Search This Blog

19.9.13

சிங்கள அரசு தமிழ் மீனவர்களைக் கொன்று குவிப்பதற்கு கச்சத்தீவு பிரச்சினை காரணமா?

கச்சத் தீவின் கண்ணீர்!

புலி வருகிறது புலி வருகிறது என்று சொல்லப் போய் இப்பொழுது நிஜப் புலியே வந்து விட்டது.
கச்சத்தீவு பிரச்சினையில் இந்திய அரசு நடந்து கொண்ட விதம் கொஞ்ச நஞ்சம் தமிழர்களுக்கு இருந்த ஒட்டும் உறவும்கூட அறவே சாகடிக்கப்பட்டு விட்டது.
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று முதன் முதலாக திராவிடர் கழகம் இராமேசுவரத்திலே கச்சத் தீவு மாநாடு கூட்டி (26.7.1997) தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழக்குத் தொடுத்தார். (29.7.1997).
அ.இ.அ.தி.மு.க. சார்பிலும், டெசோ சார்பிலும் இதே காரணத்துக்காக வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு விரோதமாக ஏற்கெனவே இந்தியா முறை கேடாகப் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் நிழலில் நின்று பச்சைக் கொடி காட்டி - தமிழர்கள் மத்தியில் துரோகப் பட்டத்தைச் சுமந்து கொண்டு விட்டது.
2012 சனவரியில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் போடப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் மத்திய கடலோரக் காவல் படையினர் தாக்கல் செய்த மனு ஒன்றில் தமிழக மீனவர்கள்  எல்லை மீறுவதாகவும் சர்வதேசக் கடல் எல்லையில் இருந்து தமிழகக் கடல் பகுதியில் 5 கி.மீ., வரை கடல் மீன்பிடி தடை மண்டலமாக தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென்றும் கூறி யதே! கடும் எதிர்ப்புப் புயல் தமிழ்நாட்டில் வெடித்துக் கிளம்பிய நிலையில் அது பின்வாங்கிக் கொள்ளப்பட்டது.
285.20 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தமிழ்நாட்டின் இராமேசுவரத்திலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவு (சர்வே எண் 1250) தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ப தற்கு ஆயிரம் ஆயிரம் ஆவணங்கள் உண்டு.

ஒருக்கால் கண்களை மூடிக் கொண்டு கையொப்பமிட்டதால் இந்த ஆவணங்கள் இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும்;
ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரை (1949 செப்டம்பர் 7ஆம் தேதி வரை) கச்சத்தீவு இராமநாதபுரம் சமஸ்தானம் வசமே உரிமையுடையதாக இருந்தது. இந்தத் தீவைச் சுற்றி மீன்பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருந்தார். கச்சத் தீவு இரா மேசுவரம் கர்ணத்தின் எல்லைக்குட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1880 செப்டம்பர் 7இல் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்தல், சங்கு எடுத்தல் போன்றவற்றிற்கு முத்துசாமி பிள்ளை என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியது. சேதுபதி சமஸ்தானம்; இது ராமேசுவரம் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது (2.7.1880).
1921ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்து ஒரு கூட்டம்  வெள்ளையர் ஆட்சியின் போது ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை அரசு கச்சத்தீவு தங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கோரியபோது இராமநாதபுரம் அரசர் குடும்பத்தினர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, இலங்கையின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கிழவன் சேதுபதி காலத்தில் அவரது கப்பல் படையினர் இந்தத் தீவில்தான் முகாமிட்டிருந்தனர். கிழவன் சேதுபதி என்ற ரகுநாத சேதுபதி காலத்தில் சேது மன்ன ருக்கும், டச்சுக்காரர்களுக்கும் நடைபெற்ற சண்டையின்போது மன்னன் கச்சத் தீவில் தங்கியிருக்கக் கட்டடம் கட்டப்பட்டது. அப் பொழுது ஏற்பட்ட பேரழிவால் கட்டடம் இடிந்து தீவின் பரப்பளவும் - 285 ஏக்கராகக் குறைந்தது. பிரதமர் இந்திரா - சிறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தின் (1974 ஜூன் 26) 5ஆம் பிரிவில் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் கச்சத் தீவுக்கு வழக்கம்போல் சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதி தேவையில்லை; ஆறாவது பிரிவுப்படி இந்திய இலங்கைக் கப்பல்கள் பாரம்பரிய மாக இருந்து வரும் உரிமைகள் தொடரப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 1976 மார்ச்சு 23 கடல் எல்லை வரை யறுக்கும் ஒப்பந்தத்திலும் சரி, 1976 நவம்பர் 22 இந்தியா _- இலங்கை - மாலத்தீவு - கடல் ஒப்பந்தத்திலும் சரி  தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கத் தடை ஏதும் கிடையாது. வட்கே பாங்க் பகுதியில் மூன்று ஆண்டு காலத்திற்கு மட்டும் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ரக மீன்களில் 2000 டன் இலங்கைக்கு விற்க இந்தியா முடிவு செய்கிறது. இதற்குப் பின்பு இரு நாட்டு அதிகாரிகளிடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றங்களில்தான் மீன்பிடி தடை என்ற சதி அரங்கேறியது.
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் போர்க் குரல்கள் கிளப்பப்பட்ட ஒரு கட்டத்தில் அன்றைய இலங்கை மீன் வள மற்றும் கப்பல்துறை அமைச்சராக இருந்தவர் இலங்கை நாடாளுமன்றத்தில் என்ன கூறினார் தெரியுமா?
எந்தவித ஆதாரத்துடனும் கச்சத் தீவை இலங்கை அரசு பெற்றிடவில்லை. இந்திய பிரதமர் இந்திராகாந்தி பார்த்துக் கொடுத்தது என்று சொன்னாரே! அந்தக் கப்பல் துறை அமைச்சர் வேறு யாரும் இல்லை; இன்றைய இலங்கை அதிபர்  மகிந்த ராஜபக்சே தான்!
2006 பிப்ரவரி 22ஆம் நாள் இந்திய மக்களவையில் எம். அப்பாதுரை (சி.பி.அய்.) எழுப்பிய வினாவுக்கு விடையளித்த இந்திய இணை அமைச்சர் இ.அகமது என்ன கூறினார்? கடிதப் பரிமாற்றம் மூலம் தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமை ரத்து செய்யப்பட்டு விட்டது என்றாரே!
2008இல் இரு நாட்டு அதிகாரி களுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான சென்சிடிவ் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரை யறை செய்யப்பட்டது. அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரி களின் கோரிக்கைகளுக்கு இந்திய அதி காரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர். அதுதான் இப்பொழுதும் அமலில் உள்ளது; இதன் காரணமாகத்தான் இந்தியக் கடற்படையினர் பாதுகாப்புத் தர முடியாத  நிலை உள்ளது (தினமலர் 26.1.2011).
திமுக ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது என்று பேசுவ தெல்லாம் அபாண்டமானது. 1974 ஜூலை 23 ஆம் நாள் மக்களவையில் இதுபற்றி தி.மு.க. பிரச்சினையை எழுப்பியது.
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்குமுன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, இந்த அவையின் ஒப்புதலைப் பெற்று இருக்க வேண்டும். இலங்கையோடு நல்லுறவு வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் ஒரு பகுதியை எந்த வரை முறையுமின்றித் தாரை வார்த்துக் கொடுப் பதாக இருக்கிறது. இது எந்த ஒரு அரசும் செய்யக் கூடிய காரியமல்ல; எனவே வெளி நடப்பு செய்கிறோம் என்று கூறி திமுகவைச் சேர்ந்த இரா. செழியன், நாஞ்சில் கி. மனோ கரன் ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர். ஃபார்வேடு பிளாக்கைச் சேர்ந்த பி.கே.என். தேவர் பெரியகுளம் முகம்மது ஷெரிப் (முஸ்லிம் லீக்) ஒரிசா பி.கே. தேவ் (சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி) ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர் ஆனால் கம்யூ னிஸ்டு உறுப்பினர் எம். கல்யாணசுந்தரம் ஒப்பந்தத்தை ஆதரித்தார் என்பது நினைவூட்டத்தக்கது -_ வேதனைக்குரியது.
தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் இந்திய அரசின் தவறைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் கச்சத் தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம் நடந்தது. அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த சுவரன்சிங் இந்த ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கடற்பயண உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும் வலைகளை உலர்த்தவும்; அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள உரிமை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 1976இல் இரு நாட்டு செயலாளர்களுக் கிடையே தகவல் பரிமாற்றத்தின்படி மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டது. இந்தக் கடிதங்கள் நாடாளுமன்ற ஒப்புதலையோ தமிழக அரசின் ஒப்புதலையோ பெறவில்லை. அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலமும், நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிற நாட்டுக்கு கொடுக்க முடியும். எனவே கச்சத்தீவு ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றாரே டி.ஆர். பாலு.
இந்தியா 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம்; அத்தகைய ஒரு நாடு சுண்டைக் காய் நாடான இலங்கையிடம் சரண் அடைந்துவிட்டதோ என்று நினைக் கும் பொழுது வேதனையாக இருக்கிறது.
தமிழக மீனவர்கள் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்றால் துப்பாக்கியால் சுடப்படு கிறார்கள் -_ இலங்கைக் கப்பற்படையினரால். அதே நேரத்தில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் சர்வ சாதாரணமாக வந்து மீன்பிடித்துச் செல்லுகிறார்களே!
இந்தியக் கடலோரக் காவல்படை அலுவலர் (பெயர் சொல்ல விரும்பாதவர்) சொன்னதாக பேட்டி ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (28.9.2010) வெளி வந்துள்ளது.
இந்தியாவின் ஆந்திரத்தை ஒட்டிய கடற் பரப்பில் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் வந்து மீன்பிடித்துச் செல்லுகின்றனர். அவர்கள் வசம் துப்பாக்கிகளும் உள்ளன. விசாகப்பட்டினம் காக்கிநாடா, மசூலிப் பட்டினம் வரை வந்து பெரிய வகை மீன் களைப் பிடித்துச் செல்லுகின்றனர் என்பதுதான் அந்தத்தகவல்.
இன்னும் ஒரு கேவலமும் கொடுமையும் உண்டு.சிங்கள மீனவர்கள் இரண்டு இந்தியக் கடலோர காவல் படையினரையே கடத்திச் சென்றனர் என்பதுதான் (2009 டிசம்பர்) கடலூர் வரை கடத்திச் சென்று விட்டனர். இந்திய அரசு இலங்கை அரசுடன் சமாதானம் பேசித்தான் இந்தியக் கடற்படையைச் சேர்ந்தவர் காப்பாற்றப் பட்டனர். (வாழ்க இந்தியாவின் சுயமரியாதை!)
எந்த அளவுக்கு ராஜபக்சே சென்றுள் ளார் என்பதற்குப் பிரேசில் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற அய்.நா. மாநாட்டில் பேசினர்.
எங்கள் கடல் பரப்புக்குள் யார் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தாலும்! அனைத்துலகச் சட்டப்படி 20 ஆண்டுகள் சிறையில் தள்ளுவேன் என்று பேசிட வில்லையா?
கச்சத்தீவுப் பகுதியில் மட்டுமல்ல; இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் வந்து கூட இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதுண்டு.
தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தாலும் தமிழின அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும், தமிழக உறுப் பினர்கள் நாடாளுமன்றத்தில் கர்ச்சித்தாலும் இந்திய அரசு செவிட்டுக் காதைத்தான் தமிழர்கள் பக்கம் காட்டி வருகிறது.
2011 ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே நடை பெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா விடம், இலங்கை தோல்வியடைந்த வெறி யில், இலங்கைக் கடற்படை என்ன செய் தது? தங்கச்சி மடத்தைச் சேர்ந்த விக்டர் அந்தோணி ராஜ், ஜான்பால் மற்றும் ஒட்டன்சத்திரம் மாரி ஆகியோர் நடுக்கடலில் இலங்கைக் கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்டனரே! என்னே கொடுமை!!
அதே நேரத்தில் மற்ற நாட்டைப் பார்க்கலாம்.
1974ஆம் ஆண்டு ஜப்பானிய மீன வர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து சீனக் கடற் கரையில் ஒதுங்கினர். சீனர்களால் ஜப் பானிய மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஜப்பான் சீறி எழுந்தது. உரிய இழப்பீடு தர வேண்டும் என்று ஜப்பான் வற்புறுத் தியது. சீனா முதலில் மறுத்தது. போர் தொடுக்கப் போவதாக ஜப்பான் மிரட்டவே சீனா பணிந்து வந்தது.
சீனாவோடு ஒப்பிடும்போது ஜப்பான் சுண்டைக்காய் நாடுதான். அதே நேரத்தில் தம் நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்றபோது இயற்கையான சீற்றம் சீறிக் கிளம்பியது. அப்படியானால் இந்தியா தமி ழக மீனவர்களைத் தம் நாட்டைச் சேர்ந்த வர்கள் என்று எண்ணவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
1995இல் ஒரு சம்பவம்; பிலிப்பைன்சு நாட்டைச் சேர்ந்த ஃபுளோர் கான்பிளேசின் என்ற பெண் கொலை குற்றத்துக்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் -_ - பிலிப் பைன்சின் எதிர்ப்பைமீறி; சிங்கப்பூர் நாட்டின் அரசு முறை உறவு அனைத்தையும் துண் டித்துக் கொண்டது பிலிப்பைன்சு. பல்லா யிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், தமிழக மீனவர்கள் ஆயிரத்திற்குமேல் கொலை செய்யப்பட் டாலும் இந்தியா அசைந்து கொடுக்க வில்லையே! தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்பதற்கு இது ஒன்று போதாதா?

