பா.ஜ.க. ஆட்சிக்குப் பார்ப்பனர் 'சோ' பகரும் பாராட்டு!
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய
ஜனநாயகக் கூட்டணி (ழிஞிகி) ஆட்சி என்னும் பா.ஜ.க. ஆட்சியின் நடைமுறைகள்,
பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தின் பேச்சுகள் - ஏச்சுகள் - நடைமுறைகள்
பற்றி துக்ளக் இதழில் (31.12.2014) திருவாளர் சோ ராமசாமி தந்துள்ள
நற்சான்றுப்(?) பத்திரங்கள் இதோ:
கே: பா.ஜ.க.வில் நிலவும் கருத்துச் சுதந்திரம், அக்கட்சிக்குப் பாதகமாக அமையுமா, சாதகமாக அமையுமா? பா. நாராயணன், சென்னை-92
ப: பா.ஜ.க.வில் இப்போது நிலவுவது கருத்துச் சுதந்திரம் அல்ல. கருத்து வெறி. இது அக்கட்சிக்கு நல்லதல்ல.
கே: அயோத்தியில்
சீக்கிரமாக ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் - என்று உத்தரப்பிரதேச கவர்னர்
ராம் நாயக் பேசியுள்ளது குறித்து? கே.ஆர். சாரங்கபாணி, வடவள்ளி
ப: ஒரு கவர்னர், இப்படி
இந்தப் பிரச்சினையில் பேசுவது சரியல்ல. நாளை வேறொரு கவர்னர், இடிக்கப்பட்ட
பாப்ரி மசூதி திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்று கூறினால், அது எவ்வளவு
தவறாக இருக்குமோ, அவ்வளவு தவறு இதுவும்.
கே: இஸ்லாமியர்கள் மதம்
மாறுவதை அரசியலாக்கக் கூடாது; அவர்களின் முன்னோர் இஸ்லாமியர்களாக மாற்றப்
பட்டவர்கள்தான் - என்கிறாரே வி.ஹெச்.பி.தலைவர்? ச. புகழேந்தி, மதுரை-14
ப: என்றோ ஹிந்துவாக
இருந்து, பிறகு மதம் மாறியவர்களின் இன்றைய வாரிசுகளை மீண்டும் ஹிந்துக்களாக
மாற்றுவதில் தவறில்லை என்றால், அதே வாதத்தின்படி இன்னும் சற்று
பின்னோக்கிச் சென்று பார்த்தால், எந்த மத நம்பிக்கையும் இல்லாமல்
வாழ்ந்தவர்களுடைய வாரிசுகள் தானே, இன்று உலகம் முழுவதும்
வியாபித்திருக்கிறார்கள்? ஆகையால், எல்லோரும் அவரவருடைய மத நம்பிக் கைகளை
விட்டு விடுவதுதான் நல்லதா?
கே: ஸ்ரீநகரில் தேர்தல் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்திருக்கிறாரே பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர்? . புகேழந்தி, மதுரை -14
ப: கண்டனத்திற்குரிய நடத்தை. இப்படிச் செய்திருப்பவர் ஒரு பெண் வேட்பாளர் என்பது நிகழ்ச்சியை மேலும் அதிர்ச்சிக் குரியதாக்குகிறது.
கே:
தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் மீது கட்டப் பட்டுள்ளது என்றும், அதற்கு
ஆதாரங்கள் உள்ளன என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளதே? எஸ். புருஷோத்தம்
ராஜன், பரமக்குடி
ப: அந்தச் சிவனுக்கே இது பொறுக்காது.
-----------------------------------(துக்ளக் 31.12.2014 பக்.13)
மோடியை ஆட்சி அதிகார நாற்காலி யில் அமர
வைக்க வேண்டும் என்று சோ சும்மா விழுந்து விழுந்து எழுதினார்;
தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது தன் சரக்கை அவிழ்த்துக் கொட்டினார்.
ஆனால், அவராலேயே இந்த ஏழு மாத ஆட்சிபற்றிப் பெருமைப்பட முடிய வில்லை; மாறாக தன் மனப்புழுக்கத்தைக் கொட்டியுள்ளார்.
