சேலம் மாநாட்டில் நீங்கள் பதினாயிரக்கணக்காகக் கூடிய மிக்க எழுச்சி யோடு பல முக்கியமான தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றி வைத்தீர்கள். உங்கள் வேலை அவ்வளவு தானா?
அவைகளைச் செய்கையில் அம லுக்கு கொண்டுவர வேண்டாமா?
அதற்கு யார் பொறுப்பாளி!
நானே தானா?
நான் ஒருவனே போதுமா?
நீங்கள் மாநாட்டிலிருந்து வீட்டுக்குப் போனவுடன் உங்கள் சொந்த காரியங் களைப் பார்த்துக் கொண்டு வேடிக் கையாக வாழ்வு நடத்தி விட்டு, 6 மாதம் பொறுத்துக் கூட்டப்படுகிற கூட்டத்திற்கு வந்து என்னைப் பார்த்து நீ என்ன வேலை செய்தாய்? அமைப்பு இல்லை, மெம்பர் இல்லை, என்னை யோசிக்க வில்லை, கட்சியின் பெருமை போய்விட் டது. சர்வாதிகாரம் செய்கிறாய், மற்ற மக்களை நீ அனுசரிப்பதில்லை என்று நீங்கள் சொல்லி விட்டால் போதுமா?
அந்தந்த ஜில்லாக்களில் இருக்கிற பார்ப்பனர்கள் (காங்கிரஸ்காரர்கள்) என்ன செய்கிறார்கள் என்றும், முஸ்லிம்கள் (முஸ்லிம் லீக்காரர்கள்) என்ன செய் கிறார்கள் என்றும், அவர்களின் பிர முகர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் பாருங்கள். அவர்களை இந்தக் காரியங் களில் பின்பற்றுங்கள். வெறும்
தலைவரை குறைகூறுவதும் அதிகாரம் செய்வதும் மாத்திரமே ஒரு கட்சி மக்க ளின் - பின்பற்றுவோரின் - பாடுபடுவோ ரின் வேலையாக இருந்தால் அக்கட்சி யால் பயன் ஏற்படுவது மிக்க அதிசயம்தான்.
ஆகவே, தோழர்களே! வாலிபர்களே! யாராவது கூட்டம் கூட்டி வைத்தால், கூட்டின இடத்துக்கு வந்து மேடையில் குற்றப் பத்திரிகை படித்துவிட்டுப் போவது மாத்திரம் கடமை என்று சிலர் கருதுவது போல் கருதிவிடாமல், உங்க ளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று உணருங்கள். அதுதான் நீங்கள் கட்சிக்கு அங்கத்தினர்களை சேர்க்க வேண்டியது, ஆங்காங்கு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது. இவை உங்கள் முயற்சியும் ஒத்துழைப்பும் இல்லாமல் முடியாது. இது வரையிலும் நடந்து போனது போகட்டும். குறை சொல்லிக் கொண்டு திரிகிறவர்கள் திரியட்டும். எதிரி பத்திரிகைகளை தஞ்சமடைந்து விஷமத்தனமான அறிக்கை விட்டுக் கொண்டு திரிகிறவர்கள் திரியட் டும்.
பொறுப்பும் தன்னலமற்ற பெருங் குணமும் திராவிடர்கள் மானத்தில், மேன்மையில், விடுதலையில் கவலை யும் உள்ள நீங்கள், அருள்கூர்ந்து மண் டல அமைப்புத் தலைவர்களுடன் ஒத்து ழைத்து, மாநாட்டுக் கட்டளையை நிறை வேற்ற உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
ஈ.வெ. ராமசாமி,
தலைவர், (ஜஸ்டிஸ் கட்சி) திராவிடர் கழகம்
குடிஅரசு - வேண்டுகோள் - 09.09.1944
0 comments:
Post a Comment