கடவுள்கள் பிறக்கின்றனவாம். அப்படி என்றால் இந்தக் கடவுளைப் பெற்றவர்கள்தான் கடவுள்களா?
பெற்றவர்கள் கடவுள் என்றால் ஒவ்வொரு குழந்தையையும் பெற்றெடுத்த ஒவ்வொருவரும் கடவுள் ஆகிவிடவில்லையா?
கடவுள்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்பொழுது ஒன்றே கடவுள் என்ற உளறலை நினைத்து வாயால் எப்படிச் சிரிக்க முடியும்?
கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லி அடிக்கும் லூட்டி இருக்கிறதே கொஞ்ச நஞ்சமல்ல.
கோகுலாஷ்டமி என்று கொண்டாடு கிறார்கள். சரி.. கிருஷ்ணன் பிறந்த தாகவே வைத்துக் கொள்வோம். அது கூட ஒரே மாதிரி இருக்க வேண் டாமா?
வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவன் கிருஷ்ணன் என்று ஒரு கதை.
இன்னொரு கதை இருக்கிறது; - கேட்கவே
அசிங்கமாக இருக்கும். அதற்கு நாம் பொறுப்பல்ல. இந்தக் கதையைக் கட்டிய
இந்துமத ஆபாசக் காரர்களே பொறுப்பை ஏற்க வேண்டும்.
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம்
அதிகமாகி விட்டது. இராட் சதர்கள் தொல்லை பொறுக்க முடிய வில்லை. அதைப் போக்க
வலிமை யுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக்
கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான்? (ஏதோ அவன் கையில் கிடைத்தது
என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப்
பிடுங்கிக் கொடுத் தானாம்.
இந்த இரண்டு மயிரில் ஒன்று கருப்பு
நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கருப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை
மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்று சொல்வது அபிதான கோசம்.
இந்த அசிங்கத்தைப் பற்றி யாரும் கேள்வி
கேட்டு விடக் கூடாது. கேட்டால் அர்த்தமுள்ள இந்து மதம் என்றால்
இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி வாயை அடைக்கப் பார்ப்பார் கள். அது
சரி, உலகில் அதர்மம் பெருகி விட்டது என்று பூதேவர்கள் சொன் னார்களே _- அந்த
உலகம் என்பது இந்தியா மட்டும் தானா? அமெரிக்கா, ஆப் பிரிக்கா எல்லாம் அந்த
உல கில் அடங்கிடவில்லையா? அங்கெல்லாம் ராட்சதர்கள் தொல்லை கொடுக்கவில்
லையா? என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள் -_ கோபம் பொத் துக் கொண்டு கிளம்பி
விடும்.
இது ஒருபுறம் இருந்து தொலையட்டும்;
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை - எப்படிப்பட்ட பத்திரிகை? - எவ்வளவு
விஞ்ஞான தொழில் நுட்ப சாதனங்களையெல்லாம் பயன்படுத்தி வண்ண வண்ணமாக பல
பதிப்புகளாக வெளி வந்து கொண்டு இருக்கிறது.
அந்தப் பத்திரிகை கிருஷ்ணன் பிறந்த தேதியை, (Date of Birth) வெளி யிட்டுள்ளது என்றால் சாதாரணமானதா?
கடந்த 28ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி
கொண்டாடினார்களே _- அது கிருஷ்ணனின் 5125ஆம் ஆண்டு பிறந்த நாளாம்.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.8.2013).
ஆகா! எப்படிப்பட்ட ஆராய்ச்சி! அந்த
இங்கிலீஷ் ஏடு கிருஷ்ணக் கடவுளின் பராக்கிரமங்களை எப்படி எல் லாம் எழுதித்
தள்ளி இருக் கிறது. கொஞ்சம் பொறுமையாகப் படியுங்களேன். (நாங்கள் படித்த
துன்பத்தை நீங்களும் அனுபவிக்க வேண் டாமா?)
இதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது; -படிக்கவும்.
இந்த நாட்டு மக்கள் கிருஷ் ணனின் வரலாறு
என்ற நிலைப்பாடுபற்றி ஒரு நாளும் அய்யங் கொண்டதில்லை. காலனி
படையெடுப்பாளர்கள் கிருஷ்ணனை ஒரு இதிகாச கதாநாயகன் ஆகக் காட்டிப் பல
கட்டுக் கதைகள் புனையும் வரை.
நம் நாட்டில் சில புகழ் பெற்ற, ராமன்,
கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர் போன்ற எல்லோருக்கும் தெரிந்த,
புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்ச்சிகளின், பாத்திரங் களின்,
அவர்களைச் சுற்றி நடந்துள்ள நூற்றுக்கணக்கான, கோடிக்கணக்கான வருடங்களுக்கு
முந்திய கால கட்டத்தை நிர்ணயிப்பதற்கு தொல். துறை வானவியல் துறைகள்,
பெரும் இதிகாசத் தலைவர்களின் வாழ்வு பற்றி அறிய பல புதிய எல்லைகளைக் கடந்து
வந்துள்ளன.
புராணங்களின்படி கடவுள் கிருஷ்ணன்
நள்ளிரவில் பிறந்தவர். அந்த இரவு, சந்திரனின் எட்டாம் இடத்தில் உள்ள
அஷ்டமித்திதி சந்திரன் ரிஷப (எருது) அருகில் உள்ளது. பிறந்த நட்சத்திரம்
ரோகிணி; மாதம், சரவண.
இந்த விவரங்கள், கிருஷ்ணனின் வாழ்
நாட்களில் இருந்த வான்வெளி நிலைகளைப் பற்றி, மகாபாரதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளவைகளைக் கொண்டு நாம் கிருஷ்ணனின் பிறந்த நாளை
அறிகிறோம். அந்த முயற்சியின் விளைவாக, ஆங்கிலக் காலண்டர் படி கிறிஸ்துவின்
பிறப்புக்கு முன் 3112 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 27ஆம் தேதி என்று
கணிக்கப்படுகிறது.
இந்திய வழக்கப்படி கிருஷ்ணனின் பிறப்பு
ஸ்ரீஜெயந்தி என்றும் அழைக் கப்படுகிறது. இந்திய வானவியலில் ஜெயந்தி என்ற
சொல்லிற்கு சுவை யான ஒரு காரணம் இருக்கிறது. சில விண்மீன்களுக்கு ஏற்படும்
சந்திர இடைவெளிகளுக்கு இந்திய வானவிய லாளர்கள் சிறப்புப் பெயர்களைக்
கொடுத்து உள்ளனர். மிதுன கோள் கட்டமைப்பில் புனர்வசு நட்சத்திரத்தின்
சந்திர நிலை ஏற்படும்போது ஜெயா என்று அழைக்கப்படுகிறது.
மிதுன கட்டமைப்பில் புஷ்ய நட்சத்திரத்தில்
சந்திர நிலை ஏற்படும் போது, அதற்கு நசினி என்று பெயர். விருச்சிக
கட்டமைப்பில் சரவண நட்சத்திரத்தில் சந்திரன் ஏற்படுவதற்கு விஜயர் என்று
பெயர். அதேபோல ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் நிலை ஏற்படும்போது அதற்கு
ஜெயந்தி என்று பெயர்.
(‘Indian Express’ 27.8.2013)
சந்திரன் ரோகிணி நடசத்திரத்தில்
இருந்தபோது நிகழ்ந்த கிருஷ்ணன் பிறப்பு ஜெயந்தி என்று அழைக்கப் படுகிறது.
கிருஷ்ணனிடம் தொடர்பு இருந்த காரணத்தால், ஜெயந்தி மிகவும் பிரபலமடைந்தது.
பல நூற்றாண்டுகாலமாக, ஆண்டு தோறும்,
இந்தியர்கள் கிருஷ்ணனின் பிறந்த தினத்தை சரவண மாதத்தில், ரோகிணி
நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச அஷ்டமியில், (தேய்பிறைச் சந்தி ரனின் 8ஆம்
இடம்), புராணங்களின் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இருந்தாலும் பொது அறிவிற்கு, பிறந்த ஆண்டு என்னவென்று தெரிய வில்லை.
இருந்தாலும் பொது அறிவிற்கு, பிறந்த ஆண்டு என்னவென்று தெரிய வில்லை.
தொல்லியல் வானவியல் தவிர, பல வழிகளிலும்
கிடைக்கப் பெறுகிற புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணன்
கிறிஸ்து பிறப் பதற்கு முன், 3112 ஆண்டுகளுக்கு முன் பிறந்துள்ளான். ஆகவே
2013ஆவது ஆண்டு, கிருஷ்ணனின் பிறப்பிலிருந்து 5125 ஆண்டுகளாகிறது.
கடவுள் கிருஷ்ணனின் 5125ஆவது பிறந்த நாளை,
இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட கடவுள், உண்மை யிலேயே ஒரு வரலாற்று
நாயகன் என்றும் 5000 ஆண்டுகளுக்கு முன் பேயே நமது கோளுக்கு வந்துள்ளார்
என்று அறிந்து கொண்டாடுவோமாக.
எக்ஸ்பிரஸில் இப்படி எழுதியவர்கள் D.K. ஹரி, D.K. ஹேமா ஹரி, பாரத் ஞானம் நிறுவனர்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் இந்தக் கட்டு
ரையை எழுதியவர் கூறும் வானியல் விஞ்ஞானம் எந்தத் தரத்தைச் சார்ந்தது
என்பதைச் சம்பந்தப்பட்ட வானியல் அறிவியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.
சூரியன் என்ற நட்சத் திரத்தை கோள் என்னும்
பட்டியலில் அடைத்து வைத்துள்ள இந்தப் புராண அறிஞர்கள் எந்த எல்லைக்கும்
சென்று எந்த அளவுக்கும் புளுகக் கூடியவர்கள்தாம்.
இந்த அற்புதங்களை எல்லாம் பயன்படுத்தி ஒரே
ஒரு எக்ஸ்பிரஸ் ஏட்டை அச்சிட்டுக் காட்டச் சொல் லுங்கள் பார்க்கலாம்.
(அறிவைக் கெடுப்பவர் களுக்குத் தூக்குத் தண் டனை கொடுக்க வேண் டும் என்று
தந்தை பெரி யார் கூறியது எவ்வளவுத் துல்லியமானது என்பதை அறிந்து கொள்க!)
இந்தக் கடவுளுக்கு உள்ள தனித் தன்மைகள் இருக்கின்றனவே - அவை மிக மிக அசாதாரண மானவை!
சின்ன வயதில் வெண் ணெயைத் திருடித் தின்ற
வனாம்; வாலிப வயதில் பெண்ணைத் திருடிய வனாம் (கடவுள் என்றால் இப்படி
யல்லவா இருக்க வேண்டும்!)
திருட்டைக் கடவுள்மூலம் தேசிய மயமாக்கியவர்கள் இந்த இந்துத்துவ வாதிகள் தான் - _ எக்ஸ்பிரஸ் பத் திரிகை வகையறாக்கள்தாம்.
இந்தக் கிருஷ்ணன் அவதாரத்தில்
திருக்கல்யாணக் குணமே கோபிகைகளோடு கொஞ்சுவது தான்! ஒரு பெண் இரு பெண் அல்ல.
அறுபதனா யிரம் கோபிகைகளோடு கொஞ்சக் கூடிய காமக் கே()டியாம்.
ஒரு படம் இதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு
வீட்டிலும் மாட்டப்பட்டு இருக்கும். இப்பொழுது அந்தப் படத்தை அதிகம் காண
முடியவில்லை (தந்தை பெரியார் பிரச்சாரத்தின் காரணமாக வெட்கப்பட்டுக் கழற்றி
எறிந்திருக்கலாம்).
பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்கள்; கடவுள் கிருஷ் ணன் இருக்கிறானே - அவன் என்ன செய்வான் தெரியுமா?
கரையில் துணிகளைக் கழற்றி வைத்து விட்டுப்
பெண்கள் குளிக்கப் போனார்கள் அல்லவா! அந்தத் துணிகளைத் திருடிக் கொண்டு
போய் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு குளிக்கும் பெண்களை ரசித்துக்
கொண்டிருப்பான் அந்தக் கிருஷ்ணன் என்னும் கடவுள்.
பெண்கள் கெஞ்சிக் கூத்தாடி துணிகளைக்
கேட்டபோது, கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும் பிட்டுக் கேட்க
வேண்டும் என்றவன் தான் இந்துக்களின் முக்கிய கடவுள்.
இந்தக் காட்சியைப் படமாக்கி வீட் டுக்கு வீடு மாட்டி வைத்திருந்தார்களே.
ஆபாசத்தைப் பக்தி என்று அள்ளிப் பருகிய இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!
இந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.
யாகக் கலாச்சாரத்தை எதிர்த் தவர் கவுதம
புத்தர்; ஒழுக் கத்தைப் போதித்தவர் அந்த உத்தமபுத்திரன். மன்னர் குலத்தில்
தோன்றிய அந்த மதி வாணரின் பிரச்சாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் குடை சாய்ந்து
விழுந்தது. வருணா சிரமம் விழுந்து விட்டது! உயிர்ப் பலி யாகங்கள் மக்
களால் வெறுத்தொதுக்கப்பட் டன. கவுதம புத்தரின் கருணை வெள்ளத்தில் மக்கள்
நீந்தி மகிழ்ந்தனர். ஆரியக் கலாச் சாரம் ஆயிரம் அடிக்கும் கீழே
புதைக்கப்பட்டது.
இந்த ஒழுக்கச் சமூக அமைப்பைச் சீர்குலைக்க காமத்தை முன்னிறுத்திக் கற்பிக் கப்பட்டவன் இந்தக் கிருஷ்ணன் என்னும் கற்பனைப் பாத்திரம்.
வண்டி வண்டியாக கதை களைக் கிளப்பி
விட்டார்கள். இன்றைக்கும் சினிமா கலாச் சாரம் கிளம்பி இளைஞர்களைத் தம்
வலைக்குள் இழுத்து மூடிக் கொள்ளவில்லையா? இந்த யுக்திதான் அன்று கிருஷ்ண
அவதாரமாக ஆக்கப்பட்டது.
இந்தக் கிருஷ்ணன் தான் கீதையை
அருளியவனாம்! கொலையைத் தருமமாக உப தேசித்தவன். தன் சுற்றத்தாரைக் கொலை
செய்வதற்கு அர்ச் சுனன் தயங்கியபோது கொல்லு; கொலை செய்யத் தயங்காதே! நீ
அழிப்பது உடலைத் தான் _ ஆத்மா வையல்ல என்று கொலையை ஒரு கருத்தாக்கமாக
உபதேசித்த உபத் திரக்காரன் தான் இந்தக் கிருஷ்ணன்.
இந்தக் கீதா உபதேசம்தான் இந்தியாவில் ஆன்மா என்று அடே யப்பா எப்படியெல்லாம் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டார்கள்.
நம்மூர் மார்க்ஸிஸ்டு தலைவர் ஈ.கே.
நாயனார்கூட (கேரள முதல் அமைச்சர்) கீதையைக் கொண்டு போய் போப்புக்குக்
கொடுக்கிற அளவுக்குப் புத்தியைத் தடுமாற வைத்து விட்டார்களே. பெண்களும்,
வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை
அத்தியாயம் 18 சுலோகம் 441) என்று சொல்லும் கீதையைப் பற்றித் தெரிந்து
கொள்ளாமல் கீதை வழி நடப்போம் என்று ஒரு பெண் முதலமைச்சரையே சொல்ல வைத்து
விட்டார்களே!
