Search This Blog

4.9.13

சிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்!இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த்தியில் கைக்கொள்ள வேண்டியது. பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங்கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பலகாரங்களும் மற்றும் கொழுக் கட்டை, சுண்டல், வடை, பொரி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது. இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமகனுக்குப் பிரச்சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.

கொழுக்கட்டை ஏன்?

விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பின ராம். அது முதல் விநாயகருக்கு கொழுக் கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.

யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?

இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இதனைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத் துக்கும் கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?

தோப்புக்கரணம்

பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்த வனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.

இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர்களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம். இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர்களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அசுரன், இந்திராதிகளை அவமானப் படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?

இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகா சுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென் றால், விநாயகரையும், அசுரனையும் ஒன்றாகக் கருதுகின்றனரா?

இந்தப் பிள்ளையார் தன்னைக் கும் பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக்குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!

சதுர்த்தி என்றால்...?

சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திரும ணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.

சதுர்த்தி அறை - திருமணத்தில் நான் காம் நாள் இரவு மணமகனும் மணமகளும் கூடும் அறை.

அருள்பெற குறுக்கு வழி

கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.

(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண்களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும், செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)

திடீர்ப் பிள்ளையார்

கணபதிபற்றிய விஷயம் ஆரிய மத வேதங்களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.

பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக்கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைவிக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட் டுள்ளது.
விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றி னால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?

இவ்விதம் முதலில் விக்கினம் செய்ப வராகக் கற்பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமியா கவும் அறிவிற்கும், படிப்புக்கும் ஆதிகர்த் தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப் பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?

பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார் களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனைப் பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத் தினர் - இந்துக்களில் சைவர்கள் என்பவர் களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங் களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?

தோன்றிய காலம்

கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவகப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.

முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து, பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்) சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?) பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திருந்தும் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?) தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.
விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.

பெருங்குடும்பி பிரம்மச்சாரி

கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.

கணபதி அறிவையும், பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களி லும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளிலும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!

இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக் கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரி களுக்கும் கொழுத்த வருவாய் கிடைக் கிறது - கண் கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில் கடலில் காசைக் கரைக்கின் றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற் றில் போட்டுக் கரைத்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக் கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.

பிறந்த கதைகள்! சிரிப்பானி!

ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் பிராட்டி யும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானை களைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினார்.

                       ------------------------------(அபிதான சிந்தாமணி)

(கண்ணால் பார்த்தாலும் சுவர் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித் தவர் பிள்ளையார்.

                                      --------------------------(அபிதான சிந்தாமணி)
-------------------- உடுமலை சித்தன் என்கிற பி.வி. ராமசாமி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை -மறுபிரசுரம் “விடுதலை” 4-9-2013

36 comments:

தமிழ் ஓவியா said...


ராகுவாம்!


ஜோதிடம் - அதுவும் இந்திய ஜோதிடம் இருக் கிறதே - அதை ஒரு கணம் நினைத்தால் போதும் வாந் தியும், பேதியும் சேர்ந்தே வந்துவிடும்.

இன்னும் நவக்கிரகங் களைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். யுரேனஸ், நெப்டியூன் என்னும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவே - அவைபற்றி ஜோதிட ஜாதகத்தில் எந்தக் குறிப்பும் கிடையாது. எந்தக் காலத்திலோ எந்தக் கிறுக் கனோ எழுதி வைத்ததை வைத்துக்கொண்டு வயிற்றுப் பிழைப்பு நடக்கிறது.

ராகு, கேது என்று இரு கிரகங்களாம். அப்படி கிர கங்களே கிடையாது என்பது விஞ்ஞான முடிவு!

ஆனாலும், இன்னும் வெட்கம் சிறிதும் இல்லாமல் ராகு, கேதுபற்றி எழுதுகி றார்களே, அறிவைக் கெடுக் கும் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

ராகுவின் புராண அளப் பைக் கேளுங்கள், கேளுங் கள்!

பாற்கடலைக் கடைந்த போது (பாற்கடல், தயிர்க் கடல், நெய்க்கடல் இவை எங்கே இருக்கின்றனவாம்?) அமுதம் கிடைத்ததாம் - அதை யார் பருகுவது என்று தேவர்களுக்கும், அசுரர் களுக்கும் சண்டையாம். உடனே மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து சினிமா நடிகைபோல தோன் றினானாம். அவள் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர் தத்தைப் பெறுவதில் கோட்டை விட்டு விட்டார் களாம்.

சுவர்பானு என்னும் ஒரு அசுரன் மட்டும் சுதாரித்துக் கொண்டு தேவர்கள் அமரும் பந்தியில் போய் சூரியனுக் கும், சந்திரனுக்கும் இடையில் போய் குந்தினானாம். மோகினி அமிர்தத்தை வழங் கிக்கொண்டு இருந்தபோது அவனும் வாங்கிச் சாப்பிட்டு விட்டானாம் - சூரியனும், சந்திரனும் இவன் அசுரன் என்று சொன்னார்களாம்.
கோபம் கொண்ட மோகினி, சுவர்பானுவின் தலையில் தன் கையிலிருந்த கரண்டியால் அடித்தாளாம். சுவர்பானுவின் தலை ஒரு பக்கமும், உடல் இன்னொரு பக்கமும் தனித்தனியாக விழுந்ததாம். அவன் தேவா மிர்தம் உண்டதால் சாக வில்லையாம்.

அவன் கைகளும், தலை யும் பர்ப்பரதேசத்தில் (அது எங்கு இருக்கிறதாம்?) போய் விழுந்ததாம்.
அந்தத் தேசத்து அரசன் பைடீசனசன் என்பவன் அவற்றை எடுத்துச் சென்று வளர்த்தானாம்.... அரசனால் வளர்க்கப்பட்ட அந்தக் கையும், தலையும்தான் ராகு வாம்.
ராகு விஷ்ணுவை நோக் கித் தவம் இருந்து, கறுத்தப் பாம்பின் உடலையும் கிரகப் பதவியும் பெற்றானாம்.
சூரிய, சந்திரர் இருவரும் மோகினியிடம் தன்னைக் காட்டிக் கொடுத்ததால் அவர்களைப் பிடிக்கத் தொடங்கினானாம் கேது. அதுவே சந்திர, சூரியக் கிரகணமாம்.
எப்படி இருக்கிறது? தந்தை பெரியார் கூறுவது போல, சாராயம் குடித்த பைத்தியக்காரனுக்குத் தேள் கொட்டினால் எப்படி உளறு வானோ - அப்படி உளறித் தள்ளியுள்ளார்களே!
ஆன்மிக இதழ்கள் இன் றைக்கும் இப்படியெல்லாம் வெளியிடுகிறார்களே!
வெட்கம்! மகாவெட்கம்!!
- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


காவல்துறை கவனத்திற்கு...நமது காவல்துறையில் பணியாற்றுவோர் கவனத்துக்குத் தேவையான தகவல் தாய்லாந் திலிருந்து கிடைத்துள்ளது.
தாய்லாந்தில் குற்றங்கள் பெருகிய நிலையில், அதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அரசின் கவனம் காவல்துறை பக்கம் சென்றது. காவல்துறையில் பணியாற்றுவோர் தொந்தியும், தொப்பையுமாக இருந்தால் எப்படி அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும்? 60 சதவிகிதக் காவல் துறையினருக்குத் தொப்பை விழுந்திருந்தது. 60 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, எடையைக் குறைக்க உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அரசு என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...


ஜாதி சங்கங்களால்...


தென் மாவட்டங்களில் ஜாதி தலைவர்களின் குரு பூஜைகளால் அரசு மற்றும் தனியார் சொத்துக்க ளுக்கு ரூ.2.05 கோடி ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டது.

பல நிகழ்வுகளில் 29 பேர் கொல்லப்பட்டனர் என்று மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில், காவல் துறை துணைத் தலைவர் (டி.அய்.ஜி.) தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...


கோவில் தங்கம் குறட்டைவிட வேண்டுமா?


நாட்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதுபற்றி, மிகப்பெரிய அளவில் பேசப் படுகிறது. நாடாளுமன்றத்தில் கடும் புயற்காற்று வீசுகிறது. ஊடகங்களில், விவாதப் போர்கள் நடந்துகொண்டுள்ளன.

உண்மைதான் - இதிலிருந்து இந்தியாவை மீட்கவேண்டியது அவசியமே!

இதற்கொன்றும் வழியில்லாமலும் இல்லை. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்காக அலைவது, அழுவது புத்திசாலித் தனமல்ல.

ஒரு கருத்து கசிந்தது. இந்தியாவில் கோவில் களில் உள்ள தங்கங்களை, சொத்துக்களை மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாதா? என்ற அறிவார்ந்த வினா பொறி தட்டிக் கிளம்பியுள்ளது. அப்படி ஒரு கருத்து அரசுக்கு வந்ததாகவும் செய்திகள் வந்தன. அதற்குள்ளாக இந்துத்துவாவாதிகள் தொடை தட்டி, தோள் தட்டிக் கிளம்பி விட்டனர்.

மக்களைப் பற்றி, அவர்களுக்கு எப்பொழுதுமே கவலை இருக்காது; கல்லு சாமிகள், குழவிக் கற்கள்மீதுதான் அவர்களுக்கு அக்கறை. அந்தக் கடவுள் சிலைகள் இருந்தால்தான் உயர்ஜாதித் தன்மை காப்பாற்றப்படும். அந்தச் சிலைகளை மூலதனமாக வைத்துத்தான், தங்கள் புரோகிதச் சுரண்டலை, வெகுஜோராக நடத்த முடியும்.

சிதம்பரம் நடராஜன் கோவில் சங்கதி என்ன? தீட்சிதர்கள் கையில் அந்தக் கோவில் இருந்த போது, வருமானம் என்ன? இப்போது வருமானம் என்ன?

திருப்பதி கோவிலில் நடக்கும் மோசடிகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டனவே! மன்னன் கிருஷ்ணதேவராயன் திருப்பதி கோவி லுக்கு அளித்த நகைகள், கிரீடங்கள் எங்கே? எங்கே? என்ற கேள்விகள் எழவில்லையா? டாலர் ரங்காச்சாரி ஊழல்கள் வெளிச்சத்திற்கு வர வில்லையா?

திருப்பதி கோவில் நகைகளின் கணக்குகளை சரி பார்க்கவேண்டும் என்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே!

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாட்டில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் கோவில் நகைகளை மக்கள் நலனுக்காக பயன்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறபோது பூமிக்கும் விண்ணுக்கும் குதிப்பானேன்?

இதுபற்றி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், விடுதலையில் இரண்டு ஆண்டு களுக்குமுன் அறிக்கை ஒன்றில் தெளிவு படுத்தினார் (விடுதலை, 5.11.2011).

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்து, புட்டபர்த்தி சாய்பாபா மடத்தில் திரண்ட சொத்துகள், குரு வாயூரப்பன் கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில்களில் குவிந்து கிடக்கும் தங்க நகைகள், வைரங்கள் இவற்றை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் கொடுத்த சொத்துக்களை மக்களுக்கே திருப்பிக் கொடுப் பதில் தவறு ஏதும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்!

இந்த நேரத்தில், அதனைச் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். தங்கத்தைச் சேமிக் காதீர்கள் - வாங்காதீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர், மக்களுக்கு வேண்டுகோள் வைக்கும் இந்த நேரத்தில், ஒன்றுக்குமே பயன்படாமல் தூசு படிந்து, முடங்கிக் கிடக்கும் - குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் கோவில் நகைகளைப் பயன்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்!

