நிர்வாகம், சட்டத்துறைக்குப் பொருந்தும் இடஒதுக்கீடு நீதித்துறைக்கும் பொருந்தும்!
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில்
இடஒதுக்கீட்டைப் பின்பற்ற சிபாரிசு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லும் கருத்து சரியல்ல!
அரசமைப்புச் சட்டம் 16(4) கூற்றுக்கும் முரணானது
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுமாறு உச்சநீதி மன்றம் ஆணையிட முடியாது என்று இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து - அரசமைப்புச் சட்டம் 16(4) பிரிவுக்கு முரணானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (23.9.2013) உச்சநீதிமன்றத்தில்
(உச்ச)நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசுக்கு
உத்தரவிட முடியாது. சுப்ரீம்கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது,
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை
நியமிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, போடப்பட்ட பொது நல மனுவின்மீது
தீர்ப்பு வழங்கிய ஜஸ்டீஸ் டி.எஸ். தாக்கூர் தலைமையிலான (பெஞ்ச்) அமர்வு,
அக்கோரிக்கையை ஏற்று தாங்கள் அப்படி ஒரு ஆணையை பிறப்பிக்க இயலாது என்று
தெரிவித்துள்ளது. இது சட்டப்படி சரியா தவறா என்ற வாதம் ஒருபுறம்
இருந்தாலும், அத்தீர்ப்பில் நீதிபதிகள் ஒரு முக்கிய கருத்தை கோடிட்டுக்
காட்டியிருக்கின்றனர்.
சமூக நீதி - அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள்படி அது முக்கியமானது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
மனுவின் நோக்கத்தை நாங்கள் அறிந்து கொள்ளு
கிறோம். சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து இனத்தவர்
மற்றும் ஜாதிகளைச் சார்ந்தவர் களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம்
இருக்கலாம். (அதற்காக, தனி ஒதுக்கீடு அளிக்க முடியாது).
இது தொடர்பாக நாங்கள் எவ்வித உத்தரவையும்
பிறப்பிக்க முடியாது. பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கருதினால், அரசிடமோ
அல்லது தலைமை நீதிபதி யிடமோ மனு செய்யலாம் என்று குறிப்பிட்டிருப்பதாக ஒரு
செய்தி நாளேடுகளில் வந்துள்ளது.
இதுபற்றி, சமூகநீதிக்காகப் போராடும்
இயக்கத்தின் சார்பில் நமது கருத்தை உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய
அரசுக்கும் தெளிவுபடுத்தி, வற்புறுத்திட வேண்டியது நமது முக்கிய
கடமையாகும்.
இடஒதுக்கீடு சலுகையோ, பிச்சையோஅல்ல!
இத்தீர்ப்பில் ஒரு மய்யக் கருத்து
அனைவருக்கும் (ஜனநாய கத்தில்) வாய்ப்புத் தரப்படுதல் நியாயமானது தான்
என்பதை உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மறுக்கவில்லை.
இதைப்பற்றி, எடுத்த எடுப்பிலேயே ஒரு கருத்து தெளிவாக்கப்படல் வேண்டும்.
சமூகநீதி அடிப்படையில், இத்தகைய
ஒதுக்கீடுகள் - உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு -
பிரதிநிதித்துவம் என்பது சலுகையோ (Concession) பிச்சையோ ((Charity) அல்ல.
16ஆவது பிரிவில் 4ஆவது உட்பிரிவு கூறுவதென்ன?
மாறாக, அது உரிமை, அடிப்படை உரிமை அரசியல்
சட்டப்படியே (Fundamental Right) என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள
16ஆவது பிரிவு 4ஆவது உட்பிரிவின்படி,
“Equality of Opportunity in Matters of Public Employment (1) There shall
be equality of opportunity for all citizens in matters, relating to
employment or appointment to any office under the state.
இந்தப் பிரிவுதான் முக்கியமானது. இதில்
உள்ள 4ஆவது உட்பிரிவுகள், சமூகநீதியை நடைமுறைப்படுத்தச் செய்ய
துவக்கத்திலிருந்தே அதாவது முதலாவது சட்டத் திருத்தத்திற்கு முன்பிருந்தே
இருந்து வரும் பிரிவு 16(4) என்பதாகும்.
இதன் தத்துவமும், நோக்கமும்.
1. எல்லோர்க்கும் வாய்ப்பு. அரசு வேலைகளிலும், நியமனங்களிலும் (Employment or Appoinments) என்ற அரசியல் சட்டப் பிரிவுப்படி.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் (By Appointment)
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் (By Appointment)
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் (By Appointment)
என்பது குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அடுத்தவர் “to any office under the State என்ற வரிகள் மிகவும் தெளிவாக்கியுள்ளன!
இதனை நாளடைவில், வியாக்யானம் செய்த
நீதிபதிகளும் மற்றும் சில ஆதிக்க மனப்பான்மையுடைய சட்ட வல்லுநர்களும் இந்த
இடஒதுக்கீடு மாவட்ட நீதிபதிகள் வரைதான் பொருந்தக் கூடியதாகவும், அதற்கு
மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள்
நியமனத்திற்குப் பொருந்தாது என்றும் திசை திருப்பி விட்டனர்! திட்டமிட்டே
இப்படி ஒரு வியாக்யானம் கூறப்பட்டது.
எந்த நியமனத்திற்கும் பொருந்தும்
அரசியல் சட்ட விதிகள் மேலே
கூறப்பட்டுள்ளவைபடி, இது எந்த நியமனத்திற்கும் “Any Office under the
State” பொருந்தும் என்பதே நியாயமான பொருளாகும்.
தகுதி, திறமை பார்க்க இப்படி ஒரு
பாதுகாப்பு - அதாவது உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப்
பொருந்தாது என்று வியாக்யானம் ஒரு தரப்பாரால் கூறப்படுகிறது.
இது விசித்திரமான வாதம் ஆகும்; எப்படியெனில்,
(அ) அப்படியானால் மாவட்ட நீதிபதிகளுக்கு தகுதி, திறமை பார்க்கப்பட வேண்டாமா?
