ஜாதிவாரி முறைக் கணக்கெடுப்பு - ஏன்?
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் விளக்கம்
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் விளக்கம்
ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு அளித்த அறிக்கை அரசு சார்பில் வெளியிட்டுள்ளது. அறிக்கை வருமாறு:
பல நூற்றாண்டு காலமாக தங்களது வாழ்க்கை யில் ஒடுக்கப்படுதலின் கொடுமையை அனுபவித்து வந்த இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரது சமூக சுற்றுச்சூழலின் கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு தோன்றிய வெள்ளிக்கீற்றாக மண்டல் கமிஷன் அறிக்கை அமைந்து, அவர்களுக்கு நம்பிக்கை ஒளி கொடுத்தது.
அறிக்கை தயாரிக்க நாடு முழுவதும்
மண்டல் சுற்றுப்பயணம் செய்தார்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தைத் தொடர்ந்து, குடிமக்களின் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆய்வு செய்ய 1979ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று திரு.-பி.பி.மண்டல் அவர்களின் தலைமையின்கீழ் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கமிஷனை குடியரசுத் தலைவர் நியமித்தார்.
இந்தக் கமிஷன் அதன் செயல்பாட்டை 1979 மார்ச் 21 அன்று தொடங்கி தனது பணியை 1980 டிசம்பர் 12 அன்று நிறைவு செய்தது. அதன் இறுதி அறிக்கைக்குத் தேவையான விவரங்களைச் சேகரிப்பதற்காக இந்தக் கமிஷன் நாடு முழுவதும் விரிவான சுற்றுப் பயணம் செய்தது.
இந்தக் கமிஷன் 3,743 ஜாதிகளை சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அடையாளம் கண்டு அதன் அறிக்கையின் முதல் தொகுதியில் 13வது அத்தியாயத்தின் கீழ் பரிந்துரை செய்தது.
இந்திரா சஹானிக்கும் மத்திய அரசுக்கும் இடை யில் நடந்த வழக்கில் (1992 நீநீ (லி&ஷி) ஷிஜீஜீ, பல்வேறு மாநிலங்கள் தங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. இவை அந்தந்த மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தெரிவு செய்ய அடிப்படையாக அமைந்தன. தமிழக அரசும் அம்பாசங்கர் கமிஷனால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் பத்திகள் 852 மற்றும் 853 ஆகியவற்றில் (பக்கம் 466, 467) மாநிலங்களால் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள் குறித்து உச்சநீதிமன்றம் கூறியது பொருத்தமாக உள்ளது. அவை கூறுவ தாவது:-
852 இரண்டு அறிக்கைகளில் ஒன்றில் (உதாரணம் கோவா) ஒரு கமிஷனை நியமிக்காமலேயே தயாரிக்கப்பட்ட பட்டியல் அதனால் மோசம் என்று கூற முடியாது. பட்டியலைத் தயாரித்த மாநிலம் தங்களது மாநிலப் பகுதியில் நிலவும் நிலைமைகளைப் பற்றி அறிந்துள்ள தாகக் கொள்ளவேண்டும். ஒரு தகுதியான நீதிமன்றம் அல்லது கமிஷன் போன்ற நிலையான அமைப்பு கூறினால் ஒழிய, இந்தப் பட்டியல்கள் அதிகாரப் பூர்வமாக ஏற்கத்தகுந்தது, அமலாக்கக் கூடியது என்று கருதப்படவேண்டும்.
