Search This Blog

18.9.13

அதிசயத்தை நடத்திக் காட்டியவர் இரட்டைமலை சீனிவாசன்

செங்கற்பட்டு மாவட்டம் சோழியாளம் என்ற கிராமத்தில் இரட்டைமலை என்பவருக்குப் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன் 1860 ஆம் ஆண்டு பிறந்த அவர், மறைந்தது இதே தேதியில்தான் (18.9.1945).

தஞ்சாவூரைச் சேர்ந்த இவரின் குடும்பத்தார் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து பணியாற்றும்  நோக்கோடு சென்னை வந்தனர்.

பள்ளிப் படிப்பின்போது தீண்டாமையின் அந்தக் கொடிய விளைவுகளையும் அனுபவித் தார், எல்லாத் தடைகளையும் தாண்டி கல்வி கற்று தொடக் கத்தில் நீலகிரியில் வெள் ளைக்கார நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.
ஆனால், அவரின் எண் ணங்கள் அடக்கப்பட்ட மக்களின் உரிமை தொடர்பான வானத்தில் சஞ்சரித்தன.

1891 இல் பறையர் மகாஜன சபை ஒன்றைத் தொடங்கினார். பறையன் என்ற பெயரில் 1890 அக்டோபரில் மாத இதழ் ஒன்றை ஆரம்பித்தார். (நான்கு பக்கங்கள், விலை இரண்டணா).

மலையாள நண்பர் ஒருவரிடம் ரூ.15 கடன் வாங்கி இந்த இதழைத் தொடங்கினார். பின்னர் வார இதழாகவும் அது முன்னேறியது!
யாரும் நினைத்துப் பார்க் கவே முடியாத ஒரு கால கட்டத்தில் இப்படி ஓர் இதழைத் தொடங்கி நடத்துவது என்பது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களை இணைப்பதற்கு அவர் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. அவர்கள் பெரும்பாலும் ஆங் கிலேயர்களின் வீடுகளில் சமையல்காரர்களாகவும், பணி யாட்களாகவுமே இருந்தனர்.

வெள்ளைக்காரர்கள் இரவு உணவு முடித்து தூங்கச் சென்ற பின் இரவு 12 மணிக்குமேல் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து இரகசிய கூட்டங்களை நடத்தியுள்ளார்.

1895 இல் விக்டோரியா மன்றத்தில் வெளிப்படையாக தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்திற்குத்தான் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட வர்கள் பேரணியாக அணி வகுத்து வந்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள்பற்றிப் பேசுவதற்காக 1930 டிசம்பர் 23 அன்று இலண் டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் தென்னிந்திய பிரதிநிதியாக இரட்டைமலை சீனிவாசன் கலந்துகொண்டார்.

பார்ப்பனர்களின் நரிக் குணம் எத்தகையது என்பதை நுண்மையாக அறிந்தவர் இவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு உண்டு. அப்பொழுதெல்லாம் அய்.சி.எஸ். தேர்வு இலண்டனில் நடத்தப்பட்டு வந்தது. அதனை இந்தியாவில் நடத்தவேண்டும் என்று பார்ப்பனர்கள் வலி யுறுத்தினர்.

ஆனால், இரட்டைமலை சீனிவாசன் அவர்களோ, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனு கொடுத்தார். இந்தியாவில் அய்.சி.எஸ். தேர்வை நடத்திட அனுமதித்தால், அது இன்னும் அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர் அய்.சி.எஸ்.களாக ஆவதற்குத்தான் உதவும் என்று அந்த மனுவில் குறிப்பிட் டிருந்தார். அந்த மனுவில் 3412 தாழ்த்தப்பட்ட மக்கள் கையொப் பமிட்டிருந்தனர். அந்த மனு 112 அடி  நீளமுடையதாக இருந்தது. அதனைப் பிரிட்டீஷ் அரசும் ஏற்றுக் கொண்டது.

120 ஆண்டுகளுக்குமுன் இந்த அதிசயத்தை நடத்திக் காட்டியவர் இரட்டைமலை சீனிவாசன் என்பது சாதா ரணமானதுதானா?

----------------------- மயிலாடன் அவர்கள் 18-9-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

62 comments:

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பது அரசியல் உள்நோக்கமே! உதவாதினி ஒரு தாமதம் - திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்


தென்மாவட்டங்களில் பிரச்சார மேடைகளைக் கட்டுவோம்!

தமிழர் தலைவர் அறிக்கை

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்றும், அரசியல் நோக்கத் தோடு முட்டுக்கட்டை போடும் சக்திகளை அம்பலப் படுத்த பிரச்சாரம் செய்யப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, திட்டமிட்டே மதவாத சக்திகளும், அரசியல் லாபம் எங்கே தி.மு.க. வுக்கும், காங்கிரஸ் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கும் சென்றுவிடுமோ என்ற உள்நோக்கத்தோடு, சில பொருந்தாக் காரணங்களைக் கூறி, முன்னே கூறியதற்கு முற்றிலும் முரணாக அ.தி.மு.க. போன்ற கட்சியும், பார்ப்பன இந்துத்துவா கட்சிகளும் எதிர்த்து - உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்று, அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பே முடிந்து கப்பல்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டன!

ராமன் பாலம் எனும் கற்பனைப் பாலம்!

தமிழ்நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்புகள், தென்கிழக்காசியப் பகுதிகளில் வளர்ச்சி எல்லாம் இதன்மூலம் முடக்கப்பட்டன.

இராமர் பாலம் என்ற ஒரு கற்பனைக் கதையைக் கட்டிவிட்டு, மிகப்பெரிய தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டத்தைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன.

நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் முதற்கொண்டு திட்டமிட்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற தமிழ் நாட்டின் தலைவர்கள் எல்லாம் தமிழக வாழ்வு முன் னேற்றம் - வளம் குறித்த இதுபோன்ற திட்டங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்!

நல் வாய்ப்பாக 2005 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் உள்ள ஆட்சி பதவிக்கு வரவிடாமல், தமிழ்நாடு - பாண்டிச்சேரியின் 40 நாடாளு மன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதால், 2006 ஆம் ஆண்டு சேது கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டது.

அரசியல் உள்நோக்கம்

அய்.மு. கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் கலைஞர் அவர்களின் சீரிய இடைவிடாத வற்புறுத்தலால் மதுரைக்கு வந்து, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் மிக விரைந்து செயல்படுத்திட முனைந்து - உழைத்து பெருமளவு வெற்றியும் பெற்றார்.

இந்தப் பெருமை தமிழ்நாட்டில் தி.மு.க. வுக்குச் சென்றடைவதா என்ற எரிச்சல் காரணமாகவே இதனைத் தடுத்திட பார்ப்பன - மதவெறிச் சக்திகளின் கூட்டு முனைப்போடு உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுத்து முடக்கி யுள்ளனர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு, அதே வழித்தடத்தில் நிறைவேற்றிட உறுதிபூண்டு, அமைச்சரவையில் முடிவெடுத்து, உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது - மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழ் ஓவியா said...


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இப்படி ஒரு பணி மீண்டும் தொடங்கப்பட்டு, முடிவு பெறுவதைத் தடுக்கவே, உச்சநீதி மன்றத்தில் காலதாமதம் செய்ய சில வித்தைகளை மனுதாரர்கள் செய்யும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளது கண்கூடாகத் தெரிகின்றது; மத்திய அரசு இதனைக் கவனத்தில் கொண்டு வழக்கை விரைந்து முடிவு எடுக்க அத்துணை முயற்சிகளையும் - வாய்தா வாங்கியே காலங்கடத்தும் வித்தைகளை முறியடித்து முன்னேறவேண்டும்.

ஏனோதானோவென்று இருந்தால் நோக்கம் நிறைவேறாது; மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு மாற்றச் சொல்லும் உரிமை நீதிமன்றத்திற்குக் கிடையாது என்று, உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளே தெளிவாய், திட்டவட்டமாய் கூறியுள்ளன.
அதைப் பயன்படுத்தி விரைந்து மத்திய அரசு செயல்படவேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

இரண்டு செய்திகளை நன்கு மக்கள் மத்தி யில் காங்கிரஸ், தி.மு.க., இத்திட்டத்தை வர வேற்கும் கட்சிகள், அமைப்புகள் பிரச்சாரமாக செய்யவேண்டும்.

பா.ஜ.க. அரசுதானே அன்று தொடங்கியது

1. ஆறாம் வழித்தடத்தைத் தேர்வு செய்தது (ஆதாம் பாலம் என்ற மணல் திட்டுக்கு - புதிதாக இராமன் பாலம் என்று கூறப்படும் உடைபடும் வழித்தடம்) பா.ஜ.க. தலைமையில் அமைந்த அரசுதானே தவிர, தி.மு.க.வோ, காங்கிரசோ அல்ல.

அது நீரி என்ற நாகபுரி சுற்றுச்சூழல், பொறியியல் என்ஜினியர் ஆராய்ச்சி அமைப்பு என்ற நிபுணர்கள் குழுவைக் கொண்ட அமைப்புதான்!

மற்றவைகளையெல்லாம் பரிசீலித்துவிட்டே, இந்த ஆறாம் வழித்தடத்தைத் தேர்வு செய்து, பணிகள் தொடங்கப்பட்டு, முக்கால் பாகத்திற்கு மேல் பணி முடிந்துவிட்ட நிலை.
2. லெட்டர்பேடு மீனவ அமைப்புகளை உருவாக்கி, மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு பொய் அழுகை, போலிக் கூப்பாடு கிளப்பப்பட்டு வருவதையும், அதன் அரசியல் முகமூடிகளையும் கிழித்தெறியவேண்டும்.

எங்கே அந்த வீராதி வீரர்கள்?

இதைவிடக் கேலிக் கூத்து முன்பு சேது கால்வாய்த் திட்டமே தங்களால்தான் வந்தது என்று தோள் தட்டி தொடை தட்டிப் புறப்பட்ட வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் ஏனோ தேர்தல் தொகுதி ஏக்கக் கொழுக்கட்டைகளால் வாயடைக்கப்பட்டு, வாய் திறவா மடந்தைகளாக - திறந்தாலும் பாம்புக்கும் நோகாமல், பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் ஈன சுரத்தில் எதிர்ப்புக் காட்டும் அவலத்தை தமிழ் மக்களுக்கு தோலுரித்துக் காட்டிட பிரச்சாரப் பெருமழை பெய்தாகவேண்டும்!

தென்மாவட்டங்களில் பிரச்சாரம்!

தென்மாவட்டங்களில் ஒத்தக்கருத் துள்ளவர்கள் இணைந்த பிரச்சார மேடைகள்; கருத்தரங்க களங்களையும் கட்டவேண்டும்.
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
18.9.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


நடக்காது!

செய்தி: ஏழுமலையா னுக்குப் புதிய பல்லக்கு. - நரேந்திரமோடி

சிந்தனை: ஏன் நடப்பதில் தகராறோ?

குறிப்பு: பிணியான வர்களையும், பிணமான வர்களையும்தானே தூக்கிச் செல்லுவார் கள்?

தமிழ் ஓவியா said...

வைத்தி அய்யர்கள்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா செய்திகளைப் பல ஏடுகளும் வெளியிட்டுள்ளன. மாலை முரசு பெரியார் திடலில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. (வாழ்க தமிழின உணர்வு!).

தினமணி வைத்தியநாதய்யர் எப்படி செய்தியை வெளியிட்டுள்ளார் தெரியுமா? வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் பல்வேறு கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்று தினமணி செய்தி போடுகிறது. அது என்ன பெரியார் திடலிலும்?

பெரியார் திடல்தான் தந்தை பெரியாரின் தலைமை யிடம் - தலைமைக் கழகம் இருக்கக்கூடிய இடம். இயக் கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலை நாள்தோறும் வெளிவந்திருக்கக்கூடிய இடம். இந்த நிலையிலும் பெரியார் திடலிலும் என்று போடுவதற்குப் பெயர்தான் திருத்தப்படவே முடியாத பார்ப்பனத்தனம் என்பது; தமிழர் விரோத ஏடு என்ற முத்திரையைப் பதிக்காமல் வைத்தி அய்யர் வெளியேற மாட்டார் என்று தெரிகிறது.

(குறிப்பு: பார்ப்பனர்கள் மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பன சங்க மாநாட்டில் தீர்மானம் போட்ட பிறகு மீசை வைத்துள்ள அய்யர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழில் வெளிவரத் தொடங்கியுள்ள இந்து ஏடு ஓரளவு பெரியார் பிறந்த நாள் விழா செய்திகளை வெளி யிட்டுள்ளது. கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நான்காம் பக்கம் வெளிவந்துள்ள செய்தியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் மறைந்த நிலையில், தி.மு.க. ஆட்சி யில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆன நிலை யில், மறுபடியும் மறுபடியும் ஏடுகளும், தொலைக்காட்சி களும் தந்தை பெரியார் பெயரை இருட்டடிக்க ஆசைப் படுவது ஏன்? இப்படியெல்லாம் சூரியனைச் சுண்டைக் காயால் மறைத்துவிட முடியாதே!

தமிழ் ஓவியா said...

திராவிடக் கட்சிகள்பற்றி சி.பி.எம்

சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ் ணன் அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன் னெடுத்துச் செல்லுவதில் பெரியாரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது என்று குறிப்பிட்ட அதே வேளையில், பெரியாருக்குப்பின் ஜாதி ஒழிப்பு இயக்கங் களை நடத்துவதில் திராவிடக் கட்சிகள் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அடிப்படையில் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் பொத்தாம் பொதுவாக அப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை.

திராவிடர் கழகம் நடத்துகின்ற ஒவ்வொரு பொதுக் கூட்டமும், நிகழ்ச்சியும்கூட ஜாதி ஒழிப்பைக் கருவாகக் கொண்டதுதான்.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகள் எரிக்கப்பட்டபோதுகூட களத்தில் முன்னின்று அனைவரையும் ஒருங்கிணைத்து, ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தி ஜாதிவெறித்தனத்துக்குக் கொள்ளி வைத்ததுகூட திராவிடர் கழகமே!

இன்றும் ஜாதி - தீண்டாமை என்பது அதிகாரப் பூர்வமாக, சட்ட ரீதியாக, சாஸ்திர ரீதியாக ஆளுமை யோடு அகங்காரத்தோடு, வீராப்புத்தனத்துடன் குடிகொண்டு இருப்பது கோவில் கருவறையே!