அந்தோணியார் கோயிலின் கதை தான் என்ன?

அந்தோணியார் கோயிலுக்குச் செல்லத் தடையில்லை என்று ஏதோ சலுகை காட்டுவதுபோல கதைக்கிறார்களே -_ அந்தக் கதைதான் என்ன?
1982 முதல் 2002ஆம் ஆண்டு வரை திருவிழா நடக்கவேயில்லை. 2002-க்குப் பிறகு சில தடவை நடந்துள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து அங்கு சென்றவர்கள் எத்தனைப் பேர்?
2--002இல் -_60; 2004இல் _ 60; 2005இல் _ 11; 2006இல் _ 30; 2003, 2007, 2008 ஆண்டுளில் நடக்கவேயில்லை எல்லா வகையிலும் இலங்கை யிடம் இந்தியா தோற்று விட்டது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.


திராவிடர் கழகம் நடத்திய கச்சத்தீவு மீட்பு மாநாட்டுத் தீர்மானம்

26.7.1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடைபெற்ற தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
பாக். ஜலசந்தியின் இருபுறமும் இருக்கும் தமிழ் நாட்டின் மேற்குக் கரையில் உள்ள மீனவர்களும், தமிழீழத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மீனவர் களும் மொழி, கலாச்சார ரீதியில் பல ஆயிரம் ஆண்டு காலமாக நெருங்கிய உறவினால் பிணைக்கப்பட்டுள் ளார்கள். ஆங்கிலேயர்கள் வெளியேறும் காலம் வரை தங்கு தடையற்ற படகுப் போக்குவரத்து இரு நாடு களுக்கும் இடையே நடைபெற்று வந்தது. தமிழ்நாட்டில் உள்ள வேதாரண்யம், அதிராம் பட்டினம், தொண்டி, மண்டபம், இராமேசுவரம் போன்ற துறைமுகங் களுக்கும், தமிழீழப் பகுதியில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, ஊர்க்காவல் துறை, நெடுந்தீவு, மாதகல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை போன்ற துறை முகங்களுக்கும் இடையே தொன்று தொட்டுப் பயணிகள் மற்றும் வணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்தது - வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். இலங்கை - சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர் துறை முகங்களை சிங்களவர் மூடிவிட்டனர். இரு நாட்டுத் தமிழர்களுக்கிடையே நிலவி வந்த தொடர்புகள் திட்ட மிட்டுத் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக இரு நாடுகளையும் சேர்ந்த தமிழ் மீனவர்கள் பெரும் பாதிப் பிற்கு உள்ளானார்கள்.
இருபுறத்திலும் உள்ள தமிழ் மீனவர்களும் தங் களுக்கு இடையே எவ்வித சச்சரவுமின்றி தாராளமாக வும், சுதந்திரமாகவும் மீன்பிடித் தொழிலைச் செய்தனர். இரு தரப்புத் தமிழ் மீனவர்களும் ஒரு போதும் ஒருவ ருக்கு எதிராக மற்றவர் தமது அரசுகளிடம் புகார் செய்ததில்லை.

இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமான கச்சத் தீவில் - ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் - இருநாட்டுத் தமிழர்களும் கலந்து கொண்டு மணவினைத் தொடர்புகள் வரை கொண்டு மகிழ்ந்து வந்தனர். ஒரு போதும் அவர்களுக் கிடையே எத்தகைய சச்சரவும் மூண்டது கிடையாது. தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்ததாகக் கூறப்படுவது சட்டப்படி செல்லாத ஒன்றாகும்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் எத்தகைய புகாரும் கூறாத நிலையில் சிங்களக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டை யாடத் தொடங்கியது. குறிப்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை சிங்களக் கடற்படை, விமானப்படை ஆகியவற்றால் 250-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 150-க்கும் மேற் பட்டவர்கள் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். தழிழ் மீனவர்களுக்குச் சொந்தமான கட்டுமரம், விசைப்படகு, வலை ஆகியவற்றுக்கான சேதம் ரூ. 12 கோடிக்கு மேலாகும். மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக் கும் போக முடியாத வகையில் ஏற்பட்ட இழப்பு கணக் கிட முடியாததாகும்.பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசோ இலங்கை அரசோ இதுவரை எந்த நட்ட ஈடு எதுவும் அளிக்கவில்லை.
சிங்கள அரசு தமிழ் மீனவர்களைக் கொன்று குவிப்பதற்கு கச்சத்தீவு பிரச்சினை காரணமல்ல; மீன்பிடி உரிமை காரணமல்ல; தமிழ்ப்போராளிகள் பிரச்சினையும் காரணமல்ல; இவையெல்லாம் போலிச் சமாதானங்களாகும்.
தமிழர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களை அழித் தொழிக்க வேண்டும் என்றும், சிங்களப்பேரின வாதிகளின் இனவெறிக் கொள்கையே இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை அனைவரும உணர வேண்டும். இத்தகைய தமிழினப் படுகொலை வெறி யுடன் செயற்படும் சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. அதைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசோ ஒப்புக்காகக் கண்டனக்குரல் எழுப்புவதுடன் தனது கடமை தீர்ந்துவிட்டதாகக் கருதி அமைதி கொள்கிறது.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதைத் தடுக்க முன் வராத இந்திய - தமிழக அரசு களை இம்மாநாடு கடுமையாக கண்டனம் செய்கிறது.
கச்சத்தீவின் உரிமை, சட்டப்படி இன்னமும் நம்மி டமே உள்ளது என்ற உண்மையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்துவதோடு, கச்சத்தீவை மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இம் மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.
எனவே, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மேலே கண்ட இரு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய - தமிழக அரசுகள் தவறுமேயானால், அக்டோபர் திங்களில்  (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) அனைத்துக் கட்சித் தலைவர்களும் இராமேசுவரத்திலிருந்து படகுகளில் தியாகப்பயணமாகப் புறப்பட்டு - சிங்களக் கடற்படையை எதிர்கொண்டு அறிவழியில் போராட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இப்போராட்டத்தில் சேர முன்வருமாறு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

---------------------- மின்சாரம் அவர்கள்  7-9-2013 “விடுதலை” ஞாஇறுமலரில் எழுதிய கட்டுரை

41 comments:

தமிழ் ஓவியா said...

என்னுடைய பிறந்த நாளில் இராமாயணம், பகவத்கீதை போன்ற ஆபாச நூல்களைக் கொளுத்துவது என்று காலையில் நடந்த (திராவிடர் கழகம்) சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதனை நல்ல வண்ணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதிலுள்ள ஆபாசங்களையும் நாம் எடுத்து விளக்க வேண்டும். இராமாயணம், சீதையாணம் முதலிய நூல்களில் உள்ள ஆபாசங்களையும், கடவுள்களின் தன்மைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறிமுடித்தார்கள்.

- பெரியார்,
('விடுதலை', 14.05.1962)

தமிழ் ஓவியா said...

தனது பிறந்தநாளில் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களை பெரியார் என்ன செய்வார் என்று கூறுகிறார்:

"இன்று எனது எடைக்கு எடை முந்திரிப் பருப்பு அளித்துள்ளீர்கள். எனது எடையானது 192- ராத்தல் ஆகும். எனது எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள், பேரீச்சபழம், துணி, நெல், கம்பு, உப்பு இப்படி அளித்தார்கள். காலையில் வயதை எண்ணி பவுன்கள் கொடுத்தார்கள். சென்ற ஆண்டு நண்பர் திரு. எம்.ஆர். இராதா அவர்கள் எனது வயது அளவுக்கு வருடத்துக்கு ஒரு பவுன் வீதம் தருவதாகக் கூறி 10.000 ரூபாய் அளித்தார்.

