Search This Blog

12.2.13

சோ - பார்ப்பனத்தனத்தின் உச்சக்கட்ட கொதி நிலை!

அவர்களின் இனவுணர்வு! 
 
பொங்கல் நாளன்று சென்னை மியூசிக் அகாடமியில் (அது அவாளுக்கே உரித்தான இடம்தானே!) நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் திரு. சோ. ராமசாமி அவர்கள் வழக்கம்போல பார்ப்பன உணர்வோடு பேசி இருக்கிறார். வழக்கம் போல பார்ப்பனர் அல்லாத தலைவர்கள்மீது கேலி, கிண்டல், சேறுவாரி இறைப்பு - இன்னோரன்ன அவாளுக்கே உரித்தான அர்ச்சனைகளில் சேட்டை களில் ஈடுபட்டுள்ளார். பொது நிகழ்ச்சி என்று சொல்லிக் கொண் டாலும் எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் பார்வை யாளராகக் கூடப் பங்கு கொள்ள முடியாது. கேள்வி கேட்பவர்கள்கூட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டவர்கள். அந்த அளவுக்கு ஜனநாயகம் அங்கே நுரை தள்ளி வழிந்தோடுகிறது.

அது எப்படியோ போகட்டும்; அங்கே சங்கர மடம்பற்றிப் பேசி இருக்கிறார்.
திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று கலைஞர் குறிப்பிட்டு விட்டாராம். கோபம் பொத்துக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்கிறது அவருக்கு.
சங்கர மடம் என்றால் சாதாரணமா? அந்த மடத்தில் அடுத்தடுத்து வருகின்றவர்களுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் தெரியுமா?
சிறுவயதிலேயே வேதங்களைப் படித்து இருக்கிறாரா? அவர் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்? அந்தக் குடும்பம் பிராமணர்களுக்கு வகுக்கப்பட்ட வழிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறதா என்றெல்லாம் பார்த்துதான் அடுத்தடுத்த சங்கராச்சாரி தேர்வு செய்யப்படுவார்களாம் சொல்லுகிறார் திரு. சோ.

நாம் எடுத்து வைக்கும் கேள்வி - அப்படியெல்லாம் தேர்வு செய்யப்பட்டவர்தானே இன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் திரு. ஜெயேந்திர சரஸ்வதி? அவர் ஏன் ஒழுக்கத்தில் படுமட்டமாக நடந்து கொள்கிறார்? அவர்மீது ஏன் கொலைக் குற்றம்? என்ற கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்லத் தயாராக இல்லை; காரணம் நியாயமான பதில்கள் அவர் கைவசம் இல்லை என்பதுதான்! ஓர் உண்மை என்னவென்றால் அவர்களில் எந்த சங்கராச்சாரியார் எந்தத் தவறுகளின் எல்லைக்குச் சென்றிருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பதில் பார்ப்பனர்கள் குறியாக - வெறியாக இருக்கக் கூடியவர்கள்தாம்!

அதனால்தான் கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாருக்கு அநீதி நடந்து விட்டது என்று எழுதும் அளவுக்குச் சென்றார் சோ.

இந்த நிகழ்ச்சியை ஒரு சாக்காக வைத்து - மடத்தையும், சங்கர பீடத்தையும் என்றுமே ஏசியும் தூஷித்தும் வந்தவர்களும், நாத்திகர்களும் காஞ்சி மடத்தின் எதிர்காலம் பற்றி யோசனைகள் சொல்ல ஆரம்பித்திருக்கிற ஒரு விபரீதமும் நடக்கத் துவங்கியிருக்கிறது. காஞ்சி மடத்தின் நிர்வாகத்தை அரசின் அறநிலையத் துறையே கைக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாதிரியானவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். இது மாநில அரசினால் உடனடியாக நிராகரிக் கத்தக்கது! என்று புலம்பித் தள்ளினார்.

உண்மையைச் சொல்லப் போனால் காஞ்சி மடத்தை இந்து அற நிலையத் துறையே எடுத்துக் கொண்டு நிருவகிக்க வேண்டும் என்று எழுதியது விடுதலை கூட அல்ல - இந்தியா டுடே என்னும் அவாளின் ஆதிக்கத்தை உடைய இதழே! (24.11.2004) அவ்வாறு எழுதியது.