தங்கம் அரசாங்கத்தின் ரிசர்வ் வங்கியில் இருக்கவேண்டிய பொருளே தவிர, சிலைகளின் கழுத்திலும், மனிதர்களின் உடலிலும் ஜொலிக் கின்ற பண்டமல்ல.

கடுமையான நோய்க்குத் தீவிர சிகிச்சைப் பிரிவு இருப்பதுபோல, பொருளாதார நிலையில் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் இந்தியா, தப்பிப் பிழைக்க - தங்கம் அனைத்தும் அரசின் கஜா னாவுக்கு வந்து சேரவேண்டும் என்ற சர்வாதிகார சட்டம் போட்டாலும் தவறு இல்லை.

தமிழ் ஓவியா said...


வ.உ.சி.


வ.உ.சி.

இந்தியாவின் விடு தலைப் போராட்ட வரலாற்றில் தியாகச் செம்மல் தகுதியில் முதல் பரிசு கொடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய வர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரே! அந்தப் பெருமகனார் பிறந்த பொன் னாள் இந்நாள் (1878).

வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். தன் வாழ்க்கையை வளமைப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தால் வழக்குரைஞர்கள் அரிதாக இருந்த அந்தக் கால கட் டத்தில் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாமே.

சுதந்திரத் தீயில் குறித்து இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்று, சிறையில் செக்கு இழுத்தது அல்லாமல் அவரது வழக் குரைஞர் அந்தஸ்தும் வெள் ளைக்கார அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. கடைசிக் காலத்தில் எண்ணெய்க் கடை வைக்கும் நிலைக்கு அந்த எண்ணக் கடலின் வாழ்க்கை வண்டி குடை சாய்ந்தது.

தொழிலாளர்களுக்காக அவர் கொடி பிடித்தவர் மட்டு மல்ல - அந்தக் கோட்பாட்டில் கொட்டைப் போட்டுப் பழுத்த மரமானவர்.

கோயில்பட்டிக்கு ஒரு நாள் ஆச்சாரியார் (ராஜாஜி) வ.உ.சி.யைத் தேடி வருகிறார். தன்னோடு கோவை வரை வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியையும் கேட்காமல் பயணப்பட்டார் வ.உ.சி.,

இரயிலில், பயணம் நேரம் முழுவதும் தொழிலாளர் களின் பிரச்சினைகள்பற்றி கேள்வி கேட்டுத் துளைத் தார் ராஜாஜி.

எல்லாவற்றிற் கும் நிதானமாக நிறை தரும் கருத்துக்களைக் கூறி வந் தார் வ.உ.சி.

கோவை வந்தாயிற்று; அப்பொழுதுதான் வ.உ.சி.க்கு தெரிகிறது - ராஜாஜி ஒரு தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசுவதற்காக - அதைப் பற்றித் தெரிந்து கொள்வதற் காகத் தான் தம்மை அழைத்து வந்தார் என்ற உண்மை.

ராஜாஜி அந்தத் தொழி லாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்;

பேச்சு முழுவதுமே வ.உ.சி.யிடம் ரயில் பயணத்தில் கேட்டறிந்தவை தான்!

ராஜாஜி பேசி முடித்த வுடன் அவர் அருகில் சென்று ஒரு கருத்தைவிட்டு விட்டீர் களே என்று நினைவுபடுத் தினார் வ.உ.சி. பேசி அமர்ந்து விட்டேனே என்ன செய்வது என்று கையைப் பிசைந்தார்.

கூட்டத் தலைவரின் அனுமதி பெற்று 10 நிமிடம் உரையாற்றினார்; வ.உ.சி., பேச்சைக் கேட்ட தொழிலாளர் கள். பேசுங்கள்! பேசுங்கள்!! என்று குரல் கொடுத்தனர்.

ஒரு மணி நேரம் பேசினார் என்றால் அது சாதாரணமா?

மறுநாள் ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டினார் வ.உ.சி.; ராஜாஜியின் முழுப் பேச்சும் இடம் பெற்றது.

கடைசி ஒரு வரியில் வ.உ.சி.யும் பேசினார் என்றிருந்தது.

என்ன செய்வது! அவர் ஆச்சாரியார் ஆயிற்றே! இவரோ சூத்திரர் ஆயிற்றே! தந்தை பெரியாரோடு இணைந் தார் -

சுயமரியாதை இயக்க மாநாடுகளில் மனம் விட்டு ஏன் பேசினார் என்பது இப் பொழுது விளங்கி இருக்குமே!

- மயிலாடன் 5-9-2013

தமிழ் ஓவியா said...

மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் தஞ்சையில் 19ஆம் தேதி ஆர்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு


கருநாடகத்தில் காவிரி நதியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தம் உடனே தேவை!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

இரண்டையும் வலியுறுத்தி தஞ்சையில் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! கருநாடக மாநிலத்தில், காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவது மத்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி, தஞ்சையில் வரும் 19ஆம் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் இரண்டு முக்கிய வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறோம்.

மத்திய அரசின் விளக்கம்?

1. முதலாவது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007இல் வந்து விட்ட நிலையில், 6 ஆண்டுகளாகியும்கூட அது மத்திய அரசின் கெசட்டில் பதிவு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. மத்திய அரசு அதற்குச் சொன்ன விளக்கங்கள் மக்களுக்கோ காவிரி டெல்டா விவசாயிகளுக்கோ ஏற்புடையதாக இல்லை.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, அவர்களும் பல முறை இடித்த பிறகே, கடைசி நாளுக்கு முன்னாள் இந்தப் பதிவு (மத்திய கெசட்டில்) வெளியிடப்பட்டது.

இரு அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்

அதன்படி - இரண்டு அமைப்புகளை, 1) காவிரி நதி நீர்ப் பங்கீடு மேலாண்மை வாரியம்.

2) காவிரி நீர் பங்கீடு குறித்த அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்பு(Monitoring and Supervisory Committee) குழு.

தமிழ் ஓவியா said...


இதுவரை நியமிக்கப்படவே இல்லை. அவ்விரு குழுக்களும் நியமிக்கப்பட்டால் (அவைகளுக்கு சட்ட வலிமை உண்டு) நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புப் போன்ற சட்ட வலிமையுடன் கூடிய ஒன்று. அதைக் கால தாமதம் செய்யாமல் உடனே நியமிக்க வேண்டும்; ஏதோ இவ்வாண்டு பருவ மழை பெய்து மேட்டூர் அணை நிரம்பியது. வடிகால் போல், கருநாடகத்திற்குத் தண்ணீர் ஏராளம் வந்த காரணத்தால் திறந்துவிட்டனர் - வேறு வழி இன்றி.

அதனால் செய்ய வேண்டிய நிரந்தரப் பாதுகாப்புக்கான இரு அமைப்புகளையும் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது; இதை தமிழ் நாட்டு அத்தனைக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குரலில் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.

கருநாடகம் புதிய அணைகளைக் கட்டுவதா?

இதைவிட மிகப் பெரிய அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி - கர்நாடக அரசு, புதிதாக நீர் விசை மின் திட்டம், 3 அணைகள் கட்டி, கர்நாடக நீர் தமிழ்நாட்டிற்கே எளிதில் மழை பெய்தாலும் வர இயலாத நிலையை உருவாக்கித் தடுப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யத் துவங்கி விட்டதாக, அமைச்சர்கள் மூலம் அறிவிப்புகள் வருகின்றன!

சட்ட விரோதச் செயல்!

இந்த ஏற்பாடுகளுக்கு முன் அனுமதி மத்திய அரசிடமிருந்து பெறப்படவில்லை.

ஏற்கெனவே வந்த இறுதித் தீர்ப்பின்படி, மேல் பகுதி நிலப்பரப்பின் நீர் வரத்தைத் தடுக்கும் உரிமை கர்நாடக அரசுக்குக் கிடையாது (Riparian Rights) கீழே பாயும் உபரி நீரை - தேக்கி தடுப்பது சட்ட விரோதம் நியாய விரோதம்!

ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்துதல், அரகாவதி நதியைச் சீரமைத்து, புனரமைத்தல், தொடர்பாக கர்நாடக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஏடுகளில் விளம்பரம் செய்துள்ளது. 22.8.2013 தினமணி நாளேட்டில் காவிரியின் குறுக்கே நீர் மின்விசை நிலையம் அமைக்க கர்நாடகம் ஆலோசனை என்ற தலைப்பில், மூன்று நீர்த் தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனை மத்திய அரசு தலையிட்டு, உடனே தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.

இது அவசரம் அவசியம்.

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு

இரண்டாவது உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் மேல் பட்டப் படிப்பில் - இடஒதுக்கீடு கூடாது என்று டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மாணவர் சேர்க்கை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பின் தீய விளைவுகளிலிருந்து சமூகநீதியைக் காப்பாற்றி ஒடுக்கப்பட்டோர் கல்வி உரிமையைப் பாதுகாக்க முன் வருவோம் என்று நாடாளுமன்றத்திலும், வெளியிலும் மத்திய அரசு அதன் அமைச்சர்கள் மூலம் அறிவித்துள்ளது.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், வடபுலத்துத் தலைவர்கள் முலாயம்சிங், சரத்யாதவ் போன்றவர்களும், ஏனைய சமூக நீதி அமைப்புகளும் ஓங்கிக் குரல் கொடுத்து வற்புறுத்தியுள்ளன.

சீராய்வு - மறு ஆய்வு மனுவால் பயன் இல்லை

உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு கேட்போம்; கிடைக்கவில்லையெனில் அரசின் சட்டத் திருத்தம் கொண்டு வந்து பாதுகாப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது.

மறு ஆய்வு என்ற முறை இது வரை வெற்றிகரமான பலனைத் தந்ததே இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பாளர்கள் எவரும் மறு ஆய்வில் மாற்றிச் சொன்னதாக வரலாறே இல்லை. எனவே ஏன் இந்த வெட்டிச் சடங்கு?
நேரடியாகவே அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரிலேயே - அதை நீட்டி - நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

இல்லையானால் நமது ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உரிமையைக் காப்பாற்ற முடியாது.

அரசியல் சட்டத் திருத்தத்தை மாநில அரசுகள் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றவும் கால அவகாசம் தேவை. எனவே இப்போதே உடனடியாக இதைச் செய்திட முன்வர வேண்டும்.

தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

இந்த இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி - காவிரி டெல்டா பகுதியின் முக்கிய நகரமான தஞ்சையில் வருகின்ற 19ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும்.
தோழர்களே தயாராவீர்!

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
5.9.2013
//

தமிழ் ஓவியா said...


தொல்லைவரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப் படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


காவிரி நீரிலும் அரசியலா?காவிரி நீர் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்து ஆக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு அல்ல; கருநாடக மாநில அரசே! அம்மாநிலத்தின் எல்லையில் காவிரி உற்பத்தியாகிறது என்கிற ஒரே காரணத்துக்காக கீழ்ப்படுகையில் உள்ள தமிழ் நாட்டுக்கு அதில் உரிமை கிடையாது என்கிற செருக்குத்தனம் கருநாடக மாநில அரசுக்கு இருந்து வருகிறது.

இந்திய சட்டமும் சரி, சர்வதேச சட்டங்களும் சரி கருநாடக அரசின் பக்கம் இல்லை என்பதை அம்மாநில அரசு உணராதது அறியாமையல்ல - தன்னல வெறியில் நியாயத்தைப் புறக்கணிக்கும் புத்திப் பேதலிப்பாகும்.