853. அதே சமயத்தில், பின்வரும் விளக் கத்தை அளிப்பது அவசியம் என்று கருதுகிறோம். மத்திய அரசு அதன் தேவைகளுக்காக, 1990 ஆகஸ்ட் 13 அன்று நிலவிய மாநிலப் பட்டியல்களை ஏற்றுக் கொண்டுள் ளது என்பது உண்மைதான். ஆனால் அதனாலேயே அந்தப் பட்டியல்கள் புனிதமானவை, திருத்த முடியாதவை என்று ஆகிவிடாது. சில சமயங்களில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட கமிஷன்கள் அவற்றின் அறிக்கைகளில் சில ஜாதிகளை, சமுதாயங்களை, வகுப்புகளை கழித்தோ அல்லது சேர்த்தோ இத்தகைய பட்டியல் களுக்கு திருத்தங்களை பரிந்துரை செய்திருக்கலாம். இப்படிப்பட்ட கமிஷன் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றால், மாநில அரசு அவற்றைப் பரிசீலித்து குறிப்பிட்ட காலத்துக்குள் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் இவ்வாறு ஏதாவது திருத்தங்களைச் செய்தால் உடனடியாக மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட மாநிலம் தொடர்பான அதன் அறிக்கைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவேண்டும். மேலும் இத்தகைய கமிஷனின் அறிக்கையைப் பரிசீலித்து குறிப்பிட்ட காலத்துக்குள் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தவிர மத்திய அரசும் திருத்தங்களைச் செய்து ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டியது அதன் கடமையாகும். கமிஷன்களின் அறிக்கைகளின் அடிப்படையில் முறையானது என்று நினைப் பவைகளில் மத்திய அரசு இத்தகைய திருத்தங்களைச் செய்ய லாம். இந்த துணை மாநிலப் பட்டியல்களில் ஏதாவது தவறுகள் ஏற்படுவதற்கு எதிராக அந்தத் திருத்தப்படுவதை உறுதி செய்யும் என்று நாங்கள் கருதுகிறோம். மத்தியிலும், மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் பணித்துள்ள நிரந்தர ஏற்பாட்டின் (கமிஷன்) ஆலோசனையுடன் இந்த முறையைக் கையாளலாம்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
இந்தத் திட்டம் முழுவதையும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கமிஷன் ஆலோசனை கூறியது.
அத்தியாயம் 12 பத்தி 12.19இல் சுட்டிக்காட்டியுள்ள படி இந்தக் கமிஷன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையைக் கணித் துள்ளது. ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக் கெடுப்பு 1881ஆம் ஆண்டு இந்திய தலைமைப் பதிவாளரால் அறிமுகப்படுத்தப்-பட்டு 1931ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. இதனால் 1931க்குப் பிறகு ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கு கிடை யாது. எனவே பல்வேறு ஜாதிகள், சமுதாயங்கள், மதக் குழுக்கள் ஆகியவற்றில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த அரை நூற்றாண்டில் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்துள்ளது என்று கமிஷன் அனுமானம் செய்தது.
இப்படிப்பட்ட நிலையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்தக் குழுக்களின் எண்ணிக்கை சதவிகிதத்தைக் கணக்கிடுவது சாத்தியம்தான்.
மேற்கூறிய அடிப்படையில் கணக்கிட்டு, கமிஷன் 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணங்களி லிருந்து ஜாதி / சமுதாய வாரியான எண்ணிக்கை களைக் கண்டு அதன் பின் அவற்றை விரிவான ஜாதித் தொகுப்புகளாகவும், மதக்குழுக்களாகவும் ஒன்று சேர்த்துள்ளது. இருப்பினும், 1861 முதல் 2001 வரையிலான இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களிலுள்ள ஜாதி வாரியான, இனவாரியான, புள்ளி விவரங்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக 1950ஆம் ஆண்டு அரசியல் சட்ட ஆணையில் பட்டிய-லிடப்பட்ட ஜாதிகள், பழங்குடியினர் ஆகியோருக்கான கணக் கெடுப்பு நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அறிவிக்கை செய்யப்பட்ட தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர் தொடர்பான ஜாதி வாரியிலான மக்கள் தொகை விநியோக விவரம் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கிறது.
அரசியல் சட்டத்தின் 15(4)வது பிரிவின்படி - இந்தப் பிரிவிலோ அல்லது 29வது பிரிவு துணைப் பிரிவு (2)லோ உள்ள எதுவும், குடிமக்களில் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காகவும் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் முன்னேற்றத்திற்காகவும், விசேஷ ஏற்பாடுகளை மாநிலங்கள் செய்வதைத் தடுக்காது. மாநில அரசின் கருத்தில் ஏதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மாநில அரசின் பணிகளில் போதுமான அளவு பிரதிநிதித் துவம் இல்லை என்று கருதினால், பணியிடங்களில் அப்படிப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதைத் தடுக்காது.
