Search This Blog

1.9.13

பிராமண ஜாதி ஆகலாம் எப்போது?

மனு தர்மத்தை மெய்படுத்தலாமா?


ஒரே ஒரு விமோசனம் அதென்ன தெரியுமா? அதுதான் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு காந்தியார் இங்கு வந்தபோது சொன்ன மார்க்கம். அதாவது ஒரு சூத்ர ஸ்த்ரீ வயிற்றில் பிராமணனுக்கு விவாக முறைப் படி பிறந்த பெண் மறுபடியும் பிராமணனையே மணந்ததின் மூலம் அவள் வயிற்றில் பிறந்து இப்படியாக 7 பிறவி பிறந்தால் 7ஆம் தலை முறையில் பிராமண ஜாதி ஆகலாம் என்பதுதான்.
இதுதான் காந்தியார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருப் பூரில் சொன்னது. மற்றும் கடைசி யாகச் சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆகமாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்த விதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மையாகும், தத்துவமாகும். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 713)
பிராமண தர்மம்: பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதி லும், பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய்ச் செய்யக்கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத் திற்கு  மார்க்கமில்லை என்கின்ற காலத்தில்  அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 83)
ஏனெனில் அந்தப் பிழைப்பு இரும்புக் கலப்பையையும் மண் வெட்டியையும் கொண்டு  பூமியை வெட்ட வேண்டியதாகும். ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். (அத்.10.சு.84)
தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிடவேண்டும். (அத்.10.சு.96)
சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலியவைகளுக்கு உரிமை கிடையாது. (அத். 10. சு.126)
சூத்திரன் எவ்வளவு தகுதியுடைய வனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிக மாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிரா மணனுக்கு இம்சையாக நேரும் (அத்.10.சு.129)
சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக  வலுவினாலும் கொள்ளலாம். (அத்.11. சு.13)
அசுரர்கள் என்பது சூத்திரர் களைத்தான் என்பதற்கு ஆதாரம். மனு தர்ம சாஸ்திரத்தில் 11ஆம் அத்தியாயம் 20ஆம் சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் - அவர் கள் பொருளைக் கவ்வுவது தர்ம மாகும் என்று குறிப்பிடப்பட்டிருக் கிறது.
திராவிடர்கள் சூத்திரர்கள். சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்திரமே இந்து மதத்திற்கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என் பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க  வேண்டுமாய் விரும்புகிறேன்.
இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக் கூடாதென்றும். அவை எப்படியாவது ஒழிக்கப் பட்டே ஆக வேண்டுமென்றும் அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களைத் திராவிடர் களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர் கழகத் திராவிட நாடு எழுச்சிக்கு தமிழ்நாடு.ஆந்திரநாடு, கேரள நாடு, கர்நாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவ தென்றால், மனுதர்ம சாஸ்திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்பதல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும்?
          ------------------------ தந்தை பெரியார் -குடிஅரசு -கட்டுரை -20.09.1947

9 comments:

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக இருப்பவர் தொல்.திருமாவளவன்எழுச்சித் தமிழர் பொன் விழா நிறைவு விழாவில் தமிழர் தலைவர் புகழாரம்!

சென்னை, செப். 1- ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக இருப்பவர் தொல்.திருமாவளவன் என, எழுச்சித் தமிழர் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவிற்கு தலை மையேற்று பேசிய தமிழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பொன் விழா ஆண்டு நிறைவு விழா நேற்று (31.8.2013) மாலை 6.30 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சியின் பொதுச் செயலா ளர்கள் ம.செ.சிந்தனைச் செல்வன், து.இரவிக்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முகம்மது யூசுஃப் வரவேற்புரையாற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 51 பவுன் தங்க செயினை, திருமாவளவனுக்கு அணிவித்து வாழ்த்துக்கள் தெரி வித்து சிறப்புரையாற்றினார். முன்ன தாக கவிக்கோ அப்துல்ரகுமான், பேராயர் எஸ்றா சற்குணம் வாழ்த் துரை வழங்கினர். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் தோழமைக்குரல் - இசுலாமியர் களத்தில் திருமா வளவன் என்ற நூலை கலைஞர் வெளியிட்டார். புரட்சியின் புதல் வன், போர்வீரன் திருமா, தங்க மானவன், என்றும் பதினாறு, புலியின் தம்பி ஆகிய இசைப் பேழைகளை கலைஞர் வெளியிட தமிழர் தலைவர் பெற்றுக்கொண் டார்.

