Search This Blog

30.9.13

விருத்தாசலத்தில் என்மீது திட்டமிட்ட தாக்குதல் காவல்துறையின் செயலற்ற போக்கு! - கி.வீரமணி


  • விருத்தாசலத்தில் என்மீது திட்டமிட்ட தாக்குதல் 
  • காவல்துறையின் செயலற்ற போக்கு!
  • அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயற்குழு
  • தக்கதோர் முடிவினை எடுத்து அறிவிக்கும்!
தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி!
தோழர்களே, உணர்ச்சிவயப்பட வேண்டாம்!
விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைத் தாக்கும் வண்ணம் செயல்பட்ட வன்முறைக் கும்பல்மீதும், அதற்குத் துணைபோகும் விருத்தாசலம் காவல்துறை அதிகாரிகள்மீதும் மேலதி காரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் கழகத் தலைமைச் செயற்குழு கூடி உரிய முடிவெடுக்கும் என்றும் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

விருத்தாசலத்தில் மிகவும் சிறப்பான முறையில், திராவிடர் கழக மாணவரணி மாநாட்டையும், அதனை யொட்டி கருத்தரங்கம், மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி முதலியவை 28.9.2013 அன்று மிகவும் வெற்றியுடன் நடைபெற்றன.

உள்ளூர் காவல்துறையின் போக்கு!

உள்ளூர் காவல்துறை அதிகாரிகளில் முக்கிய பொறுப்பாளரான ஒரு அதிகாரி திராவிடர் கழக நிகழ்ச்சி கள் நடைபெறுவதற்கு சட்டப்படி தரவேண்டிய அனுமதியை மறுத்தும், ஒரு இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். அதிகாரிபோல் நடந்துகொண்டார் - நேற்றுவரை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரும் திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற கட்சிகளுடன் இணைந்து நடத்திட வேண்டிய அறப்போர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க தேவையில்லாமல் இழுத்தடித்ததோடு, கடைசி நேரம் வரை அனுமதி வழங்காமலேயே இருந்ததைப் பொருட்படுத்தாது கழகத் தோழர்கள் விருத்தாசலத்தில் வெற்றிகரமாக நடத்தினர்.

ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

அதுபோலவே, இம்மாநாட்டின் ஊர்வலத்திற்கும் அனுமதி மறுத்த நிலையில், இது பல ஊர்களிலும் நடை பெறும் வழக்கமான பேரணிதான், எவ்வித இடைஞ்சலும் யாருக்கும் ஏற்படாத வண்ணம் நடத்திடுவோம் என்று மேலதிகாரிகளிடம் விளக்கி, அனுமதி பெற்றுவிட்டனர்.

முதல்நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் அனுமதி இல்லை என்று கூறினார் அந்த விருத்தாசலம் அதிகாரி.

அவரை மீறி, ஊர்வலம் -  பேரணி சிறப்பாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள், தாய்மார்கள், தோழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். ஒரு சிறு அசம்பாவிதமும் கிடையாது.
இதற்குமுன் உள்ளூரில் ஒருவரின் ஆட்சேப மனு, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். ஒரு ஜாதிய அமைப்பின் சிறு கோஷ்டியைச் சார்ந்த மனுவை வாங்கிக்கொண்டே, இதைக் காட்டி ஒரு பெரும் இயக்கத்தின் ஊர்வலத்தைத் தடை செய்வதாகக் கூறிய உள்ளூர் காவல்துறை அதி காரிகள், அனுமதியை மேல் அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி வழங்கிய பிறகு, நமது நடவடிக்கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியிருக்கவேண்டாமா?

மேடைக்கு வரும்போது தாக்குதல்

அதுமட்டுமா? நான் மேடைக்குப் புறப்பட்டு வரும்போது, இந்த காவிக்கொடிக் காலிகள் 20, 30 பேர் திரண்டு வந்தபோது, செய்தியாளர், தொலைக்காட்சி, பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் உள்பட வந்திருந்து படம் பிடித்த நிலையில், அந்தப் பாலத்தில் கூடியதை எப்படி காவல்துறை அதிகாரிகள் பார்க்காமல் இருந்தார்கள்? வேண்டுமென்றே மறைமுகமாக அவர்களுக்கு உதவு வதுபோல (They Winked at it) ஜாடை காட்டியதுபோல, ஒரு காவல்துறையினர்கூட அங்கே இல்லை என்றால், இது வெறும் அலட்சியம் அல்ல; என்னைத் தாக்கிக் கொல்ல முயன்ற காவிக் கொடிக் காலிகளுக்குத் துணை போனவர்களுக்கு உடந்தையாகவே நடந்துகொண்டுள் ளனர்.

காவல்துறை மேலதிகாரிகள் கவனத்திற்கு...!

