இந்தக் காலத்திலும் பார்ப்பனர்களைப்
பழிக்க வேண்டுமா? காலம் மாறிப் போச்சே -_ அவர்களும் பஞ்ச கச்சம் கட்டுவதை
விட்டுத் தொலைத்து விட்டார்களே -_ இப்பொழுதெல்லாம் அவிட்டுத் திரியை எங்கே
பார்க்க முடிகிறது? முனியாண்டி ஓட்டலிலும் சாப்பிடுகிறார்களே _- இந்தக்
காலத்திலும் அவாளைப் பழிக்க வேண்டுமா என்று அவாளுக்கு வக்காலத்துப் போட்டு
எகிறிக் குதித்து விளையாடும் விபீஷண தமிழர்களின் செவிட்டுச் சிந்தனைக்கு
இதோ ஓர் எடுத்துக்காட்டு.
தினமணி (8.9.2013) தமிழ் மணி பகுதியில்
கலாரசிகன் எனும் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் தினமணி ஆசிரியர் திருவாளர்
வைத்தியநாதய்யர் வாள் எழுதியுள்ளதைப் படியுங்கள் - படியுங்கள்.
தமிழுக்காகவும், இந்திய சுதந்திரத்
திற்காகவும் தமது வாழ்நாளை அர்ப் பணித்த அற்புதமான தியாகிகளில் ஒருவர்
மறக்கடிக்கப்பட்டிருந்தால் கூடத் தவறில்லை, தவறாக சித்திரிக்கப்
பட்டிருப்பதுதான் வேதனை. அவர் நடத்திவந்த சேரன்மாதேவி குரு குலத்தில்
இரண்டு பிராமணச் சிறுவர்களுக்கு அவர் தனியாக உணவளிக்க ஏற்பாடு செய்தார்
என்பதைப் பெரிதுபடுத்தி, வ.வே.சு. ஐயர் என்கிற தியாகியின், தமிழ்ப்
பற்றாளரின் பங்களிப்பையே மறந்து விடுவது நியாயமே அல்ல.
"எங்கள் குழந்தைகளுக்குத் தனியாக
உணவளித்தால்தான் உங்கள் குருகுலத்தில் அவர்களைப் படிக்க அனுப்புவோம்' என்று
இரண்டு பெற்றோர் பிடிவாதம் பிடித்ததால், அதற்கு இணங்கியதுதான் அவர் செய்த
தவறு. அன்றைய சமூகச் சூழலை முன்னிறுத்திப் பார்க்கும்போது வ.வே.சு. ஐயர்
பாரதியைப் போன்ற சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை என்று கூறமுடியுமே தவிர,
அவர் பழிக்கப்பட வேண்டியவர் என்று தள்ளிவிட முடியுமா? அவரது ஏனைய
பங்களிப்புகளை நாம் தவிர்த்துவிடுவது நியாயமா?
""சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த
சம்பவத்தை மட்டும் வைத்து, வ.வே.சு. ஐயரின் தமிழ் மொழி, பண்பாடு, இன
நாட்டுப்பற்றுகளைக் கருத்தில் கொள்ள மறுத்ததுதான் வரலாற்றுச் சோகம்'' என்று
தமது "விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு' நூலில் "சிலம்புச் செல்வர்'
ம.பொ.சி. பதிவு செய்திருப்பார்.
"வீர விளக்கு', "இலக்கியச் செம்மல்',
"ஒப்பிலக்கியத் திறனாய்வாளர்', "நவீன படைப்பிலக்கிய முன்னோடி', "கட்டுரை
இலக்கியச் செம்மல்' எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வர் வரகனேரி வேங்கட
சுப்பிரமணிய ஐயர் எனும் வ.வே.சு. ஐயர்.
""கம்பீரமான தோற்றம். மார்பை எட்டிப்
பார்க்கும் அழகான கறுப்புத் தாடி. அன்பு ஒழுகும் கண்கள். மூலை செருகிக்
கட்டப்பட்ட முரட்டுக் கதர். மேலே உடம்பு முழுவதும் போர்த்தப் பட்ட ஓர் ஆடை.
நெற்றியில் பிறைச் சந்தனக் குறி. உண்மை முனிவரின் தோற்றம். நிமிர்ந்த நடை.
அவர் நடக்கும் நடை ஒரு தனி அழகு கொண்டது. நடப்பதற்கும் நடை என்று பெயர்.
ஒழுக்கத்திற்கும் தமிழில் நடை என்றுதான் பெயர். இரண்டிலும் சாலச்சிறந்தவர்
வ.வே.சு. ஐயர்'' - இது "தமிழ்க் கடல்' இராய.சொ.வின் பதிவு.
""மேல்நாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து
பயின்று கரைகண்ட ஐயர், அவற்றின் புதுமையையும், வன்மையை யும் தமிழ் மொழியில்
ஏற்ற விரும் பினார். அந்த நோக்கம் நிறைவேறும் முன்னரே அவர் மறைந்து
விட்டார். தமிழ் நாட்டின் வாழ்வே அவரது பெருங்கனவாயிருந்தது. அவரைப் பற்றி
நினைக்கும்போது, உலகத்தில் உயர்ந்த இமயமலையும், உலகத்தில் பெரிய கங்கை
நதியும், எண்ணுதற்கரிய எல்லையற்ற வானமுமே எனது சிந்தையில் தோன்றுகின்றன.
ஐயருக்கு நிகராகச் சொல்லக்கூடிய பெருந் தமிழர் தமிழ்நாட்டில் இனிதான் தோன்ற
வேண்டும்'' என்பார் பாரதி புகழ் பரப்பிய பரலி. சு.நெல்லையப்பர்.
1907 முதல் 1919 வரையில் உள்ள வ.வே.சு.
ஐயரின் நாட்குறிப்புகளில் அணியிலக்கணம் பற்றிய பல்வேறு குறிப்புகள்
படிப்பவரை வியப்படையச் செய்யும். ""தேச பக்தன்' பத்திரிகை ஆசிரியராக இருந்த
வ.வே.சு. ஐயர் எழுதிய கட்டுரைக்காக அவர் மீது ராஜதுரோகக் குற்றம்
சுமத்தப்பட்டு, ஒன்பது மாதக் கடுங்காவல் தண் டனை விதிக்கப்பட்டது. அவர்
பெல்லாரி சிறைச்சாலைக்குக் கைதி யாக அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னால்
திருவல்லிக்கேணியில் மரணப் படுக்கையில் இருந்த தனது நண்பர் பாரதியாரைச்
சந்தித்து விட்டுச் சென்றார். பாரதியை சந்தித்த கடைசி நண்பர் வ.வே.சு.
ஐயர்தான்.
தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாக உரைநடை
இலக்கியத்திற்கும், ஒப்பிலக்கியத்திற்கும் வ.வே.சு. ஐயரின் பங்களிப்பு
மகத்தானது. பெ.சு.மணி தொகுத்து வெளியிட்டிருக்கும் "வ.வே.சு. ஐயரின்
கட்டுரைக் களஞ்சியம்' என்கிற புத்தகம் அந்த மாமனிதரின் நிஜங்களைப் பதிவு
செய்திருக்கிறது. வ.வே.சு. ஐயர் பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தியிருக்கும்
பெ.சு.மணியை எத்தனை பாராட்டி னாலும் தகும்.
இதுதான் தினமணியாரின் திருப்புகழ்!
குரு குலத்தில் இரண்டு பிராமணச்
சிறுவர்களுக்கு அவர் தனியாக உண வளிக்க ஏற்பாடு செய்தார் என்பதைப்
பெரிதுபடுத்தி, வ.வே.சு. அய்யர் என்ற தியாகியின் _ தமிழ்ப் பற்றாளரின்
பங்க ளிப்பையே மறைத்து விடுவது நியாய மல்ல என்று எவ்வளவுப் பெரிய ஜாதி
வெறியை வருணாசிரமக் கண்ணோட் டத்தைச் சிறிய குமியில் அடைத்து வித்தை
காட்டுவதைக் கவனித்தீர்களா?
குருகுலம் ஒன்றும் வ.வே.சு. அய்யரின்
அப்பன் வீட்டுச் சொத்தல்ல; காங்கிரஸ் நிதியில் பொது மக்களின் உதவியில்
நடத்தப் பெற்ற குருகுலமாகும்.
பாரத கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. தேசிய உணர்வை ஊட்ட வேண்டும் என்ற உணர்வும்
இருந்தது. அதன் அடிப்படையில்தான் தொடக்கத்தில் கல்லிடைக் குறிச்சியில்
தமிழ்க் குரு வித்தியாலயா எனும் பெயரில் கல்விக் கூடம் தொடங்கப்பட்டது.
(1923 டிசம்பர்) வரகனேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் (வ.வே.சு. அய்யர்) அதன்
பொறுப்பாளராக அமர்த்தப்பட்டார்.
ஆனால் அங்கு நடந்ததென்ன? நாரா. நாச்சியப்பன் தீட்டிய குருகுலப் போராட்டம் _ என்ன கூறுகிறது.
ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் ஒரு நல்ல
தலைவர். பழுத்த காந்தியவாதி. கடைசி வரை காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்.
எளிமையான தோற்றமுடைய வர். எப்பொழுதும் தூய வெள்ளைக் கதராடையே அணிவார்.
ஆடையைப் போலவே தூய வெள்ளை மனம் படைத்தவர். 1948ஆம் ஆண்டு வாக்கில் தமிழக
முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சிக் காலம் தமிழக காங்கிரஸ் ஆட்சியின்
பொற்காலம் என்று கூற வேண்டும். ஏனெனில் அவருடைய ஆட்சியில்தான் எவ்வித
ஊழலுமற்ற ஒரு செம்மையான அரசு நடந்தது.
அப்படிப்பட்ட சிறப்பு மிக்க இராம சாமி
ரெட்டியார் பல ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினராக
இருந்தார். இராமசாமிப் பெரியாருக்கும், வரதராசலு நாயுடுவுக்கும்,
திரு.வி.க.வுக்கும் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தார். இந்த முப்பெருந்
தலைவர்களுக்கும், ஒத்துழைக்கும் சிறந்த தொண்டராக விளங்கினார்.
நம் பண்டைய பெருமையைக் காப்பாற்றுவதற்கென
ஏற்பட்ட குருகுலத்தில், வெள்ளையர் கலாச்சாரம் நுழைய முடியாத
குருகுலத்தில், தன் பிள்ளையும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அவர்
விரும்பினார்.
ஆங்கிலக் கல்வியின் தீமையை மேடையில்
பேசிக் கொண்டே தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கான்வென்டுக்கு அனுப்பும்
இக்காலத் தமிழர் தலைவர்கள் போலில்லாமல் தன் பிள்ளையை பாரதக் கலாச்சார
முறைக் கல்வி பயில குருகுலத்தில் சேர்த்து விட்டார்.
பையன் பள்ளியில் பயின்றான். ஆறு மாதங்கள்
ஓடின. அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்காகப் பள்ளி மூடப்பட்டது.
பிள்ளைகள் தத்தம் பெற்றோரைப் பார்க்கச் சொந்த ஊருக்குப் போய் வர
அனுமதிக்கப்பட்டார்கள்.
ஓமாந்தூரார் பையனும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
கட்சி வேலைகள், தொண்டு, மாநாடு என்று பல
நாள் வெளியூர்களிலே சுழன்று கொண்டிருந்த இராமசாமி ரெட்டியார் வீட்டில்
ஓய்வாக இருந்த ஒரு நாளில் தன் மகனோடு பேசத் தொடங்கினார்.
பையனின் படிப்பு எப்படியிருக்கிற தென்று விசாரிக்கத் தொடங்கினார்.
அவன் மூலம் குருகுலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிந்து கொண்டார்.
குருகுலத்தின் தினசரி வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டார்.
அவருடைய கேள்விகளுக்கு மகன் அளித்த பதில் மூலம் அவர் தெரிந்து கொண்ட செய்திகள் பல.
காலையில் 4 மணிக்கு எழுப்பி விடு வார்கள். கை கால் முகம் கழுவி பல் விளக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உடற்பயிற்சி நடக்கும்.
உடற்பயிற்சி முடிந்ததும் மலங்கழிக்கச்
செல்ல வேண்டும். செல்லும் போது மண் வெட்டியுடன் போய் ஒரு குழி வெட்டி,
அதில் மலங்கழித்த பின் மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும்.
குளித்து முடித்த பின் காலை 7.30 மணிக்கு
ஒரு பெரிய கூடத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும், கூட வேண்டும். பார்ப்பன
மாணவர்கள் ஒரு பக்கத்திலும், மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கத்திலும்
நிற்பார்கள். தெய்வ வழிபாடு நடக்கும். ஐயர் பல பெரியோர்களின் வரலாறுகளைக்
கூறுவார். புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். ஒரு மணி நேரம் கழிந்த பின்
மாணவர்களுக்கு காலை உணவாக கஞ்சி வழங்கப்படும்.
உழவு வேலை, தோட்ட வேலை, சமை யல் வேலை
ஆகியவற்றில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பிரித்துவிடப்படு வார்கள். நெல்
பயிரிடப்பட்டிருந்தது. காய்கறிகள், பழ மரங்கள் வளர்க்கப் பட்டன. இவற்றில்
எல்லாம் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டடங்கள்
கட்டும் வேலை நடக்கும். இதில் மாணவர்கள் கொத்தனார்களுக்கு செங்கல்
எடுத்துப் போதல், சாந்து குழைத்தல் போன்ற வேலைகள் செய்வார்கள்.
மற்ற ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் போலவே,
வரலாறு, சமூகநலம், பூகோளம், விஞ்ஞானம் எல்லாப் பாடங்களும் சொல்லித்
தரப்பட்டன. தமிழும், சமஸ் கிருதமும், இந்தியும் கற்றுத்தரப்பட்டன. பயிற்சி
மொழியாக ஆங்கிலமே இருந்தது.
