Search This Blog

20.9.13

பாபர் மசூதியை இடித்தவர்கள் நாடாளத் துடிக்கிறார்கள்-இளைஞர்களே ஏமாறாதீர்!


பாபர் மசூதியை இடித்தவர்கள் நாடாளத் துடிக்கிறார்கள்
காவிப்படை - பணத் திமிங்கலங்கள் பின்னணியில்; விளம்பர வெளிச்சத்தில் இளைஞர்களே ஏமாறாதீர்!
முற்போக்குச் சக்திகள் ஓரணியாய் நின்று முறியடிப்போம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg
பாபர் மசூதியை இடித்த கூட்டம்  - ஹிந்துத் துவாவை நிலை நிறுத்த ஆட்சிக் கட்டிலில் ஏறத் துடிக்கிறது - மதச் சார்பற்ற சக்திகள் - முற்போக்கு எண்ணங் கொண்டோர் ஓரணியாய்த் திரண்டு முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்பதையே மய்யப்படுத்தி இந்தியாவை ஹிந்துஇயா வாக மாற்றத் துடிக்கும் அமைப்பின் அரசியல் பிரிவு - உருவாக்கம் தான் பாரதீய ஜனதா (BJP) என்பது.

பிஜேபியின் மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில்!

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத விசித்திர நிலை பா.ஜ.க.வுக்கு; அது சுதந்திரமாக இயங்கும் அரசியல் கட்சி அல்ல; மாறாக, அதன் மூக்கணாங் கயிறு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கையில்தான் உள்ளது.

பிரதமராக யார் (பிஜேபி மூலம்) வருவது என்பதை மட்டுமல்ல; யாருக்கு எந்தத் துறை (இலாகா) அளிப்பது என்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ். எஜமானர்கள் தான் நிர்ண யிக்க வேண்டும்; அதனை அப்படியே செயல்படுத்துவது மட்டும்தான் பா.ஜ.க.வின் வேலை!

அதன்படிதான் பி.ஜே.பி. தலைவராக, நிதின்கட்காரி என்ற பார்ப்பன தொழிலதிபரையே இரண்டாம் முறைக்கும் கொண்டுவர அது முயற்சித்து  தோற்று விட்ட நிலையில் தான், திடீரென்று ராஜ்நாத்சிங்கைப் பா.ஜ.க. தலைவர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்தது.

அதுபோலவே மோடி வித்தையும்கூட; வேறு வேறு நபர்கள் அத்வானி போன்றவர்களால் முன்னிறுத்தப்படக் கூடுமோ, அதன் மூலம் நமது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும், அதிகாரமும் சரியக் கூடிய நிலை ஏற்படு மோவென்று கருதியே, திடீரென்று அவசர அவசரமாக தங்கள் கருத்துப்படியே மோடியை பிரதமர் வேட்பாளர் என்று  அறிவித்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.

போட்டி காங்கிரசுக்கும் - ஆர்.எஸ்.எசுக்குமே!

மத்திய இணையமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல்,

தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எசு.க்கும் தானே ஒழிய, மற்றபடி காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும்கூட அல்ல. அதுதான் உண்மை என்று கூறியுள்ளது 100-க்கு 100 சரியான கணிப்பு ஆகும்!

பாபர் மசூதியை இடித்தவர்கள், மீண்டும் நாட்டில் மதவெறியைப் பரப்பி, சிறுபான்மையிரை மிரட்டி, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை - சமூக நீதியைப் பறித்து, மீண்டும் இராமர் கோவில் கட்டுவது தொடங்கி நாட்டை இந்து நாடாகவே ஆக்கி, ஜனநாயகத்திற்கு மெல்ல விடை கொடுத்து பாசிசத்தினை அரியணை ஏற்றி, மனுதர்மத்தையே இன்றைய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மூலதாரச் சட்டமாக்கும் முயற்சியின் முன் னோடிச் செயல்களில் முதன்மையானதே மோடியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளதன் ரகசியம்.

பிஜேபியின் பின்புலத்தில் பெரு முதலாளிகள்

அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவரும், சமூகநீதியில் உறுதியான நிலைப்பாடு கொண்டவருமான சரத்யாதவ் அவர்கள் மோடி பற்றி மற்றொரு முக்கிய பின்னணியையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்!

பன்னாட்டு பெரு நிறுவனங்களின் (Multinationals) நெருக்குதல் காரணமாகவே மோடி முன்னிறுத்தப் பட்டுள்ளார் என்று விளக்கியுள்ளார்.

அம்பானிகள், டாட்டா போன்ற இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் மற்றும் வெளியே தெரியக் கூடாத பன்னாட்டு திமிங்கலங்கள் திணித்துள்ளதன் விளைவே மோடி முன்னிறுத்தப்படுவது.

பணம் ஆறாக ஓடும் பிரச்சாரத்தில்; அது திருச்சியிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது.

தினம் தினம் ஒவ்வொன்றாக அள்ளி விட்டு, பெருங் கூட்டத்தைக் காட்டி, தமிழ்நாடே ஏதோ காவிமயமாக் கப்பட்டு விட்டது போல், பார்ப்பன பனியா - ஊடகங் களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறதே!

ஹிந்து ராஷ்டிரம் - எச்சரிக்கை!

பன்மதங்கள், பன்மொழிகள், பல கலாச்சாரங்கள் - பண்பாடுகள் நிலவும் நாட்டில் ஒரு மதம் - ஹிந்து மதம் ஒரு மொழி - சமஸ்கிருதம் ஒரு கலாச்சாரம் - பார்ப்பனீய  ஆரிய சனாதன மத கலாச்சாரம்,

ஒரு சட்டம் - மனுதர்மம்

(குஜராத்தில் பள்ளிப் பாட புத்தகங்களில் இவை பாடமாக வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன)

18 வயதுள்ள வாக்காளர்களான இளைஞர்கள்  - வெறும் இந்த விளம்பர வெளிச்சம் இணையதள மத் தாப்புகள் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்குப் போட்டே காவிக் கூட்டம் இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி செயல்படும் நிலை!

விவரமற்றவர்களா மக்கள்?

மக்கள் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் அல்லர்; அப்பாவி இளைஞர்களுக்கு ஹிந்துத்துவா ஆபத்தை விளக்குவதோடு, குஜராத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற மாயத் திரையையும் கிழித்து, ஏழை - எளிய விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, பெரு முதலாளிகள் வசம் ஒப்படைத்து, அவர்களை தெருப் பிச்சைக்காரர் களாக மாற்றுவதா வளர்ச்சி? என்று  கேட்கும், மைனா ரிட்டி சமூகத்தை அடியோடு வாழ்வுரிமையற்றவர்களாக்கி, ஒரு வகை கொத்தடிமைகளாக்கிட முயலுவது தானா வளர்ச்சி? (Growth) அப்படியும் அங்கு - மோடி ஆளும் குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆந்திராவை விட, கர்நாடகத்தைவிட, மற்ற பல மாநிலங்களைவிட மிக அதிகம் என்பதை ஏடுகளில் வந்த புள்ளி விவரங்கள் மூலம் விளக்குவது அவசர அவசியமாகும்!

தேன் தடவிய விஷ உருண்டை இது என்பதை இடையறாத பிரச்சாரத்தின் மூலம் இணைய தளங்களில் தொடங்கி, எல்லா ஊர்களிலும் பிரச்சாரமான பாசீசப் படையெடுப்பிலிருந்து, இந்திய நாட்டின் மதச் சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தை காப்பாற்றிட கட்சிகளை மறந்து முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும்.

மாட்டுச் சாணிக்குப் பயந்து மனிதச் சாணியா?

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால், மாட்டுச் சாணிக்குப் பயந்து மனுஷ சாணியில் காலை வைத்து விடக் கூடாது! எச்சரிக்கை!

       -------------- ------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.சென்னை  
20.9.2013

53 comments:

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
வெள்ளி, 20 செப்டம்பர் 2013 16:35
E-mail Print

வலு - பளு

செய்தி: தேசத்திற் குத் தேவை வலுவான தலைமை! - நரேந்திரமோடி

சிந்தனை: ஒரே அடியாக சிறுபான்மை யினரை ஒழித்துக்கட்டும் அளவுக்கு வலுவானதாக பளுவானதாக இருக்க வேண்டும் - அப்படித் தானே?

தமிழ் ஓவியா said...


திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக!


தந்தை பெரியார் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகத்தான சமூகப் புரட்சியாளர் ஆவார். கால் நூற்றாண்டு காலம் தமது பொது வாழ்க்கைக்கான தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளியைத் தேர்ந்தெ டுத்து, தமிழகம் முழுவதும் சமூக மாற்றத்திற்கான பெரும் பணிகளை மேற்கொண்டார்.

தமிழக மக்கள் தந்தை பெரியார் அவர்களை தத்தம் குடும்பத் தலைவராகவே கருதிப் போற்றி வருகிறார்கள். அந்த வரலாற்று நாயகரை நினைவு கூரும் வகையில், அவர் தமது தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றிய திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுமாறு மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திராவிடர் கழக மண்டல தலைவர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (திருச்சி - 19.9.2013)

தமிழ் ஓவியா said...


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்



தி.மு.க. தலைவர் கலைஞர் ஆதரவு

சென்னை, செப்.20- திருச்சி பன்னாட்டு விமான நிலை யத்திற்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி: திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டு மென்று தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

கலைஞர்: திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வேண்டுகோளை முழு மனதோடு ஆதரிக்கின்றது. மத்திய அரசு உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் முன்வைத்து வாதிட வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு: கலைஞரின் இந்த அறிவிப்புக்கு நன்றி!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


கழகக் குடும்பத்தவர்க்கு முக்கிய வேண்டுகோள்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது சுற்றுப் பயணம் கடந்த ஓராண்டுக் காலத்தில் மிக அதிகமாக உள்ளது. ஒரே நாளில், பல ஊர்களில், பல நிகழ்ச்சிகள் என்று இருப்பது அவரது உடல் நலப் பாதுகாப்புக்கும், அவர் எழுத வேண்டிய எழுத்துப் பணி, நிர்வாகப் பணிகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைகளாக அமைந்து விடுகின்றன.

கழகக் குடும்பத்தினரைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவே கேட்டவுடன் தனது தொல்லைகள் பற்றிக் கவலைப்படாது, எங்களையும் மீறி நிகழ்ச்சிகளுக்கு அவர் ஒப்புக்கொண்டு விடுகின்றார்.

எனவே, தோழர்கள் ஒரு நாள் ஒரு நிகழ்ச்சி மட்டுமே என்கிற அளவில், மிகவும் அவசியமானால் உள்ளூர் அருகில் உள்ள ஊர் என்றால் திருமணம் போன்றவைகளுடன் நிறுத்தி, ஒழுங்குபடுத்திட ஒத்துழைக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,

- வீ. \அன்புராஜ்
சுற்றுப் பயணப் பொறுப்பாளர்

தமிழ் ஓவியா said...


கழகப் பொறுப்பாளர்களுக்கு... கடப்பாடுகள் பன்னிரெண்டு!


1. வாரத்தில் 5 நாள்கள் உங்கள் குடும்பத்திற் காகச் செலவிடுங்கள். இரண்டு நாள்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளாவது இயக்கத்திற்காகச் செலவிடுங்கள்!

2. தலைமைக் கழகம் - மண்டல அமைப்பு - மாவட்ட அமைப்புகள் - நகர, ஒன்றிய, கிளைக் கழக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (நெட்ஒர்க்) சிறப்பாக இருந்தால் இயக்கப் பணிகளும் சிறப்பாக இருக்கும்.

3. நம் தோழர்கள் நம் பலம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். வரலாற்றையே திருப்பிப் போட்ட ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

4. பதவி பக்கம் போகாமல், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாத ஓர் இயக்கத்தில், ஒரே தலைவர் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களின் கொள்கையில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரே தலைமை, ஒரே இயக்கம், ஒரே கொடியின்கீழ் நாம் செயலாற்றிக் கொண்டிருக் கிறோம். அதற்காக நம் முதுகை நாமே தட்டிக் கொண்டு பெருமைப்படவேண்டும்.

5. தந்தை பெரியார் மறைந்து 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்; இருக்கிறது; பல மாகவே இருக்கிறது - யாராலும் நம்மைப் புறக் கணிக்க முடியாது என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நமது சாதனைகள் அனேகம்! அனேகம்!!

6. நமக்குக் கொடுக் கப்பட்டுள்ள பொறுப் புக்குத் தக்க வகையில் நாம் கடமையாற்றுகி றோமா என்பதுபற்றி நமக்கு நாமே எடை போட் டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. நாம் விட்டுச் செல்லும் எச்சம் என்பது என்ன? நாம் வாழ்ந்த காலத்தில் இந்த இயக்கத் துக்காக, அதன் கொள் கைகளுக்காக என்ன செய்தோம் என்பதுதான் நம் மறைவிற்குப் பிறகு நிலைத்து நிற்கக் கூடிய எச்சம் ஆகும்.

8. நமது இயக்கத்தைப்பற்றி தந்தை பெரியார் சொன்னது - நமது இயக்கம் என்பது பனைமரம் மாதிரி; பனை மரத்துக்கு யார் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார்கள்? அது தானாகவே எந்தச் சூழ லிலும் வளரவில்லையா? பலன் கொடுக்கவில்லையா?

அதேபோன்றுதான் நம் மக்களுக்காக உயிருக்கு மேலான தேவையான இயக்கம் நமது கழகம் - அதனை நம் மக்கள் கைவிடமாட்டார்கள் - நேரி டையாக முன்வராவிட்டாலும், மன ரீதியாக, மறை முகமாகவேனும் இந்த இயக்கத்தை மதிப்பார்கள் - உதவுவார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் அணுக்கமான மக்கள் தொடர்பு! தொடர்பு!!

நாம் நிதி கேட்டால் மக்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள் - நாம் ஏன் தயங்கி நிற்கவேண்டும்?

9. பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், அந்தப் பொறுப்புக்கான பணிகளை பல்வேறு காரணங் களால் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் தாராளமாக விலகிக்கொண்டு, அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கலாம். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

10. நாம் மட்டும் கொள்கைக்காரர்களாக இருந்தால் போதாது - நம்மைச் சார்ந்தவர்கள் - குடும்பத்தவர்கள் - உற்றார் உறவினர்கள் - நண்பர் கள் - ஏன் இந்த உலகமே பெரியார் கொள்கை மயமாகவேண்டும்.
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்பது மெய்ப் படவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும்.

11. மதவாத சக்திகள் மருட்டுகின்ற இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுமையும் தந்தை பெரியார் கொள்கை - தத்துவம் சூறாவளியாகச் சுழன்றடிக்கப்படும் காலகட்டம் இது.

12. தோழர்களே, செயல்படுவீர்! உற்சாகமாகச் செயல்படுவீர்!!

- திராவிடர் கழக மண்டல தலைவர், செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் - திருச்சி 19.9.2013

தமிழ் ஓவியா said...


எனக்குக் கவலையில்லை



யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும். - (குடிஅரசு, 15.4.1928)

தமிழ் ஓவியா said...


இதுதான் இடதுசாரி சிந்தனையா?


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கேரளா வில் அமைச்சராக (கம்யூனிஸ்டு) இருந்தவரும், இடதுசாரி சிந்தனையாளர் என்று பொதுவாகக் கூறப்படு வருமான திரு. வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், 2014ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், பிஜேபியின் பிரதமருக் கான வேட்பாளராக, நரேந்திரமோடி முன்னிறுத் தப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், பிரதமர் பொறுப்புக்கு அவர்தான் தகுதியானவர் என்றும், தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் செயல் பாடுகள், அவரது நிர்வாகத் திறமையை, தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள, அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிர்வாகத் திறமை உடையவரா நரேந்திர மோடி? என்பது ஒரு புறம் இருக்கட்டும்; அந்த நிருவாகத் திறமை எதற்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

அவர் நிருவாகத் திறமையின் இலட்சணம் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது தானா? அவருக்குச் சம்பந் தமே யில்லை என்று கூறப் போகிறார்களா?

அதுவுண்மை என்றால், ஒரு முதல் அமைச்சருக்கே சம்பந்தம் இல்லாமல் பல்லாயிரம் பேர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்றால், செயல்படாத ஒருவர் முதலமைச்சராக இருந்தார் என்று பொருள் படாதா?

ஓர் உண்மையைத் திட்டமிட்டு, மறைக்கப் பார்க்கின்றனர். நரேந்திரமோடி என்ற முதல் அமைச்சர், தன் நிருவாகத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதை மறைக்கப் பார்க் கிறார்கள்.

அறிவு நாணயத்தோடு அவர் செயல்பாடு இருந்தால், இவ்வளவு பேரழிவுக்குக் காரணமாக இருந்ததற்குத் தான் பொறுப்பேற்ற, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையைத் தூண்டுவதற்கு, ஒரு முதல் அமைச்சரே அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஏற்பாடு செய் தார் என்றால், இதனை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?

பிஜேபி சட்டமன்ற, உறுப்பினர்களின் வாக்கு மூலத்தை தெகல்கா ஊடகம் பெற்று அம்பலப் படுத்தி விடவில்லையா?

எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு என்ற அய்ன்ஸ்டின் தேற்றத்தைக் கூறி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை நியாயப்படுத்தியதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அறிய மாட்டாரா? மோடியின் பின் புலத்தில் பணத் திமிங்கலங்கள் இருப்பது கூடவா மார்க்சியவாதி என்று கூறப்படுபவருக்குப் புரியாது?

குஜராத் மாநிலத்தை, இந்துத்துவாவின் பரிசோ தனை சாலையாக ஆக்கி, அதில் வெ(ற்)றி பெற்ற நிலையில் அதே பாணியை ஒடிசா மாநிலத்தில் அரங்கேற்றவில்லையா? இதனை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டலாமா?

குஜராத் நிகழ்வினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே!

இன்றைக்குக்கூட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நரேந்திரமோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருவது எந்த அடிப்படையில்?

இராமச்சந்திர குகா, மார்க்கண்டேய கட்ஜூ (இவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிதான்) பொருளாதார மேதை - நோபல் பரிசு பெற்ற அமர்த் தியா சென் போன்றவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்துள்ள நிலையில், வி.ஆர். கிருஷ்ண அய்யர் இந்துத்துவா சக்திக்குத் துணை போவது கண்டிக்கத்தக்கது. இதுவரை அவர்மீது போர்த்தப்பட்டு இருந்த இடதுசாரி என்ற திரையை அவரே கிழித்துக் கொண்டு விட்டார் என்றே கருதப்பட வேண்டும்.

மோடிக்குப் பல்வேறு முகாம்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன திட்டமிட்ட வகையில்; இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய வாக்காளர்களே!

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும் தமிழுக்குத் துரோகமும்


ஆசிரியர் ஏங்கினால் வகுப்பறை தேங்கும் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் இப்போதோ நம் அன்னைத் தமிழும் சேர்ந்து ஏங்குகிறது தேங்கு கிறது. ஆம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தேர்வு வாரியத்திற்குக் கொஞ்சமும் அடிப்படை அறிவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியர்க்கு அடிப் படை அறிவு என்பது எதுவாக இருக்க வேண்டும்? தன்னுடைய பாடத்துறையில் போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அதுதான். ஆனால் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழுக்கு வழங்கப்படுகின்ற மதிப்பெண்களோ வெறும் 30 மதிப்பெண்களே. ஆங்கிலம் - 30, உளவியல் - 30, சமூக அறிவியல் - 60. எல்லாம் சரிதான். ஆனால் இதில் சமூக அறிவியல் பாடத்திற்கு ஏன் அதிக மதிப் பெண்கள்? இப்படி வைப்பதால் அந்தந்தத் துறைசார்ந்த ஆசிரியர் களுக்குத் தத்தம் துறை சார்ந்த பாடத்தில் எப்படி அறிவு பெருகும்? நாட்டம் வரும்? சமூக அறிவியல் பாடத்திற்குக் கொடுக்கிற அதே மதிப்பெண்களே அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்குத் தந்திருந்தால் தேர்வு வாரியத்தின் அறிவு நாணயம் விளங்கியிருக்கும். நாங்கள் தேர்வில் தோல்வியைக் கண்டது இதுதான் காரணம். இந்த மன நிலையில் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிப் போம்? தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவே இல்லை. குற் றாலத்தில் எங்கோ மணம் வீசுகிறதே என்பதற்குப் பதிலாக குற்றாலத்தில் என்கோமணம் வீசுகிறதே என்று தப்பிதமாகப் படிக்கும் எழுதும் அவலநிலையைப் பாரீர்!

TNPSC - தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்டித்துப் போராட் டம் கண்டு மீண்டும் முக்கியத்துவம் பெற்றுத்தரப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்விலும் தமிழுக்கு முக் கியத்துவம் வேண்டும். தமிழ்ப் படித்த வர்க்கு முக்கியத்துவம் மறுக்கப் படுகிறது. எல்லாம் இந்தப் பார்ப்பன ஆட்சியின் தொல்லை.

தமிழ்ப்படித்தவர்கள் முன்னேற முடிய வில்லை. முறையான தேர்வு முறையே இது இல்லை. இந்தக் கொடுமை போதாதென்று விடைத் தாள் வேறு மோசடி. இப்போது நடந்து முடிந்த தேர்வையும், அதன் முடிவையும் உடனே ரத்து செய்ய வேண்டும். முறையான தேர்வு முறை யுடன் (தமிழுக்கு முக்கியத்துவம் - 60 மதிப்பெண்) அல்லது அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்கு - 60 மதிப்பெண்கள் (அல்லது) மீண்டும் பதிவு மூப்பு அடிப்படையில் பின் பற்றிட வேண்டும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுக்கத்தான் வேண்டும்

தங்களை விட்டால் நாதி ஏது?

தமிழாசிரியர்களுக்கு நல்லதொரு நீதியைக் கூடிய விரைவில் பெற்றுத் தர வேண்டும் என எதிர்ப் பார்க்கி றோம். நல்ல முடிவுக்காகக் காத்தி ருக்கிறோம்.

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலை யாய பற்று மொழிப்பற்றே. மொழிப் பற்று இல்லாதாரிடத்துத் தேசப் பற்றும் இராது என்பது உறுதி.

தேசம் என்பது மொழியை அடிப் படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால்,

தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த் தனை.

- தந்தை பெரியார் (10-ஆம் வகுப்பு தமிழ் புத்தகம், பக்கம் 31)

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தமிழ் ஓவியா said...

மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
இது முதற்கட்டம்தான்; தமிழகம் முழுவதும் விவசாயிகளைத் திரட்டி - அரசியலுக்கு அப்பாற்பட்டு திராவிடர் கழகம் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தும்!
தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, செப்.20- தமிழகம் முழுவதும் விவசாயி களைத் திரட்டி, மிகப்பெரிய போராட்டத்தினை, அரசியலுக்கு அப்பாற்பட்டு திராவிடர் கழகம் நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

கருநாடகத்தில் காவிரி நதியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதைத் தடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட் டிற்கான சட்டத் திருத்தம் உடனே தேவை! என்பதை வலியுறுத்தியும் தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 19.9.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

பேட்டி வருமாறு:

காவிரி நீர் பாசனப் பகுதி விவசாயிகளுடைய பிரச்சினை என்பது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்தில் ஏற்கெனவே குறுவை சாகுபடியும் இல்லாமல், சம்பா சாகுபடியும் இல்லாமல், மீண்டும் ஒருமுறை சம்பா பிழைக்குமா? என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு இருக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்படுவதுகூட இரண்டு மாதங்கள் தாமதமாகத் திறக்கப்பட்ட சூழ்நிலை யிலும்கூட, இன்னமும் நாகை, திருவாரூர் போன்ற பகுதிகளில், கடைமடை பகுதிகளுக்கு - விவசாயி கள் வேதனைப்படக்கூடிய அளவிற்கு அங்கு நீர்வரத்துப் போய்ச் சேரவில்லை.

மராமத்துப் பணிகளைச் செய்யாமல்...

இதற்கிடையில், அரசாங்கத்தினுடைய முன் யோசனை இல்லாத ஒரு நிலையின் காரணமாக, ஏற்கெனவே, அங்கு முளைத்திருக்கக்கூடிய, பல்வேறு தரிசுகளாக்கப்பட்டிருக்கக் கூடிய - ஆற்றில் இருக்கக்கூடிய செடி கொடிகள், மற்றவை அனைத்தையும் அவர்கள் அகற்றி, கால்வாயைத் தூர் வாரி இருந்தால், பல நேரங்களில், இந்தத் தண்ணீர் கடைமடை வரையில், மிகவும் கஷ்டப் பட்டு, போராடி, இந்தப் போராட்டத்தினால் வந்த விளைவைவிட, இயற்கை ஒத்துழைத்ததின் கார ணத்தினாலே, அங்கு பெய்த மழையின் காரணமாக - அணைகள் எல்லாம் நிரம்பி, மேட்டூர் அணை நிரம்பக்கூடிய அளவிற்கு தண்ணீர் திறந்தும்கூட - விடியல் சரியாகக் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடிய கொடுமையான நிலை, இன்னும் கடைமடை விவசாயிகளுக்கு இருப்பது வேதனைக் குரிய ஒன்று.
அதற்குக் காரணம், அணையிலிருந்து திறக்கப் பட்ட தண்ணீர் - கால்வாய் பராமரிக்கப்பட்டு, முன்கூட்டியே மராமத்து பணி செய்யப்பட்டிருந் தால், இந்தக் கொடுமையான நிலை ஏற்பட்டு இருக்காது.

இனிமேலாவது, அந்த முன்யோசனையற்ற அந்த நிலை இல்லாமல், அரசாங்கம் நிலத்துறையிலே சர்வே எடுத்து, குறிப்பாக எல்லா இடங்களிலும் கால்வாய்களைச் சுத்தப்படுத்தி, ஆறுகளே அடை யாளம் தெரியாத அளவிற்கு - நீடாமங்கலம் மற்றும் திருவாரூர் பகுதியிலே நான் வந்தபொழுது, நேரிலேயே அதைக் காண நேர்ந்தது. ஆகவே, அந்த நிலைகள் எல்லாம் மாற்றப்படவேண்டும்.

அதற்கடுத்து, மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, நடுவர் மன்ற தீர்ப்பு நமக்குக் கிடைத்து அய்ந்தாண்டுகளுக்கு மேலாக ஓடிவிட்டது. நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு கிடைத்தாலும்கூட, அந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டால்தான் அதற்குச் சட்ட வலிமை உண்டு என்ற நிலையில், அது அரசிதழில் வெளி யிடப்படாமல், காற்றோட்டிக் கொண்டே இருந் தார்கள்.

பிறகு, அதற்காகப் போராடி, உச்சநீதிமன்றம் கடைசி நாள் - இறுதி கெடு வரையில் இழுத்துக் கொண்டிருந்து, பிறகுதான் அது அரசிதழில் வெளியிடப்பட்டது.

வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

அதற்குப் பிறகு முறையாக நடக்கவேண்டியவை, அதற்காக ஒரு கண்காணிப்புக் குழுவை - நிபுணர் கள் குழுவை அமைக்கவேண்டும். அந்த நிபுணர்கள் குழு - மிக முக்கியமான பிரச்சினைகள் வரும் பொழுது, நீர் பங்கீடு முறையில் அவ்வப்பொழுது பிரச்சினைகள் ஏற்படாமல், குறுவை சாகுபடியாக இருந்தாலும், சம்பா சாகுபடியாக இருந்தாலும், காவிரி டெல்டா பகுதிக்கு அவ்வப்பொழுது கிடைக்கவேண்டிய நீர் சுலபமாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை மேற்பார்வையிட்டு, அதிகாரிகள் குழுவும், கண்காணிப்பு குழுவும் இருக்கவேண்டும்.

