Search This Blog

27.10.13

இந்தியாவை குஜராத் ஆக்கும் இலட்சணம் இதுதான்! ஹி.... ஹி...


பாரதிய ஜனதா கட்சிக்கு வக் காலத்து வாங்க யார் வேண்டு மானாலும் முன்வரலாம். பெண் ணொருவர் அப்படி வந்தார் என்றால் பரிதாபம் மட்டுமல்ல - மன்னிக்கப் படவே முடியாதவர் ஆகி விடுவார்.
காரணம் இந்து மதம் பெண்ணை ஒரு மனுஷியாகவே ஏற்றுக் கொள்ள வில்லையே!

அவர்கள் ஏற்றிப் போற்றும் அய்ந்தாவது வேதம் என்று நீட்டி முழக்கப்படும் கீதை என்ன சொல்லு கிறது? பகவான் கிருஷ்ணன் என்கி றார்களே, அவன் என்ன சொல்லி வைத்திருக்கிறான்?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியி லிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32).

கீதையை விட்டுத் தள்ளுங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அணி வகுப்பில் அலங்கரித்து எடுத்துச் செல்கிறார்களே மனுதர்ம சாஸ்திர நூலை. அந்த மனுதர்மம் பெண்கள் பற்றி என்ன கூறுகிறது? 

 படுக்கை, சரணம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தனை இவற் றினை மாதர் பொருட்டே மனுவான வர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியா யம் 9 சுலோகம் 17).  

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும்,  கணவன் இறந்த பின் பிள்ளைகள் ஆக்ஞையிலும்  இருக்க வேண்டிய தல்லாமல் ஸ்திரீகள், தன் சுவா தீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது. (மனுதர்மம் அத்தியாயம் - 5 சுலோகம் 148).

இப்படிப்பட்ட சாஸ்திரங்கள் தான் இந்து மதத்தின் உயரிய பொக்கிஷங்களாம்! இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் டாக்டர்  தமிழிசை சவுந்தரராசன் என்ற தாய்க் குலத்தைச் சேர்ந்தவர், ஹிந்து ராஷ்டிரம் அமைக்க இருப்ப தாகக் கூறும் கட்சியைத் தாங்கிப் பிடிக்கத் துடிப்பது கெட்ட வாய்ப்பே!

ஜூனியர் விகடன் (30.10.2013) இதழில்தான் எழுதியிருக்கிறார்.

95 வயது வரை வாழ்ந்த தந்தை பெரியாரையே பின்பற்ற முடியாமல் பலவாறாகப் பிரிந்து கிடக்கிறார்களாம் - இப்படி ஒரு குற்றச்சாற்று, தங்கள் கட்சியின் சார்பில் பிரதம ருக்கான வேட்பாளர் என்று ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளாரே - இதில் எப்படியெல்லாம் இவர்கள் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு எழுதுவதுதான் தமாஷ்!

செல்வி உமாபாரதி பிளவுபட்டுச் சென்றது எப்படி - பின் இணைந்தது எப்படி? கல்யாண்சிங் என்ன ஆனார்!

இதுபோல அடுக்கடுக்கான கேள் விகள் அனந்தம் உண்டு. தனக்கு வழிகாட்டியான தந்தையாரையே புறந்தள்ளித் தானே அம்மையார் பா.ஜ.க.வில் தஞ்சம் புகுந்துள்ளார்.

டாக்டர் தமிழிசை அவர்கள் நம்மைப் பார்த்து குற்றம் சொல்லும் இதே கால கட்டத்தில்தான் பிஜேபி யின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி சொன்ன ஒரு தகவல் வெளி வந்துள்ளது. திரவுபதிக்குக்கூட அய்ந்து புருஷர்கள்தான். ஆனால் எங்கள் கட்சிக்கோ 105 புருஷர்கள் என்று சொல்லி இருக்கிறாரே (Draupadi was fortunate she had five husbands the B.J.P. has 105 (‘India Today’ 24.10.2013).

இதற்கு விளக்கம் தேவை யில்லை. அம்மையாரின் வாயை அவரது கட்சியின் முன்னாள் தலைவரே அடைத்து விட்டார்.

சட்டமன்றம் - நாடாளுமன்றங் களுக்குச் செல்லாமல் அரசியல் கட்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்பது தரகு வேலையாம்.

மறைமுக (Hidden Agenda) அஜண்டா எல்லாம் பிஜேபியோடு நிற்கட்டும்.
ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான் எங்கள் செயல்பாடு என்பதை டாக்டர் அம்மா அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் தரகு வேலை என்ன இருக்கிறது? அம்மையாருக்கே வெளிச்சம். வாய்ப் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுத வேண்டாம்.

பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பல்வேறு விவகாரங்களில் குருட்டுத்தன மாகத்தான் நடந்து கொள்வார்கள் என்பதற்கு உதாரணம், அவர்கள், மோடியை விமர்சிப்பதும்!

அம்மையாரின் அகராதியில் பகுத்தறிவு என்றால் குருட்டுத்தனம் போலும்! இதன் மூலம் பகுத்தறி விற்குச் சம்பந்தம் இல்லாதவர் என்று தம்மைத் தொடக்கத் திலேயே அறிமுகப்படுத்திக் கொண்டிருக் கிறார் - பாவம் ஆத்திரம் என்ன எழுதுகிறோம் என்பதில்கூட தடு மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
மோடியை விமர்சிக்கவே கூடாதா? அப்படி விமர்சித்தால் அது குருட்டுத்தனமா?

மோடி என்றால் தவறான கட்சி - நல்லதே செய்ய மாட்டார் என்று தீர்மானம் செய்து கொள்கிறோமாம்.

தவறான கட்சி என்பதில் என்ன சந்தேகம்? பிறப்பின் அடிப்படை யிலேயே பேதம் பேசும் இந்துத்துவா கொள்கையுடையது தவறான கட்சிதானே.
சிறுபான்மை மக்கள் குடியுரிமை யின்றி வாழ வேண்டும் - முஸ் லீம்கள், தங்கள் மதக் கடவுளைத் தூக்கி எறிந்து விட்டு, கிருஷ்ணனை வணங்க  வேண்டும்; கிறித்தவர்கள், ராமனை வணங்க வேண்டும் என்று கூறுவது, தவறானது என்பதையும் தாண்டிய பாசிசம் அல்லவா!

எனக்குள்ள வருத்தமெல்லாம் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேசுபவர்கள், கோத்ரா ரயிலில் துடிக்கத் துடிக்கக் கருகினார்களே - அவர்களைப் பற்றி கவலையே படவில்லையே? என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.
கோத்ரா ரயிலில் கருகிச் செத் ததை நாங்கள் நியாயப்படுத்த வில்லை. ஒரு பொறுப்பு வாய்ந்த முதல் அமைச்சர் என்ன செய்ய வேண்டும்? உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர  சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு, அதி காரிகளை கையில் போட்டுக் கொண்டு, தானே தலைமை தாங்கி நர வேட்டை ஆடலாமா என்பதுதான் கேள்வி.

முதல் அமைச்சர் நரேந்திர மோடி தனது வீட்டில் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் முஸ்லீம்கள்மீது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் உத்தர விட்டாரே - அதற்கு என்ன பதில்?

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கூறினாரே - உண்மையைச் சொன்னதற்காக அவரும் மர்மமான முறையில் படுகொலை செய்யப் படவில்லையா? தன் மகன் படு கொலைக்கு முதல் அமைச்சர் மோடிதான் காரணம் என்று ஹரேபாண்டியாவின் தந்தையாரும் கூறவில்லையா?

இப்படிப்பட்டவரை கொலைகாரர் என்று விமர்சித்தால் டாக்டர் அம்மா வுக்குக் கோபம் பீறிடுகிறது - மோடியை ஆதரித்து தீர வேண்டும் என்ற வெறியில் ஒரு தாயின் உள்ளம் இப்படி கல் நெஞ்சமாக மாறிடலாமா!

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்தச் சிசுவை நெருப்பில் போட்டுத் துள்ளிக் குதித்தார்களே சங்பரி வார் காட்டுமிராண்டிகள் -  அத்தகைய கொடியவர்களுக்காக ஒரு தாய் வக் காலத்து வாங்கலாமா?

நாம் சொல்வது இருக்கட்டும் -  உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அரிஜித் பசாயத் என்ன கூறினார்? அப்பாவி குழந்தைகளும், ஆதரவில்லாப் பெண் களும் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்த நவீன கால நீரோ மன்னன் முதல் அமைச்சர் மோடி என்ன செய்து கொண்டி ருந்தார்? என்று சொன்னவர் உச்சநீதி மன்ற நீதிபதியல்லவா? நீதிபதியையும் கறுப்புச் சட்டைப் பட்டியலில் சேர்க்கப் போகிறாரா அன்புக்குரிய டாக்டர் அம்மா அவர்கள்!