புத்தர் கொள்கையை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை
புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்ச சீலம்)
முக்கியமானது பிறர் மனைவியை விரும்பாதே என்பது; இந்தக் கொள்கைக்கு
எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப்
பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே கிருஷ்ண
லீலா கதையின் நோக்கம்.
புத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது.
_ (என்சைக்ளோபீடியா- பிரிட்டானிகா)
----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------- மின்சாரம் அவர்கள் 31-8-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
36 comments:
அது ஒரு பொற்காலம்! திராவிடர் கழகம் தீர்மானிப்பதே நடக்கும்! 94 வயது ஆலங்குப்பம் தெய்வநாயகம் பேட்டி!
விழுப்புரம் அருகே திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஊர் அரசூர். ஏ.என். தெய்வநாயகம் ஆலையை 94 வயதிலும், நிர்வாகம் செய்து கொண்டு, நினைவாற்றலுடன், நல்ல உடல் நலத்துடன் இருந்தார் பெரியார் பெருந்தொண்டர் ஆலங்குப்பம் என். தெய்வநாயகம். அவரைக் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திர சேகரன், அண்டிராயனூர் ஆசிரியர் பாலு, வடலூர் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் புலவர் சு. இரா வணன், வடலூர் தி.க. செயலாளர் செல்சேகர் ஆகியோர் 26.3.2013 அன்று மதியம் 2 மணியளவில் சந்தித்தனர்.
காது சரியாக கேட்காத நிலையில், கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையுடன் தம்மைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற வுடன், எழுந்து உட்கார்ந்து கொண்டு, வணக்கம் தெரிவித்து, வரவேற்று, அமர்த்தி, அன்பை வெளிப்படுத்திய காட்சி, மறக்கக் கூடியதா!
தங்களின் இயக்கப் பணிகள் பற்றி...
அது ஒரு பொற்காலம் என்றார். அய்யாவை எங்கள் பகுதிக்கு அடிக்கடி அழைத்து சுற்று வட்டார ஊர்களில் கழக பொதுக் கூட்டங் களை நடத்தியது; திருவெண்ணெய் நல்லூரில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தியது பற்றி, கண்களில் நீர் பனிக்க நினைவு கூர்ந்தார். எதிரே இருக்கும் பங்களாவில்தான் (நெடுஞ் சாலைத்துறை பயணியர் விடுதி) அய்யா வந்து தங்குவார். உடன் அன் றைய காங்கிரசு தலைவர்களில் ஒருவ ரான இருவேல்பட்டு சுப்ரமணிய (ரெட்டியாருக்கு) சொல்லியனுப்பு வோம். அய்யாவுக்கு வேண்டிய உணவு -சிற்றுண்டி எல்லாம் அவர் பொறுப்பு. பெரிய மனிதர்கள், கழகத் தோழர்கள் எல்லாம் வந்து அய்யாவை சந்தித்து உரையாடுவார்கள்.
இந்தப் பகுதியில் எந்தெந்த ஊர்களில்....
அரசூர் ஜெயராமன் வட்ட தலைவர் நான் (தெய்வநாயகம்) வட்ட தி.க. செயலாளர். அரசூர், ஆலங்குப்பம், திருவெண்ணெய் நல்லூர், கிராமம், தென்மங்கலம், தடுத்தாட்கொண்டூர், கடுவேப்பல பாளையம், ஆனைவாரி, மடப்பட்டு, மேட்டத்தூர், பாதூர், செங்குறிச்சி என்று எத்தனையோ ஊர்களில் கழகம் செயல்பட்டது. அய்யா பேசாத ஊர்கள் இல்லை. மதுரை பொன்னம்மாள் சேதுராமன், இராவணன் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், நடிகவேள் எம்.ஆர். இராதா நாடகங்களும், கழக சொற்பொழிவாளர்களின் கூட்டங் களும் நிரம்ப நடத்துவோம்.
தங்கள் இயக்கப் பணியில் மறக்க முடியாதவை...
நான் மட்டும் என்று சொல்ல முடியாது. கழகத் தோழர்களின் ஒருங் கிணைந்த செயல்பாடே இயக்கத்தை வளர்த்தது என்று சொல்ல வேண்டும். திருவெண்ணெய்நல்லூர் ஈசுவரன் கோயில் வளாகத்திலேயே, சுந்தரருக் கும் - சிவனுக்கும் வாதப்பிரதிவாதம் நடந்ததாக சொல்லப்படும் மண்ட பத்திலேயே திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தினோம் என்றால், இயக்கத்துக்கு அவ்வளவு செல்வாக்கான காலம் அது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமத் துவம் கொடுத்து சமபந்தி ஊருக்கு ஊர் சாப்பிட வைத்தது அந்த காலத் தில் கழகம் செய்த புரட்சி என்று சொல்ல வேண்டும்.
அரசூர் ஜெயராமன், கிராமம் வெங்கடேசன், ஆலங்குப்பம் கோதண் டராமன் என நூற்றுக்கணக்கான தோழர்கள் நினைத்ததைச் சாதிப்போம்.
மக்களின் ஆதரவு எப்படி....
மக்களின் ஆதரவு நமக்குத்தான். நான் 15 ஆண்டு காலம் ஆலங்குப்பம் ஊராட்சி தலைவராகப் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவன். நான் சொல்லும் நபர்கள்தான் ஊராட்சி உறுப்பினர்கள். நாங்களே இயக்கப் பிரச்சார நாடகங்களையும் நடித்து இருக்கிறோம். நமது ஆதரவைப் பொறுத்தே அதாவது நாம் யாரை ஆதரிக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் வெற்றி பெற முடியும். அந்த அளவுக்கு மக்கள் ஆதரவு தந்தை பெரியாருக்கும், நமது இயக்கத்துக்கும்!
நான்கூட அப்போது ஒரு வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். மக்கள் ஆத ரவே என்னை நேர்மையான வனாக விடுவித்தது. பெரியார் கட்சிக்காரர் கள் உண்மையானவர்களாகவும், நீதிக்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருப்பர் என்றே அன்றைய காவல் துறை அதிகாரிகள் குறிப்பிடுவர்.
தாங்கள் எப்போது - எப்படி இயக்கத்தில் இணைந்தீர்!
1945இல் விழுப்புரத்தில் நடந்த நடிகவேள் இராதாவின் நல்ல தீர்ப்பு நாடகம் என்று நினைக்கிறேன். அந்நாடகத்தைப் பார்த்த நான் அன்றே திராவிடர் கழக தொண் டனாக மனதளவில் மாறினேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஜாதி ஒழிப்புப் போராட்டம், சென்னையில் நடந்த முரளீஸ்கபே போராட்டம் ஆகியவற்றுக்கு நிறைய தொண் டர்களை அனுப்பி உள்ளேன்.
அப்படி சிறை சென்ற தோழர் களின் குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன்.
தங்கள் குடும்பம் பற்றி...
தமிழரசி, தவமணி, இந்திரசித் என மூன்று பிள்ளைகள். தமிழரசிக்கு தந்தை பெரியார் தலைமையில் திருமணம். தவமணிக்கு ஆசிரியர் (கி.வீரமணி) தலைமையில் திருமணம். 1960-இல் என் தாயார் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு ஆசிரியரையே அழைத்து, செய்தேன். என்னைப் பொறுத்த அளவில் இன்றும் கொள்கைக்காரன் தான். அய்யா மறைவுக்குப்பின் மனதளவில் பாதிக்கப்பட்டு இயக்கப் பணியில் ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டேன்.
இளைஞர்களின் பாசறையாக இயக்கத்தை வழி நடத்திச் செல்லும் தமிழர் தலைவரைப்பற்றி...
ஆசிரியர் இன்று இயக்கத்தை நடத்திச் செல்லும் போக்கு பாராட் டுக்குரியது. ஆடம்பர அரசியல், சுய நலம், ஜாதி உணர்வுகள் மேலோங் கியுள்ள இந்த காலத்தில் பெரியார் கொள்கையை, இயக்கத்தை வளர்த் துச் செல்வது என்பது கஷ்டமான காரியமே. அதையும் தாண்டி அவர் வளர்த்துவரும் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியதே. திராவிடர் கழகத்தையும் விட்டால் சுயநலம் இன்றி பாடுபடும் மக்கள் இயக்கம் வேறேது? வாழட்டும், வெல்லட்டும் திராவிடர் கழகம்!
பேட்டி கண்டவர்: துரை. சந்திரசேகரன்
ரெண்டும் ஒன்னு தான்! - சிவகாசி மணியம்
அம்மாவின் கரத்தைப் பற்றிய படி கோயில் வளாகம் முழுக்க சுற்றி வந்தபோது அங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றையும் அம்மா செய்வது போலவே கும்பிட்டு வந்தது குழந்தை.
இடது காலைச் சற்று சாய்த்தபடி புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையை குழந்தைக்கு காட்டி ஏதோ சொன்னாள் தாய். கொண்டு வந்த உதிரிப் பூக்களை சிலையின் மீது தூவி விட்டு மூன்று முறை சுற்றி வந்தாள். பூஜை முடித்து ஒரு வழியாக வெளியே வந்தார்கள்.
கோயிலின் நுழைவாயிலில் வளையல் கடை, புத்தகக்கடை, பூக்கடை என்று பல இருந்தாலும் குழந்தையைக் கவர்ந்தது பொம்மைக் கடை தான்! அம்மாவிடம் அந்தக் கடையைச் சுட்டிக் காட்டியபடி அங்கே இழுத்துப் போனது.
கரடி பொம்மையிலிருந்து கடவுள் பொம்மைகள் வரை அங்கே குவிந்து கிடந்ததைப் பார்த்த குழந்தைக்கு கோயிலுக்குள் பார்த்தது போன்ற ஒன்று கண்ணில் பட்டது. வண்ண மயமாய் முரளி கிருஷ்ணன் முழு உருவத்தில் இருந்தார்.
குழந்தைக்கு ரொம்பவும் பிடித்துப்போக அதை வாங்கித் தரும்படி அம்மாவிடம் கேட்டது. கோயிலுக்குள்ள பார்த்தோமே அதே மாதிரி இல்ல.
அங்கே பார்த்தது சாமிடி
அப்ப இது,,?
பொம்மை.,,!
மனிதனின் ஆயுளை கண்டறியும் சோதனை!
ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பார் என்பதைக் கூறக் கூடிய "இறப்பை அறியும் சோதனை'யை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகிலேயே முதன் முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருக்கும் அனீடா ஸ்டெஃபனோவ்ஸ்கா, பீட்டர் மெக்கிளிண்டாக் ஆகியோர் இந்தச் சோதனைக்கான காப்புரிமையைச் சமீபத்தில் பதிவு செய்தனர். இதன்படி, கைக்கடிகாரம் போன்ற சாதனத்தின் மூலம் மனிதர்களின் தோல் மீது வலியில்லாத லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்படும்.
இது, உடலில் உள்ள எண்டோதீலியல் செல்கள் எனப்படும் உட்புற செல்களை ஆராய்ந்து, வயது அதிகரிக்கும்போது குறிப்பிட்ட நபரின் உடல் எப்போது சிதைவுறும் (இறப்பு) என்பதை மதிப்பிடும். இந்த செல்கள் ரத்த நாளங்கள் உள்ளிட்ட உள் உறுப்புகளில் காணப்படுகின்றன.
லேசர் ஒளிக்கதிர் பாய்ச்சப்படும்போது இந்த செல்களில் ஏற்படும் அதிர்வுகளை மதிப்பிடுவதன் மூலம் தங்களால் குறிப்பிட்ட நபர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று கூற முடியும் என மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கக் கூடிய ஆபத்து குறித்தும் கூற முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சோதனையை டாக்டர்களால் எளிதில் பயன்படுத்தத் தக்க தொழில்நுட்பம் அடுத்த 3 ஆண்டு களில் உருவாக்கப்பட உள்ளது. இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மனிதர்களின் ஆயுள்காலத்தை அறிந்து ஒரு தகவல் பெட்டகம் உருவாக்க முடியும் என்று நம்புவதாக விஞ்ஞானி ஸ்டெஃபனோவ்ஸ்கா தெரிவித்தார்.
வ.வே.சு. அய்யர் நிறுவிய தமிழ் குருகுலம் பற்றி டாக்டர் வரதராஜூ நாயுடு எழுதிய (1924) அறிவிப்புக் கட்டுரை
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சேர்மாதேவியில் பரத்துவாஜ ஆசிரமத்தின் தலைவரான சிறீமான் வ.வே.சுப்பிரமணிய அய்யர் மேற்படி குருகுலத்தை நடத்தி வருகிறார். லவுளகிகக் கல்வியும், கைத்தொழி லும், வியாபார முறைகளும், ஒழுக்கமும் ஆத்யாத்ம உணர்ச்சியும் தமிழ் மக்களுக்குக் கற்பித்துக் கொடுக்கப்பட வேண்டுமென்பதே சிறீமான் அய்யரின் முக்கிய நோக்க மாகும் சிறீமான் அய்யர் சிறந்த தேச பக்தர். நாட்டிற்காக அரிய தியாகங் கள் செய்தவர்.
சத்தியவான்; தேசத் திற்காக அவர் பட்ட கஷ்ட நஷ் டங்கள் கொஞ்சமல்ல. நான் போற்றிவரும் தேசியவாதிகளில் சிறீமான் அய்யரும் ஒருவராவார். மேற்படி குருகுலத்தை ஆரம்பிக்கும் சமயத்தில் சிறீமான் அய்யர் அதற் காகப் பொருள் திரட்டியபோது, வருஷந்தோறும் நூறு ரூபாய் கொடுத்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியாரும் குருகுலத்திற்காக ரூபாய் 5,000 கொடுத்துதவினார்கள்.
சிறீமான் அய்யரிடத்தில் எனக்குள்ள பக்தியும் மரியாதையும் ஒரு போதும் குறையப்போவதில்லை. ஆனால், தமிழ் குருகுலத்திற்கு மூல புருஷராய் அவர் இருந்தபோதிலும், அது தமிழ் நாட்டின் பொதுச் சொத்தாகையால் அதைச் சகலருக்கும் பொதுவான நோக்கத்தோடேயே நாம் பார்க்க வேண்டும். சிறீமான் அய்யருக்காக நாம் எதுவும் நல்லதோ, கெட்டதோ செய்துவிடக்கூடாது.
ஆகவே, தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் குருகுலம், தமிழ்நாட்டிற்கு என் னென்ன நன்மைகளைச் செய்ய உத்தேசித்திருக்கிறதென்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலே நான் குறிப்பிட்டிருக்கிற வித்தைகள் அது போதிக்க உத்தேசித்திருக்கிறபடி யால் அவை மிகவும் உத்தம மானவைதான். ஆனால், மூலமான அம்சம் இன்னொன்று இருக்கிறது அதுதான் பிராமணர் -_ பிராமணரல் லாதார் விஷயம்!