இந்த விவரங்களை யெல்லாம் கேட்டபோது
ரெட்டியாருக்கு மகிழ்ச்சி யாகவே இருந்தது. பிள்ளைகள் வேற்றுமையின்றி எல்லா
வேலையும் செய்வது எளிமையான வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்று
மகிழ்ச்சியடைந்தார்.
ஆங்கிலம்தான் பயிற்சி மொழி என்று மகன்
சொன்னபோது தேசிய உணர்வுள்ள ரெட்டியார் துடித்துப் போனார். ஆனால், கால
நிலையை யொட்டி, வேறு அரசு பள்ளி மாணவர் களோடு போட்டி வரும் போது சரி சமமாக
நிற்க உதவியாயிருக்கும் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார். இந்தி
தேசிய மொழி அதைக் கற்றுக் கொள்வது நல்லது என்று எண்ணினார்.
சமஸ்கிருதம்
இலக்கிய மொழி அதுவும் தேவைதான் என்று எண்ணினார். இந்தப் படிப்புகளில்
பாரதக் கலாச்சாரம் எங்கேயிருக்கிறது, மற்ற பள்ளிக்கூடங்கள் போலத்தானே
இருக்கிறது என்று எண்ணமிட்டார்.
சாப்பாடு நன்றாய் இருக்கிறதா? என்று தந்தையார் கேட்க, மகன், பழகிக் கொண்டு விட்டேன் என்று சொன்னான்.
பள்ளிக்கூடம் எப்போது திறக் கிறார்கள்?
என்று தந்தையார் கேட்ட போது, நயினா, நான் அங்கே போக வில்லை; வேறு
பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன் என்றான்.
எல்லாம் நன்றாகத் தானே சொன்னான். ஏன் போக மாட்டேன் என்கிறான். தாய்ப் பாசமா? வீட்டு நினைப்பா? என்று எண்ணினார் ரெட்டியார்.
என்னடா செப்புறே? என்று கேட்டார்.
என்னடா செப்புறே? என்று கேட்டார்.
எங்களையெல்லாம் கேவலமா நடத்துறாங்க நயினா! என்றான் பையன்.
உழவு வேலை செய்கிறது கேவலமா? கட்டட வேலை
செய்வது கேவலமா? எல்லாத் தொழிலும் கற்றுக் கொள்ள வேண்டும்! தொழிலில்
வேற்றுமை பார்க்கக் கூடாது என்றார் ரெட்டியார்.
அதைச் சொல்லவில்லை நயினா? நாங்கள் எல்லாம்
சூத்திரப் பசங்களாம். பிராமணப் பசங்களுக்குத் தனியா சாப்பாடு போடுறாங்க.
அவங்களுக்குச் சோமவாரம் சுக்கிரவாரம் கார்த்திகை இப்படி நாள்கள்ளே வடை
பாயாசத்தோடு சாப்பாடு, எங்களுக்கெல்லாம் எப்பொழு தும் ஒரே மாதிரி சோறும்
சாம்பாரும்தான்.
ஒரு நாள் தண்ணீர் தாகமெடுத்தது. வழியில்
இருந்த பானையில் மொண்டு குடித்தேன். அது பிராமணப் பசங்க பானையாம். நான்
தொட்டதும் தீட்டாகிப் போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார்,
பாதித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் ஓங்கி
அடித்து விட்டார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து
தள்ளினார். தீட்டுன்னா என்ன நயினா? என்று கேட்டான் பையன்.
பிராமணப் பசங்கன்னா ஒசத்தியா நயினா?
எங்களோட தோட்ட வேலைக்கெல்லாம் அவங்க வர்றதில்லை. சமையல் வேலையிலே மட்டும்
தான் சேர்ந்துக்குவாங்க. அதிலேயும் பாத்திரம் கழுவுறது மட்டும் எங்க வேலை.
ஒரு நாள் நானும் சமையல் கத்துக்கட்டுமா என்று கேட்டேன். சூத்திரப் பசங்க
சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்களாம். அந்த சமையல் ஐயர் என்னை
முறைத்துப் பார்த்தார். இதெல் லாம் எனக்குப் பிடிக்கலை நயினா.
அடிபட்ட அன்னிக்கே வீட்டுக்கு வந்துவிடத் துடித்தேன். ரயிலுக்குப் பணமில்லே. அதனாலே பொறுத்துக் கொண்டேன்.
கேட்கக் கேட்க ரெட்டியாரின் உதடுகள்
துடித்தன. கண்கள் சிவப்பேறின. நெஞ்சு குமுறியது. தான் ஏதோ பாவம்
செய்துவிட்டது போன்ற உணர்வு அவரை வாட்டியது. காந்தியடிகளின் அஹிம்சை
இயக்கத்திலே பெற்ற பயிற்சியைக் கொண்டு அவர் தம் மனத்தை அடக்கிக் கொண்டார்.
இரவு முழுவதும் தூக்கமில்லை.
மறுநாள் காலையில் மகனை அழைத்தார்.
நீ ஈரோட்டுக்குப் போ. பள்ளிக் கூடத்தில் நடந்த அட்டூழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு என்று அனுப்பி வைத்தார்.
புதிதாக ஒரு சிறுவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு, பெரியார், அவனை நீ யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார்.
நான் ஒமாந்தூர் ரெட்டியாரின் கொடுக்கு என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் பையன்.
என்ன செய்தி? என்று கேட்டார் பெரியார்.
முதல் நாள் தன் தந்தையாரிடம் சொன்ன செய்திகளையெல்லாம் பையன் ஆதியோடந்தமாக மிகத் தெளிவாக விளக்கிச் சொன்னான்.
தனித்தனிச் சாப்பாடு, - தனித்தனி தண்ணீர்ப் பானை - சாதி வேற்றுமை - உயர்வு தாழ்வு - பெரியாருக்குச் சின்னம் பொங்கியது.
அந்தப் பார்ப்பனரை மிக உயர்ந்தவ ரென்று
நம்பினோமே, நல்ல தேசபக்தர் என்று மதிப்புக் கொடுத்தோமே தமிழர்கள் பணத்தை
யள்ளி யள்ளிக் கொடுத்தோமே!
இதைச் சும்மாவிடக் கூடாது என்று கொதித்துப் பேசினார் பெரியார்.
ஓமாந்தூரார் செல்வாக்குப் பெற்ற தலைவர். அவர் இப்பிரச்சினையை உடனடியாக காங்கிரஸ் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
மற்ற தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர் இது
பற்றி அறிந்தும் பேசாமல் இருந்துவிட்டனர். ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்ட
போது, அவர்களும் மனம் நொந்து குருகுலத்தில் நடந்த கொடுமைகளை எடுத்துக்
கூறினர்.
அவரச் செயற்குழுக் கூட்டம் ஒன்று கூடுமாறு அறிக்கை விட்டார், ஈரோட்டுப் பெரியார்.
--------------------------(குருகுலப் போராட்டம் நாரா. நாச்சியப்பன் பக்கம் 40-_45).
உண்மைகள் இவ்வாறு இருக்க தினமணி ஆசிரியர்
ஏதோ ஒரு சின்னஞ்சிறு சமாச்சாரம் அதனைப் பெரிது படுத்தி விட்டார்கள் என்று
எழுதுவது அறிவு நாணயம்தானா?
எது சின்ன விஷயம்? பெரிய விஷயம்? என்பது அவரவர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது.
ஒரு பெண்ணைக் கெடுத்தவன்கூட சில நிமிடச்
சமாச்சாரம்; - இதனைப் பெரிதுபடுத்தலாமா என்று கூடக் கேட்கலாம் - அப்படித்
தானிருக்கிறது வைத்திய நாதய்யர்வாளின் சமாதானம்!
அது சின்ன சமாச்சாரம் என்றால் காந்தியார் வரைக்கும் சென்று இருக்குமா?
டாக்டர் வரதராசலு நாயுடும், திரு.வி.க.வும், தந்தை பெரியார் போன்ற பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்காரர்கள் என்று கதை கட்டிவிட முடியுமா?
1925 சனவரி 17ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு இந்தப் பிரச் சினையை முன்வைத்துத் தீப்பற்றி எரிய வில்லையா?
ஆரியர்களின் வேத கால கலாச் சாரம்தான்
நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்தைய திராவிடக் கலாச்சாரத் தில் ஜாதிப்
பிரிவினைக்கே இடம் இல் லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத் தான் நாம்
பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுவில் குமுறி எழுந்தவர் தந்தை
பெரியார் அல்லர் - டாக்டர் வரதராசலு நாயுடு.
ஜாதிப் பாகுபாட்டுக்கும் உயர்வு
தாழ்வுக்கும் வேதமும் சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும்,
சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்! என்று தீப்பிழம்பாகக்
கிளர்ந்தெழுந்தார் தந்தை பெரியார்.
சின்ன விஷயம் என்று திருவாளர்
சிணுங்குகிறாரே - ஏதோ நடந்து விட்டது; இனிமேல் குருகுலத்தில் இவ்வாறு
நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லக் கூடிய பெரிய உள்ளம்
வ.வே.சு. அய்யருக்கு இல்லாமல் போனது ஏன்?
சின்ன விஷயமாக அதனை அவர் எடுத்துக்
கொண்டிருந்தால் அவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பார் அவாளுக்கு வருணாசிரமக்
காப்பு தானே பெரிய விஷயம்? ஜாதித் துவேஷம் தானே குருதி ஓட்டம்? அதனால் தான்
பிடிவாதமாக இருந்தார். அந்தப் பூணூல் கோத்திரத் தடித் தனம்தான் அவரை
அம்பலப்படுத்தியது. இந்தக் குற்றம் செய்த மெத்தப் படித்த (இலண்டன் வரை
சென்று படித்தவர்) மேதாவியிடம் குடி கொண்டிருந்த சின்னப் புத்திக்கு
வக்காலத்துப் போட்டு அந்தப் பெருங் குற்றத்தைச் செய்த - அதிகாரத்தைத் துஷ்
பிரசாரம் செய்த வ.வே.சு. அய்யரைத் தூக்கி நிலை நிறுத்தப் பார்க்கும் இந்தப்
பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டாமா?
2013லும் இந்த நிலைப்பாட்டைக்
கொண்டுதான் இருக்கிறார்கள் -அவர் ஏடு நடத்தும் அளவுக்கு விளம்பரம் பெற்ற
வர்களின் புத்தி வேத காலத்திலிருந்து வெளியே வர மறுக்கிறது என்பதைத் தமி
ழர்கள் நினைவு கொள்ள வேண்டாமா?
தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாக உரை நடை
இலக்கியத்திற்கும் ஒப்பிலக்கணத் திற்கும் வ.வே.சு. அய்யரின் பங்கு மகத்
தானது என்று மார்புப் புடைக்க எழுதி யுள்ளார். திருவாளர் வைத்தி அய்யர்.
வ.வே.சு. அய்யருடைய் தமிழ் இலக்கிய தொண்டுக்கு எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்று போதும். அது இதோ:
வ.வே.சு அய்யர் The Kural or the Maxims
of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி
பெயர்த்திருக்கிறார். அதன் முன்னுரையில்,
.. Tradition declares that he was the
child of a Brahmin father named Bhaghavan and a Pariah Mother Adi who
had been brought up by another Brahmin and given in marriage to
Bhaghavan. Six other children are named as the issue of this union, all
of whom have dabbled in poetry.
திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற
பார்ப்பனராவார். இவர் தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன் னொரு
பார்ப்பனர் வளர்த்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி பகவன்
கூட்டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர்.
அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாகச்
சொல்லப்படுவதோடன்றி இதனைக் கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர் என்று
எழுதியுள்ளார். இக்கருத்தைக் கபிலனே சொல்லுவதாக ஒரு பாடல் அமைந்து
இருக்கிறது. அதில் கூட அந்தணர் வளர்க்க யானும் வளர்ந் தேன் என்று கடைசி வரி
முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,
“Thiruvalluvar does not treat of the
fourth objective separately and Hindus say that he has submitted himself
to the orthodox rule that none but a Brahmin should be a teacher of
Spritual truth to mankind”
என்று வ.வே.சு. அய்யர் கூறுகிறார்.
அதாவது, திருவள்ளுவர் நான்காவ தான வீடுப்
பேற்றைப் பற்றித் தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மிக
உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால
வைதிக (வேத) விதி களுக்குத் திருவள்ளுவர் தம்மை உட் படுத்திக் கொண்டார்
என்று இந்துக்கள் கூறுகிறார்கள் என்று எழுதினார் வ.வே.சு. அய்யர்.
இக்கதைகளுக்கெல்லாம் காரணம் அறிவு என்பது
ஒரு சாதிக்குரியது; வரு ணத்திற்குரியது என்பதை அடையாளப் படுத்துவது ஆகும்
என்பதுதான்!
இதனை தந்தை பெரியார் அவருக்கே உரிய பாணியில் திருக்குறளும்
பெரியாரும் என்ற நூலில் பக்கம் 14-இல் குறிப்பிட் டுள்ளார். தந்தை பெரியார்
கூறுகிறார்:
நம்மவன் ஒருவன் புத்திசாலியாக இருந்தால்கூட அதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் பேச சந்தர்ப்பம் எழுந்தால் அவர்கள் என்ன கூறிக் கொள்வார்கள் தெரியுமா?