நான் எனக்கு அளிக்கப்படும் பொருள்களைப் பணமாக ஆக்குகின்றேன்.

நமது கழகத்துக்கு மாதம் குறைந்த பட்சம் 5000- வீதம் வருவாய் வரும் நிலையில் உள்ளது. இனி பணம் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டு பல தொழில்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றேன்.

கவனிப்பாரற்றுத் திரிகின்ற பிள்ளைகளுக்கு இப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டும்படியான தொழில் பள்ளி ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இதற்கு மாதம் 1.500- செலவாகக் கூடும். இன்னும் மற்ற மற்றப் பணிகளும் செய்ய திட்டம் போட்டுள்ளேன்."

- பெரியார்,
('விடுதலை', 29.07.1962)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
வெள்ளி, 20 செப்டம்பர் 2013 16:35
E-mail Print

வலு - பளு

செய்தி: தேசத்திற் குத் தேவை வலுவான தலைமை! - நரேந்திரமோடி

சிந்தனை: ஒரே அடியாக சிறுபான்மை யினரை ஒழித்துக்கட்டும் அளவுக்கு வலுவானதாக பளுவானதாக இருக்க வேண்டும் - அப்படித் தானே?

தமிழ் ஓவியா said...


திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக!


தந்தை பெரியார் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகத்தான சமூகப் புரட்சியாளர் ஆவார். கால் நூற்றாண்டு காலம் தமது பொது வாழ்க்கைக்கான தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளியைத் தேர்ந்தெ டுத்து, தமிழகம் முழுவதும் சமூக மாற்றத்திற்கான பெரும் பணிகளை மேற்கொண்டார்.

தமிழக மக்கள் தந்தை பெரியார் அவர்களை தத்தம் குடும்பத் தலைவராகவே கருதிப் போற்றி வருகிறார்கள். அந்த வரலாற்று நாயகரை நினைவு கூரும் வகையில், அவர் தமது தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றிய திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுமாறு மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திராவிடர் கழக மண்டல தலைவர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (திருச்சி - 19.9.2013)

தமிழ் ஓவியா said...


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்தி.மு.க. தலைவர் கலைஞர் ஆதரவு

சென்னை, செப்.20- திருச்சி பன்னாட்டு விமான நிலை யத்திற்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி: திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டு மென்று தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

கலைஞர்: திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வேண்டுகோளை முழு மனதோடு ஆதரிக்கின்றது. மத்திய அரசு உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் முன்வைத்து வாதிட வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு: கலைஞரின் இந்த அறிவிப்புக்கு நன்றி!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


கழகக் குடும்பத்தவர்க்கு முக்கிய வேண்டுகோள்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது சுற்றுப் பயணம் கடந்த ஓராண்டுக் காலத்தில் மிக அதிகமாக உள்ளது. ஒரே நாளில், பல ஊர்களில், பல நிகழ்ச்சிகள் என்று இருப்பது அவரது உடல் நலப் பாதுகாப்புக்கும், அவர் எழுத வேண்டிய எழுத்துப் பணி, நிர்வாகப் பணிகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைகளாக அமைந்து விடுகின்றன.

கழகக் குடும்பத்தினரைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவே கேட்டவுடன் தனது தொல்லைகள் பற்றிக் கவலைப்படாது, எங்களையும் மீறி நிகழ்ச்சிகளுக்கு அவர் ஒப்புக்கொண்டு விடுகின்றார்.

எனவே, தோழர்கள் ஒரு நாள் ஒரு நிகழ்ச்சி மட்டுமே என்கிற அளவில், மிகவும் அவசியமானால் உள்ளூர் அருகில் உள்ள ஊர் என்றால் திருமணம் போன்றவைகளுடன் நிறுத்தி, ஒழுங்குபடுத்திட ஒத்துழைக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,

- வீ. \அன்புராஜ்
சுற்றுப் பயணப் பொறுப்பாளர்

தமிழ் ஓவியா said...


கழகப் பொறுப்பாளர்களுக்கு... கடப்பாடுகள் பன்னிரெண்டு!


1. வாரத்தில் 5 நாள்கள் உங்கள் குடும்பத்திற் காகச் செலவிடுங்கள். இரண்டு நாள்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளாவது இயக்கத்திற்காகச் செலவிடுங்கள்!

2. தலைமைக் கழகம் - மண்டல அமைப்பு - மாவட்ட அமைப்புகள் - நகர, ஒன்றிய, கிளைக் கழக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (நெட்ஒர்க்) சிறப்பாக இருந்தால் இயக்கப் பணிகளும் சிறப்பாக இருக்கும்.

3. நம் தோழர்கள் நம் பலம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். வரலாற்றையே திருப்பிப் போட்ட ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

4. பதவி பக்கம் போகாமல், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாத ஓர் இயக்கத்தில், ஒரே தலைவர் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களின் கொள்கையில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரே தலைமை, ஒரே இயக்கம், ஒரே கொடியின்கீழ் நாம் செயலாற்றிக் கொண்டிருக் கிறோம். அதற்காக நம் முதுகை நாமே தட்டிக் கொண்டு பெருமைப்படவேண்டும்.

5. தந்தை பெரியார் மறைந்து 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்; இருக்கிறது; பல மாகவே இருக்கிறது - யாராலும் நம்மைப் புறக் கணிக்க முடியாது என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நமது சாதனைகள் அனேகம்! அனேகம்!!

6. நமக்குக் கொடுக் கப்பட்டுள்ள பொறுப் புக்குத் தக்க வகையில் நாம் கடமையாற்றுகி றோமா என்பதுபற்றி நமக்கு நாமே எடை போட் டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. நாம் விட்டுச் செல்லும் எச்சம் என்பது என்ன? நாம் வாழ்ந்த காலத்தில் இந்த இயக்கத் துக்காக, அதன் கொள் கைகளுக்காக என்ன செய்தோம் என்பதுதான் நம் மறைவிற்குப் பிறகு நிலைத்து நிற்கக் கூடிய எச்சம் ஆகும்.

8. நமது இயக்கத்தைப்பற்றி தந்தை பெரியார் சொன்னது - நமது இயக்கம் என்பது பனைமரம் மாதிரி; பனை மரத்துக்கு யார் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார்கள்? அது தானாகவே எந்தச் சூழ லிலும் வளரவில்லையா? பலன் கொடுக்கவில்லையா?

அதேபோன்றுதான் நம் மக்களுக்காக உயிருக்கு மேலான தேவையான இயக்கம் நமது கழகம் - அதனை நம் மக்கள் கைவிடமாட்டார்கள் - நேரி டையாக முன்வராவிட்டாலும், மன ரீதியாக, மறை முகமாகவேனும் இந்த இயக்கத்தை மதிப்பார்கள் - உதவுவார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் அணுக்கமான மக்கள் தொடர்பு! தொடர்பு!!

நாம் நிதி கேட்டால் மக்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள் - நாம் ஏன் தயங்கி நிற்கவேண்டும்?

9. பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், அந்தப் பொறுப்புக்கான பணிகளை பல்வேறு காரணங் களால் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் தாராளமாக விலகிக்கொண்டு, அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கலாம். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

10. நாம் மட்டும் கொள்கைக்காரர்களாக இருந்தால் போதாது - நம்மைச் சார்ந்தவர்கள் - குடும்பத்தவர்கள் - உற்றார் உறவினர்கள் - நண்பர் கள் - ஏன் இந்த உலகமே பெரியார் கொள்கை மயமாகவேண்டும்.
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்பது மெய்ப் படவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும்.

11. மதவாத சக்திகள் மருட்டுகின்ற இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுமையும் தந்தை பெரியார் கொள்கை - தத்துவம் சூறாவளியாகச் சுழன்றடிக்கப்படும் காலகட்டம் இது.

12. தோழர்களே, செயல்படுவீர்! உற்சாகமாகச் செயல்படுவீர்!!

- திராவிடர் கழக மண்டல தலைவர், செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் - திருச்சி 19.9.2013

தமிழ் ஓவியா said...


எனக்குக் கவலையில்லையாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும். - (குடிஅரசு, 15.4.1928)

தமிழ் ஓவியா said...


இதுதான் இடதுசாரி சிந்தனையா?


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கேரளா வில் அமைச்சராக (கம்யூனிஸ்டு) இருந்தவரும், இடதுசாரி சிந்தனையாளர் என்று பொதுவாகக் கூறப்படு வருமான திரு. வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், 2014ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், பிஜேபியின் பிரதமருக் கான வேட்பாளராக, நரேந்திரமோடி முன்னிறுத் தப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், பிரதமர் பொறுப்புக்கு அவர்தான் தகுதியானவர் என்றும், தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் செயல் பாடுகள், அவரது நிர்வாகத் திறமையை, தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள, அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிர்வாகத் திறமை உடையவரா நரேந்திர மோடி? என்பது ஒரு புறம் இருக்கட்டும்; அந்த நிருவாகத் திறமை எதற்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

அவர் நிருவாகத் திறமையின் இலட்சணம் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது தானா? அவருக்குச் சம்பந் தமே யில்லை என்று கூறப் போகிறார்களா?

அதுவுண்மை என்றால், ஒரு முதல் அமைச்சருக்கே சம்பந்தம் இல்லாமல் பல்லாயிரம் பேர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்றால், செயல்படாத ஒருவர் முதலமைச்சராக இருந்தார் என்று பொருள் படாதா?

ஓர் உண்மையைத் திட்டமிட்டு, மறைக்கப் பார்க்கின்றனர். நரேந்திரமோடி என்ற முதல் அமைச்சர், தன் நிருவாகத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதை மறைக்கப் பார்க் கிறார்கள்.

அறிவு நாணயத்தோடு அவர் செயல்பாடு இருந்தால், இவ்வளவு பேரழிவுக்குக் காரணமாக இருந்ததற்குத் தான் பொறுப்பேற்ற, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையைத் தூண்டுவதற்கு, ஒரு முதல் அமைச்சரே அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஏற்பாடு செய் தார் என்றால், இதனை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?

பிஜேபி சட்டமன்ற, உறுப்பினர்களின் வாக்கு மூலத்தை தெகல்கா ஊடகம் பெற்று அம்பலப் படுத்தி விடவில்லையா?

எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு என்ற அய்ன்ஸ்டின் தேற்றத்தைக் கூறி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை நியாயப்படுத்தியதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அறிய மாட்டாரா? மோடியின் பின் புலத்தில் பணத் திமிங்கலங்கள் இருப்பது கூடவா மார்க்சியவாதி என்று கூறப்படுபவருக்குப் புரியாது?

குஜராத் மாநிலத்தை, இந்துத்துவாவின் பரிசோ தனை சாலையாக ஆக்கி, அதில் வெ(ற்)றி பெற்ற நிலையில் அதே பாணியை ஒடிசா மாநிலத்தில் அரங்கேற்றவில்லையா? இதனை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டலாமா?

குஜராத் நிகழ்வினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே!

இன்றைக்குக்கூட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நரேந்திரமோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருவது எந்த அடிப்படையில்?

இராமச்சந்திர குகா, மார்க்கண்டேய கட்ஜூ (இவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிதான்) பொருளாதார மேதை - நோபல் பரிசு பெற்ற அமர்த் தியா சென் போன்றவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்துள்ள நிலையில், வி.ஆர். கிருஷ்ண அய்யர் இந்துத்துவா சக்திக்குத் துணை போவது கண்டிக்கத்தக்கது. இதுவரை அவர்மீது போர்த்தப்பட்டு இருந்த இடதுசாரி என்ற திரையை அவரே கிழித்துக் கொண்டு விட்டார் என்றே கருதப்பட வேண்டும்.

மோடிக்குப் பல்வேறு முகாம்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன திட்டமிட்ட வகையில்; இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய வாக்காளர்களே!

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும் தமிழுக்குத் துரோகமும்


ஆசிரியர் ஏங்கினால் வகுப்பறை தேங்கும் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் இப்போதோ நம் அன்னைத் தமிழும் சேர்ந்து ஏங்குகிறது தேங்கு கிறது. ஆம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தேர்வு வாரியத்திற்குக் கொஞ்சமும் அடிப்படை அறிவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியர்க்கு அடிப் படை அறிவு என்பது எதுவாக இருக்க வேண்டும்? தன்னுடைய பாடத்துறையில் போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அதுதான். ஆனால் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழுக்கு வழங்கப்படுகின்ற மதிப்பெண்களோ வெறும் 30 மதிப்பெண்களே. ஆங்கிலம் - 30, உளவியல் - 30, சமூக அறிவியல் - 60. எல்லாம் சரிதான். ஆனால் இதில் சமூக அறிவியல் பாடத்திற்கு ஏன் அதிக மதிப் பெண்கள்? இப்படி வைப்பதால் அந்தந்தத் துறைசார்ந்த ஆசிரியர் களுக்குத் தத்தம் துறை சார்ந்த பாடத்தில் எப்படி அறிவு பெருகும்? நாட்டம் வரும்? சமூக அறிவியல் பாடத்திற்குக் கொடுக்கிற அதே மதிப்பெண்களே அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்குத் தந்திருந்தால் தேர்வு வாரியத்தின் அறிவு நாணயம் விளங்கியிருக்கும். நாங்கள் தேர்வில் தோல்வியைக் கண்டது இதுதான் காரணம். இந்த மன நிலையில் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிப் போம்? தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவே இல்லை. குற் றாலத்தில் எங்கோ மணம் வீசுகிறதே என்பதற்குப் பதிலாக குற்றாலத்தில் என்கோமணம் வீசுகிறதே என்று தப்பிதமாகப் படிக்கும் எழுதும் அவலநிலையைப் பாரீர்!

TNPSC - தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்டித்துப் போராட் டம் கண்டு மீண்டும் முக்கியத்துவம் பெற்றுத்தரப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்விலும் தமிழுக்கு முக் கியத்துவம் வேண்டும். தமிழ்ப் படித்த வர்க்கு முக்கியத்துவம் மறுக்கப் படுகிறது. எல்லாம் இந்தப் பார்ப்பன ஆட்சியின் தொல்லை.

தமிழ்ப்படித்தவர்கள் முன்னேற முடிய வில்லை. முறையான தேர்வு முறையே இது இல்லை. இந்தக் கொடுமை போதாதென்று விடைத் தாள் வேறு மோசடி. இப்போது நடந்து முடிந்த தேர்வையும், அதன் முடிவையும் உடனே ரத்து செய்ய வேண்டும். முறையான தேர்வு முறை யுடன் (தமிழுக்கு முக்கியத்துவம் - 60 மதிப்பெண்) அல்லது அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்கு - 60 மதிப்பெண்கள் (அல்லது) மீண்டும் பதிவு மூப்பு அடிப்படையில் பின் பற்றிட வேண்டும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுக்கத்தான் வேண்டும்

தங்களை விட்டால் நாதி ஏது?

தமிழாசிரியர்களுக்கு நல்லதொரு நீதியைக் கூடிய விரைவில் பெற்றுத் தர வேண்டும் என எதிர்ப் பார்க்கி றோம். நல்ல முடிவுக்காகக் காத்தி ருக்கிறோம்.

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலை யாய பற்று மொழிப்பற்றே. மொழிப் பற்று இல்லாதாரிடத்துத் தேசப் பற்றும் இராது என்பது உறுதி.

தேசம் என்பது மொழியை அடிப் படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால்,

தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த் தனை.

- தந்தை பெரியார் (10-ஆம் வகுப்பு தமிழ் புத்தகம், பக்கம் 31)

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. (மோடி) வெறும் முகமூடிதான்! அதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிருந்தாகரத் காட்டம்

திருப்பூர், செப்.20- திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதிபாசு நூற் றாண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் விழாப் பொதுக்கூட்டம் 19.9.2013 மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகரத் பேசியதாவது:

அதிகாரத்தை ஏழை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியவர் ஜோதிபாசு ஆவார். அவர் செயல்படுத்திய கொள்கைகளை எதிர்க்கட்சியினர்கூட குறைகூற முடியாது. 1946 ஆம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் பஞ்சாயத்து அமைப்பினை ஏற்படுத்தி, அதிகாரத்தை அதிகாரபர வலாக்கினார்.

ஜோதிபாசுவின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான பாடங்களை நாம் கற்கவேண்டியுள்ளது.

பிஜேபி (மோடி) என்பது வெறும் முகமூடிதானே தவிர, இதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் ஆகும்.
மோடி தொழிலாளி என்ற வார்த்தையை வாயால்கூட உச்சரிக்காதவர். தொழிலாளிகளைப்பற்றிய எண்ணமும், சிந்தனையும் அறவே இல்லாதவர்; ஆனால், இப்படிப்பட்ட வருக்கு திருப்பூரில் எங்கு பார்த்தாலும் கட்-அவுட்கள் இருப்பது தொழிலாளர்களுக்கு இழிவாகும்.

பெருமுதலாளிகள் பெருவாரியாக மோடியை விரும்புகிறார்கள். தம்பட்டம் அடிக்கிறார்கள்.ஆனால், திருப்பூர் போன்ற தொழிலாளர் நிறைந்த பகுதியில் மோடி ஏற்கப்படமாட்டார்.

- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்


உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும், எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை முன் னேற்ற வழி வகுக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொ டுக்கச் சொல்ல முடியாது.

சேற்றிலே சந்தன வாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதி னான்கு லோகத்தைக் காட் டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாறாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவு களை மீறக்கூடா தென் றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண் டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ் திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...


சரஸ்வதி கடாட்சமா?கவிஞர் கண்ணதாசனையும் அவரது ஆற்றலையும் அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. சொல் வளமும், கருத்துக் கனிகளும் அவரது கவிதைகளில் மலிந்திருக் கும். தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு அவரின் பலவீனங்களைச் சுட்டெரித்து மறக்கச் செய்தது. அவரைப் பலவிதமாக போற்றிப் புகழ பலர் இருந்தாலும் திருவாளர் சோ சொல்லும் விதம் அலாதியானது. 28.8.2013 குமுதத்தில் கண்ணதாசன் சரஸ்வதி கடாட்சம் பரிபூர்ணமாகப் பெற்றவர் என்கிறார்.

பாராட்டுவதற்கு வேறு வார்த்தைகளா இல்லை? கவிஞரின் பெருமையை இப்படியா கொச்சைப்படுத்துவது? எந்த ஒரு கலையும், தொழிலும் அதனால் வரும் முன்னேற்றமும் கடும் உழைப்பும், முயற்சியும், தன்னம்பிக் கையும் இல்லாமல் வந்து சேராது. யானை வந்து மாலை போடுவதும் நடக்காது. கவிதை புனையும் திறமையையும், தமிழறிவையும் கண்ணதாசன் வளர்த்துக் கொண்டார் என்று தானே நாடு இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி கடாட்சமும் கலைமகளின் அருளாசியும் காரணம் என்ற வாதம் நியாயந்தானா?

இந்த நாட்டில் எத்தனையோ பேர் அறி வுத் தாகம் தணிக்க அலைந்து கொண்டிருக் கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறார் கள். நூல் நிலையங்களில் புத்தகங்களைத் தேடுகிறார்கள். அறிவு மட்டுமே போதாது என்று கருதுபவர்கள் கனக்கும் செல்வமும் நூறு வயதும் வேண்டும் என கோயில் பொம்மைகள் முன் விழுந்து கிடக்கிறார்கள். இத்தனை (பக்த) கோடிப் பேரைக் கண்டு கொள்ளாத கடவுளச்சி, கண்ணதாசனுக்கு மட்டும் கடாட்சம் காட்டியதை ஏற்க முடிய வில்லையே! அவர் மட்டும்தான் அவளுக்குச் செல்லப் பிள்ளையா? வீணை வாணி எழுப்பிய நாதம் நாட்டுக் கோட்டைக்கு மட்டும் தான் கேட்டதா? கடாட்சம் எனப் படும் கருணைப் பார்வை எந்த வயதில், எந்த நிலையில் கிடைத்தது என்று சொல்ல முடியுமா? பகுத்தறிவும் நாத்திகமும் பேசிக் கொண்டிருந்தாரே அதற்கு முன்பாகவா? இந்த மக்களைப் பார்த்து கருணை மறந்தே வாழ்கின்றார். தினம் கடவுளைத் தேடி அலைகின்றார் என்று பாடியதற்கு பிறகா? எண்ணில் அடங்கா கடவுள்களின் கடாட்சம் வழங்கும் உரிமையும், யோக்கியதையும் இவள் ஒருத்திக்கு மட்டும்தான் இருக்கிறதா?