மோடி பிற்படுத்தப்பட்டவராம். சமூக நீதிபற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுபவர்கள், மோடியை எதிர்க்கலாமா என்பது சாமர்த்தியமான கேள்வி.
பி.ஜே.பி. சங்பரிவார்க் கூட்டத்தின் ஞானாசிரியர் (Think Tank) கோவிந்தாச் சார்யா கொடுத்த Social Engineering (சமூக விஞ்ஞானம்) என்ன தெரியுமா?
பி.ஜே.பி. என்றால் பிராமின் பார்ட்டி என்ற முத்திரை இருக்கிறது. அது மாற்றப்பட வேண்டும் என்ற யோசனையின் விளைவு இது.

உத்தரப்பிரதேசத்தில் கல்நாத் மிஸ்ரா வுக்குப் பதிலாக கல்யாண் சிங், மத்திய பிரதேசத்தில் உமாபாரதி, குஜராத்தில் நரேந்திரமோடி பீகாரில் சுசில்மோடி என்று அறிமுகப்படுத்தப்பட்டது அந்த அடிப் படையில்தான் (பிரபல விமர்சகர் ஓ.எஸ். பன்னீர்செல்வம் - நக்கீரன்).

அகில இந்திய பிஜேபியின் தலைவராக பங்காரு லட்சுமணன் (தாழ்த்தப்பட்டவர்) தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதி (தாழ்த் தப்பட்டவர்) என்று படங் காட்டப்பட்டது எல்லாம் பி.ஜே.பி.யின் பார்ப்பன முகத்தை மாற்றிக் காட்டவே.

எப்படியெல்லாம் என்னை அவமானப் படுத்தியது பிஜேபியின் உயர் ஜாதி பார்ப்பனக் கூட்டம் என்று கண்ணீர் சிந்தி அவர் பேட்டி கொடுக்கவில்லையா?
இல. கணேசன் என்பார் என் கைகளைப் பிடித்து முறுக்கினார் என்று கூறவில் லையா?

இன்றைக்கு டாக்டர் தமிழிசை அவர்கள் தேசிய செயலாளராக பி.ஜே.பி. யால் நியமிக்கப்பட்டார் என்றால் அதுகூட திராவிடர் கழகத்தின் தாக்கத்தால் என்பதை மறந்துவிடவேண்டாம்.

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என் றிருந்த நிபந்தனையை உடைத்யெறிந்தது - தந்தை பெரியாரும், திராவிடர் இயக்க ஆட்சியும் தான் (முதல் அமைச்சர் பனகல் அரசரின் உத்தரவு) என்ற வரலாறு டாக்டர் அம்மையாருக்குத் தெரியுமா? (அம்மையார் டாக்டர் ஆனதும் திராவிடர் இயக்கத்தின் உபயம் தான் - மறக்க வேண்டாம்.

திருவையாறு தியாகய்யர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடினார் என்பதற்காக சந்நிதானம் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, தீட்டுக் கழித்த பிறகுதான் பாடினார் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்பது டாக்டர் தமிழிசைக்குத் தெரியுமா?  தீட்டாயிடுத்து என்று குடிஅரசு  9.2.1946 இதழில் கலைஞர் அதனைக் கண்டித்து எழுதிய தகவல் எல்லாம் தெரியுமா?
மோடியால் குஜராத் வளர்ச்சி பெற்றுள் ளதே -என்று, தன் கட்சியைப் பலப்படுத்த விரும்புகிறார்.

இந்தப் பொய்க் கதை இப்பொழுது சிரிப்பாய்ச் சிரிக்கிறதே!

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான அறுவர் குழு, மோடியின் குஜராத் நிலையை அம்பலப் படுத்தி விட்டதே!

பொருளாதார நிலையில் இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் 12ஆவது இடத்தில் அல்லவா குஜராத் உள்ளது.
தனி நபர் வருமானத்தில் 10ஆவது இடம், எழுத்தறிவில் 18ஆம் இடம், சாலைகள் பராமரிப்பில் 11ஆம் இடம்.

நாட்டிலேயே முதன் முதலாக செறிவூட்டப்பட்ட அரிசியும், கோதுமையும், குஜராத்தில்தானே வழங்கப்படுகிறது என்று டாக்டர் எழுதுகிறார்.

உண்மை நிலை என்ன? பிரசவ காலத்தில் பிற மாநிலங்களில் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 12 முதல் 14 வரை குஜராத்தின் நிலைமை என்ன தெரியுமா? ஆயிரத்துக்கு 62. மோடியின் கவலை எல்லாம் பெரும் முதலாளிகளின் நலன்களைப் பற்றியதே இல்லையென்றால் டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் நிலங்களைத் தாரை வார்த்து இருப்பாரா? முத்திரைத்தாள் விலக்கு வேறு.

9750 கோடி ரூபாய்க் கடன் வேறு - செலுத்த வேண்டிய காலம் 20 வருடம் வட்டி விகிதம் என்ன தெரியுமா? 0.1 சதவீதம் (புள்ளி ஒன்று சதவீதம்). மோடி ஊழல் ஒழிப்பு நாயகரா? சி.ஏ.ஜி. அறிக்கையில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் என்று கூறப்பட்டுள்ளதே!

இந்தியாவை குஜராத் ஆக்கும் இலட் சணம் இதுதான்!
ஹி.... ஹி...
டாக்டர் அம்மாவின் அரசியல் மருத் துவத்தால் குஜராத் பிள்ளை பிழைக்காது!

இதுதான் மோடியின் குஜராத்
ஜாதிவாரியாக நேரம்

காலை 9 மணிமுதல் 10 மணிவரை பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்,

காலை 10 முதல் 12 (மதியம்) மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார்.
நண்பகல் 12 முதல் (மதியம்) ஒரு மணிவரை தலித் இனத்த வருக்கு என எழுதியுள்ளனர்.

டாக்டர் தமிழிசை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

                       ---------------------------27-10-2013 “ விடுதலை” யில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

22 comments:

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் மீதான தாக்குதல் புதுவை மாநில சி.பி.அய். செயலாளர் கண்டனம்


புதுச்சேரி, அக். 27- சமூக நீதிக்காக பாடுபட்டு வருபவரும், தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை நாடெங்கிலும் பரப்பி வருபவருமான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற சென்ற பொழுது சில மதவாத சக்திகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி உயிருக்கு சேதம் ஏற்படுத்த முயற்சித்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் வன்மையாக கண்டிக் கின்றோம்.

தமிழக காவல்துறை, இச்சம்பவத்தில் தொடர் புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்து பிரச்சாரம் செய்த நரேந்திர தபோல்கர் என்பவர் மதவெறி சக்திகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு 80 வயதை கடந்த நிலையிலும் அயராது சமூகபணியில் ஈடுபட்டு வருபவரும், கல்விப்பணியில் ஈடுபட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தராக பணியாற்றக்கூடியவருமான இத்தகைய சமூக பொறுப்புமிக்க தலைவர்களை, மதவெறி சக்திகள் மற்றும் ஜாதி வெறி சக்திகளின் தாக்கு தலில் இருந்து பாதுகாத்திட உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

7 கோள்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு

லண்டன், அக் 27- அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர். அதில் 7 கோள்கள் உள்ளன. அவற்றில் 5 கோள்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கோள் போன்ற தோற்றத்தில் உள்ளது.

இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கோள்களும் உள்ளன. இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கோவில் ஆலமரம் சாய்ந்து இருவர் பலி

நிலக்கோட்டை, அக்.27- திண்டுக்கல், அணைப்பட்டி அருகே, பழமையான ஆலமரம் சாய்ந்து, இருவர் பலியாயினர்; 12 பேர் காயமடைந் தனர். அணைப்பட்டி வைகை ஆற்றங்கரையில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவில் முன், நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. ஆல மரத்தின் கீழ் சிலர், கடைகள் நடத்தி வருகின்றனர்.

மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால், நேற்று காலை, ஆலமரம், இரண்டாக பிளந்து சாய்ந்தது. மரம் முறியும் சப்தம் கேட்டு, கடை வைத்திருந்தவர்கள் ஓடி தப்பிய நிலையில், மூக்கம் மாள், 80, தாதன், 35, ஆகியோர் சிக்கினர். மூக்கம் மாள் அதே இடத்திலும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், தாதனும் இறந்தனர். கோவில் காவலாளி உட்பட, 12 பேர் காயமடைந்தனர்.

