Search This Blog

24.9.13

நூற்றாண்டு நாயகர்களே! உங்கள் பணியைத் தொடர்வோம்!

நூற்றாண்டு நாயகர்கள்!
தந்தை பெரியார் அவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்வே பெரியார் தான் என்று வாழ்ந்த பல பெரியார் தொண்டர்களைக் கொண்டது நமது இயக்கம். அமெரிக்க நாட்டின் தலைவர் ஜான் கென்னடி தமது ஏற்புரையில் "உன் நாடு உனக்கு என்ன செய்யும் என்று கேட்காதே!நீ உன் நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுச் செய்!" என்று பேசினார். அதை உண் மையிலேயே கடைப் பிடித்தவர்கள் உலகத்திலேயே எனக்குத் தெரிந்த வரை நமது கருப்பு மெழுகுவர்த்தி கள்தான். பலர் இயக்கமே வாழ்க்கை என்று வாழ்ந்தவர்கள்.ஆரம்ப காலத் திலே அவர்கள் அடைந்த இன்னல்கள் அவர்களுக்கு உரமூட்டியதே தவிர சோர்வடையச் செய்ய வில்லை.

நான் சிறுவனாக பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் வளர்ந்தேன். எனது சித்தப்பா பி.வி.ஆர் என்றழைக் கப்பட்ட பி.வே. இராமச்சந்திரன் தமது இளம் வயதிலேயே பெரியாருடன் இணைந்து விட்டவர். அவரைப் பார்க்க பலர் வருவார்கள். எங்கள் வேலை, வருவோருக்குத் திண்ணையில் பாயை மடித்துப் போட்டு அமரச் சொல்லி, அருந்துவதற்குத் தண்ணீர் தருவது தான். பின்னர் இன்னொரு திண் ணையில் அமர்ந்து படிப்போம். கையில் புத்தகம், ஆனால் கவனமெல்லாம் அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதில் தான் இருக்கும். இப்படித் திண்ணைப் பள்ளியில், நான் கற்றுக் கொண்டது தான் பெரியாரியல்.

மெலிந்த உருவம், பேச்சிலே உறுதி, திறமையான சொல்லாடல் இது தான் நான் அறிமுகமான ஆளவந்தார். அவரது மற்ற ரயில்வே நண்பர்கள் சச்சி தானந்தம், தர்மராசு போன் றவர்கள்; அவர்களது பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருப்பது ஒரு கல்லூரிப் பட்டி மன்ற நிகழ்ச்சிக்குச் செல்வது போலத் தான். அய்யா ஆளவந்தார் அவர்கள் அந்தக் காலத்து ஆங்கில பி.ஏ. பட்டதாரி. ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். அவருடைய பேச்சு ஆழமானதாக இருக்கும், ஆனால் அனைவருமே அவரவர் கருத்துக்களை ஆணித்தரமாகச் சொல்வார்கள். கேட்பவர்களுக்கு இவர்கள் நண்பர்களா? என்ற அய்யப்பாடு கூட வரும். இப்படி நல்ல அடித்தளத் துடன் வளர்ந்தது தான் திராவிடர் கழகம்.அந்தத் தூண்களில் பலருக்கு நூற்றாண்டு. இவர்களுடன் சேர்ந்து கூட்டங்கள்,மாநாடுகள் என்று செல்வதும், பெரியார் அய்யாவை அருகில் இருந்து பார்ப்பதும், அவர் பேச்சுக்களைக் கேட்பதும், கை தட்டுவதும் (புரியாவிட் டால் கூட) உணர்வாக உள்ளத்தில் ஏறி விட்டது. உயர்நிலைப் பள்ளி, பார்ப்பன ஆதிக்கத்தின் நேரடித் தாக்கம் இவை கொள்கை வளர்ச்சிக்கு உரமிட்டன. கொள்கைகளும் புரிய ஆரம்பித்தன. இருந்தாலும் பள்ளியில் வெளியே காட்டிக் கொள்ள முடியாது. ஆட்டமெல்லாம் பள்ளிக்கு வெளியே தான். பத்து வயது முதலே ஊரில் உள்ள மற்றப் பிள்ளை களை அழைத்துக் கொண்டு தெருத் தெருவாக மெகாபோனைப் பிடித்துக் கொண்டு பெரியார் வாழ்க! வெண்தாடி வேந்தர் வாழ்க!! ஈரோட்டுச் சிங்கம் வாழ்க! அரசியல் விதவை ஆச்சாரியார் ஒழிக! போன்ற முழக்கங்கள்.

பின்னர், மருத்துவக் கல்லூரி. ஆனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அய்யா  ஆளவந்தார்  அவர்களுடன் பேசுவதுண்டு. பெரியார் அய்யாவைத் திடலில் பார்த்து விவரங்கள் சொல்லி விடைபெற்று 1971இல் அமெரிக்கா வந்தேன். வந்த பின்னரும்  அய்யா ஆள வந்தாருடன் தொடர்பில் இருந்தேன். 1974இல் அவருடைய தலைமையில் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் நடந்து அமெரிக்க வாழ்வு விரைவாக ஓடிக் கொண்டிருந்தது. அவசரச் சட்டத்தின் போது ஊருக்குச் சென்ற போது திடலுக்குச் சென்றபோது ஆத்திரம் அளவுக்கு மீறி வந்தது. திடல் காடாய் இருந்தது. அங்கே அன்னை மணியம்மை யாரும், அய்யா ஆளவந்தாரும் மட்டும் வெளியே  தரையில் அமர்ந்திருந்தார்கள். என்னையே நிறைய பேச வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
அவரிடம் கடைசியில் குட்டும் வாங்கினேன். விடுதலையில் அறிஞர் அண்ணா பற்றி எழுதியிருந்தேன். அவருடைய ஆழ்ந்த மன வருத்தம் பல பெரியார் பெருந்தொண்டர்களிடமும் இருந்தது தான். அண்ணா பிரிந்து சென்றது நமது இனத்திற்கு எவ்வளவு பின்னடைவு என்பதை அவருடைய கடுமையான வார்த்தைகள் கலந்த மடல் மூலம் உணர்ந்தேன்.

 ஈரோட்டில் அறிஞர் அண்ணாவும், அவரும் இருந் ததையும், ரயில்வே ஊழியர்களில் ஆளவந்தார் குழு செல்லாததால் அண்ணாவின் ஏமாற்றம் பற்றியும் பின்னர் அறிந்தேன். அறிஞர் அண்ணா அவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப் பாடு என்பதையே இவர்களை வைத்துத் தான் எழுதியிருப்பார் என்று எண்ணு கின்றேன். ஆசிரியர் அவர்களே சொல் லுவார்கள். எந்த சிறு செயலானாலும் ஆசிரியரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்ற கட்டுப்பாட்டுடன் விடுதலை மேலாளராக இருந்தவர்.

அவரைப் போன்றவர்களிடம் பழகியதே, தந்தை பெரியார்பற்றி ஆழமாக உணர்ந்து கொள்ள வழி  செய்தது. நூற்றாண்டு நாயகர்களே! உங்கள் பணியைத் தொடர்வோம்! அதுவே நாங்கள் உங்களுக்குச் செய் யும் பெருமையாகும். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.

-------------------- சோம.இளங்கோவன்  அவர்கள் “விடுதலை” 24-9-2013 இல் எழுதிய கட்டுரை    

*******************************************************************************

எனது பார்வையில் அய்யா ஆளவந்தார்

1994-1995 கால கட்டம் எங்களது வழக்கு தொடர்பாக  சென்னைக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செல்வதுண்டு. காலையில் வழக்கு மன்றம் முடித்து விட்டு  உடனே எங்கள் ஊருக்கு செல்ல முடியாது. ஏன் என்றால் மதியம் பேருந்து ஏறினால்   அதிகாலை சுமார் 2 மணி அளவில் தான் எங்கள் ஊருக்கு  செல்ல முடியும்.அதிலும் ஒரு சிக்கல்   எங்கள் ஊருக்கு செல்ல நகரப் பேருந்து  அதிகாலை 6 மணி அளவில் தான்  உண்டு. எனவே வழக்கு மன்றம் முடிந்தவுடன்  எங்களின் பகுத்தறிவு பாடி வீடான பெரியார் திடலுக்கு சென்று விடுவோம்.  விடுதலை அலுவலகத்தின் முன் உள்ள மர நிழலில் நின்று கொண்டு தோழர்களுடன்  உரையாடிக் கொண்டிருப்போம். அன்றைய விடுத்லைக்கான செய்திகளை  அச்சுக்கு அனுப்பி விட்டு  கவிஞர் அய்யா அவர்களும் எங்களுடன்  எப்போதாவது  உரையாடலில் கலந்து கொள்வார். ( கவிஞர் அய்யா ஒரு தகவல் களஞ்சியம்.  அததனை செய்திகளையும்  அவர் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கலாம். புதிய புதுமையான நாங்கள் இதுவரை கேட்டறியாத படித்தறியாத பல செய்திகளை கவிஞர் அய்யா அவர்களிடமிருந்து கறுக் கொண்டேன். நானும் ஏதோ எழுதிறேன் என்றால்  கவிஞர் அய்யா அவர்கள் தான் காரணம்)

வெகு நேரம் தோழர்களுடன் நிறு பேசிக் கொண்டிருப்பதை கண்டு ஒரு நாள் அய்யா ஆளவந்தார் விடுதலை அலுவலகத்திலிருந்து வெளியே வந்து எந்த ஊர், என்ன விசயமாக சென்னை வந்தீர்கள்  என்று விசாரித்தார். நாங்களும் எங்களைப்பற்றி எல்லா  விபரங்களையும் சொன்னோம். ஆள்வந்தார் அய்யா அடுத்து ஒரு கேள்வியை கேட்டார் இன்று வரை அவரை மறக்க முடியாத மாமனிதராக எங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்

  அது என்ன கேள்வி என்று தானே கேட்கிறீர்கள். 