ஜாதி வித்தியாசத்தைப் பாராட் டாத குருகுலத்தினால்தான் ஏதாவது நமது தேசத்திற்கு நன்மை செய்ய முடியும். அதுதான் நமக்குத் தேவை இந்த வித்தியாசம் இருக்கும் வரை இக்குருகுலம் தமிழ் நாட்டிலுள்ள பிராமணரல்லாதாரை இழிவு படுத்திக் காண்பித்துக் கொண்டிருக் கும் ஒரு ஞாபகக்குறி என்று நான் கூறவேண்டியிருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன்.
அங்கே பிராமணரும், -_ பிராமணரல்லாதாரும் வித்தியாசத் துடனேயே நடத்தப்படுகிறார்கள். சாப்பாட்டில், சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும், சகல வகுப்புகளையும் சேர்ந்த பிரா மணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிட வேண்டும். அதை நான் நேரில் அறிவேன். குருகுலத்தில் இம்மாதிரி வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று அவர் கூறினார்.
இதைக் கேட்டதும் நானும் சிறீமான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம்! இதைத் தெரிந்ததும் காங்கிரஸிலிருந்து மறுபடியும் ரூபா 5,000 கொடுக்கவிருந்ததை நிறுத்தி விட்டேன். இது சென்ற வருஷம் நடந்த சங்கதி. ஆனால், இதைப்பற்றி இதுவரை தமிழ்நாட்டில் நான் குறிப்பிடவில்லை. வித்தியாசம் ஒழிந்து போகுமென்று எண்ணி இருந்தேன்.
சமீபத்தில் மலாய் நாட்டிலிருந்து சிறீமான் சமரபுரி என்ற நண்பர் எனக்கு ஒரு கடிதமெழுதியிருக்கிறார். அதில் சிறீ மகாதேவய்யர் அங்கே குருகுலத்திற்காக ரூபாய் இருபதா யிரம் வரை வசூல் செய்திருப்பதாக வும், இன்னும் இரண்டாயிரம் ரூபாய் வரை கொடுக்க இருப்பதாகவும்.
ரூபாய் கொடுத்திருப்பவர்களில் பெரும்பான்மையோர் பிராமணரல் லாதாரென்றும் ஆகவே, குருகுலத்தில் பிராமணர் - பிராமணரல்லாதார் வித்தி யாசமில்லாமலிருக்கிறதா வென்றும் கேட்க. சிறீமான் மகாதேவய்யர் அம்மாதிரி வித்தியாசம் கிடையா தென்றும் சொன்னதாகவும், எல்லா விஷயங்களையும் தெரிவிக்க வேண்டு மென்றும் எழுதியிருக்கிறார். ஆகவே, பிராமணரல்லாதாரின் வேண்டுகோ ளுக்கிணங்கி உண்மையைத் தெரி விக்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாரம் குருகுலத்தைப் பற்றி எழுத நேரிட்டது.
நான் மறுபடியும் விசாரித்ததில் அவ்வித்தியாசம் ஒழியவில்லையென் பதை அறிந்து மிகவும் விசனிக் கிறேன். சமத்துவம் வேண்டுமென்று நாடெங்கும் கிளர்ச்சி நடந்து வருகிறது. வைக்கத்தைத் தமிழர்கள் மறந்துவிட முடியாது! பிராமணர் - பிராமணரல்லாதாரென்ற வேற்று மையும், சச்சரவுமில்லாமல் எல் லோரும் கூடி வாழ வேண்டுமென்று உழைத்துவருபவர்களில் நானும் ஒருவன்.
ஆகவே, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல், சிறு பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே உயர்வு தாழ்வு கற்பிப்பதால், இன்னும் பல தலைமுறைகளுக்கு வேற்றுமைப் புத்தியை வளர்த்து வரும்படி செய்யக்கூடியதாயிருக்கும். சேரமா தேவி தமிழ் குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்வது தேசீய பாவமென்று நான் கருதுகிறேன்!
இந்தியாவில் தற்சமயம் மூன்று உயர்ந்த குருகுலங்கள் இருக்கின்றன. சத்தியாக்கிரக ஆச்ரமம், காங்கிரி குருகுலம், சாந்தி நிகேதனம் ஆகி யவைகளே. மகாத்மாவால் நடத்தப் பட்டுவரும் சத்தியாக்கிரக ஆச்ரமத் திலாவது, அன்னிய நாட்டாரெல்லாம் கூட, பிரிட்டிஷ் பிரதமமந்திரி மாக்டொனால்ட் கூட புகழ்ந் துரைக்கும்.
சுவாமி சிரத்தானந்தாவால் ஸ்தாபிக்கப்பட்ட காங்கிரி குருகுலத் திலாவது, உலகத்திற்கே சர்வகலா சாலையாக விளங்கும் ரவீந்தரநாதரின் சாந்தி நிகேதனத்திலாவது பிராமணர் - பிராமணரல்லாதார் வித்தியாசம் கிடையாது. இவர்களைத்தான் இந்தியாவை உஜ்ஜீவிக்க வந்த குருகுலங்கள் என்று சொல்லலாம்.
ஆகவே, தேசத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டுமென்று ஆவல் கொண்ட எந்தப் பிராமண - _ பிராமணரல்லா தாரும் தமிழ் குருகுலத்தை ஆதரிப் பது சாத்தியமில்லாமலிருக்கிறது. சமபந்தி போஜனம், சமமான கல்வி முதலியவை கொடுத்து சமதிருஷ்டி யுடன் நடத்தத் தயாராகவிருப்பதாக சிறீமான அய்யர் அவர்கள் அறிவித் தாலன்றி, இக்குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்யக்கூடாதென்று பிராமணரல்லாதாரைக் கேட்டுக் கொள்கிறேன். - தமிழ்நாடு இதழில் வெளிவந்த இந்த அறிவிப்புக் கட்டுரை லக்ஷ்மி என்ற மாத இதழில் - 1924 அக்டோபர் (மலர்-2, இதழ்-2) பக்கம் 150-_152-இல் வெளியிடப்பட் டுள்ளது.
இதே இதழில் சேரமா தேவி குருகுலத்தினின்று வெளியிடப்பட்ட தும் வ.வே.சு.அய்யர் ஆசிரியராக இருந்து நடத்தியதுமான பாலபாரதி இதழுக்கு மதிப்புரை செய்துள்ளதில் வரையறையின்றி வடமொழிச் சொற்களைத் தமிழிற் புகுத்துவது ஒரு வகைப் பாஷைக் கொலையே யாகும்.
பாரதி முதற்பகுதியில் வெளி வந்துள்ள கட்டுரைகளில் பலவும் மணிப்ரவாள நடையிலமைந்திருப்பது தமிழர் மனதில் எத்தகைய உணர்ச் சியை உண்டு பண்ணுமோ அறி யோம்! தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கிற தமிழுக்கு அதன் இயற்கையான முதன்மை ஸ்தானத்தைத் தர ஸ்தாபனம் பெற் றிருக்கும் தமிழ் குருகுலத்திலிருந்து வெளிவரும் பாரதியின் தமிழ் நடை மணிப்ரவாள முறையைத் தழுவியி ருக்கும் வரை, தமிழ் அதன் இயற்கை யான முதன்மை ஸ்தானத்தைப் பெறுமோ என்று அய்யுறுகின்றோம், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது!
(நன்றி புதிய பார்வை, ஆகஸ்ட் 16-31, 2013, பக்கம் 20)
களங்காண வாருங்கள் காளையரே!
போர்க்களம்! போர்க்களம்!! சாதி யொழிப்புப்
போர்க்களம் சனாதனம் காக்கும்
பார்ப்பனர்க் கெதிரான போர்க்களம்! பெரியார்
நெஞ்சில்முள் அகற்றும் போர்க்களம்!
இருமுறை தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய
தீர்மானம் ஏற்காததால் போர்க்களம்!
பெரும்பான்மை மக்களை இன்னும் பஞ்சம
சூத்திர ராக்குவதால் போர்க்களம்!
அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்
பட்டது தீண்டாமை ஒழிந்ததா?
அரசை நடத்துவோர் அதிகார மய்யங்கள் சிந்திந்து சீர்செய்ய மனமில்லை
தேர்ந்தெடுக்கப் படாது நியமனம் பெற்றோரால்
உருவானதே அரசமைப்புச் சட்டம்
பார்ப்பனரே அதிகார மய்யமாய் இருந்ததால்
வெகுமக்கள் உரிமை முடக்கம்!
சட்டத்தின் முன்னே அனைவரும் சமமென்று
சாற்றுவது வெறும் சொல் விளையாட்டு
சட்டப் படியும் சாத்திரப் படியும்
சூத்திர ரென்பது இழிவன்றோ!
ஓட்டை உடைசல் உரிமை மீறலே
இந்நாட்டில் அரசமைப்புச் சட்டம்
கோட்டை கொத்தளம் கொலு மண்டபம் வேதபுரிகள் வேட்டைக் காடாகியே!
தகுதித் திறமை தமக்கு மட்டும்
இருப்பதாக எண்ணிக்கொண்டு
மிகுதியாக பீற்றித் திரியும் பார்ப்பனரே
தமிழர்க்கும் அருச்சகர் தகுதியுண்டு
முட்டுக் கட்டைப் போடும் மூடர்காள்
தன்னலம் மட்டுமே தகுதியாகா
வட்டியும் முதலுமாய் வாங்கிக் கட்டிக்
கொள்வீர்! எச்சரிக்கை செய்கிறோம்!
வீர வணக்கம் வீர வணக்கம்
சாதி யொழிப்புச் சமரினில்
சரித்திரம் படைத்த ஈகியர்க்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
களங்காண வாருங்கள் காளையரே அய்யா
முன்னெடுத்த போர்க்களம்! தமிழர்
தலைவர் அழைக்கின்றார்! தோழமை துணையுடன்
அய்யா பணிமுடிப்போம் ஆர்த்தெழுவீர்!
- இனியன், திருச்சி--_14
உணர்வுக்கு உரம் ஈட்டிய உடுமலை
- மு.வி.சோமசுந்தரம்
உடுமலைப்பேட்டை என்ற ஊரை நினைத்தாலும் உச்சரித்தாலும், உச்சரிக்கக் கேட்டாலும் ஏற்படும் உற்சாகத்துக்கும், பொங்கி எழும் உணர்வுக்கும் அணை கட்ட முடியாது.
காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்
என்று வள்ளுவர், வேறு சூழ் நிலையை விளக்க வந்த கருத்து, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோரின் ஆழிசூழ் உலகின் அழியா சிந்தனைப் பெருஞ்சுடர், என் பள்ளி வாழ்க்கையில் அரும்பி, கல்லூரி வாழ்க்கையில் போதாகி, உடுமலை அதன் விரிவாக்கம் அமராவதிநகரில் மலர்ந்தது என்று கூறும் வகையில், உடுமலை தனிச்சிறப்பைப் பெறுகிறது.
அமராவதி நகரிலிருந்து 25 ஆண்டுகள் பணி ஆற்றிய காலத்தில், பெற்ற நட்புகள் (கு.வெ.கி.ஆசான், பொறியாளர் து.பரமசிவம், அ.ப. நட ராசன் கபிலன் செகன்னாதன், வசந்தம் இராமச்சந்திரன், தென்மொழி ஞானபண்டிதன், வழக்கறிஞர் கஸ்தூரி புலவர் மருதவாணன் மற்றும் பலர்) நிகழ்ந்த நிகழ்வுகள் (தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு, நிகழ்ச்சி மண்டல் கமிஷன் விளக்க பயிற்சி முகாம் (தமிழர் தலைவர் பங்கேற்பு) மதுரை ஆதீனம் ஆசிரியர் கூட்டம், இறையன் - செல் வேந்திரன் பட்டிமன்றம், முத்துக்கூத் தன் பொம்மலாட்டம், ஜோசப், முனைவர் நெடுஞ்செழியன், ஆசான் - தமிழ்க்குடிமகன், கண்மணி - தமிழரசன், கோரா, ஞானபண்டிதன், திருக்குறள் முனுசாமி, சாலை இளந்திரையன், முனைவர் அருணா ராஜகோபால், பெரியார் பிறந்தநாள் விழாக்கள், இந்தி எதிர்ப்பு ஊர்வலம், கலந்துரையாடல் கள் நடிகவேள் இராதா நாடகம்) பள்ளியுடன் இணைந்த விழாத் தொடர்புகள் (முத்தமிழ் அறிஞர் கலைஞர், சாதிக்பாட்சா, நாவலர் நெடுஞ்செழியன், பாபு ஜெகஜீவன்ராம், ப.உ.சண்முகம், மதியழகன்)
இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் நேரத்தில் தொண்டு செய்து பழுத்த பழத்தின் சுவையைக் கண்டவனாகத் தான் எண்ண வேண்டியுள்ளது. களம் கண்டோ, போராட்ட ஏர் பிடித்தோ பணியாற்றியதில்லை.
இவற்றை இன்று நினைத்துப்பார்க்க வேண்டிய வாய்ப்பை ஏற்படுத்தியது, சைனிக் பள்ளியின் என் பழைய மாணவர்களின் இரண்டு (1988-இல் படித்து முடித்தவர்கள்) நாள்கள் வெள்ளி விழா நிகழ்ச்சிகள். அவர்கள் கற்ற காலத்திலிருந்த ஆசிரியர்களைக் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.
அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற விழைவில் அன்பு அழைப்பு விடுத்தார்கள், தொலைபேசி மூலமும் நினைவுபடுத்தினார்கள். பல ஆண்டு களுக்குப் பிறகு, இணையருடன், உடுமலை, அமராவதிநகரைப் பார்க்க, உடன்பணியாற்றியவர்களையும் சந்திக்க, ஜூன் 28இல் புறப்பட்டோம். (தனியாக, மகிழுந்தை ஏற்பாடு செய்து கொடுத் தார்கள்). இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் வகையில் அமைந்திருந்தன.
இக்கட்டுரையை எழுதுவதற்கு முக்கிய காரணமே வேறு. உடுமலைக்கு செல்வது என்ற எண்ணம் ஏற்பட்ட வுடன், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பெரிதும் வியந்து பாராட்டி எழுதிய உடுமலை தமிழறிஞர், தெளிந்த சிந்தனையாள ரான, 99 அகவையை அடைந்துள்ள ந.சுப்ரமண்யன் அவர்களைக் காண வேண்டும், உரையாட வேண்டும் என்ற அவா மிகுந்திருந்தது.
ஆசிரியர் அய்யா அவர்கள் உடுமலை பெரியவர் எழுதிய பல நூல்களைப் பற்றியும், குறிப்பாக உரத்த சிந்தனை என்ற நூலைப் பற்றி விடுதலை இதழில் இரண்டு நாள்கள் எழுதியதும், என் அவாவை மேலும் உயர்த்தியது.
எண்ணிய எண்ணம் கைகூட நம் கழக பெரியார் தொண்டரும், நண்பரு மான அய்யா நடராசன் துணையிருந்து அழைத்துச் சென்றார். நல்லதொரு மகிழ்ச்சி அளித்த சந்திப்பு என்றும் நினைவில் நிற்கும் சந்திப்பு, இணைய ருடனும், என்னுடனும் அன்பாக 20 நிமிடங்கள் உரையாடினார். உரையாட லின் போது, எழுப்பிய வினாக்களுக்கு அவர் கூறிய விளக்கங்களை இங்கு பதிவு செய்வது நல்லது என்று கருதுகிறேன்.