கருநாடகத்தைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதன் போக்கில் நேர்மையான சிந்தனைத் தடம் இருப்பதில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையை அரசியலாக்கி ஆதா யம் பெறும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு விட்டது. மேலும், புரியும்படிச் சொன்னால் காவிரிப் பிரச்சினையை மாநில மக்களின் வெறி உணர்ச் சிக்குத் தீனி போடும் பண்டமாக கருநாடகாவி லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு மாற்றி விட்டன. ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் நிலை அல்லது நாயர் பிடித்த புலி வால் என்றும் கூறலாம்.
மத்திய அரசோ தன் பொறுப்பை கடமையை, சட்டத்தின் நிலையை உணர்ந்த - மத்திய அரசாக இருப்பதில்லை. பாம்புக்கும் நோகாமல், கொம்புக் கும் நோகாமல் மத்திய அரசு நடந்து கொள்ள முயற்சிக்கிறது.

சட்டப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் மத்திய அரசே நடந்து கொள்ளத் தடுமாறும்போது, மாநில அரசுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

உச்சநீதிமன்றம் 2007இல் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையிலும், அதனைச் செயல் படுத்த முன்வராதது ஏன்? நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட வேண்டியது - மத்திய அரசின் தவிர்க்கவே முடியாத கடமையும் - பணியும் ஆகும்.

சட்டப்படி ஓர் அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் போராடுவது என்பது ஒரு விசித்திர நிலையே!

நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிட வேண்டும் என்பதற்காகப் போராட்டம்; அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற் காகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நீதிமன்றத்தை மறுபடியும் மறுபடியும் அணுக வேண்டியுள்ளது என்றால் சட்டம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில்தான் நாம் இருக்கிறோமா என்ற வினாவை அது எழுப்புகிறது.

மத்திய அரசின் இந்த இயலாமையை நன்கு புரிந்து கொண்ட கருநாடக மாநில அரசு, கருநாடக மாநில எல்லைக்குள், காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட முனைந்துள்ளது. இது சட்டப்படி தவறாகும். எந்த ஓர் அணையை, மாநிலம் கட்டுவதாக இருந்தாலும் அதன் கீழ்ப் பகுதியில் உள்ள பாசனத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது; சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதியையும், மத்திய அரசின் அனுமதியையும் பெற வேண்டும் என்பதே சட்டத்தின் நிலைப் பாடாகும்.

எந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் குப்பைக் காகிதம் என்று கருதுகிற கருநாடக மாநில அரசின் அத்துமீறும் போக்குக்கு என்னதான் பரிகாரம்?

தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் விவாத மேடையில் பங்கேற்ற தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு கருத்தை முக்கியமாக முன் வைத்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 262ஆம் பிரிவின்படி நதி நீர் பங்கீடு தொடர்பாக மாநிலங் களுக்கிடையே ஏற்படும் தாவாவைத் தீர்க்க, நதி நீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter-State Disputes Act) இருக்கிறதே அது ஏன் செயல்படுத்தப்பட வில்லை என்று அர்த்தமுள்ள வினாவை திராவிடர் கழகத் தலைவர் எழுப்பினார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசானா லும் சரி (UPA) பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசனாலும் சரி (NDA) நடுவண் அரசு என்ற தன்மையில் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். முதற் கட்டமாகக் கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் முயற்சியைத் தடுப்பது மத்திய அரசின் தவிர்க்கவே முடியாத கடமையாகும்.

தமிழ் ஓவியா said...


பெரிய மூடன்தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
(விடுதலை, 21.6.1964)

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் கழகத்திற்கு வயது 43 ஆண்டுகள்


1970 இதே தேதியில்தான் (6.9.1970) தந்தை பெரியார் அவர்களால் சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி.வீரமணி, அமைச்சர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளராக இருந்த சி.டி. நடராசன் ஆகியோர்களும் அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இப்பொழுதுதான் மனிதர்கள் கழகத்தைத் தொடங்கி வைக்கிறேன் என்று தனக்கே உரித்தான தனித்த சிந்தனையுடன் தந்தை பெரியார் கூறினார்; அதற்கு அவர் கூறிய காரணம் சிந்தனைக்கு விருந்தளிப்பதாகும்.

மனிதன் என்றாலே பகுத்தறிவுவாதிதானே. அப்படிப் பட்டவன் இன்றைக்குத்தான் பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறான் என்றால் என்ன பொருள்? என்ற கேள்வியிலே அதற்கான விடையைத் தந்தார்கள்.

பகுத்தறிவின் சிறப்பைப் பற்றி தந்தை பெரியார் கூறிய அளவுக்கு உலகில் இன்னொரு அறிஞர் கூறிச் சென்றுள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டே கிடையாது.

உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம் அவன் எல்லையற்ற அறிவுச்சக்தி பெற்றிருப்பதுதான்; மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி, மிக மிக முன்னேறிக் கொண்டு வருகிறான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தால் மிக மிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம் ஞானபூமியென்று சொல்லிக் கொண்டு கோயில் குளம் கட்டிக் கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்ட வெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள் என்றார் தந்தை பெரியார் (விடுதலை 22.5.1961).

மனித அறிவுதான் மின்சாரத்தைக் கண்டுபிடித்தது. மின்சாரம் ஒன்றினால் மகத்தான புரட்சி ஏற்படவில் லையா? எல்லாத் துறைகளிலும் மனிதன் இன்றைக்கு வளர்ச்சியில் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறான் என்றால் அதற்குக் காரணம் மனிதன் பகுத்தறிவைத் தங்குத் தடையின்றிப் பயன்படுத்தியதால்தான்.

அந்தப் பகுத்தறிவைப் பாழும் கடவுள், மத மூடநம்பிக்கை இருளில் தொலைத்ததால் அல்லவா வளர வேண்டிய நமது சமூகம் வளராமல் தேக்க நிலையை அடைந்து விட்டது.

அதனால்தான் தந்தை பெரியார் பகுத்தறிவுத் தொண்டை தம் வாழ்நாள் முழுவதும் செய்தார்; நாடெங் கும் பகுத்தறிவு அமைப்புகளைத் தோற்றுவித்தார்.

பகுத்தறிவாளர் கழகம் கடந்த காலங்களில் சிறப்பான மாநாடுகளை நடத்தியதுண்டு; பகுத்தறிவுக் கண்காட்சி களை ஏற்பாடு செய்ததுண்டு. உலக நாத்திக மாநாட்டை திருச்சியில் நடத்தவில்லையா?
பெரும்பாலும் அரசுப் பணியாளர்கள் இந்த அமைப்பில் பங்கு கொண்டு பணியாற்றினர் இந்த அமைப்பின் வீச்சினைக் கண்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) மருண்டே போனார். அரசுப் பணியாளர்கள் கடவுள் நிந்தனை செய்வதில் ஈடுபடலாமா? என்றெல்லாம் கூடக் கேட்டார் அந்த அளவுக்குப் பகுத்தறிவாளர் கழகத்தின் தாக்கம் இருந்தது.

நெருக்கடி காலத்தில், பார்ப்பன ஆதிக்கப் பாம்பு தலை தூக்கி ஆடிய கால கட்டத்தில், பகுத்தறிவாளர் கழகத்தில் பணியாற்றிய, அரசு ஊழியர்கள் பழி வாங்கப்பட்டார்கள் அதன் காரணமாக, இடையில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான்; என்றாலும், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மீண்டும் அந்த அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்து அதன் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

மகாராட்டிரத்திலே பகுத்தறிவுப் பணிகளைச் செய்து கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனையாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதையொட்டி அவர் நினைவை மிகச் சரியாகப் போற்றும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கான சட்டத்தை மகாராட்டிர மாநில அரசு நிறைவேற்றி யுள்ளதானது - வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு மாநிலத் திலும், ஏன் நாடாளுமன்றத்திலும்கூட இத்தகு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 51A(h) விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தும் நிலையில், பகுத்தறிவாளர் கழகம்தான் அந்த சரத்தைச் சரியாகக் கடைபிடிக்கிறது என்று சொல்லவேண்டும்.

மதச் சார்பற்ற அரசு என்று சொல்லிக் கொண்டு, அதற்கு மாறான செயல்களை செய்து கொண்டுள்ளது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக விருந்தபோது, அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையோடு திகழ வேண்டும் என்பதற்காக அரசு அலுவலகங்களில், வளாகங்களில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங்கள், உருவங்கள், படங்கள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இன்றைய தினம் நடை பாதைகள் எல்லாம் கோயில்களாகி மக்களுக்குப் பெரும் இடர்ப்பாடுகளை உண்டாக்கிக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் பகுத்தறிவாளர் கழகத்திற்கு மிக அவசியமான பணிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை நிறைவேற்றிட பகுத்தறிவாளர் கழகத்தை ஒவ்வொரு ஊரிலும் துவக்கி, இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அந்த மகத்தான கடமையினை ஆற்றுமாறு அறைகூவி அழைக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

யாகம் செய்தால் மழை வருமா?

மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும். மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை.

- தினமணி, 6.6.1988

தமிழ் ஓவியா said...


உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை!


உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை!

கிரேக்கப் புராணத்தின்படி குரோ ணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத் தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தை யின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால்தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.

பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக் கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக் கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீ ரிலிருந்து படைக்கவும் செய்தோம்

பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீ ரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கை களே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.
இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்து விட்டதே!

தமிழ் ஓவியா said...


தேவாரப் பாடல்

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

(திருவலிவலம் கோவில் கொண்ட இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை; உருவுமை கொள - உருவத்தை பார்வதி கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)

சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உரு கொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்!

இப்படிப்பட்ட அசிங்கப் பிறப்பாளன் தான் விநாயகன்.

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?
அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் பெரிய திரை யாக என்னுடைய புன் னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடை மத நம்பிக்கை, என்னு டைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண் மையை அறியார். கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
தி இண்டு, 30.11.2002

தமிழ் ஓவியா said...

கருத்து


மதுபோதை, சினிமா போதை, கோவில் திருவிழா, அரசியல் கட்சித் தேர்தல், கல்வியில் மூடநம்பிக்கை இவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றன. நாடு வளர்ச்சியடைகிறதாக ஆட்சியாளர்கள் புள்ளி விவரத்தைக் காட்டுகிறார்கள். விவசாயம் மட்டும் தேய்ந்து போனது ஏன்? கடந்த 15 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளில் 38 கோடி மக்கள் தினமும் உணவின்றி படுக்கச் செல்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தேசிய அவமானமல்லவா!

- நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி

பிறமொழிகளில் உள்ள சிறந்த நூல்கள், நூல்கள் வந்து சில மாதங்களிலேயே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகன்றன. ஆனால், இதே நூல்கள் தமிழ் மொழியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகே மொழிபெயர்க்கப் படுகின்றன. இந்தியாவில் உள்ள வேறு மொழி நூல்கள்கூட ஆங்கிலம் வாயிலாகவே தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்ததாக இருக்க முடியாது. மொழிபெயர்ப்பு என்பது மிக அரிய கலை ஆகும். தமிழகத்தில் புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வரவேண்டும்.

_அவ்வை நடராஜன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.

மாணவர்கள் சரித்திரம், வேதியியல், பூகோளம், ரசாயனம், கணிதம் போன்ற பாடங்களுடன் கட்டாயம் இயற்கை இடர்ப்பாடுகள் போன்ற காலங்களில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை மேற்படிப்புக்கு ஓர் அடிப்படைத் தகுதியாக எப்போது நிர்ணயிக்கிறோமோ அப்போதுதான் நமது சமூகம் மேம்படும்.

- வி.ராமசுப்பிரமணியன், நீதிபதி, உயர் நீதிமன்றம்.

