( தந்தைபெரியார் அவர்களின் 138 (17-9-1879) ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் அவர்களின் இச்சொற்பொழிவை பதிவு செய்வதில் பெருமையடைகிறோம். அனைவருக்கும் பெரியார் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள் ------ தமிழ் ஓவியா)
சமதர்மம் நிலவ....
திராவிடர்கழகம் ஒரு அரசியல் கட்சியல்ல; சமுதாய சீர்திருத்த இயக்கம் ஆகும். அரசியல்கட்சி என்பது தேர்தலில் ஈடுபடுவது, மக்களிடம் ஓட்டுப் பெற்று பதவிக்குப்போவது:
எங்கள் இயக்கம் தேர்தலுக்கு நிற்கின்றதோ, பதவிக்குப்போகின்றதோ இல்லை. சமுதாயத்துறையில் பாடுபடுகிறவர்களுக்கு அரசியல் பேரால் சட்டசபைக்கோ, பார்லிமென்டுக்கோ போய்ச் செய்ய ஒன்றும் இல்லை.
சட்டசபைக்குப்போகின்றவர்களால்சமுதாயத்தொண்டுஉண்மையாகச்செய்யமுடியாது. மக்களின் மூடத்தனம் மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித்தனங்களைச் சட்டசபைக்குப் போகின்றவர்களால் கண்டிக்கமுடியாது. கண்டித்தால்யாரும்ஓட்டுப்போடமாட்டார்கள். சட்டசபைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களிடம்வந்துஓட்டுக்கேட்காத எங்களால்தான்முடியும்.
தோழர்களே! நான் காங்கிரஸ்காரனாக, தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளனாக, தலைவனாக இருந்து பாடுபட்டவன் தான். பிறகு காங்கிரஸ் பார்ப்பனர்கள்நலனுக்கும், நமது இனநலனுக்குக் கேடாகவும் உள்ளது என்பதை உணர்ந்து காங்கிரசில் இருந்து வெளிவந்து சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்துகடவுள், மதம், சாஸ்திரம்ஒழியவேண்டும், பார்ப்பான்ஒழியவேண்டும், காங்கிரஸ் ஒழியவேண்டுமென்று பாடுபட்டுக்கொண்டே வந்து இருக்கின்றேன்.
எங்களுடைய தொண்டு எதிர்நீச்சல் தொண்டாகும். சமுதாயத் தொண்டு எவன் செய்ய முற்பட்டாலும் ஒழிக்கப்பட்டே இருக்கிறார்கள். நாங்கள் தான் துணிந்து இந்தத்துறையில் பாடுபட்டு வருகின்றோம்.
எங்களுடைய தொண்டு எதிர்நீச்சல் தொண்டாகும். சமுதாயத் தொண்டு எவன் செய்ய முற்பட்டாலும் ஒழிக்கப்பட்டே இருக்கிறார்கள். நாங்கள் தான் துணிந்து இந்தத்துறையில் பாடுபட்டு வருகின்றோம்.
எங்களுக்குப் பொதுமக்களுடைய ஆதரவோ, பத்திரிகைகாரர்கள் விளம்பரமோ கிடையாது. எதிர்ப்புத்தான்அதிகம்.
ஆனால், நமதுஎதிரியான பார்ப்பனர்கள் நிலை அப்படி அல்ல. நமதுநாட்டில்சுமார் 30- லட்சம் பார்ப்பனர்கள் உள்ளார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
ஒரு பார்ப்பான் வாய் அசைந்து எதைப் பேசினாலும் அதையே அத்தனை பார்ப்பனர்களும் பேசுவார்கள்! பார்ப்பான் ஒருவனைஅயோக்கியன் என்றால், அத்தனை பார்ப்பானும் அவனை அயோக்கியன் என்பான். சுத்த அறிவுசூன்யமான ஒருவனை ஒரு பார்ப்பான் மகரிஷி என்று கூறினாலும், அத்தனை பார்ப்பானும் பகவான் மகரிஷி என்பான்.

பத்திரிகைக்காரர்கள் எல்லாம் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றார்கள் என்றாலும், பல இன்னல்களுக்கு இடையே எதிர்ப்புகளுக்கும் இடையே தான் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றேன்.
எங்கள் தொண்டு ஒன்றும் வீண்போகவில்லை. 40- ஆண்டு தொண்டும் இன்று தான் பலன் தர ஆரம்பித்து உள்ளது.
காங்கிரஸ் ஆனது பார்ப்பானுடைய ஸ்தாபனமாக இருந்து வந்தது இன்று அடியோடு மாறி தமிழர்கள் கைக்கு வந்துவிட்டது.
எங்கள் தொண்டு ஒன்றும் வீண்போகவில்லை. 40- ஆண்டு தொண்டும் இன்று தான் பலன் தர ஆரம்பித்து உள்ளது.
காங்கிரஸ் ஆனது பார்ப்பானுடைய ஸ்தாபனமாக இருந்து வந்தது இன்று அடியோடு மாறி தமிழர்கள் கைக்கு வந்துவிட்டது.