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் வறிய நிலை ஜாதிக்கும் - வறுமைக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கத்தக்கவை

11ஆவது அய்ந்தாண்டுத் திட்ட அறிக்கையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

புதுடில்லி, அக்.27- ஜாதிக்கும் வறுமைக் கும் உள்ள தொடர்பு கள் குறித்து 11ஆவது அய்ந்தாண்டுத் திட் டத்தில் வெளியான தகவல்கள் மிக முக்கிய மானவை. அது குறித்து தகவல்கள் வருமாறு:

தலித் மக்களின் வீடு களில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந் தைகள் ஒரு வயது முடி வதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடு களில் இந்த விகிதாச் சாரம் 1,000: 61.

அய்ந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந் தைகள் 1,000-இல் 39 இறந்து விடுகின்றன. தலித் அல் லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.

தலித் குழந்தைகளில் 75 நோஞ்சானாக இருக் கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49 .

2000 ஆண்டு கணக் குப்படி 66 தலித் குடும் பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங் களில் இது 33 .

முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளர்கள்

தலித் மக்களில் முக் கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர ஜாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால் வாசியாக உள்ளது.

- இந்திய ஜாதிய சமூகம் என்கிற ஒரு பானை சோற்றில், மேலே சொல் லப்பட்ட புள்ளி விவ ரங்கள் ஒரு சோறு பதம்.

மொத்தப் பானையை யும் நீங்கள் பார்வையிட வேண்டுமா? அதற்கு முதலில் பேராசிரியர் சுகதேவ் தோரட்டுக்கு நன்றி சொல்ல வேண் டும். அவர் தலைமையில் 11-ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்தில் (2007-12) மத்திய அரசு அமைத்த பட்டியல் ஜாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக் குழுவின் ஆவ ணங்கள்தான் அந்தப் பானை.

கருவில் உருவாவது முதல் கல்லறை வரை தலித் மக்களின் வாழ்க் கைச் சூழல், மற்ற ஜாதி யினரைவிடக் கூடுதல் வறுமையில் வாடுவதை இந்த ஆவணங்கள் படம் பிடிக்கின்றன.

ஜாதி ரீதியான பொருளாதார ஆய்வுகள் தேவை

பொதுவாக, இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியான பொருளாதார ஆய்வு கள் அதிகமாக வருவ தில்லை. அத்தகைய கருத்துகள் விவாதிக்கப் படுவதைத் தவிர்க்கவே முயல்கின்றனர். அத்த கைய சூழலை மீறி வந்தி ருக்கும் இத்தகைய ஆதா ரங்கள் இந்தியாவில் உள்ள வறுமை பழங்குடி வறுமை, தலித் வறுமை, பிற்படுத்தப்பட்டோர் வறுமை,உயர் ஜாதியினர் வறுமை எனப் படிநிலை ஏற்றத்தாழ்வோடு இருப் பதை வெளிப்படுத்து கின்றன.

அம்பேத்கர் உருவாக் கியதால் இந்திய அரசி யல் சாசனம் இந்திய மக்களிடையே உள்ள படிநிலை ஏற்றத் தாழ்வை அக்கறையோடு பார்க்கிறது. அதனால் தான் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை அனைத்துக் குடிமக்க ளுக்கும் சமூகரீதியிலான, பொருளாதாரரீதியிலான, அரசியல்ரீதியிலான நீதி வழங்குவது என்பது தான் முதல் குறிக்கோள் என்று கூறுகிறது. தலித் மக்களின் மீது பிற்படுத் தப்பட்ட நிலையும், சமூகரீதியான இயலா மையும் திணிக்கப்பட் டுள்ளதை அரசியல் சாச னம் இனம் கண்டிருக் கிறது. அதனால், அரசி யல் சாசனத்தில் சிறப் பான பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

ஆனால், அரசியல் சாசனத்தின் சமூகநீதி, அரசின் செயல்பாடு களில் வர மாட்டேன் என்கிறது. அரசு இயந் திரத்தில் ஆதிக்க ஜாதி உணர்வுகள் ஆழமாக வேரோடியிருப்பதுதான் அதற்குக் காரணம். அத னால், தலித் மக்களுக் கான, நல்ல பயன்களைத் தரும் திட்டங்கள் நத் தையைத் தோற்கடிக்கும் வேகத்தில் நகர்கின்றன. அரசுக்கு வெளியே இருந்து வருகிற நெருக் குதல்களும் போதுமான அளவு வலுவானதாக இல்லை.

தலித் மக்கள் முன்னேற்றம்

ஜாதி அடுக்குகளைத் தக்கவைத்துக்கொண்டே பொருளாதார வளர்ச்சி அடைய இந்திய சமூகம் முயல்கிறது. ஜாதிய மேல் அடுக்கில் உள்ளவர்க ளுக்கு மேலும் மேலும் சிறந்த வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிச் செல்லும்போது, அவர் களால் கைவிடப்படுகிற இடங்களைப் பிடித்து தலித் மக்கள் முன்னேற லாம்.

அதனால் பிரச் சினை வராது. ஆனால், மேல்தட்டில் உள்ளோ ருக்குச் சமமாக முன் னேற முயன்றாலோ, அது ஜாதியின் படி நிலையை மீறுவதாகக் கருதி, தலித் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது பொதுவான போக்காக இருக்கிறது.

சமூகத்தில் பொரு ளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலை யில் தலித் மக்கள் உள் ளனர். எனவே, அவர் களுக்கு மற்றவர்களை விடக் கூடுதல் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். முதலில் அவர்களின் வறுமை மற்றவர்களின் வறுமையோடு சமப் படுத்தப்பட வேண்டும். அதன் பிறகுதான் வறுமை ஒழிப்பைப் பற் றிய விவாதம் அர்த்த முள்ளதாக இருக்கும். இது தலித் மக்களின் பிரச்சினை அல்ல. இந் திய சமூகத்தின் ஜன நாயகப் பிரச்சினை.

தமிழ் ஓவியா said...


இலங்கையின் தவறுகளை நேரடியாக கண்டிப்பேன்! இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவிப்பு!!

கொழும்பு, அக். 27- இலங்கைத் தமிழர் பகுதிகளை பார்வையிட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு செய்துள்ளார். அத்து டன் இலங்கை அரசு செய்துள்ள தவறுகளை தயவு தாட்சண்யமின்றி சுட்டிக் காட்டப்போவ தாகவும் தெரிவித்துள் ளார்.

விடுதலை புலி களுக்கு எதிராக நடந்த சண்டை நடந்த தமிழர் பெரும்பான்மை மிக்க வடக்குப் பகுதிகளுக்குச் செல்லும் முதல் வெளி நாட்டு பிரதமர் கேம ரூன்தான் போரின் போது அப்பாவி மக் களையும், விடுதலை புலி களையும் கொடூரமாக நடத்தி இலங்கை அரசு மனித உரிமையை மீறிய தாக கூறப்படும் புகார் களை காமன்வெல்த் மாநாட்டில் தயவு தாட் சண்யமின்றி எழுப்ப உறுதியாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் உறுதிப்பட தெரிவித் துள்ளார்.

போரால் பாதிப்புக் குள்ளான தமிழர்களின் வடக்கு பகுதிக்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிடவும் அவர்களிடம் கேட்டறி யவும் அவர் முடிவு செய் துள்ளார். இது தொடர் பாக அவர் கூறியதாவது: கொழும்பில் நடக் கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது என நான் எடுத்த முடிவு சரியானதே. போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள், பிற அத்துமீறல்கள் பற்றி தயவு தாட்சண்யமின்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப தயங்கப் போவதில்லை.

விடுதலை புலிகளு டான சண்டைக்குப் பிறகு செய்திருக்க வேண் டிய சில பணிகளை அவர்கள் செய்யத்தவறி விட்டனர். இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இது பற்றி இலங்கை அரசி டம் நிச்சயம் கேள்வி எழுப்புவேன். தமிழர் வாழும் வடக்குப்பகு திக்கு இந்த பயணத்தின் போது சென்று பார்வை யிடுவேன்.

தமிழ் ஓவியா said...


குடும்பத்தினரை நாத்திக நெறியில் ஈடுபடுத்திய பெரியார் பெருந்தொண்டர் இராசாசி படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை


சென்னை, அக். 27- கவியரசு கண்ண தாசன் நகரை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் இராசாசி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி வியாசர்பாடி குருட்ஷேத்ரா திருமண மண்டபத்தில் 15.10.2013 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. பெரியார் சமூக காப்பணியின் துணை இயக்குநர் தே.பொய்யாமொழி வரவேற்புரை யாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து பகுத்தறிவாளர் இராசாசி அவர் களைப் பற்றியும், அவரது குடும்பத்தினரின் இயக்கப்பணிகளைப் பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார். ஆவடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பா.தென்னரசு, நாத்திக கேசவன், சவுரிராசன், திராவிடர் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தேசிங்கு ஆகியோர் நினைவு ரையாற்றினர்.