இதை இன்று வந்துள்ள கடலூர் பதிப்பு தினத்தந்தி நாளேட்டுப் பெட்டிச் செய்தியே தெளிவாக வெளியிட் டிருக்கிறது. இதற்கான உரிய நடவடிக்கையை காவல்துறை மேல் அதிகாரிகள் அந்தக் கடமை தவறிய, காக்கி உடை காவி அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்.

சென்னையில் 7 ஆம் தேதி தலைமைச் செயற்குழு!

குறிப்பிட்ட காலத்தில் - இதை எடுக்கத் தவறினால், அடுத்து மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் குறித்து வரும் 7.10.2013 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இச்செய்தியை அறிந்தவுடன் எனக்கு நூற்றுக்கணக் கான தொலைப்பேசி அழைப்புகளும், நேரில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை மண்டல தோழர்களும் கொதித்தெழுந்து ஆவேசப்பட்ட நிலையில், வெளி மாவட்டத் தோழர்களும், பல்வேறு ஆதரவாளர்களும், இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களும் விசாரித்தனர்; சிலர் எனது பாதுகாப்புப் பற்றியும் கவலை தெரிவித்தனர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் முன்னணியினர் கண்டனம்
நேற்றிரவு கோவையில் உள்ள எனக்கு மானமிகு தலைவர் கலைஞர் அவர்களது சம்பவக் கண்டன அறிக்கையும் கிடைத்தது.

நேற்றே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் மானமிகு ஆ.இராசா ஆகியோர் தொலைப்பேசியில் விசாரித்தனர்.

இன்று (30.9.2013) காலை கன்னியாகுமரியிலிருந்து தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த கவலை, பரிவுடன் பேசினார்.

இடையறாமல் தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
பொதுவாழ்க்கையில் உள்ள பெரியார் தொண்டர் களாகிய - சுயமரியாதைக்காரர்களாகிய நமக்கு இப்படி உயிருக்குக் குறி வைக்கப்படுவது புதிதல்ல; எதிர்பார்க்கப் படவேண்டியதேயாகும்.

தாக்கப்படுதல் நமக்குப் புதிதல்ல!

என்னைப் பொறுத்தவரை இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் (மம்சாபுரம்), சென்னை வண்ணாரப்பேட்டை, சேலம் (ஆத்தூர் தம்மம்பட்டி) ஆகிய ஊர்களில் கொலை முயற்சிகள் நடந்தன.

இப்போது விருத்தாசலத்தில் நடைபெற்றது; உயிர் வெல்லமல்ல; 
லட்சியத்திற்காகக் கிடைக்கும் சாவைவிட சிறந்த பொதுவாழ்க்கைக்கான பரிசு வேறு என்ன?

அதிலும் இன எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட இனத் துரோக கூலிப்படைகளால் நடைபெற்றதை, தமிழக அரசு - காவல்துறையும் வேடிக்கைப் பார்த்தால், இந்த நிலை எல்லாத் தலைவர்களுக்கும் ஏற்படுமே! ஏற்பட்டே வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா? என்ற கேள்வியை அனைத்துத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்முன் வைக்க விரும்புகிறோம்.

தோழர்களே, உணர்ச்சிவயப்படாதீர்!

மற்றபடி கழகத் தோழர்கள் உணர்ச்சிவயப்படாமல், ஆத்திரப்படாமல், அம்புகளைப்பற்றிக் கவலைப்படாமல், மேலும் மேலும் தீவிரமான கொள்கைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் இதனை முறியடிக்க ஒரே வழி என்று கூறி அமைதி காக்கவேண்டிக் கொள்கிறேன்.

கண்டனம் தெரிவித்து விசாரித்த அத்துணைத் தலைவர்களுக்கும், எனது உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்குரிய பரிகாரத்திற்கான வழிமுறைகளை கழகத் தலைமைச் செயற்குழு காணும்; எனவே, அமைதி காத்திடுங்கள்!

என்றும் உங்கள் பணியாளன், தோழன், தொண்டன்,

கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம்.

முகாம்: கோவை  
30.9.2013 

 *********************************************************************************

தமிழர் தலைவர் மீது தாக்குதல் பல்வேறு செய்திதாளின் படபிடிப்பு
 
 ***************************************************************************


பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை வன்முறைக்குத் துணைபோவது இது முதல் முறையல்ல!

