Search This Blog

13.2.13

கும்பமேளாவில் காஞ்சி சங்கராச் சாரியாரும், நித்யானந்தாவும் ஒன்று கலந்தது பொருத்தம் தானே!


அலகாபாத் கும்பமேளாவில் நித்யானந்தர் பீடத்திற்கு நேரில் வந்து நித்யானந்தா ஜெயேந்திரர் சந்தித்தபோது எடுத்த படம்.

மகா கும்பமேளாவில் ஜெயேந்திர சரஸ்வதி நித்யானந்தரை சந்தித்தார்!
அலகாபாத், பிப்.12- காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் உள்ள நித்யானந்த தியான பீடத்திற்கு வருகை புரிந்தார். கும்பபுரியில் உள்ள நித்யானந்த தியான பீடத்தையும், பரமஹம்ஸ நித்யானந்தரையும் நேரடியாக சந்தித்துப் பேசினார். பரமஹம்ச நித்யானந்தர் ஜெயேந்திரரை பாரம்பரிய மரியாதை யோடு வரவேற்றார்.

நித்யானந்த பீடம் பல வருடங் களாக பல ஊர்களில் உலகப் புகழ் பெற்று ஆசிரமங்கள் அமைத்து பல பணிகளை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் ஸ்தாபனம்.

யோகங்கள், தியானங்கள், ஸ்தோத்திர பாடங்கள் மற்றும் பல பணிகளெல்லாம் செய்து உலகிற்கு பல சேவைகளை செய்து வரு கின்றது. பரமஹம்ச நித்யானந்த சுவா மிகள் மற்றும் அவரின் இந்த உல களாவிய இயக்கமான நித் யானந்த தியானபீடமும் உலகிற்கு செய்து வரும் சேவைகள் மிகவும் மகத்தானவை.

நித்யானந்த சுவாமிகளுக்கும், தியான பீடத்திற்கும் நான் என் னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றேன். இந்த  தியான பீடம், நித்யானந்த சுவாமிகளும் மேலும் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அப் போது ஜெயேந்திரர் கூறினார்.- மாலைமுரசு 11.2.2013 பக்கம் 3

கல்யாணத்துக்கெல்லாம் ஜோடிப் பொருத்தம் பார்ப்பதுண்டு, இதோ இந்த ஜோடிப் பொருத்தத்துக்கு இணையாக இன்னொன்றை எடுத்துக்காட்ட முடியுமா?

அதுவும் அந்த விஷயத்தில் இவர்களை அடித்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? நித்யானந்தாவின் பரமார்த்த சீடர்களுள் ஒருவர் அமெரிக்கர் (மடையர்கள் இந்தியாவில் மட்டும் தானா இருக்கிறார்கள்?) அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர். அவர் அமெரிக்காவில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் நித்யானந்தா பற்றி என்ன சொன்னார்?

அறைகளில் நித்யானந்தா பெண்களுடன் இருக்கும்போது என்னைத்தான் பாதுகாப்புக்காக நிறுத்தி வைப்பார். நித்யானந்தா நடத்தும் யாக குண்டங்களில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருவரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு. அந்த நடிகை திருமணம் ஆனவர்தான். அந்த நடிகைகூட என் வீட்டில் 15 நாள் தங்கி இருந் தார். அந்த நடிகைக்கும், நித்யானந்தாவுக்கும் செக்ஷுவல் ரிலேசன் ஷிப் இருந்ததை நான் புரிஞ்சிக் கிட்டேன். அதைப்பற்றி அவரிடமே கேட்டேன்

கடவுளை அடைய ஆனந்த மான வழி இதுதான்னு என்னிடம் சிரிச்சிக்கிட்டே சொன்னார் என்று எழுத்து வடிவத்திலேயே கலிபோர் னியா அட்டர்னி ஜெனரலிடம் கொடுத்துள்ளாரே நித்யானந்தாவின் அமெரிக்க சீடர்!

