Search This Blog

7.9.13

பொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம்



எல்லா மக்களின் பொதுநலத்திற்கென்று ஏறக் குறைய ஒவ்வொரு முக்கிய பட்டணங்களிலும் வாசக சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணத்தைக் கொண்டே நடப்பதாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமே அதில் தலைசிறந்து விளங்கும். சிற்சில வாசக சாலைகளில் பார்ப்பனரல்லாதவர்களே காரியதரிசிகளாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அவ்வூர் முனிசீப்போ, டிப்டி கலெக்டரோ, மேஜிஸ்திரேட்டரோ, சர்க்கிள் இன்ஸ் பெக்டரோ, ரெவின்யூ இன்ஸ்பெக்டரோ பார்ப்பனர்களா யிருந்துவிட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத வக்கீல்களோ, பெரிய மனிதர்களோ, அப்பார்ப்பன உத்தியோக மெம்பர்களுக்கு அடிமையாயிருப்பதுடன் அப்பார்ப்பன மெம்பர்கள் செய்யும் பார்ப்பனியப் பிரசாரத்திற்கு செகரட்ரி என்கிற பெயரால் கையாட்களாகவும் இருந்து வருகிறார்கள். 

நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு வாசக சாலையிலும் சுதேசமித்திரன், இந்து முதலிய பார்ப்பனியப் பிரசார பார்ப்பனப் பத்திரிகைகள் வந்து கொண் டிருக்கும். இந்து, சுதேசமித்திரன் இல்லாத ரீடிங்கு ரூம் ஒரு ரீடிங்கு ரூமாகுமா என்று சொல்லி விடுவார்கள். தங்கள் ரீடிங்கு ரூமுக்கு மெயில் பத்திரிகை வருகிறது என்று பெருமையும் பேசிக்கொள்வார்கள்.

ஆனால் திராவிடன், ஜஸ்டிஸ், குடிஅரசு பத்திரி கைகளைத் தருவிக்கலாமா என்று சொல்லுவதற்குக் கூட நமது பார்ப்பனரல்லாத செகரடரிகளுக்கே தைரியம் இருக்காது. ஏனென்றால் பார்ப்பன அதிகாரிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிடும் என்கிற பயம்தான். அப்படி யாராவது ஒருவர் மீறி தன்னை தைரியம் செய்து கொண்டு தருவிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த ரீடிங்கு ரூமே நமது பார்ப்பனர்களுக்கு வகுப்பு துவேஷ ரீடிங் ரூமாய்விடும். பிறகு அந்தக் காரியதரிசியை ஒழிக்க வழி தேடிவிடுவார்கள். இதனாலேயே வாசக சாலைகளில் பெரும்பாலும் இப்பத்திரிகைகள் வரவழைக்கப்படுவ தில்லை. அல்லாமலும் வரவழைத்து வந்த ஒன்று இரண்டு வாசக சாலைகளிலும் இப்பொழுது வர வர நிறுத்தப்பட்டு வருவதாய் தகவல்கள் எட்டுகின்றன. உதாரணமாக சேலம் லிட்டரரிசொசைடி என்கிற வாசக சாலையில் தமிழ்நாடு பத்திரிகை ஆரம்பம் முதல் வரவழைக்கப்பட்டு வந்தது. இப்பொழுது நிறுத்தப்பட்டாய் விட்டதாம்.

இவ்வாசக சாலையில் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள் அநேகர் உண்டு; ஒரு பார்ப்பனரல்லாதாருக்காவது இதில் அவமானம் தோன்றவே இல்லை. தங்களை எவ்வளவோ கேவலமாக பார்ப்பனர்கள் மதித்தாலும் சரி அவர்களுடன் அவர்கள் வால்பிடித்துத் திரிந்து ஏதாவது உத்தியோகம் பதவி முதலிய எச்சில் பொறுக்க அவர்கள் தயவை எதிர்பார்க்கலாமா என்கிற எண்ணமே அல்லாமல் தங்கள் சுயமரியாதையைப் பற்றி அநேகருக்குக் கவலையே இல்லை. உண்மையாய் இப்பார்ப்பனரல்லாத மெம்பர்கள் சுயமரியாதை உடையவர்களாயிருந்திருந்தால் உடனே ராஜினாமாக் கொடுத்திருப்பார்கள். தவிர, அந்த வாசக சாலையில் பார்ப்பனருக்குத் தண்ணீர் சாப்பிட வேறு பாத்திரமும், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு பாத்திரமும் வைக்கப் பட்டிருக்கிறதாம். சேலம் படித்தவர்கள் பெரும்பாலும் ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியாரின் சிஷ்யர்கள் என்றும், அவருடைய நண்பர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறவர்கள். இவர்கள் யோக்கியதையே இப்படி இருந்தால் மற்றவர்களின் யோக்கியதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அதனால் இனி பொது வாசக சாலைகளில் உள்ள சுயமரியாதை உடைய பார்ப்பனரல்லாதார் அவசியம் இவற்றை கவனிக்க வேண்டும். அதாவது இந்து, மித்திரன், மெயில் பத்திரிகை களை வரவழைக்கும் வாசக சாலைகள் கண்டிப்பாய் ஜஸ்டிஸ், திராவிடன், சைபுல் இஸ்லாம் முதலிய பத்திரிகை வரவழைக்கவேண்டும். பணம் இல்லா விட்டால் பார்ப்பனப் பத்திரிகை ஒன்று பார்ப்பனரல் லாதார் பத்திரிகை ஒன்றுமாக வரவழைக்க வேண்டும் 100-க்கு 3 பார்ப்பனர்கள் இருந்துகொண்டு 100-க்கு 97 பேர் கொண்டவர்களால் நடத்தப்படும் பத்திரி கையை வரவழைக்க ஆட்சேபிப்பதைப் பொறுத்துக் கொள்ளுவதென்றால் இந்த பார்ப்பனரல்லாதாருக்கு மானம், வெட்கம், சுயமரியாதை இருக்கிறதா என்றுதான் கேட்கிறோம்?

 தவிரவும், பார்ப்பனருக்கு வேறு தண்ணீர் பாத்திரம் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு தண்ணீர் பாத்திரமானால் அதை ஒப்புக் கொள்ளுவதும் அவமானமென்றே சொல்லுவோம். அப்படியானால் எல்லா வகுப்பாருக்கும் வைக்க வேண்டும்; மகமதியர், கிறிஸ்தவர்கள், சைவர், அசைவர், ஆதிதிராவிடர் மற்றும் சமபந்தியில்லாத சகல வகுப்புக்கும் வைக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் தன் ஜாதிக்கு 100-க்கு 3 பேருக்கு ஒன்று மற்ற 100-க்கு 97 பேருக்கும் ஒன்று என்பது நமது சமூகத்தை எவ்வளவு கேவலமும் அவமானமும் படுத்தியதாகும். இது விஷயங்களில் படித்தவர்கள் என்பவர்கள் இவ்விழிவுக்குக் கட்டுப்படு வதால் இந்த அவமானம் இது எல்லோர் தலையிலும் விடிகிறது. ஆதலால் இனியாவது வாசக சாலைகளில் உள்ள பார்ப்பனரல்லாத மெம்பர்கள் சுயமரியாதையுடனும் சுத்த ரத்தவோட்டமுள்ளவர்களாகவும் நடந்து கொள்ளு வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

           ------------------ தந்தைபெரியார் -”குடிஅரசு” கட்டுரை,  13.02.1927

38 comments:

தமிழ் ஓவியா said...


இருப்பு


போடிநாயக்கனூரையடுத்த திருமலாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப் பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் கழிப்பதற் காக 4 கிலோ எடையுள்ள தங்கம் (மதிப்பு ரூபாய் ஒரு கோடி) பாதம் ஒன்றைச் செய்து ஏழுமலையானுக்கு அர்ப்பணம் செய்ய உள்ளா ராம்.

அதற்கான பூஜைகள் அவர் வீட்டிலேயே நடந்துள் ளன. அதற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர் (என்ன நடந்தாலும் அவாள் காட் டில் தான் மழை பெய்யும் போலும்!)

பலத்த பாதுகாப்புடன் (ஏன், ஏழுமலையான்மீது நம்பிக்கை இல்லையா?) அந்தத் தங்க பாதங்கள் கடந்த வெள்ளியன்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆகா, என்னே கடவுள் நம்பிக்கை - பக்தர்களின் மனப்பான்மை! நினைத் தால் வாயால் சிரிக்க முடிய வில்லை.

இதற்கு முன்பேகூட மூன்று கிலோ எடையில் தங்கத்தினாலான பூணூலை (கவனிக்கவும் கடவுளும் பார்ப்பன ஜாதிப் பட்டியலில்) காஞ்சி சங்க ராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி, திருப் பதி ஏழுமலையானுக்கு அணிவித்தார் (மாலை மலர் 16.3.2002).

காஞ்சிபுரத்தையடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் ரூபாய் மூன்று கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்ட தோடு நிற்கவில்லை, அவ ரின் செருப்புக்கும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் மக்களுக் காகப் பாடுபடும் தலைவர் களுக்குச் சிறப்பு செய்தால், அன்பளிப்புகள் வழங்கி னால் கேலி செய்யும் துக்ளக் சோ ராமசாமி தினமணி வைத்திகள், - குருமூர்த்தி வகையறாக்கள் இந்த சமூகத்துக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காத காரியங்களுக்கு பணத்தையும், தங்கத்தை யும் கொட்டி அழுவதுபற்றி குறைந்த பட்சம் முணு முணுக்கவாவது செய் கிறார்களா?

அதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதுபற்றி குருமூர்த்திகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்களே - முடங்கிக் கிடக்கின்றன தங்கக் கட்டிகள் டன் டன்னாக கோயில்களில். அதை அரசின் இருப்புக் குக் கொண்டு வந்தால் தீர்வு கிடைக்கும் என்று இந்தப் பொருளாதார பு(ளி)களின் பேனாக்கள், மை சிந்துவதில்லையே - ஏன்? கோயில்களின் இருப்பில்தானே இவாளின் ஆதிக்க இருப்பும் இருக் கிறது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இருப்பு


போடிநாயக்கனூரையடுத்த திருமலாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப் பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் கழிப்பதற் காக 4 கிலோ எடையுள்ள தங்கம் (மதிப்பு ரூபாய் ஒரு கோடி) பாதம் ஒன்றைச் செய்து ஏழுமலையானுக்கு அர்ப்பணம் செய்ய உள்ளா ராம்.

அதற்கான பூஜைகள் அவர் வீட்டிலேயே நடந்துள் ளன. அதற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர் (என்ன நடந்தாலும் அவாள் காட் டில் தான் மழை பெய்யும் போலும்!)

பலத்த பாதுகாப்புடன் (ஏன், ஏழுமலையான்மீது நம்பிக்கை இல்லையா?) அந்தத் தங்க பாதங்கள் கடந்த வெள்ளியன்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆகா, என்னே கடவுள் நம்பிக்கை - பக்தர்களின் மனப்பான்மை! நினைத் தால் வாயால் சிரிக்க முடிய வில்லை.

இதற்கு முன்பேகூட மூன்று கிலோ எடையில் தங்கத்தினாலான பூணூலை (கவனிக்கவும் கடவுளும் பார்ப்பன ஜாதிப் பட்டியலில்) காஞ்சி சங்க ராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி, திருப் பதி ஏழுமலையானுக்கு அணிவித்தார் (மாலை மலர் 16.3.2002).

காஞ்சிபுரத்தையடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் ரூபாய் மூன்று கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்ட தோடு நிற்கவில்லை, அவ ரின் செருப்புக்கும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் மக்களுக் காகப் பாடுபடும் தலைவர் களுக்குச் சிறப்பு செய்தால், அன்பளிப்புகள் வழங்கி னால் கேலி செய்யும் துக்ளக் சோ ராமசாமி தினமணி வைத்திகள், - குருமூர்த்தி வகையறாக்கள் இந்த சமூகத்துக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காத காரியங்களுக்கு பணத்தையும், தங்கத்தை யும் கொட்டி அழுவதுபற்றி குறைந்த பட்சம் முணு முணுக்கவாவது செய் கிறார்களா?

அதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதுபற்றி குருமூர்த்திகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்களே - முடங்கிக் கிடக்கின்றன தங்கக் கட்டிகள் டன் டன்னாக கோயில்களில். அதை அரசின் இருப்புக் குக் கொண்டு வந்தால் தீர்வு கிடைக்கும் என்று இந்தப் பொருளாதார பு(ளி)களின் பேனாக்கள், மை சிந்துவதில்லையே - ஏன்? கோயில்களின் இருப்பில்தானே இவாளின் ஆதிக்க இருப்பும் இருக் கிறது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் மேலும் தீவிரமாக்கும்!


மத்திய - மாநில அரசுகள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உருவாக்கிட வேண்டும்!

- டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவேந்தலில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

நரேந்திர தபோல்கரின் உருவப் படத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். பேராசிரியர் அ. இராமசாமி, சுகத் தபோல்கர் (நரேந்திர தபோல்கரின் பேரன்), வீ. குமரேசன் (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் உள்ளனர். (சென்னை - 6.9.2013).

சென்னை, செப்.7- மனித வாழ்வைச் சீர ழிக்கும் மூடநம்பிக் கைகளை ஒழிப்பதற் கான பிரச்சாரத்தை திராவிடர் கழகம் மேலும் தீவிரமாக்கும்! அதே நேரத்தில் மத்திய - மாநில அரசுகள் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை உரு வாக்கிட வேண்டும் என, மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி - பகுத்தறிவாளர் மறை வுற்ற டாக்டர் நரேந் திர தபோல்கர் நினை வேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் வேண்டு கோள் விடுத்தார்.

சென்னை - பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி, பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவேந்தல் நிகழ்ச்சி செப்டம்பர் 6-ஆம் நாள் மாலையில் நடைபெற் றது.

பகுத்தறிவாளர் கழ கம் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்ச் சியில் நரேந்திர தபோல் கர் படத்தினைத் தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்து நினை வேந்தல் உரையாற்றி னார். தபோல்கரின் நினைவுகளைப் போற் றும் வகையில் மூடநம் பிக்கை ஒழிப்பு, மாந் திரீக, பில்லி, சூனிய எதிர்ப்பு பற்றி தீவிர பிரச்சாரப் பயணம் நடத்தப்படும். அதனால் வலுப்படும் பொது மக்கள் கருத்து மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டத் தினை உருவாக்கிடும் என சூளுரைத்தார்.