உச்சநீதிமன்றம் கூறியது ..... ஒரு ஜாதி என்பது குடி-மக்களில் ஒரு வகுப்பும் ஆகும் என்பதை மறத்தலாகாது. அந்த ஜாதி முழுவதும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கி இருந்தால், அது பிரிவு 15(4)இன்படி சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற அடிப்படை யில் அத்தகைய - ஜாதிக்கு இடஒதுக்கீடு வழங்கலாம்.
(கிமிஸி 1963 ஷி சி 1012) மேலும், ... ஒரு ஜாதி எப்போதுமே ஒரு வகுப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.... இந்த நாட்டில் சமூக ரீதியிலும் கல்விரீதியிலும் பின்தங்கிய ஏராளமான ஜாதிகள் உள்ளன. (கிமிஸி 1971 ஷி சி 2303).
தேவையான விவரங்களை சேகரித்த பிறகு, ஜாதிகள் முழுவதுமாக சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கி இருப்பதாகக் கண்டால், அந்தக் குழுவில் ஒரு சில தனி நபர்கள் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும், பொதுவான சராசரி அளவுக்கு மேல் இருந்தாலும், அத்தகைய நபர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை செல்லும் என்று உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். (கிமிஸி 1972 ஷி சி 1375) பல தருணங்களில் உச்சநீதிமன்றம் அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களின் சேர்க்கையிலும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டின் போதாத நிலைமையை தீர்மானிக்க சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் கணிப்பு (சர்வே) செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் மேற்கூறிய கருத்தின்படியும், அரசியல் சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளவைகளை-யும் கருத்தில் கொண்டு, 2.5.2007இல் இந்தக் கமிஷனால் அரசுக்குப் பின்வருமாறு பரிந்துரை செய்யப்பட்டது.
....... தமிழ்நாட்டில் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி ரீதியிலுமான சர்வே, கல்வி நிலையங்-களில் சேர்க்கை பிரச்சினையிலும், அரசுப் பணியிடங்-களில் நியமனங்களிலும், ஒரே மாதிரியான நிலைமைகளி-லுள்ள சமுதாயத்தின் தகுதியான அனைத்துப் பிரி-வினருக்கும் எந்தவித மான பாகுபாடும் இன்றி சமூக நீதி வழங்குவதற்காக - காலத்தின் தேவையாகும்.
அப்படிப்பட்ட சர்வே முடிந்த பிறகு விவரங்கள் கமிஷன் முன்பு வைக்கப்படலாம். அது கமிஷன் பல்வேறு ஜாதிகளையும், சமுதாயங்களையும் வெவ் வேறு பிரிவுகளாக வகுப்பதற்கு உதவும்.
சர்வே முடிவுகளை தோராயமாக சரிபார்த்தல் முறை-களைக் கையாண்டும் இதர முறைகளையும், நிபுணர்கள் வட்டாரங்களில் எழும் சாதனங்கள் போன்றவற்றைக் கையாண்டும் எடுக்கப்பட்ட சர்வே நம்பகத்தன்மையை பிரதிபலிப்பதைக் காண கவனமாகப் பரிசீலிக்கப்படவேண்டும்.
தேசிய மக்கள் தொகை பதிவேடுத் தயாரிக்கப்படவும் உள்ளதால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்-கெடுப்பு ஒரு மைல் கல்லாக அமையும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்-களைக் கொண்டது. அவையாவன : முதல் கட்டத்தில் வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்கள் சேகரிப்பு. முதல் கட்டத் தின் காலம் 2010 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையாகும். இரண்டாவது கட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடையது.
இது 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரையில் நடை பெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்வரும் விவரங்களை சேகரிக்கவாகும்.