மூதேவியரில் இன்னொருத்தியும் உண்டே. சக்தியின் வடிவம் ஆயிற்றே. அவள் மட்டும் சாமான்யப் பட்டவளா? ரௌத்திரம் பழகிக் கொள்ள பராசக்தியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? கொலை வெறியர்கள், கொலை பல செய்தவர்கள், ஆறுவது சினம் என்பதை அறியாதவர்கள் இவர்களில் யாரேனும் ஒருவர் அகப்பட்டால் போதுமே, பார்வதி கடாட்சம் பெற்றவர் என்று சொல்ல.

இத்துடன் முடிந்து போய்விடக்கூடிய சமாச்சாரம் இதுவல்ல. அடையாளப்படுத் தப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக் கிறார்கள். காசாய உடையில் சாமியார் கோலத்தில் பக்திப் பழமாக நடமாடும் பீடாதிபதிகள், ஆனந்தாக்கள், அறவழிச் சித்தர்கள், தேவநாதன்கள் என பெரும் பட்டியலே வளர்கிறதே. அர்த்த சாமபூஜை நடுஇரவு நாமாவளி, முழு இரவு ஜெபம் என்று கூறி அப்பாவி இளம் பெண்களை வரவழைத்து சீரழிக்கும் வன்கொடுமை அரங்கேறிக்கொண்டு தானே இருக்கிறது. கடவுளின் கடாட்சம் இன்றி இக்கபட வேட தாரிகளுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? இது போன்ற லீலா விநோதத்தில் எந்தக் கடவுளும் சோடை போனதில்லையே.

தசரதனுக்கு 64000 மனைவிகள்! இது என்ன சாதாரணம்! கிருஷ்ண பரமாத்மா வுக்கு 116108 மனைவிமார்களாம். இத்தனை பேர் போதாதென்று இன்னொருவனுடைய மனைவியான இராதையிடம் தான் பெரும் பொழுதைக் கழித்தானாம். சொல்வது அர்த்தமுன்ன இந்து மதம்! அப்படியானால் கிருஷ்ண கடாட்சம் என்ற ஒன்று இருந்து தானே தீரவேண்டும்? கன்னிவேட்டைக்காரர் கள், கற்பை களவாடுவோர், காமக் கொடூ ரர்கள் இவர்களுக்கா பஞ்சம்? அவர்களில் தகத்தகாய ஒருவரைக் கண்டறிந்து கிருஷ்ண கடாட்சத்துக்காரர் என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எளிதான காரியம் இல்லைதான். முயன்றால் முடியாதது உண்டோ?

எத்தனையோ கடவுள்களும், கடாட்சங் களும் இருந்தாலும் இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏதிலிகளின் எண்ணிக்கை சற்றும் குறைந்த பாடில்லை. குன்றின் மீது ஏறிக் கூறலாம். கஞ்சத் தனம், வஞ்சகம் சிறிதுமின்றி தாராளமாக வாரி வழங்கப்பட்ட கடாட்சம் ஒன்றே ஒன்றுதான். அதுவே குசேலர் கடாட்சம்!

தமிழ் ஓவியா said...


சர்வ சக்தியா? சர்வ சைபரா?

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

-- _ சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்


மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலையைக் கண்டித் தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். இந்திய சமூகத்தை பீடித்துள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போரில் தன் உயிரையே விலையாக தந்துள்ளார் மஹாராஷ் டிரா மாநிலத்தைச் சேர்ந்த. நரேந்திரா தபோல்கர்.

இப்படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பவர், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவர். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்னும் நச்சுப்பொருளை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து இயற்கையினை நாசப்படுத்துவதற்கு எதிராக போராடியவர். தமது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் போராடினார். சமூக நீதி நிலைத்திட, சமத்துவம் காண ஜாதிமறுப்புத் திருமணங்களை முன் னின்று நடத்திய சமூக போராளியான தபோல்கரின் கொலை ஒரு வெற்றி டத்தை உருவாக்கிவிட்டது. இது சமூக முன்னேற்றத்திற்கும் சமூக மாற்றத் திற்கும் மிகப்பெரிய இழப்பு.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 51 a(h), ஒவ்வொரு இந்திய குடியும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படை கடமை என உணர்த்துகிறது. பில்லி சூனியம், மாந்திரிகம், ஜோதிடம், ஏவல், போலி சாமியார்கள் போன்ற பல மூடநம்பிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு முரனாக உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் இயற்றக் கோருகிறோம். முற்போக்கு வாதிகளும் சீர்திருத்தவாதிகளும் தபோல்கர் கனவு கண்ட மூடநம்பிக் கைக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்பை காட்டிலும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. தபோல்கரின் படுகொலையை விசாரித்து வரும் மஹராஷ்ட்ரா காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். காவல்துறை விரைந்து செயல்பட்டு தபோல்கரின் படு கொலைக்குக் காரணமான கொலையாளிகளையும் அவர்களைத் தூண்டியவர்களையும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கிடக் கோருகிறோம். இந்தத் தீர்மானம்,விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்குபெற்ற கண் டனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் ,கலை ஞர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர் கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் , விவசாயிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள், உள்ளடக்கிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் இன்று (7.9.2013) இக்கூட்டத்தில் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் மூட நம்பிக் கைகளுக்கு எதிரான கருத்துப் பிரச் சாரத்தை மேற்கொள்ளும்.

தமிழ் ஓவியா said...

இந்திரா கோவிலுக்குப் போவதேன்?

கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என இந்திரா அம்மையார் இரண்டு கல்வி கமிஷன்களின் உறுப்பினர்களிடையே பேசினார்

பிறகு ஏன் கோவிலுக்குப் போகிறார்? அவரே கூறிய செய்தி வருமாறு:- வகுப்பு இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற தனது குறிக்கோளுக்கு இது உதவுவதாக அவர் கூறினார்.

வழக்கமாக, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் நான் கோவில்களுக்குச் சென்றால் சிறுபான்மையினர் நலனுக்காக நான் கூறுவதை மெஜாரிட்டி சமூகத்தினர் தயாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இவ்வாறு இந்திராகாந்தி கூறினார்.

(தினமணி, மார்ச் 27, 1983)

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?

பல துயரங்களை மறக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடைய மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.

- அன்னை தெரசா (தி இண்டு, 30.11.2002)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் விளம்பரம்


7.2.2013 நாள் தினமணி ஏட்டில் வெளிவந்த கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் - அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.

இதோ அந்த விளம்பரத் தேவை

கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

1) Accountants: B.Com பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.

2) Typists:
நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.

3) Sales representatives:

வியாபாரத்தில் திறமையும், அனுபவமும் உள்ள பட்டதாரிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.

மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.

Raj & Co Post Box No.9, Coimbatore - 641001.

இந்த வேலைகளுக்கு பிராமணர்களிடமிருந்து மாத்திரம் விண்ணப்பம் எதிர் பார்க்கிறோம் என்று பார்ப்பனர்கள் பச்சையாக ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்கள் யார் என்று இன்னமும் தெரிந்து கொள்ளாதிருக்கும் மரக்கட்டைத் தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


புத்தரின் ஆத்மா மறுப்பு!


புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுவோம்.

கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்க முடியுமா?

காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா?

மூக்கை எடுத்து விட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்

தமிழ் ஓவியா said...


ஆரியர்களுக்கு முன்னே யார் இருந்தார்கள்?மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் ஜில்லாவில் ஊர் பெயர்கள், அவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஊர் பெயர்களின் ஆராய்ச்சிகளில் சிதைந்த சரித்திரத்தை இணைக்க உதவும் ஆதாரங்கள் பல காணப்படும் என்பது உண்மை (on probing into place names, fossils on history will be found) ரா, குரி, குண்டா, ஜுலி, ஜோல் என்று முர்ஷிதாபாத் ஜில்லாவில் காணப்படும் பெயர்கள் _ நிச்சயமாக திராவிட ஆரம்பங்களைக் கொண்டவைகளாகும். ரார்ஹ் என்ற பகுதி _ ஆரியர்கள் அல்லாத இனத்தினரால் நிரம்பி இருந்தது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். இங்கே மற்றும் ஓர் உண்மையையும் குறிப்பிட வேண்டும். வங்காள மொழியில் ஒலி அமைப்பில் (Phonetics) எழுத்து அமைப்பில் (Morphology) வாக்கிய ஏற்பாடுகளில் (Syntax) வார்த்தை கோவைகளில் ((Vocabulary) சந்தேகத்திற்கிடமில்லாத திராவிட உறவுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இவைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு ஊர் பெயர்களைப் பற்றிய பரவலான ஆராய்ச்சி செய்தால் _ வங்காளத்தின் பல பகுதிகளிலும் ஆரியர்கள் அல்லாத மக்கள் முக்கியமாக திராவிடர்கள் நிரம்பி இருந்தார்கள் என்பது நிச்சயம் தெரியவரும்.

(Dr. N. D. Bhattacharya M.A. Ph.D., Indian Geographical Journal (July, Dec. 1969)

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரியார் விழா வரவேற்கத் தகுந்தது


தந்தை பெரியார் அவர்களது 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களது படத்தை வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் மாலையிட்டு பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளார்!

இதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி - (இதற்கு முன் பெரிய அளவில் மக்கள் தலைவர் அய்யா G.K. மூப்பனார் அவர்கள் முன்னின்று அனைத்திந்திய தலைவர்களை அழைத்து சென்னையில் மாபெரும் விழாவெடுத் தார்கள் என்பது ஒன்று) காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெறவில்லை. இந்த முறையும், மரபும், அனைவராலும் போற்றிப் பின்பற்ற வேண்டிய பண்பாட்டு நிகழ்வு ஆகும்!

தரந்தாழ்ந்த விமர்சனங்கள்

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் மிகவும் தரக் குறைவான தாகவும், தனி நபர் பற்றிய தாக்குதல்களாகவும் அமைந்து விட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது. இப்போக்கு மாற வேண்டும். துக்க வீட்டில்கூட அரசியல் நுழைந்து, அதில்கூட விருப்பு, வெறுப்புகள் தலைவர்களைப் பொறுத்து காட்டப் படுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முற்றிலும் முரணானது - தவிர்க்கப்படல் வேண்டும்!

கருத்து மோதல்கள், கொள்கை நிலை விமர்சனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். தனிப்பட்ட குடும்பப் பெண்கள் பற்றியும் விமர்சனங் களாகவும், இழிநிலைக்குச் செல்லப்படுவது கண்டனத்திற் குரியவைகளாக அனைவராலும் கருதப்பட வேண்டும். தடுக்க வேண்டும்.

தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கட்சித் தொண்டர்கள், பேச்சாளர்கள், தலைவர்களைத் திருப்தி செய்து, மனதில் இடம் பிடிக்க மலிவான கீழ்த்தரமாகப் பேசுவதை தலைவர்கள் சுவைக்கக் கூடாது; மாறாக, கண்டிக்க வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பொது வாழ்வைத் தூய்மைப்படுத்த அனைத்துத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

தரந் தாழ்ந்த எழுத்தாளர்களை, ஏடு நடத்துவோர் ஊக்குவித்தால், அவ்வேடுகளைப் புறக்கணிப்பதே சரியான தண்டனை ஆகும். அதையும் செய்யலாம்; செய்ய வேண்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


சென்னை

21.9.2013

தமிழ் ஓவியா said...


உலகமயமாகிறார் பெரியார்


உலகமயமாகிறார் பெரியார்
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு

தோழர்களே, நமது தலைவர் தந்தை பெரி யார் அவர்களின் கொள் கைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல - உலகிற்கே சொந்தம் - மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்று புரட்சிக் கவிஞர் பாடி யது வெற்றுச் சொற்கள் அல்ல - என்பதற்கு அடை யாளமாக உலகெங்கும் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைகள் பரவி வருகின்றன - வரவேற்கப்படுகின்றன.

சிகாகோவை தலை மையிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யமும் லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மர், துபாய் முதலிய நாடுகளில் சிறப் பாகச் செயல்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா வில் தோழர் எழிலரசன் முயற்சியால் பெரியார் ஆப்பிரிக்கன் ஃபவுண் டேசன் தொடங்கப் பட்டு, பணிகள் நடை பெற்று வருகின்றன.

இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 17-க்கு முன் 12ஆம் தேதி யன்று தந்தை பெரியார் விழாவில் கலந்து கொள்ள கொல்கத்தாவிலிருந்து அழைப்பு வந்தது.

எங்களுக்கேகூட ஆச்சரியம்! கொல்கத்தா வில் ரிசர்வ் வங்கி அலு வலகத்துக்குள் நமது அய்யா விழாவைக் கொண்டாடினர். பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவ்விழாவில் கலந்து கொண்டனர். யூனியன் வங்கி பணியா ளர்கள் சார்பிலும் கொல்கத்தாவில் பெரி யார் விழா; அதேபோல பங்களாதேஷ் எல்லை என்று கருதக் கூடிய இடத்தில் இரயில்வே தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் விழா வில் பங்கு கொண் டோம் - என்னுடன் பிற்படுத்தப்பட்ட பணி யாளர்கள் கூட்டமைப் பின் பொதுச் செயலா ளர் தோழர் கோ. கருணாநிதி அவர்களும் பங்கு கொண்டார்.

கொல்கத்தாவில் டில்லியில் உள்ளது போல பெரியார் மய்யம் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஒடிசாவில் ஒடியா மொழியில் ஊடிடடநஉவநன றுடிசமள டிக ஞநசலையச என்ற நமது இயக்கம் வெளி யிட்டுள்ள ஆங்கில நூலை ஒடியா மொழியில் வெளி யிட்டுள்ளனர். அதன் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதியில் செல்ல இருக்கிறேன்.

தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம் என்று சொன்னது நிரூ பிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது உலக மய மாகிக் கொண்டு இருக் கிறார்.

- திராவிடர் கழக மண்டல தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் (திருச்சி - 19.9.2013)

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா


இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா சென்னையில் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் பத்து கோடி தாரை வார்க்கப் பட்டுள்ளது.

இந்த விழா அவ்வளவு அவசியம்தானா? நாட்டு மக்களுக்கு இதனால் ஒரு கடுகளவு பயனாவது உண்டா? அப்படியே நடந்தாலும் 10 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்க வேண்டுமா?

முதல் அமைச்சர் முதல் குடியரசுத் தலைவர் வரை பங்கு கொள்வதன் மூலம் இந்த விழா தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுவதற்குப் பயன்படுமே தவிர பொது மக்களுக்கு இதனால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.

கலை நிகழ்ச்சிகள் நடக்கலாம்; விளம்பரம் பெற்ற கலைஞர்கள் பங்கு கொள்ளலாம். அவற்றைக் கூட பொது மக்கள் சென்று நேரில் பார்க்க முடியுமா என்றால் அதுவும் நடக்காது. (ஒரு வகையில் பொது மக்கள் இளைஞர்கள் சென்று பார்க்காதது கூட நல்லது தான்!)

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் கணித்தது ஆழமானது. மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கோ, முற்போக்கு எண்ணங்களுக்கோ பயன்படுகின்ற வகையில் சினிமாக்கள் எடுக்கப்படுவதும் இல்லை.

ஆபாசக் காட்சிகள், குத்தாட்டங்கள், சில சண்டைகள் என்று மசாலாவாக ஆக்கி மக்களின் பணத்தைத் திருடத்தான் பயன்படுகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 51-ஹ() பிரிவின்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை சீர்திருத்த உணர்வை உண்டாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது.

மாநில அரசோ, மத்திய அரசோ உதவுவதாக இருந்தால், அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள கடமையைச் செய்யும் திரைப்படத்துக்குத்தான் உதவி செய்ய வேண்டும்.

அதை விட்டு விட்டு திரைப்பட நூற்றாண்டு விழா என்பதற்காக மத்திய அரசோ, மாநில அரசோ மக்கள் பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டுவது பொறுப்பான செயல்பாடல்ல.

இன்றைக்குப் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை என்பது அன்றாட மலிவான நிகழ்ச்சியாகி விட்டது; குழந்தைகள்கூட இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. இதற்கான காரணங்களில் சினிமாவுக்குத்தான் முதலிடம்.

குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் திரைப்படக் காட்சிகளைப் பார்ப்பதற்குக் கூச்சப்படும் நிலைதானே? இல்லை என்று மறுக்க முடியுமா?

இன்றைக்குக் கறுப்புப் பணத்தைப்பற்றி நீட்டி முழக்குகிறார்கள். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாகப் புலம்புகிறார்கள். கருப்புப் பணச் சந்தையாக திரைப்படத் துறை இல்லை என்று விரலை நீட்டி அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறத் தயாரா?

படத் தயாரிப்பாளர்களிடம் வாங்கும் தொகைக்கும், இரசீது கொடுக்கும் தொகைக்கும் வேறுபாடு இல்லை என்று தான் கூற முடியுமா?

திரைப்பட விழாவிலும்கூட அரசியல் இருக்கிறது. திரைப்படத் துறையில் கலைஞர் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அனுபவமும் சாதாரணமானதல்ல. இந்த நூற்றாண்டு விழாவில் அவருக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டாமா? அரை நூற்றாண்டுக்கு மேலாக இத்துறையில் முத்திரை பொறித்தவர் கலைஞர் அல்லவா!

அவர் முதலமைச்சராக இல்லை என்பதற்காக அவரது திரைப்படத்துறை ஈடுபாட்டை, குறைத்து மதிப்பிடத்தான் முடியுமா? அதையும் தாண்டி நமது கருத்து அரசுப் பணம் ரூபாய் பத்து கோடி, மக்கள் நலனுக்குப் பயன்பட்டு இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பயனற்றவைகளுக்குப் பயன்படக் கூடாது

தமிழ் ஓவியா said...


வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் (ஆகஸ்ட் 20-22) ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் வெளிவந்து பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக்கொள்வோம் என்ற கட்டுரை மிகவும் ஆக்கப்பூர்வமாக இன் றையக் கால கட்டத்திற்குத் தேவையான அருமருந்தாக இருந்தது.

முதிர்ச்சியில்லாத நிலை தான் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது, எதிர் கொள்ள பயப்படுவதும் ஆன மன நிலை. மனிதர்களிடம் உள்ள பகுத்தறிவை விட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா? ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அற்புத வரிகள்

இன்றைய கால கட்டத்திலே அற்பக் காரணங்களுக்காக இளைஞர்கள் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி ஆகியவற்றிற்கு தற்கொலை முடிவு எடுப்பது எத்துணை அறியாமை - இதற் கெல்லாம் இக்கட்டுரை அரிய தன்னம் பிக்கை டானிக்! உடலியல், உளவியல் ரீதியாக ஆசிரியர் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சிறப்பாக குறிப்பிட்டுள் ளார். பிரச்சினைகளால் திசை தெரியாமல் தவிப்போருக்கு கலங்கரை விளக்கமாக இக்கட்டுரை வழிகாட்டும். சிறிய புத்தக மாக வெளியிட்டால் மாணவர்களும், இளைஞர்களும், மற்றவர்களும் படித்து தெளிவு பெறவேண்டிய வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை
- தி.க.பாலு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)

டாக்டர்கள் கவனத்திற்கு

தொடர்ந்து, வேண்டாத பழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டு மது மயக்கத் திற்குள் விழுந்துவிட நோயாளிகளாகி விட்டனர். அரசு மருத்துவமனைக்குத் தானே, ஏழை முதிய நோயாளிகள் செல்ல வேண்டிவரும். அங்கே அரசு ஊழியர் களை விட, மருத்துவர்களே நோயாளி களிடம் அலட்சியமாக கோபத்துடன் பேசுகின்றனர். அமைதி இழந்து, தன் மானமுள்ள ஆண் - பெண் வயதான நோயாளிகள் கோபங்கொண்டுவிடும் சூழலில் பாதிப்பு நோயாளிகளுக்குத் தான். மருத்துவர்கள் மனிதத்தன்மை மனிதாபிமானத்துடன் நடந்து கொண் டால் என்ன? அவ்வாறு நடந்து கொள் ளாததால், புற்றுநோய் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத் துவர்களால் மேலும் பாதிக்கப்படுகின்ற னர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல - புதுச்சேரி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஏனைய கட்சிகள் ஏழை வயதான நோயாளிகள் நல்வாழ்விற்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒரு நாளாவது மருத்துவ மனைகள் முன் மக்களின் ஆரவாரம், மனிதச்சங்கிலிப் போராட்டம் என, நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது அரசியல் அல்ல. தொண்டு, தந்தை பெரியார் வலியுறுத்திய மானிடப்பற்று அதைக் கடைப்பிடிப்போம்!... உருப்படுவோம்!...

- எம்.எஸ்.மணி (முதுகுடிமக்கள் பாதுகாப்பு சங்கம்)

தமிழ் ஓவியா said...

எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமசாமி அவர்கள்.

தமிழர் தலைவர் அவர்களை வல்லத்தில் சந்தித்து இயக்கத்தின் கல்விப் பணிக்காக ரூபாய் 30 இலட்சத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தமிழர் தலைவரிடம் அளித்து இன்ப அதிர்ச் சியை ஏற்படுத்தினார்.

திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற (19.9.2013) திராவிடர் கழக மண்டல தலைவர்கள், தொண்டர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர் இராமசாமி அவர்களை மேடைக்கு அழைத்து, சால்வை அணிவித்துப் பாராட்டினார். அப்பொழுது கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இராமசாமி அவர்கள் 50 ஆண்டு காலமாக விடுதலை வாசகர் ஆவார். கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டை அணிந்த இயக்கத் தோழர்கள் ஒரு பக்கம்; கண்ணுக்குத் தெரியாத கருஞ்சட்டை அணியாத ஆசிரியர் இராமசாமி போன்ற எண்ணற்ற பெரியார் தொண்டர்கள் நம் இயக்கத்தில் உண்டு - கண்ணுக்குத் தெரியா விட்டாலும், இயக்கத்திற்கு இத்தகையவர்கள் அஸ்திவாரம் போன்றவர்கள்.

பெரியார் மருத்துவ நிதி, விடுதலை நிதி என்று தமது பங்களிப்பை அடிக்கடி அளித்துவரும் இந்தப் பெரு மகனார் இப்பொழுது ரூபாய் 30 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பெரியார் கல்வி நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்து, அவற்றின் வளர்ச்சியை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்து, நம் நிதி பெரியார் பெயரில் அமைந்த நிறுவனங்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிதியை அளிக்க முன் வந்துள்ளார். செயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு ஆசிரியர் இராமசாமி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்) என்றார் கழகத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

சத்தியாக்கிரகம்
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறுமார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக்கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டுவிட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதம் பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் தொடங்கப்பட வேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப் படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ, அதுபோல சத்தியாக்கிரகமென்னும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்பிட்ட லட்சியத்திற்கு அழிவு ஏற்படும் என்றேசொல்லுவோம். சத்தியாக்கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி வயிறுவளர்த்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதையாய் உணர வேண்டும். நாகபுரி சத்யாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி இல்லை என்று தெரிந்த உடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல் தண்டனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின் யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்த கொண்ட மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும் இவைகளின் மூலம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில் அறிந்ததே. ஆதலால், வாசகர்களே போலி ஆசாமிகள் வேறுவழியில் சுய நலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளுவதற்கும் கூலிக்கு மாரடிப் பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள் விஷயத்தில்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்

நம் நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் இம்மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்படவேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக் காலத்தில் உண்மையாயும், யோக்கியமாயும் நடந்து வந்த சந்நியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால் இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொதுநல ஸ்தாபனங்கள் எந்நிலையில் இருக்கிறது என்பதும், இதை யார் அனுபவிக்கிறார்கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக் களாகிய சந்நியாசிகள் என்போரின் யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்ல வேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொதுநலத் திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம்மடாதிபதிகள் தங்கள் சுயநலத்திற்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடுமென்பதாகக் கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும் லஞ்சமாகவும் பிச்சையாகவும் அழுத பணங்கள் கணக்குவழக்கில் அடங்காது என்றே சொல்லலாம். இவ்வளவு பணங்களைத் தொலைத்தும் தாங்கள் வெற்றிபெறவில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் தோப்புக் கர்ணம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீமான் டி ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் 30லட்சம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது வட நாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டப்போவ தாகவும் அதற்குப் பணம் வேண்டு மென்றும் இம்மட அதிபதிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார சன்னதி அவர்களைக் கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் பத்து வருஷத்திற்குக் கொடுப்பதாய் ஒப்புக் கொண்டாராம். இவரைப் பார்த்து இனியும் மற்ற மட அதிபதிகளும் கொடுப்பார்கள். பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்குக் கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ, மிராசுதாரோ, நாட்டுக்கோட்டையாரோ மற்ற ஏதாவது செல்வமுள்ள வர்களோ நமது நாட்டில் மிகமிக அருமையானதால் இந்த பணம்கொடுத்துதான் தீரவேண்டி வரும். ஆனால், இப்பணம் எதற்கு உபயோகப் படப் போகிறது? டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டத்தான் உபயோகப்படும். ஆனால், தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள் எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பனப் பிள்ளைகள் பிழைக்கவும் கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாத ஊரில்கூட கோவில்கட்டி வித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் சூத்திரர்கள் உள்ளே போகக் கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலகமெலாம் நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப்போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக் கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.03.1927

தமிழ் ஓவியா said...

தொழிலாளர்

சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங் களும் தங்களால் தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங் களெல் லாம் தங்களால் தான் வாங்கிக் கொடுக்கக் கூடும் என்றும் சொல்லி, இதுகால பரியந்தம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று பதவி பெற்று வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபைத் தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்களிலும் இப்பார்ப் பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலாளர்கள் தங்களுடைய ஓட்டுகளையெல்லாம் பார்ப்பன அபேட்ச கர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரைத் தோற் கடிக்கச் செய்ததும் பலருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க, இப்போது மேற்படி தொழிலாளச் சகோதரர் களில் தாங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலா மெனக்கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர் தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சகர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த மேற்படி பார்ப்பனர்கள் தொழிலா ளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித் திருக்கிறார்கள். அது என்னவென்றால், தொழிலாளர் களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேர வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர் யோசிக்க வேண்டும். என்னவெனில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில், தொழி லாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளி மார்கள் அதனை எப்படியாவது கெடுத்துவிடக்கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரசில் சேர முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழி லாளர்களை சுலபமாகத் தள்ளிவிடலாம் என்பதுதான். தொழிலாளிகளுடைய ஓட்டுப் பெறும்போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்கிற தந்திரத்தின் பேரில் தான் பார்ப்பனர்களின் தொழிலாளர் அனுதாபம் ஏற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சி களை அறியாமல் எடுப்பார் கைக் குழந்தைகளாயிருக் கின்றார்கள் இவைகளை எல்லாவற்றையும் அறிந்தேதான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்பந்தமான எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்றும் அது கொஞ்சகாலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும், எழுதியும் வந்தோம். நாம் இப்படிப் பேசி, எழுதி வந்ததைப் பற்றி பல தொழிலாளர்கள் தலைவர்களுக்கும் தம் மீது மனஸ்தாப மேற்பட்டது நமக்கு தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மாநாட்டு உபசரணைத் தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். மித்திரன் அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன் தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட் சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டி யாருக்கும், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய் யங்கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பாஷணை, அடிதடி சண்டை முதலியவைகள் நடந்திருப்பதையும், தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவராவ், கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்தும் பார்ப்பனத் தந்திரங்கள் நன்றாக விளங்குகின்றன. இனியாவது, நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டுகளின் மாய் கையில் இருந்து விலகுவார்களா என்பது தான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகித் தனிப்பட்ட ஹோதாவில் தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால், நாமும் நம்மாலானதைச் செய்யத் தயாராயிருக் கிறோம் என்றும், எந்தக்கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்துவிடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 24.04.1927

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி


பெங்களூரு, செப்.21- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி தெரிவித்தார்.

பெங்களூருவில் கடந்த 15-ஆம் தேதி நடை பெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப் பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தி இப்போதே நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே போன்றோர் விமர் சித்தனர். கன்னட அறிஞர் சிதானந்த மூர்த்தியும் அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அனந்தமூர்த்தியின் கருத்துக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் பரகூர் ராம சந்திரப்பா, கே.மருளுசித்தப்பா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையில், மோடி குறித்து, தான் கூறியிருந்த விமர்சனம் தொடர்பாக பெங்களூருவில் வியாழக் கிழமை எழுத்தாளர் அனந்த்மூர்த்தி கூறியது:

நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்க ளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்.

முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும்.
பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும். பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?

கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோதுகூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்து மத தத்துவத்தை நான் ஏற்காததால், பாஜகவினர் எப்போதும் என்னை விமர்சிப்பார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால், ஊழல் புரிந்துள்ள தால், அந்தக் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி


புதுடில்லி, செப். 21-மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார்.

பா.ஜ பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடி நியமிக்கப் பட்டது குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:

நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி. அவர் பா.ஜ சார் பில் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அதனால், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கும், சங் பரிவார் அமைப்புக்கும் இடையே முதல் முறையாக நேரடி போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலை பிரதமர் பதவிக்கான போட்டியாக மாற்ற பா.ஜ விரும்புகிறது. இந்த போட்டியில் காங்கிரஸ் ஈடுபடாது. யாரையும் காங்கிரஸ் முன் னிறுத்தாது என நினைக் கிறேன்.

மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான். அதனால்தான் அவரது வலதுகரமாக திகழும் அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தின் பாஜ பொறுப்பாளராக நியமித் துள்ளார். அவர் தனது விளையாட் டை நடத்திவிட்டார். முசாபர் நகரில் மதக் கலவரத்தை தூண்டியது பா.ஜ. தான். மோடி முன்னிறுத்தப் பட்டதன் மூலம், இதுபோன்ற பல கலவரங்கள் வட மாநிலங்களில் நடக்கும். முதல் டிரெய்லர் முசாபர் நகரில் நடந் துள்ளது. இதுபோல் பல சம்பவங்கள் நடக்கும். மதவாதம் படிப்படியாக தூண்டப்படும் என அஞ்சுகிறேன். இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக இருக்கும் உ.பி., பிகார் போன்ற இடங் களில் மதக் கலவரம் தூண்டப்படும் என தெரிகிறது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தமிழ் ஓவியா said...


திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக : மத்திய அமைச்சருக்கு தொல். திருமாவளவன் எம்.பி. கடிதம்!


சென்னை, செப். 22- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெய ரைச் சூட்ட வேண்டு மென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் கிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதி யுள்ளார்.

அக்கடித விவரம் வரு மாறு:

தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தீண்டாமை மூடநம்பிக்கைக்கு எதி ராக தமிழக மக்களி டையே பகுத்தறிவு எண் ணத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் எழுச்சியுறச் செய்தவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக் கீடு கிடைக்க போராடி யவர். அரசியலில், விடு தலைக்கு முன்னர் காங் கிரஸ் கட்சியில் ஈடுபட்டு பின்னர் பகுத்தறிவு இயக் கமான திராவிடர் கழ கத்தை தோற்றுவித்தவர். தமிழகம் முழுவதும் பய ணம் செய்தவர். தமிழ கத்தில் ஒவ்வொரு கிரா மத்திற்கும் சென்று தீண் டாமை ஒழிப்புக்கு பாடு பட்டதுடன் பெண் களுக்கான கல்வி, சமூக பொருளாதார மேம் பாட்டுக்கு அக்காலத் திலேயே பாடுபட்டவர்.

