Search This Blog

23.9.13

கடவுள் வாழ்த்துப் பாடும்போது கூப்பிய கரங்களுடன் நிற்பதோ நிற்காததோ தனி மனிதனின் உரிமை -மும்பை உயர்நீதிமன்றம்


இந்து ஏட்டில்  முதல் பக்கத்தில் ஒரு தகவல் (21.9.2013) மும்பை நகர் அருகில் உள்ள ஒரு ஊர் நாசிக்; சஞ்சய்சால்வ் என்பவர் அவ்வூர்ப் பள்ளியின் ஆசிரியர்.
நாள்தோறும் நடக்கும் கடவுள் வாழ்த்துப் (Prayer) பாடலின்போது கை கூப்பி வணங்க வேண்டும். ஆசிரியர் சஞ்சய் அவ்வாறு செய்வதில்லை. பள்ளி நிரு வாகம் வலியுறுத்தியபோது நான் ஒரு நாத்திகன் - இதில் எல்லாம் எனக்கு நம் பிக்கை கிடையாது என்று கறாராகக் கூறி விட்டார்.

சும்மா இருக்குமா நிருவாகம்? பல தொல்லைகளைக் கொடுத்தது; நியாயமாக அவ ருக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு பதவி உயர்வு களில் கை வைத்தது.

கடமை உணர்வோடு சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர் அவர் - அவரின் தனிக் குறிப்பேடும் அதைத் தான் வெளிப்படுத்துகிறது.

நிருவாகத்தின் நடவடிக் கையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் அந்த ஆசிரியர். நீதிபதி (Abhayoka) நேர்மை யானவர் - சட்டப்படியானவர் போலும்.
நிருவாகத்திற்குச் சாட் டையடி கொடுத்தது மும்பை உயர்நீதிமன்றம். கடவுள் வாழ்த்துப் பாடும்போது கூப்பிய கரங்களுடன் நிற்பதோ நிற்காததோ தனி மனிதனின் உரிமை; அதில் தலையிட நிருவாகத் திற்கு அதிகாரம் கிடையாது. எனவே 2008ஆம் ஆண்டு முதல் அவருக்குச் சேர வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வு களை வழங்க வேண்டும் என்று மிகச் சரியான ஆணை பிறப்பித்து விட்டது நீதிமன்றம்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட லாம் - விடுமுறை நாட்களில் தானே பூஜை செய்கிறார்கள் என்று சொல்லுகின்ற மதுரைக் கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்த்துத் தலை குனிய வேண்டும்.

சேது சமுத்திரத் திட் டத்தை எதிர்த்துத் தொடுக் கப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன், வினா ஒன்றை எழுப்பினார். ராமனுக்காக வக்காலத்து வாங்கி வந்த வழக்குரைஞரைப் பார்த்து; ஒரு வழிபாட்டுத் தலம் 25 கி.மீ. நீளம் இருக்க முடியுமா? என்பது தான் அந்த நறுக் கான கேள்வி.
அதே நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன் அவர்கள்தான் திருவனந்தபுரம் பத்பநாபசாமி கோயில் புதையல் தொடர் பான வழக்கில் சோதிடப் பைத்தியங்களின் காதைப் பிடித்துத் திருகினார்.

பல கருவூல அறை களைக் கொண்ட அந்தக் கோயிலில் பி என்ற அறையைத் திறப்பதா கூடாதா என் பதைக் கண்டறிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சோழிகள் போட்டு குறி பார்க்கும் தேவப்பிரஸ்னம் நடத்தியதாகச் சொன்ன போது, நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன் இவ்வழக்கு நீதிமன்றத்தில் முடிவு செய் யப்படுகிறதா? அல்லது ஜோதிடர்களால் முடிவு செய் யப்படுகிறதா? என்று கேட் டார் (3.9.2011).

இப்படியும் அறிவியல் கண்கொண்டு பார்க்கும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

Tail Piece: கல்வி நிறுவ னங்களில் பிரார்த்தனைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்த சேதி தெரியுமா? 

  ---------------------- மயிலாடன்  அவர்கள் 22-9-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...


திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக : மத்திய அமைச்சருக்கு தொல். திருமாவளவன் எம்.பி. கடிதம்!


சென்னை, செப். 22- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெய ரைச் சூட்ட வேண்டு மென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் கிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதி யுள்ளார்.

அக்கடித விவரம் வரு மாறு:

தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தீண்டாமை மூடநம்பிக்கைக்கு எதி ராக தமிழக மக்களி டையே பகுத்தறிவு எண் ணத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் எழுச்சியுறச் செய்தவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக் கீடு கிடைக்க போராடி யவர். அரசியலில், விடு தலைக்கு முன்னர் காங் கிரஸ் கட்சியில் ஈடுபட்டு பின்னர் பகுத்தறிவு இயக் கமான திராவிடர் கழ கத்தை தோற்றுவித்தவர். தமிழகம் முழுவதும் பய ணம் செய்தவர். தமிழ கத்தில் ஒவ்வொரு கிரா மத்திற்கும் சென்று தீண் டாமை ஒழிப்புக்கு பாடு பட்டதுடன் பெண் களுக்கான கல்வி, சமூக பொருளாதார மேம் பாட்டுக்கு அக்காலத் திலேயே பாடுபட்டவர்.

தந்தை பெரியார் பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததுடன் இந்தியாவில் பல மாநி லங்களிடையே சுற்றுப் பயணம் செய்துள்ளார். பெரும்பாலும் அவர் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்ததுடன் அங்கு பல கல்வி நிறு வனங்களை ஏற்படுத் தினார். அவரது கொள்கை சம்பந்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் நிலை களில் அங்கு தொண் டாற்றினார். அவர் தம் முடைய வாழ்நாள் முழு வதும் நமது நாட்டில் சமூக இணக்கத்திற்காக வும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டார்.

மிகவும் மதிப்பு மிகுந்த தலைவரான தந்தை பெரியாரின் பெயரை திருச்சி பன் னாட்டு விமான நிலை யத்திற்குச் சூட்ட வேண் டும் என பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மத்திய அரசு, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சி தந்தை பெரியார் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார்.

தமிழ் ஓவியா said...


இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டணியினர் வெற்றி வரவேற்கத் தகுந்தது


இலங்கையில் வடக்கு மாகாண மாநில ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளி வந்துவிட்டன.

தமிழ்த் தேசிய கூட்டணியினர்தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது!

யாழ்ப்பாணம் பகுதியில் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தமிழ்த் தேசியக் கூட்டணியினர்.

சிங்கள இராஜபக்சே அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர்! உணர்வுகள் சாவதில்லை - ஒருபோதும்.

இது சிங்கள அரசுக்கு - ராஜபக்சே அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.

முன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட இராஜபக்சே அரசு முயற்சிக்கக்கூடும்.

எனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை

22.9.2013

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்


பிராமணாள் என்று விளம்பரப்படுத் தப்பட்டு உணவு விடுதிகள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது தலைமைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய விவரத்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் தலைமைக் கழகத்துக்கு உடனே தெரிவிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்


சிவகாசி, செப்.22- பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் அதி காரம், ஊராட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில், பிறப்பு, இறப்பு சான்றுகள், அந்தந்த உள் ளாட்சி அமைப்புகள் மூலம், வழங்கப் படுகிறது.

கிராம ஊராட்சிகளில், இச்சான்றிதழ்கள், சுகாதார துறை மூலம் வழங்கப்படுகிறது. இச்சான்றுகள் வழங்கும் அதி காரம், ஊராட் சிக்கு வேண்டும் என, தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி இருந்தனர்.

இதை தொடந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலர் பிறப்பித்த உத்தரவில்,"" கிராம ஊராட்சிகளின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்க, ஏற்கெனவே வருவாய் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

இது முறையாக நடைமுறைபடுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. அரசாணையில் தெரிவித்துள்ள படி, பிறப்பு, இறப்பு, இருப்பிடம் மற்றும் குடியுரிமை சான்று, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் சான்று களை, ஊராட்சி தலைவர்களே வழங் கலாம். இதை நடைமுறைப்படுத்த, வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, ஊராட்சி தலைவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்,''என, குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை முதலாமாண்டு சிறப்பு மலர்! மருதநாயகம் இரவீந்திரன் மாளிகை


17.09.2013 தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, தமிழ் நாடு கடந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடு களில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடி மகிழப் பட்டது.

பெரியார் கொள்கை யின் சாதனைகளை, ஆண் டின் 365 நாளும் கொண் டாடி மகிழ காரணங்கள் நிறைய உள்ளன.

அப்படி ஒருநாள் தான் 23.09.2013. ஆம்! 2012 ஆம் ஆண்டில் (23.09.2012) திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களால் திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பெரியார் மருத்துவமனை தொடங் கப்பட்டது. ஆடம்பரங்கள் ஏது மின்றி எளிய மக்களுக் காக, எளிய முறையில் தொடங்கப்பட்ட இம் மருத்துவமனைக்கு, மக்கள் ஓரிருவர் வந்து சென்றனர்.

மருத்துவ மனையின் நேர்த்தியான வடிவம், மருத்துவர் களின் அன்பு, செவி லியர் களின்கனிவு ஆகியவை மக்களின் 50 விழுக்காட்டு நோயைக் குணப்படுத்த, மீதமிருந்த நோயை மருந்து, மாத்திரைகள் பார்த்துக் கொண்டன.