பாலுறவு மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்ற நிபந்தனையை ஏற்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெண்களிடம் லீலைகளை நடத்தி னார் என்றால் எப்படிப்பட்ட கில்லாடி இந்த நித்யானந்தா?

- இந்தத் தகவல்கள் எல்லாம் கருநாடகக் காவல்துறையின் 430 பக்கக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனவே!

நம்ப காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி இந்த விடயத்தில் காமக் கோடியாயிற்றே!

படுகொலை செய்யப்பட்ட சங்கர ராமன் உயிரோடு இருந்தபோது எழுதிய கடிதங்களில் நித்யானந்தாவை விஞ்சும் விவ(கா)ரங்கள் ஏராளம் உண்டே!

அக்கிரகாரத்துப் பெண்மணியாகிய எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும் கம்பலையு மாகக் கொட்டியழுதாரே - இந்த ஜெயேந்திர சரஸ்வதி தன்னிடம் எவ்வளவு கேவலமாக நடந்து கொண் டார் என்று தொலைக்காட்சிகளில் கொட்டித் தீர்த்தாரே!

கும்பகோணம் விஜயா, குண்டூர் காமாக்ஷி, தெனாலி சுவாசினி, புதுக்கோட்டை பேபி என்ற ஜெயலட்சுமி, திருவிடைமருதூர் சந்திரா என்று ஒரு நீண்ட பட்டியலை சங்கரராமன் கொடுத்ததை ஜெயேந்திரரின் ஆன்மீகமும் அரசியலும் என்ற நூலில் ஏ.ஆர். ரகுநாதன் பதிவு செய்துள்ளாரே!

இப்பொழுது சொல்லுங்கள் - கும்பமேளாவில் காஞ்சி சங்கராச் சாரியாரும், நித்யானந்தாவும்  அன்னியோன்யமாக ஒன்று கலந்தது பொருத்தத்திலும் பொருத்தம் மகா பொருத்தம் தானே!

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்ற சினிமா பாடல் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப் பல்ல.

கூடுதல் தகவல் (Tail Piece) : நித்யானந்தா பீடமும், நித்யானந்தாவும் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் (எதில்?) என்று இறைவனைப் பிரார்த்திக்கிறாராம் ஜெயேந்திரர் (பரவாயில்லை ஒரு சூத்திர மடத்துக்கு ஜெகத்குரு சென்றுள்ளாரே - ஒரு மாற்றம் தான்!) காஞ்சி மச்சேந்திர நாதன் கோயில் புகழ் தேவநாதனுக்கும் ஒருக்கால் அழைப்புக் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்; யார் கண்டா?
                 -------------------------"விடுதலை” 12-2-2013

14 comments:

தமிழ் ஓவியா said...


இந்து - ஆன்மீகக் கண்காட்சியா?


5ஆவது இந்து - ஆன்மீக சேவைக் கண்காட்சி ஒன்றை சென்னையில் பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் துணைப் பிரதமருமான லால்கிஷன் அத்வானி தொடங்கி வைக்கிறாராம்.

கடந்த ஆண்டுகூட சென்னை வைஷ்ணவா கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வு மய்யத்தின் தலைவராக இருந்த நட்ராஜ் என்பவர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து அந்தக் காரியத்தைச் செய்தார் (இது அரசின் மதச் சார்பின்மை தன்மைக்கு விரோதமானதே!)

இந்தக் கண்காட்சியில் ரவி சங்கரின் வாழும் கலை, ஆரிய சமாஜம், இஸ்கான், ஈஷா யோகா பீடம், காஞ்சி காம கோடி பீடம், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடம், பிரம்ம குமரிகள் இயக்கம், மாதா அமிர்தானந்தமயி மடம், வேலூர் நாராயண பீடம், வனவாசி சேவா, கேந்திரம், உளுந் தூர்பேட்டை சாரதா ஆசிரமம், விவேகானந்த கேந்திரா உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்கு ஏற்கின்றனவாம்.

