறங்களில் 54 சதவிகித வீடுகளிலும் இவை இருக்கின்றன.

இதுதான் குஜராத்

18321 அங்கன்வாடிகளுக்கும், 52 லட்சம் வீடுகளுக்கும் கழிவறை கிடையாது. 64 லட்சம் வீடுகளுக்குச் சாக்கடை வசதியில்லை - இதுதான் நரேந்திர மோடி ஆளும் இன்றைய குஜராத்தின் நிலைமை!

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுபகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கும் முடிவை காங்கிரஸ் திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்


புதுச்சேரி, அக்.31-விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று (31.10.2013) புதுவை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய தினம் கூடிய காங்கிரஸ் உயர் மட்ட குழு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தி.மு.க. தலைவருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறான முடிவை காங்கிரஸ் உயர்மட்ட குழு எடுத்துள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும். 1967ஆம் ஆண்டு ஏற்பட்ட பின்னடைவை விட கூடுதல் பாதிப்பை ஏற் படுத்தும். தமிழக காங்கிரஸ் தலைவர்களும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என நேரடியாகவே வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப் படவில்லை.

3ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை கண்டித்தும், இந்த முடிவை திரும்ப பெறக்கோரியும் வருகிற 3ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். புதிய தலைவராக ராஜ பக்சேவை தேர்வு செய்ய கூடாது என காமன்வெல்த் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளுக்கு விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் மின் அஞ்சல் (ஈமெயில்) அனுப்பப்படும்.
பரமக்குடியில் 7 தலித்துகள் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் தரப்பில் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் தமிழக சட்டசபையில் அரசு நியமித்த ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறைக்கு ஆதரவாகவும், தலித்துகள் படு கொலையை நியாயப்படுத்தியும் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அறிக்கையை புறக்கணிக்க வேண்டும். சி.பி.அய். விசா ரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஜாதியின் பெயரால் தலித் சமூகத்துக்கு எதிராக ஒரு அரசியல் அமைப்பு உருவாகி வருகிறது. இது சமூக விரோத கூட்டணி. இந்த கூட்டணி ஜாதி வெறியை தூண்டி வன்முறையை தமிழகத்தில் உருவாக்கி சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கவும் செய்கிறது. எனவே தமிழக அரசு இதனை கண்காணித்து அதன் செயல் பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் புதுவை பண்டசோழநல்லூர் ஜாதிய மோதல் உருவாக்கப்பட்டது. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

ஜாதி வெறியர்களின் நடவடிக்கைகள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிகம்பங்கள், பேனர்கள் சுவரொட்டிகள் திட்டமிட்டு ஜாதி வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உழைக்கும் மக்களின் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் அப்பாவி மக்கள்தான் பலியாகிறார்கள். எனவே தமிழக அரசும், மத்திய அரசும் சமூக விரோத சாதிய கூட்டணியை கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம். ஏற்காடு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரமும் செய்ய உள்ளோம். மத்தியில் மதவாதிகள் ஒருங்கிணைந்த ஒரு கூட் டணியும், தமிழகத்தில் ஜாதிய வாதிகள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டணியும் உருவாகி வருகிறது.

சமீபத்தில் டில்லியில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இது வரவேற்க கூடியது. இருப்பினும் அகில இந்திய அளவிலும், தமிழகத் திலும் 3ஆவது அணி எடுபட்டது இல்லை. அதோடு வாக்கு சிதறல்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே தலைவர்கள் எச்சரிக்கை உணர்வோடு முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் - இந்தியா பங்கேற்பு: காங்கிரஸ் விளைவுகளை சந்திக்கும்


கலைஞர் பேட்டி

சென்னை, அக்.31- இலங் கையில் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற் றால் அதன் விளைவை காங் கிரஸ் சந்திக்கும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர் :- நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப் பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- தமிழ் நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.

கேள்வி :- பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தி யாவிலிருந்து சென்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டால்?

கலைஞர் :- இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல் லக் கூடாது என்று தான் பொருள்.