நினைவேந்தல் நிகழ்ச் சிக்கு காரைக்குடி அழ கப்பா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் க. இராமசாமி தலைமை தாங்கினார். டாக்டர் நரேந்திர தபோல்கர் பற்றிய குறிப்புகளை பகுத்தறிவாளர் கழகத் தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி வாசித்தார். நினைவேந்தல் நிகழ்வின் முகவுரையினை பகுத்தறி வாளர் கழக பொதுச் செயலாளர் வீ. குமரே சன் வழங்கினார்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் தபோல்கர் குடும்பத்தைச் சார்ந்தவர் பங்கேற்பு

நினைவேந்தல் நிகழ்வு குறித்து நரேந்திர தபோல்கரின் மகன் டாக்டர் அமீத் தபோல் கரிடம் தகவல் தெரி வித்த பொழுது அவரது குடும்பத்தினைச் சார்ந்த வரை நிகழ்ச்சியில் பங் கேற்றிடப் பணித்திருந் தார். நரேந்திர தபோல் கரின் பேரன் சுகத் தபோல்கர் நினைவேந் தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அறிவியல் போதகராக சென்னை யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சுகத் தபோல்கர் மிகவும் நெகழ்ச்சியுடன் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு, நரேந்திர தபோல்கர் பற்றிய தன் உறவுகள், அவரது பொதுப் பணி கள் பற்றி சுருக்கமாக உரையாற்றினார். மாநி லம், மொழி, இனம் கடந்து பெரியார் இயக் கத்தின் சார்பாக தனது தாத்தா தபோல்கருக்கு நடத்தப்படும் நினை வேந்தல் நிகழ்ச்சி குறித் துப் பெருமைப்பட்டுப் பேசினார்.

பேராசிரியர் அ. இராமசாமி தலைமை உரை

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பேரசிரியர் முனை வர் அ. இராமசாமி உரையாற்றும்பொழுது குறிப்பிட்டதாவது:

அந்நாளில் ஏன்? எதற்கு? என கேள்வி கேட்டவர் பகுத்தறிவாதி சாக்ரடீஸ். அன்று முதல் இன்று வரை பழமை யினை கேள்வி கேட்டு, அதற்கு எதிராகச் செயல் பட்டவர்கள் சாக்ர டீஸைப் போல செயற் கையாக மரணத்தை தழுவியிருக்கிறார்கள். மூடநம்பிக்கையினை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து அவைகளை ஒழிக்கப் பாடுபட்ட நரேந்திர தபோல்கரும் ஆதிக்கவாதிகளின் அடக்கு முறைகளுக்கு ஆளாகி மரணம் அடைந்துள்ளார்.

மனிதர்களின் ஆக்க ரீதியான முயற்சி மற்றும் உழைப்பினை தடுத் திடவல்ல ஜோதிடத்தை எதிர்த்து தபோல்கர் போராடினார். ஜோதி டம் மனித மேம் பாட்டிற்கான ஒரு தடைக்கல் ஜோதிடப் படி செயல்பட்டால் தான் வாழ்வு நலமாக இருக்கும் என்பது பித்த லாட்டம். ஜோதிடப்படி வாழ்வை அமைத்துக் கொண்ட பலர் தாங் கொணா இன்னலுக்கு ஆளாகி வந்த கடந்த கால புராணக் கதை களும் உண்டு. அண்மை யில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளும் உண்டு இராமாயணத்தில் வசிஷ்டர் குறித்துக் கொடுத்த நாள், நேரத் தில் மணம் புரிந்த ராம னும் சீதையும் மகிழ்ச்சி யாக வாழ்ந்தனரா? 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்று அல்லல்பட வில்லையா? சில ஆண்டுகளுக்கு முன்பு சிறீரங்கத்தில் பார்ப்பனர் குடும்பத்தில், நாள், நேரம் பார்த்து சாஸ்திர சம்பிரதாயப்படி ஏற் பாடு செய்யப்பட்ட திரு மணத்தில் - கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு மண மக்கள் மரணமடைய வில்லையா? இப்படி ஜோதிடத்தின்படி நடந் தவர்கள் பலி வாங்கப் பட்ட செய்திகள் பல உண்டு. விடுதலை நாளில் ஆட்சியாளர்கள் தேசி யக் கொடி ஏற்றுவதற் குக்கூட நேரம் பார்ப்பது இன்று நிலவும் அவல நிலையாகும்.

தபோல்கர் தன்னுயிர் நீக்க காரணமான மூட நம்பிக்கை எதிர்ப்பிற் கான சட்ட வடிவம் உருவாகும் சூழ்நிலை வர வேண்டும்.
இவ்வாறு பேராசிரி யர் இராமசாமி உரை யாற்றினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் ஆற்றிய நினைவேந்தல் உரை

டாக்டர் நரேந்திர தபோல்கரின் உருவப் படத்தினை திறந்து வைத்து பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய நினைவேந்தல் உரை வருமாறு:

மூடநம்பிக்கை ஒழிப் புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர், மராட்டிய மாநிலம் புனே நகரில் ஆதிக்க சக்திகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தன் வாழ்நாளில் மேற் கொண்ட லட்சியத்தை அடைவதற்கான பணி யில் மரணம் அடைவது என்பது அனைவருக்கும் அமையாது தபோல் கரின் மரணம், மற்ற மனிதர்களின் மர ணத்தைப் போன்றது அல்ல. மூடநம்பிக்கை ஒழிப்பு லட்சியத்தின் வெளிப்பாடாக தபோல் கரின் மரணம் அமைந்து விட்டது. தபோல்கரின் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட மராட்டிய மாநில முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவாண், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பின் னணியில் இருந்து செயல்பட்ட ஆதிக்க சக்திகள், தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் இருந்திருக் கிறார்கள் என பேசியது தபோல்கரின் மரணம் தனி நபர் மரணம் அல்ல; தனிப்பட்ட நிகழ்ச்சியும் அல்ல; ஆண்டாண்டு காலமாக, காந்தியார் காலத்தில் நடைபெற்று தபோல்கர் மரணத்திலும் தொடர்ந்து வருகின்ற வன் செயல்; மனித நேயத்தை மறந்து மதவாதத்திற்கு ஊக்கம் சேர்க்கின்ற பாதகச் செயல்களே!

தபோல்கரின் மரணம் ஒரு கடினமான பணியின் வெற்றிக்கு வித் திட்டு விட்டது என்பதே உண்மை. ஆதிக்க சக்திகளுக்கு ஒரு வகை தோல்வி என்றே கருத வேண்டும். மக்களைப் பக்குவப்படுத்தி அவர் களது மேம்பாட்டுக்கு உதவும் சட்ட வடிவங்களை உருவாக்குவதில் ஒரு வகை ஆட்சி அணுகுமுறை. மேம் பாட்டுக்கான சட்டத்தை உருவாக்கி விட்டு, அதன் துணை கொண்டு மக் களைப் பக்குவப்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி உயர்வடைய வைப் பது பிறிதொரு அணுகுமுறை. இரண் டாவது வகையிலான ஆட்சியாளர் களின் அணுகுமுறைக்கு தபோல் கரின் மரணம் ஆதார ஆக்கமாக அமைந்துவிட்டது. நீண்ட நாட் களாக, மூன்று முறை மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா அறிமுகப் படுத்தப்பட்டும், 29 திருத்தங்கள் மசோதாவில் கொண்டு வரப்பட்டும், நிறைவேற்றம் காணாமல் நிலுவை யில் இருந்த மூடநம்பிக்கை ஒழிப்பு, மாந்திரீக மோசடி தடைச் சட்டம் அவசரச் சட்டமாக உருவெடுத்திட தபோல்கரின் மரணம் பயன்பட்டு விட்டது. ஆனால் சட்ட வடிவத் திற்குக் கொடுக்கப்பட்ட விலை மிகவும் அதிகம். லட்சியப் போராளி தபோல்கரின் மரணம், சட்ட நிறைவேற்றத்தினை எதிர்த்தவர்கள் மவுனம் காக்கச் செய்து வெற்றி கண்டு விட்டது. சமுதாயப் புரட் சியை உருவாக்கிட்ட பல்வேறு புகழ் வாய்ந்த மரணங்களுள் தபோல்கரின் மரணம் வரலாறாகி விட்டது.

தபோல்கரின் மறைவிற்கு நடத்தப் படும் இந்தப் படத்திறப்பு, நினை வேந்தல் நிகழ்ச்சி ஒரு சடங்கு அல்ல; படத்தினைத் திறந்து வைத்துவிட்டு, அவரது பெருமைகளை மட்டும் பேசி விட்டுப் போய் விடுவது அல்ல. தபோல்கர் செய்து முடித்திட நினைத்த லட்சியங்களை, மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை மேலும் தீவிரப்படுத்தி அந்தக் கடினமான பணியின் அடுத்தக் கட்டத்திற்கு படுபாடுவதே நாம் அவருக்கு செய்யும் மரியாதை. அப்படிப்பட்ட பணிக் கான சூளுரையினை ஏற்கும் நிகழ்வுதான் இந்த நினைவேந்தல் கூட்டம்.

தமிழ் ஓவியா said...

நரேந்திர தபோல்கர் அடிப் படையில் ஒரு நாத்திகர். இருப்பினும் கடவுள், மத எதிர்ப்பு பிரச்சாரத் தினை அவர் செய்திடவில்லை. மூடநம்பிக்கை எதிர்ப்பு மாந்திரீகர் களால் மக்களுக்கு ஏற்படும் இழப்பு பற்றிய பிரச்சாரத்தினை செய்து வந்தார். மூடநம்பிக்கை மோசடி களுக்கு மூல காரணம் கடவுள் நம்பிக்கை என்றிருந்தாலும், கடவுள் எதிர்ப்பினை பிரச்சார அணுகுமுறையாக தபோல்கர் கொள் ளவில்லை. பகுத்தறிவுக் கொள்கை பிரச்சாரத்தின் ஒரு அங்கமான மூடநம்பிக்கை ஒழிப்பினை மட் டும் செய்த தபோல்கரின் செயல் களையே மராட்டிய மாநிலத்து ஆதிக்க சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது உயிரை மாய்த்து விட்டனர். கடவுள் மறுப்பை கையில் எடுத்துக் கொண்ட தந்தை பெரியார் செய்த பகுத்தறிவுப் பிரச்சாரம் எப்படிப்பட்ட எதிர்ப் புகளைச் சந்திக்கும் என்பது நாம் எதிர்பாராதது அல்ல. எந்த சவால் களையும் நேர் கொண்டு சமுதாயக் கடமை ஆற்றிடும் நிலையில்தான் பெரியார் இயக்கம் உள்ளது.

மனிதனின் மேம்பாட்டுக்கு அடிப்படை அவனுக்கு இயற்கையில் வாய்க்கப் பெற்ற பகுத்தறியும் ஆற்றல் ஆகும். பகுத்தறியும் ஆற்றலை மழுங்கடிக்கும் வகையில் பல வகை மூடநம்பிக்கை முடை நாற்றங்கள் மக்கள் சமுதாயத்தில் பரவலாக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை யாக இருக்கின்றன. முட்டுக்கட்டை களை உடைத்தெறிந்த சமூகங்கள் முன்னேறியுள்ளன. உடைத்தெறியாத சமூகங்கள், மூடநம்பிக்கை சாக் கடையில் ஊறி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன பழம் பெரும் பாரம்பரியம் என்ற அடை யாளத்துடன் பலவித மூடநம்பிக் கைகள் இன்று மனித வாழ்வைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றன.

வாஸ்து சாஸ்திரம் என்பதன் பேரால் மனித முயற்சியின் தோல்விக் கான காரணங்கள் கண்டுபிடிக்கப் படுவதை விடுத்து, அவர்கள் பயன் படுத்தும் கட்டடங்களில் குறைபாடு காணும் போக்கு அதிகமாகவே நிலவுகிறது. கழிப்பறைக்கு வகை செய்யாத வாஸ்து முறை எப்படி மனிதருக்கு இயல்பானதாக, அவர் களுக்கு ஏற்றம் தருவதாக அமைய முடியும்? மனிதர்கள் படித்துப் பட்டம் பெற்று, உயர் பதவியில் இருக்கும் நிலையில் அவர்கள் பகுத்த றியாமல், சிலவித நல்வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் பழக்கத்திற்கு ஆட் பட்டு வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கையில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் விவரம் தெரிந்தவர்களிடம் நிலவுகிறது. குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என கருதுவோரும் அழுக்கு நிறைந்த கயிறுகளை கையில் கட்டி, உணவு உட்கொள்ளும் எல்லையில் அந்த அழுக்குக் கயிறு பட்டுக் கொண்டு இருப்பதை காணலாம். வாதத்திற் காக, நாள்தோறும் ஆடை மாற்றிக் கொள்வதைப் போல கயிறையும் புதிதாக மாற்றிக் கொள்ளலாமே என எடுத்துரைத்தால், மந்திரித்து கட்டிய கயிறு; மாற்றக் கூடாது! என பதிலுரைக்கும் பழக்கம் நிலவுகிறது. மாந்திரீக மோசடி விளக்கப்பட வேண்டும். அந்த நடவடிக்கை தகர்க்கப்பட வேண்டும்.

திருமணம் ஆன, ஆகாத மகளிர் பலர் பேயாட்டம் எனும் பெயரால் சாமியார்களின் பாலியல் வன் முறைக்கு ஆளாகி, வெளியிலும் அந்த அவமானத்தைச் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். திருமணம் ஆன பெண்கள், கணவரின் அறி யாமைச் சம்மதத்தோடு சாமியார் களின் பாதகச் செயல்களுக்கு பலியாகி வருகின்றனர். நீ வராமல் உன் மனைவியை மட்டும் அனுப்பு! என்று சொன்னால் வீரம் கொள்ளும் ஆண்கள், சாமியார்கள் அப்படிச் சொன்னால் மட்டும் மந்திர, மாந்தி ரீகத்தில் மயக்கம் கொண்டு வீரம் இழந்து போவது ஏன்?

இந்த நாடு அரசியல் விடுதலை பெற்றபொழுது, ஜோதிடர் நாள் குறித்து, நள்ளிரவில்தான் செங் கோட்டையில் கொடி ஏற்றப்பட்டது. பகுத்தறிவாளரான ஜவஹர்லால் நேருவும் மூடநம்பிக்கையாளர் களின் பிடியில் இருந்து விடுபட வில்லை. நாள்குறித்து விடுதலை பெற்றதால் இன்று நாட்டு நிலைமை, பொருளாதார நிலை பாராட்டும்படி இல்லையே! மோசமான சூழலே தொடர்கிறது. நாள், நேரம் குறிக்காமல் விடுதலை பெற்ற பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள் ளன. ஜோதிடம் என்பது தனி நபரை மட்டுமல்ல, நாட்டையே ஆட்டிப் படைக்கும் வல்லமை இந்தியாவில் மட்டுமே காண முடியும். இந்த கருத்தைத்தான் கார்ல் சாகன் (Carl Sagan)
என்ற அறிஞரும் இந்தி யாவைப் போன்று ஜோதிடத்தால் வளர்ச்சி முடக்கப்பட்ட நாடு உலகில் வேறு எதுவுமில்லை, ஆட்சி அதி காரத்தில் உள்ள பெரும்பாலானோர் ஜோதிடத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கை களை ஒழிக்க, மனிதர்களைப் பக்குவப்படுத்த, பெரியார் இயக்கம் செய்துவரும் பிரச்சாரப் பணிகள் பல. மூடநம்பிக்கை ஒழிப்புபற்றி பொதுக் கூட்டம் போட்டு மேடைகளில் பிரச்சாரம் செய்த முதல் இயக்கம் பெரியார் இயக்கம்தான்! தமிழ்நாட் டின் மாலை நேர பொது வகுப்பு நடத்திய முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என அறிஞர் அண்ணா கூறியது பெரியார் இயக்கத்தின் பிரச்சார வல்லமையை பறைசாற்றுவ தாக உள்ளது. பில்லி, சூனியம், பேயோட்டுதல், ஆவி பற்றிய நம் பிக்கை, வாஸ்து சாஸ்திரம், ஜோசியம் ஆகிய பலவித மூடநம்பிக்கைகளை எதிர்த்து பெரியார் இயக்கத்தின் சார்பாக தீவிர பிரச்சாரம் பயணம் மேற்கொள்ளப்படும். பல்வேறு அணி களாக பிரச்சாரம் மேற்கொள்ளப் படும்.