தமிழ் ஓவியா said...

கல்விக்கே முதலிடம்


வருங்கால இந்தியாவை வளம்பெறச் செய்வது _ வழிநடத்திச் செல்வது இன்றைய இளைய தலைமுறையின் எண்ணத்தில் _ செயலில்தான் உள்ளது. 18 வயதிலிருந்து 30 வயதுவரை உள்ள இளைஞர்களிடையே, 14 கருத்துகளை முன்வைத்தபோது கல்விதான் தங்களுக்கு முதலில் தேவை என்று கூறியுள்ளதாக இந்தியா டுடே _ சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

கல்விக்கு அடுத்த நிலையில், ஊழல், வேலை, விலைவாசி உயர்வு, சுகாதாரம், பொருளாதாரம்... என்று சென்று அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை 13ஆம் இடத்தையும் பாகிஸ்தான் பிரச்சினை 14ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, லக்னோ, பட்னா, ஜெய்ப்பூர், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஜூலை 16 அன்று எடுத்த இந்தக் கணிப்பு, இளைஞர்கள் தங்கள் தேவையை நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையும் அரசியல்வாதிகள் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

தமிழ் ஓவியா said...

கொலைவெறி கொண்ட மூடநம்பிக்கை


இனி அவரால் பேச முடியாது. காலையில் நடைப்பயிற்சி சென்ற அவர், சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டார். ஆனால், அவருக்காகப் பலர் பேசுகிறார்கள். அவர் எதைப் பற்றிப் பேசினாரோ அதைச் சட்டமாக்குங்கள் என்று உரக்கப் பேசுகிறார்கள்.

அவர்.. நரேந்திர தபோல்கர்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது பகுத்தறிவுவாதி. சதாரா மாவட்டத்தில் சோஷலிச இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். சர்வதேச அளவிலான கபடிப் போட்டிகளில் பங்கேற்றவர். மருத்துவம் பயின்று டாக்டரானவர். உடல் நோயைவிட தீவிரமாகச் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது சமூகத்தில் பரவியுள்ள நோய்தான் என்பதைத் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்தார் தபோல்கர். மதம், ஜாதி, கடவுள், புராணம், சடங்கு, சம்பிரதாயம், இத்யாதிகளின் பெயர்களால் இந்தியாவில் நிறைந்திருக்கும் மூடநம்பிக்கை எனும் நோய்க்குச் சிகிச்சையளிக்காமல் சமூகத்தை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியாது என்பதுதான் அவரது நிலை.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மகாராஷ்ட்ரா அந்தஷ்ரதா நிர்மூலன் சமிதி என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். போலிச் சாமியார்கள், மாந்த்ரீகர்கள், அற்புத சக்தியால் குணமளிப்பதாகச் சொல்பவர்கள் இவர்களுக்கு எதிரான இந்த இயக்கம் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல கிராமங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வரை பரவியது.

நான் கடவுளுக்கோ மதத்திற்கோ எதிரானவன் அல்ல. அந்த நம்பிக்கைகளின் பெயரால் நடைபெறும் மோசடிகளைத்தான் அம்பலப்படுத்துகிறேன் என்று அடிக்கடி சொல்வார் தபோல்கர். கோவில் கூடாது என்பதல்ல. அது, கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என இங்கே பராசக்தி பேசிய அதே வசனத்தின் சாரம்தான் தபோல்கரின் வார்த்தைகளிலும் இருந்தது. அதை மதவாதிகளும் பழைமைவாதிகளும் பொறுத்துக் கொள்வார்களா?

மிரட்டல்கள், தாக்குதல்கள் என பல நெருக்கடிகளுக்குள்ளானார் நரேந்திர தபோல்கர். ஆனாலும், அமைதியாகவே இருந்தார். காவல்துறையிடம் புகார் கொடுக்கக்கூட அவர் முன்வரவில்லை. கபடி ஆட்டக்காரராயிற்றே.. எந்தக் கோட்டைத் தாண்டும்போது எதிராளியை மடக்கலாம். எந்த எல்லையை நெருங்கும்போது எதிராளி நம்மை மடக்குவான் என்பதையெல்லாம் உணர்ந்தே இருந்தார். ஆனாலும், அவருடைய இயக்கப் பணிகள் தொடர்ந்தபடியே இருந்தன.

பார்வையற்றவர்களுக்குக் கண்ணொளி தருகிறேன் என ஒரு சாமியார் அற்புதம் நடத்துவதாக அறிந்து, ஒரு கிராமத்தில் அவருடன் நேருக்கு நேர் வாதம் செய்து, அற்புதத்தை ஊரறிய நிரூபிக்கச் சொன்னார் தபோல்கர். தன்னுடைய பெருந்திரளான பக்தகோடிகளுடன் அந்த சாமியார் வந்திருந்தபோதும் தபோல்கரின் சவாலை அவரால் ஏற்கமுடியவில்லை. செல்வாக்கு மிக்க பல சாமியார்களுக்கு எதிராக தபோல்கரும் அவரது இயக்கத்தினரும் போராட்டங்களை நடத்தியபோது மோதல்கள் ஏற்பட்டன. ஆள்வோரும், காவல்துறையும் எப்போதும் ஆன்மீக வியாபாரிகளின் பக்கம்தான் நிற்கும். அதையும் மீறி தபோல்கரின் இயக்கத்தினர் போராடினர்.

அகமத்நகரில் உள்ள ஷனி ஷிங்நாபூர் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என அவர் போராடியபோது, பழைமைவாத இயக்கங்கள் அவருடன் மோதின. கடைசியில், நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. அவருக்குத் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்தபடியே இருந்தன. அவரோ, இதுபோன்ற இயக்கத்தில் இருந்துகொண்டு சுதந்திரமாக நம் கருத்துகளை வெளிப்படுத்துவதேகூட இந்த நாட்டில் ஒரு போராட்டம்தான் என்றார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மகாராஷ்ட்ரா அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவருடைய போராட்டம் தொடர்ந்தபடியே இருந்தது. மதவெறியர்கள் அவரைக் குறிவைத்தபடியே இருந்தனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி பூனாவில் ஓம்கரேஷ்வரர் பாலம் மீது காலை நேரத்தில் அவர் நடந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் நரேந்திர தபோல்கரை சுட்டுத்தள்ளினர். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அதே இடத்தில் விழுந்து இறந்தார் தபோல்கர்.

அவரது படுகொலை மாநிலம் முழுவதும் உள்ள அவரது இயக்கத்தினரிடமும் ஆதரவாளர்களிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களிலும் இரங்கல் ஊர்வலங்கள் நடந்ததுடன், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்று என்ற முழக்கம் வலுப்பெற்றுள்ளது.

கடவுள் பெயரை வியாபாரமாக்கி மனிதர்களை ஏமாற்றாதே என்கிறது பகுத்தறிவு. கடவுளையும் சேர்த்து ஏமாற்றிவிட்டு மனிதர்களின் உயிரைப் பறிக்கிறது மூடநம்பிக்கை வெறி.

- கோவி.லெனின்

தமிழ் ஓவியா said...

தொலைத்ததைத் தேடவும் கருவி வந்தாச்சு..!


பேனா, பென்சில், சாவி, ரிமோட் போன்ற சிறிய பொருள்களிலிருந்து முக்கிய ஆவணங்கள், பணம் போன்றவை வரை அனைத்தையும் வைத்த இடத்தினை மறந்துவிட்டுத் தேடுவதிலேயே அதிக நேரத்தை நம்மில் பலர் செலவு செய்கிறோம். நேரம் வீணாவது மட்டுமன்றி, தேவையில்லாத மன உளைச்சல், அதனால் பிறர்மீது கோபப்படும் சூழல் ஏற்படுகிறது.

இந்த மன உளைச்சலிலிருந்து விடுபட உதவும். சென்சார் கருவியை ஜெர்மன் நாட்டின் உல்ம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளான புளோரியா சாப் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் அல்லது கணினியுடன் இணைத்து அதில் உள்ள தேடுதல் மூலம் ஓரிரு வினாடிகளில் தேடும் பொருளினைக் கண்டுபிடித்துவிடலாம்.

பைன்டு மை ஸ்டப் என்ற இந்தக் கருவியின் உதவியுடன் நாம் தொலைத்த பொருளின் பெயரை கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். ஓரிரு வினாடிகளில் நாம் தொலைத்த பொருள் இருக்கும் இடத்தைத் தெரிவித்து விடுமாம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, டிரான் மீட்டர் மற்றும் சிப்ஸ் மிகவும் சிறிய அளவில் இருக்கும்.

இதன் விலையும் மிகவும் குறைவு. இன்றைய உலகில் கணினியுடன் நாம் எதனுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். மேலும், தொலைப்பேசித் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் போனில் இந்தக் கருவியைப் பொருத்தலாம். அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் இந்தக் கருவியின் விலை ரூ.5,000 வரை இருக்கும் என்று விஞ்ஞானி புளோரியா சாப் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணம்


அய்.நா. மனித உரிமைக் குழுவின் செயலாளர், நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைத் தீவுக்குச் செல்கிறார்.

இந்த செப்டம்பர் மாதம் மனித உரிமைக் குழுக் கூட்டம்கூட இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைபற்றி, அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யும் பொறுப்பு, அவருக்கு இருக்கிறது.இந்தநிலையில் அவர் இலங்கைத் தீவுக்குச் செல்லுவது - மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இலங்கைத் தீவின் அரசியல் சமுதாயப் பிரச்சினைகள், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை நல்ல அளவு அறிந்தவர் நவநீதம் பிள்ளை. அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இலங்கை அதிபருக்குக் கிடையாது என்றாலும் நவநீதம் பிள்ளை அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவரல்லர்.

(1) இன்றைய நிலையில் ஈழத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலைகள் எந்த அளவில் உள்ளன? தமிழர்களுக்கான சொந்தமனைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா? தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?

2) தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் பற்றிய விவரம். தமிழர் பகுதிகளின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதன் உண்மை நிலைகள்.

3) தமிழர் வாழும் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலைமை. இராணுவத்தினரால் தமிழர்களுக்குத் தொடரும் அன்றாடத் தொல்லைகள்.
இளைஞர்களின் கெதி என்ன?

4) ஈழத் தமிழர்களில் வாலிபர்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலை, அவர்கள் உயிரோடு உள்ளார்களா? இன்னும் சித்திரவதை முகாம்களில் இருக்கின்றனரா?

துணைவர்களைப் போரில் பலி கொடுத்த இளம் பெண்களுக்கான மறுவாழ்வுக்கான திட்டங்கள் உண்டா?

4) முள்வேலி முகாம்கள் முற்றாக நீக்கப்பட்டு விட்டனவா?

5) சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை என்ன?

தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரே அவர்களின் நிலை என்ன? 6) வடக்கு மாநிலத்தில் தேர்தல் நடத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறதே. அது ஜனநாயக முறையில் நடக்குமா? அய்.நா. பார்வையாளர் அனுமதிக்கப்படுவாரா?

(எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே போன்றவர்களையும்கூட சந்திப்பது அவசியம்)

7) போர் முடிந்த பிறகு இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைக் குழு அய்.நா.வில் அறிக்கையாகக் கொடுத்தது (13.3.2012). இதுகுறித்து இன்றைய நிலையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது அறியப்பட வேண்டும்.

8) அய்.நா. நியமித்த மூவர் குழு அளித்த அறிக்கையில் (13.4.2011) சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் எந்த அளவு களையப்பட்டுள்ளன?

