தூக்குத் தண்டனையை ரத்து செய்க!
தென்மாவட்டங்களைப் பாதிக்கச் செய்யும்
முல்லைப் பெரியாறு தடையை நீக்கிச் செயல்படுத்துக!
முல்லைப் பெரியாறு தடையை நீக்கிச் செயல்படுத்துக!
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படட்டும்!!
கம்பம் திராவிடர் கழக மாநாட்டில் அரிய தீர்மானங்கள்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார்
கம்பம், பிப். 28- தென் மாவட்டங்களுக்கு மிகவும் தேவைப்படும் முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனம் வழக்கம்போல அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாடு உரிமையைக் காப்பாற்றும் வகையில் உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில, மத்திய அரசுகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 27.2.2013 அன்று கம்பத்தில் நடைபெற்ற மதுரை மண்டல திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கம்பம், பிப். 28- தென் மாவட்டங்களுக்கு மிகவும் தேவைப்படும் முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனம் வழக்கம்போல அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாடு உரிமையைக் காப்பாற்றும் வகையில் உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில, மத்திய அரசுகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 27.2.2013 அன்று கம்பத்தில் நடைபெற்ற மதுரை மண்டல திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1 (அ) :
ஜாதி என்பதும் - அதன் விளைவான தீண்டாமை
என்பதும் பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், மனிதத் தன்மைக்கும்
விரோதமானதால் அந்தப் பிறவி பேதங்களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக
வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கேட்டுக்
கொள்கிறது.
தீர்மானம் 1 (ஆ) :
தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச்
சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டுமென்று
இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 1 (இ) :
ஜாதி, மத வெறிகளைத் தூண்டுவதோடு வன்முறைக்குத் தூபம் போடும் வகையில் பேசுகிறவர்கள், எழுது கிறவர்கள், நடந்து
கொள்பவர்கள் மீது காலந் தாழ்த்தாது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை
உடனடியாக எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை
வலியுறுத்துகிறது.
தீர்மானம் 1 (ஈ) :
அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தும்
போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. குறிப்பாக தலித்- தலித் அல்லாதார் என்று
ஒரு புதிய முறையில் பிளவுபடுத்திட மேற்கொள்ளப்படும் சிந்தனை - அணுகு முறை -
செயல்பாடுகள் அபாயகரமான திசைநோக்கி சமூகத்தை இழுத்துச் செல்லும் என்பதை
எடுத்துக்காட்டி, சமூக எழுச்சி வரலாறு அத்தகையோரை மன்னிக்காது - மறக்காது
என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இம் மாநாடு சுட்டிக்காட்ட விழைகிறது.
தீர்மானம் 2 :
சமூகநீதிக் கண்ணோட்டத்தில்
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மிகவும் முக்கியமான இவ்விரு
சக்திகளும் இணைந்து போராடி பல உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதை
இம்மாநாடு சுட்டிக்காட்டி, இருகரங்களாக, தோள்களாக இணைந்து செயல்பட வேண்டும்
என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நம்மில் ஒற்றுமை நீங்கின் ஆதிக்க
சக்திகள் தலைஎடுக்க ஏதுவாகும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன்
சுட்டிக்காட்டுகிறது. இச்சமூகங்களை வழிநடத்தும் தலைவர்கள் எந்தக்
காரணத்தைக் கொண்டும் பிளவு மனப் பான்மையை, பகைமை உணர்ச்சியை மறந்தும் கூட
ஏற் படுத்தாது, சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று
இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதிலாக அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி மறுப்பு திருத்தம் செய்க!
தீர்மானம் 3 :
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY)
ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தைச் செயல்படுத்துக!
தீர்மானம் 4 :
(அ) ஜாதியைப்
பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண,
இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு
வலியுறுத்துகிறது.
(ஆ) ஜாதி - தீண்டாமை என்பவை குற்றமானவை.
மனித நேயத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரா னவை என்ற உணர்வை தொடக்க
நிலையிலேயே மாணவர்களுக் குப் போதிக்கும் வகையில் பாடத் திட்டங்களை
வகுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(இ) ஜாதி என்ற அளவுகோல் சமூகநீதிக் கண்
ணோட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும், மருந்தில் நோய்க்கொல்லியாக விஷம்
சேர்க்கும் அளவு பயன் படுத்தப்படவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணத்
துக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக்கூடாது என்றும் இம்மாநாடு அறிவித்துக்
கொள்கிறது. இதுவும் கால வரை யற்றதல்ல; ஒரு சமனியம் பெறும் வகையில் மட்டுமே!
(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப்பாகப் போடக்கூடாது.