தமிழ் ஓவியா said...

அதற்கான திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்கள் கருத்தினை உருவாக்கி விட்டால், அரசியல் ஆட்சியாளர்கள் மூட நம்பிக்கை ஒழிப்பினை சட்ட வடிவில் ஆக்கிடத்தான் வேண்டும். மக்கள் கருத்து திரட்டப்பட்டால் அது முன்னே செல்லும் சட்ட வடிவம் பின்னர் தானே நொண்டியடித்துக் கொண்டு வரும். (Public Opinion marches forward; Law comes limping behind) மத்திய மாநில அரசுகள் மூடநம்பிக்கை ஒழிப்பு, மாந்திரீக மோசடி தடுப்புச் சட்டத்தை உரு வாக்கிட வேண்டும்.

அத்தகைய நிலையினை உருவாக்க பகுத்தறிவாளர்கள் ஒத்த கருத்துடைய பொது நல உணர்வாளர்கள் செயல் பட வேண்டும்.

மூடநம்பிக்கை அற்ற சமுதாயத் தினை (Society devoid of superstition) அமைக்கப் பாடுவதே நரேந்திர தபோல்கரின் நினைவுகளுக்கு செய் யப்படும் மரியாதை ஆகும்; தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோவி. கோபால் நன்றி கூறினார்.

சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், பொது நல உணர்வாளர்கள், பொது நல அமைப்பினர், பத்திரிகையாளர் என பல தரப்பட்ட மக்கள் பெருந் திரளாக வருகை தந்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

உலகப் பகுத்தறிவாளர்களுக்கான தலைமையகம் பெரியார் இயக்கமே!

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தபோல்கரின் மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பிய பகுத்தறிவாளர்கள்

சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி - பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நாட்டின் பிற மாநிலங்களிலிருந்து, வெளிநாடுகளில் வாழும், மற்றும் அயல் நாட்டைச் சார்ந்த பகுத்தறிவாளர்கள் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தனர். நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்கு வலுசேர்த்தனர்.

இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் நிறுவன தலைவர் சனல் எடமருகு (தற்சமயம் வெளிநாட்டில் உள்ளார்), தேசிய அறிவுக்குழுவின் (National Knowledge Commission) மேனாள் துணைத்தலைவர் சீரிய அறிவியலாளர் பேராசிரியர் பி.பார்கவா (அய்தராபாத்), பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றியத் தின் (International Humanist and Ethical Union) செயல் இயக்குநர் பாபு கோகினேனி, பின்லாந்து (அய்ரோப்பா) நாட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பெக்கா எலோ (தற்சமயம் கொரியா நாட்டுப் பயணத்தில்), டாக்டர் இன்னையா (அமெரிக்கா) விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் டாக்டர் கோபுராஜீ சமரம் (நாத்தி அறிஞர் கோராவின் புதல்வர்), தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நல்.இராம சந்திரன் மற்றும் ஒடிசா மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் சுதன்சு சேகர் கென்டூஜ்கர் (புவனேஸ்வரம்) ஆகியோர் செய்தி அனுப்பியிருந்தனர்.

கடந்த காலங்களில் பகுத்தறிவாளர் பலருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை - பெரியார் திடலில் நடத்தப்பட்டுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்புப் போராட்ட நாயகர் பிரேமானந்த், அமெரிக்க நாத்திகர் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், அமெரிக்க நாட்டின் மனிதநேய பேராசிரியர் டாக்டர் பால் கர்ட்ஸ் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் பொது உடமைச் சிந்தனை அறிஞர் எம்.என்.ராய் அவர்களின் 125-ஆவது பிறந்த நாள், பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் 200-ஆவது பிறந்த நாள் என உலக பகுத்தறிவாளர் களின் நினைவு நாளை அந்த அறிஞர் பெருமக்களின் பெருமைகளை - பங்களிப்பினை போற்றிப் பேணுவதால் பெரியார் இயக்கம் - உலக பகுத்தறிவாளர்களின் தலைமையகம் எனும் பல தரப்பட்ட பகுத்தறிவுச் சான்றோர்களின் கூற்றினை மெய்ப்படுத்துவதாக தபோல்கரின் நினைவேந்தல் நடந்தது.

தமிழ் ஓவியா said...

அதற்கான திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்கள் கருத்தினை உருவாக்கி விட்டால், அரசியல் ஆட்சியாளர்கள் மூட நம்பிக்கை ஒழிப்பினை சட்ட வடிவில் ஆக்கிடத்தான் வேண்டும். மக்கள் கருத்து திரட்டப்பட்டால் அது முன்னே செல்லும் சட்ட வடிவம் பின்னர் தானே நொண்டியடித்துக் கொண்டு வரும். (Public Opinion marches forward; Law comes limping behind) மத்திய மாநில அரசுகள் மூடநம்பிக்கை ஒழிப்பு, மாந்திரீக மோசடி தடுப்புச் சட்டத்தை உரு வாக்கிட வேண்டும்.

அத்தகைய நிலையினை உருவாக்க பகுத்தறிவாளர்கள் ஒத்த கருத்துடைய பொது நல உணர்வாளர்கள் செயல் பட வேண்டும்.

மூடநம்பிக்கை அற்ற சமுதாயத் தினை (Society devoid of superstition) அமைக்கப் பாடுவதே நரேந்திர தபோல்கரின் நினைவுகளுக்கு செய் யப்படும் மரியாதை ஆகும்; தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோவி. கோபால் நன்றி கூறினார்.

சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், பொது நல உணர்வாளர்கள், பொது நல அமைப்பினர், பத்திரிகையாளர் என பல தரப்பட்ட மக்கள் பெருந் திரளாக வருகை தந்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

உலகப் பகுத்தறிவாளர்களுக்கான தலைமையகம் பெரியார் இயக்கமே!

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தபோல்கரின் மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பிய பகுத்தறிவாளர்கள்

சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி - பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நாட்டின் பிற மாநிலங்களிலிருந்து, வெளிநாடுகளில் வாழும், மற்றும் அயல் நாட்டைச் சார்ந்த பகுத்தறிவாளர்கள் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தனர். நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்கு வலுசேர்த்தனர்.

இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் நிறுவன தலைவர் சனல் எடமருகு (தற்சமயம் வெளிநாட்டில் உள்ளார்), தேசிய அறிவுக்குழுவின் (National Knowledge Commission) மேனாள் துணைத்தலைவர் சீரிய அறிவியலாளர் பேராசிரியர் பி.பார்கவா (அய்தராபாத்), பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றியத் தின் (International Humanist and Ethical Union) செயல் இயக்குநர் பாபு கோகினேனி, பின்லாந்து (அய்ரோப்பா) நாட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பெக்கா எலோ (தற்சமயம் கொரியா நாட்டுப் பயணத்தில்), டாக்டர் இன்னையா (அமெரிக்கா) விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் டாக்டர் கோபுராஜீ சமரம் (நாத்தி அறிஞர் கோராவின் புதல்வர்), தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நல்.இராம சந்திரன் மற்றும் ஒடிசா மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் சுதன்சு சேகர் கென்டூஜ்கர் (புவனேஸ்வரம்) ஆகியோர் செய்தி அனுப்பியிருந்தனர்.

கடந்த காலங்களில் பகுத்தறிவாளர் பலருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை - பெரியார் திடலில் நடத்தப்பட்டுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்புப் போராட்ட நாயகர் பிரேமானந்த், அமெரிக்க நாத்திகர் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், அமெரிக்க நாட்டின் மனிதநேய பேராசிரியர் டாக்டர் பால் கர்ட்ஸ் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் பொது உடமைச் சிந்தனை அறிஞர் எம்.என்.ராய் அவர்களின் 125-ஆவது பிறந்த நாள், பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் 200-ஆவது பிறந்த நாள் என உலக பகுத்தறிவாளர் களின் நினைவு நாளை அந்த அறிஞர் பெருமக்களின் பெருமைகளை - பங்களிப்பினை போற்றிப் பேணுவதால் பெரியார் இயக்கம் - உலக பகுத்தறிவாளர்களின் தலைமையகம் எனும் பல தரப்பட்ட பகுத்தறிவுச் சான்றோர்களின் கூற்றினை மெய்ப்படுத்துவதாக தபோல்கரின் நினைவேந்தல் நடந்தது.

தமிழ் ஓவியா said...

அதற்கான திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்கள் கருத்தினை உருவாக்கி விட்டால், அரசியல் ஆட்சியாளர்கள் மூட நம்பிக்கை ஒழிப்பினை சட்ட வடிவில் ஆக்கிடத்தான் வேண்டும். மக்கள் கருத்து திரட்டப்பட்டால் அது முன்னே செல்லும் சட்ட வடிவம் பின்னர் தானே நொண்டியடித்துக் கொண்டு வரும். (Public Opinion marches forward; Law comes limping behind) மத்திய மாநில அரசுகள் மூடநம்பிக்கை ஒழிப்பு, மாந்திரீக மோசடி தடுப்புச் சட்டத்தை உரு வாக்கிட வேண்டும்.

அத்தகைய நிலையினை உருவாக்க பகுத்தறிவாளர்கள் ஒத்த கருத்துடைய பொது நல உணர்வாளர்கள் செயல் பட வேண்டும்.

மூடநம்பிக்கை அற்ற சமுதாயத் தினை (Society devoid of superstition) அமைக்கப் பாடுவதே நரேந்திர தபோல்கரின் நினைவுகளுக்கு செய் யப்படும் மரியாதை ஆகும்; தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோவி. கோபால் நன்றி கூறினார்.

சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், பொது நல உணர்வாளர்கள், பொது நல அமைப்பினர், பத்திரிகையாளர் என பல தரப்பட்ட மக்கள் பெருந் திரளாக வருகை தந்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

உலகப் பகுத்தறிவாளர்களுக்கான தலைமையகம் பெரியார் இயக்கமே!

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தபோல்கரின் மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பிய பகுத்தறிவாளர்கள்

சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி - பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நாட்டின் பிற மாநிலங்களிலிருந்து, வெளிநாடுகளில் வாழும், மற்றும் அயல் நாட்டைச் சார்ந்த பகுத்தறிவாளர்கள் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தனர். நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்கு வலுசேர்த்தனர்.

இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் நிறுவன தலைவர் சனல் எடமருகு (தற்சமயம் வெளிநாட்டில் உள்ளார்), தேசிய அறிவுக்குழுவின் (National Knowledge Commission) மேனாள் துணைத்தலைவர் சீரிய அறிவியலாளர் பேராசிரியர் பி.பார்கவா (அய்தராபாத்), பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றியத் தின் (International Humanist and Ethical Union) செயல் இயக்குநர் பாபு கோகினேனி, பின்லாந்து (அய்ரோப்பா) நாட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பெக்கா எலோ (தற்சமயம் கொரியா நாட்டுப் பயணத்தில்), டாக்டர் இன்னையா (அமெரிக்கா) விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் டாக்டர் கோபுராஜீ சமரம் (நாத்தி அறிஞர் கோராவின் புதல்வர்), தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நல்.இராம சந்திரன் மற்றும் ஒடிசா மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் சுதன்சு சேகர் கென்டூஜ்கர் (புவனேஸ்வரம்) ஆகியோர் செய்தி அனுப்பியிருந்தனர்.

கடந்த காலங்களில் பகுத்தறிவாளர் பலருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை - பெரியார் திடலில் நடத்தப்பட்டுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்புப் போராட்ட நாயகர் பிரேமானந்த், அமெரிக்க நாத்திகர் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், அமெரிக்க நாட்டின் மனிதநேய பேராசிரியர் டாக்டர் பால் கர்ட்ஸ் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் பொது உடமைச் சிந்தனை அறிஞர் எம்.என்.ராய் அவர்களின் 125-ஆவது பிறந்த நாள், பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் 200-ஆவது பிறந்த நாள் என உலக பகுத்தறிவாளர் களின் நினைவு நாளை அந்த அறிஞர் பெருமக்களின் பெருமைகளை - பங்களிப்பினை போற்றிப் பேணுவதால் பெரியார் இயக்கம் - உலக பகுத்தறிவாளர்களின் தலைமையகம் எனும் பல தரப்பட்ட பகுத்தறிவுச் சான்றோர்களின் கூற்றினை மெய்ப்படுத்துவதாக தபோல்கரின் நினைவேந்தல் நடந்தது.

தமிழ் ஓவியா said...


தமிழ்ப் பதிப்பின் தலைமகன்


ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் முதன் முதலாக இந்திய மொழிகளிலேயே அச்சேறிற்று என்பது வரலாறு. அந்நூல் 1557 _ இல் கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது. அந்நூலின் பெயர் தம்பிரான் வணக்கம். (Doctrina Christam) என்பது. இது, பதினாறு பக்கங்கள் மட்டும் கொண்ட சமய வினா விடை அமைப்பையுடையது. போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்த இந்நூற்செய்தியைத் தமிழில் மொழி பெயர்த்தவர் ஹென்றி குவிஸ் என்னும் பாதிரியாராவார். தமிழ் நூல்களை அச்சுவயப்படுத்தும் பணியில் முன்நின்ற வரலாற்றுப் பெருமகனாக ஆறுமுக நாவலர் அவர்களே நமக்குத் தெரிகின்றார். கிறித்தவச் சமயத்தைப் பரப்ப கிறித்தவக் குருமார்கள் கையாண்ட அச்சு முயற்சியே ஆறுமுக நாவலர் அவர்கட்குச் சைவம் பரப்ப வழிகாட்டியாய் இருந்தது. இன்றைய உலகம் உற்று நோக்கும் தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் அவர்களை ஒட்டியே, தாமோதரர் வாழ்வும் பல்வேறு ஒற்றுமைகளுடன் தொடர்ந்தது.

தாமோதரர் கல்வியும், பணியும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.9.1832 _ ஆம் நாளில் வைரவநாதர் _ பெருந்தேவி ஆகியோர்க்கு மகனாய்ப் பிறந்தார் தாமோதரர். இவருடன் உடன்பிறந்தவர் எழுவர். இவருள் மூத்தவர் சி.வை.தா. சி.வை.தாவின் தந்தையார் ஓர் ஆசிரியர். ஆதலால் தொடக்கக் கல்வி யும் அறநூல்கள், நிகண்டு நூல்கள் போன்றனவும் தந்தை வழியே இவருக்குக் கிடைத்தன. மேனிலைக் கல்வியைத் தந்தவர் சுன்னாகம் முத்துக்குமர நாவலர்.

தமிழ்க் கல்வியில் வேரூன்றிய தாமோதரர், 12 _ ஆம் அகவையின் 1844 தொடங்கி 1852 முடிய எட்டாண்டுகள் தெல்லிப்பழை மிசன் பாடசாலை, வட்டுக் கோட் டைக் கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலக் கல்வியைக் கற்றார்.