9) குறைந்தபட்சம் இலங்கை அரசு தங்களுக்குத் தாங்களே அழைத்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. (பெயர் பெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு) அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவையாவது நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.

10) இந்தியா அளித்த நிதி உதவியின் பலன்கள் முறையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா?

11) போரின் போது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் என்னென்ன? உண்மையில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்?

12) ஈழத் தமிழர்களைப் பல வகைகளிலும் துன்புறுத்திய பெண்களைப் பாலியல் வேட்டையாடிய சிங்களவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?

13) ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க எந்தெந்த நாட்டு இராணுவம் துணை புரிந்தது?

14) இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் எந்தெந்த வகைகளில் இருந்தன? 15) ஈழத் தமிழர்களின் எதிர்காலம் நம்பிக்கைக்கு உரிய வகையில் இருக்க வாய்ப்பு உண்டா?

16) பொதுவாக, பொது மக்களின் அபிப்ராயம் _- ஊடகங்களின் போக்கு எப்படி இருக்கிறது? ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மத்தியில் எது தீர்வு என்று கருதுகின்றனர்? என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து மனித உரிமைக் குழுவின் செயலாளர் என்ற முறையில் நவநீதம்பிள்ளை அவர்கள் கொடுக்கும் அறிக்கை உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்வதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசு நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான் என்றாலும், அதையும் கடந்து அவர்தன் கடமையைச் சிறப்பாகச் செய்வார் என்றே நாம் மட்டுமல்ல _- உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன.
அவர் பயணம் வெற்றியடையட்டும்!

- கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


இருப்பு


போடிநாயக்கனூரையடுத்த திருமலாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப் பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் கழிப்பதற் காக 4 கிலோ எடையுள்ள தங்கம் (மதிப்பு ரூபாய் ஒரு கோடி) பாதம் ஒன்றைச் செய்து ஏழுமலையானுக்கு அர்ப்பணம் செய்ய உள்ளா ராம்.

அதற்கான பூஜைகள் அவர் வீட்டிலேயே நடந்துள் ளன. அதற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர் (என்ன நடந்தாலும் அவாள் காட் டில் தான் மழை பெய்யும் போலும்!)

பலத்த பாதுகாப்புடன் (ஏன், ஏழுமலையான்மீது நம்பிக்கை இல்லையா?) அந்தத் தங்க பாதங்கள் கடந்த வெள்ளியன்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆகா, என்னே கடவுள் நம்பிக்கை - பக்தர்களின் மனப்பான்மை! நினைத் தால் வாயால் சிரிக்க முடிய வில்லை.

இதற்கு முன்பேகூட மூன்று கிலோ எடையில் தங்கத்தினாலான பூணூலை (கவனிக்கவும் கடவுளும் பார்ப்பன ஜாதிப் பட்டியலில்) காஞ்சி சங்க ராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி, திருப் பதி ஏழுமலையானுக்கு அணிவித்தார் (மாலை மலர் 16.3.2002).

காஞ்சிபுரத்தையடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் ரூபாய் மூன்று கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்ட தோடு நிற்கவில்லை, அவ ரின் செருப்புக்கும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் மக்களுக் காகப் பாடுபடும் தலைவர் களுக்குச் சிறப்பு செய்தால், அன்பளிப்புகள் வழங்கி னால் கேலி செய்யும் துக்ளக் சோ ராமசாமி தினமணி வைத்திகள், - குருமூர்த்தி வகையறாக்கள் இந்த சமூகத்துக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காத காரியங்களுக்கு பணத்தையும், தங்கத்தை யும் கொட்டி அழுவதுபற்றி குறைந்த பட்சம் முணு முணுக்கவாவது செய் கிறார்களா?

அதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதுபற்றி குருமூர்த்திகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்களே - முடங்கிக் கிடக்கின்றன தங்கக் கட்டிகள் டன் டன்னாக கோயில்களில். அதை அரசின் இருப்புக் குக் கொண்டு வந்தால் தீர்வு கிடைக்கும் என்று இந்தப் பொருளாதார பு(ளி)களின் பேனாக்கள், மை சிந்துவதில்லையே - ஏன்? கோயில்களின் இருப்பில்தானே இவாளின் ஆதிக்க இருப்பும் இருக் கிறது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வைஷ்ணவ அய்யர்


ஒரு நாளும் நான் அமைதியாய் இருக்க முடியாது
எனது ஆன்மாவை நிம்மதியாய் பற்றியிருக்கும் அது
என்னை ஒரு நாளும் நிம்மதியாய் இருக்க விடாது
முடிவற்ற போராட்டத்திற்காக நான் போராடியே ஆக வேண்டும்
எனவே சகலத்திலும் இறங்கிப் பார்ப்போம்
ஒரு போதும் ஓய்வில்லை ஒரு போதும் களைப்பில்லை
ஒரு போதும் வெற்று வார்த்தைகளை உச்சரிப்பதில்லை
எப்போதும் நம்பிக்கை எப்போதும் தாகம்
வலிஎனும் நுகத்தடிக்குள் கழுத்தை நுழைத்து
சோகப்பெரு மூச்சு விடுதல் மட்டும் வேண்டாம்
தாகம் நிறைந்தவனுக்கு முயற்சி செய்கிறவனுக்கு
சாதனைகள் இன்னும் மிஞ்சி நிற்கின்றன

-அருணனின் காரல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும் நூலிலிருந்து கோட்டைப்பட்டியில் கஷ்டப்பட ஆரம்பித்தவுடன் மீண்டும் எழ வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும், என்கிற எண்ணம் தாகம் இருந்ததாக எனது தகப்பனார் கூறுவார். அப்போது கோட்ப்பட்டியில் சுப்பையா என்ற நண்பருடன் சேர்ந்து கழுகுமலை சந்தையில் கடைபோட்டு வியாபாரம் செய்யலாம் என எண்ணினேன். சரக்கு வாங்க பணம் வேண்டுமே என்ன செய்வது?

நண்பன் சுப்பையா யோசனை சொன்னான். கழுகுமலை சந்தை பெரிய சந்தை; மாட்டுத்தாவணியும் நடைபெறும். நிறைய மாடுகள் விற்பனைக்கு வரும்; கூட்டம் அதிகமாக இருக்கும்; எனவே அங்கே தோசைக்கடை போடலாம் எனச் சொன்னான். நான் சொன்னேன் நானோ நாடார், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன், என் தோசை கடையில் யார் வந்து சாப்பிடுவார்? ஏற்கெனவே நாங்கள் ஊருக்குள் செருப்பு போட்டு நடக்கக்கூடாது.

பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது. நாடார் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். பின் எப்படிக் கடைபோடுவது? இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது. அதுதான் அய்யர் வேடம், பூணூல் போட்டுக் கொண்டோம் நெற்றியில் கைகளில் வயிற்றில் திருநீறு பூசிக் கொண்டு, தோசைக் கடை ஆரம்பித்தோம். சந்தையில் நான் தோசை சுடுவேன் உரு அணாவுக்கு நாலு தோசை, நண்பன் சுப்பையா பரிமாறி காசு வாங்குவான். நல்ல வியாபாரம் மதியம் இருக்கும் கோட்டைப்பட்டியில் இருந்து கழுகுமலைச் சந்தைக்கு வந்த ஒருவர் எங்களை பார்த்து விட்டார். அவர் அங்கு இருந்தவர்கள் இடத்தில் எங்கள் ஜாதியை சொல்ல என்னடா வேஷம் போடுகிறீர்களா? வேஷம் என எங்களை அடித்து விரட்டினார்கள். கிடைத்த வரை லாபம் என சாமான்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டோம். அய்யர் வேடத்தில் நாங்கள் கூட்ட தோசை சுவையாக இருந்தது. வேடம் கலைந்தவுடன் அது கசக்க ஆரம்பித்துவிட்டது. அன்று மாட்டுத்தாவணியில் மாடுகளுக்குக் கிடைத்த மரியாதை கூட மனிதர்களுக்குக் கிடைக்கவில்லை.

- (எஸ்.கே.நடராசன் எழுதிய பருத்திப் பழம் எனும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...


சாதிக் கொடுமைகளும், தீண்டாமையும்இந்தியாவிற்கு விடுதலை வேண்டு மானால், சுயராஜ்யம் வேண்டுமானால் வெள்ளைக்காரர் சுய நல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக் கமும் அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும் தீண்டாமை ஒழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், முத லாளித் தன்மை ஒழிய வேண்டும். இவ்வளவும் நடந்தபிறகுதான் வெள் ளைக்காரர் கொடுங்கோன்மை நம்மால் ஒழிக்கப்பட வேண்டும். ஒழிக்கப்படவும் முடியும் என்பது நமது முடிவு

- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

என் தந்தையார் அவர்கள் கிராமத் தில் வாழ்ந்தவர் கிராமங்களில் வியா பாரம் செய்தவர். அதனால் அக்காலத் தில் கிராம;ங்களில் சமூகத்தில் நடந்த சாதிக்கொடுமைகளையும், தீண்டாமை யையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர். அக்கால நிகழ்ச்சிகளை அடிக்கடி எங் களிடம் பகிர்ந்து கொள்வார். அது கேட் பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந் தவன். அக்காலத்தில் மேல் சாதிக் காரர்கள் வசிக்கும் தெருவில் காலில் செருப்புடன் நடக்க முடியாது கையில் செருப்பை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில் தெருக் கோடியில் உள்ள மரத்தடியில் செருப்பை விட்டுச்செல்ல வேண்டும். மேல்துண்டு போடக்கூடாது இடுப்பில் கட்டியிருக்க வேண்டும். கோயிலுக்குள் போக முடியாது. பொதுக் கிணறுகளில் குடிக்கத் தண்ணீர் எடுக்க முடியாது.

நான் 1942, 43-இல் தேனியில் குடி வந்து ஆண்டிபட்டிக்கு அருகில் உள்ள கீரபோத்தம்பட்டி, அம்மாபட்டி கிராமங்களில் மிளகாய்வத்தல் களம் போட்டிருப்பேன். மிளகாய் பழம் வாங்கி களத்தில் காயப்போட்டு வத்தல் ஆக்கி தேனி மார்க்கெட்டுக்கு விற் பனைக்காக கொண்டுவருவேன் நானும் என் தந்தையார் சண்முகவேல் நாடார் அவர்களும், மிளகாய் சீசன் நேரத்தில் கீரபோத்தம்பட்டி கிராமத்தில் தங்கி விடுவோம் என் தகப்பனார் சமையல் செய்வார். நான் மிளகாய் வாங்குவேன்.

கீரபோத்தம்பட்டி, அம்மாபட்டி கிராமங்களில் அதிகமான தேவர் சமு தாயத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்தார்க்ள அவர்களிடம் எனக்கு நல்ல பழக்கம். தெற்கே இருந்து ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் என்று எனக்கு எல்லா உதவியும் செய்வார்கள். மழைகாலத்தில் மழைவந்து விட்டால் காயும் மிளகாய் நனையாமல் இருக்க ஊர்மக்கள் ஆண், பெண் அனைவரும் ஓடிவந்து எனக்கு உதவுவார்கள்.