இதற்கான கட்டணமும் மிகக் குறைவு என்ற போது மக்கள்பெரியாரை நிதானமாக நிமிர்ந்துப் பார்த்துச் சென்றனர். அதற்கு வாய்ப்பாக மருத் துவமனையின் முன்பு, முழுவுருவ வெண்கலச் சிலையில் அய்யா அனை வரையும் வரவேற்கிறார்!

இப்படியான மக்கள் பெரியார் மருத்துவ மனைக் குறித்து தம் வீட்டில் சென்று நெகிழ, வீதியில் சொல்லி மகிழ, இன்றையத் தேதியில் பயன்பட்ட மக்கள் ஓரா யிரம், ஈராயிரம் அல்ல; அது 10 ஆயிரம் கடந்து போயின!

இவ்வாறான தொடர் மக்கள் சேவையுடன் நம் மருத்துவக்குழு நின்றதா? இல்லை!பல்வேறு வாய்ப்புகளை வளர்த் தெடுத்தார்கள். அதன் வழியே 02.12.2012 திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நலம் பெற் றார்கள்.

அன்றைய தினம் மருத்துவமனை வளா கத்தில் செடிகள் நடப் பட்டன. அன்றைய செடி களின் இன்றைய பெயர் மரம்!

அதனைத் தொடர்ந்து 24.12.2012 அன்று பெரி யாரின் நினைவு நாளில், பெண்களுக்கான இலவசப் புற்று நோய் கண்டறியும் முகாமில் 80 மகளிர் பங்கேற்றுப் பயன் பெற்றனர். பெரியார் மருத் துவ மனையைக் கடந்து, திருச்சி மாவட்டம் பிச் சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் 04.01.2013 இல் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 70 பொது மக்களும், 04.08.2013 அன்று பெரி யார் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 226 மக்களும் பயன் பெற் றனர்.

பொது மருத்துவ முகாம் என்றால் ஏதோ வழக்கமான சம்பிரதாய சோதனைகள் கிடையாது. ஒவ்வொரு பயனாளிக்கும் 8 வகையான சோதனை கள் மேற்கொள்ளப்பட் டன. இவற்றை வெளியில் பரிசோதித்தால் ரூபாய் அய்நூறு பாதிக்கும் என்பது உண்மை.

மேலும்புற்று நோயின் அவசியம் கருதி தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22.09.2013 அன்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து மீண்டும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

இவ்வாறாகத் தொடர் மருத்துவச் சேவைகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுத் துண் டறிக்கைகள் எனத் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை ஓராண்டு சகாப்தம் முடிக்கிறது. தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களின் உயர் வழிகாட்டுதலில் அம் மருத்துவமனைத் தொ டர்ந்து வெல்லும்! சாத னைகள் பல மெல்லும்

தமிழ் ஓவியா said...


இவரிடம் இதைக் கண்டேன்!

திருவெறும்பூரில் பெரியார் மருத்துவமனை என்றதுமே இவர் நினைவில் வருவார். அவர் பெயர் இரவீந்திரன்! நேர்மையான தொழிலதிபர். நிழற்படத்தில் அவரைப் பார்த்தால் திருநீறும், குங்குமமும் பளிச் சென்று தெரியும். அசர வைக்கும் ஆன்மீகவாதி.

அளவிட முடியாத மனிதாபிமானி! அதனால்தான் அள்ளிக் கொடுத்தார் ரூ. 12 இலட்சம்! பெரியார் கொள்கை வென்றதா-? என்போருக்கு ஆன்மீகவாதி இரவீந்திரன் அவர்களையே பதிலாகச் சொல்வோம்.

மனதில் இருப்பதைப் பளிச்சென்று படபடக்கப் பேசும் தொழிலதிபர் இரவீந்திரன் அவர்களைச் சந்தித்து, பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவைச் சொன்னோம்.

ஓராண்டு முடிந்துவிட்டதா? நிரம்ப மகிழ்ச்சி! எவ்வளவோ நன்கொடைகள் கொடுத்துவிட்டேன். எதுவும் நிலைக்கவில்லை; பெரியார் மருத்துவமனை மட்டும் என் காலம் சொல்லும். கடவுளை மறுப்பவர்கள் கரடு முரடாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முதல் சந்திப்பிலேயே என் எண்ணங்கள் மாறியது. அவரின் அணுகுமுறையில் கவரப்பட்டு, அன்பால் ஈர்க்கப்பட்டேன்.

பெரியார் பெயரிலான மருத்துவமனைக்கு ரூ.6 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்திருந்தேன். அய்யா வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அக்கணமே முடிவு செய்துவிட்டேன் 6 அல்ல, 12 இலட்சம் கொடுப்பது என்று! நான் அவரின் நல்ல பணிகளுக்குப் பொருளுதவி செய்து, தொடர்ந்து உறுதுணையாய் இருப்பேன்.

உண்மையிலேயே நான் அறிந்த வரை இவர் மிகச்சிறந்த நல்லவர், மனிதப் பண்பாளர். சாதாரண மனிதரையும் நெகிழ வைக்கும் குணம் கொண்டவர். இவரின் சமூக எண்ணங்கள் ஈடேற நானும் ஒரு மனிதராய் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்குப் பணம் செலவழித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

மேலும் நான் என் தொழிலில் நேர்மையோடு செயல்பட்டு, இன்று வரை கடுமையாக உழைத்துப் பொருளீட்டுகிறேன். அப்படியிருந்தும் நான் நன்கொடைகள் வழங்கக் காரணம், பெரியாரிடத்தில் எனக்குப் பிடித்த பல கொள்கைகளும், அய்யா வீரமணி அவர்களின் அன்பும்தான்!

பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியில், அம்மருத்துவமனையின் மாடியில் மேலும் பல கட்டமைப்பு வசதிகளை செய்து தர நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறி முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கூறி முடித்தார்.

தமிழ் ஓவியா said...


வாழ்த்து


திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெரியார் மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணர்களாக திகழும் தொண்டறச்செம்மல் வள்ளல் வீகேயென்.கண்ணப்பன், திரு.ரவீந்திரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொண்டாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தோழர், தோழியர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

தொண்டு உணர்வு என்பது பெரியாரின் மனிதநேய அருட்கொடை. வாழ்க பெரியார்! வளர்க பெரியார் மருத்துவமனை சேவை!!

சென்னை
22.09.2013

கி.வீரமணி
செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவில்!1962ஆம் ஆண்டில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அருமையான - அதிரடித் தீர்ப்பை வழங்கி பாதிரியார் கள் மத்தியில் பேரிடியை இறக்கியது.

எல்லாம் வல்ல இறைவா! நீ இன்றி நாங்கள் இல்லை. உன்னை நம்பித்தான் வாழ் கின்றோம். எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும் அருள்பாலிக்கும்படி இறைஞ் சுகிறோம் என்று அமெரிக் காவில் கல்வி நிறுவனங் களில் இடம் பெற்று வந்த கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்து விட் டது - சட்ட விரோதம் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தீர்ப்புக் கூறி விட்டது.

முன்பு பள்ளிகளில் நீக்ரோக்களைச் சேர்க்கச் செய்தார்கள். இப்பொழுது பள்ளிகளிலிருந்து கடவு ளையே விரட்டி விட்டார் களே! என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஆண்ட் ரூஸ் என்பவர் புலம்பியது தான் மிச்சம்! இது நடந்தது 1962 ஜூன் மாதம்.

1994இல் வந்த மற்றொரு சேதி - தினமணி கதிரில் (8.5.1994) அதன் ஆசிரியர் மாலன் விரிவாகவே கட் டுரை ஒன்றைத் தீட்டியிருந் தார்.

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் கடவுள் வாழ்த் துப் பாட அனுமதி இல்லை. கடவுள் வாழ்த்துப்பாட அனு மதிகோரி புளோரிடா மாநி லத்தில் அண்மையில் 14ஆவது தடவையாக கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட் டது.

....இன்ன கடவுள் என்று பெயரிட்டுப் பிரார்த்தனை செய்யாமல், பொதுவாக பெரிய கடவுள் காக்க வேண்டும் என்றோ எல் லாம் வல்ல பரம்பொருளை வேண்டியோ அல்லது இயற்கையை வழுத்தியோ பிரார்த்தனை வாசகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தில் கேட்டுப் பார்த்தார்கள். நோ, சரி பிரார்த்தனை என்ற வார்த்தை வேண்டாம். துதி, வந்தனம் (In Vocation) என்று வைத்துக் கொள்ள லாம். ம் ஹும், பிரார்த்தனை இருக்கட்டும்; ஆனால் அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்து விடலாம் மறு படியும் நோ. பிரார்த்தனை பற்றி அரசாங்கம் தீர்மானிக்க வேண்டாம். பள்ளிகளை நிர்வகித்து வரும், உள்ளூ ராட்சிகளுக்குப் பொறுப்பான ஸ்கூல் போர்டுகள் தீர்மா னிக்கட்டும். மன்னிக்கவும், அது முடியாது பெரும் பான்மை மாணவர்கள் விரும் பினால் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாமா? யோசிக்கலாம் என்று சட்டப் பேரவை (ஹவுஸ்) சொன்னது மேலவை (செனட்) ஒரே போடாகப் போட்டு விட்டது. தீர்மானம் தோற்றுப் போயிற்று; இப்படி தோற்றுப் போவது பதினான்காவது முறை. புளோரிடா போன்ற மத நம்பிக்கை வேரூன்றிய மாநிலத்தில் சட்டமன்றத் திலேயே இந்த நிலைமை என்று தினமணி கதிர் எழுதியது (8.5.1994).