1852 _ இல் கல்வி முடித்த கையோடு 20 ஆம் அகவையில் கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தாமோதரர் ஆசிரியரானார். 1856 இல் ஆறுமுக நாவலரின் ஆங்கில ஆசிரியரும் கிறித்தவ மறைநூல் விவிலியத்தை ஆறுமுக நாவலர் கொண்டு தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வித்து வெளியிட்டவரும் ஆகிய பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய தினவர்த்த மானிக்கு ஆசிரியர் பொறுப்பேற்றார்.

சென்னை வாழ்வில் 1856 _ இல் புகுந்த தாமோதரர் 1857 _ இல் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழாசிரியப் பொறுப் பேற்றார். அத்துடன் அதே ஆண்டு அங்குத் தொடங்கிய பி.ஏ. பட்ட வகுப்பில் சேர்ந்து தேர்வெழுதிச் சென்னைப் பல்லைக் கழகத்தின் முதல் பட்ட தாரியானார்.

கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்குச் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பணிமாற்றம் பெற்றுச் சென்ற தாமோதரர், தம் 39 _ ஆம் அகவையில் 1871 _ இல் பி.எல். பட்டமும் பெற்றார். 50 ஆம் அக வையில் 1882 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சி.வை.தா. 1884 _ இல், தாம் பெற்றிருந்த சட்டக்கல்வியின் சிறப்பால் புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவரானார். அப்பணி யிலிருந்து 1890 _ இல் ஓய்வு பெற்றார். 1895 _ இல் பெருமக்கள் பலரின் வாழ்த்துக்களுடன் இராவ் பகதூர் பட்டம் பெற்றார். 1901 சனவரி 1 ஆம் நாள் புரசைவாக்கத்தில் தம் 68 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
பதிப்பித்த நூல்களும் அருமைப்பாடும்

சி.வை.தாமோதரரின் பலநிலை தமிழ்ப்பணிகளில் முதன்மையானது அவரின் தமிழ்நூல் பதிப்புப் பணியே. அவரால் பதிப்பித்து வெளியிடப் பட்ட நூல்களும் ஆண்டுகளும் பின்வருமாறு அமைகின்றன.

1. நீதிநெறி விளக்கம் _ 1854, 2. தொல். சேனாவரையம் _ 1868, 3. வீர சோழியம் பெருந்தேவனார் உரை யுடன் _ 1881, 4. இறையனார் களவி யல் _ 1883, 5. தணிகைப்புராணம் _ 1883, 6. தொல். பொருள். நச் _ 1885, 7. கலித்தொகை _ 1887, 8. இலக்கண விளக்கம் _ 1889, 9. சூளாமணி _ 1889, 10. தொல். எழுத்து _ 1891, 11. தொல். சொல்(நச்) _ 1892.

அச்சில் வெளிப்போந்த நூல்களாக இவை அமைய, தாமோ தரர் 1898 _ இல் அக நானூற்றை வெளியிடும் நிலைக்கு அணியப் படுத்தி வைத்திருந்த உண்மையையும் அவர் வரலாற்றுவழி அறிகிறோம்.

தமிழ் ஓவியா said...

சி.வை.தா வெளியிட்ட 11 நூல்களில் தொல்.எழுத்து மகாலிங்க அய்யர் பதிப்புத் தவிர, பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்.

தமிழ்ப் பற்றே பதிப்புப் பணிக்கு அடிப்படை சி.வை.தாமோதரர்க்கு உயிரு ணர்வில் கலந்து நிறைந்திருந்த தமிழ்ப்பற்றே தமிழ்நூல் பதிப்பு முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந் திருக்கின்றது. ஓலைச் சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களெல்லாம் அழிந்தொழிவதைக் கண்டு அவற்றை அச்சுவடிவில் கொண்டுவர அந் நாளில் யாரும் பெருமுயற்சி செய்யவில்லை. அரிய பணியானதால் எளிதாக யாரும் அப்பணியை மேற்கொண்டு விட முடியவில்லை. யாரும் இப்பணியைச் செய்ய முன் வரவில்லை. ஆயினும் இப்பணி மிக இன்றியமையாததோர் மூலப்பெரும் பணி என்பதை நம் தாமோதரர் அறிந்தபடியால், தாமே அப்பணியைச் செய்து பார்ப்பதென முடிவு கொண்டார்.

தமிழ் ஓவியா said...

நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதி களின் கதியையும் அவை அடைந் திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமையொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது

பல பெரும் வித்துவான்கள் இந்நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடு மென்றுதம் முயற்சியைக் கை விட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால், பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும் பட்டச் சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கை யிடுவது பேரவசியமாயிற்று.

மாசு மறுவற்ற தமிழ்ப்பற்றாளர் சி.வை.தா.வின் இக்கூற்றுக்களைத் தமிழின உரிமை மீட்புப் பெருந் தலைவர் தந்தை பெரியார் உரைத்த ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை உலகத்தி லுள்ள மற்ற உயர்ந்த சமுதாயம் போல் ஆக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளேன். இதைச் செய்து முடிப்பதற்கு எனக்கு யோக்கியத்தை இருக்கிறதோ இல்லையோ வேறுயாரும் இதைச் செய்ய முன் வராத காரணத்தால் நானே இப்பொறுப்பை மேற் கொண்டுள்ளேன். இதுவொன்றே எனக்குப் போதுமான தகுதியென்று நான் கருதுகின்றேன். என்ற கருத் துரையுடன் பெரிதும் ஒப்பு நோக்க வேண்டும்.

சி.வை.தாமோதரனார் காலத்தில் தொல்காப்பியம் பொருளதிகாரம் பதிப்பிக்க முயன்றோர் இரண்டொரு பிரதிகளே தேடிப் பணி தொடங்கிக் கைவிட்ட நிலையில் நம் தாமோதரர் தேடித் தொகுத்து வைத்திருந்த சுவடிகள் பன்னிரண்டாகும். அவை, திருநெல்வேலிப் படி, 2. மதுரைப் படி, 2. தஞ்சைப் படி, 3. சென்னைப் பட்டினப் படி, 3. யாழ்ப்பாணப் படி, 2. என்பனவாகும். இப்படிகளெல் லாம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டன என்பதைச் சி.வை.தா. தொல். பொருள் பதிப்புரையில் குறித்துள்ளார்.

திரவிய லாபத்தை எவ்வாற்றானும் கருதி முயன்றிலேன். கை நஷ்டம் வராதிருப்ப தொன்றே எனக்குப் போதும். இது வரையிற் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டான நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறா திருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரீட்சையிற் தேறி ஆங் காங்கு பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தம் சுய பாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை, என்றெண்ணு கின்றேன் என்று மனம் வெதும்பி நைகிறார் தமிழ்த்தாமோதரர்.

திருட்டு வேலை செய்கின்ற ஒருவன் தன்னைப் போலவே எல் லோரும் திருட்டு வேலை செய்யட் டும் என்று சொல்ல மாட்டான். ஆனால் நற்பணிகள் செய்யும் ஒருவனோ தான் செய்யும் பணிகளில் இன்பமும் பிறர்க்கும் இம் மன் பதைக்கும் நலமும் விளைவது கண்டு எல்லோரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என உலகோர்க்கு அழைப்பு விடுப்பான். மனத்தள விலும் எல்லோரும் இப்பணியைச் செய்தால் உலகம் எப்படியிருக்கும் என்று கருதிக்கொண்டே கரைவான். நம் தாமோதரர் செய்த பணியோ பொதுப்பணி. உலகத் தமிழ் மக் களுக்கு மூலமாகிய அடிப்படைப் பணி. அத்தகைய அரும்பணியை அதன் முழுத்தன்மையும் கருதிச் செய்யத் தொடங்கிச் செய்தவர். ஆதலால், தாம் செய்யும் பணியைத் தமிழ மன்பதையும் செய்யவேண்டு மெனத் துடியாய்த் துடித்து வேண்டு கோள் விடுக்கின்றார்.

தமிழ் ஓவியா said...

நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதி களின் கதியையும் அவை அடைந் திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமையொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது

பல பெரும் வித்துவான்கள் இந்நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடு மென்றுதம் முயற்சியைக் கை விட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால், பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும் பட்டச் சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கை யிடுவது பேரவசியமாயிற்று.

மாசு மறுவற்ற தமிழ்ப்பற்றாளர் சி.வை.தா.வின் இக்கூற்றுக்களைத் தமிழின உரிமை மீட்புப் பெருந் தலைவர் தந்தை பெரியார் உரைத்த ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை உலகத்தி லுள்ள மற்ற உயர்ந்த சமுதாயம் போல் ஆக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளேன். இதைச் செய்து முடிப்பதற்கு எனக்கு யோக்கியத்தை இருக்கிறதோ இல்லையோ வேறுயாரும் இதைச் செய்ய முன் வராத காரணத்தால் நானே இப்பொறுப்பை மேற் கொண்டுள்ளேன். இதுவொன்றே எனக்குப் போதுமான தகுதியென்று நான் கருதுகின்றேன். என்ற கருத் துரையுடன் பெரிதும் ஒப்பு நோக்க வேண்டும்.

சி.வை.தாமோதரனார் காலத்தில் தொல்காப்பியம் பொருளதிகாரம் பதிப்பிக்க முயன்றோர் இரண்டொரு பிரதிகளே தேடிப் பணி தொடங்கிக் கைவிட்ட நிலையில் நம் தாமோதரர் தேடித் தொகுத்து வைத்திருந்த சுவடிகள் பன்னிரண்டாகும். அவை, திருநெல்வேலிப் படி, 2. மதுரைப் படி, 2. தஞ்சைப் படி, 3. சென்னைப் பட்டினப் படி, 3. யாழ்ப்பாணப் படி, 2. என்பனவாகும். இப்படிகளெல் லாம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டன என்பதைச் சி.வை.தா. தொல். பொருள் பதிப்புரையில் குறித்துள்ளார்.

திரவிய லாபத்தை எவ்வாற்றானும் கருதி முயன்றிலேன். கை நஷ்டம் வராதிருப்ப தொன்றே எனக்குப் போதும். இது வரையிற் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டான நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறா திருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரீட்சையிற் தேறி ஆங் காங்கு பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தம் சுய பாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை, என்றெண்ணு கின்றேன் என்று மனம் வெதும்பி நைகிறார் தமிழ்த்தாமோதரர்.

திருட்டு வேலை செய்கின்ற ஒருவன் தன்னைப் போலவே எல் லோரும் திருட்டு வேலை செய்யட் டும் என்று சொல்ல மாட்டான். ஆனால் நற்பணிகள் செய்யும் ஒருவனோ தான் செய்யும் பணிகளில் இன்பமும் பிறர்க்கும் இம் மன் பதைக்கும் நலமும் விளைவது கண்டு எல்லோரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என உலகோர்க்கு அழைப்பு விடுப்பான். மனத்தள விலும் எல்லோரும் இப்பணியைச் செய்தால் உலகம் எப்படியிருக்கும் என்று கருதிக்கொண்டே கரைவான். நம் தாமோதரர் செய்த பணியோ பொதுப்பணி. உலகத் தமிழ் மக் களுக்கு மூலமாகிய அடிப்படைப் பணி. அத்தகைய அரும்பணியை அதன் முழுத்தன்மையும் கருதிச் செய்யத் தொடங்கிச் செய்தவர். ஆதலால், தாம் செய்யும் பணியைத் தமிழ மன்பதையும் செய்யவேண்டு மெனத் துடியாய்த் துடித்து வேண்டு கோள் விடுக்கின்றார்.

தமிழ் ஓவியா said...


சாதிக் கொடுமைகளும், தீண்டாமையும்



இந்தியாவிற்கு விடுதலை வேண்டு மானால், சுயராஜ்யம் வேண்டுமானால் வெள்ளைக்காரர் சுய நல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக் கமும் அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும் தீண்டாமை ஒழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், முத லாளித் தன்மை ஒழிய வேண்டும். இவ்வளவும் நடந்தபிறகுதான் வெள் ளைக்காரர் கொடுங்கோன்மை நம்மால் ஒழிக்கப்பட வேண்டும். ஒழிக்கப்படவும் முடியும் என்பது நமது முடிவு

- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

என் தந்தையார் அவர்கள் கிராமத் தில் வாழ்ந்தவர் கிராமங்களில் வியா பாரம் செய்தவர். அதனால் அக்காலத் தில் கிராம;ங்களில் சமூகத்தில் நடந்த சாதிக்கொடுமைகளையும், தீண்டாமை யையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர். அக்கால நிகழ்ச்சிகளை அடிக்கடி எங் களிடம் பகிர்ந்து கொள்வார். அது கேட் பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந் தவன். அக்காலத்தில் மேல் சாதிக் காரர்கள் வசிக்கும் தெருவில் காலில் செருப்புடன் நடக்க முடியாது கையில் செருப்பை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில் தெருக் கோடியில் உள்ள மரத்தடியில் செருப்பை விட்டுச்செல்ல வேண்டும். மேல்துண்டு போடக்கூடாது இடுப்பில் கட்டியிருக்க வேண்டும். கோயிலுக்குள் போக முடியாது. பொதுக் கிணறுகளில் குடிக்கத் தண்ணீர் எடுக்க முடியாது.

நான் 1942, 43-இல் தேனியில் குடி வந்து ஆண்டிபட்டிக்கு அருகில் உள்ள கீரபோத்தம்பட்டி, அம்மாபட்டி கிராமங்களில் மிளகாய்வத்தல் களம் போட்டிருப்பேன். மிளகாய் பழம் வாங்கி களத்தில் காயப்போட்டு வத்தல் ஆக்கி தேனி மார்க்கெட்டுக்கு விற் பனைக்காக கொண்டுவருவேன் நானும் என் தந்தையார் சண்முகவேல் நாடார் அவர்களும், மிளகாய் சீசன் நேரத்தில் கீரபோத்தம்பட்டி கிராமத்தில் தங்கி விடுவோம் என் தகப்பனார் சமையல் செய்வார். நான் மிளகாய் வாங்குவேன்.

கீரபோத்தம்பட்டி, அம்மாபட்டி கிராமங்களில் அதிகமான தேவர் சமு தாயத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்தார்க்ள அவர்களிடம் எனக்கு நல்ல பழக்கம். தெற்கே இருந்து ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் என்று எனக்கு எல்லா உதவியும் செய்வார்கள். மழைகாலத்தில் மழைவந்து விட்டால் காயும் மிளகாய் நனையாமல் இருக்க ஊர்மக்கள் ஆண், பெண் அனைவரும் ஓடிவந்து எனக்கு உதவுவார்கள்.