எனவே, கண்காணிப்புக் குழு, மேற்பார்வைக் குழு இரண்டையும் அமைப்பதற்கு, இத்தனை ஆண்டுகள் ஆகியும்கூட - மத்திய அரசு கால தாமதம் செய்துகொண்டு இருப்பது மிகவும் வன் மையாகக் கண்டிக்கத்தக்கது. நம்முடைய மாநிலத் திலே மழை பெய்துவிட்டால், உடனே இந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டதுபோல, அவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பொருத்தமில்லாத கேள்வி!

தமிழ் ஓவியா said...

அதுமட்டுமல்ல, இப்பொழுது இது ஒரு நிரந்தரமாக அமைப்பாக இருக்கின்ற காரணத்தால், இப்பொழுது மழை பெய்துவிட்டது, விவசாயி களுக்குத் தண்ணீர் கிடைத்துவிட்டது; ஆகவே இப்பொழுது என்ன அவசரம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளேகூட கேட்ட கேள்வி, பொருத்தமில்லாத ஒரு கேள்வியாகும்.

ஆகவே, உடனடியாக இந்த அடிப்படையிலே, சிறப்பாக கண்காணிப்புக் குழுவை, மேற்பார்வை குழுவை அவர்கள் நியமனம் செய்யவேண்டும். அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், இந்தத் தீர்ப்பைப்பற்றியே கவலைப்படாமல், இந்தத் தீர்ப்பினுடைய விளைவுகளிலிருந்து கருநாடகம் தப்பித்துக் கொள்வதற்காக - திசை திருப்புவதற்காக - மூன்று அணைகளை நீர் மின்விசை திட்டங்கள் என்று சொல்லி - மத்திய அரசினுடைய அனுமதி பெறாமலேயே - கருநாடக அரசு கட்டிக் கொண் டிருப்பதை - மத்திய அரசு கண்டும், காணாமல் இருப்பது, தமிழக விவசாயிகளினுடைய வயிற்றில் அடிக்கக்கூடிய - அவர்களுடைய விவசாயத்தையே தடுக்கக்கூடிய - நிரந்தரமாக சாகுபடி செய்ய முடி யாத அளவிற்கு இருக்கக்கூடிய திட்டங்களாகும்.

கருநாடகத்திற்கு அதிகாரம் கிடையாது!

ஆகவேதான், கருநாடக அரசு அணைக்கட்டு கட்டுவதை உடனடியாக மத்திய அரசு குறுக்கிட்டு - தலையிட்டு, கருநாடக அரசினைக் கண்டித்து அதனை நிறுத்தவேண்டும். எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று கருநாடகம் சொல்வதற்கு சட்டத்தில் இடமே கிடையாது.

ஏனென்றால், உச்சநீதிமன்றம்கூட இதைத் தடை செய்வதைவிட, மத்திய அரசே தடை செய்ய வேண்டும். நிரந்தரமான குழு இருந்தால், இந்தத் தீர்ப்பினைக் கொடுத்திருக்கும். நாம் ஒவ்வொரு முறையும் மத்திய அரசினை வற்புறுத்தவேண்டிய அவசியம் இருக்காது.

கண்காணிப்புக் குழு, மேற்பார்வைக் குழு என்ற இரண்டு குழுவினை அவசர அவசரமாக நிரந்தர மாக நியமனம் செய்வது ஒரு தீர்வு.

அதேபோல, கருநாடக அரசு கட்டும் அணை களைத் தடுத்து நிறுத்துவது என்பது மிக முக்கிய மானது. மத்திய அரசினைப் பொறுத்தவரையில், இதனை செய்யவேண்டிய கடமை இருக்கிறது. மாநில அரசு, கால்வாய்களை தூர்வராமல், மராமத்துப் பணிகளை செய்யாமல், பெரிய செடி, கொடிகள் வளர்ந்து ஆறுகளே மறைந்து போகும் அளவிற்கு டெல்டா பகுதிகளில் இருப்பது என்பது மிகமிகத் தவறான ஒரு மெத்தனம்.

வழக்கமாக ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய நீர், இப்பொழுது இரண்டு மாதங்கள் கழித்துத் திறக்கப்பட்டும், அந்த நீர், கடைசி வரையில் கடைமடை பகுதிகளுக்குச் செல்லவில்லை என்ற கவலை இருக்கிறதே, அது விவசாயிகளினுடைய உண்மையான கவலை.

ஏற்கெனவே, சம்பா சாகுபடியினை நம்பி, மேட்டூர் நீர் வருகிறது என்பதை நம்பி, கையில் உள்ளதை அனைத்தையும் செலவிட்டு, விவசாயம் செய்துவிட்டு - இப்பொழுது ஆங்காங்கே திட்டுக் கள்போல ஆகியிருக்கக்கூடிய சூழ்நிலை இருக் கிறது.

தமிழ் ஓவியா said...

விவசாயிகளின் வாழ்வுரிமை பிரச்சினை!

ஆகவே, இதனைக் கண்டிக்கின்ற வகையிலே, கருநாடக அரசு அணைகள் கட்டுவது தடுக்கப் படவேண்டும், சட்ட ரீதியாக. தமிழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துணை பேரும் இப்பிரச்சினையில் ஒருமித்தக் குரல் கொடுக்க வேண்டும். கருநாடகத்துக்காரர்கள் அத்துணை பேரும் எப்படி ஒன்றாகக் குரல் கொடுக்கிறார் களோ, அதே உணர்வு தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றிக்கொண்டு, யார் பக்கம் அரசியல் லாபம் வரும் என்று எண்ணக்கூடாது. காவிரி பிரச்சி னையை தயவு செய்து அரசியல் பிரச்சினையாக நோக்காமல் - விவசாயிகளினுடைய வாழ்வுரிமை பிரச்சினையாக நோக்கவேண்டும். அதைத்தான் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

முதன்முதலாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று, எம்.ஜி.ஆர். அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே சொன்ன பெருமை, திராவிடர் கழகத்தையே சாரும். நாங்கள் பெருமையடித்துக் கொள்வதற்காக இதனைச் சொல்லவில்லை. இந்தக் கருத்தினை அப்பொழுது பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்றைக்கு அது இறுதித் தீர்ப்பு வரை வந்து, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்லக்கூடிய நிலை இருக்கக்கூடாது; ஆகவே, இதனை மாற்றி அமைக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தத்தான் இந்தப் போராட்டம்.

உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு

அதோடு, எய்ம்ஸ் என்று சொல்லக்கூடிய மத்திய அரசாங்கத்தின் சார்பில் நடைபெறக்கூடிய டில்லி யில் இருக்கக்கூடிய மருத்துவ விஞ்ஞானக் கழ கத்தில், உயர்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது - தேவையில்லை என்று உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பு - அரசியல் சட்டத்திற்கு விரோத மானதாகும் - அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டி ருக்கின்ற இட ஒதுக்கீட்டிற்கு விரோதமான ஒரு தீர்ப்பாகும்.

அதனைச் சுட்டிக்காட்டி, நாடாளு மன்றத்தில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், தி.மு.க. உள்பட, சரத்யாதவ் உள்பட, காங்கிரஸ் உள்பட அனைவரும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

அரசியல் சட்ட திருத்தம் வரவேண்டும்!

மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய ப.சிதம் பரம் அவர்கள் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதுகூட சொன்னார்கள், அரசியல் சட்ட திருத்தம் வரும் என்று சொன்னார்கள்.
மறுஆய்வு, சீராய்வு என்பது எப்பொழுதுமே மாற்றி சொல்லப்பட்டது கிடையாது. ஆகவே, இட ஒதுக்கீட்டுப்படிதான் நடக்கவேண்டும்.

அதற்கு நிரந்தரப் பாதுகாப்பு வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் மீண்டும் திருத்தப்படவேண்டும். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக் குறுதியை உடனடியாக செய்யவேண்டும்.

இதிலே வரவேற்கத்தகுந்த ஒரு அம்சம் என்ன வென்றால், இந்த இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றாமலேயே இடங்களை நிரப்ப முயற்சி செய்தார்கள், அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அது பாராட்டத்தகுந்தது. அது நிரந்தரமாக்கப்பட வேண்டுமானால், அரசியல் சட்டத் திருத்தம் வரவேண்டும்.

இந்த இரண்டு முக்கிய பிரச்சினைகளை, ஒன்று சமூகநீதிப் பிரச்சினை; இன்னொன்று காவிரி நீர்ப் பிரச்சினை. ஆகவே இந்த இரண்டு பிரச்சினைகளை முன்னிறுத்தித்தான் இந்தப் போராட்டம்.

இது முதல்கட்டம்; இப்பிரச்சினைகள் முடி விற்கு வரவில்லையானால், இது தமிழகம் முழுவதும் விவசாயிகளைத் திரட்டி, மிகப்பெரிய போராட் டத்தினை, அரசியலுக்கு அப்பாற்பட்டு திராவிடர் கழகம் நடத்தும், நடத்தும் என்று சொல்லி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. (மோடி) வெறும் முகமூடிதான்! அதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிருந்தாகரத் காட்டம்

திருப்பூர், செப்.20- திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதிபாசு நூற் றாண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் விழாப் பொதுக்கூட்டம் 19.9.2013 மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகரத் பேசியதாவது:

அதிகாரத்தை ஏழை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியவர் ஜோதிபாசு ஆவார். அவர் செயல்படுத்திய கொள்கைகளை எதிர்க்கட்சியினர்கூட குறைகூற முடியாது. 1946 ஆம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் பஞ்சாயத்து அமைப்பினை ஏற்படுத்தி, அதிகாரத்தை அதிகாரபர வலாக்கினார்.

ஜோதிபாசுவின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான பாடங்களை நாம் கற்கவேண்டியுள்ளது.

பிஜேபி (மோடி) என்பது வெறும் முகமூடிதானே தவிர, இதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் ஆகும்.
மோடி தொழிலாளி என்ற வார்த்தையை வாயால்கூட உச்சரிக்காதவர். தொழிலாளிகளைப்பற்றிய எண்ணமும், சிந்தனையும் அறவே இல்லாதவர்; ஆனால், இப்படிப்பட்ட வருக்கு திருப்பூரில் எங்கு பார்த்தாலும் கட்-அவுட்கள் இருப்பது தொழிலாளர்களுக்கு இழிவாகும்.

பெருமுதலாளிகள் பெருவாரியாக மோடியை விரும்புகிறார்கள். தம்பட்டம் அடிக்கிறார்கள்.ஆனால், திருப்பூர் போன்ற தொழிலாளர் நிறைந்த பகுதியில் மோடி ஏற்கப்படமாட்டார்.

- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்


உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும், எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை முன் னேற்ற வழி வகுக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொ டுக்கச் சொல்ல முடியாது.

சேற்றிலே சந்தன வாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதி னான்கு லோகத்தைக் காட் டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாறாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவு களை மீறக்கூடா தென் றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண் டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ் திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 135 ஆவது பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் பேராசிரியர் வெள்ளையன் விருது வழங்கும் விழா!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 135 ஆவது பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் பேராசிரியர் வெள்ளையன் விருது வழங்கும் விழா!
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் வழங்குவதைவிட பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில்- சான்றிதழ் வழங்குவதுதான் மகிழ்ச்சியளிக்கிறது:வேந்தர் கி.வீரமணி

வல்லம், செப்.20- பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் வழங்குவதைவிட, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் சான்றிதழ் படிப்பில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுதான் எனக்கு அளவிலா மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் வேந்தர் கி.வீரமணி.

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழாவும், பேராசிரியர் வெள்ளையன் விருது வழங்கும் விழா வும் பல்கலைக்கழக பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் (19.9.2013) மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

விழாவிற்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர் எம்.தவமணி தலைமை வகித்தார். பதிவாளர் முனைவர் மு.அய்யாவு முன்னிலை வகித்தார். பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் பழனி.அரங்கசாமி வரவேற்று உரையாற்றினார்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன் னிட்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் களுக்கிடையே பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும் என்ற தலைப்பிலும், பெண்ணிய விடுதலைக்கு பெரியார் ஆற்றிய தொண்டு என்ற தலைப்பிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்ற போட்டி யில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசினை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் விழா மேடையில் வழங்கி, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் 2012 ஆம் ஆண்டு சான்றிதழ் படிப்பில் தேர்வு பெற்ற 30 பேர்களுக்கு வேந்தர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றமாணவர்களை யும், பேராசிரியர் பெருமக்களையும் விழாவில் மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ஊக்கப் படுத்தினார்கள்.

எனக்கு அளவிலா மகிழ்ச்சி!

பல்கலைக்கழக வேந்தர் அவர்கள் குறிப்பிடும் போது, நான் பலமுறை இங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் வழங்கியதை விட மகிழ்ச்சி தருவது பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சான்றிதழ் படிப்பில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுதான் எனக்கு அளவிலா பெருமகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.

வேந்தர் அவர்கள், விருது பெறும் நாயகர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் அவர்களின் சமூகப்பணி, இலக்கியப் பணி மற்றும் வரலாற்று ஆய்வு ஆகிய பணிகளைப் பாராட்டி பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில், பொன்னாடை அணிவித்து, பேராசிரியர் வெள்ளையன் விருதினை வழங்கி, பண முடிப்பை பரிசாக அளித்துப் பாராட்டிச் சிறப் பித்தார்.