கேள்வி :- சட்டப் பேரவை யில் இந்தப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் மக்களின் உணர்வு களுக்கேற்ப நீங்களும் அதனை ஆதரித்தீர்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அதனை ஆதரித்தார்கள். அந்த உணர்வு களுக்கு மாறாக மத்தியில் காங் கிரஸ் கட்சி இப்படி யொரு முடி வெடுக்கிறதே?

கலைஞர் :- வினை விதைத் தவர்கள், வினை அறுப்பார்கள்!

கேள்வி :- டெசோ அவசர மாகக் கூட்டப்படுமா?

கலைஞர் :- டெசோ கூட்டம் நடைபெற்றுத் தான் முதன் முதலில் இதற்கான தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அதை மீறித் தான் இப்போது காங்கிரஸ் கட்சி அல்லது பிரதமர் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி :- டெல்லியிலிருந்து வருகின்ற தகவல், காங்கிரஸ் கட்சியின் முடிவினை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ராஜினாமா செய்யப் போவதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- அதைப்பற்றி எனக்குத் தெரியாது. செய்தி வந்த பிறகு தான் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியும்.

தமிழ் ஓவியா said...


தீபாவளி -அறிவுடையோர் சிந்திப்பீர் !

லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை.

இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.

இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! - மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவியை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!

- தொகுப்பு: க. பரணீதரன்

தமிழ் ஓவியா said...


தீபாவளியைப் பற்றிய சரடுகள்!


தீபாவளி என்றால் அதற்குக் காரணா காரியத்தைப் பொருத்த மாகச் சொல்லட்டும். ஆள் ஆளுக் குத் தத்தம் விருப்பம் போல் அவிழ்த் துக் கொட்டுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

உண்மை என்று இருந்தால் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அது எப்படி இப்படியெல்லாம் மாறுபடும்?

தீபாவளி சிறப்பிதழ் என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடு கிறார்களே -_ அவற்றில் தான் எத்தனை எத்தனை மாறுபாடுகள்.

இதோ ஓர் இதழ்:

மகாலட்சுமியும் தீபாவளியும்

பாற்கடலில் அவதரித்த மகா லட்சுமி தன் மனம் கவர்ந்த மகா விஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள். திரு மார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம் பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள். எம் பெருமானைமணந்த நாள் தீபாவளி திருநாளாம்.

அயோத்தியில் தீபாவளி

பதினான்கு ஆண்டு கால வன வாசத்துக்கு பிறகு தம் நகரத்துக்கு திரும்பிய ராமபிரானை அயோத்தி நகர மக்கள் வரவேற்றபோது வீதி களில் வரிசையாக விளக்குகள் ஏற்றப் பட்டன. அந்த நாள் தான் தீபவாளி திருநாள் என்பது அயோத்தியில் கடைப்பிடிக்கும் சம்பிரதாயமாம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளை தான் வடநாட்டினர் தீபாவளி என்னும் பெயரோடு கொண்டாடி வருகின்றனர்.

மூவடியால் உலகை அளந்து பாதாளம் சென்ற மாவலி ஆண்டிற்கு ஒரு முறை பூவுலகம் வர மகா விஷ் ணுவிடம் வரம் பெற்றான். அப்படி அவன் வரும் நாள் தீபாவளி என்பது கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின் மறை பொருள்.
(தினத்தந்தி தீபாவளி சிறப்பிதழ் ஆன்மிகம் 29.10.2013).

தமிழ் ஓவியா said...


வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!


தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக்கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை; தீப ஆவளி=தீபாவளி. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங் களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம்: 433-434)

தமிழ் ஓவியா said...