அந்த காலம் வெள்ளைக்காரன் காலம் ரேகை சட்டம் இருந்தது (குற்ற பரம்பரைச் சட்டம்) ரொம்ப கொடு மையான சட்டம், தேவர் சமுதாயத்தை சார்ந்த ஆண்கள் எல்லாம் சாயங்காலம் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து இரவு அங்குதான் படுக்க வேண்டும் விடிஞ்ச பிறகுதான் ஊருக்கு போகவேண்டும். ஒரு சிலர் தப்பு பண் ணுவதற்கு ஊரில் உள்ள விவசாயிகள், பெரியோர்கள் அனைவரும் நிலையத் தில் படுக்க வேண்டும். நானும் பல சமயம் இளவட்ட ஆட்களுடன் நிலையத்துக்கு படுக்க போயிடுவேன். அம்மாபட்டிக்கும் ஆண்டிபட்டிக்கும் 10 மைல் தூரமிருக்கும். நிலையத்திலி ருந்து ஊருக்கு வரும் போதே கண் ணில் பட்டதை தூக்கிட்டுவந்திடு வாங்க.

ஒரு சமயம் மிளகாய் பழ மூட் டையை தூக்கிட்டு வந்து என்கிட்டே வித்திடுவாங்க, காவலர்கள் என்னை தேடி கீரபோத்தம் பட்டிக்கு வந்திச்சு, ஊரில் இருந்த பெரிய தேவரு, என்னை டேய் கந்தசாமி நீ மரத்தின்மீது ஏறி உட்கார்ந்துக்க. காவலர்களை நாங்க பார்த்துக்கிறோம் எனச்சொல்லி காவலர்களைத் திருப்பி அனுப்பி வைச்சாங்க. காவலர் போனபிறகு மரத்தில் இருந்து இறங்கி வந்தேன்.

அதன்பிறகு ஆண்டிப்பட்டிக்கு அருகில் உள்ள தேக்கம்பட்டியில் வியாபாரம் செய்தேன். அங்கு அரிஜன மக்கள் வாழும் ஊர் அந்த ஊர் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து விளையும் சரக்குகளை நானே வாங்கிக் கொள்வேன் சரக்குகள் அனைத்தும் என்கமிசன் கடைக்குவரும். அப்ப அந்த ஊர் மக்கள் என்னை முதலாளின்னு கூப்பிட்டா.

அப்படி அழைக்க வேண் டாம் நானும் உங்களைப்போல் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்வேன். சிறுவயதில் என் னிடம் சாதிக் கொடுமை, தீண்டாமையை பற்றி ஒரு தாக்கம் இருந்தது. எனவே தேக்கம்பட்டி அரிஜன விவசாயிகளை தேனிக்கு கூட்டிவந்து என்கடையில் படுக்கச் சொல்வேன், தேனியில் அப் போது ரெங்கநாடார் கிளப் இருக்கும். அரிஜன விவசாயிகளை அங்கு கூட்டி சென்று எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட வைப்பேன்.

பல நேரங்களில் என் விட்டில் சாப் பாடு போடுவேன் என் மனைவி சுந்தரம் மாளும், அன்போடு அவர்களுக்கு சாப்பாடு போடுவா, அப்போது வீட்டில் 10, 15, பால் மாடுகள் இருக்கும் அந்த மாடுகளை தேக்கம் பட்டியில் தான் வளர்க்கவிடுவேன். மாடுகளை நல்ல முறையில் வளர்த்துக் கொடுப்பார்கள்.

யாரும் சாதி வித்தியாசம் பார்க்க கூடாது நான் சமுதாயத்தில் வளர்ந்தது எல்லா சமுதாயத்தினரின் அரவணைப் போடு தான் என தந்தையார் அடிக்கடி கூறுவார். நான் கோட்டப்பட்டி நாயக் கர் வீட்டு கஞ்சி குடித்து வளர்ந்தவன் என பெருமையோடு பேசுவார்.

(எஸ்.கே.நடராசன் எழுதிய பருத்திப்பழம் எனும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...


மோடி - வித்தை - இது புதுவிதம்!



- ஊசி மிளகாய்


குஜராத் முதல் அமைச்சர் - நரேந்திரமோடி வித்தை காட்டுவதில் அவருக்கு இணை அவர்தான்! பழைய மோடி மஸ்தான் வித்தைக் காரர்கள் எல்லாம் இந்தப் புதிய மோடி அரசிய லுக்கு வந்தபின், பின் வாங்கிவிட்டார்கள் - இவருக்கு முன் தங்கள் வித்தை எடுபடாது என்று!

திடீரென்று ஒரு புது வித்தை காட்டி இந்தியாவையே அதிரச் செய்ய எண்ணி, கிறங்கி அவர் பாவம் வழமைபோல் ஏமாந்து விட்டார்!

பிரதமர் கனவு தனக்கில்லை; எம்மக்கள் 2017 வரை எம்மை குஜராத் முதல் அமைச்ச ராகவே வாக்களித்து ஆணையிட்டுள்ளார்கள். அதிலேயே தொடருவதுதான் என் விருப்பம்; பிரத மராவதல்ல என்று ஒரு போடு போட்டுள்ளார்!

பிரதமராக இவரை முன்மொழிந்த முக்கிய காரணி - ஆர்.எஸ்.எஸ். தலைமை தானே!

அத்வானிகளும், ஜஸ்வந்த் சிங்குகளும், யஷ்வந்த் சின்காக்களும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தபோது, இதை மோடி சொல்லியிருக் கலாமே! அப்போது சொல்லாத மோடி இப்போது கூறுகிறாரே! எந்த போதி மரத்தடியில் அமர்ந்து புதிய ஞானோதயம் பெற்றார்?

பா.ஜ.க., கட்சிக்குள் ஆயிரம் கோஷ்டிகள் - இதற்கு மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ்.தான்!

அந்த ரிங் மாஸ்டர் வந்து அங்கே தனித் தனியே வரும் கூச்சல்களை அடக்க, சாட்டை எடுத்து வருவார் தீர்ப்பார்.

இப்படி மோடி மனமாரச் சொல்கிறார் என்று நினைக்க நாட்டில் அவ்வளவுப் பைத்தியக் காரர்களா நிறைந்துள்ளார்கள்?

உடனே இங்குள்ள சோக்களும், குரு மூர்த்திகள் போன்ற பார்ப்பனர்களும் மேலும் மோடியைச் சிலாகித்து எழுதிக் குவிப்பார்கள்.

இணையதளத்தைப் பயன்படுத்தி இமேஜ் பில்டப் நடத்தி, பலரும் பாடுபட்டு ஓநாய்க்கு பசுத்தோல் போர்த்தி, கோமாதா எங்கள் குலமாதா என்று காட்டிட ஒற்றைக் காலில் நின்று தவமோதவம் செய்கின்றனர்!

மோடியைக் களம் இறக்கினால் அதைவிட மற்ற முற்போக்காளர்கள் - மதச் சார்பற்றவர்கள் வருவதற்கு அதைவிட நல்ல வாய்ப்பு வேறு இருக்கவே முடியாது.

*மலிவான விளம்பர ஸ்டண்ட் அடிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? சீப் (Cheap) பப்ளிசிட்டி உத்திகள் ஏராளம் வைத் துள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு வேடங்களான இந்து முன்னணி போன்றவை களாகும்.

திண்டுக்கல்லில் யாரோ ஒருவர் இந்து முன்னணி (ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்)யைச் சார்ந்தவர் வீட்டில் குண்டு வீசப்பட்டதாக அவரது மனைவி, குடும்பத்தவர்களை, விட்டு, பேட்டி கொடுக்கச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் (பிரவீன் என்ற ஒருவர் என்று நினைக்கிறோம்).

அதுபற்றி அங்குள்ள காவல் துறையின் கண்காணிப்பாளர் தலைமையில், (அந்த காவல் துறை கண்காணிப்பாளர் மிகவும் திறமையாக எப்பக்கமும் சாயாத நேர்மையாளர்) உடனே துப்பு துலக்கப்பட்டு உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்! சிறுபான்மையினர்மீது பழி போட்டது அம்பலமாகியது.

உண்மைக் குற்றவாளி யார் தெரியுமா? இந்த நபரே - இப்படி ஒரு ஜோடனை; குண்டு எறிந்து, தனக்குத்தானே விளம்பரம் தேடிக் கொண்டார்! கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசியில் இந்து முன்னணியினர், தங்கள் ஆள் ஒருவரை பலிகடாவாக்கி பழியை சிறுபான்மைச் சமூக இஸ்லாமியர்மீது போட்டு பிறகு காவல்துறை இந் தக் கொடுமையை அம்பலப்படுத்திடவில்லையா?

இதுமாதிரி மோடிகளின் ஒப்பனை பிரமாதம்-

திருச்சியே திக்குமுக்காடப் போகிறதாம்!

பிரதமராகும் முன்பே மோடியின் பேச்சின் காரம், கடுமையான பதப்பிரயோகங்களின் தன்மை அவரைத் தலைமைப் பண்புக்குரியவராக காட்டுகிறதா?

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது முந்தைய பழமொழி.

மோடி மோகம் அவ்வளவு நாள்கூடத் தாங்காது; தாங்கவே தாங்காது!

இது, போகப் போகப் புரியும்! - இந்த மோடியின் வாசனையும் தெரியும்.

தமிழ் ஓவியா said...


வகுப்புரிமை


வகுப்புரிமைக்காகப் பாடுபட்டு மானத்தைக் காப்பாற்றக் கொல் லப்படும் செய்கைக்கும் நாம் தயாராக இருக்கவேண்டும். அப்போது நமது உரிமை காக்கப் படுவதுடன், நல் வாழ்வும் பெற முடியும். மானம் காத்தவருமாவோம். - (விடுதலை, 13.8.1965)

தமிழ் ஓவியா said...


போலி என்கவுண்டர் புகழ் மோடி முதல்வராகத் தொடரலாமா?


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நேற்று குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெற்றுள்ளது.

பரிசுத்த யோவான் வேடம் போட்டு, நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்படும், பிரதமருக்கான வேட்பாளர் என்ற பொய்க்கால் குதிரைமீது, சவாரி செய்யும் இந்த ஜிகினா மனிதரின் உள்ளீடு என்ன?

ஏற்கெனவே, வண்டி வண்டியாக அவரைப்பற்றிய சமூக விரோதத் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன; என்றாலும் சிறைச்சாலையிலிருந்து தன் பதவியை பதவி விலகல் செய்தும், குஜராத் முதல் அமைச்சர், முந்தைய உள்துறை அமைச்சர், மற்றும் குஜராத் மாநில அரசுமீதும் குற்றப் பத்திரிகையைப் படிக்கும் வகையில் 20 பக்கங்களைக் கொண்ட, அறிக்கை யினை வெளியிட்டுள்ளார் குஜராத் மாநில அரசின் டி.அய்.ஜி.யான டி.என். வன்சரா.

இவர்மீது போலி என்கவுண்டரில் கொலை செய்த வழக்குப் பதிவாகி, அதன் அடிப்படையில்தான் 2007ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் சபர்மதி சிறையில் இருந்து வருகிறார்.

சொராபுதீன் ஷேக் மற்றும் இஸ்ரத் ஜஹான் ஜாவேத் ஷேக், அம்ஜத் அலிராணா, ஜீஷன் ஜோஹாய் ஆகியோர் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளில் டி.அய்.ஜி. வன்சாரா சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

சொரபுதீன் ஷேக்கைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த வழக்கில் உச்சநீதிமன்றம், மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசுக்குச், சரியாகச் சூடு கொடுத்தது. வழக்கை சி.பி.அய். விசாரித்தது; அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் உரையாடல் அடங்கிய குறுந்தகடு (சி.டி.) மத்தியப் புலனாய்வுத் துறையிடம் வழங்கப்பட வில்லை. அதற்காக உச்சநீதிமன்றம் மோடி அரசைக் கடுமையாகச் சாடியது.

இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மோடி அரசால் போலி என் கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர் என்பது மிகப் பெரிய சோகமாகும்.

குஜராத் காவல்துறையை நம்ப முடியாது; என்று உயர்நீதிமன்றம் வெகு வெளிப்படையாகவே கூறி, வழக்குகளை சி.பி.அய்.யிடம் ஒப்படைத்தது. மோடி எந்த அளவுக்கு யோக்கியமாக ஆட்சி செய்தார்? என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே போது மானது.

2004 ஜூன் 15ஆம் தேதி போலி என்கவுண்டரில் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப் பட்டனர். இவர்கள்மீது குஜராத் அரசு வைத்த குற்றச்சாற்று என்ன தெரியுமா?

இவர்கள் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்போடு தொடர்பு கொண்டவர்கள்; குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் என்று குற்றஞ் சாட்டப் பட்டுக் கொலை செய்யப்பட்டனர் காவல்துறையால்.

இதனை எதிர்த்து இஸ்ரத் ஜஹானின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். மத்தியப் புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் முன் வைத்தனர். ஆனால், குஜராத் அரசோ கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. ஆனாலும் உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய் வுக் குழுவை நியமித்தது. 2011 நவம்பர் 18 அன்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர்களும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறியது. அதில் இஸ்ரத் ஜஹான் ஜூன் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே கொல்லப்பட்டு, அவரது பிணம், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பிணத்தின்மீது குண்டுகளைப் பாய்ச்சி, குஜராத் காவல்துறை நாடகம் ஆடியது, என்றெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது.

ஹிட்லர் ஆட்சியில்கூட, நடந்திராத இத்தகைய கொடூரங்கள், இந்த மோடி மஸ்தான் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது.

இந்தப் போலி என்கவுண்டர்களை நடத்திய காவல்துறை அதிகாரி டி.ஜி. வன்சாராதான் இப் பொழுது உண்மையான குட்டுகளை உடைத்துக் காட்டியுள்ளார்.

இந்தப் போலி என்கவுண்டர் கொலைகளை நடத்தச் சொன்னது எல்லாம், அவற்றிற்கு வழி காட்டியதெல்லாம் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சராகவிருந்த அமித்ஷாவும்தான் என்று அறிக்கையில் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தார்.

பாவம்! மோடியைத் தூக்கிப் பிடித்த, பார்ப்பன ஊடகங்கள் எல்லாம் இஞ்சி தின்ற குரங்குகளாகக் காணப்படுகின்றன.
தன் அரசியல் எதிரிகளைப் போலி என்கவுண்டர் மூலம் கொன்ற ஒருவர் முதல் அமைச்சராகத் தொடரலாமா என்ற கேள்வியோடு குஜராத்தில் முழு அடைப்பு நடைபெற்றது நேற்று .

இதற்குப் பிறகும், மோடிதான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்றால் அதைவிட வெட்கக் கேடு, வேறு எதுவாக இருக்க முடியும்?

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள்


ஆசிரியருக்குக் கடிதம்

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள்

சமூக நீதி காவலர் மற்றும் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வணக்கம்!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இடஒதுக்கீடு தொடர்பாக விடுதலை நாளிதழில் கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள்.

கடந்த 18.8.2013 அன்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி தங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்வித் தாள் தயாரிக்க கல்வி வல்லுநர் குழுவை தமிழக அரசு மற்றும் ஆசிரி யர் தேர்வு வாரியம் அமைத்துள்ளது. விடைகளில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் வல்லுநர் குழுவே பொறுப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

மதிப் பெண் குறைப்பு இல்லை என தமிழக அரசு கூறிய நிலையில் கேள்வித்தாள் தரம் உடையதாகவும் மற்றும் விடைகள் மாற்றம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தேர்வு நடத்த, தகுதித் தேர்வின் பிறகு விடைகள் வெளியிடப்பட்டு இதில் ஏதாவது ஆட்சேபங்கள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை சந்தித்து சரிசெய்து கொள்ளலாம் என ஆசிரி யர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன் பின் ஒரு கீ வெளியிடப்பட்டது. அப்புறம் எதற்கு கல்வி வல்லுநர் குழு. தேர்வு எழுதிய ஆசிரியர் அலுவலகத்தை சந்தித்தாலே முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சென்ற முறையும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படு கிறது. அதே சமயம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் விடைகளில் குளறு படியில் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிபதி நாகமுத்து தீர்ப்பிற்குப்பின் பின்னர் விடைகள் சரிசெய்யப்பட்டு வெளியிடப் பட்டன.