1) எனக்கு தமிழ்மொழி தாய் (Mother),ஆங்கிலம் காதலி (Love) தாய்க்கு கட்டுப்பட்டவன், சொல்படி நடப்பவன், காதலியுடன் எப்படியும் இருப்பேன்(Flexible)
2) உ.வே.சாமிநாதன் தமிழில் வல்லவர் ஆங்கிலம் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது.
3) என் தந்தையார் தாம்பரம் கிறித்துவக்கல்லூரியில் சூர்ய நாராயண சாஸ்திரி மாணவர், டாக்டர் மில்லர் டென்னிசனின் பாடலில் உள்ள இயற்கைக் காட்சிக்கு இணையா வேறு இருக்காது என்று கூறினார். என் தந்தை, கம்பராமாயணத்தில் உள்ள பாடலை விளக்கினார்.
4) கிறித்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சந்திரன் தேவனேசன் வலிய என்னை ஷிலாங் பல்கலைக் கழகத் துக்கு அழைத்துச் சென்றார்
(Dr. சந்திரன் தேவனேசன் என் விடுதி காப்பாளர்)
5) பாரதிதாசனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் இருவர் என்று கூறினார். பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார்.
6) பார்ப்பனர்கள் பிறவி அலுவலக ஊழியர்கள் (Born clerk like Robert Clive)
7) பார்ப்பனர்களுக்கு நாட்டுப்பற்று என்பது கிடையாது.
8) யூதர்களுக்கு முதலீடு பணம் பார்ப்பனர்களுக்கு அறிவு.
9) பார்ப்பனர்களுக்கு ஒழுக்கம் கிடையாது. (No character)
அன்பு விடை பெற்று அவரின் மூன்று நூல்களைப் பெற்று மகிழ் வுடன் திரும்பினோம்.
எரிந்த தாளில் எழுத்துக்கள் தெரிவது ஏன்?
காகிதங்கள் எரிந்த பின்னாலும், அதிலுள்ள எழுத்துக்கள் தெரிவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அது ஏனென்று தெரியுமா?
காகிதம், தாவர செல்லுலோஸ் என்னும் கரிமப் பொருளால் ஆனது. இது எரியக் கூடியது. அச்சு மையிலும் கரிமப் பொருட்களும், வண்ணம் தரும் நிறமிகளும் இருக்கும். இரும்பு சல்பேட் போன்ற சில ரசாயன பொருட்களும் மையில் காணப்படும்.
காகிதம் எரியும்போது, கரிமப் பொருட்களும், நிறமியும் எரிந்து போகும். ஆனால் இரும்பு சல்பேட் மட்டும் எரியாமல் இருக்கும். இதுவே எழுத்து இருந்த இடத்தில் இருந்து எழுத்துக்களை அடையாளம் காட்டுகிறது.
அதிகம் காபி குடிப்பவரா நீங்கள்?
ஒரு நாளைக்கு நான்கு கோப்பைக்கும் அதிகமாக காபி குடிக்கும் நாற்பதாயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால் உடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாகவும், 32 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்பழக்கத்தால் 2500-_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 55 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இதயம் எளிதில் பலவீனம் அடைவதாகவும் கடந்த 17 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழர்களின் நலனுக்கான சேது சமுத்திரத் திட்டம்!
அரசியல் பொறாமை உணர்ச்சியாளர்களைப் புறந்தள்ளி விரைந்து பணியை முடிக்கட்டும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு
தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை!
பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழ் நாட்டுக்குத் தேவையான எதிர்பார்க்கும் திட்ட மாகும். அரசியல் பொறாமையோடு முட்டுக்கட்டை போடுவோரைப் புறந்தள்ளி இம்மக்கள் திட்டத்தை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கு மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரத்தினையே மேம்படுத்தி, வளர்ச்சி - முன்னேற்றம் இவைகளை ஏற்படுத்தும் மிக அருமையான திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தமிழ்நாட்டின், தமிழர்களின் 100 ஆண்டுகளுக்கும் மேலான கனவுத் திட்டமாகும்.
சேது சமுத்திரத் திட்டத்தால் ஏற்படும் லாபம்!
உலகத்தில் எரிபொருள் கிராக்கியுள்ள இக்கால கட்டத்தில், இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்றுள்ள தற்போதைய நிலைமை மாறி, பல நூற்றுக்கணக்கான மைல்களை - கப்பல்கள் சுற்ற வேண்டியதைத் தவிர்த்து, எரிபொருள் கால நேரம், பணம் முதலியவைகளை மிச்சப்படுத்தவும். (30 மணி நேரம் மிச்சம்; 424 கடல் மைல் பயணக் குறைவு ஏற்படும் - ஒரு கடல் மைல் என்பது 1.15 மைல்).
தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பினை உருவாக் கித் தரவும் வழி வகை செய்திடும் திட்டம் இச்சேது சமுத்திர திட்டம்.
இந்தத் திட்டத்தினை தி.மு.க. தலைவர் கலைஞர், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் (U.P.A.) இடம் பெற்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, அதற்குமுன்பாக ஆய்வு செய்யப்பட்டதோடு, செயலுரு கொள்ளாமல் இருந்த தமிழ்நாட்டின் பிரம்மாண்டத் திட்டத்தை செயல்பட வைத்தார் - தனது கட்சி பெற்ற அமைச்சர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் மூலமாக.
பணிகள் வேகமாக நடைபெற்றன. சென்ற தேர்தலுக்கு முன்பே (2009) முடிந்திருக்க வேண்டிய ரூ.2427.40 கோடி மெகா திட்டமான இத்திட்டம் முடிவடைந்து, சேது கால்வாய் என்ற தமிழன் கால்வாய் திறந்து விடப்பட்டு விடுமானால், இதன் முழு செல்வாக்கு - வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தில் - ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கல்லவா போய்ச் சேரும்;
அதிலும் குறிப்பாக தி.மு.க.வுக்கும், அதன் தலைவர் கலைஞருக்கும் அல்லவா போய்ச் சேரும் என்று கருதியே இதற்கு முட்டுக்கட்டை போட - உச்சநீதிமன்றத்தில் - வழக்குத் தொடர்ந்து, இராமன் பாலத்தை இடிப்பதா? என்று முற்றும் கற்பனையான ஒரு போலி வாதத்தின்மீது நின்று பார்ப்பன சுப்ர(பாத)மணியசாமிகளும், தமிழ்நாட்டு அ.இ.அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச் செயலாளரும் வழக்குப் போட்டு திட்டப் பணிகளை முடக்கி வைத்துள்ளனர்!
குட்டையைக் குழப்பும் காங்கிரஸ்!
மத்தியில் உள்ள காங்கிரசும் இதில் குட்டையைக் குழப்பி, வட மாநிலங்களில் வாக்கு வங்கி பாதிக்குமோ என்ற ஒரு தவறான அனுமானத்தின் மீதோ என்னவோ(?) துரிதப்படுத்தி, இதனை உறுதியுடன் நின்று திட்டத்தினை முடிக்காமல் காலதாமதத்திற்கும், முடக்கத்திற்கும் மறைமுக காரணமானார்கள்!
இந்த ஆறாவது வழித்தடத்தைத் தேர்வு செய்தது தி.மு.க.வோ, காங்கிரசோ அல்ல, (ஆதாம் பாலம் என்ற மணல் திட்டுகள் உள்ள பகுதியையே இராமன் பாலம் என்று புருடா விடுகிறார்கள்!) மாறாக வாஜ்பேயி தலைமையில் முன்பு நடந்த பா.ஜ.க., - தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே (NDA) தேர்வு செய்தது!
நீரி என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது
இன்னுங் கேட்டால், அரசியல் முடிவு கூட அல்ல; நாகபுரியில் உள்ள ‘Neeri’ என்ற பொறியியல் ஆய்வமைப்பு ஆராய்ந்து, ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, அய்ந்து என்ற பல வழித் தடங்களை ஆய்வு செய்து -
மீன்பிடிப்பு பாதிப்பு,
சுற்றுச்சூழல் பாதிப்பு,
சர்வதேச அண்டை நாடுகள் எதிர்ப்பு,
பவளப் பாறைகள் பாதிப்பு
என்று பல கண்ணோட்டங்களைப் பற்றியெல்லாம் நன்கு ஆராய்ந்த பிறகே ஆறாம் வழித்தடமான ஆதாம் பாலம் பகுதி, மணல் திட்டு வழித்தடமே சிறந்தது என்று தேர்வு செய்து அறிவித்தே பணிகள் தொடங்கப் பட்டன.
பா.ஜ.க.வே துவக்கி விட்டு அதுவே இப்போது இதனைக் குறை சொல்லுவது எவ்வகையான தர்ம நியாயமாகும்?
அதிமுகவின் இரு தேர்தல் அறிக்கைகள் என்ன கூறுகின்றன?
அதைவிடக் கேலிக் கூத்தின் உச்சம், அ.இ.அ.தி.மு.க. வின் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும், சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டத்தினை விரைந்து செயல்படுத் தாமை ஏன் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க வில்லையா?
ஆதாம்பாலம் என்பது மணல் திட்டே என்று விளக் கியும்,
தென் கிழக்காசியாவிற்கே இத்திட்டம் பொருளாதார வளத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்றும்
அந்த இரண்டு தேர்தல் அறிக்கைகளில் விளக்கிக் கூறி விட்டு அதற்கு நேர்மாறான தலைக்குப்புறப் பல்டி அடித்து (About Turn) செய்வது அரசியல் அநாகரிகம் அல்லவா? அறிவு நாணயத்திற்குக் கேடானதல்லவா?
வரவேற்கத்தக்க மத்திய அரசின் முடிவு
இந்த நிலையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதன் அமைச்சரவையும் அதே வழித்தடத்தில் விரைந்து முடிப்பது என்று நேற்று முடிவு செய்து உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
உடனே இது கொள்கை முடிவு என்று திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்தில் கூறி கால தாமதம் இன்றி, பணிகளை முடுக்கி விட ஆவன செய்ய வேண்டும்!
வெத்து வேட்டுக்காரர் சுப்ரமணிய சாமிகளைப் போன்றவர்கள், அரசியலுக்காகவும், தான் சொன்னதை மறுக்கும் தமிழ்நாட்டு அ.தி.மு.க.கள் நிலைபற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோடு, உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து பணிகளைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களுக்குள் முடிக்க, போர்க்கால அடிப்படையில் (On War Footing) காரியங்கள் நடைபெற்றாக வேண்டும்.
விரைந்து துணிவுடன் செயல்படட்டும் மத்திய அரசு
மேலும் இராமனைக் கொண்டு வந்து போட்டு அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கும் மதவாத சக்திகளை அலட்சி யப்படுத்தி, மத்திய அரசு துணிவுடனும், தெளிவுடனும் செயல்பட வேண்டும் அவசியம்! அவசரம்!!
சென்னை
31.8.2013
கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்
வளர முடியும்
நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட் டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)
ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைக்கின்றன
தமிழகத்தில் ஏழை மக்களை இலவசத் திட்டங்கள் மூலம் திரா விடக் கட்சிகள் சோம்பேறிகளாக்கி விட்டன (தினமணி 12.8.2013) என்று காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கண் டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பொருளாதார மேதைகள் ஏழை களுக்கு வழங்கப்படும் இலவசத் திட் டங்கள் சமூகத்தில் நிலவும் பொருளா தார ஏற்றத் தாழ்வைக்குறைக்க உதவுகின்றன என்று கூறுகிறார்கள்.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் அரசாங்கத்தின் தலையாய குறிக்கோள் குடிமக்களின் வாழ் வைக் கருவிலிருந்து கல்லறை வரை பராமரித்து அவர்களின் வாழ்க் கையை வளமிக்கதாக ஆக்குவதே ஆகும். அத்தகு அரசைப் பொதுநல அரசு Welfare State என்று கூறுகி றோம். 1930-ஆம் ஆண்டு மே 10, 11 நாட் களில் ஈரோட்டில் நடந்த சுயமரி யாதை இயக்கத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் தந்தை பெரியாரின் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை,
உரை வருமாறு: ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கின்ற தன்மை இருக்கின்ற வரையில், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டு இருக்கின்ற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையில், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுதும் தங்களுடைய சுக வாழ்விற்கே என்று கருதிக்கொண்டு இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்.
காமராசர் தமிழக முதல்வராக இருந்த போது 14 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. எந்த மனித நேய முள்ள அரசியல் தலைவராவது இதைக் குறை கூற முடியுமா?
இதைப்போலவே தான் முதியோர் உதவித்தொகை, கருவுற்ற ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை. பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஆகியவை ஏழைகளின் வாழ்வில் வளம் சேர்க்கும் திட்டங்கள்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் அடைந் துள்ளனர். இதனால் அரசுக்கு ரூபாய் 700 கோடி செலவாகி உள்ளது.
உலக வங்கி World Bank தனது சென்ற ஜூன் மாத அறிக்கையில் உலகம் முழுவதும் 120 கோடி ஏழைகள் ஏழ்மையில் வாடுகின்றனர் என்றும், இந்தியாவில் மட்டும் 40 கோடி ஏழைகள் உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. இந்த ஏழை மக்களுக்கு உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை அளித்து அவர்களின் வாழ்வில் ஓரளவு நிம்மதியை அளிப்பது தான் பொது நல அரசின் கடமை ஆகும்.
தந்தை பெரியார் ஈரோடு சுயமரி யாதை மாநாட்டில் கூறிய கருத்தையே திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு களுக்கு முன், பின் வருமாறு கூறு கிறார்:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
கிடைத்ததைப் பகுத்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப் பாற்றுதல் அற நூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
ஏழைகளுக்கு இலவச திட்டங்கள் வழங்குவதன் மூலம் திராவிட கட்சி கள் அவர்களை சோம்பேறிகளாக்கி விட்டன என்று கூறுவது உண்மைக் கும் புறம்பான கூற்றாகும்.
- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)
பதவி உயர்வும், தகுதி, திறமையும்
பொதுத்துறை வங்கிகளில் செயல் இயக் குநர் பதவிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டது பற்றி நேற்றைய விடுதலையில் (30.8.2013) முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேர்களும் ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளில் பணிகளில் இருந்தவர்கள்தாம். இவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் மொத்தம் 30 மதிப்பெண் களுக்கு, ஒரே ஒரு மதிப்பெண்தான் பெற்றுள் ளனர் என்றாலும் அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்கள்தான் தகுதி திறமைகளை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோல் என்று கதறி வந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
பார்ப்பனர்கள் தொடக்கத்தில் சொல்லி வந்த ஒவ்வொரு காரணமும் பொருளற்றவை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இடஒதுக்கீட்டால் ஜாதி வளரும் என்றனர். இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வி வளர்ச்சி பெற்று - ஜாதி உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. படித்தவர்களிடையே ஜாதி கடந்த திருமணங் கள் நாட்டில் பெருகி வருகின்றன.
இடஒதுக்கீட்டால் தகுதி திறமை பாதிக்கப் படுகிறது - தகுதிக்கு அளவுகோல் தேர்வு களில் பெறும் மதிப்பெண்கள் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். அது வெறும் வார்த்தை ஜாலமே தவிர, உண்மையல்ல என்பதும் நிதர் சனமாகி விட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெறுபவர்கள் அவர்களின் துறைகளில் பரிணமிக்கவில்லை; அதே நேரத்தில், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள்கூட, அவர்கள் சார்ந்திருக்கும் துறைகளில் சாதனை முத்திரைகளைப் பொறித்து வருகின்றனர்.