இறுதியாக படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார். அவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது.

தந்தை பெரியாருக்குப்பின்னும் இந்த இயக்கம் சிறப்பாக இயங்கக் காரணம், தந்தை பெரியார் அவர்கள் தெளிவாக சிந்தித்து தொலைநோக்கோடு இதன் கொள்கைகளை உருவாக்கினார். எனவே தான் இந்த இயக்கம் தலைமுறை தலைமுறையாக குடும்பம் குடும்பமாக தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. அந்த அடிப்படையில் இராசாசி குடும்பம் ஒரு சிறப்பான குடும்பமாகும்.

தனது பேரக்குழந்தைகள் உட்பட அனை வரையும் நாத்திக நெறியில் ஈடுபடுத்தி தமது குடும்பத்தை ஒரு கொள்கை குடும்பமாக உருவாக்கியுள்ளார்.

தமது அனைத்து பிள்ளைகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத் துள்ளார்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்டார். பெரியார் நிகழ்த்திய போர் கருத்துப்போர்; மூடநம்பிக்கைகள், ஜாதி, பெண்ணடிமை ஆகியவற்றை ஒழிக்க நடைபெற்ற சமூக நீதிப்போர்.

அந்த போர் பல்வேறு எதிர்ப்பு களைத் தாண்டி அய்யா அவர்களின் காலத் திற்குப் பின்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது இன்று உலகளாவிய நிலையில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் துவக்கிய போரின் வியூகத்தின் முக்கியத் தத்துவம் சமரசம் செய்து கொள்ளாமையாகும். அவ்வழியை பின்பற்றிய இராசாசி அவர்களும் இறுதிவரை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பி.ஜி.சேகர், இளஞ்செழியன், இளவரசி, இனியவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள் இறையன், வட சென்னை மாவட்டத் செயலாளர் வெ. மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் சத்திய நாராயணசிங், கி.இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் மற்றும் உறவினர்களும் பங்கேற்றனர்.

இறுதியாக பகுத்தறிவாளர் கழக வட்டச் செயலாளர் கோவி.கோபால் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. ஆட்சியில் 7 மின்சார திட்டங்கள் தொடங்கப்பட்டன கலைஞர் அறிக்கை


சென்னை, அக்.27- தி.மு.க. ஆட்சியில் 7 மின்சார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப் பட்டது என்று கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

25102013 அன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுவுடைமை கட்சிகள் எழுப்பிய தொழில் களுக்கும், விவசாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு; முதல்அமைச்சர் ஜெயலலிதா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

முதல்அமைச்சர் மின் தட்டுப்பாடு குறித்து நீண்ட விளக்கம் அளித்தது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது என்று நம்மை குற்றம் சாட்டிய காரணத்தால்தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டியவனாக நான் இருக்கிறேன்.

முதல்அமைச்சர் ஜெயலலிதா 2.11.2012 அன்று சட்டமன்றத்தில் விரைவில் மின்உற்பத்தி துவக்கப் படவுள்ள திட்டங்கள் என்று சிலவற்றை குறிப் பிட்டார். அவர் குறிப்பிட்டதில், மேட்டூர் (600 மெகாவாட்) 25.6.2008 அன்றும்; வல்லூர் 1ஆம் அலகு (500 மெகாவாட்) 13.8.2007 அன்றும்; வல்லூர் 2ஆம் அலகு (500 மெகாவாட்) 13.8.2007 அன்றும்;

வல்லூர் 3ஆம் அலகு (500 மெகாவாட்) 13.8.2007 அன்றும்; வடசென்னை (1ஆம் அலகு) (600 மெகாவாட்) 18.2.2008 அன்றும், வட சென்னை (2ஆம் அலகு) (600 மெகாவாட்) 18.2.2008 அன்றும்; தூத்துக்குடி (இரண்டு அலகுகள்1000 மெகாவாட்) 28.1.2009 அன்றும், ஆக இந்த ஏழு திட்டங்களுமே தி.மு.கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டவைதான்.

முதல்அமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கையில், தி.மு.க ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் தீட்டவில்லை என்று கூறிவிட்டு, அவரே 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப்பணிகளை பொறுத்தவரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்காலமான அய்ந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப் பட்டிருந்தது என்று கூறியிருக்கிறார்.

இதிலிருந்தே மேட்டூர் திட்டம் கழக ஆட்சியில் 55 விழுக்காடு முடிக்கப்பட்டதை அவரே ஒப்புக் கொள்வதுதானே? ஆனால் தி.மு.க. அய்ந்தாண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது என்று ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார்.

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பேரவையில் வைத்த மானிய கோரிக்கையில், மேட்டூர் திட்டம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல் பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்கள். அவர்களே தெரிவித்தவாறு 2012இல் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் மேலும் ஓராண்டு கால தாமதம் ஆனதற்கு எந்த ஆட்சி காரணம்?

அதைப்போலவேதான் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டங்கள் பற்றியும் ஜெயலலிதா குறிப் பிட்டிருக்கிறார். அந்த திட்டம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதை அவரே ஒப்புக்கொண்டிருக் கிறார். ஆனால் இந்த திட்டங்களையெல்லாம் அவரு டைய ஆட்சியில் முடுக்கி விடப்பட்டதன் காரணமாகத் தான் மின்சாரம் இப்போது கிடைக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.


தமிழ் ஓவியா said...

தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டங்களை தொடங் காமல் இருந்திருந்தால், இப்போது இந்த மின்சாரமாவது கிடைத்திருக்குமா? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப் பட்டதால்தானே இவரால் அந்த திட்டத்தை முடிக்க முடிந்திருக்கிறது.

வல்லூர் மின்திட்டப்பணிகள் துவக்கப்பட்ட நாள் ஜெயலலிதா ஆட்சியிலே அல்ல. 13.8.2007 அன்று கழக ஆட்சியிலேதான் மத்திய மின்துறை அமைச்சராக இருந்த ஷிண்டேவால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டம் தொடங்கிய போதே தோராயமாக மின்உற்பத்தி துவக்கம் முதல் அலகில் டிசம்பர் 2012 என்றும், இரண்டாவது அலகில் மார்ச் 2013 என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றதாக ஜெயலலிதா கூறுகிறார்.

மற்ற திட்டங்கள் எல்லாம் கழக ஆட்சியில் இத்தனை சதவிகிதம் நடந்ததாக கூறிய ஜெயலலிதா, இதற்கு மட்டும் ஏன் எத்தனை சதவிகித பணிகள் நடைபெற்றன என்று கூறவில்லை? மேலும் அந்த திட்டத்தின் மூலமாக மின்உற்பத்தி 29.11.2012 அன்றே தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கழக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப் பட்ட முயற்சிதான் இதற்கு காரணம் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...


மேற்கண்ட புதிய அனல்மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியை தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்து வருகிறது என்று ஜெயலலிதா பேசும்போது தெரிவித்திருக்கிறார். இந்த 1700 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலமாக கிடைத்திருப்பதுதான். இதனை யாராவது மறுக்க முடியுமா?

தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 1,000 மெகாவாட் அனல் மின் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று ஜெயலலிதா நேற்று கூறியிருக்கிறார். தூத்துக் குடியில் நடைபெறும் இந்த திட்டத்தின் பணிகள் துவக்கப்பட்ட நாள் 28.1.2009. அதுவும் தி.மு.கழக ஆட்சியிலேதான்.

அ.தி.மு.க. ஆட்சியிலே மின்சாரத்தைப்பெற எதுவுமே செய்யவில்லையா என்று யாராவது கேட்பீர்களே யானால், நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. செய்திருக்கிறார்கள். என்னவென்றால், பிற மாநிலங்களிலே இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்குவதற்கு ஏற்பாடு செய்து, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட கால அடிப்படையில் கூடுதல் மின்சாரத்தை இவ்வாறு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா பேசும்போது, 2001 -2006இல் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததாக சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம் 2001ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியில் மின்உற்பத்திக்காக போடப்பட்ட திட்டங்கள் தானே?.

தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது பற்றி ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருப்பதை ஆதாரமாக காட்டி விளக்கி யிருக்கிறேன். தற்போது நான் கேட்கிறேன். அ.தி.மு.க. ஆட்சி 2011இல் தொடங்கி 2 ஆண்டுகளாகிறதே, இதுவரை எத்தனை மின்உற்பத்தி திட்டங்களுக்கு பணி தொடங்கப்பட்டுள்ளது?