சரி, இந்த அமைப்புகள் எத்தகைய சேவைகளை செய்யத் துடிக்கின்றனவாம்?

(1) மக்கள் மத்தியில் பேதங்கள் கூடவே கூடாது; அதுவும் பிறப்பின் அடிப்படையிலான உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி- இவை கூடாது என்று கூறப் போகிறார்களா? பிரச்சாரம் செய்யப் போகி றார்களா?

2) தீண்டாமை க்ஷேமகரமானது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்துள்ளாரே - அது தவறு; தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை என்று அறிவிப்பார்களா?

3) இந்துமதம் ஜாதியின் காரணமாக பிளவு பட்டுக் கிடக்கிறது - எனவே ஜாதி முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்று அதிகார பூர்வமாக அறிவிப்பார்களா?

4) இஸ்லாம் மதத்தில் இருப்பதுபோல, கிறித்துவ மதத்தில் இருப்பதுபோலவே இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவு, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கோயில் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியைப் பெற்றால் இந்துக் கோயில்களில் தாராளமாக அர்ச்சகராகலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொடுப்பார்களா?

5) இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை விலக்கிக் கொள்வார்களா?

6) சங்கர மடங்களில் இந்து மதத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் சங்கராச்சாரியாக வருவதற்குத் தடையில்லை என்று அறிவிப் பார்களா?

7) இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வேறுபாடுகளை வெளிப்படுத்தும் எந்தவித மதச் சின்னங்களையும் அணியப் போவதில்லை, குறிப்பாகப் பூணூல், நெற்றியில் தீட்டப்படும் அடையாளங்கள் இவற்றைக் கைவிடுவது என்று முடிவு எடுத்துச் சொல்லுவார்களா?

8) இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்று அறிவித்துள்ளதால், அந்தச் சேவை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிப்பார்களா?

9) சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதி என்று கருதப் படும். மக்கள் மத்தியிலே வீடுகட்டிக் கொடுப் பார்களா?

இவற்றை எல்லாம் செய்யாமல் இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்பது ஊரை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஏற்கெனவே இந்து மதம் கடைப்பிடித்து வரும், துவேஷங்களை, ஜாதி வேற்றுமைகளை, தீண்டாமை என்னும் தீய நோயை மேலும் நீரூற்றி, எரு போட்டு வளர்ப்பதற்கான ஏற்பாடுதான் இது என்பது வெளிப்படை.

இந்து மதத்தின்மீது கடுமையான விமர் சனங்கள் இருப்பதால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இது போன்றகள் காட்சி என்னும் ஜிகினா வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதைப் பார்ப்பனரல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - எச்சரிக்கை! 12-2-2013

தமிழ் ஓவியா said...


ஆணை வளைக்கப்படுகிறதா?

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.

ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது?

தமிழ் ஓவியா said...


தெலங்கானா நாத்திக அமைப்பு அறிவிப்பு:



இவை அச்சு அசலான மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா!

பூதங்கள், பேய்கள். மனித மறுபிறப்பு, சுவர்க்க, நரகக் கற்பனைகள்,
மந்திரங்கள், மகிமைகள், செய்வினை ஆகியவற்றில் துளியேனும் உண்மை இல்லை.
வாஸ்து, ஜோதிடம், கைரேகை கே.பி.ஜே. லக்கி மோதிரங்கள், அதிர்ஷ்டக் கற்கள் இராசி பலன்கள் குபேர- லட்சுமி எந்திரங்கள், குடும்ப தோசங்கள் அனைத்துமே நவீன மோசடிகள், தில்லுமுல்லுகள்!
பரலோகம், கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே ஒட்டுமொத்த மோசடிகள்!
பாபா, சுவாமிஜீக்கள் மகிமை பெயரில் செய்யப்படும் அனைத்தும் ஜிம்மிக்குகளே! மந்திரமல்ல, தந்திரமே!!