காங்கிரசும், மனுதர்மத்தினை ஆட்சிதர்மமாகக் கொண்டு இருந்ததை மாற்றி மனிததர்மத்தை ஆட்சி தர்மமாகக் கொண்டு தொண்டு புரிய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய மாறுதலுக்குக் காரணமாக இருந்தவர்கள் நாங்கள் தான்ஆவோம்.
எங்கள் தொண்டு காரணமாகத்தான் ஆச்சாரியாரின் மனுதர்மஆட்சி ஒழிக்கப்பட்டு காமராசர் 1954-இல் பதவிக்குவந்தார். அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒருபுதியதிருப்பம்ஏற்பட்டது.
காமராசரின் ஆட்சியின் பயனாக நம்மக்களும் படிக்கவும் எல்லா உத்தியோகமும் பார்க்கவாய்ப்பும், வசதியும் ஏற்பட்டது.
நம்நமதுநாடுகளில் 30-ஆண்டுகளுக்கு முன்பு என்னஎன்ன தீர்மானங்கள் போட்டோமோ அவை எல்லாம் இன்றைக்குக் காங்கிரசினால் அமலாக்கப்படுகின்றது. இன்றைக்குக் காங்கிரசு கொள்கை ஜாதியை ஒழிப்பது, பணக்காரனை ஒழிப்பது ஆகும்.
ஆனால் காங்கிரசிலேயே இதற்கு விரோதமானவர்கள் அனேகம் பேர்கள் இருக்கின்றார்கள்! இன்றைக்குக் காங்கிரசிலேயும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். தங்கள் ஆதிக்கவாழ்வு போய்விடக் கூடாது என்பதற்காகக் காங்கிரசுக்குக் குழிதோண்டுகிறவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைக்கு நம் முதல்மந்திரியார் பக்தவச்சலனாருக்குக் குரு ஆலோசனை கூறுகின்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்தான் ஆகும்.
கடவுள், மதம், சாஸ்திரம், நாமம், சாம்பல், பக்தி இத்தனையும் காங்கிரஸ்காரர்கள் வைத்துக்கொண்டே சமதர்மம்பேசுவது முட்டாள்தனம்ஆகும்.
இவற்றை வைத்துக் கொண்டால் எப்படி சமதர்மம் நிலவமுடியும்? எனவே, சமதர்மம் நிலவ வேண்டுமானால், கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை ஒழித்தாக வேண்டும்.
இவற்றை வைத்துக் கொண்டால் எப்படி சமதர்மம் நிலவமுடியும்? எனவே, சமதர்மம் நிலவ வேண்டுமானால், கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை ஒழித்தாக வேண்டும்.
நெற்றி சுத்தமாக இருந்தால் தான் புத்தி சுத்தமாக இருக்கும்.
இன்றைக்குக் காங்கிரசில் பணக்காரர்கள் சிலர்இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் 'சமதர்மம் காங்கிரசில் நடக்கவாபோகின்றது?' என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற முயற்சியில் பணக்காரன்கள் எல்லாம் காங்கிரசில் இருந்து வெளியாகி விடவேண்டும். காங்கிரசில் பணக்காரன் இருக்கவே விடக் கூடாது.
தோழர்களே! எங்கள்கழகம், கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரத்தில் நம்பிக்கைஇல்லாதகட்சி. இப்படிப்பட்ட எங்கள் கட்சியில் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம் இவற்றில் நம்பிக்கை வைத்தவர்கள் இருக்கவே மாட்டார்களே.
எங்கள்கட்சிபார்ப்பானைவெறுக்கின்றகட்சி. எங்கள் கட்சியில் பார்ப்பான் கிடையாதே! இது போல காங்கிரஸ்ஆகவேண்டும். காங்கிரஸ் சமதர்மம் என்று பேசிக் கொண்டு பணக்காரன்களையும், கோடீஸ்வரன்களையும் காங்கிரசில் வைத்துக் கொண்டு, மந்திரியாக வைத்துக் கொண்டு இருந்தால் எப்படி காங்கிரஸ் உண்மையான சமதர்மதிட்டத்தை அமலாக்குகின்றது என்றுகூறமுடியும்?

நாம் நெருக்குகின்ற நெருக்கில் பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களும் காங்கிரசில் இருந்து வெளியாக்க காங்கிரஸ் முயல வேண்டும்.
இல்லாவிட்டால், பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களும் தாமாகவே காங்கிரசை விட்டு ஓடும்படியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும்.
சமதர்மம் என்பது பேதம் அற்ற தர்மமாகும்.
காங்கிரசுக்காரர்களுக்கு நமது பேச்சு பிடிக்கும் என்று நான் கருதவில்லை. கேட்டால்கேள், கேட்காவிட்டால்வீணாகப்போ. சீரழி! வருகின்றதை அனுபவி என்று கருதியே நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
காங்கிரசுக்காரர்களுக்கு நமது பேச்சு பிடிக்கும் என்று நான் கருதவில்லை. கேட்டால்கேள், கேட்காவிட்டால்வீணாகப்போ. சீரழி! வருகின்றதை அனுபவி என்று கருதியே நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
----------------------------------------தந்தை பெரியார் இராமநாதபுரத்தில் ஆற்றிய அறிவுரைகளின்தொகுப்பு. ’விடுதலை’, 07.10.1965
0 comments:
Post a Comment