2011- 2012ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கொள்கை விளக்க குறிப்பில், வடசென்னை நிலை 3, வடசென்னை நிலை 4, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா நீரேற்று புனல் மின்நிலைய திட்டங்கள் 28,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012ஆம் ஆண்டு பணி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டி ருந்தீர்களே? இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பணி தொடங்கப்பட்டுள்ளதா?

உடன்குடி விரிவாக்கம், உப்பூர் அனல் மின்நிலையம், எண்ணூர் அனல் மின்நிலையம் மாற்று, தூத்துக்குடி அனல் மின்நிலையம்நிலை 4 ஆகிய 8,000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களை 22,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்போவதாக அறிவித்திருந் தார்களே, இதில் ஏதாவது ஒரு திட்டமாவது இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக் கிறதா? சொல்லத்தயாரா?

2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் கூடுதல் மின் நிறுவுத்திறன் ஏற்படுத்தப் பட்டது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2001 - 2006ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக செல விடப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ. 700 கோடிதான். ஆனால் 2006 - 2011ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக தி.மு.க. ஆட்சியில் செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா? 11,700 கோடி ரூபாய்.

5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதி உதவியுடன் ஒரு திட்டத்தை அறிவித்ததாக முதல்அமைச்சர் நேற்று பேசியிருக்கிறார். இந்த திட்டத்தையும் ஜெயலலிதா எப்போது அறிவித் தார் என்று நான் கூறுகிறேன். 25.4.2013 அன்று ஜெய லலிதா படித்த 110ஆவது விதியின் கீழான அறிக்கை யிலேதான் இதை குறிப்பிட்டிருந்தார்.

அறிவித்து ஆறு மாதங்களுக்குப்பிறகு நேற்றைய தினம் இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள் ளதாக பேரவையில் அறிவித்திருக்கிறார் என்றால் எவ்வளவு வேகமாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது என்பதை நான் விளக்க வேண்டுமா?

- இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


வன்முறை இருபுறம் கூர்மைகொண்ட கத்தி!


பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இப்பொழுதே, பிரதமராக வந்து விட்டதாகத் துள்ளிக் குதிக்கிறார். மேடையில் அவர் பேச்சில் வெற்று ஆரவாரமும், சண்டியர்த்தனமும் கைகோர்த்துக் குதிக்கின்றன.

ஆத்திரமும், அனாவசியமான வெறுப்பும், பண்பற்ற சொற்களும் அவர் திருவாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன.

இட்லரின் இறுமாப்பு, கோட்சேயின் குரூரம் ஆகியவற்றின் கலவைகளாகக் காட்சியளிக் கின்றன. இப்பொழுதே இப்படி ஆவேச அக்னிப் புயலாக, வெறுப்புச் சுனாமியாகக் கொந்தளிக் கிறாரே - இவர் பிரதமராக ஆகிவிட்டால், நம் கெதி என்ன என்று சிறுபான்மை மக்கள் மத்தியில், பேரச்சம் உலுக்குகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருகின்றன. உள்நாட்டிலிருந்து வெளிநாடு வரை மோடியைப் பற்றி மோசமான பிம்பம் உருக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மக்கள் மத்தியில், ஒரு பொதுவான மதிப்பு, வெளிநாடுகளிடம் இங்கிதமான எதிர்பார்ப்பு என்கிற இந்த இரண்டு தளங்களிலும் மோடி மோசமான ஒரு பிம்பம் என்ற கருத்து நிலவுகிறது. இவற்றையெல்லாம் கடந்து மக்கள் மத்தியில் மாயப் பிம்பத்தை ஒரு செயற்கையான முறையில் உருவாக்கி வருகின்றனர். பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். இணைய தளங்களில் உருட்டல், புரட்டல் வேலைகளில் திட்டமிட்டு இறங்கியுள்ளனர். 18 வயது நிரம்பிய இளைஞர் களிடம் இனந் தெரியாத வரவேற்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர். மதச் சார்பற்ற சக்திகள் இதில் கவனமாக இருந்து முறியடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்படியொரு சூழ்நிலையில் பி.ஜே.பி. மற்றும் மோடிமீது அனுதாபம் உண்டாக்கும் வகையில் எந்த நிகழ்வும் நடைபெறுவது விரும்பத்தக்கதல்ல.

பிகாரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள மோடி சென்றபோது சில இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, உடன் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்தியன் முஜாகிதின் அமைப்பு இதற்குப் பொறுப்பு ஏற்றிருப்பதாக ஒரு தகவல்; யார் இதனைச் செய்திருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படவும் வேண்டும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர்களின் ஆத்திரச் செயல்கள் அறிவுக்குச் சத்ருதான். இதன்மூலம் இந்துத்துவா வெறியர்களுக்கு உதவி செய்த வர்கள் என்றே பொருள்.

அதே நேரத்தில் மோடியோ பி.ஜே.பி.யோ சங்பரிவார்க் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ வன்முறையைச் சிறுபான்மை இனத்தவர்மீது சுமத்துவதற்கு எந்த வகையிலும் தகுதி உடையவர்கள் அல்லர்.

1992 டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதியை ஒரு பெருங்கூட்டம் பிஜேபி சங்பரிவார்ப் பெருந் தலைவர்களின் வழிகாட்டுதலோடு, எப்பொழுது இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ - அன் றைக்கே இந்தியாவில் மதவெறிக்கும், வன் முறைக்கும் தீவிரமாக நச்சு விதையை விதைத்து விட்டனர் என்று பொருள்.

வன்முறை என்பது இரு பக்கமும் கூர் கொண்ட கத்தி என்பதை மறந்து விடக் கூடாது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள், இதுவரை தண்டிக்கப்படாததும்கூட, மக்கள் மத்தியில் வன் முறை மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக் கிறது.

எது எப்படியாக இருப்பினும், இந்துத்துவா கும்பலின்மீது பொது மக்களிடத்தில் அனுதாபம் ஏற்படும் வகையில், யார் நடந்து கொண்டாலும் அவர்கள் தங்களை அறியாமலேயே, தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.

சிறுபான்மை மக்களின் தலைவர்கள் வெளிப்படையாக இதுபற்றி கருத்துக்களை பதிவு செய்வதும்கூட அவசியமே!

தமிழ் ஓவியா said...


கடவுளின் சக்தி இவ்வளவுதான்!


கோயிலுக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து மரணம்

தண்டையார் பேட்டை, அக்.28- கொருக்குப் பேட்டை அண்ணாநகர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி சாய்லட்சுமி (42). நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சாய்லட்சுமி சென்றார். கோயிலில் தரிசனம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். வெளியே வந்ததும், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள், பக்தர்கள் திரண்டனர். சாய்லட்சுமியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவர் மயக்க நிலையில் இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப் பினர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத் துவர்கள் சாய்லட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோயி லுக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


திராவிடர் இனம் காக்கும் கழகத் தலைவரை பேணிக்காத்து பெரியாருக்குச் சிலை வடிப்போம்!


திருப்பூர் கலந்தாய்வில் பொதுச்செயலாளர் பிறைநுதல்செல்வி உரை

திருப்பூர், அக். 28- திராவிடர் இனம் அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட தமிழர் தலைவரைப் பாதுகாத்து, பெரியாருக்கு 95 அடி உயர சிலையை நிறுவுவோம் என்று தி.க. பொதுச்செயலாளர் மருத் துவர் பிறைநுதல் செல்வி உரையாற்றினார்.

24.10.2013 வியாழன் மாலை 6 மணியளவில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம், பெரியார் புத்தக நிலையத்தில் திருப்பூர் மாவட்ட தி.க. கலந்துரையாடல் கூட்டம் துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து உரை நிகழ்த் திய தி.க. பொதுச்செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி குறிப்பிட்டதாவது;

மனுநீதியைக் கட்டாயப்பாடமாகக் கொண்ட குஜராத்தின் முதல்வர் மோடியை முன்னிறுத்தி இந்து ராஷ்ட்டிரம், இந்து நாடு என்பன போன்ற காட்டுமிராண்டித் தனமான அடிப்படை வாதங் களைச் செயலாக்க பா.ஜ.க.முயன்று வருகிறது. இதற்கு தக்கதொரு பதிலடியைக் கொடுக்கும் மாநாடு தான் வருகிற நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திராவிடர் எழுச்சி மாநாடு. இதில் கழகத் தோழர்கள் பெருவாரியாக குடும்பத் தோடு பங்கேற்க வேண்டும். நம்மின மக்களையும் பெருமளவு கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத, ஜாதீய கட்சிகளுக்கு ஒரே எதிர் இலக்கு திராவிடர் கழகமும், திராவிடர் கழகத் தலைவரும் தான். ஏனென்றால் நமக்கு எதிரான திட்டம் மத வாத, ஜாதீய கட்சிகளின் திட்டமாகும்.