தந்தை பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள் - தொண்டர்கள்மீது தாக்குதல் நடத்துவதா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிமீது தாக்குதல்
தி.மு.க. தலைவர் கலைஞர் கடும் கண்டனம்!
சென்னை, செப். 30- விருத்தாச்சலத்தில் 28.9.2013 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது  காலிக் கும்பல் ஒன்று வன் முறைத் தாக்குதல் நடத்த எத்தனித்தது. அந்த நிகழ் வினை முன்கூட்டியே அறிந்திருந்தும், அதைத் தடுக் காமல் அந்த ரவுடிக் கும்பலுக்கு அ.தி.மு.க. அரசின் காவல் துறை துணை போயுள்ளது. இந்த அக்கிரமத்தைக் கடு மையாகக் கண்டித்து தி.மு.க.   தலைவர் கலைஞர் அவர் கள் நேற்று (29.9.2013) அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கை வருமாறு :-

28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய வாகனத்தை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருப்பதோடு;  திராவிடர் கழகக் கொடிகளைச் சாய்த்தும், சுவரொட்டிகளைக் கிழித்தும் வெறியாட்டம் நடத்தியிருக்கிறது. அச்செயல்களைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய காவல்துறையும் காலிகளுக்கு துணை போய் திராவிடர் கழகத்தினர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கல்லடிகளுக்கும் சொல் லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள் கையை கடைசி மூச்சுவரை, வன்முறை சிறிதும் கலக்காமல் பரப்பி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண் ணில், அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள்மீதும், தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இப்படிப்பட்ட வன்முறைகளுக்குத் துணை போவது இது முதல் முறை இல்லை என்றாலும், ஜனநாயகத்திலும் - கருத்துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளோர் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டியது அவர்களது கடமையாகும். -இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அவ்வறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

13 comments:

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


வன்முறையால் கழகத்தை ஒடுக்கிவிட முடியாது!


கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு விருத்தாசலத்தில் 28.9.2013 அன்று வெகுநேர்த்தியாக - எழுச்சியாக நடைபெற்றது. ஊர் எங்கும் மாநாட்டைப்பற்றிப் பேசும் அளவிற்குச் சுவர் எழுத்து விளம்பரங்களும், பதாகைகளும், ஃபிளக்சுகளும் பளிச் பளிச்சென்று ஒளிர்ந்தன! கழகக் கொடிக்காடாகக் காட்சியளித்தது.

முற்பகலில் மிகச் சிறப்பான அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொருவரும் தத்தம் தலைப்புக்கேற்ப கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மக்கள் மன்றமே நிரம்பி வழிந்தது. மாணவர் கழக மாநாடு என்பதற்குப் பொருத்தமாக ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டிருந்தனர்.

தமிழர் தலைவரின் உரை அனைவரையும் ஈர்த்தது. எந்த அளவுக்கு அந்த உரை அமைந்தது? அவர் பேச்சு மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கைகளில் வண்ண வண்ணமாகக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றிய மூட நம்பிக்கை, நாள் கணக்கில் கட்டியிருப்பதால் அழுக்குகள் சேர்வது, கிருமிகள் சேர்வது உள்பட அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொன்னதுதான் தாமதம் - இருபால் மாணவர்கள் பலரும் மேடைக்கு வந்து தாங்களாகவே கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தனர் - அதாவது கைமேல் பலன் கிடைத்தது!

விருத்தாசலம் மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி - பொதுமக்கள் மத்தியில் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய அலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே கூறவேண்டும்.

20 ஆண்டுகளுக்குமுன் இதே விருத்தாசலத்தில் நடத்தப்பட்ட திராவிடர் கழக வட்டார மாநாட்டையொட்டிக் கூட பேரணி நடத்தப்படவில்லை. அந்த வகையில் மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டிய - பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பேரணி அவ்வூர் மக்களை அதிசயிக்க வைத்துவிட்டது.

கழகத் தோழர்களின் கட்டுப்பாடான அணிவகுப்பைப் பார்த்து, காவல்துறையினரே வியந்தனர் என்றே கூறவேண்டும்.

திறந்தவெளி மாநாடு வானொலிதிடலில் வீதி நாடகங்களோடு தொடங்கப்பட்டது. அந்த வானொலித் திடலில் - அதற்குமுன் அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில்லை என்று கூறுகிற அளவுக்குப் பொதுமக்கள் கடல்! பெரும்பாலும் இளைஞர்களைக் காண முடிந்தது.

இவ்வளவு சிறப்பாக எழுச்சியாக திராவிடர் மாணவர் கழக மாநாடு நடைபெற்றதைக் கண்டு பொறுக்க முடியாத ஒரு சிறு கும்பல் மாநாட்டு மேடைக்கு வந்து கொண்டிருந்த கழகத் தலைவரின் வாகனத்தை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

திராவிடர் கழகத் தலைவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று காவல் நிலையத்திற்குக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தும், காவல்துறை அதிக கவனமாக இருக்கத் தவறியது ஏன்? என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

குறிப்பிட்ட இடத்தில் பத்திரிகையாளர்கள், தொலைக் காட்சியினர் எப்படி வந்திருந்தனர்? அப்படியென்றால், ஏற்கெனவே திட்டமிட்டு இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டுள்ளது என்பது வெளிப்படை! பத்திரிகைக்காரர்கள் வரை தெரிந்திருந்த ஒரு முக்கியமான நிகழ்வு - காவல்துறைக்குத் தெரியாது - காவல்துறை எதிர்பார்க்கவில்லை என்று எவரேனும் சொல்ல முடியுமா? காவல்துறையின் கவனத் துக்கே வராமல் நடந்துவிட்டது என்றால், அதைவிட காவல்துறையின் செயலின்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? காவல்துறையில் உளவுப் பிரிவு என்பது இல்லையா?