தீயணைப்புப் படை வீரரின் மகளும், செவிலியரு மான ஜெஸ்லிகா அங்கு லிஸ்ட், 49 ஆண்டு காலமாக கிரேன்ஸ்டன் என்பவரால் மேற்கு உயர்நிலைப் பள்ளி யில் பயன்படுத்தி வந்த இறை வணக்கப் பாடலை நீக்கக் கோரி அமெரிக்காவின் கிரேன்ஸ்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.

கிறிஸ்தவர்கள் நிறைந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை - இங்கு என்னடா என்றால் மும்பையில் கடவுள் வாழ்த்துப் பாடும்போது கை கூப்பாத சஞ்சய் சால்வ் என்ற ஆசிரியருக்குத் தண்டனையாம்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா?


- நமது செய்தியாளர்

வெள்ளக்கோவில் செப்.23- தனியார் பள்ளியில் மதவாதத்தின் மொத்த உருவமான ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா வெள்ளக் கோயிலுக்கு அருகில் உள்ள பாப்பம்பாளையத்தில் கொங்கு வேளாளர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் உள்ளது. இங்கு மகாத்மா காந்தியை கொலை செய்வதற்கு காரணமாயிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி வகுப்புகள் 22.9.2013 முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு நடைபெறுவதாக உள்ளது.

காந்தி வழி நடவுங்கள் என்று பாடம் போதிக்கும் கல்வி நிறுவனங்களில், காந்தியைக் கொன்ற இயக் கத்தின் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது கல்வி சாலை களை மத வாதத்திற்குப் பயன்படுத்தும் செயலாகும்.

பள்ளியின் முதல்வரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ஏதோ கேம்ப் நடத்த வேண்டும் என்று இடம் கேட்டார்கள். கொடுத்தோம் என்று விபரீதத்தை உணராதவர்கள் போல் நடிக்கிறார்கள்.

காவல் துறையும் இன்றைய தேதியில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கமல்ல என்ற வகையிலும் அரங்கிற்குள்ளே தானே பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள் என்று அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நடப்பது என்ன?

நாம் அனைவரும் ஹிந்துக்கள்; நம்மிடையே ஹிந்துக்கள் என்ற தேசபக்தி வளர வேண்டும்; ஹிந்தியாவில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்; ஹிந்துத்துவம் எங்கும் பரவ வேண்டும்.

இதன் மூலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ஒருவர் கரசேவகர்களாக பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளே இப்பயிற்சியில் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இதுதானா?


திருச்சானூர் அருகே பெருமாள் கோவில் இடிந்தது

திருப்பதி, செப்.23- திருச்சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரு மாள் கோவில் இடிந்து விழுந்தது. ஆந்திர மாநிலம் சித் தூர் மாவட்டம், திருச் சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீனிவாசபெரு மாள் கோவில் உள்ளது. அந்த கோவிலை நாடா ளுமன்ற முன்னாள் சபா நாயகர் அனந்தசயன அய்யங்காரின் முன் னோர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தார் சாமிக்கு பூஜை செய்தும், பரா மரித்தும் வந்தனராம்.

கோவிலை பரா மரிக்க முடியாத நிலை யில், அவரின் குடும்பத் தார் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திரு மலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர். கோவில் பூஜை மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தா னமே ஏற்று நடத்தி வந்தது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக திருச்சானூர் பகுதியில் பெய்த மழையால் கோவிலின் மேற்கூரை நனைந்து விரிசல் ஏற் பட்டது. அதேபோல், பக்கவாட்டு சுவர்களும் நனைந்து வலுவிழந்தன. நேற்று முன்தினம் இரவு மூலவர் சன்னதி அருகில் உள்ள ஆழ்வார் மண்ட பத்தின் மேற்கூரை மற் றும் பக்கவாட்டு சுவர் கள் முற்றிலும் இடிந்து விழுந்தன.

அதில் ஆழ்வார், தாயார் சிலைகள் சேதம் அடைந்தன. சீனிவாச பெருமாள் சிலை சேத மின்றி தப்பியது. இரவு நேரத்தில் நடந்த சம்ப வத்தால் யாருக்கும் எந் தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், தகவலை கேள்விப்பட்ட பக்தர்களும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனராம்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளின் போராட்டம்


மாற்றுத் திறனாளிகள் - பார்வையற்றோரின் போராட்டம் கடந்த ஒரு வார காலமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு என்பதில் தமிழ்நாடு அரசு மிகப் பெரிய அளவுக்கு சமூக நீதிக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்துவருவது அம்பலமாகி விட்டது.

இந்தியாவுக்கே சமூக நீதிப்பிரச்சினையில் வழிகாட்டி வந்த தமிழ்நாடு இந்த முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - அந்த நற்பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டது.

தாழ்த்தப்பட்டவராயினும், பிற்படுத்தப்பட்டவரா யினும், மிகவும் பிற்படுத்தப்பட்டவராயினும் மாற்றுத் திறனாளிகள் ஆயினும் அனைவருக்கும் ஒரே அளவான தகுதி மதிப்பெண் என்பது எந்த வகையில் நியாயம்? இதற்கான நியாயத்தை இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் யாராலும் நிமிர்ந்து நின்று பேச இயலாத பரிதாப நிலை!

மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேர தனித் தனியே தகுதி மதிப்பெண்கள் இருக்கும்போது ஆசிரியர் பணிக்கு மட்டும் ஒரே அளவுகோல் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

அதுவும் பிற மாநிலங்களில் தனித்தனி மதிப்பெண்களை வரையறை செய்திருக்கிறபோது, தமிழ்நாட்டில் மட்டும் பிடிவாதமான போக்கில் ஒரே அளவு மதிப்பெண் என்பதற்கான பின்னணி என்ன?

மாற்றுத் திறனாளிகள் எனில் தனிப் பார்வை இருக்க வேண்டாமா?

திறந்த பார்வையில் மனிதாபிமான பார்வையில் பார்வையற்றோரை பார்ப்பதற்குப் பதிலாக கண் மூடித்தனமாகப் பார்க்க ஆசைப்படலாமா?

முதல் அமைச்சரை சந்தித்துத் தங்கள் குறை பாடுகளைக் கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். பார்வையற்றவர்களைப் பார்ப்பதற்கு ஒரு ஜனநாயக நாட்டில் முதல் அமைச்சர் தயங்குவது ஏன்?

சாலை மறியலில் பார்வையற்றோர் ஈடுபடு

வதும் அவர்களைக் காவல்துறையினர் முரட்டுத் தனமாக இழுத்துச் செல்லுவதும், தூக்கிச் செல்லுவதும் கண்ணுள்ளவர்களைக் கண் கலங்க வைக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் என்று அவர்களுக்கு அப்பொழுது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியதால் பார்வையற்றோர் பிரச்சினையில்கூட அரசியல் பார்வையுடன் பார்க்கிறதா தமிழ்நாடு அரசு? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளி கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த இடத் திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டு ஆவன செய்தவர் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் ஆவார்.

அந்த ஆட்சியையும், இந்த ஆட்சியையும் பொது மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்!

ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் காட்சிக்கு எளியவராக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம் என்றார் திருவள்ளுவர்.

மாற்றுத் திறனாளிகள் கோயிலுக்குச் செல்லு வதில் கூட பல பிரச்சினைகளை உருவாக்கியது இந்த ஆட்சி. தானாக நடமாட முடியாத நிலையில் சில துணை உபகரணங்களையும், பொருள் களையும் பயன்படுத்திதான் அவர்கள் எங்கும் செல்ல முடியும். அந்த உபகரணங்கள் தோலால் ஆனதாக இருப்பதால் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.

சிவபெருமானே புலித் தோலைத்தான் இடுப்பில் அணிந்து கொண்டு இருப்பதாக புராணங்களே கூறுவதுபற்றி இந்த அறநிலையத் துறைக்குத் தெரியாதா?

மக்கள்ஆட்சி மனப்பான்மையும் மனிதநேய மனப்பான்மையும் ஓர் ஆட்சிக்கு அவசியம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஓவியா said...


எத்தனை எளிய மனிதருக்கு - இத்தனை பெரிய மனமிருக்கு..!


செப்.19ஆம் தேதியன்று, தஞ்சை வல்லத்திலிருக்கும் பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத் தில், தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை புதுமை இலக்கிய விழா வாகக் கொண்டாடினர்.

முதுபெரும் பேராசிரியரும் ஆய்வாளருமான திரு. தொ. பரமசிவம் அவர்கள் (நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பல ஆண்டு கள் பணியாற்றி, ஓய்வு பெற்ற நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வாளர் - இலக்கியப் படைப்பாளி அவர்) அவருக்கு பகுத்தறிவுப் பேராசிரியர் சி. வெள்ளையன் இலக்கிய விருது அளித்தலும், இணைந்து நடத்தப் பெற்றது.

அதனைக் காணவும், பல்கலைக் கழக வளர்ச்சி பற்றி நேரில் அறிய விரும்பியும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும், அவருடன் மதுரைத் தோழர்கள் பொறியாளர் மனோகரன், அழகர்சாமி, எடிசன் ராசா, மதுரை செல்வம் முதலியோரும் வந்திருந்தனர்!

காலை முதலே, பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள், திரு. ராமசாமி அவர்களும் அவரது குழுவினரும்.

