Search This Blog

20.12.11

பதில் சொல்வார்களா பஜனைப்பாடிகள்?

மார்கழி மாதம் பிறந்து விட்டது. ஆரம்பித்து விட்டார்கள் பஜனைகளை.

வைஷ்ணவர்கள் திருப்பாவைக் கடையையும் சைவர்கள் திருவெம்பாவைக் கடையையும் விரித்து விட்டார்கள்.

பார்ப்பன ஏடுகள் ஆண்டாள் பாடலையும், மாணிக்கவாசகர் பாடலையும் வெளியிட்டு பஜனை பாட ஆரம்பித்து விட்டன.

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால், பார்ப்பான் கெட் டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும். (விடு தலை 24.4.1967) என்றார் தந்தை பெரியார்.

பார்ப்பனர்கள் இந்தப் பாழாய்ப் போன கடவுளையும், குட்டிச் சுவர் மதத்தையும் ஏன் கட்டி அழுகின்றனர் என்பது இப்பொழுது புரிகிறதா? தினமலர் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்ற பாடலை வெளியிட்டு பொழிப்புரையையும் வழங்கியுள்ளது.

ஓங்கி உலகளந்த அந்த உத்தமன் யார்? அவன் ஓங்கி உலகளந்தது என்பது பற்றிய கதை என்ன?

மூன்று உலகங்களையும் நலமுடன் ஆட்சி செய்து கொண்டிருந்தவன் மாவலிச் சக்ரவர்த்தி. அந்த மூன்று உலகங்களையும் ஆளுவதற்கு அதிகாரத்தைக் கொடுத்தவனோ சிவன்.

மாவலிச் சக்ரவர்த்தி நல்லாட்சி புரிந்தானாம். அது தேவர்களுக்குப் பொறுக்கவில்லையாம். விஷ்ணுவிடம் முறையிட் டார்களாம். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து (குள்ளப்பார்ப்பான்) யாகம் செய்ய மாவலியிடம் மூன்றடி மண் கேட்டானாம். வாரி வழங்கும் வள்ள லான மாவலியோ அக் கணமே அளித்தானாம்.

அந்தக் குள்ளப் பார்ப்பானாகிய விஷ்ணுவோ ஆகாயம் வரை உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், ஓர் அடியால் விண்ணையும் அளந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டானாம். (ஏன் அவாள் புராணத்தில் ஏழு லோகம் இருக்கிறதே. அவையெல்லாம் வசதியாக மறந்து போய்விட்டதோ!)

மாவலி மன்னனோ தன் தலையைக் காட்டினானாம். விஷமியான அந்த விஷ்ணு தம் காலை மாவலியின் தலையில் வைத்து அழுத்தினானாம்.

கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நல்லாட்சி செய்பவனை அழிப்பது தான் கடவுள் வேலையா? அதுவும் சூழ்ச்சியாக அழிப் பதுதான் கடவுள் யோக் கியதையா?
சரி. . . மூன்று லோகத்தையும் மாவலி ஆள்வதற்கு அருள் பாலித்து அதிகாரம் கொடுத்தவன் சிவன் அல்லவா? சிவனால் அருள் பாலிக்கப்பட்டவனை விஷ்ணு எப்படி அழிக்கலாம்?

ஒன்று புரிகிறதா? இது சிவனை முதற்கடவுளாக ஏற்றுக் கொண்ட கோஷ் டிக்கும், விஷ்ணுவை முதல் கடவுளாக ஏற்றுக் கொண்ட நாமதாரிக் கோஷ்டிக்கும் சிண்டுமுடிச் சண்டை என்று புரிகிறதா?

இந்தக் குப்பையைக் கிளற மார்கழி மாதம் முழு வதும் பாடப்போகிறார்கள்.

பெண்களை நீராட அழைக்கிறார்களாம். அதற்குத்தான் இந்தப் பாட்டுகள். தேர்வு நேரம் பிள்ளைகளைப் படிக்க விடாமல் கோவில்களில் ஒலி பெருக்கி வைத்து, இந்தக் குப்பைகளை ஒலிபரப்புகிறார்கள். சரி. . . இந்த ஒலி பெருக் கியைக் கண்டுபிடித்த வன் விஷ்ணுவா, சிவனா? ஒலி பெருக்கி வைத்து கோவில் களில் பஜனைப் பாடல் களை ஒலி பரப்பிட எந்த ஆகமத்தில் கூறப்பட்டு இருக்கிறது?

பதில் சொல்வார்களா பஜனைப்பாடிகள்?

