Search This Blog

25.5.10

பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சல் பாரீர்


பாரீர் பார்ப்பனர்களை!

பார்ப்பனர்கள் யார்? இந்த 2010லும் அவர்களின் குணம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படாது.

தமிழ் - தமிழர் - தமிழர் பண்பாடு தளத்தில் அவர்களின் பார்வை எத்தகையது என்பதை ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் பளிச் சென்று புலப்பட்டு விடும்.

மேட்டுக்குடி மக்களை மேலோட்டமாகப் பார்த்து கவிழ்ந்து போகும் கபோதிகளுக்கு அவர்களின் உண்மை உருவம் புலப்படவே புலப்படாது.

செம்மொழி என்று தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்து உலகத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். காலங் கடந்தாவது இந்த அங்கீகாரம் வந்து சேர்ந்ததே என்று ஆனந்தப் பண்பாடினர்; காரணம் அவர்கள் மொழியால், வழியால், விழியால் தமிழர்கள்.

ஆனால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும் சுடுகாட்டு நெருப்பாக எரிந்து தொலைகிறது.

“தினமலர்’’ (13.6.2004) அந்துமணி பதில்கள் பகுதியில் ஒரு கேள்வி: தமிழ்மொழியைச் செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்...

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி, நிற்காமல் இயங்கும்; ஒரு வேளைக் கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்; தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்ப்பர் சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர். இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்! இதுதான் பதில்.

இதில் பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சல் தெரிகிறதே தவிர, நியாயமான விவாதங்கள் ஏதாவது உள்ளனவா?

தமிழ் செம்மொழி ஆனால் ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும் என்று யார் சொன்னார்கள்? அதே நேரத்தில் அந்த ஏழை நெசவாளி செம்மொழி என்று அறிவிப்பு வந்தது குறித்து அளவற்ற மகிழ்ச்சியில் திளைப்பான்; காரணம் அவன் தமிழன்! இவர்களாகவே ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, இவர்களாகவே தங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கிறார்கள் என்றால் இவர்களை அடையாளம் காண வேண்டாமா?

சக தமிழர்களிடம் தமிழிலேயே பேச வேண்டும் என்பது “தினமலரின்‘ கருத்தாகக் கொள்ளலாமா? அப்படியென்றால் அதற்காக ‘தினமலர்’ எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்கிறது? பதில்களை இடித்துக் கூறியிருக்கிறது?

அடுத்து ‘தினமலரில்’ (18.8.2009 பக்கம் 10) டவுட் தனபாலு பகுதியில் ஒரு நஞ்சு!

தமிழக பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்திற்குக் கருநாடகா, ஆண்டுக்கு 20 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும், மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப் படும். கருநாடகா அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்து-விட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னாங்க.. பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமோ இல்லையா...? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன...? இப்படிஒரு பதில்!

பல வருடங்களாக பெங்களூருவில் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக்கிடந்த திருவள்ளுவர் சிலை மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்-களின் முயற்சியால் திறந்து வைக்கப்பட்டது. இதுகண்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் உவகை அடைகிறான்.

ஆனால், தினமலர் கூட்டத்துக்கு மட்டும் கேலியாகவும், இன்னொரு வகையில் வேதனையாகவும் இருக்கிறது கடப்பாரையால் வயிற்றை இடித்துக் கொள்கிறது என்றால், இதன் பொருள். அவர்கள் தமிழர்கள் இல்லை. அதனால் மகிழ்ச்சியும் இல்லை இதுதானே உண்மை?

இந்த வாரம் “துக்ளக்’’ இதழில் (19.5.2010 _ பக்கம் 25) ஒரு கேள்வி பதில்.

கேள்வி: “எல்லா உள்ளாட்சி அலுவலகங்களிலும் இனி “தமிழ் வாழ்க’’ என்ற நியான் விளக்குகள் வைக்கப்படும்’’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன? இதனால் தமிழ் வாழ்ந்து விடுமா?

பதில்: இதனால்தான் தமிழ் வாழும் என்றால் அதைவிடத் தமிழுக்கு வேறு கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்காக அல்ல. நியான் விளக்குக் காண்ட்ராக்ட் எடுப்பவர் வாழ, இது வழி செய்யும். அது போதுமே.

எப்படியிருக்கிறது பதில்! தமிழ், தமிழன் என்ற உணர்வு இருந்திருக்குமேயானால் இந்தக் கோணத்தில் இந்தப் பூணூல் எழுதுமா?

“தமிழ் வாழ்க’’ என்று நியான் விளக்குப் போடுவது கான்ட்ராக்ட் எடுப்பவர் வாழ என்கிற திசையில் புத்தி மேயப் போகிறது என்றால் இந்தப் புரோக்கர் கூட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இதே “துக்ளக்’கில் துர்வாசர் ஒருவர் எழுதுகிறார் சமச்சீர் கல்விபற்றி..

இருக்கிற கல்வியே ஒழுங்காக இல்லை. இதில் சமச்சீர் கல்வி என்ன வேண்டிக் கிடக்கிறது?

இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை வாசிக்கத் தெரியாத அய்ந்தாம் வகுப்பு மாணவர்கள், இங்கே மலிந்து கிடக்க, தமிழ் மாநாடு, தமிழ்ச் செம்மொழி மாநாடு எல்லாம் எதற்கு என்று கிறுக்குகிறது.