அவன் ஒரு மகா புத்திசாலி என்ப தென்னவோ
உண்மைதான். ஆனால், அவனுடைய பிறவியில்தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
பிராமண விந்து சம்பந்தம் எதாவது இருக்க வேண்டும்; இன்றேல் இவ்வளவு
புத்திசாலியாக இருக்க முடியாது என்றுதான் பேசிக் கொள்வார்கள்
இப்படிப் பெரியார் கூறுவதற்கு என்ன
காரணம்? அறிவு ஒரு வருணத்தார்க் குரியது என்ற கருத்தினை உறுதிப்படுத்து
வதற்காக எழுந்ததுதான் வருணாசிரமம் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் பெரியார்
அவ்வாறு கூறினார்.
திருக்குறளை எழுதியவரின் பிறப்பை இவ்வாறு
உயர் வருண நிலைக்கு ஏற்றி வைத்ததற்குப் பிறகு திருக்குறளின் கருத்
துகளுக்குள் நுழைந்தனர்.
அக்கருத்துகள் நால்வருண சநாதன தர்மத்தைக் கட்டிக்
காக்கவே எழுதப்பட்டன. இத்தகைய கருத்துகளை, உரைகளைப் பார்ப்பனர் -
பார்ப்பனர் அல்லாதார் என இரு தரப்பு அறிவாளர்களும் எழுதினர்.
இப்போது டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.
வேத வழக்கொடு இயைந்த பல செய் திகள் திருக்குறளில் உள்ளன. நித்திய நைமித்திக பூசைகள், நான்கு ஆச்சிரமம், ஐவகைக் கடன்கள், அந்தணர் முதலி யோர் ஒழுக்கம், வேதம் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் பல வகைகளில் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
திருமால் உலகளந்த செய்தியும்
தாமரைக்கண்ணான் ஆதலும் உணர்த்தப்படுகின்றன. திருமகளும் அவள் தவ்வையும்
இணைத்துச் சிலவிடங்களில் கூறப்படுகின்றன. தாமரையாள் என்று ஓர் இடத்தில்
திரு மகளைக் குறிக்கின்றார். பிரமதேவனை, உலகியற்றியான் என்கிறார்.
இந்திரனைப் பற்றி இரண்டு இடங்களிற் கூறுகின்றார்.
இம்மை, மறுமை, வீடு என்னும் இம் மூன்றும்
திருவள்ளுவருக்கு உடம்பாடு. அவர் கருத்தைப் புத்தேளுலகம் என்றும், மேலுலகம்
என்றும், வானமென்றும் கூறுவர்; தேவரை அவியுணவின் ஆன்றோரென்பர்
(திருக்குறளும், திருவள்ளுவரும் என்ற தலைப்பில் 4.6.1936-இல் டாக்டர் உ.வே.சா. பச்சையப்பன் கல்லூரியில் பேசியது).
(திருக்குறளும் திராவிடர் இயக்கமும் பக்.45_-47- க. திருநாவுக்கரசு)
உ.வே.சா.விலிருந்து வ.வே.சு. அய்யர்,
சங்கராச்சாரியார்கள் உட்பட பார்ப்பனர் தமிழையும், உலக மறை தந்த திருவள்
ளுவரை உட்படவும் எந்த கண் கொண்டு பார்க்கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதற்கு
இன்னுமா எடுத்துக் காட்டுத் தேவை?
தினமணி ஆசிரியர் வ.வே.சு. அய்ய ரைத்
தூக்கிச் சுமப்பதன் இரகசியம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே! சும்மா
ஆடுமா வைத்திகளின் பூணூல் கள்!
பார்ப்பனர்களைப் பரந்த மனப் பான்மையில்
பார்த்து வழுக்கி விழும் தமிழர்கள் ஈரோட்டுக் கண்ணாடி போட் டுப் பார்த்தால்
தான் உண்மையை உணர முடியும்.
******************************************************************************
திருக்குறள் பற்றி காஞ்சி ஜெயேந்திரர்
2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும்
முதலில் பத்து குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து
விட்டு, பொருட்பால் காமத்துப் பாலைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை
என்று காஞ்சி மடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார்
திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைக் கூறியிருப்பது
அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து
திருக்குறளைப்பற்றிப் புறங்கூறி வருவதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன்,
அக்கருத்துக்களை திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள்
பேரவை கேட்டுக் கொள்கிறது _ என்பதுதான் அத்தீர்மானம்.
ஆண்டாளின் திருப்பாவையில்
குறிப்பிடப்படும் தீக்குறளைச் சென் றோதோம் என்ற பாடலுக்குத் தீய
திருக்குறளை ஓத மாட்டோம் என்று பொருள் சொன்னவர்தானே இவரின் குருநாதர்
காஞ்சி மூத்த சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி? குறளை - என்றால்
கோள் சொல்லுதல் என்ற பொருளில் கூறப்பட்டதை திரித்துத் திருக்குறளை
இழிவுப்படுத் தியதைக் கவனிக்கத் தவறக் கூடாது. இவர்கள்தான் ஜெகத்
குருக்களாம்
*****************************************************************************
--------------- மின்சாரம் அவர்கள் 28-9-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை
26 comments:
அறிவியல் சிந்தனை
பண்டைய கிரேக்கத்தில் அறிவியல் சிந்தனை தழைத்ததற்கு முக்கிய காரணம் அங்கு நிலவிய அரசியல் சூழல்தான். கிரேக்கத்தின் நகர அரசுகள் அறிவியல் சிந்த னைகளுக்குத் தடை விதிக்க வில்லை. கிரேக்க அறிவியல் தத்துவ ஞானிகள் இயற்கையையும், இயற்கை நிகழ்வுகளையும் புதிய கோணத்தில் அணுகுவதற்கு இந்த நகர அரசுகள் தந்த சுதந்திரம் பெரும் உதவியாக இருந்தது.
எனினும் இங்கும் அரசியல் செயல்கள் ஒரு சில சமயங்களில் அறிவியலை பாதித்தன என்பதற்கு ஆர்க்கிமிடிஸின் இறப்பு ஒரு எடுத்துக்காட்டாகும்.
உரோமானிய மன்னன் கிரேக் கத்தின் மீது படையெடுத்தபோது உரோமானியத் தளபதி ஆர்க்கி மிடிஸிக்கு எந்த வித பாதிப்பும் ஏற் படக் கூடாது என்று கட்டளை யிட்டிருந்தார்.
ஆர்க்கிமிடிஸ் மணலில் வடிவக் கணிதவியல் (Geometry) படத்தை வரைந்து கொண்டிருந்த போது ஒரு போர் வீரன் அவரை யாரென்று அறியாமல் கொன்று விட்டான்.
தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுபோர் வீரனை விலகுமாறு அவர் செய்த சைகையைத் தவறாகப் புரிந்து கொண்டயோர் வீரன் அவரைக் கொன்றது அறிவியலுக்கு செய்த மிகவும் பாதகமான செயலாகும்.
(அறிவியலின் வரலாறு பேரா கு.வி. கிருஷ்ணமூர்த்தி பக்.36).
- _ க. பழநிசாமி, திண்டுக்கல்
பெண்கள்சுதந்திரத்தில்தமிழ்நாட்டுக்குமுதலிடம் கடைசி இடத்தில் மேற்கு வங்காளம்
தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011ஆ-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்பப் பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது? அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர்த் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள்? மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் நாட்டிலேய மேற்கு வங்காளத் திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர் பிடிப்பதற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.
அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனை வாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும் பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண் களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப் படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது. கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரைப் பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள் ளன. 1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமு தாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதி ரான அடக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வி யறிவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம் மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது. தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ் தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது. ஆனால் இந்தி யாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலை சிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது. தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந் திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.
வள்ளலைக் கண்டேன்
- நம். சீனிவாசன்
தமிழர் தலைவர் செப்டம்பர் 19 அன்று ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது துண்டுச் சீட்டு வந்தது. மதுரை ஹார்விபட்டி மேனாள் தலைமை ஆசிரியர் கோ. ராமசாமி அவர்கள் பெரியார் கல்வி நிறுவனங் களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ரூபாய் முப்பது லட்சத்தை அளிக்க விரும்புகிறார். சீட்டு சொன்ன செய்தி இது. தமிழர் தலைவர் எழுதுகிறார். எங்களை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்தது.
வள்ளல் கோ. ராமசாமியின் பண் பைப் பாராட்டி செப்டம்பர் 23ஆம் தேதி விடுதலை இதழ் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் எத்தனை எளிய மனிதருக்கு -_ இத்தனை பெரிய மனமிருக்கு...! என்று சொல்லோவியம் தீட்டினார் தமிழர் தலைவர்.
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் கீழ் ஜெயங் கொண் டத்தில் இயங்கி வரும் பெரியார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா 28.9.2013 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. அந் நிகழ்வில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மதுரை, திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி கோ. ராமசாமி (தலைமை ஆசிரியர் பணி ஒய்வு) அவர்கள் புதிய கட்டடத்திற் கான அடிக்கல் நாட்டுகின்றார் என்ற நிகழ்ச்சி நிரலும் அதே நாளிதழில் பிரசுரமாகி இருந்தது. யார் இந்த ராமசாமி? யோசித்தேன். நினைவிற்கு வந்தது. இயக்க நிகழ்ச்சிகளில் ஓரத்து இருக்கையில் வீற்றிருப்பார். தோழர் களுக்குப் பாசத்துடன் வணக்கம் தெரிவிப்பார். அதிர்ந்தும் பேச மாட்டார்; அதிகமும் பேச மாட்டார்.
ஓராண்டிற்கு முன் கழக மாநில சட்டத் துறைத் தலைவர் வழக்கறிஞர் மகேந்திரன் மறைவுற்றார். படத்திறப்பு நிகழ்ச்சிக்குத் தமிழர் தலைவர் அவர்கள் வருகை புரிந்தார்கள். சோகம் சூழ்ந்த அந்த மேடையில் மதுரை மண்டலத் தலைவர் செல்வம் அவர் கள் பெரியார் மருத்துவ பாதுகாப்பு நிதிக்கு ஹார்விபட்டி கோ. ராமசாமி அவர்கள் ஒரு லட்சம் ரூபாயினை வழங்குவதாக அறிவித்தார்கள். நிகழ்ச்சி முடிந்து வாகனத்தில் பயணிக்கும் போது தமிழர் தலைவர் அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் எடிசன்ராஜா அவர்களிடம் ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தவர் யார் என்று விசாரிக் கின்றார். திரு எடிசன்ராஜா அவர்கள் தொலைபேசியில் வே. செல்வம் மற்றும் மீ. அழகர்சாமியிடம் விசாரித்துத் தலை வர் அவர்களிடம் தகவல் தருகின்றார்.
அவருக்கே மருத்துவ உதவி தேவைப்படலாம். நாம் கவனமுடன் அவருக்கு உதவ வேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கட்டளை பிறப்பிக் கின்றார் தமிழர் தலைவர்.
2013 ஜூன் மாதம் தமிழர் தலைவர் மதுரை வந்தபோது கோ. ராமசாமியைப் பார்த்து நலம் விசாரிக்கலாம் என்று விருப்பம் தெரிவிக்கின்றார். மகிழ்ந்து நெகிழ்ந்தார் ராமசாமி. வீட்டிற்கு வந்த தமிழர் தலைவரை பாசம் ததும்ப வரவேற்றார். இருவரும் மாறி மாறி பொன்னாடை அணிவித்து பூரிப்படைந் தனர்.
வள்ளல் ராமசாமி அவர்களைச் சந்தித்துப் பேசுவோம் என்று வே. செல்வம், மீ. அழகர்சாமி இருவரும் விருப்பம் தெரிவிக்க நாட்கள் மாதங் களாக உருண்டோடி விட்டன. செப் டம்பர் 24 மாலையில் சந்திப்பு நடைபெற்றது.
ஹார்விபட்டி திட்டமிட்டு கட்டப் பட்ட சிறு நகரம். மனம் கவர் பூங்கா மய்யமாகத் திகழ 1939இல் உதயமானது. தொழிலாளர் குடியிருப்பு சகல வசதி களுடன் அமைக்கப்பட்டது. சில்லென்ற காற்று தவழும் சிறுநகரில் வள்ளல் கோ. ராமசாமியின் குடியிருப்பு. வீட்டிற்கு வெளியே வந்து வரவேற்றார் ராமசாமி. நெல்லை மண்டலத் தலைர் பொறியாளர் மனோகரன், வே. செல்வம், புகைப்படக் கலைஞர் ராதா இவர்களுடன் நானும் சென்றேன். வீட்டின் சுவரை பெரியார் படம் அலங்கரித்தது. வள்ளல் ராம சாமியுடன் கலந்துரையாடினோம். எண்பது வயது; நெடிது வளர்ந்த உருவம்; நினைவு தப்பவில்லை; கம்பீரமான குரல்; தெளிவான உச்சரிப்பு; பேச்சில் தடுமாற்றம் இல்லை; அருகில் இருப்பவரை அடித்து அடித்துப் பேசும் உற்சாகம்; ஆங்கிலமும் திருக்குறளும் பேச்சில் சரளமாய் வந்து விழுகின்றன. முப்பத்து மூன்று ஆண்டுகள் கல்விப் பணி ஆற்றிய அறிவுக் கூர்மை பேச்சில் தெறிக்கிறது. உறுதிபட பேசுகிறார்.
குற்றாலத்திற்கு அருகில் நெடு வயல் கிராமத்தில் 1934 ஜூலை மாதம் 16ஆம் தேதி வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர் ராமசாமி. தந்தையின் பெயர் கோமதியா (பிள்ளை) தாயின் பெயர் பொன்னம் மாள். சிவகிரி தந்தையின் ஊர்; தாயின் ஊர் புளியங்குடி பிழைப்பு தேடி மதுரை வந்தபோது தாய் பொன்னம்மாளுக்கு மஜிரா கோட்ஸ் மில்லில் பணி கிடைத்தது. வில்லை எண் 14718.