தந்தை பெரியார் பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததுடன் இந்தியாவில் பல மாநி லங்களிடையே சுற்றுப் பயணம் செய்துள்ளார். பெரும்பாலும் அவர் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்ததுடன் அங்கு பல கல்வி நிறு வனங்களை ஏற்படுத் தினார். அவரது கொள்கை சம்பந்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் நிலை களில் அங்கு தொண் டாற்றினார். அவர் தம் முடைய வாழ்நாள் முழு வதும் நமது நாட்டில் சமூக இணக்கத்திற்காக வும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டார்.

மிகவும் மதிப்பு மிகுந்த தலைவரான தந்தை பெரியாரின் பெயரை திருச்சி பன் னாட்டு விமான நிலை யத்திற்குச் சூட்ட வேண் டும் என பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மத்திய அரசு, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சி தந்தை பெரியார் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார்.

தமிழ் ஓவியா said...


இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டணியினர் வெற்றி வரவேற்கத் தகுந்தது


இலங்கையில் வடக்கு மாகாண மாநில ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளி வந்துவிட்டன.

தமிழ்த் தேசிய கூட்டணியினர்தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது!

யாழ்ப்பாணம் பகுதியில் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தமிழ்த் தேசியக் கூட்டணியினர்.

சிங்கள இராஜபக்சே அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர்! உணர்வுகள் சாவதில்லை - ஒருபோதும்.

இது சிங்கள அரசுக்கு - ராஜபக்சே அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.

முன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட இராஜபக்சே அரசு முயற்சிக்கக்கூடும்.

எனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை

22.9.2013

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்


பிராமணாள் என்று விளம்பரப்படுத் தப்பட்டு உணவு விடுதிகள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது தலைமைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய விவரத்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் தலைமைக் கழகத்துக்கு உடனே தெரிவிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்


சிவகாசி, செப்.22- பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் அதி காரம், ஊராட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில், பிறப்பு, இறப்பு சான்றுகள், அந்தந்த உள் ளாட்சி அமைப்புகள் மூலம், வழங்கப் படுகிறது.

கிராம ஊராட்சிகளில், இச்சான்றிதழ்கள், சுகாதார துறை மூலம் வழங்கப்படுகிறது. இச்சான்றுகள் வழங்கும் அதி காரம், ஊராட் சிக்கு வேண்டும் என, தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி இருந்தனர்.

இதை தொடந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலர் பிறப்பித்த உத்தரவில்,"" கிராம ஊராட்சிகளின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்க, ஏற்கெனவே வருவாய் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

இது முறையாக நடைமுறைபடுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. அரசாணையில் தெரிவித்துள்ள படி, பிறப்பு, இறப்பு, இருப்பிடம் மற்றும் குடியுரிமை சான்று, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் சான்று களை, ஊராட்சி தலைவர்களே வழங் கலாம். இதை நடைமுறைப்படுத்த, வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, ஊராட்சி தலைவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்,''என, குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை முதலாமாண்டு சிறப்பு மலர்! மருதநாயகம் இரவீந்திரன் மாளிகை


17.09.2013 தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, தமிழ் நாடு கடந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடு களில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடி மகிழப் பட்டது.

பெரியார் கொள்கை யின் சாதனைகளை, ஆண் டின் 365 நாளும் கொண் டாடி மகிழ காரணங்கள் நிறைய உள்ளன.

அப்படி ஒருநாள் தான் 23.09.2013. ஆம்! 2012 ஆம் ஆண்டில் (23.09.2012) திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களால் திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பெரியார் மருத்துவமனை தொடங் கப்பட்டது. ஆடம்பரங்கள் ஏது மின்றி எளிய மக்களுக் காக, எளிய முறையில் தொடங்கப்பட்ட இம் மருத்துவமனைக்கு, மக்கள் ஓரிருவர் வந்து சென்றனர்.

மருத்துவ மனையின் நேர்த்தியான வடிவம், மருத்துவர் களின் அன்பு, செவி லியர் களின்கனிவு ஆகியவை மக்களின் 50 விழுக்காட்டு நோயைக் குணப்படுத்த, மீதமிருந்த நோயை மருந்து, மாத்திரைகள் பார்த்துக் கொண்டன.

இதற்கான கட்டணமும் மிகக் குறைவு என்ற போது மக்கள்பெரியாரை நிதானமாக நிமிர்ந்துப் பார்த்துச் சென்றனர். அதற்கு வாய்ப்பாக மருத் துவமனையின் முன்பு, முழுவுருவ வெண்கலச் சிலையில் அய்யா அனை வரையும் வரவேற்கிறார்!

இப்படியான மக்கள் பெரியார் மருத்துவ மனைக் குறித்து தம் வீட்டில் சென்று நெகிழ, வீதியில் சொல்லி மகிழ, இன்றையத் தேதியில் பயன்பட்ட மக்கள் ஓரா யிரம், ஈராயிரம் அல்ல; அது 10 ஆயிரம் கடந்து போயின!

இவ்வாறான தொடர் மக்கள் சேவையுடன் நம் மருத்துவக்குழு நின்றதா? இல்லை!பல்வேறு வாய்ப்புகளை வளர்த் தெடுத்தார்கள். அதன் வழியே 02.12.2012 திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நலம் பெற் றார்கள்.

அன்றைய தினம் மருத்துவமனை வளா கத்தில் செடிகள் நடப் பட்டன. அன்றைய செடி களின் இன்றைய பெயர் மரம்!

அதனைத் தொடர்ந்து 24.12.2012 அன்று பெரி யாரின் நினைவு நாளில், பெண்களுக்கான இலவசப் புற்று நோய் கண்டறியும் முகாமில் 80 மகளிர் பங்கேற்றுப் பயன் பெற்றனர். பெரியார் மருத் துவ மனையைக் கடந்து, திருச்சி மாவட்டம் பிச் சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் 04.01.2013 இல் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 70 பொது மக்களும், 04.08.2013 அன்று பெரி யார் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 226 மக்களும் பயன் பெற் றனர்.

பொது மருத்துவ முகாம் என்றால் ஏதோ வழக்கமான சம்பிரதாய சோதனைகள் கிடையாது. ஒவ்வொரு பயனாளிக்கும் 8 வகையான சோதனை கள் மேற்கொள்ளப்பட் டன. இவற்றை வெளியில் பரிசோதித்தால் ரூபாய் அய்நூறு பாதிக்கும் என்பது உண்மை.

மேலும்புற்று நோயின் அவசியம் கருதி தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22.09.2013 அன்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து மீண்டும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

இவ்வாறாகத் தொடர் மருத்துவச் சேவைகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுத் துண் டறிக்கைகள் எனத் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை ஓராண்டு சகாப்தம் முடிக்கிறது. தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களின் உயர் வழிகாட்டுதலில் அம் மருத்துவமனைத் தொ டர்ந்து வெல்லும்! சாத னைகள் பல மெல்லும்

தமிழ் ஓவியா said...


இவரிடம் இதைக் கண்டேன்!

திருவெறும்பூரில் பெரியார் மருத்துவமனை என்றதுமே இவர் நினைவில் வருவார். அவர் பெயர் இரவீந்திரன்! நேர்மையான தொழிலதிபர். நிழற்படத்தில் அவரைப் பார்த்தால் திருநீறும், குங்குமமும் பளிச் சென்று தெரியும். அசர வைக்கும் ஆன்மீகவாதி.

அளவிட முடியாத மனிதாபிமானி! அதனால்தான் அள்ளிக் கொடுத்தார் ரூ. 12 இலட்சம்! பெரியார் கொள்கை வென்றதா-? என்போருக்கு ஆன்மீகவாதி இரவீந்திரன் அவர்களையே பதிலாகச் சொல்வோம்.

மனதில் இருப்பதைப் பளிச்சென்று படபடக்கப் பேசும் தொழிலதிபர் இரவீந்திரன் அவர்களைச் சந்தித்து, பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவைச் சொன்னோம்.

ஓராண்டு முடிந்துவிட்டதா? நிரம்ப மகிழ்ச்சி! எவ்வளவோ நன்கொடைகள் கொடுத்துவிட்டேன். எதுவும் நிலைக்கவில்லை; பெரியார் மருத்துவமனை மட்டும் என் காலம் சொல்லும். கடவுளை மறுப்பவர்கள் கரடு முரடாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முதல் சந்திப்பிலேயே என் எண்ணங்கள் மாறியது. அவரின் அணுகுமுறையில் கவரப்பட்டு, அன்பால் ஈர்க்கப்பட்டேன்.

பெரியார் பெயரிலான மருத்துவமனைக்கு ரூ.6 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்திருந்தேன். அய்யா வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அக்கணமே முடிவு செய்துவிட்டேன் 6 அல்ல, 12 இலட்சம் கொடுப்பது என்று! நான் அவரின் நல்ல பணிகளுக்குப் பொருளுதவி செய்து, தொடர்ந்து உறுதுணையாய் இருப்பேன்.

உண்மையிலேயே நான் அறிந்த வரை இவர் மிகச்சிறந்த நல்லவர், மனிதப் பண்பாளர். சாதாரண மனிதரையும் நெகிழ வைக்கும் குணம் கொண்டவர். இவரின் சமூக எண்ணங்கள் ஈடேற நானும் ஒரு மனிதராய் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்குப் பணம் செலவழித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

மேலும் நான் என் தொழிலில் நேர்மையோடு செயல்பட்டு, இன்று வரை கடுமையாக உழைத்துப் பொருளீட்டுகிறேன். அப்படியிருந்தும் நான் நன்கொடைகள் வழங்கக் காரணம், பெரியாரிடத்தில் எனக்குப் பிடித்த பல கொள்கைகளும், அய்யா வீரமணி அவர்களின் அன்பும்தான்!

பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியில், அம்மருத்துவமனையின் மாடியில் மேலும் பல கட்டமைப்பு வசதிகளை செய்து தர நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறி முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கூறி முடித்தார்.

தமிழ் ஓவியா said...


வாழ்த்து


திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெரியார் மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணர்களாக திகழும் தொண்டறச்செம்மல் வள்ளல் வீகேயென்.கண்ணப்பன், திரு.ரவீந்திரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொண்டாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தோழர், தோழியர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

தொண்டு உணர்வு என்பது பெரியாரின் மனிதநேய அருட்கொடை. வாழ்க பெரியார்! வளர்க பெரியார் மருத்துவமனை சேவை!!

சென்னை
22.09.2013

கி.வீரமணி
செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்