Search This Blog

14.12.11

உச்சநீதிமன்றம் கேரளஅரசின் காதைத் திருகியிருந்தால்...


கேரள முதல்வரின் சிந்தனைக்கு...

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை கேரள மாநில அரசின் வல்லடி வழக்கினால், தேவையில்லாத பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் நினைத்திருந்தால், இதற்கு ஏற்கெனவே முற்றுப் புள்ளியை வைத்திருக்க முடியும்.

142 அடி அளவுக்கு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று இதே உச்சநீதிமன்றம்தானே ஆணை பிறப்பித்தது?

அதனை கேரள அரசு செயல்படுத்தியதா? உச்ச நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தி விட்டு, அதற்குப் பிறகு நீதிமன்றம் வரவேண்டும்; உச்சநீதிமன்ற ஆணையைச் செயல்படுத்திட மறுப்பது - நிச்சயம் நீதிமன்ற அவதூறு என்று உச்சநீதிமன்றம் கேரள அரசின் காதைத் திருகியிருந்தால், இந்த அளவுக்கு நிலைமை மோசமாக ஆகி இருக்குமா?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒரு சட்டத்தை கேரள மாநில சட்டமன்றம் எப்படி இயற்றலாம் என்ற வினாவைத் தொடுத்திருக்க வேண்டாமா?

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அணை பலமாக உள்ளது - உடைந்துவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறுதியிட்டுச் சொன்ன பிறகு, 120 அடிக்குள் தண்ணீரைத் தேங்க வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்வதும், நிலநடுக்கத்தால் அணை உடைய வாய்ப்புண்டு என்று கேரள மாநிலம் சொல்லுவதை அலட்சியப்படுத்தி விடமுடியாது என்று இப்பொழுது உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதும் வினோதமாகவே உள்ளன.

கேரள மாநில அரசாக இருந்தாலும் சரி, உச்ச நீதிமன்றமாக இருந்தாலும் சரி, அணை பாதுகாப்பானதா - இல்லையா என்பதை முடிவு செய்யும் தகுதி - தொழில் நுட்பம் - பொறியியல் துறையைச் சார்ந்தது என்பதை அறிந்திருக்க முடியும்.

ஏற்கெனவே மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்ட எழுவர் கொண்ட நிபுணர் குழு, திட்ட வட்டமாகவே தெரிவித்து விட்டது - அணை பலமாக உள்ளது - உடையும் அபாயம் ஏதுமில்லை என்று சொல்லி விட்டதே! அத்தோடு அதனை ஏற்றுக் கொண்டு 142 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று இதே உச்சநீதிமன்றமும் கறாராக தீர்ப்பு அளித்துவிட்டதே!

இதற்குப் பிறகும் கூட ஓடி விளையாடு பாப்பா என்ற குழுப்பாட்டு ஏன், ஏன்? இந்தப் பிரச்சினை இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதலை உண்டாக்கும் அளவுக்கு முற்றிவிட்டதே - இது நல்லதுதானா - தேவையானதுதானா?

மக்களை வெறி உணர்ச்சியின் பக்கம் தள்ளி விட்டால், பிறகு அதனைச் செய்தவர்களே எவ்வளவு முயன்றாலும் எதிர்தாக்குதலைத்தான் சந்திக்க நேரும்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் (விடுதலை 13.12.2011) கேரளாவுக்கு எச்சரிக்கை ஒன்றைத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை 43 லட்சம் மலையாளிகள் வாழ்ந்து வருவதாக தமிழ்நாடு மலையாளிகள் சங்கம் 2007 இல் அறிவித்தது. இப்பொழுது அந்தத் தொகை மேலும் அதிகரித்திருக்கக் கூடும். தேநீர்க் கடை முதல் பல்வேறு தொழில்களை நடத்தித் தமிழ்நாட்டில் சுமுகமான ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நல்லுறவைப் பாதிக்கச் செய்யும் ஒரு வேலையில் கேரளம் நடந்து கொள்ளப் போகிறதா என்று தெரியவில்லை என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாரே - அதனை மீண்டும் நினைவூட்ட வேண்டிய அளவுக்கு நிலைமைகள் நாளும் கூர்மையாகி வருவது நல்லதல்ல.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்புவது, தமிழக எல்லைக்குள் வந்து ஆர்ப்பாட்டம் செய்வது, கொடியை நட்டுச் செல்லுவது, தமிழர்களைக் கண்டால் சுட்டுத் தள்ளுவோம் என்று கேரள மாநிலக் காவல்துறை அதிகாரி பொறுப்பில்லாமல் பேசுவது - இவையெல்லாம் ஒரு சார்பாக நின்று விடுமா என்பதை நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

கேரள மாநில மக்களுக்கு மின்சாரம் முதல் காய்கறி கள் வரை தமிழ்நாட்டிலிருந்துதான் அன்றாடம் செல்லு கிறது என்பது கேரள அரசுக்குத் தெரியாதா? தமிழர்களின் பெருந்தன்மையினை பலகீனமாகக் கணக்கிடலாமா?