முன்னதாக இவ்விழாவிற்கு தலைமையேற்று, பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள்:-
ஒடுக்கப்பட்ட மக்களின் படைத் தளபதியாக இருப்பவர் மானமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் ஆவார். எப்படி திராவிடர் கழகம் தந்தை பெரியார் வழி நின்று சமூக நீதிக்காக பாடுபடுகிறதோ, அதே போன்று விடுதலை சிறுத் தைகள் கட்சியும் அதே உணர்வுடன் இனத்தின் மீட்சியாக பாடுபட்டு வருகிறது.

தொல்.திருமாவளவன் அவர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத் கர் ஆகிய சமூக புரட்சியாளர்க ளைப் படித்தவர். இந்தியாவில் புரட்சியாளர்களாக தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருந்தவர்கள்; அவர்களை பின் பற்றி நடப்பவர் தொல்.திருமா வளவன்.

தொல்.திருமாவளவன் பயிற்சி பெற்ற இடம் பெரியார் திடல், திராவிடர் கழகம் நடத்திய இலங்கை பிரச்சினைக்காக ரயில் மறியல் போராட்டத்திலும், இந்தி எழுத்து அழிப்பு போராட்டத் திலும் பங்கேற்றவர். எனவே அவர் நீண்டகாலம் தொண்டறச் செம் மலாக இருக்க வேண்டும். என தமி ழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.

முன்னதாக இவ்விழாவில் தமிழர் தலைவர் அவர்கள், கலைஞர், தொல்.திருமாவளவனின் தாயார், தொல்.திருமாவளவன் ஆகி யோர்க்கு பொன்னாடை அணி வித்து சிறப்பு செய்தார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தொல்.திருமாவளவன் பொன் னாடை அணிவித்து அயோத்தி தாச பண்டிதர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் சிலைகளை நினைவுப் பரிசாக வழங்கி சிறப்பித்தார். திமுக தலை வர் கலைஞர் அவர்களுக்கு இரண்டு சவரனில் நெல்லிக்காய் உருவம் கொண்ட தங்க பரிசை வழங்கினார் தொல்.திருமாவளவன்.
இவ்விழாவில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் துரை.முருகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாலாஜி, வன்னி யரசு உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று விழா வைச் சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


அடடே, அண்ணா திமுகவுக்கு வந்த கொள்கைக் கோபத்தைப் பாருங்கள்!


அண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது.

அதற்குத் திடீரென இனமானம், தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கை மீது பாசம் பொங்கிப் பிரவாகித்து விட்டது.

திமுக ஆதரவில் நிறைவேறிய உணவு மசோதாவை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்.
கலைஞர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒருகணம் நடுக்கம், அச்சம் (ஞாடியை) இவர்களுக்கு ஏற்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா, என்ன?

கலைஞர் கட்டினார் என்பதற்காக தலைமைச் செயலகத்தை இழுத்து மூடவில்லையா? கலைஞர் ஆட்சி உருவாக்கியது என்பதற்காக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தைத் தூக்கி எறிய ஆசைப்படவில்லையா?

புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தின் கதி என்ன? செம்மொழிப் பூங்கா என்னவாயிற்று? துறைமுகம் - மதுரவாயல் சாலை எனும் மிகப்பெரிய திட்டம் கைவிடப்படவில்லையா? சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லையா?