சிவ அய்யாத்துரை என்ற தமிழர் கிராமப் பள்ளியில் படித்து - இடஒதுக்கீட்டின் காரண மாக வாய்ப்பைப் பெற்றவர்தான். ஆனாலும் மின்னஞ்சலை அவர்தான் கண்டுபிடித்துக் கொடுத்து உலக அளவில் போற்றப்படுகிற மனிதராகி விட்டார்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் கூறி வந்த ஒவ்வொரு காரணமும், தோல்வி அடைந்து - இப்பொழுது வேறு வழியின்றிப் பார்ப்பனர்களே மாநாடு போட்டு தங்களுக்குரிய இடஒதுக்கீடு தேவை என்று தீர்மானம் போடும் அளவுக்கு கீழே இறங்கி வந்துவிட்டனர். இதனை நாம் வரவேற்கிறோம். மக்கள் தொகையில் அவர்கள் இருக்கும் 3 சதவீத அளவு இடஒதுக்கீட்டை ஒத்துக் கொள்வார் களேயானால், அனேகமாக இடஒதுக்கீடு பிரச்சினையே ஒரு முடிவுக்கு வந்து விட்ட தாகக் கருதப்படும்.
பதவி உயர்வில், இடஒதுக்கீடு தேவை என்பதையும் உயர் ஜாதியினர் எதிர்த்து வருகின்றனர். டில்லியில் வங்கிப் பணிகளில் பதவி உயர்வு பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் மிகக் குறைந்த அளவு (30-க்கு ஒன்று) மதிப்பெண்கள் பெற்றவர்களே. இவர்கள் பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்தான். இதற்குப் பிறகாவது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது சரியானதுதான் மதிப்பெண் ணெல்லாம் தேவையில்லை என்று ஒத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாமா?
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்கிற வரவேற்கத்தக்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டு விட்டது. அதனை யொட்டி பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும் என்ற நியாயத்தை அனைத்துத் தரப் பினரும் ஏற்றுக் கொள்வார்கள். பிற்படுத்தப் பட்டவர்களுக்கான நாடாளுமன்றக் குழு இதில் கவனம் செலுத்தி ஆவன செய்ய இதுதான் சரியான நேரம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் பெருந்தொண்டர் திருவேங்கடம் பெயரன் பொறியாளர் தென்னரசு - இந்துமதி மணவிழா:
மணவிழாவில் தாலி கட்டும்பொழுது, பிராமணன் வரக்கூடாது; அப்படி வந்தால் அது அபசகுனம்!
பாரதியாரின் நூலினை ஆதாரம் காட்டி தமிழர் தலைவர் உரை
கும்பகோணம், ஆக.31- திருநெல்வேலி ஜில்லா வில் கம்பளத்து நாயக்கர் ஜாதியைச் சார்ந்த (வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை) சில ஜமீன்தார்கள் இருந்தனர்; இவர்களது கலியாணத் தில், தாலி கட்டும்பொழுது, பிராமணன் வரக் கூடாது; வந்தால், அது அபசகுனம், அவரை அடித்துத் துரத்தி விடுவார்கள் என்று மகாகவி பாரதியாரின் மாநில மேம்பாட்டுச் சிந்தனை நூலினை ஆதாரமாக எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.
கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரை யிலுள்ள ஹரிதா மகாலில் கடந்த 26.8.2013 அன்று நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் திருவேங்கடம் அவர்களின் பெயரன் பொறியாளர் தென்னரசு - இந்துமதி வாழ்க்கை இணையேற்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை வருமாறு:
அசைக்க முடியாத சீரிய கொள்கை வீரர் திருவேங்கடம்
இந்தக் குடும்ப நிகழ்விலே, எல்லையற்ற மகிழ்ச்சியோடு நான் கலந்துகொள்கிறேன். அதற்குக் காரணம் இருக்கிறது. நான் இங்கே வரும்பொழுது, யாரோ புதிய உறுப்பினர்களோடு பழகுவதைப் போன்ற உணர்வினைப் பெறவில்லை. மாறாக, 55 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானவர்; மறைந் தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந் திருக்கக்கூடிய, எப்பொழுதுமே என்னிடத்தில் தனி அன்பினைப் பாராட்டக்கூடிய கேதாரிமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அசைக்க முடியாத சீரிய கொள்கை வீரர் திருவேங்கடம் அவர்கள் ஆவார்கள்.
திருவேங்கடம் அவர்களுடைய குடும்பம் என்று சொன்னால், அதற்குத் தனி முத்திரை - சுயமரியாதை முத்திரை உண்டு. அந்த முத்திரையை இன்றைக்கும் காப்பாற்றி, வழிநடத்தி அடுத்த அடுத்த தலை முறையினருக்கும் கொண்டு சென்றிருக்கிறீர்களே, அதுதான் எங்களைப் போன்றவர்களுக்கு எல்லை யற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
உரிமையோடு நான் இந்த மணவிழாவிற்கு வந்திருக்கிறேன்
சிலருக்குப் பதவி வரும்பொழுது, படிப்பு பெருகும்பொழுது, வாய்ப்புகள் வரும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பாதையிலிருந்து நழுவுவார்கள்; வழுவுவார்கள்; அல்லது ஒதுங் குவார்கள். ஆனால், இந்தக் குடும்பம் அப்படியல்ல; இன்றைக்கு மூன்றாவது தலைமுறை.
அவருடைய பெயரப் பிள்ளைகள்; அவர்களுடைய மணவிழா இன்றைக்கு நடைபெறுகிறது என்று சொன்ன வுடனே, இன்றைக்கு எனக்கு நெருக்கடியான சூழல் இருந்தாலும்கூட, கட்டாயம் இந்த மணவிழா விற்குச் செல்லவேண்டும் என்று, நான் வலியுறுத்தி, இந்தக் குடும்பத்தில் உள்ள உறுப்பினரில் ஒருவன் என்ற உரிமையோடு நான் இந்த மணவிழாவிற்கு வந்திருக்கிறேன்.
காரணம், அந்தளவிற்கு ஈடுபாடு திருவேங்கடம் அவர்களிடத்தில் எங்களுக்கு உண்டு. இளைய தலைமுறையினருக்கு இது வியப்பாக இருக்கும். இன்னுங்கேட்டால், நம்முடைய நண்பர்கள் முறைப்படி, தலைமை நிலையத்தில் மணவிழா விற்குத் தேதி கேட்டார்கள்; அவர்கள் நெருக்கடியை உணர்ந்து தேதி கொடுக்கக் கூடியவர்கள். நானாக தேதி கொடுத்தால், அதில் சிக்கல்கள் வருகின்றன என்பதற்காக, அந்த உரிமையைக்கூட என்னிடத்தில் இருந்து பறித்துவிட்டார்கள். அந்த சூழ்நிலையில், இவர்கள் தேதி கேட்டபோது, அவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
நாகைக்கு நான் வந்தபொழுது, நேரிடையாக சற்குணம், மற்றவர்களும் என்னை வந்து சந்தித்தார்கள். சந்தித்து, தேதி கிடைக்கவில்லை என்பதை சொன்னார்கள்.
உடனே நான், இங்கே இருக்கக் கூடிய எங்க ளுடைய நட்பு தொடரும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், முக்கியமான பணிகள் இருந்தாலும், இந்த மணவிழாவிற்கு கட்டாயம் நானே வருகிறேன் என்று ஒப்புதல் கொடுத்துவிட்டு, பிறகு தலைமை நிலையத்திற்குச் சொன்னேன்.
காரணம் என்னவென்றால், மணமக்களும், மற்றவர்களும் கண்டிப்பாக இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
நான் மாணவனாக இருந்தபொழுது மோட்டார் சைக்கிள் பிரச்சாரம்
அய்யா திருவேங்கடம் அவர்கள் ஒரு கொள்கை வீரர். மாணவர் பருவத்தினை முடித்து, அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திலே படித்துக் கொண் டிருக்கின்ற நேரத்தில், நன்னிலம், கேதாரிமங்கலம், புத்தகரம், ஏனங்குடி போன்ற பகுதிகளுக்கு நாங்கள் வருகின்ற நேரத்தில், என்னை ஈர்த்த ஒரு உருவம்; அந்த உருவம் இருக்கிறதே, இன்னமும் என்னுடைய மனதிலே நன்றாக நினைவில் இருக்கக் கூடியது; ஆனால், பெரியார் தொண்டரைக் காணவேண்டும் என்றால், கறுப்புச் சட்டை எப்படி ஒரு அடை யாளமோ, அதுபோல், மோட்டார் சைக்கிளில் மிகக் கம்பீரமாக வந்து, கால்களை ஊன்றி நின்று பேசுவது, என்னுடைய மனக்கண் முன் அப்படியே அகலாமல் இருக்கிறது.
அதேநேரத்தில், சிங்கமாகக் கர்ஜிக்கக்கூடியவர் எங்களிடத்தில் வரும்பொழுது, கட்சியினுடைய தலைமை, கட்டுப்பாடோடு இருப்பார். நாங்கள் மாணவர்களாக இருந்தபொழுது, அவருடைய மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்துகொண்டு பல கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.
மிகப்பெரிய அளவிற்கு, தூக்க முடியாத அளவிற்கு ஒரு வாழ்த்து மடல்
எல்லா போராட்டங்களிலும் கலந்துகொண்டு, சிறை சென்றிருக்கிறார்கள், அதனுடைய விளைவுதான் இப்புரட்சி.
ஆகவே, இந்த மணவிழா என்பதிருக்கிறதே, இது நம் குடும்பத்து மணவிழா என்ற உறவோடு, உரிமையோடு நான் இங்கே வந்திருக்கிறேன். நம்முடைய மணமகன் தென்னரசு அவர்கள், இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று படித்திருக்கிறார்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காலம் போய், இன்றைக்கு ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகமாகப் படிக்கிறார்கள்; தேர் வில் அதிகளவில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
சுயமரியாதைத் திருமணம் சட்டத்தை நிறைவேற்றியவர் அண்ணா!
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1967 இல் தமிழகத்தில் வந்தவுடனே, அறிஞர் அண்ணா அவர்கள் செய்த பல அரிய சமூகப் புரட்சியில் ஒன்றுதான், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்; இதற்கு முன்பு செய்த சுயமரியாதைத் திருமணங்களும் செல்லும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.
பார்ப்பனர்களின்மேல் நமக்குத் தனிப்பட்ட முறையில் வெறுப்பு கிடையாது. இங்கே நான் உரையாற்றுகிறேன், உங்களுக்குப் புரிகிறது; மணவிழா உறுதிமொழியினை தமிழில் சொல்கி றேன்; உங்களுக்கும் புரிகிறது; மணமக்களுக்கும் புரிகிறது. ஆனால், பார்ப்பனர்கள் சொல்கின்ற சமஸ்கிருத மந்திரம் உங்களுக்குப் புரியுமா?
பார்ப்பனர்கள்மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பல்ல!
இங்கே பாருங்கள் மணமக்கள் தென்னரசு - இந்துமதி ஆகியோர் எவ்வளவு மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கிறார்கள்; இதே நிலை புரோகிதர் நடத்தி வைக்கும் மணவிழாவில் இருக்குமா? மாங்குச்சி சுள்ளியைப் போட்டுக் கொளுத்தி, மணமகள் கண்ணை கசக்க, மணமகன் கண்ணைக் கசக்க, இரண்டு பேரும் கண்ணீர் விட, என்னங்க, இரண்டு பேரும் அழுதுகிட்டே இருக்காங்க என்று மூலையில் ஒரு பாட்டி சொல்ல, ஏதோ இருக்கு போல இருக்கே என்று பக்கத்தில் இருப்பவர் சொல்ல, இது அத்தனைக்கும் இடமே யில்லாமல், எவ்வளவு மகிழ்ச்சியாக மணவிழா வினை நடத்த பெரியார் அவர்கள் நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். திராவிடர் இயக்கம் தந்த ஒரு அருட்கொடை அல்லவா இந்த சுயமரியாதைத் திருமணம். இதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். நமக்கொன்றும் பார்ப்பனர்மீது தனிப்பட்ட முறையில் வெறுப் பல்ல; தமிழன் வீட்டுத் திருமணங்களை தமிழன் நடத்தவேண்டும்.
நான் வந்திருக்கிறேன் என்றால், நான் இந்தக் குடும்பத்திற்கு உரியவன் என்ற காரணத்தினாலேயும், நான் வந்து நடத்துவதால், உங்களுக்கு மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சியின் காரணமாகத்தான் நான் வந் திருக்கிறேனே தவிர, நாங்கள் வந்து நடத்தினால்தான் இது சுயமரியாதைத் திருமணம் என்று அர்த்த மல்ல;
மணமக்களின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் காலத்தில் எல்லாம் இப்படி இருக்காது; ஏனென் றால், இப்பொழுதெல்லாம் இணைய தளத்திலேயே திருமணம் நடைபெறுகின்றது. நேரம், காலம், பொருள் சிக்கனம் மிக முக்கியமாக தேவை.
எனக்கும்,-மற்றவர்களுக்கும் தெரியாத ஒரு செய்தி!
1938 இல் வெளியிட்ட ஒரு புத்தகத்தை, டாக்டர் மா.ராஜமாணிக்கனார் அவர்கள் தொகுத்து, மயிலை சிவமுத்து அவர்கள் என்ற மிகப்பெரிய புலவர் எழுதியதை, அப்படியே பிற்சேர்க்கையாகப் போட் டிருக்கிறார். அதில் பார்த்தீர்களேயானால், எந்த ஜாதியும், பார்ப்பனர் அல்லாத மக்கள் திருமணத் தில், பார்ப்பனர்கள் வந்து கலந்துகொள்ளக்கூடிய நிகழ்வே கிடையாது.
மகாகவி பாரதியாரின் மாநில மேம்பாட்டுச் சிந்தனைகள்
நேற்று எங்கள் பல்கலைக் கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்நிகழ்வில், அகில இந்திய வானொலியில் இயக்குநராக இருந்த சேயோன் பங்கேற்றார். அவர் எனக்கு ஒரு புத்தகத் தினைக் கொடுத்தார். அந்தப் புத்தகத்தினை யார் கொடுத்தாலும், உடனே படிப்பது என்னுடைய இயல்பு.
அந்தப் புத்தகத்தின் தலைப்பு, மகாகவி பாரதியாரின் மாநில மேம்பாட்டுச் சிந்தனைகள்.
அவர் எப்படி ஜாதியை, மற்றவையெல்லாம் தாண்டியவர்; பிறப்பிலே பார்ப்பனர்தான். ஆனாலும், சூத்திரருக்கு ஒரு நீதி;
தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடும் ஆயின்;
அது சாத்திரம் அல்ல; சதியென்று கண்டோம் என்று பாடியவர் பாரதியார் அவர்கள்.