இதனை முறியடிக்கும் மிகப்பெரிய சமூகப்புரட்சிப் போராட்டக் களத்தில் நின்றுகொண்டு இருப்பது திராவிடர் கழகம்தானே. அதற்கான சட்டங்களை இருமுறை கொண்டு வந்த சிறப்பு தி.மு.க.வுக்கு உரியது என்பதையும் புறந்தள்ளிவிட முடியாதே! ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன என்பனவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?

ஜாதி - வருணாசிரமத்தை வலியுறுத்தும் நூலான கிருஷ்ணனின் கீதையைப் பின்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறியுள்ளது குறித்து சி.பி.எம். இதுவரை விமர்சன அளவில்கூட எதையும் கூறாதது ஏனோ?

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டமும் - மத்திய அரசின் முடிவும்!

தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டம், சேது சமுத்திரத் திட்டமாகும். 1860 ஆம் ஆண்டு இதன் தொடக்கமாகும். 153 ஆண்டுகாலமாக இது நிறை வேற்றப்படாமல், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதில் வேகம் காட்டப்பட்டது.

60 சதவிகித பணிகள் முடிவுற்ற நிலையில், இந்தத் திட்டம் கூடாது; என்று முட்டுக்கட்டை போடப்பட்டு விட்டது.

பச்சைப் பார்ப்பனரான சு.சாமி என்பவரும், அண்ணா பெயரையும், திராவிட இனக் கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெய லலிதாவும் உச்சநீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்து இடைக்காலத் தடையைப் பெற்று விட்டனர்.

ராமன் கட்டிய பாலத்தை இடித்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறார்கள் - இது இந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடியது, என்ற கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.
இதில் என்ன கொடுமை என்றால், பி.ஜே.பி. காரர்கள் ராமன் பாலம் என்று சொல்லப்படும் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று சொல்லி வருகிறார்களே தவிர, திட்டமே கூடாது என்று கூறவில்லை. ஆனால், செல்வி ஜெயலலிதா அவர்களோ இந்தத் திட்டமே அறவே கூடாது என்று அடம்பிடிக்கின்றார்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் 6 ஆவது வழித்தடம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் முடிவு செய்யப்பட்டதல்ல, மாறாக வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது பி.ஜே.பி. ஆட்சியில்தான் முடிவு செய்யப்பட்டது.

முரளிமனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோர் மத்தியில் அமைச்சராக - பி.ஜே.பி. ஆட்சிக்காலத்தில் ஒப்புதலும் பெறப்பட்டதாகும்.

அ.இ.அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இரண்டு தேர்தல் அறிக்கையிலே சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றவேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்றாத மத்திய அரசின் மீதும் தேர்தல் அறிக்கையில் குற்றச் சாற்றும் பதிவு செய்யப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது (10.5.1986).

உண்மை இவ்வாறு இருக்க, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, என்று இன்று கூறுவதில், அரசியல் உள்நோக்கம் ஓங்கி நிற்கிறது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மத்தியில் உள்ள காங்கிரசுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க.வுக்கும் அதன் அரசியல் பலன் போய்ச் சேர்ந்துவிடும் என்ற பயமே இதன் பின்னணியில் பெருந்தூணாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இத்தகு உள்நோக்கத்தோடு, இந்தத் திட்டத்தைத் தடுப்பவர்கள், தமிழ்நாடு மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படக் கூடிய திட்டத்தைத் தடுப் பதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கட்சிகள் அம்பலப்படுத்தப்படும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. மிகக் கடுமையான விலையை எதிர்காலத்தில் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்! எச்சரிக்கின்றோம்!

அ.இ.அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழ் ஓவியா said...


பெரியார் பற்றாளர் குடும்பம் பகுத்தறிவு இயக்கத்திற்கு வழங்கிய கொடை மானமிகு சித்ரா சுந்தரம்- வீ. குமரேசன், பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிகளுக்கு துணை நின்று, பகுத்தறிவாளர் கழகச் செயல்பாடுகளுக்கு ஆக்கம் கூட்டிய தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு. சித்ரா சுந்தரம் 14.9.2013 அன்று சென்னையில் மறைவுற்றார்.

பெரியார் இயக்கத்தின் வலிமை

சுயமரியாதை உணர்வினை ஊட்டி, ஆரம்ப நிலையில் அமைப்பாக தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு பின் ஆல்போல் தழைத்து, சவால்களை எதிர்கொண்டு இன்று தமிழர் தலை வரால் பெரியார் உலகமயமாக்கம் எனும் மனித சமுதாய மேம்பாட்டுப் பணியில் உலகளாவிய சிந்தனை மற்றும் செயல்பாட்டுப் பெட்டகமாக விளங்குகிறது. பெரியார் இயக்கம் உலகின் பிற பகுதிகளில் ஒப்புவமை காண இயலாத அமைப்பாகும். உலகின் பிற பகுதிகளில் உள்ள பகுத்தறிவாளர் அமைப்பினரை வியப்படைய வைக் கும் அருமையாகும். இத்தகைய மனிதநேய இயக்கத்தில் பெரியார் எனும் மாமனிதரின் கொள்கையினை ஏற்று, அந்தப் புரட்சியாளரின் பொது வாழ்க்கை நேர்மை, உறுதிப்பாடு, உழைப்பு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து அவர்தம் அமைப்பிற்கு ஆதரவாக இருந்தோர் - இருப்போர், அந்நாள் தொடங்கி இந்நாள் வரை ஏராளம். கருப்புச் சட்டை இயக்கத்தின் வலிமை, அமைப்பு சார்ந்த செயல் பாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. அதையும் தாண்டி, பெரியார் பற்றாளர் எனும் அடையாளம் கொண்டு தாங்கிப் பிடிக்கும் விழுது போன்றோர் ஏராளம். அத்தகைய பெரியார் பற்றாளராக விளங்கிய நாகை மாவட்டம் - நல் லாடையினைச் சார்ந்த அய்யாதுரை - கௌரியம்மாள் இணையருக்கு நிறைவான செல்வமாகப் பிறந்தவர் சித்ரா சுந்தரம் அம்மையார் ஆவார். பழனி முருகன் கோயிலின் நிர்வாக கண்காணிப்பாளராக (ளுரயீநசவேநனேநவே) பணியாற்றி வந்த அய்யாதுரை அவர்கள் பின்னாளில் ரெட்டையம்பட்டி ஜமீனை நிர்வகிக்கும் மேலாளர் பணியிலும் இருந்தார்.

பெரியார் பற்றாளர் குடும்பம்

பெரியார் பற்றாளர் குடும்பத்தி லிருந்து பெரியார் இயக்கத்திற்கு அளிக்கப்பட்ட கொடைதான் சித்ரா அம்மையார். 1938ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆவது நாள் பிறந்த சித்ரா அம்மையாருடன் உடன் பிறந் தோர் அய்வர். இருவர் தமையர். மூவர் தமக்கையர். சித்ரா அம்மையாரின் மூத்த சகோதரர் பெரியவர் காந்திமதிநாதன் அவர்கள் முதுகலை பட்டம் பெற்று இந்திய வருவாய் பணியில் (ஐனேயை சுநஎநரேந ளுநசஎஉந) உதவி ஆட்சியராக மத்திய சுங்க மற்றும் கலால் துறையில் பணியாற் றியவர். அந்நாளில் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு நடத்திய காலகட்டத்தில் அவருக்கு உற்ற தோழராக, உறுதுணையாக இருந் தவர். தமது 93 ஆவது அகவையில் மதுரையில் வசித்து வருகிறார். அடுத்த சகோதரர் பேராசிரியர் சுப்பையா அவர்கள் ஆரம்பத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தவர். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுக்கு அந்நாளில் பொருளாதாரப் பாடம் பயிற்றுவித்தவர். பின்னாளில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி பெருமை சேர்த்தார். பொரு ளாதாரப் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன் மாணவர்களிடம் ஒழுக்கம், கட்டுப் பாட்டினை உருவாக்கும் தேசிய மாணவர் படையின் (சூயவடியேட ஊயனநவ ஊடிசயீள) கண்டிப்புமிகு அதிகாரியாகவும் சேவை யாற்றியவர். தற்சமயம் மயிலாடுதுறையில் வசித்து வருகிறார். தமக்கையரில் மூத்தவர் லீலாவதி அம்மையார். இவரது கணவர் காலம் சென்ற கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளராக இருந்தவர். தற்சமயம் சென்னையில் வசித்து வருகிறார். அடுத்த தமக்கையார் பேராசிரியர் சுலோச்சனா அவர்கள். அந்நாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலை வருடன் பயின்ற ஒரு சாலை மாணாக்கர். தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்விப் பணியில் இருந்தவர். தஞ்சை-வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல் சிறப்பு அலுவலராக (ளுயீநஉயைட டீககஉநச) இருந்து அந்தக் கல்விக் கட்டமைப்பினை உருவாக்குவதில் துணை நின்றவர். இவரது கணவர் காலம் சென்ற அ. வேதமூர்த்தி தமிழக மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். தற்சமயம் சிங்கப்பூரில் விமானியாக (ஞடைடிவ) பணியாற்றும் தனது மகனுடன் வசித்து வருகிறார். இளைய தமக்கையார் கமலா அம்மையார் மதுரையில் வசித்து வரு கிறார். இவரது கணவர் காலம் சென்ற முத்துக்குமாரசாமி கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் பற்றாளர் குடும்பத்தில் பிறந்த ஆண், பெண் செல்வங்கள் அனைவரும் கல்வி கற்று கல்விப் பணி மற்றும் அலுவலகப் பணிபுரிந்து வந்துள்ளனர். சித்ரா அம்மையாரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பு பயின்றவர். தமிழர் தலைவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயிலுகையில் இளையராகக் (துரடிச) கல்வி பயின்றவர். இவரது கணவர் காலம் சென்ற மீனாட்சிசுந்தரம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றியவர். சித்ரா - மீனாட்சி சுந்தரம் இணையருக்கு மக்கட் செல்வங்கள் இருவர். மூத்தவர் ராஜ்குமார் கட்டடக்கலை நிபுணர். கோவையில் வசித்து வருகிறார். இளையவர் டாக்டர் ரவிக்குமார். பல் மருத்துவர். சென்னை யில் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.

தமிழ் ஓவியா said...

சித்ரா அம்மையாரின் இயக்கம் சார்ந்த செயல்பாடு

பெரியார் இயக்கத்தின் செயல்பாட்டுத் தளங்களுள் ஒன்றான பகுத்தறிவாளர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சித்ரா அம்மையார் செயல் பட்டார். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக - சக பொறுப்பாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் அவர். கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் பொழுது, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய இயக்க இதழ்களுக்கு சந்தாவினை நன்கொடையாக அளிக்க அவர் தவறியதில்லை. செயல்பாட்டுத் திட்டங்களில், தன்னுடைய பங்களிப்பு என்ன, தான் என்ன செய்ய வேண்டும் என தலைமையிடம் முனைப்பாகவே கேட்டுத் தெரிந்து பணியாற்றும் அவரது பண்பு பகுத்தறிவாளர் கழகத்தினருக்கு எடுத்துக்காட்டாகவே விளங்கியது. சென்னையில் இருந்தாலும், கோவையில் இருந்தாலும், இயக்கச் செய்திகளை விடுதலை மூலம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தின் நிகர் அவர்தான். கூட்டங் களுக்கு, மாநாடுகளுக்கு அவருக்கு முறையான அழைப்பு கிடைக்கப்பெறும் முன்பே, விடுதலை மூலம் தெரிந்து கொண்டு, தான் வருகின்ற அல்லது தான் வர இயலாத சூழ்நிலையினை தெரி விப்பதை கடமையாகக் கருதி வந்தவர்.

விடுதலை வாசிப்பும் -

வாசகர் கடிதமும்!

நாளிதழை வாசிப்போர் பலர்; வாசித்த செய்தி குறித்து வாசித்த அனைவரும் நினைத்துப் பார்ப்பதில்லை; நினைத்துப் பார்க்கின்ற அனைவரும் அது குறித்து தமது எண்ணங்களை வெளிப்படுத்து வதில்லை. ஆனால் சித்ரா அம்மையார் ஒவ்வொரு நாளும் விடுதலையில் தான் படித்த கட்டுரை குறித்து உரிய வர்களிடம் தொலைப்பேசி வாயிலாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தார். பல நேரங்களில் விடுதலையில் வெளிவந்த செய்தி, கட்டுரை குறித்த தனது எண்ணங்களை கடிதம் மூலம் ஆசிரியருக்கு தெரி விப்பதை வழக்கமாகவே சித்ரா அம்மையார் கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையிலும் தனது வாழ்வின் இறுதி நாளில் அஞ்சலில் வந்த விடுதலை இதழினை ஆர்வமுடன் பெற்று, அதனைப் படித்த பின்னர், மாலையில்தான் அவரது விழி மூடியது என்று குடும்பத்தார் கூறியது - சோகம் சூழ்ந்த வேளையிலும், இயக்கத்த வருக்கு பெருமைக் கூட்டியது. விடுதலை என்பது சித்ரா அம்மை யாருக்கு வெறும் வாசிப்பு மட்டுமல்ல. விடுதலை படிப்பதை ஒரு பாடம் படிப்பது போன்று கருதி, இறுதிவரை வாழ்ந்த கருத்துப் பிரச்சாரக் கருவி அவர்.

சென்னை - பெரியார் திடலில் நடைபெறும் இயக்க நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது நிறைவாக, நிகழ்ச்சி முடியும்வரை இருந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இயக்கத்தின் பிற அணித் தோழர்கள் மற்றும் பெரியார் திடலில் பணியாற்றும், அனைவரிடமும் குடும்ப உறுப்பினர் போன்று அன்புடன் பழகி நேசம் வளர்த்து வந்தார். ஆரம்ப காலம் முதல் இறுதி காலம் வரை தமிழர் தலை வரிடம் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். இறுதியில் தனது உடல்நலம் குன்றி வந்தாலும், உள்ளத்தின் உறுதி குன்றாமல் இயக்க நிகழ்ச்சிகளைப் பற்றி தொலைப்பேசி வாயிலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு இருந்தார். தனது இறுதிநிலை தெரிந்த பின்னர் தனது மறைவினை முதலில் தமிழர் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும்; கருப்பு உடை அணி விக்கப்பட்டு, எந்தவித சடங்குகளும் மேற்கொள்ளப்படாமல் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனும் தமது விருப்பத்தினை குடும்பத்தாரிடம் தெரிவித்து, இறுதிவரை பகுத்தறிவு வீராங்கனையாகவே சித்ரா அம்மை யார் வாழ்ந்தார்.

