Search This Blog

11.1.15

கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்களுக்கான நூல்

கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?


கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி



சென்னை, ஜன. 5- கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களே, எழுச்சித் தமிழர் நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர், நண்பர் அருணன் அவர்களே, கவிஞர் கலிபூங்குன்றன் அவர் களே, அரங்கில் அமர்ந்திருக்கின்ற பல்துறை சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணனின் விளையாட்டுகளையும், தேசிய விளையாட்டுகளாக அறிவித்தால்...

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் சொன்னதற்குப் பிறகு, அதே வேகத்தில் கிருஷ்ணனின் விளையாட்டுகளை யும், தேசிய விளையாட்டுகளாக அவர்கள் அறிவித்துவிடுவ தற்கு முன்பு, ஒரு வேளை அப்படி அறிவித்தால், அவர்கள் கட்சியில் உள்ள பெண்களே ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை; அந்தச் சாமியார் பெண்கள் உள்பட.

எனவே, அதற்கு முன்பாக, உடனடியாக செயலில் இறங்கிவிடவேண்டும் என்கிற அடிப்படையில் இந்தக் கூட்டத்தை, இது சரியான கூட்டம் என்பதைவிட, சரியான நேரத்தில் கூட்டப்பட்டிருக்கின்ற, எப்பொழுதும்போல பெரியார் திடலிலிருந்து தொடங்குகிற இந்த முதல் பயணத்தில் கலந்துகொள்கின்ற நல்ல வாய்ப்பினை நானும் பெற்றமைக்காக மகிழ்கிறேன்.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய் தியை, ஒவ்வொரு விதமான விவாதத்தை அவர்கள் கிளப் பிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இன்னொருவித மான உள்நோக்கம் இருக்கக் கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றைக்கு நான் இந்த அரங்கிற்கு வருவதற்கு முன்புகூட, நாடாளுமன்றத்தில் சாக்ஷி மகராஜ் என்கிற பாரதிய ஜனதா கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர், காந்தியார் எப்படி தேசப் பற்று உடையவரோ, அதுபோல, கோட்சேயும் தேசப்பற்று உடையவர் என்று சொல்லி, பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பது செய்தி.

காந்தியாரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற அய்யம் வருகிறது

ஒவ்வொரு செய்தியையும் சொல்லுவது, பிறகு திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதை, ஏறத்தாழ இந்த இரண்டு, மூன்று வாரங்களாக அவர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக் கிறார்கள். நமக்கே இப்பொழுதுதான் தெரிகிறது, காந்தியா ரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற ஒரு பெரிய அய்யம் வருகிறது.

காந்தியாரின் தேசப்பற்றும், கோட்சேயின் தேசப்பற்றும் ஏறத்தாழ ஒரே மாதிரியானதுதான் என்று, நாடாளுமன்றத் தில் சொல்கின்ற அளவிற்கு அவர்கள் இன்றைக்கு வந்திருக்கிறார்கள்.

அதேபோல, ஒவ்வொரு வாரமும், ஒன்று சமஸ்கிருத வாரம், அதற்குப் பிறகு நிரஞ்சன் ஜோதி வாரம், பிறகு அமித்ஷா வாரம், பகவத் கீதை வாரம் என்று தொலைக் காட்சியில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நடிகரின் படத்தைப் போடுவார்களோ அதுபோல, இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்தை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது கீதையின் வாரம்.

5151 ஆம் ஆண்டு விழாவாம்!

இன்றைக்கு அவர்கள் கொண்டு வந்துகொடுத்திருக் கின்ற அந்த செய்தி, அதுவும் எந்த இடத்தில் அது சொல்லப்பட்டிருக்கின்றது என்பது ஒரு முக்கியமான செய்தி. டில்லியில் கொண்டாடப்பட்ட, நீங்கள் கவனமாக கவனிக்கவேண்டும், கீதை எழுதப்பட்ட 5151 ஆம் ஆண்டு விழாவில்.
வரலாற்றுக்கு எந்தவிதமான சான்றுகளும் தேவையில் லையா? வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லுவதெல்லாம் வரலாறா? வரலாற்றுப் பேராசிரியர் அய்யா ராமசாமி அவர்கள் எல்லாம் எதிரில் அமர்ந்திருக்கிறார்கள். இப்படி யொரு நகைச்சுவையை அவர்கள் படித்திருக்க முடியாது.

கீதையின் வயது 5151 என்று சொல்லுகிற, எந்தச் சான்றும் தேவையில்லாமல், அதற்கு ஒரு விழாவை டில்லியில் எடுக் கின்ற, அவ்விழாவில், இந்திய அமைச்சர்கள் கலந்துகொள் கின்ற நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதில், இந்தியாவினு டைய அமைச்சர் கலந்துகொள்கின்றபொழுது, கீதையின் வயது 5151, அதற்கு மேற்பட்டது என்பதாக, ஒரு பொய், ஒரு புனைவு வரலாற்று ரீதியாக உண்மையாக ஆக்கப்படுகின்ற முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது.

கீதை என்பது ஒரு இடைச்செருகல் நூல் என்றார் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், பல்வேறுவிதமான ஆதாரங்களோடு மிகச் சரியாக, இந்த ஆண்டிலேதான் கீதை இடைச்செருகலாக மகாபாரதத்தில் கொண்டுவந்து திணிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதைக் காட்டுவார். அம்பேத்கர் அவர்கள் காட்டுகின்ற காலம், பால ஆதித்த குப்தனுடைய காலம். அது ஏறத்தாழ கி.பி.500 அல்லது கி.பி.400 இல் வரவேண்டும். பால ஆதித்த குப்தன் காலத்தில் தான், கீதை என்கிற ஒரு நூல் ஒரு இடைச்செருகலாக, பவுத் தத்தினுடைய எழுச்சிக்குப் பிறகு, இங்கே ஜாதிகளினுடைய அந்த இறுக்கம் தளர்ந்து, ஜாதிகளுக்கு எதிரான ஓர் உணர்வு ஏற்பட்ட நேரத்தில், மறுபடியும் ஜாதிகளின் இறுக்கத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத் கீதை. இதனை அம்பேத்கர் அவர்கள் மிகச் சரியாக ஆய்வு செய்து சொல்லியிருக்கின்ற காலம், இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய பாடப் புத்தகங்களில் எல்லாம், குப்தர்கள் காலம் பொற்காலம்; நிறுவுக! என்றுதான் கேள்வி கேட்பார்கள்.
பொற்காலம் யாருக்கு? அவாளுக்கு - இந்தியாவிற்கு அல்ல!

அதாவது விடையை அவர்கள் சொல்லிவிட்டு, அதனை நிறுவுவதற்கு நாம் வரவேண்டும். குப்தர்கள் காலம் எப்படிப்பட்டது? என்பது கேள்வி அல்ல. குப்தர் களின் காலம் பொற்காலம், உண்மைதான் குப்தர்களின் காலம் பொற்காலம், ஒரு கேள்வி விடுபட்டு போய்விட்டது. யாருக்கு? என்கிற கேள்வி. குப்தர்களின் காலம் பொற்காலம்; அவாளுக்குப் பொற்காலம்; இந்தியாவிற்கு அல்ல.
எனவே, அவாளின் பொற்காலத்திலேயே திணிக்கப் பட்ட, இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத் கீதை. 1400, 1500 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம்.

டாக்டர் கோசாம்பி அவர்கள், தன்னுடைய வரலாற்று நூலில் எழுதுகின்ற பொழுது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சொல்கிறார். அப்படிப் பார்த்தால், 1700.

வேண்டாம், டி.ஜி.திலகரும், டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன் - கீதையைப்பற்றி மிக அதிகமான நூல்களை எழுதி இருக்கின்றவர்கள் நான் நினைக்கிறேன், ஒன்று டாக்டர் இராதாகிருஷ்ணன், இன்னொன்று நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள். இவர்கள் இரண்டு பேரும்தான்.
அண்மையில், ஒரு நாளேட்டில் ஒன்றினை எழுதியிருந் தார்கள்; கீதையைக் காப்பாற்றுங்கள் என்று. அவர்கள் எழுதியிருந்ததன் நோக்கம், இன்றைக்கு இந்த மேடையில் நமக்குப் புரிகிறது. அவர்கள் கீதையை தேசிய நூலாக ஆக்கக் கூடாது என்கிற நோக்கில், அந்தத் தலையங்கம் இல்லை.
ஏன் சும்மா இருக்கின்ற கீதையை, இப்படிச் சொல்லி, ஆளுக்கு ஆள் திட்டுவதற்கு ஒரு ஏற்பாடு செய்கிறீர்களே, என்பதுதான் அந்தத் தலையங்கத்தினுடைய அடிப்படை.

பாரதீய ஜனதாவிற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்!

நீங்கள் பார்த்தால், ஒரு 10 நாள்களுக்கு முன்புகூட, கீதையின் மறுபக்கம் நூல் இந்த அளவிற்கு விற்பனை யாகுமா என்பது தெரியாது. கீதையின் மறுபக்கம் நூலை இந்த அளவிற்கு விற்பனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கள். அதுமட்டுமல்ல, நான் மேடையில் பார்க்கிறேன், தோழர் தா.பாண்டியன் அவர்களோடு எல்லாம் நீண்ட நெடுநாள்களுக்குப் பிறகு அவரோடு சேர்ந்து மேடையில் பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக நாம் பாரதீய ஜனதாவிற்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா!

ஏண்டா, பிரிந்து கிடக்கிறீர்கள்; கறுப்புச் சட்டையும், சிவப்புச் சட்டையும், நீலச் சட்டையும் இனிமேலும் இந்த நாட்டில் பிரிந்திருக்கக் கூடாது என்பதை, பாரதீய ஜனதா கட்சி மறைமுகமாக நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதை இந்த மேடையிலேயே நான் பார்க்கிறேன்.

எனவேதான், கீதையைக் காப்பாற்றுங்கள்! என்று அந்தத் தலைப்பு; தேசிய நூல் என்றெல்லாம் சொல்லி, இதுவரைக் கும், பொதுவாக அறிவுக்களஞ்சியம், பொதுக்களஞ்சியம் என்றெல்லாம் புரூடா விட்டுக் கொண்டிருந்ததற்கு மாறாக, அது அறிவுக்களஞ்சியம் அல்ல; அது எப்படிப்பட்ட நூல் என்பதை, ஆளாளுக்குப் பேசுவதற்கு ஒரு ஏற்பாடு செய்து விட்டீர்களே, என்கிற கவலையில், கீதையைக் காப்பாற்றுங் கள் என்று ஒரு தலையங்கத்தை நான் பார்த்தேன்.

சுப.வீ.யும், அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல....
இந்து ஏட்டின் தலையங்கம்கூட, அதுபற்றிய விமர் சனத்தை எழுதியிருந்தது. இப்பொழுது பல்வேறு தொலைக் காட்சிகளில், பகவத் கீதைபற்றிய விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில் அது நல்லது. அப்படி விவாதம் நடைபெறுகின்றபொழுதுதான், கீதையைப்பற்றிய ஒரு பொத்தாம் பொதுவான ஒரு எண்ணம் உடைந்து, உள்ளே என்ன இருக்கிறது என்பதை, நம் போன்றோர் எல்லாம் தொலைக்காட்சிகளில் எடுத்துரைப்பதற்கு என்ன காரணம், தொலைக்காட்சிகள் நம்மையும் எதற்காக அழைக் கிறார்கள் என்றால், சுப.வீ.யும், அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல; விவாதத்திற்கு வேறு தரப்பு ஆட்களும் தேவை என்பதினாலே, அருணை அழைக்கின்ற பொழுதும், என்னை அழைக்கின்ற பொழுதும், நம்முடைய கருத்துடையவர்களை கவிஞரை அழைக்கின்ற பொழுதும், அருள்மொழியை அழைக்கின்ற பொழுதும், கீதையைப்பற்றி இன்னொரு பக்கம் இன் றைக்கு மக்களிடத்தில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு வாசகர் தொலைப்பேசியில் என்னிடத்தில் கேள்வி கேட்டார்!

கீதை என்பது ஒரு பொதுவானா நூலா? இந்துக்களின் புனித நூல் என்று சொல்லுவதுகூட மிகவும் பிழையாம். இந்துக்கள் என்று தங்களை பல பேர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள்தானே 80 சதவிகிதம் உள்ளனர். நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங் கேற்கும்பொழுது, ஒரு வாசகர் தொலைப்பேசியில் என் னிடத்தில் கேள்வி கேட்கிறார், இந்துக்கள்தானே 80 சத விகிதம்; ஏன் அவர்களின் நூலை, இந்தியாவினுடைய தேசிய நூல் என்று ஏற்கக்கூடாது? என்று.

நான் அவரிடம் கேட்டேன், இந்துக்கள் 80 சதவிகிதம் என்கிறீர்களே, இந்துக்களில் சூத்திரர்கள் எத்தனை சதவிகிதம்? தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை சதவிகிதம்? பஞ்சமர்கள் எத்தனை சதவிகிதம்? எல்லோரும் சமமாக இந்துக்களில் மதிக்கப்படுகிறார்களா? எல்லோருக்கும் கோவில் கருவறைக்குள் போவதற்கு அனுமதி உண்டா? நீங்கள் இந்துக்கள் என்று சொல்லுகின்றவர்கள் 80 சதவிகிதம் என்று சொல்லுகிறீர்களே, 80 சதவிகித மக்களும் சமமாகக் கருதப்படுகின்ற இடம் ஏதேனும் ஒன்று உண் டென்று சொன்னால், அது வாக்குச் சாவடி மட்டும்தானே, நண்பர்களே!

வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி அழைக்கின்றார்கள்

யாரும் கோவில் கருவறைக்குள்ளே வரக்கூடாது என்று சொல்பவனும்கூட,  யாரும் வாக்குச் சாவடிக்குள் வராதே என்று சொல்வதில்லை. வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி அழைக்கின்றார்களே தவிர, மற்ற இடங்களில் எல்லாம், கோவிலில், தெருவில் நிறுத்தப்படுகின்ற பொழுது, அதனை எப்படி நீங்கள் ஒட்டு மொத்தமாக ஒரு கணக்காக எடுத்துக்கொள்ள முடியும்.

கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை; அது பார்ப்பனர்களுக்கான நூல்

எனவே, அடிப்படையில் வைக்கின்ற ஒரு கருத்தைத் தாண்டி, இன்னொன்றை நான் சொல்லுகின்றேன்; அடிப் படையாக சொல்லப்படுகின்ற செய்தி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடென்றால், அப்படி மதச்சார்பற்ற நாட்டில், ஒரு மதத்தினுடைய நூலை, பொது நூலாக அறிவிக்கக் கூடாது என்பது. ஆனால், அதனைத் தாண்டி நாம் குறிப் பிட விரும்புகின்ற செய்தி, இது ஒரு மதத்திற்கும் பொது வான நூல் இல்லை. இது இந்து மதத்திற்கான நூல் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அதனுடைய பொய் மையை நாமும் புகழ்ந்துவிடுகிறோம் என்று பொருள். இது இந்து மதத்திற்கான நூல் இல்லை. இது பார்ப்பனர்களுக் கான நூல்.
எனவே, மூன்று சதவிகிதமாக இருக்கின்ற பார்ப்பனர் களுடைய நூலை, 100 சதவிகித மக்களுக்கும் பொதுவான நூலாக ஆக்காதே என்பதுதான் நமது அடிப்படையான வாதம்.

கீதையைப்பற்றி விளக்கம் சொல்வதானால், இரண்டு வரிகளில் சொல்லலாம்.
அது, வருண அமைப்பை வலியுறுத்துகின்ற நூல்;
வன்முறையைத் தூண்டுகின்ற நூல்

இந்த இரண்டைத் தாண்டி, தத்துவக் குழப்பங்களைக் கொண்டிருக்கின்ற நூல்.
கீதாச்சாரத்தில் இருப்பது சீட்டுக் கம்பெனிகளுக்கு பொருத்தமானது
நான் வேடிக்கையாகச் சொல்லவில்லை. நான் செயலாற்றுகிறவனும் இல்லை; செயல் ஆற்றாமல் இருக்கின்றவனும் இல்லை என்று கண்ணன் சொல்கிறான்.