முன்னே பின்னே எங்களை அறிந்திராதவர்,  எப்போதாவது  பெரியார் திடலில் எங்களைப் பார்த்திருக்கலாம்  அப்படி பட்ட சுழலில் 

 “என்னிடமிருந்து ஏதாவது உதவி எதிர்ப்பார்க்கிறீர்களா? சொல்லுங்கள் என்னால் முடிந்தை செய்து தருகிறேன்” 

 எங்களுக்கு தூக்கி வாரிப் போடது  இப்படியும் ஒரு மனிதரா? ஆச்சரியப்பட்டு போனோம். அய்யா உங்களின் அன்புக்கு நன்றி. வழக்கு மன்றதிற்காக  வந்தோம். மாலை பேருந்துக்கு செல்ல வேண்டும் அதுவரை திடலில் இருந்து  பெரியார் நூலகத்தில்  படித்து  விட்டு செல்வோம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தோம். (எனது வாழ்க்கை இணையரை நிர்ணயத்ததும் பெரியார் திடல் தான்.அது ஒரு தனிக் கதை)

  உதிவி செய்ய ஓடோடி வந்த மாமனிதர் அய்யா ஆளவந்தார்.  நூற்றாண்டு நாயகர் அய்யா ஆளவந்தார் வாழ்க!வாழ்க!.

                                             ---------------------------------------- தமிழ் ஓவியா


22 comments:

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...பிரதமரின் வேண்டுகோள்வெற்றி பெறும் - எப்போது? வகுப்புக் கலவரம் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. தற்போதைய நிலையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். நாட்டில் கலவரத்தைத் தூண்டும் எந்த அமைப்பும், கட்சியும் அதற்குப் பொறுப்பாகும்.

வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுபவர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த சிறிய அளவிலான மோதல் பெருங் கலவரமாகி விட்டது. மாநிலங்களில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. இதனைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுவதைத் தடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார் (23.9.2013). பிரதமர் தமக்குள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு பிரதமர் இப்படித்தான் கூற வேண்டும்; அதனைத்தான் கூறவும் செய்துள்ளார்.

காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு இதில் கூடுதல் கடமையும், பொறுப்பும் உள்ளது. அது நுட்பமாகச் செயல்பட்டு இருந்தால் ஆரம்ப நிலையிலேயே ஜாதி மதக் கலவரங்களை முளையிலேயே கெல்லி எறிந்திட முடியும்.

உளவுத் துறை இதில் சரியாகச் செயல்பட வில்லையென்றால், அதனைச் சரிப்படுத்த தேவை யான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசியலில் போதிய தத்துவார்த் தங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் இல்லாத கையறு நிலையில் உள்ளவர்கள், சுலபமாகத் தலைமைப் பீடத்தைப் பிடிப்பதற்கான உபாயம் ஜாதி மதக் கட்சிகளை சடுதியில் தொடங்கி விடுவதுதான்; வெறியூட்டுதல் மூலமாகத்தான் அவர்களை, தம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது யதார்த்தம்!

ஜாதி, மதத்தின் பெயர்களில் அமைப்புகள் தொடங்கப்படுவதை எப்படி தடுக்கலாம் என்று அரசுகள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகு அமைப்புகள் பாரம்பரியங்களை மிகப் பெரும் அளவில் பெருமையாகத் தொடை தட்டி, தோள் தட்டி ஆர்ப்பரிப்பு செய்வதைப் பார்த்து இளைஞர்கள் உணர்ச்சி வயப்பட்டு விடுகிறார்கள்.

இவர்களின் வீரம் என்பதே இன்னொரு அமைப்பின் மீது தசை வலிமையைக் காட்டுவது என்றாகி விட்டது. இது ஜாதியைப் பொறுத்த நிலவரம்.

மதவாதிகளே திட்டமிட்டுக் கலவரங்களை உண்டாக்கக் கூடியவர்கள், அதன் மூலம் குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர்கள், தாங்கள்தான் என்று மார்புப் புடைத்துக் காட்டி அப்பாவி மக்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள்.

ஊர் இரண்டு பட்டால் தங்களுக்குக் கொண் டாட்டம் என்ற மனப்பான்மையில் சங்பரிவார்கள் திட்டமிட்டு கலவர வேலையில் ஈடுபடுவதை தங்களின் அணுகுமுறையாகப் பின்பற்றுகிறார்கள். இது காவல்துறைக்குக் கண்டிப்பாகத் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு மதவெறித்தனம் கொம்பு முளைத்துத் தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மிகப் பெரிய மனிதர்களாக, அரசியல் கட்சித் தலைவர்களாக, ஆட்சி அதிகாரத்தின் லகானைக் கையில் வைத்திருப்பவர் களாக விளங்கினார்கள் என்பது வெட்கக் கேடு!

21 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை - இன்னும் இது தொடர்பான வழக்கில் தீர்ப்புப் பெற எத்தனை ஆண்டுகள் காத் துக் கொண்டு இருக்க வேண்டுமோ, யாமறியோம்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகும் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக் காயாகத் தானி ருக்கிறது.

குற்றவாளிகள் கால தாமதமின்றித் தண்டிக்கப் படுவார்கள் என்ற நிலை உறுதிப்பட்டால்தான் இதுபோன்ற கலவரங்களின் திமிர் அடங்கும் - ஒடுங்கும்!

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், தண்டிப்ப திலும் அரசியல் உள்நோக்கம் இருக்கும் மட்டும் பிரதமரின் வேண்டுகோள் வெற்றி அடையப் போவ தில்லை. இது கல்லின் மேல் எழுத்தாகும்.

தமிழ் ஓவியா said...


கோயில் கருவறையில் தீண்டாமையா? சென்னையில் நடைபெற்ற மாநாடுசென்னை, செப்.24- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு கொண்டு வரப்பட்ட அரசாணையையும், சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட் டுள்ள வழக்கை விரைந்து முடித்து நியமன நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. கருவறையில் தமிழ் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சிறப்பு மாநாடு ஒன்று சென்னையில் ஞாயி றன்று (செப். 22) நடைபெற்றது.

தீண்டாமை வன்கொடுமை!

தமிழ் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட் டது. நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்ட பிறகும் கோயில் கருவறைகளில் குறிப்பிட்ட பிரிவினரை தவிர வேறு சமூகத்தினர் யாரும் நுழையக் கூடாது என்பது வெளிப்படையான தீண்டாமை வன்கொடுமையாகும் என்று மாநாடு சுட்டிக்காட்டியது.

அரசாணையையும் சட்டத் திருத் தத்தையும் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழுடன் காத் திருக்கும் பலரை பணியில் அமர்த் தாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றமளிக்கும் செயல். எனவே, வழக்கை அரசு விரைந்து முடித்து, அர்ச்சகராக தகுதி பெற்று காத்திருப் போரை வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய வைத்து, பதிவு மூப்பு அடிப்படையில் பாகு பாடு இல்லாமல் அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக நியமிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநாடு கேட்டுக்கொண்டது.

கோயில் கருவறையில் தமிழ் ஒலிப்பது சமத்துவ சமூகத்தை கட்ட மைக்க வேண்டும் என்ற அரசமை ப்பு சாசன நோக்கத்தை நிறைவேற்றும் நடவடிக்கையாகும் என்றும் மாநாடு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் நீதிபதி கே.சந் துரு நிறைவுரையாற்றினார்.

பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள்

தமிழ்வழி ஆலய நிகழ்வுகளுக்காக போராடிவரும் மு.பெ. சத்திய வேல் முருகனார், முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், முனைவர். பொன்ன வைக்கோ ஆகியோர் தலைமையில் நடந்த மூன்று அமர்வுகளில் உரை யாற்றியோர் தீர்மானங்களை வழி மொழிந்தனர். காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாநில கவுரவத் தலைவர் பேரா சிரியர் அருணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் சி.மகேந்திரன், தமிழ் தேசிய பொது வுடமை கட்சியின் தலைவர் பெ.மணி யரசன், வழக்கறிஞர்கள் சிகரம் ச.செந்தில்நாதன், க.இராஜசேகரன், வீதி நாடக கலைஞர் பிரளயன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கவிஞர் இரா. தெ. முத்து , பத்திரிகை யாளர் அ. குமரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

ஊடகவியலாளர் திரு. வீர பாண்டி யன், தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக தமிழ் மறுமலர்ச்சி சங்க தலைவர் சு.கிருபானந்தசாமி வரவேற் றார். கி.கோவிந்தராசன் நன்றி கூறி னார். கோரிக்கைகளை மக்களிடையே விரிவாக எடுத்து செல்ல முடிவு செய் யப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பெரியார் பற்றாளர்கள், பெரியார்தம் கொள்கைப்பரப்பாளர்களாக மாறவேண்டும்!
மானமிகு சித்ரா சுந்தரம் நினைவேந்தலில் தமிழர் தலைவரின் வேண்டுகோள்!