அதற்குமுன் 1980இல் வல்லத்தில் தொடங்கப் பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றிப் பார்த்து விட்டுத்தான் அங்கு சென்றனர்!

நிகழ்ச்சியில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் ஒரு சிறு துண்டுச் சீட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்கள், பெரியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ரூபாய் முப்பது லட்சத்தை அளிக்க விரும்புகிறார் என்று எழுதி அனுப்பியிருந்தது எங்களை இன்ப அதிர்ச்சி யில் உறைய வைத்தது!

எவ்வளவு எளிமையான வாழ்வு வாழும் அடக்கமானவர் என்பதை மதுரையில் அவர் உடல்நலம் விசா ரிக்கச் சென்றபோது நேரில் கண்டு வியந்தேன்.

50 ஆண்டுகளுக்கு மேல் அவர் தொடர்ந்து விடுதலையின் வாசக நேயர்!

மற்றபடி எங்கும் எதிலும், தன்னை விளம்பரப்படுத்தவோ, அறிமுகப்படுத் திக் கொள்ளவோ விரும்பாத, விளம்பர வெளிச்சம் கண்டு கூச்சப்படுபவர்!

குருவி சேர்ப்பதைப் போல, சிக்கன வாழ்வு, எளிமை வாழ்வின் மூலம், சேமித்து வைத்த செல்வம் பொதுப் பணிக்கே பயன்பட வேண்டும் என்ற திடமான கொள்கை முடிவுடன், இதையும் இதற்கு முன் வழங்கிய பல நன்கொடைகளையும் அளித் தோடு தன்னால் சேமித்த செல்வத்தை, நிரந்தரப் பாதுகாப்புக்கான சரியான வழியைக் கண்டறிந்து, பொதுத் தொண்டு, கல்வித் தொண்டுக்கே தனது, அச்செல்வமும் அதன் பயனும் என்றும் அழியாததாக ஆக்கி மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்!

அவர் ஒன்றும் பெரிய கோடீசுவரர் அல்லர்; அப்படிப்பட்டவருக்கு எப்படிப்பட்ட மனம் பார்த் தீர்களா?

தந்தை பெரியார், முடிச்சுப் போட்டு வைத்த செல்வம் முழுமையும் மக்களுக்கே - பொது அறக்கட்டளை மூலம் ஒப்படைத்து ஒல்காப் புகழின் உச்சியில் இருக்கிறாரே! அதுபோன்றே இதுவும்!

இதைவிட பெரும் நன்கொடைகளை நாட்டில் அளிப்பவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அந்த நன்கொடையாளர் பயன் கருதி - மோட்சம், விளம்பரம், புகழ், பெருமை, அரசின் லாபம் கருதியே செய்வர்!

இதை நமது தமிழ் இலக்கியம் படைத்தோர், பல ஆண்டுகளுக்குமுன்பே அறவிலை வணிகர் என்ற பொருத்தமான சொற்கள் மூலம் சுட்டினர்! வள்ளல் ஆய். அண்டிரன் போன்று இவரும் அறவிலை வணிகன் அல்லர்.

கொடுத்தற்காகவே நன்றி தெரிவித்தல் பாராட்டும்போது அவர் படும் கூச்சம் - உண்மையான கூச்சம் - அவர் தந்த நன்கொடையின் மதிப்பை பல மடங்குப் பெருக்கி கூட்டிக் காட்டுகிறது!

அவருக்கு ஒரே இன்பம் - இதிலிருந்து தான் பூத்துக் குலுங்குகிறது!
அது எல்லோருக்கும் வரும் பண்பல்ல! மிக அரிது! மிக அரிது!!

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)

இதன் பொருள்: தாம் திரட்டி வைத்திருக்கும் பெரும் பொருளை பிறர்க்கு எந்த வகையிலும் கொடுக்காமல், பதுக்கி வைத்திருந்து, பின்னர் எக்காரணம் பற்றியோ இழந்து விடும் வன்கண்மை உடையவர்கள், பிறர்க்குக் கொடுத்து, அதனால் உண்டாகக் கூடிய மகிழ்ச்சியினால், தாம் அடையும் இன்பத்தை வாழ்நாளில் ஒருபோதும் கண்டறிந் திருக்க மாட்டார்கள்; அடடா, ஈத்துவக்கும் இன்பத்தின் சிறப்புதான் என்னே!
அது மட்டுமா?

கொடுப்பவர் தான் உயருகிறார்! இப்படி உயர்ந்தால் மகிழ்ச்சி பெருகுகிறது, மகிழ்ச்சி பெருகினால் வாழ்வும் பெருகுகிறது.

எனவே, எளியவர்களும் இராமசாமிகளின் (தந்தை பெரியார் இராமசாமி முதல் மதுரை இராம சாமி வரை) உள்ளத்தைப் பார்த்து வாழ்க்கையைப் பெருக்குங்கள்!

பொதுத்தொண்டறம் போல மகிழ்ச்சியின் ஊற்று எதுவுமே இல்லை.

கொடுக்கப் பணம் தேடாதீர்கள்!

கொடுக்க மனம் தேடுங்கள்!!

அது, முதலில் உங்களுக்காக - பிறர்க்காக அல்ல; என்பதை மனதில் பதிய வைத்துக் கொள் ளுங்கள்.- வாழ்வியல் சிந்தனைகள்

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


திருப்பத்தூரில் திராவிடர் திருவிழா


மண் குலுங்கிட , மனங்கள் குலுங்கிட, கொள்கை மணம் பரப்பி,
திருப்பம் தந்திட்ட திருப்பத்தூர் !
இல்லை! இல்லை! திராவிடத்தில் சாதி எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மத எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மொழி எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில், அரசியல் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
ஆண் -பெண் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
பூகோள எல்லை என
எல்லை இல்லா அய்யாவின் கொள்கை,
எங்கெங்கும் ஒலித்திட்ட திருப்பத்தூர்!
யாராலும் முடியாதது,
மகளிரால் மட்டுமே முடியும்-என,
மனம் திறந்து தமிழர் தலைவர்,
மாண்புடன் மேடையில் பாராட்டும் வேளை,
மகளிர் தம் உள்ளங்கள் எங்கும்,
மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திட்ட சோலை !
மனிதம் பிறந்த நாளாம் ,
மாண்புறு செப்டம்பர் பதினேழிலே,
புரட்சிப் பெண்கள் பூபாளம் பாடிய,
புதுமை நிகழ்த்திட்ட திருப்பத்தூர் !
உலக எல்லையில் எங்கிருந்த போதும்,
கொள்கைக் காதலியை மறக்க முடியுமா? என
வழி நடத்திடும் வல்லமை வாய்ந்த
இயக்கத்தின் எழிலாம்,
அவர்தான் மாவட்டத் தலைவராம் !
விவேகமிக்க விஜி இளங்கோவன் !
ஆற்றல் மிக்க அகிலாவின் பின்னே,
இந்திராகாந்தி,கவிதா போல்,
ஆயிரம் ஆயிரம் மகளிர் கூட்டம்,
அற்புதமாய் அணி வகுத்திட,
மகளிர் நாடாய் மாறிய திருப்பத்தூர் !
மயிர் வளர்க்கவும் உரிமை அற்ற,
பார்ப்பன விதவைகள் கூட,
விழுகின்ற கொள்கை மழையில்,
விளைகின்ற உரிமை பயிர்களாய்,
விழித்துக் கொண்டதும்,விடுதலை பெற்றதும்,
அய்யாவின் கொள்கையாலே ! என முழங்கிய தமிழர் தலைவர் !
அவர், எழில் அரசரைப் பாராட்டினால்,
எல்லோரையும் பாராட்டியதாய்,
அகிலாவை பாராட்டினால்,
அனைவரையும் பாராட்டியதாய்,
ஏற்றுக் கொள்ளும் இயக்கச் சுற்றம் !
திருப்பத்தூர் ! ஓர் கொள்கை முற்றம் !

இதுவே திருப்பத்தூர் வரலாறு ! இதனை

போற்றுவோம் ! பின் பற்றுவோம் !

தமிழ் ஓவியா said...


தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்


12.9.2013 அன்று கொல்கத்தாவில் தந்தை பெரியாரின் 135ஆவது ஆண்டு விழாவில் தாங்கள் பேசும் பொழுது இந்த விழாவிலே எனக்கு தகுந்த மரியாதையினை அளித்தீர்கள். சிறப்பான செய்திகளை சொன்னீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் பெரியாரின் எளிமையான தொண்டன் அவரோடு என்னை ஒப்பிடுவது சரியல்ல.

ஒரு புத்தர், ஒரு பெரியார், ஒரு அம்பேத்கர்தான். அவர்கள் மாதிரி நாம் குளோனிங் செய்திட இயலாது. ஆனால் அவருடைய சிந்தனைகளை, கருத்துக்களை நாடெங்கும் பரப்பிட நாம் பணியாற்றுகிறோம், என தாங்கள் உரையாற்றியதை விடுதலையில் படித்தேன்.

இன்றைய போலித்தனமான தலைவர்களைப் போல இல்லாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், திறந்த மனதுடன், மனப்பூர்வமாக தாங்கள் வெளியிட்ட இந்த கருத்துக்கள் நமது இயக்க இளைஞர்களின் இதயத்தை தொட வேண்டும் என்பது எனது விருப்பம். கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, தாங்கள் வெளிப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களை கொஞ்சம் தடிப்பான (Bold Type) எழுத்துக்களில் வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராட்டுகள் தெரிவிக்க தகுதியும், வயதும் எனக்கு உள்ளது. தாங்கள் தொடர்ந்து செயல்பட எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கபடி. ச. பழநியப்பன், மாவட்ட செயலாளர், நாமக்கல் மாவட்ட தொ.மு.ச.