எனவே எதிரிகளால் குறிவைக்கப்பட்ட நம் முடைய குடும்பத் தலைவரான தமிழர் தலைவரைப் பேணிக் காப்பதும், அந்தத் தலைவரின் ஆசைப்படி திருச்சி சிறுகனூரில் 95 அடியில் அறிவுப் பேராசான் தந்தை பெரியாருக்கு வானளாவிய சிலையை அமைப்பதும் நம் தலையாய கடமையாகும்.

காலா காலத்திற்கும் பேசப்படும் இந்த சிலை அமைப்பு நிகழ்வுக்கு அனைத்து தரப்பு மக்களி டமும் தாராளமாக உதவிகள் கேட்டுப் பெறலாம். இந்த மண், பெரியாரால் பயன்பெற்ற மண்தானே!

விரைவில் தலைமைக் கழகத்திலிருந்து நன் கொடை புத்தகங்களும், துண்டறிக்கைகளும் வர விருக்கின்றன. இப்பணியை செவ்வனே முடித்தால் நாம் நம் இனத்தையும், நம் தலைவரையும் பாது காத்தவர்களாவோம் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

சென்னை, அக்.28- தந்தை பெரியார் அவர் களுக்கு 95 அடி உயரத்தில் சிலை அமைக் கும் திட்டத்திற்குக் கழகத் தோழர்கள் தத்தம் மாவட்டக் கழகங்களின் சார்பில் தங்கத்திற்குப் பதிலாக நிதி அளிப்பதில் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிப்பு களைச் செய்தனர்.

தாம்பரம்

அய்யாவின் 95 அடி உயர வெண்கலச் சிலை நம் கண்முன்னே நிற்கிறது. கேட்ட பொழுது உடலெல்லாம் சிலிர்க்கிறது என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். தாம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் இவ்வாறு பேசினார். இதன் விவரம் வருமாறு.

திண்டிவனம் பொதுக்குழு கூட்ட தீர் மானங்களை விளக்கி நடைபெற்றுவரும் கலந்துரையாடல் கூட்டம் தாம்பரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமை வகித்தார்.

மாநில மாண வரணி துணைச்செயலாளர் மு.சென்னியப் பன், அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டு தலைமை உரை யாற்றிய கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசியதாவது:-

சென்னையில் ஒரு பெரிய விடுதியில் அண்மையில் ஒரு கலந்துரையாடல் நடை பெற்றது. மதச் சார்பின்மை கொள்கை யுடைய மக்களின் பிரதிநிதிகளை ஒருங் கிணைத்த அக்கூட்டத்தில் இந்துத்துவா பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சியையும் அழைக்கவில்லை. திராவிடர் கழகம் மட்டுமே பங்கேற்றது. அதில் தமிழர் தலைவர் சார்பில் நான் கலந்து கொண்டு பேசினேன். அப்போது அங்கு பேசிய வடபுலத்து அறிஞர் பெருமக்கள் குறிப்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அவர்கள் பேசியபோது இந்துத்துவாவை எதிர்க்க வலுவான ஆயுதம் பெரியாரின் கருத்துகள் தான். இந்தளவிற்கு அறிவு பூர்வமாக, சிந் தாந்த ரீதியாக இந்துமதத்தை, மதவாதத்தை பெரியார் தோலுரித்துக் காட்டினார். எனவே பெரியார் கருத்துகள் இந்தியா முழுவதும தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்டனர்.

இது இக்காலகட்டத்தில் மிகமுக்கியப் பிரச்சினையாகும். பிள்ளை யார் சிலையையும், இராமன் படத்தையும் பெரியார் எதிர்த்து இயக்கம் நடத்திய தற்குக் காரணம் அப்போது புரியாதவர்கள். இப்போது புரிந்து கொண்டார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக் கோடு அடையாளம் காட்டியவர் பெரி யார். இன்றுதான் இந்துத்துவாவின் ஆபத்தை உண்ர்ந்து இருக்கின்றனர்.

நமக்கு வாழ்வளித்த தந்தை பெரியா ருக்கு நாம் செலுத்தப்போகும் நன்றி என்ன? நீண்ட காலமாக தமிழர் தலைவர் எண் ணத்தில் மலர்ந்த திட்டமான தந்தை பெரியாருக்கு மிக உயரமான சிலை 95 அடி உயரத்தில் வைக்க வேண்டும் என்பதை இன்று செயலாக்கம் செய்து மகிழ இருக் கிறோம்.

திண்டிவனத்தில் அறிவித்தபோதே தோழர்கள் காட்டிய உற்சாகம் நம்மை பெருமையடைய வைத்தது, நினைக்கும் நேரத்திலேயே நம் மனக்கண் முன்னால் அய்யாசிலை நிற்கிறது. உடலெல்லாம் சிலிர்க்கிறது. அத்துடன் அருங்காட்சியகம், புத்தக விற்பனை நிலையம், சிறுவர் பூங்கா என பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைய உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

பல லட்சக்கணக்கான மக்கள் பார்க்கப் போகிறார்கள். இப்படிப் பட்ட பெரிய சாதனை நம் தமிழர் தலைவ ரால் மட்டுமே நிகழ்த்த முடியும். தந்தை பெரியார் தன் இயக்கத்திற்கு ஏற்படுத்திய பாதுகாப்பை - ஒரு ஏற்பாட்டை இப்போது உலகத்தால் உணர முடிகிறது அல்லவா?

தந்தை பெரியாருக்கு அன்னை மணியம் மையாரும், தமிழர் தலைவரும் கிடைத்த தினால் நடைபெற்ற சாதனை இது. இவ்வாறு பேசினார்.

தமிழ் ஓவியா said...

நரகாசுரன்

========

நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதுகிறேன். நரகாசுரன் என்பதாக என்பதாக ஒருவன் இருந்தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ என்பதும் பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும்; தங்கள், வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும்; அவர்கள் நலத்திற்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும், கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு உணர்த்துவதற்கு ஆக பொதுவாகவே, ஆரிய சாஸ்திர புராண இதிகாசங்களின் ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள் என்பதாகக் கருதியே, எழுதச் சம்மதித்தேன்.

திராவிட மக்கள் அருள்கூர்ந்து, நரகாசுரன் வதைப் புராணத்தை, சற்று, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். கதையின் சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன், அயோக்கியனாக இருந்தான்; கடவுளால் கொல்லப்பட்டான்; பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், இதற்காக சித்திரித்த கதையின் தன்மை எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20-ஆம் நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி இக்கருத்துக்கு ஆளாகலாமா? என்பதைச் சிந்திக்கத்தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற புத்தகம், அருப்புக்கோட்டை தோழர் வி.ஷி. இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மூலக்கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை இழிவுபடுத்துவதற்கு என்று, எழுதப் புகுந்த கற்பனையில், ஆரியர்களது நிலை, தன்மை, ஆகியவை எவ்வளவு இழிவாகக் கூடியதாயிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காரியத்தில் புகுந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சமாதானம் என்னவாக இருக்குமென்றால், இக்கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு காட்டுமிராண்டிகளாகவும், அவ்வளவு மானாவமானக் கவலையற்ற மிருக வாழ்வு வாழ்ந்தவர்களாகவும், இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும், இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது, எவ்வளவு விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இது போன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டுமிராண்டித் தனமானதும், மானாவமான லட்சியமற்றதும், மிருகப்பிராயத்திலிருப்பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர்கள் கருதி இருப்பதாகவாவது இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், இனியாவது பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது திராவிடர் கடமையாகும். ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன் :

1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டது.

2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.

3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.

4. இக் கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஒரு அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்களுக்கும், தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு செய்தது.

5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.

6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.

7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளி கொண்டாட்டம்.

என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப் புத்தகம் எழுதியவருடைய ஆவல்.

ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக்கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்று பட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.

இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் M.S. இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

* தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


வளர முடியும்நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


நரி - பரி

இமயமலைச் சரிவு களில் வாழும் மக்களின் முக்கிய தொழில் சுற்றுலா வரும் மக்களுக்கு வழி காட்டுவதுதான். அவர் களின் சொத்து என்பது குதிரைகள்தாம். யாத் திரை வரும் பக்தர்களைக் குதிரையில் ஏற்றிக் கொண்டு செல்லுவார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை கிடைக்கும்.