எங்கே சுற்றி வந்தாலும் தமிழை, தமிழர்களை கொச்சைப்படுத்தியே தீருவது என்ற கொழுப்பில் எழுதுகிறது ஒரு கொம்பேறிக் கூட்டம்.

நம்மால் திருப்பிக் கேட்க முடியாதா? குழவிக் கல்லுக்கெல்லாம் கும்பாபி-ஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே, ஏழை வீட்டுத் தறி தடையில்லாமல் ஓடுமா, ஒரு வேளைக் கஞ்சிக்கே வழிஇல்லாதவருக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்குமா?

இந்தக் கேள்விக்கு, இந்தச் சமஸ்கிருதக் கூட்டம் பதிலைச் சொல்லுமா?

கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் நடமாடிக் கொண்டிருக்கும் சங்கராச்-சாரியாருக்கு ஊருக்கு ஊர் பவள விழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களே _ இதனால் நாட்டுக்கு என்ன பயன்? அவருக்குப் பவள விழா கொண்டாடினால் மாதம் மும்மாரி பொழியுமா?

பக்திப் பள்ளத்தில் தமிழர்கள் குப்புற விழுந்து கிடப்பதால், கேட்கும் திராணியற்றவர்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தமிழர்களைச் சூத்திரர்கள் என்று சொன்னவர்கள், தமிழைத் தரக் குறைவாக கேலிப் பொருளாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

பார்ப்பனர்களின் இந்த மமதைப் போக்கை அறிஞர் அண்ணா அழகாகப் படம் பிடித்தார்.

“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்-மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான் (“திராவிடநாடு’’ 2.11.1947).

அண்ணாவின் படப்பிடிப்பைப் பார்த்த பிறகாவது பரிதாபத்துக்குரிய நமது “பஞ்சமர்களும்’’ ‘‘சூத்திரர்களும்’’ அடையாளம் காண்பார்களா பார்ப்பனர்களை?

------------- மின்சாரம் அவர்கள் 22-5-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

3 comments:

லெனின் said...

//''பல வருடங்களாக பெங்களூருவில் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக்கிடந்த திருவள்ளுவர் சிலை மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்-களின் முயற்சியால் திறந்து வைக்கப்பட்டது. இதுகண்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் உவகை அடைகிறான்.''//

இதையே ''பல வருடங்களாக பெங்களூருவில் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக்கிடந்த திருவள்ளுவர் சிலை பா.ஜ.க என்ற மனிதாபிமானமுள்ள கட்சியின் மூலம் நிறைவேறியது" என்று கூறினால் உங்கள் குடியா மூழ்கிவிட போகிறது. கலைஞரின் தமிழ் உணர்வுதான் இப்போது ஊர் ஊராய் சிரிக்கிறதே. இன்னும் அவருக்கு வக்காலத்து வாங்கி உங்கள் வயிறு நிறைக்காதீர்கள். புதைக்கப்பட்ட 1 லட்சம் தமிழர்களின் ஆன்மா உங்களையெல்லாம் சும்மா விடாது.

Bala said...

நான் பார்ப்பனன் அல்லன். ஆர்எஸ்எஸ் காரன் அல்லன். நான் கேட்கிறேன், தமிழ் செம்மொழி ஆகி விட்டால் என் போன்ற தமிழனின் வயிரா நிறைய போகிறது? எத்தனை நாட்கள்தான் இந்த தமிழை வைத்து வயிறு நிரப்ப போகிறீர்கள். இப்போது திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து விட்டீர்கள். அடுத்ததாக அவன் காவிரியை திறந்து விடுவான் என்று நாக்கை தொங்க போட்டு கொண்டு நாங்கள் உட்காருவோம். உடன்பிறப்பே உனக்கு தமிழை அள்ளிதருகிறேன் பருகு என்று கடிதம் எழுதுவீர்கள். இனமான தமிழனுக்கு தெரியுமோ தெரியாதோ, இனமான தலைவருக்கு தெரியும் தமிழனை போல ஒரு அடிமுட்டாள் உலகத்தில் கிடையாது என்று. தன்னை எதிர்பவனை எல்லாம் பார்ப்பன் பட்டம் கட்டி அவனுக்கு பூணூல் அணிவித்து விடுகிறீர்களே இதைவிட உங்கள் பகுத்தறிவு என்ன சாதித்து விட்டது? தினமும் மூன்று மணி நேர அறிவிக்கப்பட்ட, அறிவிக்க படாத மின் வெட்டு. தமிழுக்காக உயிர் கொடுக்கும் தலைவர் வீட்டிலும் இதே மின் வெட்டு உண்டா? வாய் கிழிய இந்து புராணத்தில் ஆபாசம், பலதாரம் என்று பேசுகிறீர்களே இது மானமிகு தலைவருக்கும் பொருந்துமா? எத்தனை பின்னூட்டமிட்டாலும் அது பற்றி வாயே திறக்காத உங்களின் பகுத்தறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு. வீழ்வது தமிழனாக இருந்தாலும் வாழ்வது கலைஞராக இருக்கட்டும்.

தமிழ் ஓவியா said...

//பா.ஜ.க என்ற மனிதாபிமானமுள்ள கட்சி//

லெனின் என்று பெயரை வைத்துக் கொண்டு தத்து பித்து என்று உளறாதீர்கள்.

மதவாதக்கட்சியை மனிதாபிமானமுள்ள கட்சி என்று சொல்லுவதை கேட்டு என்னால் சிரிக்காமல் இருக்க முடிய வில்லை லெனின்