(அ) அப்படியானால் மாவட்ட நீதிபதிகளுக்கு தகுதி, திறமை பார்க்கப்பட வேண்டாமா?
(ஆ) வந்தவர்கள் எல்லாம் அவை இல்லாதவர்களா?
தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா!
(இ) மாவட்ட நீதிபதிகளிலிருந்தும்
உயர்நீதிமன்ற நீதிபதிகளாகி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை செல்லுகின்றனரே,
அது எப்படி சரியாக முடியும் - தகுதி, திறமைக்கு ஏன் இரட்டை அளவுகோல்?
தந்தை பெரியார் கேட்டபடி,
தலைக்கு ஒரு சீயக்காய்
தாடிக்கு வேறு ஒரு சீயக்காயா?
தலைக்கு ஒரு சீயக்காய்
தாடிக்கு வேறு ஒரு சீயக்காயா?
உச்சநீதிமன்றத்தில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லையே!
உச்சநீதிமன்றத்தில் இன்றுள்ள 30
நீதிபதிகளில் - ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்தோ, மலைவாழ்
மக்களிலிருந்தோ (S.C. S.T) இல்லையே!
66 ஆண்டு சுதந்திரத்தின் பலன் இதுதானா?
66 ஆண்டு சுதந்திரத்தின் பலன் இதுதானா?
அரசியல் சட்டம் கூறிய சம வாய்ப்பு ஏன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது?
உயர்நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையுள்ள தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதிகள் தமிழ்நாட்டில் - சென்னை உயர்நீதிமன்றத்தில்தான்.
பார்ப்பன நீதிபதிகள் எண்ணிக்கை அவர்கள் விகிதாச்சாரத்திற்கு மேல் பல மடங்கு அதிகம்தான் இன்னமும் உள்ளது.
இந்த லட்சணத்தில் மேலும் புதிதாக (சென்னை
உயர்நீதிமன்றத்திற்கு) 2,3 பார்ப்பனர்கள் - பெண்கள் உட்பட வர
இருக்கிறார்கள் என்ற சமூக அநீதிச் செய்திக ளும் வந்துள்ளன!
அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத கொலிஜியம்
கொலிஜியம் என்ற பெயரில் அரசியல்
சட்டத்தில் இல்லாத ஒன்று மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டு விட்டது என்ற
கருத்தும், கொலிஜியம் என்பதில் மாநில உயர்நீதிமன்ற மூத்த மூன்று
நீதிபதிகளில், மூவருமோ அல்லது இருவரோ வெளிமாநிலத்திலிருந்து வந்தவர் களாக
பெரும்பாலான இடங்களில் இருப்பதால், அவர் களது பரிந்துரை எவ்வளவு
புரிந்துரைகளாக இருக்கும் என்பதும் கேள்விக் குறிகளாகும்!
ஆங்காங்குள்ள மக்களின் மண்ணின் மனோபாவம்
((The Soil Psychology) என்பதையேகூட புரிந்து கொள்ளாது, ஏதோ சில
அளவுகோல்களை வைத்து பரிந்துரைப்பது எப்படி நியாயமாக இருக்கும்?
எனவே இந்த நியமனங்களில் வெளிப்படைத் தன்மை
(Transperancy)யும் சமூகநீதியும் கட்டாயம் தேவை; IAS, IPS, க்குப்
பொருந்தும் அதே விதிகளும் நடை முறைகளும் பெரும்பாலும் நியமனங்களைப்
பொறுத்த வரை பொருந்த வேண்டும்.
மத்திய அரசு, சமூக நீதியை உறுதிப்படுத்திட வேண்டும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள
ஜஸ்டீஸ் திரு. பி. சதாசிவம் அவர்கள் நீதித்துறையிலும் இடஒதுக் கீடு தேவை -
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள
கருத்தும் இதில் கவனிக்கப்பட்டாக வேண்டும்.
அரசின் மற்ற பிரிவுகளான நிர்வாகம், சட்டத் துறைக்குப் பொருந்தும் சமூகநீதி - நீதித்துறைக்கும் பொருந்தியாக வேண்டும் அல்லவா!
அரசின் மற்ற பிரிவுகளான நிர்வாகம், சட்டத் துறைக்குப் பொருந்தும் சமூகநீதி - நீதித்துறைக்கும் பொருந்தியாக வேண்டும் அல்லவா!
தேவை கருத்தரங்குகள்
இதுபற்றி ஆங்காங்கு கருத்தரங்குகளை நடத்திட சமூக ஆர்வலர்களும், சமூகநீதிப் போராளிகளும் முன்வர வேண்டும். இது அவசரம் - அவசியமாகும்.
--------------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.சென்னை 24.9.2013
16 comments:
எது நாத்திகம்?
கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?
பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார்.
எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்ன்னு சொன்ன பொழுது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அம்மாவுக்கு என் மேல் கோபம். எல்லோருடைய தோட் டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்டில் காய்கறி விலையாவது குறையுமே என்று நான் சொன் னதும், என்னைத் திட்டினார்கள். இயேசுவே என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சுடுன்னு பிரார்த்தனை செய்தாங்க.
சின்ன வயசில் இருந்து இந்தச் சண்டை என் வீட்டில் நடந்துகொண்டுதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்படவேண்டியவை தான். அது எந்த மதத்தில் இருந்தால் என்ன?
விகடன் மேடையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆனந்தவிகடன், 25.9.2013
தகவல்: சிவகாசி மணியம்
கேள்விக்கு விடையை மிகச் சரியாகவே நடிகர் பிர காஷ்ராஜ் கூறியுள்ளார்.
மூட நம்பிக்கை கண்டிப் பாக விமர்சிக்கப்படவேண்டி யதுதான். அது எந்த மதத்தில் இருந்தாலென்ன என்ற முத்தி ரையடியுடன் பதிலடி கொடுத் துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
வெறும் வார்த்தையால் அல்ல- தன் தாயார் கிறிஸ்தவர் என்ற முறையில் தமது குடும் பத்திலிருந்தே தொடங்கி கேள்வியின் முனையை மழுங் கடித்துள்ளார்.