சித்ரா அம்மையாரின் இயக்கத் தோடு இயைந்த செயல்பாடுகள் பகுத்தறிவாளர் கழகத்தின் ஒவ்வொரு தோழரையும் நெறிப்படுத்தும்! அவரது இயக்கம் சார்ந்த செயல்பாடு இதர பொறுப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும்!

சித்ரா அம்மையாரின் நினைவுகள் போற்றுதலுக்கு உரியன!

வாழ்க பெரியார் இயக்கம்! வளர்க பகுத்தறிவுச் சிந்தனைகள்!

(சென்னை - பெரியார் திடலில் இன்று மாலை மானமிகு சித்ரா சுந்தரம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது. அவரது படத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து வீர வணக்க உரை ஆற்றுகிறார்).

தமிழ் ஓவியா said...

வைக்கம் வீரர்


திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் சுவையான எழுத்தோவியம் இதோ:
வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கு சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்று தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று. (பக்கம் 349)

தமிழ் ஓவியா said...

விவசாய உற்பத்தி பெருக என்ன செய்ய வேண்டும்?

உண்மையில் கிராமங்களைச் சீர்திருத்த வேண்டுமானால் நான் சொல்லப்போகும் முக்கியமான காரியங்களைச் செய்ய வேண்டும். விவசாயம் உடலுழைப்பில் நடைபெறுவதை மாற்றி அதை ஒரு தொழில் முறையாக, அதுவும் இயந்திரத் தொழில் முறையாக (இன்டஸ்ட்ரியல் ஆக) ஆக்கப்பட வேண்டும்.உழுவதும், விதைப்பதும், அறுப்பதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும். கிணறு வெட்டுவதும் தண்ணீர் இறைப்பதும் _ பாய்ச்சுவதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும்.

அந்த அளவுக்குப் பூமிகளைத் திருத்தி இணைக்க வேண்டும். அதற்குப் பயன்படாத பூமியைத் தனிப்படுத்தி அடிக்கடி பாடுபட வேண்டிய அவசியம் இல்லாத பயிர் செய்ய வேண்டும்.

விளைபொருளால் ஆக்கப்படும் பண்டங்கள் ஆங்காங்கே விவசாயிகள் கூட்டுறவு முறையில் ஆக்கப்பட்டு அந்தப் பயன் விவசாயிகளுக்கே கிடைக்க வேண்டும். பல கிராமங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசகசாலை, புத்தகசாலை, ரேடியோ நிலையம், நல்ல ரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள பஸ் ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், நன்றாய் படித்த ஒரு நீதிபதி, சகல சாமான்களும் கிடைக்கத்தக்க கடைகள் ஏற்படுத்த வேண்டும்.

இயங்கும்படியான சுற்றுப்பயணக் கண்காட்சி சாலைகள் அடிக்கடி பற்பல விதத்தில் அமைத்து ஊர்கள்தோறும் சுற்றிச்சுற்றி வரும்படியாகவும் ஆன காரியங்கள் செய்ய வேண்டும்.

ஆங்காங்கு அப்பீல் கோர்ட்டுகள், குறைதெரியும் அதிகாரிகள் சுற்றுப்பிரயாணம் செய்து ஆங்காங்கு வாராவாரம் காம்ப் போடவும் ஆன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சென்னை 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். கோவை ஒரு லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். ஈரோடு 50,000 ஜனத்தொகை கொண்ட நகரம். இதுபோலவே இப்போது கிராமமாகப் பாவிக்கப்படும் ஈரோட்டிற்குப் பக்கத்தில் உள்ள கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சூரம்பட்டி மேட்டுவலசு என்கின்றவை போன்ற பக்கப் பக்கக் கிராமங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஏதோ ஒரு பெயர் கொண்ட சர்க்கிள் ஆக்கி 2500 அல்லது 5000 ஜனத்தொகை கொண்ட நகரமாக ஆக்கிவிட்டு அதை நகரத்தார்கள், தரகர்கள் சுரண்ட முடியாமல் செய்ய வேண்டும்.

நகரத்தார்களுக்காகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள்; வாழவேண்டும் என்று சொல்லப்படுவதை அடியோடு மாற்ற வேண்டும்.

அதோடு கூடவே அந்த இடங்களில் அவற்றிற்குத் தக்கபடி இயந்திரத்தால் செய்யப்படும் சிறுசிறு தொழிற்சாலைகளை நிறுவி அவர்கள் வேறு ஊருக்குப் பிழைப்புக்குப் போகாதபடி பிழைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராமத்தான், பட்டிக்காட்டான், குப்பைக்காட்டான் என்கின்ற பெயர்கள் ஒரு மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்? அதுவும் பாடுபட்டு உழைக்கும் மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்?

ஆதலால், அப்பெயர்கள் இல்லாமல் செய்யப்பட்டுவிடவேண்டும்.

தமிழ் ஓவியா said...

மேல்நாடுகளில் பெரும்பான்மையான கிராமங்கள் நான் விரும்புகிறபடிதான் இருக்கின்றன.

அதாவது, தார்போட்டுக் குழாய், தண்ணீர், எலக்டிரிக் பவர், பஸ் சர்வீஸ், பள்ளிக்கூடம், விளையாட்டு மண்டபம், சமநீதி, தொழிற்சாலை ஆகியவை இல்லாத இடங்கள் (கிராமங்கள்) மேல் நாடுகளில் காண்பது மிகமிக அதிசயமாகும். ரஷ்யாவில் மாத்திரம் சில இடங்கள் கிராமங்கள் போல் காணப்படுகின்றன. அதுவும் இதற்குள் நகரமாகி இருக்கும். மற்றபடி அய்ரோப்பாவில் கிராமங்கள் என்ற நிலை இல்லவே இல்லை. இருந்தபோதிலும், அது அந்த இடத்திற்கு ஏற்ற வாழ்வாய் இருக்கலாமே தவிர பிராமணனுக்குத் தொண்டு செய்வதற்கே கடவுள் சூத்திரர்களை _ பஞ்சமர்களைப் படைத்தார் என்பது போல் நகரத்தார் நல்வாழ்வு வாழ்வதற்கே கிராமங்கள் ஏற்பட்டன என்கின்ற முறையில் கிராமங்கள் அங்கு இல்லை. அங்கு ஏதாவது ஒன்றிரண்டு இருந்தபோதிலும் இங்கு இருக்கக்கூடாது என்று சொல்லுவேன்.

அப்படியானால், விவசாயம் யார் செய்வது? யார் பூமியைப் பயிர் செய்வது என்று கேட்கப்படலாம். இது, கச்கூசு எடுக்கும் சக்கிலி, பறையர், ஒட்டர் என்பவர்களுக்குப் படிப்புக் கொடுத்து மேன்மக்களாக ஆக்கி விட்டால் கக்கூசு எடுப்பவர்கள் யார் என்று கேட்பது போல் கேட்கப்படுவதாகும். அதற்கு என் பதில் அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

***

கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன்மிக்க அற்பமாகவும் குறையாகவும், வாழ்வில் இழிவாகவும் இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும்.

கப்பல் கட்டி எவனோ ஒருவன் கோடீஸ்வரனாவது முன்னேற்றமாகாது. எங்கேயோ ஒரு இரும்புத் தொழிற்சாலை வைத்து யாரோ கோடீஸ்வரன் ஆனால் நாட்டுக்கு முன்னேற்றமாகிவிடாது.

நான் கூறுகிற முன்னேற்றம் செய்ய முடியவில்லையானால், அதற்கு அதாவது அப்படிப்பட்ட இழிவான, கீழான பிரயாசையான வேலை செய்பவர்களுக்கு அதிக லாபமும், சலுகையும், மேன்மையும் இருக்கும்படியான பிரதிபலன் அடையச் செய்ய வேண்டும். இரசாயன முறை, விஞ்ஞான முறை, யந்திர முறை முதலியவைகளைக் கையாண்டு அவைகளை கிராமங்கள் என்பவைகளில் இருந்து தொடங்குவோமானால் இந்தப் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்ந்துவிடும். கிராமம் என்கின்ற பெயரும் நிலையும் தானாக மாறிவிடும்.

இதைப் பொதுவுடைமை என்றோ சமதர்மம் என்றோ முட்டாள்தனமாய் கருதாமல் முற்போக்கு என்ற முறையில் சிந்தித்தால்தான் இதில் உள்ள நியாயமும் உண்மையும் விளங்கும்.

தொழிலாளிகளும் கிராமவாசிகளும் முன்னைவிட இப்போது சிறிது பணம் அதிகம் சம்பாதிப்பதைக் கொண்டு திருப்தி அடையக்கூடாது.

தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முன் இருந்த வித்தியாசமும், கிராமத்தானுக்கும், பட்டணத்தானுக்கும் முன் இருந்த வித்தியாசமும் பணப்பெருக்கினால் முன்னைவிட அதிகமாகிவிட்டதே தவிர குறையவில்லை.

அந்த வித்தியாசமானது முன்னைவிட அதிகமான பேதத்தையும், இழிவையும், மனக்குறையையும் உண்டாக்கி மிக்க கீழ்மகனாக ஆக்கிவிட்டது.

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும்.

- நூல்: கிராமச் சீர்திருத்தம்.

தமிழ் ஓவியா said...

வாழ்த்துவதில் கணக்குப் பார்க்கும்போது..அய்யா அவர்களின் 83ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அய்யா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். கூட்டத்தில் பேசிய பேச்சாளர்களுள் பலர்,

அய்யா அவர்கள் ஈரோட்டில் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும். ஈரோட்டிற்கு அய்யா அவர்கள் எதுவும் செய்வதும் இல்லை. அய்யா காசு விசயத்தில இப்படிக் கணக்குப் பார்க்கக் கூடாது. கொஞ்சம் தாராளமாக இருக்க வேண்டும் என்று அய்யாவின் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்கள்.

கூட்டம் முடியும்போது பேசிய அய்யா அவர்கள், நான் காசு பணம் விசயத்தில ரொம்பக் கணக்குப் பார்க்கிறேன்னு பேசியவர்களில் அதிகமானோர் சொன்னார்கள். நீங்கள் என்னை வாழ்த்தியபோது, அய்யா 100 வயசு வரையில் இருக்கணும், 101 வயசு வரையிலும் வாழணும் அப்படினுதானே வாழ்த்தினீர்கள். ஏன் லட்சம் வருசம் உயிரோடு வாழணும், அய்யா கோடி வருசம் வரை இருக்கணும்னு வாழ்த்தலே?

நீங்க சும்மா வாழ்த்தறதிலேயே ஒரு கணக்குப் பார்க்கறீங்க. கஞ்சத்தனம் காட்றீங்க இது பணம், காசு விசயம்கூட இல்லை. சும்மாவே வாழ்த்தப் போறீங்க _ அப்படியிருக்க என்னைப் பார்த்துக் கணக்குப் பார்க்கறீங்கன்னு சொல்வது நியாயமா? என்று கேட்டாராம்.

- நூல்: மேதைகளின் கருத்துக் களஞ்சியம்

தமிழ் ஓவியா said...

முட்டாள்கள் எங்கும் உண்டு

அமெரிக்கர் ஒருவர் அய்யா அவர்களைப் பார்க்க வந்திருந்தார். அய்யாவின் கொள்கைகள் பற்றி விவாதித்த அவர், மக்களிடையே நாளுக்கு நாள் ஒழுக்கக்கேடுகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு ஒழுக்க உணர்வை ஊட்டவாவது தெய்வபக்தி, மதநம்பிக்கை இவை இருக்க வேண்டியது அவசியமல்லவா? என்று கேட்டுள்ளார்.

உடனே அய்யா அவர்கள், மதபோதனை, கடவுள் பக்தி எல்லாம் எத்தனையோ காலமாக மக்களுக்குச் சொல்லப்பட்டு வருகின்றன. இருந்தும் ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. கூடிக்கொண்டுதான் போகிறது. உங்கள் நாட்டிலேகூட நிமிடத்துக்கொரு கற்பழிப்பு, மணிக்கொரு கொலை நடப்பதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆகையினாலே நீங்கள் சொல்லும் மதபோதனை, கடவுள் பக்தி இவையெல்லாம் மக்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கவில்லை என்றுதானே அர்த்தம் என்று கேட்டுள்ளார்.

உடனே அமெரிக்கர், ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவிலும் பரவி வருகிறதே என்றதும்,

முட்டாள்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்லர். எல்லா நட்டிலேயும் இருப்பாங்க, அமெரிக்காவிலும் இருக்காங்க என்றாராம் அய்யா.

தமிழ் ஓவியா said...

மாறுதல்


ஒரு கணவன் அவன் மனைவியை ஏதாவது அடிச்சிப் போட்டான்னா அது கிரிமினல். பொம்பளைகள் எல்லாம் முன் காலத்திலே எப்படி நினைத்துச் சொல்லுவாள் தெரியுமா புருஷனிடம்? மகாராசா உன் கையாலே நான் செத்தால்நான் புண்ணியத்துக்குப் போய்டுவேன் என்பாள். இப்ப சட்டப்படி அது கிரிமினல். இப்போ வைதால் கிரிமினல். வாடி போடீன்னா இவன் கிட்டே இருக்க இஷ்டமில்லை அய்யா என்னைக் காட்டுமிராண்டி-யாட்டம் பேசுறான் என்பாள். இதெயெல்லாம் மனிதனுக்குச் சுதந்திரம் ஏற்பட்ட பிறகு _ மாறுதல் ஏற்பட்ட பிறகு ஏற்படுகிற மாற்றம். உலகம் இன்னும் எவ்வளவோ மாறிக்கிட்டு வரப்போவுது. ---பெரியார்

தமிழ் ஓவியா said...

நூல்:

வடநாட்டில் பெரியார் (தொகுதி 1, 2)
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,. வேப்பேரி, சென்னை_7.

பக்கங்கள்: தொகுதி 1: 224, தொகுதி: 2: 384. விலை: தொகுதி 1: 90, தொகுதி 2: ரூ.150. உலக மக்கள் அனைவரும் மூடநம்பிக்கைகளில் இருந்து _ மூடப் பழக்கவழக்கங்களில் இருந்து மீள வேண்டும் என எண்ணியவர் தந்தை பெரியார் அவர்கள். தமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். பம்பாய், கல்கத்தா, பாட்னா, கான்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று ஆற்றிய உரைகள், நடத்திய மாநாடுகள், இயற்றிய தீர்மானங்கள், சந்தித்த நபர்கள், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், அய்யாவின் உரைக்கு _ கருத்துக்கு பத்திரிகைகள் கொடுத்த சிறப்பு, பொதுமக்களிடம் காணப்பட்ட வரவேற்பு போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல்.