இந்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் தீர்த்துக் கட்டிய ஆட்சி இது - ஒரே காரணம் இவையெல்லாம் மானமிகு கலைஞர் சம்பந்தப்பட்டது என்பதுதான். திமுக ஆதரவுடன் நிறைவேறிய உணவு மசோதா என்ற வார்த்தைகள் வந்து விட்டதாலேயே விட்டேனாபார் என்று வில்லை எடுக்கிறது இந்த அண்ணா திமுக ஏடு. தமிழர் தலைவரைப் பார்த்து கருப்புச் சட்டை ஒரு கேடா என்றும் கேள்வி கேட்கிறது. அண்ணா பெயரில் ஆன்மீக ஏடு நடத்துவதுதானே அண்ணா திமுக!

சின்ன வயதில் வெண்ணெய் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் பற்றி அண்ணா எழுதியது இந்த கோலிவிளையாட்டுச் சிறுவர்களுக்குத் தெரியுமா?

அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் கொடியிலும் வைத்து கொண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறும் கூட்டத்துக்கு கருப்புச் சட்டை பற்றிப் பேசவோ, அண்ணா பெயரைப் பயன்படுத்தவோ, உச்சரிக்கவோ முதற்கட்டத்திலேயே தகுதி உண்டா! பெண்களும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் பாவ யோனியிற் பிறந்தவர்கள் என்று கீதை (அத்தியாயம் 18 சுலோகம் 44) கூறுகிறது என்பதை அறிவாரா அதிமுக பொதுச் செயலாளர்? அறிந்துதான் கீதையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறாரா? பூணூலின் மகத்துவத்தைப் பற்றி நமது எம்.ஜி.ஆர். படம் போட்டு விளக்குகிறது என்றால், திராவிட இயக்கத்திலே பூணூல் புகுந்துவிட்டது என்றுதானே பொருள்?

அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்? நீங்கள் கொடுப்பது நெத்தியடி என்றால் நாங்கள் கொடுப்பது புத்தி அடி!

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பிறந்த நாள் - வாழ்விலே ஒரு திருநாள்!


பெரியார் ஆயிரம் வினா - விடையில் இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் பங்கேற்றுச் சாதனை!

பட்டிதொட்டியெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை (செப்டம்பர் 17) புதிய அம்சங்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவோம் - பட்டி தொட்டி யெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத்தினர்களே,

கனிவான வணக்கம்.

செப்டம்பர் பிறந்து விட்டது!

நமது கொள்கைத் திருவிழாவின் கொடியேற்றம் துவங்கி விட்டது என்பதுதானே அதன் பொருள்?

போதி மரம் செல்லாப் புத்தன்!

தரணிக்கெல்லாம் தன்மானத்தைப் போதித்த, போதி மரம் செல்லாத புத்தனாம், நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பெருவிழா - திருவிழா (செப்டம்பர்) 17ஆம் தேதி துவங்கி, உலகெலாம் உன்னத அறிவுத் திருவிழாவாக, அறியாமைக்கெதிராக அறிவொளி பாய்ச்சும் அற்புத விடியல் விழாவாக நடைபெற திட்டமிடப்படுகிறது!

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனி நபர் அல்ல - அறிஞர் அண்ணா அவர்கள் அழகுற அறிவுச் செறிவுடன் கூறியபடி பெரியார் ஒரு சகாப்தம், ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்!

மக்களுக்கு மாலை நேர வகுப்புக்களை எடுத்தவை களாக தனது பொதுக் கூட்டங்களைப் பயன்படுத்திச் சொல்லிக் கொடுத்த தமிழகத்தின் முதல் பேராசிரியர்!

ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் சிந் தனையும், செயலும் இணைந்த ஓர் இணையற்ற மாவீரர்; மாமனிதர்!
தனி மனிதரல்ல பெரியார்!

தனி மனிதரானால் அவர் மறைந்து விட்டார் என்ற குறிப்பு உண்டு; நிறுவனங்கள் அப்படியல்ல; நீடித்து நிலைத்தவை!

கடைசி மூடநம்பிக்கையும், அறியாமைக் கொடுமையும், சமூக அக்கிரமும், வக்கிரமும் இருக்கும் வரை பெரியார் என்ற தத்துவமும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும் - நோய் தீர்க்கத் தேவைப்படும் மருந்து போல!