இந்து மத அபிமானி களுக்கு, இத்தகைய கேள்வி யைத் தவிர, வேறு கேட்கவே தெரியாதுபோலும்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஊசி போன பண்டம் இது.
இங்கர்சால் நாத்திகம் பேசினார் என்றால், அது பெரும்பாலும் கிறித்துவ மதத்தை விமர்சித்தே இருக்கும். ஏனெனில், அவர் சார்ந்த - அவரை சுற்றிப் பின்னிக் கிடக் கும் மதத்தைப்பற்றிதான், விமர்சனங்கள் இருக்கும் - இருக்க முடியும்.
ஜீன் மஸ்லியரின் மரண சாசனம், கிறித்துவ மதத்தை மய்யப்படுத்தி, இருந்ததில் என்ன ஆச்சரியம்?
தஸ்லிமா நஸ்ரீனின் நாத் திக வாதம், முஸ்லிம் மதத்தை முன்னிலைப்படுத்தியே, இருந்த தும் சரியானதே!
அதேபோல்தான் இந்தியா வில் நாத்திகவாதம் - மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் இந்து மதத்தின் ஆணிவேரை நோக்கியே!
இதனைக்கூடப் புரிந்து கொள்ள இயலாத அடிப்படை நுனிப் பகுத்தறிவும் இல்லாத வர்களாக வினா தொடுப்பது கண்டு பரிகசிக்கத்தான் வேண் டியுள்ளது.
இந்து மத வினா தொடுப் பாளர்களைப் பார்த்து இன் னொரு கூர்மையான - நுட்பமான கேள்வி உண்டு.
இந்து மதத்தில் நாத் திகத்திற்கு இடம் உண்டா, இல்லையா? என்பதுதான் அந்த நறுக்கான கேள்வி. இந்து மதத்தைப்பற்றித் தெரிந்து கொண்டு இருந்தால், தேவை யற்ற கேள்வியைக் கேட்டு இருக்கவே மாட்டார்கள்.
இராமாயணத்தில்கூட தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் உண்டு என்பது தெரியுமா?
சார்வாகம் (உலகாய்தம்) அய்ந்திரம், சாங்கியம், ஆசீ வகம், பிரகஸ்பதி என்பவை எல்லாம் இந்து மதத்தில் பேசப்படவில்லையா?
பவுத்தமும், சமணமும்கூட இந்து மதப் பார்வையில் நாத்திகம்தானே?
இவற்றைத் தெரிந்து கொண்டிருந்தால் நாத்திகர்மீது நறநற என்று பற்களைக் கடிக்கமாட்டார்களே! - மயிலாடன் 25-9-2013
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றி கருநாடகமும் கொண்டு வருகிறது
பெங்களூரு, செப். 25- கருநாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந் திரா அளித்த பேட்டி வருமாறு:
மகாராஷ்டிரா மாநி லத்தில் அமலில் உள்ள மூடநம்பிக்கைக ளுக்கு எதிரான சட் டத்தைப் போல் ஒரு சட் டத்தை கருநாடகாவி லும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. அறியாமை மற்றும் கஷ் டத்தில் இருப்பவர் களைக் குறிவைத்து மாய மந்திரங்கள் பெயரில் ஏமாற்று வேலை நடக் கிறது.
மந்திரவாதிகள் ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். அதுபோன்ற பல சம்ப வங்கள் கருநாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள் ளன. சில சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப் பட்டுள்ளன. இது போன்ற மாய, மந்திரங் களுக்கு கடிவாளம் போட புதிய சட்டம் அவசியப்படுகிறது.
மகாராஷ்டிராவிலுள்ள சட்டத்தைவிடவும் வலு வான சட்டமாக இது இருக்கும். தேசிய சட்டப் பள்ளியின் சட்ட நிபுணர்களிடமும், கருநா டக சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்களிட மும் கருத்து கேட்டு, விரைவிலேயே புதிய சட்டம் கொண்டு வரப் படும்.
நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, கொடூர நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு, ஒழிப்பு சட்டம் 2013 என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய் யப்படும். பெங்களூரிலுள்ள டாலர்ஸ் காலனி வீட் டில் குடியேறினால் உயி ருக்கே ஆபத்து என்று ஒரு ஜோதிடர் என்னி டம் கூறினார். இதைக் கேட்ட எனது மனைவி அச்சமடைந்து, அந்த வீட்டுக்கு குடிபோக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நான் அதை பொருட் படுத்தவில்லை. இப் போது, அந்த ஜோதிடர் எங்குள்ளார் என்பதே தெரியவில்லை.
இந்த புதிய சட்டம், எந்த ஒரு தொழிலையும் குறிவைத்து கொண்டு வரப்படாது. மூட நம் பிக்கைகளைப் பரப்பு வது யாராக இருந்தா லும், அது எந்த வகை யில் பரப்பப்பட்டாலும் நட வடிக்கை எடுப்பது தான் இதன் நோக்கம். மூட நம்பிக்கைகளை பரப்புவோருக்கு தொலைக்காட்சிகள் வாய்ப்பளித்தால், அவற் றின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். எது மூட நம்பிக்கை, எது நம் பிக்கை என்பது குறித்த வரையறை, அரசு கொண்டு வரும் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டிருக் கும் என்றார்.
இல்லத்தரசிகளுக்கு இதோ ஒரு நற்செய்தி!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர் கள் - ஒருவரிடம், ஒரு பொது நிகழ்ச்சியில், கேள்வி கேட்கும்பொழுது (அய்.நா. பொது அசெம்பளி) அந்த நபரைப் பார்த்து, நீங்கள் புகை பிடிப்பதை விட்டுவிட்டீர் களா?என்று கேட்கிறார்.
அதற்கு அவர் சற்று தடுமாற்றத்துடன் சிற்சில வேளைகளில் விட்டு விட்டிருப்பேன் என்று கூறுகிறார்.
