Search This Blog

19.10.13

தந்தை பெரியார் மூட்டிய தீ இப்பொழுது வட புலத்திலும்

பிடித்து விட்டது பெரியார் பெரு நெருப்பு!

ஆம் பிடித்துவிட்டது பெரு நெருப்பு! தமிழ்நாட்டில் தந்தை பெரியார் மூட்டிய தீ இப்பொழுது வட புலத்திலும் பிடித்து விட்டது.

ஆரியர்- - திராவிடர் என்னும் பெருந் தீ மூண்டு விட்டது.

அசுரர், அரக்கர், இராட்சதர் என்று இதிகாசங்களிலும், புராணங்களிலும் குறிப்பிடப்படுபவர்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களான நம்மைதான்.

பூதேவர்கள் என்று புஷ்பாஞ்சலி செய்யப்படுபவர்கள் எல்லாம் பார்ப் பனர்கள்தான் _ பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கொட்டி அளக்கப்படும் பிராமணர்கள்தான்.

இந்த ஆரியர், திராவிடர் போராட் டம் தான் இராமன்  இராவணன் சண்டையாக -_ சுப்பிரமணியன் சூரபத்மன் போராக நரகாசுரன் -_ கிருஷ்ண பரமாத்மா சமராக இருந்தது என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.
இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று ஏற்றுமதி செய்து வந்த விவேகானந்தரிலிருந்து வரலாற்று ஆசிரியர் பி.டி. சீனிவாசய்யங்கார்; பண்டித ஜவகர்லால் நேரு உட்பட இந்த வரலாற்று உண்மைகளை விரிவாக எழுதி வைத்துள்ளார்களே!

அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார். திராவிடனே தீபாவளி கொண்டாடாதே - _ அது ஆரியன் திராவிடனை அழித்தநாள் - அன்றைய தினத்தைத் துக்க நாளாக அனுசரி,- கருப்புடை அணி என்று அவர் குரல் கொடுத்தது வெட்டிப் பேச்சல்ல _ வீண் வார்த்தைகளும் அல்ல. வரலாற்றைப் புரட்டி எடுத்துப் புரட்டுகளைப் புட்டு வைப்பதற்காகச் சொல்லப்பட்டவை அவை.

கழகத்தைச் சேர்ந்தவர்களே! தீபாவளி சமயத்தில் ஏதாவது செய்வதாயிருந்தால் காலையில் தங்கள் வீட்டில் ஏதோ பெரிய காரியம் ஏற்பட் டிருப்பதுபோல் நினைத்துக் கொண்டு துக்கப்பட வேண்டும்; பட்டாசு கொளுத் துவதற்குப் பதிலாக ராமாயணத்தையும், பாரதத்தையும், புராணங்களையும் கொளுத்த வேண்டும் (குடிஅரசு தொகுதி 42 பக்கம் 7)

- இது ஏதோ ஏட்டிக்குப் போட்டி யல்ல!

இன மீட்சிக்கானது, வரலாற்றைத் திருப்பிப் போடுவது!

திராவிடர் கழகத்துக்காரர்களுக்காகச் சொன்னதாகவும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

துணிந்து அவர்கள் செய்யக் கூடி யவர்கள் என்பதற்காகச் சொல்லப்பட் டதே! திராவிடனாகிய ஒவ்வொருவனும் மேற்கொள்ள வேண்டிய மானவுணர்வுப் பிரச்சினை இது.

தந்தை பெரியார் மறைந்த ஒராண்டு நிறைவு நினைவுக் குறிப்பு நாளில் (25.12.1974) அன்னை மணியம்மையார் சென்னைப் பெரியார் திடலில் இராவண லீலா நடத்திக் காட்டினார்களே _ இராமன் சீதை, இலட்சுமணன் உருவங்களைக் கொளுத்தினார்களே அது அறிவாசான் அய்யா சொல்லிச் சென்ற நீதிப் போதனையின் அடிப்படையில்தான்.

தசராவின் போது வட நாட்டில் இந்த ஆண்டு கூட குடிஅரசு தலைவர் உட்படக் கலந்து கொண்டு ராம லீலா என்று சொல்லி இராவணனை கொளுத்தி மகிழ்ந்தார்களே - அதன் பொருள் என்ன?

ஆரிய குலத்தார் திராவிடர் மீது கொண்டுள்ள காழ்ப்பும், கசப்பும் - இன்னும் அவாளை விட்டு விலகி ஓடவில்லை என்பதற்காக அடை யாளம் தான் அது.
அவர்கள் செய்யட்டும் செய்யட்டும்! அப்பொழுதுதான் இந்தியா முழுவதும் இராவண லீலாக்கள் நடப்பதற்கான வாய்ப்புக் கதவைத் திறந்துவிடும்.
உத்தரப் பிரதேசத்தில் சூத்ரா என்ற அமைப்பு தொடங்கப்பட்டு தந்தை பெரியார் விழா கொண்டாடப்பட்டதே, விழா முடிவில் ராமனுக்குச் செருப்பு மாலை போடப்பட்டதே! (ஜூனியர் விகடன் 5.2.2006)

இப்பொழுது ஒரு தகவல் ஆந்திராவிலிருந்து உஸ்மானியா பல்கலைக் கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக் கழகம் அது (1958இல் தொடங்கப்பட்டது).

அங்கு அசுரர்கள் வாரம் கொண் டாடியுள்ளனர் இருபால் மாணவர்கள். 2013 செப்டம்பர் 9 முதல் 15 வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அசுரர்கள் என்பவர்கள் பேய்களல்ல; போற்றப்பட வேண்டியவர்கள் திராவிட இனத் தோன்றல்களே! திராவிட தலித் கலாச்சாரத்தை மீட்டு எடுப்பதற்காக இந்தவிழா என்று அறிவிக்கப்பட்டது. பெரியார், அம்பேத்கர், பூலே (மகாத்மாபூலே) ஆகியோர்களின் தத்துவார்த்த பின்புலத்தோடு கொண்டாடுவதாகவும் தெளிவாகவே தெரிவித்தனர்.

இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக் கழக வளாகங் களில் மதச் சார்பின்மையை மறு வரையறை செய்தல் என்ற தலைப்பில் ஓர் ஆய்வுரை அமர்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தது.

இராவணன் எனும் தலைப்பில் முக ஓவியங்கள் வரையும் போட்டியையும் ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வு என்ற தலைப்பில் கேன்வாஸ் ஓவியக் காட்சியையும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இவற்றைப் படிக்கும் பொழுது, நம் நாடி நரம்புகள் எல்லாம் உணர்ச்சி கொள்ளவில்லையா? நமது அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன அல்லவா!
நம் அய்யா, மறைவிற்குப் பிறகும் எங்கெங்கெல்லாம் காட்டுத்தீ போல பரவி ஆரியத்தின் அடிவேரைப் பொசுக்கிக் கொண்டுள்ளார். ஆனாலும் அக்கிரகாரம் அடி பணிந்துவிடுமா? பட்டுப் பீதாம்பரம் போட்டு வரவேற்று விடுமா? அங்கு என்ன நடந்துள்ளது? இந்துத்துவா அமைப்பை வைத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் காவல் துறைக்குப் போய் புகார் கொடுத் துள்ளனர் நிருவாகமும் கைகோத்தது!

மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி என்ற அடிப்படையில் பகைமையைத் தூண்டுகின்றனர் என்பது குற்றச்சாற்று. அதன் அடிப்படையில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு மாணவர்கள்மீது பிணையில் வெளி வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்!

அதே நேரத்தில் பல்கலைக் கழகத்தில் ஓம் என்று எழுதி வைத்துள்ளனர். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் சரஸ்வதி சிலை வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஜாதி அடிப்படையில் பிரித்துத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்தப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வு மாணவர் ஜார்ஜ்மேத்யூ கூறியுள்ளார்.

இன்னொரு சேதி. டெல்லிப் பல்கலைக் கழகத்தில் மகிஷாசுரன் விழா நடத்திட - ஒடுக்கப்பட்ட மக்கள் முனைந்துள்ளனர். அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏ.வி.வி.பி. எதிர்த்துள்ளது.

எதிர்ப்பு வரத் தானே செய்யும்? பெரியார் என்னும் வரலாற்று எழுச்சித் தீயல்லவா பற்ற வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சந்திக்காத எதிர்ப்பா? கல்லடிபடவில்லையா? மலத்தை முட்டைக்குள் வைத்து வீசினார்களே! அவற்றை எல்லாம் புறங்கண்டு தானே இன்று தமிழ் மண் தந்தை பெரியார் தத்துவம் பூத்த புரட்சிப் பூங்காவாக தலை நிமிர்ந்து நடைபோடுகிறது.

எப்படியோ தந்தை பெரியார் வடபுலத்தில் மாணவர்கள் மத்தியில் அடி எடுத்து வைத்து விட்டார். அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி கூறுவார் அல்லவா?

ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும். எம் தலைவர் பெரியார் அண்ட பிண்ட சராசரங் களிலும் சென்று அதற்கப்பாலும் பாய்வார் என்றாரே!

ஆம் பாயப் போகிறார்! மண்டைச் சுரப்பை உலகு தொழப் போகிறது. அறிவைத் தடுக்க முடியுமா? முற்போக்கின் முனைப்புப் புயலைப் பூணூலால் தான் முடக்க முடியுமா?

குறிப்பு: ஆந்திராவில் நடைபெற்ற முழு விவரங்கள் தனியே கொடுக்கப் பட்டுள்ளன.


பழங்காலத்திலேயே இன்றையப் போராட்டம்!

நம்மில் சமுதாய சீர்திருத்தத்திற்கு யார் பாடுபட்டாலும் அவர்களுக்கு பார்ப்பனர்கள் அளிக்கும் பட்டங்கள் என்னவென்றால் இராட்சதன், அரக்கன், அசுரன் என்கின்றதான பட்டங்களாகும்.

இந்தப் பெயர்களின் தத்துவம் என்னவென்று சிந்தித்துப் பார்த்தால் இன்று இந் நாட்டில் நடந்து வரும் சமுதாயப் (பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார்) போராட்டமானது 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் தொடங்கி நடந்து வந்திருக்கிறது என்பதுதான்.

அவதார கற்பனைக் கதைகள்: கடவுள் (விஷ்ணு) அவதாரங்கள் என்கின்ற பார்ப்பன கற்பனைக் கதைகளைப் பார்த்தால், நமது அரசர்கள் அக்காலங்களில் பார்ப்பனர் விஷயங்களில் எப்படி எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவற்றைப் பார்ப்பனர்கள் எப்படி எப்படி சமாளித்து இருக்கிறார்கள் என்பதும் விளங்கும். அந்த விஷ்ணு அவதார எண்ணிக்கை 10- என்றாலும் 10-_க்கும் கதைகள் இல்லை.

அவற்றில் (1) மச்ச; (2) கூர்ம; (3) வராக; (4) நரசிம்ம; (5) வாமன; (6) பரசுராம; (7) ராம; (8) பலராம; (9) கிருஷ்ண என்பவையான 9 அவதாரங்களுக்குத்தான் கதைகள் இருக்கின்றன. 10-ஆவது அவதாரம் இனிமேல் ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அந்த அவதார காலத்தில் இன்ன இன்ன காரியம் நடக்கும்; மக்கள் இப்படி இப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதாகக் காணப்படுகிறது.

10ஆவது அவதாரப் போராட்டம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போரே!
அப்படிக் காணப்படுவதற்கு ஏற்ப இன்று காரியங்கள் நடக்கின்றன. அதாவது இன்றைய பார்ப்பனர் _ பார்ப் பனரல்லாதார் போராட்டம்தான், 10ஆவது அவதாரப் போராட்டம்! அதுதான் இன்று நடைபெறுகிறது என்பதற்கு, அந்த அவதாரங்களுக்கு எதிரிகளாக இருந்த இராட்சதர்கள் முதலிய பெயர்களை இன்றும் பார்ப்பனர் நமக்குச் சூட்டுவதே ஆதாரமாகும். அதாவது ராஜாஜி நம் தலைவர்களை இராவணன், இரண்யன், சூரபத்மன், ஜாபாலி என்றெல்லாம் சொல்லுவதாகும். சத்தியமூர்த்தியும் பல தடவை சொல்லி இருக்கிறார்.

---------------------------- தந்தைபெரியார் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் "விடுதலை மலர்" - 1966 - பக்கம் 73 
--------------------------------------------------------------------------------------------------------------------
 
அசுரர் தினம் கொண்டாடிய உஸ்மானிய பல்கலைக் கழக மாணவர்கள் கைது

கண்ணன் சச்சிதானந்தன் (நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணி புரிபவர்) முகநூல் வழியாக அளித்துள்ள செய்தி

அசுரர் தினம் கொண்டாடிய மாணவர் போராட்டம் வெல்லட்டும்!  பா.ஜ.க, பார்ப்பன இந்து மதம், போராடும் உலகம், மாணவர் - இளைஞர்  கல்லூரி நிர் வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங் களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப் படாமல் பராமரிக்கப்படுகிறது.

அய்தராபாத்தில் உஸ்மானியா பல்கலைக் கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத் தில் அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
அசுரர் வாரம்உஸ்மானியாவில் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல் கலைக்கழகம் 1958ஆ-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் டது. இங்கு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் தலித், பழங்குடி, பகுஜன், மற்றும் சிறுபான்மையினர் மாணவர் அமைப்பு போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் அமைப்பினர் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் 15ஆ-ம் தேதி வரை அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அசுரர்கள் என்பவர்கள் பேய்கள் அல்ல, அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தை உருவாக்குவதற்காகவும், தாங்கள் திராவிட இனத்தின் வழித் தோன்றல்களே, ஆரியத்திற்கு அல்ல என்பதை எடுத்துரைப்பதற்காகவும், திராவிட, தலித் கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும் அசுரர்கள் வாரம் நடத்தப்படுவதாக இதை ஏற்பாடு செய்திருக்கும் மாணவர்கள் கூறு கிறார்கள். பெரியார், அம்பேத்கர், பூலே ஆகி யோரின் தத்துவார்த்த பின்புலத்தோடு இதைக் கொண்டாடுவதாகவும் அவர்கள் தெரிவித் துள்ளனர். 

உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படும் மாட்டுக்கறி திருவிழா, நரகாசுரன் திருவிழா போன்றவற்றின் தொடர்ச்சியாகவே இந்த அசுரர்கள் வாரம் திருவிழா நடத்தப்பட்டது.
அசுரர் வாரம்செப்டம்பர் இரண்டாம் வாரம் நடைபெற்ற இந்த கலாச்சார விழாவில் இந்திய வரலாற்றை மறுவாசிப்பு செய்தல் : பல்கலைக் கழக வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுரை அமர்வையும், ஆதிக்கத்தை எதிர்த்தல் : கலாச்சார ரீதியான எதிர்ப்பை வெளிப் படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு விவாத அமர் வையும், இராவணன் என்ற தலைப்பில் முக ஓவியங்கள் வரையும் போட்டியையும், ஒடுக்கப் பட்டவர்களின் உணர்வு என்ற தலைப்பில் கேன்வாஸ் ஓவியக் காட்சியையும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். தங்களை இந்து என்று அழைத்துக் கொண்ட சில மாணவர்கள் இந்த விழா தங்கள் மன உணர்வை புண் படுத்துவதாகக் கூறியுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அங்கு வந்து விழாவை ஏற்பாடு செய்த மாணவர்களிடம் விசாரணை செய்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தொடர்புடைய மாணவர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் உஸ்மானியா காவல் நிலையத்தில் பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்கள் மீது புகார் கொடுத்தது. அதன் அடிப்படையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஆறு மாண வர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி போன்ற அடிப்படைகளில் குழுக்களிடையே பகைமையைத் தூண்டுவது என்ற கடும் குற்றப் பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசுரர் வாரம் பல்கலைக்கழகம் இந்துத்துவத் திற்கு ஆதரவாக செயல்படுகிறது. பல்கலைக்கழக வாயிலில் ஓம் என்று எழுதப்பட்டு, விநாயகர் சிலை வைக்கப்ப்பட்டுள்ளது, புதியதாக கட்டும் கட்டடங்களுக்கு பூமி பூஜை நடத்தப்படுகிறது; நூலகத்தின் முகப்பில் சரஸ்வதி சிலை வைக்கப்பட்டுள்ளது; விடுதியில் மாணவர்கள் ஜாதி அடிப்படையில் பிரித்து தங்க வைக்கப் படுகிறார்கள்; விடுதியில் ஜாதி வன்கொடுமை களும் பதிவாகியுள்ளன! என்கிறார் அந்த பல் கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஜார்ஜ் மேத்தியூ.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி இந்த ஆண்டு நிர்வாகத்தின் அதிகாரபூர்வ ஆதரவோடு விநாயக சதுர்த்தி விழா கொண்டாடியுள்ளது. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது தலித், பழங்குடி மாணவர்களிடம் ஏபிவிபி அடாவடியாக நடந்துகொண்டுள்ளது. ஆயினும் அது குறித்து கண்டு கொள்ளாமல் இந்த முறையும் கல்லூரி நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.

பெரியார் மண்ணான தமிழகத்தில் சிலர் திராவிடத்தை எதிர்க்கிறோம் பேர்வழி என கூறிக் கொண்டு பெரியாரை கொச்சைப்படுத்தி வரும் சூழலில், இந்திய அளவில் மோடியை கதாநாயகனாகக் கொண்டு பார்ப்பனிய நச்சு வளர்ந்து வரும் சூழலில் இத்தகைய அசுர தினத்தைக் கொண்டாடும் உஸ்மானியா மாணவர்கள் பாராட்டிற்குரியவர்கள். ஆனால் பாடை கட்ட வேண்டிய பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கும் வேலையை நாட்டின் அதிகார வர்க்கமும், காவல்துறையும், செய்து வருகின்றன. இதனால்தான் இந்துத்துவத்தின் நச்சு வேர்கள் நாடெங்கிலும் தமது கொடுங்கரங்களை நீட்டி வருகின்றன.
 ----------------------------------------------------------------------------------------------------------------------

ராட்சதர்கள் யார்?

இந்து மதப் பண்டிகைகள் பெரும்பாலும் அசுரனைக் கொன்றதாக - அரக்கனைக் கொன்றதாகக் கூறி, அவற்றின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு எடுத்ததாகக் கூறப்படும் அவதாரங்களும் அசுரர்களைக் கொன்றதாகவே இருக்கின்றன.

தீபாவளி கதையை எடுத்துக் கொண்டாலும், நரகாசுரனைக் (அசுரனை) கொன்றதாகத்தான் கூறப்படுகிறது. அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யூக்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்றுப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதவர் களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

(ரோமேஷ் சந்திர டட் எழுதிய 'புராதன இந்தியா' எனும் நூல் பக்கம் 52)
ராமாயணக் கதை என்பது, ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்

(சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும்' எனும் நூல் பக்கம் 24)

தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும் , அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டி ருக்கிறார்கள்

('விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் 'ராமாயணம் ' எனும் தலைப்பில் 587-589 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது')

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய ருக்கும் ஆரியரல்லாதவருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகை மைக்குக் காரணமாகும்"
(டாக்டர் ராதாகுமுத முகர்ஜி எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய 'இந்து நாகரிகம்' எனும் நூல் பக்-69)

குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவித்து அவர்கள் வாயிலடித்து, வயிற்றிலடித்து சுற்றுபுறத்துக்கு ஊறு விளைவிக்கும் ஊசி வெடிகளை வெடிக்கத்தான் வேண்டுமா?

உருண்டை வடிவிலான பூமியை பாயாகச் சுருட்ட முடி யாது என்பது பள்ளிக்கூட குழந்தைக்குக் கூட பழங்காலத் திலேயே இன்றையப் போரட்டம்தெரியுமே! பாயாகச் சுருட்டி னான்; அதைக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்தான் என்றால் எப்படி நம்புவது? கடலும் பூமிக்குள் தானே இருக் கிறது. அறிவியல் வளராத காலத்து மூடக் கதைகளை இன்றும் பின்பற்றலாமா? இதற்கு பணம் , உணவுப் பொருள், சுற்றுச்சூழல், அறிவு இத்தனையும் வீணாக்குவதா? சிந்திப்பீர்!

இராமயணமும், மகாபாரதமும் இந்தோ ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும், உள் நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும்

(ஜவகர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆப் இந்தியா 'நூல் பக்கம் 76-77)
இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவி யதைக் குறிப்பதாகும்
(ஜவகர்லால் நேரு அதே நூல் பக்கம் -82)
 ---------------------------------------------------------------------------------------------------------------------
 ------------ மின்சாரம் அவர்கள் 19-10-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

52 comments:

தமிழ் ஓவியா said...


பெரியாரின் மன வருத்தம்

பெரியாரும் கி.ஆ.பெ. விசுவநாதமும் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ரயிலில் மதுரை சென்று கொண்டிருந்தனர். மணியாச்சி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. நடைமேடையில் இருந்த கடையில் இட்லி வாங்கி வரும்படி விசுவநாதத்திடம் பெரியார் கூறினார். விசுவநாதம் இட்லி வாங்கி வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கினர். நடை மேடையில் இருந்த இருவர் அவர்களைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கவனித்த பெரியார் விசுவநாதத்தின் தோளைத் தட்டி அவர்கள் இருவரும் நம்மைப் பற்றி ஏதோ கூறுகிறார்கள் என்று கூறினார். அவர்கள் ஏதோ பேசிவிட்டுப் போகட்டும் விடுங்கள் என்று விசுவநாதம் பெரியாரிடம் கூறினார்.

அதற்கு பெரியார் இவன்தான் நம்மை எதிர்க்கிறவன் என்று அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் நாம் எந்த சமுதாயத்துக்காக பாடுபடுகிறோமோ அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை ஏறெடுத்துப் பார்க்கக்கூட தயாராக இல்லையே என்று மனவருத்தத்துடன் கூறினார். பெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று சுட்டதாகக் கூறி அந்த சூட்டை இன்னும் தன்னால் மறக்க முடியவில்லை என்றும் எழுதியுள்ளார் கி.ஆ.பெ. விசுவநாதம்.

நன்றி: தீக்கதிர் 8.10.2013)
தகவல்: ச. இரணியன், சென்னை-_62

தமிழ் ஓவியா said...


தூய தொண்டறத்திற்கு... என்றும் துணை நிற்போம்!...

இட்லர் தன் வாழ்நாளில் 60 லட்சம் யூதர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான் என்பது வரலாறு! ஆனால், அவன் இறுதி முடிவு?... யாவரும் அறிந்ததே!!

கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் போது... யார் ஆண்டால் நமக்கென்ன? என்று அலட்சியப் படுத்தினால் விளைவு என்ன ஆகும் என்பதற்கு வரலாற்றில் இருந்து இதோ! ஒரு சான்று...

ஹிட்லருக்கு எதிரானவன், மார்ட்டின் நீல்மில்லர் என்பவன் நாயால் பிடிக்கப்பட்டு 1937-லிருந்து 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு... இறுதியில் படுகொலை செய்யப்பட்டான்!...

அவன் படுகொலை செய்யப்படுவதற்கு முன் எழுதிய கவிதை உலக மக்கள் அனைவருக்குமே ஒரு பாடம்! அவன் அதில் எழுதுகிறான்.
முதலில் நாஜிகள் யூதர்களைப் பிடித்தனர். நான்பேசவில்லை. ஏனெனில் நான் யூதனில்லை!,

பின்னர் அவர்கள், கம்யூனிஸ்டுகளைப் பிடித்தனர். நான் பேசவில்லை! ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல!.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடித்தனர். அப்போதும் நான் பேசவில்லை!. ஏனெனில் நான் ஒரு தொழிற்சங்கவாதியுமல்ல!

இறுதியில் அவர்கள் என்னைப் பிடித்தனர்! அப்போது எனக்காகப் பேச யாரு மில்லை!.

இதுதான், கொலை செய்யப்படுவதற்கு முன் அவன் எழுதிய பொருள் பொதிந்த கவிதை!
யாராண்டால் நமக்கென்ன? நாம் வாழ்ந்தால் போதும் என எண்ணினால் தன்னலத்தோடு வாழ்க்கை நடத்தினால்...

நாடு அழிவதோடு அவர்களும் அதோடு சேர்ந்து அழியநேரிடும் என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறான்!.

இது ஜாதி, மத வேறுபாடுகளால்... அரசியல் கட்சிகளால் சிதறுண்டு கிடக்கும் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான பாடம்!...

வரு முன் காக்கும் வல்லமை இருந்தால் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்! இதற்கு

ஈரோட்டு பகுத்தறிவுப் பாசறையே... சரியான வழியினைக்காட்டும்!... இந்த இனமான உணர்வு மேலோங்கினால்... பிறகு...

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களை குறிவைத்துத் தாக்குகிற ஈனச்செயல் தலைதூக்குமா?

விழிப்போடு இருப்போம்! அய்யா, அண்ணா வழியில் அயராதுழைப்போம்!! அய்யா ஆசிரியர் அவர்களின் தூயதொண்டறத்துக்கு என்றும் துணைநிற்போம்! மதவெறி மாய்ப்போம்!! -

- நெய்வேலி க.தியாகராசன் (கொரநாட்டுக்கருப்பூர்)

தமிழ் ஓவியா said...


நான் அறிவாளி! நான் முட்டாள்!!

ஒரு மனிதர் சக மனிதர் ஒருவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்தச் சக மனிதர் பெற்றோர்கள், நண்பர்கள், உயரதிகாரிகள் என யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும். அந்த கோரிக் கைக்கான பதில் அல்லது பலன் ஓரிரு நாளில் அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் கிடைக்கவில்லை. ஓரிரு நாளென்பது ஒரு மாதம் ஆகி, நாலைந்து மாதத்தையும் அது கடந்து விட்டது. அப்போதும் பதில் இல்லை; பலன் இல்லை!

கோரிக்கை வைத்தவர் என்ன செய்வார்? கோபம் கொள்வார். கோபம் என்றால் கடும் கோபம். ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். அதைக்கூட என் பெற்றோர்கள், நண்பர்கள் உயரதி காரிகள் செய்யவில்லை. நான் எதற்கு உயிர் வாழ வேண்டும்? இவர்கள் எல்லாம் மனிதர்களா? எனக் குதிப்பார். அவர் கோரிக்கையில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அவர் குதிப்பதிலும் நியாயம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்! நிற்க! அந்த உணர்ச்சியுள்ள மனி தரின் இன்னொரு நாள் அனுபவத்தைப் பார்க்கலாம். காலை எழுந்தவுடன் குளித்தல், பின்னர் காவி உடை தரித்தல், திருநீற்றை உடம்பில் அப்புதல், இரு கைகளையும் ஒன்றாய் இணைத்தல், தன் சாமியிடம் கோரிக்கை வைத்தல். ஒன் றிரண்டு அல்ல; ஒரு நூறு கோரிக்கை. நேற்று இன்றல்ல; நீ பிறந்தது முதலாக! இந்தக் கோரிக்கையில் ஏதாவது ஒன்றே ஒன்று, வேண்டாம் அந்த ஒன்றில் அரை, அதுவும் வேண்டாம் அந்த அரையில் கால், அய்யோ! அதுவும் வேண் டாம். அந்த கால் அளவில் கடுகளவா வது உனக்கு நிறைவேறி இருக்கிறதா?

நிறைவேறவே இல்லை. நீ கோரிக்கை வைத்து எத்தனை ஆண்டுகள் ஆகின் றன? ஒருவருக்கு 20, மற்றவர்களுக்கு 30,50,70 ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். ஆனாலும் உங்களுக்குக் கோபம் வரவில்லையே? உங்களை இந்தப் பூமிக்கே அறிமுகம் செய்து வைத்த பெற்றோர்கள்மீது கோபம் வருகிறது. நான்கு நாளில் உதவவில்லை என்ப தற்காக நண்பர்கள்மீது கோபம் வருகிறது. ஆனால் பிறந்தது முதலே உங்களுக்கு உதவாதவர்மீது ஏன் இன்னும் கோபம் வரவில்லை. ஒரு வழிப் பாதையாக நீங்கள் கோரிக்கை வைப்பது மட்டும் நின்ற பாடில்லை.

சக மனிதர்கள் செய்யாத போது கோபம் வருகிறது. அதாவது அந்த நேரத்தில் அறிவு வேலை செய்கிறது, சிந்தனை வேலை செய்கிறது, உடம்பில் உணர்ச்சி இருக்கிறது. அதே நேரத்தில் கோரிக்கைகள் தொடர்ந்து 100 விழுக்காடும் தோற்றுப் போகிற கடவுளிடத்தில் கோபம் வருவதில்லை.

ஒரு மனிதன் ஒரு நேரத்தில் அறி வாளியாகவும், மற்றொரு நேரத்தில் முட்டாளாகவும் எப்படி இருக்க முடியும்? ஒரு மனிதனை அறிவாளி என்போம் அல்லது முட்டாள் என்போம். அப்படியின்றி இவர் ஒரு அறிவாளி அந்த நேரத்தில் முட்டாள் என்று எப்படி சொல்ல முடியும்?

சொல்ல முடியும்! இந்தியாவில் அப்படி சொல்ல முடியும். இந்து மதம் இருக்கிற வரை அப்படி சொல்ல முடியும். அதைப் பாதுகாக்கிற பார்ப்பன ஊடுருவிகளும், அதனூடே வந்த ஊடகங்களும் இருக்கிறவரை சொல்ல முடியும். சரி! எப்போது நாம் சொல்ல முடியும்! மேலே சொன்னதை ஒழித்து விட்டால் வெல்ல முடியும்!

வெல்வதா? வீழ்வதா? என்பதை முடிவு செய்வோம், வாருங்கள்!

_- வி.சி. வில்வம்

தமிழ் ஓவியா said...பாம்பு பால் குடிக்காது

உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்ன வென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தன பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டன. அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத் தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது.

ஆகவே, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

திருட்டு

அவன்: கற்சிலையை (கடவுளை) பொற்(சிலை) பாதம்னு வருணித்து விளக்கியது தப்பாய் போச்சு...

இவன்: ஏன் என்னாச்சு...?

அவன்: அதன் காலை மட்டும் வெட்டி எடுத்துட்டு போயிட்டாங்க திருடன்க..
ஆ !? !? !?