அதே சமயம் 2012 தகுதித் தேர்வு விடைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது சென்ற ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இவர் களது குளறுபடியால் 88/89 மதிப்பெண் எடுத்த ஆசிரியர்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழக அரசு எதுவும் கவலைப்படவில்லை.

18.8.2013-இல் இந்த ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கீ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது முடிவான கீ இல்லை 3.9.2013 அன்று வெளியிடப்படும். கீ முடிவானது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது (நன்றி: தினமணி)

தமிழகத்தில் விடைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கொடுக்கப் பட்டு ஆசிரியர் தேர்வு கேலிக்கூத் தாக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்வித் தாள் முன்கூட்டியே வெளி யான செய்தியும் விசாரணையும் நடந்து வருவது ஊடகங்கள் மூலம் தெரிய வரும் நிலையிலும் வழக்குரைஞர் பழனிமுத்து பொதுநல வழக்கு செப்டம்பர் 17 அன்று நீதிமன்றத்தில் வரும் நிலையில் மற்றும் உயர்நீதி மன்றத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கபட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறிய நிலையில் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக செயல்பட்டு பணிவழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியான விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையெனில் மறு தேர்வு நடத்தபட வேண்டும். விடை சம்பந்தமாக தேர்வு நடத்தும் அலுவ லகத்தை தேர்வு எழுதியவர்களையே அணுகச் சொல்வது எந்த தேர்வு வாரியத்திலும் இல்லாத நடைமுறை மற்றும் அந்த அலுவலகத்தின் தேர்வு குளறுபடி யானது என்பதை சுட்டிக் காட்டுகிறது. வல்லுநர் குழு செய்யும் குளறுபடிக்கு தமிழக கல்வியியல் பல்கலைக்கழகம் தகுதித் தேர்வு நடத்தினால் நல்லது.

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு


சரவணா இராஜேந்திரன்

தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும், சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன. அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம் கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார் சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது. இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர். தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும் எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.

சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும், அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)

கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும் தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர். ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்),

- இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்? (வே.கன்னுப்பிள்ளை) அய்.ஏ.எஸ்.

தமிழ் ஓவியா said...


நாத்திகக் கருத்தெலாம் நடைமுறைப்படுத்தினார் நரேந்திர தபோல்கர்!

மராத்தா மாநிலம் சதாரா மாவட்டம்

மாமேதை குலக்கொழு ந்தாம்
மனிதரின் நேயராம் மனதிலே தூயராம்
நரேந்திர தபோல்கரே!

நாத்திகக் கருத்தெல்லாம் நடைமுறைப் படுத்தினார்
நரேந்திர தபோல்கரே!
நல்லதோர் மருத்துவர்! மடமையை வெறுத்தவர்!
நரேந்திர தபோல்கரே!

அஞ்சாத உண்மைகள் நெஞ்சிலே கொண்டவர்
அறியாமைக்கு எதிரானவர்!
அகலாத கொள்கையே செயலாக வாழ்ந்தவர்
நரேந்திர தபோல்கரே!

சிரித்திடும் முகத்தவர்! பழித்திடும் பகைவரின்
சினத்தையும் முரித்தவர்தாம்!
சிந்தனை வளர்த்தவர் நொந்தவர்க் குதவினார்
நரேந்திர தபோல்கரே!

சிங்காபூர் கோயிலில் பெண்களுக்கு உரிமையாம்
சீர்திருத்தம் புரிந்தார்!
செய்தியாளர்கூட்டம் திறமையாய் நடத்தினார்
நரேந்திர தபோல்கரே!

மராத்தியில் மூடநம்பிக்கைஒழிப் பென்னுமோர்
மக்களமைப் பாக்கியவர்!
மாந்தரில் தாழ்வுயர் வற்றிடத் துணிந்தவர்
நரேந்திர தபோல்கரே!

பொதுநீர் எடுத்திடத் தாழ்ந்தவர் துணையாய்ப்
புத்தெழுச்சி ஊட்டினாரே!
பொல்லார் எதிர்ப்புகள் எல்லாம் ஒழித்தவர்
நரேந்திர தபோல்கரே!

பில்லிசூனியப்பேயின் பெருங்கேட்டை எதிர்த்தவர்!
பிதற்றியே திரிந்திடும்
பெருவேடச் சாமியார் பிழைகண்டு கொதித்தவர்
நரேந்திர தபோல்கரே!

சட்டமன்றத்திலொரு சட்டவரை வதுதாக்கல்
தனைச்செய்தார்! மடமையொடு
சார்ந்துள்ள சாத்திரப் பொய்ம்மை தகர்த்தவர்
நரேந்திர தபோல்கரே!

ஆகஸ்டு இருபதில் அதிகாலை வேளையில்
அகவை அவர்க் கெழுபத்தொன்றே
அன்று நடைப் பயிற்சியில் சென்று கொண்டிருந்தவர்
நரேந்திர தபோல்கரே!

ஒங்காரேஷ் வரர்கோயில் தீங்கான தே அருகில்
உடனிருவர் சுட்டபோதில்
ஓய்வுற்றது இதயமே! சாய்வுற்றார் உடலுமே!
நரேந்திர தபோல்கரே!

அரசாணை முதல்வரால் அதிவிரைவில் நடந்தது!
அவர்தொண்டு நிறைவானதே!
அறிவிலார் மடமைகள் அகன்றிடச் செய்தவர்
நரேந்திர தபோல்கரே!

மத்திய அரசுடன் மாநில அரசுகள்
மடமைகள் ஒழிக்க என
மானமிகு வீரமணி வேண்டினார்! தூண்டினார்!
மக்களும் விழிப்படையவே!

பொய்ம்மைகள் அகன்றிடப் புதுமைகள் மலர்ந்திடப்
புத்துணர்வு ஊட்டினாரே!
புரையோடி வளர்ந்திட்ட அறியாமை ஒழிந்திடப்
புதுச்சட்டம் இயற்ற வேண்டும்!

- பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

தமிழ் ஓவியா said...


தண்ணீரின் பயன்கள்



மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, உடல் சூடு இவைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பிறகு, உறக்கத்திற்கு முன்பு, உறக்கத்தில் எழும்போது, உறங்கி எழுந்தவுடன் என எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் கடுமையான பசியின்போது மட்டும் நீர் பருகுவது தவறு.

தமிழ் ஓவியா said...


தனியார் நிறுவனப் பணிகளை உதறும் பெண்கள்


தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், திருமணம், குழந்தைகள் பிறப்பு, பெற்றோரை கவனித்தல் போன்ற காரணங்களுக்காக இடையிலேயே வேலையை விட்டு நின்றுவிடுகின்றனர். கர்ப்பக்கால மருத்துவயத்துக்காக 26 முதல் 38 வயது வரையிலான பெண்களே அதிக அளவில் வேலையை விட்டு நீங்குகின்றனர்.

இந்தியாவில் 15 லட்சம் பெண்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். சுமார் 2 முதல் 10 வருடங்கள் இவ்வாறு நீங்கியுள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் வேலைக்குத் திரும்பிப்போக முடிகிறதாம். இந்திய தொழில் நிறுவனங்கள் இவ்வாறு ஓய்வு எடுத்துக்கொண்ட பெண்களை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள பயப்படு கின்றன. இப்பெண்கள் ஆர்வமாக வேலை செய்யமாட்டார்கள் என்று நினைக்கின்றனராம்.

ஆனால் IBM, Accenture, Cognizant, Genpact, Kotak Group, Hul, Fidelity, Dell, Microsoft, Amazon, Vodafore, HSBC, ABB, Brittania நிறுவனங்கள், பணிக்குத் திரும்பி வர விரும்பும் பெண்களுக்கு வாய்ப் பளிக்க உள்ளதாகக் கூறுகின்றனவாம்.

நிறுவனங்களில் அதிக அளவில் பெண்கள் பணியில் சேர்க்கப்பட வேண் டும் என்று அய்.நா.விரும்புகிறது.

ஆனால் பெண்கள் தலைமையில் வேலை செய்ய ஆண்கள் தயங்குகின்றனர். பணிக்காலத் தில் பலவாரங்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பது, குழந்தைகளையும், கணவனையும் விட்டுவிட்டு இரவில் வேலை செய்வது போன்ற சிக்கல்களும் பெண்களுக்கு இருக்கின்றன என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த Diversity Management நிறுவனத்தின் நேர்முக ஆலோ சனையின் தலைமை நிர்வாகி நிர்மலா மேனன். AVTAR Career Creators என்ற நிறுவனம் 4 ஆயிரம் பெண்களுக்கு இரண்டாம் முறையாக வேலை வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது என்கிறார் அதன் நிறுவனத் தலைவர் சௌந்தர்ய ராஜேஷ்.

- மக்கள் உரிமை செப். 14- 20

தமிழ் ஓவியா said...


இரு அரிய நிகழ்ச்சிகள் பூரிப்பும், புளகாங்கிதமும்!



கடந்த இரண்டு நாள்கள் அளவிலா மகிழ்ச்சி ஆம்! பூரிப்பும், புளகாங்கிதமும் அடைந்த நாள்கள்!

தாயகத்திலும் அமெரிக்காவிலும் நடந்த நிகழ்வுகள் தான் மகிழ்ச்சிக்குக் காரணம்.

தமிழ்நாட்டில் எத்தனை இடங் களில் பெரியார் இளந்தலைமுறையின ரிடம் உலா வந்தார்? அதில் எத்தனை பெண் குழந்தைகள்? பெரியார் பற்றிய போட்டிக்கு இவ்வளவு ஆர்வமா? இத்தனை இடங்களில் போட்டிகள் நடந்தனவா? இது என்ன வெறும் பரிசிற்காகவா? நாம் ஒன்றும் வாரி வழங்கவில்லையே! மற்றவர்களைப் போல் நமக்கு விளம்பரம் அளிக்கும் ஊடகங்களும் இல்லையே? குழந்தை களே உங்கள் ஆர்வத்திற்கு மேலும் மேலும் ஊக்கமளிப்போம் என்று கூற வைத்து விட்டீர்களே!வாழ்க பெரியார்! என்ற பூரிப்பு நெஞ்சை நிறைவு செய்கின்றதே! உங்களுக்கு நன்றி! நன்றி!! அடுத்து அமெரிக்கா வில் வாசிங்டன் அருகே நடந்த புறநானூற்று மாநாடு. ஆம்! புரட்சிக் கவிஞர் சொன்ன நூலைப் படி! சங்கத் தமிழ் நூலைப் படி! என்று சொன்னதை மேற்கோள் காட்டிப் பேசினார்கள்.
அங்கும் தந்தை பெரி யாரைப் பற்றிப் பேசினார்கள். ஓர் ஆறு வயதுச் சிறுமி புறநானூற்றைப் பற்றி அய்ந்து மணித்துளி அழகாகப் பேசி, பத்துப் பாடல்களையும் மனப் பாடம் செய்து சிறு தவறும் இல்லாமல் உண்ர்ச்சியுடனும், கண் உருட்டியும், கையசைத் தும், பாடியபோது மெய் மறந்து, வாய் பிளந்து அரங்கம் கேட்டது. மற்றொரு 8 வயது நமது இயக்கக் குடும்பத்துச் சிறுமி 15 பாடல்கள் போல் பாடிப் பரிசைத் தட்டிச் சென்றார். இன்னும் பல சிறுவர்களும் சிறுமியர்களும் பாடிய விதம், வார்த்தைகளையும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து அறிஞர் பெருமக்கள் மருதநாயகம், முருகரத் தினம், அறிவு நம்பி கவிஞர் அறிவுமதி போன்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா தமிழ்த்துறைத் தலைவர் வாசு ரெங்க நாதன், மற்றும் அமெரிக்காவில் மற்ற துறைகளில் வல்லுநர்களாக இருந்தா லும் தங்கள் தமிழார்வத்தால் ஆராய்ச் சிக் கட்டுரைகள் படித்த முனைவர்கள் ராஜ் முத்தரசன், கல்வெட்டு ஆராய்ச் சியின் உண்மை நிலை பற்றியும், புற நானூற்றுக் கால ஜாதி என்பது பற்றிச் செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் உண்மைகள், பிறப்பால் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் பற்றி சங்கரபாண்டி அவர்களும் விளக்கினர். பெண்பால் புலவர்கள் பாடியிருந்தாலும் பெண் ணடிமைச் சிந்தனைகள் இருந்தது பற்றி யும், எப்படிப் பலநூற்றாண்டுகளுக்குப் பின்னும் தந்தை பெரியார் தொண்டின் வழி முன்னேறிய பெண்கள் நாம், புதிய நானூறு படைக்க வேண்டும் என்று மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களும், தூத்துக்குடியில் சிறந்த குடும்பத்தில் பிறந்து இப்போது ஹவாய் தீவில் வாழ்ந்துவரும் வைதேகி சங்க இலக்கியம் என்ற பெரும் புதையல் பற்றி தாமாகவே அறிந்து அவையனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவர் வாழும் ஹவாய் தீவில் சங்க இலக்கியம் என்பது கற் றோர் அனைவரும் தெரிந்து வியப்படைகின்றார்கள் என் பதைச் சொல்லிப் பாராட்டும் பெற்றார்கள். தமிழ்க் குடும்பத்து மேகலா ராமமூர்த்தி அரசியல் சிந்தனைகள் புறநானூற்றில் எப்படிச் சிறப்பாக வெளிப்படுத் தப்பட்டுள்ளன என்பதை அழுத்தத்துடன் உரைத்தார். கவிஞர் அறிவுமதி உணர்ச்சிப் பிழம்பாய் புதிய புறநானூறு படைத்த ஈழ உடன்பிறப்புக்களை உயிருடன் படைத்தார்.

இவை அனைத்திற்கும் காரணமான முனைவர் பிரபாகரன், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவையும், அவருடன் சேர்ந்து மாதமிருமுறை ஒவ்வொரு பாடலாகப் படித்து ஆய்வு நடத்திய அத்தனை பேருக்கும் மற்றும் உதவியளித்த அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கும் நன்றி தெரிவித்துப் புறநானூறு பற்றிய, தம் ஆய்வுகளைப் படைத்தார். நூலையும் வெளியிட்டார். அந்தக் காலத்து மதம், வீரம், சமுதாயம், கல்வி, நீர், நில வளம், எல்லாம் பற்றிச் சொல்லி, ஒற்றுமையில்லாமல் அழிந் தார்கள் என்பதை எடுத்துரைத்தார். புறநானூற்று வீரம் உண்மை என்பதை ஈழத்தில் கண்டோம். தந்தை பெரியார் மூலம் தான் மனித நேயம், பெண் ணுரிமை தமிழினத்திற்கு வந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

புறநானூற்றுப் பாடல்கள் சிறுமியர் யாழினி பொற்செல்வன், பாரதி மலர்ச் செல்வன் இசைத்தனர். பாரதி பாடிய இசைத் தட்டு வெளியிடப்பட்டது. வீரவரலாறு நாட்டிய நாடகமாகப் படைக்கப்பட்டது. கவிமாமணி இலந்தை ராமசாமியார், உ.வே.சா புறநானூறு திரட்டியதையும், உவமை கள் கையாளப் பட்டுள்ள சிறப்புக் களையும் பாராட்டிப் பேசினார். .