பொதுவாக திருவாளர். சோ யாருக்காக எழுதுகிறார்? யாரை எதிர்த்து எழுதுகிறார்? எந்தப் பிரச்சினையை ஆதரிக்கிறார்? எந்தப் பிரச் சினையை எதிர்க்கிறார் என்பதை மேலோட்டமாகப் பார்த்தால்கூட வடிகட்டிய அளவில் தெள்ளத் தெளிவாகவே தெரிந்து விடும். அவரின் பார்ப்பனத்தனத்தின் உச்சக்கட்ட கொதி நிலை!

நமது படித்த பார்ப்பனர் அல்லாத தமிழர்கள்கூட இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் துக்ளக்கை வாங்குவதை வாடிக்கையாகக் கொள்வதும் வெட்கக்கேடு அல்லவா!

தமிழர்கள் சிந்திப்பார்களாக!

                   ----------------------------------"விடுதலை” தலையங்கம் 11-2-2013

11 comments:

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி காப்பாற்றவில்லையே?



திருத்துறைப்பூண்டி 12ஆவது வார்டு மீனாட்சி வாய்க்கால் காட்டுநாயக்கன் தெருவில் மதுரைவீரன் ஆலயம் உள்ளது. கடந்த 1.2.2013 அன்று மாலை 5 மணிக்கெல்லாம் அபிசேக ஆராதனை முடிந்து அனைவரும் சென்றவுடன் அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அது எலி திரியை (விளக்கு) இழுத்து கொண்டு கூரையில் போட்டவுடன் மதுரை வீரன் கோவில் கூரை தீப்பிடித்து எரிய தொடங் கியது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை வேறு வீட்டில் பரவ விடாமல் தடுத்ததால் ஒரளவிற்கு பாதிப்பு இல்லை . ஆகவே மதுரை வீரனைக்கூட மனிதர்கள்தான் பாதுகாத்தார்கள். சாமி சக்தி எங்கே?

- என். சுரேசு முரளி (திராவிடர் கழகம்) மா.இ. தலைவர்

தமிழ் ஓவியா said...



மனம் மகிழும் கழகத் தோழர்

தாங்கள் (கழகத் தலைவர்) அனுப்பிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்து கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி நன்றி.

தங்களுக்கும், தங்கள் குடும்பத் தாருக்கும் எங்களின் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

தாங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் தால் தயாரிக்கப்பட்டதென்பது அறிய மட்டற்ற மகிழ்ச்சி.

தமிழகத்தில் பல காரியங்களில் முன் னோடியாக இருக்கும் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் பாராட் டுக்குரியது.

புரா திட்டம், மறுசுழற்சி முறை, மாற்று மின்சாரம் என பல நல்ல காரியங்கள் செய்து வருகிறது. அனைவருக்கும் ஏன் அரசாங்கத்திற்கு முன்மாதிரியாக செயல் பட்டு வரும் பல்கலைக் கழக பொறுப் பாளர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

பெருகட்டும் பல்கலைக் கழகத்தின் புது முயற்சிகள் பரவட்டும் உலகெங்கும்.

அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஓய்வின்றி உழைத்து திராவிடர் கழகம், பல்கலைக் கழகம், நம் நிறுவனங்கள் மட்டுமல்லாது தமிழகத்தையே மேம் படுத்தி வரும் தங்களுக்கு நன்றி பாராட்ட தமிழகமே கடமைப்பட்டுள்ளது.

- ப. சங்கரநாராயணன்,
தலைமைச் செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


புதிய கருத்துகள்


மனித அறிவு நாளுக்கு நாள் மளமளவென்று மேலே போய்க்கொண்டே இருக்கிறது. அதையொட்டி மக்களைக் கொண்டு போகவேண்டாமா? புதிய உலகத்திற்குப் புதிய உணர்ச்சிகள், புதிய கருத்துகளைக் கொண்டு செலுத்த வேண்டாமா?
(விடுதலை, 2.2.1959)

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் சார்பில் சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