---------------------"விடுதலை” 20-11-2011

6 comments:

kambathasan said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

தமிழக ஊடகத் துறையினரின் முக்கியக் கவனத்துக்கு...


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழர்கள் மலையாளிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் - அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக எதிர் நடவடிக்கை கள் நடந்து வருகின்றன.

கேரள மாநில தொலைக்காட்சிகள் மலையாளிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பெரிதுபடுத்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில் தமிழர்கள் தாக்கப் படுவது முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

இதனைப் புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தமிழ்நாட்டில் கேரளக்காரர்கள் தாக்கப்படுவது போன்ற தகவல்களை மிகைப்படுத்தி ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களும் மலையாள மொழியிலும் தொலைக்காட்சி களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அவற்றிலும் கேரளக்காரர்களைத் தமிழர்கள் தாக்குவது போன்ற காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றன. கேரளக்காரர்களின் யுக்தி தமிழ் ஊடகங்களுக்கு இல்லாமல் போவதேன்?
---”விடுதலை” 20-11-2011

தமிழ் ஓவியா said...

உதைபட்ட பிறகாவது புத்தி வரவேண்டாமா?


முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை உணர்ச்சிகளைத் தூண்டி விட்ட பிரச்சினையாகி விட்டது. இதற்கு முதல் காரணம் கேரள மாநில அரசியல்வாதிகளே!

கேரளாவில் நடைபெற உள்ள ஒரு இடைத் தேர்தலை மய்யப்படுத்தி இந்த வேலையை கேரள அரசியல்வாதிகள் செய்து கொண்டுள்ளனர். இந்த உண்மையை இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவரை அறியாமலேயே போட்டு உடைத்து விட்டார். அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பது வேறு பிரச்சினை!

உணர்ச்சி வெறியாகி தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை சென்ற அய்யப்பப் பக்தர்கள்கூட கேரள மாநில வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில் சென்ற பக்தர்களும், அவர்தம் வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யப்பப் பக்தர்கள் உள்ளூர் கோவில்களிலேயே இரு முடிகளை இறக்கி வழிபட்டுத் திரும்பியுள்ளனர்.

தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்துகூட ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார்.

பக்தர்கள் ஏன் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும்? உள்ளூரில் கோவில்கள் இல்லையா என்ற முறையில் கருத்து ஒன்றினைத் தெரிவித்தார் என்றவுடன், இந்து மதத்துக்கே முழுக் குத்தகை எடுத்துள்ளதாகக் கருதிக் கொண்டு இருக்கும் திருவாளர் இராம. கோபாலர் விட்டேனா பார்! என்று எகிறிக் குதித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் என்றால் சாதாரண தெய்வமா? அங்கே செல்லுவதைத் தடுக்கலாமா? அதற்கு மாற்றுக் கருத்துக் கூறலாமா என்கிற முறையில் தாண்டிக் குதித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் ஒன்றும் பகுத்தறிவுவாதியோ, நாத்திகரோ அல்ல. கட்சியைத் தொடங்குவதற்குமுன்பு கூட கட்சியின் கொடியை திருப்பதி ஏழுமலையான் பாதாரவிந்தத்தில் வைத்து வணங்கிதான் எடுத்துக் கொண்டு வந்துள்ளார் (இவர் மட்டும் உள்ளூர் கோவிலை மறந்துவிட்டு, திருப்பதி ஏன் சென்றார் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது!)

நடிகர் விஜயகாந்துக்கு வந்த திடீர் கோபம் தமிழ்நாட்டுப் பக்தர்கள் கேரளக்காரர்களால் தாக்கப்படுகிறார்களே, அப்படி இருக்கும்போது, ஏன் அங்கு செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் -அதைக் கூடப் பொறுக்க முடியாதவராகத் துள்ளிக் குதிக்கிறார் இந்து முன்னணி மாநில அமைப்பாளர்.

இருவரையுமே நாம் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. உங்கள் மதம் அல்லது உங்கள் பக்தி ஒற்றுமையை வளர்த்திருக்கிறதா? புலிகளின்மீது சவாரி செய்யும் அய்யப்பன் தன்னை நாடிவரும் பக்தர்களைக்கூடக் காப்பாற்ற முடியாத நிலையில் தானே இருக்கிறான்?