இதற்கு என்னடா, பொருள் என்றால், இதெல்லாம் தத்துவம், உங்களுக்குப் புரியாது என்கிறான்.

புரியாதவாறே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கேட்டால், உங்களுக்குப் புரியாது என்று சொல்கிறானே தவிர, இது தத்துவக் குழப்பங்கள், யோகம்பற்றி, சாங்கியம் பற்றி, பல்வேறு தரிசனங்கள் என்று சொல்லப்படுகின்ற தத்து வங்கள் பற்றியெல்லாம் உள்ளே ஏராளமான கருத்துகள் இருக்கின்றன.
எனவே, அதில் அடிப்படையாக இருக்கின்ற செய்தி இரண்டுதான். அவர்களைக் கேட்டாலே, அவர்கள் சொல்கின்ற செய்தி, மிகச் சுருக்கமாக, கீதையினுடைய அழுத்தமான சாரம் என்னவென்று கேட்டால்,

பயன் கருதா கருமம் என்பது கீதையின் சாரம்.
கீதாசாரம் என்று கடைகளில் எழுதிப் போட்டிருப் பதற்கும், கீதை புத்தகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கீதாச்சாரம் என்று எழுதியிருப்பதெல்லாம், எது நடந் ததோ, அது நன்றாகவே நடந்தது என்பது போன்றவை யெல்லாம் கீதையில் எங்கேயும் இல்லை.
அந்தக் கீதாச்சாரத்தில் இருப்பது, இந்தச் சீட்டுக் கம்பெனிகளுக்குத்தான் பொருத்தமானது; நேற்று வரைக் கும் உன்னுடையது யாருடையதாக இருந்ததோ, அந்தப் பொருள் நாளையில் இருந்து இன்னொருவனுடையது என்று சொல்கிறபொழுது, நீ போகும்பொழுதே, அந்தக் கடையிலுள்ள அந்த வரியைப் பார்த்திருக்க வேண்டுமல்லவா!
அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று சொல்கிறார்கள்!
அவன் தெளிவாகச் சொல்லிவிட்டானே, இன்றைக்கு வரைக்கும் உன்னுடையதான பொருள், நாளைக்கு இன் னொருவனுடைய பொருளாக ஆகிவிடும். நீ எதைக் கொண்டு வந்தாய்; கொண்டு போவதற்கு.
அய்யோ, நான் பணம் அல்லவா கொண்டு வந்தேன் என்று உனக்குத் தோன்றவேண்டும் அல்லவா!

எனவே, கீதாச்சாரம் என்பது அது அன்று; கீதாச்சாரம் பயன் கருதாத கருமம் என்பதுதான்.

அதை அவர்கள் இரண்டாவது இயலிலேயே அதனைச் சொல்லி விடுகிறார்கள்.
இதில் என்ன சிக்கல் என்றால், தொடக்கத்தில் சொல்கிற பொழுது, அந்தப் பயன் கருதா கருமம் என்பது; கருமம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் நான்காவது இயலில் வெளிப்பட்டு, 18 ஆவது இயலில் முற்று பெறுகிறது.
ஆனால், சொல்கிறபொழுது, இரண்டாவது இயலில், பயன் கருதா கருமம்; அதுதான் கீதையினுடைய சாரம். இரண்டாவது இயலிலேயே இருக்கிறது.
கடமையைச் செய்வதுதான் உன்னுடைய நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர, அந்தக் கடமைக்கான பயன் களை நீ எதிர்பார்க்கக்கூடாது. இதைத்தான் திரும்பத் திரும்ப, அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று சொல்கிறார்கள்.

நான் முதலில் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைக் குறிப்பிடுகின்ற பொழுது நான் ஒன்றை  சொல்லவேண்டும்; அவர்தான் கீதையைப்பற்றி நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.


5151 என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள்!

The Bhagavad Gita  என்பதில் இருந்து தொடங்கி, The Indian Philosophy என்பதிலிருந்து,The Source of Indian Philosophy என்கிற புத்தகமும், Eastern Religions Western Thought என்கிற புத்தகமும், எல்லாவற்றிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுதியிருக்கின்ற அந்த வரலாற்றுக் குறிப்புகளை நாம் எடுத்துக்கொண்டாலும்கூட, காரணம், அம்பேத்கர் சொல்கின்ற செய்தியை நாம் ஏற்கவேண்டாம்; அய்யா பெரியார் சொல்கின்ற கருத்தை நாம் ஏற்கவேண்டாம்; அவர்களுடைய வரலாற்று ஆசிரியர் டி.ஜி.திலகர் சொல்லுவதைக்கூட ஏற்கவேண்டாம். நீங்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் சொல்லுகின்ற அந்தக் கூற்றை எடுத்துக்கொண்டாலும், ஏசு நாதருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கீதை எழுதப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் The Bhagavad Gita என்கிற புத்தகத்தில் சொல்கிறார்; அதனை உண்மை என்று வைத்துக்கொண்டாலும், 2500 ஆண்டுகள்தான். ஆனால், இவர்கள் 5151 என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள். வாய்க்கு வந்ததை வரலாறு என்று சொல்கிறார்கள்.
எனவே, அப்படி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொல்லு கின்ற அந்தப் புத்தகத்திலே அவர் குறிப்பிடுவது, அதனு டைய சாரம் என்பதே, எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று ஒரு பொதுநலத் தொண்டுபோல அதனைக் காட்டுகிறார்.

சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு நூலினை!

ஒவ்வொன்றிற்கும் இவர்கள் எழுதியிருக்கின்ற விளக்க உரை இருக்கின்றதே, இன்றைக்கு அய்கான் என்கிற அந்த நிறுவனத்திலிருந்துதான், மிகக் கூடுதலான மொழிகளில், அவர்களுடைய பிரபு மகனார் எழுதிய உரைகளோடு, பல்வேறு மொழிகளில் கீதை மொழி பெயர்க்கப்பட்டு, நாம் இங்கே சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு நூலினை. ஆனால், அவர்கள் சும்மாவே கொடுக்கின்றார்கள். நான் இணைய தளத்தில் பார்த்த பொழுது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை மொழிகளில் அவர்கள் மொழி பெயர்த்து கீதையைக் கொண்டு போயிருக்கிறார்கள். உலகில் உள்ள பல்வேறு மொழிகளில், அதனை மொழி பெயர்த்து, எல்லா மொழி பெயர்ப்புகளிலும் அவர்கள் முன்னுரையில் சொல்லியிருக் கின்ற செய்தி, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நூல் இதுதான் என்று.

வைணவத்தினுடைய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள்
இதனை பகுத்தறிவாளர்கள் ஏற்கிறோமா, இல்லையா? கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தினைச் சார்ந்தவர்கள் ஏற்கி றோமா, இல்லையா? என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்து மதம் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கின்ற சைவர்கள் ஏற்கிறார்களா? என்று கேட்டுச் சொல்லுங்கள். வைணவத்தினுடய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள். எனவே, அப்படிப்பட்ட அந்த நூலில், பயன் கருதா கருமம்; எதையும் எதிர்பார்க்காமல் இந்த உலகத்தினுடைய நன்மைக்காக உழைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது என்று இரண்டாவது இயல் சொன்னால், நான்காவது இயலில் அதற்கு இன்னொரு விளக்கம் இருக்கிறது. இந்தக் கருமம் என்பது, அவரவர் வருணத்திற்கு உரியது. வருணம் என்பது நான்கு. அந்த நான்கு வருணங்களை நான்தான் படைத்தேன்.
சதுர் வருணம் மயாசிருஷ்டம்
அந்த நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன். அதற்கு நம்முடைய உண்மை இதழில் எழுதியிருப்பது போல, அதற்கொரு வெண்டைக்காய் வியாக்கியானம் வைத்திருக்கிறார்கள்.
இந்த நான்கு வருணம் என்றால், அது குண தருமங் களைப் பொறுத்தது. அடுத்த வரியில் இருக்கிறது.
நான் ஒலிநாடாவில் கேட்டேன், சுகிசிவம்கூட அந்த விளக்கத்தைச் சொல்கிறார்.
நான்கு வருணம் என்பது பிறப்பினால் இல்லை; அது குண தரும, சுபாவம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அது குணத்தையும், அவரவருடைய செயலையும் ஒட்டி பிரிக்கப்பட்டிருக்கிறது.
மறுபடியும் தொடர்ந்து படித்துக்கொண்டே போனால், 9 ஆவது அத்தியாயத்திலே ஒரு செய்தி இருக்கிறது. நான் குறிப்பிடுவதற்குக் காரணம், இப்பொழுதெல்லாம் புத்தகங் களைத் தேடுவதில் மிகப்பெரிய சிரமமில்லை. இணைய தளத்திற்குள் சென்றால், பகவத் கீதையை உடனே படித்து விடலாம்.
                                 -----------------------------”விடுதலை” 5-1-2015

Read more: http://viduthalai.in/page-2/93977.html#ixzz3O0GsggbM
************************************************************************************


பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!

பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்!
இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை


சென்னை, ஜன. 6- பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகாபாரதம் காட்டும் தருமம் பற்றி கேள்வி எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள்
9 ஆவது இயலினுடைய 32 ஆவது பாடல் சொல்லு கிறது; கிருஷ்ணன் சொல்கிறார்:

யாருக்கெல்லாம் நான் என்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு போவேன் என்றால், பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் (சூத்திரர்கள்) ஆகி யோரும்கூட என்னிடத்திலே வந்தால், அவர்கள் உயர்ந்த இடத்தினை அடைவதற்கு நான் உதவி செய்வேன்.

சரி, இந்த இடத்திலே அவர்கள் விடை சொல்ல வேண்டும். அது குண தருமத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், பாவயோனியில் பிறந்த என்று சொன்னால், அது பிறப்பின் அடிப்படை என்பதை அவர்கள் மறைமுகமாக சொல்கிறார்களா, இல்லையா?

இதையும் தாண்டி, 18 ஆவது இயல்; அதுதான் கடைசி இயல். அங்கே போகிறபொழுதுதான், கொலையை அங்கீ கரிக்கின்ற ஒரு இடத்தை நாம் பார்க்கிறோம்.

அந்த 18 ஆவது இயலில்தான் கிருஷ்ணன் சொல்கிறார்,

ஆணவம் இல்லாத, தூய அறிவுடையவர்கள் செய்யும் எந்த ஒரு கொலையும் அவர்கள் உலகம் முழுவதையும் எதிர்த்தாலும், கொலை செய்தாலும் அது கொலையாகாது! அந்தக் கொலைக்கு அவர்கள் இணக்கமானவர்களாகவும் ஆக மாட்டார்கள் என்று சொல்லுகிற, வன்முறையைத் தூண்டுகிற கருத்தாக அது இருக்கிறது.

பார்ப்பானுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?

அதற்கும் அடுத்ததாக வருகிற அந்தப் 18 ஆவது இயலில், 41 ஆவது பாடலில் இருந்து 47 ஆவது பாடல் வரை எல்லாம் தெளிவாக, வெட்ட வெளிச்சமாகி விடு கிறது. பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இந்த நான்கு வருணம் எல்லாம் தாண்டி, குணம் தாண்டி, சுபாவம் தாண்டி, கருமம் தாண்டி பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று அந்தப் பெயர்களோடு அவை சொல்லப்படுகின்றன.

அதுமட்டுமல்ல, யார் யாருக்கு என்ன என்ன கடமை? எது அவரவர்க்கு உரிய கருமம்? என்று 44 ஆவது இயலில் இருந்து 47 ஆவது இயல் வரை சொல்லப்படும்பொழுது, மிகத்தெளிவாக, இவனுடைய - பார்ப்பானுடைய கருமம்; அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?
அவனுக்குத் தவம் செய்வது, படிப்பது!

அடுத்தது சத்திரியனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வீரம் உடையவனாக இருப்பது; எக்காரணம் கொண்டும், போரில் புறங்காட்டாமல் இருப்பது.

வைசியனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகியன.

சூத்திரனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் எது வென்று கேட்டால், மேலே சொல்லப்பட்டிருக்கின்ற மூவருக்குமான ஏவல் செய்வதுதான்.

அப்படியிருந்தால், அதையெல்லாம் நீக்கிவிடலாமாம்!

இதனைச் சொல்லி முடித்ததற்குப் பிறகு, இதை நான் அந்தத் தொலைக்காட்சியில் கேட்டேன். நான் அதிகாரத் தைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கேட்டேன், இதற்கு என்ன விடை? என்று.

அதற்கு மிக புத்திசாலியான ஊடகவியலாளர் சுதாங் கன் அவர்கள் சொன்னார், அப்படியிருந்தால், அதை யெல்லாம் நீக்கிவிடலாம் என்று.

அதாவது, அது இல்லை என்று அவர் சொல்லவில்லை. அப்பொழுது எனக்கு தருமியின் நினைவுதான் சட்டென்று நினைவிற்கு வந்தது. என்னுடைய பாட்டில் எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதனைக் குறைத்துக்கொண்டு மீதியைக் கொடுங்கள் என்பதுபோல, வேண்டியதை வைத்துக்கொண்டு, வேண்டாததை வெட்டிவிடுங்கள் என்று.

ஏதோ, கீதையில் சேர்ப்பதற்கும், வெட்டுவதற்கும் இவர் தான் அதற்கான முழு அதிகாரம் உடையவர் என்பதுபோல, தொலைக்காட்சி நிகழ்வின்போது,  தப்பாக இருந்தால், அதனை வெட்டி விடலாம் என்று சொல்கிறார்.
மிகத் தெளிவான இரண்டாவது இயல் தொடங்குகிற பொழுது, மிக நல்ல பிள்ளைபோல் தொடங்கி, 18 ஆவது இயலுக்கு வருகிறபொழுது, வெட்ட வெளிச்சமாக, இந்த நான்கு வருணங்களில், இவன்தான் வேலை இருக்கிறவன்; இவனுக்கு இதுதான் வேலை. இங்கே இருக்கின்ற சூத்திர னுக்கு இதுதான் கடமை என்று சொல்லிவிட்டு, இப்பொழுது இரண்டையும் நீங்கள் இணைத்துப் பாருங்கள்;

அவனவனுக்கு உள்ள கருமம் என்று எது என்று சொன்னதற்குப் பிறகு, மறுபடியும் இரண்டாவது இயலுக்குப் போனால், நீங்கள் பயன் கருதா கருமம் செய்யவேண்டும்.

இந்தக் கருமத்தையும்கூட, எந்த எதிர்பார்ப்பும் இல்லா மல் செய்யவேண்டும். இந்தக் கருமம் என்ற சொல்லை, நடைமுறையில் சரியாகத்தான் சொல்கிறான்.

கீதையில் சொல்கின்ற பொருள் வேறாக இருந்தாலும், இவன் சொல்கின்ற இந்தக் கருமத்தையும் நாம் என்ன செய்யவேண்டும் என்றால், எதையும் எதிர்பார்க்காமல் செய்யவேண்டும் என்று, நீ கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே!

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்றேன்; அங்கு ரஜினிகாந்த் அதனை உணர்ந்து எழுதியிருக் கிறாரா? அல்லது வேறு ஏதாவது மறுப்பாக எழுதி யிருக்கிறாரா? என்பது எனக்குத் தெரியாது.

கடமையைச் செய்! பலனை எதிர்பார்! என்று எழுதி யிருக்கிறார். இன்றைக்கும் அதனை நீங்கள் அங்கே பார்க்கலாம்!

எது உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்!
கடமையைச் செய்! பயனை எதிர்பார்க்காதே! நீ வேலை செய்வதற்காக மட்டுமே பிறந்தவன். ஏவல் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டுமே தவிர, நீ எந்தப் பயனையும் எதிர்பார்க்கக்கூடாது என்றுதான், இரண்டாவது அத்தியாயத்தில் இருக்கின்ற அந்த வரிக்கு என்ன பொருள் என்றால், இதுதான் உன் கருமம்! இன்னமும் கீதை விளக்க மாகச் சொல்கிறது.