அப்படிப்பட்ட பாரதியாருடைய வாழ்க்கை, பாரதியாருடைய மாநில மேம்பாட்டுச் சிந்தனைகள் நூலில் இருந்ததைப் படித்தபொழுது, இதுவரையில் யாருக்கும் தெரியாத ஒரு செய்தி:
1909 காலகட்டத்தில் அவர் கவிதையை மட்டும் எழுதவில்லை; கட்டுரைகளையும் எழுதினார். அப்படி எழுதும்பொழுது,
தேசம் என்பது குடும்பங்களின் தொகுதி; குடும்பங்கள் கல்வியினால் உயர்வடைய வேண்டும் இப்படியெல்லாம் சொல்கின்ற அவர்,
ஜாதிப் பிரிவுகளைப்பற்றிக் கூறும்பொழுது, அது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாக இருப்பதை பாரதியார் எடுத்துக் காட்டுகிறார். இந்நூலில், 57 ஆம் பக்கத்தில் இருக்கிறது.
இந்நூலை வெளியிட்டது, தமிழக அரசின் சார்பாக, திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மய்யம் ஆகியவை சேர்ந்து வெளியிட்டிருக்கிறது.
காஷ்மீரத்தில் இந்து ராஜா; ஆனால், அங்கே முஸ்லிம்கள் அதிகம். மேலும் அங்குள்ள இந்துக் கள் அனைவரும் பிராமணர்கள். இமயமலைக்கு அருகில் உள்ள காஷ்கர ஜில்லாவில், பிராமணர் களைக் காட்டிலும், சத்திரியர்களுக்கு மதிப்பு அதிகம்.
கலியாணத்தில், தாலி கட்டும்பொழுது, பிராமணன் வரக்கூடாது!
திருநெல்வேலி ஜில்லாவில் கம்பளத்து நாயக்கர் ஜாதியைச் சார்ந்த (வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை) சில ஜமீன்தார்கள் இருந்தனர்; இவர் களது கலியாணத்தில், தாலி கட்டும்பொழுது, பிராமணன் வரக்கூடாது; வந்தால், அது அபச குனம், அவரை அடித்துத் துரத்தி விடுவார்கள்.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இப்படியெல்லாம் ஒவ்வொரு ஜாதிக்கு ஒவ்வொரு வழக்கம்; தாலியிலே பல வகைகள் உண்டு; ஏனென் றால், இது எங்கள் ஜாதி வழக்கம் என்று சொல் வார்கள். இதெல்லாம் இடையில் புகுந்ததுதான்.
இதையெல்லாம் மாற்றி, இரண்டு பேரும் அறிவார்ந்த மணமக்கள்; ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழவேண்டும். வாழ்க்கைக்குத் தேவை தன்னம்பிக்கை; அந்தத் தன்னம்பிக்கை, மூட நம்பிக்கை இருக்கின்ற இடத்தில் இருக்காது. ஆகவே, அந்த மூட நம்பிக்கையை நீக்கி, தன்னம் பிக்கையைப் பெற்றவர்களாக வாழவேண்டும். பகுத்தறிவோடு வாழுங்கள்; அறிவே துணை என்று அவர்கள் போட்டிருப்பது எவ்வளவு ஆழமான கருத்தைச் சொல்லக் கூடியது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
திருவேங்கடத்தோடு முடிந்துவிட்டது என்ப தல்ல; தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. அதன் காரணமாகத்தான் அறிவார்ந்த பிள்ளை களாக இருக்கின்றார்கள்.
ஒரு தந்தையைவிட பிள்ளை அறிவாளியாக இருந்தால், தந்தைக்குப் பெருமை; அதைவிட தாத்தாவிற்குப் பெருமை. ஆகையால்தான் இந்தக் குடும்பம் எல்லாத் துறைகளிலும் வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்ற குடும்பம்; மேலும் மேலும் வளரவேண்டும்.
ஆகவேதான், இந்தக் குடும்பத்தில் நடை பெறுகின்ற மணவிழாவில் எல்லாம் வாய்ப்புள்ள போதெல்லாம் கலந்துகொண்டிருக்கிறேன்; இப்பொழுதும் கலந்துகொண்டு உங்களையெல் லாம், பழைய தோழர்களையெல்லாம், பழைய உறவுகளையெல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கின்றபொழுது, எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறேன் என்று கூறி, மணமக்கள் செல்வர்கள் தென்னரசு - இந்துமதி ஆகியோருக்கு அறிவுரை ஏதும் தேவையில்லை. அவர்கள் நன்றாகப் படித்தவர்கள்; இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை. அதனால்தான் மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மணமக்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அந்த வேண்டுகோள் என்னவென்றால், யார் யாரெல்லாம் உங்களுக்கு வாழ்க்கையில் உதவினார் களோ அவர்களை மறந்துவிடாதீர்கள். அந்த வரிசையில் முதற்கண் நீங்கள் நன்றி காட்ட வேண்டியது; மறக்காமல் பாசம் காட்டவேண் டியது உங்களுடைய பெற்றோர்களிடம்தான். அவர்களுடைய தியாகத்தினால்தான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள்; வாழ்ந்திருக்கிறீர்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்; உயருகிறீர்கள். எனவே, பல குடும்பங்களிலேயே படிப்பு உயருகிறது; அதேநேரத் தில் பாசம் குறைகிறது என்கின்ற நிலை இருக்கக் கூடாது.
எனவே, உங்கள் குடும்பங்களிலேயே உங்கள் தாய், தந்தையருக்கு, உங்களை ஆளாக்கியவர் களுக்கு நீங்கள் என்றென்றைக்கும் நன்றி காட்டுபவர்களாக இருங்கள்.
அதற்கடுத்தபடியாக, உங்களுக்கு யார் உதவி செய்திருந்தாலும், அது தினையளவு இருந்தாலும், அதைப் பனையளவு நினைத்து நீங்கள் அதற்கு நன்றி காட்டுங்கள்; திருப்பி உதவி செய்யுங்கள்; அதன்மூலம் மகிழ்ச்சியை ஈட்டுங்கள்; இன்பத்தைப் பெறுங்கள், அதுதான் மிக முக்கியம்.
அண்ணா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்!
அண்ணா அவர்கள் சொன்னதைத்தான் எல்லா மணவிழாக்களிலும் எங்களைப் போன்றவர்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்; விட்டுக் கொடுப்ப வர்கள், கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போன வர்கள் விட்டுக் கொடுப்பதில்லை எனவே, சிறப்பாக வாழுங்கள்; மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழுங்கள். நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லி, ஒரு மனதாயினர் தோழி, திருமண மக்கள் வாழி! என்று வாழக்கூடிய அந்த வகையிலே, நீங்கள் சிறப்பான வாழ்வு வாழுங்கள்.
உங்கள் பெற்றோர்கள் எல்லாம் எப்படி உயர்ந்து நல்ல தொண்டை, கல்வித் தொண்டை, அறிவுத் தொண்டை இங்கே செய்கிறார்களோ, அதுபோல, கழகத் தொண்டையும் நீங்கள் சிறப்பாக, பகுத் தறிவைத் துணைகொண்டு செய்யுங்கள் என்று சொல்லி,
இருபெரும் தலைவர்களுக்கும் வீர வணக்கம்
இந்த மண முறைக்கு, நாங்கள் யார் தலைமை தாங்கினாலும், யார் முன்னிலை வகித்தாலும், தத்துவ ரீதியாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை திருமணம் எங்கே நடைபெற்றாலும் தலைவர், முன்னிலை வகிப்பவர், இத்திருமண முறைக்கு சட்ட வடிவம் கொடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார் கள். எனவே, இருபெரும் தலைவர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தி, இங்கே இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
வரவேற்பும் -முன்னிலையும்
நிகழ்ச்சிக்கு முன்னதாக அனைவரையும் வர வேற்று பொறியாளர் ஜி.சந்திரமவுலீஸ்வரன் உரையாற்றினார். மணவிழாவிற்கு முன்னிலை வகித்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு, பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றினர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன், திருமருகல் பொன்.செல்வ ராஜ், குடந்தை பெருநகரத் தலைவர் கு.கவுதமன், குடந்தை மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன், தஞ்சை மண்டல கழகத் தலைவர் நெய்வேலி வெ.ஜெயராமன் ஆகியோரின் வாழ்த்துரைக்குப் பின்னர், பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் எஸ்.திருவேங்கடம் - கமலாம்பாள் ஆகி யோரின் பெயரனும், டி.குணசேகரன் - எம்.உமா ஆகியோரின் மகனுமான பொறியாளர் கு.தென் னரசு, என்.திருவரசன் - சாந்தி ஆகியோரின் மகள் தி.இந்துமதி ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
நிறைவாக ஜி.கலைவாணன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
இம்மணவிழாவில், அரு.ரங்கநாதன், பெரியார் முரசு, திருவேங்கட ரவி, ஆடிட்டர் சண்முகம், பிரபா ரவி, பீ.ரமேசு மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
கடவுள் சக்தி அவ்வளவுதான்! வைத்தீஸ்வரன் கோவில் மண்டபம் இடிந்து விழுந்தது
கோவில் திருஷ்டி சுத்தி மண்டபத்தின் மேல்தளம் இடிந்து விழுந்திருப்பதைக் காணலாம்
சீர்காழி, ஆக.31- சீர் காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவி லில் உள்ள மண்டபம் இடிந்து விழுந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே தரும புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தீஸ் வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வைத் தியநாதசாமி, தையல் நாயகி, விநாயகர், செல்வ முத்துக்குமரசாமி, அங் காரகன் ஆகிய சுவாமி களுக்கு தனித்தனி சன் னதிகள் உள்ளனவாம்.
இந்தக் கோவிலுக்கு தின மும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், இந்தக் கோவில் நவக்கிரகங்களில் ஒன் றான செவ்வாய் தலம் என்பதால் திருமண தோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனராம்.
இந்த கோவிலில் விழாக்காலங்களின் போது விழா முடிவ டைந்தவுடன் பஞ்ச மூர்த்திகளை திருஷ்டி சுத்தி மண்டபத்தில் வைத்து திருஷ்டி கழிப் பது வழக்கமாம். சில ஆண்டுகளாக கோவி லின் பல்வேறு இடங் கள் வலுவிழந்து காணப் பட்டதாம். இந்த நிலை யில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு மேற்கு கோபுரவாசல் பகுதியில் உள்ள திருஷ்டி சுத்தி மண்டபத்தின் இடது பக்க மேல்தளம் இடிந்து விழுந்தது.
நேற்று (30.8.2013) மதியம் இந்த மண்ட பத்தின் வலது புற மேல் தளம் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில் நிர்வாகிகள் மண்டபம் இடிந்த பகுதி யைச் சுற்றி கம்பிவேலி அமைத்தனர். கோவில் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.
தன்னுடைய கோபு ரத்தையும், மண்டபத் தையும் காக்க முடியாத வைத்தீசுவரன் எப்படி பக்தர்களைக் காப்பான்.
திமுகவில் எந்த கோஷ்டியும் இல்லை அடக்கும் வல்லமை எனக்கு உண்டு: தி.மு.க. தலைவர் கலைஞர்
சென்னை, ஆக. 31- திமுகவில் எந்தக் கோஷ்டியும் இல்லை. கோஷ்டி இருந்தாலும் அடக்கக்கூடிய வல்லமை என்னிடம் உண்டு என்று கலைஞர் பேசினார்.
வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி இல்ல திருமணத்தை திமுக தலைவர் கலைஞர் நேற்று (30.8.2013) தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கலைஞர் பேசியதாவது:
ஒரு மனிதன் என்னதான் பெரும்புகழ் செல்வம் பெற்றிருந்தாலும், எல்லாவற்றையும்விட பெரும் செல்வம், அவன் அதிகமாக நண்பர்களைப் பெற்றி ருப்பதுதான். அந்த வகையில் காந்தி அளவற்ற நண் பர்களைப் பெற்றிருக்கிறார். இந்தத் திருமண விழா வில் துரைமுருகன், காந்தி பற்றி பாராட்டியதைவிட, துணைவியாரைத்தான் அதிகமாகப் பாராட்டினார்.
காந்தி வீட்டுக்குப் போனால், தங்களுக்கு நல்ல இனிய உணவு விருந்தளிப்பார் என்பதை அவர் சொன்னபோதுதான், எனக்கு உண்மையான விஷயம் புரிந்தது. இவர்கள் ராணிப்பேட்டை காந்தி வீட்டைச் சுற்றி வந்தததற்குக் காரணம், அங்கே கிடைக்கின்ற நல்ல உணவுதான். அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், காந்தியிடம் நான் காண்பது, திராவிட உணர்வு, தமிழ் உணர்வு, சுயமரியாதை உணர்வு.
சட்டமன்றத்தில் அவர் இருந்தபோது நானும் இருந்திருக்கிறேன். சட்டமன்றத்தில் காந்தி பேசி னால், காங்கிரஸ்காரர்கள் அதை பாராட்டி மகிழ்ச்சி தெரிவிப்பார்கள். திமுக அரசாக இருந் தாலும், காந்தி, தான் நினைத்ததை சொல்லத் தவறு வதில்லை.
உண்மைக்காக தொண்டாற்றக் கூடிய ஒருவர். உண்மையைச் சொல்லி, திமுகவில், ஆட்சி யில் இருக்கின்ற குறைபாடுகளை எடுத்து சொன்ன வர். மாவட்ட செயலாளர் என்ற பதவி காரணமாக இந்த மாவட்டத்தில் எந்தவிதமான பூசலும் இல் லாமல், எல்லோரும் நண்பர்களாகப் பழகுகின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார் என்று துரை முருகன் சொன்னார்.
துரைமுருகன் சாதாரணத் தொண்டரல்ல துணைப் பொதுச் செயலா ளர். அவர் சொன்னார் தமிழ்நாட்டில் கோஷ்டி இல்லாத ஒரு மாவட்டம், வேலூர் மாவட்டம்தான் என்றார். துரைமுருகன் அவருடைய மாவட்டமும் அது என்பதால் அப் படிச் சொல்லிக் கொண்டாரோ என்று எனக்குத் தெரியவில்லை.
வேலூர் மாவட்டத்தில்தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் கோஷ்டி இருப் பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். தி.மு.க.வில் எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளை அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், திமுகவில் உள்ள தலைவர்களிடத்திலும் உண்டு. மணமக்க ளுக்கு நான் சொல்லுகிற அறிவுரை குடும்ப வாழ்வை சீராக, செம்மையாக, சிக்கனமாக எளிய முறையில் வாழ வேண்டும் என்பதுதான்.
- இவ்வாறு கலைஞர் பேசினார்
இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?
நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லையென்றும், மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும், இப்போது வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த நிலைமை யில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும், அதாவது பார்ப்பனர்களால், சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப்படுகிறதும் 100க்கு 97 பேருக்கு மேலான எண்ணிக்கை கொண்ட நாம் இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும், சூத்திரன் என்கிற பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசிமக்கள் என்னும் கருத்தையே கொண்டது என்றும்,
பஞ்சமன் என்கிற பதம் ஜீவ வர்க்கத்தில் பூச்சி, புழு, பன்றி, நாய் கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமை கூட இல்லாததும் கண்களில் தென்படக் கூடாததும் தெருவில் நடக்கக் கூடாததுமான கொடுமை தத் துவத்தைக் கொண்டது என்றும், மிலேச்சர்கள் என்பது துலுக்கர், கிறிஸ்தவர், அய்ரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை குறிப்பது என்றும்,
அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி எறிந்து விட வேண்டிய கருத்தைக் கொண்டதென்று உண்டாக்கி அந்தப்படியே பார்ப்பனர்களால் ஆதாரங்களும் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளப்பட்டு அதுதான் இந்து மதத்திற்கு ஆதாரமென்று காட்டப்படுகிறதென் றும் அநேக தடவைகளில் ஆதார பூர்வமாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். அதற்காக எவ்வளவோ கிளர்ச்சிகளும் செய்து வந்திருக்கிறோம்.