அய்யப்பனுக்காக ஒரு மாத காலம் விரதமிருந்து மார்கழி மாதக் குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் காலை - மாலை இரு வேளையும் குளிர் தண்ணீரில் குளித்துவிட்டு சுத்த பத்தமாக இருந்து, முகச் சவரம்கூடச் செய்து கொள்ளாமல், இரு முடி தரித்து சபரிமலைக்குச் சென்றால், தங்கள் மாநிலத்திற்கு வரும் பக்தர்கள் என்றுகூடப் பார்க்காமல் மலை யாளிகள் தாக்குகிறார்கள்; விரட்டுகிறார்கள் என்றால், இதன் நிலைமை என்ன?

தம்மை நாடி வரும் பக்தர்களைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள், பக்தர்களின் வேறு எந்தக் குறையைப் போக்கப் போகிறான்? ஒரே ஒரு மணித் துளி கொஞ்சம் சிந்தனையைச் செலவழிக்கக் கூடாதா?

உருவமற்ற கடவுள் என்று ஒரு பக்கத்தில் உபதேசித்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு கோவில்களைக் கட்டி, புதுப்புது கதைகளை ஜோடித்து, தல புராணங்கள் எழுதி, மனதில் தோன்றியதையெல்லாம் உருவங்களாகச் செதுக்கி - இது பெரிய கடவுள் - வல்லமை மிக்க கடவுள் - மற்ற ஊர் கடவுள்களைவிட சக்தி வாய்ந்தவர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, உண்டியல் வைத்து வசூல் செய்வது என்பது பச்சையான பித்தலாட்ட வியாபாரம் அல்லாமல் வேறு என்னவாம்?

உதைபட்ட பிறகாவது நல்ல புத்தி வர வேண்டாமா? உள்ளூர் கோவிலை மதிக்காமல் வெளி மாநிலக் கோவில்களுக்குச் செல்லுவதன் தாத்பரியம் என்ன? உள்ளூர் கடவுளுக்குப் பவர்கட் என்ற பொருளில் அல்லவா?

பக்தி என்று வந்து விட்டால் புத்தி கெட்டுப் போய் விடுவதால் தானே இவ்வளவு தெருப் புழுதிகளும்?

விரதம் இருந்து இருமுடி தரித்து சபரிமலைக்குச் செல்லும் வழியில் தங்களுக்கு ஏற்பட்ட தாக்கு தலுக்குப் பிறகாவது பக்தர்கள் திருந்த வேண்டும் என்பதே நமது மெய்யான வேண்டுகோள்!
-விடுதலை தலையங்கம் 20-12-2011

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்கும், பத்மநாபசுவாமியும்


- பொறியாளர் பி.கோவிந்தராசன்

1. பத்மநாபசாமியின் தங்கப் புதையல்

பாடுபட்டுத் தேடிய பணத்தையும், பொன்னையும், மணியையும், பயன்படுத் தாமல் மண்ணில் புதைக்கும் மனிதர் களை அறிவிலிகள் என்றார் புலவர். இது மனிதர்களுக்கு மட்டும் சொல்லப் பட்டதல்ல. திருநீற்றைக் கொடுத்துத் தங்கத்தைச் சேர்க்கும் கடவுள்களுக்கும், மதவாதிகளுக்கும், சாமியார்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் தங்கப் புதையல்களை பெட்டி பெட்டியாகச் சேர்த்து வைத்து, திறப்பதற்கு பிரசன்னம் பார்க்கும் பத்மநாபசுவாமிக்கும், திருவாங் கூர் சமஸ்தான் மன்னர் பரம்பரைக்கும் பொருந்தும். கடவுள்களுக்கு எதற்காக, ஆராதனையும் அபிஷேகமும் செய்யப் படுகின்றது? மக்களின் நலன்களுக்காக அருள் பாலிப்பதற்காக கடவுள்களுக்கு, கோவில்களும், அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன. கடவுள்கள் தங்கள் கடமைகளை செய்யத் தவறும்போது மக்கள் மூட நம்பிக்கையில் இருந்து விடுபட்டு, மக்கள் நலனுக்காக பாடுபட சில மனிதர்கள் முன் வருகிறார்கள். ஆண்டவன் கைவிட்டும், ஆளுகின்ற ஆங்கிலேய இந்திய அரசு கைவிட்டும், தன் சொந்த நகைகளையும், சொத்துக் களையும் விற்று முல்லைப் பெரியாற்றில் அணை கட்டிய பென்னி குயிக், கடவுள் களைவிட பன்மடங்கு உயர்ந்தவர். பென்னி குயிக் மதம், மொழி, நாடு, குடும்பம் ஆகியவற்றைக் கடந்து, மக்கள் நலனைப் போற்றியதால் தங்கப் புதை யலை வைத்துக் கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கும் மற்றும் பிரசன்னம் பார்க்கும் மந்திர தந்திர வாதிகளுக்கு கட்டுப்படும், பத்ம நாபசு வாமியை விட பன்மடங்கு உயர்ந்தவர். ஆம், மனிதன் கடவுள்களை விட உயர்ந் தவன் என்ற தந்தை பெரியாரின் கொள் கைகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