பெரியார் தம் அறிவுரைகளும், ஆக்கப்பூர்வ திட்டங்களும், புதிய உலகுக்குப் புத்தொளி பாய்ச்சிடும், புதுமைப் படைக்கலன்கள் ஆகும்!

அதனை மக்கள் மன்றத்திற்கு - காலத்திற்கேற்ற புதிய உத்திகளுடன் - மின்னணு, தகவல் புரட்சி யுகத்தின் தேவைக்கும் தேடுதலுக்கும் ஏற்ப செதுக்கிச் செயல் படுத்த வேண்டிய நமது கடமை - காலத்தின் கட்டளை யாகும்.

பெரியார் ஆயிரம் வினா -விடைப் போட்டியின் மாட்சி!

அதன் முதல் பிரச்சாரம் பெரும் முயற்சிதான் - சுமார் லட்சத்திற்குமேல் பெரியாரைப் புரிந்து கொள்ளப் புறப்பட்ட பள்ளிக்கல்வி மாணவச் செல்வங்கள் (இரு பாலரும்) கடந்த சில நாள்களாக பங்கு பெற்று (பெற்றோர்களுடனும் இணைந்து) மகிழும் பெரியார் ஆயிரம் வினா விடைப்போட்டி நாடு தழுவிய அளவில் எங்கெங்கும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளன!

ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுகிறேன்.

நமது தலைமைக் கழகத்தின் சீரிய செயல்பாட்டின் மூலம், பெரியார் பற்றிய புரிதலை - இளம், வளர் இளம் பிராய இருபால் மாணவச் செல்வங்கள் அறிந்து கொண்டுள்ள அற்புத முயற்சி!

திட்டமிட்டதைவிட, எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பு இதற்கு நாடெங்கும்!

இது இன்னும் பல கட்டங்களாக தமிழ், ஆங்கில மொழிகளில் மட்டுமில்லை. இந்திய மொழிகள், உலக மொழிகளிலும், On - Line
மூலமாக - கணினி மூலம் உலகத்தின் பற்பல நாடுகளில் பலவற்றிற்கும் எடுத்துச் சென்று பெரியாரை உலகமயமாக்கிடும் அரிய சிறப்பான முயற்சியின் துவக்கம்!

புதிய திட்டங்கள் தயார்!

அடுத்தடுத்து, இளைய தலைமுறை, மகளிர் - இரு சாராரை ஈர்க்கும் கொள்கை வகுப்புப் போன்ற பல முயற்சிகள் - இல்லத்தரசிகள் கொள்கை அரசிகளாக்கப் படல் வேண்டும் என்பதற்கே மகளிர் மாண்புக்குக் காரணமான பெரியார்தம் தொண்டறம் பற்றிய செய்திகளும், அவைகளையே துடுப்புகளாக்கி தமது வாழ்க்கையில் ஓடத்தை ஓட்டி - வெற்றிக்கரை சேர வாரீர்! என்று அழைக்கும் அமைதியான அறிவுப் புரட்சித் திட்டங்களும் தயாராகிக் கொண்டுள்ளன!

உற்சாகம் பொங்கி வழிய, கொள்கைத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

நமக்கென உள்ள வாழ்விலோர் திருநாள் பெரியார் பிறந்த நாள் என்ற திருநாள் - பெருநாள்!

மனிதர்களை வாழவைக்கும் மருத்துவ முகாம் போன்றவைகளை பெரியார் மருத்துவ அணி மருத்துவச் செம்மல்கள் ஊக்கத்துடன் துவங்கி திசையெட்டும் நடத்த முன்வந்து நடத்தி வெற்றிச் சாதனை புரிந்து வரு கின்றனர்.

இப்படி புதுமையுடன் இந்த ஆண்டு 135 துவங்கி நடைபெறட்டும்!

பட்டி தொட்டியெங்கும் பெரியார் கொள்கை முழங்கட்டும்!