சென்னை, செப்.24- சென்னை- பெரியார் திடலில் 18.9.2013 அன்று பகுத்தறிவாளர் கழக சித்ரா சுந்தரம் - நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மானமிகு சித்ரா சுந்தரத்தின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்து, பெரியார் பற்றாளர்கள் பகுத்தறிவுக் கொள்கை பரப்பாளர்களாக மாறவேண்டும் என வீர வணக்க உரையாற்றினார்.

சென்னையில் 14.9.2013 அன்று மறைவுற்ற தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு சித்ரா சுந்தரம் அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வு அன்னை மணியம்மையார் மன்றத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டது. வீர வணக்க நிகழ்வில், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், சித்ரா சுந்தரம் குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்று, சித்ரா சுந்தரம் அவர்களின் நினைவுகளைப் போற்றி மரியாதை செய்தனர்.

தமிழர் தலைவர் ஆற்றிய வீர வணக்க உரை

நிகழ்வின் தொடக்கத்தில் மானமிகு சித்ரா சுந்தரத்தின் ஒளிப்படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். நிகழ்வின் நிறைவாக மானமிகு சித்ரா சுந்தரத்தின் நினைவுகளைப் போற்றி வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார்.

தமது உரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் கூற்றுப்படி இயற்கையின் கோணல்புத்தியினால் பகுத்தறிவு இயக்கத்தின் அருமையான பொறுப்பாளரை இழந்த வருத்தத்தில் இருக்கிறோம். அவரது ஒளிப்படத்தினை திறந்து வைக்கின்ற வேளையில், நமது நெஞ்சங்களில் சோகம் நிலவினாலும், அவரது வாழ்வு, இயக்கத்திற்கான அவரது பங்களிப்பு என நினைவு கூர்கையில், பெருமை மேலோங்கி நிற்கிறது.

பகுத்தறிவாளரின் மறைவு, நினைவேந்தல் நிகழ்வு அவர் எந்தக் கொள்கையினைக் கடைப்பிடித்து வாழ்ந்தாரோ, அதனைப் பிரச்சாரம் செய்யும் நிகழ்வாக நடைபெறுகிறது. பெரியார் இயக்கத்தின் செயல்பாட்டு பண்பாடு அது.

சித்ரா அம்மையாரின் குடும்பம் பெரியார்மீது பற் றுள்ள குடும்பம். அவருடைய தந்தையார் அய்யாதுரை - ஆன்மிகச் சூழலில் அலுவலகப் பணிபுரிந்தாலும், பெரியார் பற்றாளராகவே விளங்கினார். நல்ல குடும்பம், ஒரு பல்கலைக் கழகம் எனும் புரட்சிக்கவிஞர் பாரதி தாசனின் கவிதைக்கு ஏற்ப, அய்யாத்துரை - கவுரியம் மாள் தமது மக்கட் செல்வங்களுக்கு கல்வி பயிலும் சூழலை உருவாக்கினர்.

வகுப்புரிமை முதல் ஆணை பிறப்பித்த முத்தையா (முதலியார்) குடும்பத்தின் கொள்கைப் பாரம்பரியத்தில் வளர்ந்த குடும்பம் அது. மூத்த மகன் பெரியவர் அ.காந்திமதிநாதன் முதுகலை பட்டம் பெற்று அய்.ஆர்.எஸ். பணியிலும், அறிஞர் அண்ணாவுக்கு உறுதுணையாகவும் இருந்தவர். 29.7.1945 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற அவரது திருமணத்திற்கு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் வாழ்த்துரை அனுப்பி, அந்த வாழ்த்து அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு இதழில் வெளிவந்தது.

அந்த திருமண வாழ்த்து கொள்கைச் சிறப்புமிக்கது. பார்ப்பனியம் ஒழிந்த தமிழர் திருமணமாக அந்த மணவிழா நடைபெற்றது. அடுத்த மைந்தர் பேராசிரியர் அ.சுப்பைய்யா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபொழுது அவரிடம் நான் பொருளாதாரப் பாடம் கற்றது ஒரு அரிய வாய்ப்பு. சித்ரா சுந்தரத்தின் தமக்கையார் பேராசிரியர் சுலோச்சனா. பெரியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பணியாற்றியவர். கடவுள் நம்பிக்கை என்றால், அதில் விவாதத்திற்கு இடமில்லை என நாவலர் நெடுஞ்செழியன் கூறுவார்.

அவரது குடும்பத்தைச் சார்ந்த அரசுப் பணியில் இருந்த முதன்மைப் பொறியாளர் முத்துக்குமாரசாமி, மிசா நெருக்கடி காலத்திலும், கருப்புச்சட்டை அணிந்து உயரதிகாரியைச் சந்தித்தவர். அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் விருது வாங்கச் சென்றபொழுது, அவருக்கு ஒரு பட்டயத்தினைப் பரிசாக வழங்கினார்.

பட்டயத்தில் தந்தை பெரியார், அறிவியலாளர் அய்ன் ஸ்டீன், பகுத்தறிவாளர் நேரு ஆகிய மூவரின் படங் களைப் பொறித்து, ஆரியர் வெறுத்த சீரியர் என தலைப்பிட்டு இந்திரா காந்தி அம்மையாருக்கு அளித்து, அவருக்கு வியப்பும், பெருமையும் கூட்டியவர் பொறி யாளர் முத்துக்குமாரசாமி ஆவார்.

தமிழ் ஓவியா said...

சித்ரா அம்மை யாரின் இணையர் காலம் சென்ற மீனாட்சிசுந்தரம் அவர்களும், பொதுப்பணித் துறையில் முதன்மைப் பொறியாளராக பணியாற்றி வந்த பெரியார் பற்றாளர். இப்படிப்பட்ட கொள்கைக் குடும்பத்திலிருந்து பகுத்தறி வாளர் கழகப் பணி ஆற்றி தன்னை பெரியார் இயக்கத் தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சித்ரா சுந்தரம்.

அமைதியாகப் பேசினாலும், ஆழ்ந்த கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். தமது பிள்ளைகளுக்கு, உற வினர்களுக்கு பெரியார் இயக்க இதழ்களை, நன் கொடை கட்டி, அவர்களுக்கு அஞ்சலில் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இயக்க நூல்களைப் பரிசாக எமது கையொப்பத்துடன் வழங்குவதை வழக்க மாகக் கொண்டிருந்தார்.

மொத்தமாக கையொப்பம் இடுவதற்கு எனக்குப் புத்தகம் வருகின்றது என்றாலே, அது சித்ரா சுந்தரம் அவர்களின் பரிசளிக்கும் பிரச்சார அணுகுமுறை என்பது விளங்கும்.

அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் பெரியார் இயக்கத்தின்மீது மதிப்பு கொண்டவர்களாக இருப்பதோடு, தந்தை பெரியார்தம் பகுத்தறிவுக் கொள்கையினை வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாக இருக்கவேண்டும்.

பெரியார் பற்றாளர்கள் பெரியார்தம் கொள்கைப் பரப்பாளர்களாக மாறவேண்டும். தமக்கும், நமது தமிழ் இனத்திற்கும் ஆக்கம் கூட்டும் பணியில் ஈடுபடவேண்டும். தமது குடும்ப முன்னோர்களின் முற்போக்கு எண்ணங்களின் செயல் வடிவமாகத் திகழ்ந்திடவேண்டும். சித்ரா சுந்தரத்தின் நினைவுகள் அந்த நிலைமையினை உருவாக்கிடும். - இவ்வாறு தமிழர் தலைவர் தமது நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டார்.

அ.காந்திமதிநாதன்

சித்ரா சுந்தரம் அம்மையாரின் மூத்த தமையனார், பெரியவர் அ.காந்திமதிநாதன் உரையாற்றும்பொழுது குறிப்பிட்டதாவது:

எங்களது தந்தையார் பெரியார் பற்றாளர். ஆன்மிகச் சூழலும் எங்களது குடும்பத்தில் நிலவியது. அந்நாளில், எங்களது உறவினர் நன்னிலம் நடராஜன் நடத்திய வெற்றி முரசு இதழினைப் படித்து, பகுத்தறிவு கொள்கையின்பால் ஈடுபாடு கொண்டேன். நான் அரசு பணியில், காஞ்சிபுரத்தில் பணியாற்றும்பொழுது, அறிஞர் அண்ணா அவர்களுடன் பழகும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

திராவிட நாடு இதழ் நடத்திய காலம் அது. அண்ணா அவர்களை தினமும் சந்திக்கச் செல்வது வழக்கம். எனது தங்கும் அறையில் விடுதலை, திராவிட நாடு இதழ்கள் இருப்பதைப் பார்த்து, பார்ப்பனர்களாக இருந்த உயரதிகாரிகள் என்மீது வெறுப்பு கொண்டிருந்தாலும், எனது பணியில் அவர்களால் குறையேதும் காண இயலவில்லை. என் அளவில் பகுத்தறிவாளனாக இருந்து வருகிறேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபொழுது, நாவலர் நெடுஞ்செழியன், இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் அங்கு படித்து வந்தனர்.