புதுக்கோட்டைத் தமிழர் மேரிலாந்து மாநிலத்தின் துணை மாநிலச் செயலர் மேதகு நடராசன், மேரிலாந்து மாநில ஆளுநரின் வாழ்த்தையும் செப்டம்பர் முதல்வாரம் மேரிலாந்து மாநிலத்தில் புறநானூற்று வாரம் என்ற அறிவிப்பையும் வாழ்த்தி வழங்கினார்.

-- சோமசுந்தரம் இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


ஜஸ்டிஸ் திருநாள்



பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையை ஜஸ்டிஸ் 10 ஆவது வருஷ நாளாகக் கொண்டாடும்படி தலைவர் பனகல் ராஜா அவர்கள் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அந்நாளைக் கொண்டாட வேண்டிய விதம் என்னவென்றால் ஜஸ்டிஸ், திராவிடன், குடிஅரசு பத்திரிகைகளுக்குச் சந்தாதாரர்களை சேர்ப்பதுதான். வாலிபர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் அன்றைய தினம் ஏதாவது ஒரு புது சந்தாதாரரையாவது சேர்த்து விட்டுத்தான் சாப்பிடுவதாக விரதமெடுத்துக் கொள்ளவேண்டும். ஜஸ்டிஸ் பத்திரிகையில், ராய்ட்டர் அசோசியேட் பிரஸ் பிரீ பிரஸ் ஆகிய தந்தி நிருபங்கள் மாதம் 1-க்கு 1000 ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் வாங்கி சென்ற மாதம் முதல் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. திராவிடனுக்கும் அசோசியேட் பிரஸ் நிருபங்கள் வாங்கி பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பிப்ரவரி 26 ஆம் தேதியை இவற்றிற்கு சந்தா சேர்க்கும் தினமாக கொண்டாட வேணுமாய் பார்ப்பனரல்லாத வாலிபர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

- குடிஅரசு தலையங்கம், 20.02.1927

தமிழ் ஓவியா said...

வேண்டுகோள்

தஞ்சை ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப் பிற்கிரையாக்கியதாக திராவிடன் பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆட்சேபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு, மனித சமுகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங் களையும், தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதங்கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்லவென்றே நினைக்கிறோம்.

யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடம் கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மை இருந்தால் அக்கூட்டத் திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும், பேசவும் அனுமதி கிடைக்கா விட்டால் கண்ணியமாயிருந்து மறுநாள் கூட்டம் கூட்டி இதைப்பற்றி பேசலாம், கண்டிக்கலாம், சமாதானம் சொல்லலாம். இதுதான் யோக்கியர்களுக்கழகு. அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கலவரம் செய்வது என்பது கலவரம் செய்பவர்களையும், அவர்களது கொள்கை களையும் பலக்குறைவாக்கி விடுகிறதோடு, பேசுபவர் களுக்கு யோக்கியதையை உண்டாக்கி விடுகிறது. நாம் போன இடங்களிலும், இரண்டொரு இடங்களில் இம்மாதிரி சிலர் முயற்சித்தும் நாம் சவுகரியப்பட்ட இடங்களில் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து சமாதானம் சொன்னதில் கேட்க வந்தவர்கள் நமது கொள்கையை ஏற்றுக்கொள்ள நேர்ந்ததோடு, நமது கொள்கைகளுக்கு முன்னிலும் அதிகமான பொதுஜன ஆதரவு கிடைத்ததேயல்லாமல் நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

கேள்விக்கு சமாதானம் சொல்ல முடியாதவர்கள் வெளியில் போய்ப் பேசுவது என்பது கேவலமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது கொள்கைகளும், தீர்மானங்களும் நம் மனதிற்கு உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம். நமக்கே உறுதி இல்லாமல் மற்றோரை ஏமாற்றுவதானால் மாத்திரம் பதில் சொல்லுவது கஷ்டம்தான். ஆகையால், மற்றவர்களைப்பற்றி கவலை இல்லாமல் நமது கட்சியைப் பொறுத்தவரையிலாவது ஒழுங்காய் நடந்து கொள்ள வேண்டும். யார் வந்தாலும் தாராளமாய்ப் பேச இடம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளு கிறோம்.

- குடிஅரசு செய்தி, 10.04.1927

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவதை நிறுத்திடவேண்டும்! தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்!


சென்னை, செப். 7-இலங்கைக்குப் போர்க் கப்பல் வழங்கும் முயற்சியினை தொடக்கத்திலேயே நிறுத்திடவும், இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்த்திட இந்திய அரசு முன்வரவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கேள்வி - பதில் வருமாறு:

கேள்வி: கடல் எல்லையைப் பாதுகாப்பதற்காக இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை இந்தியா வழங்குவதாக இன்று செய்தி வெளி வந்திருக்கிறதே?

கலைஞர்: ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதைத்தான் இது நினைவூட்டுகிறது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய நேரத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து என்னுடைய உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், சிங்கள அரசினால் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் துன்புறுத்தப்பட்ட நேரத்தில் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தற்போது இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது என்ற செய்தியின் மூலம், இந்திய அரசு இலங்கை அரசுக்குத்தான் உதவி செய்கிறதே தவிர, இலங்கை யிலே வாழும் தமிழர்களுக்கோ மற்றும் இந்திய மீனவர்களுக்கோ அனு சரணையாக இல்லை என்று சிலர் தொடர்ந்து எடுத்துவைத்து வரும் குற்றச்சாட்டு உறுதியாகி விடுகிறது. கடல் எல்லையைப் பாதுகாக்க இந்தியா இலங்கைக்கு வழங்கிடும் இரண்டு போர்க்கப்பல்களிலே இருந்து கொண்டு, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவார்கள். இந்திய அரசின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று தினத்தந்தி நாளிதழே வர்ணித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தக் கப்பல்கள் இலங் கைக்கு வழங்கப்படும் என்று தகவல் கூறப்பட்ட போதிலும், இப்படிப்பட்ட முயற்சி யினை தொடக்கத்திலேயே நிறுத்திடவும், இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்த்திடவும் இந்திய அரசு முன்வர வேண்டு மென்று வலி யுறுத்துகிறோம்.

- நன்றி: முரசொலி, 7.9.2013

ananthako said...

மனசாட்சி என்று ஒன்று உண்டு.கிறிஸ்தவமதப் பிரச்சரம்போல் இந்து மதப்ப்ரசாரம் இன்றுவரை நடந்தது இல்லை.பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களில் அறுபடைவீடு வரும் பக்தர்களில் மனித சக்திக்கு அப்பால் ஒரு சக்தி உள்ளது. பார்ப்பனர்களைத் தாக்கும் உங்களுக்கு பாரதியின் பாடல்கள் சீர்திருத்தம் தெரியாது.1967 திராவிடக் கட்சிகள் ஆட்சிக்குப்பின் கோயில்கள் எண்ணிக்கை அதிகம்.பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்.பெரியார் தலைவர். பிறந்தநாள் அன்று மாலை.இன்று கருணாநிதியின் குடும்பத்தார் கோயிலுக்கு படை எடுப்பு. பார்ப்பான் என்றுமே பிரச்சாரம் செய்ததில்லை.அவன் திறமை எ. திறமையுள்ள அம்பேத்கர் பாராட்டப்பட்டார்.67 ஆண்டுகள் சுதந்திரம் பெற்று.உங்கள் பார்ப்பன எதிர்ப்பு என்று நேரத்தை வீணாக்காமல் அவர்களுக்குமேல் வளர்ந்திருக்கலாம். குடுமியாருப்பது,ஆலயங்கள் முன் கடவுள் இல்ல என்று எழுதுவது. ஆனால் ஆலயங்களில் கூட்டம். அப்பொழுது ஆலயங்கள் செல்வோர் எல்லாம் மடையர்கள்.கடவுள் மறுப்புப் பேசிவிட்டு மறுநாள் காலை ஆலயம் செல்வோர் அதிகம். தீர நோய் ,விபத்து மரணம். விதி விளையாடும்.நீங்கள் மற்ற மதத்தைத் திட்டுங்கள்.தில் வேண்டும்.என்ன ஆனாலும் மனசாட்சி.சிந்தியுங்கள். அறிவைப்புகட்டுங்கள். வெறுப்பை வளர்க்காதீர்கள்.அனைவரும் மடிவது திண்ணம்.உங்களைப்போல் ஒரு ஜாதியை வெறுப்பாக பாம்பாக பார்ப்பது ....

ananthako said...

மனசாட்சி என்று ஒன்று உண்டு.கிறிஸ்தவமதப் பிரச்சரம்போல் இந்து மதப்ப்ரசாரம் இன்றுவரை நடந்தது இல்லை.பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களில் அறுபடைவீடு வரும் பக்தர்களில் மனித சக்திக்கு அப்பால் ஒரு சக்தி உள்ளது. பார்ப்பனர்களைத் தாக்கும் உங்களுக்கு பாரதியின் பாடல்கள் சீர்திருத்தம் தெரியாது.1967 திராவிடக் கட்சிகள் ஆட்சிக்குப்பின் கோயில்கள் எண்ணிக்கை அதிகம்.பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்.பெரியார் தலைவர். பிறந்தநாள் அன்று மாலை.இன்று கருணாநிதியின் குடும்பத்தார் கோயிலுக்கு படை எடுப்பு. பார்ப்பான் என்றுமே பிரச்சாரம் செய்ததில்லை.அவன் திறமை எ. திறமையுள்ள அம்பேத்கர் பாராட்டப்பட்டார்.67 ஆண்டுகள் சுதந்திரம் பெற்று.உங்கள் பார்ப்பன எதிர்ப்பு என்று நேரத்தை வீணாக்காமல் அவர்களுக்குமேல் வளர்ந்திருக்கலாம். குடுமியாருப்பது,ஆலயங்கள் முன் கடவுள் இல்ல என்று எழுதுவது. ஆனால் ஆலயங்களில் கூட்டம். அப்பொழுது ஆலயங்கள் செல்வோர் எல்லாம் மடையர்கள்.கடவுள் மறுப்புப் பேசிவிட்டு மறுநாள் காலை ஆலயம் செல்வோர் அதிகம். தீர நோய் ,விபத்து மரணம். விதி விளையாடும்.நீங்கள் மற்ற மதத்தைத் திட்டுங்கள்.தில் வேண்டும்.என்ன ஆனாலும் மனசாட்சி.சிந்தியுங்கள். அறிவைப்புகட்டுங்கள். வெறுப்பை வளர்க்காதீர்கள்.அனைவரும் மடிவது திண்ணம்.உங்களைப்போல் ஒரு ஜாதியை வெறுப்பாக பாம்பாக பார்ப்பது ....

தமிழ் ஓவியா said...


இரயிலைத் தவற விட்டார் பெரியார்

தந்தை பெரியார் அவர்களுடன் நான் என்னுடைய பதினெட்டாவது வயதிலிருந்து தொடர்பு கொண்டு தொண்டாற்றியவன் என்றால் அது மிகையாகாது. என்றாலும் காலத்தை கண் இமைபோல் காப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர். சீமானாக வாழ்ந்தவர் என்றாலும் அவர்கள் பொதுத் தொண்டிற்கு வந்தபின்பு, மிகவும் சிக்கனமாகவும், எளிய வாழ்வு வாழ்ந்தும் காட்டியவர் ஆவார்கள் ஒரு சமயம் 4-0 ஆண்டுகட்கு முன்பு நானும் தந்தை பெரியாரவர்களும், திருக்க்யிலூர், திருவாளர் மா.நா. குமாரசாமிப் பிள்ளை அவர்களின் இறுதி முடிவுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அதன்பின், அங்கிருந்து திருக்கோயிலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காலை 4 மணிக்கு புறப்படுகிற வண்டிக்காக ஸ்டேஷனில் தங்கினோம். நாங்கள் இருவரும் தூங்கி விட்டோம். வண்டி வந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று விட்டது; விடிந்து காலை 4 மணிக்கு எழுந்தோம்.

வண்டி சென்று விட்டது தெரிந்ததும் அய்யா அவர்கள் என்னை பார்த்து காளியப்பா என்னுடைய வாழ்நாளில் ரயில் வண்டியை தவற விட்டது இதுதான் முதல் தடவை இதுதான் கடைசித் தடவையாகவும் இருக்கும் என்றார். அடுத்த ரயில் வண்டியில் புறப்பட்டு விருத்தாசலம் வழியாக சேலம் சென்றோம்; அங்கு பொது மக்கள் கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்டு, ஈரோடு பயணம் ஆனோம். இந்த நிகழ்ச்சியை ஒரு பாடமாக பெரியார் தன் வாழ் நாளெல்லாம் கொண்டிருந்தார். அடிக்கடி அய்யா இதை சொல்லு வார்கள். கடிகாரம் பார்த்து ரயிலுக்கு போகக் கூடாது. ரயில் புறப்பட ஒரு மணி நேரத்திற்கு முன்பு போக வேண் டும் என்பார்கள். அந்த அறிவு மொழியை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

-_ நாகை என்.பி. காளியப்பன்

தமிழ் ஓவியா said...


புத்துலகக் குழந்தையின் பெயர் என்ன?