100 சாமி சொல்லி படுப்பதும் 100 சாமி சொல்லி எழுவதும் தாய் பொன் னம்மாளின் வழக்கமாகும். உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் பட்டை பூசுவது தந்தை கோமதியாவின் பழக்க மாகும் என்று சொல்லிச் சிரிக்கிறார் ராமசாமி.
ஹார்விபட்டியில் தொடக்கக் கல்வி; மதுரை லேபர் வெல்பேர் அசோசியே சனின் உயர் நிலைப் பள்ளியில் உயர் கல்வி; திண்டுக்கல்லில் இரண்டாண்டு ஆசிரியப் பயிற்சி என அவருடைய படிப்பு பயணம் நடந்தேறியது.
ஹார்விபட்டியில் படித்த பள்ளியில் ஆறு மாத காலம் பணியாற்றிய ராம சாமி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் 12.10.1959இல் பணிக்குச் சேருகிறார். உத்தங்குடி, வய லூர், சமயநல்லூர், தோடனேரி, அதலை, குலமங்கலம், மாரணிவாரி யேந்தல் என பல்வேறு ஊர்களில் கல்விப் பணி ஆற்றி 1992 இல் ஓய்வு பெற்றார். கோவிந்தம்மாள் இவருடைய மனைவியின் பெயர். 1964இல் திருமணம் நடைபெற்றது. இவருடைய இணையர் எம்.ஏ., எம்.எட்., படித்தவர். திருநகர் சவீதாபாய் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
மெஜிரா கோட்ஸ் மில்லில் வேலை பார்த்த மாதவன் என்பவர் அய்யாவின் நூல்களைப் படித்துவிட்டு ராமசாமி யிடம் கொடுக்க, மெல்ல மெல்ல பகுத்தறிவுக் கருத்துகள் இவருடைய உள்ளத்தில் பதியத் தொடங்கின. மாத வனை குரு என்று கொண்டாடுகின் றார். ஹார்விபட்டியில் வசித்த அய்ய லுசாமி விடுதலைவாசகராக இருந்தார். அப்போது விடுதலை வாசிக்கும் வாய்ப்பு ராமசாமிக்கு கிடைத்தது.
ராமசாமி 1964 முதல் விடுதலை சந்தாதாரராக இருந்து வருகிறார். இயக்க இதழ்கள், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalistஅனைத்தும் இவர் இல்லம் தேடி வரும். நான்கு பத்திரிகைகளுக்குச் சந்தா கட்டியுள்ளேன் என்று பெருமை பொங்கக் கூறுகிறார்.
ராமசாமி ஓய்வு பெற்று 22 ஆண்டு கள் ஆகின்றன. விடுதலை இதழைத் தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப் போல் படிக்கின்றேன் என்றார். புத்த கத்தில் பிடித்த பகுதிகளை அடிக்கோடு இடுவதைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் ராமசாமி அவர்கள் விடுதலை நாளிதழில் படித்த கருத்துக்களுக்குப் பக்கத்தில் சிவப்பு மய்யினால் புள்ளி இட்டு அடையாளப்படுத்துகின்றார். அவருடைய ஆர்வமும் உழைப்பும் வியப்பை நல்குகின்றன.
மதுரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டதை மகிழ்ச்சி ததும்ப விவரிக்கின்றார். கூட்டம் முடிந்து இரவு நேரங்களில் நடந்தே வீடு திரும்பியதை நினைவு கூர்கின்றார். தந்தை பெரி யாரின் குரலை சிங்கக் குரல் என்று சிலிர்க்கின்றார். பெரியாரின் அசைவு களை நுட்பமாய்க் கவனித்து தத்ரூப மாய் விவரிக்கின்றார். அன்னை மணி யம்மையாரிடம் காசு கொடுத்து புத்தகம் வாங்கியதைச் சொல்லும்போது அவருடைய கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் பிரவாகமெடுக்கின்றது.
ராமசாமி, வீட்டில் தனி ஆளாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் வீடு முழுவதும் புத்தகங்கள் அவரே காசு கொடுத்து வாங்கி, படித்து பயன் படுத்திய பழைய புத்தகங்கள் இந்தப் புத்தகங்கள்தான் இப்போது இவருக்கு உற்ற துணை.
அய்யா பெரிய தொகையை நன் கொடையாக கொடுத்திருக்கின்றீர்களே! பெரியார் அறக்கட்டளைக்கு ஏன் கொடுத்தீர்கள்? உங்களுக்கு முழு திருப்தியா? என்ற கேள்வியை தயங்கிய வாறே கேட்டேன்.
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். குரலை உயர்த்தி மடமடவென்று பேசத் தொடங்கினார். வீரமணியின் பணி களை நுட்பமாகக் கவனித்து வந்தேன். அவருடைய கல்விப் பணிகளைக் கண்ட கலைஞர் அவர்கள் சென்னைவரை வியப்பாகப் பேசிக் கொண்டே சென்றி ருக்கின்றார். வீரமணி போன்றவர்கள் நமக்குக் கிடைப்பது அபூர்வம். அவருடைய செயல்களை மதிக்கின் றேன். சிறப்பாகச் செயல்படுகின்றார் என்பது என்னுடைய ஆணித்தரமான எண்ணம் தொகையைத் திடீரென்று கொடுத்து விடவில்லை. நன்கு யோசித்தேன். முடிவெடுத்தேன். நன்கொடை அளித்ததன் மூலம் என்னுடைய நீண்ட கால எண்ணம் நிறைவேறியது. தெளிவாகச் சொல் கின்றேன். மனமுவந்து கொடுத்தேன். கொடுத்ததிலே திருப்தி; மகிழ்ச்சி; பெருமை என்று அழுத்தமாகச் சொற்களை அடுக்கினார்.
மீ. அழகர்சாமி என்னுடன் இடை விடாது தொடர்பு வைத்திருக்கின்றார். அவரிடம் எப்போதும் மனம் விட்டு பேசுவேன் என்றார். திருச்சியில் சீஷீஸீரீ சுப்பிரமணியத்தைப் பார்த்தேன். முதியோர் இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக் கின்றது என்றார்.
தலைவர் அவர்களும் தோழர்களும் எனக்கு க்ஷிமிறி மரியாதை செய்தது கஷ்ட மாக இருந்தது என்று நாணத்துடன் வளைந்து கை கூப்பினார்.
அவர் படும் கூச்சம் உண்மையான கூச்சம் - அவர் தந்த நன்கொடையின் மதிப்பை பல மடங்குப் பெருக்கிக் கூட்டிக் காட்டுகிறது! என்ற தலைவர் வீரமணியின் எழுத்தோவியத்தை - படப்பிடிப்பை வள்ளல் ராமசாமியிடம் நேரில் கண்டேன்.
அறிவுக்கு வேலை கொடு! பகுத்தறிவுக்கு வேலை கொடு!
1. பூனைக்கு ழிஷீ ணிஸீக்ஷீஹ் உண்டா? பூனை குறுக்கே போனால் சகுனத் தடையாம்! இது என்ன மலிவான சிந்தனை? பூனைக்கு ளிஸீமீ கீணீஹ் - ழிஷீ ணிஸீக்ஷீஹ் கட்டுப்பாடுகளை எல்லாம் நமது காவல் துறை வகுத்துள்ளதா? இல்லையே? அப்படி இருக்கையில் அது இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? குறுக்கே போனால்கூட என்ன? எலி தானே பயப்பட வேண்டும்? மனி தன் எதற்கு கிலி பிடித்து ஆட வேண் டும்? வெட்கம்! வெட்கம்! வெட்கம்!
2. காணாமே! காணாமே! சக்தியும், சரஸ்வதியும் காணாமே! காணாமே!
அடிப்பெண்ணே! நகைகளை அணிந்த உன்னைப் பார்த்து மகா லெட்சுமி மாதிரி இருக்கின்றாய் எனப் புகழ்ந்து தள்ளுகின்ற ஆண்மகன் படித்துப் பட்டம் பெற்ற உன்னை பார்த்துச் சரஸ்வதிக்கு ஒப்பிட்டுப் பேசி இருக்கின்றானா? அல்லது அப்பன் வீட்டிலிருந்து இனி எதையும் கொண்டு வர முடியாது எனப் பெண் ஆவேச மாகப் பேசினால் ஆகா! வீரத்தாய் சக்தி தேவி போர்க்கோலம் பூண்டு விட்டாள் எனச் சக்திக்கு ஒப்பிட்டுப் பேசிப் புளகாங்கிதம் அடைகின்றானா? நகைகளை அணிந்திருக்கும்போது மட்டும் மகாலெட்சுமிக்கு ஆண்கள் ஒப்பிட்டுப் பேசுகின்றார்கள் என்றால் நகைகள் என்றாலே பெண்கள் பல்லி ளிப்பதால்தானே? இந்த நகைப் பைத்தி யத்திலிருந்து பெண்கள் விடுபடும் நாள் எந்நாள்?
பெண்களே! தாய்மார்களே! சகோ தரிகளே! தோழியர்களே! ஒரு பி.டி. உஜா போல், ஒரு கல்பனா சாவ்லா போல், சானியா மிர்சா போல் தனித் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்தத் தனித் திறமைக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் -_ கௌரவமும் கிடைக்கும் போது நகை மீதான விஷயங்கள் மிகவும் அற்புத்தனமாக உங்களுக்குத் தோன் றும். சிந்தித்து பாருங்கள். காதலனின் புகழ்ச்சிக்காகவும், கணவனின் பாராட் டுக்காகவும் காத்திருக்காதீர்கள். ஒரு அன்னை மணியம்மையாரைப் போல் ஆளுமை திறன் பெறுங்கள்.
பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடையாது. அதுபோல ஆண்களால் பெண்களுக்கு விடுதலை இல்லை. பெண்கள் விடுதலை பெற ஒரே வழி பெரியார் இயக்கத்தை நோக்கி நேசக்கரம் நீட்டுவதே!
3. இந்தியாவில் -மதுரையில் ஒரு நேரம் மதுராவில் ஒரு நேரம் - காஷ்மீரில் ஒரு நேரம் - கன்னியாகுமரியில் ஒரு நேரம் எது சரியான நேரம்?
பிறந்த நேரம் மட்டும் சரியா இருந்து விட்டால் ஜோதிடம் பலித்தே தீரும் என உளறிக் கொண்டிருப்பவர்களே! இந்தியாவில் அலகாபாத்தில் நண்பகல் சரியாக 12 மணியாகி இருக்கும்போது அதே நேரத்தில் - _ மும்பையில் முற்பகல் 11.22 _ கொல்கத்தாவிலோ பிற்பகல் 12.22 _ ஆக இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரங்கள் இருக்கும்போது பிறந்த நேரத்தைச் சரியாக எப்படிக் கணிக்க முடியும்? ஜோதிடம் எப்படி பலிக்கும்? Astronomy என்பது வானச் சாஸ்திரம்! Astrology என்பது ஜோதிட சாஸ்திரம், இரண் டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளா தீர்கள். Astronomy is Different from astrology
என்பதைப் புரிந்து கொள் ளுங்கள். குறி சொல்பவனுக்கும் ஜோதிடம் கணிப்பவனுக்கும் அவர்தம் வாழ்க் கையில் என்ன நடக்கும் என்பது அவர் களுக்கே தெரியாது? அப்படி இருக்கும் போது அவர்களை நம் வாழ்வில் புகுந்து விளையாட அனுமதிக்கலாமா? சிந்தித்துப் பாருங்கள்.
4. முடிக்காணிக்கை - இது முடிவில்லா வேடிக்கை
இங்கு அடிக்கிற வெயிலுக்கு மொட்டை போட்டுக் கொண்டால் சுகம் -_ எண்ணெய்ச் செலவும் மிச்சம் என நினைத்துப் பக்தன் மொட்டைப் போட்டுக் கொள்கிறான். இதற்குப் பெயர் முடி காணிக்கையாம். இப்படிச் சொல்லி நம்மை மட்டுமல்ல _ கடவுளையும் ஏமாற்றுகின்றான். பக்தன், சிவபெருமான் கண்களில் உதிரம் கொட் டுவதைப் பார்த்துத் -_ தம் கண்ணையே நோண்டி சிவபெருமானுக்குப் பொருத் திய உண்மையான பக்தன் பெரிய புராண கண்ணப்பன் எங்கே? முடி எப்படியும் ஓரிரு மாதத்தில் வளர்ந்து விடும் எனக் கணக்குப் போட்டு முடி காணிக்கை செலுத்தும் போலியான பக்தன் எங்கே? (பக்தி என்பதே போலி; அது வேறு விஷயம்) நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே எனத் திருவிளையாடல் படத்தில் அறிக்கை விட்ட சிவபெருமானுக்கு - _ இந்தப் போலிப் பக்தனின் யோக்கியதை தெரியாமலா இருக்கும்? ஆதலால் முடிந்தால் பெரிய புராண பக்தன் கண்ணப்பன் மாதிரி உண்மையான பக்தனாக இருக்கப் பாருங்கள், முடியாவிட்டால் வேஷத்தைக் கலைத்து விட்டுச் சுயமரியாதையோடு வாழுங்கள். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!
5. யார் உயர்ந்தவர்? தாயா? கடவுளா?
இந்த உலகத்திலே நட்பை விட காதலை விடச் சிறந்தது தாய்ப்பாசம், தாய்மைதான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏனென்றால், குழந்தை கேட் காமலேயே குழந்தையின் குறிப்பறிந்து குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய் பவள் தாய்தான். அதனால் தான் தாய்மை போற்றப்படுகின்றது.