தீபாவளிமனித நேயங்களை நசுக்கி எரித்து தன் சுயநலத்தை பகட்டை காட்டுவதற்கு தெரிந்தே தானே போய் ஏமாற, தன்னுடைய உடலுழைப்பை வினாடிகளில் கரியாக்க கொண் டாடப்படும் உலகின் ஒரே ஒரு மடத் தனமான கேளிக்கை கூத்து என்றால் அது மிகையாகாது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு 700 விலைபட்டியல் ஒட்டி 50 தள்ளுபடி என்று விற்ற அதே பொருள் திபாவளி நெருங்கிய உடன் 2000 லேபிள் ஒட்டி 300 ரூ தள்ளுபடி என்று ஏமாற்றி விற்பனை செய்வார்கள், நம்ம ஆள் அதை அடித்து பிடித்து வாங்க ஓடுகிறான், கூடவே பையனுக்கு ஒரு 10 ரூ மதிப் புள்ள சைனா தொப்பி இலவசமாம், இன்றைய விலைவாசியில் பணம் சேர்ப்பது என்பது சாமானியர்களுக்கு குதிரைக்கொம்பு பணக்காரர்களுக்கு வேண்டுமென்றால் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் உழைத்து பணம் சேர்த்திருந்தார்கள் என்றால் அதன் மதிப்பு தெரிந்து விரயமாக்கமாட்டார்கள் அவர்கள் ஏழைகளின் உழைப்பைச்சுரண்டி சேர்த்த பணம் தானே அது.

இருவருமே உழைப்பின் ஊதி யத்தை பட்டாசு என்ற பெயரில் சில வினாடிகளில் கரியாக்குகிறார்கள், உங்க காசு நீங்க என்னமும் செய்யலாம் என்று கூறிவிடமுடியாது. பட்டா சினால். காற்று மாசு ஓசை மாசு, மற்றும் ஒளிமாசு என இயற்கையை வன் கொடுமை செய்கிறார்கள், எத்தனை காகங்கள் குருவிகள் அணில்கள் சென்னை சாலையில் செத்துவிழு கின்றன தெரியுமா, காரணம் காற்றில் அதிகம் கலந்துவிடு கந்தகம் உயிரினங் களின் மென்மையான சுவாச உறுப்பு களை வெந்து போக செய்துவிடும். பெருநகரங்களில் எந்த பாவமும் அறியாமல் செயற்கைச்சூழலை எதிர்த்து போராடும் ஒரு சில உயிரினங்களையும் கொலை செய்யும் போது செயலை ஏன் செய்கிறீர்கள், உலகின் வெறெந்த விழா விலும் ஏழைகளின் முகங்களில் இய லாமையின் ஏக்கத்தை காணமுடியாது அது பொங்கலானாலும் சரி, ரம்ஜானாக இருந்தாலும், கிருஸ்துமஸாக இருந்தா லும் சரி இந்த விழாக்களில் பரம்,அ ஏழைகள் முதல் அனைவரின் மனதி லும் ஒருவித சந்தோசம் இழையோடும் இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தீபாவளியோ நாள் நெருங்க நெருங்க ஏழைகளில் மனதில் வேதனை குடிகொண்டுவிடும், சென்ற வருடம் தீபாவளிக்கு வாங்கிய வட்டி யும் முதலும் சமீபத்தில் தான் அடைத் திருப்பான் மீண்டும் அந்த கொடூரக் கும்பலிடம் கையேந்தும் கொடுமையும் தீபாவளியில் தான். அடுத்தவர் முன்பு பகட்டாக கொண்டாட சிலர் நினைக் கும் இந்த மடத்தனமான கேளிக்கை வேதனையான தொடர்விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது, சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் இயற்கைச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மடத்தனமான கோளிக்கையை புறக்கணிப்போம்.

- சரவணா. இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...