நீ உன் வருணத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணியைவிட, இன்னொரு வருணத்தாருக்கு உரிய பணியை சிறப்பாகச் செய்வாய் என்றாலும்கூட, அதை நீ செய்யக் கூடாது. உனக்கு அரைகுறையாகத்தான் தெரியும் என்றா லும், எது உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்.
யார் விதித்தார்? மயாசிருஷ்டம், அதை நான் தான் விதித்தேன் என்று கிருஷ்ணன் சொல்கிறார்.

இதில் என்ன செய்தியை நாம் பார்க்கவேண்டும் என்றால், இடைச்செருகல்தான் இந்த பகவத் கீதை என்ப தற்கு ஒரு மிகச் சரியான எடுத்துக்காட்டை அம்பேத்கர் தன்னுடைய புத்தகத்தில் காட்டுகிறார்.
The Revolution and Counter Revolution in ancient India  என்கிற பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர் புரட்சியும் என்கிற புத்தகத்தில் அவர் ஒன்றைச் சொல்கிறார்:
பகவத் கீதையிலேதான் கிருஷ்ணன் எல்லோரையும் விட மேலானவராக அவர்தான் எல்லாம். ஆக்கமும் நானே, அழிவும் நானே! நீ செய்கின்ற புண்ணியம், பாவம் எல்லாம் என்னிடத்திலேதான் வந்து சேரும் என்று The Supreme God என்று சொல்கிற, எல்லாவற்றிற்கும் மேலான ஒரு இடத்தில் கிருஷ்ணர் உயர்த்தி வைக்கப் பட்டிருக்கிறாரே, இது இயல்பான மகாபாரதத்தினுடைய கதைப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது என்கிறார் அம்பேத்கர்.

மற்ற இயல்களில் நீங்கள் பார்த்தால், அங்கே கிருஷ் ணனின் நிலைமை மகாபாரதத்தில் என்னவாக இருக்கிறது.

அதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டையும் காட்டுகிறார். மகாபாரதம் 18 பருவங்களை உடையது. அதில் முதல் பருவம் ஆதிபருவம். இங்கே இருக்கின்ற நண்பர்கள், இளைஞர்கள் யாரும் மகாபாரதம் படிக்கவில்லை என்றால், உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். படிக்கலாம் என்று நினைத்தால்கூட ஆதிபருவத்தை விட்டுவிட்டுப் படியுங்கள்; ஆதிபருவத்தைப் படிக்கின்ற எந்தப் பையனும் உருப்படமாட்டான். ஆதிபருவத்தைப் படிக்க ஆரம்பித்து, முடிக்கும் தருவாயில் எவனாக இருந்தாலும் காம உணர்ச்சியை அவனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையாகிவிடும்.
இவர்கள் சொல்லி வைத்திருக்கின்ற பல புராணக் கதைகளில் எல்லாமே இப்படித்தான். எந்தக் கதையுமே நாம் சொல்லவில்லை.

தலை என்ன நெல்லிக்காயா? கிள்ளி எறிவதற்கு!
நான் பல கூட்டங்களில் கேட்டிருக்கிறேன், ஆக்குகிற கடவுள், காக்கிற கடவுள், அழிக்கின்ற கடவுள் எல்லாவற் றையும் சொல்லுகிறாய்; காக்கும் கடவுளுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்; அழிக்கின்ற கடவுள் சிவனுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்; ஏன் ஆக்குகிற கடவுளான பிரம்மனுக்குக் கோவில் இல்லை. கும்பகோணத்தில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கேயும் இல்லை என்றால், சிவபெருமான் வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஏன் வைக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்.

பிரம்மனுக்கு அடிப்படையில் அய்ந்து தலைகள்; ஆனால், இப்பொழுது இருப்பது நான்கு தலைகள்தான். சிவபெருமான் ஒரு தலையைக் கிள்ளி விட்டார். அது என்ன நெல்லிக்காயா?  கிள்ளி எறிவதற்கு.

ஏன் கிள்ளி எறிந்துவிட்டார் என்றால், வேறு ஒரு காரணமும் இல்லை. பார்வதி பிரம்மனுக்கு அத்தை முறை. பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்பொழுது, பிரம்மன் எட்டிப் பார்த்ததை, சிவபெருமான் பார்த்துவிட்டாராம்.
ஏனய்யா, ஒரு கடவுள் செய்கின்ற காரியமா இவை யெல்லாம். இந்தக் கதையை நாங்களா எழுதினோம்; இந்தக் கதை முழுவதையும் நீங்கள்தான் எழுதி வைத்திருக் கிறீர்கள். ஒரு கடவுளைப்பற்றிய கதையைப் படிக்கின்ற பொழுது, மனதில் ஒரு நெகிழ்ச்சி வரவேண்டாமா?

அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற சபா பருவம்!

படிக்கின்ற பொழுதே, என்னடா, இது இவ்வளவு மோசமாக இருக்கிறதே - அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாக மகாபாரதத்திலும் உண்டு. அந்த மகாபாரதத்தில் இருக்கின்ற ஆதிபருவம். அதனைத் தாண்டி வந்தால், இரண்டாவது பருவம் சபா பருவம். பிறகு ஆரண்ய பருவம்; விராட பருவம். சபா பருவத்தில் அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற காட்சி எது என்று கேட்டால்,  சபா பருவத்தில் ஒரு விருந்துக்கு தருமன், முதல் மரியாதையாக கிருஷ்ணனை அழைக்கின்றபொழுது, சிசுபாலன் என்கின்ற ஒரு சாதாரண பாத்திரம், மிகக் கடுமையாக கிருஷ்ணனை விமர்சனம் செய்கிறார். இது மகாபாரதத்தில் இருக்கிறது.

நீ கிருஷ்ணனுடைய உயரத்தை கீதையில் காட்டுவதற் கும், சிசுபாலன் அவ்வளவு கோபப்பட்டு, அவ்வளவு குறைவாக சபா பருவத்தில் கிருஷ்ணனை தருமன் முன்னிலையில் பேசுவதற்கும் இருக்கின்ற வேறுபாட்டை அம்பேத்கர் கேட்பார், அவ்வளவு பெரிய பாத்திரத்தை இப்படி ஒருவன், சாதாரணமான ஒரு மன்னன், அப்படி பேச முடியுமா?

சிசுபாலனுக்கு கிருஷ்ணனின்மேல் இருந்த கோபம் நியாயமானது. எதற்காக கிருஷ்ணன்மீது சிசுபாலன் கோபப்பட்டான் என்றால், சிசுபாலனுக்குப் பார்த்து வைத்திருந்த, அந்த ருக்மணி என்ற பெண், மண மேடையில் இருக்கின்றபொழுதுதான், கிருஷ்ணனும், அவனுடைய அண்ணனும் சேர்ந்து ருக்மணியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இதனால், சிசுபாலனுக்குக் கிருஷ்ணனின்மேல் கோபம் இருக்குமா, இருக்காதா?

கண்ணன் யாரைக் காதலித்தான் என்றால், ராதாவைத்தான்!

எனவே, தன் மனைவியை, தனக்கு மனைவியாக மண மேடையில் உட்கார்ந்திருந்த பெண்ணை, தூக்கிக் கொண்டு போய், ருக்மணியை மணந்துகொண்டு, அதற்குப் பிறகு ஏழு பெண்களை மணந்துகொண்டு, இதில் என்ன சிறப்பு என்றால், அந்த ஏழு பெண்களும் ஏற்கெனவே திருமணமானவர்கள். அதற்குப் பிறகு 10 ஆயிரம் கோபியர்கள்; இத்தனை பேரையும் விட்டுவிட்டு, கண்ணன் யாரைக் காதலித்தான் என்றால், ராதாவைத்தான் காதலித்தார்.

ஏன்டா, இத்தனை பேர்களுக்கு அப்புறம், ராதாவைக் காதலிக்கலாமா? நம்மாள் இன்றைக்கும் ருக்மணி கிருஷ் ணன் என்று யாராவது பெயர் வைக்கிறானா? ராதா கிருஷ்ணன் என்றுதான் பெயர் வைக்கிறார்கள். நண்பர் களே, ஒருவேளை கல்யாணம் செய்தால், நம்மாள்களுக்குப் பிடிக்காதோ, என்னவோ, தெரியவில்லை!

எனவே, ராதாகிருஷ்ணன்கள் செய்த அந்த செயல்களையெல்லாம் மிகக் கடுமையாக சிசுபாலன் பேசு கின்ற அந்தக் காட்சி மகாபாரதத்திலேயே இடம்பெற்றிருக் கிறது.

தருமம் என்று சொல்வதற்குப் பொதுவாக நாம் வைத்திருக்கின்ற பொருளைப் புரட்டிப் பார்க்கக்கூடாது. வள்ளுவன் சொல்லுகின்ற அறம் வேறு; அறம் என்பதற்கு இவர்களுடைய தருமம் என்கிற சொல் ஒருநாளும் பொருந்தாது. அந்த அறத்திற்கும், இந்த தருமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காரணம், நீங்கள் தருமன் என்கிற பாத்திரம் இருக் கிறதே, அந்தப் பாத்திரம்தான், மகாபாரதத்தினுடைய அத்தனை விதமான இடர்களுக்கும் அடிப்படைக் காரணம். நான் இங்கே சொல்கின்ற இந்தச் செய்தியை, ஒருமுறை கலைஞர் தொலைக்காட்சியில் கூறியபொழுது, அன் றைக்கு உண்மையிலேயே வழக்கமாக வருவதைவிட, ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள். அப்படியா? என்று கேட்டார்கள். அப்படி கேட்டவர்கள் எல்லோரும் பக்தர்கள்.

நான் மகாபாரதத்தில் இருக்கின்ற கதையைத்தான் சொன்னேன். தருமன் சூதாடி எல்லாவற்றையும் இழந்தான் என்பதுதான் பொதுவாக அறியப்பட்டிருக்கின்ற செய்தி.


ஆனால், அவன் முதல்முறை சூதாடி, எல்லாவற்றை யும் இழக்கவில்லை என்பது அழுத்தமாக நான் சொன்ன செய்தி.

தருமன் சூதாடினான்; எல்லா தம்பிகளையும் இழந்தான்; சொத்து சுகங்களை இழந்தான்; படைகளை இழந்தான்; கடைசியாக துரோபதையை இழந்தான். துரோபதையை இழந்ததற்குப் பிறகு, துரோபதி அரங்கத்திற்கு வந்து, பீஷ்மர் உள்பட அத்தனை பேரும் இருக்கின்ற சபையில், ஒரு கேள்வியை, பாஞ்சாலி கேட்டாள்.

பாஞ்சாலி கேட்ட கேள்வி!

தருமன் என்னை பணயம் வைத்து இழந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் தன்னை இழந்த பின் என்னை இழந்தானா? அல்லது என்னை இழந்த பின் தன்னை இழந் தானா? என்று கேட்டாள்.

அந்தக் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்களும், அழுத் தங்களும் இருக்கின்றது.
தன்னை இழந்த பின்தான் உன்னை இழந்தான் என்றவுடன், மறுபடியும் பாஞ்சாலி கேட்டாள்,


அவன் தன்னையே இழந்த பிறகு, என்னை இழப்பதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அடிப்படையில் அவனே அடிமையான பிறகு, இன் னொருவரை எப்படி அவன் பணயம் வைத்து விளையாட முடியும்?

அதற்கு அந்த அரங்கில் யாரும் விடை சொல்ல வில்லை. பிதாமகர் என்று சொல்லப்படுகிற பீஷ்மர் சொன்னார், மகாபாரதத்தில் இருக்கிறது நண்பர்களே, குறிப்பாக நம் வீட்டில் போய் சொல்லுங்கள்.

பீஷ்மர் சொன்னார், ஆண் அடிமையாக ஆனாலும், மடையனாக இருந்தாலும், அவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் மனைவி அவனுக்கு அடிமைதான்.


மகாபாரதம் சொல்லித் தருகின்ற சமூக வாழ்வில் செய்தி இதுதான்

உன்னைப் பணயம் வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு
ஒருவன் ஆண் மன்னனாக இருந்தாலும், சாதாரண  குடிமகனாக இருந்தாலும், அடிமையாக இருந்தாலும், எந்த நிலையில் ஆண் இருந்தாலும், அவன் மனைவி அவனுக்கு அடிமைதான். எனவே, உன்னைப் பணயம் வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று பீஷ்மர் சொன்னார்.

எல்லாம் இழந்த பிறகு, என்ன நடந்தது என்றால், திருதராஷ்டிரன், துரியோதனிடம் சொன்னான், இது நியாயமில்லை. ஒருவனை சூதாட்டத்திற்கு அழைத்து, எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியாது. துரோபதியை, அந்தப்புரத்தில் அடிமைப் பெண்ணாக அனுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், தடுத்து நிறுத்தி, வேண்டாம், பாஞ்சாலி; நீ என்னிடத்தில் இரண்டு வரம் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னான்.
இது மகாபாரதத்தில் உள்ள காட்சி.
பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது!
பாஞ்சாலி வரம் கேட்டாள்; முதல் வரம், தருமனை விடுவிங்கள் என்றாள்.
திருதராஷ்டிரன், விடுவித்தோம் என்றான்.
இரண்டாவது வரம் கேள் என்று கேட்டான்;
தம்பியர்களையும் விடுவியுங்கள் என்றாள்.
விடுவித்தேன் என்று சொன்னான். மூன்றாவது வரமும் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னபொழுது,
பாஞ்சாலி சொன்னாள், இல்லை இல்லை பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது என்று.
திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய தருமன் நல்ல மனிதனா?
அப்படியும் திருதராஷ்டிரன், இல்லை இல்லை, நானாகவே வரம் தருகிறேன். கைப்பற்றிய எல்லாவற் றையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம். படை, நாடு, செல்வம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நீங்கள் ஊர் திரும்பலாம் என்று சொன்ன திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய தருமன் நல்ல மனிதனா? நண்பர்களே, நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

என்ன நடந்தது என்றால், அதற்குப் பிறகு இவர்கள் போய்க் கொண்டிருக்கின்றபொழுது, சகுனி துரியோதனை அழைத்து, இப்படி நீ அவர்களை அனுப்பி விட்டாயே! அவர்கள் சபதம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள்; என்றைக்கு இருந்தாலும் உனக்கு ஆபத்து என்கிறார்.
என்ன செய்யலாம் மாமா என்கிறான் துரியோதனன்.
மறுபடியும் சூதாட்டத்திற்கு அழைக்கலாம் என்கிறான் சகுனி.
எப்படி வருவான்? மனநிலை சரியாக இருக்கின்ற எவனாவது வருவானா?
ஆனால், சகுனி சொன்னான், எவன் வருவானோ இல்லையோ, தருமன் வருவான்.

சகுனி சொன்ன அந்த செய்தி இருக்கிறது. சூதாட்டம் என்றால், தருமனுக்கு அவ்வளவு பிரியம். பாருங்கள் தருமன் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்!
சூதாட்டத்தில் தருமனுக்கு அத்தனை ஆசை உண்டு. மறுபடியும் அழைத்தால் வருவான்.

திருதராஷ்டிரன் மறுபடியும் பாண்டவர்களை அழைக்கக்கூடாது என்கிறபொழுது,

இல்லை, இல்லை, மறுபடியும் நாங்கள் எதையும் பணயமாக வைக்கச் சொல்லவில்லை. ஒரே ஒரு நிபந்தனையை வைக்கிறோம். தோற்றுப் போகிறவர்கள், 12 ஆண்டுகள் காட்டுக்குப் போகவேண்டும். ஒரு ஆண்டு அஞ்ஞான வாசம்; மறைமுகமாக, தலைமறைவாக இருக்கவேண்டும். இதுதான் பந்தயம்; வேறு எதையும் இழக்கச் சொல்லவில்லை என்று சொல்லி,
மறுபடியும், போகிற பாதையில், அவர்கள் ஊர் போய்ச் சேரவில்லை. போகிற பாதையில், உங்களை மறுபடியும் சூதாட அழைக்கிறார்கள் என்றவுடன், திரும்பி வந்தவ னுக்குப் பெயர்தான் தருமன் என்பது. இதுதான் தருமமா? என்று மக்களிடம் கேளுங்கள்.