மக்கள்=பிரஜா நாத்திக சமாஜம், மாநிலக் குழு செல்: 9959652769, 9849757222

மந்திர - தந்திர மோசடிகளை விளக்கி தெலங்கானா மக்கள் நாத்திக அமைப்பு வெளியிட்டுள்ள பிளெக்ஸ்= நெகிழிப் பதாகை.

- தமிழில்: கோரா, திருவூர் -602025, 8.2.2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


புலிமீது சவாரி செய்ய எலியா?

தந்தை பெரியார் அறிவியல் கலை, பண்பாடு விளையாட்டு மன்றத்தின் சார்பில் (9ஆம் ஆண்டு) தமிழ் மக்கள் கலை விழா 2013 மாலை 6 மணிக்கு துவங்கி - அன்று நள்ளிரவையும் கடந்து விடியல் வரை நடைபெற்றது - கபிஸ் தலத்தில்!

தமிழ்நாட்டிலுள்ள தலை சிறந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்று, மக்களை இறுதி வரை வியக்க வைத்தனர். மக்களின் உணர்வுகளைத் தூண்டி எழுச்சி பெறச் செய்த விழாவாக, அது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தது!

இந்த விழாவுக்கு சிறப்பு அழைப் பாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியன், இயற்கை வேளாண் அறிவியல் அறிஞர் கோ. நம்மாழ்வார், இஸ்ரோ ரிசாட் -1 செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் அறிவியல் தமிழச்சி நா. வளர்மதி, சென்னை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய துணைத் தலைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுவ. னுச.சு. பழனிவேலு, பன் னாட்டு மனித உரிமை ஆணைய ஆசிய - பசிபிக் பிராந்திய தூதர் ஆற்றலாளர் அசன் முகமது ஜின்னா, தஞ்சை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நோய் ஆய்வு அறிஞர் மருத்துவர் ஆ. வாசகர் எம்.டி. இந்திய தடகள விளையாட்டு வீராங்கனை செல்வி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதில் உள்ள சிறப்பே, அத்தனை பேரும் தாங்கள் உலகளவில் புகழ் பெற்று விளங்குவதற்குக் காரணமே தந்தை பெரியார் அவர்களின் தளரா உழைப் பினால் பெற்ற பயனே என நன்றியோடு குறிப்பிட்டது, மக்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது!

கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியோடும், மகிழ்ச்சியோடும், உணர்ச்சிப் பெருக்கோடும் அந்தக் கலை நிகழ்ச்சிகளைப் போற்றி புகழ்ந்தனர்! திறந்த வெளி மாநாடு போல் நடைபெற்ற அந்த தமிழ் மக்கள் கலை விழாவால் 19.1.2013ஆம் நாள் கபிஸ்தலமே பகுத் தறிவு மணம் கமழும் தமிழர் பண்பாட்டு விழாவாக ஒளி வீசித் திகழ்ந்தது! விழாக் குழுவினரை அனைவரும் பாராட்டினர்.

தமிழ் கலைஞர்களையும், தமிழ் அறிவியல் அறிஞர்களையும் ஒன்றாக இணைத்து ஒரே மேடையில் ஒளிரச் செய்த விழாக் குழுவினரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்! ஆனால், உலகோரே வியந்து பாராட்டக் கூடிய இந்நிகழ்ச்சியை எந்த ஊடகங்களுமே கண்டு கொள்ளவில்லையே என்பதுதான் வேதனைக்குரியது! கண்டனத்திற்குரி யது!! விழிப்புற்ற தமிழினத்தின் கேலிக் குரியது!!!

மாறாக, இசையரசு தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதற்காக மேடையே தீட்டாகி விட்டது என்று திமிர்வாதம் பேசிய அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கலந்து கொண்ட திருவை யாறு தியாகராஜர் உற்சவம் என்றால் கமிட்டி போடுவதற்கு முன்பே..

ஏமாந்த சோணகிரியான தமிழனின் உழைப்பில், பணத்தில். தீபாவளி கொண்டாடி மகிழும் அவாளின் உற்சவத்தை வரிந்து கட்டிக் கொண்டு விளம்பரம் செய்ய துடியாய் துடித்து நிற்கும் இந்த பார்ப்பனிய ஊடகங்கள்!