தமிழ் ஓவியா said...


உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் ''பாட்டில்கள்''


குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.

இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.

எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.

எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப் பொரு ளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,

எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ் டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.

இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கெனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். தமிழக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.

உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்க ளையும் பாதிக்கும்'' என்றார்.

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...பிரதமரின் வேண்டுகோள்வெற்றி பெறும் - எப்போது? வகுப்புக் கலவரம் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. தற்போதைய நிலையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். நாட்டில் கலவரத்தைத் தூண்டும் எந்த அமைப்பும், கட்சியும் அதற்குப் பொறுப்பாகும்.

வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுபவர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த சிறிய அளவிலான மோதல் பெருங் கலவரமாகி விட்டது. மாநிலங்களில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. இதனைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுவதைத் தடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார் (23.9.2013). பிரதமர் தமக்குள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு பிரதமர் இப்படித்தான் கூற வேண்டும்; அதனைத்தான் கூறவும் செய்துள்ளார்.

காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு இதில் கூடுதல் கடமையும், பொறுப்பும் உள்ளது. அது நுட்பமாகச் செயல்பட்டு இருந்தால் ஆரம்ப நிலையிலேயே ஜாதி மதக் கலவரங்களை முளையிலேயே கெல்லி எறிந்திட முடியும்.

உளவுத் துறை இதில் சரியாகச் செயல்பட வில்லையென்றால், அதனைச் சரிப்படுத்த தேவை யான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசியலில் போதிய தத்துவார்த் தங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் இல்லாத கையறு நிலையில் உள்ளவர்கள், சுலபமாகத் தலைமைப் பீடத்தைப் பிடிப்பதற்கான உபாயம் ஜாதி மதக் கட்சிகளை சடுதியில் தொடங்கி விடுவதுதான்; வெறியூட்டுதல் மூலமாகத்தான் அவர்களை, தம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது யதார்த்தம்!

ஜாதி, மதத்தின் பெயர்களில் அமைப்புகள் தொடங்கப்படுவதை எப்படி தடுக்கலாம் என்று அரசுகள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகு அமைப்புகள் பாரம்பரியங்களை மிகப் பெரும் அளவில் பெருமையாகத் தொடை தட்டி, தோள் தட்டி ஆர்ப்பரிப்பு செய்வதைப் பார்த்து இளைஞர்கள் உணர்ச்சி வயப்பட்டு விடுகிறார்கள்.

இவர்களின் வீரம் என்பதே இன்னொரு அமைப்பின் மீது தசை வலிமையைக் காட்டுவது என்றாகி விட்டது. இது ஜாதியைப் பொறுத்த நிலவரம்.

மதவாதிகளே திட்டமிட்டுக் கலவரங்களை உண்டாக்கக் கூடியவர்கள், அதன் மூலம் குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர்கள், தாங்கள்தான் என்று மார்புப் புடைத்துக் காட்டி அப்பாவி மக்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள்.

ஊர் இரண்டு பட்டால் தங்களுக்குக் கொண் டாட்டம் என்ற மனப்பான்மையில் சங்பரிவார்கள் திட்டமிட்டு கலவர வேலையில் ஈடுபடுவதை தங்களின் அணுகுமுறையாகப் பின்பற்றுகிறார்கள். இது காவல்துறைக்குக் கண்டிப்பாகத் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு மதவெறித்தனம் கொம்பு முளைத்துத் தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மிகப் பெரிய மனிதர்களாக, அரசியல் கட்சித் தலைவர்களாக, ஆட்சி அதிகாரத்தின் லகானைக் கையில் வைத்திருப்பவர் களாக விளங்கினார்கள் என்பது வெட்கக் கேடு!

21 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை - இன்னும் இது தொடர்பான வழக்கில் தீர்ப்புப் பெற எத்தனை ஆண்டுகள் காத் துக் கொண்டு இருக்க வேண்டுமோ, யாமறியோம்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகும் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக் காயாகத் தானி ருக்கிறது.

குற்றவாளிகள் கால தாமதமின்றித் தண்டிக்கப் படுவார்கள் என்ற நிலை உறுதிப்பட்டால்தான் இதுபோன்ற கலவரங்களின் திமிர் அடங்கும் - ஒடுங்கும்!

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், தண்டிப்ப திலும் அரசியல் உள்நோக்கம் இருக்கும் மட்டும் பிரதமரின் வேண்டுகோள் வெற்றி அடையப் போவ தில்லை. இது கல்லின் மேல் எழுத்தாகும்.

தமிழ் ஓவியா said...


கோயில் கருவறையில் தீண்டாமையா? சென்னையில் நடைபெற்ற மாநாடுசென்னை, செப்.24- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு கொண்டு வரப்பட்ட அரசாணையையும், சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட் டுள்ள வழக்கை விரைந்து முடித்து நியமன நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. கருவறையில் தமிழ் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சிறப்பு மாநாடு ஒன்று சென்னையில் ஞாயி றன்று (செப். 22) நடைபெற்றது.

தீண்டாமை வன்கொடுமை!

தமிழ் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட் டது. நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்ட பிறகும் கோயில் கருவறைகளில் குறிப்பிட்ட பிரிவினரை தவிர வேறு சமூகத்தினர் யாரும் நுழையக் கூடாது என்பது வெளிப்படையான தீண்டாமை வன்கொடுமையாகும் என்று மாநாடு சுட்டிக்காட்டியது.

அரசாணையையும் சட்டத் திருத் தத்தையும் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழுடன் காத் திருக்கும் பலரை பணியில் அமர்த் தாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றமளிக்கும் செயல். எனவே, வழக்கை அரசு விரைந்து முடித்து, அர்ச்சகராக தகுதி பெற்று காத்திருப் போரை வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய வைத்து, பதிவு மூப்பு அடிப்படையில் பாகு பாடு இல்லாமல் அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக நியமிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநாடு கேட்டுக்கொண்டது.

கோயில் கருவறையில் தமிழ் ஒலிப்பது சமத்துவ சமூகத்தை கட்ட மைக்க வேண்டும் என்ற அரசமை ப்பு சாசன நோக்கத்தை நிறைவேற்றும் நடவடிக்கையாகும் என்றும் மாநாடு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் நீதிபதி கே.சந் துரு நிறைவுரையாற்றினார்.

பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள்

தமிழ்வழி ஆலய நிகழ்வுகளுக்காக போராடிவரும் மு.பெ. சத்திய வேல் முருகனார், முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், முனைவர். பொன்ன வைக்கோ ஆகியோர் தலைமையில் நடந்த மூன்று அமர்வுகளில் உரை யாற்றியோர் தீர்மானங்களை வழி மொழிந்தனர். காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாநில கவுரவத் தலைவர் பேரா சிரியர் அருணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் சி.மகேந்திரன், தமிழ் தேசிய பொது வுடமை கட்சியின் தலைவர் பெ.மணி யரசன், வழக்கறிஞர்கள் சிகரம் ச.செந்தில்நாதன், க.இராஜசேகரன், வீதி நாடக கலைஞர் பிரளயன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கவிஞர் இரா. தெ. முத்து , பத்திரிகை யாளர் அ. குமரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

ஊடகவியலாளர் திரு. வீர பாண்டி யன், தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக தமிழ் மறுமலர்ச்சி சங்க தலைவர் சு.கிருபானந்தசாமி வரவேற் றார். கி.கோவிந்தராசன் நன்றி கூறி னார். கோரிக்கைகளை மக்களிடையே விரிவாக எடுத்து செல்ல முடிவு செய் யப்பட்டது.

தமிழ் ஓவியா said...


எது நாத்திகம்?


கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்ன்னு சொன்ன பொழுது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அம்மாவுக்கு என் மேல் கோபம். எல்லோருடைய தோட் டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்டில் காய்கறி விலையாவது குறையுமே என்று நான் சொன் னதும், என்னைத் திட்டினார்கள். இயேசுவே என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சுடுன்னு பிரார்த்தனை செய்தாங்க.

சின்ன வயசில் இருந்து இந்தச் சண்டை என் வீட்டில் நடந்துகொண்டுதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்படவேண்டியவை தான். அது எந்த மதத்தில் இருந்தால் என்ன?

விகடன் மேடையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆனந்தவிகடன், 25.9.2013

தகவல்: சிவகாசி மணியம்

கேள்விக்கு விடையை மிகச் சரியாகவே நடிகர் பிர காஷ்ராஜ் கூறியுள்ளார்.

மூட நம்பிக்கை கண்டிப் பாக விமர்சிக்கப்படவேண்டி யதுதான். அது எந்த மதத்தில் இருந்தாலென்ன என்ற முத்தி ரையடியுடன் பதிலடி கொடுத் துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

வெறும் வார்த்தையால் அல்ல- தன் தாயார் கிறிஸ்தவர் என்ற முறையில் தமது குடும் பத்திலிருந்தே தொடங்கி கேள்வியின் முனையை மழுங் கடித்துள்ளார்.

இந்து மத அபிமானி களுக்கு, இத்தகைய கேள்வி யைத் தவிர, வேறு கேட்கவே தெரியாதுபோலும்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஊசி போன பண்டம் இது.