நல்லதுதான் செய்திருக்கிறான் பாரதீய ஜனதா. நாம் சும்மா இவையெல்லாவற்றையும் பேச முடியுமா? இதை வைத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் பேசுவதற்கு, மிக அருமையான வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். மறு படியும் தருமர் வந்து, ஆடித் தோற்றுத்தான், 12 ஆண்டுகள் வனவாசம்; அதுதான் மூன்றாவது பருவம் ஆரண்ய பருவம்.
ஆரண்ய பருவத்தில் என்ன நடந்தது என்று நான் உள்ளே சென்றால், அடுத்து அய்ந்து பேர் இங்கே பேசவேண்டும்; நேரம் இருக்காது.
எனவே, இந்தக் குருசேத்திரம் என்று சொல்லுகின்ற கீதையில் நடந்த யுத்தமே நியாயமற்ற யுத்தம். அதனை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
அந்த யுத்தமே நியாயமற்றது. நீங்கள் எண்ணிப் பாருங்கள், பாண்டவருக்காகத் தூது வந்த கிருஷ்ணன் என்ன கேட்டான்?

எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா?

எங்களுக்கு உரிமையான பகுதியை, பாதி நாட்டை கொடு என்றுதானே கேட்கவேண்டும்.

உரிமை உள்ளவன் அப்படித்தான் கேட்பான். ஆனால், கிருஷ்ணன் என்ன கேட்டான்?

அய்ந்து நாடு கொடு; இல்லையென்றால், அய்ந்து ஊர்களைக் கொடு.
எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா? கிடைத்தவரை லாபம் என்பது இதுதான்.


அய்யா பெரியார் அவர்கள் சொல்வார், பார்ப்பனியம் என்பதே பலித்தவரை என்று. பலித்தவரை என்பதுதான் பார்ப்பனியம்.

அய்ந்து நாடு கொடு; இல்லை அய்ந்து வீடாவது கொடு; இல்லை அய்ந்து டம்ளராவது கொடு என்பது என்ன நியாயம்?

ஏன் அப்படி கேட்டார்கள் என்றால், அந்த நாடு எந்த விதத்திலும் பாண்டவர்களுக்கு உரியது அல்ல.

திருதராஷ்டனின் தம்பி பாண்டுவாக இருக்கலாம்; ஆனால், நான் சொல்வதைக் கேட்டுக் கோபித்துக் கொள்ளக்கூடாது. கர்ணன் உள்பட, எந்தப் பயலும் பாண்டுவுக்குப் பிறக்கவில்லை என்றுதான் மகாபாரதம் சொல்கிறது.
இந்திரனுக்குப் பிறந்தான், சந்திரனுக்குப் பிறந்தான் என்று சொன்னால், அப்புறம் எப்படி அவர்கள் பாண்டவர்கள். பாண்டுவுக்கே பிறக்காதவர்கள், பிறகு எப்படி பாண்டவர்கள். மனைவியைத் தொட்டால், பாண்டுவின் தலை வெடித்துவிடும் என்ற ஒரு சாபத்தை வைத்துத் திரிகின்றான்.

யார் யாருக்கோ பிறந்தவர்களுக்கு இந்த நாடு எப்படி சொந்தமாகும்?

ஆகவே, குருசேத்திரப் போரும் நியாயமில்லை; அதில் இவர்கள் பேசுகின்ற எந்தச் செய்தியும் நியாயமில்லை. முழுக்க முழுக்க வருண அமைப்பை நிலை நிறுத்துகிற வன்முறையைத் தூண்டுகிற ஒரு நூல் தேசிய நூலாக இல்லை, பாட நூலாக இருக்கக் கூடிய தகுதியும் அற்றது என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி சொல்லி, என் உரையை முடிக்கின்றேன்.

- இவ்வாறு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
                                   ----------------------”விடுதலை”6-01-2015

Read more: http://viduthalai.in/page-4/94022.html#ixzz3O3NhO2ni

9.1.15

கமல் - பாலசந்தர் ஒரு பார்வை


 








பாலசந்தர்

கமல்மீது அவருக்கு (இயக்குநர் பாலசந்தருக்கு) தன்னை விட்டு வளர்ந்து வெகு தூரம் போய் விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவ ருக்கு இருந்தது; அவன் நாத்திகனாகவே இருக் கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான் என்று என்னிடம் அவரைச் (கமலகாசனை) செல்ல மாகக் கோபித்ததுண்டு. அவர் கூப்பிட்டு, வய லும் வாழ்வும் எடுத்தா லும் நான் நடிப்பேன்; அவர்மீது நான் கொண்ட பக்தி அப்படியென்று கமலும் என்னிடம் மனந் திறந்திருக்கிறார்
- கவியரசு வைரமுத்து
(ஜூனியர் விகடன் 31.12.2014 பக்.28)


திரையுலகக் கலைஞர் என்ற முறையில் மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு எத்தனையோ சிகரங்கள் இருக்கலாம். அதில் ஒன் றும் நமக்குப் பிரச்சினை யில்லை.  அதே நேரத்தில் நடிகர் கமலகாசன் அவர்கள் நாத்திகராக இருப்பதும், அதனை வெளிப்படை யாகச் செல்லுவதும் எந்த வகையில் குற்றமுடையது? 

ஆத்திகப் பழமான மறைந்த தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள் ஒரு முறை அழகாகச் சொன்னதுதான் நினை விற்கு வருகிறது.


இன்றைய ஆத்திகம் என்பது சிறு பான்மையினர் நலம் இன்றைய நாத்திகம் என்பது பெரும் பார்வையினர் நலம் (18.2.1971) என்றாரே! - இதற்குள் ஆழமாக இருக் கும் அழகிய கருத்து முத் தினைத் தெரிந்து கொண் டால் நாத்திகத்தின்மீது மறைந்த இயக்குநருக்கு இருந்த சீற்றத்திற்கான அலகு என்ன என்று புரியும்?


கமலகாசன் மட்டு மல்ல; அவர் மதித்துப் போற்றும் தந்தை பெரியார் பழுத்த நாத்திகர்தான்; இங்கர்சால் நாத்திகர் தான்; பெட்ரன்ட் ரசல் நாத்திகர் தான்; நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளில் பெரும் பாலோரும் நாத்திகர்தான். ஏன், பாலசந்தர் பற்றி ஜூவியில் இப்படி எழுதி யுள்ள கவியரசு மானமிகு வைரமுத்தும் நாத்திகர் தானே!


இதில் குறை காண என்ன இருக்கிறது?  கலை யுலகில் முத்திரை பொறித்த அந்த இயக்குநர் சென்னை அண்ணா நகரில் சிறீ கிருஷ்ணா தோட்டத்தில் நடைபெற்ற பிராமண சங்க வெள்ளி விழா மாநாட்டில் (24,25-12-2005) கலந்து கொள்ள வில்லையா?


இவ்வளவு பெரிய கூட்டத்தில் நானும் ஒருவன் என்கிறபோது எனக்குப் பெருமையாக இருக்கிறது! என்று பேச வில்லையா?


பிறப்பை வைத்து தன்னைப் பிராமணன் என்று மார்தட்டியதைவிட பிறப்பில் பேதம் பாராதே எனும் மனித நேயக் கொள்கையுடைய நாத்திக வாதியாக ஒருவர் இருப் பதும் - அதனை வெளிப் படையாகக் காட்டிக் கொள் வதும் எத்தனையோ கோடி மடங்கு மேல் - மேலினும் மேலே!


----------------------- மயிலாடன் அவர்கள் 9-1-2015 அன்று “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன?

திருப்பதி, திருவரங்கம் கோயில்களில் உள்ளவை புத்தர் சிலைகள்தான்

திருப்பதி, திருவரங்கம் கோயில்களில் உள்ளவை புத்தர் சிலைகள்தான்
சென்னை சிறப்புக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரை

சென்னை, ஜன. 3- திருப்பதி திருவரங்கம் கோயில்களில் உள்ளவை புத்தர் சிலைகள்தான் என்றார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள். 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நம்மையெல்லாம் ஒருங்கிணைக்கின்ற ஆற்றல் வாய்ந்த தலைவர் தமிழர் தலைவர்

ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை அல்லது அணுகுமுறையை எதிர்ப்பதில், எப்போதும் முன்னிலையில் இருக்கிற கழகம், திராவிடர் கழகம். எப்பொழுதும் நம்மையெல்லாம் ஒருங்கிணைக்கின்ற ஆற்றல் வாய்ந்த தலைவர் தமிழர் தலைவர். அவருக்கு முதலில் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிசம்பர் 2 ஆம் தேதி ஆசிரியர் அய்யா அவர்களின் பிறந்த நாள். அய்யா அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை.  ஆனாலும், அவர் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்த வேண்டியது நம்முடைய கடமை. அன்றைக்கு நான் இல்லை, வெளிநாட்டில் இருந்தேன்.

பெரியார் அவர்களைவிடவும், கூடுதலாக நீடூழி வாழவேண்டும்!

அய்யா பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற அந்தக் கொள்கைக் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளை, மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்ற தமிழர் தலைவர் அவர்கள், அய்யா பெரியார் அவர்களைவிடவும், கூடுதலாக நீடூழி வாழவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில், நான் நெஞ்சார்ந்து வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வழக்கத்திற்கு மாறாக, இன்று அரங்கம் நிறைந்திருக் கிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால், என்னவெல்லாம் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோமோ, அவை அனைத்தையும், ஒவ்வொன்றாக செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் உண்மை முகத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.

இது ஆச்சரியப்படுவதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால், நாம் எச்சரிக்கையாக இருந்து, இவற்றை எதிர்கொள்ளவேண்டிய கடமை நம் முன்னால் இருக்கிறது. இவையெல்லாம் உண்மையில்லை என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. கிருஷ்ணன்பற்றிய கதைகளோ, ராமாயணத்தைப்பற்றிய கதைகளோ, மகாபாரதத்தில் சொல்லப்படுகின்ற விவரங்களோ, இவை அனைத்தும் கற்பனை என்பது மோடிக்குத் தெரியும்; சுப்பிரமணிய சாமிக்குத் தெரியும்; சுஷ்மா சுவராஜூக்குத் தெரியும்.

ராமன் என்ற ஒருவன் கற்பனையான பாத்திரம் என்பது சு.சாமிக்குத் தெரியாதா?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில், பல ஆயிரம் கோடியைக் கொட்டிய பிறகு, அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். ஏனென்றால், அந்தப் பாலம் ராமனால் கட்டப் பெற்ற பாலம் என்று சொன்னார்கள். ராமன் என்ற ஒருவன் கற்பனையான பாத்திரம் என்பது சுப்பிரமணிய சாமிக்குத் தெரியாதா? அந்தப் பாலம் ராமனால் கட்டப்பட வில்லை; அது பாலமே அல்ல என்பது சுப்பிரமணிய சாமிக்குத் தெரியாதா?

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் களுக்குத் தெரியாதா? தெரியும்!

மக்களின் பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கான ஆதாயமாக அதைப் பயன்படுத்திக் கொள் கின்ற ஆற்றல் வாய்ந்தவராக அவர்கள் இருக்கிறார்கள். நாம் மிக எச்சரிக்கையாக இவற்றை அணுகவேண்டும்.

பள்ளிக்கூடத்திற்கே செல்லாத பாமரர்கள்; அரிச் சுவடியே கற்காத நம்முடைய மக்கள், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இப்பொழுது சொல்லுங்கள் என்றால், சொல்லுவார்கள். அவர்கள் யாரும் மகாபாரத புத்தகத்தை எடுத்து, படித்து கற்றுக்கொள்ளவில்லை. ராமாயண புத்தகத்தை எடுத்துப் படித்து கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எந்தக் கிராமத்திற்குச் சென்று நீங்கள் ராமனைப்பற்றி கேட்டாலும், ஓரளவிற்காவது அந்தக் கதையை சொல்லுவார்கள். சீதையைப்பற்றி சொல்லுவார் கள்; கிருஷ்ணனைப்பற்றி சொல்லுவார்கள்; பாண்டவர் களைப்பற்றி சொல்லுவார்கள்; கவுரவர்களைப்பற்றி சொல்லுவார்கள்.

ஒட்டுமொத்த மக்களும் மயங்குவார்கள், நானே அதில் மயங்கி இருக்கிறேன்

எங்கள் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்; அவர் இரண்டாம் வகுப்புக்குக்கூட போகவில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார். அவர் மகாபாரதக் கதையைச் சொன்னால், எங்கள் ஊரே உட்கார்ந்து கேட்கும். அண்ணன் சுப.வீ. அவர்கள் சொன்னபொழுது, நாம் எப்படி மயங்கினோமோ, அப்படி அவர் அதை ராகத்தோடு எடுத்துப் பாடி, ஒவ்வொரு வரிக்கும் அவர் விளக்கம் சொல்லும்பொழுது, ஒட்டுமொத்த மக்களும் மயங்குவார் கள், நானே அதில் மயங்கி இருக்கிறேன். அவர் வந்தால், ஏதாவது சொல்லுங்கள் என்று சிறிய வயதில் கேட்பேன். அந்த அளவிற்குப் படிக்காத பாமரர்களையும் கொண்டு போய்ச் சேர்ந்திருக்கிறது. அவர்கள் எவ்வளவு கெட்டிக் காரர்களாக, சாதுர்யமாக, தம்முடைய பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார்கள், தலைமுறை தலைமுறையாக. 2000 ஆம் ஆண்டுகளா? 2500 ஆண்டு களா? அல்லது அவர்கள் சொல்வதுபோல, 5151 ஆண்டு களா? என்பதல்ல. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, ஒரு கருத்தை தொடர் பிரச்சாரம் செய்து, இன்றைக்கு நம்முடைய காலத்தில் வாழுபவன் கூட, அதைப்பற்றி பேசக்கூடிய அளவிற்கு வெற்றிகரமாக அவனுடைய பிரச்சாரத்தை அவன் நிகழ்த்தியிருக்கிறான். அதுதான் மிக முக்கியமானது. நம்முடைய காலத்தில், சம காலத்தில் வாழக்கூடியவன், இந்தக் கதைகளை கேட்கவும், பேசவும் கூடிய அளவிற்கு அவனுடைய பிரச்சார யுக்தி வெற்றி கரமானதாக இருக்கிறது என்பதுதான் மிக முக்கியமானது.
படிப்பறிவில்லாத பாமர மக்களின் மூளைகளில் அதனைத் திணித்திருக்கிறார்கள்
கிராமப்புறங்களில் இன்றைக்கும் கோவில் திருவிழாக் களை கொண்டாடுகிறார்கள். அம்மன் திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள்; ஆண்டுதோறும் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் என்ன நாடகம் நடத்துகிறார்கள்? இராம நாடகம்; மகாபாரதத்தில் இருந்து ஏதேனும் ஒரு கதை. இன்றைக்கும் அது கிராமப்புறங்களில் இருக்கிறது. ஒரு காப்பியத்தை எழுதி முடித்ததோடு அவர்கள் நிறுத்தவில்லை. அந்தக் கற்பனைக் கதைகளை அப்படியே நூலாக்கிவிட்டு நின்றுவிடவில்லை. அவை களை நாடக வடிவத்தில் கொண்டு வந்து, நன்றாகப் பயிற்று வித்து, கிராமம்தோறும் அதனை எடுத்துச் சென்று, ஆடு, மாடு மேய்க்கின்ற, கூலி வேலை செய்யக்கூடிய, படிப்பறி வில்லாத பாமர மக்களின் மூளைகளில் அதனைத் திணித் திருக்கிறார்கள். ஒவ்வொரு பாமரனின் மூளைக்கும் ராமாயணம் இருக்கிறது; மகாபாரதம் இருக்கிறது. அவர் களின் பிரச்சார யுக்தி எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