இப்படிக் கூறுவதால் சங்பரிவார் நட
வடிக்கைகளை சோ ஏற்றுக் கொள்ள வில்லை என்று பொருளல்ல; அவர்களின்
நடவடிக்கைகள் வெகு மக்களின் எதிர்ப்பை மோடி அரசுக்குச் சம்பாதித்துக்
கொடுக்குமே என்ற கவலைதான்.
பாபர் மசூதி இடிப்பை
நியாயப்படுத்தியவர்தானே இந்த சோ அதில் முக்கிய குற்றவாளியான எல்.கே.
அத்வானிக்கு வக்காலத்துப் போட்டு எழுதியவர்தானே இந்த அக்கிரகாரவாசி!
கேள்வி: பாபர் மசூதி இடிப்பு அத்வானி யின் தூண்டுதலால் நடந்தது என்று சிறப்பு சி.பி.அய் கோர்ட்டில் பூசாரி உட்பட 5 கரசேவகர்கள் வாக்குமூலம் கொடுத்துள் ளார்களே?
பதில்: அவர்களுடைய
வாக்குமூலமே இறுதியான ஆதாரம் ஆகி விடாது; நிகழ்ச்சி நடத்து பல வருடங்கள்;
வழக்கு தொடங்கி சில வருடங்கள்; கமிஷன் விசாரணை தொடங்கி சில வருடங்கள்;
கமிஷன் விசாரணை தொடங்கி கணிசமான காலம் - எல்லாம் கழிந்த பிறகு, இப்பொழுது
திடீ ரென்று இப்படிச் சொல்வதால் - இவர்கள் பேச்சு சந்தேகத்திற்கு
இடமளிக்கிறது இவர்கள் கூறுவதை உறுதி செய்ய (சிஷீக்ஷீக்ஷீஷீதீஷீக்ஷீணீமீ)
போதுமான சாட்சியங்கள் இருந் தால் மட்டுமே, அவர்கள் சொல்வது நீதிமன் றத்தில்
எடுபடும் (துக்ளக் 25.6.2003 பக்.19).
இந்தப் பதிலில் தான் எத்தகைய தளுக்கு -
குலுக்கு! - ஆட்சிக்கு வருவதற்கு முன் இதுபோன்ற காரியங்களில் வன்முறையா
ளர்களுக்கு வக்காலத்து; ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்ற மதவாத சரக்குகளை
சங்பரிவார்கள் அவிழ்த்துக் கொட்டினால் அது மக்கள் மத்தியில் கெட்ட பெயரை
ஏற்படுத்துமே என்பதால் இன்னொரு நாக்கால் பேசும் தந்திரம். இதற்குப் பெயர்
தான் பார்ப்பனீயம் என்பது.
பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! என்று
அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.
புரிந்து கொள்வீர் இந்(து)தப் பார்ப்பன நஞ்சுகளை!
----------------------------------------------------------------------------------------------------------------
பக்தியால் ஒழுக்கக்கேடு குறைந்ததா?
கே: கடவுள் பக்தியால்
அச்சமும் வரவில்லை; ஒழுக்கமும் வளரவில்லை என்றால், அது என்ன பக்தி? அது
பெருகி என்ன லாபம்? என்ற கி. வீரமணியின் கருத்து பற்றி?
ப: ஊழல், கொலை - கொள்ளை,
கற்பழிப்பு போன்ற பல குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் நிறையவே இருக்கின்றன.
ஆனால், இவை எல்லாம் ஒழிந்து விடவில்லை. குறையவும் இல்லை. இந்தச் சட்டங்கள்
இருந்து என்ன பிரயோஜனம்? இந்தச் சட்டமே தேவையில்லை என்று முடிவு செய்துவிட
வேண்டியதுதானா? சட்டங்கள் இருப்பதால் தான், இந்த அளவாவது கட்டுப்பாடு
இருக்கிறது; இப்போதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால்
என்ன நடக்குமோ - என்று தானே எல்லோரும் நினைப்பார்கள்? அம்மாதிரியே பக்தி
உணர்வு இருப்பதால்தான், சமுதாயத்தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள்
இருக்கின்றன. பக்தி உணர்வு அறவே அற்றுப் போய் விட்டால் என்ன
நேரிடுமோ...? (துக்ளக்
31-12-2014 பக்.13)
திருவாளர் சோ ராமசாமி தான் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.
