RL.Narayan Nallappa
உலக பிராமணர்கள் World Brahmins!
Congratulations Mr. Sunder Pitchai. yet another tamil brahmin iyengar reached the heights! Veeramani and karunanidhi vairu yeriyudha. Go and agitate in Google office.
வாழ்த்துகள் திருவாளர் சுந்தர்பிச்சை. இன்னுமொரு பிராமின் அய்யங்கார் உயர்ந்த இடத்தை எட்டியுள்ளார்! வீரமணி மற்றும் கருணாநிதி வயிறு எரியுதா? கூகுள் அலுவலகத்துக்கு சென்று போராடுங்கள் என்று உலகப் பிராமணர்கள் சொல்லி இருக்கிறார்களாம் இணையதளத்தில் வந்துள்ள செய்தி இது.
இதன்மூலம் உலகப் பிராமணர்கள் என்ற ஓர் அமைப்பை - அணியை உருவாக்கியிருக் கிறார்கள் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகப்பெரிய பொறுப் புக்கு வந்துள்ளது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பெருமையுடன் வாழ்த்துகளைக் கூடக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பார்ப்பன அமைப்பு கலைஞர் அவர்களைச் சாடுவது ஏன்?
இந்தக் கூட்டம் சதா கலைஞரையும், ஆசிரியர் வீரமணியையுமே உருப் போட்டுக் கொண்டு (Phobia) அஞ்சிக் கிடக்கிறார்கள் என்பது அம்பலமாகிவிட்டதா, இல்லையா?
இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்; கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளவர் அய்யங்கார்ப் பார்ப்பனர் என்று அடையாளம் காட்டுவது ஏன்? - இவர்கள் சொல்லும்வரை இந்தக் கண்ணோட்டத்தில் யாரும் சிந்தித்துக்கூட பார்க்க வில்லையே!
திராவிடர் இயக்கத்தவர் தமிழர், திராவிடர் என்று பேசினால், தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்று பேசினால், அதற்கு வேறு வண்ணம் பூசும் பூசுரர் கூட்டம் இப்பொழுது தன்னை அறி யாமலேயே தாங்கள் யார் - தங்களின் ஆழமான உணர்வு வெறி என்ன என்பதைத் தங் களுக்குத் தாங்களே அம்பலப் படுத்திக் கொண்டுவிட்டார் களே! பார்ப்பனர் அல்லாத மக்கள் பார்ப்பனப் பூசுரர்கள், எந்த நிலையில் உள்ளனர் என்பதை இந்த இடத்திலாவது, இந்த நேரத்திலாவது புரிந்து கொண்டால் சரி!
அதேநேரத்தில், இந்த இடத்தில் இன்னொரு சாத னையாளரை நினைவுப்படுத்து வது அவசியமும் - பொருத்த மும் ஆகும்.
அவர்தான் இராஜ பாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிவ.அய்யாதுரை என்ற தமிழர் மின் அஞ்சலை (இ-மெயில்)க் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.
சுந்தர் பிச்சை புதிதாக எதையும் கண்டுபிடித்துவிட வில்லை. அவருக்குள்ள திற மைக்காக ஒரு நிறுவனத்தின் பெரிய பொறுப்புக்கு அமர்த்தப் பட்டுள்ளார். ஆனால், சிவ.அய்யாதுரையோ புதுக் கண்டுபிடிப்பினைச் செய்தவர்.
மின்னஞ்சல் மனித குல வளர்ச்சியில் ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.
ஆனால், அந்த சிவ. அய்யாதுரை எப்படிப் பார்க்கப் பட்டார்? இதனை அவரே சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொன்னது - கவனிக்கத்தக்கது (22.7.2013).
மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ் ஞானிகள் என்றால் வெள் ளைத்தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்கவேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது. வேதனை யான செய்தி, அய்தராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வரும் ஓர் ஆங்கில நாளேட் டின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அரிய கண்டுபிடிப்பினை செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும்;
தம்மைப்பற்றி செய்தி வராமல் பார்த்துக் கொண்டார் என்றும் சிவ.அய்யாதுரை பேசியதையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்த்தால், பசுத் தோல் போர்த் திய பார்ப்பன விலங்குகளைத் தெரிந்து கொள்ளலாமே!
------------------------------- மயிலாடன் அவர்கள் 25-08-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment