தந்தை பெரியார் தேவைக்கான உச்சக்கட்டம் இது. வரலாற்றுப் போக்கால் ஆரியத்தை, வருணாசிரமத்தை வைதீ கத்தை வீழ்த்தி புத்தம் எழுந்தது. பிற் காலத்தில் பக்தி மார்க்கம் சூழ்ச்சியால் கோலோச்சி பவுத்த சமண மார்க்கங் களைச் சாய்த்தது.
பல நூற்றாண்டுகளுக்குமுன் பவுத்தமும், சமணமும் தோற்ற இடத்தில் தந்தை பெரியார் என்ற ஒரு வரலாற்றுப் பெருமான் எழுந்தார்.
ஆரியத்தின் ஆணி வேர் பக்க வேர், சல்லி வேர்களை சொல்லிச் சொல்லி வெட்டி வீழ்த்தினார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் பெரு வெள்ளமானது; - சூறாவளி யாகச் சுழன்றது; சுனாமியாக வீறு கொண்டது. தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மூட் டிய தீ இந்தியா முழுமையும்
ஒடுக்கப் பட்ட மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந் திருக்கிறது.
சூத்திரா என்ற அமைப்பு உத்தர பிரதேசத்தில்
உதித்தது. இராமனுக்கு அங்கும் செருப்படி விழுந்தது. டில்லியில் பெரியார்
மய்யம் எழுந்தது. கொல் கத்தாவில் பெரியார் மய்யம் தேவை என்ற விண்ணப்பம்
தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின்
சிகாகோவை தலைமை மய்யமாகக் கொண்டு எண்டிசையும் ஈரோட்டு வேந்தரின் சிந்தனைச்
செல் வங்கள் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.
யானைக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து; -
மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்தோ, ஆபத்து! உலகம் மத யானை யின்
அச்சுறுத்தலால் பெரும் அபாய வட்டத்துக்குள் சிக்கி மூச்சுத் திணறுகிறது.
மத அடிப்படைவாதிகள் அனைத்து மதங்களிலும்
மூர்க்கமாக எழுந்துள்ளனர். இந்தியாவில் இந்துத்துவா என்னும் காவிக் கூட்டம்
திரிசூலத்துடன் புறப்பட் டுள்ளது.
அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று கூறி காவிப் படையினர் துவம்சம் செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் அமைந்த காவி ஆட்சி
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித் தது -
தலைகளைச் சீவியது. கர்ப்பிணிப் பெண்களைக் கூட சூறையாடியது.
இந்தியாவையே குஜராத் தாக்க துடித்துக்
கொண்டு நிற்கிறது. வரவிருக் கும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்று டில்லி
கோட்டையில் காவிக் கொடியை ஏற்றலாம் என்று எச்சில் ஊறி எகிறிக் குதிக்கிறது.
புத்தரை வீழ்த்தி வைதிகம் புத்துணர்வு
பெற்றது போல - பெரியாரியத்தை வீழ்த்தி மீண்டும் ஆரியம் அரியாசனத்தில்
அமரும் ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதற்குப் பெரும் தடை தந்தை பெரி யாரியல்தான். அதனை நிர்மூலப்படுத் தாமல் தாம் நினைத்தது நடக்கப் போவ தில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளனர். பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.
இந்தியாவில் 70 சதவிகித ஊடகங்கள்
பார்ப்பனர்கள் கைகளில்; இணையதளம் வேறு சேர்ந்து கொண்டு இருக்கிறது. பொய்யை
விதைத்து பொய்யை அறுவடை செய்யும் கும்பலாயிற்றே! விதைக்காது விளையும்
கழனியாயிற்றே!
தந்தை பெரியார் மீது அவதூறுகளை ஆவேசமாக
அள்ளி வீசுகிறார்கள். எந்த வகையிலாவது பெரியாரியலைப் பலகீனப்படுத்த
முடியாதா என்பதில் படாதபாடு படுகிறார்கள்.
பெரியார் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி
என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பறச்சி ரவிக்கை போட்டதால் தான் விலைவாசி
ஏறி விட்டதாகப் பெரி யார் பேசி இருக்கிறார் என்று பொத்தாம் போக்கில்
புழுதி வாரி, தூற்றுகின்றனர்.
பெரியார் எங்கே பேசினார்? எப்பொ ழுது பேசினார்? என்ற விவரங்கள் கிடை யாது. மானாங்காணியாக எழுதுகிறார்கள்.
இந்த அக்கப் போர் குற்றாச்சாற்று தந்தை பெரியார் காதிலும் விழுந்தது.
இதற்குத் தந்தை பெரியாரே பதில் கூறியிருக்கிறார்.
நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாக
தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச்
சொல்லை சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னதுதான்; எலெக்சன் நேரத்திலே
இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது ராமசாமி நாயக்கர்
பறைச்சியெல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட
பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு,
தாழ்த்தப்பட்ட மக்கள், அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஒட்டுப் போடாதீர்கள் என்று
வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். நான் சொன்னது உண்மைதான் நான்
தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது; போட்டால்
அடிப்பார்கள். மேலே துணியே போடக் கூடாது அப்படி இருந்த சமுதாயம் காலம்
மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க
முடியவில்லையென்று சொன்னேன்; இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு
விரோதமாகத் தூண்டவும். நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல்
செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே யாகும்.
------------------- (சென்னை அயன்புரத்தில் 11.12.1968 மாலை
7.15 மணி அளவில் நடைபெற்ற வேலூர் நாராயணன் அவர்களின் பாராட்டு விழாவில்
பேசுகையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து இந்தப் பகுதி
எடுத்துக்காட்டப்பட்டுள்ளது).(ஆதாரம்: விடுதலை 15.12.1968 பக்கம் 3).
உண்மை இவ்வாறு இருக்க, ஒடுக்கப் பட்ட
மக்களுக்காக வைக்கம் வரை சென்று போராடி அதற்காக இருமுறை சிறை வாசமும் கண்டு
வந்த வைக்கம் வீரர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துகிறார்கள் என்றால்
அவர்கள்தான் கொச்சை மனிதர்கள்; உண்மையைக் காலில் போட்டு மிதித்து
பொய்மையில் வயிறு வளர்க்க ஆசைப்படும் அற்பப் பேர் வழிகள்.
தீண்டாதார் எனும் தலைப்பில் 1928 நவம்பர் 8ஆம் தேதி வெளிவந்த குடி அரசில் தந்தை பெரியார் எழுதிய தலை யங்கம் என்ன கூறுகிறது?
தீண்டாதார்
பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
மிகவும் முக்கியமான தென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம்.
ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்
திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலேயோ அவர்கள் முன்னேறவில்லை. இதன்
காரணத்தினால் தேசத்தில் 5-ல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து
சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய்
முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப்புலிகளுக்கு இதைப்பற்றிக்
கவலையிராதுதான். பொறுப்புள்ள பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது
தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை.
இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான்
சொல்லவேண்டும் சுமார் 25 வருடங் களுக்கு முன்பாவது இச்சமூகங்களுக்கு
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருக்குமேயானால் இன்றைய
தினமும் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப் பிராய பேதங்களும், ஒற்றுமை
யின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிரா மணக்கொடுமையும் நமது நாட்டில்
இருக்குமா?தெருவில் நடக்கக்கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத
மனிதனும், அவனவன் மதத்தை அறியக் கூடாத மனிதனும், அவனவன் தெய் வத்தைக்
காணக்கூடாத மனிதனும் இந்தி யாவில் இருக்கக்கூடுமாவென்பதை யோசிக்க
வேண்டுவதோடு பொது நோக் குடைய ராஜீய மகாநாட்டில் இதை வலி யுறுத்தி
அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேசபக்தர்களின் கடமையென்பதை
வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
------------------------------ குடிஅரசு தலையங்கம் - 08.11.1925
பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்றவரும் பெரியார் (குடிஅரசு 11.10.1931)
ஜாதி இழிவு இன்னும் வெளிப் படையாக
சூளுரைத்து நிற்கக் கூடிய இடம் கோயில் கருவறையே! அந்த இடத்திற்குத்
தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினரும் சென்று அர்ச் சனை செய்யும்
உரிமை சட்ட ரீதியாக வர வேண்டும் என்ற கருத்தைச் சொன் னது மட்டுமல்ல; -
அதற்காக தம் இறுதி மூச்சு அடங்கும் வரை - அதற்கான களத் திலேயே நின்று
மரணத்தைத் தழுவிய தலைவரைப் பார்த்து பன்னாடைகள் புலம்புவதும்,
புறம்போக்குகள் சபாஷ் போடு வதும் வெட்கக் கேட்டின் எல்லையே!
******************************************************************************
******************************************************************************
மேயர் வேலூர் நாராயணனுக்கும், அமைச்சர் சத்தியவாணிமுத்து
அம்மையாருக்கும் இடையே தந்தை பெரியார் செய்து வைத்த சமாதானம்!
வேலூர்
நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம்; வேலூர் நாராயணன்
அவர்கள் மகனுக்கும் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள்
மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை
விரும்பாமல் ஜாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை
வெடித்தது.
அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள்
தம் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட
அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார்
அவர்கள் பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார்.
வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச்
சேர்ந்தவர், அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படிச்
சொல்லியிருந்தால் அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுகிறேன். தாழ்த்தப்பட்ட
மக்களை இழிவுபடுத்தி ஏதாவது சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில்
இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாக பேசினார் தந்தை பெரியார்.
அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார்
அவர்கள் ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு
வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக
இருப்பதைக் கேவல மாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைக் கேவலமாகக்
கருதுகிறேன்.
எனக்குப் பிள்ளை இல்லை; ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும்
பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக்
கொடுத்திருப்பேன். அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.
காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச்
சொல்லலாமா என்று கேட் பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன்.
இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி
விடுவேன் என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டத்தில்
(11.12.1968) பேசினார்.
***********************************************************************************
------------ மின்சாரம் அவர்கள் 21-9-2013 “விடுதலை” ஞயிறுமலரில் எழுதிய கட்டுரை
44 comments:
வாதாபியிலிருந்து பிள்ளையார் வந்தாரா? வரலாற்று உண்மை என்ன?
- முனைவர் பேராசிரியர் மங்கள முருகேசன்
தமிழ்நாட்டில் பிள்ளையார், கணபதி, விநாயகர் என்றும் கணபதி வழிபாடு வாதாபியிலிருந்து பல்லவர் காலத்தில் பல்லவமன்னன் நரசிம்ம வர்மனின் படைத்தளபதியாக விளங் கிய, சிறுத்தொண்டர் என்று பின்னால் ஆன மத நாயன்மார்களில் ஒருவரான, பரஞ்சோதி சாளுக்கிய மன்னன் 2ஆம் புலிகேசி-யை வென்று வெற்றிப்பரிசாக வாதாபியிலிருந்து விநாயகர் சிலையைக் கொண்டு வந்தார். அதன் பின்னரே தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு உருவாயிற்று என்று ஒரு புருடா - பொய்க்கதை நீண்ட காலமாகப் பரப்பப்பட்டு அதுவே உண்மை என்று பலரும் நம்புகின்றனர். நல்ல வேளையாகத் தமிழ்நாட்டில் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பதை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் ஆரியர்கள் தமிழ் நாட்டில் புகுத்தியவற்றில் கணபதிக் கடவுள் வழிபாடும் ஒன்று.
நம் கர்நாடக இசைப்பாடகர்கள் - சொல்லி வைத்தாற்போல், பாட்டுத் தொடங்கும் முன் கணபதியை அதா வது முதற் கணபதியை வணங்குவதாக, கர்நாடக இசை மூவர்களில் ஒருவரான - தமிழ் இசை மூவர்களில் ஒருவரல்ல - முத்துச்சாமி தீட்சிதர் பாடிய வாதாபி கணபதி, பஜேம், பஜேம் என்னும் பாடலைப் பாடுகிறார்கள்.
தமிழகத்தில் திருச்செங்காட்டாங் குடிக் கணபதி கோயிலே தமிழகத் திலேயே முதல் முதலாக கட்டிய விநாயகர் கோவில் என்னும் கருத்து நிலவி வருகிறது. திருச்செங்காட்டாங் குடிக்குக் கணபதீச்சுரம் என்றும் பெயரும் இருக்கிறது.
நரசிம்ம வர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி வாதாபிப்போருக்குத் தலைமையேற்றுச் சென்று இரண்டாம் புலிகேசியைப் போரில்வென்று வாதா பியிலிருந்து இந்த விநாயகர் உரு வத்தைத் தமிழகத்திற்கு வித்தியாசமான உருவத்தைத் தம் வெற்றிப் பரிசாக நிறு வினார் என்று எந்தவிதக் கல்வெட்டு, பட்டய ஆதாரமுமில்லாமல், அடிப் படையில்லாமல் பரவி விட்டது.
வரலாற்று அறிஞர்கள் இதனை ஆய்வு செய்து வாதாபியிலிருந்து வந்த இறக்குமதிச் சரக்கு அன்று; இந்த விநாயகர் வழிபாடு என்னும், இக் கருத்துத் தவறு என்று மெய்ப்பித்தும் எப்படியோ உலவுகிறது!
பெரிய புராணத்தைப் பாடியவர் சேக்கிழார். அவர் நாயன்மார்கள் ஆகிய சிவனடியார்களைப் பாடியிருக்கிறார். அவர்களுக்கு நாயன்மார்கள் என்று பெயர். அவரால் பாடப்பெற்ற 63 நாயன்மார்களுள் சிறுத்தொண்டராக உயர்த்தப் பெற்ற பரஞ்சோதியும் ஒருவர். பெரியபுராணம் சிறப்பிக்கிறது பரஞ் சோதியை.
பெரிய புராணத்தில் சேக்கிழார் வாதாபியிலிருந்து கொண்டு வந்த பரிசுகள் இன்ன, இன்ன என்று பட்டிய லிடுகிறார். அந்தப் பட்டியலில் வாதாபி யிலிருந்து கொண்டு வந்த பரிசு என்றும் வாதாபி கணபதி இடம் பெறவில்லை. அதுமட்டுமல்ல பெரியபுராணத்தில் வாதாபி சிலையைப் பரஞ்சோதி அலைஸ் சிவத்தொண்டர் கொண்டு வந்தததாகக் கூறவில்லை.
பெரிய புராணத்தில் தான் இல்லை, கல்வெட்டு, பட்டயம் ஆகிய இவற்றில் ஏதேனும் இருக்கிறதா? துடைத்துப் பார்த்தாலும் சரி, தோண்டிப் பார்த் தாலும் சரி ஆதாரம் எதுவுமில்லை. தமிழகத்தில் இதுவரை கிடைத்த எந்தக் கல்வெட்டிலும், கணபதீச்சுரம் கல்வெட் டிலும் இல்லை. தோல்வியடைந்தானே புலிகேசி அவனுடைய கல்வெட்டு அவனுடைய சாளுக்கிய மரபுக் கல்வெட்டு எதிலும் இல்லவே இல்லை.
கி.பி.ஏழாம் நூற்றாண்டுக் காலத்துத் தேவார மூவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் பாடலிலோ, அப்பர் பாடலிலோ வாதாபி கணபதி பற்றிக் கூறவில்லை.
சேக்கிழார்தான் என்ன கூறுகிறார்? கணபதி கோயிலை வாதாபியிலிருந்து கொண்டு வந்து பரஞ்சோதி கட்டினார் என்றாவது கூறினாரா? இல்லையே!
சேக்கிழாரின் பாடல் வரிகளில் பொடி நுகரும் சிறுத்தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச்சுரத்தானே அதாவது சிவத் தொண்டருக்கு அருள் புரிய கணபதீச்சுரத்தில் விநாயகர் வீற்றிருந்தார் என்று கூறுகிறார். இதை வைத்துக் கொண்டு எப்படிக் கூற முடியும்?
பரஞ்சோதி போரிடப் போனவர் பரிசுப்பொருட்களைக் கொண்டு வந்து அரசரிடம் ஒப்படைப்பார். அப்படி ஒப்படைக்கிறவர் மற்றப்பரிசுப் பொருட்களையெல்லாம் மன்னரிடம் கொடுத்துவிட்டு, கணபதி சிலையை மட்டும் தான் வைத்துக்கொண்டு தம் சொந்த ஊரில் வைத்துக்கோயில் கட்டினார் என்பது பொருத்தமாகவா இருக்கிறது? இல்லையே!
திருச்செங்காட்டாங் குடியில் வாதாபி கணபதி கோயில் சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. உயர்வானது என்று கூறலாமா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை. திருச்செங்காட் டாங்குடியில் மங்கள கணபதி, சித்தி கணபதி, சூரிய கணபதி, சம்பந்த கணபதி ஸ்தம்ப முகூர்த்த கணபதி என ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 23-ஆம்! 23 கணபதிகள் வாதாபி கணபதிக் கென்று உயர்வோ, சிறப்போ இல் லையே.
சரி, இந்த விநாயகர் உருவம்தான் சிறப்பு என்று ஏதேனும் சிறப்பு வழிபாடு உண்டா? அதுவும் இல்லை. வழக்கமாகக் கோயில்களில் வழிபாடு நடத்துபவர்கள், முதலில் விநாயகர், முருகன் முதலியோருக்குப் பூசையை முடித்து இறுதியாகக் கருவறையில் உள்ள ஈசனுக்கு நடத்துவர். திருச் செங்காட்டாங்குடியில் அது கூட இல்லை சிவனுக்கு வழிபாடு நிகழ்த்திய பின்னர் தான் விநாயகருக்குப் பூசை.
தமிழ்நாட்டில் தான் இப்படி என்றால் வாதாபியில் நிலைமை எப்படி?
விநாயகர் வழிபாட்டில் சிறந்தோங் கிய வாதாபி நகரில் விநாயகர் வழி பாட்டில் சிறப்பு மிக்க உருவங்கள் இருக்கலாம் அல்லவா?
அந்தக் கண்ணோட்டத்தில் வாதாபியிலும் விநாயகர் நிலை எப்படி என்பதைக் கண்ணுறுகையில் சிறப்பான கணபதி வணக்கத்திற்குரிய சான்றுகள் உள்ளனவா எனில், கணபதி சிலை யேதும் வாதாபியில் உயர்வாகவோ, சிறப்பாகவோ வைத்து எண்ணப் பெறவில்லை. ஒரே ஒரு விநாயகர் உருவம் மட்டும் எல்லா ஊர்களிலும் ஒரு விநாயகர் உருவம் இருப்பது போல் அங்கும் இருக்கிறது.
வாதாபி எனும் அரக்கனைக் கொல்ல உதவியவர் வாதாபி கணபதி என வால்மீகி இராமாயணம் கூறுகிறது. கஜமுக அரக்கனைக் கொன்றதால் விநாயகருக்கு எப்படி கஜானன் என்று பெயர் வந்ததோ அதுபோல் வாதாபி என்ற அரக்கனைக் கொன்றவர் வாதாபி கணபதி எனப்பட்டார் எனலாம்.
எனவே கணபதியைச் சிறுத் தொண்டர் கொ
ண்டு வந்து நிறுவிய பிறகே விநாயகர் வழிபாடு என்பதில் முடிகிறது உண்மை.
இதில் ஒரு வேடிக்கை திருச்செங் காட்டாங்குடிக் கணபதிக்கும், சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள கணபதிக்கும் யானைத் தலையெல்லாம் கிடையாது. மிருக முகமே கிடையாது; மனித முகம்தான்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டுக்கு முன் எந்த இலக்கியத்திலும் விநாயகர் பற்றிய குறிப்பு இல்லை. நாம் காணுவன எல் லாம் அதற்குப் பிற்பட்டவை. சிற்ப அமைதியிலும் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட விநாயகர் சிலை ஏதும் இல்லை.
தமிழகத்தில் சங்க காலத்திற்குப் பின் சங்க காலத்தில் பத்து விழுக்காடு அளவு இருந்த ஆரியம் பல்கிப் பெருகி, வடக் கும், தெற்கும் பல் வகையில் இணைந் தன. சேது இமாச்சலம் எனச் சேது தென் எல்லையாகவும், இமயம் வட எல்லையுமாயின. தீபாவளி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, ராம நவமி கிருஷ்ண ஜெயந்தி இறக்குமதியாயிற்று.
குணம், குறி, உருவம் அற்ற பரம் பொருள் என்று இயற்கைக்கு உருவம் கொடுக்காத தமிழர் மத்தியில் வெவ் வேறு வடிவங்களைக் கற்பித்த ஆரியர் சிவன், திருமால், சக்தி, கணபதி, முருகன் சூரியன் என்று கூறி ஷண்மத வழிபாடு என்று பெயரிட்டு வழிபடும் நெறி முறைகளை வகுத்தனர்.
இந்த அறுவகைப் பிரிவில் பிரம்மா, திருமாலின் உந்தியில் உதித்தவராத லால், படைப்புக் கடவுள் என்று பிரம்மாவிற்கு என படைப்பு டிபார்ட் மெண்ட் ஒதுக்கிய போதிலும், அது சமயத்தில் இடமில்லை.
அறு சமய வழிபாடு வடநாட்டில் தோன்றித் தென்னாட்டில் பரவியது. தமிழர்களின் கடவுளான இந்திரன், வருணன் வடநாட்டு வழிபாட்டு முறையில் அறு சமயப் பிரிவில் இடம் பெறவில்லை. சங்கரர் அறு சமய நிறுவனர் எனும் பொருளில் ஷண்மத ஸ்தாபனாச்சாரியர் என்றனர். கி.பி.5ஆம் நூற்றாண்டிற்குப் பின் விநாயகர் தேவ கணங்களின் தலைவனாக உயர்த்தப் பெற்றார். ஏனென்றால் கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் யாக்ஞவல்கியர் தாம் இயற்றிய நீதி நூலில் விநாயகரைப் பிரம்மாவாலும், ருத்திரனாலும் நியமிக்கப் பெற்ற கணநாதர் எனக் கூறுகிறார். இப்படிப் பரவியதுதான் கணபதி வழிபாடு. வாதாபிக் கணபதிக் கும் இதற்கும் சம்பந்தமில்லை.
சரஸ்வதி கடாட்சமா?
கவிஞர் கண்ணதாசனையும் அவரது ஆற்றலையும் அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. சொல் வளமும், கருத்துக் கனிகளும் அவரது கவிதைகளில் மலிந்திருக் கும். தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு அவரின் பலவீனங்களைச் சுட்டெரித்து மறக்கச் செய்தது. அவரைப் பலவிதமாக போற்றிப் புகழ பலர் இருந்தாலும் திருவாளர் சோ சொல்லும் விதம் அலாதியானது. 28.8.2013 குமுதத்தில் கண்ணதாசன் சரஸ்வதி கடாட்சம் பரிபூர்ணமாகப் பெற்றவர் என்கிறார்.
பாராட்டுவதற்கு வேறு வார்த்தைகளா இல்லை? கவிஞரின் பெருமையை இப்படியா கொச்சைப்படுத்துவது? எந்த ஒரு கலையும், தொழிலும் அதனால் வரும் முன்னேற்றமும் கடும் உழைப்பும், முயற்சியும், தன்னம்பிக் கையும் இல்லாமல் வந்து சேராது. யானை வந்து மாலை போடுவதும் நடக்காது. கவிதை புனையும் திறமையையும், தமிழறிவையும் கண்ணதாசன் வளர்த்துக் கொண்டார் என்று தானே நாடு இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி கடாட்சமும் கலைமகளின் அருளாசியும் காரணம் என்ற வாதம் நியாயந்தானா?
இந்த நாட்டில் எத்தனையோ பேர் அறி வுத் தாகம் தணிக்க அலைந்து கொண்டிருக் கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறார் கள். நூல் நிலையங்களில் புத்தகங்களைத் தேடுகிறார்கள். அறிவு மட்டுமே போதாது என்று கருதுபவர்கள் கனக்கும் செல்வமும் நூறு வயதும் வேண்டும் என கோயில் பொம்மைகள் முன் விழுந்து கிடக்கிறார்கள். இத்தனை (பக்த) கோடிப் பேரைக் கண்டு கொள்ளாத கடவுளச்சி, கண்ணதாசனுக்கு மட்டும் கடாட்சம் காட்டியதை ஏற்க முடிய வில்லையே! அவர் மட்டும்தான் அவளுக்குச் செல்லப் பிள்ளையா? வீணை வாணி எழுப்பிய நாதம் நாட்டுக் கோட்டைக்கு மட்டும் தான் கேட்டதா? கடாட்சம் எனப் படும் கருணைப் பார்வை எந்த வயதில், எந்த நிலையில் கிடைத்தது என்று சொல்ல முடியுமா? பகுத்தறிவும் நாத்திகமும் பேசிக் கொண்டிருந்தாரே அதற்கு முன்பாகவா? இந்த மக்களைப் பார்த்து கருணை மறந்தே வாழ்கின்றார். தினம் கடவுளைத் தேடி அலைகின்றார் என்று பாடியதற்கு பிறகா? எண்ணில் அடங்கா கடவுள்களின் கடாட்சம் வழங்கும் உரிமையும், யோக்கியதையும் இவள் ஒருத்திக்கு மட்டும்தான் இருக்கிறதா?
மூதேவியரில் இன்னொருத்தியும் உண்டே. சக்தியின் வடிவம் ஆயிற்றே. அவள் மட்டும் சாமான்யப் பட்டவளா? ரௌத்திரம் பழகிக் கொள்ள பராசக்தியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? கொலை வெறியர்கள், கொலை பல செய்தவர்கள், ஆறுவது சினம் என்பதை அறியாதவர்கள் இவர்களில் யாரேனும் ஒருவர் அகப்பட்டால் போதுமே, பார்வதி கடாட்சம் பெற்றவர் என்று சொல்ல.
இத்துடன் முடிந்து போய்விடக்கூடிய சமாச்சாரம் இதுவல்ல. அடையாளப்படுத் தப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக் கிறார்கள். காசாய உடையில் சாமியார் கோலத்தில் பக்திப் பழமாக நடமாடும் பீடாதிபதிகள், ஆனந்தாக்கள், அறவழிச் சித்தர்கள், தேவநாதன்கள் என பெரும் பட்டியலே வளர்கிறதே. அர்த்த சாமபூஜை நடுஇரவு நாமாவளி, முழு இரவு ஜெபம் என்று கூறி அப்பாவி இளம் பெண்களை வரவழைத்து சீரழிக்கும் வன்கொடுமை அரங்கேறிக்கொண்டு தானே இருக்கிறது. கடவுளின் கடாட்சம் இன்றி இக்கபட வேட தாரிகளுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? இது போன்ற லீலா விநோதத்தில் எந்தக் கடவுளும் சோடை போனதில்லையே.
தசரதனுக்கு 64000 மனைவிகள்! இது என்ன சாதாரணம்! கிருஷ்ண பரமாத்மா வுக்கு 116108 மனைவிமார்களாம். இத்தனை பேர் போதாதென்று இன்னொருவனுடைய மனைவியான இராதையிடம் தான் பெரும் பொழுதைக் கழித்தானாம். சொல்வது அர்த்தமுன்ன இந்து மதம்! அப்படியானால் கிருஷ்ண கடாட்சம் என்ற ஒன்று இருந்து தானே தீரவேண்டும்? கன்னிவேட்டைக்காரர் கள், கற்பை களவாடுவோர், காமக் கொடூ ரர்கள் இவர்களுக்கா பஞ்சம்? அவர்களில் தகத்தகாய ஒருவரைக் கண்டறிந்து கிருஷ்ண கடாட்சத்துக்காரர் என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எளிதான காரியம் இல்லைதான். முயன்றால் முடியாதது உண்டோ?
எத்தனையோ கடவுள்களும், கடாட்சங் களும் இருந்தாலும் இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏதிலிகளின் எண்ணிக்கை சற்றும் குறைந்த பாடில்லை. குன்றின் மீது ஏறிக் கூறலாம். கஞ்சத் தனம், வஞ்சகம் சிறிதுமின்றி தாராளமாக வாரி வழங்கப்பட்ட கடாட்சம் ஒன்றே ஒன்றுதான். அதுவே குசேலர் கடாட்சம்!
சர்வ சக்தியா? சர்வ சைபரா?
சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.
ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.
சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?
ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?
சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?
ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?
சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?
அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.
-- _ சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)
இக்குவனத்தின் இறுதி யாத்திரைப் பா
சால்பு நிறைந்தவன் சத்தியம் காத்தவன்
பால்மனப் பண்பு படைத்தவன் - தோல்வியில்
நித்தம் தவித்தவன் நேர்மையே போற்றியோன்
சித்தநல இக்குவனச் சேய் 1
சேயின் மனத்தவன் செந்தமிழைக் கொண்டவன்
நாயினைப் போல்நன்றி காத்தவன் - வாயிற்சொல்
கொள்கைப் பிடிப்புடை கோதிலன் கொஞ்சுதமிழ்த்
துள்ளுநடை இக்குவனம் சொல் 2
சொல்லில் தவறிடான் தூய மனத்தினன்
அல்லுபகல் பக்தியிலே ஆழ்ந்தவன் - நல்லோர்தான்
வந்தனை செய்தவன் வாழ்விலே செந்தமிழின்
சிந்தனையே இக்குவனச் சீர் 3
சீர்செய் குணத்தினன் தெய்வத்தைப் போற்றுவதில்
நேர்நில் இயல்பினன் நித்தமிறை - பேர்சொல்லி
வாழ்ந்தவன் வஞ்சனையே வாராத நெஞ்சினன்
தாழ்விலான் இக்குவனம்தான் 4
தான்எனும் மாயையே சாராத தன்மையன்
நானெனும் ஆங்காரம் நாடாதான் - மானெனும்
மான உணர்வினன் மன்னுதமிழ் வாழ்வினில்
கூனலிலான் இக்குவனம் கூறு 5
கூறுதமிழ்க் கொள்கையன் குற்றமிலா வாழ்வியலில்
மாறுபடா நெஞ்சினனாய் வாழ்ந்தவன் - வீறு தமிழ்ப்
பற்றிலே மிக்கவன் பார்ப்பனன் என்றபழி
சுற்றிவரா இக்குவனம் சொல் 6
சொல்லற்க இக்குவனைச் சூட்டற்கப் பார்ப்பனிய
அல்லல் தருபழியை ஆங்கவன்மேல் - நல்லதமிழ்ச்
சின்னவன் என்றிடுக சேயெனப் போற்றிடுக
மன்னவர்கா(ள்) உள்ளம் மகிழ்ந்து 7
மகிழ்வாய் மறலிகை சேர்ந்திட்டே(ன்) என்று(ம்)
அமிழ்தாக என்வெண்பா அன்பர் - தமிழ்மனத்தே
நின்றொலிக்க உங்கள் நிறைகழல்கள் நன்மனத்தால்
கன்றெனநான் வேட்பேன் கணித்து 8
கணினியி(ல்) என்றன் கனிவெண்பா எண்ணில்
அணிசெய்பல் லாயிரமாய் ஆர்த்தே _ மணியொலிபோல்
என்று(ம்) ஒலிக்க எழில்வேலன் தாளிணைகள்
நன்று துதித்திடுவேன் நான் 9
நான்கற்ற கல்வியும் நாணய வாழ்வமைவும்
தேன்சிந்தும் நன்மலர்போல் தித்திக்க - வான்தந்த
மாமறைபோல் நெஞ்சம் மகிழ்வுற்றே காலமெலாம்
நேமமுறக் காட்டிடுமே நீதி 10
நீதி தவறாமல் நீள்நெறி மாறாமல்
ஆதி நெறிமுறைகள் அன்பொன்ற - ஓதியநற் சிந்தனைகள் சேர்ந்த சிறப்போடே நான்நித்தம்
வந்திப்பேன் கந்தனடி வந்து 11
வந்து பிறந்திட்டேன் வண்ணத் தமிழ்நாட்டில்
சந்தமுறு நற்குடும்பச் சந்ததியில் - முந்திவந்த
தென்றலெனும் வாழ்வில் திளைத்திட்டே(ன்) என்றுமே
தன்நிலையின் சீருணர்தல் சால்பு 12
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்
மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலையைக் கண்டித் தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். இந்திய சமூகத்தை பீடித்துள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போரில் தன் உயிரையே விலையாக தந்துள்ளார் மஹாராஷ் டிரா மாநிலத்தைச் சேர்ந்த. நரேந்திரா தபோல்கர்.
இப்படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பவர், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவர். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்னும் நச்சுப்பொருளை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து இயற்கையினை நாசப்படுத்துவதற்கு எதிராக போராடியவர். தமது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் போராடினார். சமூக நீதி நிலைத்திட, சமத்துவம் காண ஜாதிமறுப்புத் திருமணங்களை முன் னின்று நடத்திய சமூக போராளியான தபோல்கரின் கொலை ஒரு வெற்றி டத்தை உருவாக்கிவிட்டது. இது சமூக முன்னேற்றத்திற்கும் சமூக மாற்றத் திற்கும் மிகப்பெரிய இழப்பு.
இந்திய அரசியல் சாசனம் பிரிவு 51 a(h), ஒவ்வொரு இந்திய குடியும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படை கடமை என உணர்த்துகிறது. பில்லி சூனியம், மாந்திரிகம், ஜோதிடம், ஏவல், போலி சாமியார்கள் போன்ற பல மூடநம்பிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு முரனாக உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் இயற்றக் கோருகிறோம். முற்போக்கு வாதிகளும் சீர்திருத்தவாதிகளும் தபோல்கர் கனவு கண்ட மூடநம்பிக் கைக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்பை காட்டிலும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. தபோல்கரின் படுகொலையை விசாரித்து வரும் மஹராஷ்ட்ரா காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். காவல்துறை விரைந்து செயல்பட்டு தபோல்கரின் படு கொலைக்குக் காரணமான கொலையாளிகளையும் அவர்களைத் தூண்டியவர்களையும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கிடக் கோருகிறோம். இந்தத் தீர்மானம்,விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்குபெற்ற கண் டனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் ,கலை ஞர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர் கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் , விவசாயிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள், உள்ளடக்கிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் இன்று (7.9.2013) இக்கூட்டத்தில் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் மூட நம்பிக் கைகளுக்கு எதிரான கருத்துப் பிரச் சாரத்தை மேற்கொள்ளும்.
இந்திரா கோவிலுக்குப் போவதேன்?
கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என இந்திரா அம்மையார் இரண்டு கல்வி கமிஷன்களின் உறுப்பினர்களிடையே பேசினார்
பிறகு ஏன் கோவிலுக்குப் போகிறார்? அவரே கூறிய செய்தி வருமாறு:- வகுப்பு இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற தனது குறிக்கோளுக்கு இது உதவுவதாக அவர் கூறினார்.
வழக்கமாக, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் நான் கோவில்களுக்குச் சென்றால் சிறுபான்மையினர் நலனுக்காக நான் கூறுவதை மெஜாரிட்டி சமூகத்தினர் தயாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இவ்வாறு இந்திராகாந்தி கூறினார்.
(தினமணி, மார்ச் 27, 1983)
கடவுள் நம்பிக்கை தேவையா?
பல துயரங்களை மறக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடைய மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
- அன்னை தெரசா (தி இண்டு, 30.11.2002)
பார்ப்பனரின் விளம்பரம்
7.2.2013 நாள் தினமணி ஏட்டில் வெளிவந்த கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் - அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.
இதோ அந்த விளம்பரத் தேவை
கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
1) Accountants: B.Com பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.
2) Typists:
நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.
3) Sales representatives:
வியாபாரத்தில் திறமையும், அனுபவமும் உள்ள பட்டதாரிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.
மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.
Raj & Co Post Box No.9, Coimbatore - 641001.
இந்த வேலைகளுக்கு பிராமணர்களிடமிருந்து மாத்திரம் விண்ணப்பம் எதிர் பார்க்கிறோம் என்று பார்ப்பனர்கள் பச்சையாக ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்கள் யார் என்று இன்னமும் தெரிந்து கொள்ளாதிருக்கும் மரக்கட்டைத் தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
புத்தரின் ஆத்மா மறுப்பு!
புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.
ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுவோம்.
கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்க முடியுமா?
காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா?
மூக்கை எடுத்து விட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?
நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்
சரித்திரம் படைத்த சந்திர மோகன்கள்
1945_-50 காலகட்டத்தில் பேரறி ஞர் அண்ணா அவர்கள் எழுதி நடித்த நாடகம் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் (அ) சந்திரமோகன் என்பதாகும். தமிழகமெங்கும் பல நகரங்களில் நாடக மேடைகளிலும் கழக மாநாடுகளிலும் மேற்படி நாடகம் நடத்தப்பட்டு வந்தது. அந்த நாடகத்தைப் பார்த்த தந்தை பெரியார் அவர்கள் நாடகத்தின் சிறப்பைப் பாராட்டியதுடன் அதில் சிவாஜியாக நடித்த வி.சி.கணேசன் அவர்களுக்கு சிவாஜி எனும் பட் டத்தைச் சூட்டி சிவாஜிகணேசனாக ஆக்கினார்.
தந்தை பெரியார் அவர்களின் பட்டப் பெயருடன் வி.சி.கணேசன் - சிவாஜி கணேசன் என்ற பெயரி லேயே தமிழக சினிமா வரலாற்றில் யாருமே சாதிக்காத சாதனைகள் பல புரிந்தவர் என்பதுடன் நடிகர் திலகமாக உயர்ந்து நின்றவர். சிவாஜி கணேசன் சினிமாவில் புகழ்மிகு நடிகராக ஆகிவிட்ட காரணத்தால் நாடகங்களில் நடிக்காத நிலையில். சந்திரமோகன் நாடகத்தில் சிவாஜி யாக சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் கூட கே.ஆர்.இராம சாமி நாடக சபாவுக்காக நடித்துக் கொடுத்தார். சம்பத் அவர்கள் சிவாஜியாக தோற்றப் பொலிவுடன் நடித்துப் பேசிய வசனம் இன்றும் என் நினைவில் உள்ளது.
சந்திரமோகன் சிவாஜியின் படைத்தளபதி. உழவர் குடியிலே பிறந்த சிவாஜி பெருவீரனாக வளர்ந்து எதிரிகளிடமிருந்து பல கோட்டை கொத்தளங்களை போர்மூலம் கைப்பற்றி மராட்டிய மண்டலத்தையே தன் வசம் கொண்டு வந்திருந்த நிலையில் பலரின் யோசனையின் பேரில் மராட்டிய மண்டல மன்னனாக முடி சூட்டிக் கொண்டு மன்னனாக ஆட்சிப்புரிய வேண்டும் என்ற எண்ணம் செயல்பட நிகழ்வுகள் நடந்து வந்த நிலையில் வருணாஸ்ரமதருமம் பேசும் மதவாதிகள் இதை எதிர்த்து தீவிரப் பிரச்சாரம் செய்தனர். சிவாஜி மாவீரன் தான் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர் உழவர் குடியில் பிறந்தவர் சத்திரியர் அல்ல சத்திரியர் இல்லாத ஒருவர் எப்படி மன்னனாக முடியும். இதை வேத சாஸ்திரங்கள் ஏற்றுக் கொள்ளாது என்று வாதிட்டு வந்தனர். இந்த செய்தி மராட்டிய மண்டலத்திற்கு மன்னனாகும் தகுதி சிவாஜிக்கு இல்லை என்று பரப்பப் பட்ட நிலையில், இதற்கு மாற்று ஏற் பாடாக ஒரு சில சாணக்கியர்களால் ஓர் ஏற்பாடும் கூறப்பட்டது.
ஆம், காசியிலிருந்து வரும் வேத விற்பன்னர் கங்குடடர் சத்திரியராக சிவாஜியை மாற்றுவதற்கான சகல விதமான சாஸ்திரங்களை கற்றவர் அவரை அழைத்து வந்து முறையாக பூஜைகள் செய்தால் சத்திரியனாக மாற்றியபின் முடிசூட்டிட ஆட் சேபனை இல்லை என்று கூறினர்.
சிவாஜியும் இதை ஏற்றுக்கொண்டு அதற்கான ஏற்பாட்டை செய்து வந்த நிலையில் தளபதி சந்திரமோகன் சிவாஜியை சந்தித்து நான் இந்த ஏற்பாட்டை ஏற்கமாட்டேன். நம் முடைய வீரத்தாலும் நம் படையின் ரத்தக்குவியலாலும் பெற்ற வெற்றி யால் ஒருங்கிணைக்கப்பட்ட மராட் டியத்திற்கு எந்த வகையிலும் இதற்கு சம்பந்தம் இல்லாத யாரோ ஒரு பரதேசியைக் கூட்டிவந்து அவர் கொண்டு வரும் கமண்டலத்தில் வரும் தண்ணீர் தெளித்து பூஜை யாகம் செய்து சத்திரியனாக மாற் றுவதா? அதை ஏற்பது நம் தன்மானத்திற்கே அவமானம். என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் இருக் கிறேன். அந்த சத்திரியனாக மாற்றும் ஏற்பாடு வேண்டாம். உடனே முடிசூட்டிக் கொள்வது நலம் என்று முழங்குகிறான்.