சமுதாயத்தில் நிகழும் பிறப்பு, இறப்புகள் எண் ணிக்கை மாற்றம் குறித்த ஆய்வு, பொருளாதார நடவடிக்கை, கல்வி மற்றும் கல்வி அறிவு, வீட்டு வசதி மற்றும் வீட்டு உபகரணங்கள், நகர் மயமாதல், பிறப்பு - இறப்பு விகிதங்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மொழி, மதம் மற்றும் குடிபெயர்தல்கிராமம், நகரம், வட்ட மட்டத்தில் ஆதார விவரங் களின் ஆதாரங்கள்; மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை திட்டமிடவும், வகுக்கவும், மதிப்பு மிக்க தகவல்கள், இது தேசிய மற்றும் சர்வதேசிய நிறுவனங்களாலும், அறிஞர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் பலரால் பரவலாகப் பயன்படுத் தப்படுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற , ஊராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதி கள் சீரமைப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு பின்வருவன வற்றிக்கு பயன்படும்:-
1. நாட்டில் அனைத்தையும் உள்ளடக்கிய அடையாள விவர அடிப்படையை உருவாக்க.
2. அரசு திட்டங்களின் கீழ் பயன்களையும், சேவைகளையும் மேலும் நல்ல முறையில் இலக்கிட உதவும்.
3. திட்டமிடுதலை மேம்படுத்தும்
4. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும்
மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்துக்கு ரூ. 2200 கோடியும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ரூ. 3,756 கோடியுமாக மொத்தம் ரூ. 5,956 கோடி செலவிட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையானது பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தேதிகளில் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 ஜூன் 1ஆம் தேதி துவங்குகிறது. 2011ஆம் ஆண்டில் முடிக்க வேண்டும் என்கிற நோக்கில், இந்த மக்கள் கணக்கெடுப்பு முறையை ரூ.5956 கோடி செலவில் மத்திய அரசு மிகப்பெரிய அளவில் துவங்கியுள்ளது. ஜாதி வாரியான கணக் கெடுப்பு பிரிட்டிஷாரால் 1881இல் துவக்கப்பட்டு பின்னர் 1931ல் முடிக்கப்பட்டது. ஆனாலும் அது இதர பிற்படுத்தப்-பட்டவர்களைப் பற்றி திட்டமிட ஏற்படுத்தப் பட-வில்லை. உண்மையில் சொல்ல வேண்டுமானால் சமுதாய ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக மிக அவசியம் என்று உச்சநீதிமன்றம் பலமுறை அறிவித்துள்ளது.
அதேசமயம், இத்தகைய கணக்கெடுப்பினை - அந்தந்த மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. இதுபோன்ற ஒரு சர்வே என்பது தேவையற்ற மற்றும் தவிர்க்க வேண்டிய செலவீனங்களைக் கொண்டது என்பது வெளிப்படையான ரகசியமாகும். அதுமட்டுமல்ல; மனித உழைப்பும் நேரமும் இவை-யால் வீணாவதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டுக்-கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையில், உருவாக்கப்பட்ட வினா அட்ட வணை (னிமீவீஷீஸீஸீணீவீக்ஷீமீ) படிவத்தில் வேண்டிய அனைத்துத் தகவல்களும் உள்ளன. அதை நிரப்பு வதன் மூலம், ஜாதி வாரியான கணக்கெடுப்பு தவிர்த்து, சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கி யவர்கள் குறித்தும் அறிந்துகொள்ள வழி கிடைக்கும். இது ஒரு அடிப்படை அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாதி வாரியான கணக்கெடுப்பு முறையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வினா அட்டவணை படிவத்தில், மாற்றம் செய்யவோ, திருத்தி அமைக்கவோ அல்லது புதியதாகச் சேர்க்கவோ தேவையில்லை.
என்ன செய்ய வேண்டும் என்றால், பிற இனம் (ளிலீமீக்ஷீ) என்ற பகுதியில் ஜாதியின் பெயரை குறிப்பிட வேண்டும். அந்தப் படிவத்தின் 8 மற்றும் 9வது பகுதியில் எண். 7 (வீ), எண் 7 (வீவீ) என்கிற இடத்தில் விடையாக இதர பிற்-படுத்-தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் என்று குறிப்பிட வேண்டும்.
எண். 7 (வீ) என்கிற இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால் (--) (ஞிணீலீ) என்றும் எண். 7 (வீவீ) பகுதியில் தனிப்-பட்டவரின் ஜாதியையும் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய நிலையை மேற்கொண்டால், ஜாதி வாரியான கணக்கெடுப்பு -- அவர்கள் இதர பிற்படுத்தப்-பட்டவர்களா, ஆதி திராவிடர்களா, பழங்குடியினரா என்பதை முழுவது மாகவும் தெளிவாகவும் கண்டறிய ஏதுவாக இருக்கும்.