53 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் கிராமம்


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் 53 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்து வருகின்றனர். மயில்ராயன்கோட்டை என்று அழைக்கப்படும் எஸ்.மாம்பட்டி ஊராட்சி வானம் பார்த்த பூமியாகும். இங்கு சுமார் 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி, எம்.வலையப்பட்டி, கிளுகிளுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, கச்சப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர், கலிங்குபட்டி ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன. இக்கிராம மக்களின் வாழ்வாதாரமே விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். விவசாயம் தொடங்கும் காலத்தில் தீபாவளி வருவதால் அனைவரின் பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வு நிலவிவருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாம்பட்டி கிராமத்தின் அப்போதைய அம்பலக்காரர் சேவுகன்அம்பலம், முன்னாள் அம்பலக்காரர்களோடு விவாதித்தார். எல்லோரும் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் 1959இல் ஊர்க் கூட்டம் கூட்டி, ஊராட்சிக்குள்பட்ட 12 கிராமங்களிலும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர். இதுகுறித்து சேவுகன் அம்பலம் மகன் சபாபதி அம்பலம் கூறுகையில், எனக்கு திருமணமான ஆண்டுதான் தீபாவளி திருநாள் கைவிடப்பட்ட ஆண்டு. இந்தியாவே கொண்டாடும் ஒரு பண்டிகையை ஒரு கிராமம் நிறுத்துவதா என்ற கேள்விகளை தூக்கியெறிந்து, மற்ற கிராமங்கள் கொண்டாடும் போது நாம் கொண்டாடவில்லை என்றால் ஊருக்கு இழுக்காகுமோ என்ற போலி சித்தாந்தங்களை உடைத்தெறிந்து, சூழ்நிலைக்கும் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப வாழ்ந்து கொள்வதுதான் சரி என்று தீர்மானித்தோம். அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகிறோம். மேலும் சேவுகன்அம்பலம் உலகநாதன் கூறுகையில், விவசாயங்கள் மறைந்து வெளிநாட்டு வருமானத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அன்று கிராமங்கள் கட்டுப்பட்டு நின்றது போல எங்கள் தலைமுறையிலும் கட்டுப்பாடு காக்கப்படுகிறது. இனிவரும் தலைமுறையும் இதனை கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார். மேலும், இக்கிராமங்களில் வெள்ளாடு வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது ஏன் என்று வினவும் போது மரம், செடி, கொடிகள் காக்கப்படவே தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


பார்க்கவில்லையா உள்ளங்கையை?


நம் உள்ளங்கையில் விரல் நுனியில் லட்சுமியும், மத்தி யில் சரஸ்வதியும், கடைசியில் துர்க்கா தேவியும் உள்ளனர். காலையில் எழுந்ததும் உள்ளங்கையைக் கண்களால் பார்ப்பது நல்லது

- காஞ்சி சங்கராச்சாரியார் தினமணி 21.9.2010 பக்கம் 2

காஞ்சி வரதராஜ பெரு மாள் கோயில் சங்கர்ராமன் கொலை வழக்கில் இதே காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டாரே அன்று காலை எழுந்தவுடன் தன் உள்ளங்கையைப் பார்க்கத் தவறி விட்டாரோ!

தமிழ் ஓவியா said...


கடவுளிடம் வேண்டுதல் என்பது சரியானதுதானா?


கடவுள்தான் எல்லாம் அறிந்தவர் என்றும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்றும் ஆன்மீக சிரோன்மணிகள் அளக்கிறார்களே _ அப்படி இருக்கும் போது ஆண்டவனி டம் கோரிக்கைகளை வைப்பது ஏன்? வரங்களை வேண்டு வது - _ ஏன்?

அவன்தான் எல்லாம் அறிந்தவனா யிற்றே? கல்லினுள் தேரைக்கும் படியளப் பவனாயிற்றே _ அப்படி இருக்கும் பொழுது ஆண்டவ னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பது அதி கப் பிரசங்கித்தனமா அல்லது ஆண்டவன் ஒரு அறியாமை ஆசாமி _ நாம் எடுத்துச் சொன்னால்தான் விளங்கிக் கொள்வான் என்று கருதும் மனப்பான்மையா? இதுகுறித்து கறுப்புச் சட்டைக்காரன் கூறினால் கொஞ்சம் கசக்கும்தான்

கல்கி சொன்னால் இனிக்கும் அல்லவா?

இதோ கல்கியில்
கடவுளை வியாபாரியாக்காதே!

கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா...?

- - _ வி. மனோகரி, குமாரபாளையம்

பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரி யாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல. கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தரக் கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.

ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி. அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.

(எழுத்தாளர் ராஜேஷ்குமார் _ கல்கி 6.11.2011)

சரணடைந்து பாருங்கள்! என்று சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்!

