Search This Blog

25.5.10

தெய்வீக முலாம் பூசப்படுபவருக்கு புற்று நோய் வரலாமா?

மகான்கள்!

ஆனந்தவிகடன் இதழில் (26.5.2010) கேள்வி ஒன்றுக்குப் பதில்:

கேள்வி: ஞானியர்கள் தம் கடைசிக் காலத்தில் சொல்லி வைத்தாற்போல் புற்று நோயை அனுபவித்து இருக்கிறார்களே. அதற்கு ஏதேனும் தெய்வீகக் காரணங்கள் உண்டா?

பதில்: மகானாக இருந்தாலும் சரி, மடையனாக இருந்தாலும் சரி, உடம்பு என்ற வண்டி பொதுவானது. அது எப்போது வேண்டுமானாலும் ரிப்பேர் ஆகலாம். நீங்கள் சொல்வது தவறு. ரமண ரிஷிக்கு மட்டும்தான் தோள் பகுதியில் புற்றுநோய் வந்தது. அதை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டார். விவேகானந்தருக்குச் சர்க்கரை நோய் இருந்தது. ஹார்ட் அட்டாக்கில் மறைந்த மகான்களும் உண்டு. இதற்கெல்லாம் தெய்வீகக் காரணம் எல்லாம் எதுவும் கிடையாது. வாட்ட சாட்டமாக வளர்ந்து, களியாட்டங்களில் மூழ்கி, எல்லாத் தப்புகளையும் செய்யும் போலிச் சாமியார்கள் கடைசி வரை எந்த வியாதியும் வராமல் நடமாடவும் முடியும். இதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?!

இதுதான் ஆனந்த விகடனின் சாமர்த்தியமான பதில்.

ரமண ரிஷி, சாயிபாபா இவர்களின் தனி மகிமை என்று எதை வைத்துக் கூறப்படுகிறது? பக்தர்களுக்கு இவர்கள் ஆசி வழங்கினால், நொடிப் பொழுதில் அவர்களின் நோய்கள் பறந்து போய் விடுகின்றன என்றுதானே கூறுகின்றனர். ரமணா பெயரில் மருத்துவமனைகளைக் கட்டுவதும், அந்த மருத்துவமனையில் மூலைக்கு மூலை ரமணரிஷியின் படம் தொங்குவதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஒருவருக்கு, தெய்வீக முலாம் பூசப்படுபவருக்கு புற்று நோய் வரலாமா என்ற கேள்வி நியாயமானது தானே! இது கர்ம பலன் என்று சொல்லித் தப்பிக்கப் போகிறார்களா? அது கர்மபலன் என்றால், அதனை இந்த மகான்கள் எப்படி மாற்றியமைக்க முடியும்? மகான், மகரிஷி என்று விளம்பரப்படுத்துவதற்கு அவர் கையசைத்தால், கர்ம வியாதிகள் போகும்; அவரின் காருண்ய கண்பட்டால் கடுமையான நோய்கள் கரைந்து போகும் என்று சொல்லுவது; அப்படிப்பட்டவர்களுக்கே கர்ம நோய்களும், கடுமையான நோய்களும் வந்துள்ளனவே என்று சந்தேகத்துடன் வினா தொடுத்தால், தெய்வீகக் காரணம் எதுவும் கிடையாது என்று நைசாக நழுவிக் கொள்வது! ஏன் இந்த இரட்டை வேடம்?

பக்தியையும், பகவானையும் பாதுகாக்கப் பார்ப்பனர்கள் ரொம்பத்தான் சிரமப்படுகிறார்கள்.

"கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும்.

--------------தந்தை பெரியார் (விடுதலை 24.4.1967)

-------------------- மயிலாடன் அவர்கள் 25-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

Unknown said...

உங்களுக்கு நல்ல புத்தியே வராதா. வியாதி யாருக்கும் வரும். ஆனால் ஞானம் சிலருக்குத்தான் வரும்

தமிழ் ஓவியா said...

//வியாதி யாருக்கும் வரும்//

உண்மையை ஒப்புக் கொண்டதற்கு நன்றி
jaisankar jaganathan.

நடமாடும் கடவுளுக்கு கண்குறைபாட்டை சரி செய்ய தெரியாது அறிவியல் கண்டு பிடிப்பான கண்ணாடி அணிந்து கொண்டு அயோக்கியத்தனம் செய்ய மட்டும் தெரியும்.

எதற்கோ ஞானம் வருகையில் கண்குறைபாட்டை ஞானத்தில் போக்காமல் அறிவியலை நாடுவது ஏன்? jaisankar jaganathan

Unknown said...

அந்த விதியை அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் அதனால் தான். போதுமா.

உடல் என்று இருந்தால் வியாதி வரத்தான் செய்யும். ஞானம் உடலைத்தாண்டியது

Unknown said...

//எதற்கோ ஞானம் வருகையில் கண்குறைபாட்டை ஞானத்தில் போக்காமல் அறிவியலை நாடுவது ஏன்? //
வியாதி உடலுக்கு. ஞானம் ஆன்மாவுக்கு. போதுமா. எங்க என் முந்தைய கமெண்ட்

தமிழ் ஓவியா said...

//ஞானம் உடலைத்தாண்டியது//

அப்படியா? சொல்லவேயில்லை

//வியாதி உடலுக்கு. ஞானம் ஆன்மாவுக்கு. போதுமா.//

ஆன்மா மோசடியை நீங்கள் அறியவில்லையா?

நம்பி said...