நூறு, இருநூறு பார்ப்பனர்கள் பூணூலை உருவிக் கொண்டும், தொடையை தட்டிக் கொண்டும் ரசிக்கின்ற காட்சியை ஒளிபரப்பு செய்யும் இந்த உதவாக்கரை ஊடகங்கள்,

பல்வேறு வகைப்பட்ட ஆற்றல் மிகு தமிழ்க் கலைஞர்களால் கடும் உழைப்பில் உருவாகி மக்களை மகிழ்விக்கும். இந்த மாபெரும் விழாவை புறக்கணிப்பதற்கு ஊடகங்களில் பார்ப்பனிய ஆதிக்கம் தவிர வேறு என்ன காரணம்?

புலியின் மீது எலி சவாரி இன்னும் எத்தனை நாள்கள்? அதையும் பார்க்கத் தானே போகிறோம்!

- நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


எருமை போவதுபோல்...


எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


காவிரி நதிப் பிரச்சினையில் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள்


தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம்

சென்னை, பிப். 12- காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்றம்

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கும், காவிரியிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கும் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று முதன் முதலாக தி.மு.க. ஆட்சியில்தான் 1970ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் 1971ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. ஆட்சியில்தான், 1989ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று, நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

சட்டப்பேரவையில் தீர்மானம்

1989ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி வி.பி. சிங் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நடுவர் மன்றம் அமைக்கக்கோரி கடிதம் எழுதினேன். சட்டப்பேரவையில் அதைப் பற்றித் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி அனுப்புமாறு வி.பி.சிங் என்னிடம் தெரிவித்ததின் பேரில், 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடுவர் மன்றம் தேவை என்று பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அந்தத் தீர்மானத்தின் விளைவாக அந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தி.மு.க. ஆட்சியில்தான் நடுவர் மன்றம் அமைந்தது.அந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி தி.மு.க. ஆட்சியில்தான் இடைக்காலத் தீர்ப்பினைக்கோரி நடுவர் மன்றத்தில் மனு செய் தோம். 1991ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி இடைக் காலத் தீர்ப்பு வழங்கிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் கூறியது.

தமிழ் ஓவியா said...

நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு

நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்று தீர்ப்பளியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டில் 1991ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தி.மு.கழக ஆட்சியிலே வழக்கு தொடர்ந்து, அந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வழங்கியது. தி.மு.க. ஆட்சியில் கோரிப்பெற்ற தீர்ப்பின் காரணமாகவே 1991ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை அளித்தது. இதற்கிடை யில் தான் 1991ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட் சிக்கு வந்தார். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளிவந்த போதிலும், எந்த விதமான விளைவுகளும் ஏற்படவில்லை. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை.

பிரதமருக்குக் கடிதம்

1996ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, நடுவர் மன்றத்தின் ஆணையைச் செயல்படுத்துவதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று 9.7.1997, 23.7.1997, 29.9.1997, 1.11.1997, 6.11.1997 ஆகிய நாட்களில் பிரதமருக்கு நான் எழுதிய கடிதங்களிலும், 27.7.1997 மற்றும் 29.9.1997 ஆகிய நாட்களில் பிரதமரை நேரில் சந்தித்தும் கேட்டுக்கொண்டேன். மேலும், 1997ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி மத்திய அரசுக்கு அப்படியொரு ஆணை பிறப்பிக்க உச்சநீதிமன்றத் தில் முறையீட்டு மனு ஒன்றும் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் 28.3.1998, 6.4.1998 மற்றும் 31.5.1998 ஆகிய நாட்களில் பிரத மருக்குக் கடிதம் மூலமாகவும், 7.4.1998 அன்று நேரிலும் சந்தித்து, வரைவுத் திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிடக் கேட்டுக் கொண் டேன்.