பெரியார்தம் பகுத்தறிவு கொள்கையின்பால் ஈடுபாடு கொள்ள, அத்தகைய இயக்க முன்னோடிகளின் பழக்கமும் எனக்கு உதவியது.

எங்களது தங்கை சித்ரா சுந்தரம், பெரியார் இயக்கத்தின்பால் இவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தது எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்திற்கே பெருமை யளிப்பதாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


- இவ்வாறு அ.காந்திமதிநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மறைந்த மானமிகு சித்ரா சுந்தரம் எந்த ஊரில் இருந்தாலும், விடுதலை இதழினை படிப்பதை அன்றாட அத்தியாவசியமான வழக்கமாகவே கொண்டிருந்தார். விடுதலையினை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் வரும் செய்திகள், கட்டுரைகள் குறித்து ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் குறித்து அதிகமாகக் கடிதம் எழுதியிருந்தார். அவருடைய கடிதம் விடுதலை செய்தி அலுவலகத்திற்கு வரும்பொழுதே, அனுப்பியவர் யார்? என்று கடித உறையினை பிரித்துத் தேடவேண்டியதில்லை. கடிதம் தாங்கிய உறையின்மேல் உள்ள அவர் கைப்பட எழுதிய ஆசிரியரின் முகவரியினை வைத்து அது சித்ரா சுந்தரம் அவர்களிடமிருந்து வந்த கடிதம் என்று சொல்லிவிடலாம்.

அழகான, தெளிவான, எழுத்துக்களாக எழுதக்கூடியவர். இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், தனது எண்ணங்களை, இயக்கம் குறித்த செய்திகளை பரந்துபட்டு எழுதும் வாய்ப்பினைப் பெற்றிருப்பார்.

- இவ்வாறு கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத் துரைத்தார்.

வீர வணக்கம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சித்ரா அம்மையார் பகுத்தறிவாளர் கழகச் செயல்பாட்டில் கொண்ட ஈடுபாட்டினை தனது முகவுரையில் பகுத் தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் எடுத்துக் கூறினார்.

சித்ரா அம்மையார்பற்றிய குறிப்பினை வடசென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் வாசித்து, அம்மையார்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் சித்ரா சுந்தரம் அவர்களின் பண்பு நலன்கள், பழகிய விதம் குறித்து ஆழ்ந்து பேசினார்.

திராவிடர் மகளிர் பாசறையின் செயலாளர் டெய்சி.மணியம்மை, சித்ரா சுந்தரம் அம்மையார், தம்முடன், இயக்கத் தோழர்களுடன் அருமையாகப் பழகிய விதம் குறித்தும், இயக்கப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்த நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்து போற்றிப் பேசினார்.

வீரவணக்க நிகழ்ச்சியில், திராவிடர் கழக சென்னை மண்டல செயலாளர் வெ.ஞானசேகரன், புதுமை இலக் கியத் தென்றல் பொறுப்பாளர் வழக்குரைஞர் அ.வீரமர்த் தினி, திராவிடர் மகளிர் அணியின் பொறுப்பாளர் பார்வதி, வடசென்னை, தென்சென்னை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், திராவிடன் நலநிதி தலைவர் டி.கே.நடராசன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் மிகப் பலர் வருகை தந்திருந்தனர்.

சித்ரா சுந்தரம் அம்மையாரின் உடன் பிறந்தோர் - தமையர் பொறியாளர் அ.காந்திமதிநாதன் (பணி நிறைவு பெற்ற சுங்க மற்றும் கலால் துறை உதவி ஆட்சியர்) பேராசிரியர் அ.சுப்பையா, தமக்கையார் பேராசிரியர் சுலோச்சனா, மகன்கள் ராஜ்குமார் மற்றும் ரவிக்குமார், மருமகள்கள், பெயரப் பிள்ளைகள் மற்றும் பல உறவினர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இறுதியாக, நிகழ்விற்கு வருகை தந்தோருக்கு நன்றி தெரிவித்து தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் ப.செங்குட்டுவன் உரையாற்றிட, வீர வணக்க நிகழ்வு நிறைவடைந்தது.

பகுத்தறிவாளர் கழக மானமிகு சித்ரா சுந்தரம் நினைவு அறக்கட்டளை உருவாக்கம்
தமிழர் தலைவர் அறிவிப்பு!

மறைந்த மானமிகு சித்ரா சுந்தரம் அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவரது பெயரில் நினைவு அறக்கட்டளை (Chitra Sundaram Memorial Endowment) ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளினையொட்டி பகுத்தறிவுப் பிரச்சாரமாக சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டம் நடத்தப்படும் என தமிழர் தலைவர் அறிவித்தார். அறக்கட்டளைக்கு தனது குடும்பத்தார் பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் அளிப்பதாக தமிழர் தலைவர் அறிவித்தார்.

தமிழர் தலைவரைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் வீ.குமரேசன் ரூ.5 ஆயிரம், திராவிடர் மகளிர் பாசறையின் சார்பாக டெய்சி.மணியம்மை ரூ.5 ஆயிரம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர் மானமிகு மாணிக்கம் (சித்ரா சுந்தரத்தின் உறவினர்) ரூ.5 ஆயிரம் என தங்களது பங்களிப்பினை தெரிவித்தனர். அறக்கட்டளைக்கு நிதி பங்களிப்பாகத் தர தோழர்கள் பலரும் ஆர்வமாக இருந்தனர்.

மறைந்தும் தொடரும் இயக்கத்திற்கான நிதி பங்களிப்பு!

இயக்கத்தின் செயல்பாடுகளுக்குப் பரவலாக தனது நிதி பங்களிப்பினை வழங்கி வந்த மானமிகு சித்ரா சுந்தரம், தனது இறுதிக்கட்ட வாழ்வு நிலை யினை உணர்ந்து, தனது குடும்பத்தாரிடம் கூறியது:

எனது மறைவிற்குப் பின்னர், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.10 ஆயிரத்தினை பங்களிப்பாக தமிழர் தலைவரிடம் அளித்திடவேண்டும்.

மானமிகு சித்ரா சுந்தரம் அவர்களின் வேண்டு தலை நிறைவேற்றும் விதமாக அவரது மூத்த மகன் மீ.ராஜ்குமார் (கட்டடக் கலை நிபுணர், கோவை) தமது குடும்பத்தின் சார்பாக ரூ.10 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வீர வணக்க நிகழ்வில் வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


எது நாத்திகம்?


கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்ன்னு சொன்ன பொழுது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அம்மாவுக்கு என் மேல் கோபம். எல்லோருடைய தோட் டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்டில் காய்கறி விலையாவது குறையுமே என்று நான் சொன் னதும், என்னைத் திட்டினார்கள். இயேசுவே என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சுடுன்னு பிரார்த்தனை செய்தாங்க.

சின்ன வயசில் இருந்து இந்தச் சண்டை என் வீட்டில் நடந்துகொண்டுதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்படவேண்டியவை தான். அது எந்த மதத்தில் இருந்தால் என்ன?

விகடன் மேடையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆனந்தவிகடன், 25.9.2013

தகவல்: சிவகாசி மணியம்

கேள்விக்கு விடையை மிகச் சரியாகவே நடிகர் பிர காஷ்ராஜ் கூறியுள்ளார்.

மூட நம்பிக்கை கண்டிப் பாக விமர்சிக்கப்படவேண்டி யதுதான். அது எந்த மதத்தில் இருந்தாலென்ன என்ற முத்தி ரையடியுடன் பதிலடி கொடுத் துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

வெறும் வார்த்தையால் அல்ல- தன் தாயார் கிறிஸ்தவர் என்ற முறையில் தமது குடும் பத்திலிருந்தே தொடங்கி கேள்வியின் முனையை மழுங் கடித்துள்ளார்.

இந்து மத அபிமானி களுக்கு, இத்தகைய கேள்வி யைத் தவிர, வேறு கேட்கவே தெரியாதுபோலும்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஊசி போன பண்டம் இது.

இங்கர்சால் நாத்திகம் பேசினார் என்றால், அது பெரும்பாலும் கிறித்துவ மதத்தை விமர்சித்தே இருக்கும். ஏனெனில், அவர் சார்ந்த - அவரை சுற்றிப் பின்னிக் கிடக் கும் மதத்தைப்பற்றிதான், விமர்சனங்கள் இருக்கும் - இருக்க முடியும்.