ஆனால் தாய்மையைவிட மிகச் சிறந்த குணங்கள் கடவுளுக்கு இருப்ப தாக எல்லா மதநூல்களும் சொல் கின்றன. பின் எதற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்? தாயைப் போல நம் தேவையை குறிப் பறிந்து கடவுள் தானே நிறைவேற்றி வைக்க வேண்டும்? அதை விட்டு விட்டுக் கடவுளிடம் பிரார்த்தனை செய்; அவரை வணங்கு; கும்பிடு எனச் சொன்னால் கடவுளைக் கீழ்மைப்படுத் துவது மட்டுமல்ல தாய்மையின் உயர்ந்த குணத்திற்கு இந்தக் கடவுள் ஈடில்லை என்று பொருளாகி விடுமே?
6. கேட்காமலேயே கொடுத்த மாவீரன் கர்ணன்
ஆனால், அதே நேரத்தில் கொடை வள்ளல் மாவீரன் கர்ணன் கேட்கா மலேயே கொடுக்கும் பண்பாளன் என்பதை நமது இதிகாசத்திலிருந்து அறிகிறோம். வந்திருப்பவன் இந்திரன் எனத் தெரிந்தும் கவச குண்டலத்தைக் கொடுத்தது - மேலும் என்ன கொடுப் பான்? எவை கொடுப்பான்? என்று இவர்கள் எண்ணும் முன்னே பொன் னும் கொடுப்பான்; பொருளும் கொடுப் பான் என்ற பாடல் மூலம் மாவீரன் கர்ணனைப் பற்றி அறிந்து பூரிப்பு அடைகிறோம். மேலும் கேட்கா மலேயே நண்பனுக்காக உயிரைக் கொடுத்ததை நினைத்தால் இன்றும் புல்லரிப்பு ஏற்படுகின்றது. ஆனால் நமது புராணங்களில் நமது இதிகாசங் களில் கேட்காமலேயே கொடுத்த கடவுள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. வெண்ணெய் திருடினான், ஆற்றங் கரையில் ஈவ்டிசிங் செய்தான் என்ப தாக மட்டுமே இருக்கிறது. என்ன செய்வது?
பெரியார் பிறந்ததால்...
சுய மரியாதைச் சொரனை பிறந்தது
சூது மதியாளர் சூழ்ச்சி தெரிந்தது
பார்ப்பாரப் புளுகு பஞ்சாய் பறக்குது
பகுத்தறிவு தெளிவு பாங்காய் சிறக்குது
ஆன்மீகப் பயிரு காய்ந்து கருகுது
ஆரிய வயிரு வெந்து ஏறியது
பள்ளிக்கூடம் பல்கிப் பெருகுது
கல்லூரிக்கல்வி கடல்போல் வளருது
எல்லார்க்கும் படிப்பு இலட்சிய மானது
இல்லார்க்கும் படிப்பு எளிதாய் ஆனது
பஞ்சமர் சூத்திரர் அறிவு வென்றது
பார்ப்பனர் சாத்திரம் அழிந்து ஒழிந்தது
திராவிடர் இனத்திற்கு முகவரி பிறந்தது
ஆரியர் இனத்திற்கு ஆணிவேர் அறுந்தது
ஜாதி சனாதனம் தூக்கில் தொங்குது
சங்கர ஆச்சாரிக்கு தூக்கு நெருங்குது
பெரியார் கொள்கை உலகம் சுற்றுது-சுய
மரியாதை உலகம் இனிதான் பிறக்குது -
- அதிரடி க.அன்பழகன்
சந்திரனில் நீர்
இந்திய செயற்கைக்கோள் சந்திராயன் சேகரித்து கொடுத்து தகவல்களின் அடிப்படையில் சந்திரனில் நீர் இருப்பது தெரிய வந்துள்ளது என்று யு.எஸ். வான்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா கூறியுள்ளது. சந்திரனின் தரைக்குள் கண்டறியப்படாத ஆழத்தில் நீர் இருப்பதற்கான தடயங்களை அதன் தரையில் காணப்படும் கனிம துகள்கள் காட்டுகின்றன என்றும் அது கூறுகிறது. இந்த ஆய்வு தகவல் நேச்சர் ஜியாகிராபிக் இதழில் வெளியாகியுள்ளது. சந்திரனின் உள்பகுதி முன்பு நினைத்தது போல் வறண்டு போய் கிடக்கவில்லை என்பதற் கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கிரகங்களின் புவியியல் நிபுணர் ரேச்சல் கில்மா கூறுகிறார். இவர் லாரல் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் சோதனைச்சாலை யில் பணியாற்றுகிறார்.
சந்திரனில் உள்ள பாறைகள் எலும்பு போல் காய்ந்து போய் உள்ளன என்று நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். அப்போல்லோ செயற்கைக் கோளில் கிடைத்த மாதிரிகளில் காணப்பட்ட நீர்த்திவலைகள் பூமியின் மிச்ச சொச்சங்கள் என்றும் கூறினர்.
இதுவெல்லாம் தவறு என்று தற்போதைய சந்திராயன் கொடுக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் சொன்னார். அய்ந்தாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய புதிய சோதனைச்சாலை தொழில் நுட்பங்கள் சந்திரனின் உட்பகுதி முன்னர் நினைத்தது போல் காய்ந்து போய் கிடக்கவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
ஆப்பிரிக்காவில் பெரியார் நிறுவன முதலாம் ஆண்டு விழா
பல்வேறு செயல் திட்டங்கள், ஒப்பந்தங்கள் உருவாக்கம்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு
கானாவில் உள்ள பெரியார் ஆப்பிரிக்க நிறுவன குழுவினருடன் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.
கானா, செப். 28- ஆப்பிரிக்காவின் கானாவில் பெரியார் ஆப்பிரிக்க (PAF) பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற் றார். அங்கு பல்வேறு புதிய திட்டங்களும், ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
மாபெரும் சமுதாயச் சீர்திருத்தவாதியான பெரியாரின் முற்போக்குச் சிந்தனை ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் பரப்பிட பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் 2012 செப்டம்பர் 16-ஆம் தேதி, கானா தலைநகர் அக்ராவில் துவக்கப்பட்டது. அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா அக்ராவில் செப்டம்பர் 26இல் நடைபெற்றது.
தேசிய கீதத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் தலைவர் கே.சி. எழிலரசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் செயலாளர் சாலை மாணிக்கம் பவர்பாய்ன்ட் உதவியுடன் நிறுவனத்தைப் பற்றி விளக்கினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். கானாவின் நிலங்கள் மற்றும் இயற்கை வள அமைச்சர் மாண்புமிகு இனுஷாப் பியூசெய்னி, OSUவின் மிக முக்கிய அதிகாரி டி.எஃப் நிலோக் வெயிக்கிங்காத வோளூ, கானாவிற்கான இந்திய தூதர் அக்னீஷ்குமார், வளர்ச்சிப் பாட பல்கலைக் கழகப் பதிவாளர் ஆடம் தங்கோ சாக்காரியா, பெரியார் ஆப்பிரிக்க மய்ய ஆலோசகர் பெண்டம் வில்லியம்ஸ், பெரியார் ஆப்பிரிக்க மய்யத்தின் ஆலோசகர் பக்காரி சாதிக்நயாரி ஆகியோர் பாராட் டுரை வழங்கினர். பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத் தின் புரவலர், எஸ்.எஸ். பட்டல் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
நிறுவனத்தின் நோக்கம்
பெரியாரின் கொள்கைகளான, மனித நேயம் மற்றும் சுயமரியாதையை சமூகத்திலும், பொரு ளியல் நிலையிலும் மேம்படுத்துதலே பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் நோக்கமாகும்.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் ஒரு வியாபார நோக்கமில்லாத அரசு சாரா தொண்டு நிறுவன மாகும். தொழில் நுட்பங்களைப் பல்வேறு சமூகநல அமைப்புகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் பெற்று அவற்றை கிராமப்புற மக்களுக்குக் கொண்டு செல்வதும், நகர்ப்புற மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதும் தான் பெரி யார் நிறுவனத்தின் நோக் கம். மக்களை வலுவுள் ளவர்களாக்க நாம் நமது கைகளை இணைத்துக் கொள்வோம், அவர்களை சுதந்திரம் பெற்றவர் களாக்கி வெற்றி பெறு வதற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு உதவுவோம் என்பது பெரியார் ஆப் பிரிக்க நிறுவனத்தின் நோக்கம்.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் பணிகள்
1) வளர்ந்து வரும் கல்வித்துறைக்காக கானாவில் தாமனேயில் உள்ள பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டில் தஞ் சையில் உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அதன் மூலம் கல்வி ஆசிரியர்களும், மாணவர்களும் பரிமாற்றம் செய்து கொள்ளப்படு வார்கள். தொழில் நுட்ப உடன்பாடுகள் முதலியன ஏற்படும். இது பல்துறைகளில் இந்தியாவில் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு உதவுவதுடன் புதிய தொழில்நுட்பங்கள் கானாவில் உள்ள கல்வி அமைப்பிற்குச் சேரும்.
2) கானாவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணை தூதரக அதிகாரி அக்னீஷ் குமார், இந்திய தூதரகத்தினால் அளிக்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்றார்.
3) பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் உறுப்பினரான டாக்டர் பக்தவத்சலம், நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டார். 2014-ஆம் ஆண்டின் புதிய தொழில் நுட்பம் பற்றிய படங்கள் தயாராகி விடும் புதுப்பிப்பதற்கான சக்தி பற்றிய பாடங்கள் தயாராகிவிடும். கானா நாட்டின் மின்னியல் தொழில் நுட்ப கல்வி பயில்வோருக்காக உதவியாக இருக்கும். இதன் மூலம் கானாவின் பொரு ளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 4. அன்னாசிப் பழ விவசாயிகளுக்கு பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் வட்டியில்லாத கடன் கொடுத்து உதவியிருக்கிறது.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் தலைவர் கே.சி. எழிலரசன் வரவேற்புரையாற்றினார்.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள்
இனி வருங்காலங்களில் மேலும் பல திட்டங்கள் பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அவையாவன.
1. பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம், பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன், அவர் களது விரிவாக்க மய்யங்கள் தெற்கு கானாவில் ஒன்றும் வடக்கு கானாவில் ஒன்றுமாக, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
2. இதற்காக பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் சில அறிவியலாளர்களைப் பஞ்சாபிற்கு அனுப்பி அதற்கான வழி முறைகளை ஆய்ந்து, செயல்படுத்து வதற்கு ஆவன செய்யும்.
மருத்துவ முகாம்கள்
3. ஒதுக்குப்புறமாயுள்ள கிராமப் பகுதிகளுக்கு, பல்கலைக் கழகங்கள் உள்ளூர் மருத்துவமனைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்கள் அமைத்தல்.
4.பெரியார் ஆப்பிரிக்க மய்யம் உழவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மூலமாக சிறந்த தொழில் நுட்பங்கள், அதன் மூலம் சிறந்த உழவர்கள் உருவாக்கப்படுவதுடன் முடிவாக அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் உண்டாக்குதல்.
5. மழைநீர் பயன்பாடு பற்றிய பயிற்சிகள் கொடுத்து, அதிகமாகப் பெய்யும் மழை நீரை மழைக் காலங்களில் நன்கு சேமித்து, ஆண்டு முழுவதும் பய னுள்ள முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளல்.
6. கிராமப்புற பகுதிகளில் ஆழ் துளைக்கிணறு கள் மூலம் குடிநீர் பெறச் செய்தல். இது போன்ற திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றோர் பற்றி..
உயர்திரு கே.சி. எழிலரசன்: இந்தியாவில் உள்ள பிரபலமான அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரபலமானவர் பல சமுதாயத் தொண்டுகளிலும் அரசு சாராப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். பன்னாட்டு சுழற் கழகத்தின் ஒரு முக்கிய கொடையாளி. உயர்திரு சாலை மாணிக்கம்: உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள அரசு சாரா அமைப்புகளின் ஆலோசகராக விளங்கும் பெண்மணி. இந்தியாவி லும் பல அரசு சாரா அமைப்புகளைச் சொந்தமாக நடத்தி வருபவர்.
உயர்திரு அன்புராஜ்: இந்தியாவிலிருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்துடனும், வளர்ச்சிப் பாட பல்கலைக் கழகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையக் காரணமான அமைப்பாளர்; பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்; திராவிடர் கழகத்தின் பொதுச் செய லாளர்; நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
பாராமவுன்ட் மாகாண(OSU) தலைவருக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
உயர்திரு பெண்டம் வில்லியம்ஸ்: முன்னாள், மலேசியா, இந்தியாவிற்கான தூதுவர் கானாவில் உள்ள பல அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கு மான நிர்வாக சபைகளில் அனுபவம் பெற்றவர். கானா முதலிய இடங்களில் பொருளாதார, முதலீடு மற்றும் திட்ட நிர்வாகி; ஆலோசகராகப் பணியாற் றியவர். உயர்திரு பக்காரி சாதிக் நியாரி. கானா நாட்டைச் சேர்ந்தவர் புராதன கோஞ்சா என்ற இனத்தைச் சேர்ந்தவர். கானாவின் தேசிய நில கமிஷனின் பொதுப் பணியில் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர்.
உயர்திரு எஸ்.எஸ். பட்டாள்: மேற்கு ஆப்பிரிக்காவிற்கு ஜனவரி 1959இல் வந்தவர். இந்தியாவிற்கும் - சைபீரியாவிற்கும் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டவர். இந்தியாவில் சமுதாயப் பணிகளைத் தொடர்பவர்.
