Search This Blog

21.2.10

பிரார்த்தனையால் லஞ்சத்தை ஒழித்து விட முடியுமா?


லஞ்சம்

லஞ்சம், ஊழலை ஒழிக்க பொது மக்கள் அவர்கள் இருந்த இடத் தில் இருந்தே பிரார்த்தனை செய்யும் வகையில் சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டத்தை ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் ஒன்று சேர்ந்து, ஏற்பாடு செய்துள்ளன.

இன்று காலை 7 மணி முதல் 7.05 மணி வரை (21.2.2010) இறைவா, கடவுளே, லஞ்ச ஊழலை ஒழியுங்கள், நேர்மையான முன்னாள், இந்நாள் அதிகாரிகள் எல்லா வளமும் பெற்று குடும்பத்துடன் நல்வாழ்வு வாழ அருளுங்கள்! என்ற வரிகளைச் சொல்லி அவரவர்களுக்கு விருப்பமான தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரார்த்தனைக் கூட்டம் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்துவிட முடியாது என்று தெரியும். ஆனால் இதன் மூலம் பொது மக்களுக்கு லஞ்சம் மற்றும் ஊழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்

என்று டாக்ட் இந்தியா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனைப் படித்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. பிரார்த்தனையால் லஞ்சம் ஒழியாது என்று தெரியுமாம். ஆனாலும் லஞ்சத்தை ஒழிக்கப் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். இது ஒரு தன் முரண்பாடு அல்லவா? நேரக் கேடு அல்லவா? ஒரு மரத்தின் முன்னாலும், சுவரின் முன்னாலும் ஒருவன் பேசிக் கொண்டிருந்தால் அவனை என்னவென்று சொல்லுவோம்? நேற்று வரை நன்றாகத்தான் இருந்தான்; இப்பொழுது ஏதோ மனநலம் கெட்டுப் போய்விட்டது. மென்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதுதான் என்று தானே சொல்வார்கள்?

அதுபோன்றது தானே இவர்கள் சொல்லும் பிரார்த்தனையும். கடவுள்தான் சர்வ வியாபி சர்வ சக்தி வாய்ந்தவர் ஆயிற்றே! பிரார்த்தனை மூலம் சொன்னால்தான் கடவுள் தெரிந்து கொள்வாரா?

லஞ்ச ஊழல் எண்ணம் இடம் பெறாத நல்லொழுக்க உணர்வை சர்வசக்தி வாய்ந்த கடவுளால் உண்டாக்க முடியாதா? அப்படியென்றால் லஞ்சம், ஊழல் நாட்டில் நடக்கட்டும் என்ற கெட்ட எண்ணம் உள்ளவர்தான் கடவுளா?

எல்லாம் அவன் (கடவுள்) செயல் என்றால் லஞ்சம் வாங்குவது யார் செயல்?

ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரார்த்தனை, பிராயச் சித்தம் என்பதெல்லாமே, குற்றம் புரிந்து விட்டு, அதற்கான தண்டனையை அடையாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கம் கொண்டதுதானே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கே சிவபெருமான் மோட்சம் அளித்தான் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தபடலம்) என்று புராணம் எழுதி வைத்துள்ள நாட்டில், பிரார்த்தனையால் ஒழுக்கம் வளரும், லஞ்சம் ஒழியும் என்று கூறுவதைக் காட்டிலும் அடிமுட்டாள்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

கடவுளுக்கே காணிக்கை (லஞ்சம்) கொடுத்துதானே பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது!

---------------- மயிலாடன் அவர்கள் 21-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

சசிகுமார் said...

நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்