ஆனால், ஒபாமா அவர்கள், நான் கடந்த 6 ஆண்டுகளாக புகை பிடிப்பதை அறவே விட்டுவிட்டேன். காரணம், என் வாழ் விணையர் திருமதி மிஷேல்தான். அவரைக் கண்டு நான் மிகவும் பயப்படுவேன்; மாற்றாக நிகோட்டைன் கம் (Niccotine Gum) என்பதை, எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தி வருகிறேன்.
இதனால் (புகைப் பிடிப்பதை நிறுத்திய தால்) கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைந்து, பார்டரில் நின்றுள்ளது எனக் கூறினார்.
இவரும், இவரது வாழ்விணையரும் உடல்நலப் பாதுகாப்பில் மிகவும் குறியாக இருப்பவர்களாம்; இதுவரை வெள்ளை மாளிகையில் குடியேறிய அமெரிக்க அதிபர்கள் பலர்; அமெரிக்க அதிபர் பொறுப்பு என்பது அவ்வளவு லேசானதல்ல! மிகவும் தொல்லைகள் நிரம்பிய உலகப் பார்வை விழும் பதவி அல்லவா!
மிகவும் மன உளைச்சல் அதிகம் ஏற்படுத்தும் பதவி. எனவேதான் அவர்களில் பலரும் நடைப்பயிற்சி, மெது ஓட்டப் பயிற்சி (Jogging), கால்ஃப் (Golf) மற்றும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து இவைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை (Stress) போக்கிக் கொள்ள முயலு கின்றனர்!
பலர் புகைப் பிடிப்பதற்கே மூல காரணம் இந்த மன அழுத்தம்தானே!
புகையிலை எந்த ரூபத்தில் நம் உடலுக் குள் - நுரையீரல், இருதயத்துக்குள் சென் றாலும் நம் ஆயுளை வெகுவேகமாகக் குறைக்கும் - அதிக ஆற்றல் அதற்கு உண்டே!
எனவே, இந்த ஆபத்திலிருந்து (அந்தப் பழக்கம் உடையவர்கள்) மீண்டாக வேண்டும்; ஒவ்வொரு தடவை புகை பிடிப்பதும், ஒவ்வொரு தடவை தற்கொலை மாத்திரைகளை உட்கொள்வதற்குச் சமமாகும்!
உங்களில் எவருக்காவது அந்தத் தீய பழக்கம் இருந்தால், உடனே நிறுத்துங்கள்! அது பழக்கமாகி, வழக்கமாகிவிட்டது, புகை பிடிக்காவிட்டால், சுறுசுறுப்பு அல்லது ஒரு உணர்வு பீறிட்டு வருவதிலிருந்து எப்படி நிறுத்துவது என்று கேட்காதீர்கள்!
மனதில் உறுதி இருந்தால், முடியாதது எதுவும் இல்லையே!
தந்தை பெரியார் அவர்களே கூறியுள் ளார், நான் சங்கிலித் தொடர் புகைப் பிடிப்பாளி (Chain Smoker) ஆக இருந்த வன்; பிறகு ஒரு நாள் முடிவுசெய்தேன், உடனே நிறுத்திவிட்டேன்! என்றார்!
சில கணவன்மார்கள் புகைப்பிடிப்பதை விட முடியவில்லை என்று பிடிவாதம் பிடித் தால், அவர்களை மனைவிமார்கள் (வாழ் விணையர்கள் என்ற சொல்லாட்சி இவர் களுக்குப் பொருந்தாது என்பதால், அதைத் தவிர்த்துள்ளேன்) கணவன்களுடன் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, அவர் களை பணிய வையுங்கள் (திட்டிக்கூட).
எதை மறுத்தால், அனுமதிக்காததால் (பொருளாதாரமோ, உணவோ அல்லது வேறு எதுவோ) அவர்கள் வழிக்கு வரு வார்களோ, அதனைச் செய்யவேண்டும்!
காரிகையை நம்பினோர் கைவிடப்படார்!
மனைவி சொல் கேட்பவர் மகத்தான வெற்றியாளர் - பல வீடுகளில்! - மறவாதீர்!
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவிடுமாமே ஆதிமூலம்...
முதலையின் வாயிலிருந்து ஆனை யைக் காப்பாற்றிய ஆதிமூலம் நாடே அப()யக்குரல் கொடுத்த பின்பும் பாராமுகமாக இருப்பதைப் பார்த்து ஆறாத்துயரத்தில் மக்களும், ஆட்சி யாளர்களும் இருக்கின்றனர்.
குருவாயூர் கோயிலில் இருக்கும் தங்கத்தைக் கணக்கிடுவதே கஷ்ட மாமே! அப்படியானால் அவற்றைப் பாதுகாப்பது அதைவிடக் கஷ்ட மாயிற்றே!
திருவட்டாறில் ஆதிகேசவப் பெரு மாள்மீது இருந்த தங்கத் தகட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்தெடுத்து பூசாரி கொண்டு சென்றபோது, அதைப்பற்றிக் கவலைப்படாமல் சப்தமின்றி இருந்த பெருமான் போன்று தானே குருவாயூரப்பனும் இருப்பார்? பூசாரிக்கும், அவரோடு சேர்ந்தவர் களுக்கும் கொண்டாட்டம் தானே? இதனால் தானே கணக்கு வழக்கென் றால், அரசியல் கட்சிகள் போல் இந்து அமைப்புகள் கூச்சலிடுகின்றன.
நாட்டில் எவ்வளவு தங்கம் இருக் கிறது என்பதைக் கணக்கிடவே ஒத்து ழைக்காத தேவஸ்தானங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்கு எப்படி உதவும்?
மக்களிடமிருந்து வரியாகப் பணம் வசூலித்தால் வருந்துகின்றனர். அப் படியின்றி அவர்களாகவே விரும்பி பணத்தைக் கொடுக்க வைக்க அரசாங்க கஜானா பெருக கவுடில்யரின் ஆலோ சனைப்படி அமைக்கப்பட்ட அமைப்புத் தான் கோயில்கள் என்பதை எல் லோரும் அறிவர். அரசாங்கம், பணம் பெறுவதற்காகவே அமைக்கப்பட்ட அமைப்பு இப்போது தன்னாட்சி பெற்று தங்கள் இஷ்டம்போல் செலவழிக்க ஆரம்பித்துவிட்டன. அதன் வருவாய் கள், இருப்புகள் தங்கம், வைரம் போன் றவைகூட சரிவர கணக்கில் காட்டப் படுவதில்லை உண்டியல் எண்ணும் போது தங்கம், பணம் காணாமல் போகின்றன. மக்கள் சுபிட்சத்திற்காக யாகம் நடத்துகிறோம் என்று பார்ப் பனர்கள் தங்கள் சுபிட்சத்தைப் பார்த்துக் கொள்கின்றனர்.