தந்தை பெரியாரை _ அவரது தடம் பிறழாத கொள்கைகளை _ சொல் வீச்சுகளைப் படம் பிடித்துக் காட்டி அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம்பெற வேண்டிய கருத்துப் பெட்டகமாகத் திகழ்கிறது.

தமிழ் ஓவியா said...

ஒலிவட்டு Audo CD

தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள்

தொடர்புக்கு : பெரியார் புத்தக நிலையம்

தொலைப்பேசி : 044௨6618161

பரபரப்பான இன்றைய உலகில் புத்தகங்களைப் படிப்பதற்குப் பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஒலிப் புத்தகங்களின் தேவை அதிகரித்துவிட்டது. பேருந்தில், ரயிலில் பயணம் செய்யும்போது பயனுள்ள கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் ஒலிப் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.

தந்தை பெரியாரின் கருத்துகளை _- கொள்கைகளை இளைய தலைமுறையினரும் தெரிந்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின் இந்த உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கும், அறிவியலின் கண்டுபிடிப்புகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை முன்கூட்டியே சிந்தித்துச் சொன்ன அறிவு ஆசானின் சிந்தனைகள்,

இனிவரும் உலகம், கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்?, தமிழனை அடிமையாக்கியவை எவை? என்ற மூன்று தலைப்புகளில் மிளிர்கின்றன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் குரலில் இனிவரும் உலகம் ஒலிக்கிறது.
தொடர்ந்து தந்தை பெரியாரின் சிந்தையைக் கவரும் கருத்துச் செல்வங்கள் வெளிவரும் என்ற அறிவிப்பு அடுத்தடுத்த ஒலிப் புத்தகங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது.

தமிழ் ஓவியா said...

இணையதளம் http://periyarpinju.com/

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமைந்துள்ள இணையதளம்.

பிஞ்சுகளின் மனதில் நன்னெறியையும் நம்பிக்கையையும் ஊட்டும்வகையில் ஆசிரியர் தாத்தா பேரன் பேத்திகளுக்கு எழுதும் அன்புமடல், பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழிவகுக்கும் கதைகள், அறிவியல் செய்திகள், மூளைக்கு வேலை கொடுக்கும் சுடோகு, சிந்திக்க வைக்கும் படக்கதை, உலகச் செய்திகள் போன்ற பல்வேறு தகவல்களுடன் பரிணமிப்பதே பெரியார் பிஞ்சு மாத இதழ்.

முந்தைய இதழ்கள் பகுதியில், நாம் படிக்க விரும்பும் இதழின் மாதத்தைக் கிளிக் செய்து செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், கணினியிலேயே விளையாடுவதற்கு ஏற்றபடி சுடோகு, சீராக படத்தை அடுக்கும் படப்புதிர் போன்ற விளையாட்டுகளும், குழந்தைகளுக்கான காணொளிகளும் இந்தத் தளத்தைக் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன.

தமிழ் ஓவியா said...

மறு கன்னத்தைக் காட்டினால் என்னாகும்?


கருத்தொற்றுமை கொண்ட வள்ளுவரும் இயேசுவும் நான் ஏறக்குறைய வள்ளுவரின் சங்கதிகளைக் கிறிஸ்துவுக்கும் பொருத்துவதுண்டு. ஆனால் நான் வள்ளுவர் முந்தியா? கிறிஸ்து முந்தியா? என்பதில் நான் கிறிஸ்து முந்தின்னு சொன்னால் கொஞ்சம் தகராறு வரும். ஆனால் அவர் வெகு தூரத்திலே 5000, 6000 மைலுக்கு அப்பாலே இருந்தவர். இவர் (வள்ளுவர்) இப்பால் இருந்தவர். இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காப்பி அடிச்சிருக்க மாட்டாங்க _ வைச்சிக்கங்க, ஆனாலும் கருத்து ஒன்னாயிருக்கும். நல்லா மகிழ்ச்சியோடு அன்போடு அவரவர்கள் கருத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ரொம்பச் சரி. இவர்போல்தான் சொல்லியிருக்கிறார் கிறிஸ்து. இந்தக் (வலது) கன்னத்தில் அறைந்தால், இந்தக் (இடது) கன்னத்தையும் காட்டு என்று! மேல்சொக்காயைப் பிடுங்கினால் அடிச் சொக்காயையும் கழட்டிக் கொடுன்னார்! (சிரிப்பு) சரி ரொம்ப -அன்புக்கும் அது சரி. ரொம்ப ஆழ்ந்த ஞானத்துக்கும் அது இருக்குது. அது இன்னைக்கு முடியுமோ? இந்தக் கன்னத்தில் அறைஞ்சதும் நீ மறு கன்னத்தையும் காட்டினால் வாயில் உள்ள முப்பத்திரண்டு பல்லும் போயிடும் (சிரிப்பு). வெறும் ஆளாய்த்தான் போய்ச் சேருவான், கொஞ்சம் எதிர்த்தால்தான் முடியும். இன்றைக்கு அப்படி வேண்டியிருக்குது. அவர்கள் அப்பொழுது அப்படி இருந்தார்கள், அவர்கள் பயித்தியக்காரர்கள் அல்ல. அன்றைய காலம் அப்படி இருந்திருக்கும். ஒரு சமயம் அது போலவே நம்ம இலக்கியங்களிலே அனேக சங்கதிகள் இருக்கு. அதை சுவாமிகளும் சொல்லியிருக்கிறாங்க. அதை நம்புகிறோமோ இல்லையோ அது மாதிரி நடந்ததோ, இல்லையோ அதிலே இருக்கிற கருத்துகள் ரொம்பச் சரி, சிலது அப்படியே இருக்குது.

தமிழ் ஓவியா said...

வாழ்த்து?

எனக்கு வாழ்த்துவதிலே நம்பிக்கையில்லை. அது ஒரு மூடநம்பிக்கை. என்னை வையிரான் பாருங்க. அவன் நாசமாயப் போகமாட்டானான்னு அதுவும் ஒரு மூடநம்பிக்கைதானே. உடனே நான் நாசமாய்ப் போயிடுவேனா நான். ஆனதினாலே எல்லா மூடநம்பிக்கை போல வாழ்த்தும் _- ஒரு மூடநம்பிக்கை. ஆனாலும் அது ஒரு செல்வாக்குப் பெற்றிருக்கிறதினாலே, அது காதுக்கு இனிமை கொடுக்கிறது. அது என்னா செய்கிறதுன்னா? வாழ்த்துகிறபோது அது இனிமையைக் கொடுக்கிறது. வைகிறபோது கொஞ்சம் துன்பத்தைக் கொடுக்கிறது.

தமிழ் ஓவியா said...

பெரியார் வாழ்கிறார்இப்போதெல்லாம்
குப்பனையும் சுப்பனையும்
கோவில்களுக்குள்
காண முடிகிறது

பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த
பொன்னுத்தாயின் பேத்தி
லண்டனில்
பிசியோதரபி படிக்கிறாள்

வியாதி என்றதும்
மந்திரித்து
தாயத்துக் கட்டிய கைகளில்
மருந்துச் சீட்டுகள்

மாவட்ட ஆட்சியர் மாடசாமியிடம்
கையெழுத்திட வேண்டிய கோப்புகளைப்
பணிவோடு காட்டுகிறார்
கணேச அய்யர்

வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்தும்
தேங்காயைத் தட்டிப் பார்த்தும்
கொள்முதல் செய்யும் கணவர்கள்
காய்கறிச் சந்தைகளில்

மொட்டை போட்டிருந்த
நண்பன் ஒருவனிடம்
கோவிலுக்கா என்றேன்
சம்மருக்கு என்றான் சாதாரணமாக

மேலத் தெருவில்
கீழத் தெருக்காரர்களின்
பாலிஷ் செய்யப்பட்ட
பாதுகைகளின் தடங்கள்

வெண்ணிலாவின்
மதிப்பெண் அட்டையில்
அம்மா பெயரின் முன்னெழுத்தும்
மின்னிச் சிரிக்கிறது

கழுத்துக் கயிற்றின்
மதச் சின்னங்கள்
காலாவதி ஆகிப் போய்
சில்வர் செயினில்
'Love' 'Cool' வாசகங்கள்

தொலைக்காட்சியின்
சமையல் நிகழ்ச்சிகளில்
தொகுத்து வழங்கும் பெண்களையும்
சமைத்துக் காட்டும் ஆண்களையும்
எவரும் விகாரமாய்ப் பார்ப்பதில்லை

சாலைகளில் முளைத்த
'வழி'பாட்டுத் தலங்கள்
அவ்வப்போது
நகராட்சியின் புல்டோசருக்கு இரையாகிறது

மதத்தை ஜாதியை முன்னிறுத்தும்
அரசியல் அமைப்புகள் யாவும்
பெரியாரின் மண்ணில்
மண்ணையே கவ்வுகின்றன ....

- ‍ ஓவியச்செல்வன்

தமிழ் ஓவியா said...

பெரியார் திடல் வாங்கிய கதை!


ஜி.டி.நாயுடு அவர்கள் பேசினார்கள். உங்களுக்கும் தெரியும் அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற நட்பு. எப்பவும் அவுங்க, எந்தக் கூட்டத்துக்கு வந்தாலும் என்னைப் பாராட்டுவதற்கு அவர் கொண்டிருக்கிற ஒரு உறவு என்னைப் பற்றிக் கேலியா சில வார்த்தைகள் சொல்லுவது என் காதுக்கு இனிய சில சிக்கல் சம்பிரதாயங்களை எடுத்து எடுத்துச் சொல்லுவார்கள். ஒன்னும் பொய் இருக்காது. அதை நான் சொல்லிக்கிறேன். நிஜம் தான் (கைத்தட்டல் சிரிப்பு) அய்யா அவர்களுக்கும் அது வேடிக்கை. சிக்கனம். நாங்கள் இரண்டு பேரும் ஒரு இலையில் உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட்டவன்தான். என்னால் ஆனவரைக்கும் தடுப்பேன். அவரு வேலைக்காரன் தானே எனக்கு அதிகமாகப் போட்டுட்டுப் போயிடுவான். (சிரிப்பு) அது அவருக்கு வேடிக்கை. போடுங்கிறேன். அவரு திங்கிறாரா இல்லையான்னு பார்ப்பார். அப்படி ரொம்ப எங்கள் இருவருக்கும் பழக்கமாயிடுச்சி. அதனாலே இந்த வேடிக்கையை எல்லாம் எடுத்துச் சொல்லுகிறதுதான். அது என்னைப் பற்றிச் சொல்லுகிறதுக்குப் (என்னை) பாராட்டுவதிலே அது அவருக்கு ஒரு முறை அவ்வளவுதான். (கைத்தட்டல் சிரிப்பு) வேறு சில விஷயங்களையும் அவரு சொன்னாரு. முக்கிய விஷயத்தையும் நான் சொல்றேன். இந்த இடம் (பெரியார் திடல்) அவர் ஜி.டி. நாயுடுகாரு) வாங்கிக் கொடுத்தது. (பெரியார் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வந்து தொல்லை தருகிறது ஆனாலும் பேச்சு தொடர்கிறது). ஆரம்பத்திலே நான் வேண்டான்னுட்டேன். இதற்கு முன்பே என்கிட்டே விலைக்கு வந்தது. வந்து சொன்னாங்க வாங்கலாம்னு. பின்னால் அவர் வாங்கிட கட்டாயப்படுத்தவே _ -இயக்கத்துக்காக வாங்கினேன்.

தமிழ் ஓவியா said...

பெரியார் இல்லாவிட்டால்...?


கேள்வி : பெரியார் தமிழ்நாட்டில் பிறக்காதிருந்தால்...?

பதில் : கடைசி மனிதர்களும் தலைநிமிர்ந்து நின்றிருக்க முடியாது.

கேள்வி : பூட்டிய அறைக்குள் 10 நாள் பொழுதுபோக என்ன புத்தகங்கள்?

பதில் : அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள்தான்.

கேள்வி : பிடித்த பாரதிதாசன் கவிதை?

பதில்: ``இருட்டறையில் உள்ளதடா உலகம். ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!

கேள்வி : விரும்புவது எந்த கலர் பேண்ட்?

பதில் : ``கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

- கல்கி (18 ஆகஸ்ட் 2013) இதழில் தொல்.திருமாவளவன் அளித்த பதில்களிலிருந்து...

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கான உரிமைகள்


1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் மனிதரில் மேல்ஜாதி கீழ்ஜாதி என்ற வேற்றுமை இருப்பதுபோல் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற வேறுபாடும் இருக்கக் கூடாது என்று பேசியதுடன், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சம வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியவர் நம் அய்யா அவர்கள்.

இதனைக் கேட்ட சிலர், அப்படி என்னென்ன உரிமைகள் பெண்களுக்கு வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்று அய்யா அவர்களிடம் கிண்டலாகக் கேட்டனர்.

கேட்டவர்களின் தொனியைப் புரிந்துகொண்ட அய்யா அவர்கள், நீங்கள் ஒன்றும் அதிகமாகப் பெண்களுக்கு உரிமைகளைத் தந்துவிட வேண்டாம். ஆண்களாகிய நீங்கள் இப்போது என்னென்ன உரிமைகளை அனுபவித்து வருகிறீர்களோ அதேபோல் பெண்களுக்கும் தந்தால் போதும் என்றதும் கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்களாம்.

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் சிலை உடைப்பு: எது ஒழுக்கம்?

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், ஏன் பிள்ளையாரை உடைத்தார்? அவருக்கு என்ன பிள்ளையார்மீது கோபமா? உடைப்பதில்கூட ஒரு கட்டுப்பாட்டினைத் தன்னுடைய தோழர் களுக்குச் சொல்லியிருக்கிறார். குளத்தருகிலோ, மரத்தடியிலோ இருக்கின்ற பிள்ளையாரைக் கொண்டு வந்து உடைக்க வேண்டாம்; நம்முடைய காசைக் கொடுத்து வாங்கி அந்தப் பிள்ளையார் சிலைக்குச் சக்தி இல்லை என்று உடைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் சொன்னார்.

இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது; அது திருட்டாகிவிடும்; அது தவறாகும். அதைச் செய்யக்கூடாது.

ஆனால், பக்தன் என்ன சொல்கிறான்? திருட்டுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று சொல்கிறான்.