சேலம் ரயில்வே கோட்டத்தை கேரளாவுக்கு மாற்றுவதைக் கண்டித்து
திராவிடர் கழகம் சார்பில் சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம், பிப்.11- சேலம் ரயில்வே கோட் டத்தை கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அதை தடுத்து நிறுத்த, திராவிடர் கழகம் சார்பில் இன்று (11.2.2013) காலை 11 மணியளவில் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழக சேலம் மண்டலத் தலை வர் பழநி புள்ளையண் ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன உரையில் சேலம் கோட்டத்தை உள்ளடக்கிய கேரள மண்டலத்தை புதியதாக ஏற்படுத்தி அதில் சேலம் கோட்டத்தை இணைக் கும் முயற்சியை வன் மையாக கண்டிக்கி றோம் என தெரிவித்தார். கேரளாவில் இணைக் கப்பட்டு இருந்த ரயில்வே கோட்டத்தை அரும்பாடுபட்டு சேலத்திற்குக் கொண்டு வந்தோம். இதனால் வேலை வாய்ப்பு உள் ளிட்ட பல்வேறு வளர்ச் சிகள் சேலம் கோட்டம் பகுதியில் கிடைத்தன.

இப்பொழுது மீண் டும் அதை கேரளாவிற் குக் கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடு பட்டு வருகின்றனர் என் கிற செய்தி கசிந்துள் ளது. ரயில்வே துறையில் பெரும் அதிகாரப் பொறுப்பில் மலை யாளிகள் இருப்பதால் இந்த விஷமத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதம் பாராமல் நாடா ளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பித் தடுத்திட வேண்டும். இந்தப் பிரச்சினைக்காக திராவிடர் கழகம் பல முறை போராட்டங் களை நடத்தியுள்ளது.

தமிழ்நாடு வஞ்சிக்கப் படுவதை ஏற்க மாட் டோம் எனவே 11.2.2013 அன்று திராவிடர் கழ கத்தின் சார்பில் சேலம் ரயில்வே கோட்டம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என கடந்த 3ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்து இருந்தார்.

அதன்படி இன்று (11.2.2013) காலை 11 மணியளவில் சேலம் ரயில்வே கோட்ட அலு வலகம் முன்பு பெரும் திரளான கழகத் தோழர் கள் கழகக் கொடி யேந்தியும், சேலம் ரயில்வே கோட்ட உரி மைக்காக நடைபெறும் ஆர்ப்பாட்ட விளக்க பதாகைகளையும் ஏந்தி யும், சேலம் ரயில்வே கோட்டத்தை கேரளா வுக்கு மாற்றுவதை கண்டிக்கும் ஒலி முழக் கங்களை எழுப்பிய வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன உரையை நிகழ்த்தினார். கழக ஈரோடு மண்டலத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், மண்டலச் செயலாளர்கள் த. சண் முகம், மு.க. தியாகராசன், ஜவகர் (சேலம்), விடு தலைசந்திரன் (ஆத்தூர்) சிந்தாமணியூர் சுப்பிர மணியம் (மேட்டூர், குருவாரெட்டியூர் பிரக லாதன் (ஈரோடு), நடரா சன் (நாமக்கல்), வழக் குரைஞர் மு.க. இராச சேகரன் (கரூர்), வேட்ரா யன் (தருமபுரி), சிவாஜி (தருமபுரி) தா. திருப்பதி (கிருட்டின கிரி) இளங்கோ (திருப் பத்தூர்) ஆகி யோர் முன்னிலை வகித் தனர். சேலம் மாநகர கழக செயலாளர் அ.ச. இள வழகன் நன்றியுரை கூறி னார்.

முன்னதாக இந்த ஆர்ப் பாட்டத்தில் கீழ்க் கண்ட ஒலி முழுக்கங்கள் எழுப்பப்ட்டன

மத்திய அரசே மத்திய அரசே,
மாற்றாதே, மாற்றாதே!
சேலம் கோட்டத்தின்
தலைமையகத்தை
மாற்றாதே, மாற்றாதே
பாலக்காட்டுக்கு மாற்றாதே
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
சேலம் கோட்டம்
ரயில்வேயின்
தலைமையிடத்தை
மாற்றுவதை கண்டிக்கிறோம்
தென்னக ரயில்வேயா
அல்லது
கேரள ரயில்வேயா
ஆதிக்கம் ஆதிக்கம்
ரயில்வேயில்
மலையாளிகள் ஆதிக்கம்
உரிமை முழக்கம்
உரிமை முழக்கம்
வஞ்சிக்கப்படுவோர்
உரிமை முழக்கம்!
கேட்கிறோம் கேட்கிறோம்
எங்கள் உரிமை கேட்கிறோம்!
போராடுவோம் போராடுவோம்
வெற்றி கிட்டும்வரை
போராடுவோம்!