ஒன்றுமே இல்லை
பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)
மோடியின் முகத்திரை கிழிந்தது
குஜராத்தைப் பாருங்கள், மோடியின் நிகரற்ற ஆற்றலால், இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் வளங் கொழிக்கும் பூமியாக ஜொலிக்கிறது பாரீர்! பாரீர்!! என்று இந்தியா முழுவதும் செய்து வந்த பிரச்சாரப் பலூன் உடைந்து சிதறி விட்டது - அது ஒரு திட்டமிட்ட உயர் ஜாதி இந்துத்துவா - மற்றும் பெரு முதலாளி களின் பெரும் பிரச்சாரம் என்பது அதிகார பூர்வமான ஒரு அறிக்கையின் மூலம் அம்பலமாகி விட்டது.
பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோச கராக இருந்த ரகுராம்ராஜன் (இன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர்) தலைமையில், அமைக்கப்பட்ட குழு இந்திய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதார நிலைகள்பற்றி ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றினைக் கொடுத்துள்ளது.
மூன்று வகை நிலைகளை அது அட்டவணைப் படுத்தியுள்ளது.
முதல் நிலையில், சிறப்பாக உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட ஏழு. இந்த ஏழு மாநிலங்களின் பட்டியலில் குஜராத்துக்கு இடம் இல்லை என்பதை, நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
மிகக் குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் 10 என்ற அட்டவணையில், குஜராத் இல்லை என்று வேண்டுமானால், முதுகைத் தட்டிக் கொள்ளலாம்.
குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பதினொன்று. அதில் 7ஆவது இடத்தில், குஜராத் மாநிலம் இருக்கிறது.
இந்த ஆய்வு என்பது, அரசியல்வாதிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அல்ல; பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுதான் வெளியில் கொண்டு வந்துள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க, நரேந்திர மோடி பிரதமராக வந்தால் இந்தியாவைக் குஜராத் ஆக்குவார் என்று தம்பட்டம் அடிப்பது ஏன்?
வேண்டுமானால் வேறுவிதமாக எடுத்துக் கொள்ளலாம்; இந்தியா, குஜராத் மாநிலம் போல குறைவான வளர்ச்சியுடைய நாடாகப் பந்தயம் கட்டி மாற்றிக் காட்டுவோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார மேதையும், அதற்காக நோபல் பரிசு பெற்றவருமான, அமர்த்தியாசென், அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவரல்லர்.
பொதுக் கண்ணோட்டத்தில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தினார்.
Modi could have also taken both of the facts, that Gujarat record in education and health care is pretty bad and he has to concentrate on that என்றாரே!
குஜராத் மாநிலத்தில் கல்வி வளர்ச்சியிலும், சுகாதார வளர்ச்சியிலும் முதல் அமைச்சர் மோடி மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அவை இரண்டிலும் குஜராத் மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினாரே - இதற்கு எந்த வகையிலும் அரசியல் முத்திரை குத்த முடியாதே!
இராமச்சந்திரகுகா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு போன்றவர்களுக்கும் மோடி பற்றிய கணிப்பு என்ன என்பது ஊரறிந்த உண்மையாகும்.
ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, மோடிக்குச் சரியான பதிலடி கொடுத்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் ஆட்சி குறித்து வழக்கம்போல வாய்த்துடுக்காக மோடி பேசியதற்குத்தான் ஆந்திர முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.
அறியாமை பாவமல்ல; ஆனால் திட்டமிட்ட அறியாமை பாவமேதான்! அதுதான் பொய் கூறிய மோடி! ஆந்திரா, குஜராத் திறமை வளர் நிலைபற்றி முழு அளவில் அறிந்திருந்தும், மக்கள் முன்பு பல தவறான தகவல்களை அளித்துள்ளார் மோடி. அவருடைய தரத்துக்கு அது நல்லதல்ல.
ஆந்திர மாநிலம் 3.25 லட்சம் இளைஞர்களுக்கு திறமை வளர் பயிற்சிகளை அளித்துப் பணிகளில் அமர்த்தியுள்ளது. குஜராத் 52,000 இளைஞர்களுக் கும், தமிழ்நாடு 1.6 லட்சம் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளன. ஆனால் வேலைகள் கொடுக்கப்பட வில்லை என்று ஓங்கி அடித்தார் ஆந்திர முதல் அமைச்சர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பார்கள்; மோடியின் பொய்ப் பிரச்சாரமும் உரிய காலத்தில் அம்பலமாகி விட்டதே!
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் துரோகிகள்!
திருச்சி கலந்துரையாடலில் தமிழர் தலைவர் சங்கநாதம்!
கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார் (திருச்சி, 27.9.2013)
திருச்சி, செப்.28- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்ப வர்கள் தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் துரோகிகளே! என்று திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் (27.9.2013) கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்!
திருச்சிக்கு நவம்பர் மாதம் மேலும் ஒரு பெரு மையைச் சேர்க்க இருக்கிறது திராவிடர் கழகம். ஆம்! அந்த வரலாறு 09.11.2013 அன்று எழுதப்பட இருக்கிறது. அதுதான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் அறிவிக்கப்பட்ட திரா விடர் எழுச்சி மாநாடு!
திருச்சி கலந்துரையாடலில் தமிழர் தலைவரிடம் கழகத் தோழர்கள் உடற்கொடை உறுதிப் பத்திரம்!
திருச்சி மண்டலமான திருச்சி, இலால்குடி, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டத் தோழர்களால் இணைந்து நடத்தப்படுகிற மாநாடு! ஒரே ஒரு மாவட்டம் மாநாடு நடத்தினாலே அசர வைப்பவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள். இந்நிலையில் அய்ந்து மாவட்டங்கள் இணைகின்றன. தமிழினச் சூழ்ச்சிகளை நொறுக்கிப் போடும் அவர்களின் அசுர வேகங்களைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ?
திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உண்டு!
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பயணிப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மாவட்டக் கழகத் தோழர்கள் ஆசிரியரைச் சந்திப்பார்கள். என் னய்யா, உங்கள் ஊரில் ஒரு மாநாடு நடத்துங் களேன் என்பார். தோழர்கள் சிரித்துக் கொண்டே சென்று, மாநாடு நடத்துவார்கள். இந்த வழமை உலகத்திலே திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உண்டு. இந்தியாவில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினாலே தேர்தல் வரப் போகிறது என்று அர்த்தம்.
ஆனால் இவ்வியக்கம் 365 நாளும் சமூகப் பணியில் இருக்கும். அவ்வகையில் திருச்சியில் திரா விடர் எழுச்சி மாநாட்டை தமிழர் தலைவர் அறி வித்திருக்கிறார். இம்மாநாட்டிற்கு இந்திய அளவில் ஒரு சிறப்பு வரப் போகிறது. ஆம்! இந்தியாவுக்கே மோடி மஸ்தான் வேலை காட்டும் மோடி அவர்கள், நம் திருச்சிக்கு வந்து தம் வித்தையைக் காட்ட முயற்சி செய்துள்ளார்.
ஏற்கெனவே பலர் வித்தைக் காட்டியிருப்பதை நாமறிவோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வித்தை காட்ட லாம். அது அவர்களின் உரிமை! ஆனால் அதை முறி யடித்தே தீருவது கருஞ்சட்டைகளின் கடமையல்லவா!!
மிரட்டிப் பணிய வைக்கும் உத்தியைக் கையாண்டார்கள்
மோடியின் திருச்சிக் கூட்டத்திற்குத் தமிழ்நாடு முழுவதும் விளம்பரம் செய்தார்கள். பல பத்திரி கைகள் பணமே வாங்காமல் தினமும் விளம்பரம் செய்தார்கள். திருச்சி மக்களையே தீவிரவாதிகள் கூட்டம் போல சித்தரித்தார்கள். கூட்டம் நடந்த பகுதிகளில், வீடு புகுந்து ஆட்களைக் கணக்கெடுத் தார்கள்.
ஒருவிதமான அச்ச உணர்வை, மிரட்டிப் பணிய வைக்கும் உத்தியைக் கையாண்டார்கள். ஒரே ஒரு கூட்டத்தின் மூலமே இவர்களின் யோக்கி யதை வெளிப்பட்டது. இப்படியானவர் பிரதமர் ஆனால் இந்தியாவின் நிலை என்னவாகும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. என்னதான் இருந்தாலும் மோடிக்கு ஒரு சக்தி இருக்கத்தானே செய்கிறது என்கிறார்கள். என்ன சக்தி? மூவாயிரம் பேரைக் கொலை செய்ய வைக்கும் சக்திதானே? நாளைக்கே இன்னொருவர் வந்து ஆறாயிரம் பேரைக் கொலை செய்ய வைத்தால் அவர்தான் பாரதீய ஜனதாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர்.
இப்படியான ஒரு கட்சி இந்த நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெரிய கேடு. இந்தக் கேட்டைத் தமிழ் நாட்டிலும் செய்யலாம் என்றால், எவ்வளவு பிழை யான எண்ணம். மோடிக்கு பெரியார் குறித்துத் தெரியவில்லை அல்லது யாரும் சொல்லவில்லை என்பது தெரிகிறது. யாரும் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் சொல்கிறோம் நாங்கள் யாரென்று! அதற்காகத்தான் தமிழர் தலைவர் முரசு கொட்டி அறிவித்துள்ளார் எழுச்சி மாநாட்டை!
திருச்சி மண்டலத் திராவிடர் கழகக் கூட்டம்
மதத்தின் பேரால் எம் மக்கள் அறிவை இழக்கக் கூடாது, பொருளியல் இழக்கக் கூடாது, உழைப்பை இழக்கக் கூடாது என்று போராடுபவர்கள் நாங்கள். அப்படியிருக்க மதத்தின் பேரால் எம் மக்களின் உயிர் குடிக்க, நாங்கள் எப்படி அனுமதிப்போம்? உங்கள் சூழ்ச்சிகளை முளையில் கிள்ளி எறியவே எங்கள் தலைவர் தேதி குறித்துள்ளார். ஆம்! நவம்பர் 9 அன்று தமிழகமே திருச்சியில் இருப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. அதன் முதல் அம்ச மாக நேற்று (27.09.2013) திருச்சி மண்டலத் திராவிடர் கழகக் கூட்டம், திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் தலைமை வகிக்க, நூற்றுக்கணக் கான தோழர்கள் குவிந்திருந்தனர். செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மற்றும் திருச்சி, இலால்குடி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டத் தலை வர்கள் முன்னிலை வகித்தனர். திருச்சி மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து மு.சேகர், ச.கணேசன், ப.ஆல்பர்ட், விடுதலை நீலமேகம், சிந்தனைச்செல்வன், ஆறு முகம், சித்தார்த்தன், வழக்கறிஞர் இராஜசேகர், காளிமுத்து, மாநில அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு ஆகியோர் மாநாடு சிறக்க தங்கள் கருத்து களைக் கூறினர். மேலும் மாவட்டப் பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் பலரும் சிறந்த முறையில் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். இறுதியில் தமிழர் தலைவர் சிறப்புரை வழங்கினார்.
தமிழர் தலைவர் உரை
அவர் தம் உரையில், நவம்பர் 9 ஆம் தேதி திருச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு நடத்தலாம் என்று செப்டம்பர் 19 ஆம் தேதியன்றுதான் முடிவு செய்தோம். அது தொடர்பாய் கலந்துரையாடல் கூட்டம் நடத்தவேண்டும் எனக் கடந்த வாரம் தான் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் இவ்வளவு உற்சாகத்தோடு கூடியுள்ளீர்கள். ஏதாவது நடந்தால் தான் நமக்கு உற்சாகமே பிறக்கிறது.
நாம் சற்றுத் தூங்கினாலும், நம்மை உசுப்பி விடுகிறார்கள். சம்பவங்கள் நம்மை ஓய்வாக இருக்க விடுவதில்லை. பெரியார், அண்ணா, காமராசர் உருவாக்கிய இந்த மண்ணைக் கிளறிவிடத் துடிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது? இங்கு ஆரியம், திராவிடம் பேசக் கூடாது, இது இந்து நாடு. மனுதர்மம், வர்ணாசிரமம் மட்டுமே நடைமுறை யில் இருக்கவேண்டும் என்கிறது. மக்களுக்கு இருக் கின்ற நடைமுறைப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, அவர்கள் தங்கள் மதவெறிக் கருத்துகளை விதைக்க எண்ணுகிறார்கள்.
கண்டுபிடிக்கிற சக்தி பெரியார் கண்ணாடிக்கு உண்டு!
குறிப்பாக இளைஞர்களைக் குறி வைக்கிறார்கள். வரலாற்றில் அசோகர் ஆட்சிதான் சிறந்த ஆட்சியாக இருந்தது. ஆனால் குப்தர் ஆட்சியே சிறந்தது என இவர்கள் வரலாறு எழுதினார்கள். பி.ஜே.பி. கட்சி யினர் அடித்தளத்தில் கைவைப்பவர்கள். அதைக் கண்டுபிடிக்கிற சக்தி பெரியார் கண்ணாடிக்கு உண்டு.
ஆரியத்தைக் காக்க பி.ஜே.பி. என்கிற அரசியல் கட்சியின் வடிவில் வருகிறார்கள். இவர்கள் வந்தால் நாடு செழிக்கும் என சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இவர்கள் முற்றிலுமாக தமிழர் பண்பாடு, தமிழர் உரிமை, தமிழர் நாகரிகம், தமிழர் எழுச்சிக்கு எதி ரானவர்கள். இவர்களோடு அரசியல் கூட்டு வைப்ப வர்களும் தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் துரோகிகளே ஆவர். மோடிக்காக மட்டுமல்ல, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டும் நாம் இந்த எழுச்சி மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
கோத்ரா ரயில் எரிப்பை முன்னிட்டு மோடி இரண்டு முறை ஆட்சிக்கு வந்துவிட்டார். இனி இந்தியாவில் அவர்கள் ஆட்சிதான் என்கிறார்கள். எமர் ஜென்சி காலத்தில் காங்கிரசையும் இப்படித்தான் கூறினார்கள். ஆனால் வரலாறு வேறு மாதிரியாக இருந்தது.