பொறுமையுடன் கேட்ட சிவாஜி, சந்திரமோகனா! என் ஆருயிர் தளபதியே உன் எண்ணத்தையும், இதயதுடிப்பையும் நன்றாக உணர்வேன். நீ சொல்வதும் சரியே! என் உள் எண்ணமும் அது தான். நம் மக்கள் ஓர் மாயவலையில் சிக்கி உள்ளனர். எதிரிகளின் பிரச்சாரத் தால் உண்மை புரியாது உள்ளனர். நான் உன்னிடம் ஓர் வேண்டுகோளை வைத்தேன். நான் இளமையிலிருந்து போர் - போராட்டம் என்று வாழ்க் கையை கரடுமுரடாக கழித்து விட் டேன். என்னால் மக்களின் நலத்தை பேண முடியவில்லை. மன்னனாக ஆனால் ஆட்சியின் மூலம் சில நன்மைகளாவது செய்ய முடியும் எனக் கருதுகிறேன். அதற்கு சத்திரி யனாக மாற்றுவதுதான் வழி என நிலை உருவாகி விட்டதால் அதை ஏற்க முடிவு செய்து விட்டேன். அந்த கங்குபட்டர். அவர் செய்யும் பூஜை போன்றவற்றை நாம் என்ன முழு மையாக ஏற்றுக் கொள்ளவா போகிறோம். பூஜையோ கங்குட்டர் வேலை முடிகிறது அதன் பின் நம் ஆட்சியை எதிர்ப்பில்லாமல் நடத்த லாமல்லவா யோசித்து பார் என்றார்.
சிவாஜியின் உருக்கமான உரை யைக் கேட்ட சந்திரமோகன் - தங்கள் நிலையை புரிந்து கொண்டேன் எனினும் கங்குபட்டரின் வருகை அவர் செய்யும் சத்திரியர் மாற்றம் போன்ற வற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து இதே கருத்தைக் கூறி நான் எதிர்த்தால் மக்கள் என்னை தவறாக கருதி மன்னர் ஆவதில் பொறாமைப்படுகிறான், விரும்ப வில்லை எனவும் பேசுவர். நீங்கள் மன்னர் ஆவதை மனதார ஏற்பதில் முதல் ஆள் நான். ஆனால் அதே சமயத்தில் நான் இருப்பது உசிதமாக இருக்காது. என் தன்மானம் இடம் தரவில்லை.
மன்னா இதோ என் படைத் தளபதி பதவியை தங்களின் காலடி யில் சமர்பித்தேன் ஏற்றுக் கொள் ளுங்கள். இனி நான் தனிப்பட்ட ஒர் மனிதன் என் உள்ளத்தில் உள்ள கருத்துக்களை சுதந்திரமாக வெளி யிடுவேன். மூடநம்பிக்கையில் மூழ்கி யுள்ள மக்களை சிந்திக்க வைப்பேன். மதம், சாஸ்திரம், கடவுள் புரட்டுகள் பற்றி ஊர்ஊராகப் போய் பிரச்சாரம் செய்வேன் எனக்கூறி பிரியா விடைபெற்று சென்றான்.
அதே சந்திரமோகன் தான் புரந்தர தாசர் என்ற ஞானியாக விளங்கியவர். மராட்டிய மண்டலத்தில் கடவுள், சாஸ்திரம், மூடநம்பிக்கைகளை எடுத்துப்பேசி பண்படுத்தியவர். அவர் பக்குவப்படுத்திய மராட்டிய மாநி லத்தில் தான் அம்பேத்கர் பிறந்தார். சந்திரமோகனால் பதப்படுத்தப்பட்ட பூமியான மராட்டியதில் தான் அண்மையில் நரேந்திர தபோல்கர் என்பவரை மதவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். அவரின் இறப்பையடுத்து தபோல்கரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகை யில் மராட்டிய அரசின் முதல்வர் சவான் அவர்கள் மந்திரம், பில்லி சூனியம், ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பவர்கள், சம்பந்தபடுவர்களுக்கு ஏழு ஆண்டு கள் கடுங்காவல் தண்டனை விதிக் கலாம் எனும் அளவுக்கு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
பகுத்தறிவுப் பூமியாக மராட்டியம் விளங்குவதற்கு சந்திரமோகன்கள் சிவாஜி காலத்திலேயே உழைத் திருப்பதை அறியும்போது பெரு மையாக உள்ளது. அந்த சந்திர மோகனை அடையாளம் காட்டிய பேரறிஞர் அண்ணா மறைந்தபோது மத்திய அரசு சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் சவான் என் பதும். அவர் குடும்பத்தில் பிறந்த இன்றைய சவான் அவர்கள் பகுத் தறிவு ரீதியில் சட்டம் கொண்டு வந்ததும் பொருத்தமானவையே.
-- வேலை பொற்கோவன்
ஆரியர்களுக்கு முன்னே யார் இருந்தார்கள்?
மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் ஜில்லாவில் ஊர் பெயர்கள், அவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஊர் பெயர்களின் ஆராய்ச்சிகளில் சிதைந்த சரித்திரத்தை இணைக்க உதவும் ஆதாரங்கள் பல காணப்படும் என்பது உண்மை (on probing into place names, fossils on history will be found) ரா, குரி, குண்டா, ஜுலி, ஜோல் என்று முர்ஷிதாபாத் ஜில்லாவில் காணப்படும் பெயர்கள் _ நிச்சயமாக திராவிட ஆரம்பங்களைக் கொண்டவைகளாகும். ரார்ஹ் என்ற பகுதி _ ஆரியர்கள் அல்லாத இனத்தினரால் நிரம்பி இருந்தது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். இங்கே மற்றும் ஓர் உண்மையையும் குறிப்பிட வேண்டும். வங்காள மொழியில் ஒலி அமைப்பில் (Phonetics) எழுத்து அமைப்பில் (Morphology) வாக்கிய ஏற்பாடுகளில் (Syntax) வார்த்தை கோவைகளில் ((Vocabulary) சந்தேகத்திற்கிடமில்லாத திராவிட உறவுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இவைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு ஊர் பெயர்களைப் பற்றிய பரவலான ஆராய்ச்சி செய்தால் _ வங்காளத்தின் பல பகுதிகளிலும் ஆரியர்கள் அல்லாத மக்கள் முக்கியமாக திராவிடர்கள் நிரம்பி இருந்தார்கள் என்பது நிச்சயம் தெரியவரும்.
(Dr. N. D. Bhattacharya M.A. Ph.D., Indian Geographical Journal (July, Dec. 1969)
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரியார் விழா வரவேற்கத் தகுந்தது
தந்தை பெரியார் அவர்களது 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களது படத்தை வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் மாலையிட்டு பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளார்!
இதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி - (இதற்கு முன் பெரிய அளவில் மக்கள் தலைவர் அய்யா G.K. மூப்பனார் அவர்கள் முன்னின்று அனைத்திந்திய தலைவர்களை அழைத்து சென்னையில் மாபெரும் விழாவெடுத் தார்கள் என்பது ஒன்று) காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெறவில்லை. இந்த முறையும், மரபும், அனைவராலும் போற்றிப் பின்பற்ற வேண்டிய பண்பாட்டு நிகழ்வு ஆகும்!
தரந்தாழ்ந்த விமர்சனங்கள்
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் மிகவும் தரக் குறைவான தாகவும், தனி நபர் பற்றிய தாக்குதல்களாகவும் அமைந்து விட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது. இப்போக்கு மாற வேண்டும். துக்க வீட்டில்கூட அரசியல் நுழைந்து, அதில்கூட விருப்பு, வெறுப்புகள் தலைவர்களைப் பொறுத்து காட்டப் படுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முற்றிலும் முரணானது - தவிர்க்கப்படல் வேண்டும்!
கருத்து மோதல்கள், கொள்கை நிலை விமர்சனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். தனிப்பட்ட குடும்பப் பெண்கள் பற்றியும் விமர்சனங் களாகவும், இழிநிலைக்குச் செல்லப்படுவது கண்டனத்திற் குரியவைகளாக அனைவராலும் கருதப்பட வேண்டும். தடுக்க வேண்டும்.
தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
கட்சித் தொண்டர்கள், பேச்சாளர்கள், தலைவர்களைத் திருப்தி செய்து, மனதில் இடம் பிடிக்க மலிவான கீழ்த்தரமாகப் பேசுவதை தலைவர்கள் சுவைக்கக் கூடாது; மாறாக, கண்டிக்க வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பொது வாழ்வைத் தூய்மைப்படுத்த அனைத்துத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
தரந் தாழ்ந்த எழுத்தாளர்களை, ஏடு நடத்துவோர் ஊக்குவித்தால், அவ்வேடுகளைப் புறக்கணிப்பதே சரியான தண்டனை ஆகும். அதையும் செய்யலாம்; செய்ய வேண்டுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.9.2013
உலகமயமாகிறார் பெரியார்
உலகமயமாகிறார் பெரியார்
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு
தோழர்களே, நமது தலைவர் தந்தை பெரி யார் அவர்களின் கொள் கைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல - உலகிற்கே சொந்தம் - மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்று புரட்சிக் கவிஞர் பாடி யது வெற்றுச் சொற்கள் அல்ல - என்பதற்கு அடை யாளமாக உலகெங்கும் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைகள் பரவி வருகின்றன - வரவேற்கப்படுகின்றன.
சிகாகோவை தலை மையிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யமும் லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மர், துபாய் முதலிய நாடுகளில் சிறப் பாகச் செயல்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா வில் தோழர் எழிலரசன் முயற்சியால் பெரியார் ஆப்பிரிக்கன் ஃபவுண் டேசன் தொடங்கப் பட்டு, பணிகள் நடை பெற்று வருகின்றன.
இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 17-க்கு முன் 12ஆம் தேதி யன்று தந்தை பெரியார் விழாவில் கலந்து கொள்ள கொல்கத்தாவிலிருந்து அழைப்பு வந்தது.
எங்களுக்கேகூட ஆச்சரியம்! கொல்கத்தா வில் ரிசர்வ் வங்கி அலு வலகத்துக்குள் நமது அய்யா விழாவைக் கொண்டாடினர். பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவ்விழாவில் கலந்து கொண்டனர். யூனியன் வங்கி பணியா ளர்கள் சார்பிலும் கொல்கத்தாவில் பெரி யார் விழா; அதேபோல பங்களாதேஷ் எல்லை என்று கருதக் கூடிய இடத்தில் இரயில்வே தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் விழா வில் பங்கு கொண் டோம் - என்னுடன் பிற்படுத்தப்பட்ட பணி யாளர்கள் கூட்டமைப் பின் பொதுச் செயலா ளர் தோழர் கோ. கருணாநிதி அவர்களும் பங்கு கொண்டார்.
கொல்கத்தாவில் டில்லியில் உள்ளது போல பெரியார் மய்யம் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஒடிசாவில் ஒடியா மொழியில் ஊடிடடநஉவநன றுடிசமள டிக ஞநசலையச என்ற நமது இயக்கம் வெளி யிட்டுள்ள ஆங்கில நூலை ஒடியா மொழியில் வெளி யிட்டுள்ளனர். அதன் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதியில் செல்ல இருக்கிறேன்.
தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம் என்று சொன்னது நிரூ பிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது உலக மய மாகிக் கொண்டு இருக் கிறார்.
- திராவிடர் கழக மண்டல தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் (திருச்சி - 19.9.2013)
மனிதத் தன்மை
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)
இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா
இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா சென்னையில் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் பத்து கோடி தாரை வார்க்கப் பட்டுள்ளது.
இந்த விழா அவ்வளவு அவசியம்தானா? நாட்டு மக்களுக்கு இதனால் ஒரு கடுகளவு பயனாவது உண்டா? அப்படியே நடந்தாலும் 10 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்க வேண்டுமா?
முதல் அமைச்சர் முதல் குடியரசுத் தலைவர் வரை பங்கு கொள்வதன் மூலம் இந்த விழா தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுவதற்குப் பயன்படுமே தவிர பொது மக்களுக்கு இதனால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.
கலை நிகழ்ச்சிகள் நடக்கலாம்; விளம்பரம் பெற்ற கலைஞர்கள் பங்கு கொள்ளலாம். அவற்றைக் கூட பொது மக்கள் சென்று நேரில் பார்க்க முடியுமா என்றால் அதுவும் நடக்காது. (ஒரு வகையில் பொது மக்கள் இளைஞர்கள் சென்று பார்க்காதது கூட நல்லது தான்!)
நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் கணித்தது ஆழமானது. மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கோ, முற்போக்கு எண்ணங்களுக்கோ பயன்படுகின்ற வகையில் சினிமாக்கள் எடுக்கப்படுவதும் இல்லை.
ஆபாசக் காட்சிகள், குத்தாட்டங்கள், சில சண்டைகள் என்று மசாலாவாக ஆக்கி மக்களின் பணத்தைத் திருடத்தான் பயன்படுகின்றது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 51-ஹ() பிரிவின்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை சீர்திருத்த உணர்வை உண்டாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது.
மாநில அரசோ, மத்திய அரசோ உதவுவதாக இருந்தால், அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள கடமையைச் செய்யும் திரைப்படத்துக்குத்தான் உதவி செய்ய வேண்டும்.
அதை விட்டு விட்டு திரைப்பட நூற்றாண்டு விழா என்பதற்காக மத்திய அரசோ, மாநில அரசோ மக்கள் பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டுவது பொறுப்பான செயல்பாடல்ல.
இன்றைக்குப் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை என்பது அன்றாட மலிவான நிகழ்ச்சியாகி விட்டது; குழந்தைகள்கூட இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. இதற்கான காரணங்களில் சினிமாவுக்குத்தான் முதலிடம்.
குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் திரைப்படக் காட்சிகளைப் பார்ப்பதற்குக் கூச்சப்படும் நிலைதானே? இல்லை என்று மறுக்க முடியுமா?