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.30 லட்சம் வழங்கிய மதுரை ஆசிரியர் ராமசாமி!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியை சுந்தரி வெள் ளையன் அவர்கள் ரூ.50 ஆயிரத்தினை பல்கலைக் கழக வேந்தரிடம் வழங்கி மகிழ்ந்தார்கள். மதுரையிலிருந்து வருகை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெரி யார் பெருந்தொண்டர் ராமசாமி பெரியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச் சியைக் கண்டு, வியந்து பாராட்டி, இக்கல்வி நிறுவனங்கள் மேலும் மேலும் சிறப்பாக நடைபெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, அந்நிறுவனங் களின் வளர்ச்சிக் காக ரூ.30 இலட்சத்திற்கான காசோலையை வேந்தர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

நிதி வழங்கிய பெருமக்கள் பேராசிரியர் சுந்தரி வெள்ளையன், பெரியார் பெருந்தொண்டர் ராம சாமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். பேராசிரியர் வெள்ளையன் விருதினை பெற்றுக் கொண்டு பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் தமது ஏற்புரையை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தர் மிகச் சிறப்பான தொரு நிறைவுரையை, விருது வழங்கி பாராட்டுரையை வெகு சிறப்பாக ஆற்றி னார்.

விழாவின் தொடக்கமாக குடந்தை அறிவு பரத நாட்டியக் குழவின் பரதநாட்டியம் நடை பெற்றது. நடனத்தில் மிக முக்கியமானதும் கண் டோரை வியப்படையச் செய்த நிகழ்வுமான மண் பானையை தலைகீழாக கவிழ்த்து வைத்து, அப்பானையின் மீது ஏறி நின்று ஆடிய, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில் நுட்பவியல் முதலாமாண்டு பயிலும் மாணவி கு.அறிவுவிழியின் பரதநாட்டியத் திறமை மாணவர் களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனை வரும் கரவொலி எழுப்பி சிறப்பித்தார்கள்.

இயந்திரவியல் துறை இரண்டாமாண்டு மாணவி செ.கில்டாகாவேரி நன்றி கூறினார். மேற்கண்ட நிகழ்வுகளை பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தினைச் சேர்ந்த பேராசிரியர் அதிரடி க.அன்பழகன் தொகுத்து வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


சரஸ்வதி கடாட்சமா?



கவிஞர் கண்ணதாசனையும் அவரது ஆற்றலையும் அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. சொல் வளமும், கருத்துக் கனிகளும் அவரது கவிதைகளில் மலிந்திருக் கும். தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு அவரின் பலவீனங்களைச் சுட்டெரித்து மறக்கச் செய்தது. அவரைப் பலவிதமாக போற்றிப் புகழ பலர் இருந்தாலும் திருவாளர் சோ சொல்லும் விதம் அலாதியானது. 28.8.2013 குமுதத்தில் கண்ணதாசன் சரஸ்வதி கடாட்சம் பரிபூர்ணமாகப் பெற்றவர் என்கிறார்.

பாராட்டுவதற்கு வேறு வார்த்தைகளா இல்லை? கவிஞரின் பெருமையை இப்படியா கொச்சைப்படுத்துவது? எந்த ஒரு கலையும், தொழிலும் அதனால் வரும் முன்னேற்றமும் கடும் உழைப்பும், முயற்சியும், தன்னம்பிக் கையும் இல்லாமல் வந்து சேராது. யானை வந்து மாலை போடுவதும் நடக்காது. கவிதை புனையும் திறமையையும், தமிழறிவையும் கண்ணதாசன் வளர்த்துக் கொண்டார் என்று தானே நாடு இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி கடாட்சமும் கலைமகளின் அருளாசியும் காரணம் என்ற வாதம் நியாயந்தானா?

இந்த நாட்டில் எத்தனையோ பேர் அறி வுத் தாகம் தணிக்க அலைந்து கொண்டிருக் கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறார் கள். நூல் நிலையங்களில் புத்தகங்களைத் தேடுகிறார்கள். அறிவு மட்டுமே போதாது என்று கருதுபவர்கள் கனக்கும் செல்வமும் நூறு வயதும் வேண்டும் என கோயில் பொம்மைகள் முன் விழுந்து கிடக்கிறார்கள். இத்தனை (பக்த) கோடிப் பேரைக் கண்டு கொள்ளாத கடவுளச்சி, கண்ணதாசனுக்கு மட்டும் கடாட்சம் காட்டியதை ஏற்க முடிய வில்லையே! அவர் மட்டும்தான் அவளுக்குச் செல்லப் பிள்ளையா? வீணை வாணி எழுப்பிய நாதம் நாட்டுக் கோட்டைக்கு மட்டும் தான் கேட்டதா? கடாட்சம் எனப் படும் கருணைப் பார்வை எந்த வயதில், எந்த நிலையில் கிடைத்தது என்று சொல்ல முடியுமா? பகுத்தறிவும் நாத்திகமும் பேசிக் கொண்டிருந்தாரே அதற்கு முன்பாகவா? இந்த மக்களைப் பார்த்து கருணை மறந்தே வாழ்கின்றார். தினம் கடவுளைத் தேடி அலைகின்றார் என்று பாடியதற்கு பிறகா? எண்ணில் அடங்கா கடவுள்களின் கடாட்சம் வழங்கும் உரிமையும், யோக்கியதையும் இவள் ஒருத்திக்கு மட்டும்தான் இருக்கிறதா?

மூதேவியரில் இன்னொருத்தியும் உண்டே. சக்தியின் வடிவம் ஆயிற்றே. அவள் மட்டும் சாமான்யப் பட்டவளா? ரௌத்திரம் பழகிக் கொள்ள பராசக்தியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? கொலை வெறியர்கள், கொலை பல செய்தவர்கள், ஆறுவது சினம் என்பதை அறியாதவர்கள் இவர்களில் யாரேனும் ஒருவர் அகப்பட்டால் போதுமே, பார்வதி கடாட்சம் பெற்றவர் என்று சொல்ல.

இத்துடன் முடிந்து போய்விடக்கூடிய சமாச்சாரம் இதுவல்ல. அடையாளப்படுத் தப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக் கிறார்கள். காசாய உடையில் சாமியார் கோலத்தில் பக்திப் பழமாக நடமாடும் பீடாதிபதிகள், ஆனந்தாக்கள், அறவழிச் சித்தர்கள், தேவநாதன்கள் என பெரும் பட்டியலே வளர்கிறதே. அர்த்த சாமபூஜை நடுஇரவு நாமாவளி, முழு இரவு ஜெபம் என்று கூறி அப்பாவி இளம் பெண்களை வரவழைத்து சீரழிக்கும் வன்கொடுமை அரங்கேறிக்கொண்டு தானே இருக்கிறது. கடவுளின் கடாட்சம் இன்றி இக்கபட வேட தாரிகளுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? இது போன்ற லீலா விநோதத்தில் எந்தக் கடவுளும் சோடை போனதில்லையே.

தசரதனுக்கு 64000 மனைவிகள்! இது என்ன சாதாரணம்! கிருஷ்ண பரமாத்மா வுக்கு 116108 மனைவிமார்களாம். இத்தனை பேர் போதாதென்று இன்னொருவனுடைய மனைவியான இராதையிடம் தான் பெரும் பொழுதைக் கழித்தானாம். சொல்வது அர்த்தமுன்ன இந்து மதம்! அப்படியானால் கிருஷ்ண கடாட்சம் என்ற ஒன்று இருந்து தானே தீரவேண்டும்? கன்னிவேட்டைக்காரர் கள், கற்பை களவாடுவோர், காமக் கொடூ ரர்கள் இவர்களுக்கா பஞ்சம்? அவர்களில் தகத்தகாய ஒருவரைக் கண்டறிந்து கிருஷ்ண கடாட்சத்துக்காரர் என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எளிதான காரியம் இல்லைதான். முயன்றால் முடியாதது உண்டோ?

எத்தனையோ கடவுள்களும், கடாட்சங் களும் இருந்தாலும் இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏதிலிகளின் எண்ணிக்கை சற்றும் குறைந்த பாடில்லை. குன்றின் மீது ஏறிக் கூறலாம். கஞ்சத் தனம், வஞ்சகம் சிறிதுமின்றி தாராளமாக வாரி வழங்கப்பட்ட கடாட்சம் ஒன்றே ஒன்றுதான். அதுவே குசேலர் கடாட்சம்!

தமிழ் ஓவியா said...


சர்வ சக்தியா? சர்வ சைபரா?

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

-- _ சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்


மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலையைக் கண்டித் தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். இந்திய சமூகத்தை பீடித்துள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போரில் தன் உயிரையே விலையாக தந்துள்ளார் மஹாராஷ் டிரா மாநிலத்தைச் சேர்ந்த. நரேந்திரா தபோல்கர்.

இப்படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பவர், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவர். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்னும் நச்சுப்பொருளை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து இயற்கையினை நாசப்படுத்துவதற்கு எதிராக போராடியவர். தமது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் போராடினார். சமூக நீதி நிலைத்திட, சமத்துவம் காண ஜாதிமறுப்புத் திருமணங்களை முன் னின்று நடத்திய சமூக போராளியான தபோல்கரின் கொலை ஒரு வெற்றி டத்தை உருவாக்கிவிட்டது. இது சமூக முன்னேற்றத்திற்கும் சமூக மாற்றத் திற்கும் மிகப்பெரிய இழப்பு.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 51 a(h), ஒவ்வொரு இந்திய குடியும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படை கடமை என உணர்த்துகிறது. பில்லி சூனியம், மாந்திரிகம், ஜோதிடம், ஏவல், போலி சாமியார்கள் போன்ற பல மூடநம்பிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு முரனாக உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் இயற்றக் கோருகிறோம். முற்போக்கு வாதிகளும் சீர்திருத்தவாதிகளும் தபோல்கர் கனவு கண்ட மூடநம்பிக் கைக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்பை காட்டிலும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. தபோல்கரின் படுகொலையை விசாரித்து வரும் மஹராஷ்ட்ரா காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். காவல்துறை விரைந்து செயல்பட்டு தபோல்கரின் படு கொலைக்குக் காரணமான கொலையாளிகளையும் அவர்களைத் தூண்டியவர்களையும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கிடக் கோருகிறோம். இந்தத் தீர்மானம்,விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்குபெற்ற கண் டனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் ,கலை ஞர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர் கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் , விவசாயிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள், உள்ளடக்கிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் இன்று (7.9.2013) இக்கூட்டத்தில் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் மூட நம்பிக் கைகளுக்கு எதிரான கருத்துப் பிரச் சாரத்தை மேற்கொள்ளும்.

தமிழ் ஓவியா said...

இந்திரா கோவிலுக்குப் போவதேன்?

கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என இந்திரா அம்மையார் இரண்டு கல்வி கமிஷன்களின் உறுப்பினர்களிடையே பேசினார்

பிறகு ஏன் கோவிலுக்குப் போகிறார்? அவரே கூறிய செய்தி வருமாறு:- வகுப்பு இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற தனது குறிக்கோளுக்கு இது உதவுவதாக அவர் கூறினார்.

வழக்கமாக, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் நான் கோவில்களுக்குச் சென்றால் சிறுபான்மையினர் நலனுக்காக நான் கூறுவதை மெஜாரிட்டி சமூகத்தினர் தயாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இவ்வாறு இந்திராகாந்தி கூறினார்.

(தினமணி, மார்ச் 27, 1983)

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?

பல துயரங்களை மறக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடைய மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.

- அன்னை தெரசா (தி இண்டு, 30.11.2002)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் விளம்பரம்


7.2.2013 நாள் தினமணி ஏட்டில் வெளிவந்த கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் - அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.

இதோ அந்த விளம்பரத் தேவை

கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

1) Accountants: B.Com பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.

2) Typists:
நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.

3) Sales representatives:

வியாபாரத்தில் திறமையும், அனுபவமும் உள்ள பட்டதாரிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.

மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.

Raj & Co Post Box No.9, Coimbatore - 641001.

இந்த வேலைகளுக்கு பிராமணர்களிடமிருந்து மாத்திரம் விண்ணப்பம் எதிர் பார்க்கிறோம் என்று பார்ப்பனர்கள் பச்சையாக ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்கள் யார் என்று இன்னமும் தெரிந்து கொள்ளாதிருக்கும் மரக்கட்டைத் தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


புத்தரின் ஆத்மா மறுப்பு!


புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுவோம்.

கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்க முடியுமா?

காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா?

மூக்கை எடுத்து விட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்

தமிழ் ஓவியா said...


ஆரியர்களுக்கு முன்னே யார் இருந்தார்கள்?



மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் ஜில்லாவில் ஊர் பெயர்கள், அவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஊர் பெயர்களின் ஆராய்ச்சிகளில் சிதைந்த சரித்திரத்தை இணைக்க உதவும் ஆதாரங்கள் பல காணப்படும் என்பது உண்மை (on probing into place names, fossils on history will be found) ரா, குரி, குண்டா, ஜுலி, ஜோல் என்று முர்ஷிதாபாத் ஜில்லாவில் காணப்படும் பெயர்கள் _ நிச்சயமாக திராவிட ஆரம்பங்களைக் கொண்டவைகளாகும். ரார்ஹ் என்ற பகுதி _ ஆரியர்கள் அல்லாத இனத்தினரால் நிரம்பி இருந்தது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். இங்கே மற்றும் ஓர் உண்மையையும் குறிப்பிட வேண்டும். வங்காள மொழியில் ஒலி அமைப்பில் (Phonetics) எழுத்து அமைப்பில் (Morphology) வாக்கிய ஏற்பாடுகளில் (Syntax) வார்த்தை கோவைகளில் ((Vocabulary) சந்தேகத்திற்கிடமில்லாத திராவிட உறவுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இவைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு ஊர் பெயர்களைப் பற்றிய பரவலான ஆராய்ச்சி செய்தால் _ வங்காளத்தின் பல பகுதிகளிலும் ஆரியர்கள் அல்லாத மக்கள் முக்கியமாக திராவிடர்கள் நிரம்பி இருந்தார்கள் என்பது நிச்சயம் தெரியவரும்.

(Dr. N. D. Bhattacharya M.A. Ph.D., Indian Geographical Journal (July, Dec. 1969)

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரியார் விழா வரவேற்கத் தகுந்தது


தந்தை பெரியார் அவர்களது 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களது படத்தை வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் மாலையிட்டு பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளார்!

இதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி - (இதற்கு முன் பெரிய அளவில் மக்கள் தலைவர் அய்யா G.K. மூப்பனார் அவர்கள் முன்னின்று அனைத்திந்திய தலைவர்களை அழைத்து சென்னையில் மாபெரும் விழாவெடுத் தார்கள் என்பது ஒன்று) காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெறவில்லை. இந்த முறையும், மரபும், அனைவராலும் போற்றிப் பின்பற்ற வேண்டிய பண்பாட்டு நிகழ்வு ஆகும்!

தரந்தாழ்ந்த விமர்சனங்கள்

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் மிகவும் தரக் குறைவான தாகவும், தனி நபர் பற்றிய தாக்குதல்களாகவும் அமைந்து விட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது. இப்போக்கு மாற வேண்டும். துக்க வீட்டில்கூட அரசியல் நுழைந்து, அதில்கூட விருப்பு, வெறுப்புகள் தலைவர்களைப் பொறுத்து காட்டப் படுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முற்றிலும் முரணானது - தவிர்க்கப்படல் வேண்டும்!

கருத்து மோதல்கள், கொள்கை நிலை விமர்சனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். தனிப்பட்ட குடும்பப் பெண்கள் பற்றியும் விமர்சனங் களாகவும், இழிநிலைக்குச் செல்லப்படுவது கண்டனத்திற் குரியவைகளாக அனைவராலும் கருதப்பட வேண்டும். தடுக்க வேண்டும்.

தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கட்சித் தொண்டர்கள், பேச்சாளர்கள், தலைவர்களைத் திருப்தி செய்து, மனதில் இடம் பிடிக்க மலிவான கீழ்த்தரமாகப் பேசுவதை தலைவர்கள் சுவைக்கக் கூடாது; மாறாக, கண்டிக்க வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பொது வாழ்வைத் தூய்மைப்படுத்த அனைத்துத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

தரந் தாழ்ந்த எழுத்தாளர்களை, ஏடு நடத்துவோர் ஊக்குவித்தால், அவ்வேடுகளைப் புறக்கணிப்பதே சரியான தண்டனை ஆகும். அதையும் செய்யலாம்; செய்ய வேண்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


சென்னை

21.9.2013

தமிழ் ஓவியா said...


உலகமயமாகிறார் பெரியார்


உலகமயமாகிறார் பெரியார்
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு

தோழர்களே, நமது தலைவர் தந்தை பெரி யார் அவர்களின் கொள் கைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல - உலகிற்கே சொந்தம் - மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்று புரட்சிக் கவிஞர் பாடி யது வெற்றுச் சொற்கள் அல்ல - என்பதற்கு அடை யாளமாக உலகெங்கும் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைகள் பரவி வருகின்றன - வரவேற்கப்படுகின்றன.

சிகாகோவை தலை மையிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யமும் லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மர், துபாய் முதலிய நாடுகளில் சிறப் பாகச் செயல்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா வில் தோழர் எழிலரசன் முயற்சியால் பெரியார் ஆப்பிரிக்கன் ஃபவுண் டேசன் தொடங்கப் பட்டு, பணிகள் நடை பெற்று வருகின்றன.

இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 17-க்கு முன் 12ஆம் தேதி யன்று தந்தை பெரியார் விழாவில் கலந்து கொள்ள கொல்கத்தாவிலிருந்து அழைப்பு வந்தது.

எங்களுக்கேகூட ஆச்சரியம்! கொல்கத்தா வில் ரிசர்வ் வங்கி அலு வலகத்துக்குள் நமது அய்யா விழாவைக் கொண்டாடினர். பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவ்விழாவில் கலந்து கொண்டனர். யூனியன் வங்கி பணியா ளர்கள் சார்பிலும் கொல்கத்தாவில் பெரி யார் விழா; அதேபோல பங்களாதேஷ் எல்லை என்று கருதக் கூடிய இடத்தில் இரயில்வே தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் விழா வில் பங்கு கொண் டோம் - என்னுடன் பிற்படுத்தப்பட்ட பணி யாளர்கள் கூட்டமைப் பின் பொதுச் செயலா ளர் தோழர் கோ. கருணாநிதி அவர்களும் பங்கு கொண்டார்.

கொல்கத்தாவில் டில்லியில் உள்ளது போல பெரியார் மய்யம் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஒடிசாவில் ஒடியா மொழியில் ஊடிடடநஉவநன றுடிசமள டிக ஞநசலையச என்ற நமது இயக்கம் வெளி யிட்டுள்ள ஆங்கில நூலை ஒடியா மொழியில் வெளி யிட்டுள்ளனர். அதன் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதியில் செல்ல இருக்கிறேன்.

தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம் என்று சொன்னது நிரூ பிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது உலக மய மாகிக் கொண்டு இருக் கிறார்.

- திராவிடர் கழக மண்டல தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் (திருச்சி - 19.9.2013)

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா


இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா சென்னையில் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் பத்து கோடி தாரை வார்க்கப் பட்டுள்ளது.

இந்த விழா அவ்வளவு அவசியம்தானா? நாட்டு மக்களுக்கு இதனால் ஒரு கடுகளவு பயனாவது உண்டா? அப்படியே நடந்தாலும் 10 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்க வேண்டுமா?

முதல் அமைச்சர் முதல் குடியரசுத் தலைவர் வரை பங்கு கொள்வதன் மூலம் இந்த விழா தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுவதற்குப் பயன்படுமே தவிர பொது மக்களுக்கு இதனால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.

கலை நிகழ்ச்சிகள் நடக்கலாம்; விளம்பரம் பெற்ற கலைஞர்கள் பங்கு கொள்ளலாம். அவற்றைக் கூட பொது மக்கள் சென்று நேரில் பார்க்க முடியுமா என்றால் அதுவும் நடக்காது. (ஒரு வகையில் பொது மக்கள் இளைஞர்கள் சென்று பார்க்காதது கூட நல்லது தான்!)

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் கணித்தது ஆழமானது. மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கோ, முற்போக்கு எண்ணங்களுக்கோ பயன்படுகின்ற வகையில் சினிமாக்கள் எடுக்கப்படுவதும் இல்லை.

ஆபாசக் காட்சிகள், குத்தாட்டங்கள், சில சண்டைகள் என்று மசாலாவாக ஆக்கி மக்களின் பணத்தைத் திருடத்தான் பயன்படுகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 51-ஹ() பிரிவின்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை சீர்திருத்த உணர்வை உண்டாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது.

மாநில அரசோ, மத்திய அரசோ உதவுவதாக இருந்தால், அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள கடமையைச் செய்யும் திரைப்படத்துக்குத்தான் உதவி செய்ய வேண்டும்.

அதை விட்டு விட்டு திரைப்பட நூற்றாண்டு விழா என்பதற்காக மத்திய அரசோ, மாநில அரசோ மக்கள் பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டுவது பொறுப்பான செயல்பாடல்ல.

இன்றைக்குப் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை என்பது அன்றாட மலிவான நிகழ்ச்சியாகி விட்டது; குழந்தைகள்கூட இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. இதற்கான காரணங்களில் சினிமாவுக்குத்தான் முதலிடம்.

குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் திரைப்படக் காட்சிகளைப் பார்ப்பதற்குக் கூச்சப்படும் நிலைதானே? இல்லை என்று மறுக்க முடியுமா?

இன்றைக்குக் கறுப்புப் பணத்தைப்பற்றி நீட்டி முழக்குகிறார்கள். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாகப் புலம்புகிறார்கள். கருப்புப் பணச் சந்தையாக திரைப்படத் துறை இல்லை என்று விரலை நீட்டி அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறத் தயாரா?

படத் தயாரிப்பாளர்களிடம் வாங்கும் தொகைக்கும், இரசீது கொடுக்கும் தொகைக்கும் வேறுபாடு இல்லை என்று தான் கூற முடியுமா?

திரைப்பட விழாவிலும்கூட அரசியல் இருக்கிறது. திரைப்படத் துறையில் கலைஞர் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அனுபவமும் சாதாரணமானதல்ல. இந்த நூற்றாண்டு விழாவில் அவருக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டாமா? அரை நூற்றாண்டுக்கு மேலாக இத்துறையில் முத்திரை பொறித்தவர் கலைஞர் அல்லவா!

அவர் முதலமைச்சராக இல்லை என்பதற்காக அவரது திரைப்படத்துறை ஈடுபாட்டை, குறைத்து மதிப்பிடத்தான் முடியுமா? அதையும் தாண்டி நமது கருத்து அரசுப் பணம் ரூபாய் பத்து கோடி, மக்கள் நலனுக்குப் பயன்பட்டு இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பயனற்றவைகளுக்குப் பயன்படக் கூடாது

தமிழ் ஓவியா said...


வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் (ஆகஸ்ட் 20-22) ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் வெளிவந்து பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக்கொள்வோம் என்ற கட்டுரை மிகவும் ஆக்கப்பூர்வமாக இன் றையக் கால கட்டத்திற்குத் தேவையான அருமருந்தாக இருந்தது.

முதிர்ச்சியில்லாத நிலை தான் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது, எதிர் கொள்ள பயப்படுவதும் ஆன மன நிலை. மனிதர்களிடம் உள்ள பகுத்தறிவை விட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா? ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அற்புத வரிகள்

இன்றைய கால கட்டத்திலே அற்பக் காரணங்களுக்காக இளைஞர்கள் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி ஆகியவற்றிற்கு தற்கொலை முடிவு எடுப்பது எத்துணை அறியாமை - இதற் கெல்லாம் இக்கட்டுரை அரிய தன்னம் பிக்கை டானிக்! உடலியல், உளவியல் ரீதியாக ஆசிரியர் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சிறப்பாக குறிப்பிட்டுள் ளார். பிரச்சினைகளால் திசை தெரியாமல் தவிப்போருக்கு கலங்கரை விளக்கமாக இக்கட்டுரை வழிகாட்டும். சிறிய புத்தக மாக வெளியிட்டால் மாணவர்களும், இளைஞர்களும், மற்றவர்களும் படித்து தெளிவு பெறவேண்டிய வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை
- தி.க.பாலு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)

டாக்டர்கள் கவனத்திற்கு

தொடர்ந்து, வேண்டாத பழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டு மது மயக்கத் திற்குள் விழுந்துவிட நோயாளிகளாகி விட்டனர். அரசு மருத்துவமனைக்குத் தானே, ஏழை முதிய நோயாளிகள் செல்ல வேண்டிவரும். அங்கே அரசு ஊழியர் களை விட, மருத்துவர்களே நோயாளி களிடம் அலட்சியமாக கோபத்துடன் பேசுகின்றனர். அமைதி இழந்து, தன் மானமுள்ள ஆண் - பெண் வயதான நோயாளிகள் கோபங்கொண்டுவிடும் சூழலில் பாதிப்பு நோயாளிகளுக்குத் தான். மருத்துவர்கள் மனிதத்தன்மை மனிதாபிமானத்துடன் நடந்து கொண் டால் என்ன? அவ்வாறு நடந்து கொள் ளாததால், புற்றுநோய் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத் துவர்களால் மேலும் பாதிக்கப்படுகின்ற னர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல - புதுச்சேரி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஏனைய கட்சிகள் ஏழை வயதான நோயாளிகள் நல்வாழ்விற்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒரு நாளாவது மருத்துவ மனைகள் முன் மக்களின் ஆரவாரம், மனிதச்சங்கிலிப் போராட்டம் என, நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது அரசியல் அல்ல. தொண்டு, தந்தை பெரியார் வலியுறுத்திய மானிடப்பற்று அதைக் கடைப்பிடிப்போம்!... உருப்படுவோம்!...

- எம்.எஸ்.மணி (முதுகுடிமக்கள் பாதுகாப்பு சங்கம்)

தமிழ் ஓவியா said...

எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமசாமி அவர்கள்.

தமிழர் தலைவர் அவர்களை வல்லத்தில் சந்தித்து இயக்கத்தின் கல்விப் பணிக்காக ரூபாய் 30 இலட்சத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தமிழர் தலைவரிடம் அளித்து இன்ப அதிர்ச் சியை ஏற்படுத்தினார்.

திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற (19.9.2013) திராவிடர் கழக மண்டல தலைவர்கள், தொண்டர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர் இராமசாமி அவர்களை மேடைக்கு அழைத்து, சால்வை அணிவித்துப் பாராட்டினார். அப்பொழுது கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இராமசாமி அவர்கள் 50 ஆண்டு காலமாக விடுதலை வாசகர் ஆவார். கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டை அணிந்த இயக்கத் தோழர்கள் ஒரு பக்கம்; கண்ணுக்குத் தெரியாத கருஞ்சட்டை அணியாத ஆசிரியர் இராமசாமி போன்ற எண்ணற்ற பெரியார் தொண்டர்கள் நம் இயக்கத்தில் உண்டு - கண்ணுக்குத் தெரியா விட்டாலும், இயக்கத்திற்கு இத்தகையவர்கள் அஸ்திவாரம் போன்றவர்கள்.