உங்கள் தொண்டன்

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
2.9.2013

தமிழ் ஓவியா said...


சிறுத்தையின் உறுமல்!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா - பொன் விழா நிறைவுப் பெரு விழாவாக சென்னை காமராசர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. (31.8.2013)
இளைஞர்களின் அடர்த்தித் திரளாக அமைந் திருந்தது அந்த நிகழ்ச்சி. மண்டபம், வெளிப்புறம் என்று எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் எழுச்சிச் சங்கமம்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கிட முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் நிறைவுரை ஆற்றிட விழா நிறைவான விழாவாக அமைந்திருந்தது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தம் சிந்தனைகளைச் சுற்றிச் சுழன்ற நிகழ்ச்சி! இந்தக் கால கட்டத்தில் முன்னெடுக் கப்பட்ட சிந்தனைகள் இவைதானே!

எழுச்சித் தமிழர் ஏற்புரையில் சொன்னது மிக முக்கியமானது; ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடிய, தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம், தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. - இத்துடன் சிறுபான்மை மக்களின் பிரதிநிதி களாக பேராயர் எஸ்றா சற்குணம், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியைத் தேர்தலுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்ட இணைப்பாகக் கருத வேண்டும் என்று மானமிகு திருமா அவர்கள் சொன்னது மிக முக்கியமானது. இது ஒரு கோட்பாட்டுப் பார்வை. இன்றைய கால கட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபடக் கூடிய தேவைப்படக் கூடிய அமைப்புகளின் வலிமை வாய்ந்த ஒற்றுமை மிகவும் அவசியம்.

மதவாத சக்திகளுக்கும், மதத்தை முன் வைத்து அரசியலை நடத்தத் துடிக்கும் பிற்போக்குவாதிகளுக்கும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சாட்டைதான் இந்த இணைப்பு.

இந்து நேஷனலிஸ்ட் என்று வெளிப்படை யாகத் தன்னைப் பற்றிய ஓர் அறிமுகத்தோடு இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று மார்தட்டிக் கூறும் கால கட்டம் இது.

இத்தகு சூழ்நிலையில் சென்னை காமராசர் அரங்கம் அந்தச் சக்திகளை, முகத்துக்கு முகம் சந்தித்து வீழ்த்திட, ஒரு பெரிய குரலைக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியார் திடலில் வெளிச்சம் கிடைத்துப் புறப்பட்ட சிறுத்தை என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதன் பலனை, அவருடைய பேச்சு பறைசாற்றி விட்டது. தன்னை ஆற்றுப் படுத்தி வரும் இரு தலைவர்கள் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும்தான் என்பதையும் மனந்திறந்து நன்றி உணர்ச்சி மேலிடப் பிரகடனமும் செய்தார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு தலைவர் பிறந்து முறையாக வளர வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அப்படி உருவாகும் இளைஞர் பெரியாரி யலையும், அண்ணல் அம்பேத்கர் இயலையும் சுவாசித்து உள் வாங்கிக் கொண்டு எந்தவித சபலத்திற்கும் ஆளாகாமல் இலட்சியப் பயணத் தைத் தொடரும் பட்சத்தில் நிச்சயம் எதிர்காலம் அவர்கள் வசப்படும் என்பதில் அய்யமில்லை.

பஞ்சமி நில மீட்பு, ஈழத் தமிழர் விடிவு, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு இம் மூன்றையும் முன்னிறுத்தி அவர் பேசியதில் சமூகநீதி, இனவுணர்வு, உரிமை மீட்பு என்ற மூன்றும் முத்தாய்ப்பாக முறுகி நிற்கிறது. அது மேலும் வளரட்டும்!

தந்தை பெரியாரை முன்னிறுத்தியதால் பகுத்தறிவு ஒளி அங்கே தானாகவே ஊடுருவி விட்டது.