கோயில் கருவூலங்களில் முடங்கிக் கிடக்கும் கணக்கற்ற பணக் குவியல் களை நாட்டுக்காகச் செலவு செய்வதில் என்ன தப்பு? இன்றைக்கு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிச் சீரழியத் தொடங்கியுள்ளது. இதனைச் சரி செய்யவேண்டாமா?
மத நிறுவனங்கள் தாமே முன்வந்து நெருக்கடி தீர உதவி இருக்கவேண்டும். அப்படி செய்யாததால் அதை செய்ய வைக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.
சீன யுத்தத்தின்போது நாட்டுக்கு தங்கம் தேவை என்று அரசு அறி வித்ததும் மக்கள் தங்களிடமிருந்த தங்கத்தை மனமுவந்து கொடுத்தனர். கழுத்தில், காதில் கிடந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். தமிழ்நாடுதான் அதிக அளவில் தங்கம் வழங்கியது.
தேவஸ்தானங்களும், இந்து அமைப்புகளும் ஏதோ அவர்கள் வீட்டுத் தங்கக் கணக்கைக் கேட்பதுபோல அலறுகிறார்கள். சீன யுத்தத்தின்போது ஏழை எளியவர்கள் பொதுமக்கள் எவ்வளவு தங்கத்தை வாரி வாரி வழங்கினர். அவர்கள் கோயிலைவிட அங்கிருக்கும் சிலை முதலாளி களைவிட எவ்வளவு மேலானவர்கள் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். கோயில்களில் இருக்கும் தங்கம் நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும். நாட்டைக் காக்க, மக்களைக் காக்க பக்தர்கள் முன்வர வேண்டும். ஓர் இயக்கமாகச் செயல்பட்டு மத நிறுவனங்கள் தங் களிடமிருக்கும் தங்கத்தில் ஒரு சிறு பகுதியையாவது கொடுக்க வைக்க வேண்டும். அவர்களிடமிருக்கும் மக்கள் பணம் மக்களுக்குப் பயன்படாமல், ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுகிறது என்றால் அது பெருங்கொடுமை யல்லவா? இக்கொடுமையைப் போக்க வேண்டியது பக்தர்கள் கடமை அல்லவா?
- ப.சங்கரநாராயணன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)
பெருமை
மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)
காவி ரிப்பன்களும்... புன்னகைக்கும் பிள்ளையாரும்!
கடந்த 16.9.2013 அன்று சென்னை யில் பல இடங்களில் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக் கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப்பொட்டு கழுத்தில் காவி துண்டு..
கண்கள் சிவக்க வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர் களை கடந்த சில ஆண்டுகளாக யானைமுகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது. இவர்களுக்குக் கடவுள் பக்தியெல்லாம் இருப்ப தாகத் தெரியவில்லை. ஒரு வெறி யோடு இயங்குகிற இளைஞர்களா கவே இவர்கள் இருக்கிறார்கள். கணபதியைக் கடலில் கரைப்பது தங்களுடைய ஜபர்தஸ்த்தை காட் டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள்.
இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி மாதிரியான அமைப்புகளின் ஆதரவும், பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பலமென்ன என்பதைக் காட்டுவதற்கு விநாயகர் ஒரு கருவியாக இருக்கிறார். அவரும் இந்த காவி நாயகர்களோடு பயணிக்கிறார். இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு. காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப் படும் ஒருவித டெம்போ ஆட் டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பக்தர்களும் கடற்கரைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள் போல.... டிஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதி னைந்து வயது இருக்கலாம்.
அவள் அந்த டெம்போவையொட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக் கிறாள். ஆட்டோவில் இருந்த இளை ஞர்கள் முதலில் விசிலடித்தனர். பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எறிந்தனர். அதற்குப் பிறகு அதில் ஒரு பொறுக்கி தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின்மீது பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்தப் பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான். அந்தப் பெண் ஏதோ பதிலுக்கு திட்ட ஆரம்பிக்க, ஆட் டோவை அந்த பெண்மீது ஏற்றுவ தைப்போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ ஓட்டுநர். உதயம் தியேட் டர் அருகே நூறடி சாலை திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப் பது போல ஓட்ட, அந்தப் பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீய ணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பேருந்து நிறுத்தத்தின் அருகே தடுமாறி விழுந்தாள்.
பெரிய காய மில்லை, விழுந்ததும் அருகிலிருந்து பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்துவிட்டனர். ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து கொண்டே, பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பக்தர்கள். அதில் ஒருவன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சத்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள் ளையார் வண்டிகளின் வரிசையில் இணைந்தது.
இவர்களைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்டவரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர் களைப்போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும், கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல் லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர் களைப் பார்க்க ஒரு நீண்ட சண் டைக் காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. இந்தக் காவி ரிப்பன் பக்தர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வய துக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும், இவர்கள் எல்லோருமே குடிப்பவர்களாக சின்ன தூண்டுதல் ஆனாலும், அதைப் பெரிய வன் முறையாக நிகழ்த்திவிடுவார்கள் என் பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று சந்தித்த அந்த டெம்போ ஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின்மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத் திலும் பயமுறுத்தக்கூடியது... சாகும் வரை மறக்கவே முடியாதது.
- அதிஷாவினோ, சென்னை
சேது சமுத்திரத் திட்டம்
சேது சமுத்திரத் திட்ட அமலாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பவர் இருவர்; ஒருவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் - தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா.