இரண்டு பேருடைய ஒழுக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர் பெரியார் அவர்கள், பிள்ளையாரை உடைத்த பெரியார் அவர்கள், உங்களுடைய சொந்தச் செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?

- பேராவூரணியில் 8.9.2013 அன்று நடைபெற்ற தி.க.வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி.

தமிழ் ஓவியா said...

பிரிட்டிஷ் மண்ணிலே ... பிரிட்டிஷாரைக் கண்டித்த பெரியார்

இங்கிலாந்தில் மெக்ஸ்பரோ லேக் பார்க்கில் 26.-6.-1932-இல் ஒரு தொழிலாளர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் தலைவர் தோழர் லான்ஸ்பரி ஒரு சொற்பொழிவாற்றினார். அதற்கு விடை கூறும் முறையில் பெரியார் ஈ.வெ.ரா. பேசியது இது:-_

இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால், நாங்கள் பிரிட்டிஷ் தொழிற்கட்சியை மிகமிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய்க் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு எட்டு அணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்து அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?

தமிழ் ஓவியா said...


அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியாவானது -_ இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், அய்ரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும், குடித்தனக்காரர்களுக்குப் பாத்தியமும், பொறுப்பும் இல்லாததுமான ஓர் அரசியல் சபை மூலம் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள்.

ஆதலால், யார்க்ஷையர் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல், மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள்.

* * *

பயணத்தால் என்ன கிடைக்கும்?

பட்டிக்காட்டில் உள்ளவனுக்கு தாலுக்கா ஒரு கண்காட்சி! தாலுக்காவை விட்டு வெளியே வராதவனுக்கு ஜில்லா ஒரு கண்காட்சி! ஜில்லாவிலிருப்பவனுக்கு மாநிலத்தின் தலைநகர் கண்காட்சியாகும். தலைநகரில் இருப்பவனுக்கு பம்பாய் _- லண்டன் போன்ற பெரிய நகரங்கள் கண்காட்சியாகும்! இம்மாதிரி பெரிய நகரங்களைப் பார்ப்பதும் ஒரு கண்காட்சி போன்றுதான் ஆகும்.

ரயிலைவிட்டு இறங்கி வண்டியில் ஏறி தாஜ்மஹால் ஓட்டலில் இறங்கித் தங்கிவிட்டு வந்தால் விஷயம் தெரியாது. விஷயம் தெரியவேண்டுமானால் வீதியில் நன்றாகத் திரியவேண்டும். அப்போதுதான் அந்நாட்டு மக்கள் என்ன கருதுகிறார்கள். அவர்களது நிலை என்ன _ -வாழ்க்கைமுறை எப்படி என்பவைகள் தெரியும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவன் பி.ஏ. படிப்பாளிக்குச் சமமாகும். வேண்டுமானால் இங்கிலீஷ் பேச எழுத காலேஜில் பயிலவில்லை எனலாம். ஆனால் இச்சுற்றுப் பயணத்தில் தானே சிறிது சிறிதாக அந்த அறிவு ஏற்பட்டுவிடும். பி.ஏ. படிப்பாளிகூட இவனுக்குச் சமமாக மாட்டான். அன்றைய ரஷ்யாவில்... கஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்றவர்களாயிருக்க வேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்தப்படுகின்ற அரசாங்கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப்பற்றியுள்ள வறுமையை அகற்றக்கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அய்க்கிய தேசம், முதலியனவெல்லாம் குடியரசு நாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலையில்லாத் திண்டாட்டமே கிடையாது. ஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே. அவர்களை அரசாங்கம் போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம். அதுபோல் முன்னொரு போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை. அந்நாடு தொழிலாளர்மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர். அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படுகின்றனர். மக்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது.

* * *

சுதந்திர உணர்ச்சி

நான் இதுவரை எனது உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை. தலைக்கு மாத்திரம் ஒரு கம்பளி குளிர் (மங்கி கேப்) குல்லாய் போட்டுக் கொண்டேன். ஆகாரம் ரொட்டி, முட்டை, காப்பி இவைகள்தான் முக்கியமாய் உபயோகிக்கிறேன். முட்டை இவ்விடம் மிக மலிவு, 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது.

இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு நான் ஒருவனே தாடி வைத்தவனாகவும், ஒரு புதுமாதிரி மனிதனாயும் காணப்படுவதால் யாரும் குறிப்பாய்ப் பார்ப்பதும் மற்றும் மரியாதை செய்வதுமாய் இருக்கிறார்கள். கூடுமான வரையில் ஜனங்கள் நமது ஜனங்களைவிட நல்ல குணமுள்ளவர்களாகவும், விவேகிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்தியன் என்றால் மிகப்பிரியமாய்ப் பேசுகிறார்கள். அய்ரோப்பியரிடம் வெறுப்பாய் இருக்கிறார்கள். இவ்விடத்தில் பெண்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், சுதந்திர உணர்ச்சியும் தைரியமும், துணிவும் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவர்கள் ஆகியவர்களுக்கு நமது பக்கத்திய குழந்தைகளைவிட அதிக புத்தியும், சுதந்திர உணர்ச்சியும் துணிவும் இருக்கின்றன.

- நூல்: அய்ரோப்பாவில் பெரியார்

தமிழ் ஓவியா said...

என்னுடைய பிறந்த நாளில் இராமாயணம், பகவத்கீதை போன்ற ஆபாச நூல்களைக் கொளுத்துவது என்று காலையில் நடந்த (திராவிடர் கழகம்) சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதனை நல்ல வண்ணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதிலுள்ள ஆபாசங்களையும் நாம் எடுத்து விளக்க வேண்டும். இராமாயணம், சீதையாணம் முதலிய நூல்களில் உள்ள ஆபாசங்களையும், கடவுள்களின் தன்மைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறிமுடித்தார்கள்.

- பெரியார்,
('விடுதலை', 14.05.1962)

தமிழ் ஓவியா said...

தனது பிறந்தநாளில் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களை பெரியார் என்ன செய்வார் என்று கூறுகிறார்:

"இன்று எனது எடைக்கு எடை முந்திரிப் பருப்பு அளித்துள்ளீர்கள். எனது எடையானது 192- ராத்தல் ஆகும். எனது எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள், பேரீச்சபழம், துணி, நெல், கம்பு, உப்பு இப்படி அளித்தார்கள். காலையில் வயதை எண்ணி பவுன்கள் கொடுத்தார்கள். சென்ற ஆண்டு நண்பர் திரு. எம்.ஆர். இராதா அவர்கள் எனது வயது அளவுக்கு வருடத்துக்கு ஒரு பவுன் வீதம் தருவதாகக் கூறி 10.000 ரூபாய் அளித்தார்.

நான் எனக்கு அளிக்கப்படும் பொருள்களைப் பணமாக ஆக்குகின்றேன்.

நமது கழகத்துக்கு மாதம் குறைந்த பட்சம் 5000- வீதம் வருவாய் வரும் நிலையில் உள்ளது. இனி பணம் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டு பல தொழில்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றேன்.

கவனிப்பாரற்றுத் திரிகின்ற பிள்ளைகளுக்கு இப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டும்படியான தொழில் பள்ளி ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இதற்கு மாதம் 1.500- செலவாகக் கூடும். இன்னும் மற்ற மற்றப் பணிகளும் செய்ய திட்டம் போட்டுள்ளேன்."

- பெரியார்,
('விடுதலை', 29.07.1962)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
வெள்ளி, 20 செப்டம்பர் 2013 16:35
E-mail Print

வலு - பளு

செய்தி: தேசத்திற் குத் தேவை வலுவான தலைமை! - நரேந்திரமோடி

சிந்தனை: ஒரே அடியாக சிறுபான்மை யினரை ஒழித்துக்கட்டும் அளவுக்கு வலுவானதாக பளுவானதாக இருக்க வேண்டும் - அப்படித் தானே?

தமிழ் ஓவியா said...


திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக!


தந்தை பெரியார் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகத்தான சமூகப் புரட்சியாளர் ஆவார். கால் நூற்றாண்டு காலம் தமது பொது வாழ்க்கைக்கான தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளியைத் தேர்ந்தெ டுத்து, தமிழகம் முழுவதும் சமூக மாற்றத்திற்கான பெரும் பணிகளை மேற்கொண்டார்.

தமிழக மக்கள் தந்தை பெரியார் அவர்களை தத்தம் குடும்பத் தலைவராகவே கருதிப் போற்றி வருகிறார்கள். அந்த வரலாற்று நாயகரை நினைவு கூரும் வகையில், அவர் தமது தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றிய திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுமாறு மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திராவிடர் கழக மண்டல தலைவர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (திருச்சி - 19.9.2013)

தமிழ் ஓவியா said...


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்தி.மு.க. தலைவர் கலைஞர் ஆதரவு

சென்னை, செப்.20- திருச்சி பன்னாட்டு விமான நிலை யத்திற்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி: திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டு மென்று தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

கலைஞர்: திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வேண்டுகோளை முழு மனதோடு ஆதரிக்கின்றது. மத்திய அரசு உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் முன்வைத்து வாதிட வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு: கலைஞரின் இந்த அறிவிப்புக்கு நன்றி!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


கழகக் குடும்பத்தவர்க்கு முக்கிய வேண்டுகோள்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது சுற்றுப் பயணம் கடந்த ஓராண்டுக் காலத்தில் மிக அதிகமாக உள்ளது. ஒரே நாளில், பல ஊர்களில், பல நிகழ்ச்சிகள் என்று இருப்பது அவரது உடல் நலப் பாதுகாப்புக்கும், அவர் எழுத வேண்டிய எழுத்துப் பணி, நிர்வாகப் பணிகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைகளாக அமைந்து விடுகின்றன.

கழகக் குடும்பத்தினரைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவே கேட்டவுடன் தனது தொல்லைகள் பற்றிக் கவலைப்படாது, எங்களையும் மீறி நிகழ்ச்சிகளுக்கு அவர் ஒப்புக்கொண்டு விடுகின்றார்.

எனவே, தோழர்கள் ஒரு நாள் ஒரு நிகழ்ச்சி மட்டுமே என்கிற அளவில், மிகவும் அவசியமானால் உள்ளூர் அருகில் உள்ள ஊர் என்றால் திருமணம் போன்றவைகளுடன் நிறுத்தி, ஒழுங்குபடுத்திட ஒத்துழைக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,

- வீ. \அன்புராஜ்
சுற்றுப் பயணப் பொறுப்பாளர்

தமிழ் ஓவியா said...


கழகப் பொறுப்பாளர்களுக்கு... கடப்பாடுகள் பன்னிரெண்டு!


1. வாரத்தில் 5 நாள்கள் உங்கள் குடும்பத்திற் காகச் செலவிடுங்கள். இரண்டு நாள்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளாவது இயக்கத்திற்காகச் செலவிடுங்கள்!

2. தலைமைக் கழகம் - மண்டல அமைப்பு - மாவட்ட அமைப்புகள் - நகர, ஒன்றிய, கிளைக் கழக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (நெட்ஒர்க்) சிறப்பாக இருந்தால் இயக்கப் பணிகளும் சிறப்பாக இருக்கும்.

3. நம் தோழர்கள் நம் பலம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். வரலாற்றையே திருப்பிப் போட்ட ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

4. பதவி பக்கம் போகாமல், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாத ஓர் இயக்கத்தில், ஒரே தலைவர் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களின் கொள்கையில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரே தலைமை, ஒரே இயக்கம், ஒரே கொடியின்கீழ் நாம் செயலாற்றிக் கொண்டிருக் கிறோம். அதற்காக நம் முதுகை நாமே தட்டிக் கொண்டு பெருமைப்படவேண்டும்.

5. தந்தை பெரியார் மறைந்து 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்; இருக்கிறது; பல மாகவே இருக்கிறது - யாராலும் நம்மைப் புறக் கணிக்க முடியாது என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நமது சாதனைகள் அனேகம்! அனேகம்!!

6. நமக்குக் கொடுக் கப்பட்டுள்ள பொறுப் புக்குத் தக்க வகையில் நாம் கடமையாற்றுகி றோமா என்பதுபற்றி நமக்கு நாமே எடை போட் டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. நாம் விட்டுச் செல்லும் எச்சம் என்பது என்ன? நாம் வாழ்ந்த காலத்தில் இந்த இயக்கத் துக்காக, அதன் கொள் கைகளுக்காக என்ன செய்தோம் என்பதுதான் நம் மறைவிற்குப் பிறகு நிலைத்து நிற்கக் கூடிய எச்சம் ஆகும்.

8. நமது இயக்கத்தைப்பற்றி தந்தை பெரியார் சொன்னது - நமது இயக்கம் என்பது பனைமரம் மாதிரி; பனை மரத்துக்கு யார் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார்கள்? அது தானாகவே எந்தச் சூழ லிலும் வளரவில்லையா? பலன் கொடுக்கவில்லையா?

அதேபோன்றுதான் நம் மக்களுக்காக உயிருக்கு மேலான தேவையான இயக்கம் நமது கழகம் - அதனை நம் மக்கள் கைவிடமாட்டார்கள் - நேரி டையாக முன்வராவிட்டாலும், மன ரீதியாக, மறை முகமாகவேனும் இந்த இயக்கத்தை மதிப்பார்கள் - உதவுவார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் அணுக்கமான மக்கள் தொடர்பு! தொடர்பு!!

நாம் நிதி கேட்டால் மக்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள் - நாம் ஏன் தயங்கி நிற்கவேண்டும்?

9. பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், அந்தப் பொறுப்புக்கான பணிகளை பல்வேறு காரணங் களால் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் தாராளமாக விலகிக்கொண்டு, அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கலாம். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

10. நாம் மட்டும் கொள்கைக்காரர்களாக இருந்தால் போதாது - நம்மைச் சார்ந்தவர்கள் - குடும்பத்தவர்கள் - உற்றார் உறவினர்கள் - நண்பர் கள் - ஏன் இந்த உலகமே பெரியார் கொள்கை மயமாகவேண்டும்.
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்பது மெய்ப் படவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும்.

11. மதவாத சக்திகள் மருட்டுகின்ற இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுமையும் தந்தை பெரியார் கொள்கை - தத்துவம் சூறாவளியாகச் சுழன்றடிக்கப்படும் காலகட்டம் இது.

12. தோழர்களே, செயல்படுவீர்! உற்சாகமாகச் செயல்படுவீர்!!