என்ற ஒலி முழக் கங்களை கழகத் தோழர் கள் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் சேலம், ஆத்தூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர் ஆகிய கழக மாவட்டங்களைச் சேர்ந்த கழக தோழர் - தோழியர்கள் திரளாக பங்கற்றனர்.

சேலம் ரயில்வே கோட்ட உரிமைக்காக கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் திராவிட மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனர் வி. வேலுசாமி தலைமையில் அக்கட்சியின் தோழர் - தோழியர்களும் பங்கேற் றனர்.

தமிழ் ஓவியா said...


புண்ணிய நதிகளின் சக்தி இவ்வளவுதான்!


நீராடி திரும்பிய பக்தர்கள் 36 பேர் நெரிசலில் சிக்கி பலி!

அலகாபாத், பிப்.11- அலகாபாத் கும்பமேளாவில் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில், நெரி சலில் சிக்கி மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் 36 பேர் பலி யானார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் அலகா பாத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்ப மேளா விழா நடந்து வருகிறது. ஜனவரி 14ஆம் தேதி தொடங்கிய இந்த விழா அடுத்த மாதம் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.

நேற்று அமாவாசை தினம் என்பதால் நேற்று மட்டும் சுமார் 3 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்களாம். அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால், ஒரு இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். புனித நீராடிய பக்தர்கள் ரயில்களை பிடிக்க ரயில் நிலையத்தில் திரண்டனர். இதனால் இரவு 7 மணி அளவில் 2 லட்சத்துக்கும் அதிகமான கூட்டம் ரயில் நிலையத்தில் குழுமியது. அவர்களில் ஒரு பிரிவினர் 6-ஆவது பிளாட்பாரத்தில் இருந்த ரயிலை பிடிக்க நடைமேம் பாலத்தில் ஏறிச்சென்றனர்.

ஆனாலும், கூட்டம் கட்டுக்கடங் காமல் போனதால், கடுமையான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

அவர்கள் சிதறி ஓடியதாலும், ரயிலைப் பிடிக்க கூட்டம் அவசரம், அவசரமாக நெருக்கியடித்துச் சென்றதா லும், 6-ஆவது பிளாட்பாரத்துக்கு செல்லும் மேம்பாலத் தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந் தது. இந்த இடிபாடுகளில் சிக்கியும், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறியும் 36 பக்தர்கள் பலியானார்கள். ஏராளமா னோர் காயமடைந்தனர். ரயில்வே அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கை களை மேற் கொண்டனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

உதவி தொகை

இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும் வழங் கப்படும் என்று உத்தர பிர தேச அரசு அறிவித்து உள்ளது.

கூட்ட நெரிசலே விபத்துக்குக் காரணமாம்

அலகாபாத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:- கூட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே நடைப்பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. தற்போது ரயில் நிலையத் தில் உள்ள மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தேவை ஏற்பட்டால் அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


இந்து - ஆன்மீகக் கண்காட்சியா?


5ஆவது இந்து - ஆன்மீக சேவைக் கண்காட்சி ஒன்றை சென்னையில் பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் துணைப் பிரதமருமான லால்கிஷன் அத்வானி தொடங்கி வைக்கிறாராம்.

கடந்த ஆண்டுகூட சென்னை வைஷ்ணவா கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வு மய்யத்தின் தலைவராக இருந்த நட்ராஜ் என்பவர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து அந்தக் காரியத்தைச் செய்தார் (இது அரசின் மதச் சார்பின்மை தன்மைக்கு விரோதமானதே!)

இந்தக் கண்காட்சியில் ரவி சங்கரின் வாழும் கலை, ஆரிய சமாஜம், இஸ்கான், ஈஷா யோகா பீடம், காஞ்சி காம கோடி பீடம், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடம், பிரம்ம குமரிகள் இயக்கம், மாதா அமிர்தானந்தமயி மடம், வேலூர் நாராயண பீடம், வனவாசி சேவா, கேந்திரம், உளுந் தூர்பேட்டை சாரதா ஆசிரமம், விவேகானந்த கேந்திரா உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்கு ஏற்கின்றனவாம்.