அந்த காலம் வெள்ளைக்காரன் காலம் ரேகை சட்டம் இருந்தது (குற்ற பரம்பரைச் சட்டம்) ரொம்ப கொடு மையான சட்டம், தேவர் சமுதாயத்தை சார்ந்த ஆண்கள் எல்லாம் சாயங்காலம் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து இரவு அங்குதான் படுக்க வேண்டும் விடிஞ்ச பிறகுதான் ஊருக்கு போகவேண்டும். ஒரு சிலர் தப்பு பண் ணுவதற்கு ஊரில் உள்ள விவசாயிகள், பெரியோர்கள் அனைவரும் நிலையத் தில் படுக்க வேண்டும். நானும் பல சமயம் இளவட்ட ஆட்களுடன் நிலையத்துக்கு படுக்க போயிடுவேன். அம்மாபட்டிக்கும் ஆண்டிபட்டிக்கும் 10 மைல் தூரமிருக்கும். நிலையத்திலி ருந்து ஊருக்கு வரும் போதே கண் ணில் பட்டதை தூக்கிட்டுவந்திடு வாங்க.

ஒரு சமயம் மிளகாய் பழ மூட் டையை தூக்கிட்டு வந்து என்கிட்டே வித்திடுவாங்க, காவலர்கள் என்னை தேடி கீரபோத்தம் பட்டிக்கு வந்திச்சு, ஊரில் இருந்த பெரிய தேவரு, என்னை டேய் கந்தசாமி நீ மரத்தின்மீது ஏறி உட்கார்ந்துக்க. காவலர்களை நாங்க பார்த்துக்கிறோம் எனச்சொல்லி காவலர்களைத் திருப்பி அனுப்பி வைச்சாங்க. காவலர் போனபிறகு மரத்தில் இருந்து இறங்கி வந்தேன்.

அதன்பிறகு ஆண்டிப்பட்டிக்கு அருகில் உள்ள தேக்கம்பட்டியில் வியாபாரம் செய்தேன். அங்கு அரிஜன மக்கள் வாழும் ஊர் அந்த ஊர் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து விளையும் சரக்குகளை நானே வாங்கிக் கொள்வேன் சரக்குகள் அனைத்தும் என்கமிசன் கடைக்குவரும். அப்ப அந்த ஊர் மக்கள் என்னை முதலாளின்னு கூப்பிட்டா.

அப்படி அழைக்க வேண் டாம் நானும் உங்களைப்போல் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்வேன். சிறுவயதில் என் னிடம் சாதிக் கொடுமை, தீண்டாமையை பற்றி ஒரு தாக்கம் இருந்தது. எனவே தேக்கம்பட்டி அரிஜன விவசாயிகளை தேனிக்கு கூட்டிவந்து என்கடையில் படுக்கச் சொல்வேன், தேனியில் அப் போது ரெங்கநாடார் கிளப் இருக்கும். அரிஜன விவசாயிகளை அங்கு கூட்டி சென்று எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட வைப்பேன்.

பல நேரங்களில் என் விட்டில் சாப் பாடு போடுவேன் என் மனைவி சுந்தரம் மாளும், அன்போடு அவர்களுக்கு சாப்பாடு போடுவா, அப்போது வீட்டில் 10, 15, பால் மாடுகள் இருக்கும் அந்த மாடுகளை தேக்கம் பட்டியில் தான் வளர்க்கவிடுவேன். மாடுகளை நல்ல முறையில் வளர்த்துக் கொடுப்பார்கள்.

யாரும் சாதி வித்தியாசம் பார்க்க கூடாது நான் சமுதாயத்தில் வளர்ந்தது எல்லா சமுதாயத்தினரின் அரவணைப் போடு தான் என தந்தையார் அடிக்கடி கூறுவார். நான் கோட்டப்பட்டி நாயக் கர் வீட்டு கஞ்சி குடித்து வளர்ந்தவன் என பெருமையோடு பேசுவார்.

(எஸ்.கே.நடராசன் எழுதிய பருத்திப்பழம் எனும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...


மோடி - வித்தை - இது புதுவிதம்!- ஊசி மிளகாய்


குஜராத் முதல் அமைச்சர் - நரேந்திரமோடி வித்தை காட்டுவதில் அவருக்கு இணை அவர்தான்! பழைய மோடி மஸ்தான் வித்தைக் காரர்கள் எல்லாம் இந்தப் புதிய மோடி அரசிய லுக்கு வந்தபின், பின் வாங்கிவிட்டார்கள் - இவருக்கு முன் தங்கள் வித்தை எடுபடாது என்று!

திடீரென்று ஒரு புது வித்தை காட்டி இந்தியாவையே அதிரச் செய்ய எண்ணி, கிறங்கி அவர் பாவம் வழமைபோல் ஏமாந்து விட்டார்!

பிரதமர் கனவு தனக்கில்லை; எம்மக்கள் 2017 வரை எம்மை குஜராத் முதல் அமைச்ச ராகவே வாக்களித்து ஆணையிட்டுள்ளார்கள். அதிலேயே தொடருவதுதான் என் விருப்பம்; பிரத மராவதல்ல என்று ஒரு போடு போட்டுள்ளார்!

பிரதமராக இவரை முன்மொழிந்த முக்கிய காரணி - ஆர்.எஸ்.எஸ். தலைமை தானே!

அத்வானிகளும், ஜஸ்வந்த் சிங்குகளும், யஷ்வந்த் சின்காக்களும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தபோது, இதை மோடி சொல்லியிருக் கலாமே! அப்போது சொல்லாத மோடி இப்போது கூறுகிறாரே! எந்த போதி மரத்தடியில் அமர்ந்து புதிய ஞானோதயம் பெற்றார்?

பா.ஜ.க., கட்சிக்குள் ஆயிரம் கோஷ்டிகள் - இதற்கு மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ்.தான்!

அந்த ரிங் மாஸ்டர் வந்து அங்கே தனித் தனியே வரும் கூச்சல்களை அடக்க, சாட்டை எடுத்து வருவார் தீர்ப்பார்.

இப்படி மோடி மனமாரச் சொல்கிறார் என்று நினைக்க நாட்டில் அவ்வளவுப் பைத்தியக் காரர்களா நிறைந்துள்ளார்கள்?

உடனே இங்குள்ள சோக்களும், குரு மூர்த்திகள் போன்ற பார்ப்பனர்களும் மேலும் மோடியைச் சிலாகித்து எழுதிக் குவிப்பார்கள்.

இணையதளத்தைப் பயன்படுத்தி இமேஜ் பில்டப் நடத்தி, பலரும் பாடுபட்டு ஓநாய்க்கு பசுத்தோல் போர்த்தி, கோமாதா எங்கள் குலமாதா என்று காட்டிட ஒற்றைக் காலில் நின்று தவமோதவம் செய்கின்றனர்!

மோடியைக் களம் இறக்கினால் அதைவிட மற்ற முற்போக்காளர்கள் - மதச் சார்பற்றவர்கள் வருவதற்கு அதைவிட நல்ல வாய்ப்பு வேறு இருக்கவே முடியாது.

*மலிவான விளம்பர ஸ்டண்ட் அடிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? சீப் (Cheap) பப்ளிசிட்டி உத்திகள் ஏராளம் வைத் துள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு வேடங்களான இந்து முன்னணி போன்றவை களாகும்.

திண்டுக்கல்லில் யாரோ ஒருவர் இந்து முன்னணி (ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்)யைச் சார்ந்தவர் வீட்டில் குண்டு வீசப்பட்டதாக அவரது மனைவி, குடும்பத்தவர்களை, விட்டு, பேட்டி கொடுக்கச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் (பிரவீன் என்ற ஒருவர் என்று நினைக்கிறோம்).

அதுபற்றி அங்குள்ள காவல் துறையின் கண்காணிப்பாளர் தலைமையில், (அந்த காவல் துறை கண்காணிப்பாளர் மிகவும் திறமையாக எப்பக்கமும் சாயாத நேர்மையாளர்) உடனே துப்பு துலக்கப்பட்டு உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்! சிறுபான்மையினர்மீது பழி போட்டது அம்பலமாகியது.

உண்மைக் குற்றவாளி யார் தெரியுமா? இந்த நபரே - இப்படி ஒரு ஜோடனை; குண்டு எறிந்து, தனக்குத்தானே விளம்பரம் தேடிக் கொண்டார்! கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசியில் இந்து முன்னணியினர், தங்கள் ஆள் ஒருவரை பலிகடாவாக்கி பழியை சிறுபான்மைச் சமூக இஸ்லாமியர்மீது போட்டு பிறகு காவல்துறை இந் தக் கொடுமையை அம்பலப்படுத்திடவில்லையா?

இதுமாதிரி மோடிகளின் ஒப்பனை பிரமாதம்-

திருச்சியே திக்குமுக்காடப் போகிறதாம்!

பிரதமராகும் முன்பே மோடியின் பேச்சின் காரம், கடுமையான பதப்பிரயோகங்களின் தன்மை அவரைத் தலைமைப் பண்புக்குரியவராக காட்டுகிறதா?

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது முந்தைய பழமொழி.

மோடி மோகம் அவ்வளவு நாள்கூடத் தாங்காது; தாங்கவே தாங்காது!

இது, போகப் போகப் புரியும்! - இந்த மோடியின் வாசனையும் தெரியும்.

தமிழ் ஓவியா said...


வகுப்புரிமை


வகுப்புரிமைக்காகப் பாடுபட்டு மானத்தைக் காப்பாற்றக் கொல் லப்படும் செய்கைக்கும் நாம் தயாராக இருக்கவேண்டும். அப்போது நமது உரிமை காக்கப் படுவதுடன், நல் வாழ்வும் பெற முடியும். மானம் காத்தவருமாவோம். - (விடுதலை, 13.8.1965)

தமிழ் ஓவியா said...


போலி என்கவுண்டர் புகழ் மோடி முதல்வராகத் தொடரலாமா?


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நேற்று குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெற்றுள்ளது.

பரிசுத்த யோவான் வேடம் போட்டு, நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்படும், பிரதமருக்கான வேட்பாளர் என்ற பொய்க்கால் குதிரைமீது, சவாரி செய்யும் இந்த ஜிகினா மனிதரின் உள்ளீடு என்ன?

ஏற்கெனவே, வண்டி வண்டியாக அவரைப்பற்றிய சமூக விரோதத் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன; என்றாலும் சிறைச்சாலையிலிருந்து தன் பதவியை பதவி விலகல் செய்தும், குஜராத் முதல் அமைச்சர், முந்தைய உள்துறை அமைச்சர், மற்றும் குஜராத் மாநில அரசுமீதும் குற்றப் பத்திரிகையைப் படிக்கும் வகையில் 20 பக்கங்களைக் கொண்ட, அறிக்கை யினை வெளியிட்டுள்ளார் குஜராத் மாநில அரசின் டி.அய்.ஜி.யான டி.என். வன்சரா.

இவர்மீது போலி என்கவுண்டரில் கொலை செய்த வழக்குப் பதிவாகி, அதன் அடிப்படையில்தான் 2007ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் சபர்மதி சிறையில் இருந்து வருகிறார்.

சொராபுதீன் ஷேக் மற்றும் இஸ்ரத் ஜஹான் ஜாவேத் ஷேக், அம்ஜத் அலிராணா, ஜீஷன் ஜோஹாய் ஆகியோர் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளில் டி.அய்.ஜி. வன்சாரா சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

சொரபுதீன் ஷேக்கைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த வழக்கில் உச்சநீதிமன்றம், மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசுக்குச், சரியாகச் சூடு கொடுத்தது. வழக்கை சி.பி.அய். விசாரித்தது; அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் உரையாடல் அடங்கிய குறுந்தகடு (சி.டி.) மத்தியப் புலனாய்வுத் துறையிடம் வழங்கப்பட வில்லை. அதற்காக உச்சநீதிமன்றம் மோடி அரசைக் கடுமையாகச் சாடியது.

இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மோடி அரசால் போலி என் கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர் என்பது மிகப் பெரிய சோகமாகும்.