ஏற்கெனவே காவல்துறைக்கு எழுதிக் கொடுத்தவர் களைக் கண்காணித்து இருக்கவேண்டாமா? அவர்களை அழைத்து எச்சரித்து இருக்கவேண்டாமா?

ஒரு முக்கியமான தலைவர் வந்திருக்கும்பொழுது காவல் துறையினர் அவருக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படைகூட தெரியாமல் காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.

மாநாடு நடைபெறக்கூடாது; மாநாடு நடந்தாலும் பேரணி நடைபெறக்கூடாது என்று, மனப்பால் குடித்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்போடு, பெரும் வீச்சில் நேர்த்தியாக நடைபெற்றது - கழகத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்!

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திறந்தவெளி மாநாட்டில் தெரிவித்ததுபோல எதிர்ப்புகளுக் கிடையே வளர்ந்து வந்ததுதான் இந்த இயக்கம் - எங்கள் பயணத்தை, செயல்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது!

வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது முறைப்படி காவல் துறையினரிடம் புகார் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் - அதன் பின்னணி என்ன? என்ற வினாக்கள் எழுந்துள்ளன.

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும், காவல்துறையின் போக்கிற்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தோழர்கள், தமிழர்கள் பதற்றமாக விசாரித்து வருகின்றனர்.

தோழர்களே, பொறுமையுடன் நம் பணிகளை மேலும் எழுச்சியுடன் நடத்துவதன்மூலம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் உரிய பாடத்தைக் கற்பிப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


விருத்தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம் சேலத்தில் தமிழர் தலைவர் பேட்டி


சேலம், செப். 30- விருத் தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்ற மூலம் தீர்வு காண்போம் என்று சேலத்தில் திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

சேலத்தில் பெரியார் படிப்பகம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி கலந்து கொண் டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விருத்தாசலத்தில் நடந்த திராவிடர் கழக இளைஞர் அணி கூட் டத்தில் கலந்து கொள் வதற்காக சென்றேன். அப்போது ஒரு கும்பல் என்னுடைய வாக னத்தை மறித்து என்னை தாக்க முயன்றது. இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்பட வில்லை. காவல்துறை யினரின் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது.

இது கண்டிக்கத்தக் கது. இந்த சம்பவத்தால் தொண்டர்கள் எழுச்சி யால் வேறு எந்த ஒரு அசாம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கட்டுப் படுத்தி வைத்துள்ளோம்.

விருத்தாசலம் சம்ப வம் தொடர்பாக காவல் துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண்போம். தமிழகத் தில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்ப வங்கள் நடந்து வருகின்றன.

சினிமா நூற்றாண்டு விழா என்பது ஒரு விழாவே கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும் அவர்க ளுக்கு எங்களது ஆதரவு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் மீது தாக்குதல் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்

விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்தல் வழக்கு தொடர்பாக ஆஜரான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- விருத்தாச்சலத்தில் நடந்த கடலூர் மண்டல திராவிடர் கழக மாண வரணி மாநாட்டில் பங்கேற்க வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர் களை தாக்க முயற்சித்தது, கண்டிக்கத்தக்கது, கருத்துக்கு கருத்துதான் மோத வேண்டுமே தவிர கற்களால் மோதுவது நாகரீகமான செயல் அல்ல, இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

" ஆரியம், தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப்போர்வை தரித்துக் கொண்டு, வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத்தெரிய வொட்டாது தடுத்து, நாசத்தை, நமது இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது. அந்த நஞ்சினை உண்ணாதீர், என்று கூறும், சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள், ஏசுகின்றனர், ஏளனம் பேசுகின்றனர். ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சுயமரியாதைக்காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம், இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே” என்று ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும் ! "

= அறிஞர் அண்ணா , 17 - 10 - 1943 , திராவிடநாடு இதழில்

தமிழ் ஓவியா said...


மோடியின் உரையும் விருத்தாசலம் மாநாடும்


வருங்காலப் பிரதமர் இவர்தான் என்று மிகப் பெரிய அளவு - பணத்தை வெள்ளமாகப் பாய்ச்சி ஆள் பிடித்துக் கூட்டத்தைச் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டது ஒரு கூட்டம்! அப்படி ஒரு கூட்டம் திருச்சியில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.