எத்தனை இடம் கிடைக்கும் என்பதைவிட தமிழன் எந்த இடத்தில் இருக்கிறான்? அவன் முழு விடுதலைக்குரிய இடம் எது? என்பதில் குறியாக இருப்பதுதான் சிறந்த குறிக்கோளாக இருக்க முடியும். அது எழுச்சித் தமிழரின் ஏற்புரையில் உறையிலிருந்து வெளிவந்த வாளாக மின்னியது. அந்தப் பொன் விழா நிறைவு காணும் இலட்சிய சிறுத்தைக்கு நமது வாழ்த்துக்களைக் கூறுவோம். தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.

(விடுதலை, 28.4.1943)

தமிழ் ஓவியா said...


இலக்குவனார்


1973 செப்டம்பர் 3 - தமிழர்கள் நினைவு கூர வேண்டிய முக்கிய நாள். நமது பேராசிரியர் சி. இலக்குவனார் அன்றுதான் மறைந்தார்.

தந்தை பெரியாரின் சீடர்; திராவிட இயக்கத் தீரர் - மூடநம்பிக்கையின் வைரி. தமிழுலகிற்கு தலை சிறந்த நூல்களைத் தந்த பெருமகன். தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெரும் புலவர். இலக்குவனார் மொழி பெயர்த்த அந்த நூலைத் தான் முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகம் சென்ற போதும் தன்னோடு எடுத்துச் சென்று தமிழன் பெருமையை, தமிழன் சீர்த்தியை அமெ ரிக்கப் பெருமகன்களுக்கு வழங்கியதன் மூலம் அறியச் செய்தார்.

எழிலரசி, தமிழிசைப் பாடல்கள், மாணவர் ஆற்றுப் படை, துரத்தப்பட்டேன், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து எனும் செய்யுள் நூல்கள், எல்லோரும் இந் நாட்டு மன்னர் (இரு தொகு திகள்) அமைச்சர் யார்? வள்ளுவர் வகுத்த அரசியல் தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ் கற்பிக்கும் முறை ஆகிய ஆய்வு நூல்கள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்) கரும வீரர் காமராசர், என் வாழ்க்கைப் போர் ஆகிய வரலாற்று நூல் களையும் வழங்கிய எழுத்து வள்ளல் இலக்குவனார்.

சங்க இலக்கியம், (கிழமை இதழ்) இலக்கியம் (திங்கள் இருமுறை இதழ்) திராவிடக் கூட்டரசு (திங்கள் இருமுறை) குறள் நெறி (திங்கள் இரு முறை), குறள் நெறி (நாளிதழ்) ஆகிய தமிழ் இதழ்களையும், ஆங்கில இதழ்கள் னுசயஎனையை குநனநசயவடி (திங்கள் இருமுறை) முரசயட சூநச (திங்கள் இரு முறை) ஆகிய இதழ்களையும் நடத்திய எழுச்சித் தமிழர் அவர்.

அவர்தம் சிறப்புக் கருதி அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அடைமொழிகள் தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல் காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படை தளபதி, செந் தமிழ்ப் படையின் மானச் செம்மல் என்ற பெருமைமிகு மணிமகுடங்களுக்குச் சொந் தக்காரர்.
அவருடைய தமிழ் -தமிழர் உணர்வால் ஓரிடத்தில் நிரந்தரமாகப் பணியாற்ற முடியாமல் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டவர் - ஆனா லும் உள்ளம் தளராத உருக்கு நெஞ்சுக்குச் சொந் தக்காரர்.

1965 இந்தி எதிர்ப்பின் போது சிறைப் பிடிக்கப்பட் டார். அவர் பற்றி நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் என்ன சொன்னார் தெரி யுமா?

இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந் தவர், இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால் அரசுக்கும், அமைச்சர்களுக் கும் பாதுகாப்பு இராது என்று சொல்லப்பட்டது - இலக்குவனாரின் உணர்வுக் கான வெள்ளிக் கீற்றே!
இலக்குவனார் வழியில் பேராசிரியர் மறைமலை உள் ளிட்ட அவரின் செல்வங்கள் தமிழ்த் தொண்டு சிறப்பாக ஆற்றி வருவது பாராட்டிற் குரியது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வாஸ்து வாங்கிய பலி!