சரி, இந்த அமைப்புகள் எத்தகைய சேவைகளை செய்யத் துடிக்கின்றனவாம்?

(1) மக்கள் மத்தியில் பேதங்கள் கூடவே கூடாது; அதுவும் பிறப்பின் அடிப்படையிலான உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி- இவை கூடாது என்று கூறப் போகிறார்களா? பிரச்சாரம் செய்யப் போகி றார்களா?

2) தீண்டாமை க்ஷேமகரமானது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்துள்ளாரே - அது தவறு; தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை என்று அறிவிப்பார்களா?

3) இந்துமதம் ஜாதியின் காரணமாக பிளவு பட்டுக் கிடக்கிறது - எனவே ஜாதி முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்று அதிகார பூர்வமாக அறிவிப்பார்களா?

4) இஸ்லாம் மதத்தில் இருப்பதுபோல, கிறித்துவ மதத்தில் இருப்பதுபோலவே இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவு, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கோயில் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியைப் பெற்றால் இந்துக் கோயில்களில் தாராளமாக அர்ச்சகராகலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொடுப்பார்களா?

5) இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை விலக்கிக் கொள்வார்களா?

6) சங்கர மடங்களில் இந்து மதத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் சங்கராச்சாரியாக வருவதற்குத் தடையில்லை என்று அறிவிப் பார்களா?

7) இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வேறுபாடுகளை வெளிப்படுத்தும் எந்தவித மதச் சின்னங்களையும் அணியப் போவதில்லை, குறிப்பாகப் பூணூல், நெற்றியில் தீட்டப்படும் அடையாளங்கள் இவற்றைக் கைவிடுவது என்று முடிவு எடுத்துச் சொல்லுவார்களா?

8) இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்று அறிவித்துள்ளதால், அந்தச் சேவை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிப்பார்களா?

9) சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதி என்று கருதப் படும். மக்கள் மத்தியிலே வீடுகட்டிக் கொடுப் பார்களா?

இவற்றை எல்லாம் செய்யாமல் இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி என்பது ஊரை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஏற்கெனவே இந்து மதம் கடைப்பிடித்து வரும், துவேஷங்களை, ஜாதி வேற்றுமைகளை, தீண்டாமை என்னும் தீய நோயை மேலும் நீரூற்றி, எரு போட்டு வளர்ப்பதற்கான ஏற்பாடுதான் இது என்பது வெளிப்படை.

இந்து மதத்தின்மீது கடுமையான விமர் சனங்கள் இருப்பதால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இது போன்றகள் காட்சி என்னும் ஜிகினா வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதைப் பார்ப்பனரல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - எச்சரிக்கை! 12-2-2013

தமிழ் ஓவியா said...

தெலங்கானா நாத்திக அமைப்பு அறிவிப்பு:



இவை அச்சு அசலான மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா!

பூதங்கள், பேய்கள். மனித மறுபிறப்பு, சுவர்க்க, நரகக் கற்பனைகள்,
மந்திரங்கள், மகிமைகள், செய்வினை ஆகியவற்றில் துளியேனும் உண்மை இல்லை.
வாஸ்து, ஜோதிடம், கைரேகை கே.பி.ஜே. லக்கி மோதிரங்கள், அதிர்ஷ்டக் கற்கள் இராசி பலன்கள் குபேர- லட்சுமி எந்திரங்கள், குடும்ப தோசங்கள் அனைத்துமே நவீன மோசடிகள், தில்லுமுல்லுகள்!
பரலோகம், கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே ஒட்டுமொத்த மோசடிகள்!
பாபா, சுவாமிஜீக்கள் மகிமை பெயரில் செய்யப்படும் அனைத்தும் ஜிம்மிக்குகளே! மந்திரமல்ல, தந்திரமே!!

மக்கள்=பிரஜா நாத்திக சமாஜம், மாநிலக் குழு செல்: 9959652769, 9849757222

மந்திர - தந்திர மோசடிகளை விளக்கி தெலங்கானா மக்கள் நாத்திக அமைப்பு வெளியிட்டுள்ள பிளெக்ஸ்= நெகிழிப் பதாகை.

- தமிழில்: கோரா, திருவூர் -602025, 8.2.2013

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


காதலர் நாள்

இன்று உலகெங்கும் காதலர் நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

காதல் என்பது மனித இயற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.