சாராயம் கொடுக்கின்ற போதையைவிட,  மகாபாரதமும், ராமாயணமும் மிகப்பெரிய போதைகளாக இருக்கின்றன
எதைப்பற்றி தெரிகிறதோ இல்லையா, ராமாயணத்தைப் பற்றியும், மகாபாரதத்தைப்பற்றியும் இந்தியாவில் உள்ள சாதாரண பாமர மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கள் கொடுக்கின்ற போதையைவிட, சாராயம் கொடுக்கின்ற போதையை விட, பாமர மக்களுக்கு மிகப்பெரிய அளவில் போதை கொடுக்கக்கூடிய காப்பியங்களாக மகாபாரதமும், ராமாயணமும் இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

இன்னும் கொஞ்சம் நேரம் அண்ணன் சுப.வீ. அவர்களைப் பேசவிட்டால், நாம் அப்படியே மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்போம். என்னென்வோ பெயர்களைச் சொன்னார். தருமனைப்பற்றியெல்லாம் சொன்னார். உள்ளபடியே தருமன் ஒரு பாத்திரம், அவ்வளவுதான்! அவனை இங்கே அண்ணன் சுப.வீ. அவர்கள் தோலுரித்துக் காட்டினார். ஆனால், தருமன் பாத்திரத்தைப் படைத்தவன் யார்? அவனை நாம் மறந்துவிட்டோம். அந்தப் பாத்திரத் தைப் படைத்தவன்தான் அயோக்கியன். தருமன் என்கிற பாத்திரம் அயோக்கியன் அல்ல. எவ்வளவு கவனமாக, எவ்வளவு எச்சரிக்கையாக ஒவ்வொரு பாத்திரங்களையும் படைத்து, அதன்வழி அவனுடைய கருத்துகளைத் திணித் திருக்கிறான். உடம்புக்கு நல்லது; இதை வெறும் போதைப் பொருளாகப் பார்க்காதே; இதைக் குடித்தால், உடம்பில் இருக்கின்ற சூடு தணியும்; முதலில் ஒரு டம்ளர் பீர் குடி என்று சொல்கிறான்; பீர் குடிக்கக் கற்றுக்கொடுக்கின்ற பொழுது. அது உடம்புக்கு நல்லதாக இருந்தாலும், போதையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லாமல், இதைக் குடிப்பதினால், உடம்பில் இருக்கும் சூடு தணியும் என்று சொல்வதைப்போல, இந்தக் கதைகளின் மூலம், அவர்களின் தத்துவத்தை, இந்தப் போதையின் மூலம், அவர் களின் கருத்தியலை நம்முடைய மக்களின் மூளையில் திணித்துவிட்டார்கள். நாம் மயங்கிக் கிடக்கிறோம் என் பதை முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். நாம் மயங்கிக் கிடக் கிறோம்; பெரியார் பிள்ளைகள் விழிப்பாக இருக்கிறோம். ஆனால், அதைவிடப் பெரிதாய், பாமரர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள். இந்தியா முழுவதும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல. பலவீனத்தை மோடிக்கள், சுஷ்மாக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்
இந்தச் சந்தர்ப்பத்தை அல்லது இந்த பலவீனத்தை சுஷ்மா சுவராஜ் பயன்படுத்திக் கொள்கிறார்; இந்த பல வீனத்தை மோடி பயன்படுத்துகிறார். இப்படி சொன்னால், இது உணர்ச்சிபூர்வமான ஒரு பகுதி. எது  உணர்ச்சிபூர்வ மான விஷயமாக இருக்கிறதோ, அதனைக் கையில் எடுத்து, மக்களிடையே விவாதத்தை உருவாக்கி, கவனத்தை திசை திருப்புவதே அல்லது தம்முடைய ஆளுமையை நிலை நாட்டுவது என்பது அவர்களுடைய யுக்தி.
ஜாதியைத் தொட்டால், அது உணர்ச்சிபூர்வமானது; பெண்களைத் தொட்டால், அது உணர்ச்சிபூர்வமானது; மதத்தைத் தொட்டால் அது உணர்ச்சிபூர்வமானது; புனிதத்தைத் தொட்டால், அது உணர்ச்சிபூர்வமானது. மிகவும் உணர்ச்சிபூர்வமான பகுதி.

ஆகவே, அதனை எடுத்து, விவாதமாக்கி, அதிலிருந்து தம்முடைய ஆளுமையை நிலைநாட்டுவது என்கிற யுக்தியை அவர்கள் மிக எச்சரிக்கையாகக் கையாண்டு வருகிறார்கள். அதனை நாம் மிக கவனமாகப் பார்க்கவேண்டும்.

இன்னொரு காப்பியம் இங்கே உருவாக்கப்படவில்லை

இந்திய மண்ணிலே நமக்குத் தெரிந்து ராமாயணம், மகாபாரதம் என்பதை வீழ்த்தக் கூடிய அளவிற்கு, அந்த இரண்டையும் தோலுரித்து அம்பலப்படுத்தக் கூடிய அளவிற்கு இன்னொரு காப்பியம் இங்கே உருவாக் கப்படவில்லை. அல்லது அதைப்போல, நாடகங்களை நம்மால் நடத்திக்காட்ட முடியவில்லை, வெற்றிகரமாக! திரைப்படங்கள்மூலமாக அவற்றை நம்மால் வெளிப்படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் மகாபாரதத்தைக் காட்டினாலும், மக்கள் பார்க்கிறார்கள். மீண்டும் மீண்டும் ராமாயணத்தைக் காட்டினாலும், மக்கள் பார்க்கிறார்கள். அவ்வளவு போதைகளை உள்ளே வைத்து, மக்களை மயக்கக்கூடிய தந்திரங்களை கையாண்டிருக்கிறார்கள். இதை எப்படி நாம் எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் நமது கவலை. நம்முடைய பிரச்சார யுக்திகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. மக்களிடத்தில் இதனை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பதுதான் மிக முக்கியமானது.
எனது அருமைத் தோழர்களே, பவுத்தத்தை எதிர்த்து, இந்துத்துவம் இருந்தது. பவுத்தத்திற்கும், இந்துத்துவத் திற்கும் நிகழ்ந்த யுத்தம்தான், அதில் ஏற்பட்ட விளைவு கள்தான் இன்றைய இந்தியா. இன்றைக்கு இந்தியா எந்த நிலையில் இருக்கிறதோ, இன்றைய கட்டமைப்பு எந்த நிலையில் இருக்கிறதோ, இந்தக் கட்டமைப்பு எந்த யுத்தத் தின் விளைவாக விளைந்தது என்றால், பவுத்தத்திற்கும், இந்துத்துவத்திற்கும் இடையில் நிகழ்ந்த யுத்தத்தின் விளைவாக நிகழ்ந்தவைதான்.

மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம்தான் கவுதம புத்தராம்!
பவுத்தம், வீழ்த்தப்பட்டது; இன்றைக்கு உலகத்தில் மிகப் பெரிய மதமாக பிற நாடுகளில் வளர்ச்சி அடைந்தாலும்கூட, இந்தியாவில் அது வீழ்த்தப்பட்டது. இன்னும் சொல்லப் போனால், கவுதம புத்தரே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று, மகாயாணத்தின் மூலமாகவும் நிலைநாட்டி விட்டான். கவுதம புத்தர் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணு வின் ஒரு அவதாரம்தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு.

எல்லாவற்றையும் சுவீகரித்துக் கொள்கிறார்கள்; உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதை மிக கவனமாகக் கையாள்கிறார்கள். ஆக, இப்படிப்பட்ட நிலையில் பவுத்தம் வாழ்ந்த காலத்தில்,  அதை எதிர்ப்பதற்காக அவர் கையாண்ட யுக்தியைப்போல, இன்றைக்கு இங்கே பேசிய தலைவர்கள் சொன்னார்கள்; சைவத்திற்கும், வைணவத் திற்கும் நடந்த யுத்தம் இருக்கிறதே, அது பவுத்தத்திற்கும், இந்துத்துவத்திற்கும் நடந்த யுத்தத்தைவிட கொடூரமானது.
பல கீதைகள் இருப்பதாக நம்முடைய ஆசிரியர் அவர்கள் அவருடைய நூலிலே பதிவு செய்திருக்கிறார். ஒரு கீதையல்ல; ராமாயணத்தில், பல ராமாயணங்கள் இருப்பதைபோல, கீதையில், பல கீதைகள். அதில் வைணவத்திற்குக் கீதை எப்பொழுது உருவானது என்றால், சிவன் வழிபாட்டிற்குரியவர்கள் சிவ கீதையை உருவாக் கியிருக்கிறார்கள். அதில் வெளியில் வரவில்லை. சிவ கீதைக்கு எதிராகத்தான், இந்தப் பகவத் கீதை உருவாக் கப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதை, பாலகங்காதர திலகர் சொல்லிலிருந்தே ஆசிரியர் அய்யா அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார். பல கீதைகள் இருந்திருக்கின்றன. பதினெட்டிற்கும் மேற்பட்ட கீதை களைப் பட்டியலிட்டிருக்கிறார் அவருடைய நூலில்.
சைவ மதத்திற்கும், வைணவ மதத்திற்கும் இடையில் நடந்த யுத்தத்தின் அடையாளம்தான், உருவகம்தான் ராமாயணம். ராமாயணத்தை நீங்கள் உருவக அடிப் படையில் கவனித்தால் தெரியும்; ராமன் வைணவ மதத் தைச் சார்ந்தவன். ராவணன் சைவ மதத்தைச் சார்ந்தவன். ராமன், ராவணனை வீழ்த்துகிறான். என்றால், வைணவம் சைவத்தை வீழ்த்துகிறது. அதுதான் அடிப்படை.

தமிழனாக இருக்கின்ற நாம் ராவணனைத்தானே உயர்த்திப் பிடிக்கவேண்டும்!
நான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ் கூடல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்பொழுது ஒரு கேள்வியை எழுப்பினேன். நீங்களும் இங்கே ராவணன் வதையை நாடகமாக நடத்திக் காட்டுகிறீர்களே, இந்த ராவணன் இந்த மண்ணைச் சார்ந்தவன்தானே; தமிழன் என்றுதானே அந்த இலக்கியத்தில், காப்பியத்தில் சொல்லப்படுகிறது. தமிழனாய் இருக்கின்ற ராவணனை ஆரியத்தினுடைய எடுபிடியாக இருக்கின்ற ராமன் வந்து வீழ்த்துவதற்காக அந்தக் காப்பியம் சொல்கிறதே! நீங்கள் ராமனின் பக்கம் நிற்கவேண்டுமா? ராவணனின் பக்கம் நிற்க வேண்டுமா? தமிழனாய் இருக்கின்ற நாம் ராவணனைத் தானே உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்று கேட்டேன்.
நாங்கள் இதுவரையில் அந்தக் கோணத்தில் சிந்திக்கவே யில்லை. ராவணனை நாங்கள் அரக்கனாக மட்டுமே பார்க்கிறோம்; தமிழனாகப் பார்க்கவில்லை என்று சொன்னார்கள்.
எந்தக் கோணத்தில், எதைப் பார்க்கவேண்டும் என்பதில் தான் மிக முக்கியமான ஒரு தேவை இருக்கிறது. சைவத்தை வீழ்த்தியது வைணவம். அதற்கான உருவகம்தான், அதற்கான காப்பியம்தான் ராமாயணம். அதற்குள்ளே பல்வேறு கதைகள் இருக்கலாம்; பல்வேறு தத்துவங்கள் இருக்கலாம். ஆனால், உண்மையில், சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் வைணவம் வென்றது. இன்றைக்கு இந்தியா முழுமையும் வைணவத்தின் மேலாதிக்கம்தான். சைவம் சுருங்கிவிட்டது.
அரிஜன் என்றுதான் சொன்னார்;சிவஜன் என்று சொல்லவில்லை

சிவனை வணங்குபவர்கள் இறந்தால், சொர்க்கத்திற்குப் போவார்கள்; கைலாசத்திற்குப் போவார்கள்; கைலாசம் எங்கே இருக்கிறது என்றால், இமயமலையில் இருப்பதாகத் தான் சொல்கிறார்கள். ஆக, இமயமலையில் கைலாசம் இருக்கிறது என்று சொன்னால், அதிலிருந்து ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இமயமலை வரையில் சைவம் இருந்திருக்கிறது. இந்தியா முழுவதும் சைவ மதம் மேலோங்கி இருந்திருக்கிறது. ஆனால், இன்று இந்தியா முழுமையும் வைணவத்தின் மேலாதிக்கம்தான் இருக்கிறது. காந்தியை கோட்சே சுட்டபோதுகூட, ஹரே ராம், ஹரே ராம் என்று சொல்லிவிட்டு இறந்தார். சிவ, சிவா சிவ, சிவா என்று சொல்லிவிட்டு இறக்கவில்லை. அவர் ஒரு வைணவர். தலித்துகளுக்குப் பெயர் சூட்டும்பொழுதுகூட, அரிஜன் என்றுதான் சொன்னார்; சிவஜன் என்று சொல்ல வில்லை. அரியின் பிள்ளைகள் என்றுதான் சொன்னார்; விஷ்ணுவின் பிள்ளைகள் என்றுதான் சொன்னார். அரிஜன் அவர்கள் அரியினுடைய குழந்தைகள்; சிவனுடைய குழந்தைகள் என்று அவர் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர்.

ஆதிசங்கரர் இந்தியா முழுமையும் நடையாய் நடந்தார், எதற்காக?

அத்வானியாக இருந்தாலும், சுஷ்மாவாக இருந்தாலும், மோடியாக இருந்தாலும், அனைவரும் நாமத்தைச் சூட்டக் கூடியவர்கள்தான். ஒருவர்கூட பட்டையடிக்கக் கூடிய வர்கள் இல்லை. ஆக, வைணவம் மேலோங்கியிருக்கின்ற ராமாயணத்திற்குப் பிறகு, இந்தியாவில், வைணவம் மேலோங்கி இருக்கிறது. பவுத்தத்தையும் வீழ்த்தினார்கள். பவுத்தத்தை வீழ்த்திய பிறகு, இங்கே இந்துத்துவம் வைணவமும், சைவமும் ஒன்று சேர்ந்துவிட்டது. அரியும், சிவனும் ஒண்ணு; அறியாதவர்கள் வாயில் மண்ணு இந்தப் பழமொழி எதிலிருந்து வந்தது என்றால், நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருங்கள்; சண்டை போட்டுக் கொள்ளா தீர்கள் என்பதற்காகத்தான். பிற்காலத்தில் வந்தது. சைவ மதமே பல பிரிவுகளாக இருந்து, ஆதிசங்கரர்தான், நடையாய் நடந்து, இந்தியா முழுமையும் பயணம் செய்து, பல்வேறு குழுக்களாக இருந்த, அவர்களை வைணவ மதத்தை அல்லது சைவ மதத்தை ஒன்று சேர்த்தார். பகவத் கீதையையும் பரப்பினார்.

திருப்பதி, திருவரங்கம் கோவில்களில் உள்ளது புத்தரின் சிலைகள்தான்!

ஆக, அவர்கள் சைவத்திற்கு எதிராகவும், பவுத்தத்திற்கு எதிராகவும் ஒரே காலகட்டத்தில் யுத்தத்தை நடத்தி, வைணவத்தை இங்கே நிலைநாட்டினார்கள். ஒரு நண்பர் சொன்னார்,  திருப்பதி ஏழுமலையான் சிலையைப் பார்த்தால் தெரியும். அவருக்குப் போட்டிருக்கின்ற நாமம் மட்டும் இரண்டு கண்களையும் மறைத்திருக்கும். நாமம் என்றால், நெற்றியில்தான் போடவேண்டும். ஆனால், வெங்கடேச பெருமாளுக்கு மட்டும் கண்களே தெரியாமல் நாமம் போட்டிருப்பார்கள். எதற்காக இப்படி நாமம் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டபொழுது அவர் சொன்னார், அந்த நாமத்தை நீங்கள் எடுத்துவிட்டுப் பார்த்தால், அந்தச் சிலையின் முகத்தில் கவுதம புத்தர் தெரிவார் என்று சொன்னார். ஏனென்றால், அது புத்தரின் சிலைதான். திருவரங்கத்தில் இருக்கின்ற ரங்கநாதரின் சிலையும் புத்தரின் சிலையும்தான். திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலையும் புத்தரின் சிலைதான். எங்கெல்லாம் புத்தர் விகார்கள் எழுப்பப்பட்டிருந்தனவோ அங்கெல்லாம் அந்தப் புத்தர் விகார்களை இடித்தார்கள் அல்லது கைப்பற்றினார்கள். கைப்பற்றிய பிறகு, அதை வைணவமாக்கிக் கொண்டார்கள். சில இடங்களில் சைவக் கோவில்களாக மாற்றிக் கொண்டார்கள். மதமும், அரசும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
அரசியல் பார்வை கொண்டு பார்க்கவேண்டும்!

உலகம் முழுவதும் எல்லா அரசுகளும் ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கின்றன. அரச மதமாக அறிவிப்பு செய் திருப்பார்கள். ஆக, மதம் என்பது அரசோடு இணைந்து ஆளுமை செலுத்தக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றதாக இருக்கிறது.  ஆகவே, இந்த மதம் தொடர்பான அத்தனை விவரங்களையும் அரசியல் பார்வையோடு நாம் அணுகவேண்டி இருக்கிறது. இதை நாம் வெறும் பண்பாட்டுத் தளத்திலே மட்டுமே பார்த்துவிட முடியாது. அரசியல் பார்வை கொண்டு பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது.
இந்தியாவை இந்துஸ்தான் ஆக்கவேண்டும்; இதுதான் பாரதீய ஜனதாவின் நோக்கம். இந்துக்கள் பெரும்பான்மை யாக வாழுகின்ற நாடு; எனவே, இதை இந்துஸ்தான் என்று அறிவிக்கப்படவேண்டும். இதுதான் ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம். அதற்கு இவர்கள் என்னென்ன யுக்திகளை கையாளவேண்டுமோ, அதற்கான யுக்திகளையெல்லாம் கையாளப் போகிறார்கள். நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்கும்பொழுதே, நாமெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கவேண்டும் இந்தியா முழுமையும்.
ஆனால், அவர்கள் ஒரு சாதுர்யமான யுக்தியைக் கையாண்டார்கள் என்றால், நரேந்திர மோடி பார்ப்பன ரல்ல; பார்ப்பனரல்லாத சமுகத்தைச் சார்ந்தவரைப் பிரதம ராக்கப் போகிறோம். இந்தியா முழுவதும் இருக்கின்ற ஜாதியல்லாத தலைவர்கள் அதிலே மயங்கிப் போனார்கள். அதுதான் அவர்களுடைய யுக்தி. அதற்காகத்தான் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
                                              ---------------------------"விடுதலை” 03-01-2015

Read more: http://viduthalai.in/page-4/93871.html#ixzz3NlVm5Clo
*************************************************************************************
கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன?


கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன?
எதிரிகளை வீழ்த்த அரசியல் தளத்தில் ஒன்றுபடுவோம்!
கீதை புனித நூலா? சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரை

சென்னை, ஜன. 4- கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன? என்றும், எதிரிகளை வீழ்த்த அரசியல் தளத்தில் ஒன்றுபடுவோம்! என்று எழுச்சியுரையாற்றினார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

கிருஷ்ணனை ஒரு கற்பனை பாத்திரம் என்று சொல்லக்கூடிய துணிச்சல் இல்லை

இன்றைக்கு எல்லா மாநிலக் கட்சிகளும், பார்ப்பன ரல்லாத ஜாதி இந்துத் தலைவர்கள் தலைமை தாங்கக் கூடிய அளவிற்கு இந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சிய டைந்திருக்கிறார்கள். ஆனால், பார்ப்பனரல்லாத பெரும் பாலான ஜாதி இந்துத் தலைவர்கள், இந்துத்துவா கோட் பாட்டுக்கு எதிரானவர்களாக இல்லை, ஒன்றிரண்டு பேரை தவிர. பகவத் கீதையை மறுக்கக்கூடியவர்கள் இல்லை. கிருஷ்ண பகவானை அவன் ஒரு கற்பனை பாத்திரம் என்று சொல்லக்கூடிய துணிச்சல் இல்லை. அப்படி இருக்கின்ற தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துத்துவா கோட்பாட்டுக்குக் கட்டுப்படக் கூடியவர்களாக இருக்கிறார் கள். மிக எளிதாக அவர்களால் இதையெல்லாம் ஒப்புக் கொள்ள முடிகிறது.

தேசியப் புனித நூல் பகவத் கீதை என்று அறிவிப்பதற்கு பாரதீய ஜனதா முடிவெடுத்தால், மாநில அளவிலே வளர்ச்சி பெற்றிருக்கின்ற தலைவர்கள், இதற்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்; மறுப்பு தெரிவிப்பார்கள் என் பதை தயவுகூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழ் நாட்டில், தலைவர் கலைஞர் எதிர்ப்பார். ஆனால், அம்மா எதிர்ப்பாரா? இரண்டு பேர்தான் தமிழ்நாட்டில் முக்கியமான தலைவர்கள். 20 சதவிகிதத்திற்குமேலே வாக்கு வங்கிகள் உள்ள தலைவர்கள். நாமெல்லாம் சின்ன சின்னக் கட்சிகள். இதிலே தேர்தலில் ஈடுபடுகின்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது என்பதுதான் மிக முக்கியமானது. ஆகவே, நீங்கள் மாநிலக் கட்சித் தலைவர் களின் பட்டியலைப் போட்டுப் பார்த்தால், பெரும்பான்மை யான மாநில கட்சித் தலைவர்கள் அதிதீவிர இந்துத்துவா கருத்தியலாளர்களாகவே இருக்கிறார்கள்.

மோடியே எதிர்பார்த்திருக்க மாட்டார்; ஆர்.எஸ்.எஸ். இயக்கமே எதிர்பார்த்திருக்காது

பாரதீய ஜனதாவை இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து நம்மால் அப்புறப்படுத்த முடியுமா? என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது. நரேந்திர மோடியே எதிர்பார்த்திருக்க மாட்டார்; அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கமே எதிர்பார்த்திருக்காது. இவ்வளவு தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமர் ஆவார் என்று. அந்த அளவிற்கு அவர்கள் யுக்திகளைக் கையாளுகிறார் கள். நாம் தேர்தல் அரசியலில் வெற்றிபெறக் கூடிய யுக்தி களைப் பற்றி ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
டாக்டர் அம்பேத்கர் பவுன்டேசன்!
ஆட்சி அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ, அவர் களின் மொழிதான்; ஆட்சி அதிகாரத்தில் யார் இருக்கிறார் களோ, அவர்களின் மதம்தான் அரச மதமாகும். ஆட்சி அதி காரத்தில் யார் இருக்கிறார்களோ, அவர்களின் கோட்பாடு தான் மக்களின் கோட்பாடாகும். நாம் ஆட்சிக்கும், அதி காரத்திற்கும் தொடர்பில்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறந்தள்ளப்பட்டிருக்கிறோம். அதிகாரத் தைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் கிடக்கிறோம். புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்கள் Reduce of Induism என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில், டாக்டர் அம்பேத்கர் பவுன் டேசன் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அவருடைய எழுத்துக்களையும், பேச்சுகளையும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்.
அதில், Reduce of Induism என்ற புத்தகத்தை பல மொழிகளில் மொழியாக்கம் செய்ய வில்லை. ஏன்? தமிழிலேயே கூட இன்னும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இந்துயிசத்திற்கு எதிராக, இந்துத்துவா கோட்பாட்டுக்கு எதிரான கருத்துகள் எதுவாக இருந்தாலும், அந்தக் கருத்துகளை, மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதற்கு, அச்சப்படக்கூடியவர்களாக அல்லது தடுக்கப்படக்கூடிய வர்களாகத்தான் அதிகார வர்க்கமும் இருக்கிறது. மொழி பெயர்க்கக்கூடிய குழுவிலே இருக்கின்றவர்களுக்கும் அதில் உடன்பாடு இல்லை; அல்லது துணிச்சல் இல்லை. இவ்வளவு பெரிய பலகீனம் நம்மிடையே இருக்கிறதே தோழர்களே, அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல; தெரியாதவர்கள் அல்ல. ராமாயணம் என்பது ஒரு கதை; ஒரு புராணம். வரலாறு வேறு; புராணம் வேறு.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் நாம் படிக்கக்கூடாது!

அலெக்சாண்டர் படையெடுத்து வந்தார் என்பது வரலாறு. அதனால், அது வரலாற்றுப் பாடத்தில் இடம் பெற்றிருக்கிறது. திப்பு சுல்தான் ஒரு மாமன்னர்; அவருடைய வரலாறு பாட புத்தகத்தில் இருக்கிறது. வரலாற்றுத் துறையில் இருக்கிறது. ராமன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றான் என்பது வரலாறாக இருந்தால், அது ஏன் வரலாற்றுப் பாடத்தில் இல்லை? ஏன் வரலாற்று துறையில் அதனை வைக்கமுடியவில்லை? அதனை அப்படி வைக்க துணிச்சல் உண்டா? வைக்கமுடியுமா?

அது ஒரு கற்பனை; அது ஒரு மாயை. ஆக, தெரிந்தே அதனைப் பரப்புகிறார் கள். ஏனென்றால், நம்முடைய பலவீனம்; ஆகவே, இந்தக் கதைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலில்கூட, மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் நாம் படிக்கக்கூடாது; நீங்கள் படிக்கத் தொடங்கினால், உங்களை அறியாமலேயே வழுக்குப் பாறையில் கால் வைத்ததைப் போல இறங்க நேரிடும். அவ்வளவு ஆபத்தான காப்பியங்கள்.
கம்பன் கழகத்தில் என்னைப் பற்றி தெரியாமல் அழைத்தார்கள் விழுப்புரத்திற்கு. நான் அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முடிக்கும் தருவாயில், கம்பன் மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த படைப்பாளி; ஆனால், இந்த இனத்திற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துவிட்டார் என்றுதான் கருதுகிறேன். ராமாயணத்தை தமிழாக்கம் செய்ததுதான், தமிழ் மக்களை வீழ்த்தியது என்று நான் முடித்தேன்.

இன்றைக்கும் இலக்கியத் துறைக்குச் சென்று ராமாய ணக் கதைகளைச் சொன்னால், கூட்டம் நிறைய  இருக்கும். தமிழ்த் துறையில்கூட ராமாயண வகுப்பெடுக்கிறார்கள் என்றால், மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற மாட்டார்கள். அவ்வளவு கதைகள். போதை நிறைந்த ஒரு இலக்கியம் அது. கம்பன் மிக அழகாக, தமிழ்நாட்டில் நிறைய தலைவர்கள், நம்முடைய கோட்பாட்டைப் புரிந்த தலைவர்கள், பெரியாரை மதிக்கக்கூடிய தலைவர்கள், ஆனாலும்கூட, இன்றைக்கும் கம்பனுடைய பெயரிலே ராமா யணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரை மதிக்கக்கூடிய பல தலைவர்கள், நம்முடைய தொலைக் காட்சிகளில் இன்றைக்கும் அந்தக் கருத்துகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மகாபாரதமும், ராமாயணமும் அடுத்தத் தலைமுறைக்குப் போய்ச் சேராமல், தடுப்பதில்தான் நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது தோழர்களே!


திருக்குறளை மக்களிடத்தில் கொண்டு செல்லக்கூடிய பிரச்சார யுக்திகளை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்

நாள்தோறும் குறளைப் படியுங்கள் என்று சொன்னாலும், குறளைப் படிக்கின்ற ஆர்வம் யாருக்கும் வரவில்லை. கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, எல்லாப் பேருந்துகளிலும் குறளை எழுதிப் போட்டார். 10 குறளைக்கூட மனப்பாடம் செய்து சொல்லக்கூடிய அளவிற்கு, தமிழர்களிடத்தில் குறளின்மீது ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதை இன்னும் எளிய வடிவத்தில், மக்களி டத்தில் கொண்டு செல்லக்கூடிய பிரச்சார யுக்திகளை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் வெற்றி பெற முடியும்.

எல்லா விஞ்ஞானிகளாலும் கடவுள் இல்லை என்பதை உணர முடிகிறது. ஆனால், அதனை அவர்களால் துணிச் சலாக சொல்ல  முடியவில்லை. ஏனென்றால், பெரும் பான்மையான மக்கள் அந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள். சார்லஸ் டார்வின் முதலில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக வேண்டும் என்றுதான் அவருக்கு விருப்பம் இருந்திருக் கிறது. பாதிரியாராக அவர் படிக்கவேண்டும் என்கிற எண்ணம் அவருடைய தந்தைக்கு இருந்திருக்கிறது. ஆறாவது நாள் இறைவன் மனித உயிர்களையும், பிற ஜீவன்களையும் படைத்தான் என்ற கருத்தினை அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டார்வினின் மனமாற்றம்!
உலகத்தை மொத்தம் ஏழு நாள்களில் படைத்தான் ஆண்டவன். ஆறாவது நாள் எல்லா ஜீவன்களையும் படைத் தான். ஒரே நாள்களில் அனைத்து ஜீவன்களையும் படைத் தான் என்பதில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியிருக்கிறது

ஆனால், அய்ந்தாண்டுகள் அவர் ஒரு கப்பலில் பயணம் செய்து; கடற்பகுதிகளிலுள்ள தீவுகளுக்கெல்லாம் சென்று, நுண்ணுயிர்களையெல்லாம் கொண்டு வந்து அதனை ஆய்வு செய்த பிறகு, அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு அவர் சொல்கிறார்,
உயிர்கள் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல; 400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு என்று அவர் சொன்னார்.

400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான், உயிரற்றப் பொருளில் இருந்து, ஒரு உயிர் பொருள் தோன்றியிருக் கிறது. எனவே, நான் பழைய கருத்தை மாற்றிக்கொள் கிறேன் என்று சார்லஸ் டார்வின் சொன்னார். ஏனென்றால், அவருடைய கோட்பாட்டிலிருந்துதான் மார்க்சியமே வருகிறது. பரிணாமக் கோட்பாடு. உயிரினங்களின் தோற்றம்; இயற்கைத் தேர்வு; பரிணாமக் கோட்பாடு இதுதான் சார்லஸ் டார்வினுடைய கண்டுபிடிப்பு. அதன் பிறகுதான், இன் றைக்கு உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் பொருளாதார தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மார்க்சியமும் அதி லிருந்துதான் கட்டப்பட்டிருக்கிறது.

பெரும்பாலோரின் பலவீனத்தை அவர்கள் யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

ஆனால், அந்த விஞ்ஞானிகளால் இதனை ஏன் சொல்ல முடியவில்லை என்றால், பெரும்பான்மை மக்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பதன்மீது, அவர்களால் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்கிற அந்த பல வீனம்தான், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி போன்ற வர்களுக்கு பலமாக இருக்கிறது.

பெரும்பான்மை மக்கள் கடவுளை நம்புகிறார்கள்; பெரும்பான்மை மக்கள் மகாபாரதத்தை நம்புகிறார்கள்; பெரும்பான்மை மக்கள் கிருஷ்ணன் இருந்தது உண்மை தான்; அவன் சொன்னது உண்மைதான்; அவன் சொன்னது தான் பகவத் கீதை என்று நம்புகிறார்கள். அதனால், இதை அவர்கள் ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகிறார்கள்.