2.முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை 1886 இல் கட்டிய போது, கேரள மாநிலம் உருவாகவில்லை. இடுக்கி அணை கட்டப்படவில்லை. அப்போது திருவாங் கூர் சமஸ்தானம் இருந்தது. பிரிட்டிஷ் இந்திய அரசின் கீழ் இருந்த மெட்ராஸ் பிரஸிடென்ஸி, 999 ஆண்டுகளுக்கு திருவாங்கூர் மன்னர் (கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிக்கு மன்னர்) உடன் ஒப்பந்தம் போட்டனர். இதன்படி திருவாங் கூர் மன்னர், அணை கட்டுவதற்கான நிலத்தைத் தந்தார். 1440 அடி நீளமும், 158 அடி உயரமும் கொண்ட அணை கட்டப்பட்டது. தேக்கிய நீரை, மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு, பாறைகளை வெட்டி கால்வாய் மற்றும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு குகையமைப்பு (Tunnel) மூலம், அப்போதைய சென்னை ராஜதானியைச் சேர்ந்த மாவட்டங் களுக்கு, சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங் களுக்கு இதனால் பாசன வசதி கிட்டியது. அதே சமயம் இடுக்கி, கோட் டயம், எர்ணாகுளம் போன்ற மாவட் டங்கள் வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...

3. மாநிலங்களும், நதிகளும்

நாடு சுதந்திரம் அடைந்தது 1947 இல் திருவாங்கூர் சமஸ்தானம் B பிரிவு மாநிலமாக மாறியது. மன்னர்கள் ராஜப் பிரமுகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே நிலை 1950 இல், இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோதும் நீடித்தது. பின்னர் 1956 இல் மொழிவாரி மாநிலங் கள் அமைக்கப்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் மதராஸ் ராஜ தானியைச் சேர்ந்த சிறிய பகுதிகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப் பட்டது. பின்னர் திருவாங்கூர் சமஸ் தானப் பகுதியைச் சேர்ந்த கன்னியா குமரி மாவட்டம், தமிழ்நாட்டுடன் சேர்க்கப் பட்டது. இதனால் முல்லைப் பெரியாறு அணை கட்ட ஒப்பந்தம் செய்த திரு வாங்கூர் சமஸ்தான மக்களின் ஒரு பகுதி தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என அறியலாம்.
இவ்வாறு கேரள மாநிலம் உருவான பின்பு, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழ்ப் பகுதியில், இடுக்கி அணை (கொள்ளளவு 7.1 Tmc) புனல் மின்சாரம் தயாரிக்கக் கட்டப்பட்டது. இந்த அணைக்கும் போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. இதனால் இடுக்கி அணை முழுப்பயன் தரவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிந்து, தி.மு.க. ஆட்சி முடிந்து, புதிய ஆட்சி வந்தபோது 1979 இல் கேரள அரசு, அணையில் கசிவு ஏற்பட்டது எனக் கூறி அணை உடையும் ஆபத்து உள்ளதாகப் பிரச்சாரம், கேரளாவில் ஏற்படுத்தப் பட்டது. இதன் பேரில் மத்திய நீராதாரக் குழு (Central Water Commission) மத்திய அரசால் அணையை பார்வையிட அனுப்பப்பட்டது. இந்தக் குழு அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. தமிழ்நாடு அரசினை அணையை வலுப் படுத்த அறிவுறுத்தியது. அதுவரை அணையின் உயரத்தை 136 அடி ஆகப் பயன்படுத்தலாம் என தெரிவித்தது. எனவே அணை பன்மடங்கு வலுத்தப்பட் டது. உச்சநீதிமன்றமும் 2006 இல் 142 அடிவரை நீரை தேக்கி வைக்கலாம் என அறிவித்தது.