- கோ. கலியபெருமாள்,

தமிழ் ஓவியா said...


முட்டாள், அயோக்கியன்; காட்டுமிராண்டி!

- சிவகாசி மணியம்

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று கூறுபவர்களை கடவுள் ஏன் சார் தண்டிப்பதில்லை? அப்படியா னால் அவர் இல்லையா? என்பது கேள்வி இருந்தால் தானே தண்டிப்ப தற்கு என்று ஒரே வரியில் மிகச் சரியாக திருப்பிச் சொல்லி யிருப்போம் நாமாக இருந்தால்!

ஆனால், திருவாளர் சோ, தம் இதழில் அப்படிக் கூறுபவர்கள் பொது மேடையில் அப்படி பேசிய பிறகு அல்லது பத்திரிகைகளுக்கு எழுதிய பிறகு, தனிமையில் கடவுளை நினைத்து ஆண்டவா பிழைப்பிற்காக ஏதோ பேசுகிறோம்.

நாங்கள் உண்மையில் அப்படி நினைக்கவில்லை என்பது உனக்கே தெரியும். எங்களை மன்னித்து விடு என்று கேட்டுக் கொள்கிறார்களோ என்னவோ! அல்லது தங்கள் குடும்பத்தினரைக் கோயில் குளங்களுக்கு அனுப்பி பரிகாரம், பிராயச்சித்தம் எல்லாம் செய்யச் சொல்கிறார்களோ என்னவோ! நாம் என்ன கண்டோம்? என்கிறார் (துக்ளக் 2.10.2013) வேடிக்கை விளை யாட்டாக அல்ல, விஷமத்தனமாக.

நம்மை நோக்கி கேள்விகள் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர் கொள்ள நாம் தயங்கியதில்லை. பதில் சொல்லியும், பகை முடிக்கவும் பகுத் தறிவுப் பகலவன் நம்மை பக்குவப் படுத்தியிருக்கிறார்.

கடவுள் இல்லை என்று பிழைப் புக்காகச் சொல்கிறோமாம். கடவுள் இருக்கிறார். இல்லாத இடமே இல்லை. தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்று சொல்வதெல்லாம் செத்து சுடுகாடு போவதற்காகவா? கடவுள் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தத் தானே? வேறு எதற்கு? ஒரே ஒரு முறை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறிக் கொட்டி விட்டு ஓய்ந்து கிடப்பவர்களல்ல நாம்.

தமிழ் ஓவியா said...


ஓராயிரம் முறை அல்ல. கால மெல்லாம், இறுதி மூச்சு அடங்கும் வரை பேசியும், எழுதியும் வருபவர்கள். யாரிடமும் போய் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் கோழைகள் அல்ல. மறுபடியும் மறுபடியும் மன் னித்துக் கொண்டிருக்கும் வேலையை மடையன் கூடச் செய்ய மாட்டான். பரிகாரம், பாவ மன்னிப்பு, பிராயச் சித்தம் என்பதெல்லாம் சுத்த பித்த லாட்டம் என்று ஓங்கிச் சொல்பவன் கடவுள் மறுப்பாளன் மட்டுமே! இதுபோன்ற அர்த்தமற்ற வேலைகளில் பணத்தையும், நேரத்தையும் வீணடிப் பவர்கள் பக்த சிரோன்மணிகளே. அச்சமின்றி அவர்களால் வாழ முடிகிறதா? கந்து வட்டி கடன், தீராத நோய், வாட்டும் வறுமை, வாழ்க் கையில் நடுக்கம், வற்றாத பிரச் சினைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் இவற்றில் ஏதேனும் நின்று அண்டாத பக்தனைக் காட்ட முடியுமா? ஆண்டவன் ஒருவன் இருந்தால், அவன் கருணை உள்ளவனாக இருந்தால் தன்னை நம்பி வாழும் பக்தனுக்கு தீங்குகள் நெருங்குவதை அனுமதிப்பானா?

தமிழ் ஓவியா said...

அருள் வாக்கும், ஆசீர்வாதங் களையும், அள்ளித் தந்து தந்திரங் களால் சாகசங்கள் நிகழ்த்தும் சாமி யார்களும், மடத் தலைவர்களும் யோக்கியர்களா? முற்றும் துறந்த வர்கள் என்று கருதப்படும் இவர் களால் பிரம்மச்சரிய விரதமும், ஒழுக் கமும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடிகிறதா? இவர்களைப்பற்றி நாள்தோறும் வரும் செய்திகள் அதிர வைக்கின்றனவே களவு, கயமை, பாலியல் வன்முறை இவையெல்லாம் பக்தியின் பெயரால் தானே அரங்கேறு கின்றன. சாமியார்களே போலி என்கிறபோது போலிச்சாமியார் என்ற பிரிவு வேறு; நாடு என்னாவது?

தமிழ் ஓவியா said...

வெறுமனே கடவுள் இல்லை என்று கத்திக் கொண்டு திரிந்தவர் களல்ல நாம். காசு கொடுத்து பிள்ளையார் பொம்மைகளை வாங்கி பலரும்அறிய தெருவில் போட்டு உடைத்தோம். ராமன் படத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்தினோம். தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மனும் வர வில்லை, ஒரு நாயும் வரவில்லையே. ஒரு வேளை, மதுரை திருமலை நாயக்கர் மகால் பெருந்தூண்களில் ஒன்றில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் திண்டாடுகிறானோ என்னவோ!

கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதும் பொய்யுரை தானே? கொடிய நோயில் சாகிறவர்கள், விஷம் அருந்தியும், விபத்திலும் சாகிறவர்கள் கொலை, தற்கொலை யில் முடிந்து போகிறவர்கள் அத்தனை பேரும் கடவுள் இல்லை என்பவர்களா?

அண்மையில் வடக்கே உத்தரகாண்ட் பெரு வெள்ளத்தில் அடித்துச் சொல்லப்பட்டு காணாமற் போன 4120 பேரும் கடவுளால் தண்டிக்கப்பட்ட நாத்திகர்களா? கடவுள் இல்லவே இல்லை என்று கூறிவிட்டு கடவுளிடம் மன்னிப்பு கோராதவர்களா? புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் என புள்ளி விவரம் கூறுகிறதே அது பொய்யா/ கருணையே வடிவானவன் காப் பாற்றவில்லையே!

தமிழ் ஓவியா said...

இது போன்ற நிகழ்வுகள் எத் தனையோ இருந்தாலும் எடுத்துக் காட்டாக ஒன்றை மட்டும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கையில் நடந்தது. அவரது துணைவியார் உடல் நலம் இல்லா மல் அவதிப்பட்டுக் கொண்டிருந் தார். ஒரு இரவின் போது எதிர் பாராது உயிருக்குப் போராடும் நிலை. கணவரும் அருகில் இல்லை. மருந் தும் கைவசமில்லை. மருத்துவரை அழைக்கலாம் என்றால் தொலை பேசியும் வேலை செய்யவில்லை. அருகிலும் யாரும் இல்லாத் தனிமை விளைவு மரணம்! செய்தி கால தாமதமாக பால்தாக்கரேக்குப் போகிறது. பதறியடித்து ஓடி வந்தார். சடலத்தைக் கண்டு அழுது புரண்டு விட்டு என்ன சொன்னார் தெரியுமா?

கடவுள் என்று எவருமில்லை. எதுவுமில்லை. அப்படி ஒருவன் இருந்திருந்தால் என் மனைவி அனாதையாகச் செத்துப் போயி ருப்பாளா? அவள் ஒரு கடவுள் பக்தை.ஆபத்துக்கு உதவாத கடவுள் இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? நான் இன்று முதல் நாத்திகன் என்று பகிரங்கமாக அறிவித்தார். அன்று மனைவி பிழைத்திருந்தால் நாத்திகர் என்று தன்னை அறி வித்திருக்க மாட்டார். ஆத்திரத்தில் அவசரப்பட்டு அப்படி அறிவித்தவர் நாத்திகராய் அப்படி அறிவித்தவர் நாத்திகராய் நெடுநாட்கள் நடமாட முடியவில்லை. ஏன் தெரியுமா?

இவரது கட்சியோ சிவசேனா நாத்திகம் பேசினால் தலைவர் பதவியைத் தக்க வைக்க முடியாது. நாத்திக வேடம் அவரைப் பொறுத்த மட்டில் அற்ப ஆயுளில் கலைந்தது. கடவுளுக்காகவே, கடவுள் பெய ராலேயே கட்சி நடத்தும் 24 காரட் ஆன்மீகவாதிகளுக்கு உதவ அந்த சிவன் வரவில்லையே ஏன்? அப்படி ஒருவன் இருந்தால் தானே வருவான்?

மொட்டை போடுவது, தலையில் தேங்காய் உடைப்பதுபோன்ற பரி காரம், பிராயச் சித்தங்களை செய்யத் தவறி விட்டாரோ பால்தாக்கரே? நாம் என்ன கண்டோம்?

அறிவிலிகளுக்கு, அரைவேக்காடு களுக்குத் தலையில் ஆணி அடித்தாற் போல் நம் அறிவு ஆசான் சொன்ன தை மீண்டும் அழுத்தமாக சொல்வோம்.

கடவுள் இல்லை இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

தமிழ் ஓவியா said...


நீங்கள் தனியாக இருந்தால்....


வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து

மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந் திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர் வினால் இதயம் சீராக துடிக்கும்".. பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லலாம்.. இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.. தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!

- தகவல்: பெரியாரடியான்

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார்தம் தத்துவ முத்துக்கள்

நான்

நான் ஒரு சுதந்திர மனிதன் எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப் பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களை சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து ஒப்பக்கூடியவற்றை ஒப்பி, தள்ளக் கூடியவற்றைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலே தான் எதையும் தெரிவிக்கிறேன்.

எப்படிப்பட்ட பழைமை விரும்பிகளானாலும், இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்கும் ஆகாது.

உங்களுக்கு இவை உண்மை யெனப் புலப்படுமாகில் அவற்றை, உண்மையென ஒப்புக்கொள்ளுவதில் மட்டும் பிரயோஜனமில்லை; அவற்றை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன் படி நடக்க முயற்சி செய்யுங்கள்!

எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பது தான் என்னுடைய விடுதலை.

அவற்றை ஆராய்ந்து அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை!

2) என் பணி

நான் திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமு தாயத்தினரைப் போல மானமும் அறி வும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல் லையோ, அந்தப்பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற் போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அந்தத் தொண்டுக்குத் தகுதியு டையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்!

3) மனச்சாட்சியின் படியே...

எனது வார்த்தைகளும், எழுத்துக் களும், செய்கைகளும், தேசத் துரோகம் என்றும், வகுப்பு துவேஷமென்றும், பிராமண துவேஷமென்றும், மான நஷ்டமென்றும், அவதூறு என்றும், ராஜதுரோகம் என்றும், ராஜ துவேஷமென்றும், நாஸ்திகமென்றும், மததூஷணை என்றும் சிலர் சொல் லவும், ஆத்திரப்படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபி மானிகள், தேசபக்தர்கள் என்பவர் கள் என்னை வையவும் என்னைத் தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளா னேன், இந்த இன்பமற்ற காரியங் களை நான் ஏன் செய்ய வேண் டும்?

தமிழ் ஓவியா said...

சிலருக்காவது மன வருத்தத்தை யும், அதிருப்தியையும் கொடுக்க தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பது உண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ, போகட்டும்? நாம் ஏன் இக்கவலையும், இவ்வளவு தொல் லையும் அடைய வேண்டும்? நமக் கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பதுபோல் இருக் கிறது என்பதாகக் கருதி விலகி விட லாமா? என்று யோசிப்பதுண்டு ஆனால் விலகுவதில் தான் என்ன லாபம்?

ஏறக்குறைய நமது ஆயுள் காலமும் தீர்ந்துவிட்டது. இனி நான்கோ, அய்ந்தோ அல்லது அதிகமாயிருந் தால் பத்து வயது காலமோ இருக்க லாம். இந்த கொஞ்ச காலத்தை ஏன் நமது மனச்சாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்ப தாகக் கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை!
(குடிஅரசு -_ 1.5.27)

தமிழ் ஓவியா said...

4) தோழர்களே...!

சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்டக் கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினி யையும், கொடுமைகளையும் பாருங் கள்; வீடு வாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய் திரியும் கூலி மக்களைப்பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப்படு கிறார்கள் என்பதையும் பாருங்கள்

தமிழ் ஓவியா said...

உயர்ந்தவன் - தாழ்ந்தவன்
பார்ப்பான் - பறையன்
முதலாளி - தொழிலாளி
குரு -சிஷ்யன்
மகாத்மா - சாதாரண ஆத்மா
அரசன் - குடிகள்
அதிகாரி - பிரஜை
என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரை மட்டமாக்குங்கள். அவற்றின் மீது தேசம், மதம், சாதி என்கின்ற பாகு பாடு இல்லாததும், மனித சமூகம் சம உரிமை - சமநிலை. என்கின்ற கட்டி டத்தைக் கட்டுங்கள். இதைச்செய்ய நீங்கள் உலகில் உள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் சாதி, மதம், தேசம் என்கின்ற வித்தியாசம் இல் லாமல், பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள்!
அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்!
- குடிஅரசு 2.11.32

5) பகுத்தறிவு

சமுதாயத்துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறை வினால், பகுத்தறிவு இல்லாததினால் அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாததினால் ஏற்பட் டவையே. மக்களுக்கு மானத்தையும் அறிவையும் புகட்டும் தொண்டுதான் உயர்ந்த சமதர்மத் தொண்டாகும்.
பகுத்தறிவு என்பது ஒரு மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும், மற்ற மனி தர்களுக்கு தன்னாலான தொண்டு உதவி செய்ய வேண்டும் என்பதையும் தத்துவமாகக் கொண்டதும் ஆகும்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுக்கு ஈடானது உலகில் வேறு எதுவுமே இல்லை. அதைப் பயன்படுத்தாமல் துருப்பிடிக்க விடாதீர்கள். அதைத் தங்கு தடை யின்றி தாராளமாய் பயன்படுத்துங் கள் மனிதராகுங்கள்!

பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி மனிதர் வாழ்க்கைத் தரம் என்னவோ அந்தப்படி நடந்து கொள்வதை நடப்பு இலட்சியமாகக் கொண்டவனாக இருக்க வேண்டும்!
வாழ்க்கையின் இலட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற் றுவது என்பதுதான். தனக்காக மட்டும் வாழ்வது என்பது ஒழுக்க மாக ஆக முடியாது. சமுதாயத்திற் காக பணிபுரிய வேண்டும். ஒழுக்கத் தோடு வாழ்கிறேன் என்று உங்கள் வீட்டுக்கதவை மூடிக்கொண்டு வாழாதீர்கள்!

6) விடுதலை

உண்மையான விடுதலை உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவுக்கும், அடிமைத்தனத்திற்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும். அந்தத் தைரியம் எவ்வித கட்டுப் பாடுகளையும், நம்பிக்கைகளையும் உடைத்தெறியத் தக்கதாய் இருக்க வேண்டும்.