குஜராத் காவல்துறையை நம்ப முடியாது; என்று உயர்நீதிமன்றம் வெகு வெளிப்படையாகவே கூறி, வழக்குகளை சி.பி.அய்.யிடம் ஒப்படைத்தது. மோடி எந்த அளவுக்கு யோக்கியமாக ஆட்சி செய்தார்? என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே போது மானது.

2004 ஜூன் 15ஆம் தேதி போலி என்கவுண்டரில் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப் பட்டனர். இவர்கள்மீது குஜராத் அரசு வைத்த குற்றச்சாற்று என்ன தெரியுமா?

இவர்கள் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்போடு தொடர்பு கொண்டவர்கள்; குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் என்று குற்றஞ் சாட்டப் பட்டுக் கொலை செய்யப்பட்டனர் காவல்துறையால்.

இதனை எதிர்த்து இஸ்ரத் ஜஹானின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். மத்தியப் புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் முன் வைத்தனர். ஆனால், குஜராத் அரசோ கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. ஆனாலும் உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய் வுக் குழுவை நியமித்தது. 2011 நவம்பர் 18 அன்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர்களும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறியது. அதில் இஸ்ரத் ஜஹான் ஜூன் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே கொல்லப்பட்டு, அவரது பிணம், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பிணத்தின்மீது குண்டுகளைப் பாய்ச்சி, குஜராத் காவல்துறை நாடகம் ஆடியது, என்றெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது.

ஹிட்லர் ஆட்சியில்கூட, நடந்திராத இத்தகைய கொடூரங்கள், இந்த மோடி மஸ்தான் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது.

இந்தப் போலி என்கவுண்டர்களை நடத்திய காவல்துறை அதிகாரி டி.ஜி. வன்சாராதான் இப் பொழுது உண்மையான குட்டுகளை உடைத்துக் காட்டியுள்ளார்.

இந்தப் போலி என்கவுண்டர் கொலைகளை நடத்தச் சொன்னது எல்லாம், அவற்றிற்கு வழி காட்டியதெல்லாம் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சராகவிருந்த அமித்ஷாவும்தான் என்று அறிக்கையில் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தார்.

பாவம்! மோடியைத் தூக்கிப் பிடித்த, பார்ப்பன ஊடகங்கள் எல்லாம் இஞ்சி தின்ற குரங்குகளாகக் காணப்படுகின்றன.
தன் அரசியல் எதிரிகளைப் போலி என்கவுண்டர் மூலம் கொன்ற ஒருவர் முதல் அமைச்சராகத் தொடரலாமா என்ற கேள்வியோடு குஜராத்தில் முழு அடைப்பு நடைபெற்றது நேற்று .

இதற்குப் பிறகும், மோடிதான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்றால் அதைவிட வெட்கக் கேடு, வேறு எதுவாக இருக்க முடியும்?

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள்


ஆசிரியருக்குக் கடிதம்

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள்

சமூக நீதி காவலர் மற்றும் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வணக்கம்!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இடஒதுக்கீடு தொடர்பாக விடுதலை நாளிதழில் கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள்.

கடந்த 18.8.2013 அன்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி தங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்வித் தாள் தயாரிக்க கல்வி வல்லுநர் குழுவை தமிழக அரசு மற்றும் ஆசிரி யர் தேர்வு வாரியம் அமைத்துள்ளது. விடைகளில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் வல்லுநர் குழுவே பொறுப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

மதிப் பெண் குறைப்பு இல்லை என தமிழக அரசு கூறிய நிலையில் கேள்வித்தாள் தரம் உடையதாகவும் மற்றும் விடைகள் மாற்றம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தேர்வு நடத்த, தகுதித் தேர்வின் பிறகு விடைகள் வெளியிடப்பட்டு இதில் ஏதாவது ஆட்சேபங்கள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை சந்தித்து சரிசெய்து கொள்ளலாம் என ஆசிரி யர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன் பின் ஒரு கீ வெளியிடப்பட்டது. அப்புறம் எதற்கு கல்வி வல்லுநர் குழு. தேர்வு எழுதிய ஆசிரியர் அலுவலகத்தை சந்தித்தாலே முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சென்ற முறையும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படு கிறது. அதே சமயம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் விடைகளில் குளறு படியில் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிபதி நாகமுத்து தீர்ப்பிற்குப்பின் பின்னர் விடைகள் சரிசெய்யப்பட்டு வெளியிடப் பட்டன.

அதே சமயம் 2012 தகுதித் தேர்வு விடைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது சென்ற ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இவர் களது குளறுபடியால் 88/89 மதிப்பெண் எடுத்த ஆசிரியர்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழக அரசு எதுவும் கவலைப்படவில்லை.

18.8.2013-இல் இந்த ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கீ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது முடிவான கீ இல்லை 3.9.2013 அன்று வெளியிடப்படும். கீ முடிவானது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது (நன்றி: தினமணி)

தமிழகத்தில் விடைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கொடுக்கப் பட்டு ஆசிரியர் தேர்வு கேலிக்கூத் தாக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்வித் தாள் முன்கூட்டியே வெளி யான செய்தியும் விசாரணையும் நடந்து வருவது ஊடகங்கள் மூலம் தெரிய வரும் நிலையிலும் வழக்குரைஞர் பழனிமுத்து பொதுநல வழக்கு செப்டம்பர் 17 அன்று நீதிமன்றத்தில் வரும் நிலையில் மற்றும் உயர்நீதி மன்றத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கபட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறிய நிலையில் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக செயல்பட்டு பணிவழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியான விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையெனில் மறு தேர்வு நடத்தபட வேண்டும். விடை சம்பந்தமாக தேர்வு நடத்தும் அலுவ லகத்தை தேர்வு எழுதியவர்களையே அணுகச் சொல்வது எந்த தேர்வு வாரியத்திலும் இல்லாத நடைமுறை மற்றும் அந்த அலுவலகத்தின் தேர்வு குளறுபடி யானது என்பதை சுட்டிக் காட்டுகிறது. வல்லுநர் குழு செய்யும் குளறுபடிக்கு தமிழக கல்வியியல் பல்கலைக்கழகம் தகுதித் தேர்வு நடத்தினால் நல்லது.

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு


சரவணா இராஜேந்திரன்

தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும், சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன. அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம் கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார் சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது. இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர். தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும் எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.

சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும், அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)

கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும் தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர். ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்),

- இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்? (வே.கன்னுப்பிள்ளை) அய்.ஏ.எஸ்.

தமிழ் ஓவியா said...


நாத்திகக் கருத்தெலாம் நடைமுறைப்படுத்தினார் நரேந்திர தபோல்கர்!

மராத்தா மாநிலம் சதாரா மாவட்டம்

மாமேதை குலக்கொழு ந்தாம்
மனிதரின் நேயராம் மனதிலே தூயராம்
நரேந்திர தபோல்கரே!

நாத்திகக் கருத்தெல்லாம் நடைமுறைப் படுத்தினார்
நரேந்திர தபோல்கரே!
நல்லதோர் மருத்துவர்! மடமையை வெறுத்தவர்!
நரேந்திர தபோல்கரே!

அஞ்சாத உண்மைகள் நெஞ்சிலே கொண்டவர்
அறியாமைக்கு எதிரானவர்!
அகலாத கொள்கையே செயலாக வாழ்ந்தவர்
நரேந்திர தபோல்கரே!

சிரித்திடும் முகத்தவர்! பழித்திடும் பகைவரின்
சினத்தையும் முரித்தவர்தாம்!
சிந்தனை வளர்த்தவர் நொந்தவர்க் குதவினார்
நரேந்திர தபோல்கரே!

சிங்காபூர் கோயிலில் பெண்களுக்கு உரிமையாம்
சீர்திருத்தம் புரிந்தார்!
செய்தியாளர்கூட்டம் திறமையாய் நடத்தினார்
நரேந்திர தபோல்கரே!

மராத்தியில் மூடநம்பிக்கைஒழிப் பென்னுமோர்
மக்களமைப் பாக்கியவர்!
மாந்தரில் தாழ்வுயர் வற்றிடத் துணிந்தவர்
நரேந்திர தபோல்கரே!

பொதுநீர் எடுத்திடத் தாழ்ந்தவர் துணையாய்ப்
புத்தெழுச்சி ஊட்டினாரே!
பொல்லார் எதிர்ப்புகள் எல்லாம் ஒழித்தவர்
நரேந்திர தபோல்கரே!

பில்லிசூனியப்பேயின் பெருங்கேட்டை எதிர்த்தவர்!
பிதற்றியே திரிந்திடும்
பெருவேடச் சாமியார் பிழைகண்டு கொதித்தவர்
நரேந்திர தபோல்கரே!

சட்டமன்றத்திலொரு சட்டவரை வதுதாக்கல்
தனைச்செய்தார்! மடமையொடு
சார்ந்துள்ள சாத்திரப் பொய்ம்மை தகர்த்தவர்
நரேந்திர தபோல்கரே!

ஆகஸ்டு இருபதில் அதிகாலை வேளையில்
அகவை அவர்க் கெழுபத்தொன்றே
அன்று நடைப் பயிற்சியில் சென்று கொண்டிருந்தவர்
நரேந்திர தபோல்கரே!

ஒங்காரேஷ் வரர்கோயில் தீங்கான தே அருகில்
உடனிருவர் சுட்டபோதில்
ஓய்வுற்றது இதயமே! சாய்வுற்றார் உடலுமே!
நரேந்திர தபோல்கரே!

அரசாணை முதல்வரால் அதிவிரைவில் நடந்தது!
அவர்தொண்டு நிறைவானதே!
அறிவிலார் மடமைகள் அகன்றிடச் செய்தவர்
நரேந்திர தபோல்கரே!

மத்திய அரசுடன் மாநில அரசுகள்
மடமைகள் ஒழிக்க என
மானமிகு வீரமணி வேண்டினார்! தூண்டினார்!
மக்களும் விழிப்படையவே!

பொய்ம்மைகள் அகன்றிடப் புதுமைகள் மலர்ந்திடப்
புத்துணர்வு ஊட்டினாரே!
புரையோடி வளர்ந்திட்ட அறியாமை ஒழிந்திடப்
புதுச்சட்டம் இயற்ற வேண்டும்!

- பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

தமிழ் ஓவியா said...


தண்ணீரின் பயன்கள்மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, உடல் சூடு இவைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பிறகு, உறக்கத்திற்கு முன்பு, உறக்கத்தில் எழும்போது, உறங்கி எழுந்தவுடன் என எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் கடுமையான பசியின்போது மட்டும் நீர் பருகுவது தவறு.

தமிழ் ஓவியா said...


இரு அரிய நிகழ்ச்சிகள் பூரிப்பும், புளகாங்கிதமும்!கடந்த இரண்டு நாள்கள் அளவிலா மகிழ்ச்சி ஆம்! பூரிப்பும், புளகாங்கிதமும் அடைந்த நாள்கள்!

தாயகத்திலும் அமெரிக்காவிலும் நடந்த நிகழ்வுகள் தான் மகிழ்ச்சிக்குக் காரணம்.