எனவே, அதை முறியடிப்பதற்கு, இவர்களைத் தோலு ரிப்பதற்கு அரசியல் ரீதியாக நாம் வெற்றி பெற்றால்தான் முடியும். அரசியல் ரீதியாக வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இல்லாத ஒரு சூழல்தான் இப்பொழுது.
கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் சிதறிக் கிடக்கிறார்கள்; தலித் அமைப்புகள் ஒருபுறம் சிதறிக் கிடக்கிறார்கள்; சிறுபான்மை சமூக அமைப்புகள் ஒருபுறம் சிதறிக் கிடக்கிறார்கள்; இப்படி பகுத்தறிவு பேசக்கூடிய அல்லது அறிவியலைப் பேசக் கூடிய சக்திகள் சிதறிக் கிடக்கின்றன. ஆட்சி அதிகாரத் தைப்பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறோம். அவன் ஆட்சி அதிகாரத்தைப்பற்றிய கவலையோடுதான் அவர் கள் பயணத்தை நடத்துகிறார்கள்.


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் புடம்போட்டு வளர்க்கப் பெற்ற ஒரு இந்துத்துவா தொண்டன்தான் நரேந்திர மோடி

எப்பொழுதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும்; ஆட்சி அதிகாரத்தை இழந்துவிடக்கூடாது; ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றவேண்டும். அதற்கென்று, இந்தியா வில் 13 ஆயிரம் பேர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் திருமண மும் செய்துகொள்ளாமல், 18 வயதிலிருந்து 98 வயதுவரை யில் முழுநேரப் பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். இங்கேயும் அந்தத் தொண்டர்கள் வந்திருப்பார்கள்; தோழர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் ஊடுருவாத களமே கிடையாது. காவல்துறையிலும் சரி, வருவாய்த் துறையிலும் சரி, உயர்பதவிகள் அத்தனையிலும் சரி, ஆர்.எஸ்.எசை நேசிக்கக்கூடியவர்களை அவர்கள் உருவாக்கிக் கொண்ட இருக்கிறார்கள். தேநீர்க் கடையில் வேலை செய்த ஒரு சாதாரண தொழிலாளி அல்ல நரேந்திர மோடி. ஆர்.எஸ். எஸ். இயக்கத்தில் புடம்போட்டு வளர்க்கப் பெற்ற ஒரு இந் துத்துவா தொண்டன். அதனால்தான், காந்திக்குப் பதிலாக, சர்தார் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலையை நிறுவவேண்டும் என்று துடிக்கிறார். சர்தார் படேலுக்கு  அவ்வளவு பெரிய சிலையை நிறுவவேண்டும் என்று அவர் சொல்வதிலிருந்தே, அவருடைய உள்ளம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் தோழர்களே!

சர்தார் வல்லபாய் பட்டேல் யார்?

சர்தார் பட்டேல் யார் என்றால், அதிதீவிர இந்துத்துவ கருத்தியலாளர். ஜாதி அமைப்பை வற்புறுத்தக்கூடியவர்; நியாயப்படுத்தக்கூடியவர். இந்த ஏற்றத்தாழ்வு பிறப்பின் அடிப்படையில்தான் உருவானது என்பதை நியாயப் படுத்தக் கூடியவர். இந்துத்துவம்தான் இங்கே ஆட்சி புரியவேண்டும் என்பதிலே நம்பிக்கைக் கொண்டிருந்தவர். அப்படிப்பட்டவருக்கு உலகத்திலேயே மிக உயர்ந்த சிலையை 3,500 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து இங்கே நிறுவப் போகிறோம் என்று சொன்னால், அதற்கு என்ன காரணம்,  ஒரு பெரிய கோட்டிற்குப் பக்கத்தில், இன்னொரு பெரிய கோட்டைப் போட்டால், ஏற்கெனவே இருக்கின்ற பெரிய கோடு சின்னக்கோடாகும் என்று சொல் வதைப்போல, இந்தியாவின் தந்தை என்று சொல்லப் படக்கூடிய காந்தியை, கீழ்மைப்படுத்துவதற்கு அல்லது சிறுமைப்படுத்துவதற்கு அல்லது பின்னுக்குத் தள்ளுவதற்கு பட்டேல் என்ற பெரிய கோடு போடுவதற்கு நரேந்திர மோடி முயற்சிக்கிறார்.

அப்படியென்றால், காந்தி இந்துத்துவாவிற்கு எதிரான வரா என்று நீங்கள் கேட்டுவிடக்கூடாது; இந்துத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக அவதரித்தவர்தான் காந்தி. அதனால் தான் புரட்சியாளர் அம்பேத்கருக்கும், காந்திக்கும் மோதலே வந்தது.


ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் யார்?
நீங்கள் இந்துத்துவத்திற்காக கவலைப்படுகிறீர்கள். நாங் கள் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்றார். காந்திக்கும், புரட்சியாளருக்கும் இடையில் மிகப்பெரிய கருத்து மோதல் நடந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் என்று சொல்லுகிறபொழுது மூன்று அடையாளத்தைச் சொன்னார்.

ஒன்று, இந்துத்துவம்
இரண்டு காந்தி
மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ்
என்று சொன்னார்.

ஏனென்றால், இந்துத்துவம் என்கிற கோட்பாடு நமக்கு எதிரானது. அந்தக் கோட்பாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆளுமை காந்தி. இந்த இரண்டு பேரையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்ற கட்சிதான் தேசிய காங்கிரஸ் கட்சி. இதை வைத்துதான் அது இந்திய தேசியத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அடையாளப்படுத்தினார். ஆகவே, காந்தியை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்ட தில்லை.

பட்டேல், திலகர் போன்றோரின் வாரிசுகள் தான் இப்பொழுது ஆட்சியில் உள்ளனர்!

ஆனாலும், காந்தி ஒரு மிதவாதி; அவர் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வற்புறுத்தினார். எனவே, கோட்சே அவரை சுட்டுக்கொன்றார். ஆர்.எஸ்.எஸ். அந்தக் கடமை யைச் செய்தது. ஏனென்றால், அதிதீவிர இந்துத்துவா சக்தியாக இருக்கின்ற பட்டேல் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவர்; பாலகங்காதர திலகர் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவர். அவர்களுடைய வாரிசுகள்தான் மோடி தலை மையிலான ஆட்சியை இங்கு அமைத்திருக்கிறார்கள்.
எனவே, இந்த அய்ந்தாண்டுகளில் நாம் எதை யெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, இதை செய்யப் போகிறார் கள் என்று, அதையெல்லாம் அவர்களாகவே வெளியிட்டுக் கொண் டிருக்கிறார்கள்.

பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று சொல்லியிருப்பது, அவர் விவரம் இல்லாமல் சொல்லிவிட்டார் என்று நாம் கருத முடியாது; பாரதீய ஜனதா கட்சியில் ஒரு மூத்த தலைவர்; அவர்களுக்குள்ளாக நடைபெற்ற ஒரு விவாதத்திலிருந்துதான், அந்த விவாதத் தில் எடுக்கப்பட்ட முடிவிலிருந்துதான், அவரால் இப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்கமுடியும். அவர்கள் எப் பொழுதுமே மிக எச்சரிக்கையானவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.


தீர்மானிக்கின்ற இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள்!
ஆளுக்கொரு கருத்தை சொல்லக்கூடியவர்கள் என்று நாம் நினைக்கிறோம். சுப்பிரமணியசாமி ஒரு நகைச்சுவை மனிதர் என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி கிடையாது. சோ.ராமசாமி அவர்களையும், திரைப் படத்தில் நகைச்சுவை நடிகராகத்தான் நாம் பார்த்திருக்கி றோம். நிஜ வாழ்க்கையில் அவர்கள் அப்படி கிடையாது.  தீர்மானிக்கின்ற இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள்; முடிவெடுக்கின்ற இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள். நாம் அதனை புரிந்துகொள்ளவேண்டும்.
தலித் இயக்கத் தலைவர்களை குறி வைத்து அவர்கள் அணுகுகிறார்கள்
இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எங்கே இலக்கு வைத்திருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதும், தலித் இயக்கங்களை நோக்கி அவர்களுடைய பயணம் அமைந்திருக்கின்றது. தலித் இயக்கத் தலைவர்களை குறி வைத்து அவர்கள் அணுகுகிறார்கள். தலித் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இதைத் தடுப் பதற்கு நம்மிடத்திலே அரசியல் யுக்தி தேவைப்படுகிறது.
நான் வலியுறுத்த விரும்புவது, எனது அருமைத் தோழர்களே, எல்லாவற்றையும் தங்களுக்கான சாதகமான சக்தியாக மாற்றிக் கொள்கின்ற சாதுரியம், யுக்தி அவர்க ளுக்கு இருக்கிறது. அவர்களை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அல்லது வெறுமனே அதை நகைச் சுவையாகவோ, பொழுதுபோக்காகவோ நாம் பேசி சிரித்து கலைந்துவிடக் கூடாது. மிக எச்சரிக்கையாக இவற்றைத் தடுப்பதற்கு நாம் ஒன்று சேரவேண்டிய தேவை இருக்கிறது.

ஏன் இடதுசாரிகளால் முடியவில்லை!

20 ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன், இடது சாரிகளும், ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மை சமூகத் தவர்களும், அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக வாவது, அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டி இருக் கிறது என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். இதை உடைப்பதற்கு எந்த முனைப்பும் இந்திய அளவில் ஒரு புள்ளியிலிருந்து இன்னும் தொடங்கவில்லை. இஸ்லாமிய அமைப்புகளோடும், தலித் அமைப்புகளோடும், ஆர்.எஸ். எஸ்.காரன் தலித் அமைப்புகளோடு காட்டுகின்ற நெருக் கம்கூட, இடதுசாரிகள் காட்டவில்லை; அது ஏன் என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அந்த யுக்தி தெரிகிறது. அவன் தலித்துகளை நசுக்குகிறான், ஒடுக்கு கிறான், இழிவுபடுத்துகிறான், எல்லாவற்றையும் செய்கிறான், அதனை நியாயப்படுத்துகிறான். ஆனால், அவனால் பாஸ் வானை மத்திய அமைச்சராக்க முடிகிறது. உதித்ராஜை எம்.பி.,யாக்க முடிகிறது. அக்யாலாலை சேர்த்துக்கொள்ள முடிகிறது. மிக எளிதாக தலித்துகளை வென்றெடுக்க முடிகிறது. ஏன் இடதுசாரிகளால் அது முடியவில்லை. தலித்துகளும், இடதுசாரிகளும் ஒரே அணியில் இணைய வேண்டியவர்கள்தானே.

ஒடுக்குமுறையை எதிர்க்கின்றவர் கள்தானே; சுரண்டலை எதிர்க்கின்றவர்கள்தானே; ஜாதி அமைப்பை எதிர்க்கின்றவர்கள்தானே; இந்துத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள்தானே. ஏன்? தலித் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் ஒரே அணியில் திரள முடியாத நிலை இருக்கிறது. இதைப்பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இந்தக் காலம். இதைப்பற்றி சிந்திக்காமல், இப்படி ஒரு அணி திரட்சி இல்லாமல், சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை நம்மால் எதிர்கொள்ள முடியாது. நரேந்திர மோடியின் ஆளுமையை அல்லது ஆதிக்கத்தை நம்மால் முறியடிக்க முடியாது. அவர்கள் எப்படி பார்ப் பனரல்லாத ஒரு தலைமையை உருவாக்கி, மிக எளிதாக அவர்களையெல்லாம் சமரசப்படுத்தி, அத்வானியை வாயை மூடவைத்து,  முரளிமனோகர் ஜோஷியை வாயை மூட வைத்து, சுஷ்மா சுவராஜை வாயை மூட வைத்து அப்படி ஆளுமை மிக்க மூத்த தலைமைகளையெல்லாம் கட்டுப்படுத்தி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரை, மிக எளிதாக, ஆறே மாதத்தில் தேசிய தலைவராக்கி, அவரைப் பிரதமராக்கி விட்டார்கள். அவர்களுடைய யுக்தி எவ்வளவு வேலை செய்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

அரசியல் தளத்தில் நாமெல்லாம் ஒன்றுபடவேண்டியது அவசியம்

எனது அருமைத் தோழர்களே, அது இலக்கியமாக இருந்தாலும், காப்பியமாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும், எந்த ஊடக வடிவத்தில் இந்தப் பிரச்சாரங்கள் நடந்தாலும், அவர்கள் எப்படி யுக்திகளைக் கையாண்டு, எளிய மக்களை ஏய்க்கிறார்களோ, அப்படி யுக்திகளைக் கையாண்டு, நம்முடைய எதிரிகளை நாம் வீழ்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு முதற்படியாக, அரசியல் தளத்தில் நாமெல்லாம் ஒன்றுபடவேண்டிய அவசியம் இருக்கிறது.
புரட்சிகர சக்திகளும், பகுத்தறிவு சக்திகளும், ஒடுக்கப் பட்ட சக்திகளும், சிறுபான்மை மக்களும், ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரண்டால் தான், இவற்றையெல்லாம் முறியடிக்க முடியும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன், நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
                    -----------------------””விடுதலை” 04-01-2015
Read more: http://viduthalai.in/page-4/93918.html#ixzz3Nr2QQ2fG

8.1.15

சாமியார் சாக்ஷி உரையை கண்டிக்க வேண்டியவர்கள் பெண்களே!




தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ; கண்டிப்பாக பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலைத் தான் குறிக்கும்.


ஆளுக்கு ஆள் பேசுவார்கள் - யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது - வாய் இருப்பது என்பது உளறு வதற்கே, வன்முறைகளைத் தூண்டும் வார்த்தைகளை உதிர்ப்பதற்கே என்பது அவர்களின் சித்தாந்தம் போலும்!
வாத்தியாரே ஓடிக் கொண்டு சிறுநீர் கழித்தால் மாணவன் எப்படி நடந்து கொள்வான்? என்ற பழமொழி ஒன்று நாட்டு வழக்கில் உண்டு; அதுபோல ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடியவரே (மோகன் பகவத்) இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் தான் என்று அடாவடியாகப் பேசுகிறார் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?


ஒருவர் சொல்லுவார் - காந்தியைக் கொன்றதற்குப் பதிலாக நேருவைக் கொன்று இருக்க வேண்டும்; இன்னொருவர்  சொல்லுவார் காந்தியாரைப் படு கொலை செய்த கோட்சே மகா புருஷன். அவருக்கு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் சிலை வைக்க வேண்டும் என்பார்; இன்னொருவர் இன்னொருபடி தாண்டி கோட்சேவுக்கு கோயிலே கட்ட வேண்டும் என்பார். அதற்கான விழாவில் பிரதமரே பங்கேற்க வேண்டும் என்பார்.


இன்னொரு அமைச்சர் சொல்லுவார்; பிஜேபிக்கு ஒட்டுப் போடுபவர்கள்தான் உண்மையான அப்பா அம்மாவுக்குப் பிறந்தவர்கள்; மற்றவர்கள் முறை தவறிப் பிறந்தவர்கள் என்று உளறுவார்.


இப்பொழுது ஒரு பி.ஜே.பி.காரர் - அவர் சாதாரண அனாமதேயம் அல்லர் - மக்களவை உறுப்பினர் பெயர் சாக்ஷிசாமியார் என்பவர் பேசி இருக்கிறார்.
இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் எப்படி யாவது நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும்; இதுவரை இருந்து வந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர்; நமக்கு இருவர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டனர்;  இனிமேல் இந்து மக்கள் இதனைக் கருத்தில் கொள்ளக் கூடாது, ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந் தைககளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  அப்பொ ழுதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்துத் தர்மமும் காக்கப்படும் என்று உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் இவ்வாறு பேசியுள்ளார்.


இதே கூட்டத்தில் மதமாற்றம் செய்பவரைத் தூக்கிலிட வேண்டும், அவ்வாறு சட்டம் செய்ய பி.ஜே.பி தயாராகவும் உள்ளது என்றும் நல்ல பாம்பாக நஞ்சைக் கக்கியுள்ளார்.