ஏழையாயிருப்பதும், செல்வவானா யிருப்பதும், கடவுள் செயல் என்கிற எண்ணத்தை மக்களிடமிருந்து அடியோடு போக்கி செல்வத் தன் மையின் கொடுமைகளையும், புரட் டுகளையும் தெளிவுபடுத்திவிடுவதும், அதுபோலவே அரசாங்கமும், கடவு ளுடைய கட்டளை என்பதை மாற்றி ஜனங்களுக்காக எல்லோரையும் சமமாய் நடத்தும் சமதர்ம ஆட்சி தான் நிலைபெறவேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பது, இதற்கு இடை யூறாக வரும் சமயக்காரனையோ, சாமி பக்திக்காரனையோ, பண்டி தனையோ, பணக்காரனையோ, அரசாங்கத்தையோ, ஆட்சியையோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதே நமது நோக்கமாககும்!

7) அழிவு வேலையை?

நமது இயக்கம் சீர்திருத்த இயக்க மல்ல; ஆனால், அழிவு வேலை இயக்கம் என்றே சொல்வேன். சீர்திருத்தம் என்றால் எதைச் சீர்திருத்துவது? இன்றைய நிலையில் மனித வாழ்க்கைக்கு, சமத்துவத் தன்மைக்கு பொரும்பாலான மக்க ளாகிய ஏழை மக்கள் படும் கஷ்ட மும், தரித்திரமும், இழிவும் நீங்கு வதற்கு அனுகூலமாக என்ன கொள்கைகள், நடைமுறைகள் இங்கு இருக்கின்றன என்று பாருங்கள். அதாவது மத சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு கொள்கை மனித சமூக ஜீவகாருண்யத்திற்காவது, சமுதாயத்திற்காவது ஏற்றதாய் இருக்கிறதா? இருந்தால்தானே சீர்திருத்தம் செய்வீர்கள்? இவைகளில் எதைச் சீர்திருத்தம் செய்ய நினைத் தாலும் அவை இன்னும் வெகுகாலம் நிலைத்திருப்பதற்குத்தான் பயன் படுமே தவிர மாறுதலை உண்டாக்க முடியாது. இவைகளை எல்லாம் அழித்து ஒழித்தாலொழிய கஷ்டம் நீங்கப்போவதில்லை!

8) நீயே ஒப்புக்கொள்கிறாயா?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காக கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான், கடவுளை உண்டாக்கியவன் முட் டாள் என்றால் - எதற்காக நீங்கள் கோபித்துக்கொள்ள வேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என் றால் உண்டாக்கியவன் யார்? அச் சொல் யாரைக்குறிக்கிறது? கோபிக் கின்றவனே! நீ, கடவுள் உண்டாக்கப் பட்டது என்பதை ஒப்புக்கொள் கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ளுகிறாயா?

9) பதில் எங்கே?

என்னைப் பொறுத்தவரையில் என் தொண்டின் தன்மை என்ன? மக்களைப் பார்த்து, ஏ.காட்டு மிராண்டிகளே...! என்றும் மானங் கெட்டவர்களே என்றும் தான் கூறுகிறேன். ஒரு இடத்திலாவது, யாராவது எழுந்திருந்து எதிர்த்துக் கேட்கவில்லையே! கடவுளைப்பற்றி எவ்வளவு கடுமையான கருத்துக் களைச் சொல்லி வருகிறேன். யாராவது மரியாதையாக - ஒழுங் காகப் பதில் சொல்லி இருக் கிறார்களா? கடவுள் பக்திக்கார னைத்தான் கேட்கிறேன் சொல் லட்டுமே.

(விடுதலை -9.10.72)
19-10-2013

தமிழ் ஓவியா said...


கோயில் கதைகள் சந்தி சிரிக்கின்றன

எங்கும் அடிதடி மோதல்கள்!

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு

திருச்சி, அக்.19- மழை வேண்டி திருச்சி அருகே சினை ஆட்டை பலியிட்டு குட்டியை வெளியே எடுத்து அம்மன் சிலை முன்பு வைத்து பக்தர்கள் வழிபட்டனராம்!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தாத்தை யங்கார்பேட்டை பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. இதனால், பயிர்கள் காய்கின்றன. குடிநீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை வேண்டி இங்குள்ள தொட்டிச்சியாயி அம்மன் கோயிலில் வினோத வழிபாடு நடந்தது. சினை ஆட்டை மேளதாளங்களுடன் பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்துவந்தனர். கோயில் வாயிலில் சினை ஆட்டைத் தலையில் அடித்து கொன்று, வயிற்றை அறுத்து குட்டியை வெளியே எடுத்து வாழை இலையில் வைத்து அம்மன் சிலைக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஆட்டுக்கறி, கம்மஞ் சாறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்ட தாம். ஊர் பிரமுகர் பொன்ராமன் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு பூஜை நடந்துள்ளது. தாய் ஆடு இறந்தபோதிலும் சிறிது நேரம் வயிற்றில் இருக்கும் குட்டி உயிருடன்தான் இருக்கும். அதுவும் இறந்த பிறகு அந்த இடத்திலேயே குட்டியை புதைத்து விடுவர். இதனால் மழை வரும் என்பது அய்தீகம் என்றார். இப்படியும் ஒரு காட்டு மிராண் டித்தனமான மூடநம்பிக்கை!

கோவில் திருவிழாவில் அடிதடி! கடலாடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவையன் மகன் மலையப்பன் (வயது 48). இதே ஊரைச் சேர்ந்தவர்கள் முருகன் (33), முனியசாமி (45), முனியாண்டி (31), தர்ம ராஜ் (25), பிச்சைமுத்து (39), பம்பையன் மனைவி (60), பிச்சைமுத்து மகன் சுரேஷ் (18). மாரியூர் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றபோது இவர்கள் ஏழு பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக மாலை யப்பனைத் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் படுகாயமுற்று கடலாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மலையப்பன் சாயல்குடி காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவம் 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து முருகன், முனியசாமி, தர்மராஜ், பிச்சைமுத்து ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மேலும் தலை மறைவாகியுள்ள முனியாண்டி, முனி யம்மாள், சுரேஷ் ஆகிய மூவரையும் காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.

புளியங்குடியிலும் கோயில் விழாவில் மோதல் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. நேற்று 10ஆம் நாளையொட்டி இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கச்சேரியை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 6 பேர், கச்சேரி பார்த்து கொண்டிருந்த சிந்தாமணி சான்றோர் மடத்து வடக்கு தெருவைச் சேர்ந்த பாஸ்கரன், சீனிவாசன், மகேஸ்வரி ஆகிய 3 பேரை சரமாரி தாக்கினர். இத னால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் பலர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தமிழ் ஓவியா said...

தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி காவல்துறை யினர் சிந்தாமணி சான்றோர் நடுத்தெருவை சேர்ந்த கலைசெல்வன், சுரேஷ், காமராஜர் நகர் 2ஆம் தெருவை சேர்ந்த சுரேஷ், இல்லம் பிள்ளை மேல தெருவைச் சேர்ந்த பாலமுருகன், மாரியப்பன் மற்றும் ஒருவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேப்போல் சுரேஷ், பாலமுருகன் ஆகிய 2 பேரும் தங்களை பாஸ்கரன் உள்பட 3 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறி சங்கரன் கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரிலும் காவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி கோயிலில் திருட்டைக் கண்டுபிடிக்க ஏற்பாடு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான, அனைத்து கோவில்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இப் பணியை விரைவுப்படுத்த, அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், அதன் பாதுகாப்பை பலப்படுத்த, தேவஸ் தானம் முடிவு செய்தது. நாடு முழுவதும் உள்ள, தேவஸ்தானத்திற்குட்பட்ட அனைத்து கோவில்களிலும், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, கடந்த ஜூலை மாதம் நடந்த, அறங்காவலர் குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு, 62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும், முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் பிரம்மோற்சவத்திற்குள் முடிக்கப் படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின், அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த, சுப்ரமணியத்திற்கு பதிலாக, கோபால் பொறுப்பேற்றார். பிரம்மோற்சவம் முடிந்து விட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறங்காவலர் குழு தலைவர் தலைமையில், மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு, அய்தரா பாத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தில், அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த, தற்போது ஒதுக்கப் பட்டுள்ள நிதி போதாது என்பதால், நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோர, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத் தை நிறைவேற்ற, 6-7 மாதங்கள் தேவைப்படும். இப்பணியை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, பிரம்மோற்சவத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. கோவில்களில் பொருத்தப் படும் கேமராக்களை கண்காணிக்க, திருமலை மற்றும் திருப்பதியில், 14 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழ் ஓவியா said...

சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை நகரங்களில் உள்ள, தேவஸ்தானத்திற்கு சொந்த மான கோவில்களில், நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, இணையதளம் வாயிலாக, திருப்பதியில் இருந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பாது காப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரி அசோக்குமார் கூறும்போது, ""இந்த கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்த, அரசின் ஒத்துழைப்பும் அவசியம். கண்காணிப்பு கேமராக்கள், விரைவில் பொருத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

திருவண்ணாமலை அருணாசல ஈசுவரரின் கிருபையோ கிருபை

பட்டினியால் கன்றுகள் ச(க)வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கும் பசு மாடுகள், காளை மாடுகள், கன்றுக் குட்டிகள் கோவில் கோசாலையில் பரா மரிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த மாடுகளுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை, சரியான பராமரிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கடந்த 14ஆம் தேதி கோசாலைக்கு சென்று தங்கள் சொந்த செலவில் மாடுகளுக்கு வைக்கோல் வாங்கி போட்டனர்.

தமிழ் ஓவியா said...


பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் மாடுகளுக்கு உணவு வழங்கும் வரை கோவில் கோசாலையில் இருந்து செல்லமாட்டோம் என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்தினர். அப்போது கோசாலையில் உள்ள மாடுகள் இறந்து போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் தலையிட்டு மாடுகளுக்கு ஆவின் மூலம் தினமும் பசும்புல் வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவில் கோசாலையில் பராமரிக்கப்பட்ட மாடு களில் 36 மாடுகள் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்து முன்னணியினர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கோவில் கோசாலைக்கு சென்று அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தை தோண்டினர். அப்போது அதற்குள் கன்று குட்டி பிணம் ஒன்று புதைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனராம்.

அந்த கன்றுகுட்டியை வெளியே எடுத்து விட்டு மீண்டும் தோண்டியபோது மேலும் பசுங்கன்றுகளின் எலும்புக் கூடுகள் சிக்கி யுள்ளன. மொத்தம் கோசாலையில் 4 பசுங் கன்றுகள் இறந்த தாகவும் அதில் 2 கன்றுகளை சாணத்தில் புதைத்ததும் மேலும் 2 கன்றுகள் பிணத்தை வெளியில் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இன்று பொக்லைன் எந்திரம் மூலம் சாணக்குவியல் தோண்டப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


இது தொடர்பாக கோசாலை ஊழியர் களிடம் விசாரணை நடத்தப்படும் என்று கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி தெரிவித்தார். தன்னிடம் காணிக்கையாக ஒப் படைத்த மாடுகளை காப்பாற்ற முடியாதவர் தான் சர்வ சக்தி வாய்ந்தவராகவும் கருணையே வடிவானவராம்.

கையாலாகாத கடவுள்
கோவையில் கோயில் பூட்டு உடைப்பு

கோவை கணபதி அருகே உள்ளது செக்காந்தோட்டம். இங்குள்ள ரயில்வே கேட் அருகில் 43 ஆண்டு பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக இருப்பவர் பாலகிருஷ் ணன். இவர் நேற்று வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு 7.30 மணிக்கு வீட்டுக்கு சென்றார். நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி என்பதால் சிறப்பு பூஜைக்காக பூசாரி அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பூசாரி முன் பக்க கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு பீரோவும், உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த கண், ஒட்டியாணம் உள்ளிட்ட சாமியின் அலங்கார நகைகள் (கவரிங்) மற்றும் குத்து விளக்கின் தண்டு பகுதி, உண்டியலில் இருந்த காணிக்கை ஆகியவை கொள்ளை போயி ருந்தது. மேலும் சிவலிங்கத்தின் மீது சாத்தி யிருந்த அடையையும் கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை.

கொள்ளை குறித்து ரத்தினபுரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் வேலுசாமி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்களும் தடயங் களை சேகரித்தனர். விசாரணையில் இரவு 11.30 மணி முதல் 2.30 மணி வரை கொள்ளை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

2 வாலிபர்கள் அந்த நேரத்தில் இந்த பகுதியில் நடந்து சென்றதாகவும், அதில் ஒருவன் தலையில் துண்டை கட்டியிருந்தான் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர் காவல்துறை யினரிடம் தெரிவித்தனர். தலையில் கட்டி யிருந்து துண்டு சிவலிங்கத்தின் மீது சாத்தப் பட்டிருந்த ஆடையாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் மரத்தடியில் செருப்பு உள்ளது. அது கொள்ளையனின் செருப்பாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இது குறித்து ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள். ரத்தினபுரி, கவுண்டம் பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளை நடப்பது பக்தர்களிடையே அதிர்ச்சிடைய ஏற்படுத்தி யுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே கோவிலில் கொள்ளை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


மோடி அம்பலமாகிறார்


இதோ ஒரு கோயபல்சு மோடிமீது தாக்கு!

புதுடில்லி, அக். 19- சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன் னால் அது உண்மையாகி விடும் என்ற ஹிட்லரின் தலைமை கொள்கை பரப்பாளர் ஜோசப் கோய பல்ஸ்சின் கொள்கையை அப்படியே கடைபிடிக் கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடில்லியில் நடை பெற்ற இளைஞர் காங் கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அக மது கூறியதாவது:-

நாட்டிலேயே முன் னேறிய மாநிலம் குஜராத் தான் என நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முன்னேறுவதில் நமக்கொன்றும் பிரச் சினை இல்லை.

அது காந்தி, வல்ல பாய் பட்டேல் போன்ற வர்களின் பூமி. அதனால் முன்னேறதான் செய்யும்.

ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக் கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை ஒப்பிடுகையில் குஜராத் மாநிலம் 12-ஆவது இடத் தில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளதே?

முன்னேற்றம் என்ற பெயரில் பா.ஜ.க. தொடர்ந்து பொய்யையே பரப்பி வருகிறது. பா.ஜ.க. வின் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதே சம் ஆகிய மாநிலங்கள் தேசிய அளவில் 25 மற் றும் 26 இடத்தில் உள்ள தாக அதே ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட் டுகிறது.

இதுதான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முன்னேறியுள்ள கதை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

ஆசாராம் பாபுவைக் காப்பாற்றும் மோடி

குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங் களை பாலியல் பலாத் காரம் செய்து விட்ட தாக அக்கா-தங்கை இருவர் புகார் அளித் தனர். அதன் அடிப் படையில் காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாராம் பாபுவை தங் களிடம் விசாரணைக் காக ஒப்படைக்க வேண் டும் என குஜராத் மாநில காவலர் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் காவலர் துணை ஆணையர் மனோஜ் நினாமா தலைமையி லான போலீசார் ஆசா ராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப் புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் காவல்துறையினர் காவ லில் வைத்து விசாரிக்க காந்திநகர் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி அனு மதி அளித்தது.

ஆசாராம் பாபுவுக்கு நேற்று ஆண்மை பரி சோதனை செய்யப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பரிசோ தனை முடிவில் 72 வய தாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந் துள்ளது.