//Blogger jaisankar jaganathan said...உடல் என்று இருந்தால் வியாதி வரத்தான் செய்யும். ஞானம் உடலைத்தாண்டியது//

என்னது இது? சோறு தின்னா கக்கூஸ் வரத்தான் செய்யும் என்பது மாதிரி....

மூளையில் இருக்கும் ஒரு நரம்பை எடுத்தால் போதும் ஞானம் எங்கேயிருக்கிறது என்பது தெரிந்து விடும். மொத்த உறுப்பும் செயலிழந்து விடும் அப்ப இந்த ஞானம் எங்கே போனது என்பது கூட நன்றாக தெரியும். உடல் ஒரு பக்கம் கோனிக்கும்...

உடலை தாண்டிய விஷயத்தை எப்படி ஒருவரே சொந்தம் கொண்டாட முடியும். ''ஞானம்'' என்பதை வலியுறுத்தும் நபருக்கே சொந்தம் கிடையாதே?...உடலுக்குள் இருக்கும் விஷயங்கள் மட்டுமே உடலுக்குரியவரின் சொந்தம்.


//Blogger jaisankar jaganathan said...

அந்த விதியை அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் அதனால் தான். போதுமா.

உடல் என்று இருந்தால் வியாதி வரத்தான் செய்யும். ஞானம் உடலைத்தாண்டியது

May 27, 2010 7:13 PM//

ஆமாம்! இனி நடக்கும் எந்த தீய செயலுக்கும் அரசிடமோ, காவல் துறையினரிடமோ புகார் செய்யக்கூடாது...''விதி'' அதை அனுபவித்தே தீரவேண்டும். திருடன் வீட்டில் திருடினாலும் ''விதி'' அதை அனுபவித்தே தீரவேண்டும். கொள்ளை போனாலோ அதுவும் ''விதி'' அதை அனுபவித்தே தீரவேண்டும் ''குய்யோ முறையோ 'ய என்றோ...''திருடன், திருடன்'' என்றோ இனி கத்தி கூப்பாடு போடக்கூடாது.

பாலியல் வன்கொடுமை புரிந்தால் குற்ற செயலாக கருதக் கூடாது...அது ''விதி''...அனுபவித்தே தீரவேண்டும். (இந்த கொடுமையை வலியுறத்துபவர் அல்லது அவர் குடும்பம் அனுபவிக்கும் போது இது ''விதி'' தான் என்று நினைத்து தன்னை சாந்தப்படுத்திக்கொள்வாரா..?) பாதிக்கப்பட்ட பெண் விதி என்று விட்டு விடுவாரா..? அதை உறவினரான நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா...?

கோயிலில் குழப்பம் விளைவித்தேன்...காம லீலை புரிந்தேன் இது ''விதி''...அனுமதிக்கலாமா...?


ஆகா! பேஷ் பேஷ்... இதை இந்திய சட்டத்தில் கொண்டுவந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்...என்று அனைவருக்கும் தோன்றுமே...? அவரவர் அளவு குற்றச் செயல் அவரவர்க்கு விதியாக போய்விடுமே...நாடும் மிக மிக மிக மிக அமைதியாக இருக்குமே. இப்பொழுது மட்டும் அமைதியாகவா இருக்குது என்ற குதர்க்கத்திற்கு...அதை தெரிந்தும் விதியை சாதகமாக வைத்தால் இன்னும் அமைதியாக இருக்கும் அல்லவா...? அனைத்தும் சட்டப்பூர்வமாக இருக்குமே...

நம்பி said...

//jaisankar jaganathan said...

உங்களுக்கு நல்ல புத்தியே வராதா. வியாதி யாருக்கும் வரும். ஆனால் ஞானம் சிலருக்குத்தான் வரும்

May 25, 2010 7:56 PM//
இதை..... ''உடலை தாண்டியது ஞானம்'' என்று கருத்து வைத்துவிட்டு...ஞானம் சிலருக்குத் தான் வரும் என்ற கருத்து எப்படி வரும்?...

ஞானம் எல்லோருக்கும் தானே உடலைத் தாண்டிய விஷயம்...அப்படித்தானே ஒரு பதிவில் இருக்கிறது.

உங்களுக்கு நல்ல புத்தியே வராதா?..சரி, இந்த மாதிரி முறையற்று சிந்திக்கும் புத்தியை நல்ல புத்தி என்று யார் சொன்னது...ஐ.நா சபை சொல்லியதா...? நீங்களே சொல்லிக்கொள்வதா...? இல்லை சர்வதேச பொது அமைப்பு ஏதாவது சொல்லியதா..?

ஞானம் சிலருக்கு தான் வரும்...யார் அந்த சிலரில் Blogger jaisankar jaganathan ஒருவரா...? இல்லை குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமா.?..அல்லது குறிப்பிட்ட ஜாதிப்பிரிவினர் மட்டுமா..? யார் அந்த சிலர்...?


இந்த இணையத்தை கண்டுபிடித்தவன் ஞானமில்லாதவனா...? இன்னும் பல மூடநம்பிக்கைகளை உடைத்து பல விஞ்ஞானக் கருவிகளை கண்டுபிடித்தவன் ஞானமில்லாதவனா..? இல்லை அதை வைத்து இன்னும் பிதற்றலை, மூடநம்பிக்கையைப் பரப்புவது ஞானமில்லாத செயலா...?

இப்போது சொல்லும் நல்ல புத்தி என்பது என்ன? அது யாருக்கு வரவேண்டும் என்று...?