ஒரு இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இடக்கு செய்யலாமா? இதனால் எவ்வளவு பேர் அடிபடுவார்கள்? எவ்வளவு பேர் உயிர்களைப் பலி கொடுப்பது என்ற வினாவை முன்னாள் தமிழக முதல்அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள் பழுத்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் சொல்லும் அறிவுரையை கேரள முதல்வர் சீர்தூக்கிப் பார்த்தால், அதற்கேற்ப நடந்து கொண்டால், இரு மாநிலங்களுக்கும் நல்லது!

குதிரை காணாமற் போனதற்குப் பிறகு இலாயத்தை இழுத்துப் பூட்டுவது புத்திசாலித்தனமா?

-------------------"விடுதலை” தலையங்கம் 14-12-2011

4 comments:

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கொந்தளிக்கும் உணர்வுப் பெருக்கு


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கொந்தளிக்கும்

உணர்வுப் பெருக்கு சென்னை இதழ்களில் உண்மையை

மறைத்து செய்தி வெளியிடப்படும் நேர்மையின்மை

- ராதிகா கிரி

முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி அண்மைக் காலத்தில் எழுந்துள்ள உணர் வுப் பெருக்கினைப் பற்றி ஆங்கில நாளி தழ்கள் செய்தி வெளியிடும் முறையை உற்று கவனித்தால், கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்களின் தொழில் நேர்மையி லேயே எனக்கு சந்தேகம் எழுகிறது.

மலையாள பத்திரிகைகளுக்காக எழுதுபவர்கள் உண்மையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கேரள அரசின் கருத்துகளையும், கேரள மக்களின் உணர்வுகளையும் எழுதுவது என்பது வேறு. ஆனால் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றும் மலையாள செய்தியாளர்கள் அதையே தமிழ்நாட்டில் செய்தால், அது கவலைப்பட வேண்டிய மற்றொரு செய்தி யாகும்.

முல்லைப் பெரியாறு அணை உடைந் தாலும், அந்த நீர் இடுக்கி அணையிலும் மற்ற கீழ் அணைகளிலும் சேகரித்துக் கொள்ளப்படும் என்று கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி கேரள உயர்நீதிமன்றத்தில் பிரமாண வாக்கு மூலம் தாக்கல் செய்த செய்தியை வெளி யிடாததன் மூலம் மலையாள பத்திரிகை யாளர்கள் தங்களின் தொழிலுக்கான நெறிமுறைகளில் இருந்து தவறிவிட் டனர்.

இந்தப் பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் சென் னையில் இருந்து வரும் எந்த ஆங்கில நாளிதழ்களும் இந்தச் செய்தியை வெளியிடவில்லை. அட்வகேட் ஜெனர லுக்கு எதிராக மலையாளிகள் போராட் டத்தைத் தொடங்கிய பிறகே, அதுவும் அந்த வாக்குமூலம் ஏற்படுத்திய முரண் பாட்டிற்குப் பிறகுதான் இந்த செய்தியே வெளிவந்தது.

அட்வகேட் ஜெனரலின் கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, ஆனாலும் வெளியிடு வதற்கு தகுதியான செய்தி அது என்று எந்த மலையாள பத்திரிகையாளரும் கருதவில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே நான் விரும்புகிறேன். வேறு சொற்களில் கூறுவதானால், மலையாள பத்திரிகையாளர்கள் முதலில் தாங்கள் ஒரு மலையாளி, பிறகுதான் பத்திரிகை யாளர் என்றே நடந்து கொண்டார்கள் என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக ஆய்வு செய்ய என்னைத் தூண்டியதே, சென்னை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழில் நவம்பர் 24 அன்று வெளியான கட்டுரைதான்.

டைமின் கருத்துஎன்ற கதைக்குக் கீழே அளிக்கப்பட்டுள்ள கருத்து: தமிழ் நாட்டு திரைப்பட அரங்குகள் நிர்பந்தத் துக்குப் பணிந்தன. டேம் 999 படம் திரையிடப்படவில்லை என்று ஏதும் அறியாதவர்போல் தொடங்கிய இக் கருத்து, மூன்றாவது வாக்கியத்தில், உணர்ச்சி பூர்வமான முல்லைப் பெரியாறு பிரச்சினையை தமிழகத்தின் தென் மாவட்ட மக்களிடையே அனு தாபத்தை ஏற்படுத்த அரசியல் கட்சி களால் அடிக்கடி தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முல்லா பெரியாறு (மலையாள எழுத்திலும் உச்சரிப்பிலும் முல்லை என்று எழுதப்படுவதில்லை; முல்லா என்றே எழுதப்படுகிறது; பேசப்படுகிறது. கேரள பத்திரிகையாளர்களும், டைம்ஸ்* ஆஃப் இந்தியாவும் இச்சொல்லைத்தான் பயன் படுத்துகின்றன.) கேரளத்தில்தான் இது உணர்ச்சி நிறைந்த ஒரு பிரச்சினையாக விளங்குகிறதே அன்றி, தமிழ்நாட்டில் அவ்வாறு இருக்கவில்லை. என்றாலும், தமிழ்நாட்டிலும் இந்தப் பிரச்சினையை உணர்ச்சி நிறைந்ததாக தங்களது பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கேரள அரசும், பத்திரிகை யாளர்களும், மலையாளிகளும் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
எனவே, இக்கட்டுரையாளர் சென் னையில் வாழ்ந்து பத்திரிகையாளராகப் பணியாற்றுபவராக இருந்தாலும், மலை யாளிகளின் கருத்தே இந்த டைம்சின் கருத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சென்னை டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் செய்தி அறை எப்படி அமைந் திருக்கிறது என்பதை ஊடகங்கள் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ரெசிடென்ட் ஆசிரியர், அரசியல் ஆசிரி யர், பெருநகர் ஆசிரியர் போன்ற அனைத்து முக்கியப் பதவிகளிலும் மலையாளிகளாகிய, ஒரு நாயரோ, மேனனோ தான் இருக்கின்றனர்.

முன்பு அங்கு பணியாற்றிய ஒரு செய்தியாளர், அங்கு செய்தி அறையில் உள்ளவர்கள் தங்களுக்குள் எப்போதும் மலையாளத்திலேயே பேசிக் கொள் வார்கள் என்று கூறுகிறார். மற்றொரு முன்னாள் பணியாளரும், சென்னை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தமிழர்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். தமிழ்நாட்டின் நலன் புறக்கணிக்கப் படுவதாக உணர்ந்தபோது நானும் மற்றொரு சகபணியாளரும் அதைப் பற்றி விவாதிப்போம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

சென்னை டைம்ஸ் அலுவலகத்தை ஓணம் பண்டிகையின்போது அலங்காரம் செய்ய அனுமதித்த நிருவாகம், தமிழ்ப் புத்தாண்டின்போது அவ்வாறு அலங் காரம் செய்ய அனுமதிக்கவில்லை. இப்பிரச்சினையை எங்களில் சிலர் எழுப்பினோம். என்றாலும் எதுவுமே நடக்கவில்லை என்று ஒருவர் கூறினார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் படிப் பதைத் தவிர அதனுடன் வேறு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு மூத்த பத்திரி கையாளர், தமிழ் மக்களும், அவர்களின் கலாச்சாரமும் எப்போதுமே ஆங்கில ஊடகத்தினரால் அலட்சியப்படுத்தப் பட்டே வந்திருக்கின்றன. அதன் முக்கிய காரணமே ஊடகங்கள் மேல்தட்டு வர்க்கத்தினரின் செல்வாக்கு நிறைந்தது என்பதுதான். எனவே, ஆங்கில - தமிழ் செய்தி இதழ்களில் செய்திகள் வெளி யிடப்படுவதில் ஒரு பெரும் பாகுபாடு இருந்தது என்று கூறுகிறார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச் சினையைப் பொறுத்தவரை, மலையாள செய்தித் தாள்களின் உதவியுடன் அணையின் பாதுகாப்புக்கு எதிராக கேரள அரசுதான் முதன்முதலாக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. கேரள அரசின் முக்கிய நோக்கமே, இடுக்கி அணைக்குத் தண்ணீரைப் பெறுவது தான். முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால்தான் இது நிறை வேறும்.