பிரார்த்தனை என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம் என்று கருப்புச் சட்டை சொல்லவில்லை கல்கி சொல்லுகிறதே இதற்கு என்ன பதில்?

தமிழ் ஓவியா said...


நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க


தீபாவளி என்றால் மனுசர்களுக்கு மட்டுமல்ல; கடவுள் களுக்கும்கூட தலைத் தீபாவளியாம்.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையைக் கட்டிக் கொடுத்தா ராம். பிறகு முருகனுக்குத் தலைத் தீபாவளி சீர்வரிசை செய் தாராம்.

சிவன் கோயிலில் இந்தத் திருக்கூத்து என்றால் வைணவர்கள் சும்மா இருப்பார்களா?

ஆண்டாளை ரெங்கனுக்குக் கட்டிக் கொடுத்த பெரியாழ்வார் தீபாவளிக்கு முதல் நாள் மருமகனாகிய ரெங்கனுக்கு நல்லெண்ணெய் சீயக்காய்களை அனுப்பி வைப்பாராம்.

தீபாவளி விடியற்காலையில் ரெங்கநாதன் ஆண்டாளுக்குப் புத்தாடை அணிவிப்பார்களாம்.

பிள்ளை விளையாட்டே என்று இராமலிங்க அடிகள் சும்மாவா சொன்னார்?

தமிழ் ஓவியா said...


திரு நீறு - திரு நீறுதிரு நீறு எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா? அதற்கென்றும் சில சடங்காச்சாரங்கள் உண்டாம். வியாதியில்லாத கன்றுடன் (எப்படி தேடி பிடிப்பார்களோ?) கூடிய பசு சாணம் போடும் வரை காத்திருக்க வேண்டும். சாணம் போடும் சமயத்தில் கையில் வைத்திருக்கும் தாமரை இலை யில் அந்தச் சாணத்தைப் பிடித்து, உருண்டையாக்கி சில மந்திரங்கள் சொல்லி அக்னியில் எரிக்க வேண்டும்; -இப்படிதான் திருநீறு தயாரிக்க வேண்டுமாம். அய்தீகம் சொல்கிறது. இப்பொழுதெல்லாம் இப்படிதான் திருநீறு தயாரிக்கப்படுகிறதா? கடைகளில் விற்பனைப் பொருளாகி விட்டதே! மற்ற மற்ற விஷயங்களுக்குகெல்லாம் வக்கணைப் பேசுபவர்கள் இதுபற்றி ஏன் சிந்திக்கவில்லை?

தமிழ் ஓவியா said...


மகாலட்சுமியின் குடியிருப்பு பசுவின் பின்புறமாம்பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப் பது 32 வகை அறங்களுள் ஒன்றாகும். யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயுறை என்றார் திருமூலர். (மாலை மலர்)

வெளியிட்டுள்ள தீபவாளி மலர் பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாளாம். வாடகை இல்லாத வீடு அங்குதான் கிடைக்குமோ!

தமிழ் ஓவியா said...


பெரியார் திரட்டு!

தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.

திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்

எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?

என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?

சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?

தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!

ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!

சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?

கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!

என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?

இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!

பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?

வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?

சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!

பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?

நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்

மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு

மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


பட்டாசு வெடிப்பதால்....


ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாட்டின் அளவு எல்லையை மீறிச் செல்வதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டில் சென்னையில் பட்டாசு ஒலி மாசுபாடு கண்காணிக்கப்பட்ட அயனாவரம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அதே ஆண்டில் காற்றில் கலந்திருந்த சஸ்பெண்டட் பார்ட்டிகுலேட் மேட்டர் (காற்றில் கலந்திருக்கும் துகள்) கியூபிக் மீட்டருக்கு 498 மைக்ரோகிராம் அளவு இருந்திருக்கிறது.

125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சத்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல். இவை அனைத்துமே அந்தக் கட்டுப்பாட்டை மீறுகின்றன.

இந்த அளவு சத்தத்தைக் கேட்டால் காது செவிடாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் அவர்களிடம் சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதில் பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.