இன்றைக்குக் கறுப்புப் பணத்தைப்பற்றி நீட்டி முழக்குகிறார்கள். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாகப் புலம்புகிறார்கள். கருப்புப் பணச் சந்தையாக திரைப்படத் துறை இல்லை என்று விரலை நீட்டி அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறத் தயாரா?
படத் தயாரிப்பாளர்களிடம் வாங்கும் தொகைக்கும், இரசீது கொடுக்கும் தொகைக்கும் வேறுபாடு இல்லை என்று தான் கூற முடியுமா?
திரைப்பட விழாவிலும்கூட அரசியல் இருக்கிறது. திரைப்படத் துறையில் கலைஞர் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அனுபவமும் சாதாரணமானதல்ல. இந்த நூற்றாண்டு விழாவில் அவருக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டாமா? அரை நூற்றாண்டுக்கு மேலாக இத்துறையில் முத்திரை பொறித்தவர் கலைஞர் அல்லவா!
அவர் முதலமைச்சராக இல்லை என்பதற்காக அவரது திரைப்படத்துறை ஈடுபாட்டை, குறைத்து மதிப்பிடத்தான் முடியுமா? அதையும் தாண்டி நமது கருத்து அரசுப் பணம் ரூபாய் பத்து கோடி, மக்கள் நலனுக்குப் பயன்பட்டு இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பயனற்றவைகளுக்குப் பயன்படக் கூடாது
வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் (ஆகஸ்ட் 20-22) ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் வெளிவந்து பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக்கொள்வோம் என்ற கட்டுரை மிகவும் ஆக்கப்பூர்வமாக இன் றையக் கால கட்டத்திற்குத் தேவையான அருமருந்தாக இருந்தது.
முதிர்ச்சியில்லாத நிலை தான் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது, எதிர் கொள்ள பயப்படுவதும் ஆன மன நிலை. மனிதர்களிடம் உள்ள பகுத்தறிவை விட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா? ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அற்புத வரிகள்
இன்றைய கால கட்டத்திலே அற்பக் காரணங்களுக்காக இளைஞர்கள் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி ஆகியவற்றிற்கு தற்கொலை முடிவு எடுப்பது எத்துணை அறியாமை - இதற் கெல்லாம் இக்கட்டுரை அரிய தன்னம் பிக்கை டானிக்! உடலியல், உளவியல் ரீதியாக ஆசிரியர் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சிறப்பாக குறிப்பிட்டுள் ளார். பிரச்சினைகளால் திசை தெரியாமல் தவிப்போருக்கு கலங்கரை விளக்கமாக இக்கட்டுரை வழிகாட்டும். சிறிய புத்தக மாக வெளியிட்டால் மாணவர்களும், இளைஞர்களும், மற்றவர்களும் படித்து தெளிவு பெறவேண்டிய வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை
- தி.க.பாலு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)
டாக்டர்கள் கவனத்திற்கு
தொடர்ந்து, வேண்டாத பழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டு மது மயக்கத் திற்குள் விழுந்துவிட நோயாளிகளாகி விட்டனர். அரசு மருத்துவமனைக்குத் தானே, ஏழை முதிய நோயாளிகள் செல்ல வேண்டிவரும். அங்கே அரசு ஊழியர் களை விட, மருத்துவர்களே நோயாளி களிடம் அலட்சியமாக கோபத்துடன் பேசுகின்றனர். அமைதி இழந்து, தன் மானமுள்ள ஆண் - பெண் வயதான நோயாளிகள் கோபங்கொண்டுவிடும் சூழலில் பாதிப்பு நோயாளிகளுக்குத் தான். மருத்துவர்கள் மனிதத்தன்மை மனிதாபிமானத்துடன் நடந்து கொண் டால் என்ன? அவ்வாறு நடந்து கொள் ளாததால், புற்றுநோய் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத் துவர்களால் மேலும் பாதிக்கப்படுகின்ற னர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல - புதுச்சேரி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஏனைய கட்சிகள் ஏழை வயதான நோயாளிகள் நல்வாழ்விற்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒரு நாளாவது மருத்துவ மனைகள் முன் மக்களின் ஆரவாரம், மனிதச்சங்கிலிப் போராட்டம் என, நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது அரசியல் அல்ல. தொண்டு, தந்தை பெரியார் வலியுறுத்திய மானிடப்பற்று அதைக் கடைப்பிடிப்போம்!... உருப்படுவோம்!...
- எம்.எஸ்.மணி (முதுகுடிமக்கள் பாதுகாப்பு சங்கம்)
எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமசாமி அவர்கள்.
தமிழர் தலைவர் அவர்களை வல்லத்தில் சந்தித்து இயக்கத்தின் கல்விப் பணிக்காக ரூபாய் 30 இலட்சத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தமிழர் தலைவரிடம் அளித்து இன்ப அதிர்ச் சியை ஏற்படுத்தினார்.
திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற (19.9.2013) திராவிடர் கழக மண்டல தலைவர்கள், தொண்டர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர் இராமசாமி அவர்களை மேடைக்கு அழைத்து, சால்வை அணிவித்துப் பாராட்டினார். அப்பொழுது கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இராமசாமி அவர்கள் 50 ஆண்டு காலமாக விடுதலை வாசகர் ஆவார். கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டை அணிந்த இயக்கத் தோழர்கள் ஒரு பக்கம்; கண்ணுக்குத் தெரியாத கருஞ்சட்டை அணியாத ஆசிரியர் இராமசாமி போன்ற எண்ணற்ற பெரியார் தொண்டர்கள் நம் இயக்கத்தில் உண்டு - கண்ணுக்குத் தெரியா விட்டாலும், இயக்கத்திற்கு இத்தகையவர்கள் அஸ்திவாரம் போன்றவர்கள்.
பெரியார் மருத்துவ நிதி, விடுதலை நிதி என்று தமது பங்களிப்பை அடிக்கடி அளித்துவரும் இந்தப் பெரு மகனார் இப்பொழுது ரூபாய் 30 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பெரியார் கல்வி நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்து, அவற்றின் வளர்ச்சியை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்து, நம் நிதி பெரியார் பெயரில் அமைந்த நிறுவனங்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிதியை அளிக்க முன் வந்துள்ளார். செயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு ஆசிரியர் இராமசாமி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்) என்றார் கழகத் தலைவர்.
சத்தியாக்கிரகம்
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறுமார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக்கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டுவிட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதம் பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் தொடங்கப்பட வேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப் படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ, அதுபோல சத்தியாக்கிரகமென்னும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்பிட்ட லட்சியத்திற்கு அழிவு ஏற்படும் என்றேசொல்லுவோம். சத்தியாக்கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி வயிறுவளர்த்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதையாய் உணர வேண்டும். நாகபுரி சத்யாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி இல்லை என்று தெரிந்த உடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல் தண்டனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின் யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்த கொண்ட மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும் இவைகளின் மூலம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில் அறிந்ததே. ஆதலால், வாசகர்களே போலி ஆசாமிகள் வேறுவழியில் சுய நலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளுவதற்கும் கூலிக்கு மாரடிப் பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள் விஷயத்தில்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927
பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்
நம் நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் இம்மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்படவேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக் காலத்தில் உண்மையாயும், யோக்கியமாயும் நடந்து வந்த சந்நியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால் இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொதுநல ஸ்தாபனங்கள் எந்நிலையில் இருக்கிறது என்பதும், இதை யார் அனுபவிக்கிறார்கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக் களாகிய சந்நியாசிகள் என்போரின் யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்ல வேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொதுநலத் திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம்மடாதிபதிகள் தங்கள் சுயநலத்திற்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடுமென்பதாகக் கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும் லஞ்சமாகவும் பிச்சையாகவும் அழுத பணங்கள் கணக்குவழக்கில் அடங்காது என்றே சொல்லலாம். இவ்வளவு பணங்களைத் தொலைத்தும் தாங்கள் வெற்றிபெறவில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் தோப்புக் கர்ணம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீமான் டி ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் 30லட்சம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது வட நாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டப்போவ தாகவும் அதற்குப் பணம் வேண்டு மென்றும் இம்மட அதிபதிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார சன்னதி அவர்களைக் கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் பத்து வருஷத்திற்குக் கொடுப்பதாய் ஒப்புக் கொண்டாராம். இவரைப் பார்த்து இனியும் மற்ற மட அதிபதிகளும் கொடுப்பார்கள். பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்குக் கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ, மிராசுதாரோ, நாட்டுக்கோட்டையாரோ மற்ற ஏதாவது செல்வமுள்ள வர்களோ நமது நாட்டில் மிகமிக அருமையானதால் இந்த பணம்கொடுத்துதான் தீரவேண்டி வரும். ஆனால், இப்பணம் எதற்கு உபயோகப் படப் போகிறது? டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டத்தான் உபயோகப்படும். ஆனால், தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள் எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பனப் பிள்ளைகள் பிழைக்கவும் கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாத ஊரில்கூட கோவில்கட்டி வித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் சூத்திரர்கள் உள்ளே போகக் கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலகமெலாம் நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப்போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக் கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.03.1927
தொழிலாளர்
சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங் களும் தங்களால் தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங் களெல் லாம் தங்களால் தான் வாங்கிக் கொடுக்கக் கூடும் என்றும் சொல்லி, இதுகால பரியந்தம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று பதவி பெற்று வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபைத் தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்களிலும் இப்பார்ப் பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலாளர்கள் தங்களுடைய ஓட்டுகளையெல்லாம் பார்ப்பன அபேட்ச கர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரைத் தோற் கடிக்கச் செய்ததும் பலருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க, இப்போது மேற்படி தொழிலாளச் சகோதரர் களில் தாங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலா மெனக்கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர் தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சகர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த மேற்படி பார்ப்பனர்கள் தொழிலா ளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித் திருக்கிறார்கள். அது என்னவென்றால், தொழிலாளர் களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேர வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர் யோசிக்க வேண்டும். என்னவெனில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில், தொழி லாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளி மார்கள் அதனை எப்படியாவது கெடுத்துவிடக்கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரசில் சேர முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழி லாளர்களை சுலபமாகத் தள்ளிவிடலாம் என்பதுதான். தொழிலாளிகளுடைய ஓட்டுப் பெறும்போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்கிற தந்திரத்தின் பேரில் தான் பார்ப்பனர்களின் தொழிலாளர் அனுதாபம் ஏற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சி களை அறியாமல் எடுப்பார் கைக் குழந்தைகளாயிருக் கின்றார்கள் இவைகளை எல்லாவற்றையும் அறிந்தேதான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்பந்தமான எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்றும் அது கொஞ்சகாலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும், எழுதியும் வந்தோம். நாம் இப்படிப் பேசி, எழுதி வந்ததைப் பற்றி பல தொழிலாளர்கள் தலைவர்களுக்கும் தம் மீது மனஸ்தாப மேற்பட்டது நமக்கு தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மாநாட்டு உபசரணைத் தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். மித்திரன் அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன் தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட் சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டி யாருக்கும், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய் யங்கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பாஷணை, அடிதடி சண்டை முதலியவைகள் நடந்திருப்பதையும், தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவராவ், கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்தும் பார்ப்பனத் தந்திரங்கள் நன்றாக விளங்குகின்றன. இனியாவது, நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டுகளின் மாய் கையில் இருந்து விலகுவார்களா என்பது தான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகித் தனிப்பட்ட ஹோதாவில் தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால், நாமும் நம்மாலானதைச் செய்யத் தயாராயிருக் கிறோம் என்றும், எந்தக்கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்துவிடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 24.04.1927
மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி
பெங்களூரு, செப்.21- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி தெரிவித்தார்.
பெங்களூருவில் கடந்த 15-ஆம் தேதி நடை பெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப் பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
யூ.ஆர்.அனந்தமூர்த்தி இப்போதே நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே போன்றோர் விமர் சித்தனர். கன்னட அறிஞர் சிதானந்த மூர்த்தியும் அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்த நிலையில், அனந்தமூர்த்தியின் கருத்துக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் பரகூர் ராம சந்திரப்பா, கே.மருளுசித்தப்பா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையில், மோடி குறித்து, தான் கூறியிருந்த விமர்சனம் தொடர்பாக பெங்களூருவில் வியாழக் கிழமை எழுத்தாளர் அனந்த்மூர்த்தி கூறியது:
நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்க ளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்.
முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும்.
பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும். பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?
கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோதுகூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்து மத தத்துவத்தை நான் ஏற்காததால், பாஜகவினர் எப்போதும் என்னை விமர்சிப்பார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால், ஊழல் புரிந்துள்ள தால், அந்தக் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர்.
மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
புதுடில்லி, செப். 21-மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார்.
பா.ஜ பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடி நியமிக்கப் பட்டது குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:
நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி. அவர் பா.ஜ சார் பில் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அதனால், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கும், சங் பரிவார் அமைப்புக்கும் இடையே முதல் முறையாக நேரடி போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலை பிரதமர் பதவிக்கான போட்டியாக மாற்ற பா.ஜ விரும்புகிறது. இந்த போட்டியில் காங்கிரஸ் ஈடுபடாது. யாரையும் காங்கிரஸ் முன் னிறுத்தாது என நினைக் கிறேன்.
மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான். அதனால்தான் அவரது வலதுகரமாக திகழும் அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தின் பாஜ பொறுப்பாளராக நியமித் துள்ளார். அவர் தனது விளையாட் டை நடத்திவிட்டார். முசாபர் நகரில் மதக் கலவரத்தை தூண்டியது பா.ஜ. தான். மோடி முன்னிறுத்தப் பட்டதன் மூலம், இதுபோன்ற பல கலவரங்கள் வட மாநிலங்களில் நடக்கும். முதல் டிரெய்லர் முசாபர் நகரில் நடந் துள்ளது. இதுபோல் பல சம்பவங்கள் நடக்கும். மதவாதம் படிப்படியாக தூண்டப்படும் என அஞ்சுகிறேன். இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக இருக்கும் உ.பி., பிகார் போன்ற இடங் களில் மதக் கலவரம் தூண்டப்படும் என தெரிகிறது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக : மத்திய அமைச்சருக்கு தொல். திருமாவளவன் எம்.பி. கடிதம்!