மக்களுக்குத் தெரியவரும்; தெளிவு வரும்!
நாளை காலை என்ன நடக்கும் எனத் தெரியா ததற்குப் பெயர்தான் அரசியல். அதனால் எந்த அச் சுறுத்தல்களும் எங்களிடம் பலிக்காது. திருச்சிக்கு மோடி வந்தபோது நிறைய பேர் கறுப்புக் கொடி காட்டினார்கள். நாங்கள் காட்டவில்லை. ஏனெனில் மோடி வரட்டும் என்றே நினைக்கிறோம். வந்தால் தான் மக்களுக்குத் தெரியவரும்; தெளிவு வரும்!
1952 வரலாறு என்ன சொல்கிறது?
அக்கூட்டத்தில் மோடி பேசும்போது, மொழி வழி மாநிலங்கள் கூடாது என்றும், இட ஒதுக் கீட்டுக்கு எதிராகவும் பேசியுள்ளார். தமிழகத்திற்கு எதிரான அவரின் பேச்சே, அவரை யாரென்று அடையாளம் காட்டுகிறது. அவர்களுக்குப் பணம் ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை. முதலாளிகள் அள்ளிக் கொடுக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கூட கிறிஸ்தவர், இசுலாமியர்களுக்கு வருவதைவிட இவர்களுக்கு நிறையவே வருகிறது.
இதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் தங்களைப் பெரிய பலூ னாக அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். இருக் கட்டும்! அவர்கள் பெரிய பலூனாகவே இருக் கட்டும். நாம் சின்னக் குண்டூசியாய் இருப்போம்! இவர்களைவிட பெரியவர்கள் தான் காங்கிரஸ். 1952 வரலாறு என்ன சொல்கிறது? அவர்களின் வாக்குப் பெட்டியில் மண் இருந்தது எனச் சொல்கிறது. இவர்களுக்கும் அதே நிலைதான் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது.
பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு!
பெரியார் பெருந்தொண்டர்கள் சிறீரங்கம் ஆ.பெரியசாமி, பொன்மலை கணபதி ஆகியோரின் கொள்கை உணர்வுகளைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அவர்கள் இருவரும் திருச்சியில் நடைபெறும் திராவிட எழுச்சி மாநாட்டிற்கு தலா ரூ.5 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (திருச்சி, 27.9.2013)
மாநாட்டிற்கான முதல் வெற்றி!
அவ்வகையில் திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கு மதச்சார்பற்ற கட்சிகள், இயக்கங்களை ஒன்று கூட்ட இருக்கிறோம். நம் கவனம் முழுக்க மாநாடு தொடர்பாகவே இருக்கவேண்டும். திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், பத்திரிகைப் பிரச்சாரம், துண்டறிக்கைப் பிரச்சாரம், இணைய தளப் பிரச்சாரம், முகநூல் பிரச்சாரம் என ஒன் றையும் விடாமல் நாம் கவனம் செலுத்த வேண்டும். உற்சாகத்தோடு இங்கே நீங்கள் கூடியுள்ளீர்கள். அதுவே மாநாட்டிற்கான முதல் வெற்றி.
குடும்பம், குடும்பமாகப் பங்கேற்று மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்
கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (திருச்சி, 27.9.2013)
நாளை முதல் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ் வொரு நிமிட நேரமும், ஒவ்வொரு விநாடிதோறும் நீங்கள் உழைக்கவேண்டும். குடும்பம், குடும்பமாகப் பங்கேற்று மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும். சமுதாய, இன எழுச்சி வரலாற்றில் இம் மாநாடு இடம் பெற வேண்டும் எனத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மதவெறி சக்திகளுக்கு இடமில்லை என்று நிரூபித்துக் காட்டும் விதமாக, எதிர்வரும் நவம்பர் 9 அன்று (09.11.2013) திருச்சியில் நடைபெறவுள்ள திராவிடர் எழுச்சி மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திடவும், அதற்கான சுவரெழுத்து விளம்பரங்களைத் திரும்பிய திசை எங்கும் செய்திடவும்,
வசூல் பணிகள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை முழு வீச்சோடு செய்து, மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளிப்பதெனவும், மாநாட்டில் குடும்பம், குடும்பமாகப் பங்கேற்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கண்டவாறு கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மோடியின் அடையாளம் இப்போதே தெரிந்துவிட்டது!
திருச்சியில் நவம்பர் 9 அன்று மாபெரும் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு வேலைகள் நடந்துக் கொண்டுள்ளன. மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி மாநாடு நடத்தப்படுகிறது. இந்தி யாவை இந்து நாடாக்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக இருக்கிறது. இதற்கு இளைஞர்களைப் பயன்படுத்த எண்ணுகிறார்கள்.
இது பெரும் ஆபத்து. சமுதாய வளர்ச்சியைத் தடை செய்யும் இச்செயலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மதச் சார்பற்ற அணியில் இருப்பவர்களை ஒன்று திரட்டி இம் மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்துவோம். காலையில் இளைஞரணி கருத்தரங்கம், மாலை மாநாடு எனத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு முழுக்க தோழர்கள் பங்கேற்பர். மோடி கூட்டம் குறித்துக் கேட்கிறீர்கள். திருச்சி யில் எவ்வளவோ விழாக்கள் நடக்கின்றன.
அந்த விழாக்களைப்போல இதுவும் ஒரு விழா, அவ்வளவு தான்! சிறீரங்கத்தில் கூட தினமும் ஏதாவது நடக்கிறது, அதைப் போல அதுவும் நடந்திருக்கிறது. மொழி உணர்வுக்கே இங்கு இடமில்லை என்கிறார் மோடி. அவரின் அடையாளம் இப்போதே தெரிந்து விட்டது. பி.ஜே.பி தமிழகத்தில் கால்பதித்தால் அதைவிட, வேறு ஆபத்தில்லை.
திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் மூலம் இதனை நாங்கள் முறியடிப்போம்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்
பாரதத்தாயின் துயரம்
- சித்திரப்புத்திரன்
ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய்.
என் மக்களில் பெரும்பாலோரை அயோக் கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப்போது தலைவர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அநேக அயோக்கி யர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லாவிட்டால், எனது அருமைப் புத்திரனான காந்திமகான் எனக்காகச் செய்த தவமும், தியாகமும், ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா?
நீ இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால், எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்கார முடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப்பேசிய அயோக்கியர்களும், சுயநலக்காரர்களும், துரோகிகளும் ஜனப்பிரதிநிதிகள் ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்து மாதம் 1- க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது ஏழைகளின் பணத்தைக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார் பொறுப்பாளி?
காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து எழுவேன். விடுதலை பெறுவேன். சுயமரியாதை அடைவேன். இது சத்தியம்.
பாரதத்தாய் தனது மக்களுக்குச் சொல்வது.
ஏ மக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும், உங்கள் மூட புத்தியாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள் இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதிகள் பரவி என்னைப் பாழாக்குகிறது. காலரா, பிளேக், வைசூரி ஒவ்வொன்றும் மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக் கூடியது,
ஆனால் காங்கிரஸ் சுயராஜ்யம் தேசியம் என்னும் வியாதிகளோ எனது, முப்பத்து முக்கோடி மக்களையும், அவர்கள் வாழும் தேசமாகிய என்னையும், அவர்களது அறிவையும், செல்வங்களையும், ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளைகொண்டு பாழ்பண்ணிக் கொண்டு வருகிறதே, இதை கவனிப்ப தில்லையா? மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இது தானா அடையாளம்?
இவ்வியாதிகளின் பேரால் வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன் இன்னும் வை இன்னும் வை என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே இதுதான் உங்கள் மக்கள் தன்மையா?
எவனாவது ஒரு காங்கிரஸ்காரன், இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு வேண்டுமென்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு வந்தால் உடனே நீங்கள் அப்பன், மக்கள் எல்லோரும் கையெழுத்து போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு வைத்த மறுநாளே நீங்கள் அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான், குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் என்கிற முறையில் கோர்ட்டுக்குப் போக வேண்டியுள்ள வர்களாகிறீர்கள்.
பிராமணியம், பிரிட்டாணியம் இந்த இரண்டைவிட தேசியமே பெரிய ஆபத்தானது. பிரிட்டாணியத்தை கடுகளவாவது அசைக்க வேண்டுமானால் முதலில் இந்த தேசியமும், இரண்டாவது ஆக பிராமணியத்தையும் தொலைக்க வேண்டும். பிராமணியத்தை நிதானமாகக்கூட ஒழிக்கலாம்.
அவசரமாக தேசியத்தைத் ஒழிக்க வேண்டும். ஏனெனில், தேசியமே பிரிட்டானியத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிறது. தேசியத்தை இடித்து விட்டால் பிரிட்டானியம் ஆடிப்போகும். தேசியமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே பிரிட்டானியம் உண்மையான சுதேசியமாய் விட்டிருக்கும்.
- குடிஅரசு - கட்டுரை - 05.06.1927
ஒரு சமாதானம்
சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் நாயக்கரின் நய வஞ்சகம் என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக ஸ்ரீ வரதராஜுலுவின் வண்டவாளம் என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப்பட்டிருந்த கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்கு கொஞ்சகாலத்திற்கு முன் எழுதியதாக காட்டப்பட்டிருந்த கடிதத்திற்குச் சமாதானமாகவும் அடுத்த வாரம் எழுதுவதாக பதில் எழுதியிருந்தோம்.
அதை உத்தேசித்து அநேக கனவான்கள் நமக்கு பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது, நாம் எழுதப்போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங்களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் இஷ்டப்படி கண்டித்து நாயுடுவுக்கு பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்;
இவ்விதம் இருவர் சண்டை போட்டுக்கொள்வது ஒழுங்கல்ல வென்கிற முறையில் சிற்சில கடிதங்களும், இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப் போகும் பத்திரிகையின் சுமார் 250 பத்திரிகை வரையில் அதிகமாக அனுப்பிக் கொடுக்கும்படி பல கடிதங்களும் வந்திருக்கின்றன.
இவ்வளவும் நாம் இந்த வாரத்தில் பிரசுரிக்கும் போது பதில்களுடன் சேர்ந்து பிரசுரிக்கவே வந்திருக்கின்றன. நாமும் சென்ற வாரம் எழுதியது போலவே, நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் மனப்பூர்வமாக நாம் சரி என்று எண்ணுவதையும் கொண்டு ஒரு விரிவான வியாசம் எழுதலாமென்றுதான் இருந்தோம். ஆனால் நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரும் உண்மையான நண்பர் என்று எண்ணிக் கொண்டிருப்பவருமான ஒரு கனவான் இவ் விஷயத்தில் மிகுதியும் சிரமம் எடுத்துக்கொண்டு சில நிபந்தனைகளின் பேரில் விவாதத்தை இத்துடன் நிறுத்திவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்.
ஏறக்குறைய அவர் உறுதி கொடுத்த நிபந்தனைகளானது நமது பிற்கால பிரயத்தனங்களுக்கு கெடுதியில்லாததாகவும் அனுகூலத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருந்ததோடு, அந்நிபந்தனைகள் நிறைவேற்ற அவரே பொறுப்பேற்றுக் கொண்டதினாலும், ஸ்ரீலஸ்ரீ கைவல்யசாமிகள் முதல் பல பெரியவர்கள் இது விஷயமாக நமக்கு எழுதியிருப்பவைகளுக்கிசைந்து ஒருவாறு நிறுத்திக்கொண்டு இருக்கிறோம்.
இம்மாதிரி நாம் எழுதியிருப்பதானது அநேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்குமென்பது நமக்குத் தெரியும். ஆனாலும் ஏமாற்றமடைந்தவர்களில் பலருக்கும் நமக்கும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தினிடத்திலே தான் அதிக கவலையும் மதிப்புமே தவிர சண்டையும், அவசியமில்லா வீரியமும் பெரியதல்ல. இது விஷயமாக வந்த பல கடிதங்களை இதுசமயம் போடாததற்கு நிருப நேயர்கள் மன்னிக்க வேண்டும்.
இதற்குமேல் விரிவான சமாதானத்தை விரும்புகின்றவர்களுக்கு கோயம்புத்தூர் மகாநாட்டுக்குப் பிறகு தெளிவாக கூறுவோம்.
- குடிஅரசு - செய்தி விளக்கம் - 29.05.1927
மித்திரன் நிருபரின் அயோக்கியத்தனம்
நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிருபர் ஒருவர் மிகவும் அயோக்கியத்தனமான ஒரு நிருபத்தை மித்திரனுக்கு அனுப்பியிருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும், அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்து விட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.
இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிருபர்களும் மானம், வெட்கம், சுத்த ரத்தவோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்ப தாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிருபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை.
இதன் காரணமும் நமக்குத் தெரிவ தில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும், யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோப்போர் கோக்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம்.
நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க சூழ்ச்சி செய்தது காரைக்குடியில் உள்ள ஒரு பத்திரிகை காரியா லயத்தில் இருக்கும் ஒரு பார்ப்பனர் என்று தெரிவிக்கிறோம். ஆனாலும், அதனால் பத்திரிகை வேலை குந்தகப்படாமல் நடந்தேற உதவிய நண்பருக்கு நமது வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
- குடிஅரசு - செய்திக்கட்டுரை - 12.06.1927
விருத்தாசலத்தை வியக்க வைத்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்
நேற்று (28.9.2013) விருத்தாசலத் தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டையொட்டி மாலை நடை பெற்ற மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநாடு என்றால் ஊர்வலம் இல்லாமலா? அதிலும் மாணவர் கழக மாநாடு. குறிப்பாக, இளைய தலைமுறையிடம் தானே இயக்கத்தின் கொள்கைகள், இமயமாய் உயர்ந்து நிற்கின்றன; நிற்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அருகே தொடங் கிய ஊர்வலத்தை கடலூர் மண்டல திக செயலாளர் அரங்க.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க, மாவட்ட மாண வரணி தலைவர் த.தமிழ்செல்வன் தலை மையில் கடலூர் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் சி.மணிவேல், விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.அறிவு, கடலூர் மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் அ.முத்துராஜா, சிதம்பரம் மாவட்ட மாணவரணி செய லாளர் ச.செங்குட்டுவன், விழுப்புரம் மாவட்ட மாணவரணி தலைவர் ச.எடிசன், விருத்தாசலம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.சிலம் பரசன், விருத்தாசலம் மாவட்ட மாண வரணி அமைப்பாளர் வெங்கட்ராசா, கல்லக்குறிச்சி மாவட்ட மாணவரணி தலைவர் கூ.தமிழ்மணி, கல்லக்குறிச்சி மாவட்ட மாணவரணிச் செயலாளர் செ.திலீபன், திண்டிவனம் மாவட்ட மாணவரணிச் செயலாளர் இரா.சீனிவா சன் முன்னிலையில் மாணவர் கழகத் தோழர்கள் கழகக் கொடிகளைக் கையி லேந்தி விருத்தாசலத்தின் மிக முக்கிய வீதிகளில் முழங்கி வந்த காட்சி மூடநம் பிக்கையின் முதுகெலும்பைத் தேடித் தேடி ஒழிக்கும் வகையில் அல்லவா இருந்தது!
கூத்தனூர் பறையாட்டம், கூடியிருந்த வர்களை குதூகலிக்கச் செய்தது. மாலை நேரம், முக்கிய கடைவீதிகள், மக்களோ ஆயிரம் ஆயிரமாய் ஆர்வத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்த காட்சி என்னே! என்னே!! உலகில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கின்ற ஒரு இயக்கம், அதன் கொள்கைகளை மக்களிடையே நேரடியாகச் சென்று, மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் வண்ணம் (DEMO) விளக்க நிகழ்ச்சிகளை செய்துகாட்டும் அறிவியல் இயக்கம், நம்மை விட்டால் வேறு உண்டா?
கழக மகளிரணியின் கைகளிலே ஏந்தி வந்த தீச்சட்டியைக் கண்டு விருத்தாசலம் மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தை கள் வியந்து போயினர். தீச்சட்டி இங்கே! மாரியத்தா எங்கே? என்ற முழக்கம் பக்தர்களின் காதில் இடியெனப் பாய்ந் தது. பதிலைத்தான் காணோம். அரிவாள் மீது ஏறி நின்று, கறம்பக்குடி முத்து - சண்முகசுந்தரம் குழுவினர் கேட்டபோது திகைத்து நின்றனர்.
கழகத் தோழர்கள் அலகு குத்தி கார் (டாடா சுமோ) இழுத்த காட்சி காண் போரை, பக்தர்களை வெட்கப்படச் செய்தது. மடையரைத் திருத்ததங்களை வருத்திக்கொண்ட கழகத் தோழர் களைப் பாராட்ட வார்த்தைகள் ஏது? ஆம்; திண்டிவனம் சக்திவேல், முருகன் என்கிற சிந்தனைச் சிற்பி, ரமேஷ் ஆகிய தோழர்கள் தான் அந்த மாவீரர்கள்.
சடையார் கோயில் நாராயணசாமி குழுவினரின் ஆடல், பாடலுடன் கூடிய கோலாட்ட நிகழ்ச்சி அதுவும் பெரியார் பிஞ்சுகளைக் கொண்ட அந்த எழில் கொஞ்சும் நிகழ்ச்சி காண்போரின் மனதைக் கொள்ளை கொண்டது. மாண வர்களின் அணிவகுப்பு, அலகுக் காவடி, சரசுவதி அறிவாலயப்பள்ளி மாண வர்கள், சிதம்பரம் கழக மாணவரணி, திண்டிவனம் கழக மாணவரணி, கல்லக் குறிச்சி கழக மாணவரணி, ஊர்வலத்தில் பதாகை தாங்கிய பேரணியும் இடம் பெற்றது. கடலூர் மாவட்டம் வேகாக் கொல்லையைச் சேர்ந்த மா.மணிமொழி - மா.வெண்மணி ஆகிய பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம் அனை வரையும் ஈர்த்தது. பாலக்கரை அருகில் அமைக்கப்பட்ட தனிமேடையில் தமிழர் தலைவர், கழகத் தலைவர் பார்வையிட் டார். அப்போது கழக மகளிரணியினர் கைகளிலே ஏந்திவந்த தீச்சட்டி தலை வரது கரத்திற்கு மாறியது. பொதுமக்கள் இதனைப் பார்த்து தெளிவுற்றனர்.
அரசு கலைக்கல்லூரி தொடங்கி ஜங்சன் சாலை, பங்களாத் தெரு, ஆவடி சாலை, கடலூர் சாலை, மணிமுத்தாறு வழியாக மாநாட்டுத் திடல் - வானொலித் திடலை அடைந்தது. நமது இயக்கப் பேரணி களைத் தவிர, வேறு எந்தக் கட்சியின் ஊர்வலம், பேரணிகளில் இவ்வளவு கட்டுப்பாட்டை தொடக்கம் முதல் இறுதி வரை, கடைப்பிடித்திருக்க முடியுமா? என்று காவல்துறையினரே வியந்து போகும் வண்ணம் கழகத்தின் ஊர்வலம் அமைந்தி ருந்தது. மேற்கண்ட வீதிகளில் மட்டுமல்ல, விருத்தாசலத்தின் நகரெங்கும் நம் மாநாட்டை பற்றியே பேச்சு. அதன் எதி ரொலி இன்னும் கேட்டுக் கொண்டு தானிருக்கப் போகின்றது.
முயற்சிக்கவேண்டும்
தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும். - (விடுதலை, 20.3.1950)
வன்முறையால் கழகத்தை ஒடுக்கிவிட முடியாது!
கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு விருத்தாசலத்தில் 28.9.2013 அன்று வெகுநேர்த்தியாக - எழுச்சியாக நடைபெற்றது. ஊர் எங்கும் மாநாட்டைப்பற்றிப் பேசும் அளவிற்குச் சுவர் எழுத்து விளம்பரங்களும், பதாகைகளும், ஃபிளக்சுகளும் பளிச் பளிச்சென்று ஒளிர்ந்தன! கழகக் கொடிக்காடாகக் காட்சியளித்தது.
முற்பகலில் மிகச் சிறப்பான அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொருவரும் தத்தம் தலைப்புக்கேற்ப கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மக்கள் மன்றமே நிரம்பி வழிந்தது. மாணவர் கழக மாநாடு என்பதற்குப் பொருத்தமாக ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டிருந்தனர்.
தமிழர் தலைவரின் உரை அனைவரையும் ஈர்த்தது. எந்த அளவுக்கு அந்த உரை அமைந்தது? அவர் பேச்சு மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கைகளில் வண்ண வண்ணமாகக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றிய மூட நம்பிக்கை, நாள் கணக்கில் கட்டியிருப்பதால் அழுக்குகள் சேர்வது, கிருமிகள் சேர்வது உள்பட அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொன்னதுதான் தாமதம் - இருபால் மாணவர்கள் பலரும் மேடைக்கு வந்து தாங்களாகவே கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தனர் - அதாவது கைமேல் பலன் கிடைத்தது!
விருத்தாசலம் மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி - பொதுமக்கள் மத்தியில் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய அலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே கூறவேண்டும்.
20 ஆண்டுகளுக்குமுன் இதே விருத்தாசலத்தில் நடத்தப்பட்ட திராவிடர் கழக வட்டார மாநாட்டையொட்டிக் கூட பேரணி நடத்தப்படவில்லை. அந்த வகையில் மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டிய - பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பேரணி அவ்வூர் மக்களை அதிசயிக்க வைத்துவிட்டது.
கழகத் தோழர்களின் கட்டுப்பாடான அணிவகுப்பைப் பார்த்து, காவல்துறையினரே வியந்தனர் என்றே கூறவேண்டும்.
திறந்தவெளி மாநாடு வானொலிதிடலில் வீதி நாடகங்களோடு தொடங்கப்பட்டது. அந்த வானொலித் திடலில் - அதற்குமுன் அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில்லை என்று கூறுகிற அளவுக்குப் பொதுமக்கள் கடல்! பெரும்பாலும் இளைஞர்களைக் காண முடிந்தது.
இவ்வளவு சிறப்பாக எழுச்சியாக திராவிடர் மாணவர் கழக மாநாடு நடைபெற்றதைக் கண்டு பொறுக்க முடியாத ஒரு சிறு கும்பல் மாநாட்டு மேடைக்கு வந்து கொண்டிருந்த கழகத் தலைவரின் வாகனத்தை வழிமறித்துத் தாக்கியுள்ளது.
திராவிடர் கழகத் தலைவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று காவல் நிலையத்திற்குக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தும், காவல்துறை அதிக கவனமாக இருக்கத் தவறியது ஏன்? என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.
குறிப்பிட்ட இடத்தில் பத்திரிகையாளர்கள், தொலைக் காட்சியினர் எப்படி வந்திருந்தனர்? அப்படியென்றால், ஏற்கெனவே திட்டமிட்டு இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டுள்ளது என்பது வெளிப்படை! பத்திரிகைக்காரர்கள் வரை தெரிந்திருந்த ஒரு முக்கியமான நிகழ்வு - காவல்துறைக்குத் தெரியாது - காவல்துறை எதிர்பார்க்கவில்லை என்று எவரேனும் சொல்ல முடியுமா? காவல்துறையின் கவனத் துக்கே வராமல் நடந்துவிட்டது என்றால், அதைவிட காவல்துறையின் செயலின்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? காவல்துறையில் உளவுப் பிரிவு என்பது இல்லையா?
ஏற்கெனவே காவல்துறைக்கு எழுதிக் கொடுத்தவர் களைக் கண்காணித்து இருக்கவேண்டாமா? அவர்களை அழைத்து எச்சரித்து இருக்கவேண்டாமா?
ஒரு முக்கியமான தலைவர் வந்திருக்கும்பொழுது காவல் துறையினர் அவருக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படைகூட தெரியாமல் காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.
மாநாடு நடைபெறக்கூடாது; மாநாடு நடந்தாலும் பேரணி நடைபெறக்கூடாது என்று, மனப்பால் குடித்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்போடு, பெரும் வீச்சில் நேர்த்தியாக நடைபெற்றது - கழகத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்!
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திறந்தவெளி மாநாட்டில் தெரிவித்ததுபோல எதிர்ப்புகளுக் கிடையே வளர்ந்து வந்ததுதான் இந்த இயக்கம் - எங்கள் பயணத்தை, செயல்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது!
வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது முறைப்படி காவல் துறையினரிடம் புகார் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் - அதன் பின்னணி என்ன? என்ற வினாக்கள் எழுந்துள்ளன.
தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும், காவல்துறையின் போக்கிற்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தோழர்கள், தமிழர்கள் பதற்றமாக விசாரித்து வருகின்றனர்.
தோழர்களே, பொறுமையுடன் நம் பணிகளை மேலும் எழுச்சியுடன் நடத்துவதன்மூலம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் உரிய பாடத்தைக் கற்பிப்போம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
விருத்தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம் சேலத்தில் தமிழர் தலைவர் பேட்டி
சேலம், செப். 30- விருத் தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்ற மூலம் தீர்வு காண்போம் என்று சேலத்தில் திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
சேலத்தில் பெரியார் படிப்பகம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி கலந்து கொண் டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விருத்தாசலத்தில் நடந்த திராவிடர் கழக இளைஞர் அணி கூட் டத்தில் கலந்து கொள் வதற்காக சென்றேன். அப்போது ஒரு கும்பல் என்னுடைய வாக னத்தை மறித்து என்னை தாக்க முயன்றது. இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்பட வில்லை. காவல்துறை யினரின் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது.
இது கண்டிக்கத்தக் கது. இந்த சம்பவத்தால் தொண்டர்கள் எழுச்சி யால் வேறு எந்த ஒரு அசாம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கட்டுப் படுத்தி வைத்துள்ளோம்.
விருத்தாசலம் சம்ப வம் தொடர்பாக காவல் துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண்போம். தமிழகத் தில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்ப வங்கள் நடந்து வருகின்றன.
சினிமா நூற்றாண்டு விழா என்பது ஒரு விழாவே கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும் அவர்க ளுக்கு எங்களது ஆதரவு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர் தலைவர் மீது தாக்குதல் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்
விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்தல் வழக்கு தொடர்பாக ஆஜரான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- விருத்தாச்சலத்தில் நடந்த கடலூர் மண்டல திராவிடர் கழக மாண வரணி மாநாட்டில் பங்கேற்க வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர் களை தாக்க முயற்சித்தது, கண்டிக்கத்தக்கது, கருத்துக்கு கருத்துதான் மோத வேண்டுமே தவிர கற்களால் மோதுவது நாகரீகமான செயல் அல்ல, இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
" ஆரியம், தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப்போர்வை தரித்துக் கொண்டு, வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத்தெரிய வொட்டாது தடுத்து, நாசத்தை, நமது இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது. அந்த நஞ்சினை உண்ணாதீர், என்று கூறும், சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள், ஏசுகின்றனர், ஏளனம் பேசுகின்றனர். ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சுயமரியாதைக்காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம், இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே” என்று ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும் ! "
= அறிஞர் அண்ணா , 17 - 10 - 1943 , திராவிடநாடு இதழில்
Post a Comment