தமிழ் ஓவியா said...

உண்மையில் நடந்த வரலாறு

காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் 2 நாட்கள் தொடர்ந்து நடத்திய கூட்டத்தின் இறுதியில்தான், 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி தி.மு.க. ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநில முதல்மந்திரிகள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று.அந்த ஒப்பந்தத்தை சி. சுப்பிரமணியம், ஜி.கே. மூப்பனார், சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, அப்துஸ் சமது, எம்.ஏ. லத்தீப், குமரிஅனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஆர்.எம்.வீரப்பன், ஜி.ஏ.வடிவேலு, இல.கணேசன், எஸ். திருநாவுக்கரசு, பேராயர் எஸ்றா சற்குணம் போன்ற தலைவர்களும் மற்றும் பத்திரிகைகளும் பாராட்டின. இதுதான் உண்மையில் நடந்த வரலாறு. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஏடுகளும் பாராட்டியபோது ஜெயலலிதா அதனை வரவேற்றாரா என்றால் இல்லை. மாறாக அந்தத் தீர்வினை நிராகரிக்கிறோம் என்றும், அதனை ஏற்கமாட்டோம் என்றும் கூறினார்.

தமிழ் ஓவியா said...


இறுதித் தீர்ப்புக்கு வரவேற்பு

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு தி.மு.க. ஆட்சியிலேதான் 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த எம். கிருஷ்ணசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் என். வரதராசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தா. பாண்டியன், காவிரி டெல்டா பாசன விவ சாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் ரெங்கநாதன், உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் கே.எஸ். நடராசன் ஆகியோர் அப்போது வரவேற்று அறிக்கை கொடுத்தனர்.ஆனால் அ.தி.மு.க.வின் சார்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இறுதித்தீர்ப்பை ஏற்க முடியாத தீர்ப்பு என்றும், கருணாநிதியால் காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத்தர முடியவில்லை. இந்த இறுதித்தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அறிக்கை விடுத்தார்.

காவிரி நதிநீர் ஆணையம்

காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டு, 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த மாதம் 21ஆம் தேதி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், உத்தரவிடு வதற்கும், செயல்படுத்துவதற்கும் போதிய அதிகாரம் உள்ள அமைப்புக்குத்தான் ஆணையம் என்று பெயர். ஆனால், பிரதமர் தலைமையிலான ஆணை யத்துக்கு காவிரி தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க இயலாத, எந்த முடிவும் எடுக்கவிடாமல் தடுக்கிற விவாத அமைப் பாகத்தான் இப்புதிய ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகத்துக்குச் சிறிதும் பாதிப்பில்லை, பாதிக்கப்படப்போவது தமிழகம் தான் என்று சொன்னார்.

பல் இல்லாத ஆணையம்

2002ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா, செயல்படாத ஆணையம் காவிரி ஆணையம், பல் இல்லாத ஆணையம், அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம், என்று சொன்னார்.அந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி ஆணையம் உள்ளது. எனவே, இந்த ஆணையத் தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்து கொள்ளாது என்று விளைவுகளைப் பற்றி விரிவாக எண்ணிப் பார்க்காமல் முடிவெடுத்து அறிவித்தார். வரலாற்று ரீதியிலான இத்தனை உண்மை நிகழ்வுகளையும் யார் நினைவிலே வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையால்தான் முதலமைச்சர் ஜெயலலிதா காவிரிப் பிரச்சினையில் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Seeni said...

mmmm...

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


காதலர் நாள்

இன்று உலகெங்கும் காதலர் நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

காதல் என்பது மனித இயற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.

காதல் மட்டும் அல்ல; எதுவாக இருந்தாலும் கட்டுக்கு அப்பாற் போனால் ஆபத்துதான். ஏதோ விதி விலக்காக காதல் தோல்வி அடைவதாலோ தவறுதலான புரிதலாலோ எதிர் விளைவுகள் ஏற்படுவதை முன்னிறுத்தி, காதலே கூடாது -அது ஒழுக்கக் கேடானது என்று கூக்குரல் போடுவது அசல் பிற்போக்குத்தனமாகும். காதல் இல்லாமல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பட்ட திருமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் புயல்கள் வீசவில்லையா!