சென்னை, செப். 22- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெய ரைச் சூட்ட வேண்டு மென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் கிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதி யுள்ளார்.
அக்கடித விவரம் வரு மாறு:
தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தீண்டாமை மூடநம்பிக்கைக்கு எதி ராக தமிழக மக்களி டையே பகுத்தறிவு எண் ணத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் எழுச்சியுறச் செய்தவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக் கீடு கிடைக்க போராடி யவர். அரசியலில், விடு தலைக்கு முன்னர் காங் கிரஸ் கட்சியில் ஈடுபட்டு பின்னர் பகுத்தறிவு இயக் கமான திராவிடர் கழ கத்தை தோற்றுவித்தவர். தமிழகம் முழுவதும் பய ணம் செய்தவர். தமிழ கத்தில் ஒவ்வொரு கிரா மத்திற்கும் சென்று தீண் டாமை ஒழிப்புக்கு பாடு பட்டதுடன் பெண் களுக்கான கல்வி, சமூக பொருளாதார மேம் பாட்டுக்கு அக்காலத் திலேயே பாடுபட்டவர்.
தந்தை பெரியார் பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததுடன் இந்தியாவில் பல மாநி லங்களிடையே சுற்றுப் பயணம் செய்துள்ளார். பெரும்பாலும் அவர் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்ததுடன் அங்கு பல கல்வி நிறு வனங்களை ஏற்படுத் தினார். அவரது கொள்கை சம்பந்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் நிலை களில் அங்கு தொண் டாற்றினார். அவர் தம் முடைய வாழ்நாள் முழு வதும் நமது நாட்டில் சமூக இணக்கத்திற்காக வும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டார்.
மிகவும் மதிப்பு மிகுந்த தலைவரான தந்தை பெரியாரின் பெயரை திருச்சி பன் னாட்டு விமான நிலை யத்திற்குச் சூட்ட வேண் டும் என பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே மத்திய அரசு, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சி தந்தை பெரியார் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார்.
இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டணியினர் வெற்றி வரவேற்கத் தகுந்தது
இலங்கையில் வடக்கு மாகாண மாநில ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளி வந்துவிட்டன.
தமிழ்த் தேசிய கூட்டணியினர்தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது!
யாழ்ப்பாணம் பகுதியில் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தமிழ்த் தேசியக் கூட்டணியினர்.
சிங்கள இராஜபக்சே அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர்! உணர்வுகள் சாவதில்லை - ஒருபோதும்.
இது சிங்கள அரசுக்கு - ராஜபக்சே அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.
முன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட இராஜபக்சே அரசு முயற்சிக்கக்கூடும்.
எனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்!
கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
22.9.2013
கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பிராமணாள் என்று விளம்பரப்படுத் தப்பட்டு உணவு விடுதிகள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது தலைமைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய விவரத்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் தலைமைக் கழகத்துக்கு உடனே தெரிவிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்
சிவகாசி, செப்.22- பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் அதி காரம், ஊராட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில், பிறப்பு, இறப்பு சான்றுகள், அந்தந்த உள் ளாட்சி அமைப்புகள் மூலம், வழங்கப் படுகிறது.
கிராம ஊராட்சிகளில், இச்சான்றிதழ்கள், சுகாதார துறை மூலம் வழங்கப்படுகிறது. இச்சான்றுகள் வழங்கும் அதி காரம், ஊராட் சிக்கு வேண்டும் என, தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி இருந்தனர்.
இதை தொடந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலர் பிறப்பித்த உத்தரவில்,"" கிராம ஊராட்சிகளின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்க, ஏற்கெனவே வருவாய் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
இது முறையாக நடைமுறைபடுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. அரசாணையில் தெரிவித்துள்ள படி, பிறப்பு, இறப்பு, இருப்பிடம் மற்றும் குடியுரிமை சான்று, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் சான்று களை, ஊராட்சி தலைவர்களே வழங் கலாம். இதை நடைமுறைப்படுத்த, வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, ஊராட்சி தலைவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்,''என, குறிப்பிட்டுள்ளார்.
திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை முதலாமாண்டு சிறப்பு மலர்! மருதநாயகம் இரவீந்திரன் மாளிகை
17.09.2013 தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, தமிழ் நாடு கடந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடு களில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடி மகிழப் பட்டது.
பெரியார் கொள்கை யின் சாதனைகளை, ஆண் டின் 365 நாளும் கொண் டாடி மகிழ காரணங்கள் நிறைய உள்ளன.
அப்படி ஒருநாள் தான் 23.09.2013. ஆம்! 2012 ஆம் ஆண்டில் (23.09.2012) திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களால் திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பெரியார் மருத்துவமனை தொடங் கப்பட்டது. ஆடம்பரங்கள் ஏது மின்றி எளிய மக்களுக் காக, எளிய முறையில் தொடங்கப்பட்ட இம் மருத்துவமனைக்கு, மக்கள் ஓரிருவர் வந்து சென்றனர்.
மருத்துவ மனையின் நேர்த்தியான வடிவம், மருத்துவர் களின் அன்பு, செவி லியர் களின்கனிவு ஆகியவை மக்களின் 50 விழுக்காட்டு நோயைக் குணப்படுத்த, மீதமிருந்த நோயை மருந்து, மாத்திரைகள் பார்த்துக் கொண்டன.
இதற்கான கட்டணமும் மிகக் குறைவு என்ற போது மக்கள்பெரியாரை நிதானமாக நிமிர்ந்துப் பார்த்துச் சென்றனர். அதற்கு வாய்ப்பாக மருத் துவமனையின் முன்பு, முழுவுருவ வெண்கலச் சிலையில் அய்யா அனை வரையும் வரவேற்கிறார்!
இப்படியான மக்கள் பெரியார் மருத்துவ மனைக் குறித்து தம் வீட்டில் சென்று நெகிழ, வீதியில் சொல்லி மகிழ, இன்றையத் தேதியில் பயன்பட்ட மக்கள் ஓரா யிரம், ஈராயிரம் அல்ல; அது 10 ஆயிரம் கடந்து போயின!
இவ்வாறான தொடர் மக்கள் சேவையுடன் நம் மருத்துவக்குழு நின்றதா? இல்லை!பல்வேறு வாய்ப்புகளை வளர்த் தெடுத்தார்கள். அதன் வழியே 02.12.2012 திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நலம் பெற் றார்கள்.
அன்றைய தினம் மருத்துவமனை வளா கத்தில் செடிகள் நடப் பட்டன. அன்றைய செடி களின் இன்றைய பெயர் மரம்!
அதனைத் தொடர்ந்து 24.12.2012 அன்று பெரி யாரின் நினைவு நாளில், பெண்களுக்கான இலவசப் புற்று நோய் கண்டறியும் முகாமில் 80 மகளிர் பங்கேற்றுப் பயன் பெற்றனர். பெரியார் மருத் துவ மனையைக் கடந்து, திருச்சி மாவட்டம் பிச் சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் 04.01.2013 இல் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 70 பொது மக்களும், 04.08.2013 அன்று பெரி யார் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 226 மக்களும் பயன் பெற் றனர்.
பொது மருத்துவ முகாம் என்றால் ஏதோ வழக்கமான சம்பிரதாய சோதனைகள் கிடையாது. ஒவ்வொரு பயனாளிக்கும் 8 வகையான சோதனை கள் மேற்கொள்ளப்பட் டன. இவற்றை வெளியில் பரிசோதித்தால் ரூபாய் அய்நூறு பாதிக்கும் என்பது உண்மை.
மேலும்புற்று நோயின் அவசியம் கருதி தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22.09.2013 அன்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து மீண்டும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
இவ்வாறாகத் தொடர் மருத்துவச் சேவைகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுத் துண் டறிக்கைகள் எனத் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை ஓராண்டு சகாப்தம் முடிக்கிறது. தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களின் உயர் வழிகாட்டுதலில் அம் மருத்துவமனைத் தொ டர்ந்து வெல்லும்! சாத னைகள் பல மெல்லும்
இவரிடம் இதைக் கண்டேன்!
திருவெறும்பூரில் பெரியார் மருத்துவமனை என்றதுமே இவர் நினைவில் வருவார். அவர் பெயர் இரவீந்திரன்! நேர்மையான தொழிலதிபர். நிழற்படத்தில் அவரைப் பார்த்தால் திருநீறும், குங்குமமும் பளிச் சென்று தெரியும். அசர வைக்கும் ஆன்மீகவாதி.
அளவிட முடியாத மனிதாபிமானி! அதனால்தான் அள்ளிக் கொடுத்தார் ரூ. 12 இலட்சம்! பெரியார் கொள்கை வென்றதா-? என்போருக்கு ஆன்மீகவாதி இரவீந்திரன் அவர்களையே பதிலாகச் சொல்வோம்.
மனதில் இருப்பதைப் பளிச்சென்று படபடக்கப் பேசும் தொழிலதிபர் இரவீந்திரன் அவர்களைச் சந்தித்து, பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவைச் சொன்னோம்.
ஓராண்டு முடிந்துவிட்டதா? நிரம்ப மகிழ்ச்சி! எவ்வளவோ நன்கொடைகள் கொடுத்துவிட்டேன். எதுவும் நிலைக்கவில்லை; பெரியார் மருத்துவமனை மட்டும் என் காலம் சொல்லும். கடவுளை மறுப்பவர்கள் கரடு முரடாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முதல் சந்திப்பிலேயே என் எண்ணங்கள் மாறியது. அவரின் அணுகுமுறையில் கவரப்பட்டு, அன்பால் ஈர்க்கப்பட்டேன்.
பெரியார் பெயரிலான மருத்துவமனைக்கு ரூ.6 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்திருந்தேன். அய்யா வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அக்கணமே முடிவு செய்துவிட்டேன் 6 அல்ல, 12 இலட்சம் கொடுப்பது என்று! நான் அவரின் நல்ல பணிகளுக்குப் பொருளுதவி செய்து, தொடர்ந்து உறுதுணையாய் இருப்பேன்.
உண்மையிலேயே நான் அறிந்த வரை இவர் மிகச்சிறந்த நல்லவர், மனிதப் பண்பாளர். சாதாரண மனிதரையும் நெகிழ வைக்கும் குணம் கொண்டவர். இவரின் சமூக எண்ணங்கள் ஈடேற நானும் ஒரு மனிதராய் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்குப் பணம் செலவழித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
மேலும் நான் என் தொழிலில் நேர்மையோடு செயல்பட்டு, இன்று வரை கடுமையாக உழைத்துப் பொருளீட்டுகிறேன். அப்படியிருந்தும் நான் நன்கொடைகள் வழங்கக் காரணம், பெரியாரிடத்தில் எனக்குப் பிடித்த பல கொள்கைகளும், அய்யா வீரமணி அவர்களின் அன்பும்தான்!
பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியில், அம்மருத்துவமனையின் மாடியில் மேலும் பல கட்டமைப்பு வசதிகளை செய்து தர நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறி முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கூறி முடித்தார்.
வாழ்த்து
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெரியார் மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணர்களாக திகழும் தொண்டறச்செம்மல் வள்ளல் வீகேயென்.கண்ணப்பன், திரு.ரவீந்திரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொண்டாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தோழர், தோழியர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
தொண்டு உணர்வு என்பது பெரியாரின் மனிதநேய அருட்கொடை. வாழ்க பெரியார்! வளர்க பெரியார் மருத்துவமனை சேவை!!
சென்னை
22.09.2013
கி.வீரமணி
செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
அமெரிக்காவில்!
1962ஆம் ஆண்டில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அருமையான - அதிரடித் தீர்ப்பை வழங்கி பாதிரியார் கள் மத்தியில் பேரிடியை இறக்கியது.
எல்லாம் வல்ல இறைவா! நீ இன்றி நாங்கள் இல்லை. உன்னை நம்பித்தான் வாழ் கின்றோம். எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும் அருள்பாலிக்கும்படி இறைஞ் சுகிறோம் என்று அமெரிக் காவில் கல்வி நிறுவனங் களில் இடம் பெற்று வந்த கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்து விட் டது - சட்ட விரோதம் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தீர்ப்புக் கூறி விட்டது.
முன்பு பள்ளிகளில் நீக்ரோக்களைச் சேர்க்கச் செய்தார்கள். இப்பொழுது பள்ளிகளிலிருந்து கடவு ளையே விரட்டி விட்டார் களே! என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஆண்ட் ரூஸ் என்பவர் புலம்பியது தான் மிச்சம்! இது நடந்தது 1962 ஜூன் மாதம்.
1994இல் வந்த மற்றொரு சேதி - தினமணி கதிரில் (8.5.1994) அதன் ஆசிரியர் மாலன் விரிவாகவே கட் டுரை ஒன்றைத் தீட்டியிருந் தார்.
அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் கடவுள் வாழ்த் துப் பாட அனுமதி இல்லை. கடவுள் வாழ்த்துப்பாட அனு மதிகோரி புளோரிடா மாநி லத்தில் அண்மையில் 14ஆவது தடவையாக கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட் டது.