இந்நிலையில், குஜ ராத்தில் ஆசாராம் பாபு மீதான பாலியல் வன் முறை புகார் தொடர்பான வழக்கில் மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலை வர் அர்ஜுன் மோத் வாடியா, இது தொடர் பாக உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆசாராம் பாபு மீது நில அபகரிப்பு, ஊழல், பாலியல் குற்றச்சாட்டு கள் ஆகியவை கூறப் பட்ட போதெல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரை காப்பாற்றிக் கொண்டே வந்துள்ளது.

அவரை பற்றிய செய் திகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆரம்பத்திலேயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவ ருக்கு மேலும் மேலும் தவறுகள் செய்யும் துணிச்சல் வந்திருக்காது.

இவ்வாறு கூறிய அர்ஜுன் மோத்வாடியா நரேந்திர மோடியை புகழ்ந்து ஆசாராம் பாபு பேசிய டேப்பை ஒலிக்க செய்தார். திபேஷ் வகேலா மற்றும் அபிஷேக் வகேலா ஆகியோரின் மர்ம மர ணத்தின் போதும், சூரத் தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போதும் இந்த அரசு ஆசாராம் பாபு மீது எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை.

நரேந்திர மோடிக்கும் ஆசாராம் பாபுவுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விசாரிக்க உயர்நீதி மன்றத்தின் கண்காணிப் பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

சாமியார் ஆசாராமின் மகன் எங்கே? எங்கே?

பாலியல் குற்றச்சாட் டில் சிக்கி தலைமறை வாக உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயை பிடிக்க, குஜராத் காவல் துறையினர் பிகாரில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் போலீஸர் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர் பாக சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப் பட்டு ராஜஸ்தான் மாநி லம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரத் சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாரா யண் சாயை காவலர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நாரா யண் சாயின் மெய்க்காவ லரான அரியாரி கிரா மத்தைச் சேர்ந்த கெசல் குமார் என்கிற ஹனு மான், காவலர் வருவ தைத் தெரிந்து தப்பி யோடி விட்டார்.

இந்நிலையில் நாரா யண் சாய் தப்பிச் செல்ல உதவி செய்ததாக அவ ரது உதவியாளரும், டில்லியில் உள்ள ஆசிர மத்தின் பொறுப்பாளரு மான தர்மேஷ் என்ப வரை தில்லி காவல்துறை யினருடன் இணைந்து குஜராத் காவலர் கைது செய்தனர்.

குஜராத்தை விட்டு வெளியேறிய நாராயண் சாய், டில்லி வந்ததாக வும், அடிக்கடி அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக வும், தகவல் தொடர்புக் காக அவர் 17 சிம் கார்டு களை பயன்படுத்தியுள்ள தாகவும் காவல்துறையி னர் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக் கான அறிக்கையைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பி.ஜே.பி. இதுபற்றி பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளது.

பொது சிவில் சட்டம், ராமர் கோயில் ஜம்மு-காஷ்மீருக்கான தனி அந்தஸ்து இந்தக் கொள்கைகளில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளது.

மக்களிடம் கருத்தையும் கேட்டு விட்டு அதற்கு நிபந்தனைகளையும் வைப்பது எந்த ஊர் நியாயமோ!

பிஜேபி கூறியுள்ள இந்த மூன்று நிபந் தனைகளும் ஆர்.எஸ்.எஸின் அடிப்படை அஜண்டா! அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் குயுக்தியும் இதில் இருக்கிறது.

பிஜேபியின் லகான் ஆர்.எஸ்.எஸிடம் இருப்பதாகக் கூறுவது தவறு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, இன் னொரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸின் அடிப் படைக் கோட்பாடுகளில் சமரசம் இல்லை என்று சொல்லுவதன்மூலம் பிஜேபி தன் முகத்தில் பூசிக் கொண்டிருந்த வண்ணப் பொடியைக் கழுவி விட்டது. உண்மையான ஆர்.எஸ்.எஸ். முகம் பளிச்செனத் தெரிய வில்லையா?

தமிழ் ஓவியா said...

அனுகூல சத்ருவா?

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் சங்கல்ப திவாரிப் போராட்டத்துக்கு அழைப்புக் கொடுத்தது.

உத்தரப்பிரதேசம் இதற்கு அனுமதி மறுத்த நிலையில் நேற்று தடையை மீறி ஊர்வலம் சென்றபோது 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பி.ஜே.பி. எம்.பி. யோகி ஆதித்ய நாத்தும் அடங்குவார். இதன்மூலம் ராமன் கோயில் கட்டுவதையும் தேர்தல் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துவிட்டது என்று கருதலாமா?

சரத் பவுர்ணமியை ஒட்டி 10 ஆயிரத்துக் கும் மேற்பட்டவர்கள் புனித நீராடிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தில் வி.எச்.பி. பேரணியைத் தொடங்குவதன் உள்நோக்கம் - கலவரத்தை உண்டாக்கு வதே!

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடம் - இப்பொழுதுள்ள நிலையிலேயே நீடிக்கப்பட வேண்டும். இதன் அருகே யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில் - அந்த இடத்தை நோக்கிப் பேரணி என்பதெல்லாம் சங்பரிவார்க் கும்பலின் அடாவடித்தனத்தைத் தான் பச்சையாக வெளிப்படுத்தும்.

எந்த விதி முறைகளையும், தீர்ப்புகளையும் மதிக்காத இந்தக் கூட்டத்தின் கையில்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டுமாம் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நாக்கில் தேன் தடவும் மோடி

மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் கனவுகளை நனவாக் குவோம் என்று நேற்று சென்னையில் பேசி இருக்கிறார்.

இதற்கு முன் நடைபெற்ற ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் பிஜேபியை முற்றாக நிராகரித்து ஒதுக்கித் தள்ளி விட்டனர்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் டெபாசிட் காலி.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்த நிலை யில் தமிழ்நாடு மட்டும் அமைதித் தென்றல் காற்று வாங்கிக் கொண்டு இருந்தது.

இதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு! இதில் தமிழ்நாட்டு மக்களின் எந்தக் கனவை நனவாக்கப் போகிறாராம் மோடி?

முதலில் குஜராத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கட்டும் நரேந்திர மோடி.

குஜராத்துதான் இந்தியாவில் முதல் மாநிலம் என்ற மோசடிப் பிரச்சாரம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. இப்பொழுதெல்லாம் அந்தவகையில் பேசு வதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த நிலையில் வீண் சவடால்கள் எதற்கு?

தமிழ் ஓவியா said...


யார் கேட்பார்?


இந்து மதக் கடவுளான இலட் சுமிக்குப் பொதுவாக யானை வாகனம் இருக்கும். வங்காள தேசத்தில் சிட்டஹாஸ் எனும் ஊரில் உள்ள கோயிலில் இலட்சு மியின் வாகனம் ஆந்தையாம்.

இதுபற்றி எல்லாம் யார் என்ன கேட்க முடியும்? அவனவனுக்குத் தோன்றியதைக் கிறுக்கி வைக்க இந்து மதத்தில் தாராள அனுமதி உண்டே! யார் கேட்கப் போகி றார்கள். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என் றால்? அவாள் ஆதிக்கம் போகிறதே என்பதால் அந்த இடத்தில் மட்டும் நீதிமன்றம் சென்று விடுவார்கள்.

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு கோயபல்சு மோடிமீது தாக்கு!

புதுடில்லி, அக். 19- சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன் னால் அது உண்மையாகி விடும் என்ற ஹிட்லரின் தலைமை கொள்கை பரப்பாளர் ஜோசப் கோய பல்ஸ்சின் கொள்கையை அப்படியே கடைபிடிக் கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடில்லியில் நடை பெற்ற இளைஞர் காங் கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அக மது கூறியதாவது:-

நாட்டிலேயே முன் னேறிய மாநிலம் குஜராத் தான் என நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முன்னேறுவதில் நமக்கொன்றும் பிரச் சினை இல்லை.

அது காந்தி, வல்ல பாய் பட்டேல் போன்ற வர்களின் பூமி. அதனால் முன்னேறதான் செய்யும்.

ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக் கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை ஒப்பிடுகையில் குஜராத் மாநிலம் 12-ஆவது இடத் தில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளதே?

முன்னேற்றம் என்ற பெயரில் பா.ஜ.க. தொடர்ந்து பொய்யையே பரப்பி வருகிறது. பா.ஜ.க. வின் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதே சம் ஆகிய மாநிலங்கள் தேசிய அளவில் 25 மற் றும் 26 இடத்தில் உள்ள தாக அதே ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட் டுகிறது.

இதுதான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முன்னேறியுள்ள கதை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

ஆசாராம் பாபுவைக் காப்பாற்றும் மோடி

குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங் களை பாலியல் பலாத் காரம் செய்து விட்ட தாக அக்கா-தங்கை இருவர் புகார் அளித் தனர். அதன் அடிப் படையில் காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாராம் பாபுவை தங் களிடம் விசாரணைக் காக ஒப்படைக்க வேண் டும் என குஜராத் மாநில காவலர் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் காவலர் துணை ஆணையர் மனோஜ் நினாமா தலைமையி லான போலீசார் ஆசா ராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப் புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் காவல்துறையினர் காவ லில் வைத்து விசாரிக்க காந்திநகர் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி அனு மதி அளித்தது.

ஆசாராம் பாபுவுக்கு நேற்று ஆண்மை பரி சோதனை செய்யப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பரிசோ தனை முடிவில் 72 வய தாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந் துள்ளது.

இந்நிலையில், குஜ ராத்தில் ஆசாராம் பாபு மீதான பாலியல் வன் முறை புகார் தொடர்பான வழக்கில் மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலை வர் அர்ஜுன் மோத் வாடியா, இது தொடர் பாக உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆசாராம் பாபு மீது நில அபகரிப்பு, ஊழல், பாலியல் குற்றச்சாட்டு கள் ஆகியவை கூறப் பட்ட போதெல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரை காப்பாற்றிக் கொண்டே வந்துள்ளது.

அவரை பற்றிய செய் திகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆரம்பத்திலேயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவ ருக்கு மேலும் மேலும் தவறுகள் செய்யும் துணிச்சல் வந்திருக்காது.

இவ்வாறு கூறிய அர்ஜுன் மோத்வாடியா நரேந்திர மோடியை புகழ்ந்து ஆசாராம் பாபு பேசிய டேப்பை ஒலிக்க செய்தார். திபேஷ் வகேலா மற்றும் அபிஷேக் வகேலா ஆகியோரின் மர்ம மர ணத்தின் போதும், சூரத் தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போதும் இந்த அரசு ஆசாராம் பாபு மீது எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை.

நரேந்திர மோடிக்கும் ஆசாராம் பாபுவுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விசாரிக்க உயர்நீதி மன்றத்தின் கண்காணிப் பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

சாமியார் ஆசாராமின் மகன் எங்கே? எங்கே?

பாலியல் குற்றச்சாட் டில் சிக்கி தலைமறை வாக உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயை பிடிக்க, குஜராத் காவல் துறையினர் பிகாரில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் போலீஸர் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர் பாக சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப் பட்டு ராஜஸ்தான் மாநி லம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரத் சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாரா யண் சாயை காவலர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நாரா யண் சாயின் மெய்க்காவ லரான அரியாரி கிரா மத்தைச் சேர்ந்த கெசல் குமார் என்கிற ஹனு மான், காவலர் வருவ தைத் தெரிந்து தப்பி யோடி விட்டார்.

இந்நிலையில் நாரா யண் சாய் தப்பிச் செல்ல உதவி செய்ததாக அவ ரது உதவியாளரும், டில்லியில் உள்ள ஆசிர மத்தின் பொறுப்பாளரு மான தர்மேஷ் என்ப வரை தில்லி காவல்துறை யினருடன் இணைந்து குஜராத் காவலர் கைது செய்தனர்.

குஜராத்தை விட்டு வெளியேறிய நாராயண் சாய், டில்லி வந்ததாக வும், அடிக்கடி அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக வும், தகவல் தொடர்புக் காக அவர் 17 சிம் கார்டு களை பயன்படுத்தியுள்ள தாகவும் காவல்துறையி னர் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் நாட்டையே கடனில் மூழ்கடித்து விடுவார்


புதுடில்லி, அக்.19-மோடி பிரதம ரானால், குஜராத்தை போலவே நாட் டையே கடனில் மூழ்கடித்து விடுவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் இணையதளத்தில், தான் பிரதமரா னால், குஜராத்தை போலவே இந்தி யாவையும் வளர்ச்சியடைய செய்வேன் என்று நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முதல்வராக மோடி பதவி யேற்ற பிறகு, நாட்டில் எங்கும் இல் லாத வகையில் அங்குள்ள மக்களின் தனிநபர் கடன் சுமை அதிகமாகி உள்ளது. இது உறுதியான தகவல். மோடியின் பிரதமர் குறிக்கோள் நிறை வேறினால், குஜராத்தை போலவே ஒட்டு மொத்த இந்தியாவையும் கடனில் மூழ்கடித்து விடுவார் என்று திக்விஜய் சிங் எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மதப் போதகரின் பாலியல் விளையாட்டு


சேலம், அக். 19-சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவர்களது மகள் சேலம் அஸ்தம்பட்டி சக்தி நகரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அங்கு தங்கியுள்ள மதபோதகர் ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப் படுகிறது. பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்ப வம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித் தார். அவர்கள் நேற்று இரவு அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரில் எனது மகள் பள்ளி சென்ற போது அங்கு தங்கியுள்ள மதபோதகர் ஜெயசீலன் பாலியல் தொல்லை ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் இது குறித்து பள்ளிக்கு சென்று நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

தமிழ் ஓவியா said...


அநீதிகள்அய்க்கோர்ட்டில் சாதியின் பேரால், இனத்தின் பேரால் விருப்பு வெறுப்புப் பேரால் தீர்ப்புகள் அநீதிகள் இழைக்கப் படுகின்றன.
(விடுதலை, 26.10.1960)

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.க்கு, வி.எச்.பி. அனுகூலசத்ருவா?


உத்தரப்பிரதேசத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தினர், அயோத்தி நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டனர். அதற்கு உ.பி. மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதுகுறித்து திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் (11.9.2013) என்ன சொல்லுகிறார்?

கேள்வி: விசுவ ஹிந்து பரிஷத்தின் அயோத்தி யாத்திரையால் பா.ஜ.க.வுக்குப் பலமா, இல்லை பலகீனமா?

பதில்: விசுவ ஹிந்து பரிஷத் பா.ஜ.க.விற்கு அனுகூலசத்ரு. நல்லது செய்கிற மாதிரி நினைத்துக் கொண்டு, தர்ம சங்கடத்தை உண்டாக்குவதில் விசுவ ஹிந்து பரிஷத்தை மிஞ்ச முடியாது. அவர்களால் பா.ஜ.க.விற்கு புதிதாக ஹிந்து வாக்கு சேராது. மைனாரிட்டி வாக்கு குறையும் என்று பதில் எழுதுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? வி.எச்.பி.யை, பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்று கூறுகிறார் திரு சோ. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் வி.எச்.பி. யாத்திரைக்கு உ.பி. அரசு அனுமதி மறுத்ததையும் அதனை மீறி யாத்திரை செய்ய முயன்ற வி.எச்.பி. தொண்டர்களை உ.பி. அரசு கைது செய்ததையும் கண்டித்துள்ளது பி.ஜே.பி. என்பதை மறந்து விடக் கூடாது. கைது செய்யப்பட்டவர்களுள் பிஜேபி எம்.பி.யும் ஒருவர்!