முதலில் ஒன்றை அவர் ஒப்புக் கொண்டு
இருக்கிறார். கடவுள் சக்தியையும் மனிதர்களின் செயல்பாடுகளையும் ஒரே அளவில் -
சம மட்டத்தில் வைத்து எழுதுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். இதன் மூலம்
மனிதனுக்கு மேற்பட்டது கடவுள் என்ற வாதம் அடிபட்டுக் கீழே விழ்ந்து
விடவில்லையா? மனிதன்தான் சட்டம் செய்கிறான்; கடவுள், பக்தி இவற்றையும்
மனிதன்தான் உண்டு பண்ணுகிறான் என்பதை இதன் மூலம் சோ ஒப்புக் கொள்வது ஒரு
வகையில் பாராட்டத்தக்கதே! (இப்படிதான் அவரைப் பாராட்ட முடியும் - வேறு
சந்தர்ப்பம் ஏது?)
சரி, இரண்டாவது விவாதத்துக்கு வருவோம் -
பக்தி உணர்வு இருப்பதால் தான் இந்த அளவாவது கட்டுப்பாடு இருக்கிறது;
இப்பொழுதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால் என்ன
நடக்குமோ என்று தானே எல்லோரும் நினைப் பார்கள்? அம்மாதிரியே பக்தி உணர்வு
இருப்பதால் தான் சமுதாயத் தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள்
இருக்கின்றன. பக்தி உணர்வு அறவே அற்றுப் போய் விட்டால் என்ன
நேரிடுமோ..? (துக்ளக் 31-12-2014
பக்.13)
பக்தி இருந்தால் ஒழுக்கம் இருக்கும்;
கட்டுப்பாடுகள் இருக்கும்; பக்தி உணர்வு அற்றுப் போய் விட்டால் என்ன
நேரிடுமோ? என்று பசப்புகிறாரே திருவாளர் சோ ராமசாமி இதே சோவின் துக்ளக்
ஏட்டில் பக்தியின் யோக்கியதை எப்படி என்பதை ஒப்புக் கொண்டுள்ளாரே!
வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலைபேசி விற்கலாமா?
புரோகிதர் பதில்:
எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த
மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.
வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா, இப்போது?
புரோகிதர் விடை:
பக்தியாவது, ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்?
சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும்
புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை
நெனச்சிக்கிறா!
------------------------- (துக்ளக் 1-6-81 இதழ்
பக்.32)
இப்படி எழுதிய சோதான் இப்பொழுது
சந்தர்ப்பவாத பல்டி அடிக்கிறார். மேலும் ஒரு செய்தி உண்டு இவாளின் லோகக்
குருவான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பக்திப் பழம்தானே! அவர்
யோக்கியதை - ஒழுக்க சீலம் எத்தகையது என்பதுபற்றி ஊரே சிரிக்கவில்லையா? கொலை
குற்றப் பின்னணியில் வேலூர் சிறையில் கம்பி எண்ணவில்லையா? பார்ப்பனப் பெண்
எழுத்தாளர் அனுராதா ரமணன் என்ற பெண்மணி - ஜெயேந்திர சரஸ்வதி என் கையைப்
பிடித்து இழுத்து பிடித்து கேவலமாக நடந்து கொண்டார் என்று கண்ணீரும்
கம்பலையுமாகக் கதறவில்லையா?
தொலைக்காட்சிகள்கூட அந்த அவல நிலையை
ஒளிபரப்பியதே! பக்தி காரணமாக ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளப்
பயங்கொள்வார்கள் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!
சோ சாமர்த்தியமெல்லாம் செல்லுபடியாகாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------