இவ்வளவும் நடந்துவரும் இந்தக்காலத்தில் இன்னமும் முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு முதலிய ஸ்தாபனங்கள் சூத்திரன், பஞ்சமன், பிராமணன் என்னும் பதங்களை உபயோகப்படுத்தி வருகிறதென்றால் இதன் தலைவர்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை உணர்ச்சி, சுத்த ரத்த ஒட்டம் ஆகியவை இருக்கிறதா என்று கேட்கிறோம்.
சமீபத்தில் மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் பொது ஜனங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியே இதுதான். இப்படியிருக்க, அம்மதுரைப் பட்டணத்திலே மங்கம்மாள் சத்திரங்களில் சூத்திரன் என்னும் வாசகங்கள் கொண்ட போர்டுகள் எழுதி தொங்க விடப்பட்டிருக்கின்றன. இது எவ்வளவு அநியாயம்? ஆதலால் மதுரை ஜில்லா போர்டாரோ, முனிசிபாலிட்டியாரோ உடனே இதைக் கவனித்து இவ்வித இழி மொழிகள் கொண்ட போர்டு களையும், வாசகங்களையும் அப்புறப்படுத்தி இவ்வித வித்தியாசங் களையும் ஒழித்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்.
இதுபோலவே இன்னும் மற்ற ஊர்களிலும் இம்மாதிரி வாசகங்களோ, சொற்களோ காணப்பட்டால் அதை உடனே அடியோடு நிவர்த்திக்க வேண்டியது உண்மை யான மக்களின் முதல் கடமை என்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927
நன்றி கெட்ட தன்மை
சென்னையில் வர்த்தகர்கள் சங்கம், வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவை முழுவதும் அய்ரோப்பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு, இந்திய வியாபாரிகளுக்கு அவற்றில் போதிய செல்வாக்கும், சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு காலஞ்சென்ற பெரியார் சர். பி. தியாகராய செட்டியார் அவர்கள் பெருமுயற்சி செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல சவுகரியங்களும் செய்து கொடுத்து அதன் மூலம் அய்ரோப்பிய சங்கங் களுக்கு இருப்பது போலவே சென்னை முனிசி பாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும் இந்திய சட்டசபைக்கும் அங்கத் தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு எவ்வளவோ கஷ்டமும் பட்டார்.
இப்போதும், மற்ற எல்லா ஸ்தாபனங்களையும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே, இதையும் கைப்பற்றிக்கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கியதையும் சம்பாதித்துக் கொடுத்த சர் தியாகராயரின் வாரிசான ஸ்ரீமான் பி.டி. குமாரசாமி செட்டியார் அவர்களையே அச்சங்கத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள்.
இக் கூட்டத்தாரின் கல்னெஞ்சத்தையும், நன்றிகெட்ட தன்மையும் காட்ட இதைவிட வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமா? ஆகவே, நமது பொது நன்மைக்காக என்று எந்த ஸ்தாபனங்களை ஏற்படுத்தினாலும் மெள்ள மெள்ள அதில் வேலைக் காரராக வந்து சேர்ந்து குமாஸ்தாவாகி, மேனேஜராகி, எஜமான்களாகி நம்மை கூலிக்காரர்களாக செய்து விடுகிறார்கள்.
இக்காரணங்களால்தான் நாம் செய்யும் தியாகமோ, உழைக்கும் உழைப்போ, ஏற்படுத்தும் ஸ்தாபனங்களோ, நமக்கே பலன்தர வேண்டுமானால் கண்டிப்பாய் அவற்றில் பார்ப்பனர்களைச் சேர்க்கக்கூடாது என்று வாதாடி வருகிறோமே அல்லாமல் மற்றபடி அவ்வகுப்பார்மீது துவேஷம் கொண்டல்ல.
இந்த விஷயத்தை அறியாமல் இருப்பவர்களும், பார்ப்பனர் களிடம் கூலி வாங்கிப் பிழைப்பவர்களும், பார்ப்பனர் விரோதம் கொண்டால் வாழ முடியாதவர்களும், தங்களைப் பெரிய தேசபக்தர்கள் போல காட்டிக்கொண்டு உபதேசம் செய்யவந்து விடுகிறார்கள். ஆனபோதிலும், பொது ஜனங்கள் இதை ஏதோ அறியாமையாலும், வயிற்றுக் கொடுமையாலும், இப்படி உளறுகிறார்கள் என்பதாக மதித்து கூடியவரையில் பார்ப்பனச் சம்பந்தமில்லாமலே முற்போக்கான வழி தேடவேண்டுமென்றும், அதற்கேற்ப ஸ்தா பனங்களையும், ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927
இன்னும் பிராமணியமா?
திருவாங்கூரைச் சேர்ந்த கொட்டாரக்கரையில் காலஞ் சென்ற ஸதாநந்த சுவாமிகள் கண்ட ஆசிரமமொன் றுள்ளது. அதில் தற்பொழுது சுவாமி ஆத்மாநந்தபாரதி அவர்கள் தலைமை வகித்து வருகிறார்கள். அன்னார் இப்பொழுது ஒரு குருகுலங் கண்டிருக்கிறார்கள். அதில் இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்பட வில்லை.
இதைப்பற்றி, சுவாமிகள் குருகுல நிதி திரட்ட நாகர்கோவில் வந்தபொழுது ஸ்ரீமான் டாக்டர் ஆ.நு. நாயுடு அவர்கள் பேட்டி கண்டு பேசினார்கள். அதற்குச் சுவாமிகள் பிறப்பினாலேயே பிராமணர்கள் உயர்ந்த வர்களென்றும், ஏனையோர் ஸம்ஸ்காரத் தினாலேயே உயரவேண்டு மென்றும் கூறி சேரமாதேவிக் குருகுலம் நாசமாவதற்குக் காரணம் தாழ்த்தப் பட்டவர்களைச் சேர்த்ததினாலேயே என்றுங்கூறினார்கள். அதற்கு டாக்டர் அவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களை ஏனைய மதத்தவர் வலிந்து இழுக்கும் போது இந்து மதத்தவரான நாம் அகற்றுவது அழகாகுமாவென்று கேட்டார்கள்.
அதற்குச் சுவாமி அவர்கள் ஸம்ஸகாரமடைந்தால் யாவரையும் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அக்காலம் தனக்குத் தெரியுமென்றும், அதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் பரவாயில்லை யென்றும் கூறினார்கள். இதைக் கேட்டவுடன் மனிதனை மனிதனுக்கு அடிமையாக்கும் உங்கள் இந்து மதம் அழிந்து ஒழிகவென்று கூறி வெளிவந்தார்கள். இதைப்பற்றி டாக்டர் அவர்கள் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான் மன்னத்துபத்மனாப பிள்ளை அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டார்கள்.
அதற்கு பிள்ளையவர்கள் சுவாமிகளின் வைதிகப் பார்ப்பனியம் தனக்குப் பிடிக்கவில்லை யென்றும் இதை முன்னிட்டுத்தான் இதற்கு முன் தான் ஒரு அபிப் பிராயமும் கொடுத்த தென்றுங்கூறி பதிலிறுத்தனர். ஜாதி பேதமும், தீண்டாமையும், நீங்கவேண்டு மென்று மும்முரமாக வேலைநடந்து வருமிவ் வேளையில் இந்துமதம் இத்தீண்டாமை யெனுங்கொடுமையால் ஆயிரக்கணக் கான மக்களை ஆண்டுதோறும் அன்னிய மதத்திற்குக் கொடுத்துவரு மிக்காலத்தில் பாலர்களுடைய மாசற்ற இருதயங்களில் பேதநிலையை உண்டாக்காதவாறு காப்பதற்கு மாறாக பேத நிலையை உண்டு பண்ணுவது கூடாது.
சுவாமிகள் ஒரு பிராமணரல்லாதாராகவிருந்தும் பார்ப்பனியத்தை ஆதரிப்பது கண்டு ஆச்சரியப் படுகிறார்கள். சுவாமிகளும் சேர மாதேவி குரு குலத்தின் பேத நிலையால் வசூலான பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்ட செட்டி நாட்டுக்குச் செல் வாரென்று தெரிகிறது. மாணவர்களுக்கிடையே பேதநிலைமையுண்டு பண்ணாதிருந்தால் தான் அங்கே செல்வாக்கு கிடைக்குமேயொழிய அல்லதில்லை.
தன் குருகுலம் நல்ல நிலையையடைய வேண்டு மானால் தன் கொள்கையை அடியோடு விட்டு விடவேண்டும். இனியாவது சுவாமிகள் தங்கள் கொள்கையை மாற்றி விடுவார்களென்று நம்புகிறேன்.
- குடிஅரசு - கட்டுரை - 30.01.1927
கலைஞர் - வாழ்த்துச் செய்தி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தம்பி தொல்.திருமா வளவனின் 51-ஆவது பிறந்த நாள் விழா ஆகஸ்ட் திங்கள் 17-ஆம் நாளன்று சென்னையில் நடைபெறுவது பற்றியும், அதனையொட்டி பொன்விழா மலர் ஒன்று வெளியிடவிருப்பது பற்றியும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
1982-ஆம் ஆண்டு முதல் மாணவராக இருந்த காலந்தொட்டு, தனது இருபதாம் வயதிலேயே தலித்துகள் முன்னேற்றத்திற்காகத் தக்க வழிமுறைகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தொல்.திருமாவளவன் அயராது அரும்பாடுபட்டு வருகிறார்.
சட்டக் கல்லூரியில் படிக்கத் தொடங்கிய நேரத்தில், திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களால் பெரிதும் கவரப்பட்டு, தி.மு.கழக மாணவர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் நல்ல பணியாற்றி வருகிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உணர்ச்சி பூர்வமாக மிகவும் ஈடுபாடு கொண்டு தற்போது டெசோ அமைப்பின் உறுப்பினராகவும் சிறப்புடன் செயலாற்றி வருகிறார். நாவன்மை மிக்க நற்றமிழ்ப் பேச்சாளர். எந்தப் பொருள் பற்றியும் எந்த மேடையிலும் திறம்படப் பேசக்கூடிய திண்மையாளர். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லேருழவர்.
திருமாவளவன் அவர்களின் 51-ஆவது பிறந்த நாளினையொட்டி வெளியிடவிருக்கும் பொன்விழா மலர் அவரது சிறப்புகளைத் தாங்கி வெளிவரவும், அவர் மேலும் பல்லாண்டுகள் தமிழர்களுக்காகவும், தலித் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தேவையான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் தலைவர் வாழ்த்து
அன்புடையீர்...
வணக்கம். அருமைத் தோழர் விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தோழர் மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்கள் 50-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி (பொன்விழாவையொட்டி) சிறப்பு மலர் வெளியிடுவது சாலப்பொருத்தமாகும்.
மாணவர் பருவந்தொட்டு அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சிந்தனைகளில் தோய்ந்து முறையான தலைவராக வளர்ந்து வரக்கூடியவர். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பதுகூட இரண்டாம் பட்சம் தான் என்று கருதக்கூடியவர் என்பது எனது கணிப்பு.
தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுப் படையெடுப்பின் ஆணிவேரை தந்தை பெரியாரின் பார்வையில் நுணுக்கமாக அறிந்தவர்.
வடமொழிப் பெயர்களை தமிழில் மாற்ற அவர் எடுத்துக் கொண்ட முயற்சி அதற்கொரு எடுத்துக்காட்டாகும்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் அவர் காட்டும் உண்மையான முனைப்பு பாராட்டுக்குரியது.
திராவிடர் கழகம் நடத்தும் பல்வேறு களங்களில் தாமாகவே முன்வந்து தம்மை இணைத்துக் கொள்ளும் கொள்கை உணர்வு எளிதில் மற்றவர்களிடம் காண இயலாத ஒன்றாகும்.
நம் நாட்டுச் சூழலில், சமூக அமைப்பில், அரசியல் வெற்றி என்பது பெரும்பாலும் தந்திர உபாயங்கள் நிறைந்ததாகவே உள்ளன. (விதி விலக்குகளும் உண்டு)
இந்த நிலையில் வெறும் தேர்தல் முடிவைக் கொண்டு ஒரு தலைவரையோ, கட்சியையோ கணிப்பது சிறு பிள்ளைத்தனமாகும்.
அதனையும் கடந்து சமூக மாற்றம் என்ற திசையில் புதிய மைல் கற்களை உருவாக்கும் பணியில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பு கிறேன். இளைஞர்கள் அவர் தலைமையில் அணி வகுத்து நிற்பது நல்நம்பிக்கையைத் தருகிறது. அவர்களைக் கட்டுப் பாடுடையவர்களாகச் செதுக்கிக் கொள்கை வழி வார்த்தெடுப்பார் என்றும் நம்புகிறேன்.
அதற்கான ஆயுளும், நற்சூழல்களும், தோழர்களின் கட்டுப்பாடு மிக்க, அர்ப்பணிப்பும், அருமைச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
அன்பான வாழ்த்துக்கள்! தங்கள் அன்புடன்
கி.வீரமணி
Writing your point is accept but you are aimed to hurt the people who believe the god as well as you are 100 against brahmins that means. a cast based attack.
ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக இருப்பவர் தொல்.திருமாவளவன்
எழுச்சித் தமிழர் பொன் விழா நிறைவு விழாவில் தமிழர் தலைவர் புகழாரம்!
சென்னை, செப். 1- ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக இருப்பவர் தொல்.திருமாவளவன் என, எழுச்சித் தமிழர் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவிற்கு தலை மையேற்று பேசிய தமிழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பொன் விழா ஆண்டு நிறைவு விழா நேற்று (31.8.2013) மாலை 6.30 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சியின் பொதுச் செயலா ளர்கள் ம.செ.சிந்தனைச் செல்வன், து.இரவிக்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முகம்மது யூசுஃப் வரவேற்புரையாற்றினார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 51 பவுன் தங்க செயினை, திருமாவளவனுக்கு அணிவித்து வாழ்த்துக்கள் தெரி வித்து சிறப்புரையாற்றினார். முன்ன தாக கவிக்கோ அப்துல்ரகுமான், பேராயர் எஸ்றா சற்குணம் வாழ்த் துரை வழங்கினர். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் தோழமைக்குரல் - இசுலாமியர் களத்தில் திருமா வளவன் என்ற நூலை கலைஞர் வெளியிட்டார். புரட்சியின் புதல் வன், போர்வீரன் திருமா, தங்க மானவன், என்றும் பதினாறு, புலியின் தம்பி ஆகிய இசைப் பேழைகளை கலைஞர் வெளியிட தமிழர் தலைவர் பெற்றுக்கொண் டார்.
முன்னதாக இவ்விழாவிற்கு தலைமையேற்று, பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள்:-
ஒடுக்கப்பட்ட மக்களின் படைத் தளபதியாக இருப்பவர் மானமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் ஆவார். எப்படி திராவிடர் கழகம் தந்தை பெரியார் வழி நின்று சமூக நீதிக்காக பாடுபடுகிறதோ, அதே போன்று விடுதலை சிறுத் தைகள் கட்சியும் அதே உணர்வுடன் இனத்தின் மீட்சியாக பாடுபட்டு வருகிறது.
