Search This Blog

1.2.10

தந்தை பெரியாரும் - தை பூசமும்

தைபூசம்

கோயில்களில் தைபூசம் என்பதுபற்றி ஏடுகளில் பிரமாதமாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. அதிலும் பழனியில் தைபூசம் என்றால் அதற்குத் தனி மவுசாம். பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரள்வார்கள்.

தை பூசத்தன்று காவடி எடுப்பதுதான் பிரசித்தம். காவடிகளில் பல வகை உண்டு; பால் காவடி, இளநீர் காவடி, புஷ்பக் காவடி, கரும்புக் காவடி என்று எடுப்பார்களாம்.

அவரவர்களும் அன்றாட சாப்பாட்டுக்கே காவடி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் 77 சதவிகித மக்களின் நாள் வருமானம் ரூ.20 தானாம். இந்த யோக்கியதையில் கோயில்களுக்குக் காவடிகள் எடுப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.

பழனிக்குக் காவடி எடுத்துக்கொண்டு போனால் கொன்ற பாம்பு, அறுத்துச் சமைத்த கோழி, சமைக்கப்பட்ட மீன் ஆகியவை உயிர் பெற்று விடுகின்றன என்றெல்லாம்கூட கொட்டி அளப்பது உண்டு.


தந்தை பெரியார் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் உண்டு.

நீதிக்கட்சியின் முதலமைச்சராய் இருந்தாரே முனுசாமி நாயுடு அவர், சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், தந்தை பெரியார் ஆகியோர் பழனிக்குச் சென்றார்கள். பெரியார் அடிவாரத்தில் இருந்து கொண்டார்; மற்றவர்கள் மலைக்குச் சென்றார்கள்.

இந்தச் சமயத்தில், அடிவாரத்தில் ஒரு விபூதிக் கடைக்காரன் இரண்டு சேவல்களை தன் கடைமுன் கட்டி, அதன்மீது மஞ்சள், குங்குமம் தெளித்து, வெற்றிலை பாக்கை முன்னால் வைத்து ஒரு உண்டியலும் வைத்திருந்தான். ஒரு கூட்டம் பய பக்தியாக சேவலைக் கும்பிட்டு, உண்டியலில் காசுகளையும் போட்டுச் சென்றது.

இதுகுறித்து அந்தக் கடைக்காரனிடம் பெரியார் விசாரித்தபோது,

இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று கூறினான்; அதாவது அறுத்துச் சமைத்து காவடியில் கட்டிக் கொண்டு வந்த சேவல்கள் இவை கடவுள் அருளால் இந்தச் சேவல், கோழிகள் உயிர் பெற்றுவிட்டன என்று விளக்கினான்.

அந்த நேரத்தில் மேலே மலைக்குச் சென்ற பெரியாரின் அந்த இரு நண்பர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கூப்பிட்டு கடைக்காரன் சொன்ன தகவலை விளக்கிக் கேலி செய்தார் பெரியார்.

அவர்கள் இருவரும் சிரித்துவிட்டு, இப்படிப்பட்ட ஆட்கள் உங்கள் பிரச்சாரத்துக்கு அனுகூலம் செய்து விடுகிறார்கள் என்று கூறி, நாங்கள் எல்லாம் பக்தர்கள்தான் என்றாலும், இதுபோன்றவற்றை நம்பமாட்டோம் என்று சொன்னார்களாம்.

(ஆதாரம்: குடிஅரசு, 19.1.1936)

இது எப்படியிருக்கு?

------------------------ மயிலாடன் அவர்கள் 1-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

வஜ்ரா said...

தைப்பூசத்துக்கு காவடி எடுப்பது பகுத்தறிவா இல்லையா ? உங்கள் தந்தை பெரியார் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் ?

மாடல மறையோன் said...

தைப்பூசமா? தை பூசமா?

தமிழைக்கொலை செய்துதான் மூடநம்பிக்கைகளை ஒழிக்க்வேணுமோ?

மாடல மறையோன் said...

காவடி பரவாயில்லை. ஆனால் உடம்பெல்லாம் துளைபோட்டு, குருதிவடிய பக்தியா? பார்க்கவே காட்டுமிராண்டித்தனமாகவல்லா இருக்கு!

இதைப்பத்தி, அவாள் என்ன சொல்றா...வஜ்ரா?