இங்கர்சால் நாத்திகம் பேசினார் என்றால், அது பெரும்பாலும் கிறித்துவ மதத்தை விமர்சித்தே இருக்கும். ஏனெனில், அவர் சார்ந்த - அவரை சுற்றிப் பின்னிக் கிடக் கும் மதத்தைப்பற்றிதான், விமர்சனங்கள் இருக்கும் - இருக்க முடியும்.

ஜீன் மஸ்லியரின் மரண சாசனம், கிறித்துவ மதத்தை மய்யப்படுத்தி, இருந்ததில் என்ன ஆச்சரியம்?

தஸ்லிமா நஸ்ரீனின் நாத் திக வாதம், முஸ்லிம் மதத்தை முன்னிலைப்படுத்தியே, இருந்த தும் சரியானதே!

அதேபோல்தான் இந்தியா வில் நாத்திகவாதம் - மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் இந்து மதத்தின் ஆணிவேரை நோக்கியே!

இதனைக்கூடப் புரிந்து கொள்ள இயலாத அடிப்படை நுனிப் பகுத்தறிவும் இல்லாத வர்களாக வினா தொடுப்பது கண்டு பரிகசிக்கத்தான் வேண் டியுள்ளது.
இந்து மத வினா தொடுப் பாளர்களைப் பார்த்து இன் னொரு கூர்மையான - நுட்பமான கேள்வி உண்டு.

இந்து மதத்தில் நாத் திகத்திற்கு இடம் உண்டா, இல்லையா? என்பதுதான் அந்த நறுக்கான கேள்வி. இந்து மதத்தைப்பற்றித் தெரிந்து கொண்டு இருந்தால், தேவை யற்ற கேள்வியைக் கேட்டு இருக்கவே மாட்டார்கள்.

இராமாயணத்தில்கூட தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் உண்டு என்பது தெரியுமா?

சார்வாகம் (உலகாய்தம்) அய்ந்திரம், சாங்கியம், ஆசீ வகம், பிரகஸ்பதி என்பவை எல்லாம் இந்து மதத்தில் பேசப்படவில்லையா?

பவுத்தமும், சமணமும்கூட இந்து மதப் பார்வையில் நாத்திகம்தானே?

இவற்றைத் தெரிந்து கொண்டிருந்தால் நாத்திகர்மீது நறநற என்று பற்களைக் கடிக்கமாட்டார்களே! - மயிலாடன் 25-9-2013

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றி கருநாடகமும் கொண்டு வருகிறது


பெங்களூரு, செப். 25- கருநாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந் திரா அளித்த பேட்டி வருமாறு:

மகாராஷ்டிரா மாநி லத்தில் அமலில் உள்ள மூடநம்பிக்கைக ளுக்கு எதிரான சட் டத்தைப் போல் ஒரு சட் டத்தை கருநாடகாவி லும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. அறியாமை மற்றும் கஷ் டத்தில் இருப்பவர் களைக் குறிவைத்து மாய மந்திரங்கள் பெயரில் ஏமாற்று வேலை நடக் கிறது.

மந்திரவாதிகள் ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். அதுபோன்ற பல சம்ப வங்கள் கருநாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள் ளன. சில சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப் பட்டுள்ளன. இது போன்ற மாய, மந்திரங் களுக்கு கடிவாளம் போட புதிய சட்டம் அவசியப்படுகிறது.

மகாராஷ்டிராவிலுள்ள சட்டத்தைவிடவும் வலு வான சட்டமாக இது இருக்கும். தேசிய சட்டப் பள்ளியின் சட்ட நிபுணர்களிடமும், கருநா டக சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்களிட மும் கருத்து கேட்டு, விரைவிலேயே புதிய சட்டம் கொண்டு வரப் படும்.
நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, கொடூர நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு, ஒழிப்பு சட்டம் 2013 என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய் யப்படும். பெங்களூரிலுள்ள டாலர்ஸ் காலனி வீட் டில் குடியேறினால் உயி ருக்கே ஆபத்து என்று ஒரு ஜோதிடர் என்னி டம் கூறினார். இதைக் கேட்ட எனது மனைவி அச்சமடைந்து, அந்த வீட்டுக்கு குடிபோக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நான் அதை பொருட் படுத்தவில்லை. இப் போது, அந்த ஜோதிடர் எங்குள்ளார் என்பதே தெரியவில்லை.

இந்த புதிய சட்டம், எந்த ஒரு தொழிலையும் குறிவைத்து கொண்டு வரப்படாது. மூட நம் பிக்கைகளைப் பரப்பு வது யாராக இருந்தா லும், அது எந்த வகை யில் பரப்பப்பட்டாலும் நட வடிக்கை எடுப்பது தான் இதன் நோக்கம். மூட நம்பிக்கைகளை பரப்புவோருக்கு தொலைக்காட்சிகள் வாய்ப்பளித்தால், அவற் றின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். எது மூட நம்பிக்கை, எது நம் பிக்கை என்பது குறித்த வரையறை, அரசு கொண்டு வரும் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டிருக் கும் என்றார்.

தமிழ் ஓவியா said...


இல்லத்தரசிகளுக்கு இதோ ஒரு நற்செய்தி!


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர் கள் - ஒருவரிடம், ஒரு பொது நிகழ்ச்சியில், கேள்வி கேட்கும்பொழுது (அய்.நா. பொது அசெம்பளி) அந்த நபரைப் பார்த்து, நீங்கள் புகை பிடிப்பதை விட்டுவிட்டீர் களா?என்று கேட்கிறார்.

அதற்கு அவர் சற்று தடுமாற்றத்துடன் சிற்சில வேளைகளில் விட்டு விட்டிருப்பேன் என்று கூறுகிறார்.

ஆனால், ஒபாமா அவர்கள், நான் கடந்த 6 ஆண்டுகளாக புகை பிடிப்பதை அறவே விட்டுவிட்டேன். காரணம், என் வாழ் விணையர் திருமதி மிஷேல்தான். அவரைக் கண்டு நான் மிகவும் பயப்படுவேன்; மாற்றாக நிகோட்டைன் கம் (Niccotine Gum) என்பதை, எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தி வருகிறேன்.

இதனால் (புகைப் பிடிப்பதை நிறுத்திய தால்) கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைந்து, பார்டரில் நின்றுள்ளது எனக் கூறினார்.

இவரும், இவரது வாழ்விணையரும் உடல்நலப் பாதுகாப்பில் மிகவும் குறியாக இருப்பவர்களாம்; இதுவரை வெள்ளை மாளிகையில் குடியேறிய அமெரிக்க அதிபர்கள் பலர்; அமெரிக்க அதிபர் பொறுப்பு என்பது அவ்வளவு லேசானதல்ல! மிகவும் தொல்லைகள் நிரம்பிய உலகப் பார்வை விழும் பதவி அல்லவா!

மிகவும் மன உளைச்சல் அதிகம் ஏற்படுத்தும் பதவி. எனவேதான் அவர்களில் பலரும் நடைப்பயிற்சி, மெது ஓட்டப் பயிற்சி (Jogging), கால்ஃப் (Golf) மற்றும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து இவைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை (Stress) போக்கிக் கொள்ள முயலு கின்றனர்!

பலர் புகைப் பிடிப்பதற்கே மூல காரணம் இந்த மன அழுத்தம்தானே!

புகையிலை எந்த ரூபத்தில் நம் உடலுக் குள் - நுரையீரல், இருதயத்துக்குள் சென் றாலும் நம் ஆயுளை வெகுவேகமாகக் குறைக்கும் - அதிக ஆற்றல் அதற்கு உண்டே!

எனவே, இந்த ஆபத்திலிருந்து (அந்தப் பழக்கம் உடையவர்கள்) மீண்டாக வேண்டும்; ஒவ்வொரு தடவை புகை பிடிப்பதும், ஒவ்வொரு தடவை தற்கொலை மாத்திரைகளை உட்கொள்வதற்குச் சமமாகும்!

உங்களில் எவருக்காவது அந்தத் தீய பழக்கம் இருந்தால், உடனே நிறுத்துங்கள்! அது பழக்கமாகி, வழக்கமாகிவிட்டது, புகை பிடிக்காவிட்டால், சுறுசுறுப்பு அல்லது ஒரு உணர்வு பீறிட்டு வருவதிலிருந்து எப்படி நிறுத்துவது என்று கேட்காதீர்கள்!

மனதில் உறுதி இருந்தால், முடியாதது எதுவும் இல்லையே!

தந்தை பெரியார் அவர்களே கூறியுள் ளார், நான் சங்கிலித் தொடர் புகைப் பிடிப்பாளி (Chain Smoker) ஆக இருந்த வன்; பிறகு ஒரு நாள் முடிவுசெய்தேன், உடனே நிறுத்திவிட்டேன்! என்றார்!

சில கணவன்மார்கள் புகைப்பிடிப்பதை விட முடியவில்லை என்று பிடிவாதம் பிடித் தால், அவர்களை மனைவிமார்கள் (வாழ் விணையர்கள் என்ற சொல்லாட்சி இவர் களுக்குப் பொருந்தாது என்பதால், அதைத் தவிர்த்துள்ளேன்) கணவன்களுடன் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, அவர் களை பணிய வையுங்கள் (திட்டிக்கூட).