....இன்ன கடவுள் என்று பெயரிட்டுப் பிரார்த்தனை செய்யாமல், பொதுவாக பெரிய கடவுள் காக்க வேண்டும் என்றோ எல் லாம் வல்ல பரம்பொருளை வேண்டியோ அல்லது இயற்கையை வழுத்தியோ பிரார்த்தனை வாசகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தில் கேட்டுப் பார்த்தார்கள். நோ, சரி பிரார்த்தனை என்ற வார்த்தை வேண்டாம். துதி, வந்தனம் (In Vocation) என்று வைத்துக் கொள்ள லாம். ம் ஹும், பிரார்த்தனை இருக்கட்டும்; ஆனால் அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்து விடலாம் மறு படியும் நோ. பிரார்த்தனை பற்றி அரசாங்கம் தீர்மானிக்க வேண்டாம். பள்ளிகளை நிர்வகித்து வரும், உள்ளூ ராட்சிகளுக்குப் பொறுப்பான ஸ்கூல் போர்டுகள் தீர்மா னிக்கட்டும். மன்னிக்கவும், அது முடியாது பெரும் பான்மை மாணவர்கள் விரும் பினால் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாமா? யோசிக்கலாம் என்று சட்டப் பேரவை (ஹவுஸ்) சொன்னது மேலவை (செனட்) ஒரே போடாகப் போட்டு விட்டது. தீர்மானம் தோற்றுப் போயிற்று; இப்படி தோற்றுப் போவது பதினான்காவது முறை. புளோரிடா போன்ற மத நம்பிக்கை வேரூன்றிய மாநிலத்தில் சட்டமன்றத் திலேயே இந்த நிலைமை என்று தினமணி கதிர் எழுதியது (8.5.1994).
தீயணைப்புப் படை வீரரின் மகளும், செவிலியரு மான ஜெஸ்லிகா அங்கு லிஸ்ட், 49 ஆண்டு காலமாக கிரேன்ஸ்டன் என்பவரால் மேற்கு உயர்நிலைப் பள்ளி யில் பயன்படுத்தி வந்த இறை வணக்கப் பாடலை நீக்கக் கோரி அமெரிக்காவின் கிரேன்ஸ்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.
கிறிஸ்தவர்கள் நிறைந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை - இங்கு என்னடா என்றால் மும்பையில் கடவுள் வாழ்த்துப் பாடும்போது கை கூப்பாத சஞ்சய் சால்வ் என்ற ஆசிரியருக்குத் தண்டனையாம்! - மயிலாடன்
தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா?
- நமது செய்தியாளர்
வெள்ளக்கோவில் செப்.23- தனியார் பள்ளியில் மதவாதத்தின் மொத்த உருவமான ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா வெள்ளக் கோயிலுக்கு அருகில் உள்ள பாப்பம்பாளையத்தில் கொங்கு வேளாளர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் உள்ளது. இங்கு மகாத்மா காந்தியை கொலை செய்வதற்கு காரணமாயிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி வகுப்புகள் 22.9.2013 முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு நடைபெறுவதாக உள்ளது.
காந்தி வழி நடவுங்கள் என்று பாடம் போதிக்கும் கல்வி நிறுவனங்களில், காந்தியைக் கொன்ற இயக் கத்தின் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது கல்வி சாலை களை மத வாதத்திற்குப் பயன்படுத்தும் செயலாகும்.
பள்ளியின் முதல்வரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ஏதோ கேம்ப் நடத்த வேண்டும் என்று இடம் கேட்டார்கள். கொடுத்தோம் என்று விபரீதத்தை உணராதவர்கள் போல் நடிக்கிறார்கள்.
காவல் துறையும் இன்றைய தேதியில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கமல்ல என்ற வகையிலும் அரங்கிற்குள்ளே தானே பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள் என்று அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நடப்பது என்ன?
நாம் அனைவரும் ஹிந்துக்கள்; நம்மிடையே ஹிந்துக்கள் என்ற தேசபக்தி வளர வேண்டும்; ஹிந்தியாவில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்; ஹிந்துத்துவம் எங்கும் பரவ வேண்டும்.
இதன் மூலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ஒருவர் கரசேவகர்களாக பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளே இப்பயிற்சியில் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடவுள் சக்தி இதுதானா?
திருச்சானூர் அருகே பெருமாள் கோவில் இடிந்தது
திருப்பதி, செப்.23- திருச்சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரு மாள் கோவில் இடிந்து விழுந்தது. ஆந்திர மாநிலம் சித் தூர் மாவட்டம், திருச் சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீனிவாசபெரு மாள் கோவில் உள்ளது. அந்த கோவிலை நாடா ளுமன்ற முன்னாள் சபா நாயகர் அனந்தசயன அய்யங்காரின் முன் னோர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தார் சாமிக்கு பூஜை செய்தும், பரா மரித்தும் வந்தனராம்.
கோவிலை பரா மரிக்க முடியாத நிலை யில், அவரின் குடும்பத் தார் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திரு மலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர். கோவில் பூஜை மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தா னமே ஏற்று நடத்தி வந்தது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக திருச்சானூர் பகுதியில் பெய்த மழையால் கோவிலின் மேற்கூரை நனைந்து விரிசல் ஏற் பட்டது. அதேபோல், பக்கவாட்டு சுவர்களும் நனைந்து வலுவிழந்தன. நேற்று முன்தினம் இரவு மூலவர் சன்னதி அருகில் உள்ள ஆழ்வார் மண்ட பத்தின் மேற்கூரை மற் றும் பக்கவாட்டு சுவர் கள் முற்றிலும் இடிந்து விழுந்தன.
அதில் ஆழ்வார், தாயார் சிலைகள் சேதம் அடைந்தன. சீனிவாச பெருமாள் சிலை சேத மின்றி தப்பியது. இரவு நேரத்தில் நடந்த சம்ப வத்தால் யாருக்கும் எந் தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், தகவலை கேள்விப்பட்ட பக்தர்களும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனராம்.
நாத்திகன்
நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)
மாற்றுத் திறனாளிகளின் போராட்டம்
மாற்றுத் திறனாளிகள் - பார்வையற்றோரின் போராட்டம் கடந்த ஒரு வார காலமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு என்பதில் தமிழ்நாடு அரசு மிகப் பெரிய அளவுக்கு சமூக நீதிக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்துவருவது அம்பலமாகி விட்டது.
இந்தியாவுக்கே சமூக நீதிப்பிரச்சினையில் வழிகாட்டி வந்த தமிழ்நாடு இந்த முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - அந்த நற்பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டது.
தாழ்த்தப்பட்டவராயினும், பிற்படுத்தப்பட்டவரா யினும், மிகவும் பிற்படுத்தப்பட்டவராயினும் மாற்றுத் திறனாளிகள் ஆயினும் அனைவருக்கும் ஒரே அளவான தகுதி மதிப்பெண் என்பது எந்த வகையில் நியாயம்? இதற்கான நியாயத்தை இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் யாராலும் நிமிர்ந்து நின்று பேச இயலாத பரிதாப நிலை!
மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேர தனித் தனியே தகுதி மதிப்பெண்கள் இருக்கும்போது ஆசிரியர் பணிக்கு மட்டும் ஒரே அளவுகோல் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?
அதுவும் பிற மாநிலங்களில் தனித்தனி மதிப்பெண்களை வரையறை செய்திருக்கிறபோது, தமிழ்நாட்டில் மட்டும் பிடிவாதமான போக்கில் ஒரே அளவு மதிப்பெண் என்பதற்கான பின்னணி என்ன?
மாற்றுத் திறனாளிகள் எனில் தனிப் பார்வை இருக்க வேண்டாமா?
திறந்த பார்வையில் மனிதாபிமான பார்வையில் பார்வையற்றோரை பார்ப்பதற்குப் பதிலாக கண் மூடித்தனமாகப் பார்க்க ஆசைப்படலாமா?
முதல் அமைச்சரை சந்தித்துத் தங்கள் குறை பாடுகளைக் கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். பார்வையற்றவர்களைப் பார்ப்பதற்கு ஒரு ஜனநாயக நாட்டில் முதல் அமைச்சர் தயங்குவது ஏன்?
சாலை மறியலில் பார்வையற்றோர் ஈடுபடு
வதும் அவர்களைக் காவல்துறையினர் முரட்டுத் தனமாக இழுத்துச் செல்லுவதும், தூக்கிச் செல்லுவதும் கண்ணுள்ளவர்களைக் கண் கலங்க வைக்கிறது.
மாற்றுத் திறனாளிகள் என்று அவர்களுக்கு அப்பொழுது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியதால் பார்வையற்றோர் பிரச்சினையில்கூட அரசியல் பார்வையுடன் பார்க்கிறதா தமிழ்நாடு அரசு? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளி கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த இடத் திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டு ஆவன செய்தவர் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் ஆவார்.
அந்த ஆட்சியையும், இந்த ஆட்சியையும் பொது மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்!
ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் காட்சிக்கு எளியவராக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் என்றார் திருவள்ளுவர்.
மாற்றுத் திறனாளிகள் கோயிலுக்குச் செல்லு வதில் கூட பல பிரச்சினைகளை உருவாக்கியது இந்த ஆட்சி. தானாக நடமாட முடியாத நிலையில் சில துணை உபகரணங்களையும், பொருள் களையும் பயன்படுத்திதான் அவர்கள் எங்கும் செல்ல முடியும். அந்த உபகரணங்கள் தோலால் ஆனதாக இருப்பதால் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.
சிவபெருமானே புலித் தோலைத்தான் இடுப்பில் அணிந்து கொண்டு இருப்பதாக புராணங்களே கூறுவதுபற்றி இந்த அறநிலையத் துறைக்குத் தெரியாதா?
மக்கள்ஆட்சி மனப்பான்மையும் மனிதநேய மனப்பான்மையும் ஓர் ஆட்சிக்கு அவசியம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.
எத்தனை எளிய மனிதருக்கு - இத்தனை பெரிய மனமிருக்கு..!
செப்.19ஆம் தேதியன்று, தஞ்சை வல்லத்திலிருக்கும் பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத் தில், தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை புதுமை இலக்கிய விழா வாகக் கொண்டாடினர்.
முதுபெரும் பேராசிரியரும் ஆய்வாளருமான திரு. தொ. பரமசிவம் அவர்கள் (நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பல ஆண்டு கள் பணியாற்றி, ஓய்வு பெற்ற நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வாளர் - இலக்கியப் படைப்பாளி அவர்) அவருக்கு பகுத்தறிவுப் பேராசிரியர் சி. வெள்ளையன் இலக்கிய விருது அளித்தலும், இணைந்து நடத்தப் பெற்றது.
அதனைக் காணவும், பல்கலைக் கழக வளர்ச்சி பற்றி நேரில் அறிய விரும்பியும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும், அவருடன் மதுரைத் தோழர்கள் பொறியாளர் மனோகரன், அழகர்சாமி, எடிசன் ராசா, மதுரை செல்வம் முதலியோரும் வந்திருந்தனர்!
காலை முதலே, பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள், திரு. ராமசாமி அவர்களும் அவரது குழுவினரும்.
அதற்குமுன் 1980இல் வல்லத்தில் தொடங்கப் பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றிப் பார்த்து விட்டுத்தான் அங்கு சென்றனர்!
நிகழ்ச்சியில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் ஒரு சிறு துண்டுச் சீட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்கள், பெரியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ரூபாய் முப்பது லட்சத்தை அளிக்க விரும்புகிறார் என்று எழுதி அனுப்பியிருந்தது எங்களை இன்ப அதிர்ச்சி யில் உறைய வைத்தது!
எவ்வளவு எளிமையான வாழ்வு வாழும் அடக்கமானவர் என்பதை மதுரையில் அவர் உடல்நலம் விசா ரிக்கச் சென்றபோது நேரில் கண்டு வியந்தேன்.
50 ஆண்டுகளுக்கு மேல் அவர் தொடர்ந்து விடுதலையின் வாசக நேயர்!
மற்றபடி எங்கும் எதிலும், தன்னை விளம்பரப்படுத்தவோ, அறிமுகப்படுத் திக் கொள்ளவோ விரும்பாத, விளம்பர வெளிச்சம் கண்டு கூச்சப்படுபவர்!
குருவி சேர்ப்பதைப் போல, சிக்கன வாழ்வு, எளிமை வாழ்வின் மூலம், சேமித்து வைத்த செல்வம் பொதுப் பணிக்கே பயன்பட வேண்டும் என்ற திடமான கொள்கை முடிவுடன், இதையும் இதற்கு முன் வழங்கிய பல நன்கொடைகளையும் அளித் தோடு தன்னால் சேமித்த செல்வத்தை, நிரந்தரப் பாதுகாப்புக்கான சரியான வழியைக் கண்டறிந்து, பொதுத் தொண்டு, கல்வித் தொண்டுக்கே தனது, அச்செல்வமும் அதன் பயனும் என்றும் அழியாததாக ஆக்கி மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்!
அவர் ஒன்றும் பெரிய கோடீசுவரர் அல்லர்; அப்படிப்பட்டவருக்கு எப்படிப்பட்ட மனம் பார்த் தீர்களா?
தந்தை பெரியார், முடிச்சுப் போட்டு வைத்த செல்வம் முழுமையும் மக்களுக்கே - பொது அறக்கட்டளை மூலம் ஒப்படைத்து ஒல்காப் புகழின் உச்சியில் இருக்கிறாரே! அதுபோன்றே இதுவும்!
இதைவிட பெரும் நன்கொடைகளை நாட்டில் அளிப்பவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அந்த நன்கொடையாளர் பயன் கருதி - மோட்சம், விளம்பரம், புகழ், பெருமை, அரசின் லாபம் கருதியே செய்வர்!
இதை நமது தமிழ் இலக்கியம் படைத்தோர், பல ஆண்டுகளுக்குமுன்பே அறவிலை வணிகர் என்ற பொருத்தமான சொற்கள் மூலம் சுட்டினர்! வள்ளல் ஆய். அண்டிரன் போன்று இவரும் அறவிலை வணிகன் அல்லர்.
கொடுத்தற்காகவே நன்றி தெரிவித்தல் பாராட்டும்போது அவர் படும் கூச்சம் - உண்மையான கூச்சம் - அவர் தந்த நன்கொடையின் மதிப்பை பல மடங்குப் பெருக்கி கூட்டிக் காட்டுகிறது!