கேரள அரசின் தவறான பிரச் சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் மலையாள பத்திரிகைகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு செய்தன. அதனால் அப்பிரச்சினை உணர்ச்சி நிறைந்ததாக ஆகிவிட்டது. முல்லைப் பெரியாறு அணை என்பது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய ஒன்று என்றே கேரளாவில் உள்ள ஒவ்வொரு மலையாளியும் நம்ப வைக் கப்பட்டனர். இதற்கு எந்தவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாத போதி லும், இந்த அணை எப்போது வேண்டு மானாலும் இடிந்துவிடும் என்று பல பத்தாண்டு காலமாகவே சொல்லப்பட்டு வருவதை மக்கள் இன்று நம்புகின்றனர்.

இதே உணர்வுகளின் அடிப்படையில் மலையாள பத்திரிகையாளர்களும் இதே கருத்தைப் பரப்பி வருகின்றனர். இப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களும் மலையாள பத்திரிகை யாளர்களின் பிடியில் பலமாக சிக்கி யுள்ளன. எனவே அவை கேரள கருத்தையே பிரதிபலிக்கின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டபோது தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் ஒரு மலையாளி; அப்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்தவரும் ஒரு மலையாளியே.

மக்களின் ஆவேசத்தைத் தூண்டி விட்டு, முல்லைப் பெரியாறு அணையை இடிக்கச் செய்ய வேண்டும் என்ற கேரள அரசின் கருத்தை மலையாள பத்திரிகை யாளர்கள் எதிரொலிக்க முயலும்போது, செய்தி வெளியிடும் பத்திரிகை நெறியும், நேர்மையும் பலியாகி விடுகின்றன

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு அணை பலவீன மாக உள்ளது, அது எப்போது வேண்டு மானாலும் இடிந்துவிடும் என்ற கூற்று தோற்றம் பெற்று நீண்ட காலமாகிறது.

1978 முதல் கேரளாவில் நடந்து வருபவைகளை அறிந்திருக்கும் சென்னை யில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர், திருவனந்தபுரத்தில் உள்ள மலையாள மனோரமா அலுவலகத்தில் அது தொடங் கியது. அதன் தலைவராக இருந்த பட் ரோஸ் சும்மார் மலையாள பத்திரிகை யாளர்களில் மிகுந்த புகழ் பெற்றவராவார். அன்றைய அரசியல்வாதிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவர், அவர்களுக்கு ஆலோசனை கூறுபவ ராகவும் இருந்தார். கேரளாவில் அதிகமாக விற்பனை ஆகும் மனோரமா நாளிதழ் 1978 இல் முதன்முதலாக முல்லைப் பெரியாறு அணை உடையப்போகிறது என்ற தலைப் புச் செய்தியை வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் கருணாகரன், தற்போது கேரள அரசின் ஆலோசகராக இருக்கும், அப் போதைய கேரள மாநில மின்வாரிய தலைமைப் பொறியாளர் பரமேஸ்வரன் நாயருடன் பேசியதற்குப் பிறகு இந்த தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் இடுக்கி அணை கட்டப் பட்டது முதல் அதற்குத் தேவையான தண்ணீர் நான்கு பருவ மழைக் காலங் களிலும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருந்தார் பரமேஸ்வரன் நாயர்.

இடுக்கி அணைக்கு மேலே உள்ள முல்லைப் பெரியாறு அணை ஓர் ஒப்பந் தத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சட்டப்படியான கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அப்போது பரமேஸ்வரன் நாயர் தமா ஷாக ஒரு காங்கிரஸ் தலைவரிடம், முல்லா பெரியாறு அணையின் நீர்மட்டத் தைக் குறைக்கும்படி நமது சகோதரர் எம்.ஜி.ராமச்சந்திரனிடம் நாம் கூறுவோம் என்று கூறினார் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு வேடிக்கையாகத் தொடங்கிய இந்த விஷயம், முதலில் மக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டும். பின்னர் இந்த விஷயத்தை நமது சகோதரரிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்று அவர் காங்கிரஸ் தலைவரிடம் கூறும் நிலைக்குச் சென்றது.

மலையாள மனோரமா கிளப்பிய அச்சத்தை மற்ற பத்திரிகைகள் தொடர்ந்து எடுத்து பரப்பின.