இது மட்டுமின்றி -வீடுகள்தோறும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்பவர்கள் கேள்வி எண். 7 (வீ), 7 (வீவீ) ஆகிய பகுதிகளை நிரப்பு வதில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றவர் களாக இருக்க வேண்டும். எந்தவித கூடுதல் செலவுமின்றி, சிறப்பு தலையீடுமின்றி இந்தப் பகுதியில் மூன்று முறை நிரப்பப்பட வேண்டும்.
சமுதாய ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கிய பிரிவினர் குறித்து முடிவெடுக்க - அவர்கள் சாதி யாலும் பிரிவுகளாலும் சமுதாயத்தில் பின்தங்கிய வர்களாக இருந்தாலும், வாழ்வாதாரத் திற்கு தினம் தினம் உடலுழைப்பை நம்பி இருப்பவர்களாக இருந் தாலும், உடலுழைப்பை நல்குபவர்களில் பெண்களும் சிறுவர்களும் இணைந்திருப்பவர்களாக மாநில சராசரி அளவில் இருந்தாலும் - 7 வயது முதல் 15 வயதுள்ள மாணவர்களில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டவர்களாகவோ, 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலோ, அவர்களுடன் பல்வேறு நிலைகளில் அரசுத் துறையில் பணியாற்று பவர்கள், பல்-வேறு நிலைகளில் பொதுத் துறையில் பணியாற்றுபவர்கள் என இவர்கள் எல்லாம் பின் தங்கியவர்கள் குறித்து முடிவெடுக்க இதர தகுதி பெற்றவைகளாகும். இதுதவிர, மாநில புள்ளி விவர துறையின் மூலம் கிடைக்கும் மற்ற புள்ளி விவரங்களையும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு ஜாதி வாரியான கணக்கெடுப்பு இருக்குமானால் அது நம்பத் தகுந்ததாக இருக்கும். அதன் மூலம் குறிப்பிட்ட இனம் அல்லது ஜாதியானது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது மற்ற நிலைகளின் கீழ் வரும் என்று அரசு முடிவெடுக்க ஏதுவாக இருக்கும். அதன்மூலம் அந்தந்த பிரிவுகளில் உள்ளவர்களை திருப்தியடையச் செய்யலாம் என்பதோடு, அந்த சாதி அல்லது இனத்தில் உள்ளவர்கள் தங்கள் நிலைக்கேற்ப தகுதி வழங்க பரிசீலனை செய்ய கேட்டுக் கொள்ளவும் வழி ஏற்படும்.
இவ்வாறு சேகரிக்கும் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களா, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களா அல்லது வேறு இனத்தவர்களா என்பதை அறியவும் உதவும்.
அவ்வாறு சேகரிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் களை பின்னர் புள்ளி விவரத் துறை ஏற்றுக் கொள்வ தோடு அதற்கான செலவு ஏதேனும் இருந்தால் - சில சமயம் அது குறைவாகவே இருக்கும் - அதை மாநில அரசு ஏற்றுக் கொள்ளலாம்.
வீடுகள் தோறும் மக்கள் கணக்கெடுப்பு 2011 தொடர்-பான வினா பட்டியல் அட்டவணையில் 8 மற்றும் 9வது பத்திகளில் வரும் எண். 7 (வீ) மற்றும் எண். 7 (வீ) பிரிவுகளை நிரப்புவது தொடர்பாக மேற்கொள்ளப்படும்
நடைமுறைகளுக்கான ஒப்புதலை மத்திய அரசிடம் மாநில அரசு பெறலாம்.
இவ்வாறு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவது என்பது எந்த வகையிலும் ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏனெனில், மத்திய அரசு இதற்காகவே தயாரித்துள்ள வினா பட்டியல் அட்டவணையில் திருத்தமோ, மாற்-றமோ அல்லது சேர்க்கையோ செய்ய வேண்டிய அவசிய-மில்லை. இவ்வாறு அந்தப் கருத்துரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
--------------------------”விடுதலை” 9-5-2010