(உ) ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக்கூடாது.
ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப்பது ஜாதி சின்னங்களை.
தடைசெய்யப்பட வேண்டும்
(ஊ) தெருக்கள், ஊர்கள் பெயர்களில் உள்ள
ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள்
நீக்கப்படும் வகையில் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு
வலியுறுத்துகிறது.
(எ) கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர தேவையான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஏ) ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து
கொள் வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து
குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர்களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA)
அளிக்கப்பட வேண்டும். இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக்
கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரம்
குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்ததத்தைக் கொண்டு வருமாறு
மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(அய்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளைக்
கட்டும்போது, தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் பலரும் கலந்து
வாழும் வகையில் கட்டித் தருவதே சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு
நிரந்தர வழிவகுக்கும் என்பதை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொள்ள
இம்மாநாடு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 5 :
ஜாதி மறுப்பு, மத மறுப்பு
திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு
பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகி யோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது,
மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாது காப்பு அளிப்பது
என்ற ஆக்க ரீதியான செயல்களில் ஈடு படுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம் 6 :
சிலை திருட்டுப் போன்றவற்றிற்குக் காவல்
துறையில் தனி உளவுத்துறை இருப்பது போல ஜாதி, மத மோதல் களைத் தொடக்க
நிலையிலே தடுக்கும் வகையில், காவல் துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க
வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள் கிறது.
(அ) இன்னும் தேநீர்க்கடைகளில் இரட்டைக்
குவளை முறை, சுடுகாடு மற்றும் சுடு காட்டுக்குச் செல்லும் பாதைப்
பிரச்சினைகள், கோயில் திருவிழாக்களில் ஜாதியச் சிக்கல்கள் அவற்றின் காரணமாக
கலவரங்கள் - இவற் றிற்கு இடம் இல்லாத அளவுக்கு இராணுவத் தீர்வு போல
செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளுக்குத்
திட்ட வட்டமாகத் தெரிவித் துக் கொள்கிறது.
தீர்மானம் 7 :
நீதித்துறை, தனியார்த் துறைகளிலும் இட
ஒதுக்கீட் டைச் செயல்படுத்த வேண்டும் என்றும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு
அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு
வரவேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ராமன் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா?
தீர்மானம் 8 :
ராமன் பெயரைச் சொல்லி, தமிழ் நாட்டின்
நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை
முடக்குவதைப் புறந்தள்ளி, மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு அத்திட்டத்தை
உடனடியாகச் செயல் படுத்த மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9 :
முல்லைப் பெரியாறு அணையினால் மதுரை, தேனி,
திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களில் 2 லட்சம் ஏக்கர்
நிலங்கள் பாசனத்துக்குப் பயன்பட்டு வந்தது. 152 அடி நீரைத் தேக்க வசதி
படைத்த இந்த அணையில் வெறும் 136 அடியாகக் குறைக்கப் பட்டதால் 38 ஆயிரம்
ஏக்கர் நிலங்கள் தரிசாகி விட்டன. 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒரு போக
சாகுபடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கேரள
அரசு அடாவடித்தனமாக 152 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டு
வருகிறது. இப்பிரச்சனையில் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் சட்டப்படியான நிலை
தொடருவதற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 10 :
ஈழத்தில் இனப்படுகொலை செய்த கொடுங்கோலன்
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தவகையில்
இந்திய அரசு முன்னின்று செயல்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை
வலியுறுத்துகிறது.
ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்கள் வாழ்வுரிமை
பாதிக் கப்பட்டு, அன்றாடம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் கொடுமைக்கு
முடிவு கட்ட வேண்டும் என்றும், இதில் இந்தியா அக்கறைகாட்டி செயல்பட
வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. டெசோ அமைப்பின்
செயல்பாடுகளை இம்மாநாடு வரவேற்கிறது. இதற்குத் தமிழர்கள் பெரும் ஆதரவு
காட்டி ஈழத்தமிழர் களின் உரிமை வாழ்விற்கு ஒத்துழைப்புக் கொடுக்குமாறு
இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தூக்குத் தண்டனையை ரத்து செய்க!
தீர்மானம் 11 :
தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12 :
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி
செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல வறண்ட, நிலத்தடி நீர் குறைந்து போன
மற்ற மாவட்ட விவசாயி களுக்கும், அரசு மானியம் வழங்க முன்வரவேண்டுமென
இம்மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13 :
விலைவாசியைக் குறைப்பதற்கு அனைத்து முயற்சி களையும் எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர்
துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். பலத்த கரஒலிக்கிடையே
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன).
----------------------”விடுதலை” 28-2-2013