- திராவிடர் கழக மண்டல தலைவர், செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் - திருச்சி 19.9.2013

தமிழ் ஓவியா said...


எனக்குக் கவலையில்லையாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும். - (குடிஅரசு, 15.4.1928)

தமிழ் ஓவியா said...


இதுதான் இடதுசாரி சிந்தனையா?


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கேரளா வில் அமைச்சராக (கம்யூனிஸ்டு) இருந்தவரும், இடதுசாரி சிந்தனையாளர் என்று பொதுவாகக் கூறப்படு வருமான திரு. வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், 2014ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், பிஜேபியின் பிரதமருக் கான வேட்பாளராக, நரேந்திரமோடி முன்னிறுத் தப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், பிரதமர் பொறுப்புக்கு அவர்தான் தகுதியானவர் என்றும், தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் செயல் பாடுகள், அவரது நிர்வாகத் திறமையை, தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள, அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிர்வாகத் திறமை உடையவரா நரேந்திர மோடி? என்பது ஒரு புறம் இருக்கட்டும்; அந்த நிருவாகத் திறமை எதற்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

அவர் நிருவாகத் திறமையின் இலட்சணம் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது தானா? அவருக்குச் சம்பந் தமே யில்லை என்று கூறப் போகிறார்களா?

அதுவுண்மை என்றால், ஒரு முதல் அமைச்சருக்கே சம்பந்தம் இல்லாமல் பல்லாயிரம் பேர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்றால், செயல்படாத ஒருவர் முதலமைச்சராக இருந்தார் என்று பொருள் படாதா?

ஓர் உண்மையைத் திட்டமிட்டு, மறைக்கப் பார்க்கின்றனர். நரேந்திரமோடி என்ற முதல் அமைச்சர், தன் நிருவாகத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதை மறைக்கப் பார்க் கிறார்கள்.

அறிவு நாணயத்தோடு அவர் செயல்பாடு இருந்தால், இவ்வளவு பேரழிவுக்குக் காரணமாக இருந்ததற்குத் தான் பொறுப்பேற்ற, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையைத் தூண்டுவதற்கு, ஒரு முதல் அமைச்சரே அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஏற்பாடு செய் தார் என்றால், இதனை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?

பிஜேபி சட்டமன்ற, உறுப்பினர்களின் வாக்கு மூலத்தை தெகல்கா ஊடகம் பெற்று அம்பலப் படுத்தி விடவில்லையா?

எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு என்ற அய்ன்ஸ்டின் தேற்றத்தைக் கூறி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை நியாயப்படுத்தியதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அறிய மாட்டாரா? மோடியின் பின் புலத்தில் பணத் திமிங்கலங்கள் இருப்பது கூடவா மார்க்சியவாதி என்று கூறப்படுபவருக்குப் புரியாது?

குஜராத் மாநிலத்தை, இந்துத்துவாவின் பரிசோ தனை சாலையாக ஆக்கி, அதில் வெ(ற்)றி பெற்ற நிலையில் அதே பாணியை ஒடிசா மாநிலத்தில் அரங்கேற்றவில்லையா? இதனை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டலாமா?

குஜராத் நிகழ்வினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே!

இன்றைக்குக்கூட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நரேந்திரமோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருவது எந்த அடிப்படையில்?

இராமச்சந்திர குகா, மார்க்கண்டேய கட்ஜூ (இவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிதான்) பொருளாதார மேதை - நோபல் பரிசு பெற்ற அமர்த் தியா சென் போன்றவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்துள்ள நிலையில், வி.ஆர். கிருஷ்ண அய்யர் இந்துத்துவா சக்திக்குத் துணை போவது கண்டிக்கத்தக்கது. இதுவரை அவர்மீது போர்த்தப்பட்டு இருந்த இடதுசாரி என்ற திரையை அவரே கிழித்துக் கொண்டு விட்டார் என்றே கருதப்பட வேண்டும்.

மோடிக்குப் பல்வேறு முகாம்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன திட்டமிட்ட வகையில்; இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய வாக்காளர்களே!

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும் தமிழுக்குத் துரோகமும்


ஆசிரியர் ஏங்கினால் வகுப்பறை தேங்கும் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் இப்போதோ நம் அன்னைத் தமிழும் சேர்ந்து ஏங்குகிறது தேங்கு கிறது. ஆம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தேர்வு வாரியத்திற்குக் கொஞ்சமும் அடிப்படை அறிவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியர்க்கு அடிப் படை அறிவு என்பது எதுவாக இருக்க வேண்டும்? தன்னுடைய பாடத்துறையில் போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அதுதான். ஆனால் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழுக்கு வழங்கப்படுகின்ற மதிப்பெண்களோ வெறும் 30 மதிப்பெண்களே. ஆங்கிலம் - 30, உளவியல் - 30, சமூக அறிவியல் - 60. எல்லாம் சரிதான். ஆனால் இதில் சமூக அறிவியல் பாடத்திற்கு ஏன் அதிக மதிப் பெண்கள்? இப்படி வைப்பதால் அந்தந்தத் துறைசார்ந்த ஆசிரியர் களுக்குத் தத்தம் துறை சார்ந்த பாடத்தில் எப்படி அறிவு பெருகும்? நாட்டம் வரும்? சமூக அறிவியல் பாடத்திற்குக் கொடுக்கிற அதே மதிப்பெண்களே அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்குத் தந்திருந்தால் தேர்வு வாரியத்தின் அறிவு நாணயம் விளங்கியிருக்கும். நாங்கள் தேர்வில் தோல்வியைக் கண்டது இதுதான் காரணம். இந்த மன நிலையில் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிப் போம்? தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவே இல்லை. குற் றாலத்தில் எங்கோ மணம் வீசுகிறதே என்பதற்குப் பதிலாக குற்றாலத்தில் என்கோமணம் வீசுகிறதே என்று தப்பிதமாகப் படிக்கும் எழுதும் அவலநிலையைப் பாரீர்!

TNPSC - தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்டித்துப் போராட் டம் கண்டு மீண்டும் முக்கியத்துவம் பெற்றுத்தரப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்விலும் தமிழுக்கு முக் கியத்துவம் வேண்டும். தமிழ்ப் படித்த வர்க்கு முக்கியத்துவம் மறுக்கப் படுகிறது. எல்லாம் இந்தப் பார்ப்பன ஆட்சியின் தொல்லை.

தமிழ்ப்படித்தவர்கள் முன்னேற முடிய வில்லை. முறையான தேர்வு முறையே இது இல்லை. இந்தக் கொடுமை போதாதென்று விடைத் தாள் வேறு மோசடி. இப்போது நடந்து முடிந்த தேர்வையும், அதன் முடிவையும் உடனே ரத்து செய்ய வேண்டும். முறையான தேர்வு முறை யுடன் (தமிழுக்கு முக்கியத்துவம் - 60 மதிப்பெண்) அல்லது அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்கு - 60 மதிப்பெண்கள் (அல்லது) மீண்டும் பதிவு மூப்பு அடிப்படையில் பின் பற்றிட வேண்டும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுக்கத்தான் வேண்டும்

தங்களை விட்டால் நாதி ஏது?

தமிழாசிரியர்களுக்கு நல்லதொரு நீதியைக் கூடிய விரைவில் பெற்றுத் தர வேண்டும் என எதிர்ப் பார்க்கி றோம். நல்ல முடிவுக்காகக் காத்தி ருக்கிறோம்.

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலை யாய பற்று மொழிப்பற்றே. மொழிப் பற்று இல்லாதாரிடத்துத் தேசப் பற்றும் இராது என்பது உறுதி.

தேசம் என்பது மொழியை அடிப் படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால்,

தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த் தனை.

- தந்தை பெரியார் (10-ஆம் வகுப்பு தமிழ் புத்தகம், பக்கம் 31)

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. (மோடி) வெறும் முகமூடிதான்! அதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிருந்தாகரத் காட்டம்

திருப்பூர், செப்.20- திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதிபாசு நூற் றாண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் விழாப் பொதுக்கூட்டம் 19.9.2013 மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகரத் பேசியதாவது:

அதிகாரத்தை ஏழை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியவர் ஜோதிபாசு ஆவார். அவர் செயல்படுத்திய கொள்கைகளை எதிர்க்கட்சியினர்கூட குறைகூற முடியாது. 1946 ஆம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் பஞ்சாயத்து அமைப்பினை ஏற்படுத்தி, அதிகாரத்தை அதிகாரபர வலாக்கினார்.

ஜோதிபாசுவின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான பாடங்களை நாம் கற்கவேண்டியுள்ளது.

பிஜேபி (மோடி) என்பது வெறும் முகமூடிதானே தவிர, இதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் ஆகும்.
மோடி தொழிலாளி என்ற வார்த்தையை வாயால்கூட உச்சரிக்காதவர். தொழிலாளிகளைப்பற்றிய எண்ணமும், சிந்தனையும் அறவே இல்லாதவர்; ஆனால், இப்படிப்பட்ட வருக்கு திருப்பூரில் எங்கு பார்த்தாலும் கட்-அவுட்கள் இருப்பது தொழிலாளர்களுக்கு இழிவாகும்.

பெருமுதலாளிகள் பெருவாரியாக மோடியை விரும்புகிறார்கள். தம்பட்டம் அடிக்கிறார்கள்.ஆனால், திருப்பூர் போன்ற தொழிலாளர் நிறைந்த பகுதியில் மோடி ஏற்கப்படமாட்டார்.

- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்


உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும், எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை முன் னேற்ற வழி வகுக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொ டுக்கச் சொல்ல முடியாது.

சேற்றிலே சந்தன வாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதி னான்கு லோகத்தைக் காட் டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாறாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவு களை மீறக்கூடா தென் றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண் டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ் திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...


சரஸ்வதி கடாட்சமா?கவிஞர் கண்ணதாசனையும் அவரது ஆற்றலையும் அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. சொல் வளமும், கருத்துக் கனிகளும் அவரது கவிதைகளில் மலிந்திருக் கும். தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு அவரின் பலவீனங்களைச் சுட்டெரித்து மறக்கச் செய்தது. அவரைப் பலவிதமாக போற்றிப் புகழ பலர் இருந்தாலும் திருவாளர் சோ சொல்லும் விதம் அலாதியானது. 28.8.2013 குமுதத்தில் கண்ணதாசன் சரஸ்வதி கடாட்சம் பரிபூர்ணமாகப் பெற்றவர் என்கிறார்.

பாராட்டுவதற்கு வேறு வார்த்தைகளா இல்லை? கவிஞரின் பெருமையை இப்படியா கொச்சைப்படுத்துவது? எந்த ஒரு கலையும், தொழிலும் அதனால் வரும் முன்னேற்றமும் கடும் உழைப்பும், முயற்சியும், தன்னம்பிக் கையும் இல்லாமல் வந்து சேராது. யானை வந்து மாலை போடுவதும் நடக்காது. கவிதை புனையும் திறமையையும், தமிழறிவையும் கண்ணதாசன் வளர்த்துக் கொண்டார் என்று தானே நாடு இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி கடாட்சமும் கலைமகளின் அருளாசியும் காரணம் என்ற வாதம் நியாயந்தானா?

இந்த நாட்டில் எத்தனையோ பேர் அறி வுத் தாகம் தணிக்க அலைந்து கொண்டிருக் கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறார் கள். நூல் நிலையங்களில் புத்தகங்களைத் தேடுகிறார்கள். அறிவு மட்டுமே போதாது என்று கருதுபவர்கள் கனக்கும் செல்வமும் நூறு வயதும் வேண்டும் என கோயில் பொம்மைகள் முன் விழுந்து கிடக்கிறார்கள். இத்தனை (பக்த) கோடிப் பேரைக் கண்டு கொள்ளாத கடவுளச்சி, கண்ணதாசனுக்கு மட்டும் கடாட்சம் காட்டியதை ஏற்க முடிய வில்லையே! அவர் மட்டும்தான் அவளுக்குச் செல்லப் பிள்ளையா? வீணை வாணி எழுப்பிய நாதம் நாட்டுக் கோட்டைக்கு மட்டும் தான் கேட்டதா? கடாட்சம் எனப் படும் கருணைப் பார்வை எந்த வயதில், எந்த நிலையில் கிடைத்தது என்று சொல்ல முடியுமா? பகுத்தறிவும் நாத்திகமும் பேசிக் கொண்டிருந்தாரே அதற்கு முன்பாகவா? இந்த மக்களைப் பார்த்து கருணை மறந்தே வாழ்கின்றார். தினம் கடவுளைத் தேடி அலைகின்றார் என்று பாடியதற்கு பிறகா? எண்ணில் அடங்கா கடவுள்களின் கடாட்சம் வழங்கும் உரிமையும், யோக்கியதையும் இவள் ஒருத்திக்கு மட்டும்தான் இருக்கிறதா?

மூதேவியரில் இன்னொருத்தியும் உண்டே. சக்தியின் வடிவம் ஆயிற்றே. அவள் மட்டும் சாமான்யப் பட்டவளா? ரௌத்திரம் பழகிக் கொள்ள பராசக்தியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? கொலை வெறியர்கள், கொலை பல செய்தவர்கள், ஆறுவது சினம் என்பதை அறியாதவர்கள் இவர்களில் யாரேனும் ஒருவர் அகப்பட்டால் போதுமே, பார்வதி கடாட்சம் பெற்றவர் என்று சொல்ல.

இத்துடன் முடிந்து போய்விடக்கூடிய சமாச்சாரம் இதுவல்ல. அடையாளப்படுத் தப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக் கிறார்கள். காசாய உடையில் சாமியார் கோலத்தில் பக்திப் பழமாக நடமாடும் பீடாதிபதிகள், ஆனந்தாக்கள், அறவழிச் சித்தர்கள், தேவநாதன்கள் என பெரும் பட்டியலே வளர்கிறதே. அர்த்த சாமபூஜை நடுஇரவு நாமாவளி, முழு இரவு ஜெபம் என்று கூறி அப்பாவி இளம் பெண்களை வரவழைத்து சீரழிக்கும் வன்கொடுமை அரங்கேறிக்கொண்டு தானே இருக்கிறது. கடவுளின் கடாட்சம் இன்றி இக்கபட வேட தாரிகளுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? இது போன்ற லீலா விநோதத்தில் எந்தக் கடவுளும் சோடை போனதில்லையே.