காதல் மட்டும் அல்ல; எதுவாக இருந்தாலும் கட்டுக்கு அப்பாற் போனால் ஆபத்துதான். ஏதோ விதி விலக்காக காதல் தோல்வி அடைவதாலோ தவறுதலான புரிதலாலோ எதிர் விளைவுகள் ஏற்படுவதை முன்னிறுத்தி, காதலே கூடாது -அது ஒழுக்கக் கேடானது என்று கூக்குரல் போடுவது அசல் பிற்போக்குத்தனமாகும். காதல் இல்லாமல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பட்ட திருமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் புயல்கள் வீசவில்லையா!

விவாகரத்துத் திருமணம் இத்தகையவர்களிடம் தான் அதிகம் என்ற புள்ளி விவரம் - எதைக் காட்டுகிறது?

சமுதாயத்தின் பல்வேறு கேடுகளுக்குச் சரியான வளர்ப்பும், முறையான கல்வித் திட்டமும் இல்லாததே காரணம் ஆகும்.

காதல் நாளை எதிர்த்து சில சக்திகள் புறப்பட்டுள்ளன; ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற சங்பரிவார்கள் கும்பல் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

இந்(து)த மதவாத சக்திகள் காதலை வெறுப் பதற்கு அடிப்படைக் காரணம், காதல் திரும ணத்தில் ஜாதிக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. மதத்திற்கு மரணக் குழி வெட்டப்படுகிறது என்பதுதான்.

ஜாதி என்பது பற்றி ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகம் என்று கூறப்படும் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் எனும் நூலில் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்?

நீண்ட காலமாக சிலர் ஜாதியை எதிர்த்து வருகின்றனர். ஜாதி அமைப்பு முறை இருந்த பழங்காலத்தில் நாம் மிக உயர்ந்த நிலையில் இருந்தோம். ஜாதி என்கிற அமைப்பு நமது முன்னேற்றத்திற்கோ, வளர்ச்சிக்கோ முட்டுக் கட்டையாக இருந்ததில்லை. அவற்றிற்கு ஆதாரமும் கிடையாது. ஜாதி அமைப்பு முறை சமுதாயத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றவே பயன்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையிலேயே இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து வெறிக் கும்பல் ஜாதியை ஒழிக்கும் காதலை, காதல் திருமணங் களை எதிர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ஜாதியைக் காப்பாற்றக் கூடியவர்களும் காதலை வெறுப்பார்கள் - எதிர்ப்பார்கள் என்பதை இன்றைக்கு நேரிடையாகக் காண முடிகிறது.

அந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த நவீன அரசியல்வாதிகளும் இந்த ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது அம்பலமாகி விட்டது.

ஒரு கேள்விக்கு இந்துத்துவா வாதிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கிய கடவுளான கிருஷ்ணன் என்பவன் காதல் லீலை மன்னன் தானே?

வீட்டுக்கு வீடு கோபியர்களுடன் கொஞ்சும் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு வழிபடும் இவர்கள், காதலை வெறுப்பது ஏன்?

காதலைப்பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை தவறான வகையில் வியாக்கி யானம் செய்ய சிலர் புறப்பட்டுள்ளனர்.

எல்லாமே காதல் தான் - அதற்கு மேல் உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறுவதைத்தான் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அது ஒரு வகையான உணர்வு - அதற்கு அளவுக்குமேல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று கூறும் தந்தை பெரியார் இதில் மற்றவர்கள் பிரவே சிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசிய மான ஆதிக்கம் செலுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் என்பது குறிப்பிட்ட வயது அளவு ஓர் ஆணின் - பெண்ணின் தனிப்பட்ட முடிவாகும். அது கூடாது என்பதோ, தடுப்பதோ அதிகப் பிரசங்கித் தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தைத்தான் திராவிடர் கழகம் வலியுறுத் துகிறது.

கல்விக் கூடங்களில் ஆண் - பெண் மாணவர்கள் சேர்ந்து கற்கும் தன்மையைத் தந்தை பெரியார் வரவேற்கிறார் (விடுதலை 22.5.1967) என்பதையும் குழப்பவாதிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். 14-2-2013

தமிழ் ஓவியா said...


தேவையில்லாதவர்கள்


ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ? (விடுதலை, 21.3.1954)