இன்னொருவர் திருவாளர் சுப்பிரமணிய சாமி - ஜனதா கட்சி தலைவர் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் அப்பொழுது அந்த வழக்கைத் தொடுத்தது ஒருபுறம் இருக்கட்டும்;
இப்பொழுது பி.ஜே.பி.யில் பொருத்தமாக - சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டார்.
சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆறாவது தடத்தில் (ராமர் பாலம்) திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதுதான் பி.ஜே.பி.யின் நிலைப்பாடே தவிர, திட்டமே கூடாது என்பதல்ல.
இந்த நிலையில், பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் சு.சாமி தொடுத்த வழக்கை வாபஸ் பெறவேண்டாமா? பி.ஜே.பி.தான் இதனை வலியுறுத்துமா?
எங்கே பார்ப்போம்!
ராமன் பாலமா?
சேது சமுத்திரத் திட்டத்தை நீரி நிறுவனம் வகுத்துத் தந்த அந்த ஆறாவது வழித்தடத்திலேயே நிறைவேற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு வழக்குரைஞர் கேசவன் பராசரன்; மத்திய அரசு சார்பில் வாதிடு வதற்கு அவரது மகன் மோகன் பராசரனை அணுகிய போது, எனது தந்தையார், ராமன்மீது மதிப்புள்ளவர்; அவரை எதிர்த்து நான் வாதாட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும், எனக்கு ராமர்பாலம்பற்றி நம்பிக்கை உண்டு என்றும் கூறியுள்ளார். படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள சம்பந்தம் இதுதானா?
இந்த மத்திய அரசுக்கு ஏன்தான் இந்தப் புத்தியோ என்று தெரியவில்லை. நியாயத்தின் பலம் தம் பக்கம் இருக்கும் பொழுது எதற்காக மத்திய அரசு தயங்கிட வேண்டும்?
கம்பராமாயண மீட்சிப் படலம் 17ஆம் பாடல், ராமனே அந்தப் பாலத்தை இடித்து விட்டான் என்று கூறுகிறது.
அந்தப் பாடல் இதோ:
மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித்
தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற்
பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி
நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே
சேது புராணம் என்ன கூறுகிறது? ராமன் இலங்கை சென்று திரும்பும்போது அந்தப் பாலத்தை இடிக்க வேண்டும் என்று விபீடணன் கூறினான். அந்தப் பாலம் அங்கு இருந்தால் அதனைப் பயன் படுத்தி, இலங்கையிலிருந்து கொடியவர்கள் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்ல அதனடிப்படையில் அந்தப் பாலத்தை ராமன் இடித்துத் தள்ளினான் என்று சேது புராணம் கூறுகிறது.
ராஜாஜியின் கட்டுரைகள் என்னும் நூலில் ராமாயணம் என்பது வால்மீகியின் கற்பனை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை பராசரன்கள் கொண்டுவந்து திணித்தால், அந்த இதிகாசங் களையே ஆதாரமாகக் கொண்டு எதிர் தாக்குதல் தொடுத்துப் பொடிப் பொடி ஆக்கிட என்ன தயக்கம்?
வீணாகும் பொருள்கள்
வீணாகும் பொருள்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று இந்தியப் பொறியியல் மய்யத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் டி.எம்.குணராஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் இது மிகவும் முக்கியமாக முன்னெடுத்துக் கொள்ளப்படவேண்டிய பிரச்சினை. சுற்றுச்சூழலுக்குச் சவால் இந்த வீணாகும் பொருள்கள்தான்.
இவற்றை மறுசுழற்சிக்கு (Recycle) உட்படுத்திப் பலன் காண்பது அவசியமாகும். வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இதன் அருமை என்ன வென்று புரியும். விடுதியின் கழிவுப் பொருள்கள், கழிவறைகளிலிருந்து வெளியேறும் நீர் உள்பட அங்கு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, மின் உற்பத்தி உள்ளிட்ட பயன்கள் பெறப்படுகின்றன.
பிளாஸ்டிக் பெரும் சவாலாகக் கிளம்பியுள்ளது உண்மை என்றாலும், அதனையும் பயன்படுத்தி சாலைகளை அமைக்கும் முயற்சி முழுமையாக வெற்றி பெறவேண்டும்.
வீணான பொருள்களைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்ற பொது ஒழுக்கத்தை முதலில் தொடக்கப் பள்ளியிலிருந்து கற்றுக் கொடுக்கக் கூடாதா?
கடவுள் சக்தி மீது நம்பிக்கை இல்லை
கடவுள் சக்தி மீது நம்பிக்கை இல்லை
கோவில்களில் கண்காணிப்பு கேமராவாம்!
கடலூர், செப்.25- மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
கோவில்களில் சுவாமி சிலைகள், உண்டியல் உடைத்து பணம் திருடுதல், சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், சந்தேக நபர்களை அடையாளம் காணவும் கோவில் வளாகத்தில், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் பேரில், மாநிலம் முழுவதும் அதிக வருமானம் உள்ள கோவில்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 1,451 கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், கேமரா அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
முதல்கட்டமாக, கடலூர், திருவந்திபுரம் தேவ நாத சுவாமி கோவிலின் உட்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவில் செயல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கேமரா மூலம் சந்தேக நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இதே போன்று, கடலூர் பாடலீஸ்வரர் கோவில், சிதம்பரம், கீழத் தெரு மாரியம்மன் கோவிலிலும் கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கோவிலின் பரப்பளவைக் கொண்டு ஒவ்வொரு கோவிலிலும் 15 முதல் 25 இடங்கள் வரை கேமரா பொருத்தப்படுகிறது. இப்பணி இரண்டாம் கட்ட மாக மேலும், சில கோவில்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத் தில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கேமரா பொருத்தும் பணி முடிந்துள்ளது. பாடலீஸ் வரர் கோவில், சிதம்பரம் கீழத் தெரு மாரியம்மன் கோவிலில் பணிகள் நடந்து வருகிறது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர், விருத்தகிரீஸ் வரர், சிறீமுஷ்ணம் பூவராகசுவாமி, சிதம்பரம் தில்லை காளியம்மன், கடலூர் வீர ஆஞ்சநேயர், வேலுடையான்பட்டு சிவ சுப்ரமணிய சுவாமி, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி, திருவதிகை வீரட்டானேஸ்வரர், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் மற்றும் சில கோவில்களில் கேமரா பொருத்த சென் னை இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், கேமரா பொருத்தும் பணிகள் படிப்படியாக துவங்கும்' என்றார்.
மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும்: தா.பாண்டியன் பேட்டி
தஞ்சை, செப். 25-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு சில மாநிலங்களில் போதிய ஆதரவு கிடையாது.
பிகார், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாநில கட்சிகளே பலமாக இருக்கிறது. எனவே மாநில கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகள் இணைந்து தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3ஆவது அணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தலுக்கு பின்னால் 3ஆவது அணி மூலம் கூட்டு அமைச்சரவை அமையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட பாஜவால் வெற்றி பெற முடியாது. வேதபுத்திரர்கள் வந்து வாக் களித்தால்தான் அவர் பிரதமராக முடியும். பூலோகத்தில் அவரை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அப்படி ஒருவேளை மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும். காஷ்மீர் தனிநாடு என மறுநாளே பிரகடனம் செய்யும். நாகாலாந்து சுதந்திர பிரகடனம் செய்து கொடியேற்றும். எனவே இத்தகைய நிகழ்வுகள் நிகழ்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக 190 இடங்களை தாண்ட முடியாது.
- இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
வீறுகொள் வரலாறு எழுதுவோம் விருத்தாசலத்தில்!
தோழர்காள்!
செப்டம்பர் 28 - நாம் கூடவேண்டிய இடம் விருத்தாசலம்.
இந்தப் பெயரே நம் சிந்தனை அலைகளை வேறு எங்கோ கொண்டு சேர்க்கிறது.
நமது பச்சைத் தமிழ் திருமுதுகுன்றம்தான் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் விருத்தாசலம் ஆகியிருக்கிறது.
இலக்கியத்தில் பழமலை என்ற பெயரும் இதற்குண்டு; விருத்தாசலத்தில் நாம் கூடுகிறோம் என்கிறபோது அந்தச் சதியின் கொடிய முகம் நம் கண்முன் நிற்கவேண்டும்.
இந்தப் படையெடுப்பை முறியடிக்கவேண்டும் என்ற எண்ணம் நம் இதயத்தில் வெடித்துக் கிளம்ப வேண்டும்.
நம் பழம் தமிழ், பாழ்பட்டுப் போனதை எண்ணி பதைபதைக்க வேண்டும்.
நாம் நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கவேண்டும்.
மாயவரம் - மயிலாடுதுறை என்று மீட்கப்பட வில்லையா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. இனவுணர்வு பீறிட்டு எழுந்தால் இதனைச் சாதிப்பது எளிதான காரியம்தானே.
ஆரியம் புகுந்து அருமைத்தமிழ் மொழியைக் கூறுபோட்டு விட்டது. நம் ஊர்ப் பெயர்கள் ஆரியமயமாகின. தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ் வெளியேற்றப்பட்டு ஆரியம் வழிபாட்டு மொழியாயிற்று.
தமிழன் பெயர்கள் சமஸ்கிருதமாகி விட்டன. தமிழன் விழாக்கள் - பண்டிகைகளாகின - பார்ப்பனர்களின் பாதந்தாங்கிகளானது தமிழ்ச் சமுதாயம்.
இந்த அடிமைத்தனத்தைத் தூக்கி எறிய நமது திருமுதுகுன்ற மாநாடு புதுத்திமிரைக் கொடுக்கட்டும்.
நமது உரை வீச்சுகள் இனமானத்தை முன்னெடுக்கட்டும் - மொழிமானத் தீயை மூட்டட்டும்!
மாணவரணியின் மண்டல மாநாடு என்று மிகப் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.
இளைஞர்களின், மாணவர்களின் குருதி சூடேறினால்தான் புரட்சி எரிமலை வெடிக்கும்.
1993இல் இதே ஊரில் வட்டார மாநாடு நடத்தினோம் - நீண்ட இடவெளிக்குப்பின் இன எழுச்சிப் போர் முரசம் திருமுதுகுன்றத்தில் கேட்க இருக்கிறது.
மாணவர் பட்டாளமே எழுக!
இளைய தலைமுறையே தோள் தூக்கி வருக!
பெரியார் மறைவுக்குப் பிறகும் தமிழர் தலைவர் தலைமையிலே வீறு கொண்டு தமிழினம் எழுந்து நிற்கிறது என்று காட்டுவதற்கான சந்தர்ப்பம் இது.
கருஞ்சட்டைப் பூமியை காவி மயமாக்க ஒரு கூட்டம் கனவு கண்டு கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணில் தர்ப்பைப் புல்லை வளர்க்கலாம் - என்று மனப்பால் குடிக்கிறது மனுதர்மக் கும்பல்.
தோட்டத்துப் புடலங்காயா
தமிழ்நாடு?
கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி
என்றார் நமது புரட்சிக் கவிஞர்.
அந்தச் சேதியைத் தெரிவிப்போம்! தோள் தூக்கி வருக! மாநில மாநாடு போல ஏற்பாடுகள் தூள் பறக்கின்றன!
எங்குப் பார்த்தாலும் சுவரில் எழுதிய விளம்பரங்கள் - பல வண்ண சுவரொட்டிகள் - பதாகைகள்.
பள்ளிகள் விடுமுறைதான். பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வீறு கொண்டு வருக விருத்தாசலம் நோக்கி.
தமிழர் தலைவர் சங்கநாதம் செய்வார். காலத்தின் கருவில் முளைக்கும் தீர்மானங்கள் உண்டு.
மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் பேரணி தனிச்சிறப்பு! கருத்தரங்கம் என்ற கருத்துச் சுரங்கம் உண்டு.
படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என்கிற வகையில் பகுத்தறிவுப் பெருங்குடும்பங்கள் குவியட்டும்! குவியட்டும்!!