எதை மறுத்தால், அனுமதிக்காததால் (பொருளாதாரமோ, உணவோ அல்லது வேறு எதுவோ) அவர்கள் வழிக்கு வரு வார்களோ, அதனைச் செய்யவேண்டும்!

காரிகையை நம்பினோர் கைவிடப்படார்!

மனைவி சொல் கேட்பவர் மகத்தான வெற்றியாளர் - பல வீடுகளில்! - மறவாதீர்!

தமிழ் ஓவியா said...


கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவிடுமாமே ஆதிமூலம்...

முதலையின் வாயிலிருந்து ஆனை யைக் காப்பாற்றிய ஆதிமூலம் நாடே அப()யக்குரல் கொடுத்த பின்பும் பாராமுகமாக இருப்பதைப் பார்த்து ஆறாத்துயரத்தில் மக்களும், ஆட்சி யாளர்களும் இருக்கின்றனர்.

குருவாயூர் கோயிலில் இருக்கும் தங்கத்தைக் கணக்கிடுவதே கஷ்ட மாமே! அப்படியானால் அவற்றைப் பாதுகாப்பது அதைவிடக் கஷ்ட மாயிற்றே!

திருவட்டாறில் ஆதிகேசவப் பெரு மாள்மீது இருந்த தங்கத் தகட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்தெடுத்து பூசாரி கொண்டு சென்றபோது, அதைப்பற்றிக் கவலைப்படாமல் சப்தமின்றி இருந்த பெருமான் போன்று தானே குருவாயூரப்பனும் இருப்பார்? பூசாரிக்கும், அவரோடு சேர்ந்தவர் களுக்கும் கொண்டாட்டம் தானே? இதனால் தானே கணக்கு வழக்கென் றால், அரசியல் கட்சிகள் போல் இந்து அமைப்புகள் கூச்சலிடுகின்றன.

நாட்டில் எவ்வளவு தங்கம் இருக் கிறது என்பதைக் கணக்கிடவே ஒத்து ழைக்காத தேவஸ்தானங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்கு எப்படி உதவும்?
மக்களிடமிருந்து வரியாகப் பணம் வசூலித்தால் வருந்துகின்றனர். அப் படியின்றி அவர்களாகவே விரும்பி பணத்தைக் கொடுக்க வைக்க அரசாங்க கஜானா பெருக கவுடில்யரின் ஆலோ சனைப்படி அமைக்கப்பட்ட அமைப்புத் தான் கோயில்கள் என்பதை எல் லோரும் அறிவர். அரசாங்கம், பணம் பெறுவதற்காகவே அமைக்கப்பட்ட அமைப்பு இப்போது தன்னாட்சி பெற்று தங்கள் இஷ்டம்போல் செலவழிக்க ஆரம்பித்துவிட்டன. அதன் வருவாய் கள், இருப்புகள் தங்கம், வைரம் போன் றவைகூட சரிவர கணக்கில் காட்டப் படுவதில்லை உண்டியல் எண்ணும் போது தங்கம், பணம் காணாமல் போகின்றன. மக்கள் சுபிட்சத்திற்காக யாகம் நடத்துகிறோம் என்று பார்ப் பனர்கள் தங்கள் சுபிட்சத்தைப் பார்த்துக் கொள்கின்றனர்.

கோயில் கருவூலங்களில் முடங்கிக் கிடக்கும் கணக்கற்ற பணக் குவியல் களை நாட்டுக்காகச் செலவு செய்வதில் என்ன தப்பு? இன்றைக்கு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிச் சீரழியத் தொடங்கியுள்ளது. இதனைச் சரி செய்யவேண்டாமா?

மத நிறுவனங்கள் தாமே முன்வந்து நெருக்கடி தீர உதவி இருக்கவேண்டும். அப்படி செய்யாததால் அதை செய்ய வைக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.

சீன யுத்தத்தின்போது நாட்டுக்கு தங்கம் தேவை என்று அரசு அறி வித்ததும் மக்கள் தங்களிடமிருந்த தங்கத்தை மனமுவந்து கொடுத்தனர். கழுத்தில், காதில் கிடந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். தமிழ்நாடுதான் அதிக அளவில் தங்கம் வழங்கியது.

தேவஸ்தானங்களும், இந்து அமைப்புகளும் ஏதோ அவர்கள் வீட்டுத் தங்கக் கணக்கைக் கேட்பதுபோல அலறுகிறார்கள். சீன யுத்தத்தின்போது ஏழை எளியவர்கள் பொதுமக்கள் எவ்வளவு தங்கத்தை வாரி வாரி வழங்கினர். அவர்கள் கோயிலைவிட அங்கிருக்கும் சிலை முதலாளி களைவிட எவ்வளவு மேலானவர்கள் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். கோயில்களில் இருக்கும் தங்கம் நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும். நாட்டைக் காக்க, மக்களைக் காக்க பக்தர்கள் முன்வர வேண்டும். ஓர் இயக்கமாகச் செயல்பட்டு மத நிறுவனங்கள் தங் களிடமிருக்கும் தங்கத்தில் ஒரு சிறு பகுதியையாவது கொடுக்க வைக்க வேண்டும். அவர்களிடமிருக்கும் மக்கள் பணம் மக்களுக்குப் பயன்படாமல், ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுகிறது என்றால் அது பெருங்கொடுமை யல்லவா? இக்கொடுமையைப் போக்க வேண்டியது பக்தர்கள் கடமை அல்லவா?

- ப.சங்கரநாராயணன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

தமிழ் ஓவியா said...


பெருமை


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

தமிழ் ஓவியா said...


காவி ரிப்பன்களும்... புன்னகைக்கும் பிள்ளையாரும்!


கடந்த 16.9.2013 அன்று சென்னை யில் பல இடங்களில் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக் கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப்பொட்டு கழுத்தில் காவி துண்டு..

கண்கள் சிவக்க வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர் களை கடந்த சில ஆண்டுகளாக யானைமுகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது. இவர்களுக்குக் கடவுள் பக்தியெல்லாம் இருப்ப தாகத் தெரியவில்லை. ஒரு வெறி யோடு இயங்குகிற இளைஞர்களா கவே இவர்கள் இருக்கிறார்கள். கணபதியைக் கடலில் கரைப்பது தங்களுடைய ஜபர்தஸ்த்தை காட் டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள்.

இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி மாதிரியான அமைப்புகளின் ஆதரவும், பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பலமென்ன என்பதைக் காட்டுவதற்கு விநாயகர் ஒரு கருவியாக இருக்கிறார். அவரும் இந்த காவி நாயகர்களோடு பயணிக்கிறார். இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு. காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப் படும் ஒருவித டெம்போ ஆட் டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பக்தர்களும் கடற்கரைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள் போல.... டிஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதி னைந்து வயது இருக்கலாம்.

அவள் அந்த டெம்போவையொட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக் கிறாள். ஆட்டோவில் இருந்த இளை ஞர்கள் முதலில் விசிலடித்தனர். பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எறிந்தனர். அதற்குப் பிறகு அதில் ஒரு பொறுக்கி தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின்மீது பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்தப் பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான். அந்தப் பெண் ஏதோ பதிலுக்கு திட்ட ஆரம்பிக்க, ஆட் டோவை அந்த பெண்மீது ஏற்றுவ தைப்போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ ஓட்டுநர். உதயம் தியேட் டர் அருகே நூறடி சாலை திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப் பது போல ஓட்ட, அந்தப் பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீய ணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பேருந்து நிறுத்தத்தின் அருகே தடுமாறி விழுந்தாள்.

பெரிய காய மில்லை, விழுந்ததும் அருகிலிருந்து பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்துவிட்டனர். ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து கொண்டே, பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பக்தர்கள். அதில் ஒருவன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சத்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள் ளையார் வண்டிகளின் வரிசையில் இணைந்தது.

இவர்களைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்டவரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர் களைப்போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும், கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல் லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர் களைப் பார்க்க ஒரு நீண்ட சண் டைக் காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. இந்தக் காவி ரிப்பன் பக்தர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வய துக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும், இவர்கள் எல்லோருமே குடிப்பவர்களாக சின்ன தூண்டுதல் ஆனாலும், அதைப் பெரிய வன் முறையாக நிகழ்த்திவிடுவார்கள் என் பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று சந்தித்த அந்த டெம்போ ஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின்மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத் திலும் பயமுறுத்தக்கூடியது... சாகும் வரை மறக்கவே முடியாதது.

- அதிஷாவினோ, சென்னை

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம்

சேது சமுத்திரத் திட்ட அமலாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பவர் இருவர்; ஒருவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் - தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா.

இன்னொருவர் திருவாளர் சுப்பிரமணிய சாமி - ஜனதா கட்சி தலைவர் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் அப்பொழுது அந்த வழக்கைத் தொடுத்தது ஒருபுறம் இருக்கட்டும்;

இப்பொழுது பி.ஜே.பி.யில் பொருத்தமாக - சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டார்.
சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆறாவது தடத்தில் (ராமர் பாலம்) திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதுதான் பி.ஜே.பி.யின் நிலைப்பாடே தவிர, திட்டமே கூடாது என்பதல்ல.

இந்த நிலையில், பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் சு.சாமி தொடுத்த வழக்கை வாபஸ் பெறவேண்டாமா? பி.ஜே.பி.தான் இதனை வலியுறுத்துமா?
எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

ராமன் பாலமா?