ஜீன் மஸ்லியரின் மரண சாசனம், கிறித்துவ மதத்தை மய்யப்படுத்தி, இருந்ததில் என்ன ஆச்சரியம்?

தஸ்லிமா நஸ்ரீனின் நாத் திக வாதம், முஸ்லிம் மதத்தை முன்னிலைப்படுத்தியே, இருந்த தும் சரியானதே!

அதேபோல்தான் இந்தியா வில் நாத்திகவாதம் - மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் இந்து மதத்தின் ஆணிவேரை நோக்கியே!

இதனைக்கூடப் புரிந்து கொள்ள இயலாத அடிப்படை நுனிப் பகுத்தறிவும் இல்லாத வர்களாக வினா தொடுப்பது கண்டு பரிகசிக்கத்தான் வேண் டியுள்ளது.
இந்து மத வினா தொடுப் பாளர்களைப் பார்த்து இன் னொரு கூர்மையான - நுட்பமான கேள்வி உண்டு.

இந்து மதத்தில் நாத் திகத்திற்கு இடம் உண்டா, இல்லையா? என்பதுதான் அந்த நறுக்கான கேள்வி. இந்து மதத்தைப்பற்றித் தெரிந்து கொண்டு இருந்தால், தேவை யற்ற கேள்வியைக் கேட்டு இருக்கவே மாட்டார்கள்.

இராமாயணத்தில்கூட தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் உண்டு என்பது தெரியுமா?

சார்வாகம் (உலகாய்தம்) அய்ந்திரம், சாங்கியம், ஆசீ வகம், பிரகஸ்பதி என்பவை எல்லாம் இந்து மதத்தில் பேசப்படவில்லையா?

பவுத்தமும், சமணமும்கூட இந்து மதப் பார்வையில் நாத்திகம்தானே?

இவற்றைத் தெரிந்து கொண்டிருந்தால் நாத்திகர்மீது நறநற என்று பற்களைக் கடிக்கமாட்டார்களே! - மயிலாடன் 25-9-2013

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றி கருநாடகமும் கொண்டு வருகிறது


பெங்களூரு, செப். 25- கருநாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந் திரா அளித்த பேட்டி வருமாறு:

மகாராஷ்டிரா மாநி லத்தில் அமலில் உள்ள மூடநம்பிக்கைக ளுக்கு எதிரான சட் டத்தைப் போல் ஒரு சட் டத்தை கருநாடகாவி லும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. அறியாமை மற்றும் கஷ் டத்தில் இருப்பவர் களைக் குறிவைத்து மாய மந்திரங்கள் பெயரில் ஏமாற்று வேலை நடக் கிறது.

மந்திரவாதிகள் ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். அதுபோன்ற பல சம்ப வங்கள் கருநாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள் ளன. சில சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப் பட்டுள்ளன. இது போன்ற மாய, மந்திரங் களுக்கு கடிவாளம் போட புதிய சட்டம் அவசியப்படுகிறது.

மகாராஷ்டிராவிலுள்ள சட்டத்தைவிடவும் வலு வான சட்டமாக இது இருக்கும். தேசிய சட்டப் பள்ளியின் சட்ட நிபுணர்களிடமும், கருநா டக சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்களிட மும் கருத்து கேட்டு, விரைவிலேயே புதிய சட்டம் கொண்டு வரப் படும்.
நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, கொடூர நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு, ஒழிப்பு சட்டம் 2013 என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய் யப்படும். பெங்களூரிலுள்ள டாலர்ஸ் காலனி வீட் டில் குடியேறினால் உயி ருக்கே ஆபத்து என்று ஒரு ஜோதிடர் என்னி டம் கூறினார். இதைக் கேட்ட எனது மனைவி அச்சமடைந்து, அந்த வீட்டுக்கு குடிபோக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நான் அதை பொருட் படுத்தவில்லை. இப் போது, அந்த ஜோதிடர் எங்குள்ளார் என்பதே தெரியவில்லை.

இந்த புதிய சட்டம், எந்த ஒரு தொழிலையும் குறிவைத்து கொண்டு வரப்படாது. மூட நம் பிக்கைகளைப் பரப்பு வது யாராக இருந்தா லும், அது எந்த வகை யில் பரப்பப்பட்டாலும் நட வடிக்கை எடுப்பது தான் இதன் நோக்கம். மூட நம்பிக்கைகளை பரப்புவோருக்கு தொலைக்காட்சிகள் வாய்ப்பளித்தால், அவற் றின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். எது மூட நம்பிக்கை, எது நம் பிக்கை என்பது குறித்த வரையறை, அரசு கொண்டு வரும் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டிருக் கும் என்றார்.

தமிழ் ஓவியா said...


இல்லத்தரசிகளுக்கு இதோ ஒரு நற்செய்தி!


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர் கள் - ஒருவரிடம், ஒரு பொது நிகழ்ச்சியில், கேள்வி கேட்கும்பொழுது (அய்.நா. பொது அசெம்பளி) அந்த நபரைப் பார்த்து, நீங்கள் புகை பிடிப்பதை விட்டுவிட்டீர் களா?என்று கேட்கிறார்.

அதற்கு அவர் சற்று தடுமாற்றத்துடன் சிற்சில வேளைகளில் விட்டு விட்டிருப்பேன் என்று கூறுகிறார்.

ஆனால், ஒபாமா அவர்கள், நான் கடந்த 6 ஆண்டுகளாக புகை பிடிப்பதை அறவே விட்டுவிட்டேன். காரணம், என் வாழ் விணையர் திருமதி மிஷேல்தான். அவரைக் கண்டு நான் மிகவும் பயப்படுவேன்; மாற்றாக நிகோட்டைன் கம் (Niccotine Gum) என்பதை, எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தி வருகிறேன்.

இதனால் (புகைப் பிடிப்பதை நிறுத்திய தால்) கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைந்து, பார்டரில் நின்றுள்ளது எனக் கூறினார்.

இவரும், இவரது வாழ்விணையரும் உடல்நலப் பாதுகாப்பில் மிகவும் குறியாக இருப்பவர்களாம்; இதுவரை வெள்ளை மாளிகையில் குடியேறிய அமெரிக்க அதிபர்கள் பலர்; அமெரிக்க அதிபர் பொறுப்பு என்பது அவ்வளவு லேசானதல்ல! மிகவும் தொல்லைகள் நிரம்பிய உலகப் பார்வை விழும் பதவி அல்லவா!

மிகவும் மன உளைச்சல் அதிகம் ஏற்படுத்தும் பதவி. எனவேதான் அவர்களில் பலரும் நடைப்பயிற்சி, மெது ஓட்டப் பயிற்சி (Jogging), கால்ஃப் (Golf) மற்றும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து இவைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை (Stress) போக்கிக் கொள்ள முயலு கின்றனர்!

பலர் புகைப் பிடிப்பதற்கே மூல காரணம் இந்த மன அழுத்தம்தானே!

புகையிலை எந்த ரூபத்தில் நம் உடலுக் குள் - நுரையீரல், இருதயத்துக்குள் சென் றாலும் நம் ஆயுளை வெகுவேகமாகக் குறைக்கும் - அதிக ஆற்றல் அதற்கு உண்டே!

எனவே, இந்த ஆபத்திலிருந்து (அந்தப் பழக்கம் உடையவர்கள்) மீண்டாக வேண்டும்; ஒவ்வொரு தடவை புகை பிடிப்பதும், ஒவ்வொரு தடவை தற்கொலை மாத்திரைகளை உட்கொள்வதற்குச் சமமாகும்!

உங்களில் எவருக்காவது அந்தத் தீய பழக்கம் இருந்தால், உடனே நிறுத்துங்கள்! அது பழக்கமாகி, வழக்கமாகிவிட்டது, புகை பிடிக்காவிட்டால், சுறுசுறுப்பு அல்லது ஒரு உணர்வு பீறிட்டு வருவதிலிருந்து எப்படி நிறுத்துவது என்று கேட்காதீர்கள்!

மனதில் உறுதி இருந்தால், முடியாதது எதுவும் இல்லையே!

தந்தை பெரியார் அவர்களே கூறியுள் ளார், நான் சங்கிலித் தொடர் புகைப் பிடிப்பாளி (Chain Smoker) ஆக இருந்த வன்; பிறகு ஒரு நாள் முடிவுசெய்தேன், உடனே நிறுத்திவிட்டேன்! என்றார்!

சில கணவன்மார்கள் புகைப்பிடிப்பதை விட முடியவில்லை என்று பிடிவாதம் பிடித் தால், அவர்களை மனைவிமார்கள் (வாழ் விணையர்கள் என்ற சொல்லாட்சி இவர் களுக்குப் பொருந்தாது என்பதால், அதைத் தவிர்த்துள்ளேன்) கணவன்களுடன் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, அவர் களை பணிய வையுங்கள் (திட்டிக்கூட).

எதை மறுத்தால், அனுமதிக்காததால் (பொருளாதாரமோ, உணவோ அல்லது வேறு எதுவோ) அவர்கள் வழிக்கு வரு வார்களோ, அதனைச் செய்யவேண்டும்!