4. இந்திய அரசும், நதிகளும்:

மக்களுக்குத் தேவையான உணவும், நீரும் நதிகள் மூலம் கிடைப்பதனால் நதிகளை தெய்வமாக வணங்கினார்கள். இந்த நதிகளை மொழிவாரி மாநிலங்கள் 1956 இல் அமைக்கப்பட்டபோது மாநிலங்கள் பங்கு போட்டுக் கொண்டன. இது குறித்து இந்திய அரசியல் சட்டம் Article - 262 பிரிவில், மத்திய அரசுக் குத் தேவையான சட்டங்களை இயற்ற அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு மத்திய அரசுக்குத்தான் மாநிலங்களுக்கு இடையேயான நதிகளுக்கு நதிநீர் சிக்கல்களுக்கு முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிகளுக்கு நதிநீர் சிக்கல்களுக்கு முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. மாநிலங் களுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை. மத்திய அரசு 1956 இல் பல மாநிலத்தைச் சேர்ந்த ஆறுகள் குறித்து நதிநீர்ச் சிக்கல்களைத் தீர்க்க சட்டம் இயற்றியது. இதன்படி மாநிலங்களின் கோரிக்கைகளின் பேரில் சிவில் (குற்றம் சாராத) நீதிமன்ற நடைமுறை 108 பிரிவில் சொல்லப்பட்டவாறு நதிகள் தீர்ப்பாயம் (Tribunal) அமைக்க வழிவகை செய்யப் பட்டது. மேலே சொல்லப்பட்ட சட்டங்கள் அனைத்தும் போதிய தீர்வு தரவில்லை. எனவே கீழ்க்கண்டவாறு பரிந்துரைகள் செய்யப்பட்டன.

1. 1983 இல் பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு எடுத்த முடிவு - நடைமுறையில் உள்ள பல மாநில ஆறுகள் நீர்ப்பங்கீட்டு சட்டம் 1956 அய் நதிநீர்ச் சிக்கலை விரைவாகத் தீர்க்கும் வகையில் திருத்தப் பட வேண்டும். இந்த பரிந்துரைகள்மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2. நாடாளுமன்ற நிலைக்குழு 1998 இல் அமைச்சர் திரு. எர்ரான் நாயுடு தலைமையில், எடுத்த முடிவு - மாநில அதிகார வரம்பில் உள்ள நதிநீர் என்ற பொருளினை மாநிலத்துக்கும், மத்திய அரசுக்கும் பொது வரைவுப் பட்டியலில் மாற்றி சேர்க்கலாம். இந்தப் பரிந்துரைகள் மீது மத்திய அரசால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

5. முடிவுரை

1. நிருவாக வசதிக்காக ஏற்படுத்தப் பட்ட மாநில எல்லைக் கோடுகள் மக்கள் மனங்களைப் பிரிப்பதற்காக அல்ல; மனித பண்பாடுகளைப் பிரிப்பதற்கு அல்ல; இயற்கை வளங்களைப் பிரிப்பதற்கு அல்ல. எனவே, 1956 இல் ஏற்பட்ட மொழிவாரி மாநிலங்களால் ஏற்பட்ட பாதகங்களை நீக்குவதற்கு, சுமார் 55 ஆண்டுகள் கடந்த பின்னராவது சரியான சட்டங்களையும், நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

2. கி.பி. 400 இல் தோன்றிய கணித மேதை ஆரியபட்டருக்கு முன்பேயே, கணித அறிவைப் பயன்படுத்தி கல்லணை கட்டினார் கரிகாலர்; மன்னர் இராசராசன் பெரிய கோவிலைக் கட்டினார். மன்னர் சரபோசி சரஸ்வதி மஹால் நூலகம் அமைத்தார். சுதந்திரம் பெற்ற பின்பு 1970-களில், கடலின் குறுக்கே 2345 மீட்டர் நீளம் உள்ள பாம்பன் பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் சூயஸ் கால்வாய்க்கும், பனாமா கால்வாய்க்கும் இணையாக சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டம் துவங்கப்பட்டது. இவை தமிழர்கள் கட்டடங்களையும், கோவில்களையும், பாலங்களையும், நூலகங்களையும் கட்டி பராமரிக்கும் பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளப் பயன்படும். இத்தகைய பாரம்பரியத்தைக் கொண்ட திராவிடர்கள் வழிவந்த கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை எப்படி உடைக்கலாம் அல்லது முடக்கலாம் என்று சிந்திப்பதை விட்டு எப்படி அணையை வலுப்படுத்தலாம் என சிந்திக்கலாம்.

3. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட ஒதுக்கியுள்ள பணத்தை, ஒரு பயனுள்ள புதிய திட்டங்களை உரு வாக்குவதில் தங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கலாம்.
--விடுதலை” 20-11-2011