தமிழ்நாட்டில் எத்தனை இடங் களில் பெரியார் இளந்தலைமுறையின ரிடம் உலா வந்தார்? அதில் எத்தனை பெண் குழந்தைகள்? பெரியார் பற்றிய போட்டிக்கு இவ்வளவு ஆர்வமா? இத்தனை இடங்களில் போட்டிகள் நடந்தனவா? இது என்ன வெறும் பரிசிற்காகவா? நாம் ஒன்றும் வாரி வழங்கவில்லையே! மற்றவர்களைப் போல் நமக்கு விளம்பரம் அளிக்கும் ஊடகங்களும் இல்லையே? குழந்தை களே உங்கள் ஆர்வத்திற்கு மேலும் மேலும் ஊக்கமளிப்போம் என்று கூற வைத்து விட்டீர்களே!வாழ்க பெரியார்! என்ற பூரிப்பு நெஞ்சை நிறைவு செய்கின்றதே! உங்களுக்கு நன்றி! நன்றி!! அடுத்து அமெரிக்கா வில் வாசிங்டன் அருகே நடந்த புறநானூற்று மாநாடு. ஆம்! புரட்சிக் கவிஞர் சொன்ன நூலைப் படி! சங்கத் தமிழ் நூலைப் படி! என்று சொன்னதை மேற்கோள் காட்டிப் பேசினார்கள்.
அங்கும் தந்தை பெரி யாரைப் பற்றிப் பேசினார்கள். ஓர் ஆறு வயதுச் சிறுமி புறநானூற்றைப் பற்றி அய்ந்து மணித்துளி அழகாகப் பேசி, பத்துப் பாடல்களையும் மனப் பாடம் செய்து சிறு தவறும் இல்லாமல் உண்ர்ச்சியுடனும், கண் உருட்டியும், கையசைத் தும், பாடியபோது மெய் மறந்து, வாய் பிளந்து அரங்கம் கேட்டது. மற்றொரு 8 வயது நமது இயக்கக் குடும்பத்துச் சிறுமி 15 பாடல்கள் போல் பாடிப் பரிசைத் தட்டிச் சென்றார். இன்னும் பல சிறுவர்களும் சிறுமியர்களும் பாடிய விதம், வார்த்தைகளையும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து அறிஞர் பெருமக்கள் மருதநாயகம், முருகரத் தினம், அறிவு நம்பி கவிஞர் அறிவுமதி போன்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா தமிழ்த்துறைத் தலைவர் வாசு ரெங்க நாதன், மற்றும் அமெரிக்காவில் மற்ற துறைகளில் வல்லுநர்களாக இருந்தா லும் தங்கள் தமிழார்வத்தால் ஆராய்ச் சிக் கட்டுரைகள் படித்த முனைவர்கள் ராஜ் முத்தரசன், கல்வெட்டு ஆராய்ச் சியின் உண்மை நிலை பற்றியும், புற நானூற்றுக் கால ஜாதி என்பது பற்றிச் செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் உண்மைகள், பிறப்பால் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் பற்றி சங்கரபாண்டி அவர்களும் விளக்கினர். பெண்பால் புலவர்கள் பாடியிருந்தாலும் பெண் ணடிமைச் சிந்தனைகள் இருந்தது பற்றி யும், எப்படிப் பலநூற்றாண்டுகளுக்குப் பின்னும் தந்தை பெரியார் தொண்டின் வழி முன்னேறிய பெண்கள் நாம், புதிய நானூறு படைக்க வேண்டும் என்று மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களும், தூத்துக்குடியில் சிறந்த குடும்பத்தில் பிறந்து இப்போது ஹவாய் தீவில் வாழ்ந்துவரும் வைதேகி சங்க இலக்கியம் என்ற பெரும் புதையல் பற்றி தாமாகவே அறிந்து அவையனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவர் வாழும் ஹவாய் தீவில் சங்க இலக்கியம் என்பது கற் றோர் அனைவரும் தெரிந்து வியப்படைகின்றார்கள் என் பதைச் சொல்லிப் பாராட்டும் பெற்றார்கள். தமிழ்க் குடும்பத்து மேகலா ராமமூர்த்தி அரசியல் சிந்தனைகள் புறநானூற்றில் எப்படிச் சிறப்பாக வெளிப்படுத் தப்பட்டுள்ளன என்பதை அழுத்தத்துடன் உரைத்தார். கவிஞர் அறிவுமதி உணர்ச்சிப் பிழம்பாய் புதிய புறநானூறு படைத்த ஈழ உடன்பிறப்புக்களை உயிருடன் படைத்தார்.

இவை அனைத்திற்கும் காரணமான முனைவர் பிரபாகரன், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவையும், அவருடன் சேர்ந்து மாதமிருமுறை ஒவ்வொரு பாடலாகப் படித்து ஆய்வு நடத்திய அத்தனை பேருக்கும் மற்றும் உதவியளித்த அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கும் நன்றி தெரிவித்துப் புறநானூறு பற்றிய, தம் ஆய்வுகளைப் படைத்தார். நூலையும் வெளியிட்டார். அந்தக் காலத்து மதம், வீரம், சமுதாயம், கல்வி, நீர், நில வளம், எல்லாம் பற்றிச் சொல்லி, ஒற்றுமையில்லாமல் அழிந் தார்கள் என்பதை எடுத்துரைத்தார். புறநானூற்று வீரம் உண்மை என்பதை ஈழத்தில் கண்டோம். தந்தை பெரியார் மூலம் தான் மனித நேயம், பெண் ணுரிமை தமிழினத்திற்கு வந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

புறநானூற்றுப் பாடல்கள் சிறுமியர் யாழினி பொற்செல்வன், பாரதி மலர்ச் செல்வன் இசைத்தனர். பாரதி பாடிய இசைத் தட்டு வெளியிடப்பட்டது. வீரவரலாறு நாட்டிய நாடகமாகப் படைக்கப்பட்டது. கவிமாமணி இலந்தை ராமசாமியார், உ.வே.சா புறநானூறு திரட்டியதையும், உவமை கள் கையாளப் பட்டுள்ள சிறப்புக் களையும் பாராட்டிப் பேசினார். .

புதுக்கோட்டைத் தமிழர் மேரிலாந்து மாநிலத்தின் துணை மாநிலச் செயலர் மேதகு நடராசன், மேரிலாந்து மாநில ஆளுநரின் வாழ்த்தையும் செப்டம்பர் முதல்வாரம் மேரிலாந்து மாநிலத்தில் புறநானூற்று வாரம் என்ற அறிவிப்பையும் வாழ்த்தி வழங்கினார்.

-- சோமசுந்தரம் இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


ஜஸ்டிஸ் திருநாள்பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையை ஜஸ்டிஸ் 10 ஆவது வருஷ நாளாகக் கொண்டாடும்படி தலைவர் பனகல் ராஜா அவர்கள் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அந்நாளைக் கொண்டாட வேண்டிய விதம் என்னவென்றால் ஜஸ்டிஸ், திராவிடன், குடிஅரசு பத்திரிகைகளுக்குச் சந்தாதாரர்களை சேர்ப்பதுதான். வாலிபர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் அன்றைய தினம் ஏதாவது ஒரு புது சந்தாதாரரையாவது சேர்த்து விட்டுத்தான் சாப்பிடுவதாக விரதமெடுத்துக் கொள்ளவேண்டும். ஜஸ்டிஸ் பத்திரிகையில், ராய்ட்டர் அசோசியேட் பிரஸ் பிரீ பிரஸ் ஆகிய தந்தி நிருபங்கள் மாதம் 1-க்கு 1000 ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் வாங்கி சென்ற மாதம் முதல் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. திராவிடனுக்கும் அசோசியேட் பிரஸ் நிருபங்கள் வாங்கி பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பிப்ரவரி 26 ஆம் தேதியை இவற்றிற்கு சந்தா சேர்க்கும் தினமாக கொண்டாட வேணுமாய் பார்ப்பனரல்லாத வாலிபர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

- குடிஅரசு தலையங்கம், 20.02.1927

தமிழ் ஓவியா said...

வேண்டுகோள்

தஞ்சை ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப் பிற்கிரையாக்கியதாக திராவிடன் பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆட்சேபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு, மனித சமுகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங் களையும், தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதங்கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்லவென்றே நினைக்கிறோம்.

யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடம் கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மை இருந்தால் அக்கூட்டத் திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும், பேசவும் அனுமதி கிடைக்கா விட்டால் கண்ணியமாயிருந்து மறுநாள் கூட்டம் கூட்டி இதைப்பற்றி பேசலாம், கண்டிக்கலாம், சமாதானம் சொல்லலாம். இதுதான் யோக்கியர்களுக்கழகு. அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கலவரம் செய்வது என்பது கலவரம் செய்பவர்களையும், அவர்களது கொள்கை களையும் பலக்குறைவாக்கி விடுகிறதோடு, பேசுபவர் களுக்கு யோக்கியதையை உண்டாக்கி விடுகிறது. நாம் போன இடங்களிலும், இரண்டொரு இடங்களில் இம்மாதிரி சிலர் முயற்சித்தும் நாம் சவுகரியப்பட்ட இடங்களில் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து சமாதானம் சொன்னதில் கேட்க வந்தவர்கள் நமது கொள்கையை ஏற்றுக்கொள்ள நேர்ந்ததோடு, நமது கொள்கைகளுக்கு முன்னிலும் அதிகமான பொதுஜன ஆதரவு கிடைத்ததேயல்லாமல் நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

கேள்விக்கு சமாதானம் சொல்ல முடியாதவர்கள் வெளியில் போய்ப் பேசுவது என்பது கேவலமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது கொள்கைகளும், தீர்மானங்களும் நம் மனதிற்கு உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம். நமக்கே உறுதி இல்லாமல் மற்றோரை ஏமாற்றுவதானால் மாத்திரம் பதில் சொல்லுவது கஷ்டம்தான். ஆகையால், மற்றவர்களைப்பற்றி கவலை இல்லாமல் நமது கட்சியைப் பொறுத்தவரையிலாவது ஒழுங்காய் நடந்து கொள்ள வேண்டும். யார் வந்தாலும் தாராளமாய்ப் பேச இடம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளு கிறோம்.

- குடிஅரசு செய்தி, 10.04.1927

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவதை நிறுத்திடவேண்டும்! தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்!


சென்னை, செப். 7-இலங்கைக்குப் போர்க் கப்பல் வழங்கும் முயற்சியினை தொடக்கத்திலேயே நிறுத்திடவும், இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்த்திட இந்திய அரசு முன்வரவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கேள்வி - பதில் வருமாறு:

கேள்வி: கடல் எல்லையைப் பாதுகாப்பதற்காக இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை இந்தியா வழங்குவதாக இன்று செய்தி வெளி வந்திருக்கிறதே?

கலைஞர்: ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதைத்தான் இது நினைவூட்டுகிறது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய நேரத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து என்னுடைய உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், சிங்கள அரசினால் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் துன்புறுத்தப்பட்ட நேரத்தில் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தற்போது இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது என்ற செய்தியின் மூலம், இந்திய அரசு இலங்கை அரசுக்குத்தான் உதவி செய்கிறதே தவிர, இலங்கை யிலே வாழும் தமிழர்களுக்கோ மற்றும் இந்திய மீனவர்களுக்கோ அனு சரணையாக இல்லை என்று சிலர் தொடர்ந்து எடுத்துவைத்து வரும் குற்றச்சாட்டு உறுதியாகி விடுகிறது. கடல் எல்லையைப் பாதுகாக்க இந்தியா இலங்கைக்கு வழங்கிடும் இரண்டு போர்க்கப்பல்களிலே இருந்து கொண்டு, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவார்கள். இந்திய அரசின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று தினத்தந்தி நாளிதழே வர்ணித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தக் கப்பல்கள் இலங் கைக்கு வழங்கப்படும் என்று தகவல் கூறப்பட்ட போதிலும், இப்படிப்பட்ட முயற்சி யினை தொடக்கத்திலேயே நிறுத்திடவும், இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்த்திடவும் இந்திய அரசு முன்வர வேண்டு மென்று வலி யுறுத்துகிறோம்.

- நன்றி: முரசொலி, 7.9.2013