பிரம்மாண்டமான ஏற்பாடு என்பது உண்மைதான். கொட்டிக் கொடுக்கத்தான் பெரும் பெரும் பணத் திமிங்கலங்கள் இருக்கிறார்களே - அவர்கள் தானே மோடி பிரதமராக வரவேண்டும் என்பதில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

என்னதான் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், மோடி தன் உரையின் மூலம், தான் யார் என்பதை தன்னைத்தானே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.

சுதந்திர நாள் என்று கூறப்படும் நாளில் பிரதமரை மோசமாக விமர்சித்தார். திருச்சி உரையும் அப்படித்தான்! நம் வீரர்களைப் பாகிஸ்தானில் கொல்லும்போது நமது பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு பிரியாணி சாப்பிடுகிறார் என்று எவ்வளவு கண்ணியமாகப் பேசி இருக்கிறார்.

குஜராத்தில் வெள்ளத்தால் மக்கள் பெரும் துயரத்திற்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள நேரத்தில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டுள்ளாரே! மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் எழுப்பிய குற்றச்சாற்றை அலட்சியப்படுத்த முடியுமா?

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளும் காங்கிரஸ் கட்சி, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்தி, மொழி வாரியாக மக்களைப் பிரிக்கும் பாவத்தைச் செய்தது - என்று திருச்சியில் மோடி முழங்கி இருக்கிறார்.

இது ஒன்றே போதும் மோடியைத் தூக்கி எறிவதற்கு! ஆர்.எஸ்.எஸின் கொள்கை, மாநிலங்களே கூடாது - ஒற்றை ஆட்சி முறைதான் இருக்க வேண்டும், ஒரே மொழிதான் ஆட்சி மொழி - அது சமஸ்கிருதம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை; கோணிப்பைக்குள் இருந்த பூனை இப்பொழுது வெளியே வந்துவிட்டது.

மொழிவாரி மாநிலம் கூடாது என்பதுதான் பிஜேபியின் - நாளைய பிரதமர் என்று கனவு காணும் நரேந்திரமோடியின் முடிவு என்றால் இதுபற்றி அனைத்து மாநில மக்களும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

தங்களின் மொழி, இனம், பண்பாடு இவற்றை இழந்து எல்லோரும் இந்துத்துவா என்ற இந்து மகா சமுத்திரத்தோடு கரைந்து போய் விட வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணமும், ஏக்கமுமா?

இந்த நாட்டில் இருக்கக் கூடிய கிருஸ்தவர்களும், முசுலிம்களும் - தங்களை இந்துமயமாக்கிக் கொள்ள வேண்டும். இந்துக் கடவுளான, கிருஷ்ண னையும், இராமனையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறக் கூடியவர்கள் இதனையும் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிஜேபியோடு கூட்டு சேரலாம் என்று அசை போட்டுக் கொண்டிருப்போர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அப்படி கூட்டுச் சேர்ந்தால் மொழிவாரி மாநிலமே கூடாது என்பவர்களோடு கை கோர்த்துக் கொண்டு வரலாமா என்று கேட்க மாட்டார்களா தமிழர்கள்? தமிழர்கள் என்ன சுயமரியாதையற்றவர்கள் என்ற நினைப்பா?

இன்னொரு குற்றச்சாற்றையும், ஆளும் காங்கிரஸ்மீது வைத்துள்ளார். மதத்தின் பெயரால் பிளவுபடுத்துபவர்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரசுக்காக வக்காலத்து வாங்கிப் பதில் சொல்வது நம்முடைய வேலையல்ல; ஆனால் அதே நேரத்தில் இப்படிச் சொல்பவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டாமா?

இந்துத்துவா என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டவர்களா இதைப் பேசுவது? நான் ஒரு இந்துத் தேசியவாதி! (Hindu Nationalist) என்று பகிரங்கமாகப் பேட்டி கொடுத்த பேர் வழியா இப்படி ஒரு குற்றச்சாற்றை வைப்பது?

குஜராத்து மாநிலத்தில் சிறுபான்மை மக்களைத் தேடித் தேடிச் சென்று கொலை வேட்டை ஆடிய ஆசாமிகளா இந்தக் குற்றச்சாற்றை வைப்பது?

வாக்காளப் பெரு மக்கள் ஏதோ ஒரு காரணத் தால் தவறான முடிவை மேற்கொள்வார்களேயானால் குஜராத்தில் அவர்கள் நடத்திக் காட்டிய அதே வேட்டையை இந்தியா முழுமையும் நடத்திக் காட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை! விருத்தாசலம் திராவிடர் கழக மாநாடும் இந்த எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...