சென்னை - புழல் அருகே, விநாயகபுரம் என்ற இடத்தில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சி, நெஞ்சை உலுக்குகிறது.

வாஸ்துவை நம்பியதால், நான்கு பேர் பலியா னார்கள் என்பதுதான் அந்தத் துயர நிகழ்வாகும்.

அழகு நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மாடியில் அதற்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டது. செப்டம்பர் முதல் தேதி அதிகாலை 4.30 மணியிலிருந்து காலை 6 மணி வரை யாகக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதற்காக பல்லாவரத்திலிருந்து பார்ப்பனப் புரோகிதர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார்.

விளம்பரப் பலகை வைக்க வேண்டும் அல்லவா! அதற்காக திலகராஜ், சினேகா, நவீன் சந்திரன் மற்றும் அர்ச்சகப் பார்ப்பனரான ராமமூர்த்தி ஆகியோர் மேல் மாடிக்குச் சென்றனர். அழகு நிலையத்திற்குப் பெயர், லட்சுமி அழகு நிலையம். விளம்பரப் பலகையை வாஸ்து சாஸ் திரப்படி வைக்குமாறு அர்ச்சகப் பார்ப்பனர் ராம மூர்த்தி சொன்னார். அய்யர் சொன்னதற்கேற்ப, அப்படியும், இப்படியுமாக விளம்பரப் பலகையை மாற்றி, மாற்றி வைத்தனர். கடைசியாக, அவர் சொன்னபடி விளம்பரப் பலகையைத் திருப்பிய போது, மேலே சென்ற உயர்மின் அழுத்த மின்சாரக் கம்பி, விளம்பரப் பலகையின்மீது பட்டதுதான் தாமதம்; விளம்பரப்பலகையில் கை வைத்த அந்த நான்கு பேர்மீதும் (புரோகிதப் பார்ப்பனர் உட்பட) மின்சாரம் பாய்ந்ததால் அதே இடத்தில் பரிதாப கரமான முறையில் மரணம் அடைந்தனர் என்பது, துயரம் மிகுந்த நெஞ்சைப் பிழியும் சம்பவமாகும்.

மூடத்தனமான வாஸ்துவை நம்பியதால், விலை மதிக்கப்பட முடியாத நான்கு மனித உயிர்கள், பரிதாபகரமான முறையில் பறி போனதே!

சமீப காலமாக இந்த வாஸ்துவை விளம்பரத் தால் ஊதிப் பெருக்கச் செய்து விட்டனர். வீடுகளில் இப்போதெல்லாம் கரு நிறமான (னுயசம ஊடிடடிரச) வண்ணங்களைப் பூச ஆரம்பித்துள் ளார்கள் - காரணம் வாஸ்து சாஸ்திரமாம்.

முதலில் ஒரு கேள்விக்கு, வாஸ்து நம்பிக்கைக் காரர்கள் பதில் சொல்லட்டும், பார்க்கலாம். வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் கழிவறை வைக்கலாமா? கழிவறைபற்றி வாஸ்து சாஸ்திரத்தில் எங்காவது சொல்லப்பட்டுள்ளதா?

வாஸ்து என்பது திசையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சூரியச் சுழற் சியைக் கொண்டு திசை நிர்ணயிக்கப்படுகிறது.

சூரியன் நிலையானது. அது மேற்கு நோக்கி நகரவில்லை. ஆனால் காலையில் சூரியனை நோக்கிச் செல்கின்ற ஒரு புள்ளியானது, மாலையில் சூரியனிலிருந்து விலகிச் செல்லுகிறது. அதாவது காலையில் கிழக்கு நோக்கி நகரும் மனிதன் மாலையில் மேற்கு நோக்கி நகருகிறான்.

புரியும்படிச் சொன்னால் காலையில் கிழக்காக இருக்கும் திசை மாலையில் மேற்காக மாறுகிறது, இந்த அடிப்படை புரியாமல் திசையை வைத்து வாஸ்து கரணம் போடுவதை நினைத்தால் வயிறு குலுங்கச் சிரிப்பாய் வருகிறது.