விவாகரத்துத் திருமணம் இத்தகையவர்களிடம் தான் அதிகம் என்ற புள்ளி விவரம் - எதைக் காட்டுகிறது?

சமுதாயத்தின் பல்வேறு கேடுகளுக்குச் சரியான வளர்ப்பும், முறையான கல்வித் திட்டமும் இல்லாததே காரணம் ஆகும்.

காதல் நாளை எதிர்த்து சில சக்திகள் புறப்பட்டுள்ளன; ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற சங்பரிவார்கள் கும்பல் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

இந்(து)த மதவாத சக்திகள் காதலை வெறுப் பதற்கு அடிப்படைக் காரணம், காதல் திரும ணத்தில் ஜாதிக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. மதத்திற்கு மரணக் குழி வெட்டப்படுகிறது என்பதுதான்.

ஜாதி என்பது பற்றி ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகம் என்று கூறப்படும் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் எனும் நூலில் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்?

நீண்ட காலமாக சிலர் ஜாதியை எதிர்த்து வருகின்றனர். ஜாதி அமைப்பு முறை இருந்த பழங்காலத்தில் நாம் மிக உயர்ந்த நிலையில் இருந்தோம். ஜாதி என்கிற அமைப்பு நமது முன்னேற்றத்திற்கோ, வளர்ச்சிக்கோ முட்டுக் கட்டையாக இருந்ததில்லை. அவற்றிற்கு ஆதாரமும் கிடையாது. ஜாதி அமைப்பு முறை சமுதாயத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றவே பயன்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையிலேயே இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து வெறிக் கும்பல் ஜாதியை ஒழிக்கும் காதலை, காதல் திருமணங் களை எதிர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ஜாதியைக் காப்பாற்றக் கூடியவர்களும் காதலை வெறுப்பார்கள் - எதிர்ப்பார்கள் என்பதை இன்றைக்கு நேரிடையாகக் காண முடிகிறது.

அந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த நவீன அரசியல்வாதிகளும் இந்த ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது அம்பலமாகி விட்டது.

ஒரு கேள்விக்கு இந்துத்துவா வாதிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கிய கடவுளான கிருஷ்ணன் என்பவன் காதல் லீலை மன்னன் தானே?

வீட்டுக்கு வீடு கோபியர்களுடன் கொஞ்சும் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு வழிபடும் இவர்கள், காதலை வெறுப்பது ஏன்?

காதலைப்பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை தவறான வகையில் வியாக்கி யானம் செய்ய சிலர் புறப்பட்டுள்ளனர்.

எல்லாமே காதல் தான் - அதற்கு மேல் உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறுவதைத்தான் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அது ஒரு வகையான உணர்வு - அதற்கு அளவுக்குமேல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று கூறும் தந்தை பெரியார் இதில் மற்றவர்கள் பிரவே சிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசிய மான ஆதிக்கம் செலுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் என்பது குறிப்பிட்ட வயது அளவு ஓர் ஆணின் - பெண்ணின் தனிப்பட்ட முடிவாகும். அது கூடாது என்பதோ, தடுப்பதோ அதிகப் பிரசங்கித் தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தைத்தான் திராவிடர் கழகம் வலியுறுத் துகிறது.

கல்விக் கூடங்களில் ஆண் - பெண் மாணவர்கள் சேர்ந்து கற்கும் தன்மையைத் தந்தை பெரியார் வரவேற்கிறார் (விடுதலை 22.5.1967) என்பதையும் குழப்பவாதிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். 14-2-2013

தமிழ் ஓவியா said...


தேவையில்லாதவர்கள்


ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ? (விடுதலை, 21.3.1954)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி


பகுத்தறிவு வளர்ந்தால்...

மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.