இன்று (அக். 1) சர்வதேச முதியோர் தினம்


இன்றைய சூழலில் முதி யோரின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. 2050ஆம் ஆண் டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடு களிலும் முதியோரின் எண் ணிக்கை இருமடங்காக உயரும் என அய்.நா., மதிப்பிட்டுள்ளது.

வயதான காலத்தில், இவர் களை நன்றாக கவனிக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ஆம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளை களால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப் பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளை யும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர், குழந்தைகளுக்கு சமம் எனக் கூறுவர். 50 வயதை கடந்தவர்கள், முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர் களின் செயல்பாடுகள் மாறி விடும். முதியோரின் அறிவு மற் றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அவர்களை சுமையாக கருதா மல், வரமாக கருதுங்கள். குடும் பத்தில் முதியோரை அரவ ணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக் காவது முதியோரை கவனிக்க முன்வர வேண்டும்.

பிள்ளைகள் நல்ல வசதி யோடு இருந்தும், பெற்றோரை பார்த்துக்கொள்ளாமல் முதி யோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. யாருடைய பெற் றோராவது முதியோர் இல்லத் தில் இருந்தால், மீண்டும் வீட் டுக்கு அழைத்து வர இத்தி னத்தை பயன்படுத்திக் கொள் ளுங்கள். அரசும் முதியோருக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும்.

உதிர்ந்து போன சருகுகளா... முதியவர்கள்?

கொடிது கொடிது... முதுமை கொடிது; அதனினும் கொடிது... முதுமையில் வறுமை. முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் அலசி ஆராய்ந்தால், அங்கே முதியவர்கள் மட்டும், ஆதர வின்றி தனியாய் நின்று சிகிச்சை பெறுவர். நீண்ட வரிசையில் தள்ளாடி தள்ளாடி நின்று மருந்து வாங்கிச் செல்வர். இன்னும் சொல்லப் போனால், சிகிச்சை பெற முடியாமல், எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து உட்கார்ந்திருப்பர்.நீண்ட வரிசையில் நிற்கும் போது, சில முதியவர்கள் மயக்கமடைந்து, இறந்த சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதுமையின் கொடுமையால், மாதம் 10 பேர் வரை, இங்கு இறக்கின்றனர். சட்டைப் பையில் முகவரியோ, மொபைல் போன் எண்ணோ இருந்தால், காவல்துறையினர் உறவினர் களிடம் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், அனாதைப் பிணமாகிறது.

ஏன்? முதுமை என்றால் இத்தனை பாராமுகம்? இன் றைய இளமை நாளைய முது மையாய் மாறித் தானே ஆக வேண்டும்?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூரில் மாணவர்களுக்கு பெரியார் பொன்மொழிகள் போட்டி

சிங்கப்பூர், அக்.1- தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் போட்டிகள் 2013 என்ற தலைப்பில் பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் போட்டி மற்றும் தமிழ் கட்டுரைப் போட்டிகளை லிட்டில் இந்தியாவில், உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் செப்டம்பர் 28 ஆம் நாள் சனிக்கிழமை நடத்தியது.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து போட்டிகளில் பங்கேற்ப தற்காக தொடக்க நிலை 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர் களும், உயர்நிலை ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களும் தங்களின் பெற்றோர்களுடன் ஆர்வமுடன் வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி, காலை சிற்றுண்டியுடன் தொடங்கியது. போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி வகுப்பு அறைகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுக் கும் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் ஆறு ஆசிரி யர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை வழி நடத்தினார்கள்.

பெரியார் பொன்மொழிகள்!

பெரியாரின் பொன்மொழிகளை மாணவர்கள் வாசித்து ஒரு பொன்மொழியினை விளக்கிக் கூறும் போது மாணவர்களின் அறிவுக் கூர்மையும், தெளிவான சிந்தனையும் நடுவர்களையும், பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்களைப் பாடும்போது மாணவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், குரலும் இனிமையாக இருந்தது. கட்டுரைப் போட்டியில் ஆர்வமுடன் மற்றும் குறித்த நேரத்தில் எழுதி முடித்து தொடக்க நிலை மாணவர்கள் எழுதும் திறனை வெளிப்படுத்தினார்கள்.

போட்டி முடிந்த பின் மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும் மதிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடுவர்கள் வெற்றியாளர்களை அறிவித்தார் கள். மூன்று பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 12 வெற்றி யாளர்கள், 6 ஊக்கப் பரிசாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள். போட்டிகளின் முடிவு உடனடியாக அறிவித்ததை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டார்கள்.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி, சான்றிதழ்களையும், ஆங்கில மொழியாக்கத்துடன் உள்ள திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

வெற்றியாளர்களை அறிவிக்கும்போது ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தமிழில் பேசுவது, எழுதுவது மற்றும் பாடுவது பற்றி வழிமுறைகளை எடுத்துக்கூறினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக மன்றத்தின் செயலாளர் க.பூபா லன் நன்றி கூறி வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக் கும் பரிசுப் பொருள்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களும், பெற்றோர்களும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டுதோறும் இது போன்ற போட்டிகள் நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றார்கள்.