இந்தத் தொடர்கதையை சுருக்கமாகக் கூறுவதானால், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இல்லை என்று கூறி, அதன் நீர்மட்ட அளவை உயர்த்த தமிழ்நாடு அரசை உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரியில் அனுமதித்தது.

இன்று ஒவ்வொரு மலையாள பத்திரி கையாளரும் பட்ரோஸ் சம்மார் மாதிரியே செயல்படுவது, பத்திரிகைத் துறைக்கு மட்டுமன்றி உண்மையைப் பொறுத்த வரையிலும் கூட ஒரு பெரிய சோகமாகும். ஆனால், தங்களின் இத்தகைய ஆதிக்கம் நிறைந்த போக்கு, இந்தியத் திருநாட்டின் பன்முகத் தன்மையையே சீரழித்துவிடும் என்பதை அந்தப் பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ளாமல் உள்ளனர்.

திருவாங்கூர் மன்னரிடமிருந்து ஆங்கி லேயர் பெற்ற ஒரு துண்டு நிலத்துக் காகவும், சிறிது தண்ணீருக்காகவும், கேரளத்தைச் சேர்ந்த மலையாள பத் திரிகையாளர்கள் தங்கள் தொழில் நேர்மையைக் கைவிட்டுவிடத் தயாராக இருக்கிறார்களா?

(இக் கட்டுரையாளர் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் சிறப்பு செய்தியாளர் ஆவார் நன்றி: இணையதள செய்தி தமிழில் த.க.பாலகிருட்டினன்)

தமிழ் ஓவியா said...

கேரளாவின் ஆக்கிரமிப்பு கேரள அரசுக்கு தாக்கீது


முல் லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரளாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக் கில், கேரள அரசுக்கு தாக்கீது அனுப்ப மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மதுரை அழகப்பன் நகரை சேர்ந்தவர் ஆர்.வி. எஸ்.விஜயகுமார். தமிழக பொதுப்பணித் துறை முன்னாள் தலைமை பொறியாளர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் துணை தலை வராக இருந்து வரும் அவர், சங்கத்தின் சார் பில் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2003 ஆம் ஆண்டு மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய் தது. அப்போது முல் லைப் பெரியாறு அணை பகுதியிலும், நீர்வரத்து பகுதியிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப் பதாக அந்த குழு அரசுக்கு அறிக்கை அளித்தது.

கடந்த 1886 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கேரள அரசிடம் இருந்த 8,591 ஏக்கர் நிலப் பரப்பு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இந்த அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கும் முன்பு, 3,914 ஏக்கர் காலியாகவே இருந்தது. இந்த பகுதி அனைத்தும் ஒப்பந்தப்படி தமிழக அரசின் வசம் உள்ள பகுதியாகும். ஆனால் கேரள மாநிலத்துக்குள் உள்ள அந்த பகுதி முழு வதும் தற்போது ஆக் கிரமிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று முல் லைப் பெரியாறு அணைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய காவல் துறை அல்லது மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாது காப்பு பணியில் ஈடு படுத்த வேண்டும் என் றும் அந்தக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையை செயல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணைக்கும், கேரளா வுக்கும் சுற்றுலா செல் லும் தமிழக சுற்றுலா பயணிகள், தமிழக அய் யப்ப பக்தர்கள், முல் லைப் பெரியாறு அணை பகுதியில் பணியில் இருக் கும் தமிழக பொதுப் பணித்துறை பொறியா ளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.- இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, எம். வேணுகோபால் முன் னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, சிறப்பு அரசு வழக்கறி ஞர் மாங்குளம் கே. மகேந்திரன், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பணியில் இருக் கும் தமிழக பொறியா ளர்களுக்கு உரிய பாது காப்பு அளிக்கப்படும் என்றும், அய்யப்ப பக் தர்களுக்கு கேரள எல் லையான குமுளி வரை பாதுகாப்பு அளிக்கப் படும் என்றும் தெரிவித் தார். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண் டனர்.

பின்னர் ஆக்கிரமிப் புகளை அகற்றுவது தொடர்பான பிரச்சி னைக்கு மத்திய உள் துறை செயலாளர், மத் திய நீர்ப்பாசனத்துறை செயலாளர், தமிழக அர சின் தலைமை செயலா ளர், கேரள அரசின் தலைமை செயலாளர், கேரள காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்க தாக்கீது அனுப்ப உத்தர விட்டனர். பின்னர் விசா ரணையை வருகிற 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். --”விடுதலை” 14-12-2011