தமிழர் தலைவர் சபாஷ் திருமுதுகுன்றம் என்று பாராட்ட வேண்டாமா? இடையில் இரண்டே நாட்கள் - இருளைக் கிழித்து பகை முகத்தை விரட்டிப் பகலாக்கிக் காட்டுவோம் - வாரீர்! வாரீர்!!
- மின்சாரம்
அண்ணாவின் கவிதை !
==================
இந்துவும் முஸ்லீமும் ஒண்ணுன்னு சொன்னாரு
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்கோ
கோட்ஸே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்
குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும் !
(திராவிடநாடு 1956)
பதவி ஆசை
பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)
தகுதி திறமை பேசும் அ.இ.அ.தி.மு.க. அரசு
செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு, ஆண்டாண்டுக் காலமாக அரும்பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்த சமூக நீதியின் ஆணி வேரை, வெட்டும் ஓர் ஆபத்தான வேலையில் திட்டமிட்ட வகையில், இறங்கி விட்டதாகத் தெரிகிறது.
மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்களே, சமூகநீதியின் தலையில் (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு) கை வைத்ததன் பலனை, 1980 மக்களவைத் தேர்தலில் வட்டியும் முதலுமாக அனுபவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினார். தேர்தலில் அவர் சந்தித்த மகத்தான மரண அடியாகும் அது.
தோல்விக்கான காரணத்தை உணர்ந்து கொண்ட மாண்புமிகு எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு அல்லாமல், அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். தமிழ்நாட்டின் இந்த வரலாற்றினை எந்தக் காரணத்தாலோ, உணர மறுத்தால் 1980இல் எம்.ஜி.ஆர். அவர்கள், மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது போலவே, 2014 மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. பெரும் அளவில் மண்ணைக் கவ்வும் என்பது உறுதி.
ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதி தேர்வு என்ற பெயரில் சமூக நீதிக்கு மரண அடியை அ.இ.அ.தி.மு.க. அரசு கொடுத்து விட்டது.
தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் அதற்கு மாறாக உயர் ஜாதியினருக்கு என்ன தகுதி மதிப்பெண்ணோ அதே தகுதி மதிப்பெண்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கும் என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு - இதுவரை, தமிழ் மண் கட்டிக் காத்து வந்த சமூக நீதிக்கு, வெட்டப் பட்ட சவக்குழி அல்லாமல் வேறு என்ன?
69 சதவீத இடஒதுக்கீட்டைக் கட்டிக் காக்க திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட ரீதியாக, வழிகாட்டி அதற்கான மசோதாவையும் உருவாக்கித் தந்து, அன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சட்டமாக்கச் செய்தார்.
இன்று சோ இராமசாமிகள் ஆலோசகர்களாக இருக்கின்ற காரணத்தால், சமூகநீதிக்குச் சாவு மணி அடிக்கிறார் என்று தானே பொருள்?
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் இவ்வாறு கூறுகிறது.
The State Govt has taken a policy decision not to compromise on the quality of teachers and decided not to grant relaxation to any of the categories என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி திறமை என்பதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு, என்று கூறுகிறது அரசின் பிரமாணப்பத்திரம்.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்கிற பிரச் சினையை தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், எல்லாவற்றிலும் ஆதிக்கக் கொடியைக் கையில் ஏந்திய பார்ப்பனர்கள் எந்தத் தகுதி - திறமையைப் பேசி இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதத்தை வைத்தார்களோ, அதே பார்ப்பனர் வாதத்தைதான் செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசு இன்றைக்கு வைத்துள்ளது - அதுவும் உயர்நீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரமாகவே தாக்கல் செய்துவிட்டது.
சமூகநீதிப் போராளிகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடும் ஒரு நிலையை அ.இ.அ.தி.மு.க. அரசு உருவாக்கிக் கொடுத்து விட்டது.
தகுதி - திறமை மோசடி பற்றி தந்தை பெரியார் கூறாததா? கல்வி வள்ளல் காமராசர் கூறாததா?
அறிஞர் அண்ணா பேசாததா?
ஒடுக்கப்பட்ட மக்களே, சமூகநீதிக் களத்தில் இறங்கிடத் தயாராவீர்!
தமிழர் தலைவரின் வானொலி உரை
பெருமதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரிய அய்யா தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (17.9.2013), வானொலியில் தாங்கள் ஆற்றிய உரை, சொற்செறிவும், பொருள் ஆழமும் கொண்டு, தந்தை பெரியாரைப் படம் பிடித்துக் காட்டியது. உணர்ச்சிக்கு இடங்கொடுக்காமல், அறிவுப்பிழம்பாய்த் திகழ்ந்த அந்த உரையில், தாங்கள் கூறிய
தந்தை பெரியாரின் கருத்துகள் காலத்தால் அழியாதவை; கருத்தால் நிலையானவை; பயன்பாட்டால் இன்றும், என்றும் வேண்டப்படுபவை என்ற முடிவுரை, நெஞ்சை நெருடியது. அந்த உரையில் தொண்டறச் செம்மல் என்ற தலைப்பே, ஈர்ப்புடையது அவர் (பெரியார்) பதவியை நாடாதவர்; புகழைத் தேடாதவர்; பொதுவாழ்வில் நேர்மையும், சிக்கனமும் கொண்ட, தொண்டறச் செம்மல், என்ற வாசகங்கள் பெரியாருக்குப் புகழாரம் சூட்டின.
அவருடைய சொந்த சொத்துக்களும், மக்கள் அவருக்கு கொடுத்த பணமும், இப்போது கல்விக் கூடங்களாக, மருத்துவமனைகளாக, பிரச்சார நிறுவனங்களாக காப்பகங்களாக விளங்குகின்றன என்ற விளக்கம், தந்தை பெரியாரைத் தொண்டறச் செம்மலாகப் படம் பிடித்தது. கிரேக்க அறிஞன் சாக்ரடீசுக்கு வாய்த்த பிளோட் டோவின் பெயர் என் நெஞ்சில் நிழலாடியது.
- வீ.செ.கந்தசாமி, சென்னை- 14
Post a Comment