நிகழ்ச்சியில், பெரியார் சமூகசேவை மன்ற உறுப்பி னர்கள், தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
//

தமிழ் ஓவியா said...

காப்போம், காப்போம்! தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்!!
கழகத் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு

கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை - குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் கட்சிக் கொடியுடன் அன்பு தழுவ வரவேற்றனர்.

காப்போம்! காப்போம்!! தமிழர் தலைவரைக் காப்போம்!

காப்போம், காப்போம், தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்.

அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களுக்குக் கழகத் தலைவர் மாலை அணிவித்தார்.

தமிழ் ஓவியா said...


காந்தியார் பிறந்த நாள் சிந்தனைகள்!


- ஊசிமிளகாய்

அண்ணல் காந்தியடி கள் பிறந்த இந்நாளில் அவரது சிலைக்கு மாலை, அவரது சமாதி அருகில் மலர்வளையம், ரகுபதி ராகவ ராஜாராம் பஜனை பாடினால் மட்டும் போதுமா?
125 ஆண்டுகள் வாழ் வேன் என்று கூறி, வாழ விரும்பிய காந்தியாரை அப்படி வாழ விடாமல் சுட்டுக்கொன்றது ஏன்? எதற்காக? சுட்டவன் யார்? யாரிடம் பயிற்சி பெற்றவன்?
இந்நாளிலாவது உரக்கச் சிந்திக்கவேண்டாமா?

எந்தப் பார்ப்பன மதவெறிச் சக்திகள் சதி நடத்தி காந்தியார் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தனவோ, அவைகளும் சேர்ந்தல்லவா காந்தி பஜனை செய்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகின்றன!

காந்தி பிறந்த மண், இன்று காவி மண்ணாக ஆக்கப்பட்டுவிட்டது!

அதுபோதாது என்று இந்திய நாட்டையே காவி மயமாக்கி, இந்து நாடாக்கிட எல்லாவித சாம, பேத, தான, தண்ட முயற்சிகளையும் மேற்கொள்ளு கின்றன!

பெரியார் பிறந்த மண்ணையும், காவி மண் ணாக்கிட முயலுகின்றனர்!

இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு - காந்தி பெயரில் வசன வியாபாரி ஒருவர், அரசியல் தரகராக முதலில் ஒரு சாமி செய்த கூட்டும் முயற்சியை குதூ கலமாகச் செய்கிறாராம்!

திராவிடத்தில் பெரியார் - அண்ணா முத்திரைகளைப் பொறித்துக் கொண்டுள்ள, அரசியலில் பதவிப் பசி அதிகம் உள்ள அமைப்பு ஒன்று, மீண்டும் காவி அணியிடம் சரணடைந்து, பதவி லோக வழி தேடுவது, பெரியார் - அண்ணாவுக்குப் பெருமை சேர்ப்பதா?
அவர்கள் கட்டிக்காத்த சிறுபான்மையோர் பாதுகாப்பு - உரிமை எல்லாம் பலி பீடத்தில் நிறுத்துவதுதானா? பல கதவுகள் மூடிவிட்ட நிலையில், இந்தக் கதவாவது நமக்குத் திறந்துள்ளதே! கதவு மட்டுமா? கருவூலமும் சேர்ந்து அல்லவா திறந்துவிடப்பட்டுள்ளது என்ற தாகம்தான் மோடிக்கு சேடியாக்கிடுகிறது போலும்!

ஆசை வெட்கமறியாது; அதிலும் பதவி ஆசை, மானமும் அறியாது!

காங்கிரஸ்காரர்களைவிட கோட்சே கும்பல்தான் இன்று ஏதோ காந்தியின் பரம பக்தர்கள்போல காட்டிக்கொண்டு, ஓநாய் சைவமாகிவிட்டதுபோல் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே காவி உலா நடத்திக் காட்டி, வாக்காளர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுகிறது!

மதவெறியை வளர்ப்பது காந்திக்குச் செய்யும் அஞ்சலியா? மதக் கலவரங்கள் பெருகுவதா?

வன்முறையால் திட்டமிட்டு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உரிமையை ஒழிப்பதா காந்திக்குச் செய்யும் பிரார்த் தனை?

கோவில்களை விபச்சார விடுதிகள் என்றவர் காந்தியார் - காஞ்சிபுரம் தேவநாதன்கள் வழக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே!