தசரதனுக்கு 64000 மனைவிகள்! இது என்ன சாதாரணம்! கிருஷ்ண பரமாத்மா வுக்கு 116108 மனைவிமார்களாம். இத்தனை பேர் போதாதென்று இன்னொருவனுடைய மனைவியான இராதையிடம் தான் பெரும் பொழுதைக் கழித்தானாம். சொல்வது அர்த்தமுன்ன இந்து மதம்! அப்படியானால் கிருஷ்ண கடாட்சம் என்ற ஒன்று இருந்து தானே தீரவேண்டும்? கன்னிவேட்டைக்காரர் கள், கற்பை களவாடுவோர், காமக் கொடூ ரர்கள் இவர்களுக்கா பஞ்சம்? அவர்களில் தகத்தகாய ஒருவரைக் கண்டறிந்து கிருஷ்ண கடாட்சத்துக்காரர் என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எளிதான காரியம் இல்லைதான். முயன்றால் முடியாதது உண்டோ?

எத்தனையோ கடவுள்களும், கடாட்சங் களும் இருந்தாலும் இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏதிலிகளின் எண்ணிக்கை சற்றும் குறைந்த பாடில்லை. குன்றின் மீது ஏறிக் கூறலாம். கஞ்சத் தனம், வஞ்சகம் சிறிதுமின்றி தாராளமாக வாரி வழங்கப்பட்ட கடாட்சம் ஒன்றே ஒன்றுதான். அதுவே குசேலர் கடாட்சம்!

தமிழ் ஓவியா said...


சர்வ சக்தியா? சர்வ சைபரா?

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

-- _ சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்


மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலையைக் கண்டித் தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். இந்திய சமூகத்தை பீடித்துள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போரில் தன் உயிரையே விலையாக தந்துள்ளார் மஹாராஷ் டிரா மாநிலத்தைச் சேர்ந்த. நரேந்திரா தபோல்கர்.

இப்படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பவர், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவர். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்னும் நச்சுப்பொருளை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து இயற்கையினை நாசப்படுத்துவதற்கு எதிராக போராடியவர். தமது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் போராடினார். சமூக நீதி நிலைத்திட, சமத்துவம் காண ஜாதிமறுப்புத் திருமணங்களை முன் னின்று நடத்திய சமூக போராளியான தபோல்கரின் கொலை ஒரு வெற்றி டத்தை உருவாக்கிவிட்டது. இது சமூக முன்னேற்றத்திற்கும் சமூக மாற்றத் திற்கும் மிகப்பெரிய இழப்பு.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 51 a(h), ஒவ்வொரு இந்திய குடியும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படை கடமை என உணர்த்துகிறது. பில்லி சூனியம், மாந்திரிகம், ஜோதிடம், ஏவல், போலி சாமியார்கள் போன்ற பல மூடநம்பிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு முரனாக உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் இயற்றக் கோருகிறோம். முற்போக்கு வாதிகளும் சீர்திருத்தவாதிகளும் தபோல்கர் கனவு கண்ட மூடநம்பிக் கைக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்பை காட்டிலும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. தபோல்கரின் படுகொலையை விசாரித்து வரும் மஹராஷ்ட்ரா காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். காவல்துறை விரைந்து செயல்பட்டு தபோல்கரின் படு கொலைக்குக் காரணமான கொலையாளிகளையும் அவர்களைத் தூண்டியவர்களையும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கிடக் கோருகிறோம். இந்தத் தீர்மானம்,விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்குபெற்ற கண் டனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் ,கலை ஞர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர் கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் , விவசாயிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள், உள்ளடக்கிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் இன்று (7.9.2013) இக்கூட்டத்தில் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் மூட நம்பிக் கைகளுக்கு எதிரான கருத்துப் பிரச் சாரத்தை மேற்கொள்ளும்.

தமிழ் ஓவியா said...

இந்திரா கோவிலுக்குப் போவதேன்?

கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என இந்திரா அம்மையார் இரண்டு கல்வி கமிஷன்களின் உறுப்பினர்களிடையே பேசினார்

பிறகு ஏன் கோவிலுக்குப் போகிறார்? அவரே கூறிய செய்தி வருமாறு:- வகுப்பு இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற தனது குறிக்கோளுக்கு இது உதவுவதாக அவர் கூறினார்.

வழக்கமாக, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் நான் கோவில்களுக்குச் சென்றால் சிறுபான்மையினர் நலனுக்காக நான் கூறுவதை மெஜாரிட்டி சமூகத்தினர் தயாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இவ்வாறு இந்திராகாந்தி கூறினார்.

(தினமணி, மார்ச் 27, 1983)

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?

பல துயரங்களை மறக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடைய மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.

- அன்னை தெரசா (தி இண்டு, 30.11.2002)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் விளம்பரம்


7.2.2013 நாள் தினமணி ஏட்டில் வெளிவந்த கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் - அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.

இதோ அந்த விளம்பரத் தேவை

கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

1) Accountants: B.Com பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.

2) Typists:
நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.

3) Sales representatives:

வியாபாரத்தில் திறமையும், அனுபவமும் உள்ள பட்டதாரிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.

மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.

Raj & Co Post Box No.9, Coimbatore - 641001.

இந்த வேலைகளுக்கு பிராமணர்களிடமிருந்து மாத்திரம் விண்ணப்பம் எதிர் பார்க்கிறோம் என்று பார்ப்பனர்கள் பச்சையாக ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்கள் யார் என்று இன்னமும் தெரிந்து கொள்ளாதிருக்கும் மரக்கட்டைத் தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


புத்தரின் ஆத்மா மறுப்பு!


புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுவோம்.

கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்க முடியுமா?

காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா?

மூக்கை எடுத்து விட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்

தமிழ் ஓவியா said...


ஆரியர்களுக்கு முன்னே யார் இருந்தார்கள்?மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் ஜில்லாவில் ஊர் பெயர்கள், அவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஊர் பெயர்களின் ஆராய்ச்சிகளில் சிதைந்த சரித்திரத்தை இணைக்க உதவும் ஆதாரங்கள் பல காணப்படும் என்பது உண்மை (on probing into place names, fossils on history will be found) ரா, குரி, குண்டா, ஜுலி, ஜோல் என்று முர்ஷிதாபாத் ஜில்லாவில் காணப்படும் பெயர்கள் _ நிச்சயமாக திராவிட ஆரம்பங்களைக் கொண்டவைகளாகும். ரார்ஹ் என்ற பகுதி _ ஆரியர்கள் அல்லாத இனத்தினரால் நிரம்பி இருந்தது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். இங்கே மற்றும் ஓர் உண்மையையும் குறிப்பிட வேண்டும். வங்காள மொழியில் ஒலி அமைப்பில் (Phonetics) எழுத்து அமைப்பில் (Morphology) வாக்கிய ஏற்பாடுகளில் (Syntax) வார்த்தை கோவைகளில் ((Vocabulary) சந்தேகத்திற்கிடமில்லாத திராவிட உறவுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இவைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு ஊர் பெயர்களைப் பற்றிய பரவலான ஆராய்ச்சி செய்தால் _ வங்காளத்தின் பல பகுதிகளிலும் ஆரியர்கள் அல்லாத மக்கள் முக்கியமாக திராவிடர்கள் நிரம்பி இருந்தார்கள் என்பது நிச்சயம் தெரியவரும்.

(Dr. N. D. Bhattacharya M.A. Ph.D., Indian Geographical Journal (July, Dec. 1969)

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரியார் விழா வரவேற்கத் தகுந்தது


தந்தை பெரியார் அவர்களது 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களது படத்தை வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் மாலையிட்டு பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளார்!

இதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி - (இதற்கு முன் பெரிய அளவில் மக்கள் தலைவர் அய்யா G.K. மூப்பனார் அவர்கள் முன்னின்று அனைத்திந்திய தலைவர்களை அழைத்து சென்னையில் மாபெரும் விழாவெடுத் தார்கள் என்பது ஒன்று) காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெறவில்லை. இந்த முறையும், மரபும், அனைவராலும் போற்றிப் பின்பற்ற வேண்டிய பண்பாட்டு நிகழ்வு ஆகும்!

தரந்தாழ்ந்த விமர்சனங்கள்

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் மிகவும் தரக் குறைவான தாகவும், தனி நபர் பற்றிய தாக்குதல்களாகவும் அமைந்து விட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது. இப்போக்கு மாற வேண்டும். துக்க வீட்டில்கூட அரசியல் நுழைந்து, அதில்கூட விருப்பு, வெறுப்புகள் தலைவர்களைப் பொறுத்து காட்டப் படுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முற்றிலும் முரணானது - தவிர்க்கப்படல் வேண்டும்!

கருத்து மோதல்கள், கொள்கை நிலை விமர்சனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். தனிப்பட்ட குடும்பப் பெண்கள் பற்றியும் விமர்சனங் களாகவும், இழிநிலைக்குச் செல்லப்படுவது கண்டனத்திற் குரியவைகளாக அனைவராலும் கருதப்பட வேண்டும். தடுக்க வேண்டும்.

தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கட்சித் தொண்டர்கள், பேச்சாளர்கள், தலைவர்களைத் திருப்தி செய்து, மனதில் இடம் பிடிக்க மலிவான கீழ்த்தரமாகப் பேசுவதை தலைவர்கள் சுவைக்கக் கூடாது; மாறாக, கண்டிக்க வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பொது வாழ்வைத் தூய்மைப்படுத்த அனைத்துத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

தரந் தாழ்ந்த எழுத்தாளர்களை, ஏடு நடத்துவோர் ஊக்குவித்தால், அவ்வேடுகளைப் புறக்கணிப்பதே சரியான தண்டனை ஆகும். அதையும் செய்யலாம்; செய்ய வேண்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


சென்னை

21.9.2013

தமிழ் ஓவியா said...


உலகமயமாகிறார் பெரியார்


உலகமயமாகிறார் பெரியார்
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு

தோழர்களே, நமது தலைவர் தந்தை பெரி யார் அவர்களின் கொள் கைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல - உலகிற்கே சொந்தம் - மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்று புரட்சிக் கவிஞர் பாடி யது வெற்றுச் சொற்கள் அல்ல - என்பதற்கு அடை யாளமாக உலகெங்கும் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைகள் பரவி வருகின்றன - வரவேற்கப்படுகின்றன.

சிகாகோவை தலை மையிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யமும் லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மர், துபாய் முதலிய நாடுகளில் சிறப் பாகச் செயல்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா வில் தோழர் எழிலரசன் முயற்சியால் பெரியார் ஆப்பிரிக்கன் ஃபவுண் டேசன் தொடங்கப் பட்டு, பணிகள் நடை பெற்று வருகின்றன.

இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 17-க்கு முன் 12ஆம் தேதி யன்று தந்தை பெரியார் விழாவில் கலந்து கொள்ள கொல்கத்தாவிலிருந்து அழைப்பு வந்தது.

எங்களுக்கேகூட ஆச்சரியம்! கொல்கத்தா வில் ரிசர்வ் வங்கி அலு வலகத்துக்குள் நமது அய்யா விழாவைக் கொண்டாடினர். பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவ்விழாவில் கலந்து கொண்டனர். யூனியன் வங்கி பணியா ளர்கள் சார்பிலும் கொல்கத்தாவில் பெரி யார் விழா; அதேபோல பங்களாதேஷ் எல்லை என்று கருதக் கூடிய இடத்தில் இரயில்வே தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் விழா வில் பங்கு கொண் டோம் - என்னுடன் பிற்படுத்தப்பட்ட பணி யாளர்கள் கூட்டமைப் பின் பொதுச் செயலா ளர் தோழர் கோ. கருணாநிதி அவர்களும் பங்கு கொண்டார்.

கொல்கத்தாவில் டில்லியில் உள்ளது போல பெரியார் மய்யம் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஒடிசாவில் ஒடியா மொழியில் ஊடிடடநஉவநன றுடிசமள டிக ஞநசலையச என்ற நமது இயக்கம் வெளி யிட்டுள்ள ஆங்கில நூலை ஒடியா மொழியில் வெளி யிட்டுள்ளனர். அதன் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதியில் செல்ல இருக்கிறேன்.

தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம் என்று சொன்னது நிரூ பிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது உலக மய மாகிக் கொண்டு இருக் கிறார்.

- திராவிடர் கழக மண்டல தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் (திருச்சி - 19.9.2013)

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா


இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா சென்னையில் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் பத்து கோடி தாரை வார்க்கப் பட்டுள்ளது.

இந்த விழா அவ்வளவு அவசியம்தானா? நாட்டு மக்களுக்கு இதனால் ஒரு கடுகளவு பயனாவது உண்டா? அப்படியே நடந்தாலும் 10 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்க வேண்டுமா?

முதல் அமைச்சர் முதல் குடியரசுத் தலைவர் வரை பங்கு கொள்வதன் மூலம் இந்த விழா தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுவதற்குப் பயன்படுமே தவிர பொது மக்களுக்கு இதனால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.

கலை நிகழ்ச்சிகள் நடக்கலாம்; விளம்பரம் பெற்ற கலைஞர்கள் பங்கு கொள்ளலாம். அவற்றைக் கூட பொது மக்கள் சென்று நேரில் பார்க்க முடியுமா என்றால் அதுவும் நடக்காது. (ஒரு வகையில் பொது மக்கள் இளைஞர்கள் சென்று பார்க்காதது கூட நல்லது தான்!)

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் கணித்தது ஆழமானது. மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கோ, முற்போக்கு எண்ணங்களுக்கோ பயன்படுகின்ற வகையில் சினிமாக்கள் எடுக்கப்படுவதும் இல்லை.

ஆபாசக் காட்சிகள், குத்தாட்டங்கள், சில சண்டைகள் என்று மசாலாவாக ஆக்கி மக்களின் பணத்தைத் திருடத்தான் பயன்படுகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 51-ஹ() பிரிவின்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை சீர்திருத்த உணர்வை உண்டாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது.

மாநில அரசோ, மத்திய அரசோ உதவுவதாக இருந்தால், அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள கடமையைச் செய்யும் திரைப்படத்துக்குத்தான் உதவி செய்ய வேண்டும்.

அதை விட்டு விட்டு திரைப்பட நூற்றாண்டு விழா என்பதற்காக மத்திய அரசோ, மாநில அரசோ மக்கள் பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டுவது பொறுப்பான செயல்பாடல்ல.

இன்றைக்குப் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை என்பது அன்றாட மலிவான நிகழ்ச்சியாகி விட்டது; குழந்தைகள்கூட இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. இதற்கான காரணங்களில் சினிமாவுக்குத்தான் முதலிடம்.

குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் திரைப்படக் காட்சிகளைப் பார்ப்பதற்குக் கூச்சப்படும் நிலைதானே? இல்லை என்று மறுக்க முடியுமா?

இன்றைக்குக் கறுப்புப் பணத்தைப்பற்றி நீட்டி முழக்குகிறார்கள். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாகப் புலம்புகிறார்கள். கருப்புப் பணச் சந்தையாக திரைப்படத் துறை இல்லை என்று விரலை நீட்டி அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறத் தயாரா?

படத் தயாரிப்பாளர்களிடம் வாங்கும் தொகைக்கும், இரசீது கொடுக்கும் தொகைக்கும் வேறுபாடு இல்லை என்று தான் கூற முடியுமா?

திரைப்பட விழாவிலும்கூட அரசியல் இருக்கிறது. திரைப்படத் துறையில் கலைஞர் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அனுபவமும் சாதாரணமானதல்ல. இந்த நூற்றாண்டு விழாவில் அவருக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டாமா? அரை நூற்றாண்டுக்கு மேலாக இத்துறையில் முத்திரை பொறித்தவர் கலைஞர் அல்லவா!

அவர் முதலமைச்சராக இல்லை என்பதற்காக அவரது திரைப்படத்துறை ஈடுபாட்டை, குறைத்து மதிப்பிடத்தான் முடியுமா? அதையும் தாண்டி நமது கருத்து அரசுப் பணம் ரூபாய் பத்து கோடி, மக்கள் நலனுக்குப் பயன்பட்டு இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பயனற்றவைகளுக்குப் பயன்படக் கூடாது

தமிழ் ஓவியா said...


வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் (ஆகஸ்ட் 20-22) ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் வெளிவந்து பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக்கொள்வோம் என்ற கட்டுரை மிகவும் ஆக்கப்பூர்வமாக இன் றையக் கால கட்டத்திற்குத் தேவையான அருமருந்தாக இருந்தது.

முதிர்ச்சியில்லாத நிலை தான் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது, எதிர் கொள்ள பயப்படுவதும் ஆன மன நிலை. மனிதர்களிடம் உள்ள பகுத்தறிவை விட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா? ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அற்புத வரிகள்

இன்றைய கால கட்டத்திலே அற்பக் காரணங்களுக்காக இளைஞர்கள் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி ஆகியவற்றிற்கு தற்கொலை முடிவு எடுப்பது எத்துணை அறியாமை - இதற் கெல்லாம் இக்கட்டுரை அரிய தன்னம் பிக்கை டானிக்! உடலியல், உளவியல் ரீதியாக ஆசிரியர் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சிறப்பாக குறிப்பிட்டுள் ளார். பிரச்சினைகளால் திசை தெரியாமல் தவிப்போருக்கு கலங்கரை விளக்கமாக இக்கட்டுரை வழிகாட்டும். சிறிய புத்தக மாக வெளியிட்டால் மாணவர்களும், இளைஞர்களும், மற்றவர்களும் படித்து தெளிவு பெறவேண்டிய வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை
- தி.க.பாலு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)

டாக்டர்கள் கவனத்திற்கு

தொடர்ந்து, வேண்டாத பழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டு மது மயக்கத் திற்குள் விழுந்துவிட நோயாளிகளாகி விட்டனர். அரசு மருத்துவமனைக்குத் தானே, ஏழை முதிய நோயாளிகள் செல்ல வேண்டிவரும். அங்கே அரசு ஊழியர் களை விட, மருத்துவர்களே நோயாளி களிடம் அலட்சியமாக கோபத்துடன் பேசுகின்றனர். அமைதி இழந்து, தன் மானமுள்ள ஆண் - பெண் வயதான நோயாளிகள் கோபங்கொண்டுவிடும் சூழலில் பாதிப்பு நோயாளிகளுக்குத் தான். மருத்துவர்கள் மனிதத்தன்மை மனிதாபிமானத்துடன் நடந்து கொண் டால் என்ன? அவ்வாறு நடந்து கொள் ளாததால், புற்றுநோய் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத் துவர்களால் மேலும் பாதிக்கப்படுகின்ற னர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல - புதுச்சேரி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஏனைய கட்சிகள் ஏழை வயதான நோயாளிகள் நல்வாழ்விற்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒரு நாளாவது மருத்துவ மனைகள் முன் மக்களின் ஆரவாரம், மனிதச்சங்கிலிப் போராட்டம் என, நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது அரசியல் அல்ல. தொண்டு, தந்தை பெரியார் வலியுறுத்திய மானிடப்பற்று அதைக் கடைப்பிடிப்போம்!... உருப்படுவோம்!...

- எம்.எஸ்.மணி (முதுகுடிமக்கள் பாதுகாப்பு சங்கம்)

தமிழ் ஓவியா said...

எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமசாமி அவர்கள்.

தமிழர் தலைவர் அவர்களை வல்லத்தில் சந்தித்து இயக்கத்தின் கல்விப் பணிக்காக ரூபாய் 30 இலட்சத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தமிழர் தலைவரிடம் அளித்து இன்ப அதிர்ச் சியை ஏற்படுத்தினார்.

திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற (19.9.2013) திராவிடர் கழக மண்டல தலைவர்கள், தொண்டர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர் இராமசாமி அவர்களை மேடைக்கு அழைத்து, சால்வை அணிவித்துப் பாராட்டினார். அப்பொழுது கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இராமசாமி அவர்கள் 50 ஆண்டு காலமாக விடுதலை வாசகர் ஆவார். கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டை அணிந்த இயக்கத் தோழர்கள் ஒரு பக்கம்; கண்ணுக்குத் தெரியாத கருஞ்சட்டை அணியாத ஆசிரியர் இராமசாமி போன்ற எண்ணற்ற பெரியார் தொண்டர்கள் நம் இயக்கத்தில் உண்டு - கண்ணுக்குத் தெரியா விட்டாலும், இயக்கத்திற்கு இத்தகையவர்கள் அஸ்திவாரம் போன்றவர்கள்.

பெரியார் மருத்துவ நிதி, விடுதலை நிதி என்று தமது பங்களிப்பை அடிக்கடி அளித்துவரும் இந்தப் பெரு மகனார் இப்பொழுது ரூபாய் 30 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பெரியார் கல்வி நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்து, அவற்றின் வளர்ச்சியை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்து, நம் நிதி பெரியார் பெயரில் அமைந்த நிறுவனங்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிதியை அளிக்க முன் வந்துள்ளார். செயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு ஆசிரியர் இராமசாமி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்) என்றார் கழகத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

சத்தியாக்கிரகம்
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறுமார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக்கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டுவிட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதம் பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் தொடங்கப்பட வேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப் படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ, அதுபோல சத்தியாக்கிரகமென்னும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்பிட்ட லட்சியத்திற்கு அழிவு ஏற்படும் என்றேசொல்லுவோம். சத்தியாக்கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி வயிறுவளர்த்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதையாய் உணர வேண்டும். நாகபுரி சத்யாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி இல்லை என்று தெரிந்த உடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல் தண்டனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின் யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்த கொண்ட மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும் இவைகளின் மூலம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில் அறிந்ததே. ஆதலால், வாசகர்களே போலி ஆசாமிகள் வேறுவழியில் சுய நலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளுவதற்கும் கூலிக்கு மாரடிப் பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள் விஷயத்தில்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்

நம் நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் இம்மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்படவேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக் காலத்தில் உண்மையாயும், யோக்கியமாயும் நடந்து வந்த சந்நியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால் இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொதுநல ஸ்தாபனங்கள் எந்நிலையில் இருக்கிறது என்பதும், இதை யார் அனுபவிக்கிறார்கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக் களாகிய சந்நியாசிகள் என்போரின் யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்ல வேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொதுநலத் திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம்மடாதிபதிகள் தங்கள் சுயநலத்திற்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடுமென்பதாகக் கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும் லஞ்சமாகவும் பிச்சையாகவும் அழுத பணங்கள் கணக்குவழக்கில் அடங்காது என்றே சொல்லலாம். இவ்வளவு பணங்களைத் தொலைத்தும் தாங்கள் வெற்றிபெறவில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் தோப்புக் கர்ணம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீமான் டி ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் 30லட்சம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது வட நாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டப்போவ தாகவும் அதற்குப் பணம் வேண்டு மென்றும் இம்மட அதிபதிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார சன்னதி அவர்களைக் கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் பத்து வருஷத்திற்குக் கொடுப்பதாய் ஒப்புக் கொண்டாராம். இவரைப் பார்த்து இனியும் மற்ற மட அதிபதிகளும் கொடுப்பார்கள். பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்குக் கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ, மிராசுதாரோ, நாட்டுக்கோட்டையாரோ மற்ற ஏதாவது செல்வமுள்ள வர்களோ நமது நாட்டில் மிகமிக அருமையானதால் இந்த பணம்கொடுத்துதான் தீரவேண்டி வரும். ஆனால், இப்பணம் எதற்கு உபயோகப் படப் போகிறது? டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டத்தான் உபயோகப்படும். ஆனால், தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள் எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பனப் பிள்ளைகள் பிழைக்கவும் கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாத ஊரில்கூட கோவில்கட்டி வித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் சூத்திரர்கள் உள்ளே போகக் கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலகமெலாம் நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப்போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக் கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.03.1927

தமிழ் ஓவியா said...

தொழிலாளர்

சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங் களும் தங்களால் தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங் களெல் லாம் தங்களால் தான் வாங்கிக் கொடுக்கக் கூடும் என்றும் சொல்லி, இதுகால பரியந்தம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று பதவி பெற்று வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபைத் தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்களிலும் இப்பார்ப் பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலாளர்கள் தங்களுடைய ஓட்டுகளையெல்லாம் பார்ப்பன அபேட்ச கர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரைத் தோற் கடிக்கச் செய்ததும் பலருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க, இப்போது மேற்படி தொழிலாளச் சகோதரர் களில் தாங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலா மெனக்கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர் தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சகர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த மேற்படி பார்ப்பனர்கள் தொழிலா ளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித் திருக்கிறார்கள். அது என்னவென்றால், தொழிலாளர் களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேர வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர் யோசிக்க வேண்டும். என்னவெனில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில், தொழி லாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளி மார்கள் அதனை எப்படியாவது கெடுத்துவிடக்கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரசில் சேர முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழி லாளர்களை சுலபமாகத் தள்ளிவிடலாம் என்பதுதான். தொழிலாளிகளுடைய ஓட்டுப் பெறும்போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்கிற தந்திரத்தின் பேரில் தான் பார்ப்பனர்களின் தொழிலாளர் அனுதாபம் ஏற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சி களை அறியாமல் எடுப்பார் கைக் குழந்தைகளாயிருக் கின்றார்கள் இவைகளை எல்லாவற்றையும் அறிந்தேதான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்பந்தமான எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்றும் அது கொஞ்சகாலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும், எழுதியும் வந்தோம். நாம் இப்படிப் பேசி, எழுதி வந்ததைப் பற்றி பல தொழிலாளர்கள் தலைவர்களுக்கும் தம் மீது மனஸ்தாப மேற்பட்டது நமக்கு தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மாநாட்டு உபசரணைத் தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். மித்திரன் அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன் தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட் சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டி யாருக்கும், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய் யங்கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பாஷணை, அடிதடி சண்டை முதலியவைகள் நடந்திருப்பதையும், தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவராவ், கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்தும் பார்ப்பனத் தந்திரங்கள் நன்றாக விளங்குகின்றன. இனியாவது, நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டுகளின் மாய் கையில் இருந்து விலகுவார்களா என்பது தான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகித் தனிப்பட்ட ஹோதாவில் தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால், நாமும் நம்மாலானதைச் செய்யத் தயாராயிருக் கிறோம் என்றும், எந்தக்கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்துவிடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 24.04.1927

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி


பெங்களூரு, செப்.21- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி தெரிவித்தார்.

பெங்களூருவில் கடந்த 15-ஆம் தேதி நடை பெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப் பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தி இப்போதே நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே போன்றோர் விமர் சித்தனர். கன்னட அறிஞர் சிதானந்த மூர்த்தியும் அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அனந்தமூர்த்தியின் கருத்துக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் பரகூர் ராம சந்திரப்பா, கே.மருளுசித்தப்பா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையில், மோடி குறித்து, தான் கூறியிருந்த விமர்சனம் தொடர்பாக பெங்களூருவில் வியாழக் கிழமை எழுத்தாளர் அனந்த்மூர்த்தி கூறியது:

நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்க ளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்.

முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும்.
பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும். பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?

கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோதுகூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்து மத தத்துவத்தை நான் ஏற்காததால், பாஜகவினர் எப்போதும் என்னை விமர்சிப்பார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால், ஊழல் புரிந்துள்ள தால், அந்தக் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி


புதுடில்லி, செப். 21-மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார்.

பா.ஜ பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடி நியமிக்கப் பட்டது குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:

நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி. அவர் பா.ஜ சார் பில் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அதனால், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கும், சங் பரிவார் அமைப்புக்கும் இடையே முதல் முறையாக நேரடி போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலை பிரதமர் பதவிக்கான போட்டியாக மாற்ற பா.ஜ விரும்புகிறது. இந்த போட்டியில் காங்கிரஸ் ஈடுபடாது. யாரையும் காங்கிரஸ் முன் னிறுத்தாது என நினைக் கிறேன்.

மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான். அதனால்தான் அவரது வலதுகரமாக திகழும் அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தின் பாஜ பொறுப்பாளராக நியமித் துள்ளார். அவர் தனது விளையாட் டை நடத்திவிட்டார். முசாபர் நகரில் மதக் கலவரத்தை தூண்டியது பா.ஜ. தான். மோடி முன்னிறுத்தப் பட்டதன் மூலம், இதுபோன்ற பல கலவரங்கள் வட மாநிலங்களில் நடக்கும். முதல் டிரெய்லர் முசாபர் நகரில் நடந் துள்ளது. இதுபோல் பல சம்பவங்கள் நடக்கும். மதவாதம் படிப்படியாக தூண்டப்படும் என அஞ்சுகிறேன். இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக இருக்கும் உ.பி., பிகார் போன்ற இடங் களில் மதக் கலவரம் தூண்டப்படும் என தெரிகிறது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.