பெரியார் மருத்துவ நிதி, விடுதலை நிதி என்று தமது பங்களிப்பை அடிக்கடி அளித்துவரும் இந்தப் பெரு மகனார் இப்பொழுது ரூபாய் 30 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பெரியார் கல்வி நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்து, அவற்றின் வளர்ச்சியை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்து, நம் நிதி பெரியார் பெயரில் அமைந்த நிறுவனங்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிதியை அளிக்க முன் வந்துள்ளார். செயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு ஆசிரியர் இராமசாமி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்) என்றார் கழகத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

சத்தியாக்கிரகம்
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறுமார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக்கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டுவிட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதம் பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் தொடங்கப்பட வேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப் படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ, அதுபோல சத்தியாக்கிரகமென்னும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்பிட்ட லட்சியத்திற்கு அழிவு ஏற்படும் என்றேசொல்லுவோம். சத்தியாக்கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி வயிறுவளர்த்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதையாய் உணர வேண்டும். நாகபுரி சத்யாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி இல்லை என்று தெரிந்த உடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல் தண்டனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின் யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்த கொண்ட மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும் இவைகளின் மூலம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில் அறிந்ததே. ஆதலால், வாசகர்களே போலி ஆசாமிகள் வேறுவழியில் சுய நலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளுவதற்கும் கூலிக்கு மாரடிப் பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள் விஷயத்தில்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்

நம் நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் இம்மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்படவேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக் காலத்தில் உண்மையாயும், யோக்கியமாயும் நடந்து வந்த சந்நியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால் இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொதுநல ஸ்தாபனங்கள் எந்நிலையில் இருக்கிறது என்பதும், இதை யார் அனுபவிக்கிறார்கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக் களாகிய சந்நியாசிகள் என்போரின் யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்ல வேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொதுநலத் திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம்மடாதிபதிகள் தங்கள் சுயநலத்திற்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடுமென்பதாகக் கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும் லஞ்சமாகவும் பிச்சையாகவும் அழுத பணங்கள் கணக்குவழக்கில் அடங்காது என்றே சொல்லலாம். இவ்வளவு பணங்களைத் தொலைத்தும் தாங்கள் வெற்றிபெறவில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் தோப்புக் கர்ணம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீமான் டி ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் 30லட்சம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது வட நாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டப்போவ தாகவும் அதற்குப் பணம் வேண்டு மென்றும் இம்மட அதிபதிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார சன்னதி அவர்களைக் கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் பத்து வருஷத்திற்குக் கொடுப்பதாய் ஒப்புக் கொண்டாராம். இவரைப் பார்த்து இனியும் மற்ற மட அதிபதிகளும் கொடுப்பார்கள். பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்குக் கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ, மிராசுதாரோ, நாட்டுக்கோட்டையாரோ மற்ற ஏதாவது செல்வமுள்ள வர்களோ நமது நாட்டில் மிகமிக அருமையானதால் இந்த பணம்கொடுத்துதான் தீரவேண்டி வரும். ஆனால், இப்பணம் எதற்கு உபயோகப் படப் போகிறது? டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டத்தான் உபயோகப்படும். ஆனால், தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள் எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பனப் பிள்ளைகள் பிழைக்கவும் கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாத ஊரில்கூட கோவில்கட்டி வித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் சூத்திரர்கள் உள்ளே போகக் கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலகமெலாம் நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப்போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக் கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.03.1927

தமிழ் ஓவியா said...

தொழிலாளர்

சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங் களும் தங்களால் தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங் களெல் லாம் தங்களால் தான் வாங்கிக் கொடுக்கக் கூடும் என்றும் சொல்லி, இதுகால பரியந்தம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று பதவி பெற்று வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபைத் தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்களிலும் இப்பார்ப் பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலாளர்கள் தங்களுடைய ஓட்டுகளையெல்லாம் பார்ப்பன அபேட்ச கர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரைத் தோற் கடிக்கச் செய்ததும் பலருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க, இப்போது மேற்படி தொழிலாளச் சகோதரர் களில் தாங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலா மெனக்கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர் தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சகர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த மேற்படி பார்ப்பனர்கள் தொழிலா ளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித் திருக்கிறார்கள். அது என்னவென்றால், தொழிலாளர் களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேர வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர் யோசிக்க வேண்டும். என்னவெனில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில், தொழி லாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளி மார்கள் அதனை எப்படியாவது கெடுத்துவிடக்கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரசில் சேர முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழி லாளர்களை சுலபமாகத் தள்ளிவிடலாம் என்பதுதான். தொழிலாளிகளுடைய ஓட்டுப் பெறும்போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்கிற தந்திரத்தின் பேரில் தான் பார்ப்பனர்களின் தொழிலாளர் அனுதாபம் ஏற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சி களை அறியாமல் எடுப்பார் கைக் குழந்தைகளாயிருக் கின்றார்கள் இவைகளை எல்லாவற்றையும் அறிந்தேதான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்பந்தமான எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்றும் அது கொஞ்சகாலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும், எழுதியும் வந்தோம். நாம் இப்படிப் பேசி, எழுதி வந்ததைப் பற்றி பல தொழிலாளர்கள் தலைவர்களுக்கும் தம் மீது மனஸ்தாப மேற்பட்டது நமக்கு தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மாநாட்டு உபசரணைத் தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். மித்திரன் அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன் தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட் சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டி யாருக்கும், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய் யங்கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பாஷணை, அடிதடி சண்டை முதலியவைகள் நடந்திருப்பதையும், தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவராவ், கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்தும் பார்ப்பனத் தந்திரங்கள் நன்றாக விளங்குகின்றன. இனியாவது, நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டுகளின் மாய் கையில் இருந்து விலகுவார்களா என்பது தான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகித் தனிப்பட்ட ஹோதாவில் தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால், நாமும் நம்மாலானதைச் செய்யத் தயாராயிருக் கிறோம் என்றும், எந்தக்கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்துவிடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 24.04.1927

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி


பெங்களூரு, செப்.21- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி தெரிவித்தார்.

பெங்களூருவில் கடந்த 15-ஆம் தேதி நடை பெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப் பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தி இப்போதே நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே போன்றோர் விமர் சித்தனர். கன்னட அறிஞர் சிதானந்த மூர்த்தியும் அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அனந்தமூர்த்தியின் கருத்துக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் பரகூர் ராம சந்திரப்பா, கே.மருளுசித்தப்பா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையில், மோடி குறித்து, தான் கூறியிருந்த விமர்சனம் தொடர்பாக பெங்களூருவில் வியாழக் கிழமை எழுத்தாளர் அனந்த்மூர்த்தி கூறியது:

நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்க ளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்.

முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும்.
பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும். பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?

கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோதுகூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்து மத தத்துவத்தை நான் ஏற்காததால், பாஜகவினர் எப்போதும் என்னை விமர்சிப்பார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால், ஊழல் புரிந்துள்ள தால், அந்தக் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி


புதுடில்லி, செப். 21-மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார்.

பா.ஜ பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடி நியமிக்கப் பட்டது குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:

நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி. அவர் பா.ஜ சார் பில் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அதனால், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கும், சங் பரிவார் அமைப்புக்கும் இடையே முதல் முறையாக நேரடி போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலை பிரதமர் பதவிக்கான போட்டியாக மாற்ற பா.ஜ விரும்புகிறது. இந்த போட்டியில் காங்கிரஸ் ஈடுபடாது. யாரையும் காங்கிரஸ் முன் னிறுத்தாது என நினைக் கிறேன்.

மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான். அதனால்தான் அவரது வலதுகரமாக திகழும் அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தின் பாஜ பொறுப்பாளராக நியமித் துள்ளார். அவர் தனது விளையாட் டை நடத்திவிட்டார். முசாபர் நகரில் மதக் கலவரத்தை தூண்டியது பா.ஜ. தான். மோடி முன்னிறுத்தப் பட்டதன் மூலம், இதுபோன்ற பல கலவரங்கள் வட மாநிலங்களில் நடக்கும். முதல் டிரெய்லர் முசாபர் நகரில் நடந் துள்ளது. இதுபோல் பல சம்பவங்கள் நடக்கும். மதவாதம் படிப்படியாக தூண்டப்படும் என அஞ்சுகிறேன். இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக இருக்கும் உ.பி., பிகார் போன்ற இடங் களில் மதக் கலவரம் தூண்டப்படும் என தெரிகிறது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தமிழ் ஓவியா said...


திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக : மத்திய அமைச்சருக்கு தொல். திருமாவளவன் எம்.பி. கடிதம்!


சென்னை, செப். 22- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெய ரைச் சூட்ட வேண்டு மென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் கிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதி யுள்ளார்.

அக்கடித விவரம் வரு மாறு:

தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தீண்டாமை மூடநம்பிக்கைக்கு எதி ராக தமிழக மக்களி டையே பகுத்தறிவு எண் ணத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் எழுச்சியுறச் செய்தவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக் கீடு கிடைக்க போராடி யவர். அரசியலில், விடு தலைக்கு முன்னர் காங் கிரஸ் கட்சியில் ஈடுபட்டு பின்னர் பகுத்தறிவு இயக் கமான திராவிடர் கழ கத்தை தோற்றுவித்தவர். தமிழகம் முழுவதும் பய ணம் செய்தவர். தமிழ கத்தில் ஒவ்வொரு கிரா மத்திற்கும் சென்று தீண் டாமை ஒழிப்புக்கு பாடு பட்டதுடன் பெண் களுக்கான கல்வி, சமூக பொருளாதார மேம் பாட்டுக்கு அக்காலத் திலேயே பாடுபட்டவர்.

தந்தை பெரியார் பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததுடன் இந்தியாவில் பல மாநி லங்களிடையே சுற்றுப் பயணம் செய்துள்ளார். பெரும்பாலும் அவர் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்ததுடன் அங்கு பல கல்வி நிறு வனங்களை ஏற்படுத் தினார். அவரது கொள்கை சம்பந்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் நிலை களில் அங்கு தொண் டாற்றினார். அவர் தம் முடைய வாழ்நாள் முழு வதும் நமது நாட்டில் சமூக இணக்கத்திற்காக வும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டார்.

மிகவும் மதிப்பு மிகுந்த தலைவரான தந்தை பெரியாரின் பெயரை திருச்சி பன் னாட்டு விமான நிலை யத்திற்குச் சூட்ட வேண் டும் என பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மத்திய அரசு, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சி தந்தை பெரியார் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார்.

தமிழ் ஓவியா said...


இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டணியினர் வெற்றி வரவேற்கத் தகுந்தது


இலங்கையில் வடக்கு மாகாண மாநில ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளி வந்துவிட்டன.

தமிழ்த் தேசிய கூட்டணியினர்தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது!

யாழ்ப்பாணம் பகுதியில் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தமிழ்த் தேசியக் கூட்டணியினர்.

சிங்கள இராஜபக்சே அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர்! உணர்வுகள் சாவதில்லை - ஒருபோதும்.

இது சிங்கள அரசுக்கு - ராஜபக்சே அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.

முன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட இராஜபக்சே அரசு முயற்சிக்கக்கூடும்.

எனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை

22.9.2013

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்


பிராமணாள் என்று விளம்பரப்படுத் தப்பட்டு உணவு விடுதிகள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது தலைமைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய விவரத்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் தலைமைக் கழகத்துக்கு உடனே தெரிவிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்


சிவகாசி, செப்.22- பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் அதி காரம், ஊராட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில், பிறப்பு, இறப்பு சான்றுகள், அந்தந்த உள் ளாட்சி அமைப்புகள் மூலம், வழங்கப் படுகிறது.

கிராம ஊராட்சிகளில், இச்சான்றிதழ்கள், சுகாதார துறை மூலம் வழங்கப்படுகிறது. இச்சான்றுகள் வழங்கும் அதி காரம், ஊராட் சிக்கு வேண்டும் என, தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி இருந்தனர்.

இதை தொடந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலர் பிறப்பித்த உத்தரவில்,"" கிராம ஊராட்சிகளின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்க, ஏற்கெனவே வருவாய் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

இது முறையாக நடைமுறைபடுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. அரசாணையில் தெரிவித்துள்ள படி, பிறப்பு, இறப்பு, இருப்பிடம் மற்றும் குடியுரிமை சான்று, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் சான்று களை, ஊராட்சி தலைவர்களே வழங் கலாம். இதை நடைமுறைப்படுத்த, வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, ஊராட்சி தலைவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்,''என, குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை முதலாமாண்டு சிறப்பு மலர்! மருதநாயகம் இரவீந்திரன் மாளிகை


17.09.2013 தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, தமிழ் நாடு கடந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடு களில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடி மகிழப் பட்டது.

பெரியார் கொள்கை யின் சாதனைகளை, ஆண் டின் 365 நாளும் கொண் டாடி மகிழ காரணங்கள் நிறைய உள்ளன.

அப்படி ஒருநாள் தான் 23.09.2013. ஆம்! 2012 ஆம் ஆண்டில் (23.09.2012) திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களால் திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பெரியார் மருத்துவமனை தொடங் கப்பட்டது. ஆடம்பரங்கள் ஏது மின்றி எளிய மக்களுக் காக, எளிய முறையில் தொடங்கப்பட்ட இம் மருத்துவமனைக்கு, மக்கள் ஓரிருவர் வந்து சென்றனர்.

மருத்துவ மனையின் நேர்த்தியான வடிவம், மருத்துவர் களின் அன்பு, செவி லியர் களின்கனிவு ஆகியவை மக்களின் 50 விழுக்காட்டு நோயைக் குணப்படுத்த, மீதமிருந்த நோயை மருந்து, மாத்திரைகள் பார்த்துக் கொண்டன.

இதற்கான கட்டணமும் மிகக் குறைவு என்ற போது மக்கள்பெரியாரை நிதானமாக நிமிர்ந்துப் பார்த்துச் சென்றனர். அதற்கு வாய்ப்பாக மருத் துவமனையின் முன்பு, முழுவுருவ வெண்கலச் சிலையில் அய்யா அனை வரையும் வரவேற்கிறார்!

இப்படியான மக்கள் பெரியார் மருத்துவ மனைக் குறித்து தம் வீட்டில் சென்று நெகிழ, வீதியில் சொல்லி மகிழ, இன்றையத் தேதியில் பயன்பட்ட மக்கள் ஓரா யிரம், ஈராயிரம் அல்ல; அது 10 ஆயிரம் கடந்து போயின!