நியாயமாக இந்தப் பேச்சின்மீது சட்டப் படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் இருக்கிறது; ஆனால் நடப்பது பி.ஜே.பி. ஆட்சியாயிற்றே! அதன் உள்ளுணர்வைத் தானே இவர் வெளிப்படுத்தி இருக் கிறார். அப்படி இருக்கும் போது அவர்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதில் முக்கியமாக ஒன்றைச் சிந்திக்க வேண்டும். ஒரு பெண் நான்கு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று சொல்லுவதற்கு இந்த ஆணுக்கு உரிமை எங்கே இருந்து வந்து  குதித்தது? குழந்தையைப் பெறுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது கணவன்கூட அல்ல - ஒரு பெண்தான் - துணைவிதான். அப்படி இருக்கும் போது பெண்ணைக் கட்டாயப்படுத்துவதற்கு இந்த ஆசாமியார்? என்ற கேள்வி எழலாம்.


ஆனால், இந்து மதத்தைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமானதாக இருக்காது; இந்து மதம் பெண்களை உயிர் உள்ள ஒன்றாக பொருட்படுத்துவதே கிடையாது. வெறும் ஜடமாகத்தானே கருதி இந்து மதம் கணிக்கிறது.


படுக்கை, ஆசனம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்று இந்துமதம் (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 171). கூறுகிறதே. அப்படி இருக்கும்போது சாக்ஷி சாமியார்கள் வேறு மாதிரிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?


இந்தச் சாமியாரின் பேச்சுக்கு முதலில் எதிர்க்குரல் கொடுக்க வேண்டியவர்கள் இந்து மதத்தில் இருப்பதாகக் கருதப்படும் பெண்களே! வீதிக்கு வந்து போராட வேண்டியதும் முதலில் பெண்கள்தான்!


நான்கு பிள்ளைகளை ஒரு பெண் பிரசவித்தார் என்றால், அந்த நான்கு பிள்ளைகளை வளர்த்து எடுப்ப தோடு அவர்களின் வாழ்நாள் பெரும்பாலும் அடை பட்டுப் போய்விடுமே! அவர்கள் படிப்பதாவது, வேலைக்குப் போவதாவது!


இதனைத்தான் பிள்ளை பெறும் எந்திரமா பெண்கள் என்ற வினாவைத் தொடுத்தார் பெண்ணுரிமைக் காவலரான தந்தை பெரியார்.
பெண்களின் முதற் கடமை இந்த இந்துத்துவா - பாசிச - பி.ஜே.பி., உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலை அடையாளம் கண்டுப் புறக்கணிப்பதேயாகும்.
இன்னொறும் முக்கியமானது. மக்கள் தொகை கட்டுப்பாடு (Population Control) என்ற அரசின் கொள்கையை எதிர்த்து ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரே பேசியுள்ளாரே  - இதுபற்றிப் பிரதமர் கருத்து தெரிவித்திருக்க வேண்டாமா? எல்லாம் சொல்லி வைத்து ஆடும் நாடகம் தானோ!

                           -----------------------------”விடுதலை” தலையங்கம்  08-01-2014

7.1.15

புத்தக வாசிப்பும் பெரியாரும்

வானொலி உரை - புத்தக வாசிப்பும் பெரியாரும்




தந்தை பெரியாரின் பள்ளிப் படிப்பு என்பது குறிப்பிடத் தகுந்ததாக ஒன்றும் கிடையாது. தன் பள்ளிப் படிப்பைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்?

நான் பள்ளியில் படித்த காலம் மிகச் சொற்ப காலமே யாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷம். ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2 வருஷமும்தான் படித்தவன். எனக்குப் படிப்பே வராது என்று எனது பெற்றோர் முடிவுகட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாயிருந்ததாகவும், ஆதலால் என்னை பகலெல்லாம் பிடித்து வைத்திருந்து இரவில் வீட்டிற்கனுப் பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தையும் பிழையறக்கூட எழுத முடியாது என்பதுதான்.

1884-85லேயே தரகு மண்டி ஆரம்பித்தாகிவிட்டது. அப்போது நான் சிறிய பையன். என் சிறிய பாட்டியார் வீட்டில் தத்தாகக் கொடுத்து வளர்ந்து வந்தேன். அடிக்கடி தந்தையார் கடைக்குப் போய்விடுவேன். அப்பொழுது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். மூட்டைகள் ஏராளமாக வந்திறங்கும். அப்போதே நான் சிறு பையனாக இருந்தாலும் கடைக்குப் போகிறபோது ஏலம் கூறுவேன்.

சமர்த்தாகப் பேசுவேன். வியாபாரிகளிடமெல்லாம் நன்றாகப் பழகுவேன். சாதுர்யமாகப் பேசி அவர்களை என் வசத்துக்குக் கொண்டு வருவேன். எனக்காக சில வியாபாரிகள் ஏலத்தில் விலை கேட்பார்கள். இதனால் நான் சரியாகக்கூடப் பள்ளிக்கூடம் போக மாட்டேன். அதனால் என்னைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிட்டு, என் தந்தையார் என்னை எட்டாம் வயதிலேயே கடையில் போட்டுவிட்டார்.

ஓர் ஆண்டு வரை கடையிலேயே இருந்து கொண்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தி வந்தேன். நான் சுறுசுறுப்பாகவும், வியாபாரத்தில் அதிக அக்கறையும் ஆசையும் காட்டி வந்ததனால் என் தகப்பனார் மகிழ்ச்சி அடைவார். ஆனால், ஊரில் உள்ள என் தகப்பனாரின் நண்பர் களும் மற்றும் பெரிய மனிதர்களும், இந்தச் சிறிய பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீணாகக் கடையில் போட்டுக் கெடுக்கிறீர்களே! இது நியாயமல்ல, எப்படியாவது அவனை நல்ல வார்த்தைகள் சொல்லி படிக்க அனுப்புங்கள் என்று வற்புறுத்தி வந்தார்கள்.

அதன்பேரில் மீண்டும் ஸ்கூலுக்கு அதாவது பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அதற்கு முன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தேன். பிரைமரி வகுப்பில் நான்காம் வகுப்புப் படித்தேன். நான் பாஸ் செய்ததும் படிப்பை விட்டு விட்டேன். உடனே 1890ஆம் ஆண்டில் கடைக்கு மீண்டும் வந்துவிட்டேன்  என்கிறார்  பெரியார்.

இப்படி படிப்பு என்பது வெறும் நான்காம் வகுப்பே என்றாலும், இந்தத் தலைவரின் பேச்சுகளும், எழுத்துகளும் மிகப்பெரிய அளவில் வாசிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதுதான் ஆச்சரியம். பள்ளிப் புத்தகங்கள் வாசிப்பு என்பது குறைவானதாக இருந்தபோதிலும், ஆய்வு நோக்கில் தந்தை பெரியார் கடைசிவரையில் படித்துக்கொண்டே தானிருந்தார்.

தந்தை பெரியாரின் நண்பர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவது ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் புராண அகராதியும், மதுரைத் தமிழ்ப் பேரகராதிகளும் ஆகும். எப்பொழுதும் தந்தை பெரியார் அவர்களின் அருகிலேயே அவை இருக்கும்; வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம், அவற்றைத் துருவிக்கொண்டே இருப்பார் பெரியார்.

முக்கிய குறிப்பு என்று தாம் கருதுவதை, புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் அதன் பக்க எண்களைக் கைப்பட எழுதி வைத்துக் கொள்வார்கள். எந்தப் பொருளைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும் அதன் வேர்ச் சொல் என்ன? அதன் பொருள் என்ன? எப்படி மருவியது என்கிற அளவுக்கு அதன் மூல வேருக்கே செல்வதுதான் தந்தை பெரியாரின் வாசிப்பு என்னும் ஆய்வு முறையாகும்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர்அண்ணா அவர்கள் அழகான வார்த்தைகளால் படம் பிடித்தார் - மூல பலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியார் அவர்களின் போர்முறை என்பார் அண்ணா. எதை விமர்சித்தாலும், எதிர்த்தாலும் அதன் மூலபலத்தில் கைவைக்கக் கூடிய நுண்மாண் நுழைபுலத்தின் காதலர் அவர்.

நான் சாதாரணமாக ஒரு வெறும் பேச்சாளியல்ல, அல்லது விசயங்களை எல்லாம் படித்து அறிந்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும்படியான அறிவாளி அல்ல; நான் ஒரு கருத்தாளி. உலகத்தைப் பார்த்து எப்படி நடந்தால் அவர்களுக்கும் நல்லது - நாட்டுக்கும் நல்லது என்று தான் சொந்தமாகக் கொண்ட கருத்தினைக் கூறி வருபவன் என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார்கள்.

சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநராகவும் அதன்பின் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தவருமான ஏ.எஸ்.பி.அய்யர், சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில், உரையாற்றிட தந்தை பெரியார் வந்தபோது (10.2.1960) தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்:-

கீழை நாடுகளைப் பற்றி பெட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும் பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம்; தங்கள் கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில், மேற்கோள் காட்டிப் பேசாமல், தன்னறிவையே முன்னிறுத்திப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான் என்றாரே!
திருக்குறளையும், திருவள்ளுவரையும் பற்றிப் பேசும் போதுகூட நான் சொன்ன கருத்தை திருவள்ளுவரும் சொல்லி யிருக்கிறார் என்று சொல்லுவாரே தவிர, திருவள்ளுவர் சொன் னதைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று ஒருபோதும் சொன்னதில்லை. அந்தத் திருக்குறளுக்காக - மக்கள் மத்தியில் அதைக் கொண்டு செல்லுவதற்காக முதன்முதலில் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்தான்!
திருவள்ளுவர் கூறும் விதி என்பது, ஊழ் என்பதுபற்றி எல்லாம் தனித்தன்மையாக பொருள் கூறியுள்ளார் பெரியார்.

ஊழ் என்பது சிலருக்குப் பிறவியிலேயே அமைந்த குணம். இதில் சிலவற்றை மாற்றலாம்; மாற்ற முடியாமலும் போகலாம். இதைத்தான் திருவள்ளுவர் ஊழ் என்று குறிப்பிடுகிறார் என்கிறார் தந்தை பெரியார்.

எழுபிறப்பு என்று திருவள்ளுவர் கூறுவது ஏழு ஜென்மமல்ல. ஒருவன் கொண்டுள்ள குண மாற்றங்களைத்தான் அவ்வாறு வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஒருவனைப் பார்த்து அவன் புது மனிதனாகிவிட்டான் என்று சொல்லுவ தில்லையா? அதுபோலத்தான் என்று கூறுகிறார் அந்தக் கொள்கைக் கோமான்.


திராவிடம் என்பது எப்படி வந்தது? பலரும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், நான்காம் வகுப்பே படித்த தந்தை பெரியார் அவர்களோ எல்லோருக்கும் புரியும்படியாக பளிச்சென்று சொல்லுகிறார். திரு இடம் என்பதுதான் திருவிடமாகி திராவிடம் என்பதாகிவிட்டது என்று கூறுகிறார்.

இராமாயணத்தை எத்தனையோ ஆண்டுக் காலமாக எண்ணற்றோர் வாசித்துக் கொண்டு தானிருக்கின்றனர்.

தந்தை பெரியாரும் வாசித்தார். தந்தை பெரியார் அவர்கள் போல் பல்வேறு இராமாயணங்களையும் வாசித்தவர்கள் அரிதி னும் அரிது. அவர் வாசிப்பு என்பது அவரைச் சார்ந்ததல்ல - மக்களைச் சார்ந்தது. மக்களின் அறிவுப்புலத்தில் ஆழமான சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்பக் கூடியது. இராமா யணத்தின் மீது பெரியார் மேற்கொண்ட வாசிப்பின் பலன் இராமாயணப் பாத்திரங்கள் என்றும், இராமாயணக் குறிப்புகள் என்றும் இரு நூல்களாக வெளிவந்துள்ளன.
இராமாயணப் பாத்திரங்கள் - எனும் நூல் ஆங்கிலத்தில் ஸிணீனீணீஹ்ணீஸீணீ - கி ஜிக்ஷீமீ ஸிமீணீபீவீஸீரீ எனும் தலைப்பிலும் இந்தியில் ச்ச்சு இராமாயணம் எனும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன.
இராமாயணத்தை வாசித்த பெரியார் அடிப்படையில் ஒரு வினாவை எழுப்புகிறார். அது ஆணிவேரையே வீழ்த்தக் கூடியதாகவும், அஸ்திவாரத்தையே பிளக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
திரேதாயுகத்துக்கு உண்டான வருஷம் 12,96,000தான். ஆனால் அந்த யுகத்தில் இராவணன் 50 லட்சம் வருடங்கள் ஆண்டிருக்கிறான்  என்பது இராமாயணக் கதையின்படி உள்ள சேதியாகும். 13 லட்சம் வருடத்திற்கு உள்பட்ட ஒரு யுகத்தில் நடந்த செய்கை 50 லட்சம் வருடம் நடந்ததாக இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பினார் - அந்த வெண்தாடி வேந்தர். பல்வேறு இராமாயணங்களைப் படித்துத் திளைத்த தலைவர் பெரியார் அவர்கள் பொதுக் கூட்டங்களில் சில பகுதி களைப் படித்துக் காட்டி பொதுமக்கள் மத்தியில் தம் விமர்சனத்தை வைப்பார்கள்.
அதன் விளைவு என்னாயிற்று? அவர் எடுத்துக்காட்டிப் பொதுக்கூட்டங்களில் படித்துக் காட்டிய பகுதிகளை அடுத்த பதிப்பில் எடுத்துவிட்டனர் என்பதுதான்.

தந்தை பெரியார் புத்தக வாசிப்பு என்பது மக்கள் மத்தியிலே மாபெரும் மாற்றத்தை - மறுமலர்ச்சியை மலரச் செய்வதற்கான காரணிகளாக அமைந்தது என்பது தனிச் சிறப்பாகும்.


கல்விக்கூடப் படிப்பு குறைவாக இருந்தாலும் அவர் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ஸிமீஸ்ஷீறீ முதலிய ஏடுகளுக்கு ஆசிரியராகவும் இருந்தார். விடுதலை ஏட்டைத் தொடங்கி நடத்தினார். திரையுலகில் நகைச்சுவைத் தேனில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் எனது குருநாதர் பச்சை அட்டைக் குடிஅரசு என்று கூறியதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் மட்டுமல்ல - கோடிக்கணக்கான மக்களின் மூளையில் குடிபுகுந்து புரட்சி விதைகளை விதைத்தது. அறிஞர் அண்ணா, ஆசிரியர் வீரமணி போன்ற எண்ணற்ற படித்தவர்களையும், பாமரர்களையும்கூட சுண்டி இழுத்தது.

மூப்படைந்த நிலையில் படிப்பதற்குச் சிரமமான அந்த நிலையில்கூட, எழுத்துகளைப் பெரிதுபடுத்திக் காட்டும் லென்சை வைத்துப் புத்தகங்களை வாசித்தார் என்றால் சாதாரணமா? தமிழ், ஆங்கிலச் செய்தி ஏடுகளை விடாமல் படித்துத் தீர்த்துவிடுவார். படித்த பல பகுதிகளில் கோடிடுவ துண்டு. சிலவற்றைக் கத்தரித்து தனி நாட்குறிப்பில் வைத்துக் கொள்வார் - பொதுக் கூட்டங்களில் தேவைப்படும்பொழுது அதனை எடுத்துக்காட்டியும் விளக்குவார். எந்தப் புத்தகங்களை வாசிப்பது என்பது குறித்தும் அவர் கூறியுள்ளவை:
நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவதற்கு. ஆனால் நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும் மூட நம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம்மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.
நீங்கள்  குடிஅரசு பகுத்தறிவுப் பதிப்பகப் புத்தகங்கள் வாங்கிப் படித்தால், கட்டாயம் பகுத்தறிவுவாதிகளாவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்தம் நினைவு நாளான இன்று அவர்களின் புத்தக வாசிப்புக் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரத்த முறையில் சிந்திப்போமாக!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
------------------------------------தந்தை பெரியார் நினைவு நாள் உரையாக 24.12.2014 இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான கவிஞர் கலி.பூங்குன்றன்,  துணைத் தலைவர், திராவிடர் கழகம் அவர்கள் ஆற்றிய உரை இது  --”விடுதலை”  04-01-2015