உ.பி., பி.ஜே.பி. அந்த யாத்திரையை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை; ஆனால் சோ எழுதுகிறார் வி.எச்.பி., பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்.

திருவாளர் சோவைப் பொறுத்த வரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரிக்கக் கூடியவர், இராமன் கோயில் அங்கு இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்தான்.
பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் ஆணையத்தின் அறிக்கையை திரு சோ ராமசாமி எப்படி எல்லாம் கண் மூடித்தனமாக எதிர்த்து விமர்சனம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்புக்குற்றவாளிப் பட்டியலில் வாஜ்பேயியையும், லிபர் ஹான் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது. அடேயப்பா எவ்வளவு குதி குதித்தார்கள் இந்தப் பிஜேபியினரும், சங்பரிவார்களும்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் வாஜ்பேயி மட்டும் விதிவிலக்கா? அவர் மட்டும் அசல் பசு மாட்டு நெய்யில் பொரிக்கப்பட்டவரா?

நானாவதி ஆணையம், மோடிக்குச் சாதகமாக இருந்ததால் ஆணையமே கூறி விட்டது என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவிக் குதித்து எழுதுகிறார் துக்ளக் ஆசிரியர்.

லிபர் ஹான் ஆணையம், அவாளைக் குற்றப்படுத்தினால் ஆணையத்தின்மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவார்கள்.

ராம ஜென்ம பூமி விடயத்தில் பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன என்பது உலகம் அறிந்த உண்மை! அதே நேரத்தில் அரசியல் லாப - நட்டம் கருதி அதனைச் சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது அதைவிடப் பெரிய உண்மை.

பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி, அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற இதே விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் என்ன பேசினார்?

எங்களுக்குப் பெரும்பான்மை கிட்டினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமன் கோயிலைக் கட்டுவோம். நான் பிரதமர் என்பதைவிட சங்பரிவாரைச் சேர்ந்தவன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன் என்று பேசவில்லையா?

ஆனால் சோ ராமசாமி சொல்லுகிறார் வி.எச்.பி., என்பது பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்; இவர்களின் இரட்டை வேடத்துக்கு அளவே கிடையாது.

தமிழ் ஓவியா said...


சபலத்திற்கும், சலனத்திற்கும் ஆட்படாதவர் பொள்ளாச்சி இராதா

இறுதி மரியாதை செலுத்தி தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை

கோவை, அக்.19- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கோவை மாவட்டத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகள் பரவ அயராது உழைத்த வரும், பாவேந்தர் பாரதிதாசனோடு நெருக்கமாக உடன் இருந்தவருமான கோவை மாவட்ட முன்னாள் பகுத் தறிவாளர் கழக தலைவர் பொள்ளாச்சி இராதா அவர்கள் கடந்த 16.10.2013 அன்று மறைவுற்றார். அவரின் உடல் அடக்கம் இறுதி நிகழ்வுக்காக தமிழர் தலைவர் அவர்கள் 18.10.2013 அன்று மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி இராதா அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்து அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோவை மாவட்டத் தலைவர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:-

பொள்ளாச்சி இராதாவின் குடும்பம் மிகச்சிறந்த கொள்கைக் குடும்பம், பகுத்தறிவு நெறியாளர், இசைக்கலையில் சிறந்தவர். இறுதிவரையிலும் பெரி யாரின் கொள்கைக்காகவே வாழ்ந்தவர். மிகுந்த துயரத்தில் நாங்கள் இருக்கி றோம். இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு. 45 ஆண்டுகளுக்கு மேல் அவருடன் நான் பழகியிருக்கிறேன். இயக்கம் சிறு சிறு பிளவுகளை சந்தித்த நேரத்திலும், துரோகங்கள் நம்மை துளைத்த போதும், எவ்வித சபலங் களுக்கும், சலனங்களுக்கும் ஆட்படா தவர் பொள்ளாச்சி இராதா. கொள்கை ரீதியாக வாழ்ந்தவர். அவர் பாடினால் அந்த கம்பீரம் எல்லோ ரையும் நிமிர்த்து வைக்கும். 95 ஆண்டு காலம் வாழ்ந்த பெரியார், பாதை இல்லாத ஊருக்கு பாதை போட்டுத் தந்தவர், எண்ணற்ற சுயமரியாதை வீரர்கள் அந்தப்பாதை போடும் பணியில் தம்மை ஒப்படைத்துக் கொண்ட மிகச் சிறந்த தளபதி இராதா. இயக்கத்திற்கு ஆணி வேராக இருந்தவர், பெரியாரை அழைத்து பகுத்தறிவாளர் கழகத்தை இந்தப்பகுதியில் துவக்கிய முதல், எதிர்நீச்சல் பணியை மேற்கொண்டவர். அவருடைய இழப்பு எங்களுக்கு, ஒரு விஞ்ஞானியை இழப்பது போன்றது. சமுதாயக் கோணல்களை நிமிர்த்து வைக்க அயராது பாடுபட்டவர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.


ஜாதியற்ற சமுதாயம் அமைவதற்கு, மதபேதமற்ற சமுதாயம் அமைவதற்கு மூடநம்பிக்கை நீங்கிய புது உலகம் படைப்பதற்கு தம் வாழ்வை அர்ப் பணித்தவர் இராதா அவர்கள். அவரு டைய குடும்பத்தாருக்கு ஒரு வேண்டு கோள். இராதா அவர்கள் செய்த பணி யை தொடர்ந்து அவர்களது குடும்பத் தாரும் இயக்க பணியாற்ற வேண்டும். பிரியா விடை கொடுத்து அனுப்பியிருக் கிறோம். உங்களுக்கு நெருக்கமாக என்றும் நாங்கள் இருக்கிறோம். பொள்ளாச்சி இராதா என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். சுயமரி யாதை சுடரொளிக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம் என்று பேசினார்.

இரங்கல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் இராமச்சந்திரன், கோவை மண்டல தலைவர் மருத்துவர் கவுதமன், செயலாளர் புலியகுளம் வீரமணி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மேட்டுப்பாளையம் தலைவர் வேலு சாமி, நீலமலை மாவட்ட தலைவர் கருணாகரன், தாராபுரம் தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர்கள் கணியூர் கிருஷ்ணன், நீலமலை நாகேந் திரன், சட்டத்துறை துணை செயலாளர் பாண்டியன், பொதுக்குழு உறுப்பி னர்கள் பழ.அன்பரசு, செந்தில்நாதன், ப.க. தலைவர் முனியன், செயலாளர் வெள்ளலுர் மணி, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தென்மொழி ஞான பண்டிதன், கண்ணன், கழக தொழிலா ளரணி செயலாளர் ஆட்டோ சக்தி, குறிச்சி சிற்றரசு, கணியூர் சாமிநாதன், மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி, கணியூர் மயில்சாமி, பொன்குமார், பொள்ளாச்சி பாரதி, செழியன், ஆனந்த், அக்ரி நாகராஜ், நெல்லை முத்து, வீரமலை, மாரிமுத்து, பெரியசாமி, கோபி குமாரராசா, திருப்பூர் மணிகண்டன், உடுமலை அ.ப.நடராசன், புலவர் குப்புராஜ், கு.வெ.கி.செந்தில், சுடர் வேந்தன், ம.தி.மு.க. சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப் பாளர் வழக்குரைஞர் சக்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மகாலிங்கம், தி.மு.க. ராஜ்குமார், பொள்ளாச்சி இராதா அவர்கள் மகள் மலர்விழி, மற்றும் ஏராளமான அனைத்துக்கட்சி பிரமுகர் களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இரங்கல், இறுதி நிகழ்ச்சியில் பங்கேற் றனர். முடிவில் தி.க. செந்தில்நாதன் அவர்கள் நன்றி கூறினார்.

கோவை மாவட்டத்தில் திராவிடர் இயக்கமும், திராவிடர் கழகமும், வலு பெறுவதற்கும், கொள்கை ரீதியாக நிலைத்து நிற்பதற்கும், சுயமரியாதை சுடரொளி பொள்ளாச்சி இராதா அவர்களின் பணி என்றென்றும் மக்கள் மனதில் நின்று நிலைத்து நிற்கும் என்று வந்திருந்த அனைவரும் பேசிக் கொண் டது உணர்ச்சி பூர்வமாக அமைந்தது என்று சொன்னால் மிகையில்லை.

தமிழ் ஓவியா said...


அறியாமையின் இருளிலிருந்து விடுதலையாவதுதான் பகுத்தறிவு


டாக்டர் சின்னத்துரை விளக்கம்

மதுரை, அக். 19- மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக 11-ஆவது தொடர் சொற் பொழிவு 13.10.2013 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு வடக்கு மாரட் வீதி, பழங்காநத்தம் பழக்கடையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பணி நிறைவு பெற்ற நீதிபதி பொ.நடராசன் தலைமை தாங்கினார். வாசகர் வட்டத்தின் பொருளாளர் காளியப்பன் வந்திருந்தோரை வரவேற்றார். விடுதலை இம்மாத சிந்தனை என்ற தலைப்பில் கனி உரையாற்றினார். பேச்சாளரை அறிமுகம் செய்து உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ந.இளங்கோ உரையாற்றினார். சுற்றுச்சூழலும் சுகாதாரமும் என்ற தலைப்பில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் அ.சின்னத்துரை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் உரையாற்றுகையில்:- மாசு என்பது மனித இனம் உயிரினங்கள், மரம், செடிகள் ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது. இதனால் உலகளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகின் வேறு பகுதியில் நடைபெறும் எரிமலை. சுனாமி கூட மதுரையைப் பாதிக்கின்ற வாய்ப்பு உள்ளது.

காடுகளை அழிப்பது என்பது நமக்கு பெரும் தீங்கினை ஏற்படுத்துகிறது. மரங்களின் அடர்த்தி குறைவதால் வெப்பம் அதிகம் ஏற்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு நமது இந்தியா விவசாய உற்பத்தியில் 3ஆவது இடமாக இருந்தது 5-ஆவது இடமாக தள்ளப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் குறைந்து பாலைவன பரப்பு அதிகரித்து வருகிறது. இதனால் குடிதண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. பெட்ரோல் உபயோகத்திற்கான செலவு நமது பொருளாதாரத்தில் 1/3 பாகமாக உள்ளது. இதனால் காற்று மாசுபடுத்தப்பட்டு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாகனத்திலுள்ள காற்று வடிப்பானை (ஏர்பில்டரை) அடிக்கடி நாம் சுத்தம் செய்யாமல் இருப்பதால் வாகனத்திலிருந்து கிளம்பும் புகை அதிகரிக்கிறது. இந்த மாசு நமது நுரையீரலைப் பாதிக்கிறது. பூமியின் வெப்பநிலை 14-டிகிரியிலிருந்து 17-டிகிரிக்கு வந்து விட்டது. ஓசோன் படலம் அடிக்கடி உடைந்து சிதலமடைந்து நிலையற்ற தன்மையில் உள்ளது. ஒசோன் படலம் 35 கிமீ. வரை இருந்தது குறைந்து விட்டது. இதை நாம் தடுக்க தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்த சிந்தனை பகுத்தறி வாளர்களுக்குத் தான் ஏற்படும். அறியாமையின் இருளிலிருந்து விடுதலையாவது தான் பகுத்தறிவு சிந்தனையை நாம் மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். இறுதியில் விடுதலை வாசகர் வட்டத்தின் அ.முரு கானந்தம் நன்றியுரை ஆற்றினார்.

தமிழ் ஓவியா said...


எங்கும் பார்ப்பன ஆதிக்கமே!


கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாகச் சில தாலுகாக் களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற் குட்பட்ட எல்லாத் தாலுகா போர்டிலும் பிராமண ரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர்.

நம் நாட்டிலோ எல்லா உத்தியோகங் களையும், பார்ப்பனர்களே வெகுகால மாகக் கொள்ளையடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது. பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டை யாலேயே நம் நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை.

பார்ப்பனர், பார்ப்ப னரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின், பார்ப்பனருக்கு இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக் கூடாது; பார்ப்பனரல்லாதார் களுக்கே கொ டுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்குச் சர்க்காரிலுங்கூட ஆதரவு காட்டி வந்திருப்ப தாகத் தெரிகிறது.

அப்படியிருக்க, நமது ஜில்லா லோகல் போர்டு ஸ்தாபனங்களில் பார்ப்பன ரல்லாதார்களே தலைவர்களாயிருந்தும், இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தாபனங் களையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அநியாயமாகும். பார்ப்பனரல்லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு இலாயக் கில்லையென்று போர்டார் நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

நமது ஜில்லாவில் அநேகப் பார்ப்பனரல்லாத டாக்டர்கள் பாஸ்செய்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும்போது, ஒரு ஸ்தானங்கூடப் பார்ப்பனரல் தாருக்குக் கொடுக்காமல் நான் கையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததற்குப் பார்ப்பனரல்லாதார் மிகவும் வருந்த வேண்டி யிருக்கிறது. போர்டு தலைவர்கள் இம்மாதிரி அநியாயம் செய்ய என்ன அவசிய மேற்பட்டதோ தெரியவில்லை, என்னவோ சில சிபாரிசுகள் என்ற சிறிய காரணம் தவிர, வேறு காரணம் சொல்ல முடியாதென்றே நினைக்கிறோம்.

உத்தியோக வேட்டையில் கைதேர்ந்த பார்ப்பனர்களுக்கு ஆளுக்குத் தகுந்த சிபாரிசு பிடிக்கத் தெரியாமற்போகாது. கேவலம் சிபாரிசுகளுக்குத் தாலுகாபோர்டு தலைவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங் களைப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகக் கொடுத்திருப்பார்களென்பதை எண்ணும் போது வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

ஆனால், தற்சமயம் தலைமை வகித்துவரும் போர்டு தலைவர்கள் பார்ப்பனரல்லாதாரின் சேமத்தில் அக்கறை யில்லாதவர்களல்லர். ஆனால் பார்ப்பன டாக்டர்கள் மேற்படி ஸ்தானத்தை அடையச் செய்த சூழ்ச்சிகளுக்கு நாட்டின் அபிப்பி ராயத்தையும், பார்ப்பனரல்லாதார் சேமத்தில் போர்டு தலைவர்களுக்குள்ள அக்கறையையும் பலி கொடுத்துவிட்டதானது, பார்ப்பனரல் லாதாரின் துர்பாக்கியமென்றே சொல்ல வேண்டும்.