சேது சமுத்திரத் திட்டத்தை நீரி நிறுவனம் வகுத்துத் தந்த அந்த ஆறாவது வழித்தடத்திலேயே நிறைவேற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு வழக்குரைஞர் கேசவன் பராசரன்; மத்திய அரசு சார்பில் வாதிடு வதற்கு அவரது மகன் மோகன் பராசரனை அணுகிய போது, எனது தந்தையார், ராமன்மீது மதிப்புள்ளவர்; அவரை எதிர்த்து நான் வாதாட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும், எனக்கு ராமர்பாலம்பற்றி நம்பிக்கை உண்டு என்றும் கூறியுள்ளார். படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள சம்பந்தம் இதுதானா?

இந்த மத்திய அரசுக்கு ஏன்தான் இந்தப் புத்தியோ என்று தெரியவில்லை. நியாயத்தின் பலம் தம் பக்கம் இருக்கும் பொழுது எதற்காக மத்திய அரசு தயங்கிட வேண்டும்?

கம்பராமாயண மீட்சிப் படலம் 17ஆம் பாடல், ராமனே அந்தப் பாலத்தை இடித்து விட்டான் என்று கூறுகிறது.

அந்தப் பாடல் இதோ:
மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித்
தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற்
பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி
நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே

சேது புராணம் என்ன கூறுகிறது? ராமன் இலங்கை சென்று திரும்பும்போது அந்தப் பாலத்தை இடிக்க வேண்டும் என்று விபீடணன் கூறினான். அந்தப் பாலம் அங்கு இருந்தால் அதனைப் பயன் படுத்தி, இலங்கையிலிருந்து கொடியவர்கள் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்ல அதனடிப்படையில் அந்தப் பாலத்தை ராமன் இடித்துத் தள்ளினான் என்று சேது புராணம் கூறுகிறது.

ராஜாஜியின் கட்டுரைகள் என்னும் நூலில் ராமாயணம் என்பது வால்மீகியின் கற்பனை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை பராசரன்கள் கொண்டுவந்து திணித்தால், அந்த இதிகாசங் களையே ஆதாரமாகக் கொண்டு எதிர் தாக்குதல் தொடுத்துப் பொடிப் பொடி ஆக்கிட என்ன தயக்கம்?

தமிழ் ஓவியா said...

வீணாகும் பொருள்கள்

வீணாகும் பொருள்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று இந்தியப் பொறியியல் மய்யத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் டி.எம்.குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் இது மிகவும் முக்கியமாக முன்னெடுத்துக் கொள்ளப்படவேண்டிய பிரச்சினை. சுற்றுச்சூழலுக்குச் சவால் இந்த வீணாகும் பொருள்கள்தான்.

இவற்றை மறுசுழற்சிக்கு (Recycle) உட்படுத்திப் பலன் காண்பது அவசியமாகும். வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இதன் அருமை என்ன வென்று புரியும். விடுதியின் கழிவுப் பொருள்கள், கழிவறைகளிலிருந்து வெளியேறும் நீர் உள்பட அங்கு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, மின் உற்பத்தி உள்ளிட்ட பயன்கள் பெறப்படுகின்றன.

பிளாஸ்டிக் பெரும் சவாலாகக் கிளம்பியுள்ளது உண்மை என்றாலும், அதனையும் பயன்படுத்தி சாலைகளை அமைக்கும் முயற்சி முழுமையாக வெற்றி பெறவேண்டும்.

வீணான பொருள்களைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்ற பொது ஒழுக்கத்தை முதலில் தொடக்கப் பள்ளியிலிருந்து கற்றுக் கொடுக்கக் கூடாதா?

தமிழ் ஓவியா said...

மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும்: தா.பாண்டியன் பேட்டி

தஞ்சை, செப். 25-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு சில மாநிலங்களில் போதிய ஆதரவு கிடையாது.

பிகார், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாநில கட்சிகளே பலமாக இருக்கிறது. எனவே மாநில கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகள் இணைந்து தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3ஆவது அணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தலுக்கு பின்னால் 3ஆவது அணி மூலம் கூட்டு அமைச்சரவை அமையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட பாஜவால் வெற்றி பெற முடியாது. வேதபுத்திரர்கள் வந்து வாக் களித்தால்தான் அவர் பிரதமராக முடியும். பூலோகத்தில் அவரை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அப்படி ஒருவேளை மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும். காஷ்மீர் தனிநாடு என மறுநாளே பிரகடனம் செய்யும். நாகாலாந்து சுதந்திர பிரகடனம் செய்து கொடியேற்றும். எனவே இத்தகைய நிகழ்வுகள் நிகழ்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக 190 இடங்களை தாண்ட முடியாது.
- இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


வீறுகொள் வரலாறு எழுதுவோம் விருத்தாசலத்தில்!


தோழர்காள்!

செப்டம்பர் 28 - நாம் கூடவேண்டிய இடம் விருத்தாசலம்.

இந்தப் பெயரே நம் சிந்தனை அலைகளை வேறு எங்கோ கொண்டு சேர்க்கிறது.

நமது பச்சைத் தமிழ் திருமுதுகுன்றம்தான் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் விருத்தாசலம் ஆகியிருக்கிறது.

இலக்கியத்தில் பழமலை என்ற பெயரும் இதற்குண்டு; விருத்தாசலத்தில் நாம் கூடுகிறோம் என்கிறபோது அந்தச் சதியின் கொடிய முகம் நம் கண்முன் நிற்கவேண்டும்.

இந்தப் படையெடுப்பை முறியடிக்கவேண்டும் என்ற எண்ணம் நம் இதயத்தில் வெடித்துக் கிளம்ப வேண்டும்.

நம் பழம் தமிழ், பாழ்பட்டுப் போனதை எண்ணி பதைபதைக்க வேண்டும்.

நாம் நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கவேண்டும்.

மாயவரம் - மயிலாடுதுறை என்று மீட்கப்பட வில்லையா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. இனவுணர்வு பீறிட்டு எழுந்தால் இதனைச் சாதிப்பது எளிதான காரியம்தானே.

ஆரியம் புகுந்து அருமைத்தமிழ் மொழியைக் கூறுபோட்டு விட்டது. நம் ஊர்ப் பெயர்கள் ஆரியமயமாகின. தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ் வெளியேற்றப்பட்டு ஆரியம் வழிபாட்டு மொழியாயிற்று.

தமிழன் பெயர்கள் சமஸ்கிருதமாகி விட்டன. தமிழன் விழாக்கள் - பண்டிகைகளாகின - பார்ப்பனர்களின் பாதந்தாங்கிகளானது தமிழ்ச் சமுதாயம்.

இந்த அடிமைத்தனத்தைத் தூக்கி எறிய நமது திருமுதுகுன்ற மாநாடு புதுத்திமிரைக் கொடுக்கட்டும்.

நமது உரை வீச்சுகள் இனமானத்தை முன்னெடுக்கட்டும் - மொழிமானத் தீயை மூட்டட்டும்!

மாணவரணியின் மண்டல மாநாடு என்று மிகப் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

இளைஞர்களின், மாணவர்களின் குருதி சூடேறினால்தான் புரட்சி எரிமலை வெடிக்கும்.

1993இல் இதே ஊரில் வட்டார மாநாடு நடத்தினோம் - நீண்ட இடவெளிக்குப்பின் இன எழுச்சிப் போர் முரசம் திருமுதுகுன்றத்தில் கேட்க இருக்கிறது.

மாணவர் பட்டாளமே எழுக!

இளைய தலைமுறையே தோள் தூக்கி வருக!

பெரியார் மறைவுக்குப் பிறகும் தமிழர் தலைவர் தலைமையிலே வீறு கொண்டு தமிழினம் எழுந்து நிற்கிறது என்று காட்டுவதற்கான சந்தர்ப்பம் இது.

கருஞ்சட்டைப் பூமியை காவி மயமாக்க ஒரு கூட்டம் கனவு கண்டு கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணில் தர்ப்பைப் புல்லை வளர்க்கலாம் - என்று மனப்பால் குடிக்கிறது மனுதர்மக் கும்பல்.

தோட்டத்துப் புடலங்காயா

தமிழ்நாடு?

கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி

என்றார் நமது புரட்சிக் கவிஞர்.

அந்தச் சேதியைத் தெரிவிப்போம்! தோள் தூக்கி வருக! மாநில மாநாடு போல ஏற்பாடுகள் தூள் பறக்கின்றன!

எங்குப் பார்த்தாலும் சுவரில் எழுதிய விளம்பரங்கள் - பல வண்ண சுவரொட்டிகள் - பதாகைகள்.

பள்ளிகள் விடுமுறைதான். பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வீறு கொண்டு வருக விருத்தாசலம் நோக்கி.

தமிழர் தலைவர் சங்கநாதம் செய்வார். காலத்தின் கருவில் முளைக்கும் தீர்மானங்கள் உண்டு.

மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் பேரணி தனிச்சிறப்பு! கருத்தரங்கம் என்ற கருத்துச் சுரங்கம் உண்டு.

படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என்கிற வகையில் பகுத்தறிவுப் பெருங்குடும்பங்கள் குவியட்டும்! குவியட்டும்!!

தமிழர் தலைவர் சபாஷ் திருமுதுகுன்றம் என்று பாராட்ட வேண்டாமா? இடையில் இரண்டே நாட்கள் - இருளைக் கிழித்து பகை முகத்தை விரட்டிப் பகலாக்கிக் காட்டுவோம் - வாரீர்! வாரீர்!!

- மின்சாரம்