காரிகையை நம்பினோர் கைவிடப்படார்!

மனைவி சொல் கேட்பவர் மகத்தான வெற்றியாளர் - பல வீடுகளில்! - மறவாதீர்!

தமிழ் ஓவியா said...


கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவிடுமாமே ஆதிமூலம்...

முதலையின் வாயிலிருந்து ஆனை யைக் காப்பாற்றிய ஆதிமூலம் நாடே அப()யக்குரல் கொடுத்த பின்பும் பாராமுகமாக இருப்பதைப் பார்த்து ஆறாத்துயரத்தில் மக்களும், ஆட்சி யாளர்களும் இருக்கின்றனர்.

குருவாயூர் கோயிலில் இருக்கும் தங்கத்தைக் கணக்கிடுவதே கஷ்ட மாமே! அப்படியானால் அவற்றைப் பாதுகாப்பது அதைவிடக் கஷ்ட மாயிற்றே!

திருவட்டாறில் ஆதிகேசவப் பெரு மாள்மீது இருந்த தங்கத் தகட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்தெடுத்து பூசாரி கொண்டு சென்றபோது, அதைப்பற்றிக் கவலைப்படாமல் சப்தமின்றி இருந்த பெருமான் போன்று தானே குருவாயூரப்பனும் இருப்பார்? பூசாரிக்கும், அவரோடு சேர்ந்தவர் களுக்கும் கொண்டாட்டம் தானே? இதனால் தானே கணக்கு வழக்கென் றால், அரசியல் கட்சிகள் போல் இந்து அமைப்புகள் கூச்சலிடுகின்றன.

நாட்டில் எவ்வளவு தங்கம் இருக் கிறது என்பதைக் கணக்கிடவே ஒத்து ழைக்காத தேவஸ்தானங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்கு எப்படி உதவும்?
மக்களிடமிருந்து வரியாகப் பணம் வசூலித்தால் வருந்துகின்றனர். அப் படியின்றி அவர்களாகவே விரும்பி பணத்தைக் கொடுக்க வைக்க அரசாங்க கஜானா பெருக கவுடில்யரின் ஆலோ சனைப்படி அமைக்கப்பட்ட அமைப்புத் தான் கோயில்கள் என்பதை எல் லோரும் அறிவர். அரசாங்கம், பணம் பெறுவதற்காகவே அமைக்கப்பட்ட அமைப்பு இப்போது தன்னாட்சி பெற்று தங்கள் இஷ்டம்போல் செலவழிக்க ஆரம்பித்துவிட்டன. அதன் வருவாய் கள், இருப்புகள் தங்கம், வைரம் போன் றவைகூட சரிவர கணக்கில் காட்டப் படுவதில்லை உண்டியல் எண்ணும் போது தங்கம், பணம் காணாமல் போகின்றன. மக்கள் சுபிட்சத்திற்காக யாகம் நடத்துகிறோம் என்று பார்ப் பனர்கள் தங்கள் சுபிட்சத்தைப் பார்த்துக் கொள்கின்றனர்.

கோயில் கருவூலங்களில் முடங்கிக் கிடக்கும் கணக்கற்ற பணக் குவியல் களை நாட்டுக்காகச் செலவு செய்வதில் என்ன தப்பு? இன்றைக்கு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிச் சீரழியத் தொடங்கியுள்ளது. இதனைச் சரி செய்யவேண்டாமா?

மத நிறுவனங்கள் தாமே முன்வந்து நெருக்கடி தீர உதவி இருக்கவேண்டும். அப்படி செய்யாததால் அதை செய்ய வைக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.

சீன யுத்தத்தின்போது நாட்டுக்கு தங்கம் தேவை என்று அரசு அறி வித்ததும் மக்கள் தங்களிடமிருந்த தங்கத்தை மனமுவந்து கொடுத்தனர். கழுத்தில், காதில் கிடந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். தமிழ்நாடுதான் அதிக அளவில் தங்கம் வழங்கியது.

தேவஸ்தானங்களும், இந்து அமைப்புகளும் ஏதோ அவர்கள் வீட்டுத் தங்கக் கணக்கைக் கேட்பதுபோல அலறுகிறார்கள். சீன யுத்தத்தின்போது ஏழை எளியவர்கள் பொதுமக்கள் எவ்வளவு தங்கத்தை வாரி வாரி வழங்கினர். அவர்கள் கோயிலைவிட அங்கிருக்கும் சிலை முதலாளி களைவிட எவ்வளவு மேலானவர்கள் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். கோயில்களில் இருக்கும் தங்கம் நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும். நாட்டைக் காக்க, மக்களைக் காக்க பக்தர்கள் முன்வர வேண்டும். ஓர் இயக்கமாகச் செயல்பட்டு மத நிறுவனங்கள் தங் களிடமிருக்கும் தங்கத்தில் ஒரு சிறு பகுதியையாவது கொடுக்க வைக்க வேண்டும். அவர்களிடமிருக்கும் மக்கள் பணம் மக்களுக்குப் பயன்படாமல், ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுகிறது என்றால் அது பெருங்கொடுமை யல்லவா? இக்கொடுமையைப் போக்க வேண்டியது பக்தர்கள் கடமை அல்லவா?

- ப.சங்கரநாராயணன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

தமிழ் ஓவியா said...


பெருமை


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

தமிழ் ஓவியா said...


காவி ரிப்பன்களும்... புன்னகைக்கும் பிள்ளையாரும்!


கடந்த 16.9.2013 அன்று சென்னை யில் பல இடங்களில் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக் கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப்பொட்டு கழுத்தில் காவி துண்டு..

கண்கள் சிவக்க வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர் களை கடந்த சில ஆண்டுகளாக யானைமுகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது. இவர்களுக்குக் கடவுள் பக்தியெல்லாம் இருப்ப தாகத் தெரியவில்லை. ஒரு வெறி யோடு இயங்குகிற இளைஞர்களா கவே இவர்கள் இருக்கிறார்கள். கணபதியைக் கடலில் கரைப்பது தங்களுடைய ஜபர்தஸ்த்தை காட் டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள்.

இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி மாதிரியான அமைப்புகளின் ஆதரவும், பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பலமென்ன என்பதைக் காட்டுவதற்கு விநாயகர் ஒரு கருவியாக இருக்கிறார். அவரும் இந்த காவி நாயகர்களோடு பயணிக்கிறார். இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு. காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப் படும் ஒருவித டெம்போ ஆட் டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பக்தர்களும் கடற்கரைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள் போல.... டிஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதி னைந்து வயது இருக்கலாம்.

அவள் அந்த டெம்போவையொட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக் கிறாள். ஆட்டோவில் இருந்த இளை ஞர்கள் முதலில் விசிலடித்தனர். பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எறிந்தனர். அதற்குப் பிறகு அதில் ஒரு பொறுக்கி தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின்மீது பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்தப் பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான். அந்தப் பெண் ஏதோ பதிலுக்கு திட்ட ஆரம்பிக்க, ஆட் டோவை அந்த பெண்மீது ஏற்றுவ தைப்போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ ஓட்டுநர். உதயம் தியேட் டர் அருகே நூறடி சாலை திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப் பது போல ஓட்ட, அந்தப் பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீய ணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பேருந்து நிறுத்தத்தின் அருகே தடுமாறி விழுந்தாள்.

பெரிய காய மில்லை, விழுந்ததும் அருகிலிருந்து பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்துவிட்டனர். ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து கொண்டே, பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பக்தர்கள். அதில் ஒருவன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சத்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள் ளையார் வண்டிகளின் வரிசையில் இணைந்தது.

இவர்களைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்டவரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர் களைப்போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும், கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல் லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர் களைப் பார்க்க ஒரு நீண்ட சண் டைக் காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. இந்தக் காவி ரிப்பன் பக்தர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வய துக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும், இவர்கள் எல்லோருமே குடிப்பவர்களாக சின்ன தூண்டுதல் ஆனாலும், அதைப் பெரிய வன் முறையாக நிகழ்த்திவிடுவார்கள் என் பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று சந்தித்த அந்த டெம்போ ஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின்மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத் திலும் பயமுறுத்தக்கூடியது... சாகும் வரை மறக்கவே முடியாதது.

- அதிஷாவினோ, சென்னை

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம்

சேது சமுத்திரத் திட்ட அமலாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பவர் இருவர்; ஒருவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் - தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா.

இன்னொருவர் திருவாளர் சுப்பிரமணிய சாமி - ஜனதா கட்சி தலைவர் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் அப்பொழுது அந்த வழக்கைத் தொடுத்தது ஒருபுறம் இருக்கட்டும்;

இப்பொழுது பி.ஜே.பி.யில் பொருத்தமாக - சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டார்.
சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆறாவது தடத்தில் (ராமர் பாலம்) திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதுதான் பி.ஜே.பி.யின் நிலைப்பாடே தவிர, திட்டமே கூடாது என்பதல்ல.