எப்படியோ அந்தந்த தாலுகா போர்டு தலைவர்களைச் சரிப்படுத்தித் தங்கள் தங்களுக்கு ஆதரவு காட்டும்படிச் செய்து நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்ப னர்கள் அடித்துக் கொண்டு போனதை நினைக்கும்போது, நம்மவர்களுக்குக் கண்ணி ருந்தும் பார்க்க முடியவில்லை, காதிருந்தும் கேட்கமுடியவில்லை, வாயிருந்தும் பேச முடியவில்லை, மனமிருந்தும் அறியமுடிய வில்லை என்று சொல்வதைத் தவிர நாமொன் றும் சொல்லக் கூடவில்லை. இனி மேலாவது, போர்டு தலைவர்கள் இது விஷயத்தைக் கவனித்துச் செய்வார்களென்று எதிர் பார்க்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 23.01.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் பிரச்சாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்

இம்மாதம் 15ஆம் தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது, மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரச்சாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டிப் பிரச்சாரம் ஆரம்பிக்கவேண்டுமென்று எழுதியி ருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமான் பி.டி.இராஜன் அவர்கள் சென்னையிலேயே இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகிகள் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும், அதற்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்பதாலும், குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலுகா கான்பரன்சுகள் கூடப்போவதாகப் பல இடங்களில் பார்ப்பனரல்லாதாரர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளாமலிருக்க முடியவில்லை.

சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும், அனுகூலம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேம்.

மகாநாடுகளுக்குத் தலைமை வகிக்கவும் நாம், முன் எழுதியபடி, அரசியலில் எவ்விதக் கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும், சிறப்பாகச் சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நாயக்கருக்குச் சாவகாசம் கிடைத்தாலும், மகாநாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம். அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான கனவான்களும் எந்த மகாநாட்டுக் காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தைப் பிரமாதப்படுத்திக் கொண்டு வர மறுக்காமல், சவுகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 16.01.1927

தமிழ் ஓவியா said...


இனிச் செய்ய வேண்டிய வேலை


மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதும், சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கிறார் களென்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயையில் விழுந்து, தங்கள் சமூகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கி விட்டது.

ஆனால், இந்த விளக்கம் மாத்திரம் போதுமா? இதனாலேயே நாம் சுயமரியாதை அடைந்து விட்டோமா? என்பதை யோசிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினாலும், விஷமப் பிரச்சாரத்தினாலும் சுவாதீன புத்தியுள்ள பல பார்ப்பனரல்லாதார் தோல்வியுற்று விட்ட காரணத்தாலும், சுயராஜ்ஜியக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் புரட்டுகளைக் கண்டு சகியாததாலும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உள்ள காங்கிரஸ் சபையினிடம் உள்ள அதிருப்தியினாலும் திடீரென்று மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வரவும், உற்சாகம் காட்டவும் முடிந்ததே அல்லாமல் முழுதும் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள உற்சாகமென்றாவது நிரந்தரமாயிருக்கக் கூடிய உற்சாகமென்றாவது, சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறோம்.

நமது மக்கள் பார்ப்பன சூழ்ச்சியில் விழாதிருக்க வேண்டுமானாலும், நமது மக்களின் முன்னேற்றத்திற்கு அனுகூலமான மகாநாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானாலும், தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து வேலையை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தவிர, மகாநாட்டிற்கு ஒவ்வொரு ஜில்லா, தாலுகாவிலிருந்தும் தக்க பொறுப்பு வாய்ந்த பிரதிநிகிள் வந்து போயிருக்கிறார்களானதால் அவர்கள் தங்கள் தங்கள் ஜில்லாவிலும் தாலுகாவிலும் ஜில்லா, தாலுகா மகாநாடுகள் கூட்ட வேண்டும். அதை ஆதாரமாக வைத்தே ஜில்லா முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்தச் சவுகரிய மாயிருக்கும்.

அந்தந்த இடங்களில் இப்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தார், இந்த மகாநாட்டு வேலையை எடுத்துக்கொண்டு ஆங்காங்குள்ள பெரியோர்களைப் பிடித்து மகாநாட்டை கூட்டுவிக்க ஏற்பாடு செய்யவேண்டும். திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, தென்னாற்காடு, வட ஆற்காடு, சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களில் இப்போது அவசரமாய் ஜில்லா மகாநாடுகள் கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்போதே அந்தந்த ஜில்லாக்களில் இருக்கும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கக் கிளை ஸ்தாபனத் தலைவர்கள் இதை உடனே கவனிக்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். தேர்தல்களில் நிற்பதும், தேர்தல்களுக்குச் செலவு செய்வதும் தேர்தல்களின் போது ஊரூராய்ச் சென்று ஓட்டர்களை ஏமாற்றுவதுமே தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தார் வேலையானால் இந்தச் சங்கத்தைவிட காங்கிரஸே மேலானது என்று சொல்லுவோம்.

உண்மையிலேயே, பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதானால் குறைந்தது இந்த மாதத்திலேயே இரண்டு மூன்று ஜில்லா மகாநாடுகளாவதுகூட்ட வேண்டுமென்று விரும்புகிறோம். சேலம், கோயமுத்தூர், திருச்சி ஆகிய மூன்று ஜில்லாக்காரர்களும் இந்த மாதத்தில் கூட்ட ஆட்சேபணை இருக்காது என்றே நினைக்கிறோம்.

மற்றபடி அந்தந்த தாலுகாக்காரர்களுக்கும் கூட்ட வசதி இல்லாமற்போகவில்லை. ஆதலால், இந்த மூன்று மாதத்திற்குள் இந்த வேலை முடிந்து, கதர், பார்ப்பன ஆதிக்கப் புரோகிதத்தை ஒழித்தல், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு இவைகளில் தக்க முன்னேற்றம் ஏற்படும்படி செய்ய வேண்டும்.

இதில் பார்ப்பனரல்லாத எவ்வித ராஜிய அபிப்பிராய பேதமுடையவர் களாயிருந்தாலும், இந்த மேற்கண்ட கொள்கைகளை ஒப்புக் கொள்ளக்கூடிய யாரையும் அக்கிராசனராக அழைப்பதில் ஒன்றும் குற்றமில்லை என்றே நினைக்கிறோம். வீண் செலவும், ஆடம்பரமும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதையும் ஞாபக மூட்டுகிறோம். மகாநாட்டுப் பிரதிநிதிகள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையே மதுரை மகாநாட்டில் நிறைவேறிய கதர் திட்டத்திற்கு மிகுதியும் துணைபோவதாகும்.

அன்றியும், கிராமங்களில் தொழிலுமற்றுச் சுயமரியாதையுமற்று இரண்டு நாளைக்கு ஒருவேளைக் கஞ்சிக்கும் வகையற்றுப் பட்டினி கிடந்து தவிக்கும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் பசியைத் தீர்த்து பட்டினிக்காக அவர்கள் இழக்க நேரிடும் கற்பையும், மனசாட்சியையும் காப்பாற்ற இது ஒரு ஒப்பற்ற சாதனமாகவும் இருக்கும்.

ஆதலால் கதரைப் பிரதிநிகளுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். தவிர, வரப் போகும் பொங்கல் பண்டிகைக்கு எல்லாரும் கதரே உபயோகிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு, தலையங்கம் - 09.01.1927

தமிழ் ஓவியா said...


ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை


சென்னை, அக்.20-தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்கின் றனர். இதனை மீறி ரயில் களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம்.
ரயில்களில் பட்டாசு களை கொண்டு செல்வ தால் ஏற்படும் பிரச் சினைகள் குறித்து ரயில்வே காவலர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்க ளிடம் துண்டுப் பிரசுரங் கள் வழங்கியும், ஒலிப் பெருக்கி மூலமும் விழிப் புணர்வு பிரச்சாரங்கள் செய்வார்கள்.

மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படு கிறது. இதே போன்று பார்சல் பிரிவிலும் சந்தேகத்திற்கு இடமான பார்சல்களை காவல் துறையினர் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றை அனுமதிப்பதில்லை.
இந்த பட்டாசு சோத னைகளில் காவல் மோப்ப நாய்களும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை மீறி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பட் டாசுகளைக் கொண்டு செல்லும்போது, அதனை காவலர் கண்டுபிடித்து விட்டால், இந்திய ரயில்வே சட்டத்தின் படி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயி ரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

எனவே ரயில்களில் பயணம் செய்யும் பயணி கள், பட்டாசுகளை தங் களுடன் எடுத்துச் செல் லாமல் முன்னெச்சரிக் கையாக நடந்து கொள் வது அவர்களுக்கும் நல் லது, ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக் கான பயணிகளுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!

பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண் டும். அய்யருக்கு தட் சணை கொடுக்க வேண் டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பைய னுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை; கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு பெரியார் உலகம்


திராவிடர் கழக வரலாற்றிலும், தமிழின வரலாற்றிலும் அக்டோபர் 20 (2013) மறக்க முடியாத மகத்தான பொன்னாள்.

இந்நாளில்தான் திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 16 - முக்கியத்துவம் வாய்ந்தவை - இன்றைய கால கட்டத்தில் நாடு எதிர்நோக்கக் கூடிய சவால்கள்பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளன - தீர்வுகளை நோக்கி நம் மக்களை மேலாக உந்தித் தள்ளக் கூடியவையாகும்.

மிக முக்கியமாக பொன்னிழைகளால் அடிக்கோடிட் டுத் தெரிவிக்க வேண்டியது சிறப்புத் தீர்மானமாகும்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 95 அடி உயரமுள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவுவது என்பதுதான் அந்தச் சிறப்புத் தீர்மானமாகும்.

அந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, மாநிலக் கழகப் பொறுப்பாளர்களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், மண்டலக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், மாவட்டக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், பொதுக் குழு உறுப்பினர்களும், தோழர்களும் அடைந்த உணர்வும், உற்சாகமும், கரை புரண்டு ஓட அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்ற அந்தக் காட்சிதான் என்னே! என்னே!! என்றென்றும் பசுமையாக நம் நெஞ்சக் கண்ணாடியில் நிழலாகக் கூடிய அரிய காட்சியாகும். நமது கழகத் தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்தக் கருத்துரு - திட்டம் அவர்தம் சிந்தனையில் தந்தை பெரியார் பற்றியே சதா அசைபோட்டுக் கொண்டிருக்கும் விளைவின் விளைச்சல் ஆகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளில் (டிசம்பர் 2) முதற் கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான தொகையை வழங்குவது என்று சிறப்புத் தீர்மானம் கூறுகிறது.

வரலாற்றில் என்றும் நிலைக்கத் தக்க - நினைக்கத்தக்க பொன்னெழுத்துக்களால் பொறிக் கத்தக்க வரலாற்றுச் சாதனையை - தந்தை பெரியாருக்குத் தமிழர்கள் ஆற்றித் தீர வேண்டிய நன்றிக் கடனை வெற்றிகரமாகச் செய்து சாதித்துக் காட்டிட இப்பொதுக்குழு உறுதி கொள்கிறது! உறுதி கொள்கிறது!! என்ற சிறப்புத் தீர்மான வாசகம் என்றென்றும் பேசப்படக் கூடியது.

அந்த உறுதியை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தருணத்திலேயே கழகத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்படுத்தியது சாதாரணமானதல்ல.

61 கழக மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு 15 சவரனுக்கான தொகையைத் திரட்டினால்கூட ஆயிரம் சவரன் என்பது எளிதான இலக்கே!

தமிழர் சமுதாயமே தந்தை பெரியார் அவர்களின் தனிப் பெருந் தொண்டின் கருணை மழையால் செழித்துக் குலுங்குகிறது என்றாலும் நேரடியாகப் பயன் பெற்ற வர்கள் ஓராயிரம் பேர்களாவது இருக்க மாட்டார்களா?

நம் தோழர்கள் பட்டியலிட்டு அவர்களை அடையாளங் காண வேண்டியதுதான் முக்கியம். கழகத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ நன்றி உணர்வு மிக்க பெரு மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். பட்டியல் தயார் செய்து விட்டால் முயற்சி திருவினை ஆக்கும் என்பதில் அய்யமில்லை.

அத்தகையவர்களின் பட்டியலை தயார் செய்ய முன்கூட்டியே சூட்டோடு சூடாக அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். மாநில தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், இந்தக் கலந்துரையாடல் கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒரு தோழர்கூட விடுபடாமல் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் 40 நாட்கள் இடைவெளி இருக்கிறதே என்று எண்ண வேண்டாம் - ஒரே வாரத்தில் இந்த இலக்கை எட்டும் வகையில் வீதியில் இறங்கினாலே போதும் - நாங்களே எதிர்பார்க்கவில்லை - எளிதாக இந்தப் பணி நிறைவேறி விட்டதே என்று வியப்புக்குறியாக மாறும் அளவுக்கு - பெரியாருக்குப் பேருருவச் சிலை என்ற தகவலை நம் தமிழர்கள் கேட்ட அளவிலேயே அவர்கள் மத்தியில் ஆர்வப் பெருக்கு கரை புரண்டு ஓடுவதை நாம் அறிய முடியும்!

கழகத் தோழர்களே! நம் வாழ்வில் எத்தனை எத்தனையோ களங்களைக் கண்டுள்ளோம், பிரச்சாரக் களங்கள் உண்டு, போராட்டக் களங்களுக்கு பஞ்சமே யில்லை.

இந்தக் களமோ வரலாற்றுக் களம் - வருங்கால சந்ததியினருக்கு ஓர் உலகத் தலைவரை - உயர் எண்ணங்கள் மலரும் சோலையை - புத்துலகம் பூக்க புரட்சிக் கருத்துக்களை வாரி வாரி வழங்கிச் சென்றுள்ள வரலாற்று நாயகராம் உலகத் தலைவர் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் வெண்கலத்தால் சிலை செதுக்கி வைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் இந்தக் களம் - இன்பக் களம் - நம் வாழ்வில் நாம் ஆற்ற வேண்டிய கடமைக்களம் - நன்றிக்களம் - இந்த வரலாற்றுச் சாதனையில் நமது பங்கும் உண்டு என்று எண்ணிப் பார்க்கும் பொழுது இறும்பூதெய்தும் இணையற்ற களம் இது என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

தமிழ் ஓவியா said...


சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு


திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் 20.10.2013 ஞாயிறு காலை 11 மணிக்கு திண்டிவனம் எம்.ஆர்.எஸ். வண்ணமயில் திருமண மண்டபத்தில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் கடவுள் மறுப்புக் கூறினார். திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கா.மு.தாஸ் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.

முதலாவதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த திண்டுக்கல் பொதுக் குழுவுக்குப் பிறகு இதுவரை நடைபெற்ற கழகச் செயல்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் தந்தை பெரியார் கருத்துக்கள் பரவி வரும் தன்மையை விளக்கினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார் (தீர்மானங்கள் நேற்று விடுதலையில் வெளி வந்து விட்டன).

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 95 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பெரியார் அருங்காட்சியகம், நூலகம் - குழந்தைகள் பூங்கா, உள்ளிட்ட பெரியார் உலகம் உருவாக்குவது தொடர்பான சிறப்புத் தீர்மானத்தினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முன்மொழிந்தார். பெரியார் உலகம் என்று கழகத் தலைவர் பெயர் சூட்டியுள்ளார்.

தமது குடும்பத்தின் சார்பில் ஒரு சவரனுக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கழகத் தலைவரிடம் துணைத் தலைவர் அளித்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பி அத்தீர் மானத்தினை ஆதரித்து வரவேற்றனர்.