வேதம் ஓதும் உங்களுக்கு பார்ப்பனர்களுக்கு, ஸ்டெதஸ்கோப்பும் (டாக்டர் படிப்பு), டி ஸ்கொயரும் (பொறியியல் படிப்பு) எதற்கு என்று கேட்டு, சமூகநீதி தராசைச் சரியாகப் பிடித்ததினால்தானே பார்ப்பன, மதவெறியாளர்களால் காந்தியார் கொல்லப்பட்டார்!
எனவே, காந்தி பிறந்த நாளில், மதச்சார்பின்மை, சமூகநீதி, இவைகளையே முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுப்பதே - உண்மையாக அவருக்குக் காட்டும் மரியாதையாகும்.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

- (விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கு.முத்துசாமி - மலர்விழி ஆகியோரின் செல்வன் மு.வினோத் குமார் என்பவருக்கும், ஓமலூர் வட்டம் நச்சுவாயனூர் சி.மாரி யப்பன் சிங்காரம் ஆகியோர் களது மகள் மா.அன்புச்செல்வி என்கிற மணமகளுக்கும் 29.9.2013 அன்று ஓமலூர் நடராஜன் திரு மண மண்டபத்தில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

மணவிழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண் முகம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் முன்னி லையில் மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் வர வேற்புரையுடன் துவங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் மண மக் களுக்கு உறுதிமொழி கூறி மண விழாவை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் தமது வாழ்த் துரையில் குறிப்பிட்டதாவது: இங்கே மா.அன்புச்செல்வி - மு.வினோத்குமார் ஆகியோர் களது திருமணம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பழனி.புள்ளையண்ணன், சுப்பிரமணி ஆகியோர் எடுத்துச் சொன்னதைப் போல இத்திரு மணத்தை நடத்தி வைப்பதிலே பெருமை கொள்கிறேன். மாரி யப்பன் அவர்களின் சம்பந்தியான முத்துசாமி - மலர்விழி ஆகி யோரை பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.

இந்த மணவிழா விலே மாரியப்பன் கருப்புச் சட் டையுடன் இருக்கிறார் என்றால் அதற்கு சுப்பிரமணியன் போன்ற வர்கள்தான் காரணமாக இருக்க முடியும். மணவிழாவே மாநாடு போல இங்கே மக்கள் கூடி இருக் கிறார்கள். பெரியார் கொள்கை இங்கே வெற்றி பெற்றுள்ளது. என்றைக்கும் பெரியார் கொள்கை தோற்காது. நேற்று கூட விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது அங்கே கூலிப்படையினரால் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் சொல்கிறேன். இயற்கை மரணம் அடைவதைவிட கொள்கைக் காக போராட்டக்களத்தில் சாவது நல்லது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

இத்திருமணத்தில் தாலி உள்ளதா என சுப்பிரமணியிடம் கேட்டேன். அதற்கு தாலி இருந் தால் உங்களை அழைத்திருப் பேனா என்று பதில் சொன்னார். தாலி என்பது திருமணத்தில் இடையிலே புகுத்தப்பட்ட ஒன்று இங்கே கருப்புச் சட்டைக் காரர்களுக்கு ஜாதி என்பது கிடையாது.

இன்று பெரியார், காமராஜர் அண்ணா போன்றவர்களின் உழைப்பினால் நம் பிள்ளைகள் நன்றாக படித்துள்ளார்கள் மண மக்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். இது நமக்கு பெருமையாக உள்ளது.

எல்லாத் திருமணங்களையும், எங்களைப் போன்றவர்களை வைத்து நடத்த வேண்டியதில்லை. நம் குடும்பத்தில் உள்ள தமிழர் களை வைத்து பகுத்தறிவு, சுயமரி யாதை முறைப்படி நடத்திட வேண்டும். திருமண வாழ்க்கை முறை என்பது இத்தோடு முடிவ தில்லை. நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள்.

சுப்பிரமணி குடும்ப மண விழா என்பது அது எங்கள் குடும்ப திருமணம் போன்றது. இப்பகுதியிலே அவர்கள் பல ஆசிரியர்களை உருவாக்கி இருக் கிறார்கள். பெரியார் திருமண முறை என்பது வேகமான, ஆவேச மான திருமண முறை அல்ல அது படிப்படியாக அறிவை வளர்த்து செய்யக்கூடியது.

பணக்காரரைவிட கொள்கை காரர்களே சிறந்தவர்கள். அந்த கொள்கை சுப்பிரமணி போன்ற குடும்பத்தினரிடம் உள்ளது. அந்த வகையில் மணமக்களின் திரு மணத்தை நடத்தி வைக்கிறேன் வாழ்க மணமக்கள் என்று தமிழர் தலைவர் வாழ்த்துரை வழங் கினார்.