அய்யா
வாழ்ந்தபோதும்
ஜீவ நதி நீ;
மறைந்த நிலையிலும்
ஜீவித்திருக்கும் நீ;
சித்தாந்தத்தின்
இரகசியம் என்ன?
இன எதிரிகளின்
அணுக்களில் எல்லாம்
நித்தம், நித்தம்
சூடு போடுகிறாயே!
எப்படி? எப்படி?
எதிரும், புதிருமாய்
இருக்கும் இரு முனைகள்கூட,
தவிர்க்க முடியாத
அழுத்தத்தின் பிதுக்கலால்
உமது தொலைநோக்கு
முத்திரை அடிகளுக்கு
முத்தம் பொழியும்
முகாமை என்ன?
காரணம் தெரிகிறது
உன் தத்துவ மூலிகை
காயங்களுக்கு
மருந்தாகிறது
தவித்த வாய்களுக்கு
தண்ணீர்ப் பந்தல்!
அறியாமை இருட்டில்
அகப்படுபவர்களுக்கு - உன்
அறிவுச் சுடர்
உதவும் கரம்!
நம்பிக்கை இழந்த
நரம்புகளுக்கு - தன்
நம்பிக்கை என்னும்
தாது புஷ்டி!
உன்னை ஒதுக்க
முடியவில்லை
ஒதுக்கினால், அவர்கள்
ஒதுக்கப்படுவார்கள்
எந்தப் பிரச்சினையையும்
எடை போட,
ஈரோட்டுத் தராசைத்
தேடுகிறார்கள்
பெரியார் சொல்லி இருக்கிறார்
என்று சொன்னால்போதும்
ஆவேசப் புயல்களும்
அடங்கி விடும்
அப்படி ஒரு அங்குசம்
நீங்கள்!
அப்படி ஒரு
சித்தாந்தம் நீங்கள்!
அமெரிக்கா செல்லவில்லை
நீங்கள்
ஆனாலும் அங்கு
அய்யா விழா!
ஆப்பிரிக்காவிலும்
பெரியார் ஃபவுண்டேஷனாம்
ஆஸ்திரேலியாவிலும்கூட
உங்கள் பேரர்கள்
பெரியார் என்னும்
உயிர் மெய்யெழுத்துக்களை
போதிக்கிறார்கள்
மதம் ரொம்பவே
படுத்துகிறது!
நதிகள் எல்லாம்
மனித ரத்தத்தால்
நிரம்பி, நுரைதள்ளி,
ஓடுகின்றன.
போதுமடா சாமி!
மதத்திற்கு விடை கொடு!
மதமற்ற புத்துலகை
மனம் தேடுகிறது
அங்கு அன்பு நதி உண்டு
அறிவு ஒளி உண்டு
பேதச் சரக்குகள்
விற்பனைக்குத் தடை!
எல்லார்க்கும்
எல்லாம்
சண்டை ஏது?
சழக்கு ஏது?
பொறாமை ஏது?
புகைச்சல் எது?
தொண்டறம் எனும்
தூயமணம் எங்கும்
எல்லார்முகத்திலும்
புன்னகைப் பூக்கள்!
சமநிறை சமன்முறை
சமத்துவ மூச்சுக் காற்று!
அந்த உலகக் குழந்தைக்கு
அய்யா உங்கள் பெயர்தான்
பெரியார் ஈ.வெ.ரா.!

-கவிஞர்
கலி.பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


அப்பாடி ஈ.வெ.ரா. தொலைந்தார்!


நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் உடல் நலம் இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக் கிறார்கள் என்பதை அறிந்தவுடன் மனிதத் தன்மையற்ற பேடிகள் சிலரும் சிவநேசர்கள் என்றும் தேசியவாதிகள் என்றும் சைவப் பெரியார் என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக் கும் அயோக்கியர்கள் சிலரும் ஈ.வெ.ராமசாமி இப்படியே எப்பொழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு வேறு உலகம் போய்விட வேண்டும். போய்விட் டால் நாடு நன்மை அடை யும் என்று முட்டாள் தனமாகவும் சிறிதும் உலக ஞானமில்லாமலும் பத்திரிகைகளில் எழுதினார்கள். தங்கள் சாமிகளை வேண்டிக் கொண்டார்கள். பிறகு ஈ.வெ.ராமசாமி அய்ரோப்பா சுற்றுப் பிரயாணம் போயிருக்கின்றதை அறிந்ததும் அப்பேடிகள் ஆனந்தக் கூத்தாடி னார்கள். நமது இயக்கம் செத்துப் போய் விடும். தங்கள் வயிற்றுப் பிழைப்பு நாடகத்தை யாதொரு விக்கினமும் இல்லாமல் நடத்திப் பொது ஜனங்களை ஏமாற்றலாமென்று கும்மாளம் போட்டார்கள். இதனால் இத்தகைய பேட்டிகளின் அடிவயிற்றில் நெருப்பு எரியும்படி நமது மகாநாடு சென்னையில் வெற்றிகரமாக பொது ஜனங்களின் தாராளமான ஆதரவுடன் நடைபெற்றது. இதி லிருந்தாவது நமது எதிரிகளாகிய வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் நமது இயக்கம் பொது ஜன இயக்கம் என்பதையும் தலைவர்கள் சுயநலத் திற்கான இயக்கம் அல்லவென்பதையும் உணர்ந்து வாயடங்கு வார்களென்று நினைக்கிறோம்.

(ஈ.வெ.ரா. அவர்கள் அய்ரோப்பா சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது சென்னை மகாநாடு சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்

2009 டிசம்பர் 11 அன்று தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதித்து அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு மாபெரும் தலைவரின் சிலையை வைப்பதால் மட்டுமே பள்ளிக் குழந்தை கள் தாங்களாகவே நாத்திகர்களாக மாறி விடுவார்கள் என்று மனுதாரர் எவ்வாறு கூறமுடியும்? என்று தனது வியப்பைத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு

அதற்கு மாறாக, பெரியாரின் வாழ்க்கை மற்றும் அவரது சேவை பற்றி பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இதனால், தனித்தன்மை வாய்ந்த ஒரு தலைவரின் கோட்பாட்டை, தத்துவத்தை நன்கு புரிந்து கொள்வது, அரசமைப்பு சட்ட 51-கி பிரிவில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்டு ஆராயும் உணர்வு, சீர்திருத்தம் ஆகிய வற்றை வளர்க்கும் அடிப்படைக் கடமையை ஆற்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று நீதியரசர் கூறினார்.

2008 செப்டம்பர் 4 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்த பிறகுதான் சிலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் உள்ளூர் பா.ஜ.கட்சித் தலைவர்கள்தான் பெரியார் சிலை அமைப்பதை எதிர்த்தனர். ஆர்.எஸ்.எஸ். தோற்றுநர் ஹெட்கேவரின் சிலையை அங்கே வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத் தினார்கள். அதனால், மனுதாரர் இந்த மனுவை ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால்தான் தாக்கல் செய்துள்ளார் என்பதும், இந்தக் கட்சியினர் நேரடியாக வழக்காட முன் வராமல், சட்டப்படி செல்லத் தகாதது மட்டுமல்லாமல், இந்த நீதிமன்றத்தால் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்பட இயலாத காரணங்களைக் கூற மனுதாரர் போன்றவர்களை நிர்ப்பந்தித்து உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கோ, பள்ளி மாணவர் களுக்கோ எந்த இடையூறும் இன்றி, வெண்கலச் சிலை ஒன்றை நிறுவி, அதனை பராமரிக்க ஒரு தனியார் அமைப்புக்கு அனுமதி அளித்து இந்த அரசாணையை பிறப்பித்ததன் மூலம் அரசு எந்த தவறையும் சட்டத் திற்குப் புறம்பாகச் செய்து விடவில்லை.

உண்மையைக் கூறுவதானால், சமூக அடக்குமுறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதிலும் போரிட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு அரசு பெரிய மரியாதை செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பெரியாரின் போதனைகள் பற்றி மனுதாரர் தனது மனுவில் தெரிவித்தி ருப்பவையே, தமிழ் சமூகத்தைப் பல வழிகளிலும் மறு மலர்ச்சி பெறச் செய்வதில் ஒரு மாபெரும் தலைவர் ஆற்றிய பெரும் பங்கினை அறியாதவர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன என்று நீதியரசர் கே. சந்துரு கூறினார்.

(காவேரிப்பட்டினம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் பெரியார் சிலை நிறுவுவது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு)

தமிழ் ஓவியா said...


புரியாத புதிர்


பிள்ளையாருக்கு வடநாட்டில் இரண்டு மனைவிகள்!

தென்னாட்டில் கல்யாணம் ஆக வில்லை! என்கிறது ஆரியம்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

எப்படி என்று கேட்டால்?

ஆத்திகர்களிடம் இருந்து அது அப்படித்தான் என்று பதில். ஆத்திக அன்பர்களே!

ஒருவன் வடநாட்டில் இரு திருமணம் அல்ல.

ஒரு திருமணம் செய்து கொண்டு வந்து,

தென்னாட்டிலும் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் பெண்ணையோ, உங்களுக்குத் தெரிந்த பெண்ணையோ திருமணம் செய்து கொடுப்பீர்களா?

- ம. சீனிவாசன், பிள்ளையார் தோப்பு, இலுப்பூர்

தமிழ் ஓவியா said...


எரிதழலாய்ப் பெரியார் வந்தார்



- பாவலர் பெரு. முல்லையரசு

பாராண்ட தமிழ்மறத்தை வீழ்த்து தற்குப்
படைகொண்டு பகைமுறிக்க இயலா தென்றே
போராட வக்கற்ற பேடி யர்கள்
பொய்விரித்து மெய்விரித்துக் கடைவி ரித்தார்!
யாராண்டால் நமக்கென்ன என்றி ருந்த
ஏமாளித் தமிழர்க்குள் சண்டை மூட்டி
போராட்டக் களத்தினிலே குளிரும் காய்ந்தார்
போக்கற்ற பேதையராய் மகிழ்ந்தார் நெஞ்சம்!

ஆண்டவனின் பெயராலே ஏய்த்த வர்கள்
அஞ்சாமல் அறச்செயல்கள் பலவ கற்றி
ஆண்டிட்ட தமிழ்மரபை அடிமை கொள்ள
அன்றாடம் நிகழ்த்திவரும் நச்சு வேலை
மாண்டிட்டு மண்மூடிப் போதல் வேண்டி
மறத்தமிழர் இனவெழுச்சி கூட்டி இங்கே
மூண்டெழுந்த எரிதழலாய்ப் பெரியார் வந்தார்
முழங்கிட்டார் தன்மானம் எழுச்சி பொங்க!

ஆர்த்தெழுந்த பெரியாரின் எழுச்சி யாலே
அணிதிரண்டார் தன்மானத் தமிழ ரெல்லாம்
ஈர்த்திட்ட பெரியாரின் கொள்கை யிங்கே
எத்தர்களை முனைமழுங்க வைத்த தய்யா!
போர்ப்பரணி பாடிட்ட பெரியார் பின்னே
பைந்தமிழர் படைகிளம்பிப் புயலாய் மாறி
பார்வியக்கப் பகையொடுங்க முரசு கொட்டிப்
பாய்ந்ததுவே பகுத்தறிவு இயக்கம் இங்கே!

தமிழ் ஓவியா said...


பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்!


- எஸ்.கே. கங்கா

ரசூல், வணக்கம்! உங்களுடைய பெரியார்தாசன் பற்றியக் குறிப்புகளைப் படித்தேன். பெரியார்தாசன் என்ற சமூகப் பண்பாட்டுப் போராளிக்கு உரிய மரியாதை உங்கள் அஞ்சலி வாசகங்கள். அவருடைய ஆளுமையின் பன்முகப் பரிமாணத்தை அழகாகச் சித்திரப்படுத்தியுள்ளீர்கள்.

எனினும் பெரியாரைப்பற்றிய உங்களின் ஆதங்கம் என்னைக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது இன இழிவு நீங்க இஸ்லாத்தில் இணையுங்கள் என முழக்கமிட்ட பெரியார் இறுதி வரை இஸ்லாத்தில் இணையவில்லை. ஆனால் பெரியாரின் பெயரைச் சூடிக் கொண்ட பெரியார்தாசன் இஸ்லாத்தில் இணைந்தார் என நீங்கள் ஒப்பீட்டுள்ளீர்கள். இந்த ஆதங்கத்துக்கு காலப் பொருத்தம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

இந்தியத் துணைக் கண்டத்தில் இருபதாம் நூற்றாண் டில் எந்த முன்னுதாரணமும் இல்லாத மகத்தான பேராளுமை என ஜெர்மன் பேரறிஞர் வால்டர் ரூபன் வியந்து பாராட்டிய பெரியார் இனமான சுயமரியாதைக் காரராக வாழ்ந்தவர். பகுத்தறிவுப் பகலவனாக பரிணமித்தவர். பார்ப்பனியத்துக்கு எதிராக இறுதிமூச்சு வரை வியூகம் அமைத்த பெரும் போராளி. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காத முழு நாத்திகராக வாழ்ந் தவர் இந்த பெரியார் இஸ்லாத்தைத் தழுவவில்லை என ஆதங்கப் படுவதில் வரலாற்று நியாயம் ஏதேனும் இருக்கிறதா?

ரசூல், பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்! அந்தப் பேரொளி இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு வேண்டும்!

(கவிஞர் ஹெக் ஜி. ரசூல் பெரியார்தாசன் பற்றி முகநூலில் 20.08.2013 அன்று எழுதிய குறிப்புகள் மீதான ஒரு எதிர்வினை).

தமிழ் ஓவியா said...


மதுரைக் கோவிலுக்குள் புரட்சி!



நேற்றிரவு 8 மணிமுதல் நடுராத்திரி 12 மணி வரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோயிலின் வாயிற் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பந்தோபஸ்துகளும் வைக்கப்பட்டிருந்ததினால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப்பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோயில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ஜே.என். ராமநாதன், பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனையையும் கவனியாமல் கணேசருக்குத் தாமாகவே தேங்காய் உடைத்து கற்ப்பூர ஹ--ரத்தி செய்ததாகவும், பிறகு அவர் தமது நண்பர்களுடன் ஸ்ரீ மீனாக்ஷி கோயிலுக்குச் சென்றதாகவும், பிறகு அவர்கள் ஸ்ரீ மீனாக்ஷியம்மனின் கர்ப்பக் கிரஹத்திற்குள்ளும் நுழைவார்களென்று அஞ்சி பட்டர்கள் அதன் கதவுகளை மூடிவிட்டார்கள். மேலும் ஸ்ரீமான் ராமநாதனும், அவரது நண்பர்களும் பிராமணரல்லாதார் வழக்கமாக நின்று தொழும் இடமாகிய அர்த்த மண்டபத்திற்கு வெளியே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தார்கள். அவர்கள் கோயில் அர்ச்சகர்களின் ஆட்சேபணைகளைக் கவனிக்கவில்லை. இதனால் மிகுந்த பரபரப்பேற்பட்டது. வெளியிலுள்ள பெரிய கோபுர வாயிற்கதவுகளும் உள்பட எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ராமநாதன் உள்ளிட்ட உள்ளிருந்தவர்கள் இரவு 9.30 மணி வரை வெளியே வர முடியவில்லை. நிற்க. வெளியிலிருந்தவர்கள் இரவு 12 மணிவரை உள்ளே செல்ல முடியவில்லை. போலீஸார் விசாரணை செய்தார்கள். ஸ்ரீமான் ராமநாதன் வெளியே வந்தபொழுது வெளியே கூடியிருந்த பெரும் ஜனக் கூட்டத்தினர் அவரைக்கண்டு சந்தோஷ ஆரவாரம் செய்து அவருக்கு மாலை போட்டார்கள். அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். சுதேசி ஸ்டோருக்கு அருகில் இரவு 12.30 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீமான் ராமநாதன் கோயிலுக்குள் நடந்த விஷயங்களை விளக்கி உபந்நியாசம் செய்தார். _ குடிஅரசு 6.2.1927 பக்கம் 8

தமிழ் ஓவியா said...

அடுத்த வீட்டு அகிலாண்டம்

அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக் கப்பட்டது. அவளை மணந்த வருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால் சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூர்த்தத்தை. ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார். கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.

இதைக் கண்டீர்கள் கண்ணால். எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்ற கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்த... கண்ணால் கண்டு பேசுகிறீர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!

அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர் களா? இல்லையே! வழியிலே குடியி ருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங் களின் கருத்து குருடானதைக் கூறி னாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!

- அண்ணா
(திராவிட நாடு இதழ் - 10.1.1943)