குறும்படம்

பெரியார் உலகம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டக் குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. எல்லோரும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் உரையாற்றிய பிறகு நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை சந்தாக்களையும், 95 அடிஉயர முழு உருவப் பெரியார் வெண் கலச் சிலை அமைப்புக்கு நிதியையும் உற்சாகமாக வழங்கிய வண்ணமே இருந்தனர்.

மாவட்டக் கழகச் செயலாளர் நவா. ஏழுமலை நன்றி கூறிட, திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு பெருஞ் சிறப்புடன் நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பான மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்ம மாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - பார்க்கலாம்

கேள்வி: பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டால் திராவிடர் கழகம் ஆதரிக்குமா?

பதில்: அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - அதன்பின் பார்க்கலாம்.

- திண்டிவனத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி (20.10.2013)

தமிழ் ஓவியா said...

கடவுளை எதிர்த்து

செய்தி: திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு கன்று சாவு. இந்து முன் னணி உண்ணாவிரதம்!

சிந்தனை: நியாய மாக அருணாசலேஸ்வரரை எதிர்த்து அல்லவா போராட வேண்டும்? உம் மிடம் காணிக்கையாக அளிக்கப்பட்ட கன்றைக் காப்பாற்றாத நீயும் ஒரு கடவுளா என்று அல்லவா கேட்க வேண்டும்?

தமிழ் ஓவியா said...


புருடா விட்ட சாமியார்


பொய் அம்பலமானதால் மொட்டை அடித்து கொண்ட பரிதாபம்!

லக்னோ, அக். 22- உ.பி.சாமியார் முதல் கனவுப்படி குறிப்பிட்ட கோவிலில் தங்கம் இல்லை என்பதால் அவர் மன முடைந்து மொட்டை அடித்து விட்டு ஆசிரமம் திரும்பினார். 2-ஆவது முறை கனவு கண்டதாக கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதை கனவில் கண்டதாக சாமியார் அறிவித்துள்ளார்.

உ.பி.மாநிலம் உண் னாவ் நகரில் தோண்டியா கேடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத் தில் உள்ள ராஜாராவ் ராம் பக்ஸ்சிங் என்ற மன்னரின் கோட்டை யில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக சோபன் சர்க்கார் என்ற சாமியார் கூறினார். தங் கம் புதைக்கப்பட்டிருப் பதை, தான் கனவில் கண்டதாக சாமியார் அறிவித்தார். இதனால் இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் அங்கு தங்க வேட்டைக்குச் சென் றனர். அவர்கள் அந்த கிராமத்தில் மண்ணைத் தோண்டும் பணியைத் தொடங்கினர். இந்த சம் பவம் இந்தியா முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தொல் பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் அந்த கோவி லில் எதிர்ப்பார்த்தப்படி தங்கம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனால் மனம் நொந்த சாமியார் மொட்டை அடித்து விட்டு தன் ஆசிரமத் திற்கு திரும்பிவிட்டார். மேலும் தங்க வேட்டைப் பற்றி பத்திரி கைகளுக்கு சொல்வதற்காக அமைத்த குழுவையும் கலைத்துவிட்டார்.
தற்போது அவர் கான் பூரில் தங்கி யுள்ளார்.

இன்னொரு கனவாம்!

இந்நிலையில் சாமி யார் சோபன் சர்க்கார் தான் 2-ஆவது முறை கனவு கண்டதாகக் கூறியுள் ளார். உ.பி. மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட் டத்தில் ஆதம்பூர் என்ற கிராமம் உள்ளது. சாமி யார் சோபன் சர்க் காரின் 2-ஆவது கனவு பற்றிய அவரது செய்தித் தொடர்பாளர் சுவாமி ஓம் அறிவிப்பினை வெளி யிட்டார். ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட்டி ருப்பதாக சாமியார் கனவில் கண்டுள்ளார் என சுவாமி ஓம் அறி வித்தார்.

ஆதம்பூர் கிராமம் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது. சாமி யாரின் செய்தித் தொடர் பாளர் சுவாமி ஓம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளார். சாமியார் கூறி யுள்ள இடத்தில் பூமியைத் தோண்டும் பணியைத் தொடங்கும் படி சுவாமி ஓம் கோரிக்கை விடுத் துள்ளார்.

மாவட்ட மாஜிஸ் திரேட் அபய் குமார் இதுபற்றி விளக்கம் அளித்தார். சாமியார் கனவில் கண்டு கூறி யதைப் போல் ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண் டும். இதற்காக இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் குழுவினையோ அல்லது மற்ற புவியியல் நிபுணர்களையோ அனுப் பும்படி மத்திய அரசுக்கு தான் கோரிக்கை விடுத் துள்ளதாக அபய்குமார் கூறினார்.

சாமியார் கூறியுள்ள இடத்தில் சமூக விரோ திகள் ஏதாவது தீமை புரியாமல் இருப்பதற் காக பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக அபய்குமார் தெரிவித்தார்.

சமூக விரோதிகள்

சாமியாரின் 2-ஆவது கனவு பற்றி தகவல் ஆதம்பூர் கிராமத்தில் வெளி யானவுடன் சில சமூக விரோதிகள் சட்ட விரோத செயலில் ஈடு பட்டனர். ஆதம்பூர் கிராமத்தில் கங்கை நதியின் முக்கிய படித் துறையில் பழங்கால சிவன் கோயில் உள்ளது. தங்கம் புதைக்கப்ட்டுள் ளதாக சாமியார் கூறிய தால் இந்த சமூக விரோ திகள் சிவன் கோயிலின் உறுதியான நடை மேடையை நேற்று முன்தினம் இரவு தோண்ட ஆரம்பித்து விட்டனராம்.

தமிழ் ஓவியா said...


ஜாதீய கூட்டணியை முறியடிப்போம்!

திண்டிவனத்தில் 20.10.2013 ஞாயிறு அன்று, நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றுள், மதவாதக் கூட்டணியையும், ஜாதீய கூட்டணியையும் முறியடிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜாதீய கூட்டணியை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பது குறித்து, திண்டிவனத்தில் அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் விரிவாக எடுத்து வைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர்த்து ஜாதீய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. பார்ப்பனர் சங்கமும் இடம் பெற்றிருந்தது குறிப் பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிப்பு - பார்ப் பனர்கள் இணைப்பு என்பதன் மூலம் இந்தக் கூட்டணியின் ஆணி வேர் நாசகரமானது - பிற்போக்குத்தனமானது; முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் அரும்பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை சமூக நீதித் தத்துவத்துக்கு எதிரான பிற்போக்கு அமைப்பு இது என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்களை உள்ளடக்கிய எந்த ஓர் அமைப்பும் தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டே தீரும் என்பது கடந்த கால வரலாறு உணர்த்தும் உண்மையான பாடமாகும்.

பல தேர்தல்களில் ஜாதிக் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது உண்டு, அவற் றிற்குத் தமிழ் நாட்டு மக்கள் அளித்த தண்டனையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. மறந்தனர் என்றால், அவர்கள் மற்றுமொரு முறை மரண அடி வாங்கத் தயாராகி விட்டனர் என்று பொருள்.

தந்தை பெரியார் பெயரை அடிக்கடி உச்சரித்தும், தொண்டர்களைச் சில நேரங்களில் கறுப்புடை அணியச் செய்தும் நாங்கள்தான் பெரியார் வழி வந்தவர்கள் என்று மார் தட்டும் ஒரு கட்சியின் தலைவர் எங்கள் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லை என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இன்று ஜாதிகளைத் தேடி அலைகிறார்கள்; பார்ப்பனர்களின் அமைப்பு தங்களிடம் இணைந்து கொண்டது குறித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர் என்றால் இத்தகையவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எளிதாக அடையாளம் காண்பார்கள் என்பதை, இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

ஜாதியின் பெயரில் அமைப்பை உண்டாக்கி, அது சரிப்பட்டு வராது என்று அனுபவத்தில் உணர்ந்து அரசியலில் எடுபடும் என்று ஜாதியை அடையாளம் காட்டாத பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள் மறுபடியும் ஜாதி அடையாளங்களைத் தேடி அலைவது அவர்களின் வீழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாகும்.

கொள்கைகளும், சித்தாந்தங்களும், இலட்சியங் களும் கைவிடப்பட்ட கையறு நிலையில், ஜாதியை ஆலிங்கனம் செய்வதானது அவர்களின் வெறு மையையே வெளிப்படுத்தும்.

இதற்குமேல் தமிழ் உணர்வு, இனவுணர்வு ஈழத் தமிழர் பிரச்சினை, பெரியார் கொள்கை பற்றிப் பேச முயன்றால் அதனை மிகப் பெரிய கேலியாகத்தான் தமிழினப் பெரு மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த முடிவு அனேகமாக அரசியலில் ஒரு முடிவு ரையைத் தங்களுக்குத் தாங்களே எழுதி முடித்துக் கொண்டார்கள் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பனர்களைத் தங்கள் கூட்டில் இணைத்துக் கொண்டு சமூக நீதியைக் குறித்து வாய் திறக்க இயலாத நிலையைத் தங்களுக்குத் தாங்களே, உருவாக்கிக் கொண்டு விட்டனரே!

திண்டிவனம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டினை, மிக உறுதியாக தெளிவாக திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

சமூகத்தில் மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இழிவுப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்றப் பாதையில் அழைத்து வருவது, நமது முதற் கடமை என்று பிரகடனப்படுத்தி விட்டார்.

எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தள்ளி வைக்க முனைகிறார்களோ அந்தத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து முதன்மையான இடத்துக்குக் கொண்டு வரவேண்டியதுதான். உண்மையான சமூக நீதி யாகும். அதனைத் திராவிடர் கழகம் செய்யும்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களை யும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் - காவல் துறையின் கடமை


மானமிகு ஆசிரியர் விடுதலை அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாட்டில் யாரும் செய்ய முன்வராத, பயப்படுகிற சமுதாயப் பெரும் பணியை துணிவுடன் செய்து, மனித சமத்துவம் இழிவு நீக்கம், கல்வி பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தமிழ் இன உணர்வு, சுயமரியாதை வாழ்வு ஆகியனவற்றை அளித்த வள்ளல் பெரியார் தமிழர்களுக்கு உத்தியோக உரிமை அரசு உரிமைகளும் பெறச் செய்தார்.

தனது 95 ஆண்டு கால வாழ்க்கை யில் தொடர்ந்து சுமார் 60 ஆண்டு காலம் பொது சேவையில் உடல் பொருள் தனது அறிவு ஆற்றல் யாவற்றையும் அளித்து பெரியார் தமிழர்களை நல்வாழ்வு பெறச்செய்ததார். அதே பெரும் பணியை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காட்டிய வழியில் நேர்மையாகவும் அமைதியாகவும் வன் முறைக்கு இடங்கொடாது சமுதாயத் தொண்டு சுமார் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றார். தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கும் பல சாதனைகளை செய் துள்ளார் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரை பார்ப்பனர் தூண்டுதலால் நம் தமிழ் மக்கள் சரியான புரிதல் அறிவில் லாமல் வன்முறை கொலைவெறித் தாக்குதலில் 28.92013 விருத்தாசலத் தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சரியான பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும் பாராமுகமாய் கண்டு கொள்ளவில்லை. பெரியார் யார்? திராவிட இயக்கக் கொள்கை எப்படிப்பட்டது. ஒரு உதாரணம் (மனித நேயம்) 10.8.1948-இல் இரண்டாம் இந்தி கிளர்ச்சியின் போது கும்பகோணத்தில் தி.க.தொண் டர்களுக்கு அறிவுரை கட்டுப்பாடு அமைதி தேவை, வன்முறைக்கு இடங் கொடுக்க கூடாது. காவலர்கள் உங்களை அடிக்க நேர்ந்தால் அவர் களுக்கு வசதியாக உடலைக் காட்ட வேண்டும் என்று கூறுகிறார். அதுவே தலைவர் கி.வீரமணி அவர்களின் கொள்கையாகும் திராவிடர் இன உணர்வு லட்சியமாகும்.

அதனாலேயே 1965 காங்கிரசு இயக்கம் பக்தவத்சலம் அவர்களின் ஆட்சியின் போது திமுக கிளர்ச்சி மிகவும் கடுமையாக மணப்பாறையிலி ருந்து அதனால் மிகவும் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் சுமார் 30 பேர் களுக்கு மேல் திராவிடர் கழக தோழர்கள் உதவியுடன் இடத்தெரு என் வீட்டிற்கு இரவில் காட்டுப் பாதையில் அழைத்து வரப்பட்டு அவ் விதமாகவே காட்டுப் பாதை வழியே இனஉணர்வுடன் அவர்களை பாது காப்பாக காவல் நிலையத்தில் சேர்த் தது, எங்கள் நினைவில் பசுமையாக உள்ளது. மேலும் மறுநாள் பெரும் அளவு காவல் துறையினர் பலப்படுத்தப்பட்டு கலவரம் முடிவுக்கு வந்தது மேலும் பெரியார் காமராசர் காங்கிரசை ஆதரித்த நேரம் தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறை கடமையாகும்.

- அ.இனியன் பத்மநாபன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கலைஞர் வேண்டுகோள்


சென்னை, அக்.22- இலங்கையில் நடைபெற வுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-

இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும், 2009 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய தைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று டெசோ இயக்கத்தின் மூலமாக பேரழுத்தம் கொடுத்திடும் வகையில் கடுமையாகவே தெரிவித்திருக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

நம்மைப்போலவே தமிழகத்திலே வேறு சில முக்கியமான கட்சிகளும், மாணவர் இயக்கங் களும், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 15.10.2013 அன்றும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 16.10.2013 அன்றும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கைகளில், இலங்கை யில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும், அந்த மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பிலும் 18.10.2013 அன்று முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு இதே வேண்டுகோளை கடிதத்தின் மூலம் தெரி வித்திருக்கிறார். ஏன் அதற்கு முன்பே 25.3.2013 அன்றும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

கனடா இந்த மாநாட்டை புறக்கணித்து ஏற்கெனவே தகவல் தெரிவித்திருப்பதும், இங்கிலாந்து நாட்டிலே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையிலே இந்த மாநாடு நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவித்தி ருப்பதும் குறிப்பிடத்தக்க திருப்பங்களாகும்.

தோழர் தியாகு இதே வேண்டுகோளையும் இணைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமர் எழுதிய கடிதத்தில், காமன்வெல்த் மாநாட்டில் நான் பங்கேற்பது குறித்து, உங்கள் கட்சி (தி.மு.க.) மற்றும் தமிழர்களின் உணர்வு களை மதித்தே இந்த விஷயத்தில் முடிவு எடுப் போம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலையிட்டு, தியாகு உண்ணாவிரதத்தை கைவிடவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சட்டசபையில் தீர்மானம்

அதன் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை இந்த பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகத் தின் உணர்வும் ஒருமுகப்பட்டிருக்கிறது என் பதை தெரிவிக்கும் வகையிலும் - தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளும் மற்ற பிரச்சினை களில் வெவ்வேறு கருத்திலே இருந்தாலும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உலக சமூகத்திற்கு நிரூபிக்கும் வகையிலும் தமிழக சட்டமன்றத்தின் வாயிலாக ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது சிறப்புடையதாக இருக்கும்.

எனவே சட்டமன்றத்தில் அத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.