இவ்வாறான தொடர் மக்கள் சேவையுடன் நம் மருத்துவக்குழு நின்றதா? இல்லை!பல்வேறு வாய்ப்புகளை வளர்த் தெடுத்தார்கள். அதன் வழியே 02.12.2012 திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நலம் பெற் றார்கள்.

அன்றைய தினம் மருத்துவமனை வளா கத்தில் செடிகள் நடப் பட்டன. அன்றைய செடி களின் இன்றைய பெயர் மரம்!

அதனைத் தொடர்ந்து 24.12.2012 அன்று பெரி யாரின் நினைவு நாளில், பெண்களுக்கான இலவசப் புற்று நோய் கண்டறியும் முகாமில் 80 மகளிர் பங்கேற்றுப் பயன் பெற்றனர். பெரியார் மருத் துவ மனையைக் கடந்து, திருச்சி மாவட்டம் பிச் சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் 04.01.2013 இல் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 70 பொது மக்களும், 04.08.2013 அன்று பெரி யார் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 226 மக்களும் பயன் பெற் றனர்.

பொது மருத்துவ முகாம் என்றால் ஏதோ வழக்கமான சம்பிரதாய சோதனைகள் கிடையாது. ஒவ்வொரு பயனாளிக்கும் 8 வகையான சோதனை கள் மேற்கொள்ளப்பட் டன. இவற்றை வெளியில் பரிசோதித்தால் ரூபாய் அய்நூறு பாதிக்கும் என்பது உண்மை.

மேலும்புற்று நோயின் அவசியம் கருதி தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22.09.2013 அன்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து மீண்டும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

இவ்வாறாகத் தொடர் மருத்துவச் சேவைகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுத் துண் டறிக்கைகள் எனத் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை ஓராண்டு சகாப்தம் முடிக்கிறது. தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களின் உயர் வழிகாட்டுதலில் அம் மருத்துவமனைத் தொ டர்ந்து வெல்லும்! சாத னைகள் பல மெல்லும்

தமிழ் ஓவியா said...


இவரிடம் இதைக் கண்டேன்!

திருவெறும்பூரில் பெரியார் மருத்துவமனை என்றதுமே இவர் நினைவில் வருவார். அவர் பெயர் இரவீந்திரன்! நேர்மையான தொழிலதிபர். நிழற்படத்தில் அவரைப் பார்த்தால் திருநீறும், குங்குமமும் பளிச் சென்று தெரியும். அசர வைக்கும் ஆன்மீகவாதி.

அளவிட முடியாத மனிதாபிமானி! அதனால்தான் அள்ளிக் கொடுத்தார் ரூ. 12 இலட்சம்! பெரியார் கொள்கை வென்றதா-? என்போருக்கு ஆன்மீகவாதி இரவீந்திரன் அவர்களையே பதிலாகச் சொல்வோம்.

மனதில் இருப்பதைப் பளிச்சென்று படபடக்கப் பேசும் தொழிலதிபர் இரவீந்திரன் அவர்களைச் சந்தித்து, பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவைச் சொன்னோம்.

ஓராண்டு முடிந்துவிட்டதா? நிரம்ப மகிழ்ச்சி! எவ்வளவோ நன்கொடைகள் கொடுத்துவிட்டேன். எதுவும் நிலைக்கவில்லை; பெரியார் மருத்துவமனை மட்டும் என் காலம் சொல்லும். கடவுளை மறுப்பவர்கள் கரடு முரடாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முதல் சந்திப்பிலேயே என் எண்ணங்கள் மாறியது. அவரின் அணுகுமுறையில் கவரப்பட்டு, அன்பால் ஈர்க்கப்பட்டேன்.

பெரியார் பெயரிலான மருத்துவமனைக்கு ரூ.6 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்திருந்தேன். அய்யா வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அக்கணமே முடிவு செய்துவிட்டேன் 6 அல்ல, 12 இலட்சம் கொடுப்பது என்று! நான் அவரின் நல்ல பணிகளுக்குப் பொருளுதவி செய்து, தொடர்ந்து உறுதுணையாய் இருப்பேன்.

உண்மையிலேயே நான் அறிந்த வரை இவர் மிகச்சிறந்த நல்லவர், மனிதப் பண்பாளர். சாதாரண மனிதரையும் நெகிழ வைக்கும் குணம் கொண்டவர். இவரின் சமூக எண்ணங்கள் ஈடேற நானும் ஒரு மனிதராய் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்குப் பணம் செலவழித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

மேலும் நான் என் தொழிலில் நேர்மையோடு செயல்பட்டு, இன்று வரை கடுமையாக உழைத்துப் பொருளீட்டுகிறேன். அப்படியிருந்தும் நான் நன்கொடைகள் வழங்கக் காரணம், பெரியாரிடத்தில் எனக்குப் பிடித்த பல கொள்கைகளும், அய்யா வீரமணி அவர்களின் அன்பும்தான்!

பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியில், அம்மருத்துவமனையின் மாடியில் மேலும் பல கட்டமைப்பு வசதிகளை செய்து தர நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறி முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கூறி முடித்தார்.

தமிழ் ஓவியா said...


வாழ்த்து


திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெரியார் மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணர்களாக திகழும் தொண்டறச்செம்மல் வள்ளல் வீகேயென்.கண்ணப்பன், திரு.ரவீந்திரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொண்டாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தோழர், தோழியர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

தொண்டு உணர்வு என்பது பெரியாரின் மனிதநேய அருட்கொடை. வாழ்க பெரியார்! வளர்க பெரியார் மருத்துவமனை சேவை!!

சென்னை
22.09.2013

கி.வீரமணி
செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவில்!



1962ஆம் ஆண்டில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அருமையான - அதிரடித் தீர்ப்பை வழங்கி பாதிரியார் கள் மத்தியில் பேரிடியை இறக்கியது.

எல்லாம் வல்ல இறைவா! நீ இன்றி நாங்கள் இல்லை. உன்னை நம்பித்தான் வாழ் கின்றோம். எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும் அருள்பாலிக்கும்படி இறைஞ் சுகிறோம் என்று அமெரிக் காவில் கல்வி நிறுவனங் களில் இடம் பெற்று வந்த கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்து விட் டது - சட்ட விரோதம் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தீர்ப்புக் கூறி விட்டது.

முன்பு பள்ளிகளில் நீக்ரோக்களைச் சேர்க்கச் செய்தார்கள். இப்பொழுது பள்ளிகளிலிருந்து கடவு ளையே விரட்டி விட்டார் களே! என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஆண்ட் ரூஸ் என்பவர் புலம்பியது தான் மிச்சம்! இது நடந்தது 1962 ஜூன் மாதம்.

1994இல் வந்த மற்றொரு சேதி - தினமணி கதிரில் (8.5.1994) அதன் ஆசிரியர் மாலன் விரிவாகவே கட் டுரை ஒன்றைத் தீட்டியிருந் தார்.

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் கடவுள் வாழ்த் துப் பாட அனுமதி இல்லை. கடவுள் வாழ்த்துப்பாட அனு மதிகோரி புளோரிடா மாநி லத்தில் அண்மையில் 14ஆவது தடவையாக கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட் டது.

....இன்ன கடவுள் என்று பெயரிட்டுப் பிரார்த்தனை செய்யாமல், பொதுவாக பெரிய கடவுள் காக்க வேண்டும் என்றோ எல் லாம் வல்ல பரம்பொருளை வேண்டியோ அல்லது இயற்கையை வழுத்தியோ பிரார்த்தனை வாசகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தில் கேட்டுப் பார்த்தார்கள். நோ, சரி பிரார்த்தனை என்ற வார்த்தை வேண்டாம். துதி, வந்தனம் (In Vocation) என்று வைத்துக் கொள்ள லாம். ம் ஹும், பிரார்த்தனை இருக்கட்டும்; ஆனால் அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்து விடலாம் மறு படியும் நோ. பிரார்த்தனை பற்றி அரசாங்கம் தீர்மானிக்க வேண்டாம். பள்ளிகளை நிர்வகித்து வரும், உள்ளூ ராட்சிகளுக்குப் பொறுப்பான ஸ்கூல் போர்டுகள் தீர்மா னிக்கட்டும். மன்னிக்கவும், அது முடியாது பெரும் பான்மை மாணவர்கள் விரும் பினால் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாமா? யோசிக்கலாம் என்று சட்டப் பேரவை (ஹவுஸ்) சொன்னது மேலவை (செனட்) ஒரே போடாகப் போட்டு விட்டது. தீர்மானம் தோற்றுப் போயிற்று; இப்படி தோற்றுப் போவது பதினான்காவது முறை. புளோரிடா போன்ற மத நம்பிக்கை வேரூன்றிய மாநிலத்தில் சட்டமன்றத் திலேயே இந்த நிலைமை என்று தினமணி கதிர் எழுதியது (8.5.1994).

தீயணைப்புப் படை வீரரின் மகளும், செவிலியரு மான ஜெஸ்லிகா அங்கு லிஸ்ட், 49 ஆண்டு காலமாக கிரேன்ஸ்டன் என்பவரால் மேற்கு உயர்நிலைப் பள்ளி யில் பயன்படுத்தி வந்த இறை வணக்கப் பாடலை நீக்கக் கோரி அமெரிக்காவின் கிரேன்ஸ்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.

கிறிஸ்தவர்கள் நிறைந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை - இங்கு என்னடா என்றால் மும்பையில் கடவுள் வாழ்த்துப் பாடும்போது கை கூப்பாத சஞ்சய் சால்வ் என்ற ஆசிரியருக்குத் தண்டனையாம்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா?


- நமது செய்தியாளர்

வெள்ளக்கோவில் செப்.23- தனியார் பள்ளியில் மதவாதத்தின் மொத்த உருவமான ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா வெள்ளக் கோயிலுக்கு அருகில் உள்ள பாப்பம்பாளையத்தில் கொங்கு வேளாளர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் உள்ளது. இங்கு மகாத்மா காந்தியை கொலை செய்வதற்கு காரணமாயிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி வகுப்புகள் 22.9.2013 முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு நடைபெறுவதாக உள்ளது.

காந்தி வழி நடவுங்கள் என்று பாடம் போதிக்கும் கல்வி நிறுவனங்களில், காந்தியைக் கொன்ற இயக் கத்தின் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது கல்வி சாலை களை மத வாதத்திற்குப் பயன்படுத்தும் செயலாகும்.

பள்ளியின் முதல்வரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ஏதோ கேம்ப் நடத்த வேண்டும் என்று இடம் கேட்டார்கள். கொடுத்தோம் என்று விபரீதத்தை உணராதவர்கள் போல் நடிக்கிறார்கள்.

காவல் துறையும் இன்றைய தேதியில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கமல்ல என்ற வகையிலும் அரங்கிற்குள்ளே தானே பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள் என்று அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நடப்பது என்ன?

நாம் அனைவரும் ஹிந்துக்கள்; நம்மிடையே ஹிந்துக்கள் என்ற தேசபக்தி வளர வேண்டும்; ஹிந்தியாவில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்; ஹிந்துத்துவம் எங்கும் பரவ வேண்டும்.

இதன் மூலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ஒருவர் கரசேவகர்களாக பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளே இப்பயிற்சியில் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இதுதானா?


திருச்சானூர் அருகே பெருமாள் கோவில் இடிந்தது

திருப்பதி, செப்.23- திருச்சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரு மாள் கோவில் இடிந்து விழுந்தது. ஆந்திர மாநிலம் சித் தூர் மாவட்டம், திருச் சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீனிவாசபெரு மாள் கோவில் உள்ளது. அந்த கோவிலை நாடா ளுமன்ற முன்னாள் சபா நாயகர் அனந்தசயன அய்யங்காரின் முன் னோர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தார் சாமிக்கு பூஜை செய்தும், பரா மரித்தும் வந்தனராம்.

கோவிலை பரா மரிக்க முடியாத நிலை யில், அவரின் குடும்பத் தார் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திரு மலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர். கோவில் பூஜை மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தா னமே ஏற்று நடத்தி வந்தது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக திருச்சானூர் பகுதியில் பெய்த மழையால் கோவிலின் மேற்கூரை நனைந்து விரிசல் ஏற் பட்டது. அதேபோல், பக்கவாட்டு சுவர்களும் நனைந்து வலுவிழந்தன. நேற்று முன்தினம் இரவு மூலவர் சன்னதி அருகில் உள்ள ஆழ்வார் மண்ட பத்தின் மேற்கூரை மற் றும் பக்கவாட்டு சுவர் கள் முற்றிலும் இடிந்து விழுந்தன.

அதில் ஆழ்வார், தாயார் சிலைகள் சேதம் அடைந்தன. சீனிவாச பெருமாள் சிலை சேத மின்றி தப்பியது. இரவு நேரத்தில் நடந்த சம்ப வத்தால் யாருக்கும் எந் தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், தகவலை கேள்விப்பட்ட பக்தர்களும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனராம்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்



நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளின் போராட்டம்


மாற்றுத் திறனாளிகள் - பார்வையற்றோரின் போராட்டம் கடந்த ஒரு வார காலமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு என்பதில் தமிழ்நாடு அரசு மிகப் பெரிய அளவுக்கு சமூக நீதிக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்துவருவது அம்பலமாகி விட்டது.

இந்தியாவுக்கே சமூக நீதிப்பிரச்சினையில் வழிகாட்டி வந்த தமிழ்நாடு இந்த முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - அந்த நற்பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டது.

தாழ்த்தப்பட்டவராயினும், பிற்படுத்தப்பட்டவரா யினும், மிகவும் பிற்படுத்தப்பட்டவராயினும் மாற்றுத் திறனாளிகள் ஆயினும் அனைவருக்கும் ஒரே அளவான தகுதி மதிப்பெண் என்பது எந்த வகையில் நியாயம்? இதற்கான நியாயத்தை இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் யாராலும் நிமிர்ந்து நின்று பேச இயலாத பரிதாப நிலை!

மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேர தனித் தனியே தகுதி மதிப்பெண்கள் இருக்கும்போது ஆசிரியர் பணிக்கு மட்டும் ஒரே அளவுகோல் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

அதுவும் பிற மாநிலங்களில் தனித்தனி மதிப்பெண்களை வரையறை செய்திருக்கிறபோது, தமிழ்நாட்டில் மட்டும் பிடிவாதமான போக்கில் ஒரே அளவு மதிப்பெண் என்பதற்கான பின்னணி என்ன?

மாற்றுத் திறனாளிகள் எனில் தனிப் பார்வை இருக்க வேண்டாமா?

திறந்த பார்வையில் மனிதாபிமான பார்வையில் பார்வையற்றோரை பார்ப்பதற்குப் பதிலாக கண் மூடித்தனமாகப் பார்க்க ஆசைப்படலாமா?

முதல் அமைச்சரை சந்தித்துத் தங்கள் குறை பாடுகளைக் கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். பார்வையற்றவர்களைப் பார்ப்பதற்கு ஒரு ஜனநாயக நாட்டில் முதல் அமைச்சர் தயங்குவது ஏன்?

சாலை மறியலில் பார்வையற்றோர் ஈடுபடு

வதும் அவர்களைக் காவல்துறையினர் முரட்டுத் தனமாக இழுத்துச் செல்லுவதும், தூக்கிச் செல்லுவதும் கண்ணுள்ளவர்களைக் கண் கலங்க வைக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் என்று அவர்களுக்கு அப்பொழுது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியதால் பார்வையற்றோர் பிரச்சினையில்கூட அரசியல் பார்வையுடன் பார்க்கிறதா தமிழ்நாடு அரசு? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளி கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த இடத் திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டு ஆவன செய்தவர் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் ஆவார்.

அந்த ஆட்சியையும், இந்த ஆட்சியையும் பொது மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்!

ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் காட்சிக்கு எளியவராக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம் என்றார் திருவள்ளுவர்.

மாற்றுத் திறனாளிகள் கோயிலுக்குச் செல்லு வதில் கூட பல பிரச்சினைகளை உருவாக்கியது இந்த ஆட்சி. தானாக நடமாட முடியாத நிலையில் சில துணை உபகரணங்களையும், பொருள் களையும் பயன்படுத்திதான் அவர்கள் எங்கும் செல்ல முடியும். அந்த உபகரணங்கள் தோலால் ஆனதாக இருப்பதால் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.

சிவபெருமானே புலித் தோலைத்தான் இடுப்பில் அணிந்து கொண்டு இருப்பதாக புராணங்களே கூறுவதுபற்றி இந்த அறநிலையத் துறைக்குத் தெரியாதா?

மக்கள்ஆட்சி மனப்பான்மையும் மனிதநேய மனப்பான்மையும் ஓர் ஆட்சிக்கு அவசியம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஓவியா said...


எத்தனை எளிய மனிதருக்கு - இத்தனை பெரிய மனமிருக்கு..!


செப்.19ஆம் தேதியன்று, தஞ்சை வல்லத்திலிருக்கும் பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத் தில், தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை புதுமை இலக்கிய விழா வாகக் கொண்டாடினர்.

முதுபெரும் பேராசிரியரும் ஆய்வாளருமான திரு. தொ. பரமசிவம் அவர்கள் (நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பல ஆண்டு கள் பணியாற்றி, ஓய்வு பெற்ற நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வாளர் - இலக்கியப் படைப்பாளி அவர்) அவருக்கு பகுத்தறிவுப் பேராசிரியர் சி. வெள்ளையன் இலக்கிய விருது அளித்தலும், இணைந்து நடத்தப் பெற்றது.

அதனைக் காணவும், பல்கலைக் கழக வளர்ச்சி பற்றி நேரில் அறிய விரும்பியும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும், அவருடன் மதுரைத் தோழர்கள் பொறியாளர் மனோகரன், அழகர்சாமி, எடிசன் ராசா, மதுரை செல்வம் முதலியோரும் வந்திருந்தனர்!

காலை முதலே, பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள், திரு. ராமசாமி அவர்களும் அவரது குழுவினரும்.

அதற்குமுன் 1980இல் வல்லத்தில் தொடங்கப் பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றிப் பார்த்து விட்டுத்தான் அங்கு சென்றனர்!

நிகழ்ச்சியில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் ஒரு சிறு துண்டுச் சீட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்கள், பெரியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ரூபாய் முப்பது லட்சத்தை அளிக்க விரும்புகிறார் என்று எழுதி அனுப்பியிருந்தது எங்களை இன்ப அதிர்ச்சி யில் உறைய வைத்தது!

எவ்வளவு எளிமையான வாழ்வு வாழும் அடக்கமானவர் என்பதை மதுரையில் அவர் உடல்நலம் விசா ரிக்கச் சென்றபோது நேரில் கண்டு வியந்தேன்.

50 ஆண்டுகளுக்கு மேல் அவர் தொடர்ந்து விடுதலையின் வாசக நேயர்!

மற்றபடி எங்கும் எதிலும், தன்னை விளம்பரப்படுத்தவோ, அறிமுகப்படுத் திக் கொள்ளவோ விரும்பாத, விளம்பர வெளிச்சம் கண்டு கூச்சப்படுபவர்!

குருவி சேர்ப்பதைப் போல, சிக்கன வாழ்வு, எளிமை வாழ்வின் மூலம், சேமித்து வைத்த செல்வம் பொதுப் பணிக்கே பயன்பட வேண்டும் என்ற திடமான கொள்கை முடிவுடன், இதையும் இதற்கு முன் வழங்கிய பல நன்கொடைகளையும் அளித் தோடு தன்னால் சேமித்த செல்வத்தை, நிரந்தரப் பாதுகாப்புக்கான சரியான வழியைக் கண்டறிந்து, பொதுத் தொண்டு, கல்வித் தொண்டுக்கே தனது, அச்செல்வமும் அதன் பயனும் என்றும் அழியாததாக ஆக்கி மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்!

அவர் ஒன்றும் பெரிய கோடீசுவரர் அல்லர்; அப்படிப்பட்டவருக்கு எப்படிப்பட்ட மனம் பார்த் தீர்களா?

தந்தை பெரியார், முடிச்சுப் போட்டு வைத்த செல்வம் முழுமையும் மக்களுக்கே - பொது அறக்கட்டளை மூலம் ஒப்படைத்து ஒல்காப் புகழின் உச்சியில் இருக்கிறாரே! அதுபோன்றே இதுவும்!

இதைவிட பெரும் நன்கொடைகளை நாட்டில் அளிப்பவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அந்த நன்கொடையாளர் பயன் கருதி - மோட்சம், விளம்பரம், புகழ், பெருமை, அரசின் லாபம் கருதியே செய்வர்!

இதை நமது தமிழ் இலக்கியம் படைத்தோர், பல ஆண்டுகளுக்குமுன்பே அறவிலை வணிகர் என்ற பொருத்தமான சொற்கள் மூலம் சுட்டினர்! வள்ளல் ஆய். அண்டிரன் போன்று இவரும் அறவிலை வணிகன் அல்லர்.

கொடுத்தற்காகவே நன்றி தெரிவித்தல் பாராட்டும்போது அவர் படும் கூச்சம் - உண்மையான கூச்சம் - அவர் தந்த நன்கொடையின் மதிப்பை பல மடங்குப் பெருக்கி கூட்டிக் காட்டுகிறது!

அவருக்கு ஒரே இன்பம் - இதிலிருந்து தான் பூத்துக் குலுங்குகிறது!
அது எல்லோருக்கும் வரும் பண்பல்ல! மிக அரிது! மிக அரிது!!

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)

இதன் பொருள்: தாம் திரட்டி வைத்திருக்கும் பெரும் பொருளை பிறர்க்கு எந்த வகையிலும் கொடுக்காமல், பதுக்கி வைத்திருந்து, பின்னர் எக்காரணம் பற்றியோ இழந்து விடும் வன்கண்மை உடையவர்கள், பிறர்க்குக் கொடுத்து, அதனால் உண்டாகக் கூடிய மகிழ்ச்சியினால், தாம் அடையும் இன்பத்தை வாழ்நாளில் ஒருபோதும் கண்டறிந் திருக்க மாட்டார்கள்; அடடா, ஈத்துவக்கும் இன்பத்தின் சிறப்புதான் என்னே!
அது மட்டுமா?

கொடுப்பவர் தான் உயருகிறார்! இப்படி உயர்ந்தால் மகிழ்ச்சி பெருகுகிறது, மகிழ்ச்சி பெருகினால் வாழ்வும் பெருகுகிறது.

எனவே, எளியவர்களும் இராமசாமிகளின் (தந்தை பெரியார் இராமசாமி முதல் மதுரை இராம சாமி வரை) உள்ளத்தைப் பார்த்து வாழ்க்கையைப் பெருக்குங்கள்!

பொதுத்தொண்டறம் போல மகிழ்ச்சியின் ஊற்று எதுவுமே இல்லை.

கொடுக்கப் பணம் தேடாதீர்கள்!

கொடுக்க மனம் தேடுங்கள்!!

அது, முதலில் உங்களுக்காக - பிறர்க்காக அல்ல; என்பதை மனதில் பதிய வைத்துக் கொள் ளுங்கள்.



- வாழ்வியல் சிந்தனைகள்

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


திருப்பத்தூரில் திராவிடர் திருவிழா


மண் குலுங்கிட , மனங்கள் குலுங்கிட, கொள்கை மணம் பரப்பி,
திருப்பம் தந்திட்ட திருப்பத்தூர் !
இல்லை! இல்லை! திராவிடத்தில் சாதி எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மத எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மொழி எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில், அரசியல் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
ஆண் -பெண் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
பூகோள எல்லை என
எல்லை இல்லா அய்யாவின் கொள்கை,
எங்கெங்கும் ஒலித்திட்ட திருப்பத்தூர்!
யாராலும் முடியாதது,
மகளிரால் மட்டுமே முடியும்-என,
மனம் திறந்து தமிழர் தலைவர்,
மாண்புடன் மேடையில் பாராட்டும் வேளை,
மகளிர் தம் உள்ளங்கள் எங்கும்,
மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திட்ட சோலை !
மனிதம் பிறந்த நாளாம் ,
மாண்புறு செப்டம்பர் பதினேழிலே,
புரட்சிப் பெண்கள் பூபாளம் பாடிய,
புதுமை நிகழ்த்திட்ட திருப்பத்தூர் !
உலக எல்லையில் எங்கிருந்த போதும்,
கொள்கைக் காதலியை மறக்க முடியுமா? என
வழி நடத்திடும் வல்லமை வாய்ந்த
இயக்கத்தின் எழிலாம்,
அவர்தான் மாவட்டத் தலைவராம் !
விவேகமிக்க விஜி இளங்கோவன் !
ஆற்றல் மிக்க அகிலாவின் பின்னே,
இந்திராகாந்தி,கவிதா போல்,
ஆயிரம் ஆயிரம் மகளிர் கூட்டம்,
அற்புதமாய் அணி வகுத்திட,
மகளிர் நாடாய் மாறிய திருப்பத்தூர் !
மயிர் வளர்க்கவும் உரிமை அற்ற,
பார்ப்பன விதவைகள் கூட,
விழுகின்ற கொள்கை மழையில்,
விளைகின்ற உரிமை பயிர்களாய்,
விழித்துக் கொண்டதும்,விடுதலை பெற்றதும்,
அய்யாவின் கொள்கையாலே ! என முழங்கிய தமிழர் தலைவர் !
அவர், எழில் அரசரைப் பாராட்டினால்,
எல்லோரையும் பாராட்டியதாய்,
அகிலாவை பாராட்டினால்,
அனைவரையும் பாராட்டியதாய்,
ஏற்றுக் கொள்ளும் இயக்கச் சுற்றம் !
திருப்பத்தூர் ! ஓர் கொள்கை முற்றம் !

இதுவே திருப்பத்தூர் வரலாறு ! இதனை

போற்றுவோம் ! பின் பற்றுவோம் !

தமிழ் ஓவியா said...


தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்


12.9.2013 அன்று கொல்கத்தாவில் தந்தை பெரியாரின் 135ஆவது ஆண்டு விழாவில் தாங்கள் பேசும் பொழுது இந்த விழாவிலே எனக்கு தகுந்த மரியாதையினை அளித்தீர்கள். சிறப்பான செய்திகளை சொன்னீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் பெரியாரின் எளிமையான தொண்டன் அவரோடு என்னை ஒப்பிடுவது சரியல்ல.

ஒரு புத்தர், ஒரு பெரியார், ஒரு அம்பேத்கர்தான். அவர்கள் மாதிரி நாம் குளோனிங் செய்திட இயலாது. ஆனால் அவருடைய சிந்தனைகளை, கருத்துக்களை நாடெங்கும் பரப்பிட நாம் பணியாற்றுகிறோம், என தாங்கள் உரையாற்றியதை விடுதலையில் படித்தேன்.

இன்றைய போலித்தனமான தலைவர்களைப் போல இல்லாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், திறந்த மனதுடன், மனப்பூர்வமாக தாங்கள் வெளியிட்ட இந்த கருத்துக்கள் நமது இயக்க இளைஞர்களின் இதயத்தை தொட வேண்டும் என்பது எனது விருப்பம். கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, தாங்கள் வெளிப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களை கொஞ்சம் தடிப்பான (Bold Type) எழுத்துக்களில் வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராட்டுகள் தெரிவிக்க தகுதியும், வயதும் எனக்கு உள்ளது. தாங்கள் தொடர்ந்து செயல்பட எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கபடி. ச. பழநியப்பன், மாவட்ட செயலாளர், நாமக்கல் மாவட்ட தொ.மு.ச.

தமிழ் ஓவியா said...


உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் ''பாட்டில்கள்''


குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.

இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.

எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.

எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப் பொரு ளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,

எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ் டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.

இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கெனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். தமிழக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.

உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்க ளையும் பாதிக்கும்'' என்றார்.