இந்த நிலையில், பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் சு.சாமி தொடுத்த வழக்கை வாபஸ் பெறவேண்டாமா? பி.ஜே.பி.தான் இதனை வலியுறுத்துமா?
எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

ராமன் பாலமா?

சேது சமுத்திரத் திட்டத்தை நீரி நிறுவனம் வகுத்துத் தந்த அந்த ஆறாவது வழித்தடத்திலேயே நிறைவேற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு வழக்குரைஞர் கேசவன் பராசரன்; மத்திய அரசு சார்பில் வாதிடு வதற்கு அவரது மகன் மோகன் பராசரனை அணுகிய போது, எனது தந்தையார், ராமன்மீது மதிப்புள்ளவர்; அவரை எதிர்த்து நான் வாதாட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும், எனக்கு ராமர்பாலம்பற்றி நம்பிக்கை உண்டு என்றும் கூறியுள்ளார். படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள சம்பந்தம் இதுதானா?

இந்த மத்திய அரசுக்கு ஏன்தான் இந்தப் புத்தியோ என்று தெரியவில்லை. நியாயத்தின் பலம் தம் பக்கம் இருக்கும் பொழுது எதற்காக மத்திய அரசு தயங்கிட வேண்டும்?

கம்பராமாயண மீட்சிப் படலம் 17ஆம் பாடல், ராமனே அந்தப் பாலத்தை இடித்து விட்டான் என்று கூறுகிறது.

அந்தப் பாடல் இதோ:
மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித்
தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற்
பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி
நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே

சேது புராணம் என்ன கூறுகிறது? ராமன் இலங்கை சென்று திரும்பும்போது அந்தப் பாலத்தை இடிக்க வேண்டும் என்று விபீடணன் கூறினான். அந்தப் பாலம் அங்கு இருந்தால் அதனைப் பயன் படுத்தி, இலங்கையிலிருந்து கொடியவர்கள் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்ல அதனடிப்படையில் அந்தப் பாலத்தை ராமன் இடித்துத் தள்ளினான் என்று சேது புராணம் கூறுகிறது.

ராஜாஜியின் கட்டுரைகள் என்னும் நூலில் ராமாயணம் என்பது வால்மீகியின் கற்பனை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை பராசரன்கள் கொண்டுவந்து திணித்தால், அந்த இதிகாசங் களையே ஆதாரமாகக் கொண்டு எதிர் தாக்குதல் தொடுத்துப் பொடிப் பொடி ஆக்கிட என்ன தயக்கம்?

தமிழ் ஓவியா said...

வீணாகும் பொருள்கள்

வீணாகும் பொருள்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று இந்தியப் பொறியியல் மய்யத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் டி.எம்.குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் இது மிகவும் முக்கியமாக முன்னெடுத்துக் கொள்ளப்படவேண்டிய பிரச்சினை. சுற்றுச்சூழலுக்குச் சவால் இந்த வீணாகும் பொருள்கள்தான்.

இவற்றை மறுசுழற்சிக்கு (Recycle) உட்படுத்திப் பலன் காண்பது அவசியமாகும். வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இதன் அருமை என்ன வென்று புரியும். விடுதியின் கழிவுப் பொருள்கள், கழிவறைகளிலிருந்து வெளியேறும் நீர் உள்பட அங்கு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, மின் உற்பத்தி உள்ளிட்ட பயன்கள் பெறப்படுகின்றன.

பிளாஸ்டிக் பெரும் சவாலாகக் கிளம்பியுள்ளது உண்மை என்றாலும், அதனையும் பயன்படுத்தி சாலைகளை அமைக்கும் முயற்சி முழுமையாக வெற்றி பெறவேண்டும்.

வீணான பொருள்களைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்ற பொது ஒழுக்கத்தை முதலில் தொடக்கப் பள்ளியிலிருந்து கற்றுக் கொடுக்கக் கூடாதா?

தமிழ் ஓவியா said...

மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும்: தா.பாண்டியன் பேட்டி

தஞ்சை, செப். 25-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு சில மாநிலங்களில் போதிய ஆதரவு கிடையாது.

பிகார், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாநில கட்சிகளே பலமாக இருக்கிறது. எனவே மாநில கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகள் இணைந்து தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3ஆவது அணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தலுக்கு பின்னால் 3ஆவது அணி மூலம் கூட்டு அமைச்சரவை அமையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட பாஜவால் வெற்றி பெற முடியாது. வேதபுத்திரர்கள் வந்து வாக் களித்தால்தான் அவர் பிரதமராக முடியும். பூலோகத்தில் அவரை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அப்படி ஒருவேளை மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும். காஷ்மீர் தனிநாடு என மறுநாளே பிரகடனம் செய்யும். நாகாலாந்து சுதந்திர பிரகடனம் செய்து கொடியேற்றும். எனவே இத்தகைய நிகழ்வுகள் நிகழ்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக 190 இடங்களை தாண்ட முடியாது.
- இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


வீறுகொள் வரலாறு எழுதுவோம் விருத்தாசலத்தில்!


தோழர்காள்!

செப்டம்பர் 28 - நாம் கூடவேண்டிய இடம் விருத்தாசலம்.

இந்தப் பெயரே நம் சிந்தனை அலைகளை வேறு எங்கோ கொண்டு சேர்க்கிறது.

நமது பச்சைத் தமிழ் திருமுதுகுன்றம்தான் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் விருத்தாசலம் ஆகியிருக்கிறது.

இலக்கியத்தில் பழமலை என்ற பெயரும் இதற்குண்டு; விருத்தாசலத்தில் நாம் கூடுகிறோம் என்கிறபோது அந்தச் சதியின் கொடிய முகம் நம் கண்முன் நிற்கவேண்டும்.

இந்தப் படையெடுப்பை முறியடிக்கவேண்டும் என்ற எண்ணம் நம் இதயத்தில் வெடித்துக் கிளம்ப வேண்டும்.

நம் பழம் தமிழ், பாழ்பட்டுப் போனதை எண்ணி பதைபதைக்க வேண்டும்.

நாம் நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கவேண்டும்.

மாயவரம் - மயிலாடுதுறை என்று மீட்கப்பட வில்லையா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. இனவுணர்வு பீறிட்டு எழுந்தால் இதனைச் சாதிப்பது எளிதான காரியம்தானே.

ஆரியம் புகுந்து அருமைத்தமிழ் மொழியைக் கூறுபோட்டு விட்டது. நம் ஊர்ப் பெயர்கள் ஆரியமயமாகின. தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ் வெளியேற்றப்பட்டு ஆரியம் வழிபாட்டு மொழியாயிற்று.

தமிழன் பெயர்கள் சமஸ்கிருதமாகி விட்டன. தமிழன் விழாக்கள் - பண்டிகைகளாகின - பார்ப்பனர்களின் பாதந்தாங்கிகளானது தமிழ்ச் சமுதாயம்.

இந்த அடிமைத்தனத்தைத் தூக்கி எறிய நமது திருமுதுகுன்ற மாநாடு புதுத்திமிரைக் கொடுக்கட்டும்.

நமது உரை வீச்சுகள் இனமானத்தை முன்னெடுக்கட்டும் - மொழிமானத் தீயை மூட்டட்டும்!

மாணவரணியின் மண்டல மாநாடு என்று மிகப் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

இளைஞர்களின், மாணவர்களின் குருதி சூடேறினால்தான் புரட்சி எரிமலை வெடிக்கும்.

1993இல் இதே ஊரில் வட்டார மாநாடு நடத்தினோம் - நீண்ட இடவெளிக்குப்பின் இன எழுச்சிப் போர் முரசம் திருமுதுகுன்றத்தில் கேட்க இருக்கிறது.

மாணவர் பட்டாளமே எழுக!

இளைய தலைமுறையே தோள் தூக்கி வருக!

பெரியார் மறைவுக்குப் பிறகும் தமிழர் தலைவர் தலைமையிலே வீறு கொண்டு தமிழினம் எழுந்து நிற்கிறது என்று காட்டுவதற்கான சந்தர்ப்பம் இது.

கருஞ்சட்டைப் பூமியை காவி மயமாக்க ஒரு கூட்டம் கனவு கண்டு கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணில் தர்ப்பைப் புல்லை வளர்க்கலாம் - என்று மனப்பால் குடிக்கிறது மனுதர்மக் கும்பல்.

தோட்டத்துப் புடலங்காயா

தமிழ்நாடு?

கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி

என்றார் நமது புரட்சிக் கவிஞர்.

அந்தச் சேதியைத் தெரிவிப்போம்! தோள் தூக்கி வருக! மாநில மாநாடு போல ஏற்பாடுகள் தூள் பறக்கின்றன!

எங்குப் பார்த்தாலும் சுவரில் எழுதிய விளம்பரங்கள் - பல வண்ண சுவரொட்டிகள் - பதாகைகள்.

பள்ளிகள் விடுமுறைதான். பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வீறு கொண்டு வருக விருத்தாசலம் நோக்கி.

தமிழர் தலைவர் சங்கநாதம் செய்வார். காலத்தின் கருவில் முளைக்கும் தீர்மானங்கள் உண்டு.

மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் பேரணி தனிச்சிறப்பு! கருத்தரங்கம் என்ற கருத்துச் சுரங்கம் உண்டு.

படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என்கிற வகையில் பகுத்தறிவுப் பெருங்குடும்பங்கள் குவியட்டும்! குவியட்டும்!!

தமிழர் தலைவர் சபாஷ் திருமுதுகுன்றம் என்று பாராட்ட வேண்டாமா? இடையில் இரண்டே நாட்கள் - இருளைக் கிழித்து பகை முகத்தை விரட்டிப் பகலாக்கிக் காட்டுவோம் - வாரீர்! வாரீர்!!

- மின்சாரம்

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் கவிதை !
==================
இந்துவும் முஸ்லீமும் ஒண்ணுன்னு சொன்னாரு
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்கோ

கோட்ஸே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்
குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும் !

(திராவிடநாடு 1956)

தமிழ் ஓவியா said...


பார்வையற்றோர் பயங்கரவாதிகள் அல்லர்! முதல்வரைச் சந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும்


பார்வையற்றோர் பயங்கரவாதிகள் அல்லர்!

முதல்வரைச் சந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும்

கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலிக்கவும் வேண்டும்http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpgகடந்த 10 நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.அதற்காகப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். முதல் அமைச்சர் சந்திப்புக்கான வாய்ப்பை அளிப்பதற்கு மாறாக பார்வையற்றவர்களைக் காவல்துறையினர் நடத்தும் முறை வேதனை அளிக்கிறது. பார்வையற்றோர் தங்கள் கோரிக்கையை முதல் அமைச்சரிடம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னையில் கடந்த 10 நாள்களுக்கு மேல், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குள்ள வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு சரிவர நிரப்பப்படல் வேண்டும் என்றும் மற்றும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் காவல்துறையினர் நடந்து கொள்ளும் முறை மிகவும் வேதனையாக இருக்கிறது! பார்வையற்றவர்களிடம் - அதுவும் அவர்கள் தமக்கு வாழ்வுரிமை தேவைக்கென போராடும்போது, அவர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல கருதி, அடக்குமுறைகளை ஏவுதல், அலைக்கழிக்கப்படுதல், எவ்வகையிலும் நியாயமல்ல; ஜனநாயக ஆட்சியின் அம்சமாகவும் அமையாது! மக்களாட்சித் தத்துவம் என்பது ஆட்சியாளர்களை நேரில் சந்திக்கும் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டதல்லவா?தமிழக முதல் அமைச்சர், போராட்டக்காரர்களை அழைத்து - மனிதாபிமானத்துடன் கருணை காட்டி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, செய்ய வாய்ப்பிருப்பவைகளை செயல்படுத்த ஆணை பிறப்பிக்கலாம்! அவர்கள்மீது கருணைபொழிய நடந்து கொண்டால்தான் ஆட்சிக்கு அவப்பெயரைத் தடுக்க முடியும். காவல்துறையினரையும் கடிதோச்சி மெல்ல எறியும் வண்ணம் அறிவுறுத்த வேண்டும்.பார்வையற்ற பரிதாபத்திற்குரிய அத்தோழியர், தோழர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தினால் பொருளாதாரத்தில் பெரும் நட்டம் ஒன்றும் ஏற்பட்டு விடாது.எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் வாக்குரிமை உள்ள குடிமக்கள் என்பதை, தமிழக அரசு -ஆளுங் கட்சி மறந்து விடக் கூடாது!எனவே ஆட்சியாளர் மனிதாபிமானத்தோடு அவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது அவசர அவசியமாகும். மாற்றுத்திறனாளிகள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முறையைத் தயவு செய்து கைவிட்டு அறவழியில் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பது நல்லது.கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்சென்னை

26.9.2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசைபதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


தகுதி திறமை பேசும் அ.இ.அ.தி.மு.க. அரசு


செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு, ஆண்டாண்டுக் காலமாக அரும்பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்த சமூக நீதியின் ஆணி வேரை, வெட்டும் ஓர் ஆபத்தான வேலையில் திட்டமிட்ட வகையில், இறங்கி விட்டதாகத் தெரிகிறது.

மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்களே, சமூகநீதியின் தலையில் (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு) கை வைத்ததன் பலனை, 1980 மக்களவைத் தேர்தலில் வட்டியும் முதலுமாக அனுபவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினார். தேர்தலில் அவர் சந்தித்த மகத்தான மரண அடியாகும் அது.

தோல்விக்கான காரணத்தை உணர்ந்து கொண்ட மாண்புமிகு எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு அல்லாமல், அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். தமிழ்நாட்டின் இந்த வரலாற்றினை எந்தக் காரணத்தாலோ, உணர மறுத்தால் 1980இல் எம்.ஜி.ஆர். அவர்கள், மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது போலவே, 2014 மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. பெரும் அளவில் மண்ணைக் கவ்வும் என்பது உறுதி.

ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதி தேர்வு என்ற பெயரில் சமூக நீதிக்கு மரண அடியை அ.இ.அ.தி.மு.க. அரசு கொடுத்து விட்டது.

தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் அதற்கு மாறாக உயர் ஜாதியினருக்கு என்ன தகுதி மதிப்பெண்ணோ அதே தகுதி மதிப்பெண்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கும் என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு - இதுவரை, தமிழ் மண் கட்டிக் காத்து வந்த சமூக நீதிக்கு, வெட்டப் பட்ட சவக்குழி அல்லாமல் வேறு என்ன?

69 சதவீத இடஒதுக்கீட்டைக் கட்டிக் காக்க திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட ரீதியாக, வழிகாட்டி அதற்கான மசோதாவையும் உருவாக்கித் தந்து, அன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சட்டமாக்கச் செய்தார்.

இன்று சோ இராமசாமிகள் ஆலோசகர்களாக இருக்கின்ற காரணத்தால், சமூகநீதிக்குச் சாவு மணி அடிக்கிறார் என்று தானே பொருள்?

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் இவ்வாறு கூறுகிறது.

The State Govt has taken a policy decision not to compromise on the quality of teachers and decided not to grant relaxation to any of the categories என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி திறமை என்பதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு, என்று கூறுகிறது அரசின் பிரமாணப்பத்திரம்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்கிற பிரச் சினையை தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், எல்லாவற்றிலும் ஆதிக்கக் கொடியைக் கையில் ஏந்திய பார்ப்பனர்கள் எந்தத் தகுதி - திறமையைப் பேசி இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதத்தை வைத்தார்களோ, அதே பார்ப்பனர் வாதத்தைதான் செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசு இன்றைக்கு வைத்துள்ளது - அதுவும் உயர்நீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரமாகவே தாக்கல் செய்துவிட்டது.

சமூகநீதிப் போராளிகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடும் ஒரு நிலையை அ.இ.அ.தி.மு.க. அரசு உருவாக்கிக் கொடுத்து விட்டது.

தகுதி - திறமை மோசடி பற்றி தந்தை பெரியார் கூறாததா? கல்வி வள்ளல் காமராசர் கூறாததா?

அறிஞர் அண்ணா பேசாததா?

ஒடுக்கப்பட்ட மக்களே, சமூகநீதிக் களத்தில் இறங்கிடத் தயாராவீர்!

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் வானொலி உரை


பெருமதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரிய அய்யா தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (17.9.2013), வானொலியில் தாங்கள் ஆற்றிய உரை, சொற்செறிவும், பொருள் ஆழமும் கொண்டு, தந்தை பெரியாரைப் படம் பிடித்துக் காட்டியது. உணர்ச்சிக்கு இடங்கொடுக்காமல், அறிவுப்பிழம்பாய்த் திகழ்ந்த அந்த உரையில், தாங்கள் கூறிய

தந்தை பெரியாரின் கருத்துகள் காலத்தால் அழியாதவை; கருத்தால் நிலையானவை; பயன்பாட்டால் இன்றும், என்றும் வேண்டப்படுபவை என்ற முடிவுரை, நெஞ்சை நெருடியது. அந்த உரையில் தொண்டறச் செம்மல் என்ற தலைப்பே, ஈர்ப்புடையது அவர் (பெரியார்) பதவியை நாடாதவர்; புகழைத் தேடாதவர்; பொதுவாழ்வில் நேர்மையும், சிக்கனமும் கொண்ட, தொண்டறச் செம்மல், என்ற வாசகங்கள் பெரியாருக்குப் புகழாரம் சூட்டின.

அவருடைய சொந்த சொத்துக்களும், மக்கள் அவருக்கு கொடுத்த பணமும், இப்போது கல்விக் கூடங்களாக, மருத்துவமனைகளாக, பிரச்சார நிறுவனங்களாக காப்பகங்களாக விளங்குகின்றன என்ற விளக்கம், தந்தை பெரியாரைத் தொண்டறச் செம்மலாகப் படம் பிடித்தது. கிரேக்க அறிஞன் சாக்ரடீசுக்கு வாய்த்த பிளோட் டோவின் பெயர் என் நெஞ்சில் நிழலாடியது.

- வீ.செ.கந்தசாமி, சென்னை- 14