தொல்.திருமாவளவன் அவர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத் கர் ஆகிய சமூக புரட்சியாளர்க ளைப் படித்தவர். இந்தியாவில் புரட்சியாளர்களாக தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருந்தவர்கள்; அவர்களை பின் பற்றி நடப்பவர் தொல்.திருமா வளவன்.
தொல்.திருமாவளவன் பயிற்சி பெற்ற இடம் பெரியார் திடல், திராவிடர் கழகம் நடத்திய இலங்கை பிரச்சினைக்காக ரயில் மறியல் போராட்டத்திலும், இந்தி எழுத்து அழிப்பு போராட்டத் திலும் பங்கேற்றவர். எனவே அவர் நீண்டகாலம் தொண்டறச் செம் மலாக இருக்க வேண்டும். என தமி ழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.
முன்னதாக இவ்விழாவில் தமிழர் தலைவர் அவர்கள், கலைஞர், தொல்.திருமாவளவனின் தாயார், தொல்.திருமாவளவன் ஆகி யோர்க்கு பொன்னாடை அணி வித்து சிறப்பு செய்தார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தொல்.திருமாவளவன் பொன் னாடை அணிவித்து அயோத்தி தாச பண்டிதர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் சிலைகளை நினைவுப் பரிசாக வழங்கி சிறப்பித்தார். திமுக தலை வர் கலைஞர் அவர்களுக்கு இரண்டு சவரனில் நெல்லிக்காய் உருவம் கொண்ட தங்க பரிசை வழங்கினார் தொல்.திருமாவளவன்.
இவ்விழாவில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் துரை.முருகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாலாஜி, வன்னி யரசு உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று விழா வைச் சிறப்பித்தனர்.
அடடே, அண்ணா திமுகவுக்கு வந்த கொள்கைக் கோபத்தைப் பாருங்கள்!
அண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது.
அதற்குத் திடீரென இனமானம், தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கை மீது பாசம் பொங்கிப் பிரவாகித்து விட்டது.
திமுக ஆதரவில் நிறைவேறிய உணவு மசோதாவை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்.
கலைஞர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒருகணம் நடுக்கம், அச்சம் (ஞாடியை) இவர்களுக்கு ஏற்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா, என்ன?
கலைஞர் கட்டினார் என்பதற்காக தலைமைச் செயலகத்தை இழுத்து மூடவில்லையா? கலைஞர் ஆட்சி உருவாக்கியது என்பதற்காக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தைத் தூக்கி எறிய ஆசைப்படவில்லையா?
புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தின் கதி என்ன? செம்மொழிப் பூங்கா என்னவாயிற்று? துறைமுகம் - மதுரவாயல் சாலை எனும் மிகப்பெரிய திட்டம் கைவிடப்படவில்லையா? சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லையா?
இந்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் தீர்த்துக் கட்டிய ஆட்சி இது - ஒரே காரணம் இவையெல்லாம் மானமிகு கலைஞர் சம்பந்தப்பட்டது என்பதுதான். திமுக ஆதரவுடன் நிறைவேறிய உணவு மசோதா என்ற வார்த்தைகள் வந்து விட்டதாலேயே விட்டேனாபார் என்று வில்லை எடுக்கிறது இந்த அண்ணா திமுக ஏடு. தமிழர் தலைவரைப் பார்த்து கருப்புச் சட்டை ஒரு கேடா என்றும் கேள்வி கேட்கிறது. அண்ணா பெயரில் ஆன்மீக ஏடு நடத்துவதுதானே அண்ணா திமுக!
சின்ன வயதில் வெண்ணெய் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் பற்றி அண்ணா எழுதியது இந்த கோலிவிளையாட்டுச் சிறுவர்களுக்குத் தெரியுமா?
அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் கொடியிலும் வைத்து கொண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறும் கூட்டத்துக்கு கருப்புச் சட்டை பற்றிப் பேசவோ, அண்ணா பெயரைப் பயன்படுத்தவோ, உச்சரிக்கவோ முதற்கட்டத்திலேயே தகுதி உண்டா! பெண்களும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் பாவ யோனியிற் பிறந்தவர்கள் என்று கீதை (அத்தியாயம் 18 சுலோகம் 44) கூறுகிறது என்பதை அறிவாரா அதிமுக பொதுச் செயலாளர்? அறிந்துதான் கீதையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறாரா? பூணூலின் மகத்துவத்தைப் பற்றி நமது எம்.ஜி.ஆர். படம் போட்டு விளக்குகிறது என்றால், திராவிட இயக்கத்திலே பூணூல் புகுந்துவிட்டது என்றுதானே பொருள்?
அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்? நீங்கள் கொடுப்பது நெத்தியடி என்றால் நாங்கள் கொடுப்பது புத்தி அடி!
தந்தை பெரியார் பிறந்த நாள் - வாழ்விலே ஒரு திருநாள்!
பெரியார் ஆயிரம் வினா - விடையில் இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் பங்கேற்றுச் சாதனை!
பட்டிதொட்டியெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை (செப்டம்பர் 17) புதிய அம்சங்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவோம் - பட்டி தொட்டி யெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத்தினர்களே,
கனிவான வணக்கம்.
செப்டம்பர் பிறந்து விட்டது!
நமது கொள்கைத் திருவிழாவின் கொடியேற்றம் துவங்கி விட்டது என்பதுதானே அதன் பொருள்?
போதி மரம் செல்லாப் புத்தன்!
தரணிக்கெல்லாம் தன்மானத்தைப் போதித்த, போதி மரம் செல்லாத புத்தனாம், நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பெருவிழா - திருவிழா (செப்டம்பர்) 17ஆம் தேதி துவங்கி, உலகெலாம் உன்னத அறிவுத் திருவிழாவாக, அறியாமைக்கெதிராக அறிவொளி பாய்ச்சும் அற்புத விடியல் விழாவாக நடைபெற திட்டமிடப்படுகிறது!
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனி நபர் அல்ல - அறிஞர் அண்ணா அவர்கள் அழகுற அறிவுச் செறிவுடன் கூறியபடி பெரியார் ஒரு சகாப்தம், ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்!
மக்களுக்கு மாலை நேர வகுப்புக்களை எடுத்தவை களாக தனது பொதுக் கூட்டங்களைப் பயன்படுத்திச் சொல்லிக் கொடுத்த தமிழகத்தின் முதல் பேராசிரியர்!
ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் சிந் தனையும், செயலும் இணைந்த ஓர் இணையற்ற மாவீரர்; மாமனிதர்!
தனி மனிதரல்ல பெரியார்!
தனி மனிதரானால் அவர் மறைந்து விட்டார் என்ற குறிப்பு உண்டு; நிறுவனங்கள் அப்படியல்ல; நீடித்து நிலைத்தவை!
கடைசி மூடநம்பிக்கையும், அறியாமைக் கொடுமையும், சமூக அக்கிரமும், வக்கிரமும் இருக்கும் வரை பெரியார் என்ற தத்துவமும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும் - நோய் தீர்க்கத் தேவைப்படும் மருந்து போல!
பெரியார் தம் அறிவுரைகளும், ஆக்கப்பூர்வ திட்டங்களும், புதிய உலகுக்குப் புத்தொளி பாய்ச்சிடும், புதுமைப் படைக்கலன்கள் ஆகும்!
அதனை மக்கள் மன்றத்திற்கு - காலத்திற்கேற்ற புதிய உத்திகளுடன் - மின்னணு, தகவல் புரட்சி யுகத்தின் தேவைக்கும் தேடுதலுக்கும் ஏற்ப செதுக்கிச் செயல் படுத்த வேண்டிய நமது கடமை - காலத்தின் கட்டளை யாகும்.
பெரியார் ஆயிரம் வினா -விடைப் போட்டியின் மாட்சி!
அதன் முதல் பிரச்சாரம் பெரும் முயற்சிதான் - சுமார் லட்சத்திற்குமேல் பெரியாரைப் புரிந்து கொள்ளப் புறப்பட்ட பள்ளிக்கல்வி மாணவச் செல்வங்கள் (இரு பாலரும்) கடந்த சில நாள்களாக பங்கு பெற்று (பெற்றோர்களுடனும் இணைந்து) மகிழும் பெரியார் ஆயிரம் வினா விடைப்போட்டி நாடு தழுவிய அளவில் எங்கெங்கும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளன!
ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுகிறேன்.
நமது தலைமைக் கழகத்தின் சீரிய செயல்பாட்டின் மூலம், பெரியார் பற்றிய புரிதலை - இளம், வளர் இளம் பிராய இருபால் மாணவச் செல்வங்கள் அறிந்து கொண்டுள்ள அற்புத முயற்சி!
திட்டமிட்டதைவிட, எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பு இதற்கு நாடெங்கும்!
இது இன்னும் பல கட்டங்களாக தமிழ், ஆங்கில மொழிகளில் மட்டுமில்லை. இந்திய மொழிகள், உலக மொழிகளிலும், On - Line
மூலமாக - கணினி மூலம் உலகத்தின் பற்பல நாடுகளில் பலவற்றிற்கும் எடுத்துச் சென்று பெரியாரை உலகமயமாக்கிடும் அரிய சிறப்பான முயற்சியின் துவக்கம்!
புதிய திட்டங்கள் தயார்!
அடுத்தடுத்து, இளைய தலைமுறை, மகளிர் - இரு சாராரை ஈர்க்கும் கொள்கை வகுப்புப் போன்ற பல முயற்சிகள் - இல்லத்தரசிகள் கொள்கை அரசிகளாக்கப் படல் வேண்டும் என்பதற்கே மகளிர் மாண்புக்குக் காரணமான பெரியார்தம் தொண்டறம் பற்றிய செய்திகளும், அவைகளையே துடுப்புகளாக்கி தமது வாழ்க்கையில் ஓடத்தை ஓட்டி - வெற்றிக்கரை சேர வாரீர்! என்று அழைக்கும் அமைதியான அறிவுப் புரட்சித் திட்டங்களும் தயாராகிக் கொண்டுள்ளன!
உற்சாகம் பொங்கி வழிய, கொள்கைத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம்.
நமக்கென உள்ள வாழ்விலோர் திருநாள் பெரியார் பிறந்த நாள் என்ற திருநாள் - பெருநாள்!
மனிதர்களை வாழவைக்கும் மருத்துவ முகாம் போன்றவைகளை பெரியார் மருத்துவ அணி மருத்துவச் செம்மல்கள் ஊக்கத்துடன் துவங்கி திசையெட்டும் நடத்த முன்வந்து நடத்தி வெற்றிச் சாதனை புரிந்து வரு கின்றனர்.
இப்படி புதுமையுடன் இந்த ஆண்டு 135 துவங்கி நடைபெறட்டும்!
பட்டி தொட்டியெங்கும் பெரியார் கொள்கை முழங்கட்டும்!
உங்கள் தொண்டன்
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
2.9.2013
சிறுத்தையின் உறுமல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா - பொன் விழா நிறைவுப் பெரு விழாவாக சென்னை காமராசர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. (31.8.2013)
இளைஞர்களின் அடர்த்தித் திரளாக அமைந் திருந்தது அந்த நிகழ்ச்சி. மண்டபம், வெளிப்புறம் என்று எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் எழுச்சிச் சங்கமம்.
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கிட முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் நிறைவுரை ஆற்றிட விழா நிறைவான விழாவாக அமைந்திருந்தது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தம் சிந்தனைகளைச் சுற்றிச் சுழன்ற நிகழ்ச்சி! இந்தக் கால கட்டத்தில் முன்னெடுக் கப்பட்ட சிந்தனைகள் இவைதானே!
எழுச்சித் தமிழர் ஏற்புரையில் சொன்னது மிக முக்கியமானது; ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடிய, தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம், தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. - இத்துடன் சிறுபான்மை மக்களின் பிரதிநிதி களாக பேராயர் எஸ்றா சற்குணம், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியைத் தேர்தலுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்ட இணைப்பாகக் கருத வேண்டும் என்று மானமிகு திருமா அவர்கள் சொன்னது மிக முக்கியமானது. இது ஒரு கோட்பாட்டுப் பார்வை. இன்றைய கால கட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபடக் கூடிய தேவைப்படக் கூடிய அமைப்புகளின் வலிமை வாய்ந்த ஒற்றுமை மிகவும் அவசியம்.
மதவாத சக்திகளுக்கும், மதத்தை முன் வைத்து அரசியலை நடத்தத் துடிக்கும் பிற்போக்குவாதிகளுக்கும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சாட்டைதான் இந்த இணைப்பு.
இந்து நேஷனலிஸ்ட் என்று வெளிப்படை யாகத் தன்னைப் பற்றிய ஓர் அறிமுகத்தோடு இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று மார்தட்டிக் கூறும் கால கட்டம் இது.
இத்தகு சூழ்நிலையில் சென்னை காமராசர் அரங்கம் அந்தச் சக்திகளை, முகத்துக்கு முகம் சந்தித்து வீழ்த்திட, ஒரு பெரிய குரலைக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரியார் திடலில் வெளிச்சம் கிடைத்துப் புறப்பட்ட சிறுத்தை என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதன் பலனை, அவருடைய பேச்சு பறைசாற்றி விட்டது. தன்னை ஆற்றுப் படுத்தி வரும் இரு தலைவர்கள் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும்தான் என்பதையும் மனந்திறந்து நன்றி உணர்ச்சி மேலிடப் பிரகடனமும் செய்தார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு தலைவர் பிறந்து முறையாக வளர வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அப்படி உருவாகும் இளைஞர் பெரியாரி யலையும், அண்ணல் அம்பேத்கர் இயலையும் சுவாசித்து உள் வாங்கிக் கொண்டு எந்தவித சபலத்திற்கும் ஆளாகாமல் இலட்சியப் பயணத் தைத் தொடரும் பட்சத்தில் நிச்சயம் எதிர்காலம் அவர்கள் வசப்படும் என்பதில் அய்யமில்லை.
பஞ்சமி நில மீட்பு, ஈழத் தமிழர் விடிவு, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு இம் மூன்றையும் முன்னிறுத்தி அவர் பேசியதில் சமூகநீதி, இனவுணர்வு, உரிமை மீட்பு என்ற மூன்றும் முத்தாய்ப்பாக முறுகி நிற்கிறது. அது மேலும் வளரட்டும்!
தந்தை பெரியாரை முன்னிறுத்தியதால் பகுத்தறிவு ஒளி அங்கே தானாகவே ஊடுருவி விட்டது.
எத்தனை இடம் கிடைக்கும் என்பதைவிட தமிழன் எந்த இடத்தில் இருக்கிறான்? அவன் முழு விடுதலைக்குரிய இடம் எது? என்பதில் குறியாக இருப்பதுதான் சிறந்த குறிக்கோளாக இருக்க முடியும். அது எழுச்சித் தமிழரின் ஏற்புரையில் உறையிலிருந்து வெளிவந்த வாளாக மின்னியது. அந்தப் பொன் விழா நிறைவு காணும் இலட்சிய சிறுத்தைக்கு நமது வாழ்த்துக்களைக் கூறுவோம். தமிழா இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு!
முட்டாள்தனம்
மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.
(விடுதலை, 28.4.1943)
Post a Comment