அண்மையில் பெய்த கடும் வெள்ளத்தால் 3000-க்கும் மேற்பட்ட குதிரைகள் அடித்துச் செல்லப்பட்டன. அந்தச் சுற்றுலா வழிகாட்டிகளின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? பக்தர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறார்களாம்.

தன்னை நாடி வரும் பக்தர்களை குதிரைகள் மூலம் ஏற்றிக் கொண்டு வருவோரைக் காப்பாற் றாமல் அந்தக் கடவுள்கள் பிச்சை எடுக்க வைத்துள் ளனவே இதைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

பக்தர்களைச் சுமந்து வரும் 3000 குதிரைகளை வெள்ளம் இழுத்துச் சென் றதே - அந்தக் குதிரை களை அந்த இறைவன் காப்பாற்றினானா!?

குதிரைகளையும் காப் பாற்றவில்லை - குதிரை களின் சொந்தக்காரர் களான சுற்றுலா வழி காட்டிகளையும் காப்பாற் றிடவில்லை அந்தக் கடவுள்.

கொஞ்ச நேரம் நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டாமா? உத்தரகாண்டில் கொடும் வெள்ளத்தால் இலட்சத் திற்கும் மேற்பட்ட பக்தர் கள் (பெண்கள் குழந் தைகள் உட்பட) கொடூர மான வகையில் கொன்று குவிக்கப்பட்டார்களே!

இதற்கு மேலும் கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் நம்மைக் காப்பார் என்று கருத முடியுமா? இதற்கு மேலும் கருணையே வடி வானவர் கடவுள் கடைக் கண் ணைக் காட்டி, கருணை மழை பொழிந்து, உதவிக் கரம் நீட்டி நம் உயிரைக் காப்பார் என்று கருதிட இடம் இருக்கிறதா?

கோபப்படாமல் கொஞ்ச நேரம் சிந்திக்கக் கூடாதா?

மன்னன் குதிரை வாங்கக் கொடுத்து அனுப்பிய பொருளைக் கொண்டு கோயில் கட்டி னான் அமைச்சனாக இருந்த மாணிக்கவாச கன். மன்னன் கோபம் கொண்டு பொங்கி எழுந்தபோது நரிகளை எல்லாம் பரிகளாக்கி (குதிரையாக்கி) தன் அடியானாகிய மாணிக்க வாசகனை தற்காலிக மாகக் காப்பாற்றினான் கடவுள் என்பதெல்லாம் கதைதானா? (அந்தக் குதிரைகள் மறுபடியும் நரிகள் ஆகி ஓடி விட்டன என்பது வேறு).

இது போன்ற கதைகள் எல்லாம் இறந்த காலக் கட்டுக் கதை களாக இருக்கின்றனவே தவிர, நிகழ் காலத்தில் நடப்பது இல்லையே - ஏன்? ஏன்?

காரணம் மனிதனுக் குப் பகுத்தறிவு வளர்ந்து விட்டது - இனிமேல் ஏமாற்ற முடியாது என்பது தானே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மகாவிஷ்ணுவின் வருகை!

செய்தி: திரும்பிய பக்க மெல்லாம் பன்றிகள் - அசுத்தமாகிய சபரிமலை.

- தி இந்து28.10.2013

சிந்தனை: பன்றியா? மகா விஷ்ணுவின் அவ தாரமாயிற்றே! அய்யப் பனோ மகாவிஷ்ணுவின் குழந்தை ஆயிற்றே - அந்த உறவில் வந்தி ருக்கலாம் அல்லவா!

தமிழ் ஓவியா said...


மோடியால் நல்லாட்சி கொடுக்க முடியாது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை படப்பிடிப்பு

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என நம்ப முடியவில்லை என்று அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது. ஏனெனில், ஏராளமான இந்தியர்களி டையே அச்சத்தையும் விரோதத்தை யும் மோடி ஏற்படுத்தி உள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழு வினர் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகளையும், அதிருப்தியா ளர்களையும் சமாளித்து பணியாற் றும் திறன் மோடியிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியால் நல்லாட்சி கொடுக்க முடியாது
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை படப்பிடிப்புபாஜகவுடனான 17 ஆண்டு கால உறவை அய்க்கிய ஜனதா தளம் முறித் துக் கொண்டதன் மூலம் ஏற்கெனவே மோடி தனிமைப்படுத்தப்பட்டு விட் டார். மோடி பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமற்றவர் என்பதாலேயே அக்கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மதத்தினர் உள்ளனர். இந்நிலையில் பெரும்பா லான மக்களிடையே அச்ச உணர் வையும், விரோத மனப்பான்மையை யும் ஏற்படுத்தியுள்ள மோடியால் அந்த நாட்டை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று அக்குழு வினர் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பொரு ளாதார நிலை குறித்தும் அந்த பத் திரிகை கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது குஜராத்தின் பொருளா தாரம் ஒட்டுமொத்தமாக பாராட்டும் வகையில் இல்லை. குஜராத்தில் வறு மைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விகிதம் பிற மாநிலங்களைவிட குறை வாகவே இருப்பினும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம் களைவிட அந்த மாநில முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின் றனர். மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக 13.8 கோடி முஸ்லிம்களுக் கும் மற்றும் பிற சிறுபான்மையினருக் கும் பிரச்சினையே என்று அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அசீமானந்தாவின் வாக்குமூலத்தை மறக்க முடியுமா?

பாட்னா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நம் நாட்டுத் தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தப்பட ஒரு விடயம் கிடைத்து விட்டது. சக்கைப் போடு போடுகிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி, பி.ஜே.பி.யினர் ஏதோ பரிசுத்த யோவான் போல அகிம்சாமூர்த்தி வேடம் போட்டு ஆடப் பார்க்கிறார்கள்.

பாட்னா வன்முறையை யாரும் நியாயப்படுத்த வில்லை; நியாயப்படுத்தவும் முடியாது - கூடாது.

இந்திய முஜாகிதின் அமைப்பின் தீவிரவாதத்தை எந்த முஸ்லீம் அமைப்பும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் பி.ஜே.பி.யோ சங்பரிவார்களோ அந்த வகையை சார்ந்ததில்லை; அவர்களே திட்டமிட்டு வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்பவர்கள். சங்பரிவார் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு வக்காலத்து வாங்கக் கூடியது பி.ஜே.பி.,
ஒரிசா மாநிலத்தில் தொழு நோயாளிகள் மத்தியில் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த கிரகாம்ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர்தம் இருபாலகர் களையும் படுகொலை செய்த பஜ்ரங்தள் கும்பலுக்கு - தாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்புணர்ச்சியைக்கூட தூக்கி எறிந்து விட்டு பஜ்ரங்தள்காரர்கள் நல்லவர்கள்; அவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கவே மாட்டார்கள் என்று சொல்லவில்லையா?

பஜ்ரங்தள்ளைச் சேர்ந்த தாராசிங் குற்றவாளி தான் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டதே - அத்வானி கூறியது அப்பட்டமான பொய்; குற்றவாளியைக் காப்பாற்றும் முயற்சி என்பது புரியவில்லையா?
பாபர் மசூதி இடிப்பு என்பது, பா.ஜ.க. என்பது நேரிடையாகவே வன்முறையில் ஈடுபாடு கொண்ட நிகழ்வு அல்லவா?
குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது நரேந்திரமோடி என்ற நீரோ மன்னனின் நேரடி நடவடிக்கையல்லவா?

பாபர் மசூதி என்பது ஒரு கட்டடம்தான் அதை இடித்தது குற்றமாகாது என்று சொன்னவர் அவர்களின் ஜெகத் குருவான காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தானே?
பச்சைத் தமிழர் காமராசரை, ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரில், பசுவதைத் தடை என்ற பெயரில், படுகொலை செய்யத் துடித்தவர்கள் வரிசையில் ஜன சங்கத்தவர்கள் இருந்தனரே - பூரி சங்கராச்சாரி யார் இருந்தாரே - காவி வேட்டி சாமியார்கள் நிர்வாண சாமியார்கள் வெளிப்படையாக ஈட்டிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்களே!

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் - நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்தி பச்சையாகப் பீலிபட் பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார்? (17.3.2009)

இது எனது கை! (தன் கையை உயர்த்தியபடி) காங்கிரஸ் கட்சியின் சின்னமான கையல்ல. இது தாமரையின் சக்தி! இது தலைகளைத் துண்டிக்கும்; ஜெய் சிறீராம்! யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்களைப் பலகீனமாக நினைத்தால், கீதையில் சொன்னபடி அவர்களின் தலையை வெட்டுவேன் என்று பேச வில்லையா?