அவருக்கு ஒரே இன்பம் - இதிலிருந்து தான் பூத்துக் குலுங்குகிறது!
அது எல்லோருக்கும் வரும் பண்பல்ல! மிக அரிது! மிக அரிது!!
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)
இதன் பொருள்: தாம் திரட்டி வைத்திருக்கும் பெரும் பொருளை பிறர்க்கு எந்த வகையிலும் கொடுக்காமல், பதுக்கி வைத்திருந்து, பின்னர் எக்காரணம் பற்றியோ இழந்து விடும் வன்கண்மை உடையவர்கள், பிறர்க்குக் கொடுத்து, அதனால் உண்டாகக் கூடிய மகிழ்ச்சியினால், தாம் அடையும் இன்பத்தை வாழ்நாளில் ஒருபோதும் கண்டறிந் திருக்க மாட்டார்கள்; அடடா, ஈத்துவக்கும் இன்பத்தின் சிறப்புதான் என்னே!
அது மட்டுமா?
கொடுப்பவர் தான் உயருகிறார்! இப்படி உயர்ந்தால் மகிழ்ச்சி பெருகுகிறது, மகிழ்ச்சி பெருகினால் வாழ்வும் பெருகுகிறது.
எனவே, எளியவர்களும் இராமசாமிகளின் (தந்தை பெரியார் இராமசாமி முதல் மதுரை இராம சாமி வரை) உள்ளத்தைப் பார்த்து வாழ்க்கையைப் பெருக்குங்கள்!
பொதுத்தொண்டறம் போல மகிழ்ச்சியின் ஊற்று எதுவுமே இல்லை.
கொடுக்கப் பணம் தேடாதீர்கள்!
கொடுக்க மனம் தேடுங்கள்!!
அது, முதலில் உங்களுக்காக - பிறர்க்காக அல்ல; என்பதை மனதில் பதிய வைத்துக் கொள் ளுங்கள்.
- வாழ்வியல் சிந்தனைகள்
- கி.வீரமணி
திருப்பத்தூரில் திராவிடர் திருவிழா
மண் குலுங்கிட , மனங்கள் குலுங்கிட, கொள்கை மணம் பரப்பி,
திருப்பம் தந்திட்ட திருப்பத்தூர் !
இல்லை! இல்லை! திராவிடத்தில் சாதி எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மத எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மொழி எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில், அரசியல் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
ஆண் -பெண் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
பூகோள எல்லை என
எல்லை இல்லா அய்யாவின் கொள்கை,
எங்கெங்கும் ஒலித்திட்ட திருப்பத்தூர்!
யாராலும் முடியாதது,
மகளிரால் மட்டுமே முடியும்-என,
மனம் திறந்து தமிழர் தலைவர்,
மாண்புடன் மேடையில் பாராட்டும் வேளை,
மகளிர் தம் உள்ளங்கள் எங்கும்,
மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திட்ட சோலை !
மனிதம் பிறந்த நாளாம் ,
மாண்புறு செப்டம்பர் பதினேழிலே,
புரட்சிப் பெண்கள் பூபாளம் பாடிய,
புதுமை நிகழ்த்திட்ட திருப்பத்தூர் !
உலக எல்லையில் எங்கிருந்த போதும்,
கொள்கைக் காதலியை மறக்க முடியுமா? என
வழி நடத்திடும் வல்லமை வாய்ந்த
இயக்கத்தின் எழிலாம்,
அவர்தான் மாவட்டத் தலைவராம் !
விவேகமிக்க விஜி இளங்கோவன் !
ஆற்றல் மிக்க அகிலாவின் பின்னே,
இந்திராகாந்தி,கவிதா போல்,
ஆயிரம் ஆயிரம் மகளிர் கூட்டம்,
அற்புதமாய் அணி வகுத்திட,
மகளிர் நாடாய் மாறிய திருப்பத்தூர் !
மயிர் வளர்க்கவும் உரிமை அற்ற,
பார்ப்பன விதவைகள் கூட,
விழுகின்ற கொள்கை மழையில்,
விளைகின்ற உரிமை பயிர்களாய்,
விழித்துக் கொண்டதும்,விடுதலை பெற்றதும்,
அய்யாவின் கொள்கையாலே ! என முழங்கிய தமிழர் தலைவர் !
அவர், எழில் அரசரைப் பாராட்டினால்,
எல்லோரையும் பாராட்டியதாய்,
அகிலாவை பாராட்டினால்,
அனைவரையும் பாராட்டியதாய்,
ஏற்றுக் கொள்ளும் இயக்கச் சுற்றம் !
திருப்பத்தூர் ! ஓர் கொள்கை முற்றம் !
இதுவே திருப்பத்தூர் வரலாறு ! இதனை
போற்றுவோம் ! பின் பற்றுவோம் !
தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்
12.9.2013 அன்று கொல்கத்தாவில் தந்தை பெரியாரின் 135ஆவது ஆண்டு விழாவில் தாங்கள் பேசும் பொழுது இந்த விழாவிலே எனக்கு தகுந்த மரியாதையினை அளித்தீர்கள். சிறப்பான செய்திகளை சொன்னீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் பெரியாரின் எளிமையான தொண்டன் அவரோடு என்னை ஒப்பிடுவது சரியல்ல.
ஒரு புத்தர், ஒரு பெரியார், ஒரு அம்பேத்கர்தான். அவர்கள் மாதிரி நாம் குளோனிங் செய்திட இயலாது. ஆனால் அவருடைய சிந்தனைகளை, கருத்துக்களை நாடெங்கும் பரப்பிட நாம் பணியாற்றுகிறோம், என தாங்கள் உரையாற்றியதை விடுதலையில் படித்தேன்.
இன்றைய போலித்தனமான தலைவர்களைப் போல இல்லாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், திறந்த மனதுடன், மனப்பூர்வமாக தாங்கள் வெளியிட்ட இந்த கருத்துக்கள் நமது இயக்க இளைஞர்களின் இதயத்தை தொட வேண்டும் என்பது எனது விருப்பம். கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, தாங்கள் வெளிப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களை கொஞ்சம் தடிப்பான (Bold Type) எழுத்துக்களில் வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராட்டுகள் தெரிவிக்க தகுதியும், வயதும் எனக்கு உள்ளது. தாங்கள் தொடர்ந்து செயல்பட எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- கபடி. ச. பழநியப்பன், மாவட்ட செயலாளர், நாமக்கல் மாவட்ட தொ.மு.ச.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் ''பாட்டில்கள்''
குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.
இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.
எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.
எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.
எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப் பொரு ளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,
எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ் டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.
இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கெனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். தமிழக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.
உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்க ளையும் பாதிக்கும்'' என்றார்.
கலாச்சாரப்படி...
பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)
பிரதமரின் வேண்டுகோள்
வெற்றி பெறும் - எப்போது? வகுப்புக் கலவரம் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. தற்போதைய நிலையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது.
வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். நாட்டில் கலவரத்தைத் தூண்டும் எந்த அமைப்பும், கட்சியும் அதற்குப் பொறுப்பாகும்.
வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுபவர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த சிறிய அளவிலான மோதல் பெருங் கலவரமாகி விட்டது. மாநிலங்களில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. இதனைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுவதைத் தடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார் (23.9.2013). பிரதமர் தமக்குள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு பிரதமர் இப்படித்தான் கூற வேண்டும்; அதனைத்தான் கூறவும் செய்துள்ளார்.
காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு இதில் கூடுதல் கடமையும், பொறுப்பும் உள்ளது. அது நுட்பமாகச் செயல்பட்டு இருந்தால் ஆரம்ப நிலையிலேயே ஜாதி மதக் கலவரங்களை முளையிலேயே கெல்லி எறிந்திட முடியும்.
உளவுத் துறை இதில் சரியாகச் செயல்பட வில்லையென்றால், அதனைச் சரிப்படுத்த தேவை யான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
அரசியலில் போதிய தத்துவார்த் தங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் இல்லாத கையறு நிலையில் உள்ளவர்கள், சுலபமாகத் தலைமைப் பீடத்தைப் பிடிப்பதற்கான உபாயம் ஜாதி மதக் கட்சிகளை சடுதியில் தொடங்கி விடுவதுதான்; வெறியூட்டுதல் மூலமாகத்தான் அவர்களை, தம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது யதார்த்தம்!
ஜாதி, மதத்தின் பெயர்களில் அமைப்புகள் தொடங்கப்படுவதை எப்படி தடுக்கலாம் என்று அரசுகள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகு அமைப்புகள் பாரம்பரியங்களை மிகப் பெரும் அளவில் பெருமையாகத் தொடை தட்டி, தோள் தட்டி ஆர்ப்பரிப்பு செய்வதைப் பார்த்து இளைஞர்கள் உணர்ச்சி வயப்பட்டு விடுகிறார்கள்.
இவர்களின் வீரம் என்பதே இன்னொரு அமைப்பின் மீது தசை வலிமையைக் காட்டுவது என்றாகி விட்டது. இது ஜாதியைப் பொறுத்த நிலவரம்.
மதவாதிகளே திட்டமிட்டுக் கலவரங்களை உண்டாக்கக் கூடியவர்கள், அதன் மூலம் குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர்கள், தாங்கள்தான் என்று மார்புப் புடைத்துக் காட்டி அப்பாவி மக்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள்.
ஊர் இரண்டு பட்டால் தங்களுக்குக் கொண் டாட்டம் என்ற மனப்பான்மையில் சங்பரிவார்கள் திட்டமிட்டு கலவர வேலையில் ஈடுபடுவதை தங்களின் அணுகுமுறையாகப் பின்பற்றுகிறார்கள். இது காவல்துறைக்குக் கண்டிப்பாகத் தெரியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு மதவெறித்தனம் கொம்பு முளைத்துத் தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மிகப் பெரிய மனிதர்களாக, அரசியல் கட்சித் தலைவர்களாக, ஆட்சி அதிகாரத்தின் லகானைக் கையில் வைத்திருப்பவர் களாக விளங்கினார்கள் என்பது வெட்கக் கேடு!
21 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை - இன்னும் இது தொடர்பான வழக்கில் தீர்ப்புப் பெற எத்தனை ஆண்டுகள் காத் துக் கொண்டு இருக்க வேண்டுமோ, யாமறியோம்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகும் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக் காயாகத் தானி ருக்கிறது.
குற்றவாளிகள் கால தாமதமின்றித் தண்டிக்கப் படுவார்கள் என்ற நிலை உறுதிப்பட்டால்தான் இதுபோன்ற கலவரங்களின் திமிர் அடங்கும் - ஒடுங்கும்!
குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், தண்டிப்ப திலும் அரசியல் உள்நோக்கம் இருக்கும் மட்டும் பிரதமரின் வேண்டுகோள் வெற்றி அடையப் போவ தில்லை. இது கல்லின் மேல் எழுத்தாகும்.
கோயில் கருவறையில் தீண்டாமையா? சென்னையில் நடைபெற்ற மாநாடு
சென்னை, செப்.24- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு கொண்டு வரப்பட்ட அரசாணையையும், சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட் டுள்ள வழக்கை விரைந்து முடித்து நியமன நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. கருவறையில் தமிழ் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சிறப்பு மாநாடு ஒன்று சென்னையில் ஞாயி றன்று (செப். 22) நடைபெற்றது.
தீண்டாமை வன்கொடுமை!
தமிழ் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட் டது. நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்ட பிறகும் கோயில் கருவறைகளில் குறிப்பிட்ட பிரிவினரை தவிர வேறு சமூகத்தினர் யாரும் நுழையக் கூடாது என்பது வெளிப்படையான தீண்டாமை வன்கொடுமையாகும் என்று மாநாடு சுட்டிக்காட்டியது.
அரசாணையையும் சட்டத் திருத் தத்தையும் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழுடன் காத் திருக்கும் பலரை பணியில் அமர்த் தாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றமளிக்கும் செயல். எனவே, வழக்கை அரசு விரைந்து முடித்து, அர்ச்சகராக தகுதி பெற்று காத்திருப் போரை வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய வைத்து, பதிவு மூப்பு அடிப்படையில் பாகு பாடு இல்லாமல் அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக நியமிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநாடு கேட்டுக்கொண்டது.
கோயில் கருவறையில் தமிழ் ஒலிப்பது சமத்துவ சமூகத்தை கட்ட மைக்க வேண்டும் என்ற அரசமை ப்பு சாசன நோக்கத்தை நிறைவேற்றும் நடவடிக்கையாகும் என்றும் மாநாடு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் நீதிபதி கே.சந் துரு நிறைவுரையாற்றினார்.
பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள்
தமிழ்வழி ஆலய நிகழ்வுகளுக்காக போராடிவரும் மு.பெ. சத்திய வேல் முருகனார், முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், முனைவர். பொன்ன வைக்கோ ஆகியோர் தலைமையில் நடந்த மூன்று அமர்வுகளில் உரை யாற்றியோர் தீர்மானங்களை வழி மொழிந்தனர். காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாநில கவுரவத் தலைவர் பேரா சிரியர் அருணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் சி.மகேந்திரன், தமிழ் தேசிய பொது வுடமை கட்சியின் தலைவர் பெ.மணி யரசன், வழக்கறிஞர்கள் சிகரம் ச.செந்தில்நாதன், க.இராஜசேகரன், வீதி நாடக கலைஞர் பிரளயன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கவிஞர் இரா. தெ. முத்து , பத்திரிகை யாளர் அ. குமரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
ஊடகவியலாளர் திரு. வீர பாண்டி யன், தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக தமிழ் மறுமலர்ச்சி சங்க தலைவர் சு.கிருபானந்தசாமி வரவேற் றார். கி.கோவிந்தராசன் நன்றி கூறி னார். கோரிக்கைகளை மக்களிடையே விரிவாக எடுத்து செல்ல முடிவு செய் யப்பட்டது.
Post a Comment