பி.என். ரெட்டி, என்பவர் வாஸ்து என்பது விஞ்ஞானம் என்று நிரூபிக்கபடாதபாடுபட்டார். திருப்பதி கோயிலுக்கு, மற்ற கோயில்களைவிட அதிக வருமானம் வருவதற்குக் காரணம் வாஸ்து முறைப்படி அது கட்டப்பட்டதுதான் என்றெல்லாம் எழுதினார். அவரைப் பார்த்து பிரபல பகுத்தறிவாளர் பிரேமானந்தா வினா ஒன்றை முன் வைத்தார். குஜராத்தில் உள்ள சோமநாதபுரம் கோயிலும் முழுமையாக வாஸ்து அடிப்படையில்தானே கட்டப் பட்டது? மிகப் பெரிய பணக்காரக் கோயிலாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட கோயில் அது. அந்தக் கோயில்மீதுதானே கஜினி முகம்மது படையெடுத்துப் பெரும் பொருளைக் கொள்ளை கொண்டு சென்றான்? என்று பிரேமானந்தா கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே!

யாகம், நல்ல நேரம், லட்சுமி (அழகு நிலையத் தின் பெயர்), புரோகிதம், வாஸ்து இவையெல்லாம் என்னாயிற்று?
புழல் பகுதியில் ஏற்பட்ட உயிர் பலிக்கும் பிற காவது மக்கள் புத்தி கொள் முதல் பெறட்டும்!

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


பெரியார் பெருந்தொண்டரின் கொள்கை உள்ளம்


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம் பலப்பல! நான் ஒரு பச்சை நாத்திகன். 60 ஆண்டு கால விடுதலை வாசகன். 1942இலேயே குடியரசுப் பத்திரிகை வாசிப்பு மூலம் சுயமரியாதைக்கார னானவன். 1944-இல் இருந்து கருஞ்சட்டையணிந்து தி.க.வாகி, ஒருங்கிணைந்த நன்னிலம் தாலுகா தி.க.வில் சொரக்குடி வே. வாசுதேவன், புத்தகரம் பி. செயராமன் போன்றோருடன் இணைந்து, பல பொறுப்புகளை ஏற்று கழகத் தொண்டாற்றியவன். 1955-இல் திருப்புகலூர் சின்னப்பிள்ளை என் கின்ற ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவன்.

1981இல் தங்கள் தலைமையிலும், வே. சற்குணம் (திருமருகல் ஒன்றிய முன்னாள் பெருந் தலைவர்) முன்னிலையிலும், என் மகன் மதிவாணனுக்கு இராகு காலத்தில் திருமணம் செய்வித்தேன். இன்று அவனுடைய மகன்கள் மூவரும் சென்னையிலும், வெளிநாட்டிலும் சிறந்த பொறியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். மகன் மதிவாணனும் CRC இல் பணிபுரிந்து வருகிறான். குடும்பத்தில் எந்தக் குறையும் இல்லை.

நான், சென்ற 6.5.2012-இல் தி.க. சார்பில் திருமருகலில் நடந்த உடற்கொடை வழங்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உடற்கொடை தந்து, தங்கள் கையால் உடற்கொடை சான்றிதழ் பெற்றுள்ளேன். இந் நிகழ்ச்சி 8.5.2012-இல் விடுதலையில் மற்றவர்களோடு என் பெயரும் சேர்ந்து வெளி வந்துள்ளது. தற்போது எனக்கு வயது 85. ஓரளவு உடல் நலத்தோடு நடமாடுகிறேன். எஞ்சிய காலத்தையும் இதே கொள்கை உறுதியோடு வாழ்ந்து முடிப்பேன்.
வாழ்க பெரியார்.

T.R.M. கிருட்டிணன், மேலப்பகுதி, திருப்புகலூர் அஞ்சல், நாகப்பட்டினம் தாலுக்கா.