காவி பயங்கரவாதம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறவில்லையா? அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சராக வந்துள்ள சுசீல்குமார் ஷிண்டே, நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது என்று சொன்னபொழுது, இதே பி.ஜே.பி. சரி பரிவார்க் கூட்டம் குய்யோ முறையோ என்று கூச்சல் போட்ட நேரத்தில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் அப்படி தொடர் வன்முறையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட பட்டியல் கைவசம் உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக சொன்ன பிறகு தானே, அடங்கினார்கள். பாட்னா கூட்டத்தில் குண்டுவெடிப்புத் தொடர்பாக மோடி ஏன் பேசவில்லை - ஏன் மவுனம் சாதித்தார்? அதைப் பெரிதுபடுத்தினால் தமது பழைய கந்தாயமும் அம்பலமாகும் என்ற ராஜ தந்திரமாக இருக்கக் கூடும்.

வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போதே வெடித்தது உயிர் இழந்த ஆர்.எஸ். எஸ்.காரர்கள் உண்டே! பட்டியல் தேவையா?

மாலேகான் உள்ளிட்ட பல தொடர் குண்டு வெடிப்பு களில் (மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி ஆஜ்மீர் தர்கா உள்ளிட்டவை) சங்பரிவார்க் கூட்டத்தின் ஈடுபாட்டை அந்த முகாமைச் சேர்ந்த முக்கிய புள்ளியான சுவாமி அசீமானந்தா நீதிமன்றத் திலேயே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளாரே! எனவே பாட்னா வெடி குண்டு என்ற மூடு திரையைக் கொண்டு, தங்களின் வன்முறை முகத்தை மறைத்து விடலாம் என்று, மனப்பால் குடிக்க வேண்டாம்! பி.ஜே.பி. வகையறாக்கள்!

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையின் முடைநாற்றம்


கருநாடக மாநிலம், சிக்க பள்ளாபுரம், கவுரி பித்தனூர் தாலுக்காவின் வடக்கு தென் பெண்ணையாற்றின் கரையில் மகாபாரதக் காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் விதுரன் மோசமடைய பூவரசட் மரம் நட்டதாகவும், அம்மரம் அண்மையில் அடித்த மழைக் காற்றில் அடியோடு சாய்ந்து விட்டதாகவும் அதனை அப்புறப்படுத்தினால் எமனின் சீற்றத்திற்கு ஆளாகி உயிர்ப் பலி ஏற்படுமென அஞ்சி மரத்தினை வட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் அலட்சியம் செய்வதால் 42 தினங்கள் கடந்து விட்ட நிலையில் மரம் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றையக் கால கட்டத்தில் எமன் நட்ட மரம் ஏன் காற்றில் விழுந்து விட்டது? வருண பகவானும் (மழை) வாயு பகவானும் (காற்று) கூடிக் கொண்டு செயல்படும்போது எமதர்மனின் சக்தி என்னானது? இவை எல்லாம் மக்களை மூடநம்பிக்கையில் சிக்க வைக்க போலி சாமியார் மந்திர மவுடிகவாதிகளின் பிரச்சாரமாகும்.

மூடநம்பிக்கையால் முடைநாற்றம் வீசிய மதக் குப்பைகளைக் கிளறி சமுதாயத்தை நந்தவனமாக்கிய பணியைச் செய்த அறிவாசான் தந்தை பெரியார் வழியில் இன்றளவும் செயல்படும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறுவார் நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! என்று கூறுவார். அதுபோல் எமனின் உயிர் பலிக்கு அஞ்சாமல் மூடநம்பிக்கையை தோலுரிக்கும் விதமாக எனது தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களுடன் மேற்படி மரத்தினை வெட்டி அப்புறப்படுத்த ஆயத்தமாய் உள்ளோம். இதற்கு மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து எனக்கு உறுதிமொழி கடிதம் வாயிலாகக் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க தயாராக உள்ளேன்.

- மு. சானகிராமன் தலைவர், திராவிடர் கழகம், பெங்களூர்

தமிழ் ஓவியா said...


முதன் முறையாக சூரியனை நோக்கி வரும் அய்சான் வால் நட்சத்திரம் : நவ.23ஆம் தேதி தெரியும்


நாகர்கோவில், அக்.29-சூரியனுக்கு அருகே, வருகிற 23ஆம் தேதி தோன்றுகிற அய்சான் வால் நட்சத்திரத்தை பள்ளி, கல்லூரி களில் பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

சூரிய மண்டல கோள்களை தாண்டியுள்ள குய்ப்பர் வளையம் மற்றும் சூரிய மண்டலத்தின் கடைக்கோடி எல்லையில் உள்ள ஊர்ட் மேகங்கள் ஆகிய இரு இடங்களில் வால் நட்சத்திரங்கள் உருவாகின்றன. கடந்த 200 ஆண்டு களாக நாம் பார்த்த வால்நட்சத்தி ரங்கள் அனைத்தும் மீண்டும் மீண் டும் சூரியனையே சுற்றி வருபவை. ஆனால், தற்போது, அய்சான் என்ற வால் நட்சத்திரம் முதன்முறையாக நவம்பர் 23ஆம் தேதி சூரியனை நோக்கி வருகிறது.

இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் கணேசன் கூறு கையில், வானில் வால் நட்சத்திரம் தெரிகிறது என்றதும் தவறான செய்திகளும், மூட நம்பிக்கைகளும் பரவ வாய்ப்புள்ளன. எனவே உண்மைச் செய்தியையும், அறிவியல் கருத்துக்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந் நிகழ்வை பள்ளி, கல்லூரி மாணவர் களிடம் கொண்டு செல்ல ஆசிரியர் களுக்கான சிறப்பு பயிற்சியை நடத்தி வருகிறோம் என்றார்.

புதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானி சாதனை

வாஷிங்டன், அக். 29-விண்வெளி மண்டலத்தில் மிகவும் அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டத்தை வான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிங்கல் ஸ்டீல், அவருடைய ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் ஆகியோர் இணைந்து புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில், மிக அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டம். இது பூமியில் இருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிக் பேங் என்ற அண்டவெளியில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திர கூட்டம் உருவாகியுள்ளது. இது குறித்து விதால் தில்வி கூறுகையில், உலகிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார்.

தமிழ் ஓவியா said...


முதன் முறையாக சூரியனை நோக்கி வரும் அய்சான் வால் நட்சத்திரம் : நவ.23ஆம் தேதி தெரியும்


நாகர்கோவில், அக்.29-சூரியனுக்கு அருகே, வருகிற 23ஆம் தேதி தோன்றுகிற அய்சான் வால் நட்சத்திரத்தை பள்ளி, கல்லூரி களில் பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

சூரிய மண்டல கோள்களை தாண்டியுள்ள குய்ப்பர் வளையம் மற்றும் சூரிய மண்டலத்தின் கடைக்கோடி எல்லையில் உள்ள ஊர்ட் மேகங்கள் ஆகிய இரு இடங்களில் வால் நட்சத்திரங்கள் உருவாகின்றன. கடந்த 200 ஆண்டு களாக நாம் பார்த்த வால்நட்சத்தி ரங்கள் அனைத்தும் மீண்டும் மீண் டும் சூரியனையே சுற்றி வருபவை. ஆனால், தற்போது, அய்சான் என்ற வால் நட்சத்திரம் முதன்முறையாக நவம்பர் 23ஆம் தேதி சூரியனை நோக்கி வருகிறது.

இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் கணேசன் கூறு கையில், வானில் வால் நட்சத்திரம் தெரிகிறது என்றதும் தவறான செய்திகளும், மூட நம்பிக்கைகளும் பரவ வாய்ப்புள்ளன. எனவே உண்மைச் செய்தியையும், அறிவியல் கருத்துக்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந் நிகழ்வை பள்ளி, கல்லூரி மாணவர் களிடம் கொண்டு செல்ல ஆசிரியர் களுக்கான சிறப்பு பயிற்சியை நடத்தி வருகிறோம் என்றார்.

புதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானி சாதனை

வாஷிங்டன், அக். 29-விண்வெளி மண்டலத்தில் மிகவும் அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டத்தை வான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிங்கல் ஸ்டீல், அவருடைய ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் ஆகியோர் இணைந்து புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில், மிக அதிக தொலைவில் உள்ள நட்சத்திர கூட்டம். இது பூமியில் இருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிக் பேங் என்ற அண்டவெளியில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திர கூட்டம் உருவாகியுள்ளது. இது குறித்து